Contact us at: sooddram@gmail.com

 

சித்திரை 2012 மாதப் பதிவுகள்

சித்திரை 30, 2012

 

தனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம் - கருணாநிதி

 
பல ஆண்டு முடக்கத்திற்குப் பின்னர் டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் (புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனித் தமிழ் ஈழம் உருவாக்கியே தீர வேண்டும். அதைப் பார்க்காமல் நான் கண் மூட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக பேசி வருகிறார். காங்கிரஸிடமிருந்து வேகமாக விலகி வரும் திமுகவின் இந்தப் புதிய கோஷம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
(மேலும்.....)

 

சித்திரை 30, 2012


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வரதராஜப் பெருமாள் போட்டியிடார்

அரசின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் போட்டியிடவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியானது முற்றிலும் ஆதாரமற்ற அடிப்படையற்ற செய்தியென கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல். எப். (பத்மநாபா அணி) முக்கியஸ்தருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்தார். வரதராஜப் பெருமாள் அரசாங்கத்தின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் குதிக்கவுள்ளதாகவும் அதற்காக இலங்கையில் இருந்து சென்ற  குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் வெளியான செய்தி தொடர்பில் மாகாண சபை உறுப்பினரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (மேலும்.....)

சித்திரை 30, 2012

தமிழ் தேசிய காங்கிரஸ்(TNC) பற்றி

சுதந்திர இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் குறுகிய இனவாதத்தை முன்வைத்து அரசியலை முன்னெடுத்தமை எழுபதுக்களின் இறுதிப் பகுதியில் கால்நூற்றாண்டு கால யுத்தம் ஒன்றுக்கு வித்திட்டது வரலாறாகி உள்ளது. இந்த உள்நாட்டு யுத்தம் மே 18 2009இல் முடிவுக்கு வந்த போதும் உள்நாட்டு யுத்தத்துக்கு அடிப்படைக் காரணமாக இருந்த இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு காத்திரமான முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக ஜனநாயகமற்ற அரசியல் போக்கு நாடு முழுவதும் காணப்படுகிறது. இது குறிப்பாக தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகங்களான வடக்கு கிழக்கிலும் காணப்படுகின்றது. (மேலும்.....)

சித்திரை 30, 2012

இராஜதுரையை துரோகி என்று கூறும் சிவாஜிலிங்கம் உத்தமரா? அரியநேத்திரன் கேள்வி!

இராஜதுரையை துரோகி என்றும், மட்டக்களப்பு துரோகிகள் என்றும் சிவாஜிலிங்கம் தான் உத்தமரா என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை துரோகி என்று காட்டும் போது மற்ற மூன்று விரல்களும் உன்னைக்குற்றவாளி என்று காட்டும் என்பதை சிவாஜிலிங்கம் உணர்ந்து கொள்ளவில்லையா என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

சித்திரை 30, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 1)

(அ.ஆனந்தன்)

[ இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் சண்டைகளால் வீடிழந்து, நாடிழந்து, உயிரிழந்து, உற்றார்-உறவை இழந்து நிற்கும் மக்களில், பிறந்தது முதல் சண்டையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையும் உருவாகிவிட்ட சூழலில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிறந்த துன்பங்களுக்கு காரணமான இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த நமது விருப்பு வெறுப்பற்ற  ஆய்வு இது . இதில் தமிழர் பிரச்னையை முன் வைத்து எல்.டி.டி.ஈ அமைப்பினை ஆதரித்துக் கொண்டிருக்கும் அமைப்புகளின் கருத்துக்கள் என நாம் முன் வைத்துள்ளவை 'ஈழ விடுதலை - நமது கடமை என்ன?' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்]இலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கைத் தமிழ் போராளிகள் குழுவான எல்.டி.டி.ஈ. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முக்கியப் பகுதிகள் பலவற்றை இழந்துள்ளது. கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றுடன் வடக்குப் பகுதியையும் இலங்கையின் பிற பகுதியையும் இணைக்கும் கண்டி - யாழ்ப்பாணம் சாலை முல்லைத்தீவு நகர் ஆகியவை எல்.டி.டி.ஈ. கட்டுப்பாட்டில் இருந்து சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளன. (மேலும்.....)

சித்திரை 30, 2012

கைகொடுக்கும் மே தினம்

பல்லாண்டு காலமாக மே முதலாந் திகதி செவ்வாய்க்கிழமை சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ஏலவே உலகளாவிய ரீதியில் மே முதல் நாளை மேதினமாகக் கொண்டாட சர்வதேச தொழிலாளர் சமூகம் ஏகமனதாக முடிவு செய்தது. இத்தினத்தில் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகள், அணிவகுப்பு ஒற்றுகூடல் என்பன பிரதான பங்கினை வகிக்கின்றன என்றும் கூறலாம். மே தினத்தை தேசிய விடுமுறை தினமாக (National Holiday) இலங்கை அடங்கலாக அனேக நாடுகள் அறிவித்துள்ளன. நம் நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை ஆட்சிபுரியும் அரசாங்கங்கள் மே தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனம் செய்துள்ளன. இதனால் வர்த்தக வங்கி சேவையாளர் உட்பட அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு (Employees)  பொது விடுமுறை தினமாக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

சித்திரை 30, 2012

மே தினக் கொண்டாட்டங்கள் கேளிக்கையாகக் கூடாது

மே தினத்தின் ஆழ்ந்த எண்ணக் கருவினை விளங்கிக் கொள்ளாது அதனை ஒருவெறும் கேளிக்கையாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மே தினம் என்பது வர்க்கச் சார்புடையது. தனிச் சொத்துரிமையினாலும் செல்வக் குவிப்பினாலும் வர்க்கங்கள் உருவாக்கம் பெற்றன. தமது வாழ்வாதாரத்தின் பொருட்டு உழைப்பை விற்பவர்களே தொழிலாளி வர்க்கத்தினராகின்றனர். நிலம், மூலதனம், உழைப்பு, முயற்சியாண்மை என்ற வகையில் உழைப்பு என்பது ஓர் அடிப்படை உற்பத்திக்காரணியாகக் கருதப்படுகின்றது. உழைப்பை வழங்குபவர்கள் பல நிலைப்படுவர். சாதாரண உடல் உழைப்பை வழங்குபவர்களிலிருந்து அதிக திறன்மிக்க உள உழைப்பை வழங்குபவர் வரை அனைத்துத் தரப்பினரும் உழைப்பாளிகள் என்ற தொகுதிக்குள் அடங்குவர். (மேலும்.....)

சித்திரை 30, 2012

தாயகத்தைத் தேடி !!

 

சித்திரை 30, 2012

ஐ. தே. கவின் யாழ். மே தினம் கட்சிப் பிளவின் வெளிப்பாடு

இந்த மே தினம் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபடுவதன் ஆரம்பமாக அமையலாம் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக தேசியக் கட்சி பெரும்பான்மை சிங்கள மக்கள் இருக்கும் பிரதேசங்களிலேயே மே தினக் கூட்டங்களை ஒழுங்கு செய்வதுண்டு. ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இதன் அடிப்படையில் கொழும்பிலோ அல்லது தென்னிலங்கையிலோ மலையகத்திலோ உள்ள பிரதான நகரங்களில் மே தினக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி தங்கள் கட்சிகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதுண்டு. இந்தத் தடவை ஐக்கிய தேசியக் கட்சி தனது 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தங்கள் மே தினக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருப்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்த்து, அரசியல் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்ட கட்சித் தலைவர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அவரது மதிப்பு மிகவும் குறைந்துள்ளது. (மேலும்.....)

சித்திரை 30, 2012

பொது இடங்களில் டிஜிடல் இரத்த அழுத்த கருவி

பொது மக்கள் தங்களது இரத்த அழுத்தத்தை சுலபமாகப் பரிசோ தித்துக் கொள்வதற்கு ஏற்றவகையில் டிஜிட்டல் இரத்த அழுத்த சோதனைக் கருவிகள் இன்று 30 ஆம் திகதி முதல் செயற்பட ஆரம்பிக்கின்றன. இக்கருவிகள் கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்கள் சுலபமாக இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளக்கூடிய இடங்களில் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார். இந்தக் கருவிகள் சுகாதார அமைச்சின் சிற்றுண்டிச்சாலை, கொழும்பு தேசிய கண்ணாஸ்பத்திரி, அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனக் கட்டடம், பொரள்ளையிலுள்ள தொழுநோய் சிகிச்சை பிரிவு, புறக்கோட்டையிலுள்ள இலங்கை வங்கித் தலைமையகக் கட்டடம் ஆகிய ஐந்து இடங்களில் பொறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக தினமும் பலர் இருதய பாதிப்புக்கும், உயிராபத்து நிலைக்கும் உள்ளாகின்றனர். அதனால், 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வாரத்திற்கு ஒரு தடவையாவது தமது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளுவது அவசியம். இதற்காக டொக்டரை அணுக வேண்டும். என்றாலும், உயர் அழுத்தம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்கள் கூட இப்போது தங்களது இரத்த அழுத்த நிலைமையை ஒழுங்குமுறையாக பரிசோதித்துக் கொள்ளாதிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

சித்திரை 30, 2012

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் கடத்தும் கப்பல் லெபனானில் சிக்கியது

சிரியாவுக்கு ஆயுதம் கடத்திச் சென்ற கப்பல் ஒன்றை லெபனான் கப்பற் படையினர் கைப்பற்றியுள்ளனர். சியரலியோனில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. இந்த கப்பலில் வந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு கப்பலில் இருந்த மூன்று கண்டைனர் கொள்கலன்களில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு கொண்டு செல்லப்படுவதென சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஒரு சில ஆயுதங்களில் லிபிய நாட்டு அடையாளம் பதியப்பட்டுள்ளதாக ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. சட்ட விரோத ஆயுதங்கள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் லெபனானுக்கான ஐ. நா. படையின் பேச்சாளர் மிலொஸ் ஸ்ட்ரகர், இந்த ஆயுதக் கப்பல் லிபிய துறைமுகத்தில் இருந்து வந்தது என உறுதி செய்துள்ளார். சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு திரிபோலி முக்கியதளமாக இருந்து வருவதாகவும் அங்கிருந்து ஆயுதங்கள் உள்நாட்டுக்கு கடத்தப்படுவதாகவும் சிரிய அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. லிபியா, சிரிய நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வருவதாக ரஷ்யாவும் குற்றம் சாட்டியுள்ளது.

சித்திரை 29, 2012

கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை அறியாது வாக்களித்த மக்கள் குழப்பத்தில்!

தமிழ்க் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறியாது தமிழ் மக்கள் குழம்பிப் போயுள்ளனர். புலத்தில் அதாவது உள்நாட்டில் அரசாங்கத்தி ற்கு நல்லெண்ணத்தைக் காட்டுவது போல நடிப்பதும் வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர் சமூகத்திற்கு தாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டுவதுமாக இர ட்டை முகத்துடனேயே கூட்டமைப்பு இன்று செயற்பட்டு வருகின்றது. எனவே கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஊடகங்கள் மூலமாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் கூட்டமைப்பிலுள்ள சிலர் அரசின் செயற்பாடுகளை ஆதரிப்ப தாகவும், சிலரோ எதிர்ப்பதாகவுமே இன்றைய நிலை உள்ளது. இரா. சம்பந்தன் அவ ர்களின் மெளனத்தின் அர்த்தம் தான் என்ன? தமிழ் மக்களின் நலனுக்காக என்று இவர்கள் கூறி அரசுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த விரும்பினால் அது குறி த்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி தாம் எடுத்த முடிவுக்கான காரணத்தை யும் தெளிவாக விளக்கினால் தமிழ் மக்கள் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வர். (மேலும்.....)

சித்திரை 29, 2012

முதலில் வெளிப்படையான தேர்தலை நடத்துங்கள் - அமெரிக்காவுக்கு சாவேஸ் அறிவுரை

நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் புதிய அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப் போகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் குடியரசுக் கட்சி தற்போது ஈடுபட்டிருக்கிறது. தற்போதுள்ள நிலையில் மிட் ரோம்னி வேட்பாளர் தேர்வில் முன்னணியில் இருக்கிறார். ஒபாமாவைப் பொறுத்தவரை, மிட் ரோம்னிக்கு எதிரான பிரச்சாரத்தைத் துவக்கி விட்டார். பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள வேளையில், நெருக்கடி தீர்ந்து விட்டது என்று தேர்தலுக்காக அறிக்கையும் வெளியிட்டார். தனது தேர்தல் பிரச்சார மும்முரத்திலும், தங்களுக்குத் தலையாட்டாத நாடுகளை சீண்டுவதை அவர் நிறுத்தவில்லை. (மேலும்.....)

 

சித்திரை 29, 2012

தம்புள்ளையில் நடந்தது என்ன?

(சுஐப் எம். காசிம்  )

இஸ்லாம் சாந்தியைப் போதிக்கும் மார்க்கம். சமாதானத்தை விரும்பும் மார்க்கம். பிற மதத்தவரையும் இனத்தவரையும் மதிக்கும் மார்க்கம். அந்த மார்க்கத்தை பின்பற்றும் இந்த நாட்டிலே வாழும் முஸ்லிம்கள் இதுகாலவரை எந்த மதத்தினரையும் தூஷித்ததில்லை. முஸ்லிம்கள் எங்கு வாழ்கின்றார்களோ அங்குள்ள ஏனைய இன மக்களை சோதரர்களாகவும் நண்பர்களாகவும் மதித்து உடன் இருந்து வாழும் கொள்கையுடையவர்கள். கொழும்பிலும் சரி தம்புள்ளையிலும் சரி முஸ்லிம்கள் இவ்வாறே வாழ்ந்து வருகின்றனர். வாழவும் விரும்புகின்றனர். தம்புள்ளையில் வாழும் சிங்கள மக்களோடு அங்குள்ள முஸ்லிம்களும் வர்த்தகர்களும் மிகவும் நெருக்கமாகவும் அந்நியோன்யமாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அண்மையில் நடந்த விரும்பத் தகாத அசம்பாவிதங்களின் போது அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வரும் சிங்கள மக்களின் உணர்வுகளில் இருந்து புரிந்துகொள்ள முடியும். (மேலும்.....)

சித்திரை 29, 2012

அமெரிக்காவில் கைது தொடர்கிறது

மே தினத்தன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தயார் செய்யும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கைப்பற்றுவோம் போராட்டங்கள் அமைப்பினர் பல்வேறு வகையான இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். இதைத் தடுக்கும் வகையில், காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழமையன்று மேலும் 24 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது பற்றிப் போராட்டக்குழுவைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில், ஆயிரக்கணக்கான காவல்துறையினர் வீதிகளில் இறக்கி விடப்பட்டி ருக்கிறார்கள். இதற்காக எவ்வளவு பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார். மே தினத்தன்று வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தடுக்கும் முயற்சியில் அமெரிக்க நிர்வாகம் முழுமூச்சுடன் இறங்கியுள்ளது.

சித்திரை 29, 2012

படையினரால் உயிர் பிழைத்த கஜேந்தினி.

“எனக்கு முந்தி ஆமியெண்டா பயம். அவை நல்லவை எண்டு இப்ப விளங்குது என்ரை வாழ்க்கையில அவையள மறக்கேலாது” என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் கஜேந்தினி. சில தினங்களுக்கு முன்பாக, யாழ்ப்பாணத்தில், இராணுவத்தால் உயிர் காக்கப்பட்ட பெண் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட செய்திக்குச் சொந்தக்காரி. 15 நாட்களே உயிர் வாழ்வார் என மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு நல்ல உள்ளங்களின் உதவியால் இன்று உயிர் பிழைத்திருக்கும் அதிசயம் அவர். யாழ்ப்பாண இராணுவக் கட்டளை பீடத்தின் ஏற்பாட்டிலான இலவச இருதய சத்திரசிகிச்சை மூலம் உயிர் காக்கப்பட்ட கஜேந்தினியை வரவேற்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போதே கஜேந்தினி கண்ணீர் மல்க மேற்கண்டவாறு நன்றி தெரிவித்திருக்கிறார். (மேலும்.....)

சித்திரை 29, 2012

கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவிப் போட்டி?

என்னைத் தவிர எவராவது முயற்சித்தால் அது வெறும் பகற் கனவாகுமென்கிறார் பிள்ளையான்

TNA போட்டியிடின் கதையே வேறு - யோகேஸ் எம்.பி.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் அடுத்த முதலமைச்சரும் தானே எனவும் அதில் எவருடைய கனவும் பலிக்காது எனவும் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்திருக்கிறார். தனது பதவிக் காலத்தில்தான் மக்களுக்குச் சேவை செய்து வருவதை மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள். தான் ஒருபோதும் மக்களை விட்டு விலகிச் சென்றது கிடையாது. என்னைத் தெரிவு செய்த மக்களுடன் கூடவே இருந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றேன். சிலர் போன்று பதவி களைப் பெற்றுக்கொண்டதும் மக்களைத் திரும்பியும் பார்க்காதவன் நானில்லை எனவும் பிள்ளையான் தெரிவித்திருக்கிறார், எனவே எவருக்காவது முதலமைச்சராக வரும் எண்ணமிருந்தால் அது வெறும் பகற் கனவாகவே அமையும். ஏனெனில் நான் தமிழ் மக்களுக்கு மட்டுல்ல கிழக்கில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் எவ்விதமான பாரபட்சமற்ற சேவையாற்றி வருவதாகவும் பிள்ளையான் தெரிவித்தார். (மேலும்.....)

சித்திரை 29, 2012

பகாசுர நிறுவனம் நாட்டுடைமை  அர்ஜெண்டினா செனட் சபை ஒப்புதல்

ஸ்பெயின் நாட்டு பகாசுர எண்ணெய் நிறுவனமான ரெப்சோலின் துணை நிறுவனமான ஒய்.பி.எப். எண்ணெய் நிறுவனத்தை நாட்டுடைமையாக்கும் அர்ஜெண்டினா அரசின் முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒய்.பி.எப். எண்ணெய் நிறுவனம் அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகவே இருந்து வந்தது. ஐ.எம்.எப் பரிந்துரைகளால் நாட்டின் பொருளாதாரம்சின்னாபின்னமாக்கப்பட்டபோது இந்த நிறுவனம் ஸ்பெயினைச் சேர்ந்த பகாசுர நிறுவனமான ரெப்சோலுக்கு தாரை வார்க்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தது. கச்சா எண்ணெய் வளத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகள் அதைத் தங்களின் வசம் வைத்துள்ளன அல்லது தற்போது எடுத்துக் கொண்டுள்ளன. (மேலும்.....)

 

சித்திரை 29, 2012

பிரான்ஸ் ஜனாதிபதி யார்?

இரண்டாம் கட்ட தேர்தலில் ஹோலண்ட் சர்கோஸி

(ஏ.ஜி.எம். தெளபீக் )

பிரான்ஸில் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்த லில் ஐந்து பேர் போட்டி யிட்டதால் எவரும் ஐம்பது வீதமான வாக்குகளைப் பெற முடியவில்லை. இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு அடுத்த ஞாயிற்றுக்கிழமை (மே 06) நடைபெறவுள்ளது. எல்லோரும் ஆசைப்பட்டால் மக்கள் யாரைத் தெரிவு செய்வார்கள் என்ற இழுத்தடி ப்பே இது. முதலாம் கட்ட வாக்களிப்பு முடிவுகளின்படி ஹோலண்ட் 28.5 வீத வாக்குகளையும் நிக்கலஸ் சர்கோஸி 27.1 வீதத்தையும் பேரின்லிபென் 18.1, ஜீன் லக் 11.1, பிரான்ஸ் கொஸ் 8.5 வாக்குகளையும் பெற்றனர். இப்போது பதவியிலுள்ள ஜனாதிபதி சர்கோஸி இரண்டாம் இடத்துக்குச் சென்று பின்னடைவிலுள்ளார். இதேவேளை ஹோலண்ட் முன்னிலைக்கு வந்து ஜனாதிபதியாகும் அதிஷ்டத்தை நெருங்கிவிட்டார். (மேலும்.....)

சித்திரை 29, 2012

புத்தபெருமான் வருகை தந்த ‘லங்கா பட்டண’ துறைமுகத்துக்குச் சென்றோம்

பல மாதங்களாக நாம் யாழ்ப்பாணத்தின் தீவுக்கூட்டங்களுக்கிடையே திரிந்து சென்றோம். அத்தீவுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை மட்டுமன்றி அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் யுத்தத்தால் இருளடைந்த பகுதிகளுக்கும் சென்றோம். இன்று பிரசுரிக்கப்படுவது இறுதிப் பாகமாகும். விசேடமாக தந்ததாது இலங்கைக்கு கொண்டு வந்து வைத்த லங்கா பட்டண ஸ்ரீ சமுத்ரசிறி ரஜ மகா விகாரையோடு தொடர்புடைய கதையையும் எடுத்துக் கொண்டு வருகிறோம். நான் இந்த வரலாற்றுப் புகழ் மிக்க பிரதேசம் அமைந்துள்ள கிழக்கு மாகாணத்திலமைந்துள்ள திருகோணமலை பக்கமாக வாகனத்தைத் திருப்புமாறு அனுரங்கவுக்கு கூறினேன். மூதூர் நகருக்கு சுமார் 35 கிலோ மீற்றர் தெற்குப் பக்கமாகவும் சேருவில புனித பூமிக்கு கிழக்குப் பக்கமாக நேரடியாகத் தெரிகிறபடி சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்திலும் இந்த மனோரம்மியமான புனித ஸ்தலம் அமைந்துள்ளது. (மேலும்.....)

சித்திரை 28, 2012

இலங்கை பிரச்சனைக்கு சர்வதேச பரிணாமம்

(டி.கே.ரங்கராஜன் எம்.பி.,)

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் இலங்கைப் பிரச் சனை குறித்து இரு அவைகளிலும் கூர் மையான விவாதம் முன்னுக்கு வந்தது. இலங்கையிலிருந்து எட்டு கட்சிகள் குழு ஒன்று தில்லிக்கு வந்து பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து உரையாடியது. இதைத் தொடர்ந்து மக்களவை, மாநி லங்களவையில் இலங்கைப் பிரச்சனை என்பது தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க் கள் மட்டுமே பேசும் ஒரு பிரச்சனை என்ற நிலை மாறி பல்வேறு கட்சிகள் இலங்கைப் பிரச்சனை குறித்து தங்களது கருத்துக்களை முன்வைத்தன. இலங் கைப் பிரச்சனைக்கு ஒரு அகில இந்திய பரிமாணம் கிடைத்தது. இலங்கைத் தமிழ் மக்களின் துயரத் திற்கு முடிவு காணப்பட வேண்டும். அங்கு ஒரு அர்த்தபூர்வ அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென அனைத்துக் கட்சி களும் ஒருமித்தக் குரலில் வலியுறுத்தின. (மேலும்.....)

சித்திரை 28, 2012

எனது எஞ்சியவாழ்நாளின் இலட்சியம் தமிழீழமே  - கருணாநிதி

 என் எஞ்சிய வாழ்நாளின் இலட்சியம். தமிழீழமே. அதனை உருவாக்கி விட்டுத் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்வேன் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி சூளுரைத்துள்ளார். வடசென்னை தி.மு.க சார்பில் பெரவள்ளூரில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "பேரறிஞர் அண்ணா, காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழீழம் கிடைக்க போராடுவேன். தனி ஈழம் அமைப்பதற்கு 1980களில் உருவாக்கப்பட்ட 'டெசோ' எனப்படும் தமிழீழ ஆதரவாளர்களை மீண்டும் தொடங்க வேண்டும். அந்த இயக்கம் திமுகவின் துணை இயக்கமாக செயலாற்றி தமிழீழம் உருவாக்கப்படும். தந்தை செல்வாவின் (தமிழீழத்திற்காக அகிம்சை வழியில் போராடியவர்) வன்முறையற்ற வழியில் அமைதிப் போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும். இலங்கை ஜனாதிபதி இதனை நிராகரிக்கலாம். ஆனால், இதுதான் என் எஞ்சிய வாழ்நாளின் இலட்சியம். தமிழீழத்தை உருவாக்கி விட்டுத் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்வேன்" என்றார். 1987ம் ஆண்டு உருவான இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை பலமிக்கதாக செயற்பட ஒத்துழைப்பை 'தாத்தா' அன்று வழங்கியிருந்தால் இன்று தமிழ் பிரதேசங்களில் நிலமைகள் ஓரளவேனும் சீரான செயற்பாடுகள் நடைபெற உதவியிருக்கும். அன்று புலி. பிரேமதாச, ஜேவிபி யுடன் கை கோர்த்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்து விட்டு இன்று 'தாத்தா' சாகும்வரை என சபதம் எடுப்பது பொரிமாத் தோண்டிக் கதையைதான் ஞாபகப்படுத்துகின்றது.

சித்திரை 28, 2012

தமிழீழம் குறித்துப் பேச கருணாநிதிக்கு எதுவித தகுதியுமில்லை - வைகோ

தமிழீழம் குறித்துப் பேச திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு எதுவித தகுதியுமில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கையில் தமிழர்களை அழிக்க அனைத்து வகையிலும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உதவி செய்தது. மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் அதற்குத் துணைபோயினவே அன்றி எதிர்த்து எதுவுமே பேசவில்லை. இலங்கைக்கு ஆயுத உதவி செய்தபோதோ, படுகொலைகள் அரங்கேறிய போதோ அவற்றைத் தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்காமல் மௌனம் காத்தார் கருணாநிதி. ஆனால், இப்போது தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் எழுப்புகிறார். தனி ஈழம் குறித்துப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை" என்றார். ___

சித்திரை 28, 2012

வடகிழக்கில் காணிகளை பறிகொடுத்த உரிமையாளர்கள் அவற்றை பெற்றுக் கொள்ள வகை செய்யும் சட்டம் - ரவூப் ஹக்கீம்!

யுத்தகாலத்தில் நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் தமது காணிகளை பறிகொடுத்த உரிமையாளர்கள் மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு வகை செய்யும் விதத்திலான சட்டம் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (27) முற்பகல் தம்மைச் சந்தித்து கலந்துரையாடிய அவுஸ்திரேலிய தூதுவர் ரொபின்மூடிடம் அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் நிலக் கண்ணி வெடி அகற்றலுக்கும், மீள்குடியேறும் மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் பங்களிப்புகளை செய்து வருவதாக அந் நாட்டுத் தூதுவர் தெரிவித்தார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துமென தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். சிறையிலுள்ள தமிழ் சந்தேக நபர்கள் பற்றிய தூதுவரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், அவ்வாறான ஏறத்தாழ பன்னிரண்டாயிரம் பேரில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், சமூகமயப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறியதோடு, குற்றச்சாட்டுகள் உள்ள குறிப்பிட்ட சிலரின் விவகாரத்தில் விரைவில் உரிய தீர்வு காணப்படவிருப்பதாகவும் கூறினார்.

சித்திரை 28, 2012

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின கொண்டாட்டம் கொழும்பில்

மேதினக் கொண்டாட்டங் களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதான கட்சிகள் மும்முரமாக முன்னெடுத்துள்ளன. இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதின விழா கொழும்பு நகர சபை முன்றலிலும் ஐக் கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்த மே தினக் கூட்டம் யாழ்ப் பாணத்திலும் நடைபெறவுள்ளன. கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இ.தொ.கா.வின் மே தினக் கூட்டம் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் கினிகத்தேனையில் நடைபெறுவதுடன் ஜே.வி.பி.யின் மேதினக் கூட்டம் கொழும்பிலும் தொழிலாளர் விடுதலை முன்னணி, புரட்சிகர ஐக்கிய கேந்திரக்கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிச’ லெனினிசக் கட்சி ஆகியனவை இணைந்து ஹட்டன் நகரிலும் மேதினக் கொண்டாட்டங்களை நடத்தவுள்ளன. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இம்முறை தமது மே தின விழாவை யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடத்தவுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பிலும், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மஸ்கெலியாவிலுள்ள சாமி மலையிலும் மலையக மக்கள் முன்னணி பூண்டுலோயாவிலும் மேதினக் கொண்டாட்டங்களை நடாத்தவுள்ளன.

சித்திரை 28, 2012

சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

'பேஸ்புக்', 'டுவிட்டர்' போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்' அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பிரபலமான சமூக, வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டுபவர்களில் 58 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிய வந்திருக்கிறது. பியூ ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010ல் சமூக வலைத்தளங்களில் இணைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 85 கோடியாகியிருக்கிறது. ஆனால் இந்த வலைத்தளங்களில் இணையும் ஆண்களின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விடயம், சமூக வலைத்தளங்களின் கவனத்தையும் திருப்பியுள்ளது. அவை, ஆண்களை ஈர்க்கும் விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆண்கள் தொடர்பான நிகழ்வுகளையும் படங்களையும் அதிகம் இடம்பெறச் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. 'வரலாற்று ரீதியாகவே பார்த்தால், உறவுக்கான வலைப்பின்னலாக பெண்களே உள்ளனர்'.

சித்திரை 28, 2012

ஜனாதிபதிக்கும் பிள்ளையானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கிழக்கு மாகாணசபையை கலைப்பது தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மாகாணசபையின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாக மாகாணசபையை கலைக்க வேண்டுமாயின் அதற்கு முதலமைச்சரின் இணக்கம் அவசியமானது எனத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணசபை கலைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் நோக்கில் முதலமைச்சர் பிள்ளையானுடன், ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கிழக்கு மாகாணசபைக்கு மேலதிகமாக மேலும் இரண்டு மாகாணசபைகளும் கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சித்திரை 28, 2012

 

இலங்கை பயணம் தொடர்பாக சுஷ்மா சுவராஜ் மே 3ல் விவாதம்

இலங்கைப் பயணம் குறித்து இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமதி சுஷ்மா சுவராஜ் தனது தலைமையிலான குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மே 3ம் திகதி விவாதிக்கவுள்ளார். இது தொடர்பாக எம்.பிக்களுக்கு அவர் அழைப்பு அனுப்பியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மக்களின் நிலைமை குறித்தும், இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுத் திட்டங்களை ஆராயவும் இந்திய நாடாளுமன்றத்தின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு இலங்கையில் 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 21ம் திகதி வரை பயணம் செய்த அந்தக் குழுவுக்கு இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை வகித்தார். (மேலும்.....)

சித்திரை 28, 2012

நாடாளுமன்ற உறுப்பினராகிறார் சச்சின் டெண்டுல்கர்

இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான (ராஜ்ய சபா) நியமன உறுப்பினராக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த வேளையில் நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பிரதமர் வழங்கியதாகவும், அதை சச்சின் டெண்டுல்கர் ஏற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 250 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். இது கலை, இலக்கியம், விஞ்ஞானம், சமூக சேவை போன்றவற்றில் மிகச் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படுவது ஆகும். இந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் முதலாவது விளையாட்டு வீரர் ஆவதற்கான வாய்ப்பு சச்சின் டெண்டுல்கருக்கு கிட்டியுள்ளது. இந்தியாவில் சச்சின் டெண்டுல்கரின் புகழ் மற்றும் செல்வாக்கு காரணமாக சச்சின் டெண்டுல்கரின் நியமனத்திற்கு எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது. நியமனம் முற்று முழுதாக உறுதிப்படுத்தப்பட்ட நிச்சயமான ஒன்றாக கருதப்படுகிறது. சச்சின் டெண்டுல்கரின் பெயரை இந்தியாவின் ஆளுங் கட்சியாக காங்கிரஸ் கட்சியே பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் பலத்த உள்ளூர் எதிர்ப்புக்களைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்த எதிர்பாராத அறிவிப்பை விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தியைச் சந்தித்ததன் பின்பு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சச்சின் டெண்டுல்கர் சந்தித்துள்ளார்.

சித்திரை 28, 2012

 

Sam Rajendran, The president of the Canadian Democratic Tamil Cultural Association.
http://www.youtube.com/watch?v=lxjoV-SrL6Y

சித்திரை 28, 2012

பொலிஸ் பொதுமக்கள் நட்புறவு வளர வேண்டும்

30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்ததை அடுத்து பயங்கரவாத மும் பூண்டோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நாட்டின் முப்படைககளின் நேரடிப் பாதுகாப்பு பணிகள் பெருமளவில் குறைந்திருக்கிறது. நாட்டின் கேந்திர நிலைகளுக்கு பாதுகாப்பு அளித் தல், நீர்த் தேக்கங்கள், இராணுவ முகாம்கள், மின்சக்தி நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், பாராளுமன்றம் மற்றும் அரசாங்கக் காரியாலயங்களு க்கு அளித்தல், பிரதான பாதைகளுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்ற காரியங்களுக்கு மாத்திரமே பாதுகாப்புப் படையினர் இப்போது பாதுகாப்பு அளிக்கும் பணிகளை செய்து வருகிறார்கள். (மேலும்.....)

சித்திரை 28, 2012

மோடிக்கு   விசா வழங்க முடியாது - அமெரிக்கா

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நிலை பாட்டில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா கூறி யுள்ளது. மோடிக்கு விசா அளிப் பது குறித்த நிலைபாட் டில் மாற்றங்கள் இல்லை என்று அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விக்டோரியா மூலந்த் கூறி னார். அன்றாடம் நடை பெறும் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ் வாறு கூறினார். மோடிக்கு விசா வழங் குவதில்லை என்ற 2005ம் ஆண்டு தீர்மானத்தை அமெரிக்க அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஜோ வால்ஷ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாலி கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார். மோடிக்கு விசா வழங்கும் 2005 முடிவை மாற்றக் கூடாது என்று அமெரிக்க முஸ்லிம் சமு தாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள் ளது. அமெரிக்காவால் ஆசீர்வதிகப்பட்ட அடுத்த பிரதம மந்திரிக்கு ஏன் அமெரிக்கா தற்போது விசா மறுக்கின்றது என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

சித்திரை 28, 2012

மேற்கத்திய நாடான கனடாவில்

ஷாருக்கானை தொடர்ந்து கமலஹாசனுக்கும் அவமதிப்பு 

அமெரிக்க விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். அமெரிக்காவில் ஷாருக்கான் ஏற்கனவே இவ்வாறு பலமுறை அவமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டது குறித்து இந்திய அரசின் சார்பில் கடும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்திரையுலகில் உலகநாயகன் என அழைக்கப்படும் கமலஹாசனும் மேற்கண்டவாறு விமான நிலைய அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத் தப்பட்டு அவமதிக்கப்பட் டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், இம்முறை மற்றொரு மேற்கத்திய நாடான கனடாவில் அத்தகைய சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அமெரிக்கர்களுக்கு கமலஹாசன் என்ற எனது பெயரை உச்சரிக்கும்போது முஸ்லிம் பெயர் போல் தோன்றி உள்ளது. இதனால். அமெரிக்காவில் ஷாருக்கானுக்கு நிகழ்ந்த சம்பவம்போல், கனடா விமான நிலையத்தில் என்னை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அரை மணி நேரம் என்னிடம் கேள்விகளை கேட்டு சோதித்து பார்த்தனர்.

சித்திரை 27, 2012

இலங்கை

வரலாற்றின் வழித்தடத்தில்

(டி.கே.ரங்கராஜன் எம்.பி.,)

இலங்கைக்கு இதுவரை மூன்று முறை சென்று வந்துள்ளேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற் பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சென்று வந்தேன். அடுத்து கொழும்பில் நடைபெற்ற மேதின விழா ஒன்றில் பங்கேற்க கட்சியின் சார்பில் சென்று வந்தேன். தற்போது, இந்திய நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் கட்சி யின் சார்பில் பிரதிநிதியாக இடம் பெற்று சென்று வந்தேன். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கி 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர் என்பது துயரம் மிகுந்த ஒரு வர லாறாகும். 1983ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்தப் போர் நீடித்தது. இதன் காரணமாக ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. சொந்த நாட்டிலேயே நிலை குலைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு பகுதி என்றால், உலகம் முழுவதும் அகதிகளாகச் சென்று வாழ்க்கையை கழித்து வருகின்றனர் ஒரு பகுதித் தமிழர்கள். (மேலும்......)

சித்திரை 27, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட விவகாரம்: அம்பாறையில் ஹர்த்தால்

தம்புள்ளை நகரிலுள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்மாப் பள்ளிவாசலை பேரினவாத கடும்போக்குவாதிகள் தாக்கியதைக் கண்டித்தும் அவ்விடத்திலிருந்து பள்ளியை அகற்றி வேறு இடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு. - திருகோணமலை வீதியிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பஸார் வீதி போன்ற இடங்களிலுமுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பஸார் வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இதேவேளை, காத்தான்குடிப் பிரதேசத்திலும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. அத்துடன் பாடசாலை மாணவர்களின் வருகையிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் இயங்காமலிருப்பதோடு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு மக்கள் தமது எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர்.

சித்திரை 27, 2012

முஸ்லிம்கள் எக்காலத்திலும் தாய்நாட்டுக்கு விசுவாசமாகவே செயற்பட்டு வருகின்றனர்

‘சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் இந்த நாட்டின் ஏனைய சமூகங்களுடன், சகோதரத்துவத்தையும் சமாதான வாழ்வையும் விரும்புகின்றனர். ஆனால் சிலர் காழ்ப்புணர்ச்சிகளை கட்டவிழ்த்து விடுகின்ற பொழுது அதன் தாக்கம் சிறுபான்மை சமூகத்தினை மட்டுமல்லாது பெரும்பான்மையினையும் சேர்த்தே பாதிக்கின்றது. இதைத்தான் கடந்த காலங்களில் நமது நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கண்டோம்.' (மேலும்......)

சித்திரை 27, 2012

இராசதுரைக்கு - கறுப்புக்கொடி காட்டினார் சிவாஜிலிங்கம்! தந்தை செல்வா முன்நிலையில் சண்டையிட்ட கூட்டமைப்பு தலைவர்கள்!!

யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, "தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி, அரசின் அடிவருடி, துரோகியை வெளியேற்ற வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்டார். (மேலும்......)

சித்திரை 27, 2012

அரச நிறுவன அதிகாரிகளின் வரி ஏய்ப்பு; 'கோப்' குழு விசாரணைகளில் அம்பலம்

கூடுதலான வருமானம் ஈட்டும் பிரதான அரசங்க நிறுவன உத்தியோகத்தர்கள் அரசாங்கத்துக்கு வருமான வரி செலுத்தாது முறைகேடு செய்திருப்பது ‘கோப்’ விசாரணை மூலம் தெரியவந்துள்ளது இவர்களுக்காக அரசாங்கம் 2.3 கோடி ரூபா வருமான வரி செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவன முன்னாள் தலைவர்களை விசாரிக்க உள்ளதாக கோப் குழு தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான டியூ. குணசேகர கூறினார்.சில மோசடிகள், மற்றும் முறைகேடுகள் தொடர்பில் சி. ஐ. டி. மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு அறிவித்தாலும் அவை குறித்து விசாரணை செய்யப்படாது காலங்கடத்தப்பட்டுள்ளது. (மேலும்......)

சித்திரை 27, 2012

The Manoir Ronald McDonald  Children’s House

To whom it may concern

                                          

To coincide with Vesak, the Sri Lanka High Commission in Ottawa is organizing a meritorious activity to be held at the Manoir Ronald McDonald Children’s House, 407 Smyth Road, Ottawa K1H 8M8 on Saturday 12th May at 10.00 a.m.  The High Commission wishes to invite the Sri Lankan community and well-wishers to collaborate with the High Commission in this project. Those who wish could donate the following:

 

          White face / bath towels, dishwasher detergent, hand detergent , Laundry

Detergent (for high efficiency machines), toys, books for all ages, serviettes, toothpaste, tooth brushes, soap, tea, coffee, sugar, stationery and toilet tissues.

 

The Manoir Ronald McDonald  Children’s House is a ‘home away from home’ for families with children up to 18 years suffering from cancer or other serious illnesses being treated at the Children’s Hospital of Eastern Ontario.  As the treatment for some of the sick children may take a long period, the Ronald McDonald Children’s House is a place to call home while the child is receiving treatment.

 

The Ronald McDonald Children’ House provides affordable comfortable accommodation in a home like atmosphere where the parents can be near their hospitalized children.

 

The House is owned and operated by the National Capital Children’s Oncology Care Inc. and is a not-for-profit organization.  This community resource relies on individuals and community groups, and businesses in Ottawa for it’s maintenance.

 

Your generosity & contribution towards this meritorious act is much appreciated.

Chitranganee Wagiswara

High Commissioner

26/04/2012

(All donations could be handed over to the Sri Lanka High Commission on or before 10th May. For further information please contact Judy/Sarath on 613 233 8449)

சித்திரை 27, 2012

நாடு திரும்பினார் சாவெஸ்

வெனிசூலா ஜனா திபதி ஹுகோ சாவெஸ் கியூபாவில் 11 நாள் புற்றுநோய் சிகிச்சைக்கு பின் நாடு திரும்பி யுள்ளார். வெனிசூலா தலைநகர் கரகாசுக்கு நேற்றுக் காலை திரும்பிய சாவெஸ் துணை ஜனாதிபதி மற்றும் தமது அரசின் முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். சாவெஸ் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மேலும் 6 ஆண்டு தவணைக்காக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை 27, 2012

தம்புள்ளை விவகாரம்: நிந்தவூரில் எதிர்ப்புப் பேரணி

தம்புள்ளை நகரிலுள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் கைரியா ஜும்மாப் பள்ளிவாயல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அவ்விடத்திலிருந்து பள்ளியை அகற்றி வேறிடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒன்றியம் எதிர்ப்புப் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இப்பேரணியில் பல இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டும் வருகின்றது.

சித்திரை 27, 2012

ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் குறித்து மன்னிப்பு சபை அறிக்கை

ஐரோப்பிய முஸ்லிம்கள் வெளிப் படையாக தமக்கு எதிரான பாரபட்சத்திற்கு முகம்கொடுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடுக்க ஐரோப்பிய அரசுகள் முன்வர வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில், கல்வி மற்றும் பாரம்பரிய உடை அணிவதில் ஐரோப்பிய முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு ஒரு சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருப்பதற்கும் மன்னிப்புச் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. “முஸ்லிம் பெண்கள் தமது பாரம்பரிய உடையை அணிவதால் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. வகுப்பறைகளுக்கு சமுகமளிக்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு பர்தா அணிவது போன்றே ஆண்கள் இஸ்லாமிய அடிப்படையில் தாடி வைத்துக் கொள்வதாலும் பாரபட்சத்திற்கு முகம்கொடுக்கிறார்கள்” என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பாரபட்சத்திற்குள்ளாகும் சமூகங்கள் தொடர்பிலான நிபுணர் மார்கோ பொரொலினி குறிப்பிட்டார்.

சித்திரை 27, 2012

முல்லைத்தீவு நெற்செய்கையாளர்களுடன் டக்ளஸ் கலந்துரையாடல் _

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெற்செய்கையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சந்தித்து தாம் எதிர்நோக்கி வருகின்ற இடர்ப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். முள்ளியவளையில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் இணைய மண்டபத்தில் நேற்று முன்தினம் இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தாம் செய்கை பண்ணும் நெல்லை விற்பனை செய்ய முடியாதுள்ளதாகவும், இதனால் தாம் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், இது விடயம் தொடர்பில் தாம் பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவர்கள் பராமுகமாகவே இருந்ததாகவும் சுட்டிக்காட்டினர். அத்துடன் நெல்லைக் களஞ்சியப்படுத்தக்கூடியதாக உடையார் கட்டுப்பகுதியில் நெற்களஞ்சியமொன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களின் போது இறக்குமதி செய்யப்படும் அரிசிக்குப் பதிலாக உள்ளூர் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் உடையார்கட்டுப் பகுதியில் நெற்களஞ்சியம் ஒன்றை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்ததுடன் ஏனைய கோரிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படுமெனவும் தெரிவித்தார்.

சித்திரை 27, 2012

பிரிட்டனில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி

பிரிட்டன் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டனில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதே போன்று இதற்கு முந்தைய காலாண்டிலும் பிரிட்டிஷ் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது. டபுள் டிப் ரிஸஷன் எனப்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த பிரிட்டன் மீண்டும் இன்னொரு வீழ்ச்சிக்குள் செல்லும் இரண்டாவது நெருக்கடியை 1970ம் ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக சந்தித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை காட்டும் புள்ளிவிபரங்கள் மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார்.

சித்திரை 27, 2012

பருவ நிலைகளுக்கேற்ப மாறும் கிணற்று நீர்

பொதுவாக கிணற்று நீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெது வெதுப்பாகவும் இருக்கும். இதற்கு காரணம் தரைமட்டத்திற்குக் கீழ் சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில் வெப்பத்தைக் கடத்தும் என்பதால், கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர் ஏறக்குறைய 20-25 செ. கி. வெப்ப நிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம். கிணற்றின் வெளிப்புற வெப்பம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில பகுதிகளின் சுற்றுச் சூழல் வெப்ப நிலை 4-5 செ. கி. அளவுக்கும் செல்வதுண்டு. இந் நிலையில், கிணற்றுநீர் 20-25 செ. கி. அளவில் இருப்பதால், அது வெது வெதுப்பான நீராக உணரப் பெறுகிறது. இதற்கு நேர்மாறான நிலை கோடைகாலத்தில் உண்டாகிறது. கோடையில் சில பகுதிகளின் வெப்ப நிலை 40- 45 செ. கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களிலும் கிணற்று நீர் 20-25 செ. கி. அளவில் இருப்பதால், சுற்றுச் சூழல் வெப்ப நிலையோடு ஒப்பிடுகையில், கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது.

சித்திரை 27, 2012

துனீசியா  தனியார்மயத்திற்கு எதிராக மக்கள்!

வரக்கூடிய மாதங்களில் துனீசியாவின் அரசு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு அந் நாட்டு மக்கள் மத்தியில் கடு மையான எதிர்ப்பு கிளம்பி யிருக்கிறது. இந்த அறிவிப்பு மேலும் பல தனியார் மய அறிவிப் புகளுக்கு இட்டுச் செல்லும் என்பதே எதிர்ப்பாளர்க ளின் கருத்தாகும். அரசு அதி காரி ஒருவர் மூலமாக இந்த அறிவிப்பு வெளியானவு டன் அரசியல் கட்சிகளிட மிருந்து கண்டனக் குரல்கள் உடனடியாக எழுந்தன. பல சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு நிற்காமல், தலை நகர் துனிசில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற் பாடு செய்தனர். அரசுத் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனி நபர்கள் கைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது, அவ்வாறு செல்லும்பட்சத் தில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கே அது அழைத் துச் செல்லும், அதிகாரத் தில் உள்ளவர்களின் புகழ் பாடுவதில்தான் அந்தத் தொலைக்காட்சி கவனம் செலுத்தும் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

சித்திரை 26, 2012

தம்புள்ளை பள்ளிவாசலும் கோயிலும் புனித பூமிக்கு வெளியே உள்ளன

தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசலும் கோயிலும் தம்புள்ளை புனித பூமி பிரதேசத்துக்கு வெளியிலே உள்ளன. இந்தப் பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அங்கு இயங்கி வருகிறது. அது சட்ட விரோத கட்டிடமல்ல. மூன்று முஸ்லிம்களின் பெயரிலே பள்ளிவாசல் காணி உள்ளது. மத ஸ்தலம் என்பதால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு சோலை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். (மேலும்......)

சித்திரை 26, 2012

சுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம்

(அ.ஆனந்தன்)

தமிழ்ச் சமூகம் ஆரியம் போன்றவற்றின் கலப்பின்றி இருந்திருக்குமானால் மிக உன்னதமாக ஒரு வழிப்பாதையில் வளர்ந்தோங்கி இருக்குமென்று முன் வைக்கப்படும் கருத்து சுருக்கமாகச் சொன்னால் பாமரத்தனமானது. சமூக வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. அதனுடைய வளர்ச்சிப் போக்கை இவ்வாறு பார்ப்பது எந்த வகையிலும் விஞ்ஞானபூர்வ பார்வையாக இராது. பிற சமூக கலப்புகள் இன்றி வாழ்ந்த சமூகம், இன்றும் வாழ்ந்து வரும் சமூகம் என்று எதுவுமே இருக்க முடியாது. அவ்வாறு ஒன்று இருக்குமானால் அது தேங்கிய குட்டைபோல் ஆகி அதன் மக்கட் தொகையும் சுருங்கி அச்சமூகமே ஒரு நாள் இல்லாதொழிந்துவிடும். பல ஆதிவாசிக் குழுக்கள் இவ்வாறு அழிந்துபோனதே அதற்கு எடுத்துக்காட்டு. (மேலும்......)

சித்திரை 26, 2012

Totally distorted picture of Sri Lanka that has been propagated in the West.

Speech delivered by Sam Rajendran, President, CDTCA in Toronto on 22 April 2012 on the occasion of Sinhala Tamil New Year Celebration organized by CDTCA: On behalf of the CANADIAN DEMOCRATIC TAMIL CULTURAL ASSOCIATION, I am extremely delighted to welcome you all to our Celebration of Sri Lankan Solidarity on the occasion of the Sinhala Tamil New Year. I am especially proud to welcome the Sri Lankan High Commissioner to Canada, Her Excellency Mrs. Wagiswara as our chief guest this evening. It is also my great pleasure to welcome the Sri Lankan Consul General in Toronto, Hon Mr. Karunarathna Paranawithana, and all our special guests. (more....)

சித்திரை 26, 2012

கியூபாவின் வழி தனி வழி

(சில வருடங்கள் முன்பு கியூபா சென்ற பின்பு எழுதியது)

(நடேசன்)

கியூபா என்றதும் பலருக்கும் சேகுவேராவும் காஸ்ட்ரோவும்தான் நினைவுக்கு வருவார்கள். இன்னும் சிலருக்கு அழகான பெண்களும் (ஆண்களும்) நைட்கிளப்புகளும் நினைவுகளில் ஊஞ்சல் ஆடும். இதைவிட கியூபா சுருட்டும் ஹவானா ரம்மும் மறக்க முடியாதவை. பிடல் காஸ்ட்ரோ உயிர் வாழும் போதே கியூபா செல்லவேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற கடந்த தை மாதம் அங்கு சென்றேன். எனக்கு ஹவானா விமானநிலையத்தைப் பார்த்த போது ஒரு மூன்றாம் உலக நாட்டின் விமான நிலையம் போல்தான் காட்சியளித்தது. அரை குறையான ஆங்கிலமும் புன்னகை குறைவாக அணிந்திருந்த குடிவரவு அதிகாரிகளின் முகங்களும் ஏற்கனவே அமெரிக்க பிரசாரங்கள் படித்திருந்த என் மனத்தில் கொட்டையற்ற பழப்புளியை கரைத்தது போல் இருந்தது. ஆஸ்திரேலிய பணத்தை மாற்றி கியூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு டாக்சியில் ஏறியமர்ந்து பயணித்தபோதுதான் கியூபாவின் தனித்தன்மை எனக்கு ஆச்சரியம் அளித்தது. (மேலும்......)

சித்திரை 26, 2012

Most Amazing Lines Written by Man!!!

When I was born, A Woman was there to hold me : My Mother

As I grew up as a child, A woman was there to care & play with me: My Sister

I went to school, A Woman was there to help me learn: My Teacher

I became depressed when I lost, A Woman was there to offer a shoulder: My Girlfriend

I needed compatibility, company & Love, A Woman was there for me: My Wife

I became tough, A Woman was there to melt me: My Daughter

When I will die, A Woman will be there to absorb me in: My Motherland

If you are a Man, value every Woman.

                  &

If you are a Woman, feel Proud to be one

சித்திரை 26, 2012

இலங்கை விஜயம் திருப்தியளித்தது:  13 வது திருத்தம் குறித்தும் பேசினோம் - இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ்

இலங்கை விஜயம் திருப்தி கரமாக அமைந்திருந்ததாக இந்திய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவியும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாராளுமன்றக் குழுவின் தலைவியுமான சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். தமது இலங்கை விஜயம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கமளித்த பின்னர் ஊடகவியலாளர்க ளுக்கு கருத்துத் தெரிவித்த போதே சுஷ்மா சுவராஜ் இவ்வாறு கூறினார். மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது மற்றும் 13வது திருத்தச் சட்டமூலத்தை அமுல்படு த்துவது உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களுடன் கலந்துரை யாடியிருந்ததாகவும் அவர் கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதையே தமிழ்க் கூட்ட மைப்பினர் வலியுறுத்தி யிருந்தனர். (மேலும்......)

சித்திரை 26, 2012

சூடான் தம்மீது யுத்த பிரகடனம்

சூடான் மற்றும் தென் சூடான் படைகள் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேறும்படி ஆபிரிக்க ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் தென் சூடான் மீதான வான் தாக்குதல்களை நிறுத்தும்படி சூடானுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை அழுத்தம் கொடுத்துள்ளது. எனினும் சூடான் தமது நாட்டின் மீது யுத்த பிரகடனம் செய்துள்ளதாக தென் சூடான் ஜனாதிபதி செல்வா கயிர் அறி வித்துள்ளார். சூடான், தென் சூடானுக்கு இடையிலான அண்மைய மோதல் இரு நாட்டுக்கும் இடையில் மீண்டும் ஒரு நீண்ட யுத்தத்திற்கு வழிவகுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் சூடான் ஜனாதிபதி தனது சுற்றுப்பயணத்தை பாதியில் நிறுத்தி நாடு திரும்புவதாக நேற்று அறிவித்துள்ளார்.

சித்திரை 26, 2012

விண்கல்லில் சுரங்கம் தோண்ட திட்டம்

பூமிக்கு அருகில் உள்ள விண்கற்களில் சுரங்கம் தோண்ட கோடிஸ்வர வர்த்தகர்களைக் கொண்ட அமைப்பொன்று திட்டமிட்டுள்ளது. இயந்திர விண்கலம் மூலம் பல பில்லியன் டொலர் பெறுமதி கொண்ட இந்த சுரங்கம் தோண்டும் திட்டத்தை செயற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. இதன் மூலம் விண்கல்லில் இருக்கும் இரசாயன எரிபொருள் கூறுகள் மற்றும் பிளாடினம், தங்கம் போன்ற மூலப்பொருட்களை பெற முடியும் என அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் கோடிஸ்வர வர்த்தகர் அமைப்பை ஹொலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கமரூன், கூகிள் இணையதள நிறைவேற்று அதிகாரி பற்றிபேஜ் மற்றும் அதனது நிறைவேற்று இயக்குநர் எரிக் ஸ்கமிட் ஆகியோர் இணைந்து அமைத்துள்ளனர். இவர்கள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் விண்வெளியில் எரிபொருள் கிடங்கை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். எனினும் இந்த திட்டம் மிகக் கடினமான அதிக செலவுகொண்டது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் இந்த திட்டத்தை எதிர்வரும் 18 முதல் 24 மாதங்களுக்குள் ஆரம்பிக்க அதன்தோற் றுவிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக தொலைகாட்டி ஒன்றை அமைத்து விண் கற்களை அடையாளம் காணவுள்ளனர்.

சித்திரை 26, 2012

இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானும் வெற்றிகரமாக ஏவுகணை சோதனை

அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. இந்தியா நீண்ட தூர ஏவுகணை சோதனை செய்து ஒருவாரத்திற்குள் பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஷஹீன் 1-ஏ என்ற இடைநிலை தூரம் செல்லும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. இந்த ஏவுகணை இந்திய இலக்குகளை எட்டக்கூடிய சக்திவாய்ந்ததாகும். எனினும் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் ஏவுகணை செல்லும் தூரம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும் இது 2,500 முதல் 3000 கிலோ மீற்றர் வரை விண்ணில் தாவக்கூடியது என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியா கடந்த வாரம் வெற்றிகரமாக சோதித்த அக்னி வி ஏவுகணை 5000 கிலோ மீற்றர்வரை தாவிச்சென்று இலக்குகளை தாக்கக்கூடியதாகும். பாகிஸ்தானிடம் சிறிய, மத்திய மற்றும் நீண்ட தூரங்களை தாக்கும் ஏவுகணை வலு உள்ளது.

சித்திரை 26, 2012

உலகின் கண்டங்கள் அனைத்தும் இணைந்து புதிய அமேசியா கண்டம் உருவாகும்

லகில் உள்ள கண்டங்கள் அனைத்தும் இணைந்து அமேசியா என்ற புதிய பெரிய கண்டம் உருவாகும் என புவியியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு, அப்பகுதி நீர் மற்றும் காற்றுப் போக்கினால் இணையும். இதனுடன், ஆர்டிக் கடலும் கரீபியன் கடலும் ஒன்றாக சேரும். இதன் மூலம் மிகப் பெரிய புதிய கண்டம் உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பூமியின் அடியில் உள்ள தட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் வடக்கு முனை பூமித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள்ளன. அதுபோன்ற மாற்றங்களினால் அவுஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணையலாம். என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார்.

சித்திரை 26, 2012

கடல் எல்லை

1982 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மன்றம் United Nations Convention on the law of the Sea எஎன்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமை ப்புதான், உலக நாடுகளின் கடல் எல்லை களை வரையறுத்தது. இவர்கள் வரைந்த ஒப்பந்தத்தில், இதுவரையிலும், 158 நாடுகள் கையெழுத்து இட்டு உள்ளன.  கடலில், மூன்று வகையான எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. கரையில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்ட. ‘கரைக்கடல்’. இதில் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அடுத்த ஆறு நாட்டிகல் மைல், ‘அண்மைக் கடல்’ இதில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதன் பின் உள்ளது தான் ‘ஆழிக்கடல்’ இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம். இப்போது கரை ஓரங்களில் மீன்வளம் குறைந்து விட்டது. எனவேதான். கட்டு மர மீனவர்கள் அண்மைக் கடலுக்கும் ஆழிக்கடலுக்கும் செல்லுகிறார்கள். (மேலும்......)

சித்திரை 26, 2012

இதயசுத்திசுடனான கூட்டு  உழைப்பே கிளிநொச்சியின் கல்வி மேம்பாட்டுக்கு வழிசமைக்கும்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற  அபிப்பிராயம் பொதுவாகப் பலரிடமும் காணப்படுகிறது. மாவட்டரீதியான கல்வியின் முன்னேற்றமானது, போர்க்காலத்தில் இருந்த அளவுக்கு போர் முடிந்தபின்னர் காணப்படவில்லை என்ற கருத்து இதில் முதன்மையானது.  இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு அப்பால் மாவட்டத்தின் அனைத்து தரப்பினரதும் இதயசுத்தியுடனான கூட்டு உழைப்பின் மூலம் மாவட்டத்தின் கல்வி நிலையினை மேம்பாட்டுக்கு கொண்டுவரமுடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதிதலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.(மேலும்......)

சித்திரை 25, 2012

13 ஆவது திருத்தம் இந்திய எம்.பி.க்களுடன் கலந்துரையாடப்பட்டதா?

இலங்கைக்கு வருகை தந்த இந்திய எம்.பி.க்களுடன் 13 ஆவது திருத்தம் குறித்து கலந்துரையாடப்படவில்லையா? என்ற கேள்வியை சென்னையிலிருந்து வெளியிடப்படும் “இந்து’ பத்திரிகை செவ்வாய்க்கிழமை எழுப்பியுள்ளது. 2012 ஏப்ரல் 21 இல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் 13+ குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கதைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.  முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்போது இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் என்று ஆட்டப்பந்தய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறுவதாகத் தென்படுகிறது என்று இந்து குறிப்பிட்டுள்ளது. (மேலும்......)  (ஆங்கில கட்டுரையை வாசிக்க....)

சித்திரை 25, 2012

இலங்கை விவகாரத்துக்கு விக்கிரமாதித்தன் கதையுடன் சமாந்தரம் வரைகிறார் ஹரிகரன்

இலங்கையின்  இன நெருக்கடித் தீர்வு விவகாரத்தில் இந்தியாவின் முயற்சிகளுக்கும் விக்கிரமாதித்தன் கதைக்கும் இடையில் சமாந்தரம் வரைந்துள்ளார் கேணல் ஆர்.ஹரிகரன் . இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பாக புரிந்து கொள்ளக் கூடியவை என்ற தலைப்பில் தெற்காசிய ஆய்வுக் குழுமம் (South asia Analysis Group ) கேணல் ஹரிகரன் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலை கொண்டிருந்த காலத்தில் அப்படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணி ஆற்றிய வரும் தெற்காசியா தொடர்பான ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வு நிபுணருமான கேணல் ஹரிகரன்  இலங்கைக்கான இந்தியப் பாராளுமன்றக் குழுவின் 6 நாள் விஜயம் தொடர்பான செய்திகளில்  சாதகமானதும் , பாதகமானதுமான இரு அம்சங்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். (மேலும்......)

சித்திரை 25, 2012

வதிரி சந்தி வாள்வெட்டில் ஒருவர் பலி !

இன்று மதியம் 1.30 மணயளவில் வடமராட்சி வதிரி சந்தியில் 28 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் வாள்வெட்டுக்குப் பலயாகியுள்ளார். மோட்டார் சையிக்கிளில் மேற்படி இளைஞரைத் தொடர்ந்துவந்த இருவர் வதிரிச் சந்தியில் வைத்து அவரை வாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ஊர் தகவல்களின்படி, மேற்படி இளைஞர் ஒரு முன்னாள் போராளியென்றும், அண்மையில் வெளிநாடொன்றிலிருந்து திரும்பியிருந்தவர் எனவும் தெரியவருகிறது. இவரது பெயர் சிவஞானம் சிவரூபன் எனவும் இவர் தொண்டமானாறைச் சேர்ந்தவர் எனவும் உள்ஊர் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

(நன்றி: தேனி)

சர்கோஸியின் வாட்டர்லூ!

(எம். மணிகண்டன் )

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வாட்டர்லூ அருகே கடும் யுத்தம் நடந்தது. அந்த யுத்தத்தில் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார். நாடு விட்டு நாடு ஓடினார். எங்கும் ஒளிந்து கொள்ள முடியாமல், கடைசியில் பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தார். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தும் போனார். நெப்போலியனின் ஆட்சிக்கு முடிவு கட்டியதுடன், ஐரோப்பாவின் அரசியல் போக்கையே மாற்றியமைத்த யுத்தம் அது. அதைப்போன்ற இன்னொரு யுத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடந்தது. பிரான்ஸின் அதிபர் தேர்தல் வடிவில். பதவிக்கு வரும்போதே, பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸியை நவீன கால நெப்போலியன் என்றார்கள். உறுதியான முடிவுகள், பிரச்னைகளைக் கண்டு அஞ்சாத தன்மை, சர்ச்சைகளைக் கடந்து வரும் துணிச்சல் போன்ற சர்கோஸியின் குணங்கள் பாராட்டப்பட்டன. ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் மாவீரன் நெப்போலியனைப் போலவே வாட்டர்லூ யுத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.(மேலும்......)

சித்திரை 25, 2012

60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தை அகற்ற உத்தரவு??

தம்புள்ளைப் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து , கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது?. திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையானது மக்களின் சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60வருடங்களுக்கு முற்பட்ட பழைமைவாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார் மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இலங்கை அரசு நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான செயல்களும் நாட்டில் அரங்கேற்றப்படுகின்றன. இதனால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.விசனம் தெரிவித்துள்ளனர்.

சித்திரை 25, 2012

சனல் 4 தொலைக்காட்சி சேவை போன்று நம்நாட்டு தொலைக்காட்சிகள் செயலாற்றலாகாது

சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கைக்கு எதிரான செயற்பாடுக ளுக்கு இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியொருவர் பின்னணியில் இருக்கிறாரென்ற உண்மைத் தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை கள் மகாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும் அதனை ஆதரிக்கும் நாடுகளும் கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதர வாக வாக்களிக்க வேண்டுமென்று சனல் 4 தொலைக்காட்சி நிறு வனத்தினர் பல்வேறு நாடுகள் மீது அழுத்தங்களை கொண்டு வரும் அளவுக்கு இலங்கைக்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. சிராணி சுப்பிரமணியம் என்ற பெயருடைய ஒரு இலங்கைத் தமிழ் பெண், சனல் 4 தொலைக்காட்சி சேவையின் நிர்வாகப் பணிப் பாளரை மணம் புரிந்து லண்டனில் வசித்து வருகின்றார் என்ற தகவல் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான மகாநாடு நடந்து கொண் டிருந்த காலகட்டத்தில் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்......)

சித்திரை 25, 2012

தமிழகத்தின் உறவு அவசியம் - அமைச்சர் டி.இ.டபிள்யு குணசேகர!

இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவினை விட, தமிழகத்தினுடனான ராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கம் விரித்தி செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமைச்சர் டி.இ.டபிள்யு குணசேகர நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் எந்த ஒரு அரசாங்கமும், தமிழகத்துடன் ராஜதந்திர ரீதியான உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரையில் தமிழகத்தின் முதலமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதில்லை. இதேநேரம் இலங்கையின் உயர்மட்ட அமைச்சுக் குழு ஒன்று தமிழகத்துக்கான விஜயத்தை இதுவரையில் மேற்கொண்டதும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் தமிழ் மக்கள், தமிழக மக்களுடன் கொண்டுள்ள மொழி மற்றும் கலாசார தொடர்புகள் குறித்து, இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கமும் மறந்தே செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை 25, 2012

சோனியாவை பிரதமராக விடாமல் தடுத்த அப்துல் கலாமை காங்கிரஸ் ஏற்குமா?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் ராஷ்ட்ரபதி பவனுக்கு திரும்பக்கூடும் என்று கூறப்படுகிறது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலின் பதவிக்காலம் முடிவதையடுத்து விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும்3 மாதங்கள் கூட இல்லை. இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் விரும்புகின்றனர். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் அரசியல் தொடர்பில்லாத ஒருவரே குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித் துள்ளார். சோனியா காந்தியை பிரதமர் பதவிக்கு வரவிடாமல் தடுத்தவர் என்பதால் தான் கலாமை காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக விடாமல் தடுத்தது. ஆனால் இப்போது அனைத்துத் தரப்பினரும் நெருக்கடி தருவதால் காங்கிரஸ் முழிக்கிறது. அதேநேரத்தில் கலாம் தவிர்த்த எதிர்க் கட்சிகள் சொல்லும் வேறு ஒரு பொது வேட்பாளரை ஏற்க காங்கிரஸ் தயாராகவே இருக்கும் என்று தெரிகிறது.

சித்திரை 25, 2012

உங்களுக்குத்தெரியுமா? இந்த 16 கேள்விகளுக்கும் விடை..?

(ஞாநி)

1. ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

2. கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

(மேலும்......)

சித்திரை 25, 2012

கிழக்கு பல்கலைக்கழத்திற்க்கு உதவி வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது - உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நடாளுமன்ற குழுவினர் கிழக்கு பல்கலைக் கழகத்தின் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கே.கோவிந்தராஜனுடன் கரந்துரையாடினார்கள். பல்கலைக் கழகத்திதற்கு தாம் உதவ தயாராக இருப்பதாகவும் அதுதொடர்பான திடட்ட அறிக்கைகளை கிழக்கு மாகாண  முதலமைச்சருடாக சமர்ப்பிக்கப்டவேண்டும் எனவும் உபவேந்தரிடம் இந்திய உயர்மட்ட குழு கேட்டுக் கொண்டது. இதற்கான நடவடிக்கைகளை உபவேந்தர் மேற்கொண்டுவருகிறார்.(மேலும்......)

சித்திரை 25, 2012

பாகிஸ்தான் நீண்ட தூர ஏவுகணை சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதையடுத்து பாகிஸ்தானும் நீண்ட தூர ஏவுகணையை பரிசோதிக்க முடிவுசெய்துள்ளது. அடுத்த 5 நாட்களில் இந்தியப் பெருங்கடளில் நீண்டதூர ஏவுகணையை பரிசோதிக்க உள்ளதாக இந்தியாவிடம் பாகிஸ்தான் தகவல் அளித்துள்ளது. ஏவுகணையை பரிசோதிக்க உள்ளதால் அப்பகுதியில் விமானங்கள் பறக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு இந்தியாவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.

சித்திரை 25, 2012

நேட்டோ நாடுகளின் அழுத்தத்தால் அக்னி 5 ஏவுகணை விண்ணில் பாயும் தூரம் குறைக்கப்பட்டது - சீன பத்திரிகை

இந்தியா சமீபத்தில் 5,000 கிலோ மீட்டர் தூரம் வரை விண்ணில் பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி - 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து வெற்றி கண்டது. இந்நிலையில், நேட்டோ நாடுகளின் அழுத்தத்தால் ஏவுகணையின் பரிசோதனை தூரத்தை 9,000 கிலோ மீட்டரில் இருந்து 5,000 கிலோ மீட்டர் ஆக குறைக்கப்பட்டதாக சீனாவில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்பத்திரிகை அக்னி - 5 ஏவுகணை சோதனைக்கு முன்பே சீனா இந்தியாவை காட்டிலும் அணு சக்தியிலும், ஏவுகணை தொழில் நுட்பத்திலும் பல மடங்கு முன்னேறியுள்ளதாகவும், அவைகள் மிகவும் நம்பகத்தன்மை மிக்கதாக இருப்பதா கவும், எனவே இந்தியா விற்கு இது போன்ற ஏவுகணை சோதனை தவிர்க்க இயலாத ஒன்று என முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய- சீன உறவு குறித்து அப்பத்திரி கையில், சர்வதேச நாடுகள் இவ்விரு நாடுகளையும் எதிரி நாடுகள் போல சித்தரிக்க முயல்கிறது. எனவே இதை இவ் விரு நாடுகளும் இணைந்து முறியடி க்க வேண்டும் என வும் இரு நாடுகளுக் கிடையே யான நட்பு பாலத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவும், சீனா வும் இணைந்திருந் தால் ஆசிய கண்டம் வலிமையானதாக இருக்கும் எனவும், இல்லையென்றால் ஆசிய கண்டம் பல வீனமான ஒன்றாகவே இருக்கும் எனவும் மேலும் தெரிவித் துள்ளது.

சித்திரை 25, 2012

அமெரிக்க சமூக அமைப்புகளுக்கு எகிப்தில் அனுமதி மறுப்பு

எகிப்தில் இயங்கும் அமெரிக்காவின் 8 அரச சார்பற்ற சமூக அமைப் புகளின் அனுமதிப் பத்திரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இதில் தேர்தல் கண் காணிப்பு பணியில் ஈடுபடும் காடர் சென்டர் அமைப்பும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. எகிப்து ஜனாதிபதி தேர்தல் இடம்பெற ஒரு மாதம் இருக்கும் நிலையிலேயே ஆளும் இராணுவ கவுன்ஸில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எகிப்தின் காப்புறுதி மற்றும் சமூக விவகார அமைச்சே இந்த தொண்டு நிறுவனங்களின் அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்துள்ளது. தேசத்தின் இறையான்மையை மீறி செயற்படுவதால் இந்த அமைப்புகளின் அனுமதிப்பத்திரம் மறுக்கப்பட்டுள்ளது. என அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சித்திரை 25, 2012

தென் சூடான் மீது சூடான் தொடர்ந்து தாக்குதல்

சூடான் யுத்த விமானங்கள் தென் சூடான் எல்லைப் பகுதிகளில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.  இந்நிலையில் தென் சூடானுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பiர் அறிவித்துள்ளார். எனினும் சூடான், தென் சூடான் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் உடன் நிறுத்த வேண்டும் என ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 10 தினங்களாக சூடானுக்கு சொந்தமான எண்ணெய் வளமுள்ள ஹெக்லிக் பகுதியை ஆக்கிரமித்திருந்த தென்சூடான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது படையை அங்கிருந்து வாபஸ் பெற்றது. எனினும் சூடான் இராணுவம் தென் சூடான் எல்லை பகுதிகளில் தொடர்ந்தும் தாக்குதல் நடாத்தி வருகின்றது. இதனால் இந்தப் பகுதியில் மீண்டும் ஒரு முழு நீள யுத்தம் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதனிடையே தென் சூடான் ஜனாதிபதி செல்வா கியிர் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 6 நாள் சுற்றுப்பயணமாக அங்கு சென்றுள்ள கியிர் சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவையும் சந்திக்கவுள்ளார். சூடானில் கடந்த 20 ஆண்டுகள் நீடித்த சிவில் யுத்தத்தில் 15 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். ஐ. நா. தலையீட்டின் பேரில் கடந்த ஆண்டு தென் சூடான் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. எனினும் இருநாட்டு எல்லைகள் இன்னும் வரையறுக்கப் படவில்லை என்பதோடு மேலும் பல தீர்க்கப்படாத சர்ச்சைகள் இரு நாட்டுக்கும் இடையில் நீடித்து வருகிறது.

சித்திரை 25, 2012

நெதர்லாந்து அரசை கலைக்க  பிரதமர் மகாராணியிடம் கடிதம்

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட் தமது அரசை கலைப்பதற்கான ராஜினாமா கடிதத்தை அந்நாட்டு மகாராணி பீட்ரிக் ஸிடம் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் நெதர்லாந்தில் முன்கூட்டியே தேர்தல் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையற்ற மார்க் ருட் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த தீவிர வலதுசாரி கட்சியான சுதந்திரக் கட்சி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்காததைத் தொடர்ந்தே நெதர்லாந்து அரசை கலைக்க கோரப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நெதர்லாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கையை தமது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கியதைத் தொடர்ந்தே சுதந்திர கட்சி அரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நெதர்லாந்து பிரதமர் ருட், மகாராணியை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இதன்போது ராஜினாமாவை ஏற்றுள்ள மகாராணி காபந்து அரசை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக நெதர்லாந்து அரச ஊடக சேவை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நெதர்லாந்தில் மூன்கூட்டி தேர்தல் இடம்பெற்றால் இஸ்லாமிய எதிர்ப்பு கட்சியான சுதந்திர கட்சி முன்னிலை பெற வாய்ப்பு உள்ளது.

சித்திரை 24, 2012

முஸ்லிம் பிரதிநிதிகளும் எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டும் - சம்பந்தன் _

தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு செயற்படுவதுடன் முஸ்லிம் பிரதிநிதிகளும் எம்முடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் எமது குறிக்கோளை அடைய முடியும். இதற்கான அழைப்பினை புல்மேட்டையில் விடுக்கின்றேன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா சம்பந்தன் புல்மோட்டை பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களைச் சந்தித்துப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். (மேலும்......)

சித்திரை 24, 2012

தம்புள்ளையில் அரசின் காடைத்தனம் – முஸ்லீம் தேசிய இனத்தின் மீதான வன்முறை

(சபா நாவலன்)

இலங்கைத் தீவில் முதலாவது தேசிய இனங்களுக்கு எதிரான வன்முறை 1915 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல். பிரித்தானிய ஏகாதிபத்தியம் திட்டமிட்டு உருவாக்கிய தேசிய இன முரண்பாட்டின் பேரினவாத முகவராகச் செயற்பட்ட அனகாரிக தர்மபால எல்லா சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் எதிரான “பௌத்த தத்துவவியலை” வளர்த்தவர். முஸ்லிம்களைக் கடலில் தள்ளிக் கொன்றுவிட வேண்டும் என்று சூழுரைத்தவர். தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்களுக்கு எதிரான முதலாவது வன்முறைக்கு தமிழ்ப் பேசும் இந்துக்களும் மானசீக ஆதரவை வழங்கிய கறைபடிந்த வரலாற்று பக்கங்கள் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் நீண்ட உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. (மேலும்......)

சித்திரை 24, 2012

யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தை நடத்துவது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாதகமாக அமையும்

தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னப் படுத்தக்கூடிய வகையில் 1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரம், யாழ் நூலகத்தை எரித்து சாம்பலாக்கியமை போன்ற அநியாயங்களை தமிழ் மக்களுக்கு இழைத்த ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யினரும் ஆடைகளை அணிந்து கொண்டா இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்று தங்கள் பிரசாரங்களை மேற்கொள்ள எத்தனிக்கிறார்கள் என்று தமிழ் புத்திஜீவிகளும், சாதாரண மக்க ளும் இவ்விரு கட்சிகளையும் பார்த்து ஏளனம் செய்யக்கூடிய அள விற்கு இக்கட்சிகள் இன்று அவமானச் சின்னங்களாக மாறியிருக் கின்றன. (மேலும்......)

சித்திரை 24, 2012

30,000 மணி நேரம் பயன்படுத்த கூடிய மின்குமிழ் அறிமுகம்

இருபது வருடங்கள் அல்லது 30,000 மணித்தி யாலங்கள் பயன்படுத்தக் கூடிய மின்சாரத்தை சிக்கனமாக மீதப்படுத்தும் எல். ஈ. டீ. மின்குமிழ் ஒன்றை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க கம்பனி ஒன்று தயாராகி வருகிறது. அமெரிக்காவின் வலு திணைக்களத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட போட்டியிலும் 10 வோட் அளவினைக் கொண்ட எல்.ஈ.டீ. மின்குமிழுக்கே முதலிடம் கிடைத்துள்ளது. மூன்று வருட உத்தரவாதத்தினைக் கொண்ட இந்த மின் குமிழை சந்தைப்படுத்த தயாராகிவரும் அதன் உற்பத்தி நிறுவனம் ஒரு மின்குமிழின் விலை 60 அமெரிக்க டொலராக நிர்ணயித்துள்ளது. (7,800 ரூபா) சீஎல்எவ் மின்குமிழை விடவும் ஒருபடி முன்னேற்றமான முறையில் மேற்படி மின்குமிழ் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இந்த மின்குமிழ் சந்தைக்கு வந்த உடனேயே இதனை மக்கள் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதற்கு அதிகம் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாத போதிலும் காலப் போக்கில் மக்கள் இதனை கொள்வனவு செய்ய முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமெரிக்காவின் ‘டைம்ஸ்’ சஞ்சிகை தெரிவிக்கின்றது.

சித்திரை 24, 2012

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் பிரதமர்

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தை கலந்துரையாடல் மூலம் தீர்க்கலாம்

இன மற்றும் மத ரீதியான பிரச்சினைகள் எழும்போது கலந்துரையாடல்களின் மூலம் ஒரு தீர்வுக்கு வருவதே அதனைத் தீர்ப்பதற்குரிய பொருத்தமான வழிமுறையென பிரதமர் தி. மு. ஜயரத்ன அவர்கள் வலியுறுத்தினார். சிறு சிறு கருத்து வேறுபாடுகளை பூதாகர மாக மாற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவ்வாறான பிரச்சினைகளின்போது சகல தரப்பி னர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வொன்றிற்குச் செல்லவேண்டும் எனவும் பிரதமர் அவர்கள் சுட்டிக் காட்டினார். வரலாற்றுப் புகழ்மிக்க ரங்கிரி தம்புலு புனித பூமி பிரதேசத்தில் தற்போது ஏற் பட்டிருக்கும் சமய புனிதஸ்தலம் சம்பந்த மான பிரச்சினையையும் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறிய பிரதமர் அவர்கள், அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கையுடன் நட்புணர்வுடன் செயலாற்றும் இத்தருணத்தில் இவ்வாறான அற்ப விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இனங்கள் மற்றும் மதங்களுக் கிடையில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் செயலை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

சித்திரை 24, 2012

இஸ்ரேலுடனான எரிவாயு உடன்படிக்கையை ரத்துச் செய்தது எகிப்து

இஸ்ரேலுக்கு எரிவாயு விநியோகிக்கும் ஒப்பந்தத்தை எகிப்து ரத்துச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் விதி மீறல் ஏற்பட்டுள்ளதாக எகிப்து இயற்கை வாயு நிறுவனம் கூறியுள்ளது. எனினும் இந்த முடிவால் இரு நாட்டு அமைதி ஒப்பந்தத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தமது எரிவாயுவுக்கு நான்கு மாதங்களாக கட்டணம் செலுத்தவில்லை என்று எகிப்து இயற்கை வாயு நிறுவன தலைவர் மொஹமட் ஹொயெப் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுவதற்கு பொருளாதார காரணங்களுக்கு வெளியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் தாம் கட்டணம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது. இஸ்ரேல் - எகிப்துக்கு இடையில் 1979 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டின் கீழ் இரு நாடுகளுக்கு இடையிலான எரிவாயு உடன்பாடு எட்டப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய வர்த்தக உடன்பாடு இதுவாகும். எனினும் எகிப்தின் இந்த உடபடிக்கை பிராந்திய நாடுகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு உள்நாட்டிலும் சர்ச்சையை கிளப்பியது. இஸ்ரேல் தனது மின் உற்பத்திக்கு எகிப்தின் 40 வீதமான இயற்கை வாயுவை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை 24, 2012

இலங்கை மற்றும் மதுரைக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனுமதி!

இலங்கை மற்றும் மதுரைக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனுமதி அளித்துள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சி எம்பி மணிக்கா டகொரே தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து இலங்கை வந்த நான்கு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களில் மணிக்கா டகொரேவும் ஒருவராவார். இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் இரு நாட்டு கலாசார உறவுகளை மேம்படுத்திக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் இதன்போது மதுரை - இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதி இணங்கியதாகவும் மணிக்கா டகொரே குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை 24, 2012

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு சென்றது, சார்கோசிக்கு பின்னடைவு

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரான்கொய்ஸ் ஹொல்லான்ட் சிறு இடைவெளியில் நிகொலஸ் சார்கோசியை வென்றுள்ளார். எனினும் முதல் சுற்றில் எவரும் 50 வீத வாக்குகளை வெல்லாத நிலையில் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. இதில் முதல் சுற்றில் ஹொல்லான்ட் 28.6 வீத வாக்குகளை வென்று முதலிடத்தை பிடித்தார். தற்போதைய ஜனாதிபதி நொகலஸ் சார்கோசி 27.1 வீத வாக்குகளை பெற்றார். தேர்தலில் வலது சாரி தேசிய முன்னணி வேட்பாளர் மரின் லேயென் 18.1 வீத வாக்குகளை வென்றார். இதன்படி முதல் சுற்றில் முதல் இரு இடங்களை பிடித்த ஹொல்லான்ட் மற்றும் சார்கோசி இரண்டாம் சுற்று தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இரண்டாம் சுற்று தேர்தல் எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஹொல்லான்ட் பிரான்ஸ் ஜனாதிபதியாக தேர்வாகும்பட்சத்தில் பிரான்கொய்ஸ் மிட்டரன்டுக்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதியாக தேர்வு பெறும் முதல் இடது சாரி வேட்பாள ராக பதிவாவார். மறுபுறத்தில் சர்கோசி இந்த தேர்தலில் தோல்வியுறும் பட்சத்தில் 1981 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதியாக இருந்து தோல்வியடையும் முதல் வேட்பாளராக பதிவாவார்.

சித்திரை 24, 2012

தத்தளிக்கும் கருணாநிதி

எரிமலையாக வெடிக்கும் அழகிரி, ஸ்டாலின் மோதல்

மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையிலான பதவிப் போர் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு இரு தலைக் கொள்ளி எறும்பு போல தத்தளித்து வருகிறார் கருணாநிதி. எத்தனையோ பெரிய பெரிய எதிரிகளை, சவால்களை, சங்கடங்களை, சஞ்சலங்களை, சலசலப்புகளைப் பார்த்தவர் கருணாநிதி. ஆனால் இன்று அவரது பிள்ளைகள் ரூபத்தில் எழுந்து நிற்கும் சவாலை சந்திக்க முடியாமல், முடிவு காண முடியாமல் பெரும் குழப்பத்திலும், கலக்கத்திலும் இருக்கிறார் கருணாநிதி. தற்போது இந்தப் பிரச்சினை மேலும் ஒரு புதிய மெருகோடு வெடிக்க ஆரம்பித்துள்ளது. மதுரைக்கு வந்த ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை அழகிரி ஆதரவாளர்கள் கொடுக்கவில்லை என்பதே புதிய சர்ச்சை. இதுதொடர்பாக அழகிரி ஆதரவாளர்களுக்கு தலைமைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அழகிரி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். (மேலும்......)

 

சித்திரை 23, 2012

 

இந்திய பாராளுமன்றக்குழுவினரின் இலங்கை விஜயம்

 

சித்திரை 23, 2012

இந்தியா மீது ராஜபக்ச குற்றச்சாட்டு

13 வது சட்டத்திருத்தத்தை திணிக்கிறது - இலங்கை அதிபர் ராஜபக்ச

13 வது அரசியல் சட்டத்திருத்தத்தை தங்கள் நாட்டு மீது இந்தியா திணிக்க முயற்சிப்பதாக இந்தியா மீது இலங்கை அதிபர் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை வந்து சென்ற நிலையில்,இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை என்றும்,13 வது அரசியல் சட்டத்திருத்தத்தை தங்கள் நாட்டு மீது இந்தியா திணிக்க முயற்சிப்பதாகவும் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். இத்தகவலை கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை சென்று திரும்பிய இந்திய எம்.பி.க்கள் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

சித்திரை 23, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலின் பின்னர்....

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் பிக்குகள் தலைமையிலான பெரும்பான்மை இனத்தவர்களால் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் உடைத்து சேதமாக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அதன் சுருக்கம் வருமாறு, (மேலும்.....)

சித்திரை 23, 2012

தம்புள்ளை சம்பவம்

கவலை, ஆத்திரம், அப்பப்போ ஆவேசம்... ஹக்கீம்

இந்த நாட்டிலே நாலா புறத்திலும் வாழுகின்ற முஸ்லிம்களின் மனதிலே இன்று மிகப்பெரிய ஒரு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு தம்புள்ளையில் நடந்த சம்பவம் எங்கள் எல்லோரையும் ஆழ்ந்த கவலையை அதே நேரம் ஆத்திரம் அப்பப்போ ஆவேசம் என்ற நிலைமைக்கு தள்ளியிருக்கிறது என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரித்தார்.(மேலும்.....)

சித்திரை 23, 2012

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து முன்வைக்கும் தீர்வே காலத்தின் தேவை

இனப்பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றைக் காண்பதே காலத்தின் தேவையாக உள்ளது என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதிலும் பார்க்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்வொன்றை காண்பதே காலத்தின் தேவையாக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதி த்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகத் தீர்வொன்றை காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு சிறப்பானது என்பதே எமது கருத்து. (மேலும்.....)

சித்திரை 23, 2012

ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்

வடக்கில் இராணுவத்தினர் மக்கள் சேவை

யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டு காலம் கடந்து விட்ட இவ்வேளையிலும் கூட வட மாகாணத்திலிருந்து இராணுவத்தினரை அரசாங்கம் வெளியேற்றி விடுமென்று எதிர்பார்ப்பது ஒரு நியாயமற்ற செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை அலரி மாளிகையில் தன்னை சந்தித்த இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவினருக்கு தெரிவித்திருக்கிறார். ஆயுதப் படைகளின் பிரதம தளபதியென்ற முறையில் தான் எவ்விதம் இத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியுமென்று இந்திய பாராளுமன்ற தூதுக் குழுவின் தலைவி திருமதி சுஷ்மா சுவராஜிடம் கேள்வியெழுப்பிய ஜனாதிபதி, இலங்கை அரசாங்கம் வெளிநாடொன்றில் தனது படைகளை நிலை கொள்ள வைக்கவில்லை யென்றும் ஐக்கிய இலங்கையின் ஒரு பகுதியான வடபகுதியிலேயே இராணு வத்தினர் சேவையிலீடுபடுத்தப்பட்டி ருப்பதாகவும் கூறினார். ஏன் நீங்கள் இராணுவத்தினரை வட பகுதியிலிருந்து வெளியேற்ற தவறியி ருக்கிaர்களென்று இந்திய தூதுக்குழுவின் ஒரு அங்கத்தவர் ஜனாதிபதியை பார்த்து கேட்ட போது சிரித்துக் கொண்டே பதிலளித்த ஜனாதிபதி என்னால் எங்கள் இராணுவத்தை இந்தியாவுக்கு அனுப்ப முடியுமா? அதனால்தான் அவர்கள் வடபகுதியில் அமைதியாக மக்களுக்குப் பணி செய்யும் கடமையில் ஈடுபடுத்தப்பட் டுள்ளார்களென்றும் அவர் கூறினார்.

சித்திரை 23, 2012

கொழும்பு வனாத்தமுல்லை பகுதியில் சுற்றிவளைப்பு, 33 சந்தேக நபர்கள் கைது

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 33 சந்தேக நபர்களை பொலி ஸார் கைது செய்துள்ளனர். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனாத்தமுல்லை, ரி - 20 தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், போதை வஸ்து தடுப்புப் பிரிவினருடன் இணைந்து நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.00 மணி வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 33 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்.....)

சித்திரை 23, 2012

இந்தியக் குழுவினரின் விஜயம் அர்த்தமற்றது !

தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியக் குழுவினருடனான சந்திப்பில் சேர்க்காததால் குமுறுகின்றார் - பொன் செல்வராசா பா.உ

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினர் விஜயம் அர்த்தமற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். நேற்றைய (20.04.2012) தினம் இந்திய நாடாளுமன்ற குழுவினர்மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் அமோக வரவேற்ப்பும் அழிக்கப்பட்டது. பல கோடி மதிப்பான தொழிற்பயிற்சி உபகரணங்களை இந்திய நாடாளுமன்ற குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கிய சந்தர்பத்தில் வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சில்லிக்கொடியாறு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு தொகுதி மரத்தளபாடங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போது பொன் செல்வராசா பா.உ மனவிரத்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....)

சித்திரை 23, 2012

‘என்னிடம் கேட்காதீர்கள் கலைஞரிடம் கேளுங்கள்’

கடந்த நான்கு நாட்களாக இந்தியப் பாராளுமன்றத் தூதுக்குழுவைச் சேர்ந்த நாம் காலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையில் எவ்வித ஓய்வும் இன்றி எமது இலங்கை விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தியதுடன் பல பொது நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டோம். எங்களுக்கு நாடு திரும்பும் போது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சிறிய பரிசில்களைக் கூட கடைத் தெருவுக்குச் சென்று வாங்குவதற்கு நேரம் இருக்கவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் திருமதி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். எனது தூதுக்குழுவில் உள்ள ஒரு உறுப்பினருடன் இந்தியாவில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது மனைவி நீங்கள் கொழும்பு மாநகரத்தைச் சுற்றிப் பாத்தீர்களா என்று கேட்டிருக்கிறார். (மேலும்.....)

சித்திரை 23, 2012

இந்தியாவின் தேசிய பானமாக தேநீர்

பாமரர்கள் முதல் கோடீசுவரர்கள் வரை தினமும் ருசித்து பருகும் பானமாக தேனீர் (டீ) இருந்து வருகிறது. உழைப்பாளர்களுக்கு தேநீர் தான் உற்சாக பானமாக உள்ளது. அந்த வகையில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதான இடத்தை பிடித்த தேநீர் இந்தியாவின் தேசிய பானமாகிறது என்று மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா தெரிவித்தார். அசாம் தேயிலை பயிரிடுவோர் சங்க பவள விழாவில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு பேசிய அவர் அசாமில் முதன் முதலாக தேயிலை பயிரிட்ட மணிராம் தேவனின் 212 ஆம் ஆண்டு பிறந்த நாளான அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி முதல் தேனீர் இந்தியாவின் தேசிய பானம் ஆகும் என்றார். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், தேயிலை தொழிலில் பெருமளவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்று இருப்பதும் ஆகும் என்றும் அவர் கூறினார்.

சித்திரை 23, 2012

கதவு அமைக்கப்படும் விதம்

வீடுகளின் கதவுகள் உள்ளேயும், பொதுக் கட்டடங்களின் கதவுகள் ஏன் வெளியேயும் திறப்பவையாக உள்ளன தெரியுமா? தீயிலிருந்து பாதுகாக்கும் எச்சரிக்கையாகத்தான் பொதுக் கட்டிடங்களின் கதவுகள் வெளியே திறப்பவையாக உள்ளன. தீ விபத்து போன்ற வேளைகளில் பலரும் கதவின் வழியாக வெளியே வசதியாக கதவு வெளியே திறக்கும்படி அமைக்கப்படுகிறது. திருட்டை நினைத்து அச்சப்படும் நிறுவனங்களில் மட்டும் நம் வீட்டுக் கதவுகளைப் போல உட்புறம் திறப்பவையாக அமைக்கப்படுகின்றன.  உட்புறம் திறப்பதால் தப்பிக்கச் சிறிது நேரம் ஆகும். தவிர, அந்த கதவுகளுக்கான ‘கீல்’கள் உட்புறமாக இருப்பதால் கொள்ளையர்கள் கதவைப் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியாது.

சித்திரை 23, 2012

மீண்டும் தெருக்களில் இறங்கி எகிப்து மக்கள் போராட்டம்

எகிப்தில் மீண்டும் மக் கள் தெருக்களில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ள னர். எகிப்தில் 32 ஆண்டுகள் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் ஆட் சிக்கு எதிராக கடந்த ஆண்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்கள் போராட் டம் நடத்தினர். இதனால் முபாரக் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ஆட்சி ராணுவம் வசம் ஒப்படைக் கப்பட்டது. ஓராண்டு காலத்திற்குள் ஜனநாயக முறையில் மக்கள் வாக் களித்து புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முபாரக் பதவி விலகி ஓராண்டு ஆகியும் இன்னும் அதிபர் தேர்தல் நடைபெறவில்லை. இதை அடுத்து மக்கள் போராட் டத்தில் இறங்கினர். எனவே அதிபர் தேர்தல் அறிவிக்கப் பட்டது. அதில் போட்டி யிட பதவி விலகிய முபா ரக்கின் ஆதரவாளர்களே மனுத் தாக்கல் செய்துள் ளனர். இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராணுவம் தன் அதிகாரத் தைத் தக்கவைத்துக் கொள்ள முபாரக் ஆதரவா ளர்களை வேட்பாளர்க ளாக நிறுத்தியுள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் முபாரக் ஆதரவாளர்களை நீக்க வேண்டும் என்றும் முழக்க மிட்டனர். இப்போராட்டத்தினை எகிப்தின் இஸ்லாமிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் தலைமை தாங்கி நடத்தி வருகின்றன.

சித்திரை 23, 2012

சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்களை அதிகரிக்க பாதுகாப்பு சபை இணக்கம்

சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்களை அதிகரிக்க பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. இதன்படி சிரியாவில் தற்போதுள்ள 30 யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களை 300 ஆக அதிகரிக்க பாதுகாப்புச் சபை அங்கத்துவ நாடுகள் இணங்கியுள்ளன. இவர்கள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளார். இது தொடர்பில் நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 15 நாடுகளும் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. சிரிய படை மற்றும் எதிர்த்தரப்பினருக்கு இடையிலான வலுவில்லாத யுத்த நிறுத்தத்தை கண்காணிக்க ஐ.நா.வின் சிறு கண்காணிப்புக் குழுவொன்று அங்கு இயங்கிவருகிறது. இந்நிலையில் சிரியாவில் அரச எதிர்ப்பாளர்கள் வலுவாக உள்ள ஹோம்ஸ் நகருக்கு செல்ல ஐ.நா. யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களுக்கு சிரிய அரசு அனுமதி அளித்துள்ளது. இங்கு மோதல்கள் நீடித்துவரும் நிலையில் கண்காணிப்பாளர்கள் சென்றுள்ளனர்.

சித்திரை 23, 2012

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் வாக்கு பதிவு முடிவு

நிதி நெருக்கடி, வேலையின்மை அதிகரிப்பு, யூரோ மண்டல சர்ச்சைக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தற்போதைய ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி தனது இரண்டாவது தவணைக்காக போட்டியிடுகிறார். வலுவான பிரான்ஸை உருவாக்க தம்மால் மாத்திரமே முடியும் என்ற தேர்தல் பிரசாரத்துடன் அவர் போட்டியிடுகிறார். எனினும் அவரை எதிர்த்து போட்டியிடும் சோஸலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹொலன்ட் சார்கோசிக்கு கடும் சவாலாக கருதப் படுகிறார். மொத்தமாக பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒருவரும் 50 வீத வாக்குகளை பெறாத பட்சத்தில் முதல் கட்ட தேர்தலில் முதல் இரு இடங்களையும் பிடிக்கும் வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும். இவ்வாறு நிகழும்பட்சத்தில் மே 6 ஆம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும். நேற்றைய தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 4 கோடியே 40 இலட்சம் வாக்களார்கள் வாக்கு பதிவில் ஈடுபட்டனர். இதில் கடைசி வாக்குச் சாவடி மூடப்பட்டதைத் தொடர்ந்து முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு வெளியிடப்படவுள்ளது.

சித்திரை 22, 2012

இந்திய எம்.பிக்களின் வருகை கண்துடைப்பா? தமிழருக்கு காலந்தான் பதில் சொல்ல வேண்டும

விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட எமது பிள்ளைகள் எங்கிருக்கின்றனர் என்று இன்றுவரை தெரியவில்லை என்று வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமிற்கு சென்ற இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் அங்குள்ள மக்கள் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்திருந்ததுடன் பாவப்பட்ட தங்கள் மீது இரக்கம் கொண்டு காணாமல் போன எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என்றும் அந்த அகதி மக்கள் இந்திய எம். பி. க்கள் குழுவிடம் கோரியுள்ளனர். இந்த மக்களின் இக்கோரிக்கையை குழுவினர் சோக உணர்வுடன் கேட்டுக் கொண்டாலும் எவ்விதமான பதிலையோ, உறுதிமொழியையோ வழங்காது நமது அடுத்த கட் டத்திற்கு நகர்ந்து சென்றனர். (மேலும்.....)

சித்திரை 22, 2012

“அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்” - இந்தியா

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயத்தின் இறுதியில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். “அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்” எனக் கூறிய அவர், அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். (மேலும்.....)

சித்திரை 22, 2012

“நீர் ஒரு தமிழனா” இல்லை... - இரா. சம்பந்தன்

"நான் தமிழ் வளர்க்கும் தன்மானமுள்ள முஸ்லிம்" - அஸ்வர் எம்.பி

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தன்னை ஒரு ‘தமிழன்’ என்று கூறியதற்கு அஸ்வர் எம்.பி. கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்றக்குழு பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுடன் சந்திப்பை நடத்திய போது இடம்பெற்ற கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் சம்பந்தன் எம்.பி. அஸ்வர் எம்.பி.யைப் பார்த்து நீங்கள் ஒரு தன்மானமுள்ள தமிழனா என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த அஸ்வர் நான் தமிழன் அல்லன். தமிழை வளர்க்கும் தன்மானமுள்ள முஸ்லிம் என்று கூறினார். நீங்கள் உண்மையான நேர்மையான அரசியல்வாதியென்றால், இந்திய வீடமைப்புத் திட்டத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.

சித்திரை 22, 2012

ஜெயலலிதா, கருணாநிதி, வை.கோ., சீமான் வெறும் கிணற்றுத் தவளைகள் உண்மை நிலவரம் தெரியாது தமிழக மக்களை குழப்பி வரும் தலைவர்கள்

இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் உண்மையில் என்ன நடக்கிறது? அம்மக்கள் சிலர் நினைப்பது போல அல்லது சில ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போன்று உண்மையிலேயே கஷ்டப்படுகிறார்களா? என்பதை தமிழக அரசியல் தலைவர்களான முதல்வர் செல்வி ஜெயலலிதா, கலைஞர் மு. கருணாநிதி, வை. கோ, பழ. நெடுமாறன், சீமான், விஜயகாந்த் போன்றோர் நேரடியாக வந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை வந்துள்ள இந்திய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். வெறுமனே கடல் கடந்து கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நின்று உண்மை எதுவென்று நேரில் காணாது கூக்குரலிடுவதால் எவ்விதமான பலனும் ஏற்படப் போவதில்லை. முப்பது வருடகால கொடூரமான யுத்தம் நிறைவடைந்து இன்னும் மூன்று வருடங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் அழிவுகள் அனைத்திற்குமே தீர்வு காணப்பட்டுவிட்டதாக பொய்யுரைக்கத் தேவையில்லை. ஆனால் இந்த மூன்று வருட காலத்தில் இலங்கை அரசாங்கம் தனது சக்திக்கும் மீறி வெளிநாட்டு உதவிகளுடன் தமிழருக்கு தேவைக்கு அதிகமாகவே செய்துள்ளதை நேரில் சென்று பார்த்தபோது என்னால் உணர முடிந்தது. (மேலும்.....)

சித்திரை 22, 2012

தொடர்கதையாகும் செங்கல்பட்டு இலங்கை தமிழ் அகதிகளின் போராட்டம்!

தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள், தங்களை அங்கிருந்து விடுவிக்க கோரி தொடர்ந்து நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இதுவரை எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சிறையில் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றுமாறு கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 45 நாட்களுக் குள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து, உண்ணாவிரதத்தை கைவிட்ட இலங்கைக் கைதிகள் 45 நாட்கள் கடந்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கடந்த 15ந் திகதி முதல் மீண்டும் 10 பேர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். 5ஆவது நாளாக தொடரும் உண்ணா விரதத்தில் இலங்கைக் கைதிகளான பிஷ்பி, சதீஷ்குமார் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். நாங்கள் நிரபராதிகள், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என சிறையில் உள்ள இலங்கைக் கைதிகள் தெரி வித்துள்ளனர்.

சித்திரை 22, 2012

கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூர்?

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் இம்முறை அத்தேர்தலில் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். மன்சூரை பொதுவான முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த சில கட்சிகள் கூடி ஆராய்ந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. கிழக்கின் முதல்வர் கிழக்கிலிருந்தே வரவேண்டும் எனவும், இரண்டாவது முதல்வராக தமிழ்பேசும் இன்னுமொரு இனமான முஸ்லிம் சமூகத்திலிருந்து வரவேண்டும் எனும் கருத்துக்கள் கிழக்கில் வலுப்பெற்றுள்ள நிலையில் இவை இரண்டுக்கும் பொருத்தமான தற்போதைய தலைவராக மன்சூர் காணப்படுவதால் அவரைப் பொது வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் தேர்தலில் நிற்க வைப்பதெனும் தீர்மானத்திற்கு கிழக்கிலங்கை கட்சிகள் பலவும் கூடித் தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவராக இருந்த போதிலும் தனது கடந்தகால அரசியல் பயணத்தில் மாவட்ட மற்றும் மத்திய அமைச்சர் பதவிகளின்போது இன, மத, மொழி, பிரதேச வேறுபாடு காட்டாது சேவையாற்றி வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களில் தனக்கென தனியானதொரு இடத்தைப் பிடித்து வைத்துள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

சித்திரை 22, 2012

சண்முகம் சிவலிங்கம் காலமானார்.

(சண்முகம் சிவலிங்கம் (1937 - ஏப்ரல் 20, 2012, பாண்டிருப்பு)

ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார்.இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். 1960 முதல் இலக்கியத்துக்குப் பங்காற்றி வரும் சண்முகம் சிவலிங்கம் ஓர் ஓய்வுபெற்ற விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்.இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் பிறந்தது ஒரு இந்துக் குடும்பத்தில். ஆனால் பாடசாலை காலத்திலேயே கத்தோலிக்கராக மதம் மாறியவர். ஒரு கத்தோலிக்கக் குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டவர். இவரது கிராமத்தில் இவர் ஸ்டீவன் மாஸ்டர் எனவே அழைக்கப்பட்டார். இவருக்கு ஆறு ஆண் பிள்ளைகள். கேரளத்தில் படித்து அறிவியலில் பட்டம் பெற்றவர் அவர். அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணி ஆற்றினார். இவரது கவிதைகளின் தொகுதி ஒன்று 1988இல் நீர்வளையங்கள் என்ற பெயரில் வெளியானது. இவர் விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதுவதோடு கவிதை மொழிபெயர்ப்பிலும் பங்காற்றியுள்ளார். ஒரு கவிஞராகவே பரவலாக அறியப்பட்டாலும் இவரது சிறுகதைகளும் மிகவும் தரமானவையே. இவரது சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. சண்முகம் சிவலிங்கம் எழுதிய ஆக்காண்டி கவிதை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சித்திரை 22, 2012

தம்புள்ளை ஹைரியா ஜம்ஆ பள்ளி மீண்டும் வழமையான நடவடிக்கைகளில்!

தம்புள்ளையில் அமைந்துள்ள 60 வருட கால பழமைவாய்ந்த ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அந்தப் பகுதிக்கு அமைச்சர் பெளஸி தலைமையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஹுனைஸ் பாரூக் எம்.பி., முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன், வக்பு சபைத் தலைவர், முஸ்லிம் கலாசார பணிப்பாளர் நவவி அடங்கிய உயர் மட்டக்குழு ஒன்று விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் அங்குள்ள சிங்கள, முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பாக நேற்று முன்தினமிரவு இந்த அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடத்திவிட்டு குழுவை அங்கு அனுப்பி வைத்தார். நேற்றுக்காலை அங்கு சென்ற குழுவினர் பள்ளிவாசல் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் ஆகியோருடன் பள்ளிவாசலில் கூட்டம் ஒன்றை நடத்தினர் அதன் பின்னர் பிரதேச சிங்கள மக்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் எத்தகைய தொடர்புமில்லையெனவும் இது வெளியாரின் ஒரு நடவடிக்கையே எனவும் தாங்கள் இதனை வெறுப்பதாகவும் தெரிவித்தனர். முஸ்லிம்களுடன் நாங்கள் காலா காலமாக அந்நியோன்யமாகவே நடந்து வருகின்றோம். இது திட்டமிட்ட செயலெனவும் கூறி வருத்தம் வெளியிட்டனர்.

சித்திரை 22, 2012

தொற்று நோய் பரவ அசுத்தமான குடிநீரே காரணம்

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை லிந்துலை பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழக்கவும், 800 இற்கு மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்ட மைக்கும் அசுத்தமான குடிநீர் பாவனையே காரணமாகும் என லிந்துலை வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஜகத் அபேகுணவர்தன தெரிவித்தார். குறித்த நோயாளி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதே மரணமடைந் திருந்ததாகவும் வயிற்றோட்டம் காரணமாக கடந்த 31ஆம் திகதி குழந்தையொன்று உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து நீர் மாதிரிகள் கொழும்பு வைத்திய ஆய்வு நிலையத்தி ற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். (மேலும்.....)

சித்திரை 22, 2012

இலங்கைப் பிரச்சினையும் இந்திய தூதுக்குழு மேற்கொண்ட விஜயமும்

அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறிகிறோம், அதுபோன்று இலங்கை ஆபத்திலே மாட்டிக்கொண்டிருந்த தருணம் அன்பான சிநேகிதனாகக் கருதப்பட்ட இந்தியா உதவுவதற்குப் பதிலாக ஆற்றிலே தள்ளிவிடுவது போன்று தள்ளிவிடப்பட்ட இலங்கையின் முகத்தில் தோன்றிய காயம் ஆறுவதற்கு முன்பதாக நாட்டுக்கு விஜயம் செய்து திரும்பிய இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழுவின் வருகை/ மேற்பார்வைச் சுற்றுலா போன்றதே! ஆற்றில் தள்ளிவிட்டமைக்கு ஒரு வகை ஆறுதலளிக்கும் சுற்றுலா என்றும் எடுத்துக்கொள்ளலாம். சந்து பொந்துகள் முதல் சர்வதேசம் வரை இழையோடி புரையோடிப் போன இலங்கையின் இனப் பிரச்சினை இலங்கையை ஆட்சிசெய்த இரு பெரிய கட்சிகளின் ஸ்திரமற்ற கொள்கைகளின் பிரதிபலிப்பாக அந்நிய நாடுகள் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றுமளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளன எனில் அதற்குக் காரணம், இலங்கையின் அசமந்தப்போக்கே. மூன்று தசாப்தங்களை விழுங்கிய இனத் தகராறு தீர்த்து வைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் தோன்றிய ஒவ்வொரு தருணத்திலும் / கடும்போக்குவாதிகளின் பேரினவாதச் சிந்தனைகளுக்கு அரசாங்கங்கள் பலியாகியமை வரலாறாகும். (மேலும்.....)

சித்திரை 22, 2012

ஐ.பி.எல் இல் சாதனை படைத்த …..

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த முறையைப் போன்றே இம்முறையும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இம்முறை போட்டித் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ரெய்னா, பீட்டர்சன், டில்சான், கெயில், மஹேல, சங்கக்கார, தோனி, கோஹ்லி, செவாக் போன்ற முன்னணித் துடுப்பாட்ட வீரர்களையெல்லாம் முந்திச் சென்று ரெஹ்னே, ஒவைஸ் ஷா, பெஸஸ்ஸி, ரெய்டர் போன்ற வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். (மேலும்.....)

சித்திரை 22, 2012

தமிழர் பகுதியிலிருந்து   ராணுவத்தை விலக்குக!  ராஜபக்ஷேயிடம் இந்திய எம்.பி.க்கள் குழு நேரில் வலியுறுத்தல்

தமிழர்கள் பகுதியிலிருந்து ராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ளுமாறும், தமிழர் பிரச்ச னைக்கு அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் இலங்கை ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷேயிடம் இந் திய எம்.பி.க்கள் குழு நேரில் வலி யுறுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் இது போது மானதல்ல. குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவம் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். அனைத்து நிலைகளிலும் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களின் அச் சம் போக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  தாங்கள் சென்ற பகுதிகளில் சந்தித்த மக்கள், கோவில்களில் கூட ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வழிபாட்டு உரிமை, பண்பாட்டு உரிமை பாதிக்கப்படுகிறது என்று கூறியதை ராஜபக்ஷேவிடம் எடுத்துரைத்தார். (மேலும்.....)

சித்திரை 21, 2012

தமிழீழம்

கோத்தாபாயவுக்கு கருணாநிதி பதிலடி!

இந்திய அரசு இலங்கை அரசைப் போல தமிழர்களைக்  கொடுமைப்படுத்தவில்லை என்று கோத்தபாய ராஜபக்சவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தமும்,கொடுத்த உயிர்ப் பலிகளும் வீண் போகாது என்றும்,  இன்றில்லாவிட்டால் நாளை தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும் என்று  கூறியிருந்தார். இது இலங்கை அரசை கடுமையாக ஆத்திரமடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து,”தமிழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் கருணாநிதி இந்தியாவில்  வைத்துக் கொள்ளட்டும், தங்கள் நாட்டில் அது ஒருபோதும் சாத்தியமாகாது.தனித் தமிழ்  ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகள்” என இலங்கை பாதுகாப்பு செயலாளர்  கோத்தபாய ராஜபக்ச கடுமையாக கூறியிருந்தார். (மேலும்.....)

சித்திரை 21, 2012

ராஜபக்சவை சுஷ்மா தனியாக சந்தித்ததால் சர்ச்சை!

இலங்கை அதிபர் ராஜபக்சவை இந்திய எம்.பி.க்கள் குழுவாக சந்திக்க  திட்டமிட்டபோதும் அவரை சுஷ்மா ஸ்வராஜ் தனியாக சந்தித்ததால் சர்ச்சை  ஏற்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி்.க்கள் குழு நேற்று மாலை ராஜபக்சேவை சந்திக்க  இருந்த நிலையில்,நேற்று காலை குழுத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மட்டும் தனியாக  போய்ச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவருக்கு காலை விருந்தளித்துள்ளார் ராஜபக்சே.இருவரும் உணவருந்தி  கொண்டே பேச்சுவார்த்தை நடத்தியதாக ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர்  தெரிவித்துள்ளார். ராஜபக்சேவுடன் சாப்பிட விரும்பவில்லை. அப்படிச் சாப்பிட்டால் தமிழகத்தில்  விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால், நாளை ராஜபக்சேவுடன் நடப்பதாக இருந்த  காலை விருந்துடன் கூடிய சந்திப்பை ரத்து செய்யுமாறு தமிழக எம்.பி.க்கள் மத்திய  அரசிடம் கேட்டுக் கொண்டதால் அச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டு நேற்று மாலை இந்தியக்  குழுவினரை ராஜபக்சே சந்திக்க திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென சுஷ்மாமட்டும் போய் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஒருவேளை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் சுஷ்மா மட்டும் தனியாக  சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சித்திரை 21, 2012

தமிழர் சிந்திய குருதி வீண் போகாது, தமிழீழம் ஒரு நாள் மலரும்  - கருணாநிதி

 

இன்றில்லாவிட்டால் நாளை அல்லது மறுநாள் தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும். தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன. அதேபோல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோன்ற ஒரு நடைமுறையை தான் தனித் தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரை பின்பற்ற வேண்டுமென்று நாம் கோருகிறோம். அதற்கு தான் மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடுகிறோம். இந்த வாக்கெடுப்புப் பற்றி, நான் இப்போதல்ல, 14-10-1987இல் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போதே கூறியிருந்தேன். (மேலும்.....)

சித்திரை 21, 2012

தமிழீழக் கனவை இந்தியாவில் வைத்துக் கொள்ளுங்கள்  - கருணாநிதி மீது கோத்தபாய சீற்றம் _

தமிழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் மு.கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் அது ஒருபோதும் சாத்தியமாகாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனித் தமிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்தே , அவரைக் கடுமையாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சாடியுள்ளார். (மேலும்.....)

சித்திரை 21, 2012

கனடாவில் தமிழ் - சிங்கள புத்தாண்டு விழா

கனடிய ஜனநாயக தமிழ் கலாச்சார சங்கம் வருடாந்தம் நடாத்தும் தமிழ் - சிங்கள புத்தாண்டு விழா பல்கலாச்சார நிகழ்ச்சிகள்

காலம்: 2012 ஏப்ரல் 22 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி

இடம்: கொரிய கலாச்சார மண்டபம்

     1133, லெஸ்லி வீதி, ரொறன்ரோ

நுழைவுச்சீட்டு விபரம்: தனிநபருக்கு - 10 டொலர்கள்

                குடும்பத்துக்கு – 15 டொலர்கள்

விபரங்களுக்கு அழைக்கவும்: 416 588 3230

தேசத்தின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் எடுத்துக்காட்ட அனைத்து இன மக்களும் திரண்டு வருக!

சித்திரை 21, 2012

பாகிஸ்தானில் 127 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

கராச்சியிலிருந்து 127 பயணிகளுடன் புறப்பட்ட பொஜா ஏயார்லைன்ஸ்விமானம் பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகாமையில் வெடித்துச் சிதறியுள்ளது. குறித்த விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமபாத்திற்கு புறப்பட்ட வேளையில் மோசமான காலநிலை காரணமாக ராவல்பிண்டிக்கு அருகாமையில் வைத்து வீழ்ந்து வெடித்துச்சிதறியுள்ளது. மேலும் விமானம் முற்றாக தீப்பிடித்து சேதமாகியுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரியான அக்பர் தெரிவித்துள்ளார். உயிரழப்பு மற்றும் சேதம் தொடர்பான விடயங்கள் குறித்து இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் தற்போது அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. (மேலும்.....)

சித்திரை 21, 2012

தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று நண்பகல் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணியாக வந்த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாசலைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இன்று காலை தம்புள்ளையிலுள்ள பிரபல விகாரை ஒன்றில் ஒன்றுதிரண்ட பெரும்பான்மை இனத்தவர்கள் பௌத்த பிக்குகள் தலைமையில் பேரணியாகச் சென்று இப் பள்ளிவாசல் மீது கல் வீசித் தாக்கியதாகவும் பின்னர் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். (மேலும்.....)

சித்திரை 21, 2012

பன்னாட்டு நிறுவனம் நாட்டுடைமையானது-அர்ஜெண்டினா   அதிரடி நடவடிக்கை

நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு ஆகிய இரண்டையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வகையில் ஸ்பெயின் நிறுவன மான ஒய்.பி.எப் எரிவாயு நிறுவனத்தை அர்ஜெண்டினா அரசு நாட்டுடைமை யாக்கியிருக்கிறது. ஸ்பெயினின் பகாசுர நிறுவனமான ரெஸ்போலின் துணை நிறுவனமாக இந்த ஒய்.பி.எப் எரிவாயு நிறுவனம் இயங்கி வந் தது. ஏற்கெனவே மற்றொரு துணை நிறு வனமும், கச்சா எண்ணெய்த்துறையில் பெரிய நிறுவனமுமான ஒய்.பி.எப் எண் ணெய் நிறுவனம் அரசின் கட்டுப்பாட் டின் கீழ் கொண்டு வரப்பட்டது. (மேலும்.....)

சித்திரை 21, 2012

பெற்றோர்கள் சண்டையால் குழந்தைகள் பாதிப்பு

வீட்டில் பெற்றோர்களுக்கிடையில் ஏற்படும் சண்டையால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன. குழந்தைகள் பற்றி ஆய்வு செய்து வரும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்தான் இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார்கள். பள்ளிக்குச் செல்வதற்குக் தயாராகிக் கொண்டிருக்கும் குழந்தைகளில் சுமார் 1,600 பேரின் நடவடிக்கைகள் மற்றும் உடல்நிலையை ஆய்வு செய்துள்ளனர். சமூகத்தில், குறிப்பாகக் குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் பெண் குழந்தைகளின் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இளம் வயதிலேயே அவர்கள் உடல் பருமன் அடைந்து விடுகிறார்கள். வளர, வளர அவர்களின் உடல் நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதிலும், தாய் பாதிக்கப்படுவதால் மனரீதியாக பெரும் பாதிப்புக்கு இக்குழந்தைகள் உள்ளாகிறார்கள். குடும்ப வன்முறை, மன அழுத்தம், போதை மருந்துக்கு அடிமையான பெற்றோர், தங்க இடமின்மை, உணவுப் பாதுகாப்பின்மை போன்றவை தங்களைச் சிறு வயதில் கடுமையாகப் பாதித்ததாக பெண் குழந்தைகள் கூறியுள்ளனர்.

சித்திரை 21, 2012

ஆயிரம் படகுகளில் 5 ஆயிரம் மீனவர்களுடன் இராமேஸ்வரம் செல்லத் தயாராகும் அமைச்சர் டக்ளஸ்

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடருமானால் அடுத்தவாரம் ஆயிரம் படகுகளில் வடபகுதியைச் சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்களை இராமேஸ்வரம் அழைத்துச் சென்று அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தப்படும்  என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய பாராளுமன்றக் குழுவினரிடம் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மகஜர் ஒன்று வடபகுதி  கடற்றொழிலாளர்களால் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்துமீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றால்  இவ்வாறான போராட்டத்தில் வடபகுதி கடற்றொழிலாளர்கள் ஈடுபட நேரிடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடபகுதி மீனவர்களையும் இந்திய மீனவர்களையும் நேரடியாக கச்சதீவில்  சந்திக்க வைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது இரு நாட்டு கடற்படையினரும் இணைந்து கடல் எல்லைப் பகுதியில் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தப்பட  வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.  ஆனால் அத் தீர்மானம் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்டவில்லை.இதனால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாகப் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சித்திரை 21, 2012

மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு - கிழக்கு முதலமைச்சர் சிவனேசந்துறை சந்திரகாந்தன்!

இந்தியாவின் ஒத்துழைப்பினால் 1987 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமைக்கு அமைய அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு கிடைக் இந்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசந்துறை சந்திரகாந்தன் இந்திய நாடாளுமன்ற குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு இன்று முற்பகல் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தது. இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரை குறித்த இந்திய நாடாளுமன்றக்குழு சந்தித்த போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், '1987 ம் ஆண்டு மாகாணசபை முறையினை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாதான். இந்தியாவின் காத்திரமான பங்களிப்பினாலேயே 1978 ம் ஆண்டு மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை இங்கு செயலற்று காணப்படுகின்றது. அதிலுள்ள பல அதிகாரங்கள் இல்லாமல் இருக்கின்றது. எனவே மாகாணசபை முறைமையில் என்னென்ன அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததோ அவையமைத்தும் மாகாணசபைகளுக்கு கிடைக்கும்படி செய்யவேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கின்றது. இதனை அவர்கள் செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

சித்திரை 20, 2012

ராஜபட்ச விரித்த வலை...

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கள்கிழமை இலங்கை சென்று சேர்ந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டத்தை வெளியிடுகிறது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். புதிய பயணத் திட்டத்தின்படி, 21-ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் சிற்றுண்டி உண்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, 20-ஆம் தேதி மாலை அவரைச் சந்தித்து உரையாடுவதாக மாற்றப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் இந்தப் பயணத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டதால், இலங்கை அதிபர் ராஜபட்சவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் மாற்றி அமைத்திருப்பார்களோ என்னவோ!(மேலும்.....)

சித்திரை 20, 2012

தனி ஈழம் அமைக்க பொதுஜன வாக்கெடுப்பு - கருணாநிதி

தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும் - சம்பிக்க ரணவக்க

இலங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர் ஐ.நா. சபையின் தலையீட்டின் கீழ் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இந்திய அரசு முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ள அவர் ஐ.நா. இதை செயல்படுத்துவதற்கு இந்தியா ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கைக்கு, இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார். தமிழ்ஸ்தான் மற்றும் காஸ்மீர் ஆகியவற்றுக்கு முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தனித் தமிழீழம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, காஸ்மீர் மற்றும தமிழ்ஸ்தான் ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தனித் தமிழ் நாட்டுக்காக போராடியவர் என்ற ரீதியில் மத்திய அரசாங்கத்திடம் தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காஸ்மீரை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பில் 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார். எனவே முதலில் காஸ்மீர் தொடர்பிலான தீர்மானத்திற்கு புது டொல்லி தேர்தல் நடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை 20, 2012

தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள் குறித்து இந்தியக் குழு திருப்தி

இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நேற்று மூன்றாவது நாளாக யாழ். நகரில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் இரவு யாழ். நகர் சென்ற குழுவினர் இரவு டில்கோ ஹோட்டலில் நடைபெற்ற இராப்போசன விருந்தில் கலந்துகொண்டனர். நேற்றுக் காலை வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர். யாழ். ஞானம்ஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் விருந்துபசாரத்தின் விசேட கலந்து ரையாடல்களும் நடைபெற்றன. (மேலும்.....)

சித்திரை 20, 2012

மாகாணங்களுக்கு காணி-பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பகிரத் தயார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் அரசாங்கம் தெரிவித்துள்ளது!

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கத் தயாரில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பகிரத் தயார் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மாநிலங்களில் அமுலில் உள்ள பொலிஸ் அதிகாரங்களைப் போன்று, இலங்கையின் மாகாணங்களுக்கு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதனால் மத்திய அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும். பயங்கரவாத ஒழிப்பு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும் என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, வடக்கில் அரசாங்கம் ஏற்படுத்தி வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சித்திரை 20, 2012

சேதுவை அகழ்ந்து கப்பல் விடுவோம்!

(செ. முத்துக்கண்ணன்)

தமிழகத்தின் 160 ஆண்டுகால கனவு திட்டமாக உள்ள சேது கால்வாய்திட் டத்தை உடன் அமலாக்கிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் கால் நுாற்றாண்டுகளாய் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள் ளோம். தென் மாவட்டங்களில் போதிய தொழிற்சாலைகள் இல்லை, இயற்கை ஏமாற்றுவதால் விவசாயம் பொய்த்துக் கொண்டே இருக்கிறது, வேலைவாய்ப்பு கள் அருகிக் கொண்டே வருகிறது, வாழ வழியில்லாமல் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், தேசங்களுக்கும் சென்று கொண்டிருப் போர் அரை நுாற்றாண்டுகளாய் அதிகரித்த வண்ணம் உள்ளது. (மேலும்.....)

சித்திரை 20, 2012

இலங்கை குற்றத்தடுப்புப் பிரிவினரால் லலித்தும் குகனும் இன்று அழைத்துச் செல்லப்படனர்

மக்கள் போராட்டக் குழு மற்றும், முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றின் பிரதான தோழர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் தெமட்ட்க்கொடவில் அமைந்துள்ள இலங்கை குற்றத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று (19) அதிகாலை 2.20 அளவில் அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மிகவும் நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என லங்கா நியூஸ் வெப் இணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள இவ்விணையம். கடந்த 12.04.2012 வரை இவர்கள் இருவரும் இவர்கள் இருவரும் காவற்துறையின் நலன்புரி பணியக தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிந்திருந்தும் தாம் தகவல்களை வெளியிடவில்லை எனத் தெரிவித்திருந்தனர். இரு தோழர்களினதும் பாதுகாப்புக் கருதியே இத்தகவலை வெளியிடவில்லை எனவும் தெரிவித்தனர்.
(மேலும்.....)

சித்திரை 20, 2012

தீவிரவாதிகள் உடல்களுடன் அமெரிக்க வீரர்கள், கைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட பயங்கரவாதிகளின் உடல் பாகங்களை கையில் பிடித்தபடி அமெரிக்க வீரர்கள் நிற்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ இதழ் புதன்கிழமை இந்தப் புகைப்படங்களை வெளியிட்டது. 2010ம் ஆண்டில் அமெரிக்க இராணுவ வீரர்களாலேயே இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டிருக் கிறது. ஒரு புகைப்படத்தில், இறந்த பயங்கரவாதியின் இரு கால்களையும் இரு இராணுவ வீரர் தலைகீழாகப் பிடித்திருப்பது போலவும், மற்றொரு புகைப்படத்தில் இராணுவ வீரரின் தோளில் பயங்கரவாதியின் கை இருப்பது போலவும் காணப்படுகிறது. இது போல மொத்தம் 18 புகைப்படங்கள் தங்கள் வசம் இருப்பதாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீரர்கள் ஆப்கானிஸ் தானில் செயல்படும் அமெரிக்காவின் 82 வது வான் தாக்குதல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. புகைப்படங்கள் வெளியா னதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க இராணுவம் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சித்திரை 20, 2012

நெருங்கிய சொந்தத்தில் ஏன் திருமணம் செய்யக் கூடாது ?

ஹீமோபிலியா (Hemophilia) என்பது இரத்தம் தொடர்பான ஒரு பரம்பரை நோய். இது ஆண்களிடமிருந்து ஆண்களுக்கு மட்டுமே வரும். இதில் பெண்கள் ஹீமோபிலியா நோயின் சுமப்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஏதாவது ஒரு காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறத் தொடங்கினால், இரத்தம் நிற்காது; இரத்தம் உறையாது. தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பொதுவாக நம் உடலில் ஒரு காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிப்பட்டால், இரத்தம் வெளிக் காற்றைச் சந்தித்த நொடியிலேயே, அதனுடன் தொடர்பு கொண்டு, இரத்தம் உறைந்துவிட ஆரம்பிக்கும். இதுதான் இயல்பு. அப்படி இன்றி தொடர்ந்து இரத்தம் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டே இருந்தால், இரத்த இழப்பு ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும். (மேலும்.....)

சித்திரை 20, 2012

பிரிட்டனின் அட்டூழியங்கள் கூறும் ஆவணம் வெளியீடு

பிரிட்டன் காலனிய அரசின் இறுதி ஆண்டுகளில் நடந்த சித்ரவதைகளும், கொலைகளும் குறித்த அரசாங்க ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனின் காலனித்துவ நாடுகள் சுதந்திரமடைந்த போது இது குறித்த கோப்புகள் ரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கென்யாவின் மவு மவு கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் 1950 ஆம் ஆண்டில் மலாயாவின் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் ஆகியோருக்கு எதிரான பிரிட்டனின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இதில் அடங்குகின்றன. டியோகோ கார்சியாவில் அமெரிக்க தளத்தை நிறுவ வழி செய்வதற்காக சாகோஸ் தீவுகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த குடும்பங்களை வெளியேற்றியமை குறித்து ஐ.நா.வுக்கு பிரிட்டன் அதிகாரிகள் தவறான தகவல்களைக் கொடுத்து அதனை தவறாக வழி நடத்தியதாக இந்த ஆவணங்கள் கூறுகின்றன. இவற்றைப் போன்ற மேலும் பல ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

சித்திரை 20, 2012

சூரியக் குடும்பம் - சில சுவையான தகவல்கள்

சூரியக் குடும்ம் எவ்வாறு தோன்றியது? இதற்கு உறுதி பூர்வமான கொள்கையோ, பதிலோ இதுவரை கண்டறியப் படவில்லை. சூரியக் குடும்பம் தோன்றியது குறித்து இதுவரை பல்வேறான கருத்துக்கள் கூறப்பட்டு வந்துள்ளன. தொடக்கத்தில் 18ம் நூற்றாண்டில் புகையுருக் கோட்பாடு என்ற தத்துவம் ஒன்று கூறப்பட்டது. பல வாயுக்களால் அமைந்த பெரும் தொகுதி ஒன்று, சுழற்சியினால் மெதுவாகக் குளிர்ந்து சுருங்கத் தொடங்கியது. அச்சுருக்கத்தின் காரணமாக, அந்தத் தொகுதி முழுவ தும் ஈர்ப்பு- சக்தியின் அணைப்பினால் சுழற்சி வேகம் மேலும் அதிகரித்து: அதனால் அத் தொகுதியின் வெளிப்பரப்பின் வேகம் மிகவும் அதிகமாக, ஈர்ப்பை மீறத் தொடங்கியது. இதிலிருந்து சிறு சிறு துண்டுகள் விடுபட்டுக் கோள்கள் உருவாயின. நடுப்பகுதி மட்டும் சூரியனாக ஒளியையும், வெப்பத்தையும் அளித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு புகையுருக் கோட்பாடு, சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றிக் கூறுகிறது. (மேலும்.....)

சித்திரை 20, 2012

சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள் முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

சிரியாவில் ஐ.நா. கண்காணிப் பாளர்களுக்கு மத்தியில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இந்த தகவலை ஐ.நா. கண்காணிப்பாளர்கள் உறுதி செய்யவில்லை. யுத்த நிறுத்த கண்காணிப்பு பணிகளுக்காக சிரியா சென்றுள்ள கண்காணிப்பாளர் டமஸ்கஸ்ஸின் சபாப் பகுதிக்கு சென்ற போது அங்கிருந்து நூற்றுக்கணக்கான அரச எதிர்ப்பாளர்கள் அவர்களது வாகனத்தை சூழ்ந்துள்ளனர். இதன்போது அவர் அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (மேலும்.....)

சித்திரை 20, 2012

இந்தியா டுடே கணிப்பீடு

செல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில் ரஜினிகாந்த்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் செல்வாக்கும் உயர்மதிப்பும் கொண்ட மிக முக்கியமான மனிதர்களை பட்டியலிடுவது இந்தியா டுடே பத்திரிகையின் வழக்கம். இந்த ஆண்டும் அப்படியொரு பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்த பட்டியலில் தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளார். இத்தனைக்கும் கடந்த இரு ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் ஏதும் வெளிவரவில்லை. உடல் நலக் குறைவு, 'ராணா' தள்ளிப்போனது என பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு, ரசிகர்களின் அபிமானம், வரவிருக்கும் 'கோச்சடையான்' மீதான எதிர்பார்ப்பு போன்றவற்றால், அவரே செய்திகளின் நாயகனாகத் திகழ்கிறார். இந்தியா டுடே கடந்த வாரம் வெளியிட்டுள்ள அந்த 'டொப் -50' பட்டியலில் அன்னா ஹசாரே, ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், யுவ்நாடார், சச்சின் டெண்டுல்கர். அஜீம் பிரேம்ஜி என பல பிரபலங்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். (மேலும்.....)

சித்திரை 20, 2012

அக்னி - 5 ஏவுகணை சோதனை வெற்றி

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி 5 சோதனை வெற்றி பெற்றதாக விஞ் ஞானிகள் தெரிவித் தனர். ஒடிசா மா நிலம் வீலர் தீவில் நடந்த சோதனை வெற்றி பெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி. 5000 கி.மீ. வேக த்தில் பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் திறன் கொண்டது இந்த அக்னி 5 ஏவுகணை ஒரு தொன் எடையுள்ள அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்டது இந்த ஏவுகணை. மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை வைத்துள்ள நாடுகளில் இந்தியா தற்போது சேர்ந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸிடம் மட்டுமே இது போன்ற ஏவுகணை உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

சித்திரை 20, 2012

ஒன்பது தலைமுறையாக பாதிக்கப்பட்டுள்ளோம்  பிரிட்டனுக்கு அர்ஜெண்டினா பதிலடி

தங்களுக்குச் சொந்த மான மால்வினாஸ் (பாக் லாந்து) தீவுகளை பிரிட்டன் ஆக்கிரமித்துக் கொண்டுள் ளதால் ஒன்பது தலைமுறை யாகச் சொந்த மண்ணில் கால் வைக்க முடியாமல் அர்ஜெண்டினா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்ஜெண்டினா பதிலடி கொடுத்துள்ளது. அர்ஜெண்டினாவின் கடற்கரையிலிருந்து 300 மைல்கள் தூரத்தில் இந்த மால்வினாஸ் தீவுகள் உள் ளன. 1833 ஆம் ஆண்டில் பிரிட்டன் இதை ஆக்கிர மித்துக் கொண்டது. 1982 ஆம் ஆண்டில் இதை விடு விக்க அர்ஜெண்டினா எடுத் துக் கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. 74 நாட் கள் நடந்த சண்டையில் பிரிட்டன் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது நிலை மைகள் மாறியுள்ளன. பிரிட் டனின் பலம் குறைந்துள் ளது. பொருளாதார ரீதியா கத் தடுமாறி வருகிறது. (மேலும்.....)

சித்திரை 19, 2012

இந்திய பாராளுமன்ற குழுவினர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தினை மேற்கொண்டனர்!

 

இந்திய பாராளுமன்ற குழுவினர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தினை மேற்கொண்டனர். இக்குழு யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தை, ஹெலிகொப்டரில் சென்றடைந்தனர். இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் ஆகியோர் இந்திய பாராளுமன்றக் குழுவினரை வரவேற்றனர். யாழ்.விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்றக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் ஒருநாள் தங்கியிருந்து அரசியல் கட்சிகளையும் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து பேசவுள்ளனர். போருக்குப் பின்னரான இக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி கண்டு தாம் பிரமிப்பு அடைந்துள்ளதாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். (மேலும்....)

சித்திரை 19, 2012

மீண்டும், மீண்டும் வழி தவறும் தமிழக கட்சிளும், இலங்கை தமிழ் கட்சிகளும்

(தோழர் ஸ்ரனிஸ்)

இந்திய பாராளுமன்ற குழுவை சந்தித்த தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தியாவிடம் இலங்கை பிரச்சியை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சந்தித்திருந்தால் அதற்கு வலிமை உண்டு. எந்த தமிழ் கட்சிகளையும் உதாசீனம் செய்யாமல் எந்த பேச்சுவார்த்தையானாலும் அனைவரும் பங்குபற்ற வேண்டும். இதனை தமிழ் கட்சிகள் அனைவரும் ஒற்றுமையுடன் பங்குபற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னுதாரணமாக செயல்பட்டடிருக்க வேண்டும். தமிழக கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இன்று இரு அணிகாளக இருக்கிறது ஒன்று தி.முக சார்பு மற்றயது அ.தி.மு.க சார்பு.  இதில் தி.மு.க ஆளும் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது. இருந்தும் மாநில அரசியல் தொடர்பாக அது காங்கிரசில் இருந்து விலகியே இருக்கிறது. அ.தி.மு.க வை பொறுத்தவரை அது காங்கிரசை முற்றுமுழுதாக எதிர்க்கும் நிலைப்பாட்டிலே உள்ளது. இலங்கை அரசாங்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பதைப்போல. (மேலும்....)

சித்திரை 19, 2012

உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்கள்

தமிழ் நாட்டில் அடிமைகளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள்

80 களில் ஆரம்பித்து வன்னி இனப்படுகொலை வரை, பெரும்பான்மையான இந்திய அரசியல்வாதிகள் தமிழின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் ஏற்படுத்திய அழிவுகள் ஏராளம். இன்று ஈழம் வேண்டும் என்று நீலிக் கண்ணீர்வடிக்கும் கருணாநிதியோ, இந்திய பார்பனீய அதிகாரத்தின் தமிழ் நாட்டு அடியாளான தமிழின விரோதி ஜெயலலிதாவோ நடத்துகின்ற சூதாட்டத்தில் நசுங்கி மாண்டுபோகின்றவர்களுள் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழ அகதிகளும் அடங்கும். ஒரு சமூகத்தின் தலைவிதியையே நிர்ணயிக்கப் போவதாக வரிந்து கட்டிக்கொண்டு உணர்ச்சி அரசியல் நடத்தும் ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் தனது கொல்லைப் புறத்தில் அகதிகள் மிருகங்கள்போல நடத்தப்படுவது தெரியாதா என்ன? இவர்களுக்கும் மேல் புலம் பெயர் நாடுகளில் மில்லியன்களை சுருட்டிக்கொண்ட ‘தேசிய வியாபாரிகள்’ இந்த அடிமைகள் குறித்துப் பேசுவதே கிடையாது. செங்கல்பட்டு அகதிகள் முகாம் என்ற மாட்டுத்தொழுவம் ஒரு சிறைகூடம். அங்கும் ஈழ அகதிகள் சிறை வக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்டுகொள்வதற்கு யாரும் முன்வந்ததில்லை. செங்கல்பட்டு முகாமில் சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற உணர்ச்சி அரசியல் வியாபரிகளது காலடிகூடப்பட்டதில்லை. தமிழின விரோதி ஜயலலிதாவினதும், காப்ரேட் கருணாநிதியினதும் கோரப்பிடிக்குள் ஆண்டாண்டுகளாகச் சிக்கித் தவிக்கும் இந்த அடிமைகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

சித்திரை 19, 2012

THIS IS THE ONLY TIME WE WILL SEE AND LIVE THIS EVENT
Calendar for July 2012

July

 

Sun

Mon

Tue

Wed

Thu

Fri

Sat

 

 

 

 

 

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

 

 

 

 

 

 

 

 

 

 

This year, July has 5 Fridays, 5 Saturdays and 5 Sundays. This happens
once every 823 years.

சித்திரை 19, 2012

வடக்கில் வரலாற்றில் அதிகூடிய விளைச்சல்

2 இலட்சத்து 50 ஆயிரம் மெ. தொ. நெல் அறுவடை

கடந்த பெரும்போகத்தின் போது வட மாகாணத்தில் இருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் நேல் அறுவடை செய்யப்பட் டதாக விவசாய அமைச்சு கூறியது. இது வட மாகாணத்தில் இருந்து இதுவரை பெறப்பட்ட அதிகூடிய நெல் அறுவடை எனவும் இம்முறை 85 ஆயிரம் ஹெக்டயரில் நெல் பயிரிடப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடபகுதியில் கூடுதலான நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டதோடு விவசாயிகளுக்கு பல்வேறு நிவாரணங்கள் உபகரணங் கள் என்பன வழங்கப் பட்டன. இந்த நிலையில் இம்முறை சாதனை படைக்கும் வகையில் அதிகூடிய அறுவடை கிடைத் துள்ளது. யுத்தத்திற்கு முன்னர் கூட வடக்கில் இந்தளவு கூடுதல் நெல் அறுவடை கிடைக்கவில்லை எனவும் விவசாய அமைச்சு கூறியது. நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் கூடுலாக நெல் அறுவடை செய் யப்பட்டுள்ளதோடு மேலதிக நெல்லை ஏற்றுமதி செய்யவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

சித்திரை 19, 2012

ஒபாமா பாதுகாப்பு வீரர்களின் பாலியல் சர்ச்சை: 20 பெண்கள் தொடர்பு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொலம்பிய சுற்றுப் பயணத்தின் போது அவரது மெய்ப் பாதுகாப்பு வீரர்கள் ஹோட்டலுக்கு விலை மாதர்களை அழைத்து வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 20 வெளிநாட்டு பெண்கள் தொடர்புபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்கா மற்றும் ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆபத்து இருந்ததா என அமெரிக்க பிரதிநிதிகள் சபை, புலனாய்வுத்துறை இயக்குனர் மார்க் சுல்லிவானிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த சுல்லிவான், ஒபாமாவின் 11 பாதுகாப்பு வீரர்கள் ஹோட்டலில் 11 பெண்களை சந்தித்துள்ளனர். இதில் வெளிநாட்டு பெண்களே பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர். என்றார். கடந்த வெள்ளிக்கிழமை கொலம்பியா சென்ற பராக் ஒபாமா தங்கியிருந்த ஹோட்டலுக்கே அவரது மெய்ப் பாதுகாவலர்கள் மேற்படி பெண்களை அழைத்து வந்துள்ளனர்.

சித்திரை 19, 2012

குறுகிய காலத்தில் துரித மீள்குடியேற்றம் அரசாங்கத்துக்கு இந்தியக் குழு பாராட்டு

இலங்கை வந்துள்ள இந்திய எதிர்க் கட்சித் தலைவி ஸ்ரீமதி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நேற்று வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு விஜயம் செய்தனர். இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் – 412 ரக பிரபுக்கள் பயணிக்கும் ஹெலிக்கொப்டரில் இந்திய பிரதிநிதிகள் 12 பேரும் வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்தை நேற்றுக் காலை 9.45 மணியளவில் சென்றடைந்தனர். மீள் குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வவுனியா அரச அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் ஆகியோர் பிரதிநிதிகளை வரவேற்றனர். (மேலும்....)

சித்திரை 19, 2012

செச்னியாவில் டைனோசர் முட்டைப் படிமம்

ரஷ்யாவின் செச்னியா பகுதியில் டைனோசர் முட்டை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வடக்கு கவ்கெசஸ் மலைப் பகுதியில் இந்த முட்டைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. செச்னிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களையும் அந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். இந்த முட்டைகள் சுமார் 102 சென்டி மீற்றர் நீளம் கொண்டவையாக அமைந்துள்ளன. உலகில் இந்த அளவு பெரிய முட்டைகள் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என அந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான 40 மேற்பட்ட முட்டை படிமங்கள் மேற்படி மலைப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற முட்டைகள் மேலும் இந்த பகுதியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த முட்டைகள் 60 மில்லியன் ஆண்டு பழைமை வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. எனினும் செச்னியப் பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பை மொஸ்கோ விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு உண்மையல்ல. டைனோசர் இவ்வளவு பெரிய முட்டையை இடாது.

சித்திரை 19, 2012

கொழும்பு - மாத்தறை அதிவேக ரயில் பாதை இன்று திறப்பு

கொழும்பு- மாத் தறைக் கிடையிலான அதிவேக ரயில் பாதை இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகிறது. மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் இந்திய கம்பனியினூடாக நிர்மாணிக்கப்பட்ட அதிவேக ரயில் பாதையினூடாக கொழும்பில் இருந்து மாத்தறைக்கு 2 1/2 மணி நேரத்தில் செல்ல முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது. ரயில் பாதை திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய எம். பிகள், இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹன திசாநாயக்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ள உள்ளனர். கொழும்புக்கும் மாத்தறைக்குமிடையிலான ரயில் பாதை 3 கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டது. இறுதியாக அளுத்கமைக்கும் களுத்துறைக்கும் இடையிலான பாதை நிரமாணிக்கப்பட்டது. அமைச்சர்கள் இந்திய எம். பிகள் அடங்கலான பிரதம அதிதிகள் களுத்துறையில் இருந்து அளுத்கமை வரை ரயிலில் செல்ல உள்ளதோடு அளுத்கமை ரயில் நிலையத்தில் பிரதான வைபவம் நடைபெறவுள்ளது.

சித்திரை 19, 2012

தனி ஈழம் அமைக்க பொதுஜன வாக்கெடுப்பு - கருணாநிதி

இலங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர் ஐ.நா. சபையின் தலையீட்டின் கீழ் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இந்திய அரசு முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ள அவர் ஐ.நா. இதை செயல்படுத்துவதற்கு இந்தியா ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சித்திரை 18, 2012

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய குழுவுடன்

த.வி.கூட்டணி,(பத்மநாபா.ஈ.பி.ஆர்.எல்.எவ்,) புளொட் தலைவர்கள் சந்திப்பு



இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய சர்வ கட்சி பாராளுமன்ற குழுவினரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்.) செயலாளர் நாயகம் தி.சிறீதரன் மற்றும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் மாலை கொழும்பில் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விபரமாக கலந்துரையாடியுள்ளார்கள். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது மேற்படி தலைவர்களால் இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினரிடம் தமிழ் மக்களினதும் நாட்டினதும் நிலைமைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இம் மகஜரில் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடிய தூதுக்குழுவினர் இவை குறித்து தாங்கள் இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சித்திரை 18, 2012

தென் சூடானை எதிரி நாடாக பிரகடனப்படுத்தியது சூடான்

தென் சூடானை எதிரி நாடாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் சூடான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 'தென் சூடான் அரசு எதிரி நாடாகும். அதனது அரச அமைப்புகள் அனைத்தும் எமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது' என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தென் சூடான் தமது எண்ணெய் தளமான ஹெக்லிக்கை கடந்த வாரம் கைப்பற்றியதற்கு எதிராகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சூடான் தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் தமது எல்லையிலுள்ள எண்ணெய் தளத்தின் மீது சூடான் தாக்குதலைத் தொடர்வதாக தென் சூடான் குற்றம் சாட்டியுள்ளது. சூடான், தென் சூடானுக்கு இடையில் தசாப்த காலமாக நீடித்த சிவில் யுத்தம் கடந்த 2005 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்த கடந்த ஆண்டு ஜூலையில் தென் சூடான் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. எனினும் இரு நாடுகளுக்கும் இடையில் எண்ணெய் விவகாரம் மற்றும் எல்லைப் பிரச்சினைகள் நீடித்து வருகிறது.

சித்திரை 18, 2012

இந்திய பாராளுமன்ற குழுவினர் நேற்று கொழும்பில் பல தரப்பினருடனும் சந்திப்பு

உண்மை நிலையை தமிழகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்

இனங்களிடையே சந்தேகங்கள் களையப்படுவது அவசியம்

- இந்தியக்குழு வலியுறுத்தல

(மேலும்....)

சித்திரை 18, 2012

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்) அறிக்கை

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம்” என்னும் சொற்களை நாங்கள் சொல்லும் பொழுது, குடியிருப்பு நிலப்பரப்புகளை மட்டுமே அவை குறிப்பிடவில்லை. வேளாண்மை (விவசாய) நிலங்கள் - அடர்ந்த காடுகள் - வெறுமையாக உள்ள வறண்ட நிலப்பரப்புபள் - கடல்கரைப் பகுதிகள் -  தமிழ் மீனவர்களுக்கு வாழ்க்கைத் தேவைகளை வழங்கும் பரந்து விரிந்த வடக்குக் கிழக்கு கடல் பிரதேசங்கள் - முதலானவை அந்த வார்த்தைக்குள் அடக்கிக் காட்டுவன ஆகும். நாடு விடுதலை பெற்ற 1948ஆம் ஆண்டு முதல்கொண்டே, வடக்கு மற்றும் கிழக்குத் தமிழ் மாகாணங்களில் மேற்சொன்ன எல்லாப் பகுதிகளிலுமே தங்களின் இராணுவத்தின் மூலம் சிங்களவர் குடியேற்றங்களை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புச் செயலை சிறிலங்கா அரசு தொடங்கி விட்டது. அதன் விளைவாக, “ஈழம்” என்னும் தங்களுக்கே சொந்தமான தாயக நிலத்திடம்  தங்களுக்கு உள்ள பிறப்பு உரிமையையே இழக்கும்படியான கட்டாய நிலைமைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர். கி.பி. 2009-ஆம் ஆண்டுவரை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறைவான இரகசிய முறையில் ஏற்படுத்தப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்கள், இன்றைக்கு வெளிப்படையாகவே எந்த வகைத் தயக்கமும் இல்லாமல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலுமே அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்குக் காரணம், அந்தத் தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் சிங்களவர்களுக்கு மட்டுமே உரிமை உடையவை என்பதை உறுதிப் படுத்திவிட வேண்டும் என்கிற உள்நோக்கமே ஆகும். (மேலும்....)

சித்திரை 18, 2012

ஒபாமா தலைக்கு பரிசு

சர்ச்சையில் பிரிட்டன் எம்.பி

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தலைக்கு 10 மில்லியன் டொலர் பரிசு தொகை அறிவித்து பிரிட்டன் எம். பி. நமர் அஹமட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அவர் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நமர் அகமது பிரிட்டன் பாராளுமன்ற பிரபுக்கள் (மேல்) சபை உறுப்பினர் ஆவார். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இவர் கடந்த வாரம் பாகிஸ்தான் சென்றிருந்த போது ஹரிபூரில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாகிஸ்தான் வரும் பட்சத்தில் அவரது தலைக்கு 10 மில்லியன் டொலர் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும் என கூறினார்.

சித்திரை 18, 2012

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் (2)

(T .சௌந்தர்)

தமிழ்த்திரைப்பட இசையுலகில் இசையமைப்பாளர் யாரென அறியப்படாத காலத்தில் பாடல்களை அமைத்தவர் இசை அறிஞர் பாபநாசம் சிவன்.கர்னாடக கீர்த்தனைகள் அப்படியே ஒலித்த காலத்தில் அந்த முறையிலேயே தனது பாடலகளையும் அமைத்துக் கொடுத்தவர்சிவன். பின்னர் இசையமைப்பாளர்களுடன் இணைந்த போதும் பாடல்களுக்கான் சுரங்களை எழுதிக் கொடுத்துவிடுவார். பாடலுக்கு வாத்தியம் சேர்ப்பது இசையமைப்பாளர்களின் வேலையாக இருந்தது.தமிழ் செவ்வியல் இசைப் [ கர்னாடக இசைப்] பாடலான ” எப்ப வருவாரோ ..” என்ற பாடல் மெட்டில் ” சர்ப்ப கோண போதன் …” என்ற பாடலை தியாகராஜபாகவதர் பாடினார்.பாபநாசம் சிவனின் inspiration தமிழ் செவ்வியல் இசையே . (மேலும்....)

சித்திரை 18, 2012

முன்னாள் கெரில்லா போராளி தீமோர் ஜனாதிபதியாக தேர்வு

கிழக்குத் தீமோரின் ஜனாதிபதியாக முன்னாள் கெரில்லா போராளியான தவுர் மடன் ருவக் தேர்வு செய்யப்பட் டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் ருவக் எதிர்த்து போட்டியிட்ட பிரான்சிஸ்கோ குடரஸ்ஸை விடவும் அதிக பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தேர்வு பெற்றுள்ளார். இதில் ருவக் 61.23 வீத வாக்குகளை வென்றதோடு பிரான்சிஸ்கோ 31.77 வீத வாக்குகளை பெற்றார். 55 வயதான ருவக் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை பிரதானியாக இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த பதவியை ராஜினாமா செய்தார். இவர் இந்தோனேஷியாவுடனான சுதந்திரப் போரில் கெரில்லா போராளியாக இருந்தவராவார். இதன்படி நோபல் விருது வென்ற ஜொஸ் ரொமஸ் ஹோர்டாவுக்கு பதில் திமோர் ஜனாதிபதியாக ருவக் பதவி ஏற்கவுள்ளார். ஹொர்டா தீமோர் தேர்தலின் முதல் கட்ட வாக்கெடுப்பிலேயே மூன்றாவது இடத்தை பெற்று தோல்வி அடைந்தார்.

சித்திரை 18, 2012

அகதிகள் அனைவருக்கும் பசி ஒன்றென்பதை புரிந்து பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன்

வடபகுதி முஸ்லிம்கள் குறித்து சிந்திப்போமேயானால் அவர்கள் போரின் கொடூரத்தினால் இடம் பெயர்ந்த சராசரி அகதிகள் அல்லர். அவர்கள் இனரீதியில் ஓர் இன சுத்திகரிப்புக்கான சதியில் சிக்கி, ஓரிரு மணித்தியால அவகாசத்தில் வெறுங்கையோடு விரட்டப்பட்ட நிர்ப்பந்தத்தின் பேரில் வெளியேற்றப் பட்ட பாவாத்மாக்கள், 'ஓரினத்தின் சிலர்' என்ற வரைவிலக்கணத்தைத் தாண்டி ஒட்டுமொத்த முழு சமூகம் என்ற அடிப்படை யில் வடபகுதி முஸ்லிம்கள் பாரம்பரியப் பண்பியலோடு பரம்பரையாக வாழ்ந்து வந்த சொந்த மண்ணை துறந்து வந்த அகதிகளாவர். இப்படி 1990 இல் விரப்பட்டு, 21 ஆண்டுகள், நிறைந்துவிட்டன. வட பகுதி முஸ்லிம்களின் அகதி வாழ்வுக்கு வயது 21 ஆகும். இவ்வாறு பலவந்தமாக விரப்பட்டு அகதிகளாக வடபகுதி முஸ்லிம்கள், இன்றும் அதாவது 22 ஆவது வருடங்களாக புத்தளம் உட்பட, அநுராதபுரம், குருநாகல் ஏனைய பிரதேசங்களில் பல்வேறு சொல் லொணா துயரங்களுடன் அவதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். (மேலும்....)

சித்திரை 18, 2012

உலகில் உயரமான கட்டடம் சவூதியில்

உலகிலேயே மிக உயரமான கட்டடம் சவூதி ஆரேபியாவின் ஜித்தா நகரில் கட்டப்பட உள்ளது. லகின் தற்போதைய மிக உயர கட்டடமான புரஜ் கலிபா, டுபாயில் உள்ளது. இந்த கட்டடத்தின் உயரம், 830 மீற்றர், இதற்கு போட்டியாக சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் ஆயிரம் மிற்றர் உயரத்தில் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான, அனுமதியை கடந்த பெப்ரவரி மாதம் ஜித்தா மாநகரசபை வழங்கியுள்ளது. பல நிறுவனங்களின் முதலீட்டில் இந்த கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், 63 மாதங்களில் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரை 18, 2012

உலக வங்கி தலைவராக ஜிம் யோங் கிம் தேர்வு

உலக வங்கியின் தலைவராக அமெரிக்கா வாழ் தென்கொரியரான ஜிம் யோங் கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகவங்கியின் தலைவராக உள்ள ரூபர்ட் ஜிலோயிக் பதவி காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. புதிய தலைவரை உலகவங்கி தலைமை நிர்வாகம் அறிவித்தது., கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்கவாழ் தென்கொரியாவைச் சேர்ந்த ஜிம்-யோங்-கிம்மை பரிந்துரை செய்தார். அதன்படி உலகவங்கி இவரை புதிய தலைவராக நேற்று முன்தினம் அறிவித்தது. தென்கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த ஜிம்-யோங்-கிம் (52) இதற்கு முன்பு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் எச்.ஐ.வி. எய்ட்ஸ் ஒழிப்புத்துறையின் இயக்குனராக இருந்தார். தற்போது உலகவங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஜப்பான், நைஜீரீயாவைச் சேர்ந்தவர்களும் உலகவங்கி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இறுதியில் தென்கொரியாவின் ஜிம்யோங்கிம் தேர்வு செய்யப்பட்டார். வரும் ஜுலை மாதம் பதவியேற்க உள்ளார்.

சித்திரை 17, 2012

தமிழ் சினிமாஇசையி​ல் அகத்தூண்டு​தல் (1)

(T.சௌந்தர்)

அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன.நாம் பார்க்கும் ,கேட்கும் , படிக்கும் விசயங்களிலிருந்து கிடைக்கும் அறிவு நம்மைச் சிந்திக்கவும் தூண்டுகின்றன.இந்த ” தூண்டுதல் ” அல்லது “உந்துதல்” அல்லது இந்த நிகழ்வுகள் ஏற்ப்படுத்தும் ” பாதிப்பு ” நம்மைச் செயலாற்றவும் வைக்கின்றன.நாம் அனுபவிக்கும் பல விசயங்களில் சில நம்மை அறியாமலேயே நமது மனங்களில் பதிந்தும் விடுகின்றன.இவை பொதுவாக எல்லா மனிதர்களிளிடமும் வெவ்வேறுவிதமாக நிகழ்கின்றன. இந்த தூண்டுதல் அல்லது உந்துதல் என்பதே எல்லாக் கலைகளுக்கும் அடிப்படையானதாகவும் உள்ளது.ஒரு சம்பவத்தால் தூண்டப்படும் , உந்தப்படும் அல்லது பாதிப்புக்குலாகும் கலைஞன் தன்னுடைய ஆற்றலுக்குத் தக்கவாறு தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறான்.கவிஞன் என்றால் கவிதையாகவும் , ஓவியன் என்றால் ஓவியமாகவும் ,சிற்பி என்றால் சிற்பமாகவும் ,இசைக்கலைஞன் என்றால் பாட்டாகவும் ,இசையாகவும் வெளிப்படுத்துவான்.தூண்டுதல் ,உந்துதல் , பாதிப்பு என்பதை ஆங்கிலத்தில் Inspiration என அழைப்பர்.ஆயினும் தமிழில் அகத்தூண்டுதல் ,அக எழுச்சி , உள்ளுயிர்ப்பு , உளத்தூண்டுதல், திடீர் கிளர்ச்சி , உத்வேகம் , துணையூக்கம் போன்ற சொற்கள் அதன் அர்த்தத்தை தெளிவுற விளக்க உதவுகின்றன. (மேலும்....)

சித்திரை 17, 2012

இலங்கையில் எழுபதுகளில் இருந்து அரசு அதிகார பயங்கரவாதம் கட்டி எழுப்பட்டுள்ளது - EPRLF-P அணியின் செயலாளர் தி சிறிதரன்

20 வருடங்களாக தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியும் 20 வருடங்களாக வடக்கில் விடுதலை புலிகளும் பயங்கரவாதம் நடவடிக்கை மேற்கொண்டது போல அரசு அதிகார பயங்கரவாதம் 40 வருடங்களாக கட்டி எழுப்பட்டுள்ளது என தெரிவித்தார். அரசியல் பின் பலத்தில் வந்த நாங்கள் அரசும் தமிழரும் என்ற வகையிலே எமது நடவடிக்கைகள் அமைந்திருந்தன இலங்கையில் அறுபது வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனை தொடர்பாக இனிமேலும் இழுத்தடிக்க முடியாத என்ற நிலையில்தான் இன்று இலங்கையிருக்கின்றது. அரசு பயங்கரவாதம் ஊடாக இலங்கையில் பல இனக்கலவரங்கள் நடைபெற்றன அது மட்டும் இல்லாது பல சித்திரவதை கூடங்கள் அரசு பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்டன அதன் தாக்கம் தான் யாழ்ப்பாண நூல்நிலையம் தீக்கிரையாக்கபட்டதும் பல மக்கள் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களையும் நாம் மறந்து விடகூடாது இச்சம்பவங்களில் ஈடுபட்ட அரசு பயங்கரவாத அதிகாரிகள் இன்னும் வாழந்து வருகிறார்கள். (மேலும்....)

சித்திரை 17, 2012

கெய்ன் லங்காவின் தாய் நிறுவனமான கெய்ன் இந்தியா " கிருஷ்ணா – கோதாவரி" படுகையில் இரண்டாவது கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியுள்ளது

இலங்கை மன்னார் கடற்பரப்பில் வெற்றிகரமாக எண்ணெய் அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்ட கெய்ன் லங்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான கெய்ன் இந்தியா நிறுவனம் KG-ONN-2003/1 எனப்படும் கிருஷ்ணா கோதாவரி படுகையில் தமது இரண்டாவது கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. கெய்ன் இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனமான கெய்ன் எனர்ஜி இந்தியா நிறுவனம் (CEIL) இந்தியாவின் கிழக்குக் கரையில் கிருஷ்ணா கோதாவரி படுகையின் KG-ONN-2003/1 பகுதியிலுள்ள Nagayalanka-SE-1 கிணற்றிலிருந்து எரிபொருளை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது. இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட கெய்ன் எனர்ஜி இந்திய நிறுவனம் 24 வீதத்தையும் கெய்ன் இந்திய நிறுவனம் 25 வீதத்தையும் இவர்களுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமான ஒ.என்.ஜி.சி 51 வீதத்தையும் தங்களிடையே பகிர்ந்து கொண்டன. (மேலும்....)

சித்திரை 17, 2012

கள்ளத்தோணி

1948களுக்குப் பின் 1960 வரை தென்கடலிலும் வடகடலிலும் எதிர் எதிர் கரைகளுக்கிடையே பல்லாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த படகுப் பயணிகளைப் புதிதாக அழைக்கப் புழங்கிய சொற்றொடர். கொழும்பு மேலாட்சியாளர் மட்டுமல்ல, தமிழகக் கரைகளிலும் ஈழத்தின் வட, வடமேற்குக் கரைகளிலும் வாழ்ந்தோர் வழங்கிய சொற்றொடர். அந்தச் சொல்லுக்கும் கொழும்பு கொம்பனித் தெரு முகாமுக்கும் நெருங்கிய தொடர்பு. கள்ளத் தோணியில் வந்து இலங்ககைக் கடற்படையிடம் (தலைவர், தமிழரான அட்மிரல் கதிரகாமர்) கைதாவோர் சேருமிடம். 1960க்குப் பின்னர் ஆள்கள் பயணிப்பது குறைந்து பொருள்கள் கடத்துவோராக அப்படகுகளைக் கருதினர். தமிழகக் கரையோரத்தில் கைதாகாது ஈழக் கரையோரங்களில் கைதானோருள் பெரும்பாலானவர் வல்வெட்டித்துறைக் கடலாடிகள். 1980க்குப் பின்னர் இப்படகுகள் போரளிகளுக்கும் அப்போர்வையில் கடத்தல்காரருக்கும் உதவியதாக இலங்கை அரசு கருதிப் படகுகளைச் சுட்டது.  1983க்குப்பின், தமிழகக் கரையோரங்களை வந்தடைந்த புகலிடம் தேடுவோரிடம் இந்தியக் கடலோரக் காவற்படை கைப்பற்றிய 1000த்துக்கும் கூடுதலான படகுகளில் 500க்கு மேல் இன்னமும் ஈழம் திரும்பாமலே உடைந்தும் களவுபோனதுமான கள்ளத்தோணிகள். (மேலும்....)

சித்திரை 17, 2012

கொழும்பில் சி.சி.ரி.வி கமராவுடன் நடமாடும் வான்

சி.சி.ரி.வி. கமரா பொருத்தப் பட்ட நடமாடும சேவை பொலிஸ் மாஅதிபர் என். கே. இளங்ககோனினால் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. சி.சி.ரி.வி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொழும்பு நகரத்தை பாதுகாத்தல் மற்றும் குற்றச் செயல்களற்ற நகராக கொழும்பை மாற்றும் நோக்குடனே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய 110 சி.சி.ரி.வி. கமராக்கள் கொழும்பின் முக்கிய நகரங்களில் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை 17, 2012

 

பட்ஜட் பற்றாக்குறையை 5.2 % குறைப்பதே அரசின் இலக்கு

சுதந்திரத்தின் பின்னர், இலங்கை பொருளாதாரத்தின் சாதாரண வரவு செலவு பற்றாக்குறை, தேசிய உற்பத்தியில் 08 வீதமாக அதிகரித்திருந்தது. 2011 ஆம் ஆண்டில் இது 6.9 வீதம் வரை வீழ்ச்சி கண்டிருந்தது. 1986 முதல் 2010 ஆம் ஆண்டுவரை முழு வரவு செலவு பற்றாக்குறை 8.3 வீதமாக இருந்தது. 2010 ஆம் ஆண்டில் இது 08 வீதமாக அமைந்தது. 2011 ஆம் ஆண்டாகும் போது இது 6.9 வீதமாக வீழ்ச்சி கண்டமை இலங்கை பெற்ற பொருளாதார வெற்றியாகும். இதன் பிரகாரம் இந்த சாமான்ய வரவு செலவு பற்றாக்குறையை 5.2 வீதம்வரை 2014 ஆம் ஆண்டில் குறைத்துக் கொள்வதே அரசின் இலக்காகும். உற்பத்தி பிரதேசத்தைப் பார்க்கும் போது, பொருளாதார வளர்ச்சிக்காக தொழில்நுட்ப, சேவைப் பிரிவுகளிலிருந்து விசேட பங்களிப்பு சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டில் தொழில்நுட்ப, சேவாப் பிரிவுகளின் பங்களிப்பு முறையே 10.3 வீதமாகவும் 8.6 வீதமாகவும் அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தி 6542663 மில்லியன் ரூபாவாகும். பாவனைச் செலவீனம் 5536095 மில்லியன் ரூபாவாகும். முதலீடு 1958833 மில்லியன் ரூபாவாகும். இதனால் பெருந்தெருக்கள், துறைமுகம், விமான நிலையம், பாடசாலை பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கும் நீர்ப்பாசன திட்டங்களுமாகப் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வரவு செலவு பற்றாக்குறையை குறைத்துக் கொள்ள அரசினால் இயலுமாகி உள்ளது.

சித்திரை 17, 2012

 

புதிதாக கட்டப்பட்ட மலசலகூடத்தை தனியாக திறந்து வைத்த எம். எல். ஏ.

தொகுதி நிதியில் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் இருந்த மலசலகூடத்தை தி.மு. க. எம். எல். ஏ. டி.பி. எம். மைதீன்கான் தன்னந்தனியாக திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி எம். எல். ஏ. டி. பி. எம். மைதீன்கான், 2001ல் இதே தொகுதியில் எம். எல். ஏ. வாகவும், 2006ல் தி. மு. க அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராகவும் இருந்தார். மூன்றாம் முறையாக தற்போது எம். எல். ஏ. வாக உள்ளார். இவர் கடந்த ஐந்தாண்டுகளில் தமது தொகுதி நிதியில் இருந்து நெல்லை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மகப்பேறு வளாகத்தில் மலசலகூடம் மற்றும் குடிநீர் தொட்டிக்காக 15 இலட்சம் ரூபாவை ஒதுக்கியிருந்தார். கடந்த ஆட்சியின்போது கட்டப்பட்ட பணிகள் என்றாலும் தற்போது அவற்றை திறக்காமல் பொதுப் பணித்துறையினர் இழுத்தடித்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் எம்.எல். ஏ. கேட்டபோது, எங்களிடம் அந்த கட்டட சாவி ஒப்படைக்கப்படவில்லை என கூறினார்களாம். எனவே நேற்று முன்தினம் தன்னந்தனியாக போய் மலசலகூடம் மற்றும் குடிநீர் தொட்டியை எம். எல். ஏ. மைதீன்கான் திறந்து வைத்தார். இதில் பொதுப் பணித்துறை அதிகாரிகளோ, ஆஸ்பத்திரி டீன் டாக்டர்கள் மட்டுமல்லாது அரசு சார்பில் ஊழியர்கள் யாரும் பங்கேற்கவில்லை. எனவே தன்னந்தனியாக மலசலகூடங்களை திறந்து வைத்து பார்வையிட்டார் மைதீன்கான். அவர் கூறுகையில், ‘தி. மு. க. எம். எல். ஏ. என்பதால் அரசு அதிகாரிகள் என்னை பார்ப்பதையே பாவம் என்று நினைக்கிறார்கள். நான் ஆஸ்பத்திரிக்கு சென்றதை பார்த்ததும் ஒரு அதிகாரி வேறு திசையில் ஓட்டம்பிடித்தார். எனவே யாரையும் எதிர்பார்க்காமல் நானே தன்னந்தனியாக திறந்து வைத்துவிட்டேன் என்றார்.

சித்திரை 17, 2012

 

சர்ச்சைக்குரிய அக்சாய்சின் மலைப் பகுதியில் பிரமாண்ட வானியல் மையம் கட்டும் சீனா

ஜம்மு காஷ்மீரின் வட மேற்குப் பகுதியில் சர்ச்சைக்குரிய அக்சாய்சின் பகுதியில் பிரமாண்ட வானியல் கண்காணிப்பு நிலையம் அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. சீனாவுடன் இணைந்து இந்நிலையத்தை அமைக்க முன்வருமாறு தாய்வான், ஜப்பான், தென்கொரிய ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

சித்திரை 17, 2012

உலகில் அரசாங்க அலுவல்களுக்கு அங்கீகாரம் பெறாத மொழி ‘எஸ்பெரண்டோ'

புதிதாக உருவாக்கப்பட்ட பத்து துணை மொழிகளில் இதுவும் ஒன்று

செம்மொழியாக ஒரு மொழியை தெரிவு செய்ய அதன் இலக்கிய படைப்புக்கள் வளம் மிகுந்ததாகவும் பழைமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும் என்பது மொழி வல்லுநர்கள் கோட்பாடு. உலகில் இன்று பேசப்படும் 6,900 மொழிகளில் 8 மொழிகளே உலகின் பண்டைய கால செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழும் ஒன்று என்பது பெருமைக்குரியது தான். இக் கட்டுரை தமிழ் மொழியில் அதிகம் அலசப்பட்டிராத ஓர் புதிய மொழியைப் பற்றி விவரிக்கிறது. (மேலும்....)

சித்திரை 17, 2012

சீனா உரிமைகோரும் பகுதியில்

பிலிப்பைன் - அமெரிக்காவின் இராணுவ பயிற்சி ஆரம்பம்

சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பகுதியில் அமெரிக்க - பிலிப்பைன்ஸ¤க்கு இடையிலான இராணுவ பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா தனது கண்காணிப்பு கப்பலை நிலைநிறுத்தியுள்ள நிலையி லேயே இந்த இராணுவ பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. பலிகதான் என அழைக்கப்படும் இந்த இராணுவ பயிற்சி எதிர்வரும் 27ஆம் திகதிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவப் பயிற்சி சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உரிமை கொண்டாடும் தென் சீன கடற்பகுதியான பலவானில் இடம்பெற்றுள்ளது. இந்த இராணுவ பயிற்சியில் 700க்கு மேற்பட்ட இராணுவத்தினர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸை ஒட்டிய தென்சீன கடற்பகுதியில் சீன கண்காணிப்பு கப்பல்கள் தொடர்ந்தும் நிலைநிறுத்தப் பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பிலிப்பைன்ஸ் யுத்த கப்பலும் நங்கூரமிட்டுள்ளது. கடந்த வாரம் மேற்படி பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படை சீன மீன்பிடி கப்பல்களை கைது செய்ய முற்பட்ட போது சீன கண்காணிப்பு படகுகள் அதனை தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து தொடர்ந்தும் பதற்ற நிலை நீடிக்கிறது. இது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் தீர்வு எட்டப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பகுதி முழுவதையும் சீனா உரிமை கொண்டாடிவருகிறது. எனினும் அந்த பகுதியிலுள்ள பிலிப்பைன்ஸ், புருனாய், மலேசியா, வியட்நாம் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளும் இந்த கடற்பகுதிக்கு சொந்தம் கொண்டாடுகிறது.

சித்திரை 17, 2012

இலங்கைக்கு வரும் சீனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டில் சுமார் 8000 சீனர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் 16,000 சீனர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். அண்மைக் காலத்தில் வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளை இலங்கையும் சீனாவும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இலங்கையை நோக்கி சீனர்கள் அதிகளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ___

சித்திரை 17, 2012

கியூபா, பொக்லாந்து தீவு சர்ச்சை

அமெரிக்க நாடுகளின் மாநாடு இணக்கப்பாடின்றி முடிவு

கியூபா மற்றும் பொக்லாந்த தீவு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து கொலம்பியாவில் நடைபெற்ற அமெரிக்க நாடுகளின் மாநாடு எந்த இணக்கப்பாடும் எட்டப்பாடாமல் முடிவுக்குக் வந்தது. அமெரிக்க பிராந்தியத்தின் 30 நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் கியூபாவுக்கு அழைப்பு விடுப்பது குறித்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 50 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் அமெரிக்க நாடுகளின் மாநாட்டில் கியூபாவுக்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பனாமாவில் நடைபெறவுள்ள அமெரிக்க நாடுகளின் மாநாட்டுக்கு கியூபாவுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்த மாநாட்டில் கோரிக்கை விடுத்தன. எனினும் இதற்கு அமெரிக்கா, மற்றும் கனடா எதிர்ப்புத் தெரிவித்தன. (மேலும்....)

சித்திரை 17, 2012

வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் 16 வயது யுவதியுடன் தங்கியிருந்த 67 வயது நபர், ஹோட்டல் உரிமையாளர் விளக்கமறியலில்!

16 வயதான யுவதியொருவருடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 67 வயதான ஆணொருவரையும் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் கைதான ஹோட்டல் உரிமையாளரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிபதி அலெக்ஸ்ராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். அத்துடன், குறித்த யுவதியை வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் நீதிபதி பணித்தார். (மேலும்....)

சித்திரை 16, 2012

பெரும்பான்மையான சிங்கள மக்கள், தமிழர்களுக்கு அதிகாரம் பகிரப்படுவதனை எதிர்க்கவில்லை சந்திரிக்கா!

பெரும்பான்மையான சிங்கள மக்கள், தமிழர்களுக்கு அதிகாரம் பகிரப்படுவதனை ஒருபோதும் எதிர்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் பெரும்பான்மையான சிங்களவர்கள், தமிழர்களுக்கு அதிகாரம் பகிரக் கூடாது என்ற நிலைப்பாட்கை; கொண்டிருப்பதாக கூறி வரும் கருத்துக்கள் அபத்தமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக்காலம் வரையில் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு, தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தெரியாமலேயே இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக சிங்கள மக்களிடமிருந்து மூடிமறைத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் அரசியல்வாதிகள் இனப் பிரச்சினையை தூண்டிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

சித்திரை 16, 2012

இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து தி.மு.க. விலகல்

இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் விலகியுள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். லோக்சபா பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான, 15 எம்.பி.,க்கள் அடங்கிய குழு, நாளை ஐந்து நாள் பயணமாக இலங்கை செல்ல இருந்தது. இந்நிலையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை செல்ல உள்ள எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் இடம் பெறாது என்று கூறியுள்ளார். முன்னதாக அ.தி.மு.க. எம்.பி.கள் இலங்கை செல்லமாட்டார்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சித்திரை 16, 2012

நிரந்தர தீர்வுக்காக தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும்

சுயநிர்ணய உரிமை, தேசியம் என்று பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை  - வீ. ஆனந்தசங்கரி

தயக்கம் காண்பிக்காமல் பேச்சுவார்த்தைகளில் தமிழ்க் கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும் அதுவே தீர்வுக்கு அடித்தளமாக அமையும் என்கிறார் ஆனந்தசங்கரி. தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஏனைய தமிழ் அரசியல் அமைப்புகளும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது அவசியம் என்றும் அதன் மூலமே 30 ஆண்டுகாலமாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண முடியும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தினகரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியொன்றில் வலியுறுத்தினார். இது குறித்து தினகரனுக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்காக அரசு முன்வைக்கும் யோசனைகள் மீது பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் தயக்கம் காண்பித்து வருவதனால் இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைக்க முடியாதிருக்கும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் தமிழ் மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளை யும் தீர்த்து வைக்ககூடியதாக இருக்கவில்லை. (மேலும்.....)

சித்திரை 16, 2012

காலி - எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது தாக்குதல்!

காலி - எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது பெரும்பான்மை சிங்கள யுவதிகள் சிலர் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவர் (சாதாரண இராணுவ சிப்பாய்) விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ் குடும்பங்களை சந்தித்து தன்னை ´சேர்´ அல்லது ´மாத்தயா´ என்றுதான் அழைக்க வேண்டும் என அச்சுறுத்தி வந்துள்ளார். எனினும் இலங்கை நாட்டு பிரஜைகள் என்பதால் அந்த இராணுவ சிப்பாய்க்கு அடிபணிய திலிதுற தோட்ட தமிழ் குடும்பங்கள் மறுத்து வந்துள்ளனர். இதனால் இந்த மக்கள் மீது இராணுவ சிப்பாய்க்கு கடும் கோபம் இருந்து வந்துள்ளது. கடந்த 11ம் திகதி புதுவருட விடுமுறையில் வந்துள்ள இராணுவ சிப்பாய் (றுவான் குமார என்பது பெயர் என தெரியவருகிறது) திலிதுற தோட்டத்திற்குச் சென்று இளைஞர் ஒருவரிடம் தன்னை ´சேர்´ என அழைக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.(மேலும்.....)

 

சித்திரை 16, 2012

இந்திய பாராளுமன்ற குழு இன்று இலங்கை வருகை

இந்திய பாராளுமன்றக் குழு இன்று இலங்கை வருகின்றது. ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் இந்தக் குழு வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளது. இலங்கை தங்கியிருக்கும் காலத்தில் இந்தக் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரதமர், டி. எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உட்பட முக்கியஸ்தர்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதி களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்யும் இந்திய பாராளு மன்றக் குழு சபாநாயகர் உட்பட இலங்கை பாராளுமன்ற உறுப்பி னர்கள் பலரையும் சந்திக்கவுள்ளன. (மேலும்.....)

சித்திரை 16, 2012

பாசிச பாதையில் பீடு நடை போடும் மம்தா

ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் வேதியல் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, மம்தாவின் அரசியலை விமர்சனம் செய்து கார்டூன் போட்டு அதை இமெயிலில் 65 பேருக்கு அனுப்பினார் என்று குற்றம் சாட்டி அவரை கைது செய்துள்ளது மேற்கு வங்க அரசு. அத்தோடு திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்களை   ஏவி விட்டு  பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா  மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. மம்தாவின் இந்த கருத்துரிமைக்கு எதிரான பாசிச மனோபாவம் பலராலும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வாறு தன் மீது யாரும் சிறு விமர்சனத்தையும் கூட வைக்ககூடாது என்று கொக்கரிக்கும் மம்தா மேற்கு வங்க அரசு இயந்திரம் முழுவதையும் பாசிசமயமாக்கி வருகிறார். . முதலாளிகளின் கைப்பாவையாக பாசிச பாதையில் நடைபயிலும் மம்தா பானர்ஜியின் சர்வாதிகார போக்குகளை முறியடிக்கவும் கருத்துரிமை காக்கவும்  ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.  (மேலும்.....)

சித்திரை 16, 2012

மரணத்தின் வாசல்வரை சென்று வந்த திமுத்துவுடனான உரையாடல் ஒலி வடிவில்

பாசிச ராஜபக்சவின் அரசபடைகளால் கடத்தப்பட்டு கொலைசெய்வதற்காகத் தடுத்து வைக்கப்பட்டு மரணத்தின் வாசல்வரை சென்றுவந்த திமுத்து ஆட்டிகலவுடனான உரையாடல் கீழே தரப்படுகிறது. முன்னிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் அணியின் பொறுப்பாளரான திமுத்து உரையாடலின் போது தன்னைச் சுய விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.தொலைபேசி தெளிவின்மை தடங்கல்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலின் ஒலி வடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் வராமல் இருந்திருந்தால் நிச்சயமாகத் தன்னைக் கொலைசெய்திருப்பார்கள் என்று கூறும் திமுத்து, அபாயகரமான சூழலிலும் மக்களை அணிதிரட்டிப் போராடுவது ஒன்றே எமக்கு முன்னுள்ள ஒரே வழி என்று கூறும் போது தன்னம்பிக்கையும், உறுதியும், சமூக உணர்வும் மக்கள் பற்றும் வெளிப்படுகிறது.(மேலும்.....)

சித்திரை 16, 2012

இலங்கையில் காணாமல் போனதாக அறிவிக்கப்படும்

ஆயிரக் கணக்கானோர் போலி அடையாளங்களுடன் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்

யுத்தத்தில் காணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு அரசாங்கங்களின் அனுசரணையுடன் புதிய அடையாள அட்டைகளை பெற்றிருக்கலாம். சமீபத்தில் செய்திகளில் முக்கிய இடம்பெற்றிருந்த குணரட்னம் என்பவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் N 1016123 இலக்கத்தைக் கொண்ட கடவுச்சீட்டொன்றை பெற்றுக் கொடுத்திருந்தது. இவர் புதிதாக அமைக்கப்பட்ட முன்னிலை சோசலிஷ கட்சியின் தலைவர். இவ்விதம் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து வேறொரு பெயரில் இவர் நடமாடியிருக்கிறார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தக்கூற்றை ஊர்ஜிதம் செய்ய முடியுமா? என்று ஒரு ஆங்கில வாரப்பத்திரிகையின் நிருபர் கேட்டபோது பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி, காணாமல் போனதாக கூறப்படும் குணரட்னம் தான் நொயல் முதலிகே என்று ஊர்ஜிதம் செய்ததாக கூறினார். இவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை என்பதையும் ஊர்ஜிதம் செய்தார். (மேலும்.....)

சித்திரை 16, 2012

பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் நேற்று இலங்கைக்கு விஜயம்

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்த ஜனாதிபதி அப்பாஸ¤க்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அடங்கலான வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பலஸ்தீன தூதுக் குழுவினரை வரவேற்று அழைத்து வந்தனர். இலங்கையில் இருநாட்கள் தங்கியிருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அடங்களான உயர்மட்ட அமைச்சர்கள், மற்றும் உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிற்கு இன்று (16) காலை ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இருநாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளனர். பலஸ்தீன ஜனாதிபதியுடன் இங்கு வரும் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் டாக்டர் என். ஏ. மல்கிக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸுக்குமிடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. பலஸ்தீனுடன் இலங்கை நெருங்கிய உறவுகளைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது.

சித்திரை 16, 2012

தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி நாட்டின் அமைதியை குலைக்க புலி ஆதரவாளர்கள் முயற்சி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

நாட்டின் பெளதிக அபிவிருத்தியைப் போன்று எதிர்காலத் தலைமுறையை ஆன்மீக ரீதியிலும் அபிவிருத்தி செய்வதன் அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். முதியவர்களை மதிக்கும், எம்மைப் பற்றிய தெளிவு கொண்ட, நற்பண்புகள் மிக்க எதிர்காலத் தலைமுறையை நாட்டில் உருவாக்கவில்லையானால் நாம் பெறும் அபிவிருத்தியால் பலன் இல்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்நாட்டை சுதந்திரம் அடையச் செய்யும் போராட்டமே கடந்த காலத்தில் இருந்தது. நாம் பயங்கரவாதத்தை ஒழித்து அந்தச் சுதந்திரத்தைப் பெற்றோம். எல்.ரி.ரி.ஈ. இளைஞர், யுவதிகளை புனர்வாழ்வில் ஈடுபடுத்தி அவர்களைச் சமூகத்துக்கு பலன்மிக்க பிரஜைகளாக நாம் உருவாக்கினோம். இருந்தும் கூட இன்று உலகில் இருந்து எமது தாய்நாட்டைப் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டு வந்து அதன் மூலம் நாட்டைச் சீர்குலைக்க எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். இந்த விடயமாக நாம்அனைவரும் தெளிவாக செயற்பட வேண்டும். இந்த நாட்டைப் பிரித்து, வேறாக்க இடமளிக்க முடியாது. இது ஒரே நாடு. இன்று சகல மக்களும் சமாதானத்துடனும், ஐக்கியத்துடனும் ஒரே நாட்டில் வாழ்கின்றனர். இனங்களுக்கு இடையில் நம்பிக்கை, ஐக்கியம் உருவாக்கப்பட்டு உள்ளது. மாகாண சபை, பிரதேச சபை உட்பட சகல நிறுவனங்களையும் ஒன்றுபடுத்தி நாட்டின் அபிவிருத்தியும் தொடர்ந்து முன் எடுக்கப்படுகிறது.

சித்திரை 16, 2012

ஈரான் அணுப் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு

ஈரானுடன் அணு விவகாரம் தொடர்பில் 6 நாடுகள் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் இன்னும் நீண்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் ஈரானிடம் இருந்து தெளிவான திட்டங்கள் தேவை என்றும் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அணு விவகாரம் தொடர்பில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடந்த சனிக்கிழமை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 15 மாதங்களுக்குப் பின்னர் சர்வதேச நாடுகள் இது தொடர்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது முதல் முறையாகும். இரண்டாம் கட்ட பேச்சவார்த்தை எதிர்வரும் மே 23ஆம் திகதி பக்தாதில் இடம்பெறவுள்ளது. ஈரானின் அணு செயற்பாடுகள் மக்கள் நலனுக்கானது என அந்நாட்டு அரசு கூறிவருகிறது. எனினும் அதனை மறுத்து வரும் அமெரிக்கா உட்பட நாடுகள் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டுகிறது.

சித்திரை 16, 2012

சோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள்

ன் துணையை இழந்த மறு விநாடியே உயிர் துறந்து இறந்து போகுமாம் அன்றில் பறவை. இது ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் உள்ளார்ந்த அன்பு அல்லது காதல் எவ்வளவு உண்மையானது. வலிமையானது என்பதை உணர்த்த சுட்டிக் காட்டப்படும் உதாரணங்களில் ஒன்று. இந்த உன்னதமான பண்பு பறவை இனத்துக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் உரியது. உதாரணமாக காதலர்களில் ஒருவர் இறந்த துக்கம் தாளாமல் மற்றொருவர் இறந்து போவது அல்லது கணவன் மனைவி இருவரில் ஒருவர் இறந்தால் மற்றொருவர் இறந்து போவது குறித்த செய்திகளையும் சினிமாக் காட்சிகளையும் நாம் பார்த்திருப்போம். இந்தக் கூற்று எவ்வளவு உண்மையானது, இதற்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் என்ன, ஒருவரின் இழப்பு மற்றொருவரின் உயிரை பறிக்கக் கூடிய அளவிற்கு வலிமையானதா போன்ற பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும். ஆனால் அவற்றுக்கான விடைகள் மட்டும் இதுவரை தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம். (மேலும்.....)

சித்திரை 16, 2012

புத்தக வாசிப்பு பழக்கம் இன்று குறைந்து வருகிறது

புத்தகங்களை வாசித்து அறிவை பெருக்கிக் கொள்ளும் பழக்கம் இன்றைய உலகில் குறைந்து வருகிறது. 1950 ஆம் ஆண்டு தசாப்தத்தின் முதல் 6 ஆண்டுகள் வரை எமது நாட்டில் புத்தகங்களை வாசிக்கும் மக்கள் குறிப்பாக, மாணவர்கள் சமூகத்தின் சகல தரங்களிலும் பெருமளவில் இருந்து வந்தார்கள், அதனால்தான், அன்று, இலங்கை பிரஜைகள் உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகளாகவும், வைத்திய நிபுணர்களாகவும், பொருளாதார மேதைகளாகவும், சட்டத்துறை பேரறிஞர்களாகவும் விளங்கி, எமது தாய்நாட்டிற்கு உலக அரங்கில் பெருமை தேடித் தந்தார்கள். இவ்விதம் இலங்கை மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னணியில் திகழ்வதற்கு யாழ்ப்பாணத்தின் கிறிஸ்தவ மிஷன் பாடசாலைகளும், ஏனைய பாடசாலைகளும் உறுதுணை புரிந்தன. அன்று, யாழ்ப்பா ணத்தில் கல்விதரம் அதியுன்னத நிலையில் இருந்ததனால், நாட்டின் ஏனைய பகுதியுள்ள சிங்கள, முஸ்லிம், பறங்கி இன பெற்றோர் தங் கள் பிள்ளைகளை யாழ்ப்பாணத்து பாடசாலைகளில் சேர்த்து, அவர்க ளைப் பாடசாலை விடுதிகளிலே தங்கவைத்து தங்கள் பிள்ளைகளு க்கு கல்வியறிவை புகட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்கள். (மேலும்.....)

சித்திரை 16, 2012

மீன்கள் கொடுக்கும் 'எலக்ட்ரிக் ஷொக்'!

த்திய தரைக் கடலிலும், வேறு சில கடல் பகுதிகளிலும் வாழும் 'ஸ்கேட்ஸ்' என்ற மீன் வகை உள்ளது. இவற்றை 'டார்பிடோ ரேஸ்' என்றும் அழைப்பார்கள். இந்த மீன்களின் பழக்கவழக்கங்களை பண்டைய ரோமானியர்கள் ஓரளவு அறிந்து வைத்திருந்தார்கள். இம்மீன்கள் நீந்தும் போது அமைதியாகவும் மெதுவாகவும் நீந்தும். இவற்றின் அருகே வேறு சிறு மீன்களோ, நண்டுளோ, பிற கடல்வாழ் உயிரிகளோ வந்துவிட்டால் 'சுரீர்' என்று மின்சார அதிர்ச்சி கொடுக்கும். அதில் அவை துடித்து மடியும். பின்னர் அவற்றை இந்த மீன்கள் உணவாக எடுத்துக் கொள்ளும். இந்த மீன்கள் தோற்றுவிக்கும் சக்தி, மின்சாரம் என்பது அக்கால ரோமானியர்க ளுக்குத் தெரியவில்லை. இவை ஏதோ விஷத்தன்மையுள்ள பொருட்களை வெளியிட் டுத்தான் தமது குறையைச் சொல்கின்றன என்று நம்பினர். தங்கள் மருத்துவச் சிகிச்சைகளுக்காக இம்மீன்களை பெரிய தொட்டிகளில் வைத்து வளர்த்தார்கள். (மேலும்.....)

சித்திரை 16, 2012

பாக். சிறையை தலிபான்கள் உடைத்தனர்  சுமார் 400 கைதிகள் விடுதலை

பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் பன்னு நகரில் உள்ள சிறையைத் தாக்கி உடைத்தனர். சிறையில் அடைபட்டிருந்த 400க்கும் மேற்பட்ட கைதிகளை அவர்கள் விடுவித்தனர். இவர்களில் பலர் தலிபான் தீவிரவாதிகள் ஆவர். தீவிரவாதிகள் துப்பாக்கி களுடனும், ஏவுகணையால் உந்தப்படும் கையெறி குண் டுகளுடனும் தாக்குதலை நடத்தினர் என்று காவல் துறை மூத்த அதிகாரி கூறி னார். இத்தாக்குதலில் ஏராள மானவர்கள் காயமடைந் தனர். இத்தாக்குதலில் பன்னு வில் இருந்து நூற்றுக்கணக் கான தோழர்களை விடுவித் துள்ளோம். ஏராளமானவர் கள் தங்களுடைய இடங் களை அடைந்துவிட்டனர். மற்றவர்கள் சென்றுகொண் டிருக்கின்றனர் என்று தலி பான் செய்தித்தொடர்பா ளர் கூறினார். இச்செய்தியை சரிபார்க்க உடனே இயலவில்லை. அல் கொய்தா தொடர்புடைய கைதிகளை விடுதலை செய் திருந்தால் அது பாகிஸ்தா னுக்கு மன ரீதியில் கிடைத்த அடியாகும். பாகிஸ்தான், தனது நடவடிக்கையால் தலிபான்கள் பலவீனம் அடைந்துவிட்டதாக கூறி வருகிறது. ஆப்கனில் இது போன்ற சம்பவங்கள் நடந் துள்ளன. பாகிஸ்தானில் இவ்வாறு நடப்பது அரி தாகும். ஆப்கனில் அமெரிக்கா வின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஒரு கேந்திர மான இடமாகும். ஆயினும் பாகிஸ்தான் மிகப்பெரும் பாதுகாப்பு சவாலைச் சந்தித்து வருகிறது. சிறையிலிருந்து தப்பிய வர்களில் சிலர் மட்டுமே தலிபான்கள் என்று பாகிஸ் தான் காவல்துறையும் உள வுத்துறையும் கூறுகிறது.

சித்திரை 16, 2012

சேதுவை அகழ்ந்து கப்பல் விடுவோம்!

(செ. முத்துக்கண்ணன்)

தமிழகத்தின் 160 ஆண்டுகால கனவு திட்டமாக உள்ள சேது கால்வாய்திட் டத்தை உடன் அமலாக்கிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் கால் நுாற்றாண்டுகளாய் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள் ளோம். தென் மாவட்டங்களில் போதிய தொழிற்சாலைகள் இல்லை, இயற்கை ஏமாற்றுவதால் விவசாயம் பொய்த்துக் கொண்டே இருக்கிறது, வேலைவாய்ப்பு கள் அருகிக் கொண்டே வருகிறது, வாழ வழியில்லாமல் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், தேசங்களுக்கும் சென்று கொண்டிருப் போர் அரை நுாற்றாண்டுகளாய் அதிகரித்த வண்ணம் உள்ளது. சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப் பட்டால் தென்மாவட்டங்களில் உள்ள கனிம மற்றும் நில வளங்களை முழுமை யாக பயன்படுத்தி புதிய தொழிற்சாலை களும், அதன் சார்பு தொழில்களும், ஏற் கனவே உள்ள பாரம்பரிய தொழில்களான பஞ்சாலை, பவர்லுாம், தீப்பெட்டி, பட்டாசு உள்ளிட்டு வர்த்தகத்திற்கு முழுமையாக பயன்படும். சேது கால்வாய்த்திட்டத்தை உடன் அமலாக்கிடுவது தென் தமிழகத் தின் தொழில்வளர்ச்சி, பாரம்பரிய தொழில் களின் வளர்ச்சிக்கும், புதிய வேலைவாய்ப் புகளை உருவாக்கிடவும் உதவிடும். (மேலும்.....)

 

சித்திரை 16, 2012

அமெரிக்காஸ்’ உச்சி மாநாட்டுக்கு கியூபாவை அழைக்க வேண்டும்  கொலம்பியா ஜனாதிபதி வலியுறுத்தல்

கியூபா பங்கேற்காத மற் றுமொரு ‘அமெரிக்காஸ்’ உச்சி மாநாடு நடைபெறு வதை ஏற்க முடியாது என்று கொலம்பியா ஜனாதிபதி ஜுவான் மானுவேல் சான் டோஸ் வெளிப்படையாகப் பேசினார். அமெரிக்கா கண்டத் தில் உள்ள அனைத்து நாடு களும் பங்கேற்கும் ‘அமெ ரிக்காஸ்’ உச்சி மாநாட் டிற்கு கியூபா அழைக்கப் படவில்லை. கியூபா, அமெ ரிக்க நாடுகளின் அமைப் பில் இருந்து 1962ம் ஆண் டில் அமெரிக்காவின் கட்டா யத்தால் நீக்கப்பட் டது. அமெரிக்கா, கனடா தவிர்த்த மற்ற நாடுகள் அனைத்தும் கியூபாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வாதாடி வருகின்றன. தனிமைப்படுத்தல், வேண்டாதவர் போன்ற செயல், முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொள்ளல் போன்றவை இனியும் எடுப டாது. இன்றைய உலகில் இவ்வழி ஏற்க முடியாதது. இது காலத்திற்கொவ்வா தது. இச்செயல் சில பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்ட பனிப் போர் காலத்திலேயே நம் மை நங்கூரமிட்டு நிற்க வைக்கும் நடவடிக்கை என்று சான்டோஸ் மாநாட் டின் தொடக்கவுரையில் குறிப்பிட்டார். இதே கருத்தை ‘அமெ ரிக்காஸ்’ அமைப்பின் செய லாளர் நாயகம் ஜோஸ் மரியா இன்சுல்ஸா வேறு தொனியில் வலியுறுத்தி னார். சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டு பேச் சுவார்த்தைகளை மேம்ப டுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ‘அமெரிக் காஸ்’ அமைப்பில் ஜனநாய கம் வளர்ந்து வருகிறது. ஜன நாயகத்தை வெளிப்புற கட் டாயம், திணிப்பு, ஒதுக்கி வைத்தல் ஆகியவை இன்றி வலுப்படுத்துவதே சிறந்த வழி என்று அவர் கூறினார்.

சித்திரை 16, 2012

ஆனையிறவில் அடுத்த வருட இறுதிக்குள் உப்பு உற்பத்தி

ஆனையிறவு உப்பளங்களில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளை 2013 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சம்பிரதாய தொழிற்துறை மற்றும் சிறிய தொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சின் திட்டப் பணிப்பாளர் அஜித் ஏகநாயக தெரிவித்துள்ளார். இதனை மீண்டும் ஆரம்பிப்பதால் 2500க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திட்டப் பணிப்பாளர் அஜித்ஏகநாயக மேலும் தெரிவித்துள்ளதாவது, முப்பது வருட கால யுத்தம் காரணமாக ஆனையிறவில் உப்பு உற்பத்திகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இன்று யுத்தமற்ற சூழ்நிலையில் மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். யுத்தத்திற்கு முன்பு இங்கு வருடமொன்றிற்கு 70000 மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இதனை ஆரம்பிப்பதன் மூலம் அந்த இலக்கை அடைவதே எமது நோக்கமாகுமென்றும் திட்டப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். _

சித்திரை 15, 2012

அமெரிக்காவின் “மனித உரிமைகள்” மோசடி

'சுதந்திரம், ஜனநாயகம், உலகளாவிய மனித உரிமைகள் ஆகியவற்றுக்கான மக்களின் அபிலாசைகளின் பக்கம் நம்மை நிறுத்திக் கொண்டு வரலாற்றின் சரியான பக்கத்தில் நாம் நிற்கிறோம் என்றே நான் கருதுகிறேன்' என்று அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளிண்டன் எகனாமிஸ்ட் இதழுக்கு அளித்த ஒரு சமீப நேர்காணலில் அறிவித்தார். உலகில் அமெரிக்காவின் பாத்திரத்தை விபரிக்கையில் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்: நாங்கள் எழுந்து நின்று உரைக்கிறோம், நாங்கள் உலகளாவிய மதிப்புக்களின் பக்கம் நிற்கிறோம் என்று, அவை அமெரிக்க மதிப்புக்களுடன் ஒத்திசைபவையாக உள்ளன. (மேலும்.....)

சித்திரை 15, 2012

தமிழகம் சிறப்பித்த ஈழத் தமிழ்ப்பெண்

தமிழகத்தின் முலை முடுக்கெங்கும், குமுதம் ஆனந்தவிகடன் இதழ்கள் செய்தி இதழ்க் கடைகளில் தொங்குவது போல வளர்தொழில் இதழும் விற்பனைக்காகத் தொங்கும். இந்த மாதம் தமிழகமெங்கும் தொங்கும் அட்டைகளில் திருமதி பாலேந்திரா உள்ளார், உள்ளே இரு பக்கங்கள் அவரின் தொழில்முனைவுப் பணிகள் பற்றியும் அவர் பெற்ற ஆத்திரேலிய விருதுகள் பற்றியும். இணைப்பில் அட்டையும் பக்கங்களும். வளர்தொழிலுக்கு ஏறத்தாழ ஒரு இலட்சம் வாசகர்கள், அவர்களுள் பெருமளவினர் தொழில் அதிபர்கள். பார்க்க, பகிர்க, நன்றி

 

சித்திரை 15, 2012

வீரம் விதைத்த இளைஞன்

(மயிலைபாலு)

கேப்டவுன் பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் பிரதான கட்டிடத் திற்கு அவரது பெயர் சூட்டப்பட் டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பெய ரில் நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மான் செஸ்டர் பல்கலைக்கழக மாணவர் சங்க கட் டிடத்திற்கு அவரது பெயர் சூட்டி கவுரவிக்கப் பட்டுள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ரஸ்கின் கல்லூரி மாணவர் விடுதி அவர் பெயரில் தான். பிரிட்டனில் உள்ள மாணவர் சங்கங்கள் பலவற்றில் இவரது பெயருடன் கட்டி டங்களும் பிரிவுகளும். பிரேசில், சல்வடாரில் இவரது பெயரில் கல்விநிறுவனம். பிரிட்டோரியா மருத்துவக்கல்லூரியும் அவரது பெயரில், டர்பன் பல்கலைக்கழகத்தின் பரந்து விரிந்த வளாகம் அவரது பெயர் தாங்கிநிற்கிறது.இதே பல்கலைக்கழக வளாகத்தின் சுதந்திர சதுக்கத் தில் அவருக்கு மார்பளவு வெண்கலச் சிலை.... (மேலும்.....)

 

சித்திரை 15, 2012

சொல்

(வெ.சாமிநாதசர்மா)

பண்டைத் தமிழ் மக்க ளுக்கு, வெளிநாடுகளு டன் தொடர்பு கொள்ள, தரை மார்க்கத்தைக் காட்டிலும் கடல் மார்க் கமே சுலபமாகவும், விரைவில் பயன்தரக் கூடியதாகவும் இருந்தது. இதனால், கடலிலே கலஞ் செலுத்தவும் கலங் கள் கட்டவும், கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்துக்குட்பட் டார்கள், கற்றுத் திறமையும் பெற் றார்கள். இப்படித் திறமை பெறுவ தற்கும் இவர்களுக்கு ஓர் அனுகூல மான சூழ்நிலை அமைந்திருந்தது. (மேலும்.....)

சித்திரை 15, 2012

இந்திய தூதுக்குழு ஜனாதிபதி கூட்டமைப்பு மு.கா., இ.தொ.கா. வையும் சந்திக்கும்

இலங்கைக்கு வருகை தரும் இந்திய நாடாளுமன்றக் குழு ஜனாதிபதி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா. ஆகிய கட்சிகளையும் சந்தித்துப் பேசவுள்ளது. ஏப்ரல் 16, 2012இல் இந்தியாவிலிருந்து தூதுக்குழு புறப்படுகிறது. ஏப்ரல் 17,2012 1. இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் உரையாடல். 2. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உடனான சந்திப்பு 3. நாடாளுமன்ற விஜயம் சபாநாயகருடன் சந்திப்பு. நாடாளுமன்ற அங்கத்தவர்களுடன் சந்திப்பு 4. மூத்த அமைச்சர்களுடன் போசனம் 5. தமிழ்த் தேசியக் கூட்டணியினருடன் சந்திப்பு 6. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சந்திப்பு 7. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் சந்திப்பு. (மேலும்.....)

 

சித்திரை 14, 2012

தேசிய நல்லிணக்க முயற்சிக்கு உதவ தயாராகவுள்ளோம்

புத்தாண்டு தினமான இன்று சிங்கள மற்றும் தமிழ் பிரஜைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கும், அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பை வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புது வருடத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அமெரிக்க பிரஜைகள் சார்பில் தாம் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையுடனான 150 வருட தொடர்பைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் அதன் தேசிய நல்லிணக்க முயற்சிக்கும், அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆட்டுக்கு காவலாக புலி இருக்கப்போவதாக கதைவிடுகின்றதாம்.

சித்திரை 14, 2012

ஏப்பிரல் நிகழ்வு! 05

ஈழத்தமிழர் கூத்து மீளுருவாக்கமும் தேடலும்,செயன்முறை விளக்கமும்- பாலசுகுமார்

வழிப்படுத்துகை-கே.கே.ராஜா

இலங்கை-ஜனநாயக மயப்படுத்தலும் அதிகாரப் பகிர்வும்,போருக்குப்பின்னான பொருளாதாரமும் - அகிலன் கதிர்காமர்

வழிப்படுத்துகை-நா.சபேசன்

venu- trinity centre,east avenue

east ham, E12 6SG

21-04-2012 SATURDAY - 4.00 PM

புத்தக கண்காட்சியும் இடம்பெறும்!

மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்....

தொடர்புகளுக்கு-eathuvarai@gmail.com

தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்

சித்திரை 14, 2012

NEW YEAR EVENT APRIL 13 -2012 -TORONTO - CANADA

இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் புதுவரூடப்பிறப்பானது , சித்திரை மாதம்  முதல் திகதி இல்  கொண்டாடப்படுகிறது. இந்தசித்திரை புத்தாண்டானது (13-04-2012) இன்று காலை 8.15 அளவில் பிறந்தது. இப்புத்தாண்டையோட்டி பல இந்து ஆலயங்களில் சிறுப்பு வழிபாடு நடை பொற்றன. பர்ம்ப்டன் நகரில் Brampton - Chrysler Drive உள்ள ஸ்ரீ  சபரி  பீடத்திலும் (TEMPLE) சிறுப்பு வழிபாடு நடை பொற்றது. இப்புத்தாண்டு வழிபாட்டிற்கு கனடாவிற்கான  இலங்கை பொது தூதுவர் கருணாரத்ன  பரணவிதான வருகைதந்திருந்தோடு சமயவழிபாட்டிலும் கலந்து கொண்டார் . இவர் எப்புதுவருட கொண்டாட்டத்தில் மட்டுமல்லாது, பல இந்துமக்களின் கலை கலாச்சார கொண்டாட்டத்திலும் கலந்து  கொண்டிருந்ததையும் நாம் காணதவறவில்லை. அரசியலை தவிர்த்து ஒரு தனிமனிதராக பார்க்கும்போது  இவர் இனமதபேதமின்றி பழகக்கூடிய  ஒரு நல்ல மனிதர்".

சித்திரை 14, 2012

 

ஜோசப் ஸ்டாலின் - ஹெச் .ஜி. வெல்ஸ் உரையாடல் - 1934

(தமிழாக்கம் : Dr . ஜீவானந்தம்)

அமேரிக்கா எங்களிடமிருந்து மாறுபட்ட லட்சியத்துடன் பயணிக்கிறது. பொருளாதாரச் சிக்கலின் காரணமான மாற்றமே அங்கு நிகழ்கிறது. அவர்கள் பொருளாதார அடிப்படையை மாற்றாமல் தனியாரின் முதலாளித்துவ சிக்கலிலிருந்து விடுபட நினைக்கிறது. அவர்களின் இன்றைய பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து குறைவான இழப்புடன் தப்பிக்க நினைக்கின்றனர். நாங்கள் பழைய பொருளாதாரச் சீர்குலைவை உணர்ந்து முற்றிலும் புதிய பொருளாதார அடித்தளத்தை உருவாக்க முயல்கிறோம். அவர்கள் தமது பொருளாதாரச் சிக்கலைச் சரி செய்வதில் வெற்றி பெற்ற போதும்தமது பழைய முதலாளித்துவ வேர்களை விட்டுவிட விரும்ப வில்லை . அவர்களின் இந்தப் பொருளாதார அமைப்புமீண்டும் மீண்டும் அவர்களை அரஜாக உற்பத்தி வெறிக்கே இட்டுச் செல்லும். இத்தகைய முயற்சியால் சமூகத்தைச் சீரமைக்க முடியாது. சிக்கலையும் அழிவையும் தரும் பழைய பொருளாதார முறையை ஒழிக்கவும் முடியாது. சில தற்காலிக மேம்போக்கான மாற்றங்களே தரக் கூடும். இதை அவர்கள் பெரும் சீர்திருத்தம் என அவர்கள் நினைக்கலாம். ஆனால் அவர்கள் தங்களது பழைய அராஜக பொருளாதாரத்தையே காப்பாற்றி கொண்டுள்ளார்கள். எனவே அங்கு எவ்விதச் சமூக சீர்திருத்தமும்மாற்றமும் நடக்காதுஅங்கு திட்டமிட்ட பொருளாதாரம் முடியாது. திட்டமிட்ட பொருளாதாரம் என்பதன் அடிப்படை என்ன வேலையின்மையை ஒழிப்பதே. இது ஒரு முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சாத்தியமா ஒரு சிறிது முடியும் என்று  ஏற்றுக் கொண்டபோதும் முற்றாக வேலையின்மையை ஒழிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் அனுமதிக்காது. வேலையின்மை இருப்பதன் மூலமே முதலாளித்துவம் உழைக்கும் மக்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க முடியும். அதன் மூலமே மலிவாக உழைப்பை அது பெற முடியும். திட்டமிட்ட பொருளாதாரம் என்பது மக்களின் தேவைக்கானவற்றையே உற்பத்தி செய்யும். ஆனால் முதலாளித்துவ உற்பத்தியே  முற்றிலும் வேறுபட்ட லட்சியம் கொண்டது. லாபமே  அதன் உச்ச லட்சியம் இழப்பை எதற்காகவும் முதலாளித்துவம்  ஏற்காது. மக்கள் நலனுக்காக அது தனது லாபத்தை விட்டுத்தராது. முதலாளித்துவத்தைஅதன் சொத்துடமை வெறியைலாப நோக்கத்தை ஒழிக்காமல் திட்டமிட்ட பொருளாதாரம் இயலாத ஓன்று. (மேலும்....)

சித்திரை 14, 2012

ஷாருக் கானுக்கு அவமரியாதை

அமெ.வில் இந்தியர்களுக்கு தொடரும் அவமானம்

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மாணவர் களிடையே உரையாற்றுவ தற்காகச் சென்ற பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான், நியூயார்க் விமான நிலையத் தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை என்ற பெயரில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார். அதன் பின்னர், நியூ யார்க் விமான நிலையத்திலி ருந்து 3 மணிநேரப் பயண தூரத்திலுள்ள யேல் பல் கலைக்கழகத்தில் உரையாற் றிய ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையங்களில் வழக்கம் போலத் தாம் 2 மணி நேரம் காக்க வைக்கப் பட்டதாகத் தெரிவித்தார். முன்னதாக, 2009ம் ஆண்டில் அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத் தில் ஷாருக் கான் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

 

சித்திரை 14, 2012

ஈரான் எண்ணெய் கண்காட்சி  பங்கேற்க ஐரோப்பிய நிறுவனங்கள் போட்டா போட்டி

அமெரிக்காவின் பாதை யைப் பின்பற்றி ஈரானிலி ருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று ஐரோப் பிய யூனியன் அறிவித்தா லும், அந்நாட்டில் நடை பெறவிருக்கும் சர்வதேச எண்ணெய் கண்காட்சியில் இடம் பெற 15 ஐரோப்பிய நாடுகளிலிருந்து நிறுவனங் கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. 17வது கண்காட்சியின் இயக்குநரான இசாக் ரோய் வார் கூறுகையில், இது வரை 1,255 உள்நாட்டு மற் றும் வெளிநாட்டு நிறுவனங் கள் பதிவு செய்துள்ளன. 44 நாடுகளைச் சேர்ந்த நிறு வனங்கள் பெரும் ஆர்வம் காட்டியிருக்கின்றன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் தடைகளை விதித்தாலும், கடந்த ஆண்டை விட 10 சதவிகிதம் அதிகமான எண் ணிக்கையில் நாடுகள் பங் கேற்கின்றன என்று குறிப் பிடுகிறார். ஆஸ்திரியா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி, ஜெர் மனி, ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா, ஸ்வீடன், பிரான்ஸ், நார்வே, நெதர்லாந்து, உக் ரைன், ருமேனியா, பின் லாந்து மற்றும் துருக்கி ஆகிய ஐரோப்பிய நாடுகளி லிருந்து எண்ணெய் நிறு வனங்கள் இந்தக் கண்காட் சியில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்திருக்கின்றன. இந்தியாவும் இதில் பங்கேற் கிறது. இந்தக் கண்காட்சிக்கு செல்ல வேண்டாம் என்ற அமெரிக்காவின் மிரட்டல் கள் பலிக்கவில்லை. உற் பத்தி சக்தியை அதிகப்படுத் துவது பற்றி தீவிரமான விவாதம் இந்தக் கண்காட் சியின்போது நடக்கும் கூட் டங்களில் விவாதிக்கிறார் கள். பல்வேறு ஒப்பந்தங் கள் இந்தக் கண்காட்சியின் போது கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரை 14, 2012

சிரியாவில் போர் நிறுத்தம் அமுல்

துப்பாக்கி, பீரங்கிகளின் சத்தம் ஓய்ந்தது

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்த ஒரு வருடமாக நடந்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களை அரசு இராணுவத்தின் மூலம் ஒடுக்கி வந்தது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 9,000க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஐ.நா அறிவித்துள்ளது.எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா தீவிர முயற்சி மேற்கொண்டு, கோபி அனானை சமாதான தூதுவராக நியமித்தது.இவர் சிரியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சிரியா நேற்று காலை 6 மணி முதல் இதனை அமுலுக்கு கொண்டு வந்தது. ஹோம்ஸ், ஹமா, இட்லிப் ஆகிய நகரங்களில் குவிக்கப்பட்டிருந்த இராணுவம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.எனவே அங்கு தினசரி ஒலித்து கொண்டிருந்த துப்பாக்கி சத்தம் ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் போராட்டக்காரர்கள் கையெழுத்திடவில்லை. எனவே அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடைய வேண்டும் என சிரியா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. துருக்கியில் 25 ஆயிரம் பேரும், ஜோர்டானில் 8 ஆயிரம் பேரும், லெபனானில் 16 ஆயிரம் பேரும் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நாடு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர உள்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்களும் பயமின்றி தங்கள் வீடுகளில் தங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை 14, 2012

 

கனடாவில் உயர்ந்து வரும் வீடுகளின் விலை மதிப்பு

கனடாவில் டொரொண்டோ, ஒஷாவோ மாநிலங்களில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளின் விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் விலை ஜனவரி மாதத்தை விட 0.1 சதவீதமும், பிப்ரவரி மாதத்தை விட 0.3 சதவீதமும் உயர்ந்து கொண்டே வருவதாக கனடாவின் புள்ளியியல் துறை தெரிவித்தது. வீட்டு விலையின் புதிய குறியீட்டு எண் வேன்கூவரில் குறைவாகவும் டொரொண்டோ மற்றும் ஓஷாவோவில் கூடுதலாகவும் உள்ளது. ஜனவரி 2.4 சதவீதம் கூடுதலாக இருந்த இந்த குறியீட்டெண் (Index) பிப்ரவரியும் 2.3 சதவீதம் அதிகமாகியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் இந்த வீட்டுவிலை உயர்வு தவிர்க்க இயலாததாகிவிட்டது. ரெஜினாவில் 5.9 சதவீதம் டொரொண்டோ மற்றும் ஓஷாவாவில் 5.8 சதவீதம் வின்னிபெக்கில் 3.8 சதவீதம் என்று வீட்டுவிலை உயர்வுக் குறியீடு பதிவாகியுள்ளது. மாதந்தோறும் ஏற்படும் விலையுயர்வு ரெஜினா மாநிலத்தில் அதிகரித்து வருகின்றது. வீட்டு மனையின் விலை உயர்வும், கட்டிடப் பொருட்கள் மற்றும் தொழிலாளர் கூலி உயர்வும் சேர்த்து இந்த மாநிலத்தில் புதிதாகக் கட்டப்படும் வீட்டின் விலையை 2.4 சதவீதம் உயர்த்திவிட்டது.

சித்திரை 14, 2012

 

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி: நடுவானில் வெடித்து சிதறியது

வட கொரியா நீண்ட தூரம் செல்லும் செயற்கைகோளை ஏவி சோதனை செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் செயற்கைகோள் வெடித்து சிதறி தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் நிறுவன தலைவர் கிம் 2 சங் 100-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக விண்ணில் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை ஏவ வடகொரியா முடிவு செய்தது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதற்கு ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை சோதனை நடத்தவே இந்த ஏவுகணை ஏவப்படுவதாக குற்றம் சாட்டின. இதை வடகொரியா மறுத்தது. வானிலை ஆய்வுக்காகவே அனுப்பப்படுவதாக கூறியது. அதே நேரத்தில் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டால் ஏவுகணை வீசி தாக்கி அழிக்கப் போவதாக ஜப்பான் மிரட்டி வந்தது. அதையும் மீறி வடகொரியா உள்நாட்டு நேற்று காலை 7.40 மணி(சர்வதேச நேரப்படி நேற்று இரவு 10.40 மணிக்கு) விண்ணில் ஏவியது. ஆனால் வடகொரியாவின் முயற்சி தோல்வி அடைந்தது. செயற்கைகோள் ஏவப்பட்டதும் சீறிப்பாய்ந்தபடி விண்ணில் பறந்தது. அதே நேரத்தில் அடுத்த ஒரு நிமிடத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. அவற்றின் சிதறல்கள் தென்கொரியாவின் குன்சன் துறைமுகத்தில் இருந்து தென்மேற்கில் 200 கி.மீட்டர் தூரத்தில் மஞ்சள் கடலில் விழுந்தது.

சித்திரை 13, 2012

அனைவருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்

 

சித்திரை 13, 2012

ஜாலியன் வாலாபாக் - வீர நினைவுகள்

(வீ.பழனி)

இறந்துபோனவர்களின் கண்களை உயி ரோடு இருப்பவர்கள் மூடுகின்றனர்.. உயிரோடு இருப்பவர்களின் கண்களை இறந்து போனவர்கள் திறக்கின்றனர்.’

ஏப்ரல் 13 பைசாகி என்ற சீக்கிய புத் தாண்டு தினமாகும். அறுவடைத் திருநாளும் கூட. அன்று பிற்பகலில் அமிர்தசரஸ் பொற் கோவிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு கண்டன கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து சந்தைக்கு வந்த பெரும்பாலானோர், தடை உத்தரவு அமலில் இருப்பது தெரியாமல் தலைவர்கள் பேச்சை கேட்பதற்காக மைதானத்தில் அமைதியாக கூடினர். திடீரென்று தனது துருப்புகளுடன் அங்கு வந்த ஜெனரல் டயர் அமைதியாகக் கூடி யிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டான். அந்த மைதானம் நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல் வதற்கு ஒரு சிறிய சந்து மட்டுமே இருந்தது. அந்தச் சந்திலும் குண்டுகள் நிரப்பப்பட்ட பீரங்கி நிறுத்தப்பட்டிருந்தது. (மேலும்....)

சித்திரை 13, 2012

பீதியும் விழிப்புணர்வும்

விழிப்புணர்வுக்கும் வதந்திக்கும் பீதிக்கும் வேறுபாடுகள் உண்டு. அறிவியல் பூர்வமாக சுனாமி எச்சரிக்கை மையங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்வதும்; அதனை ஊடகங்கள் மக்களி டம் கொண்டு சேர்ப்பதும்; மக்கள் அதனை உள் வாங்கி எச்சரிக்கையோடும், விழிப்புணர் வோடும் நடந்துகொள்வதும் ஆரோக்கியமான நடைமுறையாகும். ஆனால் பரபரப்புச் செய்தி களில் விளம்பரம் தேடும் ஊடகங்கள் இந்த சுனாமி வரும் என்கிற உறுதிசெய்யப்படாத தக வலை சொன்ன விதமும்; மக்களிடம் கருத்து கேட்ட விதமும்; அதை வைத்துக் கொண்டு பீதியைக் கிளப்பிய விவகாரமும் மிகவும் முகம் சுளிக்க வைப்பதாகவும், ஆபத்தான தாகவும் அமைந்தது வேதனைக் குரியது. ஊடகங்கள் சமூகப் பொறுப்பை, பொறுப்புணர்வோடு நிறை வேற்றிடத் தவறிவிட்ட தோடல்லாமல் எதிர் வினையும் ஆற்றியது. (மேலும்....)

சித்திரை 13, 2012

மையில நனச்சு பேப்பரில் அடிச்சால் மறுத்துப் பேச ஆளில்லை

முன்பாவது ஓவியர்கள், அச்சுக் கோர்ப்போர் எனப் பலவகைத் தொழிலாளர்கள் அத்துறையில் பணிபுரிந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஊதியம் கொடுத்து அச்சகம் நடத்தும் போது பெரிய வருவாய் எதுவும் கிட்டாது; அந்நிலையில் கிட்டும் வருவாய்க்குத் தகுந்த விதத்தில் தானே ஊதியம் வழங்க முடியும் என்ற வாதத்தை அச்சக முதலாளிகள் முன் வைப்பதற்கு வாய்ப்பிருந்தது. தற்போது கணிணி மயம் ஏற்பட்ட பின்னர் அவ்வாறு பலரகத் தொழிலாளர் இருப்பதற்குத் தேவையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எத்தகைய பிரசுர வடிவமைப்பையும் கணிணி கற்ற ஓரிருவரைக் கொண்டே செய்து விடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் சம்பள உயர்வு என்பதை மட்டும் அச்சக முதலாளிகள் எண்ணிப் பார்ப்பதே இல்லை. நவீன மயத்தின் பலன்கள் அனைத்தையும் தாங்களே ஆதாயமாக அடைய வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.(மேலும்....)

சித்திரை 13, 2012

தோழர் என்.வரதராஜன் மறைவு

இலங்கைத் தமிழ் அமைப்புகள் இரங்கல்

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் பொதுச் செயலாளர் தி.சிறீதாள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தனது இறுதி மூச்சுவரை மக்கள் சார்ந்த தனது பணிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரராக, தொழிற் சங்கவாதியாக, கட்சியின் மாநிலச் செயலாளராக, முதுபெரும் தலைவ ராக அவரது வரலாறு நீண்டது. நாம் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அவருடன் கலந்துரையாடியிருக்கிறோம். காலஞ்சென்ற தோழர் பி.ராம மூர்த்தி, தோழர் சுர்ஜித், தோழர் நல்லசிவன் போன்ற தலைவர்களுடன் நாம் சிறந்த உறவுகளை பேணி யிருக்கிறோம். ஆலோசனைகளை, வழிகாட்டல்களை பெற்றிருக் கிறோம்.
(மேலும்....)

சித்திரை 13, 2012

ஏற்றுமதி அபாரம்  சீன வர்த்தகத்தில் உபரி

நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறையைச் சந்தித்த சீனா, மார்ச் மாதத்தில் உபரியை ஏற்படுத்தி மீண்டுள்ளது. பிப்ரவரியில் சீனாவின் வர்த்தகம் பற்றாக்குறையைச் சந்தித்தபோது, இனி இப்படித்தான் தொடரும் என்று மேற்கத்திய பொருளாதார வல்லுநர் கள் சித்தரிக்கத் துவங்கினர். ஆனால், ஒரே மாதத்தில் அதிலிருந்து மீண்ட தோடு, ஜனவரி முதல் மார்ச் வரையி லான காலாண்டில் வளர்ச்சியை எட் டும் வகையில் ஏற்றுமதி அதிகரித் திருக்கிறது.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் நெருக்கடியிலி ருந்து மீளாத நிலையில் சீனாவின் ஏற் றுமதி சரிவடையும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், ஏற்றுமதி மற் றும் இறக்குமதி ஆகிய இரண்டையும் சீனா உயர்த்தியுள்ளது. (மேலும்....)

சித்திரை 13, 2012

பாரிய அளவில் சுனாமி ஏற்படாததற்கு காரணம் என்ன? ஆய்வாளர்கள் விளக்கம்

இந்தோனேஷியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் வாபஸ் பெறப்பட்டது. இந்தோனேசியாவின் அசே அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பாறைத் தட்டுக்களை செங்குத்தாக, அதாவது மேலிருந்து கீழாக அசைக்கவில்லை. மாறாக, பக்கவாட்டில்தான் அது ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சுனாமி பேரலைகள் ஏற்படாமல் பூமி தப்பியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட இந்தோனேசிய நிலநடுக்கத்தின் அளவானது 9 ரிக்டராகும். அப்போது ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியப் பெருங்கடல் நாடுகளை பெருமளவில் சுருட்டிப் போட்டு விட்டது. பல லட்சம் உயிர்கள் பலியாகின, பெரும் பொருட் சேதத்தையும் ஆசிய நாடுகள் சந்தித்தன. (மேலும்....)

சித்திரை 13, 2012

நூறு வருடங்கள் பழைமைவாய்ந்த நீர்த்தாங்கி இடிந்து விழும் நிலையில்

மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் காணப்படும் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த மிகப்பெரிய நீர்த்தாங்கி எந்த நேரத்திலும் இடிந்து வீழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இதன் மூலமாகவே மன்னார் மாவட்டம் முழுவதுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் போது இதற்கும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் இதுவரை எந்தவிதமான பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இது காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த நீர்த்தாங்கி சிறு சிறு துண்டுகளாக உடைந்து கீழே விழுந்து கொண்டிருக்கின்றது.அத்துடன் இதன் சீமெந்து மேற்பூச்சுக்கள் கழன்று துருப்பிடித்த இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுஅமைந்துள்ள மன்னார் பொது விளையாட்டு மைதனத்தில் தினமும் விளையாட்டு வீரர்களும் பொது மக்களும் கூடுவது வழக்கமாகும். எந்தநேரத்தில் இந்த நீர்த்தாங்கி தமதுதலையில் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இவர்கள் இதனை அண்ணாந்து பார்த்தவாறு செல்கின்றனர். இந்த நீர்த்தாங்கியின் மோசமான நிலைமையைப் பார்க்கும் போது அச்சம் தோன்றுவதாக  மக்கள் கூறுகின்றனர். நீர்த்தாங்கிக்கு அருகில்  மன்னால் தலைமன்னார் பிரதான வீதி உள்ளது. இது யார் மீதாவது இடிந்து விழுந்து அனர்த்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர் இதனை இடித்து ஒதுக்க வேண்டுமென்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.  உரிய அதிகாரிகள் இதனைக் கவனத்தில் எடுப்பார்களா என்று மக்கள் கேட்கின்றனர்.

சித்திரை 12, 2012

எஞ்சியுள்ள 700 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு விசேட புனர்வாழ்வு

முகாம்களில் எஞ்சியுள்ள 700 முன்னாள் புலி உறுப்பினர்களை விடுதலைசெய்ய இன்னும் ஒரு வருடம் வரை செல்லுமென புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட பெரும்பாலான புலி உறுப்பினர்களுக்கு முகாம்களில் புனர்வாழ்வு அளித்ததாகவும், தொழில் பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இவர்களில் பெரும்பாலானோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது 700 பேர் பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு விசேட புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியுள் ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ___

சித்திரை 12, 2012

சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டது

இலங்கைக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சற்று முன்னர் மீளப்பெறப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.மேற்படி தகவலை இலங்கை வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி வசந்தகுமார் உறுதிப்படுத்தினார்.

சித்திரை 12, 2012

பம்பலப்பிட்டியில் திடீர் நிலநடுக்கம்!

பம்பலப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டதாகச் சற்று முன்னர் எமது இணையத் தளத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. சேத விபரங்கள் குறித்துத் தெரிவிக்கப்படவில்லையாயினும் தொடர்மாடிகளில் குடியிருந்தோர் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளை, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டதாக தற்போதைய தகவல் தெரிவிக்கின்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சென்னையின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள் தொடரும்.

சித்திரை 12, 2012

மீண்டும் 3ஆவது முறையாக நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை நீடிக்கிறது -  காலநிலை அவதான நிலையம்

இந்தோனேசியாவில் மீண்டும் 3ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது. 8.2 ரிச்டர் அளவில் இது உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் சுமாத்ரா மற்றும் ஆச்சே பகுதிகளில் தொடர்ந்து பூமி அதிர்ச்சி ஏற்படுவதால் சுனாமி தொடர்பான அச்சம் தொடர்ந்து நிலவுவதாக காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரி வசந்த குமார் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இதுவரை 3 பூமி அதிர்ச்சிகள் மேற்குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக ஏற்பட்ட பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி ஏற்படுத்துவதற்கான கால அளவு கடந்து விட்ட போதிலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பூமி அதிர்ச்சிகளால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை கடல் நீர் உள்வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுவரும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் மக்கள் இதையிட்டு பதற்றம் அடையத்தேவையில்லை எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. எனினும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்தும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றர். சுனாமித்தாக்கம் ஏற்படுமாயின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சித்திரை 12, 2012

பிரபாகன் யார்?

(பரம் ஜீ)

கேள்விகள் பிறப்பது பதில்கள் வேண்டியே. அப்பதில்களே பாடங்களாகி மனிதவர்க்கத்தின் மனங்களில் தெளிவினை தருவதுடன் அடுத்த முயற்சிகளுக்கும்ஆதாரங்களாகவும் அவை அமைகின்றன. ஆனால், எவ்வளவுதான் நாம் முயன்றாலும்சில கேள்விகளுக்கான சரியான பதில்களை பெறுவதென்பது இயலாத காரியமாகவே இருந்துவிடுகிறது. அவ்வகையில், ஆயுதப்போராட்டம் பற்றிய விடைகள் தெரியாத பல கேள்விகளால், மாறாத சோகத்தில் ஆறாத மனக்காயங்கள் தரும் வேதனைகளில் தமிழ் இனம் இன்று அல்லல் படுகின்றது. காரணம், பரிசாக கொடுத்திருக்கும் பாரிய தமிழின அழிவுகள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளின் ஆரம்ப காலங்களில், சேகுவெரா இயக்கம் சிறீலங்கா அரசுக்கு எதிராக திட்டமிட்டிருந்த சதிப்போராட்டத்தை ஒடுக்க எண்ணி அதற்கு ஆதரவு கொடுத்த பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர் யுவதிகளை, முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்களை, சிறிமாவோவின் சிங்கள இராணுவம் கொன்றொழித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அங்கு நடந்திருந்தும் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தையே தேர்ந்தெடுத்தன் காரணம் என்ன? அறியாமையா? அல்லது தமிழர்க்கு விதியாக வந்த கேடு மதி கெடுத்து வந்ததா? (மேலும்....)

சித்திரை 12, 2012

இலங்கை செல்லும் இந்திய குழுவில் அதிமுக இடம்பெறாது - ஜெயலலிதா

தமிழர்களுக்கு எதிரான செயல்களில் இலங்கை அதிபர் ராஜபகஷ அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் அந்நாட்டு அரசிடம் எவ்விதமான மாற்றமும் தெரியாததாலும் இலங்கைக்கு செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் அதிமுக இடம் பெறாது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.    மேலும், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு,  மீள் குடியமர்த்தல் ஆகியவை பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ராஜபகஷேயை நேரில் சந்தித்து விவாதிக்க வாய்ப்பு தரப்படாமல் கடைசி நாளில் காலை விருந்து மட்டுமே அவருடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.

சித்திரை 12, 2012

ஈரானின் அமைதி அணுத்திட்டங்களை அமெரிக்கா ஏற்கும்  வாஷிங்டன் போஸ்ட் தகவல்

அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடவில்லையென்று ஈரான் நிரூபிக்குமேயானால், அதன் அமைதி அணுத் திட்டங்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்று அமெரிக்க நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்றதொரு செய் தியை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா துருக்கி பிரதமர் ரெசெப் தய்யிர் எர்டோகன் மூலமாக ஈரானின் சுப்ரீம் தலைவர் அலி கொமேனிக்கு அனுப்பியுள்ளார். எர்டோகன் அதைக் கடந்த வாரம் கொமேனியிடம் ஒப்ப டைத்துவிட்டார் என்று வாஷிங்டன் போஸ்டின் வெளி யுறவு விவகாரச் செய்தியாளர் டேவிட் இக்னேசியஸ் கூறி யுள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தேடாது என்று கொமேனி வெளிப்படை யாக அறிவித்ததை அவர் ஆதா ரப்பூர்வமாக நிரூபிக்கவேண் டும். அவ்வாறு நிரூபித்தால் ஈரானின் அமைதி அணுத்திட் டங்களை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று ஈரானுக்கு ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார் என்று இக்னேசியஸ் சொல் கிறார். ஈரானின் அணுதிட்டங்கள் மற்றும் சிரியா பற்றியும் கொமேனியிடம் எர்டோகன் என்ன கூற வேண்டுமென்று அப்போது விவாதித்தார்கள் என்று இக் னேசியஸ் எழுதியுள்ளார். அமைதியான தீர்வைக் காண் பதற்குரிய காலம் கரைந்து கொண்டே வருகிறது என்றும், பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பை ஈரான் பயன் படுத்திக் கொள்ள வேண்டு மென்று கொமேனியிடம் எர் டோகன் கூறவேண்டும் என் றும் ஒபாமா கூறினார் என்று இக்னேசியஸ் சொல்கிறார்.

சித்திரை 12, 2012

சுமாத்ராவில் பாரிய பூகம்பம்

  • தெய்வாதீனமாக இலங்கை தப்பியது; சுனாமி எச்சரிக்கை மாலை 6.30 மணிக்கு வாபஸ்
    பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் சிதறியோட்டம்
    முப்படை, பொலிஸார், சுகாதார சேவைகள் தயார் நிலையில் இருந்தன

     

இலங்கையின் திருகோணமலைக் கரையிலிருந்து 1100 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவுக்கருகில் கடலில் நேற்று பிற்பகல் பூகம்பம் ஏற்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தது. இந்த பூகம்பம் சுமத்ரா தீவின் பண்டா அச்சே நகரிலிருந்து 495 கிலோ மீற்றர்க ளுக்கு அப்பால் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் 8.6 ரிச்டர் அளவில் இடம் பெற்றதாக ஐக்கிய அமெரிக்க பூகற்பவியல் ஆய்வு மத்திய நிலையம் அறிவித்தது. இந்த பூகம்பத்தின் அதிர்வை இலங்கையின் பல பிரதேசங்களிலும் வாழும் மக்கள் அதேநேரத்தில் உணர்ந்தனர். உயரமான இடங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே உருண்டு விழுந்ததும் கண்ணாடி பொருட்கள் உடைந்து நொறுங்கியதும் அவதானிக்கப்பட்டது. (மேலும்....)

சித்திரை 12, 2012

எங்கே போவது எனத் தவிக்கும் சிரிய மக்கள் - ஐ.நா.விடம் உதவி கேட்கும் துருக்கி

துருக்கியுடனான சிரியா எல்லையில் ஆயிரக்கணக் கான சிரியா அகதிகள் குவிந் துள்ளனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதா அல்லது நாட்டைவிட்டு வெளியேறுவதா என்று தீர் மானிக்க முடியாமல் திணறுகின்றனர். இட்லிப் மாவட்ட மக் களின் கிராமங்கள் போர் மண்டலங்களாக மாறிவிட் டன. அரசுத்தரப்பு படைக ளின் டாங்குகளும் ஹெலி காப்டர்களும் அங்கு குவிந் துள்ளன. தெருக்கள் எங்கும் கும்பல் புதைப்புக்காகக் காத்திருக்கும் உடல்கள் நாறிக் கிடக்கின்றன. சற்றும் எதிர்பாராத வகையில் அகதிகளைச் சமாளிக்க வேண்டிய கட் டாயத்தில் துருக்கி உள்ளது. ஏராளமானவர்கள் விளை யாட்டு அரங்கங்களிலும் பள்ளிகளிலும் தங்கியுள் ளனர். ஆயிரக்கணக்கான வர்கள் தங்குவதற்கு கூடா ரங்கள் அமைக்கும் பணி யை அரசு தொடங்கியுள்ளது. அதிகரிக்கும் அகதிகள் வருகை புதிய அவலங்க ளைச் சொல்கிறது. 20 ஆயி ரம் பேர் வாழும் டாப்ட னாஸ் நகரில் 100 பேர் மாண் டுள்ளனர். குண்டுகளால் சிதைந்த வீடுகளின் இடிபா டுகளிலும், நெருப்பிலும் சிக்கி மடிந்த இவர்களை நகரில் மிஞ்சியுள்ள சிலர் கும்பலாகப் புதைந்துள்ள னர். சனிக்கிழமையன்று ஹமா நகரில் அரசுப்படை கள் நடத்திய வன்முறையில் 121 பேர் கொல்லப்பட்ட னர். எண்ணிக்கையை உறு திப்படுத்த இயலவில்லை. இது ஒரு படுகொலை என்று மனித நேய ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அஸாத் அரசு அளித்த வாக்குறுதியை மீறியுள்ள தற்கு ஐ.நா. பொதுச் செய லாளர் பான் கீ மூன் கண் டனம் தெரிவித்துள்ளார்.

சித்திரை 12, 2012

கூடங்குளம் அணுமின் நிலையம்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அபாயங்களை எதிர்கொள்ள வியூகம்

கூடங்குளம் அணு உலை தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் விரைவில் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். கூடங்குளம் அணு உலையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு முகம்கொடுப்பது தொடர்பாகவும் அதற்கான பாதுகாப்பு வழிகள் குறித்தும் இரு நாடுகளும் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளன. தமிழ் நாட்டின் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அணு உலை தொடர்பாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அந்த நாட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எழுத்து மூலம் ஏற்கனவே அறிவித்துள்ளார். கூடங்குள அணு உலை இலங்கைக்கு அண்மையில் அமைந்துள்ள தால் இலங்கைக்கும் தாக்கம் ஏற்படும் என நம்பப்படுகிறது. எனவே அத்தகைய நிலையில் இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு குறித்து இருதரப்பினரும் பேச திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்குமிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெற இருப்பதாக இருநாட்டு தூதுவர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து ஏதும் அணுக்கசிவு ஏற்பட்டால் அது குறித்து முன்கூட்டி அறிவதற்காக இந்தியாவை நோக்கியதாக 5 முன்னெச்ச ரிக்கை கோபுரங்களை அமைக்க இலங்கை அணு சக்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

சித்திரை 12, 2012

வடகொரியா ரொக்கெட் ஏவ எரிபொருள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

வட கொரியா ஏவவுள்ள ரொக்கெட்டுக்கு எரிபொருள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் சர்ச்சைக்குரிய இந்த ரொக்கெட் விண்ணுக்கு ஏவப்பட வுள்ளது. இந்த ரொக்கெட் ஏவும் திட்டத்திற்கு பொறுப்பாக உள்ள வட கொரிய விண்வெளி தொழிநுட்ப குழுவின் செய்மதி கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் பெக் சங்ஹோ இது குறித்து தலைநகர் பியொங்ஜியானில் சர்வதேச ஊடகவியலாளர்களிடம் கூறும் போது, ரொக்கெட்டுக்கு எரிபொருள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரொக்கெட் ஏவப்படும் சரியான நேரம் எனது தலைமையில் தீர்மானிக்கப்படும் என்றார். இந்நிலையில் வட கொரியா தனது ரொக்கெட் திட்டத்தை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மீண்டும் ஒரு முறை எச்சரித்துள்ளது. வட கொரியா தனது நாட்டு மக்களுக்கு அமைதியான, சிறந்த எதிர்காலத்தை வழங்க நினைத்தால் தனது ரொக்கெட் ஏவும் திட்டத்தை உடன் கைவிட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார். இந்த ரொக்கெட் ஏவும் திட்டம் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என கூறிய அவர் இது தொடர்பில் ஐ. நா. சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வட கொரியாவுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கப்படும் என எச்சரித்தார்.

சித்திரை 11, 2012

மேல் மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம், மலையகத்திலும் நில அதிர்வு, கிழக்கிலும் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மேல்மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. எனவே பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். இன்று நாட்டில் உணரப்பட்ட நில அதிர்வு மலையகப்பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று பிற்பகல் 2 .15 மணியளவில் நுவரெலியா ,நாவலப்பிட்டி ,நானுஓயா , அட்டன் ,கொட்டகலை , டிக்கோயா போன்ற பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வின் போது சில இடங்களில் பொருட்கள் நிலத்தில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தளபாடங்கள் அசைந்ததாகவும் கூறப்பபடுகின்றது.  இதன் போது காசல்ரீ நீர்த் தேக்கத்தின் காசல்ரீ தோட்டத்துக்கு அருகில் உள்ள நீர்ப்பரப்பில் நீரலைகள் மேலெழுந்ததாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். __சற்று நேரத்திற்கு முன் (02.15) இலங்கையின் பல பாகங்களிலும் சிறியளவிளான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, கல்முனை, ஓட்டமாவடி, கிண்ணியா உள்ளிட்ட பிரதேசங்களிலும் இந்த பூமியதிர்வு உணரப்பட்டுள்ளது. இதேவேளை இந்தோனேசியா சுமாத்ரா தீவிற்கு அருகில் 08.07 ரிச்டர் அளவில் பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதுடன் குறித்த பூமியதிர்வு இந்தோனேசியாவின் ஆச்சே மாநிலத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்தோனேசியா மற்றும் 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தோனேசியாவில் ஏற்பட்டதன் தாக்கம்தான் இலங்கையிலும் உணரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாலை 4.00 மணியளவில் இதன் தாக்கம் இலங்கையில் உணரப்படலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சித்திரை 11, 2012 ____

இலங்கை குறித்த இந்தியாவின் முடிவு சாதாரணமானதல்ல - சந்திரிகா _

"ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்போது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்திருப்பது இலங்கைக்கு நல்லதல்ல. தனிப்பட்ட ரீதியாக, இந்த நிலை ஏற்பட்டது எனக்கு மிகவும் வருத்தமாகத் தான் இருக்கின்றது எனினும், இந்த நிலை ஏற்பட இலங்கை அரசு ஏன் விட்டிருக்க வேண்டும்? இதுவே குழப்பமாகவுள்ளது. காரணம், 2009இல், கடைசியாக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இந்தியா எங்களுக்கு முழுமையாக ஆதரவளித்திருந்தது. எங்களுக்காக ஆதரவு தேடியது. அதனால் நாங்கள் வெற்றி பெற்றோம். தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது. எங்களுக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கு, இரு நாடுகளுக்குமிடையில் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்தியா இந்த முடிவை சாதாரணமாக எடுத்ததாகக் கருத முடியவில்லை. (மேலும்....)

சித்திரை 11, 2012

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட திமுது ஆட்டிகலவின் பரபரப்பு வாக்குமூலம்...!

இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை விடுதலையான முற்போக்கு சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல தான் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.'கடந்த 6ஆம் திகதி மாலை கட்சியின் செயற்பாடுகளை முடித்துவிட்டு கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீட்டுக்குச் செல்லத் தயாரானேன். நான் கொடகமவில் உள்ள வீட்டுக்குச் செல்லும் வழியில் வெள்ளை வேனில் வந்த நபர்கள் சிலர் கண், வாயைக் கட்டி வேனுக்குள் தூக்கிப்போட்டனர். 'நீங்கள் ஆங்கில ஆசிரியைதானே...?", 'மக்கள் போராட்ட இயக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளராக விளங்குகிறீர்கள்தானே?" - இப்படிப் பல கேள்விகளை என்னிடம் கேட்டார்கள். நான் அவற்றுக்குப் பதில் கூறாததால் ஒரு தடவை என்னைத் தாக்கினார்கள். அதன் பின்னர் தாக்கவில்லை. வேன் நீண்ட தூரம் பயணித்துக் கொண்டிருந்தது. வேன் நின்ற இடம் ஒரு முகாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அது பாதுகாப்பான பிரதேசம் என்பதை என்னால் உணர முடிந்தது. (மேலும்....)

சித்திரை 11, 2012

வன்னிமண்ணின் பெருமை கூறும்கந்தப்புஜெயந்தனின் இசையில் வவுனியாமண்ணே புதிய பாடல்

வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் கந்தப்புஜெயந்தனின் இசையில் வவுனியா தர்மலிங்கம் பிரதாபனின் கவிவரிகளில் இப்பொழுது வெளிவந்துள்ளது வவுனியா மண்ணே பாடல்... வன்னி மண்ணின் பெருமை கூறும் இப்பாடல் யாழ்தேவி இசை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.ஏற்கனவே இவர்கள் வெளியிட்ட காந்தள் பூக்கும் தீவிலே,யாழ்தேவி ,கண்ணோடு கண்கள் பேசுதே ,கண்ணீரில் வாழும் ,சுனாமி பாடல் ,எங்கோ பிறந்தவளே போன்றபாடல்கள் இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளன..அந்த வகையில் இப்பாடலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல் இசை -கந்தப்புஜெயந்தன் பாடல் வரிகள் -தர்மலிங்கம் பிரதாபன் எடிட்டிங் -தி.பிரியந்தன் பாடியவர்-K. ஜெயந்தன்

(காணொளியை பார்க்க...)

சித்திரை 11, 2012

சிரியாவில் யுத்த நிறுத்த கெடு நேற்றுடன் முடிவு, தொடர்ந்து மோதல் தீவிரம்

சிரியாவில் யுத்த நிறுத்தத்தை கடை பிடிப்பதாக அரசு உறுதி அளித்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அங்கு தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. சிரியாவின் ஹோம்ஸ் நகர் மற்றும் துருக்கி, லெபனான் எல்லைப் பகுதிகளில் நேற்று ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அதிகமானோர் அப்பாவி பொதுமக்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ. நா. மற்றும் அரபு லீக் விசேட பிரதிநிதி கொபி அனான் கொண்டுவந்த அமைதி முயற்சிக்கு சிரிய அரசு இணக்கம் தெரிவித்ததோடு அதனை 10ஆம் திகதிக்குள் கடைப்பிடிப்பதாக உறுதி அளித்தது. எனினும் அரச எதிர்பாளர்கள் ஆயுதங்களை கீழே போடுவதாக எழுத்து மூலம் உறுதி அளித்தால்தான் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் இராணுவம் வாபஸ் பெறப்படும் என சிரிய அரசு நேற்று முன்தினம் திடீர் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை எதிர்ப்பாள ர்கள் ஏற்க மறுத்தனர். இந்நிலையில் ரஷ்யா சென்றுள்ள சிரிய வெளியுறவு அமைச்சர் வலித் முவல்லம், இராணுவம் பல பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அரசியல் கைதிகள் பலரும் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சித்திரை 11, 2012

முன்னாள் எம்.பி.க்கள் சபாநாயகரால் பாராட்டுத் ஜனாதிபதி மஹிந்தவும் பங்கேற்பு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மக்கள் பிரதிநிதிகளை பாராட்டும் நிகழ்வொன்று நேற்று (10) காலை சபாநாயகரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது சேவையினைப் பாராட்டும் வகையில் இவ்வாறானதொரு பாராட்டு நிகழ்வை ஏற்பாடு செய்ததாக இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 1956-77 காலப்பகுதியில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தயா ரீ பெஸ்குவெல், டீ.ஆர்.ரத்நாயக்க உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்திய ரஞ்சித் அத்தபத்து, ஆனந்த குலரத்ன ஆகியோர் அடங்கலாக முன்னாள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 150 இற்கும் மேற் பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகை தந்ததையிட்டு அங்கு கூடியிருந்த அனைவரும் தமது மகிழ்ச்சியினைத் தெரிவித்தனர்.

சித்திரை 11, 2012

குஜராத்கொலை

23 பேர் குற்றவாளிகள்: 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு மிகப்பெரிய கலவரம் நடந்தது. ஓடே எனும் கிராமத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 23 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 1ந் திகதி இந்த கொடூர சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 47 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அனந்த் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 150 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். 170 ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாக கொடுக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. சமீபத்தில் விசாரணை முடிந்தது. இதையடுத்து இன்று இந்த வழக்கில் நீதிபதி பூனம்சிங் தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட 47 பேரில் 23 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் விசாரணை நடந்தபோது மரணம் அடைந்து விட்டார். குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள 23 பேருக்கும் தண்டனை என்ன என்பதை விரைவில் நீதிபதி அறிவிக்க உள்ளார்.

சித்திரை 11, 2012

சர்வதேச அழுத்தங்களால் இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது

சிங்கள மக்களைப் பகைத்துக்கொண்டு, எந்தவொரு அரசியற் தீர்வையும் நாம் நடைமுறைப்படுத்தி விட முடியாது. எந்த ஒரு சர்வதேச அழுத்தங்களினாலும் இலங்கைத் தீவில் இன ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது. இனமுரண்பாடுகளை வளர்த்துக்கொண்டு எதையும் சாதித்துவிடவும் முடியாது. இவை கடந்த காலத்தில் நாம் பட்டுக்கொண்ட பட்டறிவின் பாடங்களாகும். ஆகவே, இலங்கைத் தீவின் ஒருமைப்பாட்டைப் பேணிக்கொண்டு அதனுடைய இறைமையைப் பாதுகாத்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைகளையும் வென்றெடுக்க நாம் விரும்புகிறோம். (மேலும்....)

சித்திரை 11, 2012

கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவரும் முன்னாள் மாநில செயலாளருமான என் வரதராஜன் நேற்றுக் காலமானார். அவருக்கு வயது 76. கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தேசிய மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பிய வரதராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளராகவும் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ள வரதராஜன் கடந்த 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.கிட்டத்தட்ட 50 வருட அரசியல் வாழ்வில் இருந்த வரதராஜனுக்கு சொந்தமாக வீடு கிடையாது. அவரது உடல் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து மாலையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

சித்திரை 10, 2012

TNA split over joint May Day rally with UNP
By KELUM BANDARA

The Tamil National Alliance (TNA) is split over its decision to hold the May Day rally with the main opposition United National Party (UNP) in Jaffna this year, Tamil politicians said yesterday. The TNA took this decision recently after a series of meetings. TELO political leader M.K. Sivajilingam said TELO and two other parties were opposed to this decision. He said any political alignment with the UNP at this time would be interpreted by the government as being too confrontational. “Any alignment with the UNP for any such joint event will send a wrong signal to the government. We have to take a neutral stand. Appearing to be too confrontational with the government will be bad for us,” Mr. Sivajilingam said. The Tamil United Liberation Front (TULF) and the People’s Liberation Organization of Tamil Ealam (PLOTE) are also opposed to holding a joint May Day rally with the UNP. When asked for a comment, UNP Vice President Lakshman Kiriella said his party decided to team up with the TNA for this event to stress the need for the southern parties to reach out to the minorities. He said the UNP wanted to convey to the international community that there were parties in Sri Lanka willing to work with the minority parties in a united Sri Lanka. “We want to convey the message that in Sri Lanka there are parties willing to give equal rights to all the communities. The time is ripe now for democratic political activism in the North, which were severely affected as a result of terrorism,” he said.

Source: Daily Mirror - Sri Lanka

சித்திரை 10, 2012

Gota slams Australia

Defense secretary Gotabhaya Rajapaksa speaking on the alleged abduction of Kumar Gunarathnam said that the Australian High Commission did not furnish him with any information regarding Gunarathnam when he requested for them a few months ago. “When the JVP split there were a lot of stories being circulated about the group, there were stories to the effect that they were joining hands with the rehabilitated LTTE cadres, that they were ready for an armed struggle and various other stories. So obviously as the defense establishment of the country we were on alert. At that time I requested the Australian High Commission to give me all the details of this man in writing, because he is a citizen of that country. I wanted to know the date of arrival, his passport number, what name he uses among other details but the never got back to me with the details until two days ago” he said. (more...)

சித்திரை 10, 2012

முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நானே போட்டியிடுவேன் - சிவநேசதுரை சந்திரகாந்தன்!

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுமாயின் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் தானே போட்டியிட போவதாகவும் அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுமா என்பது பற்றி எனக்கு இதுவரை எந்தத் தகவலும் அறியக்கிடைக்கவில்லை. எவரும் என்னுடன் அதைப்பற்றிப் பேசவுமில்லை. எனினும் மாகாணசபை கலைக்கப்பட்டால் முதலமைச்சர் பதவிக்கு நான் போட்டியிடுவேன். இப்போது முதலமைச்சராக நான் பணியாற்றுகிறேன். அடுத்த முறையும் போட்டியிடுவேன். இதில் வேறு கேள்விக்கே இடமில்லை என முதலமைச்சர் சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு விடயம் தொடர்பில் ஏதாவது விட்டுக் கொடுப்பை மேற்கொள்வதா இல்லை என்பது குறித்த தனது நிலைப்பாட்டை தேர்தல் அறிவிக்கப்பட்டனர் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணசபை ஜூலை மாதமளவில் கலைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்திரை 10, 2012

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம்?.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவ ரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அரசாங்கத்தின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் ஆலோசித்து வருகிறார் எனவும் ஹக்கீமை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் அரசுக்கான வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என அவர்களிடம் ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் தமிழ்,முஸ்லிம் மக்களின் விருப்பத்திற்குரிய ஒருவராக ஹக்கீம் இருப்பதால், அரசின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அவரை நிறுத்துவதே கிழக்கு மாகாணத்தை அரசு கைப்பற்றுவதற்கான சரியான நகர்வாக அமையும் என ஜனாதிபதி கருதுகிறார். கிழக்கில் தமது கட்சிகளுக்கு தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளதால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் முக்கிய இடத்தை வகிக்கப்போகின்றோம். ஆகவே, அரசு எடுக்கும் தீர்மானத்தில் எமது கருத்துகள் உள்ளடக்கப்படவேண்டும் என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஹக்கீமை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதென்ற ஜனாதிபதியின் தீர்மானம் சரியானதே எனவும் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கான சரியான நகர்வு இதுவென்றும் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்திரை 10, 2012

பிரச்சினைகளின் நதிமூலம்

(தோழர் சுகு – சிறீதரன்)

இலங்கையின் முன்னேற்றம் அல்லது சுபிட்சம் பிரகாசமான எதிர்காலம் என்பதெல்லாம் இலங்கையர்களின் வாழ்வு ஜனநாயகமயப்படுத்தலிலே தங்கியுள்ளது. இலங்கையில் வாழும் ஒரு பகுதி மக்கள் தாம் இலங்கையர்கள் என்று மானசீகமாக சிந்திக்காத நிலை காணப்படுகிறது. இது மிகவும் அவலமானதாகும். பேரினவாத மேலாதிக்க மனோபாவமே மக்களில் ஒரு பகுதியினரை அவ்வாறு சிந்திக்க விடாமல் தடுக்கிறது. இது இலங்கையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் ஜனநாயக விரோத போக்காகும். தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதே இதன் போக்காக இருந்தது. இந்தப் போக்கின் எதிர்வினையாகவே தமிழர்கள் மத்தியில் அகிம்சை போராட்டம் காலாவதியாகி ஆயுதம் தாங்கிய எழுச்சி உருவானது. அது பின்னர் தமிழ் பாசிசமாக மாறியது பெரு நாசத்தை தமிழ் சமூகத்திற்கும், சகோதர சமூகங்களுக்கும் விளைவித்தது என்பது வேறு கதை. (மேலும்.....)

சித்திரை 10, 2012

ஒற்றுமை நல்லிணக்கத்தை ஏற்படுத்த அற்புத வாய்ப்பு - சந்திரிகா

இலங்கையில் இரு இன மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்கு அற்புதமாக வாய்ப்பு கிட்டியுள்ளதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று இடம்பெற்ற தென் ஆசியா கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 25 வருட கால யுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்த நல்லிணக்கத்திற்கான பாலத்தை கட்டும் பணியில் மந்த கதியில் இயங்கி வருகின்றது. இரு இன மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே இது போன்ற வாய்ப்புக்களை நழுவவிடக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் நான் ஜனாதிபதியாக இருந்து போது உலக நாடுகளுடன் நல்ல உறவு காணப்பட்டது. இந்தியாவுடனான உறவும் முக்கியமானது எனவும் வலியுறுத்தினார். ___

சித்திரை 10, 2012

சிலைகள் உடைப்பு விவகாரம்  

முதல்வர் தலைமையில் உயர் மாநாடு, சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்

மட்டக்களப்பு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மகாத்மா காந்தியின் உருவச்சிலை உட்பட நான்கு பெரியார்களின் உருவச் சலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராயும் விஷேட உயர்மட்ட மாநாடு ஒன்று மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நேற்று (9.4.2012) காலை நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி. அரியநேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பி. பிரசாந்தன், எட்வின் சில்வா கிருஸ்னானந்தராஜா, இரா. துரைரட்ணம், எம். மாசிலாமணி, ஏ. சசிரன், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாநகர ஆணையாளர் கே. சிவநாதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ். சிறிதரன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் காந்திசேவா சங்கத்தின் பிரதிநிதிகள், சாரணிய இயக்கத்தின் உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களென பலரும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தச் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இரகசியப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். இது தொடர்பில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. உடைக்கப்பட்ட சிலையை புனரமைக்குமாறு முதலமைச்சரும் மாநகர மேயருமே எங்களிடம் வேண்டுகோள் விட்டார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று பொலிஸாரே இதை புனரமைப்புச் செய்வதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன தெரிவித்தார்.

சித்திரை 10, 2012

குமார், திமுது ஆகியோரை விடுதலை செய்யக்கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

பிரேகுமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரை விடுதலை செய்யக் கோரி லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யபட்டுள்ளது. இலங்கை அரச பாசிஸ்டுக்கள் அனைத்து மக்களதும் அரசியல் உரிமைகளையும் அழித்து குடும்ப சர்வாதிகாரத்தை நிறுவிக்கொள்ளும் இன்றைய சூழலில் சமூகப்பற்றுள்ள அனைவரும் ஆர்ப்பட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். நாளை மதியம் ஒரு மணிக்கு ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம் மூன்று மணிக்கு நிறைவுறும். முன்னிலை சோசலிசக் கட்சியின் லண்டன் கிளையினருடன் தமிழ் சொலிடாரிட்டி மற்றும் புதிய திசைகள் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளன.

சித்திரை 10, 2012

பிரேமகுமார் கட்டுநாயக்க விமான நிலையத்தில்

அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பபப்டுவார்

இலங்கை அரச படைகளால் கட்டுனாயக்க விமான நிலயத்திற்குச் சற்று முன்னதாக அழைத்துவரப்பட்ட பிரேமகுமார் குணரத்னம் அவுஸ்திரேலியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்று(10.04.2012) காலை 4 மணியளவில் விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட பிரேமகுமார் அவுஸ்திரேலியாவிற்கான அடுத்த விமானத்தில் அனுப்பிவைக்கப்படுவார் எனத் தெரியவருகிறது. திமுத்து ஆட்டிகல குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாயாகவில்லை

சித்திரை 10, 2012

சாத்தான்கள் சாத்தான்களைப்பற்றி கதை கூறுகின்றன

துரோகிகளை அரவணைத்துள்ள கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுத்தரும்? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

ஈழத்தமிழரின் உரிமைப்போருக்கான திறவுகோல்களாய் இருந்த வராலற்று மாந்தர்களை நினைவு கொண்டாடும் இடத்தில், கூட்டமைப்பு மீண்டும் ஒரு முறை தங்கள் அழுக்கு முகத்தைக் காண்பித்திருக்கின்றது. தமிழீழ கோட்பாட்டை நிலைநிறுதியதற்காகவும், அரசியல் ரீதியாகக் கூறிய தீர்க்க தரிசனங்களுக்காகவும் இன்றளவும் தமிழர்கள் தந்தை செல்வநாயகத்தைப் போற்றுகின்றனர். இந்த இடத்தில், அவருக்கு நிகராக சில துரோகிகளின் பெயர்களையும் நினைவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பினுள் நுழைந்திருக்கின்ற துரோகிகள் கும்பல் ஒன்று செயற்படுகின்றமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பட்டமாகியிருக்கின்றது. (மேலும்.....)

சித்திரை 10, 2012

சித்திரை 10, 2012

சிரிய அமைதி முயற்சியில் தொடர்ந்து சிக்கல்: தாக்குதலை நிறுத்த அரசு திடீர் நிபந்தனை

ஆயுதங்களை கீழே போடுவதாக போராட்டக்காரர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால்தான், போராட்டத்தை ஒடுக்க குவிக்கப்பட்ட இராணுவத்தை வாபஸ் பெற முடியும் என சிரிய அரசு அறிவித்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான போராட்டம் ஓராண்டை கடந்த போதிலும், இன்னமும் அவர் பதவி விலக மறுத்து வருகிறார். அவரை பதவி விலகக் கோரும் போராட்டக்காரர்களை இராணுவம் கொண்டு ஒடுக்கி வருகிறார். இதனால் ஏற்படும் கலவரங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இந்நிலையில், ஐ.நா.சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன்படி, வரும் 10ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் செய்வதென போராட்டக்காரர்களும் சிரிய அரசும் ஒப்புக்கொண்டனர். எனினும் போராட்டக்காரர்கள் ஆயுதங்களை கீழே போடுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என சிரிய அரசு நிபந்தனை விதித்தது. (மேலும்.....)

சித்திரை 10, 2012

பனிச்சரிவில் புதையுண்ட பாகிஸ்தான் வீரர்களை மீட்க அமெ. விசேட குழு

பனிச்சரிவில் புதையுண்ட பாக். இராணுவ வீரர்களை தேடும் முயற்சிக்கு உதவியாக அமெரிக்கா விசேட குழுவொன்றை அனுப்பியுள்ளது. இந்திய எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் சியாச்சி பகுதியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 124 இராணுவ வீரர்கள் உட்பட 135 பேர் புதையுண்டனர். இவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மேற்படி பகுதியில் பனிக்கட்டியை அகற்றுவதில் பாக். மீட்புப் பணியாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த மீட்புப் பணிக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா 8 பேர் கொண்ட குழுவை இஸ்லாமாபாத் அனுப்பியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் கயானி மேற்படி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டுள்ளார்.

சித்திரை 10, 2012

அமெரிக்கா இழைக்கும் அக்கிரமங்கள் மனித உரிமை மீறல் இல்லையா?

ஜெனீவாவில் ஏகாதிபத்திய சக்திகளால் இலங்கைக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட நாடகத்திற்கு ‘மனித உரிமை மீறல்கள் தொடர் பான பொறுப்புக்கூறல்’ என்பதே கருப்பொருள். இந்நாடகத்தின் பிரதான இயக்குனர் இன்று முழு உலகமும் தன்சுட்டுவிரல் அசைவிற்கு தலைசாய்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற அமெரிக்கா. ஏனென்று கேட்டால் எட்டி உதை என்பது இவர்களின் தத்துவம். அதனால்தான் ஈராக்கிற்குள் ஐ.நா. பாதுகாப்புசபையின் அனு மதியின்றி பொய்யை தனக்குத் துணையாக எடுத்துக் கொண்டு அத்துமீறிப் புகுந்து அட்டகாசம் புரிந்து நாட்டின் அதிபரைக் கொன்று ஆயி ரக்கணக்கான உயிர்களை பலியெடுத்தது மட்டுமல்லாது இன்னும் அங்கு உயிரிழப்பு க்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இத்தனைக்கும் சதம் ஹுசைன் செய்த குற்றம் அமெரிக்காவின் தலையாட்டுபொம் மையாக இருக்க மறுத்ததாகும். லிபியாவில் கடாபிக்கு எதிராக உள்நாட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய எதிர்ப்பை எண்ணெய் ஊற்றி பெரிதாக பற்றவைத்து பின் கலகக்காரர் களுக்கு பகிரங்கமாக ஆயுத உதவிகளும், நிதி உதவிகளும் செய்து கலகத்தில் ஈடு படுத்தி அவர்களுக்கு துணையாக தமது வான் படைகளையும் தாக்குதலில் ஈடுபடு த்தி பல உயிர்களை காவு கொண்டு இறுதி யில் நிராயுதபாணியாக இருந்த கடாபியை யும் கொன் றார்கள். (மேலும்.....)

சித்திரை 10, 2012

இலங்கையின் பொருளாதாரம் 8.3 சதவீதத்தினால் வளர்ச்சி

இலங்கையின் நிதித்துறை வரலாற்றில் 38 மாதங்கள் தொடர்ச்சியாக பணவீக்கத்தினை தனி இலக்கத்தில் வைத்துக்கொள்ள முடிந்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் தெரிவித்தார். 2005ம் ஆண்டிற்கு முன் நாட்டில் 13 நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்த போதிலும் 2006ற்குப் பின் பதிவு செய்யப்பட்ட எந்த நிறுவனமும் வீழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்த அவர் நாட்டின் பொருளாதாரம் நம்பிக்கை மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2011ம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் முதற் பிரதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. நாட்டின் நிதிதொடர்பான வரலாற்று ஆவணமாக மத்திய வங்கியின் அறிக்கை அமைகிறது. இது ஆய்வுகளுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த பதிவாக உள்ளது. 2011 இல் இலங்கையின் பொருளாதாரம் 8.3 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து, இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னைய வரலாற்றில் மிக உயர்வானதாக விளங்கி, தொடர்ந்து இரண்டாண்டுகளாக 8 சதவீதத்திற்கும் மேற்பட்ட வலுவான வளர்ச்சி உத்வேகத்தினை முதற்தடவையாகப் பதிவு செய்திருக்கின்றது.

சித்திரை 09, 2012

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஐரோப்பிய மட்டத்திலான கலந்துரையாடலும் செயலமர்வும்

07.04.2012 அன்று சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்றது இதில்  கட்சியின் அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர் மௌன அஞ்சலியுடன் கூட்டம் ஆரம்பமாகியது. கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தலைமைகுழு தோழர்கள். தோழர் சுகு.தோழர் வரதன்.ஸ்கைப்பின் வழியாகவும் தோழர் ரட்னம்.தோழர் மோகன்.தொலைபேசியின் ஊடாகவும் சிறப்புரையாறினார்கள் செயலமர்வின் பெரும்பாலான பகுதிகளை  தோழர்கள் சுகு. வரதன் ஆகியோர் ஸ்கைப் வழியின் ஊடாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள். இச்செயலமர்வில் இலங்கையின் எமது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக தமிழ் தேசியகூட்டமைப்புடன் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் புலம் பெயர் தமிழ்மக்கள் மத்தியின் எமது வேலைத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு பிரேனனைகள் நிறைவேற்றப்பட்டன. (மேலும்.....)

சித்திரை 09, 2012

ஜெனீவா பிரேரணை பயன் தராது, பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்வே நிஜம்

நான் கூறும் கருத்துக்கள் அழகிய எங்கள் இலங்கைத் தீவின் எதிர்கால சுபிட்சத் திற்கானவையாகும். நான் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சராக மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்க ளின் அரசியல் அபிலாசைகளையும், எண்ணங் களையும், இலட்சியங்களையும் ஈடேற்றும் யதார்த்தபூர்வமான நடை முறைகளை ஏற்று, எமது மக்களின் பிரதிநிதியாகவுமே இந்த சபையில் எனது கருத்துக்களை முன் வைக்கின்றேன். நான் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை களுக்காக எந்தளவிற்கு குரல் கொடுக்கின்றேனோ, அந்தளவிற்கு இலங்கைத் தீவின் இறைமையையும், சுயாதீனத்தையும், இன ஐக்கியத்தையும் விரும்புகின்றேன். (மேலும்.....)

சித்திரை 09, 2012

மனிதனை சுட்டு நடந்த அரசியல் முடிவுற்று, சிலைகளை உடைத்து நடத்தும் அரசியல் தொடங்கிவிட்டதா?

கடந்த 5.4.12 அன்று மட்டக்களப்பு நகரின் மணிக்கூட்டு கோபுரம் அருகே அமைந்துள்ள காந்தி சிலை,ஆனைப்பந்தி பாடசாலைய அருகே அமைந்துள்ள விபுலானந்தர் சிலை,கல்விப்பணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள புலவர் பெரியதம்பிபிள்ளை சிலை.சாரணர் அபை;பை தோற்றுவித்த சேர் பேடன் பவுல் சிலை என்பவற்றை இனந்தெரியாதோர் தேசப்படுத்திய செய்தி  தொடர்பாக பல ஊகங்கள் வெளிவரத் தொடங்கி ஒரு விதமான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலையை எவர் உடைத்தாலும் அவர்கள் கண்டனத்துக்கும் கைதுக்கும் உரியவர்கள்.இவர்கள்  பிரச்சினைகளை உருவாக்குபவர்கள், எதற்காக இதனைச் செய்ய வேண்டும். பலரும் பலவிதமாக இதனைச் சொல்கிறார்கள். (மேலும்.....)

விபரீதத்தை அரசு உணர்ந்து கொள்ளுமா?

(தோழர் சுகு – சிறீதரன்)

உண்மைகளை கண்டறியும் குழுவின் பரிந்துரைகளை நடைமுறை சாத்தியமாக்குமாறு தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து இலங்கை அரசு மிக அதிகமாகவே கலவரமடைந்துள்ளது. ஒரு சாதாரண விசயத்திற்கு மிகையான எதிர்வினைகள் காட்டப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், அதிகாரப் பகிர்வு, மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசு நியமித்த குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக இலங்கை அரசே பதட்டம் அடைந்துள்ளது. இந்த விடயங்களை இலங்கை அரசு சுலபமாக எதிர்கொள்ள முடியும். மியன்மார் மேற்கொண்டது போல் ஜனநாயக சீர்திருத்தங்களை முன்னெடுத்தால் உலக அரங்கில் தனக்கு கௌரவத்தை இலங்கை அரசு தேடிக்கொள்ள முடியும் என்று பிரான்சிற்கான இலங்கையின் தூதுவர் தயான் ஜயத்திலக்க தெரிவித்தது ஏதோ கசப்பு மருந்தை உட்கொண்டது போல் இலங்கை அரச நிர்வாக யந்திரத்தை  முகம் சுழிக்க வைத்துள்ளது. (மேலும்.....)

சித்திரை 09, 2012

Beauty of Mathematics!!!!!!!
And look at this symmetry:
 
1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

சித்திரை 09, 2012

மாலி கிளர்ச்சியாளர்கள் தனிநாடு பிரகடனம்

ஆபிரிக்காவில் உள்ள மாலி நாட்டின், வடக்குப் பகுதி சுதந்திரம் அடைந்து விட்டதாக துராக் கிளர்ச்சி இயக்கத்தினர் அறிவித்தனர். இதை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். பிரான்ஸ் நாடு கிளர்ச்சி இயக்கத்தின் இந்த தனி நாடு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதேபோன்று அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இந்த தனி நாட்டை அங்கீகரிக்க முடியாது என அறிவித்துவிட்டன. இதற்கிடையில் மாலி நாட்டின் இராணுவ தளபதி ஒமர் ஹமாஹா கூறுகையில், ‘நாங்கள் கிளர்ச்சிக்கு எதிரானவர்கள். இவர்களது சுதந்திர அறிவிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்தார். எனவே, அங்கு இராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை மூளும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

சித்திரை 09, 2012

தமிழ் சமூகம் விழித்திருக்க வேண்டிய காலகட்டம். விழித்திரு !.உறங்காதே !

இனப்பிரச்சனை , போர் என்கிற கண்ணோட்டத்தில் இலங்கை பரபரப்பாய் உலா வந்த காலத்தை தின்று இன்று ஐநாவின் சந்தேக நபர் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது . நம் பலருக்கு காலம் சில விடையங்களை கட்சிதமாய் செய்து முடிக்குமேன்பதில் சந்தேகமிருக்கிறது அதற்க்கான விடைகளில் ஒன்றுதான் உலகால் இன்று இலங்கைக்கு வீசப்பட்டிருக்கும் (அவிழ்த்துவிடும்) சுருக்கு .இந்த உலகில் இராணுவ அரசியல் ரீதியாக தம்மை புத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வளர்முக நாடுகளின் அதிகார வர்க்கத்தினர் உலக அரசியலுக்கும் , மனித அவலமிட்ட சாபங்களிளிருந்தும் தப்பமுடியாது என வரலாறு எழுதப்போகும் மற்றுமொரு சான்று. (மேலும்.....)

சித்திரை 09, 2012

சிலைகள் உடைத்து

மத உணர்வுகளைத் தூண்டி சமூக உறவுகளை சீர்குலைக்க சிலர் சதி

மட்டக்களப்பில் மதங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தவே தீய சக்திகள் உருவச்சிலைகளை உடைத்துள்ளன. இது வன்மையாக கண்டிக்கப்படல் வேண்டும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். அவர் இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு நகரின் மத்தியிலும் நகரை அண்டிய பகுதிகளிலும் இந்த உருவச் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு வேண்டத்தகாத செயலாகும். இதைச் செய்தவர்களை பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மட்டக்களப்பில் மதங்களுக்கிடையில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி சமூகங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த நான்கு உருவச் சிலைகளும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நாசகார வேலைகளை சந்தர்ப்பமாக சிலர் பயன்படுத்த முனைகின்றனர்.

சித்திரை 09, 2012

சிகிச்சைக்காக மீண்டும் கியூபா செல்கிறார் சாவேஸ்

புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள வெளிசூவெலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் மீண்டும் கியூபாவுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். மூன்றாம் சுற்று ரேடியோ தெரபி சிகிச்சை அவருக்கு அளிக்க வேண்டியுள்ளது. இதனால் நேற்று இரவு அவர் கியூபாவுக்கு பயணமானார். உயிர் வாழும் போராட்டத்தில் வெற்றி பெற மீண்டும் கியூபாவுக்குச் செல்லப் போவதாக தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் சாவேஸ் குறிப்பிட்டுள்ளார். 57 வயதாகும் சாவேஸ், இந்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். கியூபாவில் ஐந்து வார காலம் தங்கி அவர் சிகிச்சை மேற்கொள்வார் என்று தெரிகிறது. இம்முறை சிகிச்சைக்கு நடுவே அவர் தனது நாட்டுக்கு வந்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் இரண்டு சுற்று ரேடியோ தெரபி சிகிச்சை முடிந்துள்ளது.

சித்திரை 09, 2012

வடமாகாண கல்வி வலயங்களில் மும்மொழி பயிற்சி

வடமாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களில் மும்மொழி பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் மும்மொழி கொள்கையை அமுல்படுத்தும் நோக்குடனே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இதற்கென கல்வி வலயம் ஒன்றுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் 60 இலட்சம் ரூபா நிதியை செலவிட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கல்வி அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் வடமாகாண கல்வி அமைச்சின் ஊடாக இந்தத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். வடக்கிலுள்ள 12 கல்வி பணிப்பாளர்களின் அலுவலகங்களுடன் இணைந்ததாக இந்த மும்மொழி பயிற்சி நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன. சகல வசதிகளையும் கொண்டாதாக அமையவுள்ள இந்த பயிற்சி நிலையங்களின் மூலம் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மும்மொழி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதன் முதலாவது பயிற்சி நிலையத்தை இந்த மாத இறுதிக்குள் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.

சித்திரை 09, 2012

ராஜீவ் காந்தி, பெனாசிர் பூட்டோவின் புதல்வர்கள் நேற்று சந்திப்பு

மனித வெடிகுண்டுக்குப் பலியான ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தியை, அதேபோல மனித வெடிகுண்டுக்குப் பலியான பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தனது மகன் பிலாவல் பூட்டோ மற்றும் குடும்பத்தினருடன் டில்லி வந்தார். நேற்று பிற்பகல் அவர் ஆஜ்மீர் தர்கா சென்றார். சர்தாரி பாகிஸ்தான் அதிபர் என்பதால் அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் விருந்தளித்துக் கெளரவித்தார். இதில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தியும், பிலாவல் பூட்டோவும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இது அனைவரையும் கவர்ந்தது. 24 வயதாகும் பிலாவல் பூட்டோதான் சர்தாரி பெனாசிரின் அரசியல் வாரிசு. அவர்தான் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். சந்தாரி தனக்குப் பின்னர் பிலாவலை முழு நேர அரசியலாக்கக் காத்திருக்கிறார். அதேபோல இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று காங்கிரஸாரால் வர்ணிக்கப்படுபவர் ராகுல் காந்தி. விரைவில் அவரை பிரதமர் பதவியில் அமர்த்த சோனியா திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் இந்த இரு இளவரசர்களும் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானில் நடந்த மனித வெடிகுண்டு மற்றும் குண்டு வீச்சுத் தாக்குதலில் பலியானவர். அதேபோல ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியும், மனித வெடிகுண்டுக்குப் பலியானவர்.

சித்திரை 09, 2012

சிலை உடைப்பு

பலகோணங்களில் பொலிஸ் தீவிர விசாரணை

மட்டக்களப்பில் இடம்பெற்ற நான்கு சிலைகள் உடைப்பு சம்பவங்கள் தொடர் பாக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு ள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய பல்வேறு கோணங்களில் துரிதமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். உருவச் சிலைகளை உடைத்து சேதப்படுத்திய வர்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் ஏற்கனவே விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட் டிருந்தது. எனினும், இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேலும் துரிதப்படுத்தும் பொருட்டு மற்றுமொரு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட குழுவொன்றும், பொலிஸ் புலனாய்வு குழுவொன்றும் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய மூன்று விசேட பொலிஸ் குழுக்களும் பல்வேறு கோணங்களில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பல தரப்பட்டவர்களின் வாக்கு மூலங்களையும் பதிவுசெய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சித்திரை 09, 2012

அதிகரிக்கும் விபத்துகள்

வெகுவாக கட்டுப்படுத்த கடும் ஒழுங்கு விதிகள்

நாட்டில் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் பொருட்டு புதிய ஒழுங்கு விதிமுறைகளை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது. பாவனைக்குப் பொருத்தமில்லாத வாகனங்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்தல், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றச் செயல்களுக்கு புள்ளி வழங்குதல், வாகனங்களின் தரக் கட்டுப்பாட்டு பரீட்சைகளை மேம்படுத்தல், சாரதி பயிற்சி பாடசாலைகளின் பயிற்சிகளை மேம்படுத்தல் மற்றும் வாகனச் சாரதிகள், பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு திட்டங்களை வழங்குதல் போன்ற புதிய விதிமுறைகளையே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை 2011ம் ஆண்டில் மாத்திரம் 39 ஆயிரத்து 700 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தவிர 2010ம் ஆண்டில் மாத்திரம் இடம்பெற்ற விபத்துக்களில் 2721 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7931 பேர் படுகாயமடைந்தும், 18916 பேர் சிறு காயங்கள் அடைந்தும் உள்ளதுடன் 2579 மோசமான விபத்துக்கள் பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார். வீதி ஒழுங்கு விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதன் மூலம் இதனை தவிர்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சித்திரை 08, 2012

இனியுமோர் ஆயுதப் போராட்டமா? தமிழினம் நடுக்கடலுக்குத்தான் செல்ல....

தமிழகத்திலிருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற நூற்றி ஐம்பது விடுதலைப் புலிகள் இலங்கையின் கிழக்குப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வுத் தகவல் கள் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் சில வெளியிட்ட செய்தியால் கடந்த வாரம் அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு நிலை காணப்பட் டது. இது உண்மையா என்பதைக் கண்டறிய முன்னதாகவே அதனை இந்தியா மறு த்துவிட்டது. தமிழக பொலிஸ் கமிஷனரும் தனது மறுப்பைத் தெரிவித்துவிட்டார். இந்தச் செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பதை விடவும் இன்றைய சமா தானமானதொரு சூழலில் மீண்டுமொரு வன்முறைக்கு வித்திடும் ஒரு தூபம்போடும் செயலாகவே இதனை நோக்க வேண்டும். சமாதானம் ஏற்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதைப் பொறுக்க முடியாத சக்திகள் மூலம் இக்கதை வேண்டுமென்றே கட்டி விடப்பட்டிருக்க வேண்டும். (மேலும்....)

சித்திரை 08, 2012

கருத்தரங்கு

“ கிராமிய உழைப்பாளர்களும் தேசிய இனப் பிரச்சினையும்”

இடம் : நாவலர் மண்டபம், நல்லூர், யாழ்ப்பாணம்

காலம் : 15.04.2012 ஞாயிறு காலை 10 மணி

ஆர்வலர்கள் அனைவரும் வருக !

ஏற்பாட்டாளர்கள்: கிராமிய உழைப்பாளர் அபிவிருத்தி மையம்

சித்திரை 08, 2012

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான

இந்திய தீர்மானத்திற்கு 13 வது திருத்தம் காரணம் - இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது!

13 வது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அசமந்தமாக செயற்பட்டமையே இந்தியா, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தமைக்கு பிரதான காரணம் என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்து நாளிதழுக்கு கருத்து வெளியிட்டுள்ள எழுத்தாளர் ஒருவரான நிரூபமா சுப்ரமணியம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டில் இலங்கை, ஜெனீவாவில் வெற்றிகொண்ட யோசனையிலும் இது குறித்த சரத்தொன்று உள்ளடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு யுத்தத்தின் போது, இலங்கை மனிதவுரிமைகளை மீறியதாக அங்கு வெளியிடப்பட்ட பிரேரணை தோல்வி கண்டது. அதற்கு பதிலாக மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு பாராட்டு தெரிவித்தே பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது. யுத்தம் நிறைவடைந்த போதும், இலங்கையில் தேசிய பிரச்சினைக்கு யுத்த ரீதியான தீர்வுக்கு இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொள்ளவில்லை. எனினும், 13 வது அரசியலமைப்பு ஊடாக அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என அந்த பிரேரணையில் ஒரு சரத்து உள்ளடக்கப்பட்டிருந்தமையையும் இந்திய எழுத்தாளர் நிரூபமா சுப்ரமணியம் நினைவுகூர்ந்துள்ளார்.

சித்திரை 08, 2012

அரசுடன் அனுசரித்துச் செல்லும் மனநிலைக்கு வந்துள்ள TNA

13ஆவது திருத்தச் சட்டத்தில் குறியாக இருப்பினும் இறுக்கமான போக்கில் தாராள மாற்றம்

விட்டுக்கொடுப்பு, ஒத்துப்போதல், நல்லபிப்பிராயத்தை முதற்தடவையாக வெளிப்படுத்தியது. அரசின் அபிவிருத்திப் பணிகளையும் பாராட்டுவதாக சம்பந்தனைச் சந்தித்த நேஸ்பி பிரபு மைக்கல் தெரிவிப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கில் மாற்றம் தென்படுவதாகவும் அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகள் தொடர்பில் திறந்த மனப்பாங்கு, ஒத்துப்போகும் தன்மை, விட்டுக்கொடுப்பு மற்றும் நல்லபிப்பிராயம் என்பனவற்றை வெளிப்படுத்துவதாகவும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இலங்கை நட்புறவுக் கழகத்தின் ஸ்தாபகரான நேஸ்பி பிரபு மைக்கல் மொரிஸ் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களைச் சந்தித்தபோது அவரிதனை உறுதிபடத் தன்னிடம் தெரிவித்ததாகவும் நேஸ்பி தெரிவித்தார். (மேலும்....)

சித்திரை 08, 2012

பத்மநாபா EPRLF கட்சியின் ஐரோப்பிய மட்டத்திலான கலந்துரையாடலும் செயலமர்வும்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணனி -பத்மநாபா அணியின்  முக்கிய உறுப்பினர்கள்  செயற்பாடடர்ளர்கள் சுவிஸ் நாட்டில் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களும் ஒன்று கூட உள்ளனர். இந்த ஒன்று கூடலின் போது இலங்கையில் தற்போதைய அரசியல் நிலைதொடர்பாக எவ்வாறன நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வது ஏனைய கட்சிகளுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதை ஊக்குவிற்பது சர்வதேச கிளைகள் ஊடாக எவ்வாறான நடவடிக்கைகளை மேற் கொள்வது போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். இக் கலந்துரையாடலில் பிரித்தானியா பிரான்ஸ் நெதர்லாந்து ஜேர்மனி ஆகியநாடுகளில் உள்ள செயற்பாடடர்ளர்கள் கலந்து கொள்ளும் அதேவேளை   கட்சியின் செயலாளர் தோழர் சிறிதரன் கட்சியின். தலைவர் தோழர் துரைரெட்னம். தோழர் வரதராஐப்பெருமாள். யாழ் பிராந்திய செயலர் தோழர் மோகன் ஆகியோரும் ஸ்கைப்பூடாக சிறப்புரை  ஆற்றவுள்ளார்கள்  இன்றைய சூழ்நிலையில் கட்சிமேற்கொள்ளவேண்டிய அணுகுமுறைகள்பற்றியும். ஐரோப்பாவில்: செயல்திட்டங்களை விஸ்தரிப்பது தொடர்பாகவும் தீர்மானங்களை எடுக்கவுள்ளனர்

சித்திரை 08, 2012

ஜே.வி,பியிலிருந்து வெளியேறிய சோசலிச முன்னணிக் கட்ச்சியின் பிரதான உறுப்பினர் பிரேம்குமார் கைது

ஜே.வி.பி யிலிருந்து வெளியேறி மக்கள் போராட்டக் குழு என்ற பெயரிலும் பின்னர் முன்னணி சோடலிசக் கட்சி என்ற பெயரிலும் தம்மை உருவாக்கிக்கொண்ட குழுவின் பிரதான உறுப்பினர் பிரேம் குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டுள்ளார். தவிர இக்கட்சியின் இன்னுமொரு பிரதான உறுப்பினரும் மகளிர் பிரிவின் தலைவருமான திமுது ஆட்டிகலவும் கைதாகியுள்ளார். பிரேம்குமார் குணரத்னம் ஜே.வி.பி யின் ஸ்தாபக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரை 08, 2012

Beauty of Mathematics!!!!!!!
 

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

 
Brilliant, isn't it?

சித்திரை 08, 2012

உயிரிருந்த போது பெற்றுத்தர முடியாத தமிழீழம்

பிரபாகரனின் வெற்றுடல் பெற்றுத் தருமென நம்பிக் கொண்டிருக்கும் புலம் பெயர் தமிழர்கள்!

புலம்பெயர் தமிழர்களுக்கு நண்பர்கள் யார்? எதிரிகள் யாரென்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தோல் வியை ஒருவரின் தலையில் சுமத்துவதற்கு ஆள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். உயிருடன் இருந்த பிரபாகரனால் தமிழீழத்தை பெற்றுத்தர முடியவில்லை. அவரின் வெற்றுடல் தமிbழத்தை பெற்றுத்தர இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மருதமுனை தபால் நிலையத்திற்கான புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவின் பின்னர், மருதமுனை மக்கள் மண்டபத்தில் சட்டத்தரணி எம். ரக்கீப் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார். (மேலும்....)

சித்திரை 08, 2012

தமிழக அரசியல் சக்திகளின் அக்கறைகளுக்கும் புதுடில்லியின் தீர்மானங்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை

(வீரகத்தி தனபாலசிங்கம், பிரதம ஆசிரியர், தினக்குரல் )

இன நெருக்கடியில் இருக்கக் கூடிய சர்வதேச பரிமாணத்தை அரசாங்கம் முற்றுமுழுதாக அலட்சியம் செய்வதும் அரசாங்கம் மீதான சர்வ தேச நெருக்குதல்களை மாத்திரம் முற்றுமுழுதாக அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசியல் சக்திகள் அவற்றின் தந்திரோபாயங்க ளையும் அணுகுமுறைக ளையும் வகுத்துக்கொள்ள முயற்சிப்பதும் சம அள வுக்கு அவரவருக்குக் கெடுதியானது. சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுவந்த எந்தவோர் ஆட்சியாள ருமே இனங்களுக்கிடை யிலான முரண்பாடுகளைத் தணிப்பதற்கோ, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற் கான குறைந்தபட்ச அக் கறையைத்தானும் காட்டு வதற்கோ கடந்த காலங் களில் முயற்சித்ததில்லை. (மேலும்....)

சித்திரை 08, 2012

TMVP கட்சி கடும் கண்டனம்

சிலைகள் உடைப்பினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் கண்டனங் களையும் கவலையையும் தெரிவிக்கின்றோம். இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பொலிஸ் மாஅதிபருடன் உடனடியாக தொடர்பு கொண்டு விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் மேலோங்கி மக்கள் மகிழ்ச்சியாக தத்தமது வாழ்க்கையினை அச்ச ரீதியின்றி மேற்கொண்டு வரும் இவ்வேளையில் இவ்வாறாக திட்டமிட்ட சில விசமிகளின் செயற்பாடு ஒட்டு மொத்த மக்களினையும் மீண்டும் சூழப்ப நினைக்கும் முயற்சியாகவே நாம் பார்க்கிறோம். இச்சிலைகளை உடைத்து சேதமாக்கிய விஷமிகள் எந்த நோக்கத்திற்காக திட்டமிட்டு செய்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறாத வண்ணம் பொதுமக்களின் பொறுமை காத்து குற்றவாளிகளை கண்டறிவதில் பொலிஸாரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரி நிற்கின்றது என்றார்.

சித்திரை 08, 2012

இலங்கை அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

இலங்கை அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய 10 அமைச்சர்களின் பதவிகளில் மட்டுமே இம்மாற்றம் ஏற்படும் எனவும் அனைத்து அமைச்சர்களின் பதவிகளிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் தொடர்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள,அதேவேளை அமைச்சின் செயலாளர் பதவிகளும் மாறும் நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சித்திரை 08, 2012 ___

அ.தி.மு.க-பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக அப்துல்கலாம்?

ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதையடுத்து புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்ய எதிர்வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதிய ஜனாதிபதியை ஆளும் காங்கிரஸ் கட்சியோ, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வோ தன்னிச்சையாக தெரிவு செய்ய முடியாது. மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை இந்தப் பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் வரலாம் என்று கூறப்படும் நிலையில் தனது ஆதரவு நபர் ஜனாதிபதியாக வேண்டியது அவசியம் என்று பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளும் பலரது பெயர்களைப் பரிசீலனை செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க ஆதரவு அளித்துள்ளது. ஹமீத் அன்சாரியை காங்கிரஸ் நிறுத்தினால், அவரை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை களத்தில் இறக்க பா.ஜ.க. தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். பா.ஜ.க.வுக்கு பல மாநில கட்சிகளின் ஆதரவு உள்ளது. அவர்கள் ஆதரவுடன் அப்துல்கலாமை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்புகிறார்கள். அதோடு சிறுபான்மை இன பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற முடியும் என்றும் கருதுகிறார்கள்.

சித்திரை 08, 2012

யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை உட்கட்டமைப்பு வேலைகளில் இந்திய நிறுவனம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் இந்திய நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் செயலர் சிவஞான ஜோதி தெரிவித்துள்ளார். இத் கைத் தொழிற்பேட்டையின் நிர்வாகக் கட்டிட நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மின்சாரம்இ நீர் மற்றும் உள்ளகப் பாதைகள் போன்ற உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் இந்திய நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிய வருகின்றது. அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை 200 மில்லியன் ரூபா இந்திய நிதி உதவியுடன் நிறுவப்படவுள்ளதுடன் இத் தொகையில் இந்திய அரசாங்கம் 174 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கும் அதேநேரம் 26 மில்லியன் ரூபாவை இலங்கை அரசு செலவு செய்யும். இது தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று அண்மையில் இடம் பெற்றுள்ளது. மேற்படி அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் முதலீடு செய்வோர் சம்பந்தமாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இக் கைத்தொழில் பேட்டையில் முதலீடு செய்வதற்கு 52 நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் அமைச்சின் செயலர் சிவஞான ஜோதி குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை 07, 2012

தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோனவர்கள் அல்லர்

தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் துணைபோனவர்கள் அல்லர், முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர்கள் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மனதுக்குள் அழுதார்கள் என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிக பாதிப்புக்குள்ளான மக்கள் வாழும் பிரதேசம் முல்லைத் தீவாகும், சுனாமி அனர்த்தம் மற்றும் யுத்த சூழல் என்பன இதற்கான காரணங்களாகும். இன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுகின்றது. அது மக்களின் வாழ்வுரிமையை மேலும் வலுப்படுத்தும் ஒன்றாகும்.தமிழ் பேசும் மக்கள நாம் என்ற பார்வை இருக்க வேண்டும் . முல்லைத்தீவு மாவட்டத்தில் 22 சதவீதமான பிரதேசங்கள் மின்சாரத்தைக் கண்டுள்ளன. ஏனைய பிரதேசங்கள் அதனைப் பெற்றுக் கொள்ளவுள்ளன. இவ்வருட நிறைவில் பெரும் எண்ணிக்கையிலான் கிராமங்கள் மின்சாரத்தைப் பெற்றுவிடும். அத்தோடு மக்கள் மத்தியில் காணப்படும் இருண்ட யுகம் மாறி வெளிச்சத்தின் பாதையில் அவர்களது செயற்பாடுகள் அமையப் போகின்றன. முல்லைத்தீவு மாவட்டம் ஒரு முன்னுதாரணம் மிக்க மாவட்டமாகும். சகோதர முஸ்லிம் மக்கள் மீள்குடியேற வந்த போது, அவர்களை வரவேற்று தேவைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வந்தனர்.

சித்திரை 07, 2012

இலங்கை செல்லும் குழுவில் 7 தமிழக எம்.பி.க்கள்!

வரும் 16-ந்தேதி இலங்கை செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் 7 தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர். இலங்கை தமிழர்கள் நிலை பற்றி நேரில் கண்டறிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வரும் 16-ந்தேதி இலங்கைக்கு செல்கிறது. இந்த குழுவில் 14 பேர் இடம்பெறுகின்றனர். குழுவிற்கு நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார். இந்த குழுவில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர். அதன்படி, அதிமுக சார்பில் ரபி பெர்னாண்ட், திமுக சார்பில் டிகேஎஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ரங்கராஜன், காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், சித்தன், மாணிக்கதாகூர் ஆகியோர் செல்கின்றனர். இந்த குழுவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா ஆகியோர் தங்களையும் குழுவில் சேர்க்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இதுக்குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிகிறது. இலங்கை செல்லும் இந்த நாடாளுமன்ற குழு வரும் 25-ந்தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழர்களிடம் நேரில் சந்தித்து, நிலைமையை ஆராய்கின்றனர். இந்தியா சார்பில் அளிக்கப்பட்டுள்ள உதவிகளை ஆய்வு செய்யும் அவர்கள், அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் கேட்டறிய உள்ளனர்.

சித்திரை 07, 2012

MV Sun Sea human smuggling suspect Thayakaran Markandu arrested in France

(Brent Lewin for National Post)

Markandu Thayakaran, a Sri Lankan citizen, was charged last month over his alleged role in the Sun Sea operation. The suspected organizer of the MV Sun Sea, the human smuggling ship that brought almost 500 Sri Lankan asylum seekers to Canada in 2010, has been arrested in France, the RCMP confirmed Thursday. Thayakaran Markandu was being held in custody by French authorities, police said, adding extradition proceedings were underway to bring him to Canada, where he could face life imprisonment and a $1-million fine. The RCMP and Interpol had been looking for Mr. Markandu, a Sri Lankan citizen, since last month when he was charged over his alleged role in the Sun Sea operation, which was the work of smugglers based in Bangkok. (more...)

சித்திரை 07, 2012

இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள்

நான் தற்கொலை செய்து கொள்கிறேன்

நான் இறுதிக்காலத்தில் வாழ்வதற்காகச் சேமித்துவைத்த ஓய்வூதியப்பணத்தையும் அவர்கள் திருடிக்கொண்டார்கள். எனக்கு வாழ வேறு வழி தெரியவில்லை. எனது வயது காரணமாக நான் இதைவிட வேறு தீவிர வழிகளில் போராடவில்லை. ஆனால் ஒரு நாள் இளைஞர்கள் ஆயுதமேந்தி தேசத்துரோகிகளை இதே சிந்தாக்மா சதுக்கத்தில் தலை கீழகத் தொங்கவிடுவார்கள்.” எனக் குறிப்பு எழுதிவைத்துவிட்டு கிரேக்கத்தில் ஓய்வூதியம் பெறும் வயதை எட்டிய ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். பார்மசிஸ்ட்டாக வேலை செய்து ஓய்வெடுத்த டெமிட்ரி கிறிஸ்ரோலஸ் என்பவரின் தற்கொலை கிரக்கத்தில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் வங்கிகளின் நேரடிக்கட்டுப்பாட்டில் நியமிக்கப்பட்ட அரசு மக்களை அடிமைகளாக்கியுள்ளது. ஐரோப்பா முழுவதும் பரவிவரும் பொருளாதார நெருக்கடி முதலில் கிரேக்கத்திலேயே ஆரம்பித்தது. பெருமளவில் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்ட வங்கிகளும் பல்தேசிய நிறுவனங்களும் மிகுதிப் பணத்தையும் ஏழைகளிடமிருந்து அபகரித்துக் கொள்கிறது.தற்கொலையைத் தொடர்ந்த ஆர்பாட்டத்தை பொலிசார் கண்ணீர்ப் புகைக தடியடி நடத்தி ஒடுக்கினர். இரு ஊடகவியளார்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். 04.04.2012 அன்று இத் தற்கொலைச் சம்பவம் நடைபெற்றது. தற்கொலை செய்துகொண்ட மரத்திற்கு அருகாமையில் இது கொலை அல்ல கொலை என்ற பதாகை காணப்பட்டது.

சித்திரை 07, 2012

தமிழீழத் தேசியத் தலைவரின் உயிரிற்கு பங்கம் நேரவில்லை காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது ஈழதேசம்!!!

முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவம் சுற்றிவளைத்தது உண்மை சுடப்பட்டதும் உண்மை ஆனால் புலி இயக்கத் தலைவனின் உயிரிற்கு பங்கம் ஏதும் இல்லை. இது தான் காலச்சக்கரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகும். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்புத் தொடர்பாக எந்த செய்தி வந்தாலும் அது உலகத் தமிழர்களது நாடித்துடிப்பை எகிறவைத்துவிடும். அதனை வைத்து சில தமிழ் இணையங்கள் கீழ்தரமான வேலைகளில் இறங்கி தமது தளத்திற்கு அதிகளவான பார்வையாளர்களை வரவைப்பதற்காக முயற்சித்து வருகின்றன. ஈழதேசம் இணையத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவரது இருப்புத் தொடர்பாகவும் முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் நடந்தேறியவை குறித்தும் தெளிவான தகவல்கள் அன்று தொட்டே கிடைத்துவிட்டன. ஆனால் தேசியத் தலைவர் மறைவாக இருக்கும் காரணத்திற்கு பங்கம் உண்டாக்க விரும்பாது இதுவரை மௌனம் காத்துவருகின்றோம். (மேலும்....)

http://www.youtube.com/watch?v=hu5ifAM4ifE&feature=player_embedded#

சித்திரை 07, 2012

நூலகம் கனடாவின் அறிமுக நிகழ்விற்கான அழைப்பிதழ்

இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தலை பணி இலக்காகக் கொண்ட நூலக நிறுவனத்தின் கனடியப் பிரிவின் அறிமுக நிகழ்வு.

தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அதற்கான தேவைகளும் | சேரன் உருத்திரமூர்த்தி
எண்ணிமப்படுத்தலும் பேணிப்பாதுகாத்தலும் | நாராயண மூர்த்தி
நூலக நிறுவனம் - செயல்முறை அறிமுகம் | கிருத்திகன் 
தமிழ் விக்கியூடகங்கள் - கூட்டாசிரியப் பொதுமங்கள் | செ.இரா.செல்வக்குமார்

 

கலந்துரையாடல்
நாள்: ஏப்பிரல் 7, 2012; சனிக்கிழமை
நேரம்: 5:00 பிப - 8:30 பிப
இடம்: 
Sri Sathya Sai Baba Centre of Scarborough, Canada (Finch & Middlefield)
5321 Finch Avenue East
Scarborough, ON
M1S 5W2

சித்திரை 07, 2012

மட்டக்களப்பு நகரில்      

சிலைகளை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடிக்க விசேட பொலிஸ் குழு

மட்டக்களப்பு நகரில் மகாத்மா காந்தி உருவச்சிலை உள்ளிட்ட நான்கு பெரியார்களது உருவச்சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவர்களைக் கண்டறிவதற்கென உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார். சிலைகளை சேதப்படுத்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கையெ டுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். நான்கு பெரியார்களின் சிலைகளும் இரவோடு இரவாக இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்க ஸ்தாபகர் சேர் பேடன் பவல் ஆகியோரின் உருவச்சிலைகளின் தலைகள் முற்றாக உடைக்கப்பட்டுள்ள நிலையிலும், சுவாமி விபுலானந்தர் மற்றும் புலவர்மணி பெரியதம்பி பிள்ளை ஆகியோரின் உருவச் சிலைகளில் தலைகள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம், இச்சம்பவமானது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு. எனவே இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

சித்திரை 07, 2012

இந்தியாவின் ‘கிருஷ்ணா - கோதாவரி’ ஆற்றுப் படுக்கையில் எரிபொருள்

இலங்கை மன்னார் கடற்பரப்பில் வெற்றிகரமாக எண்ணெய் அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்ட கெய்ன் லங்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான கெய்ன் இந்தியா நிறுவனம் KG-ONN-2003/1 எனப்படும் கிருஷ்ணா கோதாவரி படுக்கையில் எரிபொருள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கெய்ன் இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனமான கெய்ன் எனர்ஜி இந்தியா நிறுவனம் (CEIL) இந்தியாவின் கிழக்குக் கரையில் கிருஷ்ணா கோதாவரி படுகையின் KG-ONN- 2003/1 பகுதியிலுள்ள Nagayalanka-SE-1 கிணற்றிலிருந்து எரிபொருளை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது. இதன்படி இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட கெய்ன் எனர்ஜி இந்திய நிறுவனம் 24 வீதத்தையும் கெய்ன் இந்திய நிறுவனம் 25 வீதத்தையும் இவர்களுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமான ஓ. என். ஜி. சி. 51 வீதத்தையும் தங்களிடையே பகிர்ந்து கொண்டன. 57 மீற்றர் ஹைதரோகார்பன் சுண்ணக்கல் மற்றும் மண் ஆகியவற்றுக்கு இடையே 4369.2- 4426MMD ஆழத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சித்திரை 07, 2012

ராஜீவ்காந்தி கொலை வழக்கு

ஆயுள், தூக்கு தண்டனை கைதிகள் புழல் சிறைக்கு இடமாற்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய தூக்குத்தண்டனை கைதிகளூம், பயாஸ், ஜெயக்குமார் ஆயுள் தண்டனை கைதிகளும் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆயுள் கைதியான நளினி பெண்கள் சிறையில் உள்ளார். இதில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் இருவரும் திடீரென சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் மாற்றப்பட்டதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து சிறை அதிகாரி ஒருவர், சென்னை சிறைதுறை தலைமையகத்தில் இருந்து ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரை புழலுக்கு மாற்ற உத்தரவு வந்தது. அதன்படி இருவரும் மாற்றபட்டுள்ளனர். வேறு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆயுள் - தூக்கு தண்டனை கைதிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது இரு தரப்பினருக்கும் கருத்து மோதல் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்து வந்தது. இது பெரும் கை கலப்பில் முடிந்துவிடும் என்பதால் இரு தரப்பினரையும் பிரித்து வைத்து சிறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் வருகிறது.

சித்திரை 07, 2012

தலைசுற்றி மயக்கமுறச் செய்வது எது?

வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலைசுற்றி மயக்கம் ஏற்படும். சமச்சீரைக் கட்டுப்படுத்தும் காதின் உட்பகுதியிலுள்ள உணர்ச்சி நீர்மம் (Sensitive liquid) உடல் சுற்றுவது நின்றபிறகும் தொடர்ந்து சுற்றிக்கொண்டுள்ளது. ஆகையால் சுற்றுப்புறப் பொருள்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதாக அல்லது ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன. ஆயினும் சில விநாடிகளுக்குள் அந்த நீர்ம நெகிழ்பொருள் சமன் அடைந்து சரியாகிவிடுகிறது. இந்த உணர்ச்சி கிறுகிறுப்பு (Vertigo) எனவும் அழைக்கப்படும். உயரத்திலிருந்து கொண்டு கீழே பார்ப்பவனுக்கும், கப்பலில் போகின்ற போது பார்ப்பவனுக்கும் இக்கிறுகிறுப்பு ஏற்படக்கூடும். உட்காதின் நெகிழ் நீர்மத்தின் காரணத்தால் ஏற்பட்ட நரம்பின் விளைவே இது அல்லாமல் பெரும்பாலும் உடல்சார்ந்த தன்மை இதில் இல்லை எனக் கூறலாம். உடலின் எட்டாவது கபால நரம்பின் ஒரு கிளையான வெஸ்டிபுல நரம்பின் பாதிப்பிலும் தலைசுற்றல் ஏற்படும்.

சித்திரை 07, 2012

ஜெனீவா பிரேரணைக்கு முகம்கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் நிலையான திட்டமில்லை

இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணைக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் நிலையான திட்டமில்லை எனத் தெரிவித்துள்ள அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய, இது தொடர்பில் தாம் ஐந்து அம்சத் திட்டங்கள் அடங்கிய யோசனைகளைத் தயாரித்துள்ளதாகவும், இம்முறை இறுதியில் அதனை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. ஜெனீவாவில் அமெரிக்கா எமது நாட்டுக்கு எதிராகப் பிரேரணையை நிறைவேற்றியதோடு அதனை அடிப்படையாக வைத்து இன்று எம் மீது பல அழுத்தங்களை பல்வேறு வழிகளில் பிரயோகித்து வருகின்றது. எமது நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வுகளைத் திணிக்க முயல்கின்றது. ஆனால் இதற்கு முகம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் நிலையான கொள்கையுடனான திட்டம் எதுவும் இல்லை. எனவே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான நாம் ஜனநாயகம்,நாட்டின் இறைமை பாதுகாக்கும் நல்லாட்சி, ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையில் யோசனைகளைத் தயாரித்துள்ளோம். இதன் மூலம் அமெரிக்காவின் சவாலை வெற்றிக்கொள்ள முடியும். இந்த யோசனைகள் அடங்கிய அறிக்கை இம் மாத இறுதியில் மகாநாயக்க தேரர்களிடம் கையளித்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவிடமும் கையளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ___

சித்திரை 07, 2012

LSSP wants Govt. to fix time frame for implementing LLRC Report

It’s our duty, we should not be seen to be under US or UNHRC pressureTissa Vitharana

The LSSP, a constituent member of the UPFA government says that a time frame should be fixed for implementing the LLRC recommendations. Leader of the LSSP and Senior Minister of Scientific Affairs, Tissa Vitharana told The Island in an interview that the Government should not appear to be under pressure from the US or the UNHRC, in complying with its very own recommendations. Asked if the government was serious about implementing the LLRC Report, he said: "Yes. We must implement it. It’s our duty. But it should not appear that we are doing it under pressure from the US or the UNHRC. The government should first work out a time schedule, list the things it would do and then go ahead and prove its intentions."Referring to the US Resolution on "Accountability and Reconciliation in Sri Lanka," which was adopted by the UNHRC recently, the Minister said "They are looking at it from the point of view of seeing that justice is done to the Tamil people and working out a solution which would lead to national unity."Differences of opinion exist on how national unity could be achieved. The LSSP for its part stands for devolution of power to the provinces, Vitharana said adding that the degree of devolution may have to be gradual, while the process of confidence building continues. Questioned if police powers should also be devolved, he said: "We may not be able to give the maximum at the beginning. There may be a limited level of police powers that needs to be granted and we can start with that. Then as confidence builds up over a period of time, you can extend those powers. The important thing is to have a process of dialogue and work towards a solution that is acceptable to the majority of people in all communities."

சித்திரை 06, 2012

எண்ணிலடங்கா மக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர்(பகுதி 3)

'டெக்கான் க்ரானிக்கன்' பத்திரிகைக்கு சோ அளித்த பேட்டி

(நேற்றைய தொடர்)

விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தார்கள். காட்டிக்கொடுத்தவர்கள் என்று பட்டம் சூட்டி அவர்களால் கொல்லப்பட்டவர்கள் கணக்கற்றவர்கள். தமிழ்த் தலைமையையே அழித்துத் தீர்த்தார்கள். குழந்தைகளின் எதிர்காலத்தையே நாசம் செய்யும் வகையில் அவர்களைத் தங்கள் முன் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக, குடும்பங்களிலிருந்து குழந்தைகளைப் பறித்துச்சென்றார்கள். மிரட்டிப் பணம் பறித்தார்கள். மக்கள் வாழும் பகுதிகளில் தீவிரவாதிகள் போய் ஒளிந்து கொண்டால், அங்கே அவர்களை நீ துரத்திச் செல்லக்கூடாது. என்றெல்லாம் சொன்னால் அது யாருக்கு உதவி செய்யும்? நியாயத்திற்கு உதவி செய்யாது. அநீதிக்குத்தான் உதவி செய்யும். மோதல்கள் நடந்து கொண்டிருந்த பகுதிகளிலிருந்து தப்பி வெளியேற முயற்சித்த சாதாரண மக்களை விடுதலைப் புலிகள் தடுத்தனர். அந்தத் தடையை மீறி வெளியேற முனைந்தவர் கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கேடயங்கள் தப்பி ஓடலாமா, அதனால்தான் இந்தக் கொடூரம். இப்படி விடுதலைப் புலி களால் கொல்லப்பட்ட, நிராயுதபாணி களான சிவிலியன்களைப் பற்றி, இப் போது யாருக்கும் ஒரு கவலை இல்லை. (மேலும்....)

சித்திரை 06, 2012

நாடு திரும்பும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான பிரசாரம்

உண்மை நிலையை தெளிவுபடுத்துவேன் என்கிறார் பிரித்தானிய சர்வகட்சி குழுவின் தலைவர் நெஸ்பி பிரபு

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பும் புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் பிரிட்டனில் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானியாவில் கேள்வியெழுப்பவிருப்பதாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் சர்வகட்சிப் பாராளுமன்ற இலங்கை நட்புறவுக் குழுவின் தலைவர் நெஸ்பி பிரவு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண் டிருக்கும் அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிலைமையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பும் புலம்பெயர் தமிழர்கள் தொல்லைகளுக்கு உள்ளாவதாக பல்வேறு பிரித்தானிய ஊடகங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இலங்கையின் களநிலைமைக்கு முற்றாக மாறுபட்டவை என்று அவர் தெரிவித்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகவியலாளர் கள் சிலரைச் சந்தித்தபோதே நெஸ்பி பிரபு மேற்கண்டவாறு கூறினார். (மேலும்....)

சித்திரை 06, 2012

புலிகளின் நக்கீரன் கூறுகின்றார்

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு இராசபக்சேக்கு விலை போய்விட்டது, தமிழ்மக்களை காட்டிக் கொடுத்துவிட்டது, தாயகக் கோட்பாட்டை சிதைத்துவிட்டது,  சுயநிர்ணய உரிமையை தாரைவார்த்துவிட்டது என்று ஒரு கூட்டம் ஓயாமல் ஒழியாமல் பிதற்றித் திரிகிறது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்டுக்காசை இழந்த கஜேந்திரகுமார், கஜேந்திரன் இருவரும் அடக்கம். வட மாகாண அவைத் தேர்தலில் ததேகூ போட்டியிடக் கூடாது, சுயேட்சகளை நிறுத்த வேண்டும் என்று இலவச யோசனை இவர்களால் சொல்லப்படுகின்றன. இந்த யோசனை டக்லஸ் தேவானந்தாவை முதல்வராக முடிசூட்ட எத்தனிக்கும் சதியா என நினைக்கத் தோன்றுகிறது. இவர்களுக்கு அரசியல் என்றால் மாதம் ஒருமுறை  அறிக்கை விடுவது, பத்தி எழுதுவது என்பவை மட்டுமே!  கடந்த 2 ஆண்டுகளில் கஜேந்திரர்கள் எத்தனை தடவை வன்னி, திருகோணமலை, மன்னார், முல்லைத் தீவு, மட்டக்களப்பு, அம்பாரை போன்ற மாவட்டங்களுக்குப் போயிருப்பார்கள்? ஆனால் இந்த நோஞ்சான்களை பெரிய பயில்வான்களாக சித்திரிப்பதில் சில ஊடக வியாபரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் மக்களையும் மனங்களையும் நேசிக்கும் ஒரு வானொலி இந்த இரண்டு பேருக்கும் அவ்வப்போது தவறாமல் oxygen கொடுத்து வருகிறது.

சித்திரை 06, 2012

NEWS LETTER OF THE SRI LANKA HIGH COMMISSION IN OTTAWA, CANADA

HIGH COMMISSIONER WAGISWARA ADDRESSED CANADIAN PARLIAMENTARIANS-01

SLHC AT THE OTTAWA TRAVEL AND VACATION SHOW-02

HIGH COMMISSIONER MEETS MEMBERS OF UNIVERSITY STUDENTS ASSOCIATIONS-03

PROFESSOR KITTNAR GOVINDRAJ AS VICE CHANCELLOR OF EASTERN UNIVERSITY-03

SRILANKAN AIRLINES ON THE 'SILK ROUTE'-03

5400 ATTEND KACHCHATIVE FEAST OF ST ANTHONY-04

EX-LTTE COMBATANTS RELEASED -04

JAPAN GIVES RS 66 B LOAN PACKAGE-04

HOMESTAY WEB PORTAL-05

AROGYA 2012- INTERNATIONAL HEALTHCARE EXHIBITION & SYMPOSIUM

BENTOTA BEACH FEST 2012

(more.....)

சித்திரை 06, 2012

எம்.பி.க்கள் குழு இலங்கை செல்கிறது

இந்திய கம்யூனிட்கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், ம.தி.மு.க அழைப்பு இல்லை

இலங்கையில் அறுதிக்கட்ட போர் நடந்த போது லட்சக்கணக்கான அப்பாவி ஈழ தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழர்களின் வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன. போர் ஓய்ந்ததும் ஈழத்தில் சீரமைப்பு பணிகளை வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை செய்து வருகிறது. இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை அதை ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தாமல் ஈழத்தை சிங்கள மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவோம் என்று கூறிய காங்கிரஸ் அரசு, அதில் வெற்றி பெற முடியாத நிலையில், மறுவாழ்வு பணிகளிலும் இலங்கை அரசை பணிய வைக்க திராணி இல்லாமல் உள்ளது. மத்திய அரசின் பலயீனத்தை புரிந்து கொண்டுள்ள இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மீள் குடியேற்றப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டாமல் உள்ளது. (மேலும்....)

சித்திரை 06, 2012

ஆசனப்பட்டி அணியாவிட்டால் ரூ. 1000 ஸ்தல அபராதம்

மோட்டார் வாகனங்களில் ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு அந்த இடத்திலேயே தண்டப்பணம் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய வாகனத்தில் ஆசனப்பட்டி அணியாமல் பயணம் செய்யும் சாரதிக்கும், சாரதிக்கு அருகில் முன் ஆசனத்தில் இருந்து ஆசனப்பட்டி அணியாமல் செல்லும் பயணிக்கும் தலா 1000 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்படும் என அமைச்சரவையில் பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். இது தொடர்பாக அமைச்சர் குமார வெல்கம முன் வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்காக மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வுள்ளது. பாராளுமன்றத்தில் இது அங்கீகாரம் பெற்றால் சாரதிக்கு மாத்திரமின்றி முன் ஆசனத்தில் பயணஞ் செய்யும் பயணிக்கும் ஆசனப்பட்டி அணியாமைக்கு அவ்விடத்திலேயே 1000 ரூபா அபராதம் அறவிடப்படும்.

சித்திரை 06, 2012

நல்லிணக்க ஆணைக்குழு

‘பொருத்தமான சிபார்சுகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்’

அழுத்தங்கள் எந்த வகையில் வந்தாலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் நாட்டில் செய்ய முடியுமானவைகளை மாத்திரமே அமுல்படுத்துவோம் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை பதில் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் அந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றங்களையும் செய்யப்போவதில்லை என்றார். பலர் பலவற்றை கூறலாம். என்றாலும் எமக்கு ஒரு கொள்கை இருக்கின்றது. அந்த கொள்கையின் அடிப்படையில் எமது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் எம்மால் அமுல்படுத்த முடியுமானதை கட்டாயம் அமுல்படுத்துவோம். சிலவற்றை தற்போதே அமுல்படுத்தி வருகின்றோம். நாட்டின் நலனையும், தேவையையும் கருதி முடியுமானவற்றை கட்டாயம் அமுல்படுத்துவோம், செய்ய முடியாதவற்றை ஒருபோதும் அமுல்படுத்தமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினார்.

சித்திரை 06, 2012

உலகின் நீளமான தொங்கு பாலம் சீனாவில் திறப்பு

உலகிலேயே மிகவும் நீளமான, உயரமான தொங்கு பாலம் ஒன்றை சீனா கட்டியுள்ளது. இதன் திறப்ப விழா நேற்று முன்தினம் நடந்தது. சீனாவின் ஹனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத் தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத் தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்ட கடந்த 2007ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கட்டுமானப்பணிகள் ஆரம்பமானது. மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரம் கொண்ட இரு மலைத் தொடர்களுக்கிடையே பிரமாண்டமாக கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டதால், நேற்று முன்தினம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.  இப்பாலம் தான் உலகிலேயே மிகவும் நீளமானதும், உயரமானதும் என அழைக்கப்படுகிறது 78 அடி அகலம் கொண்ட இப்பாலத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம், கார், கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்வதற்கென தனிப்பாதைகள் மற்றும் பாதசாரிகள் நடக்கவும் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளன.

மியன்மார் மீதான தடைகளை தளர்த்தியது அமெரிக்கா: தூதுவரையும் நியமிக்க திட்டம்

மியன்மார் மீதான ஒருசில தடைகளை தளர்த்தவுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதன்படி மியன்மார் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார பயணத் தடைகள் தளர்த்தப்படும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். இதில் மியன்மார் நாட்டு தலைவர்கள் அமெரிக்கா வருவதை அனுமதிக்கவுள்ளதோடு, மியன்மாருக்கான அமெரிக்க தூதுவரும் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். இதனிடையே ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்களும் மியன்மார் மீதான தடைகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. மியன்மாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான இடைக்கால தேர்தலில் ஜனநாயக தலைவர் அவுங் சான் சூக்கியின் கட்சி 45 ஆசனங்களில் 40ஐ வென்றது. இந்த தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட்டதாக அனைத்து தரப்புகளும் குறிப்பிட்டன. (மேலும்....)

சித்திரை 06, 2012

இரு மொழி அறிந்தால் நன்மை!

ஒரு மொழிக்குப் பதில், இரு மொழிகள் அறிந்திருந்தால் நன்மை அதிகம் என்பது நடைமுறை ரீதியாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை. ஆனால் இரண்டு மொழிகள் அறிந்திருப்பது ஒருவரை புத்தி சாலியாகவும் ஆக்குகிறது என்கிறார் கள் விஞ்ஞானிகள். அது மூளையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிந்தனைத் திறனை மேம்படுத்துகிறது. முதிய வயதில் ஏற்படும் ‘டிமென்சியா’’ போன்ற ஞாபகமறதிப் பிரச்சினைக்கு எதிரான கவசமாகவும் அமைகிறது. என்கிறார்கள். ஒரு மொழி அறிந்தவர்களை விட, இரு மொழி அறிந்தவர்கள் புதிர்களை விடுவிப்பதில் திறமையுள்ளவர்களாக இருக்கின்றனர் என்பது விஞ்ஞானிகள் தெரிவிக்கும் முடிவு. திட்டமிடுதல், பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் யோசனை தேவைப்படும் மூளையின் பல்வேறு பணிகள், செயல் பணிகள் எனப்படுகின்றன. இரு மொழி அறிந்திருப்பது இவற்றில் எல்லாம் பெரிதும் உதவுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் கவனச் சிதைவும் தடுக்கப்படுகின்றனவாம்.

சித்திரை 06, 2012

வடபகுதி மக்களுக்கு எம்.பி. பதவி வழங்க தேசிய கட்சிகள் முன்வர வேண்டும்

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமாயின் இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் வட பகுதிக்குச் சென்று அங்குள்ள படி த்த, நியாயமாகச் சிந்திக்கக் கூடிய, தேசப்பற்றுடைய தமிழ்த் தலைவர் களே அந்த மக்களின் சார்பில் பாராளுமன்றத்தில் அம்மக்களை பிரதி நிதித்துவப்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் பிரதான அரசியல் கட் சிகள் இந்த வட பகுதி தமிழ் தலைவர்களை தங்களின் தேசிய பட்டி யல்களின் மூலம் பாராளுமன்ற அங்கத்தவர்களாக நியமிக்க வேண் டும் என்று திரு. கோட்டபாய ராஜபக்ஷ யோசனை தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிவரும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சர்வ தேச சமூகத்துக்குப் பொய்யான தகவல்களை இலங்கை பற்றி சித்திர மாக வடிவமைத்துக் காட்டுகின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், இத்த கைய போலி பிரசாரங்களை வடபகுதியில் வாழும் மக்கள் மாத்திரமே முறியடிப்பது அசாத்தியமானது. (மேலும்....)

சித்திரை 06, 2012

‘இந்தியா -இலங்கை உறவில் விரிசல் இல்லை’

இலங்கை அரசிற்கெதிராக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆத ரித்த போதிலும் இந்தியா-இலங் கை உறவில் எந்த விரிசலுமில்லை என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெய்ரீஸ் தெரிவித்தார். நடந்ததைக் குறித்து சிந்தனை செய்து கொண்டிருக்காமல் முன் னேறிச் செல்வோம் என்று எதிர்க் கட்சிகளின் கேள்விக்கு பதிலளித் தார். இந்தியாவிற்கெதிராக கோப மோ விரோதமோ கிடையாது என்று அவர் குறிப்பிட்டார். இருதரப்பு உறவு என்பது ஒரு பரிமாணமுடையது அல்ல. நடந்த தைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் தொடர்ந்து செல்வோம் என்று பெய்ரீஸ் பதி லளித்தார். இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு வருகிறது என்ற கேள்விக்கு, இது இருதரப்பு உறவுக்கான அடையா ளம் என்று தெரிவித்தார்.

சித்திரை 06, 2012

மனித குல இருப்பையே கேள்விக்குறியாக்கும் முதலாளித்துவம்

(பிரகாஷ் காரத்)

சோவியத் யூனியனில் நடந்த உலகின் முதல் சோசலிசப் புரட்சி சாதிக்க முடி யாது என்று நினைக்கப்பட்ட பல்வேறு பணிகளை நடத்திக் காட்டியது. எக்கச் சக்கமாக வேலையில்லாமல் இருந்தவர் களின் துயரைத் துடைத்தது. வேலை யின்மை ஒழிந்தது. அனைவருக்கும் கல்வி என்பது நனவானது. அனை வருக்குமான சுகாதார நலன் மற்றும் பெண்களுக்கு சம உரிமைகள் போன்ற பல்வேறு சாதனைகள் படைக்கப்பட் டன. இந்த சாதனைகள் உலகம் முழு வதும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஏகாதி பத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாடுகளில் இந்த அம்சங்களை நடைமுறைப்படுத்தின. சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, இறுதியாக முதலாளித்துவம் வென்றுவிட்டது; சோச லிசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது என்று பல முதலாளித்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். இருபது ஆண்டுகளுக்குப்பிறகு, அதே நிபுணர் கள் முதலாளித்துவத்தின் வருங்காலம் பற்றியக் கவலையுடன் அமர்ந்திருக் கிறார்கள்.  (மேலும்....)

சித்திரை 05, 2012

மட்டக்களப்புக்கு இப்படியும் ஒரு முகம் இருப்பது கனபேருக்கு தெரியாது

'மட்டக்களப்புக்கு இப்படியும் ஒரு முகம் இருப்பது கனபேருக்கு தெரியாது' தோணிதாட்ட மடுவின் சோகக் கதை.போய்க்கொண்டே இருந்தோம், அந்த முகங்களைத் தேடி அடர்ந்த காடு, உடைந்த றோடு, விரிந்த புல் வயல் வெயிலில் காய்ந்த பயிர்போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம்... அங்கே புதிய புதிய அனுபவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டோம். ஆமாம் அதுதான்  கோறளைப்பற்று வடக்கில் நில வளம் நீர் வளம் ஒருங்கே அமையப்பெற்ற பேர்பெற்ற வாகரைப் பிரதேசத்தில் அமைந்த ஒரு பழம் பெரும் கிராமம்தான் தோணிதாட்டமடு எனப்படும் கிராமமாகும். இது புச்சாகேணி என்னும் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடமாகும். இங்கு மொத்தமாக 47 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். அதன் மக்கள் தொகை 171 உம், அதில் 7 கணவரை இழந்த பெண்களும் 15 பாடசாலை செல்லும் மாணவர்களும் அதுபோல் 13 பாலர்வகுப்பு சிறார்களும் உள்ளடங்குவர். (மேலும்....)

சித்திரை 05, 2012

ஜெனீவாத் தீர்மானமும் தமிழரின் எதிர்காலமும் 

சீனாவின் பிடிக்குள்  இருக்கும்  சிறிலங்காவுக்கு எதிராகப் பயன்படுத்த  மேற்குலக  நாடுகளுக்குக் கிடைத்திருக்கிற ஆயுதம் சிறிலங்கா அரசு தமிழ்மக்களுக்கு எதிராகச் இழைத்த போர்க் குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் ஆகும்.   எந்த நாடுகள்  ஒன்றுசேர்ந்து எம்மை அழித்ததோ அதே நாடுகளுக்கு  இப்போது எமது உதவி தேவைப்படுகிறது. எல்லா உண்மைகளையும் தெரிந்துகொண்டும் தெரியாததுபோல் இருந்து எம்மை அழித்தவர்கள் இப்போது எமக்காகப் பரிந்து செயற்படுகிறவர்கள் போல் செயற்பட்டு ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். தீர்மானத்தை நியாயப்படுத்த   தமிழர் தரப்பின் ஆதரவை  நாடினார்கள். த தே கூ, நா.க.த.அ. உட்பட தமிழர் தரப்பும் அந்த ஆதரவை சிறப்பாகச் செய்து முடித்தார்கள். இந்த மாற்றம் தமிழரின் போராட்ட வரலாற்றில் ஒரு  திருப்பு முனையாகப் பார்க்கப் படவேண்டும். "உலகில் நீதி நியாயம், சரி பிழை எதையுமே காணமுடியவில்லை, உலகமே எம்மைக் கைவிட்டுவிட்டது, எமக்கு இனி எதிர்காலமே இல்லை" என்று  விரக்தியின் எல்லைக்கே  சென்ற  தமிழினத்திற்கு இந்த்த் தீர்மானம் இருள்மயமாய் இருந்த எதிர்காலத்தில் ஒரு குப்பி விளக்கு அளவு நம்பிக்கை ஒளியை ஏற்றிவைத்துள்ளது. (மேலும்....)

சித்திரை 05, 2012

இலங்கைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவாது - கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சத்திராங்கனி!

இலங்கைக்கு எதிரான சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுக்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க உதவாது என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சத்திராங்கனி வாகீஸ்வர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்க இலங்கை மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என கனேடிய பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் இருந்து வெளியாகும் ´தி ஸ்டார்´ என்ற பத்திரிகை இலங்கை குறித்து எழுதியுள்ள தலைப்புக்கள் தவறானதும் கடுமையானதும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு எனவும் கடந்த காலங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறாது தடுப்பது மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இக்குழுவின் நோக்கம் எனவும் சத்திராங்கனி வாகீஸ்வர் குறிப்பிட்டுள்ளார். ஆணைக்குழுவின் பரிந்துரைபடி பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், வாழ்வாதார வளர்ச்சி என்பன செய்யப்பட்டு வருவதோடு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தையும் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 30 வருட கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் அதன் மக்களுடன் இணைந்து நல்லிணக்கம் மற்றும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சத்திராங்கனி வாகீஸ்வர் தெரிவித்துள்ளார்.

சித்திரை 05, 2012

A preamble to a proposal for a post-war memorial

[This was first published in December 2010 and although the pro-LTTE voices didn't get as silenced as I thought they had at the time, that whining/screaming should not forbid what I propose below]

In June 2006 The Nation newspaper, in its ‘Eye’ section had a two page spread on war memorials.  I was at the time the Deputy Editor (Features) and I remember inserting two illustrations to decorate the pages.  The first was a cemetery set up by the LTTE.  The second was a blank space, duly boxed, to acknowledge all the 20,000 young men and women who were killed in the 1971 insurrection and the 60,000 who perished in the UNP-JVP bheeshanaya of 1988-89.  In the first, tellingly, the birthdays and date of death had been omitted, for the LTTE had sent thousands of children to death. That’s something the pro-Eelam sections of the Tamil Diaspora don’t talk about even though it is their money that helped those innocent kids hurry into the Great Beyond.  The decision to insert that photograph was to acknowledge the fact that even those who died fighting the cause of a myth-mongering megalomaniac were nevertheless citizens of this country, needlessly sacrificed. (more....)

சித்திரை 05, 2012

சுய இலாப அரசியல் நாடகம் நடத்தும் தமிழ்க் கூட்டமைப்பு

வடமாகாண தேர்தலில் மக்கள் தகுந்த தீர்ப்பை வழங்குவர்

ஜெனீவா பிரச்சினை என்பது ‘மாய மான்’.. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தீர்வு என்பதே ‘நிஜ மான்’. எனவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் எமது அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைக்கு நடைமுறைக்கு ஏதுவான நிலையான தீர்வை எட்டுவதற்கு பங்களிப்பு வழங்குமாறு அனைத்து தரப்பினருக்கும் எமது மக்கள் சார்பாக மனிதாபிமான அழைப்பினை விடுக்கிறேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் விரைவில் எமது அரசு வடக்கில் மாகாண சபை தேர்தலை நடத்தும். அப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடட்டும். மக்கள் அப்போது தகுந்த தீர்ப்பை வழங்குவார்கள். காலத்தை இழுத்தடித்து தமது சுயலாப அரசியலுக்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளின் மேல் ஏறி மிதித்து தேர்தல்கள் எரும் போது தேர்தலுக்காக மட்டும் அரசியல் நாடகம் நடாத்தி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாறாக தமிழ் தேர்தல் கூட்டமைப்பு என பெயரை மாற்றிக் கொள்வது பொருத்தமாக இருக்கும். (மேலும்....)

சித்திரை 05, 2012

மரணத்தின் விளிம்பில் இருந்த யாழ். யுவதியை காப்பாற்றிய இராணுவம்

கடுமையான இருதய நோய் காரணமாக இன்னமும் 15 நாட்களே உயிர் வாழலாம் என அறிவிக்கப்பட்டிருந்த யாழ்பாணத்தைச் சேர்ந்த 20 வயது யுவதியின் உயிரை இராணுவத்தினரின் தலையீட்டின் மூலம் காப்பாற்ற முடிந்துள்ளது. இந்நாட்டு இராணுவத்தினர் மனிதாபிமானமற்றவர்கள் என சர்வதேசத்தின் ஒரு சில நாடுகளும் உள்ளூரில் சிலரும் பொய் பிரசாரங்களை மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவத்தினரின் மனிதாபிமான நிலையினை நிரூபிப்பதற்கு இதுவே போதுமான சிறந்த சான்றாகும். யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி பிரதேசத்தில் வசித்துவரும் 20 வயதுடைய கஜிந்தனி கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது நோய்க்கு இடையிடையே சிகிச்சை பெற்றுவந்த போதிலும் அது பயனளிக்கவில்லை. கஜிந்தனியின் தந்தை எல்.ரி.ரி.ஈ. அமைப்பில் பணியாற்றிய போது தாக்குதல் ஒன்றிலே உயிரிழந்துள்ளார். அவரது தாயார் கூலி வேலை செய்தே கஜிந்தனி உள்ளிட் அவரது சகோதரர்களை வாழ வைத்துள்ளார். (மேலும்....)

சித்திரை 05, 2012

தேசிய பட்டியல் மூலம் வட பகுதிக்கு அதிக இடம்ஒதுக்கப்படல் வேண்டும்

புலம்பெயர் தமிழ் மக்கள் வடிவமைக்கும் போலிச் சித்திரங்களை வடபகுதி மக்களினாலேயே பொய்ப்பிக்க முடியும் என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக வடபகுதி மக்களை தேசிய அரசியல் கட்சிகளூடாக அரசியலில் பிரவேசிக்க செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக பிரதான கட்சிகள் வட பகுதிக்கு செல்லுங்கள். புலம்பெயர் தமிழர்கள் வடிவமைக்கும் போலிச் சித்திரங்களை வடக்கு மக்களாலேயே பொய்ப்பிக்க முடியும். தேசிய பட்டியல் மூலம் வட பிரதேசத்திற்கு அதிக இடம்ஒதுக்கப்படல் வேண்டும்.இனப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக வட பகுதி மக்களை தேசிய அரசியல் கட்சிகளின் ஊடாக அரசியலில் பிரவேசிக்கச் செய்தல் வேண்டும். (மேலும்....)

சித்திரை 05, 2012

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு உறுதி, தலையீடுகளுக்கு இடமளிக்க முடியாது

பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இதற்கு சகல கட்சிகளையும் உள்ளடக்கும் விதத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதையும் அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. ஆனால், எந்தவொரு வெளிநாட்டின் தலையீடுகளுக்கும் இடமளிக்க முடியாது இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. எனினும், உலகில் எந்தவொரு நாட்டிலும் ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்படும் பரிந் துரைகளை முழுமையாக நூறுவீதம் அமுல்படுத்தி யதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜெனீவாவில் இலங் கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக நேற்றுப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாத்ததிற்கு பதிலளித்துப் பேசும்போதே பேராசிரியர் மேற்கண்டவாறு கூறினார். (மேலும்....)

சித்திரை 05, 2012

அதிகபட்ச அதிகாரபரவலாக்க அடிப்படையில் பிரச்சினைக்கு தீர்வுகாண தயார்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கன்றி தமிழ் மக்களுக்கே அதிகாரப்பகிர்வு தேவை. அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் என்ற அடிப்படையில் இருந்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண நாம் தயாராக உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான விசேட பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் இலங்கை தவறிவிட்டது. வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. 60 வருடங்களின் பின்னரும் இன்னும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது. எமக்கு தனித்துவமான கலாசாரம், தனித்துவம் உள்ளது. நாம் இணைந்து வாழத் தயார். ஆனால், எம்மை சேர்த்துக்கொள்வதாக இல்லை. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சிறுபான்மையினராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். (மேலும்....)

சித்திரை 05, 2012

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பேசாமல் இருப்பதே இலங்கை தமிழர்களுக்கு இப்போது ஆற்றுகின்ற உதவி (பகுதி 2)

'டெக்கான் க்ரானிக்கன்' பத்திரிகையின் பொறுப்பாசிரியர் பகவான் சிங்குக்கு 'துக்ளக்' ஆசிரியர் சோ அளித்த பேட்டி

(நேற்றைய தொடர்)

ங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஒரு இளைஞன் பொலிஸாரைக் கண் டவுடன் ஒடினான். அவனைத் துரத்தினார்கள். பிடிக்க முடியவில்லை. நிற்கும்படி கூறினார்கள். அவன் நிற்கவில்லை. பொலிஸார் சுட்டனர். அவன் இறந்தான். கடைசியில் பார்த்தால், அவன் எந்தத் தவறும் செய்யவில்லை. பொலிஸாரைப் பார்த்ததும் ஏதோ பயத்தில் ஓடி யிருக்கிறான். பொலிஸார் நடந்த நிகழ்ச்சியை வர்ணித்து, இம்மாதிரி ஒருவர் செய்யும் போது எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. சுட்டோம். இது தவிர்க்க முடியாது என்று சொன்னார்கள். இந்த விளக்கம் அப்படியே ஏற்கப்பட்டது. கடும் விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை. (மேலும்....)

சித்திரை 04, 2012

மேன்மைதகு அதிபர்களின் விபரம் தேடுகின்றோம்.

நூற்றாண்டு விழாக்கானும் அலிகாரில் பல தமிழ் சகோதரர்கள் அதிபர்களாக இருந்து சிறப்பாக பணியாற்றியுள்ளதாக அறிகின்றோம். ஆயினும் துரதிஸ்டவசமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்களினால் எமது பாடசாலை பொலிஸ், ரானுவ முகாம்களாக செயற்பட்டதன் காரணமாக பாடசாலைக்குரிய சம்பவத்திரட்டுப் புத்தகங்கள் (log Entry) காணாமல் போய்விட்டன எனவே கடந்த கால அதிபர்களைப்பற்றிய சரியான தகவல்களைப் பெறமுடியாது தவிக்கின்றோம். நூற்றாண்டு மலரில் பாடசாலைக்காக சேவையாற்றிய அதிபர்களைப்பற்றிய தகவல்களை சேர்த்துக்கொள்ள விபரங்களைத் தேடுகின்றோம். குறிப்பாக பின்வரும் தமிழ் அதிபர்களின் தகவல்களைப்பெற்றுக் கொள்வதிலேயே பெரும்சிரமத்தை எதிர் நோக்குகின்றோம்.

1. திருவாளர் கே. சங்கரப்பிள்ளை 1912 தொடக்கம் 1928

2. திருவாளர் சிவசுப்ரமணியம் 1928 தொடக்கம் 1933

3. திருவாளர். சண்முகசுந்தரம். 1933 தொடக்கம் 1939

4. திருவாளர். பரராசசிங்கம் 1939 தொடக்கம் 1943

5. திருவாளர். எஸ்.தமபிராசா ஐயா 1943 தொடக்கம் 1961

இவர்களுள் முதல் நான்குபேரும் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று நம்புகின்றோம். எனவே இவர்களது உறவினர்கள் அவர்களது புகைப்படங்கள் அவர்களைப்பற்றிய குறிப்புக்கள், முகவரிகள், மற்றும் தொலைபேசி இலக்கங்கள் என்பவற்றை எங்களது மின்அஞ்சலுக்கோ அல்லது தபால் முகவரிக்கோ அனுப்பிவைத்தால் நன்றியுடைவர்களாக இருப்போம்.

தபால் முகவரி -
அலிகார் நூற்றாண்டு விழா செயலகம்
மட்.அலிகார் தோசிய கல்லூரி
ஏறாவூர்

தகவல் அனுப்பியவர்: எஸ்.எம்.எம்.பஷீர்

சித்திரை 04, 2012

சர்வதேச யோசனைகளை ஏற்காததாலேயே இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைப்பு

  • ஜெனீவா தீர்மானம் வலய நாடுகளுக்கு ஏற்பட்ட தோல்வி

  • ஐ.தே.க ஆட்சிக்காலங்களிலேயே இலங்கை - இந்திய உறவுகளில் பாதிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்காத காலப் பகுதிகளிலே இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு உயர் மட்டத்தில் இருந்துள்ளது. தந்திரோபாய முன்னெடுப்பாக இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் இதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாதென சிரேஷ்ட அமைச்சர் டியூ. குணசேகர கூறினார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முன்வைக்கப்பட்ட சர்வதேச யோசனைகளை ஏற்காததாலே இலங்கைக்கு எதிரான பிரேரணை முன் வைக்கப்பட்டது. கொள்கை ரீதியான கார ணங்களினாலே நாம் இதனை எதிர்த்ததோடு இந்த பிரேரணை நிறைவேறி யது முழு வலய நாடுகளுக்கும் ஏற்பட்ட தோல்வி யாகும் எனவும் அமைச்சர் கூறினார். (மேலும்.....)

சித்திரை 04, 2012

 

ஒரு நாட்டை மட்டும் குறிவைத்து இயங்குவது ஐ.நா. மனித உரிமை பேரவையின் கடமை அல்ல! (பகுதி 1)

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர் சோ. டெக்கான் க்ரானிக்கள் பத்திரிகைப் பொறுப்பாசிரியர் பகவான் சிங்குக்கு அளித்த பேட்டி

கேள்வி: இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கூட உள்ள தமிழர் கட்சிகளும், தமிழர் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கெளன்ஸின் முன்பாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறுகின்றன. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

சோ: அமெரிக்கத் தீர்மானம் பற்றி இங்கே பத்திரிகைகளும், பல அமைப்புகளின் தலைவர்களும் பேசுவதை வைத்துப் பார்த்தால், அந்தத் தீர்மானம் இலங்கையைப் பெரிதும் கண்டிப்பது போலவும், இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளை ஒரு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துவது போலவும் ஒரு தோற்றம் ஏற்படுகிறது. (மேலும்.....)

 

 

சித்திரை 04, 2012

பொய் மூலம் தொடுக்கப்பட்ட ஈராக் போர் அதிரும் உண்மைபி.பி.சி

ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டு சாதாம் உசைன் அவர்களை தூக்கிலும் போட்டாயிற்று. ஆனால் நேற்றைய தினம் பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தை பார்த்தபின்பு உலகம் ஒரு நொடி அதிர்ந்துதான் போயிருக்கும். ஒரு பொய்யை மட்டும் அதாவது அப்பொய்யை உறுதியான ஒருவர் தெரிவித்ததனால் அதை உண்மை என நம்பி ஈராக் மீது போர் தொடுத்து இன்று பெரும் அவமானத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றது அமெரிக்கா. (மேலும்.....)

பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படத்தைப் பார்க்க கீழே உள்ள இணைப்பில் அழுத்தவும்

http://www.bbc.co.uk/iplayer/episode/b01fnqr8/hd/Modern_Spies_Episode_1

சித்திரை 04, 2012

அனானின் அமைதி முயற்சியை 10 ஆம் திகதிக்குள் கடைபிடிக்க சிரியா இணக்கம்

ஐ.நா. மற்றும் அரபு லீக் விசேட பிரதிநிதி கொபி அனானில் ஆறு அம்ச அமைதி முயற்சியை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர சிரிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. கொபி அன்னானின் அமைதி கோரிக்கையின்படி, சிரியாவில் அனைத்து தரப்புகளும் ஐ. நா. மேற்பார்வையின் கீழ் யுத்த நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் நகரங்களில் இருந்து கனரக ஆயுதங்கள், வீரர்கள் வெளியேற வேண்டும். அத்துடன் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய கொபி அனான் சிரியாவின் நிலைப்பாடு குறித்து குறிப்பிட்டார். அதில் சிரியா ஏப்ரல் 10 க்குள் தனது ஆறு அம்ச கோரிக்கையை நடைமுறைப்படுத்த இணங்கியதாக தெரிவித்தார். (மேலும்.....)

சித்திரை 04, 2012

ஓர் ஆண்டுக்குள் பறக்கும் காரை சந்தைக்கு விட திட்டம்

பறக்கும் கார் இன்னும் ஓர் ஆண்டுக்குள் சந்தைக்கு விடப்படும் என அதனை உற்பத்தி செய்த அமெரிக்காவின் டெர்ரபுகியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பறக்கும் கார் வெள்ளோட்டமாக 8 நிமிடங்கள் வானில் பறக்கவிடப்பட்டது வெற்றியளித்துள்ளது. இதனைத் தொடர்ந்தே இந்த காரை ஒரு வருடத்திற்குள் சந்தைக்கு விட முடியும் என மேற்படி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த காரை வாங்க 100 க்கும் மேற்பட்டோர் 10,000 டொலரை முற்பணமாக செலுத்தியுள்ளனர். சாதாரண காரொன்றின் அளவு கொண்ட இந்த வாகனத்தில் பறக்கும் போது விரிவுபடும் வகையில் சிறகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு ஆசனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பறக்கும் கார் வீதியில் மணிக்கு 70 மைல் வேகத்திலும் வானில் 115 மைல் வேகத்திலும் பயணிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வாகனத்தை ஓட்டுவதற்கு வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் விமான ஒட்டிக்கான அனுமதிப் பத்திரங்களை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரை 04, 2012

உணவில் உப்பை கூடிய வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும்

இலங்கையில் தற்போது இருதய நோயினால் இறப்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இன்று நாளொன்றுக்கு 150 பேர் மாரடைப்பினாலும், 40 பேர் பாரிசவாதத்தினாலும் மர ணிக்கிறார்கள். இவர்களைவிட மாரடைப்புத் தொடர்பான திடீர் தாக் கங்களினால் நாளொன்றுக்கு 80ற்கும் மேற்பட்டோர் பாரிசவாதத்தி னால் எழுந்து நடமாட முடியாமல் கட்டிலிலேயே இருக்கவேண்டிய அவலநிலையும் தோன்றுகிறது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் வயதுவந்த ஒவ்வொரு 100 பேரில் ஒருவர் பாரிசவாதத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். அதியுயர் இரத்த அழுத்தமே ஒருவர் பாரிசவாத நோயாளியாக மாறுவதற்கு பிர தான காரணமாகும். (மேலும்.....)

சித்திரை 04, 2012

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மாத்திரம் வாகனங்களுடன் வரும் கப்பல்களுக்கு அனுமதி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை எடுத்துவரும் அனைத்து கப்பல்களும் மே மாதம் 31ம் திகதி முதல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே வாகனங்களை இறக்க வேண்டுமென துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபை, வாகன இறக்குமதியாளர் மற்றும் கப்பல் பொறியியலாளர் சங்கத்தினரில் ஒருங்கி ணைந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே ஹம்பாந்தோட்டையிலுள்ள மாகம் றுஹுனுபுர மஹிந்த ராஜபக்ஷ துறை முகத்தில் வாகனங்களை இறக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகார சபை தெரிவித்தது. (மேலும்.....)

சித்திரை 04, 2012

ஜனநாயகம் திரும்பட்டும்! 

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிர்ப்பந்தம் காரணமாகவே மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் இந்த இடைத்தேர்தலுக்கு ஒப் புக்கொண்டதைப் போல ஒரு தோற்றம் ஏற்படுத் தப்படுகிறது. ஆனால் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போல ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளும் அமெரிக்காவால் வழங் கப்பட்டது. மறுபுறத்தில், ஜனநாயக காவலனாக தன்னைக் காட்டிக்கொள்ள அமெரிக்கா முயன்றது என்பதுதான் உண்மை. நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள இடங் களில் 25 சதவீத இடங்கள் ராணுவ ஆட்சியா ளர்களால் நியமிக்கப்பட்டுவிட்டது. இதை அந் நாட்டின் ஜனநாயக சக்திகள் ஏற்கவில்லை. ராணுவ சர்வாதிகார ஆட்சியை நிர்ப்பந்தம் செய்தவற்குப் பதிலாக இந்தத் தேர்தல் முறையை ஒப்புக்கொள்ளுமாறு சூகியை நிர்ப்பந்தம் செய்தது அமெரிக்கா. இந்தப் பின்னணியில்தான் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. (மேலும்.....)

சித்திரை 04, 2012

நெருக்கடியால் பாலியல் தொழிலில் அமெரிக்க மாணவிகள்!

பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து மாணவிகள் அண்மையில் அமெரிக்கக் காவல்துறையிடம் சிக்கினார்கள். அவர்களிடம் விசாரித்தபோது, தாங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வருவதாகவும், கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டு இந்தத் தொழிலில் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். காவல்துறை மேலும் விசாரித்தபோது, இத்தகைய தொழில்களில் பெண்களை ஈடுபடுத்துவதில் ஏராளமான குழுக்கள் இயங்கி வருகின்றன. அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏற்கெனவே செய்து வந்த செலவைச் செய்ய முடியாத நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பெண்களைக் குறிவைத்து இந்தக் கும்பல்கள் இறங்கியிருக்கின்றன. அதில் சிக்கியவர்கள்தான் தற்போது காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். (மேலும்.....)

சித்திரை 03, 2012

அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதன் போது இந்த பிரேரணை குறித்த இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாடு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அறிக்கையினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும், இதனால் இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் எவையும் இல்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தெரிவித்திருந்தார். எனினும் இது அமைச்சர் ஜீ.எல்.பீரிஷின் தனிப்பட்ட கருத்து என, அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பின் போது, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவினால் அறிவிக்கப்பட்டது. (மேலும்.....)

சித்திரை 03, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஆறு பேர் கொழும்பில் கைது

படகு மூலம் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராக இருந்த ஆறு பேர் கொழும்பு மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு - கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இருவர் சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த முகவர்கள் என தெரிய வந்துள்ளதாக கொழும்பு மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதேவேளை, சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் கும்பலின் பிரதான சூத்திரதாரிகள் இருவரை தேடிக் கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகளில் தமது குழு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பரமசிவன் சந்திரகுமார், கல்முனை பகுதியைச் சேர்ந்த ரூபன் என்ற ழைக்கப்படும் 28 வயதுடைய இந்திரன் ருபசந்திரன் என்ற இரண்டு பிரதான சந்தேக நபர்களே தேடப்பட்டு வருவதுடன் இவர் கள் தொடர்பில் தகவல்களை வழங்கு பவர்களுக்கு சன்மானம் வழங்கவும் பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்.....)

சித்திரை 03, 2012

இலங்கைக்கு மற்றுமொரு கடன் தவணை

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அங்கீகரித்துள்ள கடன் திட்டத்தின் கீழ் மற்றுமொரு கடன் தவணை வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடனின் பெறுமதி 426.8 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பான ஏழாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் இந்தக் கடன் தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 2.56 பில்லியன் டொலர்களில் இதுவரை 2.13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய மற்றுமொரு கடன் தவணையை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ளது. எட்டாவதும், இறுதியுமான மீளாய்வு நிறைவு செய்வதற்கான கடன் வழங்கும் கால எல்லையை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. இலங்கையில் நிதி மற்றும் கடன் கொள்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சித்திரை 03, 2012

மூன்று மாதங்களுக்குள் வீதி விபத்துக்களில் 595 பேர் பலி; 1,300 பேர் காயம்

ஜனவரி மாதம் முதல் மார்ச் வரையிலான கடந்த மூன்று மாத காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 595 பேர் பலியாகியுள்ளதுடன், ஆயிரத்து 300 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விபத்துக்களை கட்டுப்படுத்துவதில் சாரதிகள் மாத்திரமின்றி பொதுமக்களும் அவதானமாக செயற்பட வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். மதுபோதையில், நித்திரைக் கலக்கத்தில் சாரதிகள் வாகனங்களை செலுத்திச்செல்வதாலும் வாகனங்களை முந்திச் செல்வதில் காணப்படுகின்ற போட்டித் தன்மை மற்றும் கட்டுப்படுத்த முடியாத வேகம் போன்ற காரணிகளாலும் அனேகமான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. வாகனச் சாரதிகள் மாத்திரம் வீதி விபத்துக்களுக்குக் காரணமல்ல. பாதசாரிகளின் கவனயீனமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. எனவே, வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அனைவரும் தமது பங்களிப்பை செலுத்த வேண்டும்.

சித்திரை 03, 2012

மலேசியாவில் இலங்கையர் உட்பட 24 பேர் மடக்கிப்பிடிப்பு

மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்ததாகக் கருதப்படும் 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெலா உறுப்பினர்கள் 6 பேர் உள்ளிட்ட மலேசியாவின் பென்கெராங் கிராமவாசிகள் 20 பேர் இணைந்து குறித்த 24 வெளிநாட்டவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஒரு வான் மற்றும் இரு கார்களில் வந்திறங்கிய 24 வெளிநாட்டவர்கள் பென்கெராங் கிராமத்தில் 10 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தாதுள்ள பள்ளி ஒன்றுக்குள் செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 14 ஆப்கானியர்களும் 3 பாகிஸ்தானியர்களும் 5 இலங்கையர்களும் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் கடவுச்சீட்டு செல்லுபடியானதா? இல்லையா? என்பது குறித்து மலேசியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சித்திரை 03, 2012

உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து பலஸ்தீன பெண் கைதியை விடுவித்தது இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலஸ்தீன பெண் தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக 44 நாட்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து விடுவிக்கப்பட்டு காசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஷலபி பெகன் என்ற பெண்ணையே இஸ்ரேல் நிர்வாகம் விடுவித்தது. தன் மீதான எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் தடுத்து வைத்ததற்கு எதிராகவே அவர் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தொடர்ந்து 33 நாட்கள் உணவின்றி இருந்ததால் அவர் கடந்த மார்ச் 19 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் பெகன் 14 கிலோ கிராம் எடை குறைந்ததோடு அவரது உடல் நிலையும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து பலஸ்தீன நிர்வாகத்துடனான ஒப்பந்தத்தின் மூலம் மேற்படி பெண்ணை விடுவிக்க இஸ்ரேல் அரசு இணங்கியது. இந்நிலையில் அவர் கடந்த மார்ச் 29 ஆம் திகதி தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார். (மேலும்.....)

சித்திரை 03, 2012 ___

தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்

மூன்றாவது உலகப் போருக்கு முன்னுரை

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்த 24 நாடுகள்: அமெரிக்கா, இந்தியா, நோர்வே, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, குவாட்டமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஷியஸ், மெக்ஸிக்கோ, நைஜீரியா, பெரு, போலந்து, மோல்டோவா குடியரசு, ருமேனியா, உருகுவே. எதிர்த்த 15 நாடுகள்: சீனா, ரஷ்யா, வங்களாதேசம், காங்கோ, கியூபா, ஈக்வடர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவுகள், மாரிடானா, பிலிப்பைன்ஸ், கட்டார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா, வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகள் : அங்கோலா, போட்ஸ்வானா, புர்கினோ, பாஸோ, டிஜிபோட்டி , ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல். இந்தப் பட்டியலில் உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு அணிகள் இலங்கை தீர்மானத்தின் அடிப்படையிலானவை மட்டுமே என்று நினைக்க வேண்டாம். (மேலும்.....)

சித்திரை 03, 2012 _

வடபகுதி தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் மே தினம்

உலகளாவிய ரீதியில் முன்னெடுக் கப்படும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைத் தினமான மேதினத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மாபெரும் எழுச்சிப் பேரணி யுடனும் பொதுக்கூட்டத்துடனும் முன்னெடுக்கவுள்ளது. வடபகுதியில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களை ஓரணியில் திரட்டி உணர்வுபூர்வமான முறையில் அம்மக்களின் கோரிக்கைகளையும் உரிமைகளையும் வலியுறுத்தும் எழுச்சிப் பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நடத்தவுள்ளது. தொழி லாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மட்டுமல்லாது அரசியலுரிமைக்காக குரல் கொடுத்து வரும் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் வெகுஜன அமைப்புகளும் இந்தப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளனர். (மேலும்.....)

சித்திரை 03, 2012

ஜோர்தானில் இலங்கையரின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அந்நாட்டு அரசு இணக்கம்

ஜோர்தானில் தொழில் புரியும் இலங்கையர்களுக்குரிய கொடுப்பனவுகளை அதிகரிக்கவும், அவர்களுக்கான காப்புறுதி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் ஜோர்தான் அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஜோர்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் டிலான் பெரேரா ஜோர்தானின் தொழில் அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளார். ஜோர்தானின் தொழில் அமைச்சர் மஹிர் அல் வாஹிட்டுடன் அமைச்சர் டிலான் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கையர் கள் ஜோர்தானில் எதிர்நோக்கும் பிரச் சினைகள் குறித்தும், சம்பள அதிகரிப்பு குறித்தும் நீண்ட பேச்சுவார்த்தையை அமைச்சர் டிலான் நடத்தியுள்ளார். தற்போது ஜோர்தானில் தொழில் புரிகின்ற இலங்கையரின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர் பாகவும் அமைச்சர் டிலான் பேச்சு நடத்தினார். அமைச்சருடன் சென்ற பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்காரவும் ஜோர்தானிலுள்ள இலங்கையரை சந்தித்து பேசினார்.

சித்திரை 03, 2012

சிரிய கிளர்ச்சி வீரர்களுக்கு சம்பளம் வழங்க துருக்கி மாநாட்டில் முடிவு

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சிப்படை வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என எதிர்பாளர்களின் சிரிய தேசிய கவுன்ஸில் அறிவித்துள்ளது. சிரிய இராணுவத்தில் இருந்து பிரிந்த வீரர்களுக்கும் இந்த சம்பளம் வழங்கப்படும் என அது அறிவித்துள்ளது. துருக்கியில் நேற்று முன்தினம் நடந்த ‘சிரிய மக்களின் நண்பர்’ மாநாட்டைத் தொடர்ந்தே சிரிய தேசிய கவுன்ஸில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் வளைகுடா அரபு நாடுகள் சிரிய தேசிய கவுன்ஸிலுக்கு மாதத்திற்கு பல மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியது. அத்துடன் துருக்கி மாநாட்டில் சிரியாவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக சிரிய தேசிய கவுன்ஸில் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (மேலும்.....)

சித்திரை 03, 2012

கமலின் பின்னால் ஹாசன் எப்படி வந்தது

கமல் ஹாசன் - கமலின் பின்னால் தொக்கி நிற்கும் ஹாசன் எப்படி வந்தது தெரியுமா? கமல்ஹாசன் - கமலின் பின்னால் தொக்கி நிற்கும் ஹாசன் என்ற இஸ்லாமிய பெயரால், வெளிநாட்டு விமான நிலையங்களில் பல முறை அவர் அதீத சோதனைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். அந்தப் பெயர் அவருக்கு எப்படி வந்தது தெரியுமா? சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன், சிறையில் இருந்த பிராமண எதிர்ப்பு தரப்பினரால் அவருக்கு அங்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஸ்ரீநிவாசனை பாதுகாத்தது சிறையில் அவருடன் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு விடுதலை போராட்ட வீரர் யாகோப் ஹாசன் அவரின் நினைவாகத்தான் மகன்கள் அனைவருக்கும், சந்திரஹாசன், சாருஹாசன். கமல்ஹாசன் என்று பெயர் வைத்துள்ளார் ஸ்ரீநிவாசன். ஆனால் ஹாசன் என்பது சமஸ்கிருதம் என்றும், அதற்கு ஹாஸ்யம் என்று அர்த்தம் என்றும் ஒரு தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது.

சித்திரை 02, 2012

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் - அமைச்சர் திஸ்ஸ

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் சர்வதேச சவால்களையும் அழுத்தங்களையும் இலங்கையால் எதிர்கொள்ள முடியாது. எனவே அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியல் கட்சிகளை இணைத்துக் கொண்டு பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதே சிறந்தது என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். பரிந்துரைகளில் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வு என்பன முக்கிய இடம் பிடித்துள்ளமையால் பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக தீர்வுகளை எட்ட முயல வேண்டும். ஏனென்றால் ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் உலக நாடுகள் அனைத்தும் மிகவும் வெளிப்படையாகவே இலங்கை விவகாரங்களை கையாள ஆரம்பித்துள்ளன. இது நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

சித்திரை 02, 2012

தமிழகத்தில் ஆயுதப்பயிற்சி பெற்ற 150 பேர் வடக்கு, கிழக்கில்

தமிழகத்தில் மூன்று இரகசிய முகாம்களில் ஆயுதப்பயிற்சிகளைப் பெற்ற 150 பேர், வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு சென்று மறைந்திருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவும், பிரதேசத்தில் நிலவும் அமைதியைச் சீர்குலைக்கவும் இவர்கள் அங்கு சென்றுள்ளனர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். திருகோணமலையில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணைகளில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன. இவர்கள் மூன்று பேரும் ஒருகாலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய நபர்களாக இருந்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்குப் பின்னர், படகில் இந்தியாவுக்கு சென்று தலைமறைவாகியிருந்தனர். (மேலும்.....) (இது சம்மந்தமான ஆங்கிலக் கட்டுரையை வாசிக்க....)

சித்திரை 02, 2012

ராஜிவ் கொலை தொடர்பில் அமெரிக்கா கருத்து!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டமை, இந்தியா பிராந்திய வல்லரசு என்ற நிலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று வில்லியம் எச் எவேரி என்ற அமெரிக்காவின் ராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். சீனாவின் பயமும் அமரிக்காவின் கனவும் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள புதிய நூல் ஒன்றில் இந்தக்கருத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜீவ் காந்தியின் கொலையை அடுத்து புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைது செய்ய அல்லது, கொலை செய்வதற்காக இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கவேண்டும். பிரபாகரனை கைதுசெய்து அவரின் மீது விசாரணை நடத்தி பிராந்தியத்துக்கும் உலகத்துக்கும் தெளிவான செய்தி ஒன்றை இந்தியா அனுப்பியிருக்கலாம். (மேலும்.....)

சித்திரை 02, 2012

உலகின் மிக நீளமான தொங்கு பாலம்

உலகின் மிகவும் நீளமான தொங்கு பாலம் சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இரு சுரங்கப் பாதைகளை இணைக்கும் வகையில் பள்ளத்தாக்கு ஒன்றுக்கு மேலாக 1102 அடி உயரத்தில் இந்த 4000 அடி நீளமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் உலகின் மிகவும் உயரமான சுரங்கப் பாதைகளை இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது. இந்தப் பாலத்தை அமைக்கும் பணி 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பொறியியலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. ஹுனான் மாகாணத்தில் ஜிஷோயு பிராந்தியத்திலான வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த ப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 78 அடி அகலத்தைக்கொண்ட இந்தப் பாலத்தில் இரவு வேளையில் 1888 மின் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. ___


சித்திரை 02, 2012

ஒரு வருடத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தப்படலாம்

இன்னும் ஒரு வருடத்திற்குள் அரசு நாடாளுமன் றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்லலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அரசாங்கம் இன்று ஜெனீவாப் பிரச்சினையைக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டே வருகின்றது. இன்று மக்கள் பொருட்களின் விலையுயர்வாலும் போதிய தொழில் வருமானங்களின்றி பல்வேறு கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருவதுடன் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவது எவ்வாறு என்ற கேள்விக் குறியுடன் இருந்து வருகின்றனர். மக்களின் இவ்வாறான வேதனைகளைப் புரிந்து கொள்ளாத அரசு மக்களை திசை திருப்ப ஜெனீவாப் பிரச்சினையைக் கூறிக் கொண்டு மேற்குலக நாடுகள் இலங்கை மீது ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகக் கூறி வருகின்றன. அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு இலங்கையை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இலங்கை தேசிய உற்பத்திகளில் 65 வீதமானவற்றை அமெரிக்க மேற்குலக நாடுகளில் கொள்வனவு செய்கின்றது. இதேவேளை அரசாங்கத்தின் அமைச்சர்களும் ஜெனீவா பிரச்சினை பற்றி ஒவ்வொரு விதமான கருத்துக்கக் கூறி வருகின்றனர். இவ்வாறான நிலைப்பாடுகளால் அரசாங்கம் பல்வேறு சிக்கல்களுக்குள் சிக்கிக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாக அரசாங்கம் இதனைச் சீர் செய்ய இன்னும் ஒரு வருடத்திற்குள் அரசைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலுக்கு செல்லலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

சித்திரை 02, 2012

ஏன் இந்த கொலைவெறி?

இலங்கை மீது சர்வதேச பொருளாதார தடை - திராவிடர் கழக தலைவர் வீரமணி

இலங்கை மீது சர்வதேச நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார். கரூரில் நடைபெற்ற உரிமை பாதுகாப்பு பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், காவிரி நீர் பிரச்சினையில் கட்சி பாகுபாடின்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். காவிரி நீர் பாயும் தமிழகத்தில் உள்ள நிலங்கள் தற்போது பாலை வனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் இனி தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள். மக்கள் மறதிதான் அரசியல்வாதிகளுக்கு மூலதனம், ஆனால் கறுப்பு சட்டை மாறாது என்றார். மேலும் அவர் இலங்கை விவகாரம் தொடர்பில் கூறுகையில், இலங்கைக்கு உலக பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழ்வுக்காக ஒருமித்த குரல் கொடுப்போம். அங்கு தமிழர்களின் வாழ்வுரிமைக்கு ஒரே தீர்வு, தமிழ ஈழமே. எனவே இலங்கையில் தமிழ் ஈழம் வேண்டும். இதற்காக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் உருவாக்க வேண்டும். அதன் மூலம் இலங்கையில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

சித்திரை 02, 2012

மியன்மார் தேர்தல்

ஆங் சான் சூ கியி தலைமையிலான கட்சி வரலாற்று வெற்றி

மியன்மாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில், ஆங் சான் சூ கியி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உத்தியோகபூர்வ முழுமையான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையிலும், காவ்ஹ்மு பிரதேச தொகுதியில் போட்டியில் வேட்பாளாராக களமிறங்கிய சூ கியி அங்கு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு மியன்மாரின் 664 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் இராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி பெற்றது. எனினும் அத்தேர்தலை சான் சூகி புறக்கணித்திருந்தார்.  இந்நிலையில் மீதமுள்ள 45 இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்முறை போட்டியிட தீர்மானித்த ஆன் சான் சூகியியின் கட்சி அனைத்து வேட்பாளர்களையும் பிரச்சாரத்திற்கு களமிறக்கியிருந்தது. இத்தேர்தல் சுதந்திரமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்தியா சார்பில் 2 கமிஷனர்கள் இடம்பெற்றிருந்தனர், இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் பின்னர் தற்போது முடிவுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், சான் சூ கீ உட்பட அவரது கட்சியினர் 40 க்கு மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம், எதிர்வரும் 2015ம் ஆண்டு மியன்மாரில் நடைபெறும் பொது தேர்தலில் அங்கு சாங் சூ கீ யின் ஜனநாயக கட்சி ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளதுடன், மியன்மாரின் அதிபராக ஆங் சான் சூ கியி தெரிவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது

சித்திரை 02, 2012

காஷ்மீரில் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய ஐ.நா. கோரல்

காஷ்மீரில் அமுலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்திய அரசை, ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, எந்த நாடுகளில் இருந்தெல்லாம் புகார்கள் வருகிறதோ, அந்த நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார். ஐ.நா. பொதுச் செயலரால் இந்தப் பிரதிநிதி நியமிக்கப்படுவார். அப்படி நியமிக்கப்பட்டவர் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு சென்று, அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா என, விசாரணை நடத்தி, அது உண்மை என தெரியவந்து அறிக்கை சமர்ப்பித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நாட்டிற்கு, ஐ.நா. சார்பில் கடிதம் அனுப்பப்படும். அதில், தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படும். (மேலும்.....)

சித்திரை 02, 2012

In search of Saviors

Channel 4 and Never-ending Quest by Tamils

(George R. Ckrhushchev)

Everytime diaspora tamils go behind some shepherd to be herded to 'still waters and green pastures', the first thing comes to my mind is "Here we go again!". Tamils have a long history of being sheep in desperate need of shepherds. The jaffna tamil society, which never hesitates to boast its pride on its 'educated jaffna' badge of honor, from time to time, decides to follow one leader or another. Once it chooses its leadership and on its way, there is no place for alternative opinions.(more....)

சித்திரை 02, 2012

வவுனியாவில்

கடும் மழையுடன் மினி சூறாவளி மெனிக்பாமில் 1200 வீடுகள் சேதம் 3600 க்கும் மேற்பட்டோர் மோசமாக பாதிப்பு

வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை கடும் மழையுடன் வீசிய மினி சூறாவளியில், மெனிக் பார்ம் முகாமில் 1200 க்கும் 3600 க்கும் மேற்பட்டோர் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா செட்டிகுளம் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மழை பெய்துகொண்டிருந்தது. இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் கடும் மழை பெய்யத் தொடங்கவே பலத்த காற்றும் வீசியது. இது மினி சூறாவளியாக மாறியதால் மெனிக்பாம் முகாம் பகுதி பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.  ஆனந்த குமாரசாமி முகாமும் கதிர்காமர் முகாமும் இந்த மினி சூறாவளியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. இதுவரை மீள்குடியேற்றப்படாத முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 4000 க்கும் மேற்பட்டோர் இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். மினிசூறாவளியால் ஆனந்தகுமாரசாமி கிராமத்தில் 950 தற்காலிக வீடுகளும் கதிர்காமர் கிராமத்தில் 274 தற்காலிக வீடுகளும் பெரும்பாலும் சேதமடைந்தன. இதேவேளை தங்குமிடங்களுக்க பயன்படுத்திய தகரங்கள் பறந்ததன் காரணமாக காயமடைந்த 15 பேருக்கும் அதிகமானவர்கள் அம்புலன்ஸ்கள் மூலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சிகிச்சை பெற்ற சிலர் மீளவும் நலன்புரி நிலையத்திற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியெங்கும் மின்சார தடைப்பட்டுள்ளதால் நலன்புரி நிலையத்தின் நிலைமைகளை முழுமையாக கண்காணிக்க முடியாதிருப்பதாக செட்டிக்குளம் பிரதேச செயலக தகவல்கள் தெரிவித்தன. நலன்புரி நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி பணிகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அப்பகுதி மக்களும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சித்திரை 02, 2012

ஏப்ரல் 15 இல் இலங்கை செல்கிறது அனைத்தக் கட்சி குழு

இலங்கைக்கு விரைவில் அனைத்துக் கட்சி எம்.பிகள் குழு செல்ல உள்ளது.அனேகமாக ஏப்பரல் 15ம் திகதிக்கு மேல்,எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில்,இந்தக் குழு இலங்கை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை,புணரமைக்கும் பகுதிகளுக்கு இந்தியா உதவி வருகிறது.ஏற்கனவே,500 கோடி ரூபாய் வரை,இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது.அந்த நிதியைக் கொண்டு,வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,இப்பணிகளை பார்வையிடுவதற்காக தேசிய அளவிலான அனைத்துக்ட்சி குழுவை அனுப்ப,மத்திய அரசு தயாராகி வருகிறது.இக்குழுவுக்கு எதிhக்ட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்கவுள்ளார். இக்குழு அமைக்கப்படும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.அனேகமாக ஏபரல் 15க்கு மேல், இக்குழு இலங்கைக்கு பயணமாகி,வீடு கட்டும் பணிகளை பார்வையிட்டு திரும்பும் என,தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்திரை 02, 2012

Beauty of Mathematics!!!!!!!

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10=  1111111111

சித்திரை 02, 2012

தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து 19ம் திகதி தொடக்கம்

தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய கப்பல் போக்குவரத்து துறை  நடவடிக்கை எடுத்தது. அதன்படி கடந்த ஆண்டு ஜீன் மாதம் தூத்தக்குடி-கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.1240பேர் பயணிக்க கூடிய வகையில் தனியாருக்கு சொந்தமான பிரமாண்ட கப்பல் இயக்கப்பட்டது. ஆனால் அந்த கப்பலில் மிகக்குறைந்த அளவே பயணிகள் பயணித்ததால்,கப்பலை இயக்கிய தனியார் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அந்த நிறுவனம் தூத்துகுடி-கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை நிறுத்தியது. அந்த கப்பலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேரரிக்கை எழுந்தது. அன்படி தூத்துக்குடி-கொழும்பு இடையே வருகிற 19ம்திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

சித்திரை 02, 2012

சித்திரை 02, 2012

ஒரு ராணுவ அதிகாரி கூறிய உண்மை கதை!!

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை. ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார். (மேலும்.....)

சித்திரை 02, 2012

வட பகுதியின் எந்தவொரு பிரதேசத்திலும் மீன்பிடி தடை இல்லை

வட பகுதி கடலின் எந்தவொரு பிரதேசத்திலும் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லையென யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இதன்படி இலங்கை மீனவர்கள் எப்போது வேண்டுமானாலும் வட பகுதியின் எந்தவொரு பகுதியிலிருந்தும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியுமெனவும் அவர் கூறினார். யுத்தம் இடம் பெற்று வந்த காலப் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கே சில பிரதேசங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மோதல்கள் முடிவுக்கு வந்து நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது முதல் அரசாங்கத்தினால் வடக்கின் அனைத்துப் பகுதி ளிலிலுமிருந்த மீன்பிடி தடைகள் முற்றாக நீக்கப்பட்டன. அது முதல் வடக்கின் அனைத்துப் பகுதி களையும் சேர்ந்த மீனவர்கள் சுதந்திரமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின் றனர். இதுவரைக் காலமும் அதில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. வடக்கின் எப்பகுதியிலிருந்தும் எந்நேரமும் மீனவர்கள் இந்திய அரசாங்கத்தின் எல்லை வரை சென்று சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட முடியுமெனவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறினார்.

சித்திரை 02, 2012

லிபியாவில் கிளர்ச்சியாளர் மோதல்: பலி 147 ஆக அதிகரிப்பு

லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையில் கடந்த ஒரு வாரகாலமாக ஏற்பட்ட மோதலில் 147 பேர் கொல்லப்பட்டதோடு 395பேர் காயமடைந்தனர். லிபியாவின் தெற்கு நகரான சபாவிலேயே இந்த மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலை கட்டுப்படுத்த லிபிய இடைக்கால அரசு தொடர்ந்து முயற்சித்துவருவதாக அந்நாட்டின் பிரதமர் அப்துர் ரஹிம் அல் கைப் திரிபோலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார். டொபவ் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. தமது இனத் தவர் ஒருவரை டொலவ் கிளர்ச்சியாளர்கள் கொன்றதாக பழங்குடியினர் கடந்த திங்கட்கிழமை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்தே இரு தரப்பு மோதல் வெடித்தது.  முஅம்மர் கடாபி அரசு கவிழ்க்கப்பட்ட பின்னர் அந்த அரசுக்கு எதிராக போராடிய கிளர்ச்சியாளர்கள் இன்னும் ஆயுதங்களை களையவில்லை. இதனால் அங்கு தொடர்ந்து மோதல்கள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை 02, 2012

அமெ.டொலருக்கான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கான இலங்கை நாணயத்தின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க கடந்த வாரம் இலங்கை அரசு முயற்சிகளை எடுத்திருந்த போதும் அது பெரிதும் வெற்றி பெறவில்லை. கடந்த மாதம் அமெரிக்க டொலர் ஒன்று 111 ரூபாவாக குறைந்தது. கடந்த 19 ஆம் திகதி அமெ.டொலர் ஒன்றுக்கு எதிராக 131.60 ரூபா என்ற நிலையை எட்டியது. இந்நிலையில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியை 125 ரூபாவாக நிலைநிறுத்த இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து கடந்த வாரத் தொடக்கத்தில் தளம்பலான நிலையே காணப்பட்டது. டொலருக்கான இலங்கை நாணயத்தின் பெறுமதி கடந்த வியாழன் 127.60 ரூபாவாக உயர்ந்தது. ஆனால் நேற்று முன்தினம் மாலை வர்த்தக முடிவின் போது இலங்கை நாணயப் பெறுமதி மேலும் சரிந்து டொலருக்கான மதிப்பு 128.30 ரூபா என்ற நிலையை அடைந்தது. இதனால் ரூபாவின் மதிப்பைக் குறைக்கும் இலங்கை அரசின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

சித்திரை 02, 2012

சித்திரை 01, 2012

பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல இனப்பிரச்சினை குறித்தும் சிந்திப்பது குறைந்து விட்டது - அமைச்சர் டியூ _

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்படாவிட்டால் சமூகத்தின் கீழ் மட்டத்திற்கான அரசின் நலன்புரிகளைக் கொண்டு செல்ல முடியாத நிலையேற்படும். ஆனால் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இல்லாமை கவலையளிக்கின்றது என்று அமைச்சர் டி.யூ.குணசேகர பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். பொருளாதாரப் பிரச்சினை தொடர்பாக மட்டுமல்ல இனப்பிரச்சினை தொடர்பாகவும் சிந்திப்பது குறைந்து விட்டதென்றும் அமைச்சர் கூறினார்.
(மேலும்....)

சித்திரை 01, 2012

முதலமைச்சர் வேட்பாளராக தயா மாஸ்டர்? அப்போ குமரன் பத்மநாதனின் நிலை.....?

வடமாகாண சபைத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் தயாராகி வருவதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதற்காக அவர் தன்னைத் தயார் படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் தயா மாஸ்டர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் உயர் பதவி வகிப்பதுடன் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த ஊடக் நண்பர்கள், வடமாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அவர் இல்லையெனப் பதிலளிக்கவில்லை. அதன் மூலம் அவர் தனது விருப்பத்தையும், சம்மதத்தையும் தெரியப்படுத்தியுள்ளார். எனினும் தான் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பதில் சிக்கல் நிலை உள்ளதாக ஊடக நண்பர்களிடம் தெரி வித்த அவர் தற்போது தான் சகலரா லும் நேசிக்கப்படும் ஒருவராக உள்ள தாகவும் அதனால் மக்களின் விருப்பமே தனது விருப்பம் எனவும் தெரி வித்துள்ளதுடன், புலிகள் அமைப்பிலிருந்த போதும் தான் மக்களுக்குச் சேவை செய்வதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தங்களை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு அவர்கள் கேட்டால் தங்களது முடிவு எவ்வாறு அமையும்? எனக் கேட்டதற்கு மெளனத்தை பதிலாகத் தந்து சம்மதத்தை நாசூக்காகத் தெரிவித்துக் கொண்டார்.

சித்திரை 01, 2012

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கும் இதுவே நடைபெறப்போகின்றதா....?

பியாந்த்சிங் கொலையாளி கருணை மனுவை ஏற்க மறுப்பு!

பியாந்த்சிங் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள பல்வந்த்சிங் ரஜோவ்னாவுக்கு கருணா காட்டக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலை வழக்கில் பல்வந்த்சிங் ரஜோவ்னா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தற்போது பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை இன்று தூக்கில்போட சண்டிகார் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஜோவ்னாவை தூக்கில் போடக்கூடாது என்று பஞ்சாப் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நிறைவேற்றப்படுவதாக இருந்த இவரது தூக்குத் தண்டனையை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அனுப்பிய கருணை மனுவை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ரஜோனா சார்பில் அபினவ் ராமகிருஷ்ணா என்பவர் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த கருணை மனுவை பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும், ரஜோவ்னா சார்பில் மற்றொருவர் தாக்கல் செய்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதேபோன்ற ஒரு கருணை மனுவை தாக்கல் செய்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு தங்களது கருணை மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

சித்திரை 01, 2012

இலங்கையை அடுத்து இந்தியாவில் கைவைக்கும் ஐநா...

காஷ்மீரில் ஆயுதப்படை சட்டத்தை ரத்து செய்யுங்கள் : இந்திய அரசுக்கு ஐ.நா., அமைப்பு வலியுறுத்தல்

"காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என மத்திய அரசை, ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, எந்த நாடுகளில் இருந்தெல்லாம் புகார்கள் வருகிறதோ, அந்த நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார். ஐ.நா., பொதுச் செயலரால் இந்தப் பிரதிநிதி நியமிக்கப்படுவார். அப்படி நியமிக்கப்பட்டவர், குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு சென்று, அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா என, விசாரணை நடத்தி, அது உண்மை என தெரியவந்து அறிக்கை சமர்ப்பித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நாட்டிற்கு, ஐ.நா., சார்பில் கடிதம் அனுப்பப்படும். அதில், தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும். அதேபோல், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா என, விசாரணை நடத்திய ஐ.நா., பிரதிநிதி ஹெய்னஸ் கூறியுள்ளதாவது:காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோரை சுட, ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இதற்காக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற சட்டம் அமலில் உள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில், இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை. எனவே, அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். என்னுடைய காஷ்மீர் பயணத்தின்போது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கொடுமையானது, வெறுக்கத்தக்கது என, பலரும் வர்ணித்தனர். இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டம் அமலில் இருப்பது சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானது.அரசியல் சட்ட ரீதியான உத்தரவாதங்கள் இருந்த போதும், வலுவான மனித உரிமைச் சட்டங்கள் அமலில் இருக்கும்போது, இந்தியாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இது கவலை தரும் விஷயம்.இவ்வாறு ஹெய்னஸ் கூறியுள்ளார். ஆயுதப் படை சிறப்பு அதிகாரத்தை, ரத்து செய்ய வேண்டும் என, காஷ்மீரில் ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ஐ.நா., அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.

சித்திரை 01, 2012

Beauty of Mathematics!!!!!!!
 
1 x 8 + 1= 9
12 x 8 + 2= 98
123 x 8 + 3= 987
1234 x 8 + 4= 9876
12345 x 8 + 5= 98765
123456 x 8 + 6= 987654
1234567 x 8 + 7= 9876543
12345678 x 8 + 8= 98765432
123456789 x 8 + 9= 987654321

சித்திரை 01, 2012

கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணர் கோவிந்தராஜவிற்கு அவர் பிறந்த ஊரான சம்மாந்துறையில் வரவேற்பு

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணர் கோவிந்தராஜவிற்கு அவர் பிறந்த ஊரான சம்மாந்துறையில் வரவேற்பு விழாவொன்று சம்மாந்துறை மக்களால் முன்னெடுக்கப்பட்டது. விழாவிற்கு அவரது துணைவியார் கசிதம் வரவேற்றப்பட்டு நினைவு கேடயம் ஒன்றும் மக்களால் அவருக்கு வழங்கப்பட்டது. அங்கு நடைபெற்ற விழாவில் உபவேந்தர் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

சித்திரை 01, 2012

ஏப்.19-ல் மீண்டும் தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல்

தூக்குடி- கொழும்பு இடையே ஏப்ரல்.19-ம் தேதி முதல் மீ்ண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் ‌என துறைமுக பொறுப்புக்கழக ‌தலைவர் தெரிவித்தார். தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவர் சுப்பையா கூறியதாவது:தூத்துக்குடி துறைமுகம் இந்தாண்டு 281 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன்மாதம் 13-ம் தேதி தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. அது கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதற்கு தொழி்ல்நுட்ப கோளாறு மற்றும் ‌எரிபொருள் காரணம் ஆகும். தற்போது இதனை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 19-ம் தேதிமுதல் இயக்க நடவடிக்க‌ை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் 450 பேர் பயணிக்க முடியும். வாரம் இருமுறை (செவ்வாய், வியாழன்)ஆகிய கிழமைகளில் இயக்கப்பட உள்ளது என்றார்.

சித்திரை 01, 2012

கிரிஷ் ஹானியை  கொன்றவர்கள் நோக்கம்...???

லோபமுத்ரா

கிரிஷ் ஹானி 1993 ஏப் ரல் 10 ஆம் நாள் தன் னுடைய வீட்டருகே காரிலிருந்து இறங் கும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் கொலைக்குப் பின்னே மிகப் பெரும் சதி இருப்பதை தென்னாப் பிரிக்கா மட்டுமல்ல உலகமே அறியும். அவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடே கொந்தளித்தது. மக்களை அமைதிப்படுத்திட வேண்டி அப்போது பதவியில் இல்லாவிட் டாலும் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தொலைக்காட்சியில் தோன்றி ஆற்றிய உரை மிக முக்கிய மானது. “தென்னாப்பிரிக்கா முழுவதும்- மூலை முடுக்குகள் உட்பட வாழ்கிற அனைவரின் ஆழ்ந்த வேதனையில் நானும் பங்கேற்கிறேன். வெறுப் போடும் அநீதியோடும்தான் வெள் ளையர் இங்கே வந்தார்கள். எனினும் இன்று தன் உயிரைப் பணயம் வைத்து நமது பாசத்துக்குரிய ஹானியை காப்பாற்ற முயன்றவரும் ஒரு ஆப்பிரிக்க வெள்ளைப் பெண் ணல்லவோ. அதனால்தானே நாம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தமுடிகிறது. (மேலும்....)

சித்திரை 01, 2012

நினைத்தேன் எழுதுகிறேன்.

(அ.செல்வகுமார்)

ஒரு காலத்தில், அதாவது, இலங்கையின் வடக்கு-கிழக்கில்அங்குள்ள அரசியல் கட்சிகள் எதையும் செய்ய முடியாமல் இருந்தது.   தமிழ் கட்சிகள் தங்களது மாநாட்டையோ இன்னபிற செயல்பாடுகளையோ தற்போது வடக்கு-கிழக்கில் செய்யத் தொடங்கியுள்ளனர். வடக்கு-கிழக்கில் இவ்வகை செயல்பாடுகளை செய்ய முடியாத காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி  தனது முதலாவது காங்கிரசை1984 இல் கும்பகோணத்திலும், இதில் அதன் செயலாளர் நாயகம் பத்மநாபா பங்குபற்றினார். இந்த முதலாவது மாநாடு நடந்த காலகட்டம் மிக நெருக்கடியானது ஆகும்.இந்த காலகட்டங்களில் இலங்கையில்ஆயுத  போராட்டத்தில் சகல இயக்கத்தாரும் ஈடுபட்டனர். (மேலும்....)

சித்திரை 01, 2012

ஈரானிடமிருந்து இந்தியாவும் சீனாவும் எண்ணெய் வாங்கக்கூடாது - ஒபாமா

தேவையான அளவிற்கு எண் ணெய்யை சேமித்து வைத்திருப்பதா கவும், எனவே ஈரான் மீது மிகக்கடுமை யான தடைகளை விதிக்கவும், அதைத் தொடர்ந்து அந்நாட்டைத் தாக்கவும் வேண்டிய ஏற்பாடுகளை உடனடியாக செய்ய இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதி பதி பாரக் ஒபாமா கூறியுள்ளார். ஈரானிடமிருந்து எண்ணெய் இறக் குமதியைக் குறைத்துக்கொள்ளுமாறு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அவர் ‘அறிவுரை’ கூறியுள்ளார். ஈரானிடமிருந்து பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்துகொள்ள இந்தியா, சீனா, துருக்கி, தென்கொரியா உள்பட 12 நாடுகளுக்கு மட் டும் தனது நிர்வாகம் ‘அனுமதி’ அளித்தி ருப்பதாகவும், ஜூன் மாதத்திற்கு மேல் இந்த அனுமதியைத் தொடர முடியாது என்றும் அதற்குள்ளாகவே இந்த நாடுகள் ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். (மேலும்....)

சித்திரை 01, 2012

அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்புகளை மீறி வடகொரியா 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியுள்ளது. வடகொரியா அடுத்த மாதம் ரொக்கெட் ஏவப் போவதாக அறிவித்தது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரொக்கெட் ஏவும் திட்டத்தை கைவிடும்படியும், அதை மீறி நடந்து கொண்டால் உணவு வழங்கும் திட்டத்தை நிறுத்தப்போவதாகவும் அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் அடுத்த வாரம் ஆலோசனை நடத்த உள்ளன. இந்நிலையில் வடகொரியா குறைந்த தூரம் சென்று தாக்கும் 2 ஏவுகணைகளை ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தியது. அந்நாட்டின் மேற்கு கடற்கரையில் இந்த ஏவுகணை சோதனை நேற்று முன்தினம் நடைபெற்றது என தென்கொரியா இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

சித்திரை 01, 2012

தனுஷ்கோடி மணல் திட்டில் இலங்கை வாலிபர்: மீட்க அதிகாரிகள் நடவடிக்கை!

தனுஷ்கோடி முதலாவது மணல் திட்டில் இருக்கும், இலங்கை நபரை மீட்க, ராமேஸ்வரம் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இலங்கை புங்குடு தீவை சேர்ந்த சதீஷ்குமார், 35, சில நாட்களுக்கு முன், ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித் திரிந்தார். இவரை, போலீசார் பிடித்து சோதனை செய்தனர். இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்ததால், புலனாய்வு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். புலனாய்வு துறையினரின் விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன், இலங்கையிலிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்தது தெரியவந்தது. ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்க வந்ததாக தெரிவித்தார். "விரைவில் இலங்கை செல்வேன்' எனக் கூறிய இவரிடம், "தேவையில்லாமல் சுற்றித் திரியக் கூடாது' என, போலீசார் அறிவுறுத்தினர். இந்நிலையில், நேற்று அதிகாலை, தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்ற இவர், அங்கிருந்து கடலில் நீந்தி, தனுஷ்கோடி கடலில், முதலாவதாக உள்ள மணல் திட்டுக்கு சென்றார். அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், அவரைப் பார்த்ததும், அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இவரை மீட்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com