Contact us at: sooddram@gmail.com

 

Mtzp 2010 khjg;; gjpTfs;

ஆவணி, 31, 2010

கனடா நோக்கி மேலும் ஒரு கப்பல் பயணம்

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நோக்கில் மேலும் ஒரு கப்பல் தாய்லாந்தில் இருந்து கனடா நோக்கி பயணிக்க இருப்பதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது. 'கிளோப் அன்ட் மெயில்"என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், அந்த கப்பலில் பயணிக்க இருப்பவர்களின் பெரும் பாலானோர் இலங்கை தமிழர்கள் எனவும் தெரிவித்துள்ளது. தாய்லாந்திற்கான இரண்டு வார கால சுற்றுலா வீஸா பெற்று பாக்கோக் வரும் இலங்கையர்கள், பின்னர் அங்கிருந்து கனடா நோக்கி, சட்ட வீரோத ஆட் கடத்தல் படகு மூலம் செல்வதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்...)

ஆவணி, 31, 2010

சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 8ஆம் திகதி

உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேற்படி திருத்தச் சட்ட மூலத்திற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதோடு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய யாப்பு திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதியொருவர் இரு தடவைக்கு மேல் பதவிவகிக்க முடியாது என்ற சரத்து நீக்கப்பட்டு வரையறையின்றி எத்தனை தடவையும் போட்டியிட முடியும் என திருத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயம் பாராளு மன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் யாப்பு திருத் தப்படவுள்ளதோடு அரசியல மைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். (மேலும்...)

ஆவணி, 31, 2010

வடமாகாண விவசாய அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்

வட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால் நடைகள், மீன்பிடி மற்றும் காணி அமைச்சும், அதன் கீழுள்ள சகல திணைக் களங்களும் நாளை (1) முதல் கிளிநொச்சி நகருக்கு இடமாற்றப்படுகின்றது. இதற்கமைய நாளை புதன்கிழமை தொடக்கம் குறித்த அமைச்சும் அதன் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களும் கிளிநொச்சியிலிருந்து செயற்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். (மேலும்...)

ஆவணி, 31, 2010

பெண்ணின் உடலில் ஆணி செலுத்திய சவூதி தம்பதியர் கைது

இலங்கைப் பணிப் பெண்ணான ஆரியவதியின் உடலில் ஆணி செலுத்தி துன்புறுத்திய தம்பதியர், சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைப் பணிப்பெண் மீது 24 ஆணிகளை அடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டு, மேற்படி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் பணி புரிந்த வீட்டுச் சொந்தக்காரரான 35 வயது ஆணையும் 29 வயதான அவரது மனைவியையுமே இவ்வாறு சவூதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 28ம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண்மணிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பெண் வாக்குமூலம் அளிப்பதற்காக சவூதி அரேபியா செல்வார் எனவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித் துள்ளது.

ஆவணி, 31, 2010

ஒரு புறத்தில் சீனத் தூதுக்குழு மறுபுறத்தில் இந்திய தூதுக்குழு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அடங்களான உயர் மட்டக் குழுவினர் இன்று வட பகுதிக்கு விஜயம் செய்து, அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட உள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் அடங்களாக குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர். நிருபமா ராவ் இன்று வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறார். மெனிக்பாம் முகாமிற்கு சென்று இடம்பெயர்ந்த மக்களின் நலன்குறித்து நேரில் பார்வையிட உள்ள அவர், பின்னர் மகிழங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அவதானிக்க உள்ளார். யாழ், கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கும் செல்ல உள்ள அவர் அப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அபி விருத்திப் பணிகளையும் பார்வையிடுவார். நாளை திருகோணமலைக்குச் செல்ல உள்ள நிருபமா ராவ் நாளை மறுதினம் ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திப்பார்.

ஆவணி, 31, 2010

சீனாவின் 200 பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் கின் குவான்ரொங்க் தலைமையில் இரு நூறு பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இன்று 31ம் திகதி இலங்கைக்கு வருகை தருகின்றது. கொழும்பில் நடைபெறவி ருக்கும் வர்த்தகக் கண்காட்சியில் பங்குபற்றுவ தற்காக வருகை தருகின்ற இக்குழுவினர் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுடன் நாளை முதலாம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர். இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான நற்புறவை மேலும் மேம்படுத்தல் மற்றும் பொரு ளாதார, அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவிருப்பதாக பிரதமர் அலுவலக அதிகாரியொருவர் கூறினார். இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இலங்கைக்குப் பெரிதும் பயனளிக்கக் கூடிய நான்கு புரிந்துணர்வு உடன்படிக் கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. மின்சக்தி, எரிசக்தி, உயர் கல்வி, விவ சாயம், தொலைத் தொடர்பு சேவை ஆகிய துறைகள் தொடர்பாகவே இப்புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆவணி, 31, 2010

அமெரிக்கப்படைகளின் வெளியேற்றம் தலிபான்களைப் பலப்படுத்தும்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ளும் பராக் ஒபாமாவின் தீர்மானத்தால் தலிபான்கள் புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி தெரிவித்தார். அமெ ரிக்க அதிகாரிகளை காபூலில் சந்தித்த வேளை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இதைக் கவலையுடன் கூறினார். 2011ம் ஆண்டு ஜுலை மாதமளவில் ஆப்கானிஸ் தானிலுள்ள அமெரிக்கப்படைகளை வாபஸ்பெற ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இந்த ஒன்பதாண்டு யுத்தத்தில் இலட்சியம் எதுவும் நிறைவேறவில்லை. தலிபான்களின் உறைவிடமாகவும் புகலிடமாகவும் அயல் நாடுகள் உள்ளன. அவர்களின் வன்முறைகள் தொடர்வதால் பொதுமக்களை நாளாந்தம் இழந்து வருகின்றோம். (மேலும்...)

ஆவணி, 31, 2010

இது நிஜம், திகிலூட்டும் திரைப்படம் அல்ல

சுரங்கத்துக்குள் அகப்பட்டோரை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்

சிலியின் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளோருடன் உறவினர்கள் பேச வானொலிக்கருவிகள் செலுத்தப்படுவதைக் காணலாம்.

சிலியில் சுரங்கத்துக்குள் மாட்டிக் கொண்டோருடன் உறவினர்கள் வானொலிக் கருவி மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். மனைவிமார், குழந்தைகள், உறவினர்கள் எனப் பெருந்தொகையானோர் சுரங்கத்துக்குக்குள் அகப்பட்டோருடன் பேசுவதற்கு முண்டியடித்துக் கொண்டனர். 24 நாட்களாக 33 சுரங்க தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் மாட்டியுள்ளனர். இவர்களை வெளியே மீட்டெடுக்க நான்கு மாதங்கள் தேவைப்படுமென முன்னர் கூறப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இவர்களை வெளியே கொண்டுவர முயற்சிகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன. எழுநூறு மீற்றர் ஆழத்தில் இவர்கள் உள்ளனர். நவீன கருவிகள் மூலம் சுரங்கப் பாதையைத் தோண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. துளைகளுடாக கொக் கப்பட்ட வானொலிக் கருவிகளை கொண்டு இவர்கள் சுரங்கத்திற்குள்ளோரிடம் பேசினர். (மேலும்...)

ஆவணி, 31, 2010

வீட்டுப் பணிப்பெண்களுக்கு பாதுகாப்பும் காப்புறுதியும்

வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்றிருக்கும் இலங்கைப் பெண்களின் பாதுகாப்பையும் அவர்கள் மனிதாபி மான முறையில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத் தும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. அவர்கள் மூலம் இலங்கைக்கு அந்நியச் செலாவணி கிடைக் கின்றது என்பதனால் மாத்திரமன்றி, அவர்கள் இலங் கைப் பிரசைகள் என்பதனாலும் அரசாங்கத்துக்கு இக்கடப்பாடு உண்டு. வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களை அனுப்பும் முகவர் நிலையங்கள் வலுவான சட்டக் கட்டுப் பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம். பணிபுரியும் நாடுகளில் இப் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அதே போல காப்புறுதியும் வேண்டும். இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்தது.(மேலும்...)

ஆவணி, 31, 2010

தர்மபுரி பஸ் எரிப்பு

மூவருக்கு இன்று தூக்குத்தண்டனை உறுதி

2000ஆம் ஆண்டில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பஸ் ஒன்றை, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து எரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு இன்று தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆந் திகதி கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்வருமான ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து நீதிமன்றில் தீர்ப்பு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் ஓரங்கமாகவே இந்த பஸ் எரிப்பும் நிகழ்ந்தது. பஸ் எரிப்பில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். (மேலும்...)

ஆவணி, 30, 2010

30.08.2010 ரிபிசியின் விசேட அரசியல் கலந்துரையாடலில்: பேராசிரியர் ரட்னஜீவன் கூல்

இந் நிகழ்ச்சியில் – பேராசிரியர் ரட்னஜீவன் கூல் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் தேசம் இணையதளத்தின் பிரதம ஆசிரியர் த ஜெயபாலன் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர்       செ ஜெகநாதன் மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர் மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்பகளுக்கு: 00 44 208 9305313

ஆவணி, 30, 2010

புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் பொறுப்பாளரும் தற்போது இலங்கை அரசின் பிடியில் உள்ளவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் 'டெய்லிமிரர்' ஆங்கில பத்திரிகைக்காக பேட்டி கண்டார்.(நான்காவது பாகம்)

மீண்டும் சொல்கிறேன், நான் கேள்விப்பட்ட விடயங்களை வைத்துக்கொண்டு, நான் என்ன நினைக்கின்றேன் என்பதை மட்டும்தான் நான் கூறமுடியும். கடந்த காலத்தில் பெற்ற விரும்பத் தகாத அனுபவங்கள் காரணமாக அநேகமான அரச சார்பற்ற நிறுவனங்களை அரசு நம்பவில்லை என நான் நினைக்கின்றேன். இதனால்தான் பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிதான் வழங்கப்பட்டிருக்கிறது . தமிழக்கட்சிகளும் முன்னர் கிடைத்த வாய்ப்புகளை தவறாக பயன்படுத்தின அல்லது துஷ்ப்பிரயோகம் செய்தன. இதனால் அவர்கள் மீதும் அரசினர் நம்பிக்கையற்று உள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்களது பிரச்சினை பாதுகாப்பு மற்றும் அரசியல் என்பவற்றுடன் தொடர்புறுகின்ற, மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய விடயமாக உள்ளது.(மேலும்....)

ஆவணி, 30, 2010

இரு வரிக் கவிதைகள் கூறும் கதைகள்....

நாடு கடந்த அரசு

பாதியில நின்று போன பட்டுவாடாவின்

மீதியையும் மீட்டெடுக்கும் மீளாய்வு

 

கூட்டமைப்பு

' ஒற்றுமை' க்கு எதிராக

ஓரணியில் ஒன்றுபட்டவர்கள்

 

துரோகி

அப்பாவிகளின் கொலைகளுக்கு

படுபாவிகள் வைத்த பெயர்

 

ஜே.வி.பி

தமிழ் மக்களை ஒன்றும் செய்யாதவர்கள்

தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவும் விரும்பாதவர்கள்

(மேலும்....)

ஆவணி, 30, 2010

வீதிகளில் நாளாந்தம் வீணான உயிர்ப்பலிகள்

வெறிச்சோடிக் கிடக்கின்ற வீதியொன்றின் மறைவில் நின்றபடி மோட்டார் சைக்கிளில் வருகின்ற ஒருவரின் சாதாரண சிறு குற்றங்களுக்கு அபராதம் விதிப்பதைப் பார்க்கிலும், பலருக்கு மரணத்தை ஏற்படுத்தும் விதத்தில் வாகனப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்படுகின்ற தனியார் பஸ் சாரதிகளைக் கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுக் கொடுப்பதே பிரதானமான தாகும். மக்கள் மத்தியிலுள்ள ஆதங்கமும் இதுதான். குற்றமிழைக்கின்ற தனியார் பஸ் சாரதிகள் குறித்து போதிய கண்காணிப்பு செலுத்தப்படுவதில்லையென்ற கவலை மக்கள் மத்தியில் உண்டு. (மேலும்...)

ஆவணி, 30, 2010

அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர் சிவமகாராசா

சிவமகா ராஜாவை மாத்திரமல்ல, வன்செயலின் காரணமாக துப்பாக்கிக் கலாசாரத்தின் காரணமாக இந்த நாடு இழந்த அருந்தவத் தமிழ்த் தலைவர்களை ஞாபகமூட்டுவது பொருந்தும். இந்த இடத்தில் நான் ஏனையவர்களை விட்டுவிடுகின்றேன். தளபதி அமிர்த்தலிங்கம் ஐயா அவர்கள் இந்தச் சபையிலே எதிர்க்கட்சித் தலைமை ஆசனத்தை அலங்கரித்தவர்! கொடூர பயங்கரவாதிகள் அவரை இங்கே, கொழும்பிலே, பெளத்தாலோக மாவத்தையில்சுட்டுக் கொன்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்! இவர்களும் சிவனின் நாமத்தைத் தமது பெயரின் பகுதியாகக் கொண்டவர்கள். இப்படியாக இன்னும் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். நான் மதிப்பு வைத்திருக்கின்ற மாவை சேனாதிராஜா போன்ற ரி. என். ஏ. கட்சி உறுப்பினர்களுக்கு நன்றாகத் தெரியும். (மேலும்...)

ஆவணி, 30, 2010

டால்ஸ்டாய்க்கு கிடைத்த கூலி

தாங்கள் என்னைக் கூலிக்காரனாக நினைத்ததால் எனக்கொன்று தாழ்வு ஏற்பட்டுவிடவில்லை. ஆனால் நான்தான் டால்ஸ்டாய் என்று தெரிந்து கொண்டதற்காக நீங்கள் கொடுத்த கூலியைத் திரும்பக் கேட்டால் கொடுக்க மாட்டேன். அது நான் உழைத்துச் சம்பாதித்த பணம்’ என்றார் டால்ஸ்டாய். (மேலும்...)

ஆவணி, 30, 2010

அவுஸ்திரேலியாவில் அரசாங்கத்தை அமைப்பதில் தொடர்ந்தும் இழுபறி

150 ஆசனங்களையுடைய அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் இவரது கட்சி 72 ஆசனங்களையே வென்றது. எதிர்கட்சித் தலைவர் டொனி அபொட் 73 ஆசனங்களை வென்ற நிலையில் ஏனைய கட்சிகளின் தயவையும் உதவியையும் நாடியுள்ளார். 76 ஆசனங்களைப் பெற்றால் மாத்திரமே அரசாங்கத்தை அமைக்க முடியும்.  ஆளும்கட்சியின் வெளிநாட்டுக் கொள்கை, வரி விதிப்பு, குடியேற்றக் கொள்கைகளில் அனேகமான மக்கள் அதிருப்தியடைந்தமையால் பிரதமரின் தொழில் கட்சி தோல்வியடைந்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். (மேலும்...)

ஆவணி, 30, 2010

கிளிநொச்சியில் யாழ். பல்கலையின் பொறியியல், விவசாய பீடங்கள்

யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் விரைவில் நிறுவவுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார். இதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; அடுத்த ஆண்டு முதல் ஆங்கில மொழியை ஒரு போதனா மொழியாகப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்துவதுடன் இதற்கிணங்க எமது விரிவுரையாளர்களை இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். (மேலும்...)

ஆவணி, 30, 2010

புனர்வாழ்வு பெற்ற 500 பேர் 4ம் திகதி குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் எதிர்வரும் 04ஆம் திகதி சனிக்கிழமை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட விருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் தெரிவித்தார். வவுனியா பம்பைமடு மத்திய நிலையத்தில் அன்றையதினம் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் கலாசார நிகழ்வினைத் தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்தில் இருக்கும் 500 பேர் தமது குடும்பத்தார் மற்றும் உறவினரிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்படுவரெனவும் அதன் ஆணையாளர் கூறினார். (மேலும்...)

ஆவணி, 29, 2010

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நாளை இலங்கை விஜயம்

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுவரும் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அவர் இலங்கை வரவுள்ளார். இவ்விடயங்கள் சம்மந்தமாக தமிழ் மக்கள் அரங்கம் இவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தமிழ் மக்கள் அரங்கத்தின் பேசவல்ல உறுப்பினர் தெரிவித்தார். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திபொன்றையும் நிருபமா மேற்கொள்வார் என அறியமுடிகின்றது. அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் அரங்குடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவரது விஜயத்தை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி, 29, 2010

வைகோவை அதிரவைத்த கே.பியின் குண்டு

யுத்தத்தின் போது புலிகள் பல்லாயிரக்கணக்கான சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருந்தார்கள். அவர்கள் யுத்த பூமியிலிருந்து வெளியேறுவதற்குப் புலிகள் அனுமதிக்கவில்லை. தடையையும் மீறி வெளியேற முற்பட்டவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினார்கள். இந்த மனிதாபிமானமற்ற செயலை நாகரிக உலகம் வன்மையாகக் கண்டித்தது. புலி இயக்கத் தலைவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடிய வைகோ சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருக்க வேண்டாம் என்று கூறியிருந்தால், இலங்கைத் தமிழரில் அவருக்குப் பற்றும் பாசமும் உண்டு என்று நம்பலாம். கூறுவில்லையே. (மேலும்...)

ஆவணி, 29, 2010

Major constitutional changes next week

  • Hakeem disrupts UNP honeymoon with Rajapaksa

  • SLMC support will enable easy passage for third term and to change 17th Amendment

  • UNP continues to slide as conflicts within conflicts continue

There were two persons in Sri Lanka who could not contest presidential elections, declared President Mahinda Rajapaksa to a United National Party (UNP) delegation which met him at 'Temple Trees' last Monday.One was himself and the other was former President, Chandrika Bandaranaike Kumaratunga, he said. Both are debarred from going for a third term under existing provisions of the Constitution. "Do you want to give her nomination," asked UNP leader Ranil Wickremesinghe somewhat jocularly at the reference to Ms. Kumarartunga. Not to be outdone, shot back Rajapaksa, "I thought you all are looking for a candidate." (more...)

ஆவணி, 29, 2010

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிகின்றார்கள்

பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகி ர்வுத் தீர்வுத்திட்டம் இனப் பிரச்சினைக்குச் சிறந்ததொரு தீர்வு. அந்தத் தீர்வுத்திட்டம் நடைமுறைக்கு வராமற் போனதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும். இவ்விடயத்தில் இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய துரோகம் இழைத்திருக்கின்றன என்பதற்குப் பிந்தியகால துயர நிகழ்வுகள் சான்று. (மேலும்...)

ஆவணி, 29, 2010

மக்களுக்குப் பிரயோசனமான அரசியல் பற்றி இனியாவது சிந்திக்க வேண்டாமா?

சிங்கள அரசியல் கட்சிகளிடமிருந்து இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற முடியாது என்று கூறுவது இந்தத் தலைவர்களின் நீண்டகால வழக்கம். ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல் காலத்திலும் மேடைகளில் இதைக் கூறுவார்கள். ஆனால் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிப்பதற்குத் தங்களுக்குள் சண்டை போடுவார்கள். சிங்களத் தலைவர்கள் தீர்வுக்குச் சம்மதிக்க மாட்டார்களென்றால் பாராளுமன்றத்துக்குச் சென்று எதைச் சாதிப்பது? சாதிக்க முடியாவிட்டாலும் குறைகளை எடுத்துக் கூறுவதற்காகப் பாராளுமன்றத்துக்குச் செல்கின்றோம் என்று இவர்கள் கூறுவார்களேயானால், அதே காரணத்துக்காக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கலாமே. (மேலும்...)

ஆவணி, 29, 2010

விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்

இலங்கை செல்வதற்கு இனி விசா முதலில் எடுக்க வேண்டும்

இலங்கையில் விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கி விசாக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி இருக்காது எனக் குறிப்பிடப்படுகிறது. சகல நாடுகளுக்குமான ஒன் எரைவல் வீசாக்களை ரத்து செய்வதென இலங்கை அரசாங்கசம் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் இலங்கைக்கு வந்து இறங்கியதன் பின்னர் (ஒன் எரைவல்) வழங்கப்படும் விசாக்கள் ரத்து செய்யப்படவுள்ளது. இந்த புதியத் திட்டத்தின் அடிப்படையில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு செல்ல விசா விண்ணப்பிக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி டபிள்யூ.ஏ.சீ பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த நாடுகளுக்கான இலங்கைத் தூதரகத்தில் விசா விண்ணப்பித்து அதன் பின்னரே இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும். எனினும், இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன் எரைவல் விசா வழங்கும் நாடுகளினது பிரஜைகளுக்கு இலங்கை ஒன் எரைவல் விசா வழங்கத் தயார் என அறிவித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைத் தவிர்ந்த வேறு நாடுகளில் இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன் எரைவல் விசா வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆவணி, 29, 2010

மீன்வளம் பெருக கரையோர மீன்பிடித்தலுக்கு ஓய்வுகொடுக்க வேண்டும்

நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக வடக்கு, கிழக்கு கரையோர வாழ் மக்களின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. கடந்த மூன்று தசாப்த காலமாக தமது தொழிலை எதுவித அச்சமும் இன்றி செய்ய முடியாதிருந்தது. போரினால் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்த அந்த மக்களின் வாழ்க்கையில் இப்போது ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. போருக்குப் பின்னர் வடபகுதியில் ஏற்பட்டு வரும் சுமுக நிலை எதிர்கால நடவடிக்கைகள், மற்றும் கடல் வளம், தொடர்பாக யாழ். கடற்றொழில் சங்க சம்மேளனத்தின் தலைவர் வீ. தவரட்ணம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டோம். (மேலும்...)

ஆவணி, 29, 2010

சாரி சாரியாக மக்கள் யாழ். பயணம்

ஏ-9 வீதியில் 24 மணி நேரமும் போ.வ. பொலிஸார் கடமையில்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ-9 வீதியில் 24 மணிநேரமும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகளவு உள்ளூர் உல்லாச பயணிகள் யாழ்ப் பாணத்திற்குச் சென்று திரும்புகின்றனர். அங்கு நடைபெற்றுவரும் கோவில் திரு விழாக்களில் கலந்துகொள்வதற்காக பெரு மளவிலானோர் வருகை தருகின்றனர். இதனால் ஏ- 9 இல் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தென்பகுதியிலிருந்து பெருமளவு சிங்கள மக்கள் நயினாதீவுக்கும் யாழ். நாகவிகாரைக்கும் யாத்திரை செய்து வருகின்றனர். மிகவும் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்படும் இடங்களான ஓமந்தை, புளியங்குளம், மாங்குளம், கிளிநொச்சி, பளை போன்ற பிரதான நகரங்களில் பொலிஸார் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். (மேலும்...)

ஆவணி, 29, 2010

சவூதியிலிருந்து ஆணிகளுடன் வந்த ஆரியவதி

நாகரிகம் வளர்ச்சியடைந்து மனிதன் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளான். மனிதப் பண்புகள் மேலோங்கி விட்டதாக பெருமையாகக் கூறப்படுகிறது. இதனால் பிராணிகளை வதைப்பதைத் தடுக்கவும் கூட பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றின் மீது கைவைத்தால் மிருகவதை எதிர்ப்பு அமைப்புகள் புரட்டி எடுத்து விடுகின்றன. ஆனால் மிருகங்களை விடக் கேவலமாக மனிதர்கள் நடத்தப்படும் அவலம் மற்றொரு பக்கமாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதி சிறந்த உதாரணமாகும். (மேலும்...)

விதவைகள்

மனமாற்றம் ஆண்களிடம் ஏற்பட வேண்டும்

(வாசுகி சிவகுமார்)

விதவைகளுக்கான இந்த மீள் எழுச்சித் திட்டத்தில் விதவா விவாகமும் உள்வாங்கப்பட வேண்டும் என்பது பலரதும் அபிப்பிராயம். 89,000 விதவைகளுக்கும் மறுமணமா? என்று அவ்வாறான முயற்சிகளை முளையிலேயே கிள்ளிவிடும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதவைகளைப் பொறுத்தளவில் பூவும், பொட்டும்தான் நாம் கண்ட அதிக பட்சப் புரட்சிகள். விதவா விவாகம் என்பது இன்னமும் எமக்குப் பேசாப் பொருள்தான். எனவே, விதவைகளுக்கென விடுக்கப்பட்டுள்ள இம்மீள் எழுச்சித் திட்டத்தில் விதவைகள் மறுமணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒட்டுமொத்த சமூக சிந்தனை மாற்றத்துக்கான திட்டங்களும் உள்வாங்கப்படுவது இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவை. (மேலும்...)

ஆவணி, 29, 2010

நேபாளத்தில் ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமா?

பவ்டெல் போட்டியிலிருந்து விலகினால் பிரசண்ட போட்டியின்றித் தெரிவாகுவார். பிரசண்ட பிரதமராகுவதைத் தடுப்பதே நேபாள காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுவதை நிராகரிக்க முடியாது. இந்தியாவினது ஆலோசனையின் பேரிலேயே நேபாள காங்கிரஸ் இவ்வாறு செயற்படுகின்றது என்ற அபிப்பிராயம் நேபாளத்தில் பரவலாக நிலவுகின்றது. பிரசண்டவுக்கு ஆதரவாக வாக்களிப்பதிலிருந்து சிறிய கட்சிகளையும் இந்தியாவே தடுத்திருக்கின்றது என்றும் சொல்கின்றார்கள். பிரசண்ட பிரதமராகப் பதவியேற்றதும் முதலாவதாகச் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டதையிட்டு அந்த நேரத்தில் இந்தியா அதிருப்தி தெரிவித்ததையும், இந்திய மாவோயிஸ்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்குப் பிரதான அச்சுறுத்தலாக இருப்பதையும் பின்னணியாகக் கொண்டு பார்க்கையில், நேபாளத்தில் மாவேயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வருவதை இந்தியா விரும்பாதென்பதைப் புரிந்துகொள்ள முடியும். (மேலும்...)

ஆவணி, 29, 2010

கூட்டு தேசியவாத அடிப்படையில் அரசாங்கத்துக்கு மு.கா ஆதரவு

 “தனித்தனியான தேசியவாதங்கள் தலைதூக்கியிருக்கின்ற இன்றைய நிலையில் இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்துவதற்கு கூட்டுத் தேசியவாதக் கோட்பாடு அவசியம் என்ற நிலையிலேயே அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கிறது.” என மு. கா. தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், “இன்று நாட்டில் சிங்களத் தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம்,முஸ்லிம் தேசிய வாதம் என தேசியவாதம் முரண்பட்டுக் கிடக்கின்றது. இன்று வன்முறை ஒழிக்கப்பட்டிருக்கிறதேயொழிய, தேசியவாத முரண்பாடுகள் ஒழியவில்லை. (மேலும்...)

ஆவணி, 29, 2010

'நீலக்குழந்தை' குறைபாடு உருவாகும் ஆபத்து

யாழ்ப்பாண குடிநீரில் அதிகரிக்கும் நைத்திரேற்றுச் செறிவு

(காவலூர் ஞானி)

யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. இதற்கான முக்கிய காரணமாக இருப்பது குடாநாட்டில் இரசாயனப் பசளைகளின் பாவனையும், உயிராபத்து விளைவிக்கும் பயிர் பீடை நாசினிகளின் அதிக பிரயோகமும் என நீரியல் சம்பந்தமான கல்வியாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இயற்கை அனர்த்தங்களால் நீர் மாசடைவதைவிட மனித இடையூறுகளால் ஏற்படும் விளைவு மிக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென சுட்டிக்காட்டி வருகின்றனர். யாழ்ப்பாண தோட்டங்களில் காணப்படும் கிணறுகளின் குடிநீரை இலங்கை தரநிர்ணய நிறுவகம் ஆய்வுக்குட்படுத்திய போது இந்நீரில் நைத்திரேற்று மட்டங்கள் குடிநீரின் எல்லையிலும் கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். (மேலும்...)

ஆவணி, 28, 2010

இலங்கை அரசிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது

சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இலங்கை அரசுக்கு தனது ஆதரவினை வழங்க முன் வந்துள்ளது. இதனால் இலங்கை பாராளுமன்றத்தில் இலங்கை அரசின் பலம் மூன்றில் இரண்டைவிட அதிகமாகியுள்ளது. தற்போது அரசுக்கு சட்டம் இயற்றுவதில், அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கான சட்டமியற்றலுக்கும், அதனை பாராளுமன்றத்தில் மூலம் சட்டமாக்குவதற்கும் தேவையான பலம் கிடைத்துவிட்டது. தற்போது தேவையெல்லாம் நல்ல மனமும், சிந்தனைகளும்தான். இதனை இலங்கை அரசு செய்யும் என எதிர்பார்ப்போம். ஜேஆர் ஜெயவர்த்தனா அரசு ஐந்தில் நான்கு பெரும்பான்மை பெற்றிருந்து அதனை தமிழ் மக்களுக்கு அடி போடவே பாவித்தார். அதனுடன் ஒப்பிடுகையில் சிறிது குறைந்த ஆனால் தேவையான பலத்தையுடைய மகிந்த அரசு பாராளுமன்றத்தில் சரியான நியாயமான சட்டங்களை இயற்றி வரலாற்றில் இடம் பிடிக்குமா? தமிழ் மக்களிடம் தாமும் இலங்கையர் என்ற தேசப்பற்றை வளர்க்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆவணி, 28, 2010

கனடாவில்

சீமானைக் காப்பாற்ற 32 பேர் கூடினர்

கனடா, ரொறன்ரோவில் இந்திய உணர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பு புலிகளின் பினாமி ஒழுங்கு செய்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 32 nபுர் அளவில் கலந்து கொண்டனர். இந்திய சிறையில் பாதுகாப்பாக இருக்கும் சினிமா சீமானை மீட்க இவர்கள் கோஷம் எழுப்பினர். கடந்த வருடம் இதே சீமானை கனா அரசு நாட்டை விட்டு கடத்தியது. தற்போது கனடா அரசும் அனுமதிக்காது இவர் கனடா வர. இவரால் ஏமாற்றப்பட்ட தமிழ் வியாபாரிகளும் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் இன்னமும் 32 பேர் ஆலவட்டம் பிடிக்க ரொறன்ரோவில் இவருக்கு இருப்பது ஆறுதலான விடயம்தான்.

ஆவணி, 28, 2010

காலத்துக்கு காலம் மாறும் துரோகம்

(மோகன்)

முள்ளிவாய்க்கால் முத்தியடைவு நிகழ்வுக்கு மாபேரும் காரணம்  இந்தியா என நினைத்து அதனை துரோகத்தின் சிகரமாய் வர்ணித்து கத்தோ கத்தென்று கத்தியதெல்லாம் கொஞ்சநாளில் சந்திரனை பார்த்து நாய் குலைத்த கதையாய் அடங்கிபோனது. தலைவர் இறந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும் அவர் எப்படி இறந்தார் என்பதிலுள்ள உண்மையை தெரிந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற காரணத்தினால் அந்த மனுசனை இந்த ஜடங்கள் இன்னமும் உயிரோடு வைத்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 'நீ முன்னால போ நான் பின்னால வாறன்' என்று குழந்தைகள் முதல் கற்ப்பிணிகள் வரை கழுத்தில மாலை கட்டி அனுப்பி விட்டு நம்ம தலைவன் வெறும் கழுத்துடன் மூளியாய் ஆமிக்காரன் பின்னால போயிருப்போனோ? அப்படி நடந்திருந்தால் அது துரோகமா? அல்லது அரசியல் சாணக்கியமா? என்ற குழப்பம் தீரும் வரை தலைவனை உயிருடன் காப்பாற்றி வைப்பதை தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை.(மேலும்...)

ஆவணி, 28, 2010

கனடா நஷனல் போஸ்ட் ஆசிரியர் குழாம்

அகதிகளை மறுவரையறை செய்தல்

இரகசிய அறிக்கையானது, அரசாங்க கோப்புகளில் இருந்து  வரிசை  முறையின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 50 அகதி விண்ணப்கங்களின்  விடய  ஆய்வுகளின்  சேகரிப்பாக மாறியிருக்கிறது. அது ஒரு சிறிய மாதிரி அளவு மட்டுமே, இந்த 50 தனி நபர்களும் கனடாவில் வாழும் மிகப் பெரிய தமிழ்ச் சமூகத்தின் ஏக பிதிநிதிகள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் இந்த முடிவுகள் கவலையளிக்கின்றன: தெரிவு செய்யப்பட்ட 50 விண்ணப்பங்களில் 31 பேருக்கு புகலிடம் வழங்கப் பட்டுள்ளது இவர்களில்22 பேர் திரும்பவும் ஸ்ரீலங்காவிற்கு பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இநத விண்ணப்பதாரிகள் ஸ்ரீலங்காவிற்கு போய்வருவது பாதுகாப்பானது என்று கருதுவார்களேயானால் அவர்கள் இங்கே புகலிடம் பெறுவதற்காக பொய்யான வாதங்களை வழங்கியிருக்கிறார்கள். (மேலும்....)

ஆவணி, 28, 2010

அரசுக்கு ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் முடிவு _

அரசுக்கு ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அரசியல் உயர்பீடத்தின் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஜனாதிபதி ஒருவர் 3 முறை ஜனாதிபதி பதவி வகிப்பதற்கு புதிய அரசியலமைப்பு வழி செய்யவுள்ளது. ஏற்கனவே அரசியலமைப்பு மாற்றத்திற்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பற்றாக்குறையாக இருந்த நிலையில் 6 ஆசனங்களை நாடாளுமன்றில் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் ஆதரவுடன் அரசாங்கம் அசைக்க முடியாத பலத்தைப் பெற்றுள்ளது. ___

ஆவணி, 28, 2010

கொடுமையான சமூக விரோதச் செயல்

மனித பாவனைக்கு உதவாதவை எனக் கண்டறியப்ப ட்ட உணவுப் பண்டங்களில் கொத்துரொட்டி வகை களே கூடுதலானவை. இவ்வாறான 400 கிலோ கொத் துரொட்டி வகைகள் அழிக்கப்பட்டுள்ளன. கொத்து ரொட்டி தயாரிப்பதற்கெனச் சிறியனவாக வெட்டப் பட்ட ரொட்டித் துண்டுகள் ஒரு வாரத்துக்கு மேலா கக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான திடீர்ச் சோதனைகளை எப்போதோ ஆர ம்பித்திருக்க வேண்டும். காலந்தாழ்த்தியாவது ஆர ம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு தடவையு டன் நிறுத்தாமல் அடிக்கடி திடீர்ச் சோதனைகளை நடத்த வேண்டியதன் அவசியத்தைப் பொது சுகா தாரப் பரிசோதகர்கள் விளங்கிச் செயற்படுவார்க ளென நம்புகின்றோம். (மேலும்...)

ஆவணி, 28, 2010

வெள்ளிமுள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு _

முல்லைதீவு வெள்ளிமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளும் பெருந்தொகையான ஆயுதங்களும் விசேட பொலிஸ் அதிரடிப் படையினரால் நேற்றுமுன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளன என இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்தார். அவர் மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், "குண்டை வெடிக்கச் செய்யக்கூடிய டெடனேடர் 258, எம்.ஜீ.எம்.ஜீ வகை துப்பாக்கி 2696, கைக்குண்டு 306, மோட்டார் குண்டு 35 மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன" என்றார்

ஆவணி, 28, 2010

இன்று சர்வதேச விளையாட்டு தினம்

இளைஞரை வளப்படுத்தும் கல்வியுடன் இயைந்த விளையாட்டு

விளையாட்டு என்பது வெறுமனே ஓடியாடிப் பொழுதைக் கழிக்கும் ஒரு நிகழ்வாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், அது இன்று மனித வாழ்வில் பெறுமதிமிக்கதான ஒரு இடத்தை பிடித்துள்ள நிலையில் அதனை சர்வதேசமே இன்று கொண்டாடும் அளவுக்கு மதிப்பும் மாண்பும் தங்கியுள்ளது என்றால் பாருங்களேன். விளையாட்டு உடல் உள ரீதியான ஆரோக்கியமுடைய சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்குரிய சகல பண்புகளையும் உள்ளடக்கியுள்ளதாகவே அறிஞர்களும், ஆய்வாளர்களும் கருதுகின்றனர். (மேலும்...)

ஆவணி, 28, 2010

கனடாவில் அல்கொய்தா வெடிகுண்டு சதி  இந்தியர் உள்பட 3 பேர் மீது குற்றச்சாட்டு

கனடாவில் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த சதி செய்ததாக இந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இந்தியாவை சேர்ந்த நபரின் பெயர் மிஸ்பாகுதீன் அகமது ஆகும். இவரும் ஹிவா முகமது என்பவரும் ஒட்டாவாவில் கைது செய் யப்பட்டனர். லண்டனில் குர்ரம் சையத் ஷேர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தவும், தாலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கவும் அமெரிக்கா தலைமையில் கூட்டுப் படைகள் உள்ளன. இந்த கூட்டுப் படையில் கனடா வீரர்களும் உள்ளனர். இந்த துருப்புகள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த தற்போது கைது செய்யப்பட்ட 3 நபர்களும் நிதி வசூலித் ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.(மேலும்....)

ஆவணி, 28, 2010

புதிய சூரியனும் அதை சுற்றி வரும் 7 கிரகங்களும் கண்டுபிடிப்பு

முதல் முறையாக பூமியின் சூரியனை போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்தையும் அதை சுற்றி வரும் 7 கிரகங்களையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்த கிரகங்கள், சூரிய மண்டலத்து கிரகங்கள் போல குறிப்பிட்ட இடை வெளியில் உள்ளன. இந்த சூரியனைப் பற்றியும், அதன் குடும்பத்தை சேர்ந்த கிரங்களைப் பற்றியும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். (மேலும்...)

ஆவணி, 28, 2010

முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களின் மறுவாழ்வில் உடனடி கவனம் செலுத்துக!  இலங்கை கம்யூனிஸ்ட்   கட்சி மாநாட்டில்   டி.கே.ரங்கராஜன் எம்.பி. வேண்டுகோள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா ரணம் வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றத்திற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எங்கள் கருத்து. இலங்கைத் தமிழ் குடிமக்களையும், விடுதலைப் புலிகளையும் (எல்டிடிஇ) மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாகப் பார்ப்பதில்லை, வேறுபடுத்தித்தான் பார்க்கிறது. தமிழ் மக்களின் நியாய மான தேவைகளையும், உணர்வு களையும் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில் விடுதலைப்புலிகளின் அதி தீவிர நடவடிக்கைகளுக்கு எங்களின் எதிர்ப்பினை காட்டியிருக்கிறோம். நீண்ட யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் இந்த வேளையில் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் மறுகுடியேற்றம் பற்றி பிரதானமாக கவனம் செலுத்தப்பட வேண்டும். (மேலும்....)

ஆவணி, 28, 2010

உண்டி சுருங்குதல் பெண்டிற்கு மட்டும் அழகு அல்ல, ஆண்களுக்கும்தான்

உடல் பருமன் எப்போதுமே ஆரோக்கியத்துக்குக் கேடுதான். ஆனால் வயதானவர்கள் குண்டாக இருந்தால் கூடுதல் அபாயம் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘தொந்தி’யின் அபாயங்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இடுப்பளவு மிக அதிகமாக உள்ளவர்கள், இடுப்பளவு குறைவாக இருப்பவர்களைவிட 10 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பதற்கான அபாயம் இரு மடங்கு உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உயரத்துக்கு ஏற்ப எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்று கணக்கிடும் பொடி மாஸ் இன்டெக்சின்படி ஒருவரது எடை இயல்பானதாக இருந்தாலும் இடுப்பளவு அதிகமாக இருந்தால் அபாயம் அதிகமே என்ற ஆச்சரியத் தகவலும் வெளியாகியிருக்கிறது. (மேலும்...)

ஆவணி, 28, 2010

ஆர்க்டிக் கடலில் புதிய கடல்பாதை  ரஷ்யா அமைத்தது

சூயஸ் கால்வாய் வழி யாகச் செல்லும் நேரத்தின் பாதி நேரத்தில் இவ்வழியில் ஆசியாவைத் தொட்டுவிட முடியும். அத்துடன் இதில் 15 விழுக்காடு செலவினமும் மிச்சம் ஆகிறது என்று ரஷ்ய இயற்கை நிறுவனம் நோவோ டெக் தலைவர் லியோனிட் மிக்கல் சன் கூறினார். 2011ம் ஆண்டில் இப் பாதை வழியாக சீனா மற் றும் தென்கொரியா சந்தை களுக்கு அடர் வாயுக்களை கூடுதல் கப்பல்களில் அனுப் பப் போவதாக அவர் தெரி வித்தார். பால்டிகா கப்பலின் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து மிக்கல்சன் வியாழனனன்று செய்தி யாளர்களிடம் பேசினார். ரஷ்யாவின் வடகிழக்கில் எண்ணெய் வளம்மிக்க யாமல் தீபகற்பகத்தில் திரவ இயற்கை வாயு ஆலையை நிறுவ இப்பாதை பயன் படும் என்றும் அவர் கூறினார். (மேலும்....)

ஆவணி, 28, 2010

போக்குவரத்து சீராக 9 நாட்களான போக்குவரத்து நெரிசல்

சீனாவில் கடந்த வாரம் ஒரு திங்கட்கிழமை பீஜிங் நகருக்கு வெளியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த நெரிசல் சரியாகி போக்குவரத்து சீராக 9 நாட்களாகி விட்டன. பீஜிங் - திபெத் எக்ஸ்பிரஸ்வே சாலையில் பராமரிப்பு பணிகள் நடந்தன. இந்த நிலையில் அந்த சாலையில் சரக்குகள் ஏற்றிக் கொண்டு லொறிகள் பெருமளவில் நுழைந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் 9 நாட்கள் நீடித்தது. இதன் காரணமாக 100 கி.மீ. நீளத்துக்கு வாகனங்கள் நின்றன. இதை பயன்படுத்தி அந்த பகுதியில் திடீர் கடைகள் முளைத்து, வியாபாரமும் அமோகமாக நடந்தது.

ஆவணி, 28, 2010

பயம்

நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. உதாரணமாக, பள்ளி மாணவனுக்கு ஆசிரியரைக் கண்டால் பயம். பலகோடி ரூபாய் மூதலீட்டில் தொழில் செய்பவருக்கு வருங்காலத்தில் தொழிலின் முன்னேற்றம் குறித்து பயம். ஆக, பயம் உருவாகின்ற விதம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனைவரின் மனதிலும் பயம் என்ற ஒன்று ஆழமாக குடிகொண்டு உள்ளது. (மேலும்...)

ஆவணி, 28, 2010

இயற்கை செய்த அநியாயம்

ரஷ்யா 11 ஆண்டுகளுக்கு பின்னர் தானியம் இறக்குமதி

ரஷ்யாவில் அடிக்கும் கோடை வெப்பத் தினால் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தானியங்கள் தீயில் கருகிவிட்டன. இத னையடுத்து 11 ஆண்டு கால இடை வெளிக் குப் பின்னர் தானியங்களை இறக்குமதி செய்ய உள்ளது. முன்னதாக ரஷ்யா ஆண்டுதோறும் 76 மில்லியன் அளவிற்கு தானியங்களை உற்பத்தி செய்து வந்தது. இது அந்நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் அளவாகும். ஆனால் கடந்த ஆண்டு 97 மில்லியன் அளவிற்கு தானியங்களை உற்பத்தி செய்துள்ளது. அதிகமாக இருந்த 20 மில்லியன் டன்னை ஏற்றுமதி செய்தது. ஆனால் தற்போது ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தால் 60 மில்லியன் டன்கள் மட்டுமே உற்பத்தியாகி யுள்ளது. இதனால் பிரதமர் விளாடிமிர் புட்டின் டிசம்பர் மாதம் இறுதி வரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளார்.

ஆவணி, 28, 2010

அல்கைய்தா தீவிரவாதிகள் நகர் பகுதிகளில் குடியேறுகிறார்கள்

பாகிஸ்தானில் பழங்குடி மக்கள் வசிக் கும் கிராமப் பகுதிகளில் வசித்து வந்த அல்கைய்தா தலிபான் தீவிரவாதிகள் அதை கைவிட்டு கராச்சி போன்ற நகரங் களின் புறநகர் பகுதிகளில் குடியேறி வரு கிறார்கள். கிராமப் பகுதிகளில் வீடுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப் பதால் அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவது சாத்தியமாக இருக் கிறது. நகரங்களில் குடியேறிவிட்டால், ஏவுகணை தாக்குதல் நடத்துவது சாத்திய மில்லாமல் போகலாம் என்று தீவிரவாதிகள் கருதுகிறார்கள். நகர்ப்பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தினால், பலி எண்ணிக்கை அதிக அளவில் அமைந்துவிடும். அது அமெ ரிக்காவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்று தீவிரவாதிகள் நம்புகிறார்கள். அதோடு கிராமப் பகுதிகளில் உளவு சொல்லும் ஒற்றர்கள் பெருகிவிட்டார்கள். நகரங்களில் உளவு பார்ப்பது கடினமாக இருக்கும் என்றும் தீவிரவாதிகள் கருதுகிறார்கள். இதனால் தீவிரவாதிகள் கூட்டம் கூட்டமாக திருட்டுத்தனமாக நகரங்களுக்குள் ஊடுருவி வருகிறார்கள். அவர்கள் கராச்சி நகரத்துக்கு தான் அதிக அளவில் குடியேறி வருகிறார்கள். ஆனால் இதே அமெரிக்காவைத்தான் தமிழ் மக்களை மீட்போனாக நம்புமாறு நாடு கடந்த புலிப்பிரமுகர்கள்  எம்மவர்களை கேட்கின்றார்கள்.

ஆவணி, 28, 2010

யாழ், முல்லை, கிளிநொச்சியிலும் நல்லிணக்க குழுவின் அமர்வுகள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் விசாரணைகள் அடுத்த மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. பொது மக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக திறந்த அமர்வாக இங்கு விசாரணைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் ஜீ.ஏ. குணவர்தன தினகரனுக்குத் தெரிவித்தார். ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மேற்கொள்வார்கள். எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களிடம் சாட்சியங்கள் பெறப்படும். அதேவேளை ஒக்டோபர் மாதம் ஒன்பதாந் திகதி முதல் 11 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் நடைபெறும். (மேலும்...)

ஆவணி, 28, 2010

வன்னி மாவட்ட பட்டதாரிகள் 30 பேருக்கு நேற்று அரச நியமனம

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 30 பட்டதாரிகளுக்கு நேற்று சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கைத்தொழில் வாணிப அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, ஹுசைன் பாரூக் எம்.பி., ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர். வட மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் றிஷாட் பதியுதீன் எடுத்துக் கொண்ட துரித முயற்சி யின் பலனாக, வட மாகாண ஆளுநரின் அனுசரணையின் கீழ் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இன, மத பேதம் துறந்து, சமத்துவமாக சகலரும் வாழ வேண்டும் என்ற ஜனாதி பதியின் உறுதியான நிலைப்பாட்டை முன்னெடுக்க நாம் அனைவரும் அணி திரள வேண்டு மென அமைச்சர் றிஷாட் நிகழ்வில் உரையாற்றும்போது கேட்டுக் கொண்டார்.

ஆவணி, 28, 2010

நாம் மூன்றிலிரண்டு பெரும் பான்மை கொண்ட அரசாங்கத்தை அமைத்துள்ளோம் - ஜனாதிபதி

ஆசியாவிலேயே அரசியல் சீரழிவற்ற வலுவான ஸ்திரத்தன்மை மிக்க நாட்டைக் கட்டியெழுப்பியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பில் தெரிவித்தார். “நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். நீங்கள் மக்கள் சேவைக்காக நியமனம் பெற்றிருக்கும் பிரதிநிதிகள். நாமெல்லோரும் மக்கள் சேவையாளர் களன்றி பொது மக்களை நிர்வகிக்கும் அதிகாரிகளல்லர் என்றும் ஜனாதிபதி கூறினார். ஸ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கத்தின் 28 வது வருடாந்த பொதுக் கூட்டம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடை பெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாம் மூன்றிலிரண்டு பெரும் பான்மை கொண்ட அரசாங்கத்தை அமைத்துள்ளோம். இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது. (மேலும்...)

ஆவணி, 27, 2010

தமிழ் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில்

தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றியமான தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில் நடைபெறவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற 5 ஆவது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர 8 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி 6 ஆவது அரங்கம் இடம்பெறவுள்ளது.

ஆவணி, 27, 2010

மட்டு. மாநகர அபிவிருத்தி குறித்த மாநாடு. கிளிவெட்டி முகாம் மக்களுடன் முரளிதரன் சந்திப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 'நெக்டெப்' திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு இன்று நண்பகல் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாநார சபை மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது.  மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், 'நெக்டெப்' மாகாண பணிப்பாளர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், சம்பூர் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி முகாமில் தங்கியுள்ளவர்களை மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் சந்தித்து உரையாடினார்.

ஆவணி, 27, 2010

யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியமர்த்த திட்டம

யாழ்பாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தவும் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் எம்.எப்.சி.டி. என்ற அமைப்பு முன்வந்துள்ளது. மேற்படி அமைப்;பு 100 வீடுகளைப் புதிதாக அமைக்கவும் 100 வீடுகளை புனரமைப்புச் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இது தவிர தொழில் நுட்ப அறிவை வழங்கவும், தொழிற்பயிற்சிகளை வழங்கவும் முஸ்லிம் வீதியில் உள்ள உஸ்மனியா கல்லூரியை புனரமக்கவும் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட தொகைப் பணத்தை திரட்டியுள்ளதுடன் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்துள்ளது. அரசின் உதவிகளை மட்டும் நம்பி இராது இயன்றவரை இவ்வாறான பொது நிதியம் ஒன்றினுடாக மீள் குடியேற்றப் பணியை துரிதப் படுத்த அது முயற்சிப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆவணி, 27, 2010

இன்றைய தேவை தமிழ் மக்களின் சேவை

(Dr. Rajasinham Narendran,  Ph.D) (Guelph, Ontario  Canada) Saudi  Arabia

ஆயுதப்போராட்டமோ, வேறு எந்த எதிர்பார்ப்போ, எமது மக்களுக்கு வருங்காலங்களில் எவ்வித நன்மையையும் ஏற்படுத்தப்போவதில்லை. நாம் தமிழர் என்ற உணர்ச்சியைத் தவிர்த்து, எமது மக்கள் மனிதர்கள், அவர்களுக்கு, எமக்காக சீரழிந்தவர்களுக்கு, தன்மானமுள்ளவர்களாக வாழும் உரிமை வழங்கப்படவேண்டும் என்ற உணர்ச்சி எம்மிடையே எழவேண்டும். அவர்களுக்கு இருக்க வீடுவேண்டும். உண்ண உணவு வேண்டும், உடுக்க உடைவேண்டும், தொழில்செய்ய வசதி வேண்டும். கல்வி வேண்டும். மருத்துவ வசதி வேண்டும். விதவைகளுக்கும், அனாதைகளுக்கும், ஊணமுற்றோருக்கும் நீண்டகால பராமரிப்பும், உதவியும் வேண்டும். அரசியல் விவாதங்கள் இப்பிரச்சனைகளிற்கு தீர்வு ஏற்படுவதற்கு தடையாகவே இருக்கும்.(மேலும்...)

ஆவணி, 27, 2010

அகதி

ஆண்ட தமிழினம் மீண்டும்

ஆள நினைத்தது

அன்றாடம் சோற்றுக்கே

அடுத்தவனிடம் கையேந்தும் அகதியானது

உரிமை

இல்லாத உரிமைக்கான

ஆயுத போராட்டத்தில்

உயிர் வாழ்தலுக்கான உரிமையும்

சேர்ந்து பறிக்கப்பட்டது

(மேலும்...)

ஆவணி, 27, 2010

என் மகனை நினைவு கூர்ந்து ............

இன்று 9 வருடங்கள் என் மகன் (PLOTE மீரான் மாஸ்ட்ர்) சத்தியராஜனை  இழந்து ......

என் நண்பனின் தாயார் திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் சார்பாக "சகல அடக்குமுறை தனை உடைத்தெறிவோம் என்று தன தகப்பனார் சுப்பிரமணியம் வளர்ப்பில்... சந்ததியாரை அரசியல் ஆசானாகக் கொண்டு... புதியபாதை சுந்தரம் வழியில்... இலங்கை இராணுவத்தினால் சிறை பிடிக்கப்பட்டு... என் நண்பன் சத்தியராஜ் யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து தன் அன்புச் சகோதரியின் திருமணத்தை ஒட்டி எழுதிய கவிதை இன்று அவரின் 9வது நினைவு தினத்தில் நினைவுகூரப்படுகிறது. - அலெக்ஸ் இரவி. (மேலும்...)

 

ஆவணி, 27, 2010

Home prices continue to rise and ownership becomes less affordable

(By Sunny Freeman, The Canadian Press)

Canadian home prices are still on the rise even as sales fall as demand peters out, one factor that is making homes less and less affordable, according to a study by the Conference Board of Canada. Home sales have fallen by 25 per cent since reaching a peak at the beginning of the year as fewer buyers compete and more houses come onto the market. That hasn't stopped houses from becoming more expensive, a trend that is likely to continue, said conference board associate director Michael Burt. (more....)

ஆவணி, 27, 2010

ஆடு நனையுதென்று ஓநாய் அழுகின்றது...?

மட்டக்களப்பின் மீண்டும் பதற்றமான சூழ்நிலையை உருவாகும் - அரியநேத்திரன்

மீண்டுமொரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்க திரைமறைவில் எடுக்கப்படும் நடவடிக்கையாகவே மட்டக்களப்பில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களை எம்மால் அவதானிக்கமுடிகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி பறிமுதல், மாநகரசபை உறுப்பினர் காணாமல் போயுள்ளமை மக்கள் மத்தியில் மீண்டும் அச்சமான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.  இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்த படையினரும் ஏனையவர்களும் முன்வரவேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறான சம்பவங்களின் மூலம் மக்கள் சுதந்திரமாக நடமாடவும் தங்களின் காரியங்களை நிறைவேற்றவும் அச்சமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். புலிகளின் பிரசன்ன காலத்தில் இதனைவிட பல மடங்கு நிகழ்வுகள் நடைபெற்றபோது எங்கு போய் இருந்தார் இந்த அரியநேத்திரன்

ஆவணி, 27, 2010

வடமாகாணத்தின் அருவி ஆறு பாலத்தின் நிர்மாப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை

மீள் குடியேற்ற மக்களின் நன்மை கருதி வடமாகாணத்தில் மிக நீளமான பாலமாக அருவி ஆரு பாலத்தின் நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப் படவுள்ளன. புத்தளம் மன்னார் வீதியில் உள்ள இவ்விடத்தில் இப்பாலம் அமைக்கப் படுவதன் மூலம் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் படுவதுடன் மீள் குடியேறியுள்ள 25 000 மக்கள் நன்மையடையவுமுள்ளனர். 259 அடி நீளம் கொண்ட இப்பாலம் ஐக்கிய ராஜ்யத்தின் உதவி மூலம் கிடைக்கும் 400 மில்லியன் ரூபா நிதியினால் நிர்மாணிக்கப் படவுள்ளது. முசலி பிரதேச மக்கள் முன்னர் இவ்விடத்தில் மிதப்புப் பாலம் மூலம் கடந்தனர். முசலிக்கும் மன்னாருக்கும் இடையிலான தூரத்தைக் கடக்க இப்பாதையைப் பயன் படுத்தினால் 15 கிலோ மீற்றர் தூரம் குறைவடைவதாகக் கூறப் படுகிறது. 13 மாதத்தில் நிர்மாணப் பணியை பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆவணி, 27, 2010

ஈழத்தமிழர் நிலை

தாமே நேரில் செல்லவுள்ளதாக கிருஷ்ணா தெரிவிப்பு

"இதுவரை இலங்கை தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட நிதி மற்றும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேர்ந்ததா? இல்லையா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

போர் முடிந்து ஓராண்டாகியும் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, முகாம்களில் உள்ள தமிழர்கள் துன்புறுத்தப்பட்டே வருகிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில், கடந்த 1987ஆம் ஆண்டில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா இடையே ஏற்பட்ட அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம், இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இலங்கையில், தமிழர்களுக்கு அரசியல்ரீதியாக சம உரிமை அளிக்கப்படாமல், இரண்டாம் கட்ட மக்களாக நடத்தப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசு இந்தியாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வருகிறது. 52 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அவதிப்பட்டு வாழ்கிறார்கள். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்"

(மேலும்...)

ஆவணி, 27, 2010

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு: டி.கே.ரங்கராஜன் கொழும்பு பயணம்

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கொழும்பு நகரில் நடைபெறுகிறது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு உறுப்பின ரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் இம்மாநாட் டில் கலந்து கொள்வதற் காக ஆகஸ்ட் 26 செவ் வாயன்று கொழும்பு சென் றுள்ளார். இத்தகவலை சிபிஎம் மாநிலக்குழு அலு வலக செய்திக்குறிப்பு தெரி விக்கிறது.

ஆவணி, 27, 2010

போபால் படுகொலை: தரும் படிப்பினை

(இ.பொன்முடி)

1984 டிசம்பர் 2ஆம் தேதி இரவு மத் தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நக ரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான யூனி யன் கார்பைடு கம்பெனியிலிருந்து பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுத்தப் பட்டு வரும் விஷவாயுவான “மீத்தைல் ஐசோ சயனைட்” டேங்க் வெடித்து காற்றில் கலந்த சில நிமிடத்தில் மக்கள் மூச்சுத்திணறி விழித்தவுடன் விழிபிதுங்கி செத்தார்கள். திசை தெரியாமல் தப்பியோட முயன்றவர்கள் மிதிபட்டு செத்தார்கள். பிணத்தோடு பிண மாக குற்றுயிரும் குலைஉயிருமாக கிடந்தவர் கள் நாய்களால் கடிக்கப்பட்டும், கழுகுகளால் கொத்தப்பட்டும் மெல்ல மெல்ல துடிதுடித்துச் செத்தார்கள். அன்று தன் கண்முன்னே மூச் சுத்திணறிய பிள்ளைகளை பார்த்த பெற் றோர்கள் சிலர் இன்னும் மனநோயிலிருந்து மீளவில்லை. பல குழந்தைகள் அனாதையாகி விட்டனர். இந்த விபத்தால் 23 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 3 லட்சம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். (மேலும்...)

ஆவணி, 26, 2010

பசில் - கிருஷ்ணா - சிவ்சங்கர் மேனன்

இந்தியா சென்றுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை புதுடில்லியில் சந்தித்து உரையாடினார். இதன் போது, இலங்கையின் மீள்குடியேற்றம் தொடர்பாக இரு அமைச்சர்களும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் பசில், மத்திய பாதுகாப்பு செயலர் சிவ்சங்கர் மேனனையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஆவணி, 26, 2010

கற்றுக் கொண்ட பாடம்

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாத நிலையிலேயே தமிழ் மக் கள் இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் உள்ளாக நேர்ந்தது. இனப் பிரச்சினையின் தீர்வுக்கான முதலாவது உருப்படி முய ற்சி பண்டா - செல்வா ஒப்பந்தம். தென்னிலங்கையின் சில அரசியல் சக்திகள் அந்த ஒப்பந்தத்தை முறியடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் அந்த முயற்சிக்குப் பலமூட்டும் வகையில் தமிழரசுக் கட்சி நடந்துகொண்டமை ஒப்பந்தம் கைவிடப்படுவதற்குப் பிரதான காரணமாகியது. இவ்வொப்பந்தத்தின் பிரதான சரத்துகளை நடைமுறைப்ப டுத்துவதற்கான இரண்டு சந்தர்ப்பங்கள் பிந்திய காலங்களி லும் தமிழ்த் தலைவர்களுக்குக் கிடைத்தன. அன்றைய தமிழ்த் தலைமை தேசியமய எதிர்ப்புக்கும் மாக்சிய எதிர்ப்புக்கும் முன்னுரிமை அளித்ததால் அச்சந்தர்ப்பங்கள் கை நழுவிப் போயின. (மேலும்...)

ஆவணி, 26, 2010

வட மாகாணத்தில்

ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் நான்கு ஆண்டுகால அபிவிருத்தித் திட்டம்

வடக்கு மாகாணத்தில் ‘நெல்சிப்’ அபிவிருத்தி பணிகள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கு மாகாண திட்டப்பணிப்பாளர் பி. ஜோன்சன் இதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளார்.  வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், வுவனியா ஆகிய பிரதேசங்கள் துரித அபிவிருத்தியின் கீழ் நெல்சிப்க்கான மக்கள் பங்கேற்புடன் ‘உள்ளூராட்சிக்கான திட்டங்கள்’ முன்மொழியப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட திட்டங்களில் இருந்து அபிவிருத்திக்கான திட்டங்களை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் முன்னுரிமைப்படுத்தியுள்ளார்.  ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் நான்கு ஆண்டுகால அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆவணி, 26, 2010

அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் - நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஜயந்த தனபால

இந்த நாட்டின் பிரச்சினைக்குப் பிரபாகரன் மட்டும் காரணம் அல்ல. இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள்தான் பொறுப்புக் கூற வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு அரசியலமைப்பில் துரிதமாக மாற்றங்களைச் செய்து அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். இந்த ஆணைக்குழு விசாரணை முடியும்வரை இதற்கு காத்திருக்கக்கூடாது. ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தமிழில் உரையாற்றுவதைப் போல் எதிர்க்கட்சியினரும் பின்பற்றினால் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான ஓர் ஆரம்பம். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களைக் கவர்வதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  (மேலும்...)

ஆவணி, 26, 2010

இந்திய அரசின் உதவியுடன் வடமாகாணத்தில் 51 ஆயிரம் வீடுகள்

ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு செப்டெம்பர் முதல் வாரத்தில் இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டக்குழு இலங்கை வரவுள்ளதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டார். முற்றாக வீடுகளை இழந்த காணிகள் அற்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படவுள்ள காணியின் அளவு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக இந்திய அரசாங்கத்திடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டுள்ளது என்றார். அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பணிகள் மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.(மேலும்...)

ஆவணி, 26, 2010

சோம்பேறித்தனம்

சோம்பேறித்தனம் ஒரு மோசமான பழக்கம்’ என்றுதான் இன்று வரை பேசி வருகிறோம். ஆனால் ‘சோம்பேறித்தனம் மோசமான பழக்க மல்ல அது ஒது வியாதி’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருப்பவர்கள் லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரி ஆய்வுக் குழுவினர். அவர்கள் ‘எதையும் செய்யாமல் சும்மா இருப்பதை ‘வியாதி’ என்றே கூற வேண்டும். காரணம், சும்மா இருப்பதற்கும் மோசமான ஆரோக்கியத்துக்கும் வலுவான தொடர்பு இருக்கிறது’ என்கிறார்கள். ஆரோக்கியக் குறைவு விகிதத்துக்கும் மரண விகிதத்துக்கும் தொடர்பு இருப்பதால் சும்மா இருப்பதும் ஒரு வியாதியாகவே ஏற்கப்பட வேண்டும் என்று இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த வைத்தியர் ரிச்சர்ட் வீலர் கூறுகிறார். அளவுக்கு மீறிய உடல் பருமன், ஒரு வியாதியாக உலக சுகாதார நிறுவனத்தால் ஏற்கனவே ஏற்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார் அவர். ஆக இனிமேல் யாராவது, ‘எப்பப் பார்த்தாலும் சும்மாவே இருக்கிறியே?’ என்றால் ‘எனக்கு சும்மாயிருக்கிற வியாதியப்பா! என்று கூறிவிடலாம்.

ஆவணி, 26, 2010

மும்பை சர்வதேச ஆபரணக் கண்காட்சியில் ஆறு கோடி ரூபா பெறுமதியான வைரம் திருட்டு

மும்பையில் நடந்து வரும் இந்திய சர்வதேச ஆபரண கண்காட்சியில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐந்து பேர், ஆறு கோடி ரூபா மதிப்புள்ள வைரத்தைத் திருடியுள்ளனர். போலிஸார் அவர்களைத் தேடிச் சென்று துபாயில் கைது செய்தனர். மும்பையில், இந்திய சர்வதேச ஆபரண கண்காட்சி நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வைர நிறுவனம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவன மையத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஐந்து பேர் நகை வாங்குவதற்காக வந்தனர். அவர்களில் நான்கு பேர், விற்பனையாளரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் வந்த வெளிநாட்டுப் பெண், அங்கு கண்காட்சிக்காக ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 887. 244 கேரட் எடை கொண்ட, ஆறு கோடி ரூபா விலை மதிப்புடைய வைரத்தை பெட்டியோடு எடுத்து தன் கைப்பையில் போட்டுக்கொண்டார். பின் ஐந்து பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அங்கிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைப் பார்த்தபோது, ஐந்து பேர் வைரத் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது.

ஆவணி, 26, 2010

சூரிய சக்தி ஜன்னல்கள்!

மாற்று எரிசக்தி உற்பத்தி ஆய்வுகள் உலகெங்கும் வேகம் பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் ‘சன் கொண்ட்ரோல் பிலிமை’ நோர்வே நாட்டவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். அதைக் கொண்டு ஒவ்வொரு வீட்டு ஜன்னலையும் சூரிய உற்பத்தி அமைப்பாக மாற்றிவிடலாம் என்கிறார்கள். ‘என்சோல் ஏஎஸ்’ என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த ‘சன் கொண்ட்ரோல் பிலிம்’ 2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஆய்வுக்குத் தலைமை வகித்த லீசெஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிறிஸ் பின்ஸ், ‘மின்சார உற்பத்தியில் இது புதிய புரட்சியாக அமையும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஆவணி, 26, 2010

உடற்பயிற்சியை விட ஓடுவது நல்லது!

நீங்கள் உங்கள் உடம்பைக் கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டும், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிaர்களா? அப்படியானால் நீங்கள் உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்வதை விட அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்று மெல்லோட்டத்தில் ஈடுபடுவது நல்லது. ‘ஜிம்’மில் செய்யும் உடற்பயிற்சியை விட திறந்த வெளியில் மேற்கொள்ளும் ‘வாக்கிங்’ அல்லது மெல்லோட்டம் உடலுக்கும், மனதுக்கும் நன்மை பயக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். திறந்தவெளியில் இயற்கைச் சூழ்நிலை நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதே காரணம் என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

ஆவணி, 26, 2010

மனித ஆய்வுக்கு எட்டாத தொலைவில் நட்சத்திரங்கள்

நாம் இரவு நேரங்களில் திறந்தவெளியில் நின்றவாறு வானத்தை உற்று நோக்கினால் கோடான கோடி நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதைக் காணலாம். ஒரு டெலஸ்கோப் மூலம் அவற்றை உன்னிப்பாகக் கவனித்தால் பல்வேறு நட்சத்திரக் கூட்டங்கள் தென்படலாம். மேலும் அதி சக்திவாய்ந்த தொலைநோக்கி வாயிலாக துல்லியமாக அவதானித்தால் இன்னும் பல்லாயிரக் கணக்கான விண்மீன்கள் தெட்டத் தெளிவாகத் தெரியும் என்பது நிதர்சனமாகும். ஏலவே ஆகாயத்தில் பரிணமித்துள்ள நட்சத்திரக் கூட்டங்கள் எல்லைகள் இல்லாமல் பரந்து காட்சியளிக்கின்றனவா? அல்லது அவற்றின் தொகைக்கு ஓர் எல்லைக் கட்டுப்பாடு உண்டா? என்ற வினாவிற்கு விடையளிக்கும் முகமாக விண்ணியலாளர் சில அதிசயிக்கத்தக்க உண்மைகளைக் கண்டறிந்தனர். (மேலும்...)

ஆவணி, 25, 2010

கனடா வந்தவர்களுக்குப் புலிகளுடன் தொடர்ப - இலங்கை உயர் ஸ்தானிகர்

எம்.வி.சன் சீ கப்பலில் கனடாவை வந்தடைந்த 492 இலங்கைத் தமிழர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட ஆட்கடத்தல் நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர தெரிவித்துள்ளார். இலங்கையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அங்குள்ள தமிழர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், அதனால் தாம் அங்கிருந்து வெளியேறுவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை அங்கு வந்தோர் தெரிவிப்பதாக ஒட்டாவாவிலிருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் சித்ராங்கனி கூறியுள்ளார். (மேலும்...)

ஆவணி, 25, 2010

(மேலும்...)

ஆவணி, 25, 2010

'அம்புலிமாமா' கதைகளால், சிக்கலில் குமரன் பத்மநாதன்

புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு, கேபி விளக்க வேண்டும் : கலைஞர் கருணாநிதி _

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என மத்திய அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளும் விரும்பினர். இந்த முடிவை விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச் செயலர் நடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., மகேந்திரனிடம் தெரிவித்தார். அதை அவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் கூறினார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால், விடுதலைப்புலிகளின் முடிவை வைகோ மாற்றினார். (மேலும்...)

ஆவணி, 25, 2010

புலிகளுக்கு ஆலோசனை வழங்கவில்லை

காட்டிக் கொடுத்து விட்டார் குமரன் பத்மநாதன்  - வைகோ

விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆலோசனையும் வழங்கவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்."இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாததற்கு வைகோவும், நெடுமாறனும்தான் காரணம்'' என்று விடுதலைப் புலிகளின் சர்வதேச செய்தித் தொடர்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் கூறியதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது.  இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விடுதலைப் புலிகளுக்கு நானோ, நெடுமாறனோ எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. (மேலும்...)

ஆவணி, 25, 2010

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்!

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் அனு பவிக்கின்ற துன்பங்களும் சித்திரவதைகளும் முடிவின்றித் தொடருகின்றன. குடும்ப வறுமையைப் போக்குவதற்காக கடல் கடந்து அங்கு செல்கின்ற பெண்கள் உடல், உள ரீதியாக பல்வேறு இம்சைகளை எதிர்கொள்வதாக தகவல்கள் வந்தவண்ண முள்ளன. ஒருசில பெண்கள் உயிரற்ற பிணமாகவும் இங்கு வந்து சேர்ந்துள்ளனர். மேற்படி பெண் கூறுவதை நிரூபிப்பது போல அவரது உடலுக்குள் இருபத்து மூன்று இரும்பு ஆணிகள் இருப்பதை கம்புறுப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கமல் வீரதுங்க உறுதிப்படுத்தியுள்ளார். இப்பெண்ணின் எக்ஸ்கதிர் படத்தில் ஆணிகள் துல்லியமாகத் தென்படுகின்றன. (மேலும்...)

ஆவணி, 25, 2010

5 ஆண்டுகளில் யாழ். மீன்பிடி தொழில் வளம்
35 வருடத்துக்கு முன்னைய நிலையை எட்டும்

யாழ். மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் வளம் இன்னும் ஐந்தாண்டுகளில் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னைய நிலையை எட்டுமென்று யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளனத் தலைவர் வீ. நவரட்ணம் தெரிவித்தார். அரசாங்கம் மீனவர்களுக்கு அளிக்கும் உதவிகளை அனுபவிப்பதுடன் நின்றுவிடாமல், பண்பான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டால் 35 வருடங்களுக்கும் முன்னைய நிலையை அடைய முடியுமென்று அவர் கூறினார். 1983 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த மீன் பிடியின் 20% யாழ். மாவட்டத்தில் பிடிக்கப்பட்டது. மாதம் நான்காயிரம் மெற். தொன் வீதம் வருடத்திற்கு 48 ஆயிரம் மெற். தொன் மீன் பிடிக்கப்பட்டது. தற்பொழுது இரண்டாயிரம் மெற். தொன் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னைய காலத்தைப் போன்று அதிகரிக்க மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நவரட்ணம் தெரிவித்தார். (மேலும்...)

ஆவணி, 25, 2010

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள்

ஆயிரத்துக்கும் அதிகமான உரிமையாளர்கள் அடையாளம்

வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிரு க்கும் வாகனங்களுள் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தினகரனுக்குத் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நடமாடும் சேவையில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்களினதும் 31 கனரக வாகனங்களினதும் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (மேலும்...)

ஆவணி, 25, 2010

அன்னை திரேசாவின்  நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

அன்னை திரேசாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் மேற்கு வங்கம், பரூய்ப்பூரில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கின. நாடு முழுவதும் அன்னை திரேசாவின் நூற் றாண்டு விழாவைக் கொண்டாட கிறிஸ் தவ திருச்சபைகள் திட்டமிட் டுள்ளன. இந்த நிலையில் அன்னை திரேசா வின் நூற்றாண்டு விழா தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம், பரூய்ப்பூரில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையில் நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி பரூய்ப்பூர் திருச்சபை தலைவர் பிஷப் சல்வடார் லோபோ தலைமையில் பிரமாண்ட தொடக்க விழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். (மேலும்...)

ஆவணி, 25, 2010

மட்டு மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயுள்ளார்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சகாயமணி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தமது மாநகர சபை உறுப்பினர் காணாமல் போயுள்ளமை குறித்து மாநகர சபை மேயரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், கிழக்குமாகாண முதலமைச்சர் சி;சந்திரகாந்தனின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார். (மேலும்...)

ஆவணி, 25, 2010

பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஜிமேனா தேர்வு

இந்த 2010ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக மெக்சி கோவை சேர்ந்த 22 வயது ஜிமேனா நவரட்டே தேர்வு செய்யப்பட்டார். பிரபஞ்ச அழகியாக தேர்வு பெற்ற அவர், குடும்ப மதிப்புகள் குறித்து குழந் தைகளுக்கு போதிப்பது மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தினார். பிரபஞ்ச அழகி பட்டத்தை ஜிமேனா நவரட்டே கைப்பற்றியதை தொடர்ந்து 2வது இடம் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த யெஸ்டி பிலிப்சுக்கு கிடைத்தது. ஆஸ்திரேலிய அழகி ஜெனிஸ்டா கேம்பல் அதை யடுத்த இடத்தை பெற்றார். உக்ரைன் அழகி அன்னா போஸ் லாவ்ஸ்காவுக்கு 4வது இடமும், பிலிப் பைன்சை சேர்ந்த வீனஸ் ராஜ்க்கு 5வது இடமும் கிடைத்தன. இந்திய அழகி உஷோஷி சென் குப்தா முதல் 15 இடத்தை கூட பெற முடியவில்லை. (மேலும்...)

ஆவணி, 24, 2010

என்ன நடக்கிறது காஷ்மீரில்?

(பாரதிதம்பி)

இந்தியாவின் உச்சியில் இருக்கும் காஷ்மீரின் மேல் பகுதியை 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' என்று இந்தியா சொல்கிறது. கீழ்ப் பகுதியை 'இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர்' என பாகிஸ்தான் சொல்கிறது. 'ஆனால், உண்மையில் இரு நாடுகளும் சேர்ந்து எங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன' என்பதே பூர்வீக காஷ் மீரிகளின் முழக்கம். பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லிம் கள் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்பவில்லை. இரு தரப்பும் முஸ்லிம்கள்தான் என்றாலும் அடிப் படையிலேயே வேறுபாடு இருக்கிறது. பாகிஸ்தானின் முஸ்லிம்கள் ஷன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந் தவர்கள். காஷ்மீரின் முஸ்லிம்கள் 'சூஃபி' வகையைச் சேர்ந்தவர்கள். தங்களைத் தனித்த தேசிய இனம் என வகைப்படுத்தும் காஷ்மீரிகள் 'சுதந்திர காஷ்மீர்' கேட்கின்றனர். இதை இந்தியாவோ, பாகிஸ்தானோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் காஷ்மீரி களைப் பிரதிநிதிகளாகக்கூட அழைப்பது இல்லை. ஆனால், இரு தேசங்களுக்கும் இடையிலான போரில் இதுவரை 75 ஆயிரம் காஷ்மீரிகள் கொல் லப்பட்டு இருக்கின்றனர். (மேலும்.....)

ஆவணி, 24, 2010

CPI(M) legislator denies leaking ceasefire details to Vaiko

(B. Kolappan)

Communist Party of India (Marxist) legislator K. Mahendran on Sunday denied reports that he was involved in the 2009 leak of details about the ceasefire proposed by India to end the war between Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Rejecting the claims of the former LTTE international spokesperson, Kumaran Pathmanathan alias KP, that he had conveyed the information to Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) general-secretary Vaiko, Mr. Mahendran said he never had any ties either with the LTTE or its political commissar P. Nadesan. (more....)

ஆவணி, 24, 2010

தமிழகம் வந்து கதறும் தமிழீழ மீனவர்கள்!

உரிமைக்கு உதவவில்லை.. உயிருக்கு உதவுங்கள்!

''83-ம் ஆண்டில் இருந்தே இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே மீன் பிடிப்பதில் பிரச்னைகள் உள்ளன. அங்கே போர் முடிவுக்கு வந்த நிலையில், இனி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவை, இந்தப் பிரச்னையில் இரு நாட்டு மீனவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை எட்ட வேண்டும். மீனவர்கள் ஏற்றுக் கொள்ளாத திட்டத்தால் அரசுகளால் ஏதும் செய்ய முடியாது. தற்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் நம்மால் பாதிக்கப்படாமல் இருக்கவும், நமது மீனவர்களும் பாதிக்கப்படாத வகையிலும் இருக்க இந்தப் பேச்சுவார்த்தை வழி வகுக்கும்!''

(மேலும்.....)

ஆவணி, 24, 2010

நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்

முதன் முதலாகத் தேர்தலைச் சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிராத்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் அபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, அபிரஹாம் லிங்கன் மட்டும்  பேசாமல் நின்றார். “அபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம். “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார். (மேலும்.....)

ஆவணி, 24, 2010

எம்வி சன்சீ கப்பலில் வந்த ஆண்களுக்கான விசாரணை நேற்று நிறைவு _

எம்வி சன் சீ கப்பலில் வந்திறங்கிய ஆண்கள் அனைவருக்குமான 48 மணிநேர தடுப்பு மீளாய்வு விசாரணைகள் பிரேசர் பிராந்திய தடுப்பு மையத்தில் அமைந்துள்ள IRB யின் தற்காலிக அமைவிடத்தில் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் நேற்று நிறைவடைந்துள்ளன. அவர்கள் அனைவரும் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டி மேலும் ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து தடுப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏழு நாட்களின் பின்னரான தடுப்பு மீளாய்வு விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும். (மேலும்.....)

ஆவணி, 24, 2010

பசில் தலைமையில் தூதுக்குழு இந்தியாவுக்கு இன்று பயணம்

இந்திய பிரதமரின் விசேட தூதுவர் எப்போது வந்தாலும் அவரை வரவேற்பதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது.அவருக்கு வடக்கு, கிழக்கு உட்பட எங்கு வேண்டுமானாலும் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படும் சுதந்திரமாக சென்று வர இடமளிக்கப்படும். இதேவேளை, இலங்கையின் அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அரச உயர்மட்டத் தூதுக் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி புறப்படவிருக்கின்றது.இக்குழுவில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க,பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் உள்ளடங்கி இருக்கின்றனர். (மேலும்.....)

ஆவணி, 24, 2010

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் ஏ9 வீதியால் செல்வதற்குத்தடை இல்லை அனுமதியில்லை என்ற செய்திகளை அரசு நிராகரிப்பு

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக வடபகுதி செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சால் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறான எந்தத் தடையும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லை என அரசாங்கம் நிராகரித்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஏ9 பாதையூடாக யாழ்.குடாநாட்டுக்குச் செல்வதற்கே இந்தத் தடைப் பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் பரவியிருந்தன. எனினும் அவ்வாறான புதிய விதிமுறைகள் எதுவும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லையென தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். (மேலும்.....)

ஆவணி, 24, 2010

சதமடிப்பதைத் தடுத்தவர் சங்ககாரா?

செவாக் சதமடிப்பதைத் தடுக்க இலங்கை அணிக் கப்டன் குமார் சங்ககாராவே காரணமெனவும் இவரது அறிவுறுத்தலின்படி தான் ரந்திவ் "நோபோல்” வீசியுள்ளதாகவும் இந்திய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தப் பத்திரிகை கூறுகையில்; இப்பிரச்சினைக்கு கப்டன் சங்ககாரா தான் காரணம் என்பது "ஓடியோ” ஆதாரம் மூலம் தெரியவந்துள்ளது. இவர் சொல்லித்தான் ரந்திவ்"நோபோல்” வீசியுள்ளார். விக்கெட்டில் உள்ள மைக் மூலம் பதிவான வீரர்களின் உரையாடலில் "ஹாய் ரந்திவ் பந்தை செவாக் அடித்துவிட்டால் சதமடித்து விடுவார்”  என சங்ககாரா கூறியது இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.(மேலும்.....)

ஆவணி, 24, 2010

திருமலை நகர சபை பதில் தலைவராக செல்வராஜா

திருகோணமலை நகர சபையின் பதில் தலைவராக கே.செல்வராஜா நேற்று திங்கட்கிழமை காலை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை நகரசபையின் உபதலைவராகப் பணியாற்றிவரும் இவரைப் பதில் தலைவராக கிழக்குமாகாண முதலமைச்சரும் உள்ளூராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பணித்திருந்தார். நகரசபைத் தலைவராகப் பணிபுரிந்த எஸ்.கௌரிமுகுந்தனை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக பதவி நீக்கம் செய்து விட்டு, அவர் மீதான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை பதில் தலைவராகப் பணிபுரியும் படி உபதலைவரான செல்வராஜாவை முதலமைச்சர் நியமித்தார்.(மேலும்.....)

ஆவணி, 24, 2010

நல்லிணக்கத்துக்குத் தடையான விடயங்களை கண்டறிவதில் கவனம் செலுத்துவது அவசியம் புலிகளிடம் அடிமைத்தனமாகச் செயற்பட்டார் ரணில், ஆணைக்குழு முன்பாக ரஜீவ

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளிடம் அடிமைத்தனமாக செயற்பட்டமையும் சமாதான முயற்சிகளின் தோல்விக்கு காரணி ஆகும். அதேவேளை சமாதான உடன்படிக்கையின் சில சரத்துகள் விடுதலைப்புலிகளை எதிர்க்கும் தமிழர்களை காட்டிக் கொடுப்பதாகவும் அமைந்தது. அதேவேளை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குரிய தடைகள் குறித்து நோக்கினால், இப்பகுதி பரவலாக அக்கறை செலுத்தப்படவேண்டிய பகுதி ஆகும். சில இடங்களில் சட்டநடவடிக்கைகள் உரிய விதத்தில் மேற்கொள்ளப்படவில்லை. திருகோணமலையில் 5 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அறிவிக்கப்படவில்லை. (மேலும்.....)

ஆவணி, 23, 2010

கனடா புலிகளிற்குள் மோதல்! மக்களவை உறுப்பினர்கள் புலிகளின் தமிழ் காங்கிரஸ் நேரு குணா மீது தாக்குதல்!

கனடாவில் புலிகளிற்குள் மோதல் வலுவடைந்துள்ளதுடன் கைகலப்பிற்கும் சென்றுள்ளது. புலிகளின் அழிவிற்கு பின்னர் புலிகளிற்குள் ஆரம்பித்த காட்டி கொடுப்பு, சொத்துபிரிப்பு என்று; தொடர்ந்த உள்மோதல் தற்போது கைகலப்பாக மாற்றம் கண்டுள்ளது. புலிகளின் ஆஸ்தான அரசில் ஆய்வாளராக செயல்பட்டுவந்த நேரு குணா என்பவர் மீது மக்களவை உறுப்பினர்கள் என்று போலி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் நேரு குணாவின் கை முறிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அண்மையில் தாய்லாந்தில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தை வந்தடைந்த அகதிகளிற்கு உதவும் நடவடிக்கையில் தமிழ் காங்கிரஸ் என்ற புலிகளின் உப அமைப்பாக செயற்பட்டுவரும் பிறிதொரு அமைப்பினர் உதவி வருவதுடன், அந்த மக்களிற்கு என்று கூறி நிதி சேகரிக்கவும் நடவடிக்கை எடுத்துவருகின்ற நிலையிலேயே தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அகதிகளாக வந்த மக்களிற்கு உதவக்கூடாது என்று கூறி, மக்களவை உறுப்பினர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதன்போதே நேரு குணா என்பவர் காயமடைந்துள்ளார்.நீண்ட காலமாக புகைத்துக் கொணடிருந்த பகை தற்போது பகிரங்க கைகலப்பு வரை வளர்ந்துள்ளது. ரிவி ஐ, சிஎம்ஆர் என்ற புலிகளின் ஊதுகுழல்களுக்குள்ளும் இதுபோன்ற குத்து வெட்டுகள் நடைபெறுவதாக அறிய முடிகின்றது.  (செய்திகள் தொடரும்...)

ஆவணி, 23, 2010

குமரன் பத்மநாதன் (கே.பி) ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் 'டெய்லிமிரர்' ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் மூன்றாவது பாகம்!

வைகோ, நெடுமாறன் போன்றோருக்கு யுத்த நிறுத்தம் ஒன்றை முயற்சிப்பதற்கானை பற்றிய விபரங்களை கூறவேண்டாம் என நடேசனுக்கு கூறப்பட்டிருந்தப்போதும் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரான கே.மகேந்திரன் என்பவருடன் இது விடயமாக ஆலோசித்துள்ளார். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (AIADMK) தலைமையிலான தேர்தல் கூட்டணியில் வைகோவின் மக்கள் திராவிட முன்னேற்றக்கழகத்துடன் இவரது கட்சியான இந்தி கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்ஸிஸ்ட்) யும் சேர்ந்திருந்ததது. மகேந்திரன் இந்த திட்டம்பற்றி வைகோவுக்கு தெரிவித்துவிட்டார். இவர்கள் இருவரும் காங்கிரஸும் தி.மு.கவும் யுத்தம் நிறுத்தத்திற்கான பெருமையை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என கவலைப்பட்டனர். எனவே இவர்கள் இந்த திட்டத்தை கெடுக்க விரும்பினர். இந்தியாவின் உதவியுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை முயற்சிப்பதற்கான ஒரு வாய்ப்புக்கூட இந்த வைகோ என்ற மனிதனால் தொடக்க நிலையிலேயே அழிக்கபட்டுவிட்டது என்பதைத்தான். தனது தேர்தல் நோக்கத்துக்காக எல்.ரீ.ரீ.ஈ ஐ பலியிடவைத்த ஒரு சுயநல அரசியல்வாதி. இப்போது அவர் பிரபாகரனுக்காக தனியாட்கள் முன்னிலையில் முதலைக் கண்ணீர் விடுகிறார். பகிரங்கத்தில் இன்னுமொரு ஈழ யுத்தம்பற்றிக் கதைக்கின்றார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்கள் எங்கள் தலையில் மிளகாய் அரைக்கப்போகின்றார்கள்? (மேலும்....)

ஆவணி, 23, 2010

குமரன் பத்மநாதன் பேட்டிக்கு  எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ மறுப்பு

நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறேன். எனக்கோ, என் னுடைய கட்சிக்கோ விடு தலைப்புலிகளோடோ, மேற் கூறிய நடேசனோடோ எந்தக் காலத்திலும் எந்தவிதத் தொடர் பும் இருந்ததில்லை. இலங் கைத் தமிழர்கள் சொல் லொண்ணா துயரத்திற்கு ஆளான போது இப்பிரச்ச னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியான சுமூ கத்தீர்வு காண வேண்டும் என்ற நிலையைத் தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் எங்கள் கட்சி வலியுறுத்தியது. இப்போதும் எங்கள் கட்சி அதையே வலியுறுத்துகிறது. விடுதலைப்புலி களின் அணுகுமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்போதுமே ஏற்புடையதல்ல. எனவே போர் நிறுத்தம் குறித்து என் னிடம் நடேசன் பேசியதாக குமரன் பத்ம நாதன் அளித்துள்ள பேட்டியில் கூறப் படுவது உண்மையானது அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். (மேலும்)

ஆவணி, 23, 2010

இலங்கை - இந்தியா இடையில் படகு சேவை _

இலங்கை இந்தியாவுக்கிடையில் படகு சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக உடன்படிக்கைகளை இரண்டு நாடுகளும் தயார் செய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பான உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவை கடந்த கால யுத்த சூழ்நிலைகளினால் பாதிப்படைந்தது.தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கும், கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்குமாக இந்த படகு சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆவணி, 23, 2010

நேசக்கரம் நீட்டுவோம்

புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றங்களின் கடுமையான விளைவுகளை உலகம் எதிர்கொள்ளத் துவங்கியுள்ளது. குறிப் பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் வரலாறு காணாத வறட் சியாலும், வெள்ளத்தாலும் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ராஜீய ரீதியாக மட்டுமின்றி, பருவநிலை மாற் றத்தின் விளைவுகளால் ஏற்படும் இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதில் அண்டை நாடுகள் - குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் ஒருவருக்கொருவர் மனிதாபிமான அடிப்படையிலும், தங்களது பிராந்தியத்தில் அழிவைத் தவிர்த்து அனைத்து மக்களுக்கு மான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான உயரிய நோக்கத்திலும் உதவிகளை பகிர்ந்து கொள்ள வேண்டியதன் தேவையும் அவசியமும் அதிகரித்துள்ளது. (மேலும்.......)

 
ஆவணி, 23, 2010

 

பூநகரி சுற்றுலா பயணத்தலமாக மாறுகின்றது

யாழ்-பூநகரிக்கிடையில் விஷேட படகுச் சேவை

உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி யாழ்ப்பாணத்திற்கும், பூநகரிக்கும் இடையிலான விஷேட படகுச் சேவையை ஆரம்பிக்க திட்ட மிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு செல்லும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதியும் வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த படகுச் சேவையின் மூலம் ஒல்லாந்தர் கோட்டை, பூநகரிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள், மற்றும் தொல்பொருள் பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் பூநகரியி லுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள், தொல்பொருள் இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு, குடாநாட் டின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கூடமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். பூநகரியை சுற்றுலா பயணத்தலமாக அபிவிருத்தி செய்வதே இதன் மற்றுமொரு நோக்கம் என்றும் குறிப்பிட்டார்

ஆவணி, 23, 2010

அவுஸ்திரேலியாவில் தொங்கு பாராளுமன்றம்

அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டி யிட்ட இரு பிரதான கட்சிகளும், பெரும்பான்மை வாக்குகளை பெறாததால் அங்கு தொங்கு பாராளுமன்றம் அமைக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. ஆட்சி அமைக்க 76 ஆசனங்களை பிரதமர் ஜூலியா கில்லார்ட் தலைமையிலான தொழிற் கட்சியோ அல்லது கன்சர்வேட்டிவ் லிபரல் கட்சியோ பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இரு கட்சிகளும் அண்ணளவில் சமமான வாக்கு வீதத்தை பெற்றுள்ளன. எனினும், ஆளும் தரப்பு 72 ஆசனங்களையும், எதிர்தரப்பு 73 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இதைவிட சுயேச்சை குழுக்கள் 4 ஆசனங்களையும் கிறீன் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.  (மேலும்....)

ஆவணி, 23, 2010

செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா இன்று

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில் தேர்த் திருவிழா இன்று 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இன்றைய தேர்த் திருவிழா நாளை 24ம் திகதி இடம்பெறும் தீர்த்தத் திருவிழா ஆகியவற்றை முன்னிட்டு பருத்தித்துறை, யாழ்ப்பாணம், காரைநகர் இ.போ. ச. டிப்போக்களினால் விசேட பஸ் சேவைகள் நடைபெறுகின்றன. தேர், தீர்த்த உற்சவங்களில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதி கருதி சந்நிதியான் ஆச்சிரமம் உட்பட சந்நிதி சூழலில் உள்ள மடங்களில் அன்னதானத் திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டாண்டு காலமாக உள்ளது போல் எத்தனை ஆயிரம் பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கு எந்நேரமும் அன்னதானம் வழங்கத் தயார் நிலையில் உள்ளன.

ஆவணி, 23, 2010

புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து இதுவரையில் 3080 முன்னாள் புலி உறுப்பினர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து இதுவரையில் 3080 முன்னாள் புலி உறுப்பினர்கள் தமக்குரிய விசாரணைகள் முடிவடைந்ததையடுத்து பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். மேலும் தெரிவு செய்யப்பட்ட ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார் மற்றும் கடும் சுகயீனமுற்ற 30 பேரே அடுத்த கட்டமாக விடுவிக்கப்படவிருப்பதாகவும் ஆணையாளர் கூறினார். இதேவேளை, அன்றைய தினம் புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து சட்டபூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட 59 குடும்பத்தாருக்கு சுய தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தோட்டப் பயிர்ச் செய்கைக்கான உபகரணங்கள், மரக்கன்றுகள், களை நாசினிகள் ஆகியனவும் வழங்கப்படவுள்ளன. (மேலும்....)

ஆவணி, 23, 2010

அமைச்சர் டக்ளஸ் தலைமையில்

யாழ். குடாவில் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கை

யாழ். குடாநாட்டில் பொருட்களின் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் பலரிடையே நிலவி வருகின்ற தெளிவின்மையை அகற்றி நுகர்வோரிடையேயும், வர்த்தகரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் சனியன்று அமைச்சரின் பணிமனையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது யாழ். குடாநாட்டு வர்த்தக சங்கப் பிரதிநிதிகளும் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் கலந்துகொண்டனர். (மேலும்....)

ஆவணி, 23, 2010

தமிழ் கைதிகள் விவகாரம்

மகிந்தாவை புகழும் அரியநேந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்திருக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையென பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்பு தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் 765 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி அரியநேந்திரன் எம்.பி. ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்தார். அதில் அனைவரையும் விடுவிக்க முடியாத பட்சத்திலும் சிறைகளிலுள்ள 50 பெண்களையும் 05 குழந்தைகளையுமாவது விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென தான் கேட்டிருந்ததாகவும் அரியநேந்திரன் எம்.பி. தெரிவித்தார். மகஜர் கிடைத்ததும் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி அறிவித்திருந்ததுடன், நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூறி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தமை தொடர்பாக தனக்கு கடிதங்கள் கிடைத்துள்ளதாகவும் அரியநேந்திரன் எம்.பி. கூறினார்.

ஆவணி, 23, 2010

இந்தியா 250 மில்லியன் ரூபா நன்கொடை

வடக்கு, கிழக்கிலுள்ள 89,000 விதவைகளுக்கு மீள் எழுச்சித் திட்டம்

வடக்கு, கிழக்கிலுள்ள 89 ஆயிரம் விதவைகளுக்காக விசேட மீள் எழுச்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் முதற் கட்டத்திற்கென 250 மில்லியன் ரூபாய் நிதியை நன் கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளதாக சிறுவர் மேம்பாட்டு, மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப் பட்டதுடன், இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்....)

ஆவணி, 23, 2010

வடக்கு, கிழக்கு

ஆஸ்பத்திரி அபிவிருத்திக்கு சீனா ரூ. 7410 மில்லியன் உதவி

வடக்கு, கிழக்கு மாகாணங்க ளில் உள்ள அரசாங்க வைத்திய சாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீனா 7410 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக் கிடையிலும் அண் மையில் கைச்சாத்திடப்பட்டது. சுகாதார அமைச்சு இந்த நிதியை வடக்கு மற்றும் கிழக் கில் உள்ள சகல அரசாங்க வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்ய பயன்படுத்தும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் ரவீந்திர ருபேரு தெரிவித்தார். வைத்திய சாலைக ளில் புதிய கட்டடத் தொகுதிகள் நிர்மாணிக்கப்ப டுவதுடன் ஏற்கனவே உள்ள கட்டடத் தொகுதிகளும் புனரமைக்கப்படும். அத்துடன் நவீன மருத்துவ உபகரணங்கள், தீவிர சிகிச்சை பிரிவுகள், சத்திரசிகிச்சை கூடங்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், மருத்துவ ஆய்வுகூடங்கள் மற்றும் இதர அனைத்து வசதிகளும் பெற்றுத்தரப்படும் என்றார்.

ஆவணி, 23, 2010

13வது அரசமைப்புத் திருத்தம் தீர்வு அல்ல – டக்ளஸ்  தேவானந்தா

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்கம் செய்கின்றமை தொடர்பாக விளக்கம் அளிக்கும் உயர்மட்ட மாநாடு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் .வீ.ஆனந்தசங்கரி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் செயலாளர் நாயகம் தி.சிறிதரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.முஸ்தபா ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண, பேராசிரியர்களான ஏ.எம்.நவரட்ண பண்டார, ரஞ்சித் அமரசிங்க, அசோக எஸ் குணவர்த்தன ஆகியோரும் பேராளர்களாகப் பங்குபற்றினர். (மேலும்...)

ஆவணி, 22, 2010

தலைவர்கள் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும்

இனப் பிரச்சினையின் தீர்வுக்கு மிக அண்மை வரை நாம் சென்றிருக் கின்றோம். பண்டா - செல்வா ஒப்பந்தம், ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு, பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் என்பனவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம். முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் முக்கிய மான சரத்துகளை அதில் உள்ளடக்கலாம் என்று அன்றைய அரசாங்கம் விடுத்த அழைப்பைத் தமிழரசுக் கட்சி நிராகரித்துவிட்டது. (மேலும்...)

ஆவணி, 22, 2010

எரிக்கின்ற வெயில்; புகை கக்கும் வாகனம்; பாருங்கள் எங்கள் யாழ்ப்பாணத்தை

யாழ்ப்பாண நகரம் வாகன நெருசலிலும் மக்கள் கூட்டத்தாலும் திக்குமுக்காடுகிறது. எவரும் எதிர்பார்க்காத வகையில் இத் திடீர் மாற்றம். இம் மாற்றம் யாழ்ப்பாண நகரத்தின் போககை மிக மோசமாக பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இதற்கு மேலாக, மூலை முடுக்கெங்கும் வியாபார நிலையங்கள். காலாறுவதற்குக் கூட இட மில்லை எனும் அளவிற்கு யாழ்ப்பாண நகரத் தின் நெருக்கடி உள்ளது. யாழ்ப்பாண நகரம் இப்போது நாவலர் வீதி, பிறவுண் வீதி, ஆஸ்பத்திரி வீதி, பலாலி வீதி, பருத் தித்துறை வீதி என்பவற்றால் வேகமாக முன் னேறிக்கொண்டு செல்கின்றது.இதனால் யாழ்ப் பாண நகரம் விஸ்தரிக்கப்படுகின்றது என்பதற் கப்பால் வீடுகள், ஆலயங்கள், அதன் சுற்றுச் சூழல் மற்றும் உறவுநிலை என்பன நகர மையத் திற்குள் அகப்பட எங்கள் இயற்கையின் எழிலழகை நாம் இழந்துபோகும் பரிதாபத்தில் இருக்கின்றோம். (மேலும்..)

ஆவணி, 22, 2010

கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியல் எவ்வளவு காலம் சென்றாலும் பலன் தரப்போவதில்லை

முதலில் தெரிவு செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலையை ஐக்கிய தேசியக் கட்சியும் புலிகளும் கூட்டுச் சேர்ந்து ஏற்படுத்தினார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்படுவதற்கான முதலாவதுஅத்திவாரம்அது எனக் கூறலாம்.

(ஜீவகன்)

கூட்டமைப்பை இணைத்துக்கொள்ளும் முயற்சியிலேயே தமிழ்க் கட்சிகளின் அரங்கம் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் போல் தெரிகின்றது. இது அரங்கம் செயலில் இறங்குவதை இயன்றளவு தடுப்பதற்கான தந்திரோபாயம். இந்தத் தந்திரோபாயத்துக்குப் பலியாகாமல் இருக்க வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தாமதமின்றி அதன் வேலைத் திட்டத்தைத் தயாரித்துச் செயலில் இறங்க வேண்டும். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றில் அரங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும், அல்லது மக்களுக்கு முன்னால் மாற்று வேலைத்திட்டமொன்றை வைக்க வேண்டும். (மேலும்...)

ஆவணி, 22, 2010

மாறி வரும் உலக பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப இந்நாட்டை நாம் மாற்றியமைக்க வேண்டும் - புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர

இதுவரை மூவாயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிள்ளைகள், வயோதிபர், அங்கவீனர்கள், பெண்கள் என கணிசமானோரை விடுதலை செய்துள்ளோம். இவ்வாறு விடுதலையான பெண்கள் ஆடைத் தொழிற்சாலைகளில் பயிற்சிபெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. யுத்தத்தின் போது புலிகள் இயக்கத்தில் இருந்து யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்ட 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருக்கிறன. அவர்களைப் பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது. எஞ்சியிருக்கும் ஏனையோர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். (மேலும்...)

ஆவணி, 22, 2010

சுருதி மாறிய பேச்சு

(வாகுலன்)

இனப் பிரச்சினையின் தீர்வு தான் எல்லாவற்றிலும் முன்னுரிமை பெற வேண் டியது என்று தமிழ்த் தலைவர்கள் நீண்ட காலமாகக் கூறி வந்தார்கள். ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து மிக அண்மைக்காலம் வரை இத் தலைவர்களின் பேச்சு இவ்வாறா கவே இருந்தது. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று வெவ்வேறு பெயர்களில் வலம் வந்தாலும் ஒரே பாணியி லேயே பேசினார்கள். தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் ஏன் அக்கறை செலுத்துவதில்லை என்ற கேள்விக்கு இவர்களின் பதில் அது. இன்று சுருதி கொஞ்சம் மாறியிருக்கின்றது. தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கின்றார்கள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். இனப் பிரச் சினைக்கான தீர்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அன்றாடப் பிரச்சினை கள் பற்றிப் பேசுகின்றார்கள். புலிகளும் இப்படித்தான் பேசினார்கள். (மேலும்...)

ஆவணி, 22, 2010

‘சுப்பர் பக்’ இந்தியாவை குறிவைத்து ஏவப்பட்ட ஆயுதமா?

(வாசுகி சிவகுமார்)

இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ ஆராய்ச்சி இதழான லன்செட்டில் ‘சுப்பர் பக்’ பற்றி வெளியாகியிருக்கும் கட்டுரைதான் சமீபகால பரபரப்பு களுக்கெல்லாம் காரணமானது. எந்த நோயெதிர்ப்பு மருந்துக்கும் (Antibiotics) கட்டுப்படாத நியூடெல்லி மெதெல்லோ பீட்டா லக்டமேஸ் - 1 எனும் மரபணுவைக் கொண்ட பற்றீரியாக்கள் இந்திய மருத்துவ மனைகளில் பரவுவதாக, லன் செட் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது. 31 ஆராய்ச்சியாளர்கள் இக்கட்டுரைக்கு பங்களிப்புச் செய்திருந்தனர். அவர்களில் 16 பேர், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றுபவர்கள். எந்த நோயெதிர்ப்பு மருந்துக்கும் கட்டுப்படாத பற்றீரியாக்கள் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பரவிவருவதாக இச்சஞ்சிகை தெரிவித்துள்ளது. (மேலும்...)

ஆவணி, 22, 2010

பண்டைய புத்தளம் - யாழ்ப்பாணம் கரையோரப் பாதை மூடப்படக் கூடாது

(எம். ஐ. எம். அப்துல் லத்தீப்)

புத்தளத்திலிருந்து கரையோரமாக வட மாகாணத்தின் முருங்கன் வழியாக மன்னாரையும், அதே வழியின் உயிலங்குளம் சந்தி வழியாக யாழ்ப்பாணம் பூனகரி வரையும் புராதன காலம் முதல் நீண்டு சென்ற கரையோரப் பாதையானது, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1902ம் ஆண்டில் கால ஓய ஆற்றுக்கும், மோதரகம் ஆற்றுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை வனவிலங்குகளுக்கான புகலரணாக சட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்தியது முதல் புத்தளம் - மன்னார் - யாழ்ப்பாணம் கரையோரப் போக்குவரத்தும், இம்மக்களுக்கிடையிலான சமய, கலாசார, வர்த்தகத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. அன்று முதல் இம்மக்கள் தமது போக்குவரத்துத் தொடர்புகளை புத்தளமிருந்து அனுராதபுரம், மதவாச்சி வழியாக மன்னாரையும், மதவாச்சி, வவுனியா வழியாக யாழ்ப்பாணத்தையும் நெடுந்தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். (மேலும்...)

ஆவணி, 22, 2010

அமெரிக்கா

வேலை இழந்தோர் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்வு

அமெரிக்காவில் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் 12 ஆயிரம் பேர் வேலை யிழந்துள்ளனர். இதையடுத்து அமெரிக்காவில் வேலையிழந்தோரின் எண் ணிக்கை 5 லட்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கத்திலிருந்து மீட்சிபெற உலக முதலாளித்துவம் கடுமையாக முயற்சிக்கிறது. எனினும் நவீன தாராளமய கொள்கைகளை மேலும் தீவிரமாக அமல்படுத்திக்கொண்டே பொருளாதார மீட்சிக்கு முயற்சிப்பதால் அது பலனளிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்காவில் வேலையின்மை மேலும் தீவிரமடைந்துள்ளது. ஒபாமா அரசு இதனால் திணறிக்கொண்டிருக்கிறது. (மேலும்...)

ஆவணி, 22, 2010

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள் ஒப்படைப்பு

உரியவர்களை அடையாளம் காணும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்

இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்டுப் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ள வாகனங்களுக்கான உரிமத்தை அடையாளம் காணும் பணிகள் நேற்று (21) மீண்டும் ஆரம்பமாகின. இதற்கான நடமாடும் சேவை இன்று (22) ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் உரிமத்தை அடையாளம் காணும் பணியை நிறைவு செய்ய எதிர் பார்ப்பதாகவும் கூறினார். நேற்றைய தினம் 250 மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமையாளர்கள் தமது உரிமத்தை உறுதிப் படுத்தியுள்ளனர். வாகனப் பதிவுச் சான்றிதழ், இயந்திர இலக்கம் என்பன ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு உரிமம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அதன் பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படும். (மேலும்...)

ஆவணி, 21, 2010

இடம்பெயர்ந்தோரின் துயரத்தை அரசியலாக்கக் கூடாது

இடம் பெயர்ந்தவர்களில் தொண்ணூறு வீதத்தினர் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி கூறுவது மீள்குடியேற்றச் செயற்பாடு திருப்திகரமாக நடைபெறுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. கிளிநொச்சியில் ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் நேற்று நடைபெற்ற மீள்குடி யேற்றம் தொடர்ச்சியான செயற்பாட்டின் ஒரு அம்சமே. வன்னியில் பல கிராம சேவகர் பிரிவுகளில் ஏற்கனவே மீள்குடியேற்றம் இடம் பெற்றுவிட்டது. அரசாங்கம் மீள்குடியேற்றத்தில் அக்கறை செலுத்தவில்லை என்று எதிரணிக் கட்சிகள் செய்யும் பிரசாரம் இடம் பெய ர்ந்த மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப் படுத்தவில்லை. இது இடம்யெர்ந்த மக்களைத் தவறாக வழிநடத்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றது. (மேலும்.....)

ஆவணி, 21, 2010

சம்பாஷணை

மேலோகத்தில் பிரபாகரனும் பாலசிங்கமும்.

மேலோகத்தில் பாலசிங்கம், பிரபாகரன், தமிழ்ச்செல்வன், நடேசன் மற்றும் புலிகளின் தளபதிகள் கூடிக் கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரபாகரன்: எல்லாப்படைகளும் எங்களிட்டை இருந்துது. ஆனால் முள்ளிவாய்க்கால் வரை தலை தெறிக்க ஓடி கடைசியில் ஒட்டுமொத்தமாக மாண்டு போனம். சர்வதேசமும் எங்களுக்கு உதவவில்லைத்தானே

பாலசிங்கம்: உனக்கு அரசியல் தெரியாது. ஆயதத்தை மட்டும் வைத்து சிங்களவனை வெட்டி விழுத்தலாம் என்று நினைச்சாய். நான் சொன்னதையெல்லாம் காதிலை விழுத்தவும் இல்லை. நோர்வேக் காரன் மாதத்திற்கு மூன்று முறை வந்தபோதும் அவனட்டை மாதம் மும்மாரி பொழிகிறதா  என அவனைக் கேட்டுத் தொலைத்தாய். நீ திருந்தமாட்டாய் என அவனும் துண்டைக்காணேம் துணியைக்காணோம் என ஓடிப்போயிட்டான். இப்ப பார் மண்டையில கொத்து வாங்கி  இஞ்ச வந்த சேர்ந்திருக்கிறாய். (மேலும்.....)

ஆவணி, 21, 2010

Team from Sri Lanka meets fishermen in Nagapattinam

Kangesanthurai and other ports in the northern Sri Lanka had long ceased to provide for fishing logistics after being taken over for military use, the members said. With large coastal stretches in the northern part of the country being cordoned off, the Srilankan fisherfolk laid bare their grievances against the established fishing culture across the Palk Strait here in Tamil Nadu. The team members said they were here to explain the constraints under which the fishermen in Sri Lanka were earning their livelihood. The delegation had earlier visited Rameswaram, Jegadapattinam, Kottaipattinam in Pudukottai and Adhiramapattinam in Thanjavur districts. (more...)

ஆவணி, 21, 2010

சீனாவில் தீவிரவாத தாக்குதலில் 7 பேர் பலி

சீனாவில் முஸ்லிம்களுக்காக தனிநாடு கோரும் ஷின்ஜியாங் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத் திய வெடிகுண்டுத் தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர்.  அக்சு நகரில் 3 சக்கர சைக்கிளில் பொருத்தப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.  கடந்த கோடை காலத்தில் இந்த மாநிலத்தின் தலைநகரான உரும் கியில் நடந்த இனக்கலவரத்தில் 197 பேர் பலியானார்கள். இந்த கலவரம் தொடர்பாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 24பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கலவரத்தை தொடர்ந்து உரும்கியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வேவு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

ஆவணி, 21, 2010

அமெரிக்க ஒப்பந்தத்தை கொலம்பியா நிறுத்தியது

கொலம்பியா நீதிமன்றம் அமெ ரிக்காவுடன் செய்து கொண்ட பாது காப்பு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத் துள்ளது. லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க அரசின் செல்வாக்கு மீண்டும் சரிந்துள்ளது. கொலம்பியாவில் உள்ள ராணுவ முகாம்களில் அமெரிக்கப் படைகள் தங்குவதற்கு வழிவகுக்கும் ஒப்பந்தத் திற்கு கொலம்பிய அரசியல் சட்ட நீதி மன்றம் தடைவிதித்துள்ளது. இத் தீர்ப்பு செவ்வாய்க்கிழமையன்று வெளியானது. கொலம்பியா நாடாளு மன்றம் இந்த ஒப்பந்தத்திற்கு அங்கீ காரம் அளிக்கவில்லை என்று நீதி மன்றம் கூறிவிட்டது.(மேலும்.....)

ஆவணி, 21, 2010

Did the Sri Lankan migrants 'jump the queue'?

An overwhelming majority of Canadians -- 83 per cent -- believes that the passengers of the MV Sun Sea budged in line for immigration to Canada, cutting ahead of would-be immigrants who've spent years filling out paperwork. Are they correct?

The answer is an emphatic "No," according to immigration lawyer Richard Kurland.

"They are not retarding the process in any way, making it longer or more difficult in any way for anyone else," he told ctvbc.ca.

The 492 Tamil migrants from Sri Lanka are just a drop in the bucket for Canada, which is set up to handle 40,000 refugee claimants every year.

As asylum-seekers, they'll be subjected to a rigorous verification process, completely separate from immigrants who come to Canada to find work, go to school or be closer to family members.

"I don't understand what the problem is," Kurland said. "There is no connection whatsoever between these two cases." (more....)

ஆவணி, 21, 2010

கிளிநொச்சி மாவட்டம்

இடம்பெயர்ந்தோர் காணிகளை வெளியார் கைப்பற்றும் நிலைமை கிடையாது - அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை வெளியார் அடாத்தாகக் கைப்பற்றும் நிலைமை எதுவும் கிடையாதென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். காணி உரிமையுள்ள மக்கள் உண்மை யான உறுதிகளுடன் வருவார்களேயானால் அவர்கள் தமது சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுவார்களென்றும் அதற்கு எந்தத் தடையும் இல்லையென்றும் அரசாங்க அதிபர் கூறினார். தமது சொந்தக் காணியை எவராவது அடாத்தாகக் கைப்பற்றியிருந்தால், பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் ஊடாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

ஆவணி, 21, 2010

காஷ்மீர் சுயநிர்ணய போராட்டம் வெற்றி பெற பாகிஸ்தான் ஆதரவு

காஷ்மீர் மக்கள் நடத்தி வரும் சுய நிர்ணயப் போராட்டம் வெற்றிபெறும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் கூறுகையில், காஷ்மீர் மக்களின் சுய நிர்ணயப் போராட்டம் வெற்றி பெற தார்மீக அடிப்படையிலும், தூதரக அளவிலும் பாகிஸ்தான் தனது ஆதரவுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. காஷ்மீர் மக்கள் அவர்களது இலக்கை அடைவதிலிருந்து யாரும் அவர்களைத் தடுக்க முடியாது. தங்களது நோக்கத்திற்காக தியாகங்களை செய்ய காஷ்மீரி மக்கள் தயாராகி விட்டபோது அதை யாராலும் தடுக்க முடியாது என்பது எங்களது நம்பிக்கை. (மேலும்.....)

ஆவணி, 21, 2010

Lessons Learnt and Reconciliation Commission
Now ex-Defence Secy slams CFA

(By Shamindra Ferdiando)

Former Defence Secretary Austin Fernando claims there had not been proper consultations with the military before the then Premier Ranil Wickremesinghe’s government signed the CFA with the LTTE. Testifying before the Lessons Learnt and Reconciliation Commission headed by former Attorney General C. R. de Silva, Fernando said that he had had absolutely no authority to intervene though the CFA extensively dealt with national security issues. A mere Secretary could not interfere when government took decisions, he said. Responding to a query by the commission, former Defence Secretary Fernando said that he had not been involved in preparing the CFA. (more...)

ஆவணி, 20, 2010

யாழ்., ஹம்பாந்தோட்டையில் மேலும் இரு இந்தியத் தூதரகங்கள்

யாழ்பாணத்திலும் ஹம்பாந்தோட்டையிலும் இந்தியத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பில் இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் சி.ஆர் ஜயசிங், இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே கந்தா ஆகியோருக்கிடையில் இன்று குறிப்பு பரிமாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.இருவருக்கும் இடையில் அங்கு இடம்பெற்றிருந்த பரஸ்பர பேச்சுக்களின் பலனாகவே இத்துணைத் தூதரகங்கள் அமைக்கப்பட உள்ளதாக இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார். வடமகாண மக்கள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும் துணைத் தூதரகம் மூலம் நன்மை அடைவர். தென்மகாணமக்கள் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட இருக்கும் துணைத் தூதரகம் மூலம் நன்மை அடைவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவணி, 20, 2010

சிவந்தனின் நடை பயணத்திற்கு செலவாகும் பணத்தினை வன்னி மக்களுக்கு கொடுத்தால் உதவியாகும்!!

(கருணா கணபதிப்பிள்ளை)

சிவந்தனின் நடைபயணத்தை நாம் கொஞ்சம் உற்றுநோக்குவோமானால் இந்த நடைபயணத்தின் நோக்கம் என்னவென்பது புரியும்.    அதாவது இந்த மாதிரியாக   புலியாதரவாளர்கள்  செய்யும்   நடவடிக்கைகள்     யாவும் தங்களுக்கு     தமிழ் மக்களிடையே ஒரு publicity  யை தேடுவதும்,    பதுக்கி வைத்திருக்கும்   புலிகளின்    காசுகளை   தங்களின்    உல்லாச நடவடிக்கைகளுக்கு செலவழிப்பதுமே தான் இவர்களின் குறிக்கோளாகும். இதை தவிர இவர்கள் வேறெதையும் சாதிக்கபோவதில்லை. சிவந்தனின் நடை பயணத்தை நாம் அவதானித்த வரை இது ஒரு சுற்றுலா நடவடிக்கையாகவே இதை பார்க்க கூடியதாக உள்ளது. சிவந்தன் ஒவ்வொரு நாளும் புதிது, புதிதாக உடையுடுத்திக்கொண்டு, இரவில் நல்ல உல்லாச விடுதிகளில் தங்கிக்கொண்டு, வடிவாக குடித்து சாப்பிட்டுக்கொண்டு வரும் வழிகளில் நல்ல இடங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டு வருகிறார். (மேலும்...)

ஆவணி, 20, 2010

யாழ் குடா நாட்டின் தரைக்கீழ் நீர் வளம் - பாகம் 01

(பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்)

சுண்ணக்கற் பாறைப் படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ்ப்பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழமற்ற மேற்பாகத்திலும் காணப்படுகின்றன. இதனால் அதிக ஆழமற்ற கிணறுகளைத் தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது. மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாக காணப்படுகின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.(மேலும்...)

ஆவணி, 20, 2010

கே. பி. தொடர்பான பொன்சேகாவின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பு

கே. பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கைது தொடர்பாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. எமது உளவுப் பிரிவு அதிகாரிகள் இருவரே கைது செய்து அழைத்து வந்தனரென அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் அவர் கைதாகும் தினத்திலிருந்து சுமார் மூன்று மாத காலத்துக்கு முன்னர் இருந்தே ஆரம்பமானது. குமரன் பத்மநாதனின் கைது தொடர்பாக எனக்கு சகல விபரங்களும் தெரியும். ஆனால் அதை நான் இங்கு குறிப்பிட விரும்ப வில்லை. எனினும் அவர் தொடர்பாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்களை நான் முற்றாக மறுக்கிறேன்; அவை உண்மையல்ல என்றார். (மேலும்...)

ஆவணி, 20, 2010

இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணி உறுதியை சட்டபூர்வமாக்க அரசு முடிவு

யுத்த காலத்தின் போது வடக்கு, கிழக்கில் உள்ள தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணி உறுதியை சட்ட பூர்வமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்க காணி சீர்திருத்த ஆணைக் குழு (LRC)  நடவடிக்கை எடுக்கும். தமது சொந்த இடங்களில் முறையான காணி பகிர்வுடன் குடியேறுவதற்கு அந்த குடும்பங்களுக்கு இதனால் வாய்ப்பு ஏற்படும். மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 50 குடும்பங்களுக்கு இவ்வாறான சொந்தக் காணியில் குடியேறும் வகையில்ஏற்கனவே உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார். (மேலும்...)

ஆவணி, 20, 2010

நல்லூர் உற்சவம்

தென் பகுதியிலிருந்து பெருமளவு பக்தர்கள் வருகை, உலகில் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாக்களுக்கு பக்தர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டுமல்ல தென் பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களைக் கண்காணிக்க தினமும் 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர், தீர்த்தம், பூங்காவனம் உற்சவ காலங்களில் அடியார்களின் வருகை கூடுதலாக இருக்குமாகை யால் இத் தினங்களில் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவார்கள். (மேலும்...)

ஆவணி, 20, 2010

ஒரு ட்ரில்லியன் டொலர் செலவு, 4400 வீரர்கள் பலி இற்கு பின்பு

ஈராக்கிலிருந்து அமெரிக்காவின் போரிடும் படைகள் அனைத்தும் வாபஸ்

ஈராக்கிலிருந்து அமெரிக்காவின் இறுதிப் படையணிகள் நேற்று வாபஸ் பெறப்பட்டன. நான்காம் ஸ்டைகர் படையணி, இரண்டாம் இன்பென்ற் படையணி என்ப வையே ஈராக்கிலிருந்து இறுதியாக வாபஸ்பெறப்பட்ட படையணிக ளாகும்.  இவை குவைத் எல்லை வழியாக வாபஸ் பெறப்படும் காட்சி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டன. ஈராக்கின் இராணுவ ஆட் சேர்ப்பு நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று (செவ்வாய்) இப்படைகள் வாபஸ் பெறப்பட்டன. (மேலும்...)

ஆவணி, 20, 2010

சமூகப் பிரச்சனைகளை சினிமாவிலும் சொல்லலாம்

பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணைய தளங்கள் ஆகியவை மூலம் மட்டும்தான் சமூகப் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. திரைப்படங்கள் மூலமாகவும் சொல்லலாம் என்கிறார் காவலர் குடியிருப்பு... இல்லையில்லை... காதலர் குடியிருப்பு படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். காவலர் குடியிருப்பு என்றுதான் துவக்கத்தில் தனது படத்திற்குப் பெயர் சூட்டியிருந்தார் ரமேஷ். தயாரிப்பாளர்தான் ஆலோசனை கூறி காதலர் குடியிருப்பாக மாற்றியிருக்கிறார். பாபர் மசூதி இடிப்பு சம்பவம் இவர் இயக்கி வந்த படத்தில் இடம் பெறுகிறது என்று சொன்னவுடனேயே எதிர்பார்ப்புகள் கிளம்பத் துவங்கிவிட்டன. (மேலும்...)

 

ஆவணி, 20, 2010

 

விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்

கிழக்கில் இம்முறை அமோக நெல் அறுவடை கிடைத்துள்ளது. அங்கு நெல் அறுவடை தற்போது முடிவுறும் கட்டத்துக்கு வந்துள்ளது. தாங்கள் எதிர்பார்த்ததைப் பார்க்கிலும் கூடுதலான விளைச்சல் கிடைத்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். யுத்தம் ஓய்ந்த பின்னர் கிழக்கின் அனைத்து வயல் பிரதேசங்களிலும் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடக் கூடிய சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. இதுவே முதன்மைக் காரணம் ஆகும். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் வயல் பிரதேசங்கள் அன்றைய காலப் பகுதியில் புலிகளின் நடமாட்டமுள்ள இடங்களாகவே இருந்தன. விவசாயிகள் நிம்மதியாக நெற்செய்கை மேற்கொள்வதற்கு அக்காலப் பகுதியில் புலிகள் இடமளிக்கவில்லையென்பது வெளிப்படையாகத் தெரிந்த விடயம்...... தமிழ், முஸ்லிம், சிங்கள விவசாயிகள் அனைவருமே இப்பிரச்சினையை எதிர்கொண்டனர். (மேலும்...)

ஆவணி, 20, 2010

இயற்கை பேரிடருக்கு இந்திய உதவியை பாக். ஏற்க வேண்டும்  அரசியல் கூடாது: அமெரிக்கா வலியுறுத்தல்

இயற்கை பேரிடர் பாதிப்புக்கு இந்தியா அளிக்கும் உதவியை பாகிஸ்தான் ஏற்க வேண்டும். இதில் அரசியல் தலைநீட்டக் கூடாது என அமெரிக்கா கூறியுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதியன்று ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1700 பேர் பலி யானார்கள். 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். 3 வாரம் இடைவிடாது பெய்த மழை காரணமாக கைபர் - பக் துன்வா, பஞ்சாப், பலுசிஸ்தான், சிந்து மாகாணங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் 6 லட்சத்து 50 ஆயிரம் மக் கள் அடிப்படை புகலிட வசதி இல்லாமல் அவதிப் படுவதாகவும், 60 லட்சம் மக்கள் அவசர நிவாரண உதவியை எதிர்பார்த்து உள்ளதாகவும் ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

ஆவணி, 20, 2010

வேறுபாடுகளிருந்தாலும் ஐ.நாவுடன் இணைந்து பணியாறுவதற்கு தயார் -அமைச்சர் பசில்

இடம்பெயர்ந்த மக்களை பராமரிக்கும் செயற்பாடுகள் மற்றும் மீள்குடியேற்ற விடயங்கள் என்பனவற்றில் ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன பாரிய பங்களிப்பை வழங்கின. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையுடன் வேறுபாடுகள் காணப்பட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவிகள் கிடைத்திருக்காவிடின் வெற்றி பெற்றிருக்க முடியாது. வேறுபாடுகள் காணப்பட்டாலும் அனைவரினதும் நோக்கம் ஒன்றாகவே இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்...)

ஆவணி, 20, 2010

ஈரான் மீதான தடைகள், இராணுவ அழுத்தங்கள் நீக்கப்படும் வரை அமெரிக்காவுடன் பேசிப் பயனில்லை

ஈரான் மீதான பொருளாதாரத் தடை, இராணுவ அச்சுறுத்தல்கள் நீக்கப்படும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில்லையென ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அல் காமனி தெரிவித்தார். புதன்கிழமை தலைநகர் தெஹ்ரானில் நடந்த முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஆயதுல்லா அல் காமனி இதைத் தெரிவித்தார். அமெரிக்கா நேர்மையான நாடல்ல. அதனுடன் பேசிப் பலனில்லை. உலக வல்லரசு நாடுகள் ஈரானை அச்சுறுத்துகையில், அழுத்தம் கொடுக்கையில், தடைவிதிக்கையில், இரும்புக் கரங்களால் ஈரானை நசுக்க முனைகையில் அவர்களுடனான பேச்சு நேர்மையாக அமையாது, உரிய பலனைத் தராது என்றும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் மேலும் குறிப்பிட்டார். யுரேனியம் செறிவூட்டல் அமைதியான நோக்கம் கொண்டது. (மேலும்...)

ஆவணி, 19, 2010

கனடிய அரசை மிரட்டும்?

கனடிய தமிழ் காங்கிரஸ், கனடியத் தமிழ் பேரவை

பணம் பெற்று ஆட்களைக் கப்பலில் அனுப்பி விடுபவர்கள் தொடர்பாகவும் கனடாவின் குடிவரவுக் கொள்கைகள் தொடர்பாகவும் உரையாடல்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பதை கனேடியத் தமிழர் பேரவை உணர்கிறது. இருப்பினும் RCMP மற்றும் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவைகள் (CSIS) வேறு தனிப்பட்ட, சுயமான விசாரணைகளை நடத்துவதைப் பாதிக்காத வகையில் இந்த உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். கனேடியத் தமிழர்களே இந்தக் கப்பலில் வந்தவர்களின் பயணத்துக்கு நிதி உதவியை வழங்கியிருந்ததாக அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். முழுமையான விசாரணைகள் இன்றி ஊகங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் கூறும் இத்தகைய கருத்துக்களினால் கனேடியர்கள் மத்தியில் அவநம்பிக்கையும் தேவையற்ற பதட்டமும் ஏற்படுகின்றன.  (மேலும்...)

 
ஆவணி, 19, 2010

தமிழ்த் தலைமைகளுடனான ஒப்பந்தங்களை எதிர்த்ததாலேயே தீர்வு சாத்தியமாகாமல் போனது

தமிழ்த் தலைமைகள் அரசாங்கங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்த்ததாலேயே தீர்வு எதுவும் சாத்தியமாகாமல் போனதென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்தியாவுக் கான முன்னாள் உயர்ஸ்தானிகருமான மங்கள முனசிங்க தெரிவித்தார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையொன்றுக்கு ஆளுங்கட்சி தீர்வொன்றை காண முற்பட்டால், அதனை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்ற அரசியல் போக்கின் காரண மாகவே நாட்டின் இனப்பிரச்சி னைக்குத் தீர்வொன்று எட்ட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மங்கள முனசிங்க குறிப்பிட்டார். (மேலும்....)

ஆவணி, 19, 2010

வடக்கு மக்களுக்கு நீடித்து நிலைக்கும் நிம்மதி

வடக்கு மக்களுக்கு இன்று பிரதானமாகத் தேவைப்படுவது நீடித்து நிலைக்கும் நிம்மதி. மூன்று தசாப்த கால இருண்ட யுகம் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியக் கூறுகளை முற்றாக இல்லாதொழிப்பதன் மூலமே நீடித்து நிலைக்கும் நிம்மதியைப் பெற முடியும். அதற்காகவே இராணுவப் பிரசன்னம் சிறிது காலத்துக்குத் தேவைப்படுகின்றது என்ற அரச தரப்பு வாதத்தில் நியாயம் இல்லாமலில்லை. வட பகுதி மக்களின் நிலையான நிம்மதிக்குப் பொது மக்கள் மத்தியில் இராணுவப் பிரசன்னம் இல்லாதிருப்பது எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவம் பெறுகின் றது மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாதிருப்பது. இவையிரண்டும் நிம்மதிக் கான முன்தேவைகள். பின்னைய முன்தேவை விரைவில் நிறைவேறி மக்களுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை.

(மேலும்....)

ஆவணி, 19, 2010

பளை முதல் கே.கே.எஸ். வரை

ரயில் பாதையில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற உத்தரவு

பளை தொடக்கம் காங்கேசன்துறை வரை செல்லும் ரயில் பாதையில் அத்து மீறிக் குடியேறியவர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கிராம சேவையாளர்கள் முலம் கட்டளையிட்டுள்ளார். இதுபோன்ற கட்டளை கடந்த வருடமும் விடப்பட்டது நேயர்கள் அறிந்ததே. சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் தம்மிடம் இருந்த பணம் முழுவைதையும் சிறிய வீடுகளைக் கட்டுவதில் செலவு செய்துவிட்டதாகவும் தாங்கள் போய் குடியேற காணியில்லை என்றும் சொல்லுகின்றனர். தமக்கு நட்டஈடு அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் வாதிக்கின்றனர். யாழ். தேவி காங்கேசன்துறை வரை வரவேண்டும் என்றால் யாராவது ஒரு பகுதி விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே பொதுவான அபிப்பிராயமா கும்.

ஆவணி, 19, 2010

யாழ். உயர் பாதுகாப்பு வலயங்களை அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை

யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களையும் அப்புறப்படுத்து வது சாத்தியமில்லையென்றும் ஆனால், இராணுவ நிலைகளை மீள ஒழுங்கமைக்க வேண்டுமென்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இராணுவத்தை கொழும்புக்கு மீளப் பெற முடியாதென்றும், வடக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குப் படையினர் அவசியமென்றும் தெரிவித்த ஒஸ்ரின் பெர்னாண்டோ, இது விடயத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நிலைப்பாட்டுக்குத் தாம் உடன்படுவதாகவும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (18) சாட்சியமளிக்கும் போது குறிப்பிட்டார்.  (மேலும்...)

ஆவணி, 19, 2010

அடுத்த ஆண்டு முதல்

சகல பல்கலைகளிலும் ஆங்கிலம் போதனாமொழி

அடுத்த வருடம் முதல் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் 99 சதவீதமான கற்கை நெறிகள் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படும். அதனால் ஆங்கில மொழியறிவு போதியளவு தேவைப்படும் அதற்காக பட்டதாரி மாணவர்களுக்கு விசேட வகுப்புக்கள் நடாத்தப்படும். அத்தோடு ஆங்கில மொழியில் விரிவுரைகளை நடாத்த முடியாதுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு இந்தியாவின் உதவியோடு ஆங்கில மொழியறிவு பெற்றுக் கொடுக்கப்படும். இதற்கென ஆங்கில மொழி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும். (மேலும்...)

ஆவணி, 19, 2010

கியூபா பயணத் தடையை தளர்த்த அமெரிக்கா தயாராகிறது

கியூப மக்களோடு நெருக்கத்தை ஏற்படுத்தும் வழிகள் பற்றி ஆலோசித்து வருகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கம்யூ னிஸ கியூபா சென்று வரும் வாய்ப்புகளை விரிவாக்க ஒபாமா நிர்வாகம் முயன்று வரும் வேளையில் பொருளாதாரத் தடையை அமெரிக்கா குறைக்காது என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ கூறு கிறது. கல்வி, மதம் மற்றும் கலாச் சாரக் குழுக்களுக்கு புஷ் நிர்வாகம் விதித்த தடைகளை அமெரிக்கா தளர்த்த விரும்புகிறது. பில் கிளிண்டன் காலத்தில் பின் பற்றப்பட்ட மக்களோடு மக்கள் கொள்கையைப் பின்பற்ற ஒபாமா நிர்வாகம் விரும்புகிறது. (மேலும்...)

ஆவணி, 18, 2010

சென்னை நீதிமன்றம் இலங்கையர் அறுவருக்கு சிறைதண்டனை விதிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையர்கள் அறுவரை குற்றவாளிகள் என அடையாளம் கண்ட, சென்னை, தாம்பரம் நீதிமன்றம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு வருட சிறைதண்டைனையை விதிக்க தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு சென்னையிலுள்ள கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த அறுவருக்கும் எதிரான வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். (மேலும்...)

ஆவணி, 18, 2010

கொழும்பு – தூத்துக்குடி, தலைமன்னார் - ராமேஸ்வரம்

கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்க இலங்கை, இந்திய அரசுகள் நடவடிக்கை

கொழும்பு - தூத்துக்குடி மற்றும் தலைமன்னார் - ராமேஸ்வரத்துக்கான கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகளை இலங்கை, இந்திய அரசாங்கங்கள் மேற்கொண்டு வருவதாக இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த் தெரிவித்தார். அத்துடன் தென்பகுதி ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகளை ஒக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர் இதற்கென 167.4 மில். அமெரிக்கன் டொலர்களை நிதியுதவியாக இந்தியா வழங்கவுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை புனரமைப்பு தொடர்பான உடன்படிக்கைக் கைச்சாத்து நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆவணி, 18, 2010

மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை நிர்மாணம்

இலங்கை - இந்திய அரசுகள் நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 230 மில்லியன் அமெரிக்கன் டொலர் செலவில் வடக்கில் மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையில் அமைக்கப்ப டவுள்ள ரயில் பாதை நிர்மாணம் தொடர்பான ஒப்பந்தக் கைச்சாத்து நேற்று கொழும்பில் இடம்பெற்றது. அத்துடன் காங்கேசன்துறை - தாண்டிக்குளம் வரையிலான ரயில் பாதை, மடு, தலைமன்னார், பளை ஊடான ரயில் பதைகளை விரைவில் புனரமைப்பது தொடர்பிலும் இரு அரசாங்கங்களினதும் முக்கியஸ்தர்களுக்கிடையில் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேற்படி சகல ரயில் பாதைகளையும் எதிர் வரும் 2 வருட காலத்திற்குள் நிறைவு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப் பட்டன. (மேலும்....)

ஆவணி, 18, 2010

மீண்டும் சைக்கிள்கள்

இயற்கையை பாதுகாப்பதற்காகவும், சுற்றுச் சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காகவும் மீண்டும் சைக்கிள்களை பெரும் அளவில் பயன்படுத்த இங்கிலாந்து திட்டமிட்டு உள்ளது. இதற்காக சைக்கிள்களை வாடகைக்கு விடும் திட்டம் லண்டனில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. லண்டனில் 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடப்பதையொட்டி நகரின் பசுமையை பாதுகாக்கும் வகையிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 5 ஆயிரம் சைக்கிள்கள் இறக்கப்பட்டு உள்ளன. லண்டனில் 315 இடங்களில் வாடகை சைக்கிள் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சைக்கிள்களை பயன்படுத்த விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். இதுவரை 12 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டு உள்ளனர். சைக்கிள்களை பயன்படுத்த, முதல் அரை மணி நேரம் வாடகை கிடையாது. அனைவரும் எளிதாக ஓட்டுவதற்கு வசதியாக 3 கியர்களுடன் இந்த சைக்கிள்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. தாயகத்திலும் எமது இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் மோகத்தை மறுத்து இயற்கைக்கு உதவும் சைக்கிள்களை உபயோகிக்க வேண்டும்.

ஆவணி, 18, 2010

பெளத்த ஆலயங்களை புனரமைக்க சீன அரசு பணிப்பு

புத்த மடாலயங்களில் சீர்திருத்தங்களைச் செய்யும்படி சீன அரசு வற்புறுத்தியுள்ளது. சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடப்பதால், ஆன்மிக விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு புத்த மடாலய ங்களை புதுப்பிப்பது போன்ற நடவடிக்கை களில் அரசு ஈடுபட்டுள்ளது. திபெத்திய புத்த மதத் தலைவரான பஞ்சன் லாமாவை நியமிப்பது கூட அந்நாட்டு அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டுத் தான் நடக்கிறது. ஆறு வயது சிறுவனை தேர்வு செய்து லாமாவாக அறிவிப்பது, அரசியல் பின் புலத்துடன் தான் தற்போது நடக்கிறது. (மேலும்....)

ஆவணி, 18, 2010

 

மீண்டும் களைகட்டும் நல்லூர் திருவிழா

முன்னர் இருந்த எல்லாத் தடைகளும் நீங்கி வடபகுதி உட்பட நாடு வழமை நிலைக்குத் திரும்புகின்றது என்பதற்கு இந்த வருட நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா ஒரு எடுத்துக்காட்டு. புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை வெற்றியீட்டியதன் உடனடிப் பின்விளைவு என்று இதைக் கூறலாம். நாடு வழமை நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலை யைத் தலைவர்கள் சரியான முறையில் பயன்படுத் தினால் மக்களின் நியாயபூர்வமான சகல எதிர்பார்ப்பு களையும் விரைவில் நிறைவேற்ற முடியும். என்னென்ன வசதி வாய்ப்புகள் இப்போது உடனடியாகக் கிடைக் கின்றனவோ அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு மேலும் பல வசதிகளையும் வாய்ப்புகளையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு மாத்திரமன்றி அரசியல் சார்ந்த அபிலாஷைகளுக்கும் இதுவே பொருத்தமான அணுகு முறை. நல்லூர் திருவிழா மாத்திரமன்றி மக்களின் வாழ்க்கையும் மீண்டும் களைகட்ட வேண்டும். (மேலும்....)

ஆவணி, 18, 2010

மதவெறிக்கு கண்ணில்லை

காதலர்கள் மீது கல்வீசிக் கொலை

ஆப்கானிஸ்தானில் காதலர்கள் இருவரை தலிபான்கள் கல்வீசி கொன்றனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள முல்லா கியூலி கிராமம் தலிபான்கள் கட்டுப் பாட்டில் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த 28 வயது ஆணும், அதே ஊரைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் காதலித்து வந் தனர். இதில் அந்த ஆண் ஏற்கனவே திரு மணமானவர், பெண்ணுக்கு நிச்சய தார்த்தம் முடிந்து விரைவில் திரு மணம் நடக்கவுள்ளது. இந்நிலை யில் இருவரும் காதலித்து வந்த குற்றத்திற்காக அவர்களை நடுரோட் டில் நிற்க வைத்து தலிபான்கள் கற் களை வீசினர். காதலர்கள் இருவரும் வலியால் கதறினர். இருப்பினும் அவர்கள் மீது சிறிதும் இரக்கமின்றி கற்களை வீசி கொன்றனர்.

ஆவணி, 18, 2010

தனியாருக்குரிய காணிகளில் இராணுவ முகாம்கள் இல்லை

வடக்கில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாரிடம்

வடக்கில் பொது மக்கள் பகுதிகளிலிருந்து இராணுவப் பிரசன்னம் படிப்படியாக அப்புறப்படுத்தப்படுமென்றும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்படும்.புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பதினோ ராயிரம் போராளிகள் சரணடைந்தார்கள். இவர்களை மூன்று நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி ஆறு மாதம், ஒரு வருடம், இரண்டு வருடம் எனப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. குறித்த காலம் புனர்வாழ்வு நிறைவடைந்ததும் அவர்களை விடுவித்து விடுவோம். அவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். இந்தப் பதினோராயிரம் பேரில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதும் சிறு சிறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (மேலும்....)

ஆவணி, 18, 2010

ஒருவர்  மட்டும் பலி

மின்னல் தாக்கியதால் கொலம்பிய விமானம் விபத்து

கொலம்பியாவின் பயணிகள் விமானம் கரிபியன் தீவான சென்ஏண்டர்ஸில் தரையிறங்கும் போது விபத்தானது. இதில் விமானம் மூன்று பாகங்களாக உடைந்தது. திங்களன்று இவ்விபத்து நிகழ்ந் தது. இதில் 114 பயணிகள் இருந்தனர். இந்த விமான விபத்தில் ஒருவர் பலியானார். ஏனையோர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். இதில் எவரும் காயமடைய வில்லை. விந்தையான விமான விபத்தெனப் பொலிஸார் தெரிவித்தனர். மின்னல் விமானத்தைத் தாக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் பலியானவர் இதய அழுத்தம் காரணமாக உயிரிழந்தார். 04 சிறுவர்களும் விமானத்திலிருந்தனர். விமானத்துக்கு ஏற்பட்ட சேதத்தைப் பார்க்கின்ற பொழுது பல உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாகவே எண்ணத் தோன்றும். ஆனால் ஒருவரே பலி யாகியுள்ளார். இது மிகப் பெரும் அதிசயம் எனப் பயணிகளும் தெரிவித்தனர். தாங்கள் காப்பாற்றப்பட்டமைக்காக இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். விமானம் ஓடு பாதையிலிருந்து விலகிச் செல்லாமல் விமான ஓட்டி நிதானமாக நிலைமையைக் கையாண்டுள்ளார். அவரது திறமையை அனைவரும் பாராட்டினர்.

ஆவணி, 18, 2010

சீனா உலகின் 2வது பொருளாதார வல்லரசு

உலகின் பொருளாதார வலி மையில் சீனா இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. வெகுகாலமாக இரண்டாம் இடத்தில் ஆதிக்கம் செலுத் திய ஜப்பான் கீழே இறங்கி விட்டது. சீனாவின் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. அதனுடைய வளர்ச்சி பிரம்மாண்ட மாக உள்ளது. ஜப்பானின் மிகப் பெரும் வர்த்தக நாடாக சீனா வளர்ந்து நிற்கிறது. வளரும் நாடுகள் மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட செல்வந்த நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து ஆதாரங்களையும், இயந்திரங்களையும் உற்பத்தி பொருட்களையும் அள்ளிச் செல்வதில் சீனாவுக்கு அடங்காத தாகம் உள்ளது. அதே வேளையில் உலகம் மிகப் பெரும் பொருளாதாரப் பின்னடைவில் இருந்து மீட்சியடைய சீனாவின் கிராக்கி மிகப் பெரும் பங்கு வகித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் மீட்சிக்கும் சீனா பெரிதும் உதவியுள்ளது.(மேலும்....)

ஆவணி, 18, 2010

பூமி தோன்றியது எப்போது?

(அபிரா )

பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமையான பாறையைக் கொண்டு அறிவியலாளர்கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்து பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.  ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும்பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித்திருக்கின்றனர். பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது. (மேலும்....)

ஆவணி, 17, 2010

கனடாவில் தஞ்சமடைய என்ன காரணம்? : இலங்கை அகதிகள் கடிதம்

"நாங்கள் தீவிரவாதிகள் அல்லர் எனக் கூறுகிறோம். மேலும் கனேடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்றும் உறுதி கூறுகின்றோம்." இரண்டாவதாக 'சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்' எனக் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதத்தில் தாங்கள் மிக மிக அவலப்பட்டு, உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, படுக்கை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக மொத்த நிலையில் நான்கு மாதங்களை அண்மித்த கடுமையான, கொடுமையான துன்ப நிலையில் பயணித்து வந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். "குடியேறியவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை அரவணைத்துக் கொண்ட தாங்கள் இந்த ஏதிலிகளையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் வந்துள்ள நாம், முழுமையான அர்ப்பணிப்புடன் கனேடிய சட்டம், ஒழுங்கு விதிகளின்படி நடந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம்." (மேலும்....)

ஆவணி, 17, 2010

கோட்டாபய ராஜபக்ஷ கூறுகின்றார்

'புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் சில மட்டங்களில் செயற்படுவதால் வடக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ளது'

யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் அடிக்கடி பொதுமக்கள் மத்தியிலிருந்து சிவிலுடையில் போரிட்டதாகவும் அதனால் இராணுவத்தினரையும் பொதுமக்களையும் வேறு பிரித்தறிவது கடினமாக இருந்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். அதேவேளை, புலிகள் மீண்டும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்காக வடக்கில் கணிசமான அளவு இராணுவத்தினர்  நிலைகொள்ளச் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் சில மட்டங்களில் செயற்படுவதாகவும் இதனால் இராணுவம் இன்னும் நிலைகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஆவணி, 17, 2010

த.தே.கூ. எம்பிக்கள் மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஜெயராஜா ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் இந்த  உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

ஆவணி, 17, 2010

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி படகினூடாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் சிலாபம் மாரவில பகுதியில் வைத்து கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் தெரிவித்தார். இந்த ஆள்கடத்தலை ஏற்பாடு செய்திருந்த பிரதான ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஐவரே கடற்படையின் புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கம்பஹா, கனேமுல்ல, மாஹோ மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் எனவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். (மேலும்...)

ஆவணி, 17, 2010

யாழ். குடாநாட்டில் கைத்தொழிற் பேட்டை

இனப் பிரச்சினை கூர்மையடைந்து வடபகுதி அரசியல் அரங்கில் பிரதான இடத்தைப் பெற்றதும் உள்ளூர் அரசியல் தலைவர்கள் பிரதேச தொழில் வளர் ச்சியை அறவே கைவிட்டுவிட்டனர். முதலில் இனப் பிரச்சினைக்கான தீர்வு பின்னர் அபிவிருத்தி என்ற தவறான கொள்கையை அவர்கள் பின்பற்றியதால் வடபகுதி அபிவிருத்தியில் பின்தங்க நேர்ந்தது. இனப் பிரச்சினைக்கான தீர்வும் பிரதேச அபிவிருத்தியும் ஒன்றுக்காக மற்றது பின்தள்ளப்பட முடியாதவை. இவ் விரு விடயங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து முன்னைய அரசியல்வாதிகள் செயற்பட்டிருந்தால் இரண்டிலும் கணிசமான முனனேற்றத்தை அடைய முடிந்திருக்கும். (மேலும்...)

ஆவணி, 17, 2010

அந்தமான் சிறைச்சாலை

கைதிகளைப் பார்வையிட அன்றைய கவர்னர் ஜெனரல் தனது மனைவியுடன் அந்தமானுக்குச் சென்றார். வெள்ளையர்கள் மீது கட்டுக்கடங்காத வெறுப்புடனிருந்த ‘காசிம்’ என்ற இஸ்லாமி வீரர் ஜெர்னல் மீது பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றார். இந்த நிகழ்வே அந்தமான் தீவில் சிறைச்சாலை கட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அந்தமான் சிறைச்சாலை கட்டுமானப் பணி 1896ம் ஆண்டு தொடங்கி 1906ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதில் 10 ஆயிரம் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். வகாபி இயக்கம், மாப்ளா இயக்கம், ராம்பா இயக்கம், கதார் புரட்சி போன்ற புரட்சிகர அமைப்புகளின் தலைவர்கள் இதில் முக்கியமானவர்கள். (மேலும்...)

ஆவணி, 17, 2010

China Says SL Should Receive International Support

Chinese Foreign Affairs Minster Yang Jiechi says that Sri Lanka, having rid itself of terrorism and embarked on the course of accelerated economic development with determination, should receive the support of the international community in achieving its objectives. Jiechi had made this comment to External Affairs Minster Prof. G.L. Peiris in Beijing. The External Affairs Ministry stated that Jiechi has added that China would make the maximum effort to fulfill Sri Lanka’s needs as the country addresses itself to the task of attempting to use its natural strengths to improve the lives of its citizens, with the dawn of peace and stability. (more...)

ஆவணி, 17, 2010

நேபாளத்தில் புதிய அரசியலமைப்பை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் தொடர் ந்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. நேபாள காங்கிரஸ் மற்றும் மாவோயிஸ்டுகள் கட்சிக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை யால், புதிய அரசியல் சாசன சட்டத்தை வடிவமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் அரசியல் சாசன சட்டத்தை விரைவில் வடிவமைக்கக் கோரி, நேபாள உள்ளூர் மக்கள் கூட்டமைப்பு, ஞாயிற்றுக்கி ழமை நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் வாக னங்கள் ஓடவில்லை. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பெரும் பாலான சாலைகள் வெறிச்சோடிக் காணப் பட்டன. சில இடங்களில் கடைகள் திறந்தி ருந்தன. தொழிற்சாலைகள் இயங்கின. (மேலும்...)

ஆவணி, 17, 2010

யாழ். குடாவில் ஆலய உற்சவங்கள், வெளிநாடுகளிலிருந்து பெருமளவானோர் வருகை

யாழ். குடாநாட்டில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வருடாந்த உற்சவம் ஆரம்பமானதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெருந்தொகையான தமிழர்கள் இங்கு வருகை தந்துள்ளனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில், நல்லூர் கந்தசுவாமி கோவில், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் ஆகிய பிரசித்தி பெற்ற ஆலயங்களிலும், ஏனைய பல ஆலயங்களிலும் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.  இத்திருவிழாக்களைக் கண்டுகளித்து சுவாமி தரிசனம் பெறுவதற்காக வெளிநாடு களில் வாழும் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் யாழ். குடாநாட்டிலுள்ள தமது உறவினர் வீடுகளில் வந்து தங்கியுள்ளனர்.

ஆவணி, 17, 2010

இலங்கை - இந்தியா  ஒப்பந்தம்

மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை மீளமைப்பு

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையை மீளமைப்பது தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையில் இன்று (17) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது. மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையிலான 106 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை நிர்மாணப் பணிகளை 2 வருட காலத்தில் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பாதை புனரமைப்புப் பணிகளை இந்தியாவின் இர்கொன் கம்பனி மேற்கொள்ள உள்ளது. இலங்கை சார்பாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவும் இந்தியா சார்பாக இந்திய தூதுவர் அசோக் கே. காந்த் ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளதாக அமைச்சு கூறியது. (மேலும்...)

ஆவணி, 17, 2010

யுத்தத்தால் விதவையானவர்களுக்கான வீட்டு கடனுதவி திட்டம் - டியூ குணசேகர

யுத்தம் காரணமாக விதவையானவர்களுக்கான வீட்டுத் திட்ட கடனுதவியொன்றை வழங்க புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  புனர்வாழ்வு அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கடனுதவித் திட்டத்தின் பிரகாரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான குறைந்த வட்டியில் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காகவே இந்த கடனுதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இதனை அடுத்த மாதம் முதல் இலங்கை வங்கியினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

ஆவணி, 17, 2010

த.தே.கூட்டமைப்பிற்கான அழைப்பிதழ் தபாலில் அனுப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் ஐந்தாவது கூட்டத்திற்கான அழைப்பிதழ் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்ல முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பப்பட்டதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தற்போது  நாட்டில் இல்லாத காரணத்தினால் அவ்வழைப்பிதழ் கிடைக்காமல் இருந்திருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். (மேலும்...)

ஆவணி, 17, 2010

இந்தியாவில்

கோடிக்கணக்கில் பசித்த வயிறுகள், கோடிகளில் புரளும் பெரும் பணக்காரர்கள

உலகளவில் முதல் 10 இடத்தை பிடித்த இந்திய பெரும் பணக்காரர்கள் அனில் அம்பானியும் முகேஷ் அம்பானி யும். மேற்கண்ட 52 பேரில் இடம் பெற் றுள்ள ஒரே தமிழர் கலைஞரின் பேரன் கலாநிதி மாறன். இந்த 52 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்தை கூட்டினால் தலை சுற்றுகிறது. 110 கோடி மக்களில் இந்த 52 பேரிடம் மட்டும் ரூ. 13 இலட்சத்து 80 ஆயிரம் கோடி செல்வம் குவிந்து கிடக்கிறது. இதை சாதாரணமான வட்டி விகிதத்தில் வங்கியில் போட்டால் கூட ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 கோடி வட்டிப் பணம் கிடைக்கும். இந்த வட்டிப் பணத்தை மட்டும் கொண்டு இந்தியாவில் வீடின்றி தவிக் கும் 2 கோடி விவசாயத் தொழிலாளர் களுக்கு நிரந்தரமான, வசதிகளோடு கூடிய வீடுகள் கட்டித்தர முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். (மேலும்...)

ஆவணி, 16, 2010

முன்னெச்சரிக்கை கொள்ள வேண்டிய விடயம்

முன்னொரு காலத் தில் வடபகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவன மொன்றில் இது போன்றே ஏராளமான மக்கள் தங்களது பெருந்தொகைப் பணத்தை வைப்புச் செய்தனர். இறுதியில் அந்நிறுவனம் திடீரென மூடப்பட்டதும்தான் மக்கள் தாங் கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். நிதி நிறுவனத்தை ஆரம்பித்தோர் நாட்டை விட்டே தலைமறைவாகியிருந்தனர். வடக்கில் பலர் தங்களது காணிகளை விற்றும் கூட இந் நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்திருந்தனர். பெண் பிள்ளைகளின் திருமணத்துக்காக கைவசம் சேர்த்து வைத் திருந்த அத்தனை பணத்தையும் இந்த நிறுவனத்தில் வைப் புச் செய்து விட்டு இறுதியில் ஏமாற்றம் தாங்காது சிலர் மனநோயாளியாகிப் போன பரிதாபமும் நடந்தது. (மேலும்....)

ஆவணி, 16, 2010

திமிங்கிலங்களின் மயான பூமி

ஒரு வேளை திமிங்கிலங்களே கிடைக்காவிட்டால் அந்த நாடோடிக் கூட்டம் என்ன செய்யும்? இருக்கவே இருக்கிறது ஆழ்கடல் வெப்பநீர் ஊற்று கள்! கருப்பாக கந்தகம் நிறைந்த புகையை தண்ணீரில் கக்கியபடி ஆழ்கடல் வெப்பச்சுனைகள், தொழிற் சாலையின் பெரிய புகைப்போக்கிகள் போல் கடலடியில் கிடக்கின்றன. வெப்பம் மிகுந்த கரும்புகையை உணவாக ஏற்றுக் கொண்டு திமிங்கிலம் கிடைக்காத நாடோடிக் கூட்டம் அங்கே காலம் கடத்துகின்றன. ஒரு திமிங்கிலத் தைத் தின்று தீர்ப்பதற்குள் இன்னொரு திமிங்கிலம் அருகில் வந்து விழாமல் போகாது. (மேலும்....)

ஆவணி, 16, 2010

இரு தசாப்தங்களின் பின்னர் மியன்மாரில் பொதுத் தேர்தல்

மியன்மாரில் நவம்பர் 07ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் மியன்மாரில் தேர்தல் நடைபெறவுள்ள செய்தியைக் கேட்டு அந்நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இராணுவ ஆட்சியிலிருந்து விடுபடப்போகும் மகிழ்ச்சியை மக்களிடையே காணக்கூடியதாக விருந்தது. நீண்டகாலமாக சிறையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவி ஆங்சாங்சுயி இத் தேர்தலில் போட்டியிட முடியாதபடி அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனால் மக்கள் கவலையடைந்துள்ளனர். ஆங்சாங்சுயியின் கட்சியை மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் தடைசெய்துள்ளனர். இதனால் இக்கட்சியைச் சேர்ந்த முக்கியமானோர் சிலர் தேசிய ஜனநாயக முன்னணி என்ற கட்சியைப் பதிவு செய்துள்ளனர்.  1989ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஆங்சாங்சுயி தலைமையிலான கட்சியே வெற்றிபெற்றது. அதேபோல் இக்கட்சியின் முக்கியஸ்தர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய ஜனநாயக முன்னணி வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கட்சி வெற்றி பெற்றால் ஆங்சாங்சுயி ஆட்சி பீடமேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணி, 16, 2010

சுதந்திரம்

அவர் சத்தியத்தை அல்லவா கையில் எடுத்துக் கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எதிரியையும் அன்பால், அஹிம்சையால், சத்தியத்தால் பணியவைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தது. உலகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உலகத்தைப் பாதித்த நூறு போர் என்ற பட்டியலில் எழுதினால் அதில் மகாத்மா காந்தியும் ஒருவர். உலக வரலாறு அவரை ஒருபோதும் ஒதுக்காது. (மேலும்....)

ஆவணி, 16, 2010

2 கோடி டொலருக்கு மேல் கொடுத்து சன் k அகதிகள் கனடா வந்துள்ளனர்

சன் k கப்பலில் கனடாவை சென்றடைந் துள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர் களை கடத்தல்காரர்களுக்கு கொடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இவர்கள் செலுத்தியதன் பின்னரே தமது 3மாத கடற்பிரயாணத்தை தாய்லாந்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டோஸ் கூறியுள்ளார். (மேலும்....)

ஆவணி, 16, 2010

இந்திய விடுதலை 64 : வரலாற்று ஏடுகளிலிருந்து

விடுதலை நாள் கொண்டாட்டங்களில் பங் கேற்காமல் மகாத்மா காந்தி விலகியிருந்தார். அப் போது வகுப்புக் கலவரங்களின் மையமாக இருந்த கல்கத்தாவில் அமைதியை நிலை நாட்டுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். அவர் பங்கேற்காத ஒரு விடுதலை நாள் கொண்டாட்டத்தை இந்தியாவில் உள்ள எவரா லும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இந்தக் கொண்டாட் டங்களில் பங்கேற்கும் மனநிலையில் அவர் இல்லை. இந்திய மக்களுக்கு விடுதலை நாள் செய்தியைக் கேட்டு அவரை அணுகிய செய்தியாளர் ஒருவரிடம், எனது இதயம் வறண்டு போய்விட்டது என்று அவர் பதிலளித்தார். நாட்டின் இரண்டு பிரிவுகளிலும் ஆகஸ்டு 15 ம் தேதிக்கு முன்னர் நடைபெற்ற படு கொலைகள் காந்திக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய பின் னணியில் கிடைத்த விடுதலை உண்மையான விடுதலையல்ல என்ற உறுதி யான எண்ணத்தை அவர் கொண்டிருந்தார். இந்தச் சூழ்நிலைக்கு இட்டுச் சென்ற மிருகத்தனமான உணர்வுகளிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் மக்களை விடுவிப்பதற்குத் தனது எஞ்சிய ஆயுட்காலத்தை அர்ப்பணிப்பதற்கு அவர் தீர்மானித்திருந்தார். (மேலும்....)

ஆவணி, 16, 2010

பத்து லட்சம் பேருக்கு இலவச கண்சிகிச்சை  கியூபா-வெனிசுலா கூட்டு முயற்சியால் பலன் 

ஆறு ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு இலவசமாக கண்சிகிச்சை செய்து கியூபா-வெனிசுலா கூட்டுத்திட்டம் சாதனை படைத்துள்ளது. வெனிசுலாவில் இடதுசாரிக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் துவங்கியதிலிருந்து சமூக மற்றும் பொருளாதார ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகள் மத்தியில் இடதுசாரிக்கொள்கைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒவ்வொரு நாடாக இடதுசாரிக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரசுகளை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றின. இந்த நாடுகளுக்கு இடையில் ஏராளமான கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளில் சோசலிச கியூபாவும் இணைந்தது. அதில் ஒரு பகுதியாகத்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பத்து லட்சம் பேருக்கு இலவசமாக கண்சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். (மேலும்....)

ஆவணி, 16, 2010

சன் k கப்பலினுள் போதியளவு உணவு, குடிநீர்

493 அகதிகளை தடுப்பில் வைத்து விசாரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

கனடாவுக்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களுக்கான குடியுரிமை வழங் குவது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நேற்று முதல் மேற் கொள்ளப்படுகின்றன. அவர்களை அடையாளம் காணல், வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகளை அடுத்து இலங்கை அகதிகள் தமக்கு அகதி அந் தஸ்த்து வழங்குவது தொடர்பிலான நட வடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர். (மேலும்....)

ஆவணி, 16, 2010

ஆப்கானிஸ்தான் போர் சம்மந்தமான

‘விக்கிலீக்ஸ்’ ஆவணங்களை வெளியிட வேண்டாமென பென்டகன் எச்சரிக்கை

தலிபான்களின் ஆட்சி 2001ல் கவிழ்க்கப் பட்டதிலிருந்து இதுவரைக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைகள் தலிபான்களுக்கெதிராக முன்னெடுக்கும் போர்விபரங்கள் 14 ஆயிரம் உள்ளன. இவற்றில் 7 ஆயிரம் அறிக்கைகளை வெளி யில் விடப்போவதாக விக்கிலிக்ஸ் அமைப் பின் பேச்சாளர் அண்மையில் தெரிவித்தார். இதை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் கடுமையாக எதிர்த்துள்ளது. (மேலும்....)

ஆவணி, 16, 2010

Can you guess who owns this palatial house in England ?

Tiger woods? 
Roger Federer?
 
Rafael Nedal?
 
Bill Gates?
 
Sri Lanka President ’s brother Basil Rajapakse?

????????????

(more....)

ஆவணி, 15, 2010

அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராய்வு - தமிழ் மக்கள் அரங்கம்

உட்கட்டமைப்புடன் கூடிய மீள் கட்டுமானம், உயர் பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக அகற்றுதல், வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டு வரும் இராணுவக் குடியேற்றங்களை அகற்றல், முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்தல், வடக்கு, கிழக்கு உட்பட தமிழ்பேசும் பகுதிகளின் இடப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தல், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடைபிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை தளர்த்துதல், மீள்குடியேற்றத்தினை வெளிப்படையாகச் செய்வதுடன் அவற்றுக்கு மக்கள் பிரதி நிதிகள், சர்வதேச, உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளல், 13 ஆவது அரசியல் யாப்பின் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துதல் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (மேலும்...)

ஆவணி, 15, 2010

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

2009 மே மாத முற்பகுதியில் என்ன நடந்ததென்றால், பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டார். அவர் என்னை கே.பி. மாமா என்றுதான் அழைப்பார். நிலைமை மிக மோசமாக மாறிவருவதாகவும் தனது தந்தை, தாய், சகோதரி மற்றும் இளைய சகோதரரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நான் எதையாவது செய்ய வேண்டும் எனவும் சார்ள்ஸ் கூறினார். (மேலும்....)

ஆவணி, 15, 2010

உரிய காரணம் காட்டப்படாவிட்டால் நாடு கடத்தல்

உரிய காரணம் தெரிவித்தால் அகதி அந்தஸ்து  - கனேடிய அமைச்சர்

எம்வி சன் சீ கப்பலில் வந்த இலங்கை அகதிகள் உரிய காரணங்களைக் கொண்டிருந்தால்அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என கனேடிய பொதுமக்கள நலன் துறை, பாதுகாப்பு அமைச்சர் விக் டோவிக் தெரிவித்துள்ளார். சன் சீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சென்றடைந்துள்ள அகதிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்னும் ஒரு வார காலத்தில் இந்தப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சன் சீ கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத்தளத்திற்கு வழிநடத்திச் செல்லப்பட்டது. இந்நிலையில் அதில் பயணித்த 490 பேரின் சுகாதார நலன் குறித்த விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகளின் பின்னர் உரிய காரணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையோர் நாடு கடத்தப்படுவர் என பொதுமக்கள நலன் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் கப்பலில் சென்றவர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஆவணி, 15, 2010

அரசியல் தீர்வை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழியில் இப்போதாவது முயற்சிக்க வேண்டும்

தமிழ் மக்கள் சார்பில் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடிப் பொதுவான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்துச் செயற்பட வேண்டிய தேவையை நிராகரிக்க முடி யாது. இவ்வாறான நடை முறையில் பங்கேற்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. ஏனென்றால் அண்மைக் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப் புகளுக்கும் அழிவுகளுக்கும் மாத்திரமன்றி நல்ல அரசியல் தீர்வொன்று கிடைப்பதற்குத் தடையாகச் செயற்பட்டதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம அளவில் பொறுப் பாளியாகும். இணைந்து செயற்பட முன்வரு மாறு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் விடுத்த அழைப்பை நிராகரிப்பது தமிழ் மக்கள் சார்பில் பேசும் அனை த்துக் கட்சிகளும் ஒன்றாகக் கூடி நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டிய தேவையை நிராகரிப்பதற்குச் சமன். (மேலும்....)

ஆவணி, 15, 2010

அநாகரிக அரசியல்

நல்ல நோக்கத்துக்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பா ட்டை அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதற்கு ஐக்கிய தேசி யக் கட்சி முயற்சிப்பது அநாகரிகமானது. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஸையும் மிலிந்த மொறகொடவையும் கருணா அம்மானையும் ஆணைக்குழு அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசி யக் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை மற்றும் யுத்தநிறுத்தம் தொடர்பாகவே இவர்களை விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது. புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதும் அவர்களுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்ததும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே என்பதால் அவ்விட யங்கள் தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவுக்குத் தெரிவிப்பத ற்குப் பொருத்தமான நபர் அன்றைய அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கியவரான ரணில் விக்கிரமசிங்கவாகும். அவரே ஆணைக்குழு முன் தோன்றிச் சாட்சியம் அளிக்கலாம். (மேலும்....)

ஆவணி, 15, 2010

காஷ்மீர், பாகிஸ்தானில் பேய் மழை - கோர வெள்ளம்

இயற்கையின் விபரீத சமிக்ஞைகளை புரிந்துகொள்வோமா?

சனத்தொகை அதிகமாக இருக்கின்ற நாடுகளாக இருப்பதாலோ என்னவோ ஆசியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவும் சீனாவும் அதிகளவில் இயற்கை அனர்த்தங்களின் பாதிப்பை எதிர்கொள்கின்றன. ஒன்றில் வரட்சி ஏற்படுகிறது. அல்லது பூகம்பம் ஏற்படுகிறது. இல்லையேல் தொடர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கும் அதைத் தொடர்ந்து ஏற்படும் மண் சரிவும் மக்களைப் பல வழிகளில் பாதிக்கின்றன. அத்தகையதோர் நிலைதான் கடந்தவாரம் ஆசியாவிலே ஏற்பட்டது. சீனாவின் வடமேற்குப் பகுதி, பாகிஸ்தானின் சில பகுதிகள் மற்றும் இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் ஆகிய பகுதிகளிலே கடந்தவாரம் தொடர் மழை பெய்தது. அம்மழையையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் மண் சரிவும் ஏற்பட்டன. சீனாவின் பைலோங் நதி உடைப்பெடுத்து பெருக்கெடுத்தது. அதனால் அந் நதியின் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு மைல் நீளமான ஏரியும் பெருக்கெடுத்தது. (மேலும்....)

ஆவணி, 15, 2010

அமைச்சர் பதவியிலும் பார்க்க நக்சலைட் உறவுக்கு முன்னுரிமை

மமதாவின் திரினாமுல் காங்கிரஸ் கட்சியும் மாவோயிஸ்டுகளும் கூட்டாக அக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இந்திய அரசாங்கம் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் நிலையில் மத்திய கபினற் அமைச்சர் மாவோயிஸ்டுகளுடன் கூட்டாகப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதைச் சாதாரண விடயமாகக் கருத முடியாது. அக்கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசிய பேச்சு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பகிரங்கமாக விமர்சிப்பதாக உள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் போலி என்கவுண்டர் மூலம் அஸாத் கொல்லப்பட்டதைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார். (மேலும்....)

ஆவணி, 15, 2010

கிளிநொச்சி

இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது

மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக வடக்கு கிழக்கில் நிலவிய யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்து விட்டன. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்வதற்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையை ஏற்படுத் துவதற்குமான நடவடிக்கைகளை அரசாங்கம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முக்கிய பங்கை வகிக்கும் அரசாங்க அதிபர்களில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனும் ஒருவர். (மேலும்....)

ஆவணி, 15, 2010

புதிய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் சிறப்பு அம்சம் என்ன?

(எம். இர்பான் ஸகரியா)

நிலத்தில் நிர்மாணிக்கப்படும் முதலாவது சர்வதேச துறைமுகம் என்ற பெயரைப் பெற்றுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினுள் நீர் நிரப்பும் முக்கிய நிகழ்வு இன்று 15ம் திகதி நடைபெறவுள்ளது. இது தெற்காசியாவின் ஆழமான துறைமுகம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நீர் நிரப்பும் அந்த முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளது. கரசன்லேவாய களப்பின் ஒரு பகுதியை சூழ அணைகள் அமைத்து அதிலுள்ள நீரை அகற்றி அதனை ஆழமாக்கி 21 மீற்றர் உயரத்தினை கொண்ட இரண்டு இறங்குதுறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 17 மீற்றர் ஆழத்திற்கு ஆழமாக்கப்பட்டு இப்போது நீர் நிறைக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

ஆவணி, 15, 2010

பிற்போக்கு நிலையில் இருந்து மீண்டும் முற்போக்கு நிலைக்கு தமிழ் தேசியம் வருமானால் நாங்கள் ஆதரவு தருவோம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பத்திரிகை அறிக்கையை விட்டு ஒருவருக்கொருவர் கேள்வி எழுப்புவதைவிட, முதலில் சந்திப்பது நல்ல விடயம். சந்திப்பதற்கு முதல் நிபந்தனைகள் எதனையும் முன்வைக்கக்கூடாதென நினைக்கிறேன். கட்சிகளுக்கிடையில் பொது உடன்பாடு எட்டப்படுமாக இருந்தால், சந்திப்பதற்கு முதல் நிபந்தனைகளை வைக்கக்கூடாது. முதலில் சந்திப்பது அவசியம். பொது உடன்பாடு எட்டப்படுவதற்கான வழிவகைகளை தேடவேண்டும். பத்திரிகைகளில் அறிக்கை விடுத்து சண்டையிடுவது, விமர்சனம் செய்வதற்குரிய நேரம் அல்ல இது. கூடிய கவனமெடுத்து எல்லா தமிழ்க் கட்சிகளும் ஒன்றாக கூடி சந்திக்காவிட்டாலும், தனித் தனியாக சந்தித்தேனும் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கப்போகிறோம், அதனை எப்படி அடையப் போகிறோம், எங்களிடம் என்னென்ன உபாயம் இருக்கிறது, கூட்டணியாக வரவேண்டுமா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஆனால் அதற்கு அவசரப்பட தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். பொது உடன்பாடு ஏற்பட்டாலே பல விடயங்களில் முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளலாம். (மேலும்....)

ஆவணி, 15, 2010

ஆப்கான் மண்ணில் தினறுகின்றது அமெரிக்கா

(சங்கர சேயோன்)

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறு வதற்கான மூலோபாயம் பற்றி லண்டன் மாநாட்டில் ஆராய்வதற்கு முன்னரே சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேட் பிளாக்வில்  (Robert Blackwill)  தெரிவித்த ஆலோசனை விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானை இரண்டு நாடுகளாகப் பிரிக்க வேண்டும் என்ற ஆலோசனையை அவர் முன்வைத்தார். தலிபான்களின் பிரதான ஆதரவாளர்களான பஸ்தூன்கள் செறிந்து வாழும் தென்பகுதி ஒரு நாடாகவும் வடக்கும் மேற்கும் இன்னொரு நாடாகவும் அமைய வேண்டும் என்பது அவரது ஆலோசனை. இந்த ஆலோசனைக்குப் பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே வன்மையாக எதிர்ப்புத் தெரிவித்தது. பாகிஸ்தானில் இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் பஸ்தூன்கள் வாழ்கின்றனர். இவர்கள் தலிபான்களுடன் சேர்ந்து விசாலமான ‘பஸ்தூன்தான்’ அமைப்பதற்கு முயற்சிக்கலாம் என்பது பாகிஸ்தானின் அச்சம். (மேலும்....)

ஆவணி, 15, 2010

தந்தையின் அடிச்சுவட்டில் சஜீத் பிரேமதாஸ

(வாகுலன்)

ரவி கருணாநாயக ரணிலுக்கு ஆதரவானவர். சஜித்துக்கு எதிரானவர் என்பதால் ரணிலை ஆதரிக்கின்றார் என்று கூறுவது தான் மிகவும் பொருத்தமானது. ரணிலுக்கு ஆதரவு தேடுவதற்காக சஜித்தின் ‘ராஜதானியான’ அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ரவி சென்றார். சில இடங்களில் சிறு கூட்டங்கள் ஏற்பாடு செய்து பேசினார். எல்லா இடங்களிலும் அவர் மீது தாக்குதல் நடந்தது. கடைசியில் மோசமான தாக்குதல். ரவியின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது. கூட்டம் நடைபெற்ற வீடும் சேதப்படுத்தப்பட்டது. இத்தாக்குதல்களின் சூத்திரதாரி சஜித் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. கட்சிக்குள் ஜனநாயகம் பற்றிப் பேசியவர் அம்பாந்தோட்டையிலும் அதைப் பேண வேண்டாமா என்று ஐ.தே.க சீனியர்கள் கேட்கின்றார்கள். சஜித் தந்தையின் பாணியில் வளர்ந்து வருகின்றார் என்று சொல்கின்றார்கள். உண்மைதான். அம்பாந்தோட்டை சம்பவம் அதற்குச் சான்று. (மேலும்....)

ஆவணி, 14, 2010

த.தே.கூட்டமைப்பு பதிலளிக்காமை குறித்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம் கவல

தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து கலந்துரையாட வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பதிலளிக்காமைக் குறித்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம் கவலை வெளியிட்டுள்ளது. தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஐந்தாவது தடவையாக இன்று மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் கூடியது. இக்கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

ஆவணி, 14, 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று காலை முதன்முறையாக மட்டக்களப்பில் கூடியது

ஒன்பது தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் கட்சிகளின் அரங்கம்  இன்று காலை முதன்முறையாக மட்டக்களப்பில் கூடியுள்ளது. மட்டக்களப்பு ஆளுநர் விடுதியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இவ்அரங்கம் கூடியுள்ளது. தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய விடுதலை கூட்டணி தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட புளொட், ஈபிஆர்எல்எப், டெலோ உட்பட 9 தமிழ் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உள்ளுர் தலைவர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆவணி, 14, 2010

மே 18, 2009 புலிகளின் தோல்வி நாள் மக்களின் வெற்றி நாள்

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 5)

(சாகரன்)

புலிகளின் தோல்வியை எவ்வாறு தவிர்த்திருக்கலாம். இது சற்றுக்கடினமான விடயம்தான் தமிழர் தரப்பில் பன்முகப்படுதப்பட்ட தலைமை என்ற சிந்தனை என்று இல்லாமல் போனதோ அன்றே புலிகளின் தோல்விக்கு அத்திவாரம் போட்டாகிவிட்டது. அப்படிப் பார்த்தால் இலங்கைத் தமிழ் காங்கிரஸின் ஆரம்பத்திலேயே இதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது. ஆயுதம் தாங்கிய போராட்ட வடிவ முறைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே இதற்கான அத்திவாரம் போடப்பட்டு விட்டது. இதன் தொடர்சியாக புலிகள் ஆயுதங்களுடன் அவற்றை நிறைவேற்றி வந்தனர். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒரு பன்முகப்படுதப்பட்ட தலைமை ஏற்றுக் கொள்ளல் என்பதால் புலிகளின் தோல்வியை தவிர்திருக்கலாம். ஆனால் பன்முகப்படுதப்பட்ட தலைமை என்பதே புலிகளின் செயற்பாட்டையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கும் விடயம்தானே. எனவே புலிகளின் தோல்வி என்பது அது புலிகள் புலிகளாக இருக்கும் வரைக்கும் தவிர்க்கப்பட்டிருக்க முடியாது. அது புலிகளாக இல்லாதவிடத்து தவிர்க்கப்பட்டிருக்கும். அது மக்களின் பெரு வெற்றியாகவும் அமைந்திருக்கும். (மேலும்...)

ஆவணி, 14, 2010

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் 10,000 பேரையும் விடுவிக்க வேண்டும்

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் ஆனந்தசங்கரி சாட்சியம்

தடுத்து வைக்கப் பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப் பினர்கள் பத்தாயிரம் பேரையும் விடுவித்து அவர்களை சமூகமயப்படுத்த வேண்டுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். முன்னாள் ஜே. வி. பி. உறுப்பினர்களைப் புனர்வாழ்வளித்து விடுவித்ததைப்போல், புலி உறுப்பினர்களையும், விடுவிக்க வேண்டுமென்று குறிப்பிட்ட அவர், குழுவொன்றை அமைத்து அவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துகொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றார்.(மேலும்....)

ஆவணி, 14, 2010

சின்னப் பையனும் பருத்த மனிதனும்

ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 6ஆம் திகதி அமெ ரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளை யாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ என்பதாகும். முன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘பருத்த மனிதன்’ என்று பெயர் சூட்டினர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற் பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும். சுமாராகக் கணக்கிட்ட தில் ஹிரோ ஷிமாவில் மட்டும் குறைந்த பட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக் கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக் கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயி ருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர் வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். இறந்தவர்களில் மிகப் பெரும்பான் மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்என்று ஆய்வறிக்கை கூறியது.  (மேலும்....)

ஆவணி, 14, 2010

புலிகள் தமிழ்ப்பெண்களை யுத்தஇறுதிக்காலத்தில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினர்

தேசம்நெற் கூட்டத்தில் முன்னாள் புலி ஆதரவாளரான வாசு தகவல்

புலம்பெயர்நாடுகளில் இருந்து அண்மையில் இலங்கைக்குப்போய் வந்தவர்களில் முள்ளிவாய்க்கால் யுத்தம்வரை புலிகளின் ஆதரவாளர்களாகவும் தற்போது இலங்கை அரசின் ஆதரவாளர்களாகவும் மாறியிருக்கும் பலர் அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களில் சொல்கின்ற விடயங்களை கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது. புலிகள் உச்சத்தில் இருந்தபோது தூக்கிவைத்து கொண்டாடியவர்கள் தற்போது எல்லாப்பழிகளும் புலிகளுக்கே என சொல்லி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் லண்டனின் தேசம் நெற் ஒழுங்கு செய்த கூட்டமொன்றில் உரையாற்றிய முன்னால் புலி ஆதரவாளரான வாசு சொன்ன செய்தியொன்று ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல கோபத்தையும் உண்டாக்கியது. (மேலும்...)

ஆவணி, 14, 2010

இந்தியர்களுக்கு இலகு விசா,  பிரிட்டன் அதிரடி நடவடிக்கை

இந்தியர்களுக்கு குறைந்த விலையிலும், விரைவாகவும் விசா வழங்கப்படும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கமரூன் கூறியதாவது, சுற்றுலாத்துறை மூலம் அதிக வருவாய் ஈட்டுவதற்கும், தொழிற்துறையில் வளர்ச்சி டையவதற்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் முறையினை எளிமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்டு தோறும் 30 மில்லியன் இந்தியர்கள் பிரிட்டன் வருகின்றனர். ஆகவே இந்தியர்களின் வருகையை அதிகரிக்க அவர்களுக்கு விசா வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்படும். விரைவாகவும், குறைந்த விலையிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். உலகில் முக்கிய சுற்றுலா தலங்கள் கொண்ட நாடுகளில் பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், சீனா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பின் பிரிட்டன் ஆறாவது இடத்தில் உள்ளதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆவணி, 14, 2010

சப்ரா சரவணபவனுக்கு எம்.பி பதவி!. சக்திவித்தி ரணசிங்கவிற்கு சிறைத்தண்டனை! மோடர்களாகும் தமிழர்கள்.

சக்வித்தி என்ற பெயரில் நிதிக்கம்பனியொன்றை ஆரம்பித்து அதில் தன்னை நம்பி பணத்தை முதலீடு செய்த  5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து இருவருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டுத் தப்பியோடிய ரணசிங்க என்ற ஆங்கில ரியூசன் ஆசிரியர சில தினங்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்டார். இவரைக் கைது செய்வதற்கு இலங்கைப் பொலிஸார் சர்வதேச பொலிஸ் அமைப்பான “இன்டர் போலின் உதவியையும் நாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சப்ரா என்கிற நிதிக்கம்பனி நடாத்தி நூற்றுக்கணக்கனக்கான தமிழர்களின் பணத்தை மோசடி செய்த சரவணபவன் தற்போது தமிழ் மக்களின் எம்பி ஆகியிருக்கிறார். அவர் மீது எந்தவொரு வழக்குமில்லை. சிங்களவர்களை ரணசிங்கவினால் ஏமாற்ற முடியவில்லை. ஆனால் தமிழர்களை சரவணபவனால் ஏமாற்ற முடிந்திருக்கிறது. (மேலும்....)

ஆவணி, 14, 2010

A PICTURE'S WORTH A THOUSAND WORDS

(Thank you: Senthuran)

ஆவணி, 14, 2010

Moringa

The Miracle Tree

The ancient traditional medicine of India called ayurveda says the leaves of the Moringa tree prevent 300 diseases. Modern science is confirming that these leaves could help prevent untold suffering and death caused by malnutrition and related diseases. Moringa leaves are indeed highly nutritious. They contain two times the protein of yogurt, three times the potassium of bananas, four times the calcium of milk, four times the vitamin A of carrots, and seven times the vitamin C of oranges. And these leaves can be easily grown right at people’s doorsteps. On top of this, the Moringa tree grows best in tropical areas of the world -- the exact places where people need it most. Trees for Life is helping to spread awareness of Moringa’s benefits, and helping people grow their own Moringa trees. We are also encouraging scientific research on Moringa and its potential uses. Your gift of Moringa trees can help hungry people lead healthier, happier lives.

ஆவணி, 14, 2010

தீ அணைப்பு வீரராக மாறிய ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின்

ரஷ்யாவில் உள்ள காடுகளில் தீப்பிடித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் மொஸ்கோ நகரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள் ளது. இரண்டு வாரங்களாக தீயணைப்புப் படையினர் தீயை அணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தாலும் நெருப்பை முழுமையாக அணைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இதனால் விமானத்தின் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கையை தீ அணைப்புத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த தீ அணைக்கும் பணியில் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினும் இணைந்து கொண்டார்.கி-200 என்ற விமானத்தில் துணை விமானியாக செயல்பட்டு வானில் இருந்தபடி காட்டுத்தீயை அணைக்க தண்ணீரை வேகமாக பாய்ச்சினார். இதனைத் தொலைக்காட்சியில் கண்ட ரஷ்ய மக்கள் புடினை வெகுவாக பாராட்டினர். புடின் போர் விமானியாக முன்பு இருந்துள்ளார்.

ஆவணி, 14, 2010

பாக். வெள்ளச் சேதத்தை தாலிபான்கள்  சாதகமாக்கி கொள்வார்கள்: அமெரிக்கா

வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில், இஸ்லா மிய அறக்கட்டளை அமைப் புகளும் தடை செய்யப் பட்ட தீவிரவாதக் குழுக்க ளும் அரசை விட வேக மாகச் செயல்படுகின்றன. ஜமாத்-உத்-தவா வெள்ள நிவாரணப் பணி களில் ஈடுபடுவது மற்றும் அரசின் கையாலாகாத்தனம் போன்றவை மிகவும் வெளிப்படையாக உள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் இஸ்லாமாபாத்தை வெள்ள நிவாரண நடவடிக்கை களில் வேகம் காட்டுமாறு நிர்ப்பந்தித்து வருகின்றன. பாகிஸ்தான் மக்களுக்கு இது ஒரு பின்னடைவாகும். நிறைய மக்களை இழந்து விட்டார்கள். (மேலும்....)

ஆவணி, 14, 2010

ஒன்பது தமிழ் கட்சிகளின் அரங்கம் நாளை மட்டக்களப்பில்

ஓன்பது தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் கட்சிகளின் அரங்கம் நாளை மட்டக்களப்பில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பாடும்மீன் (றெஸ்ட் ஹவுஸ்) விடுதியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகான முதலமைச்சரின் ஊடகசெயலாளர் தெரிவித்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பு தவிர ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்அரங்கத்தில் பங்கு கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆவணி, 13, 2010

சரத் பொன்சேகா குற்றவாளி

இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான முதலாவது இராணுவ நீதிமன்றம் பொன்சேகா குற்றவாளி என இன்று தீர்ப்பளித்துள்ளது. அவரின் இராணுவ ஜெனரல் அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் எனவும் அந்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ சேவையிலிருந்துகொண்டே அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி, 13, 2010

மீனவர்களை கொல்வதை அமைச்சர் நியாயப்படுத்தலாமா?

இலங்கை மீனவர்கள் கூட திசைமாறி இந்தி யாவுக்குள் நுழைந்த சம்பவம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த நேரங்களில் இந்திய கட லோர காவல்படை அவர்களை கைது செய்கிறதே தவிர சுட்டுக் கொல்வதில்லை. இந்தியாவில் குஜ ராத் மாநிலத்தையொட்டிய மேற்கு கடற்கரை பகு தியிலும் ஏராளமான மீனவர்கள் நடுகடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள். அதே போல் எல்லையையொட்டியுள்ள பாகிஸ்தான் மீனவர் களும் மீன் பிடித்து வருகிறார்கள். இவர்கள் தெரி யாமல் எல்லையை கடந்து விட்டால் கைது செய்யப்படுகிறார்கள். மாறாக கொல்லப்படுவ தில்லை. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளின் மீனவர்கள் பரஸ்பரம் விடுவிக்கப் படுகிறார்கள். ஆனால் உலகிலேயே இலங்கை அரசு தான் கொடுமையாக நடந்து கொள்கிறது. எனவே இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் (மேலும்....)

ஆவணி, 13, 2010

490 பேர் கொண்ட 'சன் ஸீ' கப்பலில் கனேடிய கடற்படையினர் ஏறினர்

490 இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கிச் சென்ற 'எம்.வி. சன் ஸீ' எனும் கப்பலில் கனேடிய கடற்படையினர் ஏறியுள்ளனர். கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சன் ஸீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் கப்பலில் அகதிகள் இருப்பதாக சன் ஸீ கப்பல் பிரகடணப்படுத்தியதாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் வியாழனன்று அறிவித்தார். "ஆட்கடத்தல்காரர்கள்,  பயங்கரவாதிகள் உட்பட அகதி அந்தஸ்து கோரும் 490 பேரைக் கொண்ட கப்பல் எமது நீர்ப்பரப்பை அடைந்துள்ளது. இது குறித்து கனேடிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்" என அவர் கூறியுள்ளார். இக்கப்பல் வான்கூவர் தீவுக்கருவில் மெதுவாக பயணம் செய்துகொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறத

ஆவணி, 13, 2010

சன்k கப்பல் கனேடிய கடற்பரப்பை அடைந்தது

சர்வதேச நியதிகளின் கீழ் விசாரணை

200 தமிழர்களை ஏற்றிக்கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் எம்.வி.சன்k கப்பல் கனேடிய கடல் பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 200 கடல் மைல் (370 கிலோ மீற்றர்) எல்லை கொண்ட கனடாவின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயப் பகுதியை அடைந்த இக்கப்பலை, அந்நாட்டு கடற்படையினர் தற்போது பிரிட்டிஷ், கொலம்பியா மாநில கரையோரத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர் என கனேடிய செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. இக்கப்பலின் தற்போதைய வேகத்தின்படி இன்று வெள்ளி காலை கனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட 12 கடல் மைல் (22 கி.மீ) நீர் பரப்பை இக்கப்பல் அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. கப்பலிலுள்ள ஆண்களும் பெண்களும் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.  இந்த கப்பலில் முன்னதாக 200 இலங்கையர்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது 500 பேர் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இன்னும் கப்பலில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. (மேலும்...)

ஆவணி, 13, 2010

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு சரியான தெளிவு இல்ல - சிறிலங்கா தூதுவர்

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு சிறிலங்காவின் நிலைமை தொடர்பான சரியான தெளிவு இல்லை என்று இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். 'உண்மையான கள நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிறிலங்காவுக்குப் பயணம் செய்ய வேண்டும். அதற்கு முன்வந்தால் அவர்களுக்கான சகல வசதிகளையும் சிறிலங்கா அரசாங்கம் செய்து கொடுக்கும். அனைத்துலக ரீதியாக விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் பரப்புரைகளுக்கு ஏமாந்து விடாமல் உண்மை நிலவரங்களை அவர்கள் நேரில் வந்து கண்டறிய வேண்டும். சிறிலங்கா தொடர்பாக சிறப்பு ஆலோசனைக் குழுவொன்றை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நடவடிக்கை தேவையற்றதொன்று. உறுப்பு நாடொன்றினால் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் அல்லது பாதுகாப்புச் சபையில் அல்லது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தால் மட்டுமே இத்தகைய வழிமுறையைப் பின்பற்றுவதற்கு ஐ.நா பொதுச்செயலருக்கு அதிகாரம் உள்ளது. நிபுணர் குழுவை நியமிக்க அவர் எடுத்த முடிவு தர்க்கரீதியாக நியாயமற்றது' என்றும் சிறிலங்கா தூதுவர் கூறியுள்ளார்.

ஆவணி, 13, 2010

மதங்கள் வாயிலாக உருவாகும் நல்லிணக்கம்

பல்லின மக்கள் வாழ்கின்ற எமது நாட்டைப் பொறுத்தவரை குடிமகன் ஒருவன் தனது தாய் மொழியில் மாத்திரமன்றி இங்குள்ள மற்றைய மொழியிலும் பரிச்சயம் பெற்றிருப்பதானது இன நல்லுறவுக்குப் பாலமாக அமையுமென்பதில் ஐயமில்லை. அதேபோன்று ஒருவரின் மதத்தை மற்றவர் கெளரவப்படுத்துவ தென்பது இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வுக்கும் ஐக் கியத்துக்கும் வழியேற்படுத்தவே செய்யும். மற்றைய இனங்க ளின் மதங்களை கெளரவப்படுத்துவதே உயரிய மாண்பு என் பதை அனைத்து மதங்களுமே வலியுறுத்துகின்றன. மதம், மொழி போன்றவற்றால் மிக நீண்ட காலமாக விலகியிரு ந்த இனங்களிடையே மதங்கள் வாயிலாக நல்லிணக்கம் தோன்றுவதற்கான சூழலொன்று துளிர்விட்டிருக்கிறது. ஆரோ க்கியமும் பக்குவமும் நிறைந்த இத்தகைய சூழல் நிலைத்திட வேண்டும். இதன் மூலம் இனங்களுக்கிடையிலான நல்லுறவு பலமடைய வேண்டும். (மேலும்...)

ஆவணி, 13, 2010

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

(தேவராஜ)

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன். சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்குகீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை. அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி. (மேலும்....)

ஆவணி, 13, 2010

ஜோர்ஜியாவின் எல்லையை நோக்கி ரஷ்யப் படைகள் திடீர் நகர்வு

ஜோர்ஜியாவின் எல்லைகளை நோக்கி இராணுவத்தை அனுப்பியுள்ளதாக அறிவித்த ரஷ்ய அரசாங்கம் ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டங்களையும் அமுல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தது. எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கும் எண்ணத்தோடு படைகள் அனுப்பப்படவில்லை. ரஷ்யாவின் வான் நில எல்லைகளைப் பாதுகாப்பது ஆப்காஷியா தென் ஒட்டாஷியா ஆகிய நாடுகளின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது என்பவையே இப்படை நகர்வின் நோக்கமென ரஷ்யா கூறியது. (மேலும்...)

ஆவணி, 13, 2010

நல்லிணக்கக் குழு விசாரணையில் அரசாங்கத் தலையீடு இல்லை

அமெ. காங்கிரஸின் கோரிக்கையை நிராகரிக்கின்றது அரசாங்கம்

இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கோரியிருப்பதை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது. யுத்த சமயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு அதன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதென பதில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். (மேலும்...)

ஆவணி, 13, 2010

ஈரானைத் தாக்கினால் தக்க பதிலடி தரப்படும்

அமெரிக்கப்படைகளுக்கான புதைகுழிகளும் தயார் - ஈரான் இஸ்லாமிய புரட்சிப்படையின் தளபதி

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எவ்வித தயக்கமுமின்றி பதில் தாக்குதல் தொடுக்கப்படும். அமெரிக்கப் படைகளுக்கான புதைகுழிகளை ஏற்கனவே தோண்டி வைத்துவிட்டோம் என ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படையின் உதவிப் படைத்தளபதி ஹ¤ஸைன்கான் எச்சரித்தார். உலகிற்கு பயங்கரவாதத்தை அமெரிக்காவே ஏற்றுமதி செய்கின்றது. லெபனான், பலஸ்தீன், ஆப்கானிஸ் தானில் இவை நிருபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எத்தகைய தாக்குதல்களையும் ஈரான் எதிர்கொள்ளும், ஈரானைக் குழப்பினால் மிகப் பெரிய யுத்தம் அந்தப் பிராந்தியத்தையே பற்றிக் கொள்ளும் என்றும் இஸ்லாமிய புரட்சிப் படையின் உதவிப் படைத்தளபதி குறிப்பிட்டார். (மேலும்...)

ஆவணி, 13, 2010

பிரேசில் நாட்டு தூதுவர் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு _ 

இலங்கையிலுள்ள பிரேசில் நாட்டுத் தூதுவர் வென்றோ வெயரிட்டோ முதற்தடவையாக இன்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திர காந்தனை சந்தித்தார். திருகோனமலையிலுள்ள முதலமைச்சரின் அலுவகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது கிழக்கின் தற்போதய நிலவரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் யுத்தத்திற்கு பின்னரான மீள் கட்டுமானப்பனிகள் தொடர்பாக தூதுவர் கேட்டறிந்து கொண்டதாக முதலமைச்சர் சிவநேசதுறை சந்திகாந்தன் தெரிவித்தார்.

ஆவணி, 13, 2010

மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும்   

(எஸ்.எஸ்.எம்.பஷீர்)

புலிகள் முதலில் சிங்கள விரோதிகளாக, முஸ்லிம் விரோதிகளாக , தமது சக போராட்ட இயக்கங்களின் எதிரிகளாக இருந்தது போக தமக்குள்ளே மஹத்த்யா எனும் மகேந்திரராஜா பிரிவினருக்கேதிரான தாக்குதல்களையும் கருணாவுக்கேதிரான தாக்குதல்களையும்  சாதி அடிப்படை கொலைகளையும் மேற்கொண்டு தம்மை தமது சொந்த சமூக , பிரதேச பிரிவினர்களுக்கு எதிரானவர்களாக செயற்பட்டபோது தமிழர்களில் பலர் புலிகளுக்கு எதிரானவர்களாக இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து புலிகளை (தமிழ‌ரசுக்கட்சியினர் நினைவுகூரும்  "போராளிகளை") அழிக்க செயற்பட்டதனை நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது துல்லியமாக புலனாவது என்னவென்றால்  இந்த யுத்தவெற்றி என்பது சிங்களவர் தமிழர் முஸ்லிம்களது பொது எதிரியாக மாறிய புலிப்பாசிசத்துக்கெதிரான வெற்றியே ஒழிய வேறில்லை. (மேலும்...)

ஆவணி, 13, 2010

3179 இற்கு அவசர அழைப்பு!

பாடசாலை மாணவிகள் கடத்திச் செல்லப்படுவதாக வெளியாகும் செய்திகள் அண்மைக் காலமாக மலையகப் பகுதிகளில் சாதாரண மாகிவிட்டன. மாணவிகள் கடத்தப் படுவதற்கு முன்பு சில சிறுவர்கள் கடத்தப்பட்டுப் பின் விடுவிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. ஹட்டன் பகுதியில்தான் இதுபற்றிக் கூடுதலாகப் பேசப்பட்டாலும் மலையகத்தின் ஏனைய பகுதிகளில் நிலைமை வேறாக உள்ளது.  புசல்லாவை பகுதி தோட்டமொன்றில் பதின்ம வயது மாணவிகள் எதுவித காரணமுமின்றித் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். வளர் இளம் பருவ மாணவிகள் இவ்வாறு கடத்தப்படுவதும் தற்கொலை செய்துகொள்வதும் ஏனென்று ஆராய்ந்தால் முடிவு காதல் விவகாரத்தைக் காண்பிக்கிறது. (மேலும்...)

ஆவணி, 12, 2010

கனேடிய கடல்பரப்பை அடைந்தது 'சன் சீ'கப்பல்

இலங்கையர்கள் 231 பேருடன் கனடாவை நோக்கிப் பயணித்த 'எம்.வி.சன் சீ' எனும் கப்பல் தற்பொழுது கனேடிய கடல்பரப்பை அடைந்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் கடல் வலயப் பகுதியை அடைந்த இக்கப்பலை, அந்நாட்டு கடற்படையினர் தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா மாநில கரையோரத்தை நோக்கிச் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக அவ்வூடகச் செய்தி மேலும் தெரிவிக்கின்றது. எம்.வி.சன் சீ கப்பலில் உள்ளவர்களைத் தங்க வைப்பதற்கு, இரண்டு நலன்புரி முகாம்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, இது குறித்து கனேடியத் தமிழ்ப் பேரவைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடியத் தமிழ்ப்பேரவை, அக்கப்பலின் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. கப்பலில் வரும் மக்கள் தொடர்பான மேலதிக செய்திகள் கிடைக்கப்பெற்றதும் ஊடகங்களுக்கு அது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. கப்பலில் வந்துகொண்டிருக்கும் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க கனேடியத் தமிழ்ப்பேரவையைச் சேர்ந்த குழுவினர் தற்போது வன்கூவர், பிரிட்டிஷ், கொலம்பியா நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவணி, 12, 2010

ஆளுந்தரப்பு இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டு இடதுசாரிகள், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உட்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிடுவதை படங்களில் காணலாம்.

ஆவணி, 12, 2010

புலம்பெயர் தமிழர் நாடு திரும்ப சிறந்த பொறிமுறை அவசியம்

இந்திய மத்தியஸ்தத்துடன் சமாதானத்தை ஏற்படுத்த முயன்ற முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1990 களில் சமாதானத்தை முன்னெடுத்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச ஆகியோரைப் புலிகள் படுகொலை செய்தார்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கொண்ட முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அதன்பின்னர் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய பிரதமர் புலிகள் இயக்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையைச் செய்தார். நோர்வே அனுசரணையாளர்கள் லண்டனில் அன்ரன் பாலசிங்கத்துடன் கலந்தாலோசனை நடத்தி தயாரித்த உடன்படிக்கையை இலங்கைக்குக் கொண்டுவந்தனர். உண்மையில் சமாதான உடன்படிக்கையை ரணில் விக்கிரமசிங்க ஆரம்பிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதான் ஆரம்பித்தார். (மேலும்....)

ஆவணி, 12, 2010

மகஸின் சிறையில் இரு கைதிகள் மோதல், ஒருவர் அடித்துக் கொலை

வெலிக்கடை, மகஸின் சிறைச்சாலை யில் நேற்றுக் காலை இரண்டு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் அதனை தடுக்க வந்த இன்னுமொரு கைதி உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் போதைவஸ்து பாவனை குற்றத்திற்காக விளக்கமறியலில் கடந்த 10ஆம் திகதி சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த மலிந்த பெரேரா எனும் கைதியே உயிரிழந்திருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி. ஆர். டி. சில்வா தெரிவித்தார். விளக்கமறியல் கைதியொருவர் மற்றொரு கைதியை இரும்பு கொக்கி யொன்றினால் குத்த முற்பட்டபோதே மோதல் மூண்டுள்ளது. மோதலை தடுக்க முற்பட்ட போதே மலிந்த பெரேரா எனும் கைதியின் தலையிலும் முதுகிலும் இரும்பு கொக்கியினால் பலத்த அடி வீழ்ந்துள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த மேற்படி கைதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

ஆவணி, 12, 2010

'பிளெக்பெரி' கையடக்கத் தொலைபேசி குறித்து இந்தியாவில் சர்ச்சை _

இந்தியாவில் 'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பில் தற்பொழுது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசிகளின் பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசியில் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் போது அவை பரிமாணம் மாற்றப்பட்டதாகத் தென்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 'பிளக்பெரி' தொலைபேசிக்கு ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதால் பல்வேறு வகையான பாதுகாப்பு வழிமுறைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஆவணி, 12, 2010

வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வாக்குரிமைகளுக்கு வேட்டு - ஹசன் அலி

கடந்த இரண்டு தசாப்தங்களாக இடம்பெயர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்ட இவர்களை யுத்தம் முடிந்த கையுடன் துரிதமாக உரிய இடங்களில் குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபட வேண்டிய அரசு மாறாக அவர்களை தமது தாயக தொகுதிகளில் இருந்து அவசர அவசரமாக நிரந்தரமாக விரட்டியடிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும். யுத்தம் முடியும் வரை இடம் பெயர்ந்தவர்களின் பட்டியல்களில் இவர்களின் கணிசமான எண்ணிக்கையை ஒரு வலுவான தரவாக சர்வதேச சமூகத்திற்கு காட்டி அனுதாபத்தையும், உதவிகளையும் பெற்று வந்த அரசாங்கம் தற்போது இந்த புதிய யுக்தியால் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை திடீரென குறைத்துக் காட்டுவதன் மூலம் துரிதமான மீள் குடியேற்றத்திட்டமொன்றினை அமுல்படுத்தி விட்டதாக காட்ட முயற்சிக்கின்றதா என எண்ணத் தோன்றுகின்றது. (மேலும்....)

ஆவணி, 12, 2010

சிறுபான்மையின அரசியலில் புதிய சிந்தனை தேவை

தமிழ் மக்களின் அரசியலில் மிகக் கூடுதலான காலம் எதிர்ப்பு அரசியலிலேயே கழிந்துவிட்டது. இனப் பிரச் சினை கூர்மையடைந்த அண்மைக் காலத்திலும் அவ்வாறே. இடையில் இரண்டு வருடங்களைத் தவிர, கட ந்த பதினாறு வருட காலத்தில் எதிர்ப்பு அரசியலிலேயே தமிழ்த் தலைவர்கள் ஈடுபட்டார்கள். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதையும் அவர்கள் பெற்றுக் கொடுக்கவி ல்லை. மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்களைத் தவிர்க்க வும் அவர்களால் முடியவில்லை. இக் காலப் பகுதியில் இணக்க அரசியலில் இத் தலைவர்கள் ஈடுபட்டிருப்பார்களேயானால் பல உரிமைகளைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடிந்திருக்கும். அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. எதிர்ப்பு அரசியல் காரணமாக அவற்றைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்துவிட்டார்கள். (மேலும்....)

ஆவணி, 12, 2010

கால ஓட்டத்தில் வந்து சேர்ந்த புதிய கோலம்

பிள்ளைகளை நல்ல நண்பர்களாக நோக்கும் முறை அதி அற்புதமானது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. பெற்றோர்கள் எம்மை நேசிக்கின்றார்கள், எம் நலனில் அதிக அக்கறை செலுத்துகின்றார்கள் என்பதை இந்த வழியில் பிள்ளைகள் அதிகம் உணர்ந்து கொள்ள வாய்ப்புகள் உருவாகின்றன. நல்ல நண்பியாக, ஒரு தாயிடம் மகளால் எதையுமே மனம்விட்டுப் பேச முடிகின்றது. தன்னால் பயமின்றி அம்மாவுடன் பேசமுடியும் என்ற உணர்வில், மகள் எதையுமே தாயிடம் ஒளிவு மறைவின்றிப் பேச ஆரம்பிக்கின்றாள். இது மகன், தந்தை உறவுக்கும் பொருந்துகின்றது. இந்த ஆரோக்கியமான உறவால், எந்த விடயமும் இரகசியமாகி, மூன்றாம் ஆளுடன் பகிரப்படும் அவலம் தவிர்க்கப்படுகின்றது. (மேலும்....)

ஆவணி, 12, 2010

எனது அருமைத் தோழர்களே!

நல்வாய்ப்பாக நம்பிக்கை ஒளியைப் பெறுவதற்கு - ஒரு உறுதிப்பாட்டை உணருவதற்கு எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை. ஒரு வேளை அந்த வாய்ப்பு தவறிப் போய்விட்டால், அதனால் ஏற்படும் பேரழிவின் தொடர் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். அப்படியொரு நிலைமை ஏற்படும் பட்சத்தில் மனித இனத்திற்கு விடிவே கிடைக்காமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. இப்படி நிகழ வேண்டுமென்று நான் விரும்பவில்லை; ஆனால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் இதற்கு முன்பு கனவில் கூட காணாத சூழ்நிலைமையை இப்பூவுலகில் உருவாக்கியிருக்கிறது. ஒரு மனிதர், அமெரிக்க தேசத்தின் ஜனாதிபதி, இதுதொடர்பாக தானாகவே முடிவெடுக்க முடியும். மனித குலத்தைச் சூழ்ந்துள்ள ஆபத்து குறித்து உணர்வதற்கு அவர் இன்னும் தயாராகவில்லை. ஆனால் அவரது ஆலோசகர்கள் அதை உணர்ந்து கொள்ள துவங்கிவிட்டார்கள்.  (மேலும்....)

ஆவணி, 12, 2010

அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை சீனாவுக்கு விற்றதாக இந்தியர் மீது குற்றச்சாட்டு

 “அமெரிக்க இராணுவ ரகசியங்களை 55 லட்சம் ரூபாய்க்கு சீனாவுக்கு விற்ற இந்திய என்ஜினியர் மீதான வழக்கில், அவர் குற்றவாளி” என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய என்ஜினியர் நவ்வர் எஸ். கோவாடியா, 66 வயதான இவர் அமெரிக்காவில் ஆயுதங்கள் தயாரிக்கும் நார்த்ராப் குருமன் கார்ப்பரேஷன் கம்பெனியில் 1968 முதல் 1986ம் ஆண்டு வரை வேலை செய்தார். அங்கு அவர் வேலை செய்தபோது குண்டு வீசும் ஹெலிகொப்டர்களை உருவாக்கினார். ரகசிய இராணுவ உற்பத்தியில் அவர் ஒப்பந்தகாரராக பணியாற்றினார். அதன் பிறகு பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாதவர் என்ற சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு எந்த ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை. (மேலும்....)

ஆவணி, 12, 2010

வாழை மரங்கள்

வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது. வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 இலட்சம் தொன் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது. மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானில் பாரம்பரிய கிமோனோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன. (மேலும்....)

ஆவணி, 11, 2010

அகதி என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

புலி என்று சொல்லாதேடா! புலம் திரும்பி போகாதேடா!!

கப்பலில் வருவதில் புலிகளும் இருக்கிறார்கள் என்பதை உலகில் உள்ள அநேகமான தமிழ்மக்களும் அறிந்துள்ளார்கள். ஆனால் யாருமே உண்மையைச் சொல்லமாட்டார்கள். தமிழ்மக்கள் மட்டுமல்ல அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் உலகின் பிரபல்யமான மனித உரிமை அமைப்புக்களும் உண்மையை மறைப்பது தான். இந்தக் கப்பல் பயணங்களை ஏற்பாடு செய்வது தமிழிழ விடுதலைப் புலிகள் தான் என்று தமிழ் குழந்தை குஞ்சுகளுக்குக் கூடத் தெரியும். இது பற்றி தமிழ் காங்கிரஸ் காரர்களுக்கும், தமிழர் பேரவைக்காரர்களுக்கும், நாடுகடந்த தமிழீழக்காரர்களுக்கும் எதுவுமே தெரியாதாம்.  ஆனால் அதில் எத்தனை பெண்கள், எத்தனை குழந்தைகள் வருகிறார்கள் என்பது இந்தப் புலிப் பினாமிகளுக்குத் தெரிந்திருக்கிறது. (மேலும்.....)

ஆவணி, 11, 2010

அமெரிக்கா கோரிக்கை

இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை _

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சுயாதீனமான முறையில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டனிடம் அமெ. காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். இந்தக் கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸைச் சேர்ந்த 57 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் காலதாமதமாக இடம்பெறுகின்றன எனவும், இலங்கை அரசின் சில தலையீடுகள் காரணமாக அதிகாரிகள் சிலர் ஆணைக்குழுவிலிருந்து விலகியுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையை மேற்கோள்காட்டி அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆவணி, 11, 2010

மட்டு.- அம்பாறை வேலையற்ற பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு தொழில் பெற்றுத்தரக் கோரி இன்று பாரிய ஆர்ப்பாட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஆயிரம் பட்டதாரிகள் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றுகின்றனர். கல்லடி சிவானந்தா கல்லூரிக்கு முன்னாலிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆரம்பமாகியது. இதனால் மட்டக்களப்பு - கல்முனை வீதியின் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், பொன். செல்வராசா, சீ. யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோரும் இதில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி, 11, 2010

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு; இலங்கை அரசு காலம் தாழ்த்துகிறது-இந்திய கம்யூ . கட்சி

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தீர்வு காண்பதில் இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.லிங்கம், நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் நிவாரண உதவிக்காகவும் இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய 500 கோடி ரூபா நிதி, இதுவரையில் செலவிடப்படாமல் இருப்பதாகவும் அந்த நிதியை இலங்கை அரசு வேறு நோக்கங்களுக்கு திருப்பி விடுகிறதா என்பது பற்றி சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். (மேலும்...)

ஆவணி, 11, 2010

மேர்வின் சில்வா பதவி நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் இடைநிறுத்தம்

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மேர்வின் சில்வா பிரதி அமைச்சுப் பதவியிலி ருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலர் விஜயானந்த ஹேரத் நேற் றுத் தெரிவித்தார். அத்துடன் மேர்வின் சில்வா எம். பியை ஸ்ரீல. சு. கட்சியிலிருந்தும் இடை நிறுத்துவதற்கு கட்சி நேற்று தீர்மானித்துள்ளது. ஸ்ரீல. சு. கட்சி அதிகாரிகள் குழு வினர் நேற்று இந் தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். (மேலும்.....)

ஆவணி, 11, 2010

செல்வச்சந்நிதி ஆலய உற்சவம் இன்று ஆரம்பித்தது

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆலய வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஆலய முறைப்படி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. காலை 9.10 மணியளவில் விஷேட பூசைகள் அபிசேகம் என்பன இடம்பெற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட திருவிழா ஆரம்பமாகியது. ஆலயத்தில் சந்ததி வழிவந்த பூசகர்களே இங்கு பூசைகளை நடத்துவது வழமை. ஆகம முறைப்படி மந்திர உச்சாடனங்கள் எதுவும் இன்றி வாய்கட்டியே இங்கு பூசைகள் இடம்பெறுவது சிறப்பான ஒரு விடயமாகும். ஆலயத் திருவிழாவையொட்டி இங்குள்ள சந்நிதியான் ஆசிரமத்தில் ஆன்மீக நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்நிதியான் ஆசிரம சைவகலை பண்பாட்டுப் பேரவை இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது. ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்சேவை மற்றும் தனியார் பஸ் சேவை என்பன ஆலயம் வரை விஷேடமாக இடம்பெற்று வருகின்றன. அந்தப் பசுமையான நினைவுகளை அசைபோடும் இனிய நினைவுகளுடன் புலம் பெயர் நாடுகளிலிருந்து பெருந்தொகையான மக்கள் இத்திருவிழாவிற்கு இம்முறை செற்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஆவணி, 11, 2010

Ship heading to B.C. with Tamil refugees is just the beginning: expert

Up to 200 Tamil refugees are expected in B.C. waters within the next few days. And an international expert fears more may be on the way.Canadian Tamil Congress spokeswoman Manjula Selvarajah said those on board the M.V. Sun Sea are fleeing Sri Lanka after the end of a war of independence between the Tamil Tigers army and the Sri Lankan government. The Tamil Tigers are considered a terrorist organization by Canada and its members are banned from entering Canada. (more...)

ஆவணி, 11, 2010

ஜனாதிபதி - எதிர்க்கட்சி தலைவர் நேற்று மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக் கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுக்காலை ஜனாதிபதி மாளிகையில் நடை பெற்றது. உத்தேச அரசியல் யாப்பு திருத்தம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர் பில் இதன்போது கலந்துரையா டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செய லக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பு திருத்தம் தொடர் பாக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையி லான கலந்துரையாடல்கள் இடம் பெற்று வருகின்றன. அதன் ஒரு அம்சமாகவே நேற்றைய சந்திப்பு இடம்பெற்றதாக மேற்படி செயல கம் தெரிவித்தது.

ஆவணி, 11, 2010

அமெரிக்காவின் அணுக்குண்டு வீச்சு

ஜப்பானில் 65 ஆண்டுகளாகியும் தீராத சோகம்

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் திகதி காலை 7.32 மணியளவில் நாகசாகியில் குண்டு வீசப்பட்டது. குண்டு மனிதன் (ஃபேட் மேன்) என்ற குண்டு இங்கு வீசப்பட்டது. புளூட்டோனியம் கதிர்வீச்சைக் கக்கிய இந்த குண்டு வீச்சுக்கு 70 ஆயிரம் பேர் பலியாயினர். ஹிரோஷிமாவில் சின்ன பையன் என்ற பெயரிலான யுரேனியம் கதிர் வீச்சை கக்கும் குண்டு வீசப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். குண்டு வீச்சுக்குப் பிறகு ஒகஸ்ட் 15ம் திகதி ஜப்பான் சரணடைந்தது. ஆனால் அணுகுண்டு வீசப்பட்டதற்காக ஜப்பானிடம் அமெரிக்கா இதுவரை ஒரு முறைகூட மன்னிப்புக் கோரவில்லை. அமெரிக்காவின் இத்தகைய போக்கானது, அதன் சர்வாதிகார போக்கையே காட்டுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  (மேலும்.....)

ஆவணி, 11, 2010

Vakarai 'best school' in the east -BBC

The eastern Sri Lanka seems to be gradually getting back to normalcy after the devastating tsunami and the decades of civil war between the government forces and the Tamil Tigers. Vakarai Maha Vidyalaya, in Batticaloa district is one such example. The school was completely destroyed by the Asian tsunami in December 2004. Subha Chakravarthi, Kalkuda Zonal Education Director told BBC Sandeshaya that the reconstruction work has been hampered by the civil war after the tsunami. But now, it is again a school with all new facilities. (more...)

ஆவணி, 11, 2010

தென்னாசியாவில்

பெரும் பிரச்சினையாகியுள்ள வாகனநெரிசல்

தென்னாசியாவில் இன்று பெரும் தலையிடியாகவும், பெரும் அலுப்பையும் எரிச்சலினையும் ஏற்படுத்தும் விடயமாக போக்குவரத்து நெரிசல்களும், பாதை ஒழுங்கீனங்களும், பிரயாணி களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. அதாவது உலகின் சனத்தொகை யில் 5 இல் 1 பங்கினர் உள்ள தென்னாசியா போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் போக்குவரத் திற்காக இன்னும் ஓரிரு பதைகளே பிரதான பாதைகளாக இருந்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்த நாடுகள் ஆங்கில காலனித்துவ ஆட்சியில் போடப்பட்ட பாதைகளையே இன்றும் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றமையினை கூறலாம். குறிப்பாக பக்கத்தில் உள்ள ஊர்களுக்குக்கூட சுற்றிவரத்தக்க வகையிலேயே பெரும்பாலான பாதைகள் அமைந்துள்ளதை நோக்கலாம். (மேலும்.....)

ஆவணி, 11, 2010

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஐ. தே. க. எம்.பி. சாட்சியம்

சரத் பொன்சேகா மீதான விசாரணைகளுக்கென நிறுவப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நேற்றுக் காலை கடற்படைத் தலைமையகத்திலுள்ள இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்றன. பொன்சேகாவுக்கு எதிரான மூன்றாவது சாட்சியாளராக ஐ. தே. க. எம்.பி லக்ஷ்மன் செனவிரத்ன இராணுவ நீதிமன்றத்திற்கு சமுகமளித்ததுடன் அவருக்கு எதிராக சாட்சியமளித்ததாக இராணுவ ஊடகப் பிரிவு அதிகாரியான கேர்ணல் துமிந்த கமகே தெரிவித்தார். தொடர்ந்து இரண்டு நாட்களாக சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி, சமுகமளிக்காத நிலையிலும் ஆகஸ்ட் 12ஆம்திகதி காலை 9 மணிக்கு இராணுவ நீதிமன்றம் விசாரணையைத் தொடரும் என உத்தர விட்டதாக கேர்ணல் கமகே கூறினார். (மேலும்.....)

ஆவணி, 11, 2010

Lessons of the spill

 Long before BP plugged the flow of oil into the Gulf of Mexico, people living along the gulf wanted to know what could have been done to avoid the largest spill in U.S. history. Canadians should pay close attention to those questions, because Canada has the makings of an oil rush of its own. A spill in Canada's Arctic would be even more devastating than the one in the gulf. The cold temperatures and remoteness of the location would exacerbate any northern disaster. Icy water does not contain the kinds of bacteria that would help break down the oil in the gulf. Sea ice would also make capping and cleanup more treacherous and difficult. A major oil spill in the north could be a transformative event for Canada's ecology.  (more....)

ஆவணி, 11, 2010

மிதக்கும் நகரம்

மனித குலம் தோன்றியதிலிருந்து பல்வேறுபட்ட பிரச்சினைகள், அழிவுகள் என்பவற்றைச் சந்தித்து வந்த போதிலும் மனிதர்களின் வித்தியாசமானதும் சுவாரசியமானதுமான தேடல்களே வாழ்க்கைகளைச் சுவைபட நகர்த்திச் செல்கின்றது. பல புதிய கண்டுபிடிப்புக்களுக்கு வழிகோலும் இந்தத் தேவைகளின் மூலமாகவே மனித குலம் பல வளர்ச்சிப் படிகளில் ஏறி வந்துள்ளது. இந்த வகையில் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு ஆசையே மிதக்கும் நகரத்தை (floating city) உருவாக்குதல். அதாவது, இராட்சதக் கப்பலொன்றில் ஒரு நகரத்தை நிர்மாணித்து, அங்கு மக்களைக் குடியேற்றி அந்த நகரத்தையே உலக வலம்வரச் செய்தல் ஆகும். பொதுவாக நீர்ப் பரப்பினுள்ளே தூண்களை எழுப்பி அத்தூண்களின் மீது குடியிருப்புக்களை நிர்மாணிக்கும் போது, அக்குடியிருப்புக்களையும் மிதக்கும் நகரம் என்று செல்வதுண்டு. ஆனால், கப்பலில் நிர்மாணிக்கப்படும் இந்த மிதக்கும் நகரத்தில், ஒரு நகரத் திற்குத் தேவையான அனைத்துக் கட்டுமானங்களும் காணப்படும். (மேலும்.....)

ஆவணி, 10, 2010

மே 18, 2009 புலிகளின் தோல்வி நாள் மக்களின் வெற்றி நாள்

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 4)

(சாகரன்)

தமிழ் மக்கள் மத்தியில்  தலைவரின் வழிகாட்டலில் இராணுவ வெற்றியீட்டப்பட்டது என்ற தனிநபர் சாகச வணக்கத்தை மேலும் வளர்த்து அவரை வெல்ல முடியாத, அழிக்க முடியாத கடவுளாக சிருஷட்டிக்க வைத்தது. ஆனால் நிஜத்தில் பிரபாகரன் அப்படியொன்றும் சிறந்த இராணுவ வியூக வகுப்பாளராகவோ அல்லது செயற்பாடாளராகவோ இருக்கவில்லை. ஏன் மாவீரராகவோ இருக்கவில்லை. மாறாக கோழையாக இருந்தார். இதுதான் செட்டியை கல்வியங்காட்டில் முதுகில் சுட்டுக் கொன்றதில் ஆரம்பித்து, முள்ளிவாய்காலில் இறுதி நாட்களில் பதுங்கு குழிக்குள் மட்டும் பதுங்கி இருந்து தனது மேற்குல மீட்போனை மட்டும் எதிர்பார்த்திருந்த நிகழ்வும் கழுத்தில் எந்நேரமும் கட்டியிருந்து புலுடா விட்ட சயனைற் குப்பியை கடிக்காமல் முழம் தாள் இட்டு மட்டியிட்ட செயற்பாடுகளும் ஆகும். புலித்தலைவர் யாராலும் ஏமாற்றப்படவில்லை தன்னாலே தானே ஏமாற்றப்படார். முட்டாள் ஆக்கப்பட்டார். முடமாகவே என்றும் இருந்தார் என்பதே உண்மை நிலை. புலிகள் அமைப்பும் கறையான் பிடித்த கிடுகு வேலியைப் போல் பலமற்ற மறைப்பு மாயத் தோற்றத்தைக் கொண்டிருந்ததே உண்மை. அதுதான் தொடர்ந்து மகிந்த தட்ட வெளிக்கிட பொலு பொலுவென்று கொட்டுப்பட்டதற்கு காரணம். வான் தரை, கடல், ஈருடகம் என்பவை பிரச்சார யுக்திக்கு உதவியனவேயொளிய மாறாக இலங்கை இராணுவத்தை அடித்து கலைக்க, ஏன் தடுத்து நிறுத்த போதுமானவையாக இருக்கவி;ல்லை என்பதே புலிகளின் பரிதாப நிலை. (மேலும்....)

ஆவணி, 10, 2010

எதிர்த்தரப்பிலிருந்து 15 எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள் _

எதிர்த்தரப்பிலிருந்து மேலும் 15 எம்.பி. க்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளனர். ஆனால் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என்று தற்போது ஒன்றும் கூற முடியாது நிலைமை காணப்படுகின்றது. காரணம் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார். எனவே இது தொடர்பில் தெளிவான தீர்மானம் இல்லை. பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பில் உள்ள முன்வரிசை பின்வரிசை மற்றும் தமிழ் முஸ்லிம் எம்.பி. க்களும் இந்த 15 பேரில் அடங்குகின்றனர். ஆனால் அவர்களின் பெயர்களை என்னால் கூற முடியாது என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
 

ஆவணி, 10, 2010

நோர்வேயில் புலி இயக்கத்தின் இரு குழுக்களிடையே மோதல்

நோர்வே தலைநகரான ஒஸ்லோவில் உள்ள அம்ருட் கோவிலில் நடைபெற்ற உற்சவத்தின் போது இலங்கை தமிழ் குழுக்கள் இரண்டுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தில் தொடர்புடைய இரு குழுக்களும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவை என பொலிஸார் கூறினர். கே. பி. என்னும் குமரன் பத்மநாதன் நோர்வேயில் புலிகள் இயக்க நடவடிக்கைகளை நடத்திச் செல்வதை கைவிட்ட பின்னர் இயக்க நடவடிக்கைகளை நடத்துவதில் இந்த கோஷ்டிகள் செயற்பட்டதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர். இக் குழுச் சண்டை கனடாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக புலி ஆதரவாளல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆவணி, 10, 2010

உடைக்கப்பட்டது கட்டடங்கள் மட்டுமல்ல மனமும்தான்!

19 வருடங்களின் முன்பு யாழ்ப்பாண புகையிரத நிலையம் எப்பொழுதும் சனக்கூட்டம் மிக்கதாகவே காணப்படும். யாழ்தேவி எழுப்பும் ஒலி இன்னமும் பலரின் காதுகளில் மீளொலிக்கின்றது. அப்படி பிரபல்யமாக இருந்த யாழ். புகையிரத நிலையம் இன்று சனநடமாட்டம் இல்லாத சிதைந்த கட்டடமாக காணப்படுவது மனதினை கனக்க வைக்கிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்த இடம் இன்று ஆடு, மாடுகளின் உறைவிடமாக இருக்கிறது. புகையிரதம் பயணம் செய்ததற்கான அறிகுறிகளையே அங்கு காணமுடிவில்லை. வடை, சுண்டல்களின் வாசம் வீசவில்லை. மாறாக மலங்களின் மணம் வீசுகிறது. யுத்தத்தின் சத்தங்களை கேட்டுப் பழகிய பிஞ்சுகளுக்கு யாழ்தேவியின் சத்தம் மறுபடியும் எப்பொழுது கேட்குமோ…? இவ் புகையிரத நிலையத்திற்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு. இந்திய அமைதிகாக்கும் படையின் பிரசன்ன காலத்தில் புலிகளின் உயிர் அச்சுறுத்தலால் யாழ் பல்கலைக் கழகம் சென்ற பரீட்சை எழுத முடியாத ஒரு போராளி இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடனும் யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் கண்காணப்பின் கீழும் தனது இறுதியாண்டு பரீட்சைக்கான ஒரு பாடத்தை எழுதி முடித்தார் என்பதுவும் வரலாறு. இவ் நிகழ்வு யாழ் புகையிரத நிலைய பிரதான பயணச்சீட்டு வழங்கும் அறையினுள் நடைபெற்றது. அப்போது புகையிரத நிலையம் செயற்படாவிட்டாலும் தனது முழமையான பழுதடையாத கட்டடத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.

ஆவணி, 10, 2010

சிறுபான்மையினரிடமிருந்து அந்நியமாகின்றது ஐ.தே.க

வெறுங்கையால் முழம் போட முடியாது எனக் கூறுவர். ஐக்கிய தேசியக் கட்சியின் நிலையும் இதுதான். சிறுபான்மையினரின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தீர்வுக்கான கொள்கையை வகுக்கும் நோக்கமுமில்லை. சிறுபான்மையினரின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் இல்லை. இந்த நிலையிலும் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கருதுவது கற்பனையாகவே முடியும். ஐக்கிய தேசியக் கட்சி சிறுபான்மையினரிடமிருந்து அந் நியப்படுவதைத் தவிர்ப்பதற்கு வெறும் பேச்சுகளும் அறிக்கைகளும் பலன் தரப்போவதில்லை.(மேலும்....)

ஆவணி, 10, 2010

இந்தியத் தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் யாழ். குடாநாட்டுக்கு விஜயம்

இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த  பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் நேற்று  யாழ். குடாநாட்டுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு நேற்றுக் காலை சென்ற இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளான கே.முரளிகரன், ஏ.சுனில் ஆச்சயா ஆகிய  இருவரும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும்  நேரில்ச் சென்று நிலைமைகளை அவதானித்தனர். அத்துடன்,  பொதுமக்கள் சிலருடனும் இவர்கள் உரையாடினர். இதன் பின்னர் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்,  பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரையும்   நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள், மக்களின் மீள்குடியமர்வு, அபிவிருத்தித் திட்டங்கள் என்பன தொடர்பாகத் தமது திருப்தியை இக்கலந்துரையாடலின்போது இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஆவணி, 10, 2010

இசைக்கு நிகரானது இசையே!

இயற்கையுடன் இணைந்து மனித உள்ளங்களை வசியப்படுத்தி இசைய வைக்கும் ஒப்பற்ற பேராற்றல் கொண்டவை இராகங்கள். இசை ஒன்றே இசைப்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பமூட்டும் எழில்மிகு கலையாகும். ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் இசைக்கலையும் ஒன்று. உலகில் இசைக்கு நிகரானது இசை ஒன்றேயாகும். தாயவளின் நாவின் அசைவில் எழுந்திடும் ஒலியை தாலாட்டு என்றனர். தாலாட்டு என்பதன் பொருள் தால்- ஆட்டு என்பதாகும். தால் என்றால் நாவு. நாவின் அசைவில் பிறக்கும் இசையே தாலாட்டு ஆகும்.(மேலும்....)

ஆவணி, 10, 2010

சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்
(மீராபராதி)
இலங்கையில் மட்டும் பேசப்படும் சிங்கள மொழியையும் பௌத்த மதத்தின் குறிப்பான ஒரு பிரிவையும் காப்பாற்றவேண்டிய தேவை உள்ளதென இலங்கை வாழ் சிங்களம் பேசுகின்ற பௌத்த மத நம்பிக்கையுள்ள மனிதர்கள் உணர்கின்றீர்கள். இந்த உணர்வை பல தமிழ் பேசும் மனிதர்களும் புரிந்துகொள்கின்றனர். இவ்வாறான பயத்திற்கும் அதனால் உருவான தங்களது அடையாளங்களைப் பாதுகாப்பதற்குமான உணர்வுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா மற்றும் அங்கு அதிகாரத்துவத்திலிருக்கின்ற இந்து மதமும் அவர்களின் அரசியலும் மற்றும் தமிழகத்தின் புவிசார் நிலையும் அங்கு வாழுகின்ற தமிழ் பேசும் மனிதர்களின் எண்ணிக்கையும், அவர்களின் அரசியலும் எனப்பல காரணங்களைக் கூறலாம். இவ்வாறான ஒரு சுழலில், தாங்கள் தங்கள் மொழியையும் மதத்தையும் காப்பாற்ற வேண்டிய ஒரு சுழலில் இருக்கின்றீர்கள் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.ஆனால் இவ்வாறு தங்களது மொழியையும் மதத்தையும் நீங்கள் காப்பாற்றுவதற்காக, இலங்கை நாட்டில் ஒரு பகுதியில் வாழும் தங்களிலிருந்து வேறுபட்ட ஒரு மொழியையும் அடையாளத்தையும் கொண்டுள்ள ஆனால் அந்த நாட்டிலையே ஒரு தொடர்ச்சியான வாழ்வையும்; நீண்ட கால வரலாற்றையும் பொதுவான அடையாளத்தையும் கொண்டுள்ள தமிழ் பேசும் மனிதர்களை, நீங்கள் அல்லது தங்களது அரசு அடக்குவதும் அழிப்பதும் அல்லது அவ்வாறு நடைபெறுவதற்கு நீங்கள் ஆதரவளிப்பதும் நியாயமற்றதல்லவா?. (மேலும்....)

 

ஆவணி, 10, 2010

மியான்மர் நாட்டில்

ஜனநாயகப் போராட்டம், உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி

ஜனநாயகம் கோரி 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்தது இராணுவ ஆட்சி. ஜனநாயகத்துக்காக உயிர் நீத்தவர்களின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. முன்னாள் மாணவர் சங்க தலைவர் டின்ட் சான் என்பவர், இறந்தவர்களின் நினைவு தினத்தை ஆன்மிக ரீதியாக அனுஷ்டித்து வருகிறார். (மேலும்....)

ஆவணி, 10, 2010

அச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையில் நாற்பது பாரிய தொழிற்சாலைகள்

யாழ்ப்பாணம் அச்சவேலியில் 40 தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கைத்தொழிற் பேட்டைக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக் கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.  யாழ். அச்சுவேலி பகுதியில் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென 65 ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளதுடன் இதில் 25 ஏக்கர் காணியில் ஆடைத் தொழிற்சாலைகளும் 40 ஏக்கர் கணியில் கைத்தொழில் பேட்டையும் அமைக்கப்படவுள்ளன. (மேலும்.....)

ஆவணி, 10, 2010

கிரீன்லாந்தில் இராட்சத பனிப்பாறை உருகுகிறது

வடதுருவ பிரதேசத்தில் உள்ள கிரீன்லாந்து நாட்டில் உள்ள பனி மலையில் இருந்து 160 சதுர கி. மீ. பரப்பளவு உள்ள இராட்சத பனிப் பாறை தனியாக பிளவுபட்டு உருகுகிறது. இந்த பனிப்பாறை, அமெரிக்கா வில் நியூயோர்க் மாநிலத்தில் உள்ள மன்ஹாட்டன் நகரை போல 4 மடங்கு பெரியது. இந்த பனிப் பாறையில் சேர்ந்து உள்ள தண்ணீர், அமெரிக்காவில் உள்ள அனைத்து குழாய்களிலும் 120 நாட்களுக்கு விநியோகம் செய்வத ற்கு போதுமானது. இந்த பனிப்பாறை தனியாக பிளவுபட்டு உருகும் தகவலை டெலா வேர் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர் அண்ட்ரேஸ் மியூயன்சோவ் தெரிவித்து இருக்கிறார். இந்த பனிப்பாறை அடுத்த 2 ஆண்டுகளில் அட்லாண்டிக் பெருங் கடலை அடையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. கிரீன்லாந்து நாட்டில் உள்ள பனி மலையில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கான பனிப் பாறைகள் துண்டாகப் பிளந்து பிரிந்து விடு கின்றன. பூமி வெப்பமயமாவதன் காரணமாக இப்படி நேர்கின்றன. ஆனால் இதற்கு முன்பு பிளவு பட்டது எல்லாம் இந்த அளவுக்கு பெரிய பனிப்பாறைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இது தான் மிகப் பெரிய பனிப்பாறை ஆகும்.

ஆவணி, 10, 2010

அணைக்குள் மூழ்கிக் கிடக்கும் கோட்டை

தமிழ்நாட்டின் பவானிசாகர் அணைக்குள் ‘டனாய்க்கன் கோட்டை’ என்னும் பழங்காலத்துக் கோட்டை மூழ்கிக் கிடக்கிறது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை மற்றும் ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை என்கிற பெருமைகளுக்கு சொந்தமானது பவானிசாகர் அணை.  பவானியாறும், மோயாறும் சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணை மூலம் 2.47 இலட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. அணை கட்டுவதற்கு முன் இந்த இடத்தில் கூடுவாய், பீர்க்கடவு, வடவள்ளி, குய்யனூர் போன்ற ஊர்களும், இந்த டனாய்க்கன் கோட்டையும் இருந்தன. அணை கட்ட முடிவெடுத்த பின் இவ்வூர் மக்களுக்கு வேறு இடம் வழங்கப்பட்டது. இன்று இந்த ஊர்கள் அணைக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. (மேலும்....)

ஆவணி, 10, 2010

யாழ். தேவி ரயில்சேவையில் கட்டண குறைப்பும், நேர மாற்றமும்

ஆவணி, 10, 2010

பாகிஸ்தானின்

பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் நிபந்தனை விதிப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலிருந்து இராணுவம் வாபஸ் பெற்றால் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்த பின் ஆட்சியை இழந்த தலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் ஓடி ஒளிந்தனர். பாகிஸ்தானின் பழங்குடிகள் வசிக்கும் பகுதியில் பதுங்கிக் கொண்டு அமெரிக்காவுக்கு எதிராகவும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் பெரும்பாலான தற்கொலைப் படை தாக்குதலுக்கு தலிபான்கள் காரணமாக உள்ளனர். எனவே, இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி சில எதிர்க் கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர். (மேலும்....)

ஆவணி, 09, 2010

நான் உள்ளே நுழைந்தவுடன் பாதுகாப்புச் செயலாளர் எழுந்து கைகுலுக்கினார்: குமரன் பத்மநாதன்  

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து  கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார். 7ஆம் திகதி சனிக்கிழமை டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் தமிழ் வடிவம் இது. (மேலும்....)

ஆவணி, 09, 2010

மே 18, 2009 புலிகளின் தோல்வி நாள் மக்களின் வெற்றி நாள்

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 3)

(சாகரன்)

புலிகளின் தலைமை மேற்குலக மீட்போன் தம்மை பிணை எடுப்பான் என்பதில் மட்டும் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த சரணாகதி நிலையில் இருந்தனர். சரணாகதி நிலையில் மட்டும் இருந்து கொண்டு புலம் பெயர் மக்ளின் துணையுடன் புதிக் குடியிருப்பு ஒரு லெனின் கிராட்டாக மாறும் என்ற வரையிலான வீரதாபங்களை பரப்புரை செய்து வந்தனர். மேற்குலகம் ஆகாயத்திலிருந்து குதித்து தம்மை மரியாதையுடன் மீட்கும் என புலம் பெயர் புலித் தலைமைகளும், புலம் பெயர் புலி ஆதரவாளர்களும் ஏற்படுத்தியே இருந்தனர். இதனை நம்பும் அளவிலேயே நிலத்தில் உள்ள புலிகள் சிறப்பாக பிரபாகரன் நம்பி இருந்தான். இதனைத் தவிர வேறு மார்க்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என்பதுவும் இங்கு உண்மைதான். புலிகளின் இராணுவ பலம் அவ்வாறே இருந்தது. ஆனால் புலிகளின் அரசியல் பலம் சர்வ தேசத்தில் வேறுவிதமாக இருந்தது. புலிகள் தமது ஆயுத நடவடிக்கைகளுக்கான தார்மீக ஆதரவை சர்வதேசத்தில் இழந்தே இருந்தனர். புலிகளுக்கு அரசியல் பலம் எப்போதுமே சர்வ தேச சமூகத்திடம் இருந்தது இல்லை. இதனால் சர்வ தேசம் பொது மக்களை காப்பாற்றும் காத்திரமான புத்திசாலித்தனமான செயற்பாட்டை இறுதிக்கட்டப் போரில் கொண்டிருக்கவும் இல்லை, செயற்படுத்த முயலவும் இல்லை என்பதே இறுதித் தினங்களில் பொது மக்களின் பரிதாப நிலைகளுக்கு காரணமாக இருந்தன. (மேலும்....)

ஆவணி, 09, 2010

குட்டிப் புலிகள் மீது அக்கறை காட்டும் குண்டுப் புலிகள்!!!

தடுத்து வைத்துள்ள புலிச் சந்தேக உறுப்பினர்களை பார்வையிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை பார்வையிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பாதுகாப்பு அமைச்சில் அனுமதி கோரியுள்ளது. வெலிகந்த புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களை பார்வையிடுவதற்கு அனுமதி கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வெலிகந்த புனர்வாழ்வு மையத்தில் சுமார் மூவாயிரம் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் தாம் அனுமதி கோரியதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

ஆவணி, 09, 2010

கியூப நாடாளுமன்றத்தில் பிடல் காஸ்ட்ரோ உரை  அணு ஆயுதப் போர் பற்றி எச்சரிக்கை

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையை நடைமுறைப் படுத்தும் முயற்சிகளை ஈரான் எதிர்த்தால், அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ் வாறு நடைபெறவிடாமல் ஒபாமாவை உலகத் தலை வர்கள் வற்புறுத்த வேண்டு மென்று அவர் தம் உரையில் குறிப்பிட்டார். சீனாவும், சோவியத்தும் (ரஷ்யாவும்) அணு ஆயுதப் போரை விரும்பவில்லை என்பதால் அதனை அவை தவிர்க்க விரும்பும் என்றும் அவர் கூறினார்.(மேலும்....)

ஆவணி, 09, 2010

பரீட்சை எழுதும் 367 சரணடைந்த போராளிகள்

மருதமடு ஓமந்தை பூந்தோட்டம் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு மையங்களில் உள்ள சரணடைந்தவர்களில் இருந்து 367 பேர் இந்தப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார். போர்ப்பயமற்ற அமைதியான சூழலில் முதற் தடவையாக இந்த முறை வன்னிப்பிரதேச மாணவர்களுக்குப் பரீட்சை எழுதுவத்றகுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

ஆவணி, 09, 2010

மின் உற்பத்தியில் மாற்று வழிகளை நாட வேண்டிய கட்டாயம்

சக்தி வளப் பற்றாக்குறையானது நாளைய உலகை அச்சுறுத்தப் போகிறதென்பதை விஞ்ஞானிகள் எப்போதோ எதிர்வுகூறத் தொடங்கிவிட்டனர். இப்பிரச்சினையிலிருந்து இலங்கை விதிவிலக்காகியிருக்க முடியாது. சக்தி வளப் பற்றாக்குறையைச் சமாளிக்க உலகம் இப்போதே தயாராகி வருவதனால் இலங்கையும் உரிய ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறது.  சக்தித் தேவைகளுக்காக உலகம் எரிபொருளையே கூடுதலாக நம்பியிருக்க வேண்டியுள்ளது. வாகனங்கள் மற்றும் இயந்திர சாதனங்களை இயக்குவதற்கு மாத்திரமன்றி மின்சார உற்பத்திக்கும் உலகம் எரிபொருளையே அதிகம் நம்பியிருக் கிறது. ஆனால் எரிபொருளில் மாத்திரம் நம்பியிருப்ப தென்பது ஆரோக்கியமானதொரு நிலைமையல்ல. (மேலும்....)

ஆவணி, 09, 2010

4 ஆண்டுகளுக்கு பிறகு உரையாற்றும் பிடல் காஸ்ட்ரோ

கியூபா நாட்டின் அசைக்க முடியாத தலைவர் பிடல் காஷ்ரோ இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பேசுகிறார். அப்போது ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க இருக்கும் அபாயம் மற்றும் அதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கம்யூனிச நாடு கியூபா. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்நாட்டில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ. 1959ல் தனக்கு எதிராக நடந்த பெரும் கிளர்ச்சியை முறியடித்து நாட்டின் அதிபர் ஆனார். அன்று முதல் 49 ஆண்டு காலம் அசைக்க முடியாத யாரும் கேள்வி கேட்க முடியாத தலைவராக திகழ்ந்து வருகிறார். (மேலும்....)

ஆவணி, 09, 2010

கொலம்பியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு
வெனிசூலா, பார்க் போராளிகளை பேச்சுக்கு அழைப்பு

கொலம்பியாவின் புதிய ஜனாதிபதியாக ஜுயான்மானுவல் சண்டோஸ் சென்ற சனிக்கிழமை பதவியேற்றார். 58 வயதான சண்டோஸ் அண்மையில் கொலம்பியாவில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இவரது பதவியேற்பு வைபவத்தில் பல நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்களும் பங்கேற்றனர். நீண்டகாலப் பகைநாடான வெனிசூலாவின் வெளிநாட்டமைச்சரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டார். இங்கு உரையாற்றிய கொலம்பியாவின் புதிய ஜனாதிபதி ஜுயான் மானுவல்சண்டோ கூறியதாவது. வெனிசூலாவுடன் உறவுகளைத் தொடர விரும்புகிறேன். இதற்காக பேசவருமாறும் அழைக்கிறேன். கொலம்பியாவின் பார்க் போராளிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு இணங்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய வேண்டும். பிராந்திய நாடுகளிடையே உள்ள அதிகார எல்லை, மோதல்கள் தென்னமெரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு எதிரானவை என்றார். (மேலும்....)

ஆவணி, 09, 2010

அச்சுவேலி

(ராகினி)

'அச்சு' என்ற சொல்லுக்கு தேயம், அகத்தி, மரம், அச்சுத்தினை எனவும் அடையாளம், தேரச்சு, முத்திரை எனவும் மதுரை தமிழ்ப் பேரகராதி பொருள் கூறுகின்றது. மேலும் அச்சுக் கட்டு என்பதற்கு நெல் பயிரிடத்தக்க நிலம் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளமையைக் காணலாம். அத்துடன் அச்சு என்பது வடமொழி 'AKSHA' என்ற சொல்லின் திரிபென்று கதிரவேற்பிள்ளையின் தமிழ் அகராதி கூறுகின்றது. அச்சன்வேலி, அச்சுவேலி ஆயிற்று. ஏனெனில் அச்சன் குளம், அச்சன்துறை, அச்சன் பேட்டை, அச்சன் குட்டைப்பட்டி முதலிய தானப் பெயர்களை நோக்கினால் அச்சுவேலி என்பதில் உள்ள 'அச்சு' என்பது 'அச்சன்' என்னும் பதத்தின் சிதைவு எனத் துணிதல் கூடும் என யாழ்ப்பாண வைபவ கௌமுகி (333-334) கூறுகின்றது. (மேலும்....)

ஆவணி, 09, 2010

மெக்ஸிகோவில் கொள்கலன்களிலிருந்து இலங்கையர் உட்பட 76 பேர் மீட்பு

இலங்கை மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மெக்ஸிகோ நாட்டில் கைவிடப்பட்டிருந்த கொல்கலன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். சியாபஸ் மாநிலத்தில் வில்லாபுளோர்ஸ், ஒகோஸோகெளட்லா நெடுஞ்சாலையில் அவர்கள் காணப்பட்டதாக மெக்ஸிகோ சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித் துள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து அவர்கள் கண்டுபிடிக் கப்பட்டனர். வாகனத்தில் 3 மீற்றர் அகலமும் 8 மீற்றர் நீளமும் கொண்ட இடமொன்றில் உடலில் நீர்த் தன்மை இழந்த நிலையில் அவர்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

ஆவணி, 09, 2010

லெபனான் இராணுவத்தை பலப்படுத்த ஜனாதிபதி  நடவடிக்கை

லெபனான் இராணுவத்தைப் பலப்படுத்தும் நோக்குடன் நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாகத் தெரிவித்த லெபனான் ஜனாதிபதி மைகல் சுலைமான், இவ்வாறான உதவிகளைச் செய்யுமாறு நேச நாடுகளுக்கு சனிக்கிழமை அழைப்பு விடுத்தார். இஸ்ரேல் இராணுவம் லெபனான் எல்லையில் திடீர் தாக்குதலை மேற்கொண்டதில் மூன்று லெபனான் படைகள் பலியாகினர் ஒரு ஊடகவியலாளர் காயமடைந்தார். இஸ்ரேல் தரப்பிலும் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தார். சென்ற வாரம் இடம்பெற்ற இம் மோதலையடுத்து இஸ்ரேல் - லெபனானிடையே மோதல் நிலை எழுந்தது. (மேலும்....)

ஆவணி, 09, 2010

யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணத்தின் மையமாக விளங்குவது யாழ்ப்பாணக் கோட்டையாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் கரையோரத்தில் தன் கம்பீரமான வடிவத்தை இழந்து சிதிலமான நிலையில் இன்றும் கோட்டை காணப்படுகின்றது. யாழ்ப்பாணக்குடா நாட்டின் தெற்கே பண்ணைக் கடற் கரையோரத்தில் கம்பீரமாகக் கோட்டை அமைந்திருந்தது. இக்கரையோரத்தில் இன்று காணப்படுகின்ற கோட்டை ஒல்லாந்தரால் மீளமைக்கப்பட்ட கோட்டையாகும். யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் மிக அற்புதமானதாகும். அதுமாத்திரமல்லாமல் கீழைத் தேசத்திலுள்ள கோட்டைகள் யாவற்றிலும் மிகப் பலமானதும் பாதுகாப்பானதுமான கோட்டை என அனைத்துக் கட்டிடக்கலை விற்பன்னர்களாலும் விதத்துரைக்கப்பட்டதாகும்.  (மேலும்....)

ஆவணி, 09, 2010

ரஷ்ய காட்டுத் தீ  அந்நிய நாட்டுத் தூதர்கள் வெளியேறுகின்றனர்

ரஷ்யாவில் பற்றி எரியும் காட்டுத்தீ தலைநகர் மாஸ் கோவை நெருங்கிவிட்ட தால் அங்கு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து மாஸ்கோவை விட்டு வெளி யேறுமாறு பல நாடுகள் தங் களுடைய தூதரக ஊழி யர்களுக்கு உத்தரவிட்டன. ரஷ்யாவிற்கு பயணம் செய்ய வேண்டாமென பல நாடு கள் பயணிகளுக்கு பரிந் துரை செய்துள்ளன. வெப்பக்காற்று உருவாக் கிய 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் காட்டில் தீப் பற்றிக் கொண்டது. எரியும் காட்டுத்தீயுடன் கம் போஸ்ட் உரக் குப்பையில் உருவான புகைமூட்டமும் மாஸ்கோவின் சுற்றுச்சூழ லை கடந்த 12 நாட்களாகக் கடுமையாக பாதித்து வரு கிறது. மாஸ்கோ வாயு மண் டலத்தில் அனுமதிக்கப் படும் திடத்தைவிட ஆறரை மடங்கு அதிகமாக கார்பன் மோனாக்சைடு கலந்துள்ளது. (மேலும்....)

ஆவணி, 08, 2010

 

பாலகுமார், அவரின் மகன்

மே 17 2009 எடுக்கப்பட்ட புகைப்படம்
 

'எல்லாம் முடிந்து விட்டது. நாம் இதனை உணர நேரமும் தாமதம் ஆகிவிட்டது. வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை'  - பாலகுமார்

ஆவணி, 08, 2010

மே 18, 2009 புலிகளின் தோல்வி நாள் மக்களின் வெற்றி நாள்

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 2)

(சாகரன்)

பிரபாகரன் வெல்வானோ தெரியாது, ஆனால் பிரபாகரன் கொல்வான் என்பதை பற்குணத்தில் ஆரம்பித்து கருணாவரையும், அமிர்தலிங்கம் இருந்து சம்மந்தர் வரைக்கும், பாலகுமார் தொடக்கம் சுரேஸ் பிரேமச்சந்திரன் வரைக்கும், பத்மநாபா முதல் வரதராஜப்பெருமாள் வரைக்கும், ஹமீத் முதல் ஹக்கீம் வரைக்கும், மதவாச்சி அப்புகாமி தொடக்கம் அம்பாறை சிறியானி வரைக்கும்,  தொண்டமான் முதல் மனோகணேசன் வரைக்கும் கருணாநிதி முதல் வைகோ வரைக்கும் வாஜ்பேயி முதல் சோனியா காந்திவரையும் பருத்தித்துறை பொன்னம்மா முதல் அம்பாறை சட்டநாதர் போடியார் வரைக்கும் யாவரும் அறிந்தே இருந்திருக்கின்றார்கள். இந்தனை புலிகள் எப்போதும் தமக்கு பெருமையாகவும், சாதகமாகவும் பயன்படுத்தி வந்தனர். புலிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்த மரணப் பிராந்திக்கு பலர் பயந்து அடி பணிந்தனர். இதனை தமது பிழைப்புகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்பிப் கொண்டனர். மிகச் சிலர் தொடர்ந்தும் விடாப்பிடியாக புலிகளின் மக்கள் விரோத செயற்பாட்டிற்கு எதிராக போராடி வந்தனர். உயிர்த் தியாகம் செய்தனர். இன்றும், இன்னமும் போராடிக் கொண்டு இருக்கின்றனர். (மேலும்....)

ஆவணி, 08, 2010

போர்க் குற்றம் புரிந்தது அரச தரப்பு மட்டுமா?

புலிகள் சார்பில் கூண்டில் நிறுத்தப்படப் போவது யார்? யார்?

நாடு கடந்த தமிழீழக்காரர்களா, உலகத் தமிழர் பேரவைக் குழுவா? அல்லது புலிச் சொத்துக்களின் பினாமிகளா?

(சமரன்)

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்மக்கள் படுகொலையினை காட்டிலும் பிரபாகரன் மேற்கொண்ட சகோதர படுகொலைகளே இலங்கைத்  தமிழினத்தை அதிகமாக பலவீனப்படுத்தியது. அரச படைகளினால் கொல்லப்பட்ட மாற்று இயக்க போராளிகளைக் காட்டிலும் புலிகளினால் கொல்லப்பட்ட மாற்று இயக்க போராளிகளும் தலைவர்களுமே அதிகமாகும். 1990 ம் வருடத்தில்  துணுக்காயில் அமைந்திருந்த புலிகளின் வதைமுகாமில் மட்டும் 3000 மேற்பட்ட தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் பிரபாகரனால் அறிவிக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு என்ற உத்தரவாதத்தில் புலிகளிடம் சரணடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் போர் குற்றம்தான்.(மேலும்....)

ஆவணி, 08, 2010

தொண்டமானாறு பாலம் ஊடான செல்வச்சந்நிதி வீதி திறப்பு

வடமராட்சி செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு தொண்டமானாறு பாலத்தினூடான வீதி பொது மக்களின் பாவனைக்காக நேற்றுக் காலை திறக்கப்பட்டது. செல்வச் சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9.15 மணிக்கு நடைபெறுகிறது. இம் மகோற்சவம் 24 ஆம் திகதி வரை நடைபெறும். கடந்த மூன்றாம் திகதி செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்த போது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டு கிடந்த தொண்டமானாறு பாலம் ஊடான வீதியை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு இப் பகுதி மக்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். (மேலும்....)

ஆவணி, 08, 2010

போராட்டம் பற்றிய மீளாய்வுக்கு தலைவர்கள் தயாராக வேண்டும்

இனப்பிரச்சினையின் தீர்வுக்காகத் தமிழ்த் தலைவர்கள் நடத்திய போராட்டம் உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதை போல ஆகிவிட்டது. இப்போராட்டத்தின் விளைவாகத் தமிழ் மக்கள் துயரச் சுமைகளைச் சுமப்பவர்கள் ஆகிவிட்டனர். இந்தப் போர ட்டம் பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய காலம் இப்போது வந்து விட்டது. மக்கள் கூட்டமொன்று முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான போராட்டம் அதன் ஆரம்ப கட்டத்தில் மக்கள் எவ் வாறான வாழ்க்கையை வாழ்ந்தார்களோ அதற்குக் கீழான நிலைக்கு அவர்களைத் தள்ளுவதாக அமையக் கூடாது. மக்களின் வாழ்க்கை யில் படிப்படியான வளர்ச்சியை ஏற்படுத்துவதாக அல்லது அத்த கைய வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகளைத் தோற்றுவிப்பதாக அமை யும் பட்சத்திலேயே அது ஆக்கபூர்வமான போராட்டமாக இருக்கும். (மேலும்....)

ஆவணி, 08, 2010

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்சினை இன்று அதற்குப் பொறியாகிவிட்டது

(சங்கர சேயோன்)

1953 டிசம்பரில் நியமிக்கப்பட்ட மாநிலங்கள் மீளமைப்பு ஆணைக்குழு தெலுங்கானா மக்கள் ஆந்திராவுடன் இணைவதை விரும்பாததால் அப் பிரதேசம் ஹைதராபாத் மாநிலம் எனத் தனியாக இயங்க வேண்டும் என்றும் அடுத்த தேர்தலின் பின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் தீர்மானித்தால் ஆந்திராவுடன் இணையலாம் என்றும் 1955ம் ஆண்டு சிபார்சு செய்தது. எனினும், காங்கிரஸ் தலைமையில் செல்வாக்குப் பெற்றிருந்த ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களினது வற்புறுத்தலின் பேரில் 1956 நவம்பர் 1ந் திகதி தெலுங்கானா ஆந்திரப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. தெலுங்கானா மக்களைப் பொறுத்தவரையில் இது ஒரு பலவந்தமான இணைப்பு. (மேலும்....)

ஆவணி, 08, 2010

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி தயார்

“இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதி இது தொடர்பாக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். தனி ஈழத்தைத் தருவதற்கு எவரும் இணங்கமாட்டார்கள். ஆனால், தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றை வழங்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதியும் அதற்குத் தயாராக இருக்கிறார்” என்று அமைச்சர் குறிப்பிட்டார். முதலில் அகதிகளை மீளக்குடியமர்த்தி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகுமென்றும் எனினும் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாரென்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். (மேலும்....)

ஆவணி, 08, 2010

"வேண்டுமென்றே இடித்துவிட்டு Taxi  யில் போங்களேன் என்கிறார்கள்''

கணவனின் நண்பராக வீட்டுக்கு வர ஆரம்பித்த ஒருவர், கணவன் இல்லாத போதும் வீட்டுக்கு வந்திருக்கிறார். இது குறித்து அப்பெண் தனது கணவருக்கு எச்சரித்தும், கணவன் தனது நண்பன் மீது தான் அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவன் தவறானவன் அல்லன் எனவும் வாதாடியிருக்கின்றார். ஆனால், நண்பர் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வருவதாக அயலவர்கள் அரசல்புரசலாகக் கதைப்பது கணவனின் காதுக்கும் எட்டிவிடவே, நண்பனைப் பேசுவதை விடுத்து அவனது சந்தேகம் மனைவி மீது திரும்பியிருக்கிறது. இதனால் அவமானம் தாளாமல் அந்த அபலைப் பெண் தன் குழந்தையை அயலவர்களிடம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார். இப்போது இவ்வாறான சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருகின்றன. (மேலும்....)

ஆவணி, 08, 2010

கிடைத்த சந்தர்ப்பங்களை தலைவர்கள் நிராகரித்ததால் மக்களின் தலையில் மண்

(ஜீவகன்)

பொது நோக்கத்துக்கான ஐக்கியம் என்பது மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்கள் முக்கியமான ஒரு பிரச்சினையில் தங்கள் வேறுபாடுகளை மறந்து பொதுவான ஒரு வேலைத் திட்டத்தைத் தயாரித்துச் செயற்படுவதாகும். தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இனப் பிரச்சினையையும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தை யும் முக்கிய பிரச்சினையாகக் கருதி அது தொடர்பான கூட்டுச் செயற்பாட்டுக்காக அமைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவ்விரு விடயங்களையும் முக்கிய பிரச்சினையாகக் கருதுவதாகவே கூறுகின்றது. ஆனால் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து செயற்படத் தயாராக இல்லை. இவ்விடயங்களில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் பின்பற்றும் அணுகுமுறையிலும் பார்க்கத் தங்கள் அணுகுமுறை வித்தியாசமானது என்று கூட்டமைப்பினர் கருதுவதாலேயே இந்த முடிவு எனக் கொள்ளலாம். (மேலும்....)

ஆவணி, 08, 2010

ரூபவதியும் இமெல்டாவும் மலையகத்துக்குக் கிடைப்பது எப்போது?

(சிவமணம் )

வடமாகாணத்தை எடுத்துக் கொண்டால் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி எஸ்.எம். சார்ள்ஸ், யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அனைவரும் பெண்மணிகளே, இவர்களைப் போல மலையகத்தைச் சேர்ந்த படித்த யுவதிகளும் அரச உயர் பதவிகளை வகிக்க வேண்டு மானால் அதற்கான அர்ப்பணிப்பும், சமூக நோக்கும், வாழக்கையில் முன்னேற வேண்டும் என்ற இலட்சியமும் ஏற்பட வேண்டும். ஒரு ரூபவதியும் இமெல்டாவும் எப்போது மலையகத்தில் தோன்றப் போகிறார்கள்? (மேலும்....)

ஆவணி, 08, 2010

தந்தையின் வழியில் மைந்தன்

மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கை தனக்குச் சாதகமாக அமைந்து விட்டது என்று ரணில் சந் தோஷப்படுகின்றார். சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் செனெவிரட்ன போன்றவர்கள் எவ்வளவு தான் சத்தம் போட்டாலும் பாராளு மன்றக் குழுவில் ரணிலுக்குப் பெரும்பான்மை உண்டு. செயற்குழுவிலும் ரணில் போட்டவர்களே கூடுதலானோர். கிளர்ச்சியாளர்கள் சஜித் பிரேம தாசவைத் தலைவராக்க முயற்சி க்கின்றார்கள். பாராளுமன்றக் குழுவிலும் செயற் குழுவிலும் பெரும்பான்மையாக உள்ள ‘சீனியர்’கள் சஜித்தை விரும் பப் போவதில்லை. முந்தநாள் எம்.பியாக வந்தவர் எங்க ளுக்குத் தலைவரா என்று ஒரு ஆதங்கம். ஆக, வாக்களிப்பு என்று வந்தால் பாராளுமன்றக் குழுவும் செயற்குழுவும் தான் என்ற மறுசீரமைப்பு அறிக்கை சாராம் சத்தில் ரணிலுக்கு வாசி. (மேலும்....)

ஆவணி, 07, 2010

மே 18, 2009 புலிகளின் தோல்வி நாள்! மக்களின் வெற்றி நாள்!!

வீழ்ச்சியும் எழுச்சியும் பெற்று எல்லாவற்றையும் மாற்றிப் போட்ட மே மாதம் (பகுதி 1)

(சாகரன்)

பிரபாகரனைவிட இராணுவ அறிவில் பலம் பொருந்திய கருணா கூட அரச படைகளின் பாதுகாப்பில் முழுவதுமாக இருந்தாலும் மே 18 இற்கு பிறகுதான் புலிகளின் எல்லைக்குள் பிரவேசித்தார். அரசியல் சாணக்கியரும், போரட்டத்தில் பல வருட அனுபவமுள்ள வரதராஜப்பெருமாள் தனது மக்களை நேரடியாகச் சந்திக்கலாம் என்று தீர்மானித்த நாள் மே 18 அன்றுதான். புலிகளின் பல பொறிகளில் தப்பி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களை பொது இடங்களில் சந்திக்கலாம் என தீர்மானித்த நாள் மே 18. சம்மந்தர் முதல் மாவை வரை புலிகளின் பாதை பிழையானது என நழுவின மீன் போல் கதைக்கலாம் என்று முடிவெடுத்த நாள் மே 18. இலங்கை அமைச்சர்களும் அவர் தம் மனைவியரும் வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு தொண்டு செய்வதற்காக, நாடா வெட்டப் புறப்படலாம் என தீர்மானித்த நாள் மே 18. 'துவக்குடன் எந்த அறுவானும் போராட்டம் என்று இனி வந்தால் முறத்தல் அடித்து விரட்டுவோம்' என்று வீரத்தாயாக தமிழ்த் தாய் வன்னியில் மாறிய நாள் மே 18. யாழ் நாக விகாரையும், நயினா தீவு நாகதீப விகாரையையும் இனித் தரிசிக்கலாம் என்று அடிமட்ட பௌத்தன் முடிவெடுத்த நாள். யாழ் பொம்மை வெளியில் உள்ள தமது பள்ளி வாசலை சென்று பார்வையிடலாம் என்று முஸ்லீம் சகோதரர்கள் முடிவெடுத்த நாள். ஏன் கொழும்பில் மட்டும் முதலீடு செய்த தமது சொத்துக்களை சென்று பார்வையிடலாம் என்று புலிகளின் ஆதரவாளர்கள் முடிவு எடுத்த நாளும் இதே மே 18 தான். (மேலும்...)

ஆவணி, 07, 2010

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் ஓகஸ்ட் 11 இல் ஆரம்பம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்  நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைகுழுவின் முதலாவது அமர்வு எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இவ்வாணைக்குழுவின் பொதுமக்களுக்கான அமர்வுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் 11, 12, 13, 17, 18, 23, 25 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளன. ஓகஸ்ட் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில்  பொதுமக்களுக்கான  அமர்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளது. பொதுமக்களில் எவரேனும்  இவ்வாணைக்குழுவிற்கு கருத்து தெரிவிக்க விரும்பினால் 011-2673408 தொலைபேசி மூலம் அல்லது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேச உறவுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம், இல 24,ஹோர்ட்டன் பிளேஸ், கொழும்பு 7 எனும் முகவரிக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம். மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான ஆசனங்களே இருப்பதால்,  முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணி, 07, 2010

 

புகலிடம் கோருவோர் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

புகலிடம் கோருவோரை நாட்டுக்குள் அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளது.  புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோல்வியுறச் செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்கள் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சிவிலியன்களைப் போன்று நாட்டுக்குள் ஊடுருவக் கூடுமென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் புகலிடம் கோரிச் செல்வோரின் தொகை அதிகரித்து வருவதால், பாதுகாப்புச் செயலாளர் சர்வதேச சமூகத்திற்கு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.(மேலும்....)

ஆவணி, 07, 2010

 

வன்னியில் 1500 ஏக்கரில் வாழைப் பயிர்ச் செய்கை

வன்னி மாவட்டத்தில் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் வாழைப் பயிர்ச்செய்கையை முன்னெடுக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கைத்தொழில், வாணிப அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார். மன்னார் பரப்புகடந்தான், வவுனியா மெனிக்பாம், முசலியின் கொட்டச்சி ஆகிய பகுதிகளில் தலா 500 ஏக்கரில் மேற்படி வாழைப் பயிர்ச் செய்கையை மேற் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இம் மூன்று பகுதிகளிலும் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக் கைகளுக்கென தொழிற்சாலைகளும் நிறுவப்படவுள்ளன. அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் மேற்படி திட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. (மேலும்....)

ஆவணி, 07, 2010

 

விவசாயக் கடனும் விற்பனை வசதியும்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரதான சீவனோபாயம் விவ சாயமும் மீன்பிடியுமாகும். விவசாயத்தில் ஈடுபடுபவர் களுக்கு அரசாங்கம் இலகு கடன் வசதி செய்து கொடுப்பதைச் சாதாரண விடயமாகக் கருதக்கூடாது. விவசாயம் சிறக்கும்போது விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேலோங்கும். இரண்டு மாகாணங்களிலும் பெரு ம்பான்மையானோர் விவசாயிகளாக இருப்பதால் ஒட்டு மொத்தமாக அம்மாகாணங்களில் பணப்புழக்கம் அதி கரிப்பதற்கு இக்கடனுதவி வழி சமைக்கின்றது. இரண்டு மாகாணங்களிலும் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை விற்பதற்கான வசதிகள் இருக்கும் பட் சத்திலேயே அரசாங்கம் வழங்கும் கடன் மூலம் விவ சாயிகள் முழுமையான பலனை அடைய முடியும். (மேலும்....)

ஆவணி, 07, 2010

மட்டக்களப்பில் மங்களராமய விகாராதிபதியின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

மட்டக்களப்பு நகரில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து வந்த மங்களராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் இன்று வெள்ளிக்கிழமை மாலை தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். புத்தசாசன பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன இன்று மாலை உண்ணாவிரதமிருந்த தேரோரை நேரடியாக சந்தித்து வழங்கிய உறுதி மொழியை அடுத்தே உண்ணாவிரதத்தை அவர் நிறைவு செய்தார். அம்பிட்டிய சுமனரத்தின தேரர் முன்வைத்த ஏழு அம்சக் கோரிக்கைகளையும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நிறை வேற்றித்தருவதாக பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன தேரருக்கு இதன் போது உறுதிமொழி வழங்கினார். இதேவேளை, அடுத்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தேரர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 

ஆவணி, 07, 2010

மடு மாதாவின் ஆவணித்திருவிழா ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க மடுமாதாவின் ஆவணித் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கின்றன. யுத்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு நடைபெறுகின்ற திருவிழா என்பதால் பெருமளவான கூட்டம் அலை மோதுகின்றது. நேற்றை தினம் நாங்கள் மடு மாதா ஆலயத்துக்கு விஜயம் செய்தபோது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு ஒன்று கூடியிருந்தனர். நேற்று காலை ஆராதனையுடன் ஆரம்பமாகிய திருவிழா தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். பத்தாவது நாள் மடுமாதாவின் திருவுருவப் பவணி இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் தாமாகவே முன்வந்து அடியார்களுக்கு உதவிசெய்கிறார்கள். எங்களுடன் எப்பொழுதும் பாதுகாப்புத் தரப்பினர் இருப்பதால் எந்தப் பிரச்சினையும் எமக்கு இல்லை. ஆகையினால் இம்முறை இந்தத் திருவிழாவிற்கு இன்னும் அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. அப்படி வருகின்ற யாத்திரிகர்களுக்கு உரிய சௌகர்யங்களை எங்களுடன் இணைந்து பாதுகாப்புத் தரப்பினர் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். (மேலும்....)

ஆவணி, 07, 2010

 

ஈராக்கில் அமெரிக்கா செய்த பெரும் தவறை திருத்தும் வரை படைகளை வாபஸ் பெறக்கூடாது

ஈராக்கை ஆகிரமித்து தவறு செய்த அமெரிக்கா அத்தவறை திருத்தும் வரை ஈராக்கிலிருந்து வெளியேறக் கூடாது என ஈராக்கின் முன்னாள் பிரதமர் தாரிக் அஸிஸ் தெரிவித்தார். பிரிட்டனின் குவார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலே தாரிக் அஸிஸ் இக்கருத்தை வெளியிட்டார். அமெரிக்காவும், பிரிட்டனும் எங்களைப் பல வழிகளில் கொலை செய்கின்றனர். 2003 இல் ஈராக்கை ஆக்கிரமித்து மிகப்பெரியதவறுகளைச் செய்துள்ளது. இதனால் இங்கு வன்முறைகள் தாண்டவமாடுகின்றன. இதை முற்றாக நிறுத்தி அமைதியை ஏற்படுத்தாமல் இடையில் படைகளை வாபஸ் வாங்கக்கூடாது. அமைதியேற்படும் வரை அமெரிக்கப் படைகள் இங்கு தங்கியிருக்க வேண்டுமென்றும் ஈராக்கின் முன்னாள் பிரதமர் தாரிக் அஸிஸ் பிரிட்டன் பத்திரிகைக்குத் தெரிவித்தார். (மேலும்....)

ஆவணி, 07, 2010

சோமாலியக் கடற்பரப்பில் கப்பல் கடத்தல்

23 சிப்பந்திகள் கடற்கொள்ளையர் வசம்

ஏடன் குடாவில் வைத்து சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கப்பலொன்று கடத்தப்பட்டது. இதிலிருந்த 24 கப்பல் சிப்பந்திகளும் கடத்திச் செல்லப்பட்டனர். இவர்கள் சிரியா, எகிப்து நாடுகளைச் சேர்ந்தோர். இந்த வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது கப்பல் கடத்தல் சம்பவம் இதுவாகும். சிரியாவின் கொடியுடன் இக்கப்பல் சென்று கொண்டிருந்த வேளை கடற் கொள்ளையர்களால் இக்கப்பல் கடத்தப்பட்டது. படகொன்றில் வந்த கொள்ளையர்கள் கப்பலில் ஏறி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததாக ஐரோப்பிய யூனியன் கடற் போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவின் பொறுப்பாளர் தெரிவித்தார். சென்ற வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. (மேலும்....)

ஆவணி, 06, 2010

அரசுடன்

நேற்று இணைந்த இருவருடன் மேலும் மூவர் விரைவில் சேர்வர்

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் தேவைப்படுகின்றன. தற்போது பாராளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 146 ஆசனங்கள்உள்ளன. நேற்றுடன் ஆளுங்கட்சியின் பலம் 148 ஆக அதிகரித்துள்ளது. அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள 225 எம்.பி.க்கள் கொண்ட சபையில் 151 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும். ஏற்கனவே உத்தியோகப்பற்றற்ற முறையில் மூன்று எதிரணி உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். அவர்கள் விரைவில் அரசுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.(மேலும்.....)

ஆவணி, 06, 2010

பொன்சேகாவுக்கு எதிராக 21 குற்றச்சாட்டுகள்

ஹைகோப் ஆயுத ஊழல் சம்பந்தமாக சரத்பொன்சேகா மீது 21 குற்றங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் முதலாவது பிரதிவாதியான சரத்பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ன பிரசன்னமாகாத நிலையிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்ப ட்டுள்ளது.  இதேவேளை இந்த வழக்கின் பிரதிவாதியான ஹைகோப் நிறுவனத்தின் பணிப்பாளரான வெலிங்டன் டேகொட் நேற்று மேல்நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார். இதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையை நீதிபதி சுனில் ராஜபக்ஷ எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். ஏற்கனவே இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த தமிbழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு படையினருக்கு அரசாங்கம் உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா ஆங்கில நாளிதளுக்குத் தெரிவித்ததாக கூறப்பட்ட தகவலுக்கு எதிரான வழக்கிலும் சரத் பொன்சேகாவுக்கு கடந்த 29 ஆம் திகதி குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.

ஆவணி, 06, 2010

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு போட்டியாக சிரஞ்சீவியின் ஆதரவை பெற்றுக்கொண்ட காங்கிரஸ்

ஜெகன் மோகன் ரெட்டியால் சட்டசபையில் காங்கிரஸ் பெரும்பான்மை இழக்கும் பட்சத்தில் பிரஜா ராஜ்யம் கட்சி(பி.ஆர்.பி.) காங்கிரஸை ஆதரிக்கும் என அக்கட்சித் தலைவர் சிரஞ்சீவி அறிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சி ஜெகனை நம்பி இல்லை என அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் தலைமை தெரியப்படுத்தியுள்ளது. தற்போது ஆந்திர சட்டசபையில் மொத்தமுள்ள 294 உறுப்பினர்களில் காங்கிரஸுக்கு பெரும்பான்மையாக 156 உறுப்பினர்கள் உள்ளனர். சிரஞ்சீவிக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால் சிரஞ்சீவியின் ஆதரவு காங்கிரஸுக்குப் பேருதவியாக அமையும்.அதோடு ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மஜ்லிஸ் கட்சி மற்றும் வேறு சில சுயேச்சைகளின் ஆதரவும் கிட்டும் என காங்கிரஸ் கணக்குப்போட்டு வருகிறது. (மேலும்.....)

ஆவணி, 06, 2010

அமெரிக்க ஆக்கிரமிப்பால் சீர்குலைந்து கிடக்கும் ஈராக் 

மார்ச் 19, 2003 அன்று ஈராக்கில் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்ட அமெரிக்க ராணுவம் இதுவரை 4 ஆயிரத்து 403 பேரை இழந்துள்ளது.. அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரத்தின்படியே இவ்வளவு அதிகமான அளவில் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த விபரமும் ஜூலை 3 ஆம் தேதி வரையிலான புள்ளிவிபரமாகும். இதில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 109 பெண்களும் அடங்குவார்கள். அங்கிருந்து வெளியேறி விடுவோம் என்று அமெரிக்க அரசு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலும், நிரந்தரமாக முகாம் போடுவற்கான ஏற்பாடுகளில்தான் கவனம் செலுத்துகிறது. பெரும் இழப்புகளையும் மீறித்தான் இவை நடைபெறுகின்றன. (மேலும்....)

ஆவணி, 06, 2010

கிழக்கு விகாரைகளை புனரமைக்கக்கோரி

மட்டக்களப்பு, அம்பாறை சங்கநாயக்கர் மட்டக்களப்பில் சாகும்வரை உண்ணாவிரதம்

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பெளத்த விகாரைகளையும், மட்டக்களப்பு நகரிலுள்ள மங்கள ராமய பெளத்த விகாரையையும் புனரமைத்து தருமாறு கேட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்கநாயக்கரும் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் நேற்று மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணா விரதமொன்றை ஆரம்பித்தார். மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றுக் காலை 6 மணிக்கு சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை இவர் ஆரம்பித்தார். பெளத்த மத வழிபாட்டுடன் கட்டில் ஒன்றின் மேல் இருந்து, சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை இவர் ஆரம்பித்தார். மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய பெளத்த விகாரையை புனரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தும் ஆனால் இதுவரை இவ்விகாரை புனரமைக்கப்படவில்லை.

ஆவணி, 06, 2010

சீனாவிற்கு பொருளாதாரத் தடை அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானுடன் தொடர்ந்தும் உறவுகளைப் பேணினால் சீனா மீதும் தடைகள் கொண்டுவரப்படும் என அமெரிக்கா தெரிவித்தது. இதைப் பொருட்படுத்தாத சீனா வர்த்தக நோக்கிலான எமது ஈரானின் உறவு எவரையும் பாதிக்க மாட்டாதெனத் தெரிவித்தது. ஐ. நா. வின் செயற்பாடுகளை சீனா மதிக்க வேண்டும். வடகொரியா, ஈரானுடனான உறவுகளை சீனா துண்டிக்க வேண்டும், இல்லாவிட்டால் ஐ. நா. வின் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்காவின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த சீனாவின் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் ஈரானுடனான சீனாவின் உறவுகள் சாதாரண வர்த்தக நோக்கம் கொண்டவை.(மேலும்....)

ஆவணி, 06, 2010

கேபி யின் எசமான் கூறுகின்றான்

கே.பி.யின் கைது புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு விழுந்த அடி

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) கைது செய்யப்பட்டமையானது அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்புக்கு விழுந்த பேரடி என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது. 2009ஆம் ஆண்டின் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்று குறித்த இராஜாங்க திணைக்களத்தினால் நேற்று அமெரிக்கா காங்கிரஸிடம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்படி விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்களிடமிருந்து குறித்த வலையமைப்பு தொடர்ந்தும் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்...)

ஆவணி, 06, 2010

பதட்டத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா

கடல் எல்லை அருகே தென்கொரியா கடற்படை பயிற்சி

வடகொரியாவுக்கும், தென்கொரி யாவுக்கும் இடையே சுமார் 60 ஆண்டுகளாக கடல் எல்லை தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய கடல் எல்லை அருகே, இன்று முதல் 5 நாட்க ளுக்கு கடற்படை பயிற்சியில் ஈடு படப் போவதாக தென்கொரியா அறிவித்துள்ளது. கடல் எல்லை அருகே பயிற்சியில் ஈடுபட்டால், தென்கொரியாவுக்கு கடுமையான பதிலடி தருவோம் என்றும் வடகொரிய இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது. இதற்கு தென்கொரியா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று வடகொரியாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் தேவையற்ற இராணுவப் பதட்டத்தை அமெரிக்கா ஏற்படுத்துகின்றது. ஈராக்கில் முஸ்லீம் மதப்பிரிவினரிடையே ஒற்றுமையைக் குழப்பி ஓர் பதட்ட நிலமைகளை தோற்றுவித்த நிலையில் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அமெரிக்க அரசு தற்போது ஈரான், வடகொரியா, சீனா என தனது குழப்பல் வேலைகளுக்கு தூபமிட்டு வருவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆவணி, 06, 2010

உலக அமைதியை நேசித்து அணு ஆயுத யுத்தமேற்படுவதை தடுத்து நிறுத்துங்கள - பிடல் காஸ்ரோ

அமைதியைக் கொண்டுவருவதற்கான உண்மையான மாற்றங்கள் உங்கள் (ஒபாமா) கைகளிலுள்ளதென்பது உங்களுக்கும் தெரியும் என்று கியுபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ இணையத்தள செய்தியில் தெரிவித்துள்ளார். இதற்கான பதில் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கமாட்டாது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் இதைப் பற்றிச் சிந்தியுங்கள் என்று ஒபாமாவை கேட்டுள்ளார். ஒவ்வொரு நாடுகளும் உங்களின் கைகளிலுள்ளது இருப்பினும் உங்களுடைய மிக மோசமான எதிரியும் வலது அல்லது இடது இறக்கையில் உள்ளனர் என்றார். (மேலும்....)

ஆவணி, 06, 2010

மலேசியா வரும் இந்தியர்களுக்கு கடுமையான விஸா நடைமுறை

மலேசியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் பலர், விசா காலம் முடிந்த பின்னும் சட்ட விரோதமாக அங்கு தங்கியிருப்பதை தடுக்கும் வகையில், விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை மலேசிய அரசு விதித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள “வி.ஒ.ஏ. முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் செல்லும் பலர், தங்களது விசா காலம் முடிந்த பின்னும் தொடர்ந்து அங்கு தங்கி விடுகின்றனர். சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வந்த 40 ஆயிரம் பேர், அங்கேயே தொடர்ந்து தங்கி விட்டதாகவும், அவர்களை தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினையை தடுக்க, இந்தியர்களுக்கான சுற்றுலு¡ விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. (மேலும்....)

ஆவணி, 06, 2010

Centre urged to send MPs' team to Sri Lanka

The CPI (M) on Thursday urged the Central government to send a delegation of Members of Parliament, representing all political parties, to Sri Lanka to study the situation and facilitate quick rehabilitation of Tamils who had suffered in the civil war. Talking to reporters, State secretary of the party G. Ramakrishnan welcomed the Centre's decision to send a senior official of the Ministry of External Affairs to Sri Lanka, but felt that the issue should be dealt with politically. (more...)

ஆவணி, 06, 2010

கொழும்புக்கும் கண்டிக்குமிடையில் அதிவேக உயர் நெடுஞ்சாலை

கொழும்புக்கும் கண்டிக்குமிடையில் அதிவேக உயர் நெடுஞ்சாலையொன்றை (Elevated Highway) அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இரு கட்டங்களாக மேற்கொள்ளப் படவுள்ள இந்த ஆறு வழி நெடுஞ் சாலையை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெறுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் வசந்த கரன்னாகொட தெரிவித்தார். முதற்கட்ட பணிகள் அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்குள் கடவத் தைக்கும் அம்பேபுஸ் ஸவுக்கும் இடையில் பூர்த்தி செய்யப்படும். இரண்டாம் கட்டம் அம்பேபுஸ்ஸ வுக்கும் கண்டிக்குமிடையில் பூர்த்தி செய்யப்படும். உயர் நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட தும் கொழும்பிலிருந்து 45 நிமிடங்களில் கண்டிக்குச் சென்றுவிடலாம் எனச் செயலாளர் கரன்னாகொட கூறினார். இந்த நெடுஞ்சாலை நிர்மாணத்தின்போது சொத்துகளுக்குச் சேதம் ஏற்படாதவாறு மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

ஆவணி, 06, 2010

கே. பி. பற்றிய தகவல்களை வெளியிடுவது உகந்ததல்ல

கே. பி. தொடர்பான விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது. பொருத்தமான சந்தர்ப்பத்தில் கே. பி. பற்றிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுமென சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கடந்த வருடம் பாங்கொக் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்ட எல். ரீ.ரீ.ஈ. தலைவர்களில் ஒருவறான கே. பி. எனப்படும் பத்மநாதன் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு கோரி ஜனநாயக தேசிய முன்னணி பாராளுமன்ற குழு தலைவர் அநுர குமார திசாநாயக்க கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றை முன்வைத்தார். (மேலும்....)

ஆவணி, 06, 2010

Don't go off the VERY deep end... Infinity pool 55 STOREYS above ground opens in Singapore in dazzling new £4bn resort

If you fancy a dip in this pool, you'll need a head for heights - it's 55 storeys up. But swimming to the edge won't be quite as risky as it looks. While the water in the infinity pool seems to end in a sheer drop, it actually spills into a catchment area where it is pumped back into the main pool. At three times the length of an Olympic pool and 650ft up, it is the largest outdoor pool in the world at that height. It features in the impressive, boat-shaped 'SkyPark' perched atop the three towers that make up the world's most expensive hotel, the £4billion Marina Bay Sands development in Singapore. (more...)

ஆவணி, 05, 2010

அரசாங்கத்தின் பலம்  மூன்றில் இரண்டை அண்மிக்கின்றது?

பிரபா கணேசன், திகாம்பரம் நாடாளுமன்ற அரசாங்க வரிசையில் அமர்ந்தனர்

ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் ஆகிய இருவரும் இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்க வரிசையில் அமர்ந்து கொண்டனர். இவ்விரு  எம்.பி,களும் இன்று காலை அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த போது எடுக்கப்பட்ட படத்தை காணலாம். அரசாங்கத்தின் பலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டை அணுகுகின்றது. இன்னும் சில தினங்களில் ஐதே கட்சியின் எம்பி காதரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பிகள் சிலரும்  அரசில் உத்தியோகபூர்வமாக இணையலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

ஆவணி, 05, 2010

விமர்சன அரசியல் பிரச்சினையைத் தீர்க்காது

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை வெற் றிகரமாக முடிவடைந்த நிலையில் தமிழ் அரசி யல் தலைவர்களுக்கு முன்னாலுள்ள பொறுப்பு முக் கியமானது. இராணுவ நடவடிக்கையினால் மாத்திரமன் றிப் புலிகளின் மூன்று தசாப்த கால செயற்பாடுகளினா லும் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பாதிப்புக்கு உள்ளாகினர். தமிழ் பேசும் மக்களே இவர்களில் கூடுத லான பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். தமிழ் பேசும் மக்களின் வாழ்வு சுமுக நிலைக்குத் திரும்பு வதில் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின் றன. ஒன்று மீள்குடியேற்றம். மற்றது அதி உயர் பாது காப்பு வலயங்கள் அகற்றப்படுவது. இரண்டும் ஒரு நாளிலோ அல்லது ஓரிரு மாதங்களிலோ முழுமையாகச் செய்து முடிக்க முடியாதவை. (மேலும்...)

ஆவணி, 05, 2010

60ல் வாழ்க்கையைத் துவங்கலாம்

வாழ்க்கை 60 வயதிலும் துவங்கலாம். ஆனால் அத்தகைய அருமையான வாழ்க்கை உங்கள் கைகளில்தான் உள்ளது. உடல் ஆரோக்கியம் காரணமாக வும், பாதுகாப்பின் மை காரணமாகவும் பலர் மகிழ்ச்சியற்ற நிலை யில் இருப்பார்கள். 60 வயதுக்கு பின்னர், அவர்களது கருத்துக்கு முக்கியத்துவம் தருவது குறையும். இதைப்பற்றி வயதானவர் கள், கவலைப்பட்டு சந்தோசமான வாழ்க்கை யை இழக்கக்கூடாது. வயதானவர்கள், தங்க ளுக்கு வயதாகிவிட்டது என எப்போதும் கூறக்கூடாது. உடல் நல ஆரோக்கியத்தை உறுதியான நிலையில் வைத்திருக்க வேண் டும். அதற்கு முறையான உணவு வகைகள், உடற்பயிற்சி, மகிழ்ச்சிகரமான செயல்களில் ஈடுபடுத்திக்கொள்ளுதல் என இருக்க வேண் டும். (மேலும்...)

ஆவணி, 05, 2010

இரு விமானங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி

இலங்கையில் உள்ளூர் விமான சேவையை ஆரம்பிப்பதற்காக சீனாவிலிருந்து இரண்டு விமானங்கள் தருவிக்கப்படவுள்ளன. 56 பயணிகள் இருக்கைகளுடன் கூடிய எம். ஏ. 60 ரக சீன பயணிகள் விமானங்களைத் தருவிப்பது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது. சீன அரசின் சார்பில் சீன தேசிய விமான தொழில்நுட்ப மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் பணிப்பாளர் (ஆசிய பிராந்தியம்) திரு. லூயி, இலங்கை அரசின் சார்பாக துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. வி.பி. ரஞ்ஜித் த. சில்வா ஆகியோர் கைச்சாத்திட்டனர். மேற்படி இரு விமானங்களும் இன்னும் மூன்று மாதத்துள் இலங்கைக்கு கொண்டுவரப் படவுள்ளது என பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஆவணி, 05, 2010

இஸ்ரேல் - லெபனான் இராணுவத்திடையே மோதல் எல்லையில் பெரும் பதற்றம்

இஸ்ரேல் இராணுவத்திற்கும் லெபனான் ஹிஸ்புல்லாவுக்குமிடையே செவ்வாய்க் கிழமை கடும் மோதல்கள் நடந்தன. இஸ்ரேல் லெபனான் எல்கலைகளில் நடந்த இம் மோதலால் அப்பிராந்தியத்தில் பெரும் பதற்றமேற்பட்டது. 2006ம் ஆண்டு இங்கு இடம்பெற்ற மிக மோசமான சண்டையை யடுத்து நடந்த பாரிய சம்பவம் இதுவாகும். இம் மோதலில் மூன்று லெபனான் படையினரும் ஒரு இஸ்ரேல் வீரரும் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். ஐ.நா., அமெரிக்கா என்பன இருதரப் பாரையும் அமைதியாக இருக்கும்படி அவசர வேண்டுகோள் விடுத்தது. (மேலும்...)

ஆவணி, 05, 2010

Ball Back Again in TNA’s Court

(N. Sathiyamoorthy)

Today, the TNA may be threatened with the possibility of the ‘credibility’ card becoming unsold if a moderate leader like S C Chandrahasan were to take the Tamil Parties Forum seriously. He is being seen in the company of other leaders of the Forum in what is turning out to be a regular meeting of theirs. Sooner than later the Forum will have to show up a road-map, as demanded by the TNA, if it has to sound serious. If they could act imaginatively on that front, and also capture the imagination of the Sri Lankan Tamil community, particularly in the North, then they may not need the TNA, either. The TNA has nothing to lose from joining hands with the other parties of the Tamil-speaking people. They add numbers and value to the voice of the Tamil-speaking people, as the Government approaches constitutional reforms in the company of the rest of the Sinhala polity, particularly the UNP Opposition. It had hedged President Mahinda Rajapaksa’s invitation for talks for long, both when the LTTE was around and otherwise, but is now on board, anyway. (more....)

ஆவணி, 05, 2010

அம்பாந்தோட்டை விமான நிலையம் 2012 இல் செயற்பட ஆரம்பிக்கும்

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அம்பாந்தோட்டையில் மத்தல என்ற இடத்தில் 2012 ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் செயற்பட ஆரம்பிக்கும் என்று விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் பிரசன்ன ஜே. விக்ரமசூரிய கூறியுள்ளார். விமான நிலையத்தின் முதற்கட்ட நிர்மாண பணிகள் முடிவுற்றதும் மத்தல விமான நிலையத்தில் 2012 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முதலாவது விமானம் வந்து இறங்கும். இதன் மூலம் இலங்கையின் நீண்ட கால தேவையான இரண்டாவது சர்வதேச விமான நிலையம் நனவாகும்(மேலும்...)

ஆவணி, 05, 2010

ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகள் ஓகஸ்ட் 31க்குள் முற்றாக வாபஸ்

ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளை இம்மாதம் 31ம் திகதிக்குள் வாபஸ்பெறப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். ஜோர்ஜியா மாநிலத்தில் முக்கிய அரசியல்வாதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே பராக் ஒபாமா இதைத் தெரிவித் தார். ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகள் இம்மாதம் ஆகஸ்ட் 31ல் வாபஸ்பெறப்படும். மீதமாகவுள்ள சில படையினர் 2011 செப்டம்பர் வரைக்கும் ஈராக் இராணுவத்துக்கு ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு கடமையாற்றவுள்ளார். இவர் கள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்றும் ஒபாமா தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஈராக் அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்துள்ளது.(மேலும்...)

ஆவணி, 05, 2010

உங்கள் குழந்தைகள் சொல்வதைக் கேளுங்கள்!

குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் எல்லாமே. இதனாலேயே அவர்கள் மீதான நம்பிக்கையும் அன்பும் மிக அதிகம். உண்மையில் பெற்றோரைவிடக் குழந்தைகள் அவர்கள் மீது காட்டும் அன்பு மிக அதிகம். எந்த நிலையிலும் தன் அம்மாவோ அப்பா துன்புற, தான் காரணமாகி விடக்கூடாது என்ற பய உணர்ச்சி அவர்களிடம் உண்டு. விவாகரத்தின் போதோ இல்லை அம்மாவும் அப்பாவும் விவாதங்கள் செய்யும் போதோ இதற்குத்தான் காரணமாகி விடக் கூடாது என்ற பயமும் அதனால் அவர்களை மகிழ்விக்க செய்யும் சின்ன சின்ன செயல்களிலும் இதை புரிந்து கொள்ளலாம். (மேலும்...)

ஆவணி, 04, 2010

கூட்டமைப்பினர் பழைய கதையை பேசுகிறார்கள் - கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் _

பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவருவதைப்போல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தலைகீழாக நின்றாலும் இணைக்கப்படப் போவதில்லை. அவ்வாறு இணைப்பதாக இருந்தாலும் கிழக்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடந்தால் முஸ்லிம்களும் சிங்களவர்களும் எதிர்த்துத்தான் வாக்களிப்பார்கள். முஸ்லிம்களுடன் பேசிவருகிறோம் என்று கூட்டமைப்பு கூறுகிறது. கல்முனை நகர சபையில் பெரும்பான்மையான ஆதிக்கம் முஸ்லிம் காங்கிரஸிடமும் கூட்டமைப்பிடமும் உள்ளன. அங்கு ஏற்பட்ட வர்த்தக நிலையத் தகராறைக்கூட அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. (மேலும்...)

ஆவணி, 04, 2010

கொழும்பு பிரதேசத்திலுள்ள புலிகளின் சொத்துக்களை சுவிகரிக்க அரசு முடிவு

கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் புலிகள் இயக்கம் அமைத்துவரும் வீடுகள் வியாபார நிலையங்கள் காணிகள் மற்றும் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் என்பவற்றை அரசாங்கம் சுவிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன கூறினார். கடந்த ஒரு மாத காலத்தில் இடம்பெயர்ந்த முகாம்களில் இருந்த 723 புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். அவசர கால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். (மேலும்...)

ஆவணி, 04, 2010

திருமலை நகரசபையின் மேலும் இரு அங்கத்தவர்கள் த.தே.கூட்டமைப்பிலிருந்து நீக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை நகரசபையின் மேலும் இரு அங்கத்தவர்களையும் தனது கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. ரி.கந்தரூபன் ஆர்.கண்மணி அம்மா ஆகியோரே நீக்கப்பட்டவர்களாவர்.  இத்தீர்மானம் குறித்து தமிழ்;த்தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா  அவ்விருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதுடன் தேர்தல்கள் ஆணையாளருக்கும் அறிவித்துள்ளார். கடந்த வாரம் திருகோணமலை நகரசபையின் தலைவர் எஸ். கௌரி முகுந்தனை கட்சிலியிருந்து நீக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது. நகர சபை அங்கத்தவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களின் இடத்திற்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதனாலேயே இவர்கள் நீக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. இனி கேள்வி கேட்காதவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியமிக்க இருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆவணி, 04, 2010

அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து குருநகர் நீக்கம் _

யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு செயலகத்தின் மத்திய நிலையம் நேற்று அறிவித்துள்ளது. குருநகர் பிரதேசத்தில் உயர்பாதுகாப்பு எல்லை நீக்கப்பட்டுள்ளதால் இங்கு மக்கள் மீண்டும் சுதந்திரமாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என பதில் பாதுகாப்பு அதிகாரி கேர்ணல் துமின்த கமகே தெரிவித்தார். மேஜர் ஜெனரல் மகிந்த ஹதுருசிங்க உயர் பாதுகாப்பு வலயத்தை சம்பிரதாய பூர்வமாக நீக்கி வைத்தார். இப்பிரதேசத்தில் நலன்புரி நிலையங்களில் உள்ள 96 குடும்பங்கள் அரசாங்கத்தால் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். குருநகர் பிரதேசத்தை 1995 ஆம் ஆண்டு முதல் 15 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப் பிரதேசம் யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய மீன்பிடி பகுதியாகும். இப்பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது ஐதேகட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஓலைத் தொப்பி அணிந்தவாறு இராணுவத்துடன் இணைந்து மேர்ப்பார்வை செய்தது பிரசித்திபெற்ற நிகழ்வாகும். இதற்கான புகைப்படங்கள் அன்றைய காலகட்டத்தில் பத்திரிகைகளில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆவணி, 04, 2010

ஊழியரை மரத்தில் கட்டி வைத்த

மேர்வின் சில்வாவின் நடவடிக்கை குறித்து கருத்துகூற ஐ.ம.சு.மு. மறுப்பு

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்குபற்றாத சமுர்த்தி ஊழியர் உத்தியோகஸ்தர் ஒருவரை பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டிவைத்தமை அரசாங்கத்தினதோ ஐ.ம.சு.முன்னணியினதோ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என ஐ.ம.சு.மு. பொதுச்செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். "அது முற்றிலும் அவரின் சொந்த நடத்தையாகும் அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை. அதனால் அது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை" என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளதுடன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆராய்கின்றனர்.

ஆவணி, 04, 2010

கொலை முயற்சியிலிருந்து ஈரானிய ஜனாதிபதி தப்பினார்

ஈரானிய ஜனாதிபதி அஹ்மடிநெஜாத் கொலை முயற்சியொன்றிலிருந்து தப்பியுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் சற்று முன் செய்தி வெளியிட்டன.  ஈரானின் மேற்குப்பிராந்திய நகரான ஹம்டானில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி அஹ்மடிநெஜாத் கலந்துகொள்ளச் சென்றபோது அவரின் வாகனத் தொடரணி மீது குண்டொன்று எறியப்பட்டதாக துபாயைத் தளமாகக் கொண்ட "அல் அரேபியா" தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அவர் காயம் எதுவுமின்றி தப்பியதுடன் திட்டமிட்டபடி கால்பந்தாட்ட அரங்கொன்றில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ஈரானிய அரச தொலைக்காட்சியான பிரஸ் ரி.வி. இத்தாக்குதல் செய்தியை நிராகரித்துள்ளது. ஆனால் ஜனாதிபதியின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை ஏற்றிச்சென்ற கார் ஒன்று தாக்குதலுக்குள்ளானதாகவும் இத்தாக்குதலில் சிலர் காயமடைந்ததாகவும் அல் அரேபியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

 

ஆவணி, 04, 2010

வட பிரதேச வளர்ச்சியின் ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அச்சுவேலியில் நான்கு ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன. ஒவ்வொரு தொழிற்சாலையும் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிறுவப்படவுள்ளது. இத் தொழிற்சாலைகளில் நாலாயிரம் பேர் வரையில் வேலைவாய்ப்புப் பெறுவர்.  ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் கூட்டாக ஆட்சி செய்த காலத்தில் அச்சுவேலியில் ஒரு தொழிற்பேட்டை ஆரம்பிக்கப் பட்டது. அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத காரணத்தால் அத்தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடுவிழா கண்டன. (மேலும்...)

ஆவணி, 04, 2010

வடக்கு கிழக்கில் வாழ்ந்த சிங்கள மக்களை மீளக்குடியேற்றுவோம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னர் வாழந்த சிங்கள மக்கள் தற்போது மீணடும் அப்பகுதிகளில் குடியேறுவதை தடுக்க முடியாது.“வடக்கில் கிழக்கில் சிங்கள மக்களும் வாழ்ந்துள்ளனர். அவர்களிடம் அதற்கான காணி உறுதிப் பத்திரங்களும் உண்டு. யுத்த காலப் பகுதியில் அவர்கள் சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் மூவின மக்களும் வாழ்வதற்கான உரிமையுண்டு. கல்குடா போன்ற பிரதேசங்களில் சிங்கள மக்களும் முல்லை தீவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உண்டு. (மேலும்...)
 

ஆவணி, 04, 2010

உலக பிரச்சினைக்கு யாரிடம் தீர்வு?

அமெரிக்காவை விவாதத்துக்கு அழைக்கிறது ஈரான்

உலக பிரச்சினைக்கு யாரிடம் தீர்வுண்டென்பதை விவாதிக்க நேருக்கு நேரான தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஈரானுக்கு எதிரான நான்காவது பொருளாதாரத் தடை ஐ.ந.வில் நிறைவேற் றப்பட்டது. அமெரிக்காவும், பிரிட்டனும் இத்தடையைக் கொண்டு வரக் கடுமையாக முயன்றன. இதையடுத்து இவ்விரு நாடுகளுடனும் ஈரான் கடுமையாக நடந்து கொள்கின்றது. இதற்கு முன்னர் பிரிட்டனின் அச்சு சாதனப் பொருட்களை ஈரான் தடைசெய்தது. பின்னர் அமெரிக்காவை நேரடி விவா தத்துக்கு வரு மாறு அழைப்பு விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷையும் இவ் வாறான நேரடி விவாதத்துக்கு ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். (மேலும்...)

ஆவணி, 04, 2010

அறுவை சிகிச்சையில் நனோ ரோபோ

சவாலான அறுவைச் சிகிச்சைகளில் பயன்படும் புதுமையான நனோ ரோபோ தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலந்தி வடிவில் இந்த ரோபோ உள்ளது. மனிதனின் தலைமுடியின் தடிப்பத்தை விட ஒரு லட்சம் மடங்கு சிறியது. இந்த ரோபோ சிலந்தியாகும். கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலந்தி ரோபோவை உருவாக்கியுள்ளனர். உடலின் ஒவ்வொரு கலத்திலும் இரட்டைச் சுருள் ஏணி வடிவம் கொண்ட R.N.A  மூலக்கூறுகள் இருக்கின்றன. நோய் ஏற்படும் போது  R.N.A  க்களில் பாதிப்பு ஏற்படும். இந்த நனோ ரோபோவானது R.N.A  ஏணிச் சுருளில் இணைக்கப்பட்டு அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நோயால் பிளவுபடும்  R.N.A  ஏணிச்சுருளில் இணைப்பு ஏற்படுத்தும் வேலையை இந்த ரோபோ செய்யும். ஆனால் இந்த ரோபோவால் ஏணிச் சுருளை துண்டாட முடியாது. அதே நேரத்தில் நோய்த் தொற்றுள்ள கலங்களை அழிக்க இதைப் பயன்படுத்த முடியும்.

ஆவணி, 04, 2010

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல் 2012ல்

செல்வாக்கானவரை நிறுத்த கிரெம்ளின் விருப்பம்


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக நான் இதுவரைக்கும் எவ் வித முடிவையும் எடுக்கவில்லையென ரஷ்ய ஜனாதிபதி மெத்விடிவ் தெரிவித்தார். இவர் பதவியேற்று சென்ற மே மாதத்துடன் இரண்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. 2012ல் ஜனாதி பதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது பிரதமராக வுள்ள விளாதிமிர் புட்டின் போட்டி யிடுவாரா அல்லது ஜனாதிபதியாகவுள்ள மெத்விடிவ் போட்டியிடுவாரா என்ற எதிர் பார்ப்புகள் ரஷ்யாவில் அதிகரித் துள்ளன. (மேலும்...)

ஆவணி, 04, 2010

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

(நந்தினி ஹரிகுமார்)

எந்திரமயமான பொருளாதாரத்தை மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்துவிட்ட வாழ்க்கைச் சூழலில் எங்கெங்கு காணினும் போட்டிகள், பொறாமைகள், அருவருக்கத்தக்க சூழ்ச்சிகள் தான் தெரிகின்றன. மனித வாழ்க்கை ஒரு நாளில் உள்ள 24 மணி நேரமும் அதிக பட்ச விழிப்புணர்வுடன் இருந்தால்தான் வாழ்க்கைப் போராட்டத்தைச் சமாளிக்க முடியும் என்ற சூழல். உளவியில் ரீதியாகப் பல முக்கிய காரணங்கள் இருந்தாலும் உறக்கம் வராததற்கு உடலியல் ரீதியாகச் சில பிரச்சினைகள் இருக்கலாம். மூளை மற்றும் நரம்புகள் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு, இதயம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்களுக்கு உடலில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் உறக்கம் பாதிக்கப்படலாம். (மேலும்...)

ஆவணி, 04, 2010

(மேலும்...)

GO TO CANADA?

MEET NIKULUS FROM MARKHAM, ONTARIO 

(By Hasaka Ratnamalala - Mississauga, Ontario)

Another ship load of Tamil so called refugees, heading towards Canadian coast; this time more than a year after the end of Sri Lanka’s conflict. After more than 250,000 IDPs resettled, more than million land mines were cleared, hundreds of child soldiers and LTTE carders were rehabilitated, eastern province elections and general election were held and when a time the country is rapidly going into normalcy, this ship load of Tamils coming to claim refuge in Canada. (more....)

ஆவணி, 04, 2010

12 கோடி ரூபா

விமானத்தின் ஆசனம் ஒன்றின் கீழ் இருந்து வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் டுபாய்க்கு செல்ல ஆயுத்தமான நிலையிலிருந்த விமானத்தின் ஆசனம் ஒன்றின் கீழ் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு நாணயங்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட இந்த வெளிநாட்டு நாணயங்கள் 12 கோடி ரூபா பெறுமதியென தெரிவிக்கப்படுகிறது. காபன் கடதாசிகளால் கட்டப்பட்டு 10 பைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இந்த வெளிநாட்டு நாணயங்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. (மேலும்...)

ஆவணி, 04, 2010

உயர் பாதுகாப்பு வலயம்

குருநகர் ரெக்லமேஷன் பிரதேசம் மீள்குடியேற்றத்துக்காக ஒப்படைப்பு

 

உயர் பாதுகாப்பு வலயமாக சுமார் 15 வருடங்களாக கருதப்பட்ட யாழ். குருநகர் ரெக்லமேஷன் பகுதி பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். சுமார் 150 குடும்பங்கள் வசித்த மேற்படி பிரதேசத்தில் முதற் கட்டமாக 94 குடும்பங்கள் மீளக் குடியமர வருகை தந்திருந்தனர். மீளக் குடியமரும் அனைவருக்கும் உடனடி நிதியுதவியாக ஐந்தாயிரம் ரூபாவும் வீடுகளை புனர மைக்க சீமெந்து பக்கட்டுக்களும் வழங்கப்படுவதுடன் உலருணவுகளும் வழங்கப்பட்டன. மீளக் குடியமரும் மக்களுக்கு இரட்டை மண் அடுப்புக்களும் அடையாள அன்பளிப்பாக வழங்கப் பட்டன.(மேலும்...)

ஆவணி, 04, 2010

புதையல் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி அடுத்த ராயக் கோட்டை அருகே, ஏரியில் தூர்வா ரும் பணியின் போது பூமிக்கு அடி யில் பித்தளை செம்பில் இருந்த 11 வெள்ளி காசு கொண்ட புதையல் கண்டெடுக்கப்பட்டது. இங்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். ஏரியை ஆழப்படுத்தும் போது, பூமிக்கடியில் பித்தளைச் செம்பு கிடைத்தது. ஆர்வத்துடன் தொழிலாளர்கள் செம்பை திறந்து பார்த்தனர். அதில், இரண்டு சிறிய அரை ரூபாய் வெள்ளி காசுகளும், ஒன்பது ஒரு ரூபாய் பெரிய வெள்ளி காசு களும் இருந்தன. ஆச்சரியம் அடை ந்த மற்ற தொழிலாளர்களும் வெள்ளி காசுகளை வாங்கி பார்த்தனர். வெள்ளிக் காசில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் 1942ம் ஆண்டு மற் றும் ஆறாவது ஜார்ஜ் மன்னர் பெயர், அவரது உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பக்கத்தில் அரை ரூபாய் மற்றும் ரூபாய் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

ஆவணி, 03, 2010

காத்தான்குடியில் இன்று ஹர்த்தால்

1990 ஆம் ஆண்டு பள்ளிவாசல்களில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவு கூரும் முகமாக

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு பள்ளிவாசல்களில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவு கூரும் முகமாக 20ஆவது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில், இன்று காத்தான்குடி பிரதேசத்தில் முழுமையான துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதுடன், கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி காத்தான்குடியிலுள்ள மீரா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஹுஸைனியா பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது ஆயுததாரிகள் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் 325பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விகளுக்கு முக்கிய காரணியாக அமைந்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி, 03, 2010

எங்களை நாய்களே எனக் கூப்பிடுகிறார்கள் - தடுப்பக் காவலில் உள்ள புலிகள் தெரிவிப்பு.

துணுக்காய் வதைமுகாமில் புலிகள் எங்களை எங்கள் பிறப்பையும், எங்கள் தாயையும் இழிவுபடுத்தும் வார்த்தைகளை பாவித்துத்தான் கூப்பிட்டார்கள். - சமரன்

 இலங்கையில்சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் தடுப்பு முகாம்களில் தாங்கொணாச் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பி.பி.சி க்கு தொலைபேசி மூலமாகவும், கடிதம் மூலமாகவும் இத்தகவலைத் தெரிவித்துள்ளதாக பி.பி.சி அறிக்கை தெரிவித்துள்ளது. முன்னாள் புலிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படாமல், முகாம்களில் காவலர்கள் அவர்களை சித்திரவதை செய்து அடிப்பதாக அவ்வறிக்கையில் மேற்கொண்டு கூறப்பட்டுள்ளது. அதோடு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் என்ற பேரில் விடுவிக்கப்படும் முன்னாள் புலிகளிடமிருந்து லஞ்சம் கேட்கப்படுவதாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. (மேலும்...)

ஆவணி, 03, 2010

பொய்யான செய்திகளுக்கு நிராகரிப்பும் கடும் கண்டனமும் - சிறீ ரெலோ செயலாலாளர் நாயகம் திரு.உதயராசா

சிறீ ரெலோ அமைப்பின் மீது எந்தவொரு ஆதாரமுமற்ற குற்ற சாட்டுகளைச் சுமத்தியிருக்கும் இணையத்தளச் செய்திகளைக் கண்டிப்பதோடு, அவற்றை முற்றாக நிராகரிக்கிறோம். அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற கடத்தல் சம்பவத்திற்கும் எமது அமைப்பிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இப்படிப் பட்ட செயல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். மிக விரைவில் உண்மை நிலைப்பாடு வெளிவரும்போது, தவறான செய்திகளை வெளியிட்டு, மக்களையும் முட்டாளாக்கி, குற்றவாளிகளையும் மூடிமறைக்க முயலும் இந்த இணையத்தளங்களின் நோக்கம் என்ன?(மேலும்...)

ஆவணி, 03, 2010

K.P.” – Set To Be A State Witness

“We must start from scratch on northern development”

“No resurgence of LTTE in our lifetime”

“There was no deal: I did not control vast sums and give it to The Brothers”

The LTTE chief renditioned by Sri Lanka from Malaysia, has spoken from being under house arrest and declared that “in our lifetime, there will be no more armed struggle”. Speaking exclusively to The Sunday Leader on Tuesday, July 27, KP struck a conciliatory tone immediately.  It was clear that there was an implied and tacit agreement on the part of the government to allow KP some freedom not otherwise afforded to others who are captive. This tacit agreement manifested itself in many forms: the use of the internet, the use of a mobile telephone just for starters. KP confirmed that he had visited the Wanni and also the camps. He admitted to being “very sad” at the plight that innocent men women and children had to face as a result of the LTTE military defeat. (more....)

ஆவணி, 03, 2010

அச்சுவேலியில் நான்கு ஆடைத் தொழிற்சாலைகள்

யாழ்ப்பாணம், அச்சுவேலியில் 12 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நான்கு ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இதன் மூலம் வடக்கில் 4000 பேருக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியுமென பாரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார். இத்திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளதுடன் முதலீட்டுச் சபையின் தலைவர் நீர், மின்சாரத்துறை சார்ந்த உயரதிகாரிகள் முதலீடுகளை மேற்கொள்ளும் நான்கு முக்கிய நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். (மேலும்...)

ஆவணி, 03, 2010

புலிகள் பலமாக இருக்கும் போது உரிமைகளை பெற்றிருக்கலாம் ; ஆனால் அவர்கள் தவறிழைத்து விட்டார்கள் - ஜோய் மகேஸ்வரன்

விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியமை பெரும் தவறு என்றும், பலமாக இருக்கும் போது உரிமைகளை பெற்றிருக்கலாம் என்றும் ஆனால் அவர்கள் தவறிழைத்து விட்டார்கள் என்றும் ஜோய் மகேஸ்வரன் கூறியுள்ளார். ஜோய் மகேஸ்வரன் 2002-2005 வரை பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகளின் குழுவில் அங்கம் வகித்தவர் என்பதும் அதன் பின்னர் குழுவில் இருந்து விலக்கப்பட்டவர். பேச்சுவாத்தையில் இருந்து பின்வாங்கியதன் மூலம் தமக்கு தாமே புலிகள் குழி தோண்டிவிட்டதாக கூறியுள்ள ஜோய் மகேஸ்வரன். இனிமேல் புலிகள் தழைப்பதற்கு வாய்ப்பே இல்லையென்றும் மஹிந்தவுடன் பேசுவதே ஒரே வழி என்றும் கூறியுள்ளார். அத்துடன் புலம்பெயர் மக்களும் அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழ் மக்களிற்கான புனர்வாழ்வு நடவடிகையினை ஆரம்பிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவில் பேராசிரியர் எலியாஸ் அவர்களின் நினைவு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஆவணி, 03, 2010

INTERNATIONAL WOMEN’S CONFERENCE IN MONTREAL AUG. 13-16

“For a Militant Global Women’s Movement in the 21st Century”

On Aug. 13-16, a ground-breaking conference of women from many countries and organizations will be held in Montreal to take up the crucial issues facing women worldwide, such as war, occupation, and corporate globalization, which brings with it low wages, and sweatshops and forces millions of women a year to leave their homelands to obtain jobs.  The worldwide economic crisis is only worsening conditions for millions of women. (more....)

ஆவணி, 03, 2010

வதிரியிலும், அல்லாரையிலும்

இரு தொழிலகங்கள் டக்ளஸினால் திறந்து வைப்பு

வதிரி தோல்பொருட்கள் மத்திய சேவை நிலையம் சாவகச்சேரி அல்லாரை தும்புத் தொழில் மத்திய நிலையம் ஆகியவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 14, 15ம் திகதி களில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார். இதன் மூலம் கரவெட்டி வதிரி கிராமப்புற தோல்பொருட்கள், உற்பத்தி யாளர்கள், சாவகச்சேரி அல்லாரை பிரதேச தும்புத் தொழில் உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன்பெறாவரெனவும் மேற்படி நிலையங்களுக்கான சகல உபகரணங்க ளையும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சு பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி தெரிவித்தார். (மேலும்...)

ஆவணி, 03, 2010

மடுமாதா உற்சவம், விசேட போக்குவரத்து ஏற்பாடு

மடுத்திருத்தல வருடாந்த திருவிழாவை யொட்டி விசேட ரயில், பஸ் சேவைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவிழாவுக்குச் செல்லும் யாத்திரிகர்களின் நன்மை கருதி வழமையான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக சேவைகளை நடத்தவும் இதனோடி ணைந்ததாக மதவாச்சியிலிருந்து விசேட பஸ் சேவைகளை நடத்தத் தீர்மானித் துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. நீர்கொழும்பு - மதவாச்சி, களுத்துறை - மதவாச்சி, மதவாச்சி - மொரட்டுவை, மதவாச்சி - களுத்துறை கொழும்பு கோட்டை - மதவாச்சி என இந்த ரயில் சேவைகள் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதற்கிணங்க 13, 14ம் திகதிகளில் நீர்கொழும்பிலிருந்து மதவாச்சிக்கும் 14ம் திகதி களுத்துறையிலிருந்து மதவாச்சிக்கும், 15ம் திகதி மதவாச்சியிலிருந்து மொரட்டுவைக்கும், மதவாச்சியிலிருந்து களுத்துறைக்கும் இந்த ரயில் சேவைகள் நடைபெறவுள்ளன. அத்துடன் வழமையான ரயில்களின் பயணிகள் பெட்டிகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க நீர்கொழும்பிலிருந்து காலை 7.45ற்கும் மதவாச்சியிலிருந்து நீர்கொழும்பிற்கு பிற்பகல் 1.45 ற்கும் ரயில்கள் புறப்படவுள்ளன.

ஆவணி, 03, 2010

Protest in Solidarity With Gerardo of the CUBAN FIVE

Tuesday, August 3rd from 3:00pm

across from the U.S. Consulate in Toronto

360 University Ave. (between St. Patrick and Osgoode subway stations)

Just as the Samba Squad sings, "the Cuban rhythm calls you!" it is truly the heart of  ALL OF CUBA that calls for saving the life of Gerardo Hernández, one of the imprisoned Cuban Five, due to the fast deterioration of his health, which is a direct result of the lack of medical attention and of the brutal conditions that the federal prison authorities of the U.S. empire are submitting this courageous, young Cuban who, for an hour a day of fresh air, is taken outside in a CAGE.  Gerardo is presently being tortured daily and THIS MUST BE STOPPED! (more...)

ஆவணி, 03, 2010

திருமலை நகரசபைத் தலைவர் த.தே.கூட்டமைப்பிலிருந்து நீக்கம்

திருகோணமலை நகரசபைத் தலைவர் சன்முகராஜா கௌரி முகுந்தன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவிடமிருந்து தனக்கு கடிதம் கிடைத்துள்ளதாக கௌரி முகுந்தன் டெய்லி மிரர் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். அதேவேளை தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டதன் காரணமாகவே கௌரி முகுந்தன் தமிழ் தேசியக்  கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமலை நகரசபைக்கான தேர்தலில் த.தே.கூ. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின்னர் அந்நகரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி, 03, 2010

வெனிசூலாவின் வான் எல்லைக்குள் கொலம்பியா விமானங்கள் உளவுப்பணி

வெனிசூலாவின் வான்பரப்பில் கொலம் பிய விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும் தனது நாட்டின் எல்லையை நோக்கி கொலம்பிய, அமெரிக்க இராணுவங்கள் நகர்த்தப்படுவதாகவும் வெனிசூலா ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் இவ்வாறான நடவடிக் கைகள் யுத்த சூழலைத் தோற்றுவிப்பதாகவும் தென்னமெரிக்க நாடுகளுடன் ஐக்கியத்தைப் பேணவே வெனிசூலா ஆர்வம் கொண்டுள் ளதாகவும் ஜனாதிபதி சாவெஸ் தெரிவித்தார். (மேலும்...)

ஆவணி, 03, 2010

குருநகர் கடற்கரை வீதி மீண்டும் மக்கள் பாவனைக்கு

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதி 15 வருடங்களுக்குப் பின்னர் இன்று மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. வட மகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் மாநகர மேயர் திருமதி யோ.பற்குணராஜா ஆகியோர் அழைத்துவரப்படவதையும் வீதியின் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்படுவதையும் படங்களில் காணலாம்

ஆவணி, 03, 2010

டச்சு துருப்புகள் ஆப்கனை விட்டு வெளியேறின

டச்சு துருப்புகள் ஆப்கானிஸ்தானை விட்டு முழுவதுமாக வெளியேறின. அவற்றின் பொறுப்பில் இருந்த உருஸ்கான் மாகாணத்தை அமெரிக்கா மற் றும் ஆஸ்திரேலியா படைகளிடம் ஒப்படைத்தன. ஆப்கானிஸ்தானைவிட்டு முதலில் வெளியேறும் நேட்டோ படை. நான்கு ஆண்டுகளில் நெதர்லாந்து துருப்புகளில் 14 பேர் மடிந்துள்ளனர். 140 பேர் காயமடைந்தனர். ஆயினும் உருஸ்தானில் மிகப் பெரும் முன்னேற்றத்தைச் செய்துள்ளோம் என்று நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. (மேலும்...)

ஆவணி, 03, 2010

புரட்சியின் அடையாளம் தோழர் “சே”

(ஐ.வி.நாகராஜன்)

புரட்சிக்கு மிகப்பெரிய அடை யாளங்களில் சேகுவேரா ஒருவர் என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது. தனது வாழ்நாள் முழுவ தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற மாவீரன். இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட குடும் பத்தில் பிறந்த சேகுவேரா சிறுவய திலிருந்தே அநீதியைக் கண்டு ஆத்திரம் கொள்பவராக இருந்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் நண்பனாக வளர்ந் தவர். தன்னுடைய இளம் வயதில் தென் அமெரிக்கா முழுவதும் அவர் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் ‘சே’வின் வாழ்க் கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத் தியது. (மேலும்...)

ஆவணி, 03, 2010

ஈராக்கில் அரசாங்கத்தை அமைப்பதற்கான ஐந்து மாதப் பேச்சுவார்த்தைகள் படுதோல்வி

ஈராக்கில் புதிய அரசாங்கத்தை அமைப் பதற்கான நீண்ட கால முயற்சிகள் மேலும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. ஈராக்கின் காபந்து பிரதமர் நூரி அல்மாலிகி பிரதமராவதற்கு ஷியா பிரதான அமைப்பு ஆதரவு வழங்காமையால் இந்நிலையேற் பட்டது. அத்துடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து முற்றாக வெளியேறும் காலம் நெருங்குகையில் அங்கு இதுவரைக் கும் அரசாங்கம் அமைக்கப்படாமல் காலம் கடத்தப்படுவது பெரும் அச்சத் தையேற்படுத்தியுள்ளதுடன் பிரிவினை வாதிகள் தீவிரவாதிகளுக்கு இது நல்ல வாய்ப்பாகவும் அமைந்துள்ளதை அண்மைக் கால குண்டு வெடிப்புகள் காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். (மேலும்...)

ஆவணி, 02, 2010

பரந்தளவிலான கருத்தொருமைப்பாட்டுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடல் - தி. ஸ்ரீதரன்

பரந்தளவிலான கருத்தொருமைப்பாட்டை அடைவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடலை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இனப் பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகளிடையே பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பொருட்டு நடைபெற்ற சந்திப்புக்கள் குரோதங்களையும் மனக்கிலேசங்களையும் விட்டு திறந்த மனதுடன் செயற்படுவதற்கும் வழி சமைத்திருப்பதாக பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தி. ஸ்ரீதரன் தினகரன் வார மஞ்சரிக்கு தெரிவித்தார். (மேலும்....)

 

ஆவணி, 02, 2010

காஸா சிவிலியன்களுக்கு எதிரான கூட்டுத் தாக்குதல்

இஸ்ரேலினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் காஸாவுக்கு மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகுக்குள் டிசம்பர் 31ந் திகதி அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் படையினர் ஒன்பது துருக்கிப் பிரசைகளைக் கொன்றனர். இந்த அடாவடித் தனத்தை முழு உலகமும் கண்டித்த போதிலும் அமெரிக்கா மாத்திரம் வெளிப்படையாக இஸ்ரேலுக்குச் சார்பாகச் செயற்பட்டது. இஸ்ரேலுக்கு எதிரான கண்டனப் பிரேரணை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படுவதை அமெரிக்கா தடுத்துவிட்டது. (மேலும்....)

ஆவணி, 02, 2010

1,350 முன்னாள் போராளிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசாங்கம் நடவடிக்கை

பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 1,350பேருக்கு எதிராக வழக்கு தொடர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு வழக்கு தொடர்வதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 650பேர் வவுனியா தடுப்பு முகாமிலும் ஏனைய 700பேரும் காலி, பூஸா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆவணி, 02, 2010

பாரதிய ஜனதா - ஐக்கிய ஜனதா தள் பிஹார் மாநிலத்தில் தனி வழியா?

(கேவியெஸ்)

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பில் ஐக்கிய ஜனதா தள் ஒரு பிரதான உறுப்புக் கட்சி. இரண்டு கட்சிகளும் பிஹார் மாநிலத்தில் கூட்டரசாங்கம் அமைத்திருக்கின்றன. ஐக்கிய ஜனதா தள்ளைச் சேர்ந்த நிதிஷ் குமார் முதலமைச்சராகவும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுசில் குமார் மோடி பிரதி முதலமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்கள். பிஹார் மாநிலத்தில் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் இப்போது விரிசல் ஏற்பட்டிருக்கின்றது. மாநிலத்தில் எதிர்வரும் நவம்பரில் அல்லது டிசம்பரில் சட்ட சபைத் தேர்தல் நடைபெறும். அதற்கிடையே இரண்டு கட்சிகளும் தனித்தனி வழி செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகின்றது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்துடனேயே இரண்டு கட்சிகளுக்குமிடையே இடைவெளி தோன்றத் தொடங்கியது. (மேலும்....)

ஆவணி, 02, 2010

வைக்கோலை எரிப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு

(ஜெஸ்மி எம். மூஸா)

வைக்கோலை எரிப்பதால் விவசாய நிலம் உரம் பெறுகின்றது. என்ற விவ சாயிகளின் நம்பிக்கை தவறு என்று அதை பசளை உரமாக மாற்றுவதே புத்திசாலித் தனமானது என்றும் கூறுகிறார் கட்டுரையாளர். தொழில்களில் முதன்மை யானது விவசாயம். இதை வள்ளுவரும் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். உலகத் தொழில் துறையில் 75 சதவீதத்தை விவசாயம் கொண்டுள்ளது. ஏனெனில் இது மனிதனின் வாழ்வாதாரம். இலங்கை கைத்தொழில் துறையில் முன்னேற பெருமுயற்சிகள் செய்து வந்தாலும் அடிப் படையில் இது ஒரு விவசாய நாடு. தேயிலை, இறப்பர், தெங்கு என பல விவசாய உற்பத்திகள் இங்கே நடைபெற்று வந்தாலும், முதன்மையான விவசாயம், நெல் உற்பத்தியே. எனவே நெல் உற்பத்தியை மென்மேலும் அதிகரிப்பதற்காக விஞ்ஞான ரீதியில் பல முயற்சிகளும் திட்டங்களும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (மேலும்....)

ஆவணி, 02, 2010

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்
இலட்சக்கணக்கானோர் இருப்பிடமின்றி அவதி

பாகிஸ்தானில் வடமேல் மாகாணமான பெஷாவரில் வரலாறு காணாத பெரும் வெள்ளம் ஏற்பட்டதில் எண்ணூறு பேர் வரைப் பலியாகினர். ஒரு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதுடன் ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. பெஷாவர் மாகாணத்தில் பெய்த ஓயாத மழையால் பெரும் வெள்ளம், மண்சரிவு என்பன ஏற்பட்டன. சில கிராமங்கள் வெள்ளத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. தொடர்பாடல்கள், பாதைகள் துண்டிக்கப்பட்டதால் தகவல்களைப் பெறுவதிலும் மீட்புப் பணிகளிலும் பெரும் தாமதமேற்பட்டது.( மேலும்....)

ஆவணி, 01, 2010

அரசியல் தீர்வை அடைவதில் தென்னிலங்கை நட்பு சக்திகள் பிரதான பங்காளிகள்

(ஜீவகன்)

தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியம் ஏற்பட வேண்டியது அவசியம் தான். தமிழ்க் கட்சிகள் எதிரும் புதிருமாகச் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியாது. தமிழ்க் கட்சிகளின் எதிரும் புதிருமான செயற்பாட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. தமிழ்க் கட்சிகள் என்ற வகையில் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் மாத்திரம் வடக்கு, கிழக்கில் செயற்பட்ட காலத்தில் ஒரு கட்சி கூறுவதற்கு எதிரான கருத்தையே மற்றக் கட்சி கூறியது. சுதந்திர தினத்தன்று ஹர்த்தால் அனுஷ்டித்துக் கடைகளைப் பூட்ட வேண்டும் என்று ஒரு கட்சி சொன்னால் கடைகளைத் திறந்து வைத்து வர்த்தக விடுமுறையை மீற வேண்டும் என்று மற்றக் கட்சி சொல்லும். பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் ஒரு கட்சி கையொப்பம் இட்டால் அது துரோகச் செயல் என்று மற்றக் கட்சி சொல்லும்.  (மேலும்....)

ஆவணி, 01, 2010

அமெரிக்க ராணுவத்தின் 43 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி! 

இராக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமெரிக்க ராணுவம் அந்நாட்டுப் பணத்தில் சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ள ராணுவத்தின் பராமரிப்புச் செலவுகள் இராக் மக்களின் தலைமீதுதான் சுமத்தப்படுகிறது. எந்தநாட்டில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தாலும் அந்நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, அந்தக் கொள்ளைக்கு ஆகும் செலவையும் தலையில் கட்டி விடுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வழக்கமான நடவடிக்கையாகும். இதுதான் தற்போது இராக் ஆக்கிரமிப்பிலும் நடந்துள்ளது. (மேலும்...)

ஆவணி, 01, 2010

85 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 85 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கருகில் சிறிய படகொன்றில் சென்றுகொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

படகை செலுத்தியவரையும் அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஆவணி, 01, 2010

அறிக்கையில் அடங்கிய மறைபொருள்

(வாகுலன்)

ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கைக்கு சஜித் பிரேமதாச வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்தார். கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது எதிர்ப்பை அவர் வெளிப்படுத்திய விதம் சிரேஷ்டர்களிடம் அதிருப்தியைத் தோற்றுவித்தது. மறுசீரமைப்புக் குழு உறுப்பினர்கள் அறிக்கையில் கையொப்பம் வைப்பதற்கு முன் அதைப் படித்துப் பார்த்தார்களா என்று அவர் கேட்ட கேள்வியிலுள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் செயற்குழுவில் இல்லை. தலைவர் தயாரித்த அறிக்கையில் குழு உறுப்பினர்கள் கையொப்பம் இட்டிருக்கின்றார்கள் என்பதே சஜித் பிரேமதாச கேட்ட கேள்வியில் பொதிந்துள்ள அர்த்தம். (மேலும்...)

ஆவணி, 01, 2010

புலிகளின் 3,000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளாக இருந்து சரணடைந்தவர்களில்  சுமார் 3,000 பேர் இதுவரை புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னாள் போராளிகள்  11,689  பேர் புனர்வாழ்வளிக்கப்படுவதற்கு இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 3,000 பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் சிறுவர்கள் அங்கவீனமானோர் கர்பிணிகள் பிள்ளைகள் கொண்ட தாய்மார்கள் சிறு குற்றங்கள் புரிந்தோர் நீதிமன்றத்தால் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டோர் ஆகியோரும் உட்படுவதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க மேலும் கூறியுள்ளார்.363 சிறுவர்கள் மற்றும் 231 சிறுமிகளும் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்களில்  பெரும்பாலானோர் பலவந்தமாக புலிகள்  அமைப்பில் சேர்க்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆவணி, 01, 2010

பெண் அதிகாரிகளின் கீழ் பணிபுரிவதை ஆண்கள் விரும்புவதில்லை

பெண் மீதான வன்முறைகள் இன்று குடும்ப, வேலைத்தள வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. அதிலும் பெண் தனக்கு நெருக்கமானவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றாள் எனும் நிலையில் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் உள்ள பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில், வீட்டில், வேலைத் தளத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், வன்முறைகளை எவ்வாறு அணுகுகின்றார்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி எவ்வாறு தீர்த்துக் கொள்கின்றார்கள். (மேலும்...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com