Contact us at: sooddram@gmail.com

 

மார்கழி 2012 மாதப் பதிவுகள்

மார்கழி 31, 2012

யாழ். பல்கலை வளாகத்திலிருந்து பொலிஸாரை விலக்குவோம் - எஸ்.எஸ்.பி

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி நிறுத்தப்பட்டிருக்கின்ற பொலிஸாரை அங்கிருந்து விலக்கிக்கொள்வதற்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் இன்று திங்கட்கிழமை மாலைவேளைக்குள் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என்றும் யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். மொஹமட் ஜெவ்ரி தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில்  கற்றல் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல் பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறும். இச்சந்தர்ப்பத்திலேயே  யாழ். பல்கலைக்கழகத்தினை சுற்றி பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டிருக்கும் பொலிஸாரை விலக்கிகொள்வது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். பல்கலைகழக வளாகத்தில் பாதுகாப்பு கடமைக்காக நிறுத்தப்பட்டிருக்கின்ற பொலிஸாரை விலக்கிக்கொள்வது என பொலிஸ் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் இன்று மாலைவேளையிலேயே பொலிஸார் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Lanka wants Adele tried for war crimes

Sri Lanka says Adele Balasingham, a key member of the LTTE and head trainer of LTTE’s female cadres needs to stand trial for crimes against humanity. An article appearing in the Defence Ministry website says Balasingham, the spouse of LTTE theoretician Anton Balasingham, took pride in training young girls as young as 10years to kill. The article says Adele was responsible for training, arming and tying a vile of cyanide around the necks of innocent children. “Orders were simple – if captured commit suicide by taking the cyanide. Terrorists giving such orders is excusable but a Western woman and a nurse at that is nothing compared to her parents being proud of their daughter training child soldiers,” the article on the Defence Ministry website said. Adele Balasingham  is currently believed to be living in England and the article says the UK authorities appear unconcerned about a war criminal living happily in Surrey after training thousands of young girls to their deaths. “Of course, UK authorities have done little over the years to really clamp down on LTTE terrorism and one wonders why it would even allow its capital to be used as the international head quarters of the LTTE despite LTTE being banned in the UK. Why ban an entity as a terrorist organization if UK allows it to hold demonstrations, collect funds, influence its politicians, have them speak on LTTE stages,” the article said. The LTTE’s female military unit was headed by Adele Balasingham she christened them “Freedom Birds” and the trust these young girls had placed in Adele was such that she was even refered to as “Aunty”, the report adds. Adele Balasingham was a key member of the LTTE delegation during the 2002 peace talk held in Thailand (3 sessions), Oslo, Germany and Japan.

இறுதியில் ஆயுத பலமே எதற்கும் தீர்ப்பு வழங்குகிறது

1970 ஆம் ஆண்டில் மக்களிடம் மூன்றில் இரண்டு நாடாளுமன்ற வாக்கு பலத்தை பெற்று பதவிக்கு வந்த சிறிமா பண்டாரநாயக்க 1972ஆம் ஆண்டு தமது ஆட்சிக் காலத்தை நீடித்துக் கொள்ளும் வகையில் யாப்பொன்றை தயாரித்துக் கொண்டார். மக்களால் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது. 1977ஆம் ஆண்டு ஆறில் ஐந்து நாடாளுமன்ற வாக்குப் பலத்தோடு பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்தன 1978ஆம் ஆண்டு ஒருவித சர்வாதிகாரத்தை உருவாக்கும் வகையில் யாப்பை மாற்றினார். அதனை உணர்ந்தவர்களாலும் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்து 2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, 2010ஆம் ஆண்டு 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் வேண்டுமென்றால் வாழ்நாள் முழுவதும் தாம் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கக்கூடிய வகையில் யாப்பை மாற்றிக் கொண்டார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதாக கிராமம் வாரியாக வாக்குறுதியளித்து வந்த அவரது கட்சி ஆதரவாளர்களுக்கே ஒன்றும் செய்ய முடியாது போய்விட்டது. (மேலும்......)

 

கம்போடியா இன்றைய பெயர், காமர் தேசம் அன்றைய பெயர்.

அந்நாட்டில் நகர வட்டம் என்ற நகரை அமைத்தவன் யசோவர்மன் (கிபி 889-910). சிவபத மலையில் காரைக்காலம்மையார் சிற்பம் தாங்கிய சிவன் கோயில் அமைத்தவனும் இவனே! தமிழகத்தில் பல்லவர் வீழ்ச்சி, சோழர் எழுச்சிக் காலம். ஆதித்த கரிகாலன், முதலாம் பராந்தகன் காலம். முதலாம் இராசேந்திரன் (கிபி 1015-1045), காம்போச மன்னன் முதலாம் சூரியவர்மனுக்கு (கிபி 1001-1050) படைகள் அனுப்பி உதவினான் என்ற செய்தி, கரந்தைச் செப்பேடுகளில் உண்டு. தமிழகத்தில் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்  காம்போசத்தில் நகர வட்டத்தில் திருமால் கோயில் அமைத்தவன்  இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1065-1150).  சேக்கிழார் பெரியபுராணத்தை அரங்கேற்றிய காலம். நகர வட்டம் என்ற தொடர், நாளடைவில் அங்கோர் வாட் ஆகியது.

இமயமலை பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது - விஞ்ஞானிகள்

இந்தியாவில் வடக்கு எல்லையான இமயமலை பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக, விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.இது, ரிக்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய சிங்கப்பூரை சேர்ந்த, நன்யாங் தொழில் நுட்ப பல்கலை கழக விஞ்ஞானிகள் சிலர் பவுல் டாப்பொன்னியர் என்பவர் தலைமையில், இமயமலை பகுதியில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். இமயமலை பகுதியில், 1897 மற்றும் 1905, 1934, 1950ஆம் ஆண்டுகளில், பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரிச்டர் அளவில், 7.8 முதல், 8.9 வரை பதிவாகியுள்ளது. இருப்பினும், 1934 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில், 150 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டன.ஆறுகளின் வண்டல் படிவம் மற்றும் மலைச்சரிவுகளை, ரேடியோ கார்பனை பயன்படுத்தி, ஆய்வாளர்கள், பூமியில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை ஆய்வு செய்துள்ளனர். இதன் அடிப்படையில், இமயமலைப் பகுதியில் முன் ஏற்பட்டது போல், அதிக அதிர்வுடன் கடும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது ரிச்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர் இதனால், இமயமலை பகுதியை சுற்றியுள்ள இடங்களில் நிலத்தில் பெரும் பிளவுகள் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஆஸியிலிருந்து மேலும் 30 இலங்கையர் நாடு திரும்ப விருப்பம்

சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா சென்றவர்களில் 30 பேர் கொண்ட மேலுமொரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அவர்களை விமானம் மூலம் நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த முப்பது பேரில்  9 பேர் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டி ருப்பதுடன், மேலும் 21 பேர் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த இவர்கள் தாமாக முன்வந்து நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருப்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு வெற்றியாக அமைந்து ள்ளது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள ஒழுங்கை தமிழ்ச் சங்க வீதியென பெயர் மாற்றம்

வெள்ளவத்தை தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள 57வது ஒழுங்கை தமிழ்ச்சங்க வீதியென பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். இவ்வீதி ஏற்கனவே பெயர்மாற்றம் செய்யப்படவிருந்த போதி லும், தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்க ப்ப ட்டிருந்தது. அத்துடன் இது தொடர்பில் பல சர்ச்சைகளும் எழுந்திருந்தன. இந்நிலையில் எவ்வித சிக்கல்களும் அற்ற நிலையில் தமிழ்ச்சங்க வீதியென பெயர் மாற்றம் செய்ய உதவிய அனைவருக்கும் தான் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அஸ்வர் எம். பி. கூறினார். இது தொடர்பான பிரேரணையை முன்வைத்த கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேனியனுக்கும் தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார். இது தமிழ் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவில் பொருளாதார தேக்க நிலையை தவிர்க்க ஜனாதிபதி ஒபாமா கடைசி கட்ட முயற்சி

அமெரிக்காவில் ‘பிஸ்கல் க்ளிப்’ எனப்படும் பொருளாதார தேக்க நிலையை தவிர்க்க ஜனாதிபதி ஒபாமா கடைசி முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்த சிக்கலுக்கு இன்றைய தினத்திற்குள் ஆளும் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாத பட்சத்தில் புத்தாண்டில் தானாக வரி அதிகரிப்பு ஏற்படவுள்ளதோடு, செலவு குறைப்பும் ஏற்படும். இதன்படி புத்தாண்டில் ஏழை, செல்வந்தர் பாராமல் வரி உயரவுள்ளதோடு அரசின் பொது மற்றும் இராணுவ செலவில் 110 பில்லியன் டொலர் குறைப்பு ஏற்படும். இதன் மூலம் அமெரிக்கா பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. (மேலும்......)

மார்கழி 30, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

பல கொலைகளைப் பரிந்து தப்பியோடியவர்கள - சந்திரகாந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகம் எங்கே? கடந்த மாகாண சபைத் தோர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். இரா. துரைரெட்ணம் பெற்ற வாக்குகள் 29131 ஆகும். அடுத்தபடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணி மற்றும் மட்டக்களப்பு தமிழ் அரசுக் கட்சியின் இணைத் தலைவருமான துரைராஜசிங்கம்; இவர் பெற்ற மொத்த வாக்குகள் 27,717 ஆகும். திருகோணமலை மாவட்டத்தில் தண்டாயுதபாணி பெற்ற வாக்குகள் வெறும் 20,190 ஆகும். ஆனால் இவருக்கு எந்தவொரு அரசியல் அனுபவமும் இல்லை பின்னணியும் இல்லை. ஆனால் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கப்பட்டது. வெறும் 20,000 வாக்குகளைப் பெற்ற தண்டாயுதபாணிக்கே வழங்கப்பட்டது. அப்ப எங்கையா உங்கட ஜனநாயகம்? (மேலும்......)

தமிழ்த் தேசியக் கோமாளிகள்

(கோசலன்)

இன்று இலங்கையின் வடகிழக்கு மக்களின் ஒவ்வோர் அசைவிலும் ஒடுக்குமுறை இராணுவையும் தனது கோரக்கரங்களால் கட்டுப்படுத்துகிறது. சிவில் நிர்வாகம் இராணுவ தலைமையகத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வின் ஒவ்வோர் நகர்வும் இராணுவத்திற்கும் அதன் துணைக் குழுக்களுக்கும் தெரியாமல் நடந்தேற முடியாது. ஒரு தேசிய இனத்தை, ஒரு மக்கள் கூட்டத்தை சிதைத்து, சீர்குலைத்து சிதறடிப்பதற்கு அப்பாவி மக்களின் மீது ஒவ்வொரு முனைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தப்படுகின்றது. சிங்கள பௌத்த பேரினவாத அரசு தனது இனச் சுத்திகரிப்பு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கருத்தியல் தளத்திலும், பொருளாதாரத் தளத்திலும், பௌதீக இருப்பிலும் தனது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்த மூன்று வேறுபட்ட தளங்களிலும் தனது தாக்குதலை நடத்துவதற்காக வன்னியில் ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்களை சில இரவுகளுக்குள் கொன்றொழித்துவிட்டு உலக அரங்கில் இறையாண்மையுடைய அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் பேரினவாத அரசு அதன் முகவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. (மேலும்......)

சர்வதேசத்திடம் உதவிக்கரம், நீதிமன்றங்களில் வழக்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், காளியம்மனுக்கு சிதறுதேங்காய்

மூன்றரை வருட காலத்தில் TNA சாதித்தது என்ன?

ஒரு சிறு விடயத்தில் கூட வெற்றிகாண முடியாத நிலையில் மக்களை ஏமாற்ற தமிழ் ஊடகங்களில் மட்டும் வெற்றிச் சவாரி?

வெளிநாட்டுச் சுற்றுலாக்களையும், போராட்டங்களையும் தொடர்வதால் என்ன பயன் என பொறுமையிழந்த தமிழ் மக்கள் கடும் விசனம்

இறுதி யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்களுக்கு மேலாகியும் தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வில் இதுவரை ஒரு சிறு முன்னேற்றம் கூடக் காண முடியாத நிலையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது இயலாமையை மூடிமறைக்க தமக்குச் சார்பான தமிழ் ஊடகங்களில் பொய்யாக வெற்றிச் சவாரி செய்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். (மேலும்......)

போராட்டக் களமல்ல பல்கலைக்கழகம்!

ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழர்கள் மிகத்தீவிரமாக கிளர்ந்தெழுந்த முன்னொரு காலத்தில் பல சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அக் கிளர்ச்சிகளின் வடிவமாகவும் ஆரம்ப நிலைக்களனாகவும் இருந்திருக்கின்றது என்பது உண்மை. தமிழ்த் தேசியப் போராட்டம் சார்ந்து பல்வேறு மாற்றுக்கருத்துக்கள், கொள்கைகள், செயற்பாடுகள் அனைத்தும் குவிந்திருந்த மையமாகவும் பல்கலைக்கழகம் என்றுமே இருந்து வருகின்றது என்பதிலும் மாற்றுக்கருத்துக் கிடையாது. (மேலும்......)

இராணுவத்தில் தமிழ் பெண்கள்

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்கள் பற்றி தொடர்ந்தும் பல விதமான செய்திகளும், கட்டுரைகளும் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் எல்லாவற்றிலும் அந்தப் பெண்களின் நலன்களை கிஞ்சித்தும் கருத்தில் எடுக்காமல் தங்களின் அரசியல் இலாபங்களுக்காக தமிழ்த்தேசியத்தின் பெயரால் கேவலமாக மானபங்கம் படுத்திவருகின்றார்கள். இங்கு நான் வெளிப்படையாகவே கூறுகின்றேன். இராணுவத்தில் இணைந்துகொண்ட 109 இளம் வறுமையில் வாழ்கின்ற பெண்களை கேவலப்படுத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சகோதரனின் ஊடகங் களையும் உள்ளூரிலுள்ள ஒரு சில இளம் ஊடக வியலாளர்களையும் வைத்துக்கொண்டு மிகத்தாராளமாகவே நடந்துகொண்டார். (மேலும்......)

யாழ்ப்பாணத்தில் குழுக்களிடையே வாள்வெட்டு, திருட்டு, வீதிகளில் பெண்களுடன் சேட்டை விடுதல் என்பன தாராளமாக அதிகரித்துள்ளதை செய்திகளில் அறியக் கூடியதாக உள்ளது. ஏன் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமலுள்ளது?

முன்னர் புலிகள் இருந்த காலத்தில் அவர்களது ஆயுதங்களுக்குப் பயந்து இத்தகைய சம்பவங்கள் குறைவாகவே இருந்தது உண்மை. இப்போது சட்டம் ஒழுங்கைப் பொலிஸாரே நிலைநாட்ட வேண்டும். அவர்கள் அதனைச் செய்யப் போனால் எதிர்ப்பவர்களும் உள்ளனர். மீறிப் போய் அடக்க முனைந்தால் பொலிஸார் அத்துமீறுவதாக அபாண்டம் தெரிவிப்போரும் உள்ளனர். ஆனால், அதற்காக அப்படியே விட்டுவிட முடியாது. ஒன்று மக்களாகப் பார்த்துத் திருந்த வேண்டும். இல்லாவிடின் பொலிஸாரிடம் பொறுப்புக் கொடுத்துவிட வேண்டும். பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழிசமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

மெக்சிகோவின் இன்றைய கதி

(அருண் குமார்)

மெக்சிகோ நகரில் உள்ள ஓட்டலுக்கு மெக்சிகோ விமானநிலையத்திலிருந்து டாக் சியில் என்னை ஏற்றிச்சென்ற ஓட்டுநர் ஒரு கணினி பகுத்தாய்நர் ஆவார். என்னை விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்குக் கொண்டு செல்வதற்கு இடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தில் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தின் அவலநிலை குறித்தும் சரளமான ஆங்கிலத்தில் அவர் என்னிடம் தெரிவித்துவிட்டார். உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் என்னிடம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஏனெனில், தானும் தன்னைப்போன்றவர்களும் மெக்சிகோவில் படும் துன்பங்கள் குறித்து அப்போதுதான் தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடி யும் என்று அவர் நினைத்தார். வேலையில் லாத் திண்டாட்டம் குறித்தும், தனக்கு ஒரு சரியான வேலை கிடைக்காதது குறித்தும் அவர் என்னிடம் முறையிட்டார். தன் குழந் தைகளுக்கும் இதுவே கதி என்று அவர் கூறி னார். அமெரிக்காவையும் அதன் கொள்கை களையும் சமூகத்தில் நிலவும் லஞ்ச ஊழல் களையும் அவர் சாடினார். அதன்பின் மெக்சி கோவில் நான் தங்கியிருந்த ஒரு வார காலத் திலும் எனக்கு இதுபோன்று எண்ணற்ற அனுபவங்கள் ஏற்பட்டன. (மேலும்......)

மார்கழி 29, 2012

ராஜதந்திர மேதை “சாணக்கியன்” ஐயா சம்பந்தனுக்கு  சூத்திரத்தில் வந்த  மடலுக்கு….

(சாணக்கியனின் கட்டுரை - அதில் உள்ள கருத்து சூத்திரத்தின் கருத்த அல்ல. மாறாக அது சாணக்கியனின் கருத்து. இதற்கான தளத்தை கொடுத்தது மட்டுமே சூத்திரம். இன்னும் ஒன்று சூத்திரம் எந்த ஒரு ஈழவிடுதலை அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத் தளமும் அல்ல. ஐவன் நீங்களாக ஏதாவது கற்பனை சுய முடிவின் அடிப்படையில் கருத்துக்கள் தெரிவிப்பது அது உங்கள் தனிப்பட்ட கருத்து. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் உங்கள் கருத்தையும் பிரசுரிக்கின்றோம். மக்கள் தீர்மானிக்கட்டும் எவர் எவரிடம் சரிகள் பிழைகள் இருக்கின்றது என்பதை _ ஆசிரியர்)

அன்புள்ள சூத்திரம் இணையத்தள ஆசிரியர் அவர்களுக்கு உங்கள் ஆக்கங்கள் ஆர்வங்களுக்கு பாரட்டுகள்.அது இருக்க சம்பந்தன் ஜயா அவர்கள் பாரளுமன்றத்தில் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறியதற்கு நீங்கள் பதில் மடல் வரைந்துள்ளீர்கள். பாவம் மனிசன் சம்பந்தன் ஜயா காலம் கடந்தாவது உண்மையை சொல்லி யுள்ளார்.அதற்க்கு நீங்கள் கடுப்பாகி மடல் வரைந்ததை பார்க்கும்போது எங்களுக்கு உங்கள் மீது  அனுதாபமாக  உள்ளது. (மேலும்......)

நடிகர் செல்வசேகரனின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை பொறளையில்

நேற்று காலமாகிய இலங்கையின் புகழ்பெற்ற மூத்த கலைஞர் உபாலி செல்வகேகரனின் இறுதித் கிரியைகள் பொறளை பொது மயானத்தில் நாளை மாலை 4 மணிக்கு  நடைபெறுமென அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர். மேடை, தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் மற்றும் தமிழ், சிங்கள திரைப்படங்கள் என்பவற்றினூடாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் குடிகொண்ட மூத்த கலைஞர் “உபாலி” செல்வசேகரன். நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனது 64ஆவது வயதில் உயிர் நீத்தார்.மறைந்த செல்வசேகரனின் பூதவுடல் தற்சமயம் பொறளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பூதவுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு பொறளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகள் தலைதூக்குவதான அரசாங்கத்தின் குற்றச்சாட்டில் உண்மையில்லை - ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இறுக்கமான உறவினைப் பேணுவதோடு, தமிழ் மக்களினதும், தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்காக உழைப்பதற்காக உறுதிகொள்வதென்ற தீர்மானத்தினை எடுத்துக் கொள்ளவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உறுதியளித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு யாழ். நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  கட்சியின் பொதுச் செயலாளர் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்ற இப்பொதுச்சபை கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் 15 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. (மேலும்......)

இலங்கையின் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களை கோத்தா விசாரிப்பார்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் போது, அவர்களை விசாரணை குழுவொன்றின் முன் அழைத்து, அவர்களின் பின்னணி குறித்து, விரிவாக விசாரணை நடத்தப்படும் முறையொன்றை அடுத்த வருடம் முதல் செயற்படுத்தப்படும் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கு அமைய புதிய சட்டத்திட்டங்களை வகுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், இரட்;டை குடியுரிமையை வழங்கும் போது, உரிய விசாரணைகளை நடத்த தவறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து, கனடா பிரான்ஸ் சுவிஸ் போன்ற நாடுகளுக்கு சென்று அரசியல் தஞ்சம் பெற்று அந்த நாடுகளின் பிரஜைகளாக மாறியுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், இரட்டை குடியுரிமைகளை பெற்று சர்வதேச ரீதியில் சிறீலங்காவுக்கு அபகீர்த்திக்கு ஏற்படுத்த முயற்சித்து வருவது அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளதன் காரணமாகவே முன்னைய சட்டங்களில் திருத்தங்களை செய்து, இரட்டை குடியுரிமை வழங்குவதில் புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் – சம்பந்தர் ஆகியோரின் ஆசியோடு இனி இனச்சுத்திகரிப்பு நடைபெறும்!

வடக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவேண்டும் எனக் கோருவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சர்வதேசமும் இதை நியாயமான கோரிக்கையாகக் கருதாது. அதேவேளை இலங்கை அரசாங்கமும் உடன்படப்போவதில்லை. இந்நிலையில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு சம்பந்தன் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார். இராணுவப் பிரசன்னத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரவில்லை எனக் கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும். இது அவரின் உரையை திரிவுபடுத்தும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். (மேலும்......)

Two Operatives of Sri Lanka Tamil Tigers indicted in US Court under Material Support Law

(Daya Gamage - US National Correspondent Asian Tribune )

Piratheepan Nadarajah (36) and Suresh Sriskandarajah (32), two alleged operatives of Sri Lanka's now defunct Liberation Tigers of Tamil Eelam (LTTE), a US-designated foreign terrorist organization popularly referred to as the Tamil Tigers, were arraigned Thursday, 27 December before United States Magistrate at the federal courthouse in Brooklyn, New York following their extradition from Canada. The two men, who were born in Sri Lanka and became naturalized Canadian citizens, had been sought by the United States since 2006. Each has been charged with conspiring to provide material support to the Tamil Tigers, a law that was upheld by the US Supreme Court last year when LTTE operatives in the U.S. challenged it, after their separatist military movement was defeated three years ago after more than 25 years of insurgency. (more....)

பாலியல் கொடுமைக்குள்ளான டில்லி மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்

டில்லியில் ஓடும் பஸ்சில் வைத்து ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாணவி சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் உயிரிழிந்துள்ளார். கடந்த 13 நாட்களாக மரணத்துடன் கடுமையாக போராடி வந்த மேற்படி மாணவி, இன்று அதிகாலை 2.15 மணியளவில் உயிரிழந்துள்ளார். (மேலும்......)

கொழும்பு

கச்சேரி தீ விபத்து திட்டமிட்டப்பட்ட சதி - பகுப்பாய்வு அறிக்கை

கொழும்பு, பிரதேச செயலக தீ விபத்து சம்பவமானது திட்டமிடப்பட்ட சதி என இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தினால் இச்செயலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி கொழும்பு, டாம் வீதியில் அமைந்துள்ள கொழும்பு பிரதேச செயலகத்தில் திடீரென  தீவிபத்து ஏற்பட்டதுடன் அதில் காணப்பட்ட முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாகின.  இந்நிலையில், இத்தீவிபத்து சம்பவம் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலை நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க திங்களன்று விசேட கூட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரைகளை மாணவர்கள் பகிஷ்கரித்துள்ள நிலையில், பல்கலைக்கழக நடவடிக்கைகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் திங்கட்கிழமை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்துள்ள போதிலும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், மாணவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரும் வகையிலேயே எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை மேற்படி விசேட கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலை நிர்வாகப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவப்பு மழையில் உயிரினம் கண்டுபிடிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் சிவப்பு மழைக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மழை நீரில் கலந்திருக்கும் ஒருவகை உயிரினமே இந்த சிவப்பு மழைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்தார். மேற்படி உயிரிணங்கள் ஒருகல உயிர் அங்கிகள் இனத்தைச் சேர்ந்தவை என்று சுட்டிக்காட்டிய டாக்டர் சமரநாயக்க, இவை மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட உயிவாழ்வனவாக இருப்பதுடன் பெருக்கமடையும் தன்மையையும் கொண்டிருப்பதாகவும் கூறினார். இவை குறித்த தமது அனுமானங்களை உறுதி செய்ய அவற்றை டி.என்.ஏ (மரபணு பரிசோதனை) மற்றும் ஆர்.என்.ஏ சோதனைகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் இந்த சோதனைகளுக்காக பிரித்தானியாவிலுள்ள கார்டிவ் பல்கலைக்கழகத்துக்கு சிவப்பு மழை நீர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழில் ஒருவர் கடத்தப்பட்டார்

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். நடராஜா கலியுகராஜா (வயது 47) என்பவரே கடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் வருகைதந்த இனந்தெரியாத சிலரே இவரை இன்று வெள்ளிக்கிழமை கடத்திச்சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தை பத்திரகாளியம்மன் கோவில் பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் இன்று தெரிவித்தனர். பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் இச்சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர். மேலும் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 4 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மண்டைத்தீவைச்சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுரேந்திரன் சுதந்தினி என்பவரே நேற்று முன்தினம் காணாமல் போனதாகவும் அவரே இன்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் துயர் பகிர்வு

1948 இல் இருந்து மிக அண்மைக்காலம் வரை அகில இலங்கைத் தமிழ் பெளத்த காங்கிரசின் தலைவராகவும், அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மாகாசபையின் முன்னணி உறுப்பினராகவும் செயல்பட்ட வைரமுத்து (ஐயாத்துரை) மாஸ்டர் 26-12-2012 நேற்று மாலை மானிப்பாயில் காலமானார். 1918 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி பிறந்த வைரமுத்து மாஸ்டர் அவர்கள் 94 வயது வரை  தனது தேவைகளை தானே மேற்கொண்டு  மிக ஆரோக்கியமாகவே  வாழ்ந்து வந்தார். 1967 இல் யாழ்மேலாதிக்க சமூகத்தால் உயர் கல்வி மறுக்கப்பட்டு வேலையில்லாத 100தலித் இளைஞர்களை   பெளத்த மத மாற்றத்திற்காக 1967 ஏப்ரல் மாதம் தென்இலங்கைக்கு அழைத்துச் சென்றவர். “நான் எனது ‘இனத்துக்கு’ நல்லது செய்ய வேணும் என்ற நல்ல நோக்கத்தோடு பணியாற்றினேன். தீண்டாமை ஒழியவேணும்,எமக்குள் நாம் சரிநிகராக வாழவேணும், நமது மக்களும் உத்தியோகம் பெறவேணும் என்றதே எனது முழுநோக்கமாகவும் இருந்தது. அதற்கு அன்றைய சிங்கள அரசும், பிக்குமாரும் மிகப்பெரிய ஆதரவைத் தந்தார்கள்” :  – வைரமுத்து-

மார்கழி 28, 2012

பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கியுள்ளன

நாட்டில் இன்று வேலுப்பிள்ளை பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கி வருகின்றன. எனவே, இவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார். ஹலால் சான்றிதழுக்காக அறவிடப்படும் கட்டணம் எதற்காக செலவு செய்யப்படுகின்றது என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்த மதமானாலும் அடிப்படைவாதக் கருத்துக்கள் தலைதூக்குவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நூற்றுக்கு 7 வீதமான மக்களே ஹலால் சான்றிதழுடைய உணவு வகைகளை உட்கொள்கின்றனர். ஆனால், ஹால் உணவுகளை சாப்பிடக்கூடாது என தடைசெய்வது பிழையான விடயமாகும். அதேவேளை ஹலால் சான்றிதழுக்காக செலுத்தப்படும் கட்டணங்கள் எங்கே போய்ச்சேர்கிறது. அது மத ரீதியான அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகளுக்கு செலவு செய்யப்படுகின்றதா? என்பதை ஆராய வேண்டியது கட்டாயமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வால்மார்ட்

சில உண்மைகள்

(ஆர்.பத்ரி)

வால்மார்ட்டை விரட்டியடிக்கும் எழுச்சிமிக்க போராட்டம் சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் என்பது ஒரு துவக்கமே.. இன்றோடு முடியப் போவதில்லை.. இன்னமும் வலுவாகவும், ஆயிரமாயிரம் மக்களை திரட்டி சக்தி மிக்கதாகவும் தொடரத்தான் போகிறது. இந்நிலையில் வால்மார்ட் குறித்து மேலும் சில உண்மைகளை தெரிந்து கொள்வோம். நாடே எதிர்க்கிற போது வால்மார்ட் உள் ளிட்ட நிறுவனங்கள் எப்படி இந்தியா விற்குள் நுழைந்தன. இதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக் கெடுப்பில் எப்படி வெற்றி கிடைத்தது..? இதற்கான அனைத்து வேலைகளை யும் கச்சிதமாக முடிக்கும் பொறுப்பை பேட்டன் பாக்ஸ் என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டதோடு, வெற்றிகரமாக செய்தும் முடித்திருக்கிறது. பேட்டன் பாக்ஸ் எனும் நிறுவனம் எந்தவொரு பொருளையும் தயாரிக்கும் நிறுவனமோ அல்லது பொருட்களை வாங்கி விற்கும் வர்த்தகத் தில் ஈடுபடும் நிறுவனமோ அல்ல. இது போன்ற திரை மறைவு பேரங்களை சாதுர் யமாக செய்து முடிக்கும் ஒரு இடைத் தரகர் நிறுவனமே.(மேலும்......)

மன்னாரில் அவசர காலநிலை பிரகடனம்; விடுமுறை இரத்து

மன்னார் மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மன்னாரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான அனைத்து போக்குவரத்துக்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளன.  இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்துவருவதுடன், அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்க உத்தியோகர்களின் விடுமுறைகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை புத்தளத்திலிருந்து படகுகள் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 பஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களின் அவசர தேவைக்காக கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க்கைதிகளை பார்வையிட தூதுக்குழு சிறைக்கு விஜயம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளை தூதுக்குழுவொன்று நாளை வெள்ளிக்கிழமை சென்று பார்வையிடவுள்ளது.  ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, தம்பர அமில தேரர் மற்றும் மன்னார் ஆயர் வண. ராயப்பு ஜோசப் ஆகியோரே வெலிக்கடை சிறைச்சாலைக்கு நாளை செல்லவுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை அவர்களுடைய குடும்ப உறவினர்களினால் பண்டிகை காலத்திலும் சென்று பார்வையிடமுடியாதிருந்தது.  சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களுடைய உறவினர்களுக்கு நத்தார் பெருநாள் மற்றும் வெசாக் ஆகிய தினங்களில் அனுமதியளிக்கப்படும். இந்த கைதிகள் யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச்சேர்ந்தவர்கள் என்பதனால் அவர்களுடைய உறவினர்களால் இவர்களை அந்த இரண்டு தினங்களில் கூட பார்வையிட முடியாதுள்ளது.

மன்னார் ஆயரிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை

மன்னார் ஆயர் வண. ராயப்பு ஜோசப்பிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புகழிடகோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னார் ஆயரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வது இது முதல் தடவையல்ல. அகதிகள் நாடுகடத்தப்படுதல் தொடர்பில் அவரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார்; தெரிவித்தனர். இலங்கை கடற்படையினரால் இவ்வாண்டு 2822 புகழிடகோரிக்கையாளர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். புகழிடகோரிக்கையாளர்களுக்கு வசதியளிப்பாளர்களாக இருந்த 200 பேர் உட்பட 450 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து 600 புகழிட கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.நா.வுக்கு இந்தியா-சீனா-பிரேசில் கூடுதல் நிதி

உலக அமைப்பான ஐக் கிய நாடுகள் சபையின் 2012-13ம் ஆண்டிற்கான பட் ஜெட்டை 5 சதவீதம் அதி கரித்து 540 கோடி டாலராக அதிகரிக்க பொதுசபை அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா, சீனா, பிரேசில் ரஷ்யா போன்ற வளரும் நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூடுதலாக தங் களது பங்கு நிதியை அளிக் கின்றன. ஐக்கியநாடுகள் சபை யில் 193 உறுப்பினர் நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் வழக்கமான செயல்பாட்டுக் கான பட்ஜெட் 24 கோடி யே 33 லட்சம் டாலராக அதி கரிக்கப்பட்டுள்ளது. இதன் படி 2012-13ம் ஆண் டின் பட் ஜெட் 515 கோடி டாலராக உயர்ந்தது. வளர்ந்து வரும் நாடுக ளான இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகள் தங் கள் பங்குத் தொகையில் கூடு தலாக தர வேண்டியுள்ளது. ஏமன், லிபியா, சூடான், தெற்கு சூடான் போன்ற நாடுகளின் 33 அரசியல் திட் டங்களுக்கு 56 கோடியே 60 லட்சம் டாலரை பொதுச் சபை அனுமதி அளித்துள் ளது. ஐரோப்பிய நாடுக ளான பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் நாடுக ளின் பங்குத்தொகை அளிப்பு திருத்தப்பட்ட பட்ஜெட் டில் குறைக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டுக்கு 24 மணி நேர மின்சாரம்

யாழ். குடாநாட்டு மக்களுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வழங்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் அடுத்த மாதம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதாக மின்சார சபை கூறியது. 3500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மின்சாரத் திட்டத்தினூடாக 24 மெகா வோட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. யாழ்ப்பாணத்தில் இடைக்கிடை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதோடு மின் விநியோகத்திலும் தடங்கல் காணப்பட்டது. இந்த நிலையில் சுன்னாகத்தில் புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி கடந்த ஜூனில் ஆரம்பிக்கப்பட்டது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு பரீட்சார்த்த மின் உற்பத்தியும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும் லங்கா டிரான்ஸ்போமர் நிறுவன பிரதம முகாமையாளர் கூறினார். சுன்னாகம் 24 மெகா வோர்ட் மின் உற்பத்தித் திட்டத்தினூடாக ஒரு இலட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைய உள்ளதாக அறிவிக்கப் படுகிறது. அடுத்த வருட நடுப் பகுதியாகும் போது யாழ்ப்பாணத்திற்கு நூறு வீதம் மின்சார வசதி அளிக்கப்பட உள்ளது. மின்சார சபையின் கீழ் உள்ள பெக்கோ நிறுவனம் இதற்கான நிதி உதவியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நட்பு நாடான ரஷ்யாவின் மூலம் நாம் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்

மனித உரிமை மீறல் குற்றச் செயல்களில் கடுமையாக தண்டிக்கப்பட வேண் டிய சில மேற்கத்திய வல்லரசு நாடுகள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது நாகரீகமான செயல் அல்ல என்று இலங்கையில் புதிய ரஷ்ய தூதுவராக பதவியேற்றுள்ள எலக்ஸாண்டரே கர்ச்சாவா கண்டனம் தெரிவித்தார். சிலர் மற்றவர்கள் கண்ணில் தூசி படிந்திருக்கிறதென்று கிண்டல் செய்வார்கள். ஆனால், அவர்கள் மாலைக்கண் பார்வையுடையவர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்த ரஷ்யத் தூதுவர், மேற்கத்திய, அபிவிருத்தி அடைந்த நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகளை தெரிவிப்பது தவறில்லை என்றும் அந்த ஆலோச னைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொண்டுவருவது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறினார். இவ்விதம் மேற்கத்திய நாடுகள் சில நடந்து கொள்வது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நாடுகள் அநாவசியமாக தலையிடுவதையே உறுதிப்படுத்துகிற தென்றும் அவர் கூறினார். (மேலும்......)

மார்கழி 27, 2012

தமிழ் இளைஞர்களின் பிணை மனு நிராகரிப்பு

தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாகக் கூறி கைதுசெய்யபபட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அண்மையில் தமிழகத்தில் கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும் பிணை கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் தாம் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டபோதும் எந்த விதமான வன்செயலிலும் ஈடுபடவில்லையென நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நீதிமன்றம் அவர்களது பிணை கோரிய மனுவை நிராகரித்துள்ளது.

தாய்லாந்தில் தகராறில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் நாடு கடத்தப்பட்டனர்

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலுள்ள விடுதியொன்றில் தகராறில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த 24 இளைஞர்களை தாய்லாந்து பொலிஸார் கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். மேற்படி நாடு கடத்தப்பட்ட 24 இளைஞர்களும் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதையடுத்து, விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர் மேற்படி இளைஞர்களை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

கூகுளில் அதிகம் 'செக்ஸ்' சொல்லை உபயோகித்த நாடாக இலங்கை: தொடர்ச்சியாக 8 வருடங்களாக முதல் 10 இடங்களுக்குள்!

இவ்வாண்டில் கூகுள் தேடல்பொறியில் 'செக்ஸ்' என்ற சொல்லை அதிகம் தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இணையத்தளங்களின் Google Trends எனப்படும் அதன் தேடல் பொறியில் தேடப்படும் சொற்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை அளிக்கும் இணையத்தளம் மூலமாகவே இவ்விபரம் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் இலங்கைக்கு அடுத்த படியாக இந்தியா உள்ளது. இப்பட்டியலில் உள்ள முதல் 10 நாடுகள் வருமாறு.  Sri Lanka,  India, Papua New Guinea, Ethiopia, Pakistan, Bangladesh, Vietnam,  Nepal, Somalia, Cambodia

குற்றப் பிரேரணையை அரசியல் மயப்படுத்தக்கூடாது

பிரதம நீதியரசருக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை அரசியல் மயப்படுத்தி நாட்டில் பாராளு மன்ற ஜனநாயகத்தை சீர்குலை யாமல் தக்கவைத்துக் கொள்வ தற்கு இந்நாட்டு பிரஜைகள் அனைவரும் தங்கள் பூரண ஒத் துழைப்பை வழங்க வேண்டுமெ ன்று மனித வளங்கள் துறைக்கு பொறுப்பான சிரேஷ்ட அமை ச்சர் டியு குணசேகர வேண்டு கோள் விடுத்துள்ளார். ஏற்கனவே, இடதுசாரி கொள் கையை கடைப்பிடிக்கும் அரசி யல் கட்சிகள் தங்களின் இந்த நிலைப்பாட்டினை ஜனாதிபதி க்கு எடுத்துக்காட்டியிருப்ப தாக தெரிவித்தார். இதே வேளையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவும் இதே கருத்தையே வலியுறுத்தியுள்ளார். இந்தப் பிரச்சினையை அரசியல் மயப்படுத்தி அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு பல வெளிநாட்டு நாசகார சக்திகள் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகளின் ஊடாக சதித்திட்டம் வகுத்து வருவதாகவும், இது விடயத்தில் அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் அரசாங்கத்தை ஆதரிக்கும் சட்டத்தரணிகளும், ஏனைய அரசியல் அவதானிகளும் கருத்து தெரிவித்துள்ளார்கள். இத்தகைய தேசத்திற்கு உலக நாடுகள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் சதி முயற்சியில் எல்.ரி.ரி.ஈ.யை ஆதரிக்கும் அமைப்புகளும், விரல்விட்டு எண்ணக்கூடிய புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் பின்னணியில் இருந்து பணத்தை வாரி இறைக்கின்றன என்றும் அவர்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு இன்று மலேசியா பயணம்
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று மலேசியா செல்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான மாவை சேனா திராஜா, சுமந்திரன், சுரேஷ் பிரே மச்சந்திரன், செல்வம் அடைக்கல நாதன், சிறிதரன், யோகேஸ்வரன் மற் றும் தான் உள்ளிட்ட குழுவினரே மலேசியா செல்லவிருப்பதாக அரியநேந்திரன் எம்.பி. குறிப்பிட் டார். 2010ஆம் ஆண்டு இந்தியாவின் கோவையில் முதலாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் நாளையதினம் மலேசியாவின் கோலாலம்பூரில் இரண்டாவது மாநாடு நடைபெறவுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, இந்தோனேசியா, இலங்கை, மொரீசியஸ், தாய்லாந்து, பர்மா, மியன்மார், ப்ரூனே, லண்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களில் தமிழ் தெரிந்த புரவலர்கள் யார் என்பதே தற்போதைய மக்களின் கேள்வி ஆகும்

Cell busted but LTTE men still in TN: Cops

 

Three more LTTE men are moving around in Tamil Nadu, investigators questioning the four LTTE operatives arrested on Wednesday have learnt.

One of the three, as part of a plan to revive the organisation in Sri Lanka, is said to be in Madurai, trying to bring together sympathisers of the outfit that had been destroyed by the Sri Lankan army in 2009. On Wednesday, based on information provided by the Sri Lankan army, Tamil Nadu Q branch sleuths raided a house at Pozhichalur near Pammal in suburban Chennai and arrested LTTE operatives S Suresh Kumar alias Chera Suresh, 34, D Udaya Doss, 39 , T Maheswaran, 33, and K Krishnamurthy, 29. Suresh Kumar, an electronics expert who lost his legs in an explosion during the Eelam war and now moves around on a wheelchair, told investigators that “three more LTTE operatives were roaming around in the state and one of them was in Madurai.” Though Suresh Kumar didn’t reveal their names, police teams have been formed to nab the three operatives. A ‘Q’ branch police officer said the “operatives planned to attack many places in Sri Lanka to create a law and order problem there.” Investigators said Krishnamurthy, who supplied water cans in the locality, befriended Udaya Doss and Maheswaran and took them to Suresh Kumar. The former LTTE operative trained them to make improvised explosive devices ( IEDs) and electronic circuits for a variety of bombs and planned to send them to the island nation. “Two of the four arrested men came to Tamil Nadu as refugees in 2001 and 2003, while the others managed to sneak into the state in 2009 when the Eelam war was in its final stages,” the officer said. During questioning, the arrested men said they had taken the house in Pammal on rent more than two months ago. Doss was a carpenter and Maheswaran a photo editor. (The Times of India)

தொலைந்துபோன யூதர்களெனக் கூறி இந்திய பழங்குடியினரை குடியேற்றும் இஸ்ரேல்

இஸ்ரேலில் இருந்து அழிந்த பழங்குடி யூத இனத்தினர் என கூறப்படும் இந்திய சமூகம் ஒன்றை இஸ்ரேலில் குடியேற அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்த இனத்தைச் சேர்ந்த 50 பேர் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலை சென்றடைந்தனர். ஏற்கனவே தம்மை தொலைத்த யூதப் பழங்குடியினர் என கூறும் 1,700 பேர் கடந்த தசாப்தத்தில் இஸ்ரேலில் குடியேறியுள்ளனர். எனினும் இந்த இனத்தினருக்கு விசா வழங்குவதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் அரசு நிறுத்தியது. இந்நிலையில் அந்த கொள்கையில் அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. (மேலும்......)

தூண்டுதல் காரணமாகவே யாழ். பல்கலையில் தீபமேற்றப்பட்டது - டக்ளஸ்

'தூண்டுதிலின் பேரிலேயே பல்கலைக்கழகத்தில் தீபமேற்றப்பட்டதென தவிர இறந்தவர்களை நினைவுகூர்ந்து அங்கு தீபமேற்றப்படவில்லை' என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டினார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இறந்தவர்களுக்கு தீபமேற்ற தடையில்லை. தடை விதிக்கவும் முடியாதெனன்றும் அவர் சுட்டிக்காட்டிய அமைச்சர், திட்டமிட்ட நோக்கத்துடன், குழப்பங்களை செய்துவிட்ட சிலர், நான்காயிரம் மாணவர்களின் கல்வியை குழப்பி விட்டார்கள் என்றும் கூறினார். (மேலும்......)

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன் பறக்கவிடப்பட்டிருந்த புலிக்கொடி

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டடிருந்தன. இந்த நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள பொதுநோக்கு மண்டபத்தின் தண்ணீர் தாங்கியின் மேல் இன்று காலை 6 மணியளவில் இந்த புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து காலை 7 மணிக்கு சம்பவம் இடத்திற்கு வந்த இராணுவத்தினர், புலிக்கொடியை அங்கிருந்து அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

உலகக் கோப்பையை வென்றவுடன் சச்சின் ஓய்வு அறிவிக்காதது ஏன்?

'உலகக் கோப்பையை வென்றவுடனே நீ ஓய்வு அறிவித்து இருக்கலாமே... ஏன் அப்படிச் செய்யவில்லை' என்று என் நண்பர்கள் பலரும் என்னிடம் நிறைய தடவை கேட்டிருக்கிறார்கள். நான் அப்படிச் செய்திருந்தால் 'Grand exit கிடைத்து இருக்குமே' என்று அவர்கள் சொல்வது சரிதான். ஆனால், உண்மையில் அதுபோன்ற எண்ணம் எனக்கு அப்போது தோன்றவே இல்லை. உலகக் கோப்பை என்பது இந்தியாவுக்கானது. அந்தக் கொண்டாட்டத் தருணத்தை எனக்கானதாக மாற்றிக்கொள்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. உலகக் கோப்பையை வென்றவுடன் நான் என் ஓய்வை அறிவித்து இருந்தால், எல்லோருடைய கவனமும் என்மீது மட்டுமே குவிந்து இருக்கும். அது இந்தியாவின் கொண்டாட்டத்துக்குரிய தருணமே தவிர, என்னுடைய சுயநலத்துக்கான நேரம் அல்ல. வெற்றி அணியின் ஓர் அங்கம் என்ற முறையில் அப்போது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள மட்டுமே தோன்றியது. அணியின் ஒவ்வொரு வீரரும் தியாகம் செய்து ஈட்டிய அந்த வெற்றித் தருணம் அனைவருக்கும் சொந்தமானது. அவை அனைத்தையும் எனது ஓய்வு அறிவிப்பால் அபகரித்துக்கொள்வது சரியானது அல்ல. அதை எல்லாம் கருத்தில்கொள்ளாமல் அப்போது நான் ஓய்வு அறிவித்து இருந்தால், எனது செயலுக்கு ஒருபோதும் என்னால் நியாயம் கற்பித்திருக்க முடியாது" என்று அந்தப் பேட்டியில் சச்சின் கூறி இருக்கிறார்.

மார்கழி 26, 2012

யாழ்ப்பாணத்தில் 

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் 45 பேர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 45 பேர் யாழ்ப்பாணத்தில்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்டகாலமாக மறைந்திருந்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும்  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.  இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.  இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது   நிரூபிக்கப்படுமானால்  இவர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்நீத்த உறவுகளுக்காக....

சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், இன்று தேசிய பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பல பாகங்களிலும் இவ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு, வவுனியா பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டன. 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 7ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்ற மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு தொகுதி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொகுதித் தலைவர் பரமானந்தம் தலைமையில் மட்டக்களப்பு நல்லையா வீதியல் உள்ள தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நினைவுதின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்ததுடன் நாடபளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்  மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.

மார்கழி 24 தோழர் றொபேட் 55 வது பிறந்தநாள்

(தோழர் சுகு)

எமது சமூகத்தின் வாழ்வைச் சீராக்குவதற்கு பலபேர் முயற்சித்திருக்கிறார்கள். சமூக அநீதிகள் ,பாரபட்சங்கள் ஒடுக்குமுறைகள், மூடநம்பிக்கைகளுக்கெதிராக பலரும் போராடி இருக்கிறார்கள் . தன்னலமற்ற பெருந்திரளானவர்கள் எமது சமூகத்தில் இருந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்கிறார்கள். மக்களின் வாழ்வை செம்மையாக்குவதற்கு சீராக்குவதற்கு இன்று வாழ்பவர்கள் பங்களிக்கமுடியும். பங்களிக்க வேண்டும். ஆனால் அவநம்பிக்கைகள்  அதிகரித்துள்ளன. மிகவும் நெருக்கடியான ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் தோழர் சுபத்திரன் -றஞ்சன்- றொபேட்டின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சகலவிதமான சமூகத் தழைகளிலிருந்தும் விடுதலை, அறிவு, நியாயத்தின் வெளிச்சத்தில் விடயங்களை அவர் நோக்கினார். தேசிய ஒடுக்கமுறைக்கெதிரான போராட்டத்திற்கப்பால் சமூக சமத்துவத்திற்கான அக்கறைகள்  அவரிடமிருந்தன. (மேலும்....)

விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளரான கவிஞர் புதுவை இரத்தினதுரை இராணுவத்தின் தடுப்புக்காவலில்?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளராக செயற்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் தடுப்புக்காவலில் உள்ளதாக சிங்கள ஊடகமொன்றை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்தவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை. போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார். ஏற்கெனவே இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பான சாட்சியமளித்திருந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் யோகரத்தினம் என்ற யோகியின் மனைவி, தனது கணவர் மற்றும், கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 50 பேரை பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக கூறியிருந்தார். இருப்பினும் புதுவை இரத்தினதுரை, பேபி சுப்பிரமணியம் உள்ளிட்ட மூத்த புலிகளின் தலைவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாமலேயே இருந்து வந்தது. தற்போது புதுவை இரத்தினதுரையின் நிலையை இலங்கை அரசு தெரிவிக்க கோரி இணையம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் இருந்து வெளியாகும் சிங்கள நாளேடொன்று புதுவை இரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் தடுப்புக் காவலில் இருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

கிழக்கு ஐரோப்பா, இந்தியாவில் குளிரால் பலர் பலி

கிழக்கு ஐரோப்பாவில் குளிரான காலநிலை காரணமாக இதுவரை 220 பேரளவில் பலியாகியுள்ளனர். இதில் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் வெப்பநிலை வழமையை விடவும் 10 முதல் 15 பாகைகளாக குறைந்துள்ளதோடு சைபீரியாவில் – 50 செல்சியஸாக பதிவாகியுள்ளது. இங்கு குறைந்தது 88 பேர் மரண மடைந் துள்ளனர். தவிர, உக்ரைனில் 83 பேர் பலியாகி யுள்ளதோடு போலாந்தில் 49 பேர் பலியாயினர். பல்கான்ஸில் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் வெப்பநிலை தற்போது வழமைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகிறது. வீடில்லாத பெரும்பா லானோரே இந்த மோசமான காலநிலையால் பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிருக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் திங்கட்கிழமை ஒருவர் பலியானார். வடமாநிலங்களில் குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் குளிர் வாட்டுகிறது. குளிருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை 10ஐ எட்டியது. ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் காணப்படுகிறது. சித்தோர்காரில் இரவு நேர வெப்பநிலை 5 டிகிரியாக இருந்தது.

கூடங்குளம் அணுஉலை பணிகள் துரிதப்படுத்தப்படும்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய உதவியுடன் நிறைவேற்றப்படும் 3, 4வது அணு உலைப் பணிகளை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் கூடங்குளம் அணு உலைப் பணிகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புடின், “கூடங்குளத்தில் முதலா வது அணு உலைப் பணிகள் செயல் வடிவம் பெற்று வருவது திருப்தி அளிக்கிறது. அடுத்ததாக இரண்டாவது அணு உலைப் பணிகள் விரைவுபடுத்தப்படும். மேலும் 3, 4வது அணு உலைப் பணிகள் தொடர்பான எரிபொருள் விநியோகம், கட்டுமானப் பணிகள், தொழில்நுட்பம் வர்த்தக பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தப்படும். உலகிலேயே சிறந்த தரத்துடன் கூடிய அணு உலை தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இந்தியாவைப் போல ரஷ்யாவும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது என்றார்.

தமிழ் அரசியலும் பெண்களும்

(ஞானசத்தி-ராஜி)

இனப்பிரச்சனை தீவிரமடைய  ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக பெண்கள் அரசியலில் போராட்டங்களில் பங்கு பற்றி   வந்திருக்கிறார்கள்.ஆனால் இன்று ஈழத்தமிழ் அரசியலில் பெண்களின் பங்கு நலிவடைந்து வருகிறது.இதற்கான காரணங்களை நாம் கண்டறிய வேண்டும். தமிழரசுக்கட்சி ,தமிழர் விடுதலைக் கூட்டணி ,இடதுசாரி கட்சிகளிலும்,  தொழிற்சங்கங்களிலும், பின்னர்; பல்வேறு இயக்கங்களில் பெண்கள் அங்கத்துவம் வகித்திருக்கிறார்கள். 1983 இனக்கலவரத்திற்குப் பின்னான காலப்பகுதியில்    பெருந்தொகையான பெண்கள் இந்த இயக்கங்களில் இணந்து செயற்பட்டனர். ஆனால் இன்று எந்த அரசியல் அமைப்புகளிலும் பெண்கள் அங்கத்துவம் வகிப்பதாகவோ ,அல்லது இணைவதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருப்பதாகவோ  அவதானிக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே பெண்கள் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம்  போன்ற அஹிம்சை வழி எதிர்பியக்கங்களில் தம்மையும் இணைத்துக்கொண்டனர். (மேலும்....)

மார்கழி 25, 2012

ராஜதந்திர மேதை "சாணக்கியன்" ஐயா சம்பந்தனுக்கு ஒரு பகிரங்க மடல்...

அரசியலில் சாணக்கியம் என்ற வார்த்தை கூறுகின்ற அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியன், அரசியல் மேதை மிக்கியாவில்லியன், மாமேதை மார்க்ஸ் எல்லாரையுமே விஞ்சி விட்ட அரசியல் மேதையே, சிங்களத்தின் குகையில் நின்று அஞ்சாது கர்ஜித்த கிழச் சிங்கமே ... இராஜதந்திரத்தால் கடந்த முப்பது ஆண்டுகள் தமிழனை தூக்கி நிறுத்திய தானை தலைவனே ... ஐயா...சம்பந்த சிகரமே...வணக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிங்கள் நாடாளுமன்றத்தில் உங்கள் கர்ஜனை கேட்ட போது ஏற்பட்ட புல்லரிப்பு தாங்க முடியாமல்தான் இதனை எழுதுகின்றேன்...ஐயா...நீங்கள் ஒரு புலி இல்லை சிங்கம் என நிரூபிக்கும் அப்படி ஒரு பேச்சை நான் கேட்டதே இல்லை... எப்படி ஐயா உங்களால் மட்டும் முடிகிறது..... அப்படியே போடு போடு என்று போட்டு விட்டீர்கள்... ஈழத் தமிரை காக்க உண்ணாவிரதம் இருந்த தியாகப் புயல் ஆனானப்பட்ட கலைஞர் கருணாநிதி எல்லாம் உங்கள் பேச்சின் முன் தூசு...ஐயா தூசு.. (மேலும்....)

ஊடகமே எல்லோருக்கும் இறுதியாக கை கொடுக்கிறது

கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலக்கரத்ன - ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டதை அடுத்து அதனோடு தொடர்புடைய சம்பவங்கள் தொடரொன்றே இடம்பெற்றது. இப்போது அச் சம்பவத் தொடர் அதன் உச்சக் கட்டமொன்றை அடைந்து இன்று பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றப் பிரேரணையொன்றின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார். மஞ்சுள திலக்கரத்னவின் அந்த அறிக்கை வரலாற்று முக்கயத்துவம் வாய்ந்ததாகவே பல அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் நீதித்துறை அவ்வாறு அறிக்கை வெளியிடும் மரபோ வழக்கமோ எந்தவொரு நாட்டிலும் இல்லை. (மேலும்....)

இனவாதம் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது - சோமவன்ச

இனவாத மற்றும் மதவாத நிலைமையொன்று மீண்டும் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையை அரசாங்கம் தனது ஆசிர்வாதமாகவே கருதி வருகின்றது என்று தெரிவித்த அவர், பல்வேறு விதமாக கோபதாபங்களை தோற்றுவிக்காமல் நீண்டகால நோக்குடன் செயற்படுமாறு இலங்கை வாழ் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். யார் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது எனவும் சோமவன்ச அமரசிங்க சுட்டிக்காட்டினார்.

சிகையலங்கார உரிமையாளருக்கும் விளக்கமறியல்

கல்விப்பொதுத் தராதரப் சாதாரணத்தரப்பரீட்சை விஞ்ஞான பாடத்திற்கான வினாத்தாள்களை பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்திலுள்ள சிகையலங்கார உரிமையாளர், பிரத்தியேக வகுப்புகளை நடத்திச்சென்றவர், பரீட்சைகள் திணைக்களத்தின் லினோ இயந்திர இயக்குனர், ஆகியோரையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் பிரத்தியேக வகுப்பின் ஆசிரியை மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஒருவரையும் நீதிமன்றம் ஏற்கனவே விளக்கமறியலில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ரிசானா விவகாரம்; ஒருவருக்கு 7 வருட சிறை

மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டின் ஊடாக திருகோணமலையைச்சேர்ந்த ரிசானா நபீக் என்பவரை சவுதி அரேபியாவுக்கு அனுப்புவதற்கு ஒத்துழைப்பு நல்கினார் என்று கூறப்படும் ஒருவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒத்துழைப்பு நல்கினார் என்று கூறப்படும் அப்துல் சலாம் என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 7 வருட சிறைத்தண்டனையை நேற்று திங்கட்கிழமை விதி;த்ததுடன் 10 ஆயிரம் ரூபாவையும் தண்டமாக விதித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அதி குற்றச்சாட்டப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிர்வரும் ஜனவரிமாதம் தண்டனை விதிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சந்தேகநபர்களும் கடந்த 15 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கைக்குழந்தையை கொலைச்செய்தார் என்ற குற்றச்சாட்டில்  ரிசானா நபீக்குக்கு சவுதி நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வவுனியாவில் அவசர நிலைமை பிரகடனம்

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக நிலவும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக வவுனியா பிரதேச சபை பிரிவு மற்றும் செட்டிக்குளம் பிரதேசங்களைச் சேர்ந்த 3,877 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இம்மக்களுக்கு தொடர்ந்து மூன்று தினங்களுக்கான உணவுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார். அத்துடன், மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளங்கள் பெருக்கெடுத்துள்ள நிலையில், 35 குளக்கட்டுகள் உடைப்புக்குள்ளாகியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, ஒளசதபிட்டிய முதல் செட்டிக்குளம் வரையான பிரதான வீதியில் வெள்ளம் நிரம்பியுள்ளதால் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் மூடப்பட்டிருந்த ஏ – 9 வீதி இன்று வழமைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று மாவட்டச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு பெற்ற 313 முன்னாள் புலிகள் பொங்கலன்று சமூகத்துடன் இணைப்பு

புனர்வாழ்வு பெற்று வரும் 313 முன்னாள் புலி உறுப்பினர்கள் தைப்பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் திகதி சமூகத்துடன் இணைக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வுக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். சுமார் ஒரு வருட கால புனர்வாழ்வு பயிற்சியை முடித்துக் கொண்ட மேற்படி 313 ஆண்களே தமது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்படவிருப்பதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். சமூகத்துடன் இணைக்கப்படும் புனர் வாழ்வு பெற்றோருக்கென விசேட கடன் திட்டமொன்றும் சிபாரிசு செய்யப் பட்டுள்ளது. இவர்கள் சுயதொழிலை ஆரம்பிப்பதற்கென ஆகக்கூடியது 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கென ஆகக்குறைந்தது 4 சதவீத வட்டியே அறவிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இவர்கள் தமது தனிப்பட்ட காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வார்களாயின் அரசாங்க அதிபர் அலுவலகங்களில் இதற்கென விசேடமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமூக-பொருளளதார மற்றும் நலன்புரி இணைப்பு அலுவலகங்களினூடாக தமது விடயங்களை தடையின்றி முன்னெடுக்க முடியுமெனவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

வட கொரியாவிடம் அமெரிக்காவை தாக்கும் அளவுக்கு ஏவுகணை தொழில்நுட்பம்

வட கொரியா ரொக்கெட் ஏவியதன் மூலம் அது 10,000 கிலோ மீற்றருக்கு அதிகமான தூரம் செல்லும் ஏவுகணையை மேம்படுத்தியிருப்பதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது. வட கொரியாவின் ரொக்கெட் கழிவுகளை ஆய்வு செய்தே தென் கொரியா இதனை தெரிவித்துள்ளது. இதன்மூலம் வட கொரியா மேற்கு அமெரிக்கா வரை தாக்கக்கூடிய ஏவுகணை சக்தியை பெற்றிருப்பதாக தென்கொரியா கூறியுள்ளது. எனினும் வட கொரியா நீண்டதூரம் தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது உறுதிப்படுத்தப்படவில்லை. வட கொரியா பல ஆண்டுகளாக அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். வட கொரியா கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி உன்ஹா- 3 என்ற ரொக்கெட்டை விண்ணுக்கு ஏவியது. செய்மதியை நிறுவுவதற்காகவே ரொக்கெட் ஏவப்பட்டதாக வட கொரியா விளக்கம் அளித்தது. எனினும் அது மறைமுகமாக ஏவுகணை சோதனையை மேற்கொள்வதாக சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனையொட்டி ஐ.நா. பாதுகாப்புச் சபையும் வட கொரியாவுக்கு கண்டனம் வெளியிட்டது.

விளாடிமிர் புடின் இந்தியா விஜயம்: ஆயுத ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் இராணுவ மற்றும் ஆயுத பரிமாற்றங்கள், ஒத்துழைப்புகள் குறித்த சில முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகிப்போரில் ரஷ்யாவானது மிக முக்கியமான இடத்தில் உள்ளது. இதில் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வியாபாரம் இவ்விரு நாடுகளுக்குமிடையில் இருந்து வந்துள்ள நிலையில் இந்த வியாபாரம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின் இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தகத்தை 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த எண்ணியுள்ளதாக கூறியுள்ளார்.

மார்கழி 24, 2012

மன்னாரில் மீண்டும் இராணுவத்தின் கெடு பிடி ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்குப்பின் மீண்டும் இராணுவத்தினர் புதிய காவலரன்களை அமைத்தல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் பொது இடங்களில் காவலரன்களை அமைத்திருந்த இராணுவத்தினர் தமது காவலரன்களை அகற்றிய நிலையில் அவ்விடங்களில் இருந்து இராணுவத்தினர் படைமுகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் மன்னாரில் இடம் பெற்ற கொள்ளைச்சம்பவம், கொலைச்சம்பவம் ஆகியவற்றை தொடர்ந்து மன்னாரில் மீண்டும் படையினரது கெடுபிடிகள் ஆரம்பித்துள்ளது. மன்னார் பகுதியில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையிலும்,பொது இடங்களிலும் மீண்டும் இராணுவ காவலரன்கள் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார் தாழ்வுபாடு வீதியூடாக வைத்தியசாலை வீதியை வந்தடையும் வாகனங்களின் இலக்கங்கள் பதிவு செய்யப்படுவதோடு உரிமையாளாகளின் பெயர், விபரங்களும் பதியப்படுகின்றது. இதே வேளை மன்னார் பொது விளையாட்டு மைதான சந்தியில் கடமையில் இருக்கும் இராணுவத்தினர் தாராபுரம் பிரதான வீதியூடாக மன்னார் வரும் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கில்கள் ஆகியவை நிறுத்தப்பட்டு அதில் பயணிப்பவர்களிடம் அங்கிருந்து வருகின்றீர்கள்? ஏங்கு செல்லுகின்றீர்கள் என்ற கேள்விகளை கேட்கின்றனர்.
பின் வாகன இலக்கங்களையும்,அடையாள அட்டை இலக்கத்தையும் பதிவு செய்வதாகவும் இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

அபுதாபியிலிருந்து 12 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

அபுதாபியில் தனியார் நிறுவனம் ஒன்று பலத்காரமாக தடுத்துவைத்து சேவையில் ஈடுபடுத்திய இலங்கையைச்சேர்ந்த 101 பணிப்பெண்களில் 12 பேர் இன்று திங்கட்கிழமை நாடு திரும்பினர். அபுதாபி முசாப் நகரிலுள்ள தனியார் சுத்திகரிப்பு நிறுவனத்திலேயே அவர்கள் பலாத்கரமாக தடுத்துவைக்கப்பட்டு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அந்த நாட்டிலுள்ள தொழில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமையவே 101 பெண்களில் 22 பேர்  விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தன் ஊடாகவே நாடு திரும்பினர். நீர்கொழும்பு, வென்னப்புவ, கம்பஹா,பூகொட மற்றும் ஹங்வெல்ல போன்ற பிரதேசங்களைச்சேர்ந்த 22 வயதிற்கும் 38 வயதிற்கும் இடைபட்டவர்களே இவ்வாறு நாட்டுக்கு திரும்பியுள்ளனர். பணிப்பெண்களாக தொடர்ந்தும் சேவையாற்ற முடியாதவர்களும் கர்ப்பப்பை சத்திரச்சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டியவர்களும் இவர்களில் அடங்குவதாக அந்நாட்டு வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்களில் இலங்கையர்கள் 300 பேர் இருப்பதாக நாடு திரும்பியவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் மழையால் 72,603 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையால் 19,502 குடும்பங்களைச் சேர்ந்த 72,603 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமைவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 6,900 குடும்பங்களைச் சேர்ந்த 24,026 பேரும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 6,248 குடும்பங்களைச் சேர்ந்த 27,123 பேரும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 6,354 குடும்பங்களைச் சேர்ந்த 21,454 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தந்தப் பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.  ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை, பதுரியா நகர், மாஞ்சோலை ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.  இப்பிரிவுகளிலுள்ள 57 குடும்பங்களைச் சேர்ந்த 167 பேர் பதுரியா நகர் அல்மினா வித்தியாலயத்திலும் மாஞ்சோலை அல்ஹிறா வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அனைத்துக் கிராம அலுவலகர் பிரிவுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகளிலுள்ள 382 குடும்பங்களைச் சேர்ந்த 1,285 பேர் 5 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட நில அதிர்வுகள்

மலைக்கு வெடிவைத்து அதிகாரிகள் பரீட்சிப்பு

அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் தொடராக உணரப்பட்ட நில அதிர்வின் காரணத்தைக் கண்டறியும் நோக்கில் கல் மலையொன்று வெடிவைத்து உடைக்கப்பட்டு பரீட்சிக்கப்பட்ட போதிலும் அதன் சப்தம் பூகம்பப் பதிவு நிலையங்களில் பதிவாகவில்லை என்று புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி என்.பி. விஜயானந்த நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம் நாட்டில் மழைக்காலம் ஆரம்பமான பின்னர் கடந்த ஒரு வார காலப் பகுதியில் எந்தவொரு நில அதிர்வும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சூரியனைச் சுற்றி வர்ண ஒளிவட்டம்

சூரியனைச் சுற்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை வர்ண ஒளிவட்டம் ஒன்று தென்பட்டதைத் தொடர்ந்து சிறுவர்களும், பொது மக்களும் அதனை பார்வையிட்டனர். ஞாயிற்றுக்கிழமை கல்முனைப் பகுதியில் சூரியனைச் சுற்றி சிறிய வர்ண நிறத்தி னாலான ஒளிவட்டம் ஒன்று தென்பட்டது. இதனை வெற்றுக் கண்ணால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் கல்முனைப் பகுதியிலுள்ள மக்களில், பலர் கறுப்பு கண்ணாடி அணிந்தும், தமது கையடக்கத் தொலைபேசி ஊடாகவும் வானில் தோன்றிய ஒளியை பார்வையிட்டனர். சிலர் கையடக்கத் தொலைபேசியூடாக புகைப்படம் வீடியோ மூலம் அதனை பதிவு செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இல்லாத பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எவ்வாறு அழைப்பாணை அனுப்ப முடியும்

இல்லாத பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எதிராக எவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப முடியும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று கேள்வியெழுப்பினார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டா ரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பணி முடிவடைந்துவிட்டது. விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப் பட்டவுடன் தெரிவுக்குழு இல்லாமல் போய்விட்டது. இவ்வாறான நிலையில் இல்லாத தெரிவுக்குழுவுக்கு எவ்வாறு நீதிமன்றம் அழைப் பாணை அனுப்ப முடியும் என்று அவர் தெரிவித்தார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து விசாரணைசெய்து சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அறிக்கை சமர்ப்பித்த வுடன் அதன் பணிகள் முடிவடைந்து தெரிவுக்குழு இல்லாமல் போய்விட்டது.

இந்திய, இலங்கை இரு தரப்பு உறவுகள் இராணுவ ஒத்துழைப்புகள் பழமைவாய்ந்தவை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு மிகவும் பழமை வாய்ந்தது. அபிவிருத்தி, பாதுகாப்பு, ஒத்துழைப்பு, மனித வள அபிவிருத்தி மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றவற்றுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கு கிறது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, ஒத்துழைப்பு அதிகரிக்கப் பட்டுள்ள அதேசமயம் பெரும் தொகையான இலங்கை இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வை மேலும் எடுத்துக் காண்பிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். பயிற்சிகளை முடித்துக் கொண்ட 10 பெண் இராணுவ அதிகாரிகள் உட்பட 157 இராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கேட யங்களை வழங்கினார். இதில் மாலைதீவைச் சேர்ந்த 2 இராணுவ வீரர்களும் அடங்குவர்.

டில்லியில் இளைஞர்கள் முற்றுகை போராட்டம் பொலிஸ் தடியடி, கண்ணீர்ப் புகை பிரயோகம்

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நீதி கேட்டு டில்லியில் சனிக்கிழமை, இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிவடைந்தது. தடுப்பு வேலிகளைத் தாண்டி குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் தண்ணீர் பாய்ச்சி அடித்தனர். கண்ணீர்ப் புகை, தடியடி பிரயோகம் செய்து போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இச்சம்பவத்தில் சிலர் காயமடைந்தனர். புதுடில்லி, விஜய் செளக் பகுதியில் கூடியிருந்த போராட்டக்காரர்களை பொலிஸார் பல முறை தடியடி நடத்தி துரத்தினர். மற்றொரு பகுதியில் போராட்டக்காரர்கள் கும்பலாக சேர்ந்து பொலிஸாரைத் துரத்தினர். இதனால், ராஜபாதை வீதியே கலவரப் பகுதியாக மாறியது. பஸ்ஸில் பயணம் செய்த மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரியும் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு அமைப்புகள் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

ராஜிவ் காந்தியின் மரணச் சான்றிதழ் பெற்ற பெண் யார்?

ஸ்ரீபெரும்புதூர் பதிவாளர் அலுவ லகத்தில் ராஜிவ் காந்தியின் மரணச் சான்றிதழ் வாங்கிய பெண் குறித்து மத்திய உளவுத்துறை பொலி ஸார் விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் வீதி யில் ஸ்ரீபெரும்புதூர் பதிவாளர் அலு வலகம் உள்ளது. சபீஹா பைதோஸ் (50) என்பவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை தனது கணவர் என்று விண்ணப்பித்து மரணச் சான்றிதழ் கேட்டுள்ளார். முகவரியில் தாதா சாகிப் தெரு, நிசான் சகித் ரோடு, ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம் என குறிப்பிட்டிருந்தது. இதனை பரி சீலனை செய்த பதிவாளர், சபீஹா பைதோசிடம் ராஜீவ் காந்தி இறந் ததற்கான சான்றிதழை கொடுத்தார். இதுபற்றி கேட்டபோது, உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, அவர் களது அனுமதி பெற்ற பின் மரணச் சான்றிதழ் வழங்கினேன் என்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய உளவுத்துறை பொலிஸார் விசாரணை நடத்தினர். அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் பதிவாளர் அலுவல கம் சென்று சபீஹா பைதோஸ் கொடுத்த விண்ணப்ப நகல் மற்றும் அவரது புகைப்பட த்தை பெற்றுள் ளனர். அவர் எப்போது வந்தார், அவ ருடன் வந்தவர்கள் யார் என்று தகவல்களை சேகரித்து, தலை மறைவான அவரை தேடி வரு கின்றனர்.  விசாரணைக்கு பின்னரே முழு மையான விவரம் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்தனர்.

2040 இல் பாரிய விண்கல் பூமியுடன் மோத வாய்ப்பில்லை

பூமியை நோக்கிவரும் 2011 ஏ. ஜி. 5 என்ற விண்கல் பூமியுடன் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை நாஸா உறுதி செய்துள்ளது. முன்னர் இந்த விண்கல் 2040 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு 500 இல் ஒரு வாய்ப்பு இருப்பதாக வானியலாளர்களால் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக் கழகத்தின் வானி யல்துறை விஞ்ஞானிகள் ஹவாயிலிருக்கும் ஜெமி நோர்த் தொலைநோக்கியை கொண்டு இந்த விண்கல்லை அவதானித்து பூமியுடன் மோத வாய்ப்பு இல்லை என உறுதி செய்துள்ளனர். இதனை கலிபோர்னியாவில் இருக்கும் நாஷாவின் பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்கள் தொடர்பான நிலையமும் உறுதி செய்துள்ளது. இந்த விண்கல் 2040 இல் பூமியுடன் மோதும் ஆபத்து மறைந்து விட்டது என அது அறிவித்துள்ளது. 140 மீற்றர் குறுக்களவு கொண்ட 2011 ஏ. ஜி. 5 என்ற விண்கல் பூமி யுடன் மோதி னால் இரண் டாவது உலக போரில் வெடித்த அணுகுண்டை விடவும் பல்லா யிரக்கணக்கு சக்தி வாய்ந்ததாக இருக் கும் என விஞ்ஞா னிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் விண்வெளியில் சுமார் 4700 விண்கற்கள் பூமிக்கு அபாயகரமான வகையில் மிதந்து கொண்டிருப்பதாக நாஷா கணித்துள்ளது

இந்திய மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: இந்திய ஊடகங்கள்

இந்திய கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்தே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றுள்ளதாகவும் நாகப்படினம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 7 பேர், நம்பியார் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர், புதுவை மாநிலம் காரைக்கால்மேடு பகுதியைச்ச் சேர்ந்த 18 பேர் உள்ளிட்ட 32 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. மீனவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய 4 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாகவும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

காணாமல் போனால் சர்வதேச அமைப்புகளிடம் முறையிடக்கூடாது: படைத்தரப்பு

தங்களுடைய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தைச் சேர்ந்த யாராவது காணாமல் போய்விட்டால் அவர்கள் தொடர்பில் சர்வதேச அமைப்புகளிடம் முறையிடக்கூடாது என்று படையினர் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தைச்சேர்ந்த  மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

மார்கழி 23, 2012

ஏ-9 வீதி மூடப்பட்டது

வடக்கில் சில இடங்களில் பெய்து வருகின்ற கடும் மழையை அடுத்து ஏ-9 வீதி தற்காலிகமாக மூடபட்டுள்ளது. இந்த அடை மழையினால் வவுனியா,  நொச்சிமுனை ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்தே ஏ-9 வீதியின் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா செட்டிக்குளம் வீதியில் பாவன்குளம் வெள்ளத்தில் மூழ்கியதனால் அந்த வீதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கில் பல தாழ் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு...

கடந்த வாரத்திற்கு முதல் வாரம் இதே தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் தொடர்பாகப் பலர் எம்முடன் தொடர்பு கொண்டு தத்தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் காரணமாக கல்வியைத் தொடரமுடியாது இடைநடுவில் கைவிட்டோர், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர் கள், தமது உறவுகளை இழந்தவர்கள், யுத்தகாலத்தில் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு நேரடியாக முகங்கொடுத்தோர் எனப் பலதரப்பட்டவர் களும் எம்முடன் உரையாடினர். சிலர் தமது பெயர்களைத் துணிவாகக் குறிப்பிட்டும், பலர் தமது பெயர்களைக் குறிப்பிடாதும் தொலைபேசி வாயிலாகவும், கடிதங்கள், மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டி ருந்தனர். (மேலும்....)

இந்து சமுத்திரத்தில் தொடரப்போகும் ஆதிக்கப் போட்டி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நான்கு நாள் இலங்கைப் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக கடந்த ஜூன் முதலாம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஜெனரல் பிக்ரம் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும். இவர் இந்திய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்திக்கொள்வதற்காக நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவையெல்லாம் இந்தியாவுடன் தரைவழி எல்லைகளைக் கொண்ட நாடுகள் என்ற வகையில், தரைவழி எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள இராணுவத்தின் தளபதி என்ற வகையில் அதற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. (மேலும்....)

36 பேருடன் கூடிக் கலைந்த யாழ். உண்ணாவிரத நாடகம்!

தந்தை செல்வா சதுக்கத்தில் தமிழ ரசுக்கட்சி கண்டு கொண்ட புதிய வியூகம் சாத்வீக போராட்டம். இவர்கள் மாணவர்களுக்காக போராட வில்லை தமது அரசியலுக் காகவே இந்த உணவுத்தவிர்ப்பு ஆர்ப்பாட்டம் என பொதுமக்கள் தெரிவித்துக்கொண்டிருக்கும் போது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தது இனம் தெரியாத கும்பல் ஒன்று. உண்ணாவிரதப் போராட்டம் என தகரப்பந்தலில் இருந்து விட்டு போகநினைத்து வந்து 36 பேர் அடங்கிய குழுவிற்கு பெரும் ஏமாற்றமே கிடைத்தது. உண்ணாவிரத போராட்டம் என்ற போர்வையில் கொழும்பிலிருந்து ஏஸி வாகனங்களில் வந்தவர்களுக்கு தமிழர்களது வலி என்ன என உணர்த்தியது போராட்டக்களம். காரணம் இவர்கள் இளைப்பாற தற்காலிகமாக போடப்பட்டிருந்த தரப்பந்தலின் தகரங்களை இரவோடு இரவாக சுழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்து தமிழர்களது வலியை புரிய வைத்தது இனம் தெரியாத கும்பல் ஒன்று. (மேலும்....)

இனவாதம் பேசியோர் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை

13ஆவது திருத்த சட்டத்தை ஆதரிப்போர் பிரிவினைவாத சக்திகளின் நிழல்களாம்

13ஆவது திருத்தத்தை ஆதரித்த 31 பேரும் பிரிவினைவாத சக்திகளின் நிழல்கள் என ஜாதிக ஹெல உறுமயவும், துரோகிகள் என ஜே.வி.பியும் தெரிவித்துள்ளமை அவர்களின் அரசியல் அறியாமையை காட்டுகிறது. மாறாக 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு எதிராக நான் உட்பட கையெழுத்திட்ட 31 பேரும் தேசத்தை பிரிவினையிலிருந்து காக்கும் நாட்டை நேசிப்பவர்களாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தைவிட அதிகமான தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரச பங்காளி கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் 13ஆவது திருத்தத்தை ஒழித்து நாட்டை பிரிவினைவாதத்திற்கு அழைத்துச் செல்லப்பார்க்கும் தேசத் துரோகிகளாகும். தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் ஜே.வி.பியும் இந்த துரோக பட்டியலில் உள்ளடங்குவார்கள். தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை சுதந்திரத்திற்குப் பின் சிங்கள தலைவர்கள் வழங்காததினாலேயே கடந்த 30 வருட காலம் யுத்தத்தினால் சிங்கள மக்களும் பாரிய துன்பத்திற்கு உள்ளானார்கள் என்பதை இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களுக்கு புரியவில்லையா?

தமிழருக்காக குரல் கொடுக்கும் குதியை இழந்துவிட்டாராம்!

உண்மையை வெளிப்படுத்திய சம்பந்தனுக்கு கிடைத்துள்ள பரிசு

தலைமைப் பதவியை மாவைக்கு வழங்குமாறு கடும் அழுத்தம்

டிசம்பர் 7ஆம் திகதி சம்பந்தன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, உலகெங்குமுள்ள பத்துக் கோடி தமிழ் மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் பெரும் அதிர்ச்சியினால் வாயடைத்துப் போயுள்ளனர். இனிமேலும் தமிழரின் உரிமையைப் பற்றிப் பேசும் தகுதியை சம்பந்தன் இழந்துவிட்டார். எனவே, அவர் கூட்டமைப்பிலிருந்து விலகி உபதலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை தலைவராக்குவதற்கு வழிவிட வேண்டும்.(மேலும்....)

அரசியலுக்கு அப்பால் செயற்படவேண்டும் - பிரதம நீதியரசர்

நீதியரசர்கள், நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் அரசியலுக்கு அப்பால் செயற்பட வேண்டும் என்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கவலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதம நீதியரசர் தொடர்ந்து உரையாற்றுகையில், நீதியரசர்கள் ,நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் அரசியலுக்கு அப்பாலும் அச்சம்,பயம் மற்றும் சந்தேகத்திற்கு அப்பாலும் சென்று செயற்படவேண்டும். அதற்கான இயலுமை அவர்களிடத்தில் இருக்கவேண்டும். ஜனநாயகம் நிலைத்து நிற்பதற்கு நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்கவேண்டும். அது அத்தியாவசியமானதாகும் என்றும் அவர் சொன்னார்.

ஹலால்..ஹலால்..!!

சமூக வலைத்தளங்கள், சமூக ஆர்வலர்கள், சிறியோர் பெரியோர் முதல் இன்றைய நாளில் ஒவ்வொரு இலங்கை முஸ்லிம் குடிமகனையும் அறிந்தோ அறியாமலோ இன்று வந்து சேர்ந்திருக்கும் விடயம் ஹலால் சான்றிதழ் பற்றிய விவகாரம். அதிலும் குறிப்பாக சிங்கள இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவிக்கொண்டு வரும் இஸ்லாமிய எதிர்ப்பு விவகாரங்களில் ஹலால் விவகாரம் முக்கியமான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. விளைவு, சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் ஹலால் உணவுகளுக்கு எதிரான நுண்ணறிவுடனான எதிர்ப்புப் பரப்புரைகள், அதனை எதிர்கொள்ள சோனகர்களின் எதிர்ப்புப் பரப்புரைகள் என விடயம் சூடு பிடித்திருக்கிறது. நவீன உலகம் ஒவ்வொரு மனிதரின் வாழ்வுரிமையும் அவர் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று (பேச்சளவிலாவது) கங்கணம் கட்டியிருக்கிறது, அதற்கேற்பாற்போல தீவிரவாதமும், பழமை வாதமும் கூடவே வளர்ந்து உலகின் இயக்கத்தை சமப்படுத்திக்கொள்கிறது. (மேலும்....)

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக ஜோன் தெரிவு

அமெரிக்கா புதிய வெளியுறவுத்துறை செயலாளராக அமைச்சர் ஜோன் கெரியை அதிபர் ஒபாமா தெரிவு செய்துள்ளார். ஹிலாரி கிளிண்டன் பதவி விலகுவதை தொடர்ந்தே ஜோன் கெரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ஒபாமாவின் முதல் நான்கு ஆண்டு ஆட்சியில் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத் துறைச் செயலாளராக பணியாற்றினார். ஜனாதிபதி ஒபாமாவின் வலது கரமாக இருந்து உலக நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை வலுப்படுத்தியது மட்டுமன்றி உலக அளவில் கிளின்டன் பெரும் புகழ் பெற்றிருந்தார்.  2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்;கு வசதியாக இரண்டாவது முறையாக ஹிலாரி பதவியை தொடர விரும்பவில்லை என்று கருதப்படுகிறது. இந்நிலையில், தன்னை தேசிய அரசியலில் அறிமுகப்படுத்திய 'குரு' என்று கருதும்  ஜோன் கெரியை அமெரிக்கா புதிய வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி ஒபாமா வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இணையத்தளம் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட 100 சீனப் பிரஜைகள் கைது

இலங்கையில் இணையத்தளம் மூலம் பணமோசடியில் ஈடுபட்டுவந்த சீனப்பிரஜைகள் 100 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேற்படி மோசடியில் ஈடுபட்டுவந்த சீனப்பிரஜைகள் கொழும்பிலும் அதனையண்டிய பிரதேசங்களிலும் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளில் 74 ஆண்களும் 26 பெண்களும் அடங்குகின்றனர்.  இவர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் விசாவில் இலங்கைக்கு வருகைதந்து சட்டவிரோதமாக கையடக்கத்தொலைபேசிகள், கடிகாரங்கள் மற்றும் வீட்டு உபகரணங்களை விற்பனை செய்கின்ற சீனப்பிரஜைகளை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக கொழும்பு ,கண்டி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பிரதான நகரங்களில் மேற்படி சீனப்பிரஜைகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மார்கழி 22, 2012

செல்போன் குண்டுகள் தயாரிக்க திட்டம்

கைதான விடுதலைப்புலிகளிடம் இருந்து நவீன வெடி பொருட்கள் பறிமுதல்

இலங்கை போரில் கால் செயல் இழந்தவரும் சிக்கினார்

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் அண்ணாநகர் பம்மல் நல்லதம்பி தெருவில் இலங்கை வாலிபர்கள் 4பேர் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது பற்றி கியூ பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூப்பிரண்டு சம்பத்குமார் தலைமையிலான போலீசார்,அந்த வீட்டில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த உதயதாஸ், சேரா சுரேஸ்குமார், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிடிபட்டனர். இலங்கை தமிழர்களான 4பேரும் விடுதலைப்புலிகள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து லேப்டப், செல்போன்கள் மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கையில் குண்டு வைப்பதற்கான சதி திட்டத்தில் 4 பேரும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. (மேலும்....)

வைத்திய நிபுணருக்கு வாள்வெட்டு

யாழ். வைத்தியர்கள் கண்டன பகிஷ்கரிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் எஸ்.திருமாறன் இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்கான சம்பவத்தைக் கண்டித்து யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் 48 மணித்தியால பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். வைத்தியர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை தோன்றியிருக்கும் சந்தர்ப்பத் தில், இச்சம்பவத்தைக் கண்டித்து 48 மணித்தியாலங்கள் பணிப் புறக்கணிப் புப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் பிராந்தியத் தலைவர் டொக்டர் நிமலன் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை, தெல்லிப்பளை, சாவகச்சேரி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 48 மணித்தியாலங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை தொடரும். இன்று சனிக்கிழமை வடமாகாணத்திலுள்ள அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இமாசலத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்

இமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ¤க்கு 36 தொகுதிகள் கிடைத்தன. பாஜக 26 தொகுதிகளிலும் இமாசல் லோகித் கட்சி ஒரு இடத்திலும் சுயேச்சைகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் பகுஜன் சமாஜ, சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இத்தேர்தலில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. சிம்லா (ஊரகம்) தொகுதியில் போட்டியிட்ட வீரபத்ர சிங், 19,033 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஈஸ்வர் ரோகலைத் தோற்கடித்தார். வீரபத்ர சிங், இப்போது மக்களவை உறுப்பினராக உள்ளார். சமீபத்தில் முறைகேடு புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அவர், இமாசலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் மேற்கொண்டது. எனவே முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் அவருக்கு சிரமம் ஏதும் இருக்காது என கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழக விவகாரம்

புனர்வாழ்வு நிறைவுபெற்றதும் மாணவர்கள் நால்வரும் விடுதலை செய்யப்படுவர்

புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் நான்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் அவர்கள் விடுவிக் கப்படுவார்கள் என யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நேற்றுத் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள், குறித்த நான்கு மாணவர்களின் பெற்றோர், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாண வர்கள் ஆகியோரை பலாலி இராணுவத் தலைமையகத் தில் நேற்று முற்பகல் சந் தித்தபோதே யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இவ்வாறு கூறினார். கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் விடு விக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சில ரின் தூண்டுதல்களாலேயே தாம் அவ் வாறான நடவடிக்கையில் ஈடுபட்ட தாக அவர்கள் கூறினர். அதனால் அவ ர்கள் விடுவிக்கப்பட்டனர். தடைசெய் யப்பட்ட இயக்கமொன்றுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளனர். அவர்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்படுவது அவசியம். அதுவரை அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் மனு

சபாநாயகருக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்த தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும், சபாநாயகருக்கும் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது. நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் எத்தகைய வழக்கின்போதும் இரு தரப்பினதும் நியாயங் களை செவிமடுக்க நீதிமன்றம் கட்டுப்பட்டுள்ளது எனவும், அதன் பிரகாரம் பிரதம நீதியரசர் தெரிவுக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவிலுள்ள பிரதிவாதிகளுக்கும், சபாநாயகருக் கும், பாராளுமன்ற செயலாளருக்கும் அழை ப்பாணை விடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழு தெரிவித்தது. தனிநபராலோ, ஏதும் நிறுவனத்தினாலோ மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதுகுறித்து விசாரிப்பதற்கும் மீளாய்வு செய்வதற்கும் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.

குஜராத்தில் நரேந்திர மோடி 4வது முறையாக முதல்வராக பதவியேற்பு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. நான்காவது முறையாக மோடி முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். குஜராத்தில் மொத்தம் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் 61 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும், தேசிய அளவில் பாஜகவுடன் கூட்டணியின் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிட்டு ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ¤ம் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளி யான குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தி லேயே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வென்றுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் மோடியும், பா.ஜ.,வும் 117 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளன. ஒருவேளை பா.ஜ., 93 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அங்கு நாங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருப்போம். மோடி, காங்கிரஸை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றுள்ளார். ஆகையால் அது உண்மையான வெற்றி அல்ல இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மார்கழி 21, 2012

21.12.2012 உலகம் அழியாது!

  • மாயன் இன வழித் தோன்றல்களே நம்பிக்கை
  • வதந்திகளை நம்புவோரால் இலாபம் - மெக்சிக்கோ

மாயன் நாட்காட்டி இன்றுடன் (டிசம்பர் 21) முடிவடைவதையொட்டி அதனை எதிர்கொள்வதற்கு சீனா, அமெரிக்கா முதல் மெக்சிகோவரை பலர் தயாராகியுள்ளனர். இந்த நாட்காட்டி முடிவதனால் உலகம் அழியும் என்ற வதந்தி உலகெங்கும் பரவி இருப்பதால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் உஷார் நிலையில் உள்ளன. மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்படும் மாயன் இனத்தினரின் 5,125 ஆண்டு சுழற்சியை கொண்ட நாட்காட்டி இன்றுடன் முடிவடைகிறது. எனினும் இந்த நாட்காட்டியின் முடிவுக்கு பின்னர் என்ன நிகழும் என்பது குறித்து மாயன் இனத்தவர் எந்த தகவலும் விட்டுச் செல்லவில்லை. ஆனால இதுகுறித்து ஊடகங்கள், இணையதளங்கள் என நவீன உலகில் பல ஊடகங்களும் வதந்திகளும் பரவியுள்ளன. இதில் நாட்காட்டி முடிவுடன் உலகம் அழியும் என்ற வதந்தி அனைத்து ஊகங்களை விடவும் முன்கொண்டு வரப்பட்டுள்ளது. (மேலும்....)

சம்பந்தரின் நிதானம்

(சுகு ஸ்ரீதரன்)

தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு இரஜவரோதயம் சம்பந்தர் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நீக்குப்போக்குகள் இருந்தாலும் யதார்த்தமும் பொறுப்புணர்வும் புத்திசாலித்தனமும் அதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றைய இலங்கையின் நிலையில் சமூகத்தின் எதிர் காலம் இருப்பு கருதி பேசவேண்டியிருக்கிறது. பெரும்பான்மை சமூகத்தின் நியாயமான தரப்பின் , இலங்கையின் அனைத்த சமூகங்களின், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கருத்து நிலை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எமது கோரிக்கைகளை முன் நகர்த்த வேண்டும். (மேலும்....)

நாகரிகத்தின் உச்சத்தில் திகழ்ந்த மாயன் இனத்தவர்

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்றநாடுகள் பரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்திய கால அமெரிக்காவில் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது. இந்த நாகரித்தைச் சேர்ந்த மக்களே. கி. மு. 2600 காலப் பகுதியில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்து முறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டடக் கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும்.  (மேலும்....)

உலகெங்கும் மழை வீழ்ச்சி அதிகரிப்பு

முன்னைய காலங்களைப் பார்க்கிலும் இப்போதெல்லாம் உலகெங்கும் மழைவீழ்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெள்ளப்பெருக்கும் அதிகரித்துச் செல்கிறது. பல்வேறு நாடுகளும் அடிக்கடி வெள்ளப் பெருக்கை எதிர்கொள்கின்றன. மழையும் வெள்ளமும் அதிகரித்துச் செல்வதற்கான காரணங்களை சூழல் பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள் விளக்கி வருகின்றனர். எமது பூமி நாளும் பொழுதும் படிப்படியாக உஷ்ணமடைந்து கொண்டு செல்கிறது. மனித செயற்பாடுகளே இதற்கான காரணமென்பது யாவரும் அறிந்த விடயம். புவி வெப்பமடைவதன் விளைவாக ஏற்படுகின்ற மாற்றங்களில் நீர் ஆவியாகுவதன் அதிகரிப்பும் ஒன்றாகும். புவியின் வெப்ப அதிகரிப்புக் காரணமாக உலகிலுள்ள அத்தனை நீர் நிலைகளிலும் இருந்து கூடுதலான நீர் ஆவியாகி மேலே சென்று மழையாகப் பொழிந்து தள்ளுகிறது. எனவேதான் மழை வீழ்ச்சி அதிகரிக்கிறது.

யாழ். பல்கலைக்கழகம்

ரூ. 654.4 மில்லியனில் 400 அறைகளுடன் விடுதி

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக 400 அறைகள் கொண்ட விடுதியொன்றை நிர்மாணிக்கவும் கிளிநொச்சியில் பொறியியல் பீடமொன்றை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியது. யாழ். பல்கலைக்கழகத்தில் 6000 மாணவர்கள் கற்பதோடு 1600 வெளி மாணவர்களும் கற்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி 654.4 மில்லியன் செலவில் ஆண், பெண் விடுதி நிர்மாணிக்கப்படும். இது தவிர கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடமொன்று 2437 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படும். 2013ல் ஆரம்பிக்கப்பட்டு 5 வருட காலத்தில் நிர்மாணப் பணிள் நிறைவடையும்.

சமாதானத் தூதுவராகா மீண்டும் நோர்வே

பிலிப்பைன்சில் அழிவுகள் ஆரம்பமாகிறது!

பிலிப்பைன்ஸ் மாவோயிஸ்ட் கட்சிக்கும் பிலிப்பைன்ஸ் அரசிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை கடந்த நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் சமாதான தூதராக நோர்வே செயற்படுகிறது. இன்று நோர்வே சமாதானக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிலிப்பைன்ஸ் முழுவதும் இரண்டு பகுதிகளிடையேயும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை டிசம்பர் 20ம் திகதியிலிருந்து 26 நாட்களுக்குப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றது. பிலிப்பைன்ஸ் அரசும் மாவோயிட் தலைவர்களும் 2013 ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் நெதர்லாந்தில் சந்திப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என நோர்வே நாட்டின் சமாதானத் தூதுவர் ரூ லென்ட் தெரிவித்தார். இலங்கையில் நோர்வே நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையின் இரத்தவாடை இன்னும் வீசிக்கொண்டிருக்க பிலிப்பைன்சில் தலையிடுகிறது. தமது முன்னைய அனுபவங்களிலிருந்தும் அண்மைய இலங்கை அனுபவங்களிலிருந்தும் பிலிப்பைன்ஸ் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சிக்கலான காலம் இது. நோர்வே எப்போதும் சமாதானத் தூதராக இருந்ததில்லை அழிப்பிற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் அமரிக்காவின் கருவியாகவே இருந்துவந்திருக்கிறது. ஈழத்தில் நோர்வே எவ்வாறு அழிவுகளைத் திட்டமிட்டது என்பது குறித்த ஆய்வுகள் கூட ஆவணமாக இல்லாமல் வியாபாரிகளை விதைத்துவிட்டு ஆர்ப்பாட்டமின்றி தனது வேலையைத் தொடர்கிறது நோர்வே.

நாடுகடந்த தமிழீழ அரசின்அடுத்த தேர்தல் திறமையுள்ள விசுவாசமான வேட்பாளர்கள் தேவை

நாடுகடந்த தமிழீழ அரசின் முதல் தேர்தல் நடந்து மூன்று வருடங்களுக்குள் அடுத்த தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசின் மதியுரைக் குழுவினரின் சிபார்சின் அடிப்படையிலேயே எமது முதல் தேர்தல் நடந்தது. மக்களிடமும் இதையே கூறி எமது தேர்தலை நடாத்தினோம். தற்பொழுது செயற்படும் பாராழுமன்றத்தின் இயங்குகாலம் முதலாவது தேர்தல் நடைபெற்ற் மே 2, 2010 இருந்து மூன்று வருடங்களுக்கானது. இதன் அடிப்படையிலேயே யாப்பு தயாரிக்கப்பட்டு அவை செயற்படத் தொடங்கியது. எமது அடுத்த தேர் தல் 2013ம் ஆண்டு மே 2ம் திகதிக்கு முன் நடைபெற வேண்டும். தற்போதைய பாராளுமன்றம் கலைக்கபட வேண்டிய கடைசி நாள் 2013ம் ஆண்டு ஏப்ரல 1ம் திகதியாகும். இதை மாற்றவோ அல்லது மறுக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.  (மேலும்....)

மஞ்சள் மழையைத் தொடர்ந்து நில அதிர்வு, விருத்தாசலத்தில் தொடர் பரபரப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விருத்தகிரிகுப்பத்தில் மஞ்சள் மழை பெய்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் நில அதிர்வும் உணரப்பட்டிருக்கிறது. விருத்தாசலம் - கடலூர் சாலையில் மக்புல் காலனியில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. திடீரென இப்பகுதியில் நில அதிர்வை உணர்ந்திருக்கின்றனர். வீட்டு சமையல் அறையில் இருந்து பாத்திரங்கள் உருண்டோடியதால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர். வீடுகளின் சுவர்களில் லேசான விரிசல்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர். மஞ்சள் மழையைத் தொடர்ந்து நில அதிர்வும் உருவானதால் அப்பகுதி பரபரப்புக்குள்ளானது.

நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை, நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி?

பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின்  கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டுள்ள்னர்.பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று பகல் 12.45 மணி அளவில் தனது காரில் வந்த மகாதேவன், கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாற்றின் பாலத்தில் வந்தபோதுடிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்லார். இதனையடுத்து காரைவிட்டு இறங்கிய அவர், திடீரென  ஆற்றில் குதித்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கலும், டிரைவரும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஆற்றில் குதித்து சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை மீட்டனர். இன்று காலை ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே மகாதேவன், கோபத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற நிலையில், இச்சம்பவம் கர்நாடக இசைக்கலைஞர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (மேலும்....)

"என்னை காப்பாற்றுங்கள்... நான் உயிர் வாழ விரும்புகிறேன்...!"- டெல்லி மாணவி உருக்கம்

"என்னை காப்பாற்றுங்கள்... நான் உயிர் வாழ விரும்புகிறேன்...!"  என்று டெல்லியில் 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் பலாத்காரம்  செய்யப்பட்டு,சிகிச்சை பெற்று வரும் மாணவி உருக்கமாக கூறியுள்ளார். மாணவியை பலாத்காரம் செய்த கும்பல் அவரை இரும்பு கம்பியால் கொடூரமாக  தாக்கியுள்ளது. இதில் அவரது வயிறு மற்றும் சிறுகுடல் பகுதி பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. அவரது சிறுகுடலில் நோய் தொற்று பரவிய காரணத்தால் இதுவரை  5 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குடல் பகுதிகள் வெட்டி  எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவருக்கு 5 சதவீத சிறுகுடல் மட்டுமே  எஞ்சியிருப்பதாகவும், இதனால் அவர் இனிமேல் எவ்வித ஆகாரமும் சாப்பிட முடியாது  எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். (மேலும்....)

மார்கழி 20, 2012

21.12.2012 உலக அழிவு என்பது ஆதாரமற்ற கட்டுக்கதை - நாசா

2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழிவடையும் என்ற வதந்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா" மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பூமிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்நிறுவனம் திட்ட வட்டமாகக் கூறியுள்ளது. பூமி மூன்று நாட்களுக்கு இரு ளடையும் என்ற கருத்துக்களு க்கோ, பூமியின் மீது விண்கற்கள் மோதும் என்பதற்கோ எவ்வித மான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களும் இல்லையென்றும், அவ்வாறான பாரிய அசம்பாவிதங்கள் தொடர்பான கதைகள் யாவும் கற்பனையில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் என்றும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. (மேலும்....)

யாழ். மற்றும் காங்கேசந்துறையில் 133பேர் கைது

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இருந்து சிறுகுற்றம் புரிந்த 133பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெப்ரி இன்று தெரிவித்தார். இதன்போது, கடந்த வாரத்தில் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 43 பேரும், அடிகாயம் ஏற்படுத்திய 33 பேரும், சந்தேகத்தின் பேரில் 19 பேரும், அனுமதிபத்திரமின்றி சாராயம் வைத்திருந்த 08 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 28 பேரும், சட்டவிரோத மணல் ஏற்றிய ஒருவர் உட்பட 133 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இலங்கைக்கு இராணுவ பயிற்சி வழங்க விரும்பும் இடமாக இந்தியா

இலங்கை இராணுவ அதிகாரிகளை பயிற்றுவதற்கு இந்தியா விருப்பப்படும் இடமாக தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்த இந்தியாவின் என்.டீ.டி.வி தொலைக்காட்சி நிறுவனம், இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை இராணுவ அதிகாரிகள் 870பேருக்கு இதுவரையில் இந்தியா பயிற்சியளித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. 2011ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தினர் 820பேர் இந்திய இராணுவ நிறுவனங்களில் பயிற்சி எடுத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள மேற்படி தொலைக்காட்சி நிறுவனம், இவ்வருடத்தில் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர், புதுடில்லியிலுள்ள அதி விருப்பத்துக்குரிய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.  இலங்கையுடனான இராணுவ தொடர்புகளை சீனாவும் பாகிஸ்தானும் அதிகரித்துள்ள போதிலும் இலங்கை இராணுவத்தினரை பயிற்ற மிகவும் விருப்பப்படும் இடமாக இந்தியா காணப்படுகின்றது.

பாரம் தாங்க முடியல்லையப்பா....?

பனிச்சங்கேணி பாலம் சேதம்! மட்டு - கொழும்பு பயணிகள் பாதிப்பு

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு செல் வதற்கு இருந்த ஒரே ஒரு தரை வழி போக் குவரத்து பாதையான பனிச்சங்கேணி மற்றும் வாகரை, ஊடாக செல்லும் பாதையி லுள்ள பனிச்சங்கேணி பாலம் நேற்று காலை சேதமடைந்ததால் பயணிகள் இதனால் பயணிப்பதற்கு மிக வும் சிரமப்பட்டு வருகின்றனர். எந்தவொரு வாக னமும் இந்த பாலத் தினூடாக செல்ல முடியாதவாறு சேதம டைந்துள்ளதாகவும் பயணிகள் கயிற்றின் உதவியுடன் பாலத்தை கடப்பதாகவும் இதற்கு இராணுவத்தினர் உதவி வருவதாகவும் வாகரை பிரதேச செயலாளர் எஸ். ராகுலநாயகி தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டதையடுத்து பயணிகள் பனிச்சங்கேணி பாலத்தினூடாக வாகரை சென்று அங்கிருந்து திருகோணமலை மாவட்டத்தின் ஊடாக ஹபறணைக்கு சென்று அங்கிருந்து கொழும்பு நோக்கி செல்கின்றனர்.  இந்நிலையில் பனிச்சங்கேணி பாலம் நேற்றுக் காலை சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் எஸ். ராகுலநாயகி தெரிவித்தார்.

சிரியாவை நோக்கி ரஷ்ய யுத்த கப்பல்கள் பயணம்

சிரியாவில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை வெளியேற்றுவதற்காக ரஷ்யா தனது யுத்த கப்பல்களை மத்திய தரைக் கடற்பகுதிக்கு அனுப்பியிருப்பதாக ரஷ்ய செய்திச் சேவை செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சிரிய தலைநகரில் கிளர்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டு வருவதையிட்டு பஷர் அல் அஸாத் அரசு கவலையடைந்திருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிரியாவில் கடந்த 21 மாதங்களாக தொடரும் மக்கள் எழுச்சி போராட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டு வருவது குறித்து மொஸ்கோ அவதானத்தை செலுத்தியுள்ளது. குறிப்பாக டமஸ்கஸின் மையப்பகுதிக்கு 2 மைல்கள் தூரத்தில் இருக்கும் பலஸ்தீன அகதி முகாமான யார்மூக்கில் கடும் மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக கிளர்ச்சியாளர்கள் கடந்த இரு வாரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சிரியாவின் பல பகுதிகளிலும் உள்ள இராணுவ தளங்களையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பை மேற்கு மற்றும் அரபு நாடுகள் சிரிய மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகரித்துள்ளன. எனினும் அரசு மற்றும் கிளர்ச்சியாளர் களுக்கு இடையிலான மோதல்களால் இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய அரசுக்கு எதிராக ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களே தற்போது உள்நாட்டு யுத்தமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குஜராத்-  பா.ஜ.க. முன்னிலை; இமாச்சல் -  காங்கிரஸ் முன்னிலை

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

குஜராத் முன்னணி நிலவரம்:

பா.ஜ. க  - 116
காங்கிரஸ்  - 63
மற்றவை - 3

குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.

இமாச்சல் முன்னணி நிலவரம்:

காங்கிரஸ்   - 36
பா.ஜ.க.  - 25
மற்றவை -  7

இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ. க பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கு ஆளும் பா.ஜ.வுக்கும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் போட்டி கடுமையாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. எனினும், பா.ஜ.வை விட காங்கிரஸ் சில இடங்களை கூடுதலாகப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் கூறியுள்ளன.

மார்கழி 19, 2012

வடக்கு - கிழக்கில் இராணுவப் பிரசன்னம் குறித்த சம்பந்தனின் நாடாளுமன்ற உரை

கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினங்கள் தொடர்பான வரவு - செலவுத்திட்டத்தின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

வடக்கு - கிழக்கில் இராணுவப் பிரசன்னம் குறித்து அந்த உரையில் சம்பந்தன் எம்.பி. உண்மையில் என்ன கூறியிருந்தார்..? அவரது முழு உரையின், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு வருமாறு...


எனது தலைவர்கள், எனது சொந்த சகாக்கள் எல்.ரி.ரி.ஈயினால் கொல்லப்பட்டனர். நானும் எல்.ரி.ரி.ஈ.யின் கொலைப்பட்டியலில் இடம்பெற்றிருந்தேன். ஏன்? நீங்களோ எங்களை எல்.ரி.ரி.ஈயின் பிரதிநிதிகள் என்று அழைக்கின்றீர்கள். புலிகளால் கொல்லப்படவேண்டியவர்களாக நாங்கள் இருந்தமையால்தானா நீங்கள் எங்களை எல்.ரி.ரி.ஈ.யினரின் பதிலி (பிரதிநிதிகள்) என்று அழைக்கின்றீர்கள்? எல்.ரி.ரி.ஈயின் கொலைப்பட்டியலில் நாங்கள் இடம்பெற்றிருந்த காரணத்தினால் தான் நீங்கள் எங்களை எல்.ரி.ரி.ஈயின் பிரதிநிதிகள் என அழைக்கின்றீர்கள்? அவர்கள் யுத்தநிறுத்தத்துக்கு முன்வந்து பேச்சு நடவடிக்கைகளுக்குள் நுழைந்தபோது பிணக்கிற்கு அரசியல் ரீதியான அமைதித் தீர்வு ஏற்படுவதற்காக எல்லோரும் அவர்களோடு சேர்ந்து பணியாற்றவேண்டியிருந்தமை இயல்பானதே. இப்போது எல்.ரி.ரி.ஈ. இல்லை. எல்.ரி.ரி.ஈ. அகற்றப்பட்டுவிட்டது. போய்விட்டது. (மேலும்...)

21 ஆம் திகதி உலகம் அழியாது மாத இறுதியில் பூமியதிர்ச்சி ஏற்படும்

உலகத்தின் அழிவு நாட்களாக 2012 ஆம் டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தினங்கள் வர்ணிக்கப்பட்ட போதிலும் இதில்ஆனால், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அதாவது இவ்வருடத்தின் இறுதி சனிக்கிழமையன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும். இதன்தாக்கம் இந்தியாவிற்கு காணப்படும் என்று விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்தன தெரிவித்தார். 2019ஆம் ஆண்டில் பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி என்பவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும். 2004ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் 2013 ஆம் ஆண்டில் விண்கற்கள் விழும் என்ற எச்சரிக்கை என்பவை தொடர்பில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஊடகங்களில் தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையாகியதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சம உரிமைக்கான போராட்டம்...

சம உரிமைகளுக்கான இயக்கம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ கெடுபிடிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் என ஏராளமானோர் இதில் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.

தில்லியில் பயங்கரம்  ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம்

தலைநகர் தில்லியில், ஓடும் பேருந்தில், ஒரு மாண வியை பலாத்காரம் செய்து ஒரு கும்பல் அட்டூழியம் செய்துள்ளது. இதைத் தடுக்க முயன்ற மாணவியின் நண்பரை அக்கும்பல் அடித் துத் தூக்கி வெளியே வீசி விட்டது. தலைநகர் தில்லியில் பெண்களின் மானத்திற்கும், உயிருக்கும் சற்றும் பாது காப்பு இல்லை என்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அங்கு பாலியல் பலாத் காரங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் வியாழனன்று இரவு ஓடும் பேருந்தில், 23 வயது இளம் பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதைத் தடுக்க முயன்ற அவ ரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது. பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாணக் கோலத் தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளனர். அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுள்ளார்.

'இராணுவத்தினரை திருமணம் செய்யுமாறு தமிழ்ப் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்'

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தினரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க.வின் தலைவருமான மு.கருணாநிதி, இது தொடர்பில் இந்திய அரசாங்கம் ஆராய்ந்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில், மாவீரர் தினத்தை அனுஷ்டித்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் எனவும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் என்பதன் சுருக்கமான 'யாழ்' என்று கூறினாலே சிங்களவர்கள் கோபப்படுகின்றனர். யாழ்ப்பாணம் உலக தமிழ் மாநாட்டின் போது தமிழ் அறிஞர்கள் தாக்கப்பட்டனர். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது எனவும் அவர் நினைவூட்டினார். இவ்வாறான நிகழ்வுகளை நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். கூடவே கலைஞர் மூன்று பெண்களைத் திருமணம் செய்ததையும் நினைவு கூர்ந்தால் நலமாக இருக்குமே....?

வெனிசுலா மாநிலங்களின் கவர்னர் தேர்தல்  சாவேஸின் சோசலிசக் கட்சி மகத்தான வெற்றி!  

வெனிசுலாவில் ஞாயி றன்று நடைபெற்ற மாநிலங் களுக்கான கவர்னர் தேர்த லில் மொத்தமுள்ள 23 மாநி லங்களில் 20 மாநிலங்க ளைக் கைப்பற்றி ஜனாதிபதி ஹியூகோ சாவேஸின் சோச லிசக் கட்சி மகத்தான வெற்றிபெற்றுள்ளது. வெனிசுலாவில் கடந்த அக்டோபர் மாதம் ஜனாதி பதி தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்றாவது முறை யாக ஜனாதிபதி சாவேஸ் போட்டியிட்டார். அவர் கடந்த 2011ம் ஆண்டின் மத்தியிலிருந்து கேன்சர் நோய்க்காக கியூபத் தலை நகர் ஹவானாவில் உள்ள புகழ்பெற்ற கேன்சர் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனி னும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக மக்களின் பேரா தரவோடு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய சோசலிசக் கட்சி பிரச்சார ஒருங்கி ணைப்பாளர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ், இது ஒரு மாபெரும் வெற்றி. இதன் மூலம் வெனிசுலாவின் மூலை முடுக்குகளிலெல் லாம் சோசலிசம் பரவி யுள்ளது என்றார். சாவேஸ் பதவிக்காலம் அடுத்த மாதம் 10ம் தேதி துவங்குகிறது. அவர் 30 நாட் களுக்குள் பதவியேற்கவில் லை யெனில் அங்கு மீண் டும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்பது குறிப் பிடத்தக்கது.

மழை, வெள்ளம், மண்சரிவு: 77000 பேர் பாதிப்பு; 8500 பேர் இடம்பெயர்வு

  • 15 பேர் உயிரிழப்பு

  • மீட்புப் பணிகளில் முப்படை, பொலிஸ்

  • குருநாகல் மாவட்டம் மிக மோசமாக பாதிப்பு

  • 85% குளங்கள் நிரம்பின; வான் கதவுகள் திறப்பு

நாட்டில் கடந்த இரு நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டதோடு மக்களின் இயல்புவாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார நேற்றுத் தெரிவித்தார். வடக்கு கிழக்கு பருவப்பெயர்ச்சி மழை மற்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அலை வடிவ குழப்பநிலை என்பனவே இச்சீரற்ற காலநிலைக்கு அடிப்படைக் காரணம் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதம வானிலையாளர் டி.ஏ.ஜயசிங்க ஆராய்ச்சி கூறினார். (மேலும்...)

சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்க ஆஸி - இலங்கை கூட்டு செயற்குழு

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் செ ல்லும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இரு நாடுக ளும் இணைந்து, கூட்டு செயற்குழு வொன்றை உருவாக்கியிருப்பதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் செயலாளரும், இணைந்த செயற்குழுவில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியக் குழுவின் தலைவரு மான மார்டின் பொவல்ஸ் தெரிவித் தார். இலங்கை பாது காப்பு அமைச்சின் செயலாளர் கோட்டா பய ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை திணைக்களத்தின் பதில் செயலாளர் மார்டின் பொவல்ஸ் ஆகியோரின் இணைத்தலைமையில் இந்த செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் எவ்விதமான புகலிடக் கோரிக்கையையும் முன்வைக்க முடியாது. அவ்வாறு நுழைபவர்கள் உடனடியாகத் திருப்பி அனுப்பப்படுவார்கள் அல்லது மானுஸ் தீவு, நாவுறு தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தங்கவைக்கப்படு வார்கள். எக்காரணம் கொண்டும் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சிரியாவில் பலஸ்தீன முகாம் சுற்றிவளைப்பு

சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள பலஸ்தீன அகதி முகாம் அரச படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்தே அரச படை அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளது. சிரியாவில் இருக்கும் மிகப்பெரிய பலஸ்தீன அகதி முகாமான யார்முக் பகுதியில் மோதல்கள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து பல குடியிருப்பாளர்களும் வெளியேற ஆரம்பித்துள்ளனர். சிரியாவில் இருக்கும் சுமார் 500,000 பலஸ்தீனர்கள் சிரிய அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பிரிந்து செயற்படுகின்றனர். இந்நிலையில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் யார்முக் முகாமில் இருந்து பல திசைகளிலும் வெளியேறி வருவதாக அங்கிருக்கும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் அயல் நாடான லெபனானுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சிரியாவின் தென்பகுதி நகரான டராவில் இருக்கும் பலஸ்தீன முகாம் ஒன்றையும் அரச படை சுற்றிவளைத்திருப் பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மார்கழி 18, 2012

புலிகளை நினைவுகூருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - ஜனாபதி

தெற்கில் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகள் நடத்தய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி. நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் ஜே.வி.பி. பிரிக்க போராட்டம் நடத்தினார்கள் அத்துடன் ஜே.வி.பி. இன்று தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல.  யுத்தம் முடிந்து சில ஆண்டுகளேயான நிலையில் புலிகள் இன்று தடைசெய்யப்பட்ட அமைப்பு. புலிகளை நினைவு கூறுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் ஜே.வி.பி.யினர் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

13ஆவது திருத்தத்திற்கு எதிராக சண்டியர்களும் ஆதரவாக துரோகிகளும் நாடகம் நடிக்கின்றனர் - ஜே.வி.பி

13ஆவது திருத்தத்திற்கு எதிராக சண்டியர்களும் ஆதரவாக துரோகிகளும் அரசாங்கத்திற்குள் தோன்றி புதியதொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டுள்ளனர். ஜனாதிபதியே ஆட்டுவிக்கின்றார் என்று ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் எம்.பி.யுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டிலுள்ள உண்மையான பிரச்சினைகளை மூடி மறைத்து மக்களை திசைத்திருப்பவே இந்த நாடகம் அரங்கேற்றப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால் நாம் மாகாண சபையை பிரிப்பதில் நீதிமன்றம் வரை சென்று வழக்காடி வெல்வோம் என்பதை கூற முன்வருகின்றனரா...? ஜேவிபி யினர்.

மன்னார் முதல் பொத்துவில் வரை 60-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

இலங்கையின் தென் பிராந்திய கடல் பகுதி வளி மண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருப் பதன் விளைவாகவே மப்பும் மந்தாரமும் மிக்க மழைக் காலநிலை காணப்படுவதாக வளி மண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். இதன் விளைவாக மன்னார் குடா முதல் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 60- 70 கிலோ மீற்றர்கள் வேகத்தில் காற்று வீசும். அதனால் இப்பிரதேச கடற்பரப்பு இடையிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் கிழக்கு, ஊவா, வடமத்தி மற்றும் மாத்தறை, ஹம் பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் அவர் கூறினார். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப் படி ஆகக் கூடிய மழை மொன ராகலை மாவட்டத்திலுள்ள உள்கிட்டிய வில் 262.4 மில்லி மீற்றர்கள் வரை பெய்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

சட்டவிரோதமாக ஆஸி. வந்தால் 72 மணி நேரத்தில் நாடு கடத்தல்

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் செல்பவர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப் பப்படுவார்கள் என அவுஸ்திரே லியாவின் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் நேற்றுத் தெரிவித்தார். ஆட்கடத்தல்காரர்களின் சதிகளுக்கு ஏமாந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு இலங்கையர்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். எனவே, வீணாக பணத்தைச் செலவுசெய்து, உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்க வேண்டாம். கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரை 800 இலங்கையர்கள் அவுஸ்திரேலியா விலிருந்து திருப்பியனுப் பப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வரு பவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் திருப்பி அனுப்பிவைக்கப் படுவார்கள். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு அங்கு எந்தவிதமான விசேட சலுகைகளும் வழங்கப்படாது. அவர்கள் திருப்பியனுப்பப்படுவார்கள். ஆட்கடத்தல்காரர்களின் சதி வலைகளில் சிக்க வேண்டாம். சட்டவிரோதமாக படகு கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் பெரும்பாலானவர்கள் பலர் கூடுதல் பணம் ஈட்டுவதற்காகவே வருவதாகக் கூறுகின்றனர். அவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்கள் அங்கு எவ்வித பணத்தையும் ஈட்டமுடியாது.

ஜப்பான் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி

ஜப்பான் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயக கட்சி அரிதிப் பெரும்பான்மை ஆசனங்களுடன் வெற்றியீட்டியுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி பாரிய தோல்வியை சந்தித்த நிலையில், அதன் தலைவர் யொஷிஹிகோ நொடா தலைமைப் பதவியில் இருந்து விலகியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஷின்கோ அபெலின் லிபரல் ஜனநாயக கட்சி பாராளுமன்ற கீழ் சபையில் மொத்தமுள்ள 480 ஆசனங்களில் 294 ஆசனங்களை வென்றுள்ளது. அத்துடன் கூட்டணியான கொமைடோ கட்சி 31 ஆசனங்களை வென்றுள்ளது. இதனால் எதிர் கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் ஆளும் கட்சியின் ஆசனங்கள் 230 இல் இருந்து 57 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் தாம் எதிர்பார்த்ததை விடவும் மக்கள் ஆதரவளித்திருப்பதாக புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் ஷின்கோ அபெ குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானை விட சீனாவே நமக்கு பெரும் சவால்

இந்தியாவுக்கு பாகிஸ்தானை விட சீனா தான் பெரிய சவால் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மியான்மரில் மூன்று நாள் பயணம் மேற்கொண்ட பின் ஞாயிற்றுக்கிழமை குர்ஷித் இந்தியா திரும்பினார். முன்னதாக சிறப்பு விமானத்தில் அவர், பி. டி. ஐ. செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, சீனாவுடன் இருக்கும் எல்லைத் தகராறா, பாகிஸ்தானுடன் நிலவும் நம்பிக்கையின்மையா எது பெரிய சவால்? என்ற கேள்விக்குப் பதிலளித்து குர்ஷித் கூறியதாவது :- நமது உலகளாவிய பார்வை என்ற ரீதியில் சீனா மிகவும் முக்கியமானது. பொருளாதாரம், ஸ்திரத்தன்மை என்ற ரீதியிலும் அந்த நாடு முக்கியமானது. சீனாவுடன் நாம் பலதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளோம். ஆசியாவிலும் மற்ற பகுதிகளிலும் சீனா முக்கியமான கூட்டாளியாக விளங்க முடியும். நாம் ஐ.நா. சபையில் செய்ய விரும்புவதை சீனாவால் செய்ய முடியும். இந்தியாவுக்கு பாகிஸ்தானை விட சீனாதான் பெரிய சவால் என்றார்.

மார்கழி 17, 2012

நல்லிணக்க அரசியலும் இனவாத அரசியலும்

தேவன் (கனடா)

தமிழீழப் போரையும், இறுதி ஈழ யுத்தத்தையும் ஆதரித்து உசுப்பேத்தின தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான தரப்பினருக்கு ஐ.நாவின் இரகசிய அறிக்கை பற்றியோ, மனித உரிமை பற்றியோ கதைப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. இறுதி யுத்தம் நடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை மீண்டும் வலியுறுத்த வேண்டி உள்ளது. மாவிலாறு அணையைப் பூட்டியது, ஐரோப்பிய யூனியன் போர்க் கண்காணிப்புக் குழுவை வெளியேற்றியது, சமாதான காலத்தில் அதிகளவிலான யுத்த மீறல்களில் ஈடுபட்டது, இறுதி யுத்தத்தைத் தன்னிச்சையாக ஆரம்பித்தது, 48 மணி நேர யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத்தாதது என, இவைகள் அனைத்தையும் புலிகளே செய்தார்கள். இதற்குப் பின்பலமாக இருந்தவர்கள் த.தே.கூட்டமைப்பினரும், அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களும், அமைப்புகளும்தான் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. (மேலும்...)

உலகம் தவறான பாதையிலிருந்து நல்வழிக்கு.....

(சுகு- ஸ்ரீதரன்)

இன்று உலகத் தலைவர்களை எடுத்துக் கொண்டால் சாதாரண மக்களின் சமூக பொருளாதார வாழ்வை மேம்படுத்துவது மனித உரிமை ஜனநாயகம் பற்றி அக்கறை கொண்டவர்கள் அருந்தலாகவே காணப்படுகிறார்கள். ஆனால் மானிடம் பற்றிய அக்கறை உள்ளவர்களும் அங்காங்கு உலகில் வாழத்தான் செய்கிறார்கள். உலகளாவிய அளவில் இந் தலைவர்கள் சமூக ஆர்வலர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று உலகம் எதிர் நோக்கும் நெருக்கடியான சவாலான பாதையிலிருந்து நல்வழியில் செல்வதற்கு இவர்களால் உதவ முடியும். (மேலும்...)

உலகம் அழியும் என்பது பெரும் முட்டாள் தனம்

“உலகம் டிசம்பர் மாதம் 21ம் திகதி அழியும் என்பது முட்டாள் தனமானது. இதுகுறித்து பெரியார் கல்வி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்” என்று கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2012 டிசம்பர் 21 ஆம் திகதியோடு உலகம் முடிந்துவிடும், அழிந்து விடும், மாயன் கலண்டரில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டு விட்டது என்று ஒரு வதந்தியை பரப்பி வருகின்றனர். பரிகார பூஜை, புனஸ்காரம் என்று பக்தி வியாபாரம் செலுத்திட இது ஒரு புது உத்திபோல நவீன கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  இது ஆதாரமற்ற அறிவியல், வானவியல், ஆகியவற்றிற்கு முற்றிலும் மாறான கற்பனை, கட்டுக்கதை, என்று பிரபல நாசா அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மூத்த ஆய்வாளர் டாரன்யோமென்ஸ் தெரிவித்துள்ளார்.

மண்டேலாவுக்கு அறுவைச் சிகிச்சை

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், நிறவெறிக்கு எதிராக போராடியவருமான நெல்சன் மண்டேலாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக கடந்த வாரம் பிரிட்டோரியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவரது பித்தப்பையில் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் பித்தப்பை கற்கள் அகற்றப்பட்டன. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், அவரது உடல் நலம் தேறி வருவதாகவும் ஜனாதிபதி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வான்பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தும் மர்ம பொருள்

இலங்கையின் வான்பரப்பில் கடந்த சில நாட்களாக அடையாளம் காண முடியாத பறக்கும் பொருள் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. மாயன் கலண்டரின்படி உலகம் அழியப் போகிறது என்ற பீதி உலகம் முழுவதையும் ஆட்டுவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இலங்கையின் வான்பரப்பில் நள்ளிரவில் மர்ம பொருள் பறந்து செல்வதை பலரும் பார்த்திருக்கின்றனர். பீதியை ஏற்படுத்தக்கூடிய வேற்று கிரகவாசிகளின் நடமாட்டமோ என்ற அச்சமும் இலங்கையர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் இலங்கையின் பல பகுதிகளில் சிகப்பு மழை பொழிந் திருந்தது. இந்த நிலையில், இது தொடர்பான ஆராய்ச்சியை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஜெமினிட் என்ற விண்கற்களின் மழை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பெய்யும் என்றும் இலங் கையின் வான்பரப்பில் தென்படுவதும் அதுவே என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

அரசாங்க தாதிகள் 19ம் திகதியன்று அடையாள வேலை நிறுத்தம்

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாடு தழுவிய ரீதியில் புதனன்று 19 ஆம் திகதி 24 மணித்தியாலய அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளும். உயிர்பாதுகாப்பு சேவைகள், அத்தியாவசிய சேவைகள், அதிதீவிர சிகிச்சை கண்காணிப்புச் சேவைகள், அவசர சத்திர சிகிச்சைகள் ஆகியவற்றுக்குப் பெரும் பாதிப்புக்கள் ஏற்படா வண்ணம் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும். லேடி ரிட்ஜ்வே சிறுவர் ஆஸ்பத்திரி காசல் வீதி பிரசார ஆஸ்பத்திரி, டி சொய்ஸா பிரசவ ஆஸ்பத்திரி ஆகியவற்றின் மனிதாபிமானத்தின் பேரில் வேலை நிறுத்தம் நடைபெறமாட்டாது. 600 சுகாதார நிலையங்களில் 25,000 தாதி மார் வேலை நிறுத்தங்களில் பங்கு கொள்வர். தமது தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் செயற்படுவார் களானால், வேலை நிறுத்தம் தொடர்பாக மீண்டும் சிந்தித்துப் பார்க்கலாமென சங்கத் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

மக்களைப் புறந்தள்ளி எந்தத் தீர்மானங்களையும் எடுக்க முடியாது

வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்க ப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் விருப்பத்தின் படியே தெரிவு செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன்; மக்களைப் புறந்தள்ளி எந்தத் தீர்மான ங்களையும் எடுக்க முடியாதென்றும் கூறினார்.  வவுனியா மாவட்டத்தில் சகல பிரதேசங் களும், எவ்வித பாகுபாடுகளுமின்றி அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இதில் இனம், மதம் பார்ப்பதில்லை எங்கு தேவை இருக்கின்றதோ அங்கு முன்னுரிமையளித்து அபிவிருத்திகளை செய்கின்றோம். பிரதேசத்தில் அபிவிருத்திகளை செய்கின்ற போது, மக்களின் தேவைக்கு முன்னுரிமை யளித்து சகல மக்கள் பிரதிநிதிகள் கருத் துக்களையும் உள்வாங்கி திட்டங்களை தயாரிக்க வேண்டும். இந்த மாவட்டம் இன்று அமைதியாக காணப்படுகின்றது. மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிப்பது சிலரின் தேவையாகவுள்ளது. இதற்கு இடம்கொடுக்க முடியாது.

மார்கழி 16, 2012

யாழ். பல்கலைக்கழக துர்ப்பாக்கிய சம்பவம், தமிழ் எம்.பி ஒருவரே காரணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரச்சினை வடக்கில் இருக்க வேண்டுமென விரும்புகின்றது. அவர்கள் அதை வைத்து கொண்டு அரசியலை முன்னெடுக்கலாம். சவப்பெட்டி விற்பனை செய்பவர் ஒருவர் மற்றவர் எப்போது மரணம் அடைவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்லலாம். ஆகவே, அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதை விரும்புவதில்லை. பிரச்சினைகள் மேலும் முற்றிப் போவதையே அவர்கள் விரும்புகின்றனர். காலாகாலம் புதிய பிரச்சினைகளை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒருசில தமிழ் பத்திரிகைகள் இதற்கு துணைபுரிகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் நாம் அவதானத்துடன் இருக்க வேண்டும். (மேலும்...)

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் முழுமையாக வெளியேற தேவையில்லையா?

சம்பந்தனின் தனிப்பட்ட கருத்தே அன்றிஅது தமிழ்க் கூட்டமைப்பின் கருத்தல்ல!

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தாம் கோரவில்லை என நாடாளு மன்றத்தில் சம்பந்தன் ஆற்றிய உரை அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அப்பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பெரும்பாலும் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களையே பேசுகின்றனர். கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தும் அல்ல என அரியநேத்திரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கி லிருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாகும். சம்பந்தனின் உரையை ஒட்டுமொத்த கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடி யாது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் பேச்சு தனிப்பட்ட கருத்தாம். இது எப்படியிருக்கு...?

சுயரூபக் கோவை

பெயர்: சிவசக்தி ஆனந்தன்

தொழில்: அரசியல்வாதி என்று ஒருசிலர்தான் கூறுகிறார்கள்

உண்மையான தொழில்: முல்லைத்தீவு காட்டில் விறகு வெட்டுவது

சைட் பிஸினஸ்: வசூல் ராஜா கதாபாத்திரம்

வருமானம்: செலவிருந்தால்தானே வருமானம் தேவை

பொழுதுபோக்கு: அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுவது

அதிகம் இரசிப்பது: பத்திரிகைகளில் எப்போதாவது பிரசுரமாகும் தனது செய்திகளைப் பார்த்து

அசைக்க முடியாத பலம்: தமிழ்க் கூட்டமைப்பில் தனது கட்சி மூலமாக இணைந்திருப்பது

அசைக்கக்கூடிய பலம்: வேறென்ன எம்.பி பதவி ஒன்றுதான்

எதிர்பார்ப்பு: பாராளுமன்ற பதவியை ஆயுட்காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை

நண்பர்கள்: ஊரிலுள்ள பெரும் சண்டியர்கள்

எதிரிகள்: வன்னியில் அத்துமீறி நிலம் அபகரிப்போர்

மறந்தது: ஆயுதப் போராட்டம்

மறக்காதது: அறிக்கைப் போராட்டம்

கவலை கொண்டது: ஒன்றாயிருந்த தோழர்களை புலிகள் கண்ணெதிரே சுட்டுக் கொன்றமை

நிறைவேறாத ஆசை: பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசுவது

மிகவும் பிடித்தது: உடனிறக்கிய கள்ளும், நெத்தலியும்

சாதனை: தானும் எம்.பியாகி ஏ.ஸி. ஜீப்பில் கொழும்பு சென்று வருவது

ஏக்கம்: வன்னி மக்கள் தன்னைக் கண்டு கொள்ளாமை

அதிக மரியாதை வைத்திருப்பது: குட்டிமணி, தங்கத்துரை

மனம் வெதும்பிய சந்தர்ப்பம்: முள்ளிவாய்க்காலில் சனம் கஷ்டப்பட்டபோது

எதிர்கால இலட்சியம்: அறிக்கை மூலமாக அரசியல் செய்வது

கடும் கோபம் கொள்வது: நீங்கள் எம்.பி யோ என தொகுதி மக்களே கேட்பது

எதிர்பார்த்துக் கொண்டிருப்பது: வடமாகாண சபைத் தேர்தல்

எதிர்பாராத சம்பவம்: அடிக்கடி அடி வாங்குவது (தலைவரிடமிருந்து)

(நன்றி: தினகரன்)

பெற்றோல் குண்டு வீசியதுடன் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு சுவரொட்டிகளையும் ஒட்டினர்

வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் விரைவில் விடுக்கப் படுவர் என்று பாது காப்பு அமைச்சின் செயலாளர் கோட் டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தடுத்து வைக் கப்பட்டுள்ள நான்கு மாண வர்களின் விடுதலை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத் தினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜ பக்ஷவுக்கும் இடையில் வெள்ளிக்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ள டெலோ அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் இரத்தங்களைச் சூடேற்றிவிட்டு இந்தியாவில் போய் ஒழிந்தவர் மாவை MP

தமிழ்க் கூட்டமைப்பே படிக்கவிடுஎங்கள் பிள்ளைகளைப் படிக்கவிடு

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி பல்க லைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை கிளிநொச்சி மக்களும் சில இளைஞர்களும் நடத்தியிருந்தார்கள். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளை ஞர்கள் பல்கலைக்கழக மாணவர்களை விடுப்பிதற்கான கூட்டமைப்பின் ஆர்ப்பாட் டம் நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்கு எதிர் புறமாக நின்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தார்கள். சிறிதரன் ஐயா எங்கள் பிள்ளைகளைப் பல்கலைக்கழகம் செல்லவிடாது பிள்ளை பிடிக்காரர் பிடித்தபோது எங்கே போனீர் கள்? எங்கள் பிள்ளைகள் மண்ணின் மடி யில் உங்கள் பிள்ளைகள் மாடி வீட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை படிக்கவிடு படிக்கவிடு எங்கள் பிள்ளைகளைப் படி க்கவிடு, மாவை ஐயா இளம் இரத்தங்களைச் சூடேற்றிவிட்டு இந்தியாவில் போய் நீங்கள் ஒளிந்ததை நாம் மறக்கவில்லை. விக்ரமபாகு ஐயா வெளிநாட்டுப் பணத்திற்கு விசுவா சமா? நாங்கள் முள்ளிவாய்க்காலில் இரு ந்தபோது நீங்கள் எங்கிருந்தீர்கள்? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

‘Waterloo Suresh’ loses legal battle over terrorism charges

A former Waterloo man lost a six-year legal battle Friday to avoid prosecution in the United States for alleged support of terrorists. In one of two key rulings upholding anti-terror laws, the Supreme Court of Canada rejected an appeal by Suresh Sriskandarajah of an extradition order to stand trial in New York. Sriskandarajah and two other men — Piratheepan Nadarajah of Brampton and Momin Khawaja of Ottawa — challenged the constitutional validity of terrorism laws passed in the wake of 9/11 attacks in the U.S. (more....)

மார்கழி 15, 2012

America

Connecticut massacre victims shot multiple times - medical examiner

The victims in the Connecticut school shooting all were shot more than once, the state medical examiner said on Saturday. The victims died of gunshot wounds and have been classified as homicides, said H. Wayne Carver, Connecticut's chief medical examiner. Twenty-eight people died in the massacre, including 20 students and six adults and the school, a woman at a nearby site and the gunman himself. The gunman used a rifle as his primary weapon, Carver said. Each of the bodies Carver examined were shot three to 11 times, and all the victims were shot multiple times, he said. He said he did seven of the autopsies. He said the children he examined were wearing "cute kid stuff." The gunman killed himself in the shooting on Friday at Sandy Hook Elementary School in Newtown, Connecticut, authorities said.

மார்கழி 13

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாறு கடந்து வந்த பாதையில் மார்கழி 13 துயரம்மிக்க ஒரு நாளாகும். தமிழ் இன விடுதலையின் போராலேயே இக் கொடூரம் நிகழ்த்தப்பட்டது. இந்தக் கொடுமையை புரிந்தவர்கள் அரச படைகளோ, சிங்கள இனவெறியர்களோ அல்ல பிரபாகரன், புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம் ஆகியோரது திட்டத்திற்கு கிட்டு, திலீபன், மாத்தையா போன்றவர்களே செயல்வடிவம் கொடுத்தார்கள். விடுதலை வேட்கையோடு புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்ட தமிழ் இளைஞர்களே சக போராளிகளை அழித்தொழிக்கும் இந்த ஈனச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். (மேலும்...)

12 மார்கழி 1986

வரலாற்றில் கறை படிந்த நாட்கள்

(தோழர்  சுகு)

இன்று தான் ஈபிஆர்எல்எப் புலிகளால் தடைசெய்யப்பட்டது.1986 ஏப்பிரலில் ரெலோ பின்னர் புளொட் , என்எல்எப்ரி, பிஎல்எப்ரி  என்று தடைசெய்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரிகள் தொழிற்சங்கங்கள் சுதந்திரமான ஸ்தாபனங்களின்  செயற்பாடுகளை முடக்கினார்கள். தமிழ் பாசிசத்தின் ஒரு முக்கிய காலகட்டமே இது. வேறுபட்ட அபிப்பிராயங்களுடன் வௌ;வேறு கட்சிகளின் இருப்பு நிராகரிக்கப்பட்டது. இது வெறுமனே வௌ;வேறு கட்சிகள் தலைவர்கள் என்பதனுடன் நிற்கவில்லை. சக சமூகங்கள் ,அண்டைநாட்டின் தலைவர் என விரிந்தது. இந்த “வரலாற்று விபரீதங்கள்” தான் பிரதானமாக தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்காமல் செய்தது. (மேலும்...)

சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிரடித் தீர்மானங்கள்!

கொழும்பில் இன்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தின் போது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் புதிய நீதியரசருக்கு வரவேற்பு அளிப்பதில்லை என்ற அதிரடித் தீர்மானமும் அடங்குகின்றது. இது தவிர ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீன குழுவால் ஆராயப்படும் என திகதி ஜனாதிபதி அறிவித்ததன்படி குற்றப்பிரேரணைனையை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல். மீள்பரிசீலனையின் பின் தொடர் விசாரணைகள் இடம்பெறுமாயின் அந்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்த சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை வலியுறுத்தல் ஆகியனவும் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களில் அடங்குகின்றன. இதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித்தலைவர் அனோமா குணத்திலக்க தனது பதவியை இராஜினாமா செய்யபோவதாக இன்று அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களை எதிர்த்தே அவர் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கை வான்பரப்பில் அவதானிக்கப்பட்டவை என்ன?

இலங்கை வான்பரப்பில் கடந்த சில தினங்களாக அடிக்கடி தென்படுவதாகக் கூறப்படும் இணங்காணப்படாத பறக்கும் பொருள் மற்றும் வேற்றுக்கிரக வாசிகளின் பிரசன்னம் தொடர்பிலான தகவல்களை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் ஆகியன மறுத்துள்ளன. இணங்காணப்படாத பறக்கும் பொருளாக கூறப்படுபவை சில வேளைகளில் நாட்டின் பல மாவட்டங்களில் பெய்து வரும் சிகப்பு நிற மழையாக இருக்கலாம் என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.  (மேலும்...)

அமெரிக்க ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு 27 பேர் பலி

அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வராத போதிலும் 27 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி கொல்லப்பட்டவர்களில் 20 பேர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது. துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவிட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாடசாலை அலுவலகத்தில் அவர் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகின்ற போதிலும், ஒரு வகுப்பறையிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் தெரிகின்றது. நியூடவுண் எனும் சிறிய நகரில் உள்ள சாண்டி ஹுக் ஆரம்பப் பாடசாலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இந்தப் பாடசாலையில் கல்விக்கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒருவர் சீருடையைக் கழற்றிய பின்னர் அரசியலில் ஈடுபட்டார், பிரதம நீதியரசர் பதவியில் இருந்து கொண்டே அரசியல் செய்கிறார் - ஜனாதிபதி

உயர் அதிகாரி ஒருவர் இதற்கு முன்னர் தனது சீருடையை களைந்த பின்னரே அரசியலில் ஈடுபட்டார். ஆனால் இன்றைய பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க நாட்டின் நீதித் துறையின் உயர் பதவியில் அமர்ந்திருந்தவாறே அரசியலில் ஈடுபடுகிறார். இவருக்கு பல அரச சார்பற்ற அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் வெளிப்படையாக உதவி செய்கின்றன. அவர் மேலும் கூறுகையில்:-இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து பேசியபோது தெரிவித்தார். இவ்விதம் ஒரு பிரதம நீதியரசர் நடந்து கொள்வது நீதித் துறைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோன் அப்பதவிக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். தமக்கு எதிரான பாராளுமன்ற குற்றப்பிரேரணையை ஏற்றுக்கொண்டு அவர் கண்ணியமாக பதவியில் இருந்து விலகிச் சென்றார்.

பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு சம்பந்தன் அச்சப்படுகின்றார் -  ஜனாதிபதி

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்   பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. அவர்களை சந்தித்து பேசுவதற்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். விரைவில் அவர்கள் பேச்சுக்கு வருவார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தை குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எல்லை தாண்டும் மீனவர்கள் கைதாவது வழமையான விடயம்

இந்திய மீனவர்கள் சர்வதேச கடல்எல்லையை தாண்டி இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவ தாலேயே அவர்கள் அந்நாட்டுக் கடற் படையினரால் கைதுசெய்யப்படுவதாக இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் மண்டபம் பகுதி கட்டளை அதிகாரி எச்.எச்.மோர் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை மீறிச் செல்வது மட்டுமன்றி இலங்கை கடற் பரப்புக்குள் மிகவும் அண்மையில் சென்று மீன்பிடிப்பதாலேயே அவர்கள் கைதுசெய்யப்படுவதாக அந்த அதிகாரி இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மீன வர்களை தாம் கைதுசெய்வதைப்போ ன்றே, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் மீனவர்கள் அந்நாட்டுக் கடற்படையினரால் கைதுசெய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தமையால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுவிக் கப்பட்டனர். இக்கைது தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் மண்டபம் பகுதி கட்டளை அதிகாரி எச்.எச்.மோர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புவியை நோக்கி வரும் விண்கற்கள்

விண்ணில் இருந்து விண்கற்கள் அடிக்கடி பூமியை நோக்கி வந்தபடிதான் இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் சிறுகற்களாக இரு ப்பதனால் இதனால் உண்டாகும் பாதிப்பிலிருந்து நாமெல்லாம் உயிர்தப்பிக் கொள்கிறோம். சூரியத் தொகுதியை எடுத்துக் கொண்டால் பூமியைப் போன்ற பெரிய கோள்கள் மாத்திரமன்றி விண்கற்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதேசமயம் பூமியையும் ஏராளமான விண்கற்கள் சுற்றியபடி வருகின்றன. இவ்விண்கற்கள் தமது சுற்றுப்பாதையில் (ஒழுக்கு) இருந்து விலக புவியின் ஈர்ப்பு சக்திக்குள் வரும் போது புவியை நோக்கி வருகின்றன. புவியை நோக்கி வரும் போது விண்கற்கள் அசுரவேகம் பிடிக்கின்றன. அவற்றின் மீது வளி உராய்வதால் அவ்விண்கற்களின் வெப்பநிலையும் உச்சத்துக்குச் சென்று விடுகிறது. எமது வளிமண்டலத்தினுள் பிரவேசித்ததும் ஒட்சிசன் போன்ற தீர்பற்றத் துணைபுரியும் வாயுக்களின் உதவியினால் அவ்விண்கற்கள் எரிகின்றன. புவியை வந்தடையும் போது சாம்பலும் எஞ்சுவதில்லை. இதனால் விண்கல் ஆபத்திலிருந்து நாம் தப்பித்துக் கொள்கிறோம். இரவு நேரத்தில் ஆகாயத்தை அவதானிக்கும் போது எப்போதாவது எதேச்சையாக இதனை அவதானிக்க முடியும்.

மொத்த மீன் உற்பத்தியில் வடக்கு, கிழக்கின் பங்கு 23%

வடக்கில் மீன் பிடித்துறையில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் தொகை 12,710 இனால் அதிகரித்துள்ளது. அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிர தேசங்களில் மீன் பிடித்துறை மேம் பாட்டுக்கு அதிக பங் களித்து வரும் நிலையில் மொத்த மீன் உற்பத்தியில் 23 வீதம் வடக்கு கிழக்கினூ டாகவே கிடைப்பதாக கடற் றொழில் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 2008 இல் வடக்கில் 34,870 பேர் மீன்பிடித் துறையில் ஈடுபட்டிருந்த தோடு 2011 ஆகும் போது அது 48,540 ஆக அதிகரித் துள்ளது. படகுகள், வள்ளங்களின் தொகையும் கூடியுள்ளது எனவும் அமைச்சர் கூறினார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடை யில் 16 மைல்களே தூரமுள்ளது. நாம் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். வடபகுதி மீனவர்களுக்கு படகுகள் வழங்குவதற்காக 250 மில்லியன் ரூபா வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் வடபகுதி மீன்பிடித்துறை மேம்பாட்டுக்கு எமது அமைச்சு 1900 மில்லியன் செலவிட்டது. 461 மில்லியன் பெறுமதியான 767 மீன் பிடிப் படகுகள், கடந்த வருடம் வழங்கப்பட்டன. 171 மில்லியன் செலவில் 792 என்ஜிகள் 750 மில்லியன் ரூபா செலவில் 18,331 வலைகள் என்பனவும் வழங்கப்பட்டன என்றார்.

ஆஸி. செல்ல முயன்ற 14 பேர் செங்கலடியில் கைது

அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாகச் செல்ல முற்பட்ட 14 பேரை செங்கலடிப் பிரதேசத்தில் ஏறாவூர் பொலிஸார் கைது செய் துள்ளனர். நேற்றுமுன் தினம் வியாழக் கிழமை மாலை பொலிஸாருக்கு கிடைத்த தக வலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் செங்கலடி எல்லை வீதியிலுள்ள வீடொன்றில் 6 சிறுவர்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 14 பேரை பொலிஸார் கைது செய்து நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். கைது செய்யப்பட்ட 14 பேரும் தமிழர்கள் என்பதுடன் இவர்கள் சிலாபம் பிரதேசத்திலிருந்து வந்துள்ளதாகவும் ஏஜெண்ட் தங்களை ஏமாற்றிவிட்டு விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணை களிலிருந்து தெரிய வருகிறது. மேலதிக நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சனியின் டைட்டன் கிரகத்தில் ஆறு!

சனி கிரகத்தில் 63க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. இவற்றில் 50க்கு பெயர் வைக்கப்பட்டுள்ளன. இந்த துணைக்கோள்களிலெல்லாம் மிகப்பெரியது டைட்டன் ஆகும். இந்த டைட்டன் துணைக்கோளில் ஆறு உள்ளது என்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நாசா அனுப்பி இருந்த ‘காசினி’ செயற்கைகோள் புகைப்படத்தின் மூலம் இந்த ஆறு பற்றி விபரங்கள் தெரியவந்துள்ளன. இது பற்றி நாசாவின் ஜெட் ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பூமிக்கு வெளியே உள்ள கிரகத்தில் நதி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். டைட்டன் கிரகத்தில் வடபகுதியிலிருந்து புறப்படும் ஆறு ‘கிராக்கன்மரே’ என்ற கடலில் கலக்கிறது. இந்த கடலின் அளவானது பூமியில் உள்ள காஸ்பியன் கடலுக்கும், மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையில் உள்ள பகுதியின் அளவுக்கு ஒப்பாக உள்ளது. இந்த நதி சுமார் 400 கிலோமீட்டர் நீளத்திற்கு இருப்பதால் குட்டி நைல் நதி என்று இதனை வர்ணித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் டைட்டன் கிரகத்தில் மழையின் முலம் உருவாகும் திரவப்பொருள், ஏரிகள் மற்றும் ஆறுகள் வழியாக கடலில் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாசாவின் ஆய்வக அதிகாரியான ல்டீவ் வால், சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்த படியாக டைட்டனில் மட்டுமே பரந்த கடல் பகுதி இருப்பது முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மார்கழி 14, 2012

விடுதலைப் புலிகள் பற்றி பேச இரா.சம்பந்தனுக்கு தடை! தடையை மீறினால், விளைவு மோசம்!!

சமீபத்தில் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து தெரிவித்திருந்த இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், இனி விடுதலைப்பலிகள் இயக்கம் பற்றி பேச தடை விதிக்கப்பட்டிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்க பிரிவு ஒன்று, இந்த எச்சரிக்கை கலந்த தடையை விதித்திருப்பதாக அந்த அணியுடன் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. “இரா.சம்பந்தன் இனி விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி வாய் திறந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும், அவர் இந்தியா தவிர்ந்த எந்த ஒரு வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (மேலும்....)

பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.ஆர்,எல்.எப் இணைப்பு வரவேற்கற்கத்தக்கது.

அது வரமாக இருக்க வேண்டும்! சாபமாக அமையக் கூடாது!!

(தோழர் ஸ்ரனிஸ்)

பத்மநாபா அவர்களை செயலாளர் நாயகமாக கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆனது, பத்மநாபா அவர்களை புலிகள் சென்னையில் சுட்டு கொன்றதன் பின்னர், அந்த அமைப்புக்கு செயலாளர் நாயகமாக தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரன்  நியமிக்கபட்டார். தோழர்சுரேஸ் அவர்களின் செயல்பாடுகள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பாரம்பரியத்துக்கு ஒவ்வாததாக இருப்பதாக அதில் உள்ள மத்திய குழு உறுப்பினர்கள் கண்டறிந்ததால் ஒழுங்காற்று நடவடிக்கைக்கு வர வேண்டும் என நினைத்து நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதில் உடன் படிக்கை ஏற்படாமல், கட்சி இரண்டாக உடைந்தது. (மேலும்....)

பல்கலைக்கழக மாணவிகளையும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் மூவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை, இவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக மாணவிகள் விடுதியின் சங்கத் தலைவி என்றும் ஏனைய இருவரும் மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட முதலாமாண்டு மாணவியான நடராசா கியானி என்பவர் சுன்னாகத்திலுள்ள அவரது வீட்டில் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் : மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?

இலங்கை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட 109 பெண்களில் 16 பேர் வரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மனநோய் மருத்துவர் ஒருவர் கூறினார். தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான காரணத்தினால் இவர்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 16 இளம் பெண்களையும் பார்வையிட இதுவரை எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோரமான மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள இனப்படுகொலையில் இராணுவத்தினர் வவுனியா இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரம் வரையான இராணுவத்தினர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களின் வன்முறை கலந்த மனநோயின் காரணமாக அவர்கள் வைத்திய சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்திற்கு இணைக்கப்பட்ட பெண்கள் இராணுவ மனநோய் வைத்தியசாலையில் இராணுவ மனநோயாளர்களோடு பணியாற்ற கட்டளையிடப்பட்டதாகவும். அவர்களின் வன்முறை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இனியொருவிற்கு தெரிவிக்கப்பட்ட தகவல் குறிப்பிடுகிறது.

இராணுவ பயிற்சியில் ஏற்படும் வழமையான உபாதைகளே பெண்கள் சிகிச்சை பெற காரணம்

பயிற்சியின் போது ஏற்பட்ட சிறு உபாதை காரணமாகவே இராணுவத் தில் சேர்க்கப்பட்ட 13 தமிழ் பெண்கள் சுகவீனமடைந்ததாகவும் த.தே. கூட்டமைப்பும் சில ஊடகங்களும் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தவறு எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிக சூரிய தெரி வித்தார். இராணுவப் பயிற்சியின் போது இவ்வாறு சுகவீனமடைவது வழமை என்று கூறிய அவர் 11 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இராணுவத்திற்கு சேர்க்கப்பட்ட 13 பேர் சுகவீனமடைந்தது குறித்து தெரி விக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வினவியதற்குப் பதிலளித்த அவர் கடந்த ஒரு வார காலத்திலே 13 பேர் சுகவீன முற்றனர். இராணுவ பயிற்சியின் போது இவ்வாறு இடம்பெறுவது வழமையான விடயம். இவர்களை பார்க்க குடும்பத்தவர்களுக்கு மருத்துவர்கள் அவகாசம் வழங்கியுள்ளனர். த.தே. கூட்டமைப்பு எம்.பி. ஒருவருக்கு அனுமதிக்காததாலே தவறான பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகிறது. அரசியல் இலாபம் பெறும் நோக்கில் இது தொடர்பில் பொய் பிரசாரம் செய்கின்றனர். எஞ்சிய இரு பெண்களும் இன்று (14) ஆஸ்பத்திரியில் வெளியேறுவர் ஏனையவர்கள் வழமைபோல பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஸி.யிலிருந்து 42 பேர் நாடு கடத்தல்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று புகலிடக் கோரிக்கை நிராக்கரிக்கப்பட்ட 42 பேர் இன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய செல்லுபடியற்ற விசா மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த இலைங்கையர்களது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டவிரோதமாக படகு மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்றவர்களே புகலிடக் கோரிக்கை மறுக்கபட்டு விசேட விமானம் மூலம் இலங்கைக்குத் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சிங்களவர்களும் தமிழர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடத்தில் ஒகஸ்ட் 13ஆம் திகதிக்குப் பின்னர் மாத்திரம் அவுஸ்திரேலியாவில் இருந்து 800க்கும் அதிகமானோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அசாதாரண ஒளிர்வுடன் வானில் தோன்றி வியக்கவைப்பது வியாழனே

தற்போது நாட்டின் வெவ் வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் கண்களுக்கு இரவு வேளைகளில் தென்படும் பிரகாசமான ஒளிர்வு வியாழன் கிரகத்தினுடையது என்று ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் சிராஜ் குணசேகர நேற்றுத் தெரி வித்தார். இந்த நாட்களில் வியாழன் கிரகம் மிகவும் பிரகாச ஒளிர்வாக இருக்கின்றது. அதன் காரணமாகவே அதன் ஒளிர்வை எம்மால் பார்க்க முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை சர்வதேச வானிலையாளர்கள் தற்போது வியாழன் கிரகம் பூமிக்கு மிக அருகில் வந்துள்ளது. கடந்த 2ம் திகதி பூமிக்கும், வியாழன் கிரகத்திற்குமிடையிலான தூரம் 609 மில்லியன் கிலோ மீற்றர்களாக இருந்தது. இதுவே மிக அண்மித்த தூரம். இக்கிரகம் இதன் பின்னர் 2021 ஆம் ஆண்டிலேயே இவ்வாறு நெருங்கி வரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த ஊதியத்தில் ஊழியர்களை கசக்கிப் பிழியும் வால்மார்ட்  நியூயார்க்கில் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள வால் மார்ட் நிறுவனம் தொழிலா ளர்களை வஞ்சித்து வருவ தைக் கண்டித்து நூற்றுக் கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். அமெரிக்காவின் மிகப் பெரிய தனியார் சில்லரை வர்த்தக நிறுவனமான வால் மார்ட் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங் கிவருவதோடு, தொழிற் சங்கங்களை அமைக்கவும் அனுமதி மறுத்து வருகிறது. குறிப்பாக கிடங்குகள் மற்றும் இடம்பெயர்ந்து வேலைசெய்வோர் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். இது குறித்து நிர்வாகத்தினரை அணுகினால், ஊழியர்களை வஞ்சித்து வருகிறது. இத னால் ஆவேசமடைந்த வால் மார்ட் ஊழியர்கள் நியூ யார்க்கில் உள்ள வெளியு றவுச் சபை முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் மிகப் பெரிய தனியார் நிறுவன மான வால்மார்ட் ஆண்டு தோறும் பல்லாயிரங் கோடி களை லாபமாக அள்ளிச் செல்கிறது. இந்நிறுவனத் தின் நிர்வாகிகளில் பெரும் பாலானோர் அமெரிக்கா வின் பெரும்பணக்காரர்க ளின் பட்டியலில் உள்ளனர். இதேபோன்று தொழி லாளர் விரோதப் போக்கில் ஈடுபட்டு வரும் மெக்டொ னால்ட், வென்டி, பர்கர் கிங், நியூயார் கார்வாஷஸ், சூப்பர்மார்க்கெட், விமான நிலையம் போன்ற இடங்க ளில் பணிபுரியும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலா ளர்கள் அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில் அமெரிக் காவில் குறைந்த ஊதியம் பெறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நம்பியி ருக்கும் பொது உதவியை, பொருளாதார மந்தநிலை யினை காரணம் காட்டி நிறுத்த அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மார்கழி 13, 2012

என் இனமே..........என் சனமே...........!

(பொ.கருணாகரமூர்த்தி)

அக்கா இருவருக்குமாகச் சூடாகத் தேனீர் கொண்டு வந்தார். எம்பேச்சு வளர்ந்துகொண்டிருந்தது. எனக்கு எப்போதும் தேனீர் கோப்பி மிதமாக சூட்டிலிருக்கையிலே குடித்துவிட வேணும். சரவணனோ தேநீரைத் தீண்டுவதாயில்லை. "தேனீர் ஆறிவிடப்போகிறது குடியப்பனே" என்று இரண்டு மூன்று தடவைகள் சொல்லியிருந்திருப்பேன். நான் அதை வேறுயாருக்கோ சொல்கிறேன் போன்றதொரு பாவனையில் தேவநிஷ்டையில் இருந்தான். எனது கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவித்தனமாக "நல்ல அளவான சூடா இருக்கப்பா குடி " என்றுகூடச் சொல்லிப்பார்த்தேன். அவன் அதைச் சட்டைசெய்வதாயில்லை. இனியென்ன நான் பருக்கி விடவாமுடியும்? சிலவேளைகளில் ஆறின தேனீர்தான் அவனுக்குப் பிடிக்கும்போல, பிறகு குடிப்பானென்று இருந்தேன். கடைசி வரையில் அவன் குடிக்கவேயில்லை. நான் தேநீர் குடிப்பதில்லையென்றோ அல்லது "நான் இன்று கெளரிவிரதமென்றோ காயத்திரி விரதமென்றோ" என்றோகூடச் சொல்லவில்லை. தன் பாட்டுக்கு எழுந்து போனான். (மேலும்....)

இந்திய சிதார் மேதை ரவிசங்கர் காலமானார்

சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் சாண்டியாகோ நகரில் காலமானார். அவருக்கு வயது 92. உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், லா ஜோல்லாவில் உள்ள ஸ்கிர்ப்ஸ் நினைவு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் கோளாறு இருந்துள்ளது. இந்நிலையில், இவர் செவ்வாய் மாலை அவர் காலமானார். இந்தியப் பாரம்பரிய இசைக்கு வலு சேர்த்தவர் பண்டிட் ரவி சங்கர். இந்திய இசையின் தூதுவர் என்ற சிறப்பு பெற்றவர். கிழக்கத்திய மேற்கத்திய இசைகளுக்கு பாலமாக விளங்கியவர். இந்திய இசைக் கலையை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு சென்றதில் முக்கியமான பங்கை வகித்துள்ளார். தனது இறுதிக் காலம் வரை சுறுசுறுப்பான, அதே சமயம் தொய்வில்லாத இசையை வழங்கி வந்திருக்கிறார். 1920ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி வாரணாசியில் பிறந்தவர் ரவி சங்கர். ரபீந்த்ரோ ஷங்கர் சௌதுரி என்ற பெயர் கொண்டவர். பின்னாளில் பண்டிட் என சிறப்புப் பட்டம் பெற்றார்.

தமிழ்  மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கிறது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொருட்படுத்துவதில்லை. நான் ஜனாதிபதியை மதிக்கின்றேன். அவர் தமிழர்களுக்கான அதிகாரத்தை நிறைவேற்றுவார். வட., கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி யெழுப்புவதற்கு அரசாங்கம் அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை சீர் குலைக்க முயற்சிக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். 13ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக அதிகாரங்களை கேட்கின்றதல்லவா? என்ற கேள் விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். (மேலும்....)

Jaffna University Teachers threaten to strike

Kings Grove Crescent . Gloucester . Ontario . K1J 6G1 . Canada

12 December 2012

OPEN LETTER  to

Minister of Higher Education

The Government of Sri Lanka                                                                                                            Sri Lanka’s  Parliament, Kotte, Sri Lanka.

Dear Minister:

I have just read a news item in today’s (Dec.12) ColomboPage which said – “Teachers of Sri Lanka’s Jaffna University to boycott classes until all arrested students released.”

Let’s get one thing right – the Government should not cave into such black mail.  If they want to strike, then so be it.  Let the teachers know that you pay wages on the ethical basis of -no ticky then  no washy. You don’t teach, and then you have not earned your wage.  It should be as simple as that.  That is a basic Code of Labour.

Let’s get one more thing right – the Government should go through the due process, to find out whether these students did some thing wrong creating a belligerent atmosphere that might harm other students and their bystanders.  If they haven’t, then release them.  If they have, then meet them with what is due according to the law.  If they are remanded for a court hearing, then teachers and their Union will have to make some decisions.  They have a choice either to accept what the law says and get back to their classrooms; and if they don’t then they obviously will stay out of the classes until these student are released from custody or from jail as would the law dictates.  And the Jaffna University will be closed until the last student comes out of jail.  And so be it.

The Union President R. Vineswaran better take off his dunce cap and put on his wise-man’s cap and deal with the situation  intelligently without harming the education of the  Tamil students who want to get on with their studies, careers and lives.  They deserve that break.

Sincerely,

Asoka Weerasinghe

சாவெஸின் புற்றுநோய் சத்திர சிகிச்சை வெற்றி

புற்றுநோயால் அவதிப்படும் வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ¤க்கு வெற்றிகரமாக சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு அவரது உடலில் இருக்கும் புற்றுநோய் செல்கள் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள் ளது. வெனிசுவேலா துணை ஜனா திபதி நிகொலஸ் மடுரோ இந்தத் தக வலை தெரிவித்தார். கடந்த 2011 ஜூன் மாதத்திற்கு பின் னர் புற்றுநோய்க்காக சாவெஸ் மேற் கொண்ட நான்காவது சத்திரசிகிச்சை இதுவாகும். இதில் கடந்த வாரம் தனக் குப் பின்னரான தலைவர் குறித்து சாவெஸ் முதல் முறையாக மக்களுக்கு கருத்து தெரிவித்தார். அதில் தனது உடல்நிலை மோசமடைந்தால் துணை ஜனாதிபதி மடுரொவுக்கு வாக்களிக் குமாறு அவர் மக்களிடம் கோரினார். இந்நிலையில் சத்திர சிகிச்சைக்காக கியூபா சென்ற 58 வயதான சாவெ ஸ¤க்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்ப ட்டுள்ளது.

அப்பிள் வரைபடத்தால் வழிமாறிய வாகன ஓட்டிகள்

அவுஸ்திரேலியாவில் அப்பிள் வரைபட வழிகாட்டியை உபயோகித்த வாகன ஓட்டிகள், பாம்புகள் ஓடும் பயங்கர பாலைவனத்திற்கு வழிமாறி சென்றுவிட்டனர். இதையடுத்து அவுஸ் திரேலியா பொலிஸார் அப்பிள் ஐபோன் வரைபட மென் பொருளை பயணிகள் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளனர். இதுவரை பல வாகன ஓட்டிகளை அவர்கள், முர்ரே சன்செட் தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பாலைவனத்திலிருந்தும் மீட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் சுமார் 24 மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் மற்றும் உணவில்லாமல் தவித்துள்ளனர். மேலும் பாம்பு, நரி போன்ற பயங்கர விளங்குகளையும் கண்டுள்ளனர். வாகன ஓட்டிகளின் இந்த சிரமத்தை அடுத்து தவறான வழிகளை காட்டும் அப்பிள் ஐபோன் வரைபட மென் பொருளை உபயோகிக்க வேண்டாம் என அவுஸ்திரேலிய பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

லண்டனில் பிரிட்டிஷ் வெள்ளை இனத்தவர் சிறுபான்மை

பிரிட்டன் தலைநகர் லண்டனில் வெள்ளை இனத்தவர் வரலாற்றில் முதல் முறையாக சிறுபான்மையினராக பதிவாகியுள்ளனர். 2011 சனத்தொகை கணக்கெடுப்பின்படி லண்டனில் இருக்கும் 45 வீதமானோரே தம்மை ‘பிரிட்டன் வெள்ளையினர்’ என அடையாளப்படுத்தியுள்ளனர். 2011 சனத்தொகை கணக்கெடுப்பில் லண்டனில் வெள்ளையினத்தவர் 58 வீதமாக இருந்தமை குறப்பிடத்தகக்கது. லண்டனில் வாழ்பவர்களில் 37 வீதமானோர் பிரிட்டனுக்கு வெளியில் பிறந்தவர்கள் என்பதோடு அதிலும் 24 வீதமானோர் பிரிட்டனைச் சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டனில் குடியேற்றவாசிகளின் அதிகரிப்பை வெளிக்காட்டுகிறது என குடியேற்ற உரிமைகளுக்கான இணைப்பகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார். எனினும் 2011 சனத் தொகை கணக்கெடுப்பின்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள மொத்த சனத்தொகையில் 86 வீதமானோர் (48.2 மில்லியன்) வெள்ளையினத்தவராவர். அதிலும் 80 வீதமானவர்கள் (45.1 மில்லியன்) பிரிட்டன் வெள்ளையினத்தவராவர். இதில் லண்டனில் வசிக்கும் 8.2 மில்லியன் பேரில் 3.7 மில்லியன் பேரே பிரிட்டன் வெள்ளையினத்தவராவர்.

மார்கழி 12, 2012

விடுதலைப்புலிகள் ஆதரவு மீடியா பகிரங்க எச்சரிக்கை - “சம்பந்தனின் குருதி குடிப்போம்”

“விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் எனவும் அவர்களது நடவடிக்கைகளினாலேயே அவர்களுக்கு அழிவு ஏற்பட்டதாகவும் கூறிய இரா.சம்மந்தன் எமக்கு குழிபறிக்க நினைத்தால், அவரது குருதி குடித்து தொடர்வோம் எமது விடுதலைப் பயணத்தை” என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது, விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளம்.இலங்கையில் தமிழ் பகுதிகளில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கை உறுப்பினர்களை கொண்ட கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இரா.சம்பந்தன் கூறிய விஷயங்களே, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (மேலும்....)

வல்வெட்டித்துறை கோபுரமொன்றில் புலிக்கொடி ஏற்றிய நபர் கைது!

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணிவந்துள்ளதாகவும் அப்பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிபோராளி ஒருவரே வல்வெட்டித்துறையில் புலிக்கொடியை பறக்கவிட்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதியே தனியார் தொலைத்தொடர்பு நிலையக் கோபுரத்தில் புலிக்கொடி பறக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம்

படையினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்ககோரி வவுனியாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணிவரையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந் போராட்டம் ஹொரவப்பத்தானை வீதி இலுப்பையடியில் நடைபெற உள்ளது. வடக்கில் நடைபெறும் ஜனநாயக விரோதச் செயல்களைக் கைவிட வேண்டும், அன்றாடம் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் காணாமல் போகச்செய்தல் மற்றும் கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதுடன் காணாமல் போனோர், கடத்தப்பட்டோரை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வடக்கில் ஜனநாயக செயற்பாடுகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் கற்கள்

நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார். கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பறக்கும் ஒளிக்கற்களை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் கூறுகையில், குறித்த ஒளிப்பிழம்பினை கண்காணிக்கும் முகமாக 24 மணிநேர சேவையில் விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வான்பரப்பு மழுவதுமாக அவதானிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் ஒளிப்பிழப்பினை விமானப்படையினரால் காணமுடியவில்லை. ஏனெனில் ஓளியாக மட்டும் தென்படுவதால் அது விமானப்படையின் ராடர் கருவிகளில் பதிவாகும் வாய்ப்புக்கள் குறைவு. மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் இது தொடர்பில் அவதானிக்கின்றது. குறித்த ஒளிப்பிழம்பு ஒரு கோளாக இருக்கலாம் எனவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. எனவே மக்கள் வீணாக அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றார். இதேவேளை வியாழன் கோளுக்கு அண்மையில் புதிய கோளொன்று வெடித்துச் சிதறியதில் பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட்டுக்கள் அண்டவெளியில் சுற்றுவதாக நாசா தெரிவித்திருந்தது. இந்த பறக்கும் கற்கள் புவியீர்ப்பின் காரணமாக பூமியில் விழலாம் ஆனால் அவை எவ்வித ஆபத்தினையும் விளைவிக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஜீவ் கொலை வழக்கு குற்றவாளி

முருகனுடன் தொலைபேசியில் கனடாவிலிருந்து உரையாடியவர்கள் யாவர்?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன் சந்திப்பு நிறுத்தம் குறித்து, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் உள்ள நபருடன், முருகன் கையடக்கத் தொலைபேசியில் பேசியதாக வந்த முறைப்பாடு, தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதே வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற அவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். தம்பதியர் இருவரும், 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேசிக் கொள்ள சிறைத்துறையினர் அனுமதி அளித்தனர். பல ஆண்டுகளாக இவர் கள் சந்திப்பு நடந்து வந்தது. கடந்த மாதம், சிறைத்துறை விஜிலன்ஸ் பொலிஸார், வேலூர் ஆண்கள் சிறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, முருகனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று, சிம்கார்டு மற்றும் இரண்டு ‘சிடி’க்களை கைப்பற்றினர். (மேலும்....)

2030 இல் அமெரிக்காவை பின்தள்ளும் ஆசியா

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டாகும் போது அமெரிக்கா, ஐரோப்பாவை பின்தள்ளி ஆசியா சர்வதேச சக்தியாக உருவெடுக்கும் என அமெரிக்க புலனாய்வு சமூகத்தின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. இன்னும் இரண்டு தசாப் தங்களுக்குள் அமெரிக்காவை பின்தள்ளி சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. மறு புறத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் மந்தமான பொருளாதாரம், வாழ்க்கைத் தர வீழ்ச்சி மற்றும் மந்தமான சனத் தொகை வளர்ச்சி குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்ஸில் உலகளவில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதனடிப்படையில் நேற்று வெளியிடப்பட்ட 172 பக்கங்கள் கொண்ட அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சனத்தொகை அளவு, உள்நாட்டு உற்பத்தி, இராணுவ செலவு, மற்றும் தொழில்நுட்பத்திற்கான செலவுகள் ஆகிய அனைத்து துறைகளிலும் 2030 ஆம் ஆண்டாகும் போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை ஆசியா விஞ்சி நிற்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் இன்னும் 10, 15 ஆண்டுகளில் பொருளாதார சக்தியில் அமெரிக்காவை சீனா விஞ்சிவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மண்டேலாவுக்கு நுரையீரல் தொற்று நோய்

தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா நுரையீரல் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தென்னாபிரிக்க தலைநகரில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 94 வயதான நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை குறித்து அரசு நேற்றைய தினமே உறுதியான தகவலை வெளியிட்டது. இதில் மருத்துவ சோதனையின் மூலம் மண்டேலாவுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த நுரையீரல் நோய் தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக அவருக்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளித்து வருவதாக ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது. நெல்சன் மண்டேலா கடைசியாக கடந்த பெப்ரவரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதோடு 2011 ஜனவரியில் மார்பு வலிக்காக சிகிச்சை பெற்றார். நிறவெறிக்கெதிராக போராடிய மண்டேலா 1994 இல் முதல் கறுப்பின ஜனாதிபதியாக தேர்வானார். 1993 இல் அவருக்கு அமைதிக்கான நோபல் விருது கிடைத்தது.

வி. ரி. இளங்கோவன் அவர்களின்

நான்கு புதிய நூல்கள்  கொழும்பில் வெளியீடு..!

பிரான்ஸ் நாட்டில் வதியும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் அவர்களின் புதிய நான்கு நூல்களின் அறிமுக நிகழ்வு, கடந்த 1 -ம் திகதி (01 - 12 - 2012) சனிக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இப்படியுமா..? (சிறுகதைத் தொகுதி) அழியாத தடங்கள் (கட்டுரைகள்) தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?, 'இளங்கோவன் கதைகள்' நூலின் இந்தி மொழிபெயர்ப்பு ஆகிய நூல்களே வெளியிடப்பட்டன.

இலங்கையில் மூத்த பெண் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான அன்னலட்சுமி இராசதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழம்புத் தமிழ்ச் சங்கத் துணைச்செயலாளர் ப. க. மகாதேவா தமிழ் வாழ்த்துப் பாடினார். 'தினக்குரல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், எழுத்தாளர் தம்பிஐயா தேவதாஸ், பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் சிறிதர்சிங், கொழம்பு மாநகரசபை உறுப்பினர் சி. பாஸ்கரா ஆகியோர் கருத்துரை வழங்கினர். 'யாத்ரா' ஆசிரியர் அஸ்ரப் சிகாப்தீன், 'ஞானம்' ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன், தொழிற்சங்கப் பிரமுகர் எம். ஏ. சி. இக்பால், கவிஞர் தில்லை முகிலன், கவிஞர் மேமன்கவி ஆகியோர் நூல்கள் குறித்து ஆய்வுரை வழங்கினர். 'இலக்கியப் புரவலர்' காசிம் உமர் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் வி. ரி. இளங்கோவன் ஏற்புரை வழங்கினார். கடந்த மார்ச் மாதமும் 'மண் மறவா மனிதர்கள்' என்ற நூலினை வி. ரி. இளங்கோவன் இங்கு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

அவுஸ்திரே லியாவின் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொ ண்டு எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்தது. இவர் டிசம்பர் 17ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல் வேறு மட்டங்களில் சந்திப்புக் களை நடத்தவிருப்பதாக வெளி விவகார அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின்போது இரு நாட்டு வர்த்தக, சுற்றுலா உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்துவார் எனத் அறிவிக்கப் பட்டுள்ளது. அதிகரித்திருக்கும் அவுஸ்தி ரேலியாவுக்கான சட்டவிரோத குடியேற்றம் குறித்தும் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச் சராக பொக் கார் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக தெற்காசிய வலயத்திற்கு விஜயம் செய்யவிருப்பதாக அவரது ஊடகப் பேச்சாளர் அறி வித்திருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் கந்தகடுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை திட்டமிட்ட ஒடுக்குமுறை - சித்தார்த்தன்

பல்கலைக்கழக மாணவர்களில் நால்வர் தடுப்புக் காவலுக்காக வெலிகந்தை கந்தகடுவ புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது அரசின் திட்டமிட்ட மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையாகும் என்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) தலைர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்துவிட்டது. இயல்புநிலையும் ஜனநாயகமும் மீளவும் வடக்கு கிழக்கில் நிலைநாட்டப்பட்டுள்ளது எனக் கூறும் அரசு பல்கலைக்கழக மாணவர்களை தடுப்பு முகாமுக்கு அனுப்புவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற தன்மையையும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு பதட்டமான நிலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்த சூழ்நிலைகளில் எவ்வளவோ இழப்புகளுக்கும் துன்பங்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் மத்தியில் தான் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பத்தை பெற்றார்கள்.  இப்படியான அடக்கு முறைகள் மாணவர்களின் கல்வியினை பாழாக்கிவிடும். சமுதாயத்தில் மேன்மை நிலையயை எட்டமுடியாத சூழல் வலிந்து உருவாக்கப்பட்டால் மாணவர்கள் விரக்திநிலைக்கே தள்ளப்படுவார்கள்.

தமிழ்ப் பெண்கள் விவகாரம்

குற்றச்சாட்டுக்களுக்கு இராணுவம் பதில்

அண்மையில் கிளிநொச்சியிலிருந்து இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களை அவர்களின் பெற்றோர் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை என இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இராணுவம் பதிலளித்துள்ளது. பயிற்சியில் உள்ளவர்களை வாரத்தில் ஒரு நாள் குறித்த நேரத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. பார்வையாளர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் விரும்பிய நேரத்தில் பயிற்சி பெறுபவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்களேயானால் எம்மால் ஓர் அர்த்தமுள்ள பயிற்சியை நடத்த முடியாமல் போகும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இது இராணுவ பயிற்சி பெறும் சகலருக்கும் பொதுவான நிபந்தனையாகும். இராணுவம் சகல பயிற்சியாளர்களையும் ஒரே விதமாகவே நடத்துகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இராணுவ பயிற்சி பெறும் சகலருக்கும் இது பொதுவானது. ஒரு பொதுமகனாக இருந்தவரை இராணுவ வாண்மையாளராக மாற்றியெடுக்கும் செயன்முறையில் இது ஒரு பகுதியாகும் என அவர் குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இராணுவம் நிறைவேற்றி வருகின்றது. இதன்படி வடக்கைச் சேர்ந்த இருபாலாரையும் இராணுவத்தில் சேர்க்க இராணுவம் தீர்மானித்தது. வடக்கிலிருந்து 109 பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் எவருமே முன்னாள் போராளிகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி 11, 2012

படுவான்கரை பிரதேசத்தை கட்டியெழுப்ப அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபடவேண்டும்

(கிருஸ்ணா)

போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள படுவான்கரை பிரதேசத்தை நாங்கள் கட்டியெழுப்பவேண்டுமென்றால் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட அனைவரும் முன்வரவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
(மேலும்....)

கூட்டமைப்பினருக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சுதந்திரமாகப் படிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்கவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் இரத்தங்களைச் சூடேற்றி அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடக் கூட்டமைப்பு முயற்சிக்கக் கூடாது. எமது பிள்ளைகள் சுதந்திரமாகப் படிப்பதற்கு கூட்டமைப்பு இடமளிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். நேற்று முற்பகல் 10 மணிக்கு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ-9 வீதியில் இரு மருங்கிலும் இருவேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழ் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி பிரதேச மக்களும், பெற்றோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை வீதியின் இரு மருங்கிலும் நடத்தியிருந்தனர். (மேலும்....)

Denial Of Asylum To bandanage And Framing Of Sivajilingam

 

By Prof S. Ratnajeevan H. Hoole 

Canada’s denying asylum to Sri Lanka’s Captain Ravindra Bandanage, 38, made headlines this week. Many have been denied, but Bandanage made news because he claimed being ordered to plant explosives at former TNA parliamentarian M. K. Sivajilingam’s home. This was the first time a senior officer had admitted to planting evidence on opponents and to torture and other crimes by our government against Tamils, although for Tamils these are facts of life.
The Defence Ministry, as expected, lashed out, calling Bandanage a liar, “a man of dubious repute and questionable integrity towards his motherland”. Would it have been all right, then, if the “motherland” was not involved? The mendacious ministry, we recall, arrested the Mullaitivu doctors to forcibly recant their accounts of hospital bombings and murder of thousands, which the government had to admit after the census. (more...)

 

வால்மார்ட் லஞ்சம்  நாடாளுமன்றத்தில்   கொந்தளிப்பு

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரம் நாடாளுமன்றத்தில் மன் மோகன் சிங் அரசை தொடர்ந்து விரட்டத் துவங்கியுள்ளது. இந்தியாவில் நுழைவதற் காக, ரூ.50 ஆயிரம் கோடி பெறுமான இந்திய சில்ல ரை வணிகச்சந்தையை கைப்பற்றுவதற்காக, மன் மோகன் சிங் தலைமையி லான காங்கிரஸ் கூட்டணி அரசை பணிய வைக்கும் விதத்திலும், எப்படிப்பட்ட நாசத்தை விளைவித்தேனும் இந்தியாவுக்குள் நுழை வதற்கான அனுமதியை பெறும் விதத்திலும், அமெ ரிக்க நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு ரூ.125 கோடி அளவிற்கு லஞ்சப்பணத் தை வால்மார்ட் நிறுவனம் வாரியிறைத்தது. இந்த விவகாரம் திங்களன்று நாடாளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத் தியது. இந்தியாவின் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (பெமா) திருத்தப் படுவதற்கு முன்பே வால் மார்ட் நிறுவனம் பெரும ளவு பணத்தை வாரியிறைத் திருப்பது தெரியவருகிறது.

சாம்சங்கிற்கு இணையாக ஒரு கோடியை தாண்டியது எல்ஜியின் விற்பனை!

உலக ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்கின் ஆதிக்கத்திற்கு மத்தியில் எல்.ஜி.யின் எல் வரிசையிலான ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை ஒரு ஆண்டில் ஒரு கோடியைத் தொட்டுள்ளதாக எல்.ஜி. நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2012ம் ஆண்டின் செல்போன் உலக மாநாட்டில் தான் இந்த எல் 3 ஸ்மார்ட்போனை எல்.ஜி. நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு எல் 5, எல் 7 மற்றும் எல் 9 வரிசையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. இதில் எல் 9 பதிப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், ஆப்பிள், மோட்டோரோலா மற்றும் எச்டிசி ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது எல்.ஜி. நிறுவனம் இணைந்துள்ளது. எல் வரிசையிலான ஸ்மார்ட்போன்களில் மற்ற ஸ்மார்ட் போன்களில் இல்லாத புதிய வசதி ஒன்று உள்ளது. இதில் க்யூ ட்ரான்ஸ்லேட்டர் என்ற அப்ளிகேஷன், வார்த்தைகள் மற்றும் வாங்கியங்களை 44 ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்திவிடும். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. எல் வரிசையின் இந்த அமோக விற்பனையால் எல்.ஜி. நிறுவனம் தனது அடுத்தடுத்த எல் பதிப்புகளை விரைவாகவும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மின்வெட்டை நீக்கி வெப்பமயமாதலை குறைக்கும் ஆல்கே (பாசி)! பிரெஞ்சு நாட்டு அறிஞர் கண்டுபிடிப்பு

உலகம் வெப்பமயமாதல் பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி வருகின்றன. இதற்கு காரணம் உலகம் முழுவதும் அதிகரித்தும் வரும் வாகனப் பெருக்கம். இது மட்டும் இல்லாமல் வாழ்விடங்களுக்காவும், தொழில் வளர்ச்சிக்காவும் மரங்களை வெட்டி, காடுகளை அழிப்பதும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. மேலும் வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் - டை - ஆக்சைடால், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவுதான் ஆர்டிக், அண்டார்டிகா போன்ற துருவப் பகுதிகளில் உள்ள ஆர்டிக்கடலில் பனிபாறைகள் அதிக அளவு உருகி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் முழுவதுமாக உருகி கடல் நீர் உயரக்கூடும். இதனால் அண்டார்டிக்காவை சுற்றியுள்ள பகுதிகள் அழியும் சூழல் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

‘யூ டியூப்பிற்கு’ போட்டியாக ‘மெஹ்ர்’  ஈரான் அறிமுகப்படுத்தியது

உலகம் முழுவதும் சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வீடியோ வலைதளம் யூ டியூப். இது கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த வலைதளத்திற்கு போட்டியாக ஈரான் அரசு ‘மெஹ்ர்’ எனும் புதிய வீடியோ வலைதளத்தை உருவாக்கியுள்ளது. மெஹ்ர் என்றால் தமிழில் அன்பு என்று அர்த்தம். (மேலும்....)

கானா ஜனாதிபதியாக மஹமா மீண்டும் தேர்வு

கானா ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோன் மஹமா வெற்றி பெற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப் பட்டது. அதில் தற்போதைய ஜனாதிபதி மஹமா 50.7 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சித் தலைவர் நானா அகுபொ அட்டோ 47.74 வீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனினும் இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்துள்ள எதிர்க்கட்சி, ஆளும் கட்சி தேர்தல் ஆணைய அதிகாரிகளை விலைக்கு வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அனைத்து தரப்பும் மக்கள் கருத்தை ஏற்க வேண்டும் என்றும் மக்களின் ஆணை கடவுளின் ஆணை என்றும் ஜனாதிபதி மஹமா வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர். ஆபிரிக்காவில் மிக வேகமாக வளர்ந்துவரும் கானா அந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு சில நாடுகளில் ஒன்றாகும்.

மார்கழி 10, 2012

லயன் எயார் விமானத்தில் பயணித்த 31 பேரின் உடற் பாகங்கள் மீட்பு

1998 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் லயன் எயார் விமானத்தில் பயணித்து இறந்தவர்களின் சடலங்கள்  பூநகரி பிரதேசத்தில் புதைக்கப்பட்டன. இதில் 31 பேரின் உடற் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தந்த தகவலில் அடிப்படையிலேயே இந்த விமானத்தில் இறந்தவர்களின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது. இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை குறித்த மேலதி விசாரணைகள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தற்போது நடைபெறுவதாகவும், அதனடிப்படையிலேயே இந்த தேடுதல் நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட குறித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபரே இந்த அண்டனோவ் 24 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் விமானம் தாக்கப்பட்ட போது அதில் 48 தமிழ் சிவிலியன்களும், விமான சிப்பந்திகள் 7 பேருமாக மொத்தமாக 54 பேர் கொல்லப்பட்டனர். பலாலி விமானநிலையத்தில் இருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தை நோக்கி பறந்துகொண்டிருந்தபோதே அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இரணைதீவு கடற்கரையில் இருந்து வடக்காக 4 கடல் மைல்கள் தொலைவில் அந்த விமானம் வீழ்ந்தது. அதில் 33 பேரின் சடலங்கள் பொதுமக்களாலும், கிராம அதிகாரிகளாலும் மீட்கப்பட்டு கௌதாரிமுனை என்ற இடத்தில் புதைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். மருத்துவ பீட மாணவர்கள் 5 பேரும், விஞ்ஞான பீட மாணவர் ஒருவரும், முகாமைத்துவ மாணவர் ஒருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை தற்போது அழைத்துவர சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஞானப்பால் குடித்துவிட்ட சம்பந்தர்

'புலிகளின் கொலை பட்டியலில் இருந்து கருணா, டக்ளஸ் போல உயிர் தப்பினேன்!' -சம்பந்தன்

பிரபாகரன் இறந்து, புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு  4 வருடங்கள் ஆகிவிட்ட பிற்பாடு தான், புலிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு ஆனானப்பட்ட சம்பந்தன் ஐயாவுக்கே, துணிவு வந்திருக்கிறது. ஏனைய எடுபிடிகள், புலிகளின் பணத்துக்காக வாயைத் திறக்கும் தமிழக ஓநாய்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டு பொழுதுபோக்கு அரசியல் பேசும் புலன் பெயர்ந்த தமிழர்கள், நட்டுக் கழண்ட அரசு உறுப்பினர்கள், இம்மனுவேல் குழு, நெடியவன் குழு, விநாயகம் குழு இவர்கள் எல்லாம் எப்போது தான் உண்மை பேசுவார்கள். 'விடுதலை புலிகளின் கொலை பட்டியலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன' என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அப்படியிருந்தும் புலிகளிடம் இருந்து உயிர்தப்பி, தற்போது இலங்கை தமிழர்களின் அதிகபட்ச எம்.பி.க்களை கொண்ட தமிழ் கட்சியின் தலைவராக உள்ளார் இவர். (மேலும்....)

கண்ணோட்டம் - வெளிவந்துவிட்டது

13 ஆவதின் முக்கியத்துவம்

புலிகளை தோற்கடித்ததுடன் இனப்பிரச்சினை முடிவடைந்துவிட்டது என்ற அகங்கார நிலைப்பாட்டிற்கு பேரினவாதிகள் சென்றுள்ளார்கள். இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் இலங்கையில் அமைதி இழந்து வருவது துரதிஸ்டமான உண்மை. 13ஆவது திருத்தத்தை இலங்கையின் அரசியலமைப்பில் இருந்து அகற்றுவதன் மூலம் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். உண்மையில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாலும் சென்று அதிகாரங்களை பகிர்வதே முறையாகும். 13 வதையும் இலங்கையின் அரசியலமைப்பில் இல்லாமல் செய்யவேண்டும் என்ற போக்கு விபரீதமானது. இந்தப் போக்கு இன்று அரச மட்டத்தில் தீவிரவாத சத்திகளால் வலியுறுத்தப்படுகிறது. இது அனுமதிக்கவும் பட்டுள்ளது. மாகாணசபைகளின் அதிகாரங்களை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தினால் நீதிததுறையின் தலை எழுத்தையே மாற்றும் அளவிற்கு விபரீதமான போக்குகள் தலை தூக்கியுள்ளன. அண்மையில் 'திவிநகும' சட்டமூலம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீhப்பு இலங்கையின் இரண்டு சட்டவாக்க சபைகள் இருப்பதை உறுதிப்படுதியுள்ளது. இது பேரினவாத சத்திகளை பரபரப்படைய வைத்துள்ளது. (மேலும்....)

நிரந்தரமான தீர்வு ஏற்படும் வரை வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும்

ஐ.நா இற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா லெபனானில் ஐ.நா அமைதிகாக்கும் படையின் நடவடிக்களின் கண்காணிப்புப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என இன்னசிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. சவேந்திர சில்வா வன்னி இனப்படுகொலைகளைத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகளில் பிரதானமானவர். இனப்படுகொலையோடு நேரடியான தொடர்புடையவர். இவருக்கு எதிராக அமரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதாகக் கூறப்பட்ட போதும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. உலகம் முழுவதும் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் அடியாளாகத் தொழிற்படும் அமைதிகாக்கும் படை நிலை கொண்டுள்ள நாடுகளில் பல குற்றச் செயல்களை மேற்கொண்டுள்ளது. இதே வேளை, நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படும் வரை தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும் என ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் வலியுறுத்தி உள்ளது.

விவசாயத்தினையும் விட்டுவைக்காது வால்மார்ட்!

(இ. எம்.ஜோசப்)

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூலதனம் வந்தால், இந்நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் வாழ்க்கை யினை அது நாசப்படுத்தி விடும் என்பது இந்நாட்டில் இயல்பான அச்சமாக மாறி யிருக்கிறது. எனவே, இதற்கான எதிர்ப்பும் வர்த்தகத்தை மையப்படுத்தியே இருந்து வருகிறது. நடைமுறையில் வர்த்தகம் மட் டுமல்லாது, விவசாயம், சிறு உற்பத்தித் தொழில்கள் என பலவும் பாதிப்புக்கு உள் ளாகும் என்பதே உண்மை. இந்தப் பின் னணியில் இந்திய விவசாயிகளை அந்நிய மூலதனத்திற்கு ஆதரவாக மாற்றும் வகை யில், முதலாளித்துவ ஊடகங்கள் இன்று திட்டமிட்டு, ஒரு கவர்ச்சிகரமான பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. (மேலும்....)

இலங்கைப் படைத்தரப்பைச் சோ்ந்தோருக்கு கனடா குத்தியுள்ள முத்திரை

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், தப்பிச்சென்ற இரண்டாவது படை அதிகாரியினது புகலிடக் கோரிக்கையினையும் கனடா நிராகரித்துள்ளது. ஏற்கனவே இலங்கைக் கடற்படையில் கொமடோர் தர அதிகாரியாக இருந்த நடராசா குருபரன் என்பவரின் புகலிடக் கோரிக்கையை கடந்த யூலை மாதம் கனடிய அதிகாரிகள் நிராகரித்திருந்தனர். கொமடோர் குருபரன் போரில் நேரடியாக பங்கேற்ற ஒருவரல்லர். அவர் ஒரு தொழில்நுட்ப அதிகாரியாகவே இலங்கைக் கடற்படையில் பணியாற்றினார். போரின்போது வடக்கு கிழக்கில் பணியாற்ற தான் அனுமதிக்கப்படவில்லை என்றும் தென்பகுதியிலேயே பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் தனது நடமாட்டங்கள் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டதாகவும் கனடிய அதிகாரிகளிடம் அவர் குறிப்பிட்டிருந்தார்.(மேலும்....)

வங்கதேசத்தில் வன்முறை 

வங்கதேசம் பொதுத் தேர்தலை மேற்பார்வை யிடுவதற்கு இடைக்கால அரசை மீண்டும் அனு மதிக்க வேண்டும் என வலி யுறுத்தி நடந்த எதிர்ப்புப் போராட்டம் வன்முறைக் களமாக ஆனது. எதிர்ப்பா ளர்கள் ஞாயிறன்று கற் களை வீசி, வாகனங்களை எரித்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அப் புறப்படுத்த காவல்துறை யினர் கண்ணீர்ப்புகை குண் டுகளை வீசினர்.  தலைநகர் டாக்கா விலும் இதர மாவட்டங் களிலும் நடந்த இந்த வன் முறையில் 2 பேர் கொல்லப் பட்டனர். 200 பேர் காயம் அடைந்தனர் என காவல் துறையினரும் நேரில் பார்த் தவர்களும் கூறினர். டாக்காவிற்கு வட மேற்கே 104 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிராஜ் கன்ஜ் மாவட்டத்தில் அரசு ஆதரவாளர்களுக்கும் எதிர்ப் பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் ஒரு எதிர்ப்பாளர் கொல்லப் பட்டார் என உள்ளூர் காவல்துறைத் தலைவர் வாகித் ஜாமன் கூறினார். 2014ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெறும் பொதுத் தேர்தலை பார்வையிட இடைக்கால அரசு மேற் பார்வையிட அனுமதிக்கும் அரசியலமைப்பு சாச னத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என எதிர்க் கட்சிகள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தின. பிரதமர் ஷேக் ஹசீனா அரசு 15 ஆண்டுகாலம் நீடித்த இந்த அரசியல மைப்பு விதியை நீக்கியது. இடைக்கால அரசு தேர் தலை மேற்பார்வையிடுவது அரசியலமைப்புக்கு எதி ரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், இந்த விதியை ஷேக்ஹசீனா அரசு அகற்றியது.

சாவெஸ் புற்றுநோய்க்காக மீண்டும் சத்திரசிகிச்சை

வெனிசுவெலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ¤க்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக சத்திர சிகிச்சை செய்துகொள்வதற்காக கியூபா திரும்பியுள்ளார். தமது உடலில் அபாயகரமான புற்றுநோய் செல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஹுகோ சாவெஸ் கடந்த ஞாயிறுக்கிழமை கியூபா செல்லும் முன் குறிப்பிட்டார். இதன்போது தமது உடல் நிலை மோசமடைந்தால் புதிய தேர்தலில் துணை ஜனாதிபதி நிகொபஸ் மடுரொவுக்கு வாக்களிக்குமாறும் மக்களிடம் கோரி க்கை விடுத்தார். சாவெஸ் நாட்டின் அடுத்த தலைவர் பற்றி பகிரங்க அறிவிப்பொன்றை விடுப்பது இதுவே முதல் முறையாகும். 58 வயதான ஹுகோ சாவெஸ் கடந்த 2011 ஜூன் தொடக்கம் மூன்று தடவைகள் புற்றுநோய்க்காக கியூபாவில் சத்திரசிகிச்சை செய்து கொண்டுள்ளார். எனினும் அவர் தாம் புற்றுநோயில் இருந்து முழுமையாக சுகம் பெற்றுவிட்டதாக அண் மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாமதிக்கப்படும் நீதி  மறுக்கப்படும் நீதியே ! 

பாபர் மசூதி இடித்த வழக்கில் சிபிஐ எவ்வளவு மெத்தனமாக இருக்கிறது என்பதை உச்ச நீதி மன்றமே கண்டித்திருக்கிறது. இந்து மதவெறியர் களால் இடிக்கப்பட்டது பாபர் மசூதி மட்டு மல்ல. இந்தியாவின் மதச்சார்பின்மையும் கூடவே இடித்து தள்ளப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்டு சரியாக 20 வரு டங்கள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் இன்று வரை மசூதியை இடித்த குற்ற வாளிகள் தண்டிக்கப்படவில்லை. அதன் மீது நடைபெறும் வழக்கும் எந்த ஒரு முடிவுக்கும் வர வில்லை.(மேலும்....)

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்

'இளங்கோவன் கதைகள்' இந்தி மொழியில் வெளியீடு..!

பிரான்ஸ் நாட்டில் வதியும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கௌரவிக்கப்பட்டார். இவரது 'இளங்கோவன் கதைகள்' சிறுகதைத் தொகுதி 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்' என்ற பெயரில் புதுடில்லியிலுள்ள பிரபல இந்தி மொழிப் பதிப்பகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது. அண்மையில் (27 செப்டம்பர் 2012) புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'புலச் சிதறலுக்குள்ளானோரின் குரல்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கில், 'இளங்கோவன் கதைகள்' இந்தி மொழிப் பதிப்பான 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. (மேலும்....)

லயன் எயார் விமானத்தில் பயணித்தோரின்

உடல்பாகங்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை பூநகரியில் ஆரம்பம்

4 வருடங்களுக்கு முன்னர் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 'லயன் எயார்' விமானத்தில் பயணித்தவர்களின் உடல்பாகத்தின் எச்சங்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை பூநகரி கடற்கரை பிரதேசத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலியிலிருந்து இரத்மலானை நோக்கி 48 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் அடங்கலாக சுமார் 54 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் மேற்படி விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தையும் அதில் பயணம் செய்தவர்களின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தையும் காண்பித் துள்ளார். இதனையடுத்தே இரணைத்தீவு கடற்கரை பிரதேசத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி

இலங்கை உட்பட 20 நாடுகள் மீது தடையை தளர்த்தியது அமெரிக்கா

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இலங் கைக்கு அமெரிக்கா ஆறு மாதகால அவகாசம் வழங்கி தனது தடையினை தளர்த்தியுள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ஊர்ஜிதம் செய்தார். அமெரிக்க அரசாங்கம் 20 நாடுகளுக்கு தனது தடையுத்தரவைத் தளர்த்தியிருப்பதாகவும் அதன் மூலம் இலங்கை நன்மை அடைவதாகவும் அவர் கூறினார். ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்திருக்கும் தடையில் சிறிது மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்த விவகாரங்களுக்கு முழுமையாக தீர்வு காணப்படும் வரை அமெரிக்கா அந்நாட்டுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும். இருப்பினும் சீனா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் ஈரானிலிருந்து அடுத்த 180 நாட்களுக்கு மட்டும் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் அணு ஆயுத விவகாரத்தால் உலக நாடுகளுக்கு அமெரிக்கா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா தனது தடையில் சற்று தளர்வு ஏற்படுத்தியிருப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு நிம்மதி தரக்கூடியது.

மார்கழி 09, 2012

சம்பந்தர் ஐயா சாதிப்பாரா?

(விபீஷணன்)

பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்கள் தமது எதிர்கால சமூக அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைமைத்துவத்தை இப்போது சம்பந்தர் ஐயாவிடம் தமது வாக்குகள் மூலம் அங்கீகரித்து ஒப்படைத்திருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலிலும் சரி ஜனாதிபதித் தேர்தலிலும் சரி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலும் சரி அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலிலும் சரி கடந்த மூன்றாண்டுகளில் நடந்து முடிந்த நான்கு வகையான தேர்தல்களிலும் மிகப் பெரும்பான்மையான தொகையில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தர் ஐயாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர் சொன்ன சொற்படியே வாக்களித்திருக்கிறார்கள். (மேலும்....)

அமெரிக்காபிடிவாதம்

சுற்றுச்சூழல் பேச்சு தோல்வி

வளர்முக நாடுகளின் எந்தக்கோரிக் கையையும் ஏற்க முடியாது என்று அமெரிக்காவும் இதர பணக்கார நாடுகளும் பிடிவாதமாக மறுத்ததன் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கத்தார் நாட்டின் தோஹா நகரில் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் பேச்சு வார்த்தை கடந்த நவம்பர் 26ம் தேதி துவங்கி டிசம்பர் 7 வரை நடைபெற் றது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச் சியடைந்த நாடுகள் கடந்த பல்லாண்டு காலமாக பெருமளவு குவித்த கரியமில வாயுக்கழிவுகள் காரணமாக புவியின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. இதற்குத் தீர்வுகாண கடந்த பல்லாண்டு காலமாக ஐ.நா. சபையின் முயற்சியில் உலக நாடுக ளின் இத்தகைய மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. (மேலும்....)

யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு....

பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது பத்திரிகையின் ஆசிரியருடனும், கமராவுடனும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பின்னரேயே பிரச்சினை கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. இது உண்மை. சம்பவ இடத்திலிருந்த மாணவர்கள் நிச்சயம் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்வர். பாராளுமன்ற உறுப்பினர் சிக்கல் நிலையை உருவாக்கித் தனக்குப் பிரசாரம் தேடும் நோக்கிலேயே படப்பிடிப்பு உபகரணத்துடன் அங்கு வந்திருந்தார். இது சாதாரணமாக ஓர் அரசியல் வாதியின் மனநிலை. இதற்கு சரவணபவன் விதிவிலக்கல்லவே. இதனை அறியாத இள இரத்தங்களான உங்களில் சிலர் அவரைக் கண்டதும் தமது துடிப்பைக் காட்ட முயன்றதன் விளைவை இன்று ஒரு சில மாணவர்கள் அனுபவிக்கின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினரோ தனது நோக்கத்தில் பெருவெற்றி கண்டுவிட்டார். எதிர்பார்த்ததைவிடவும் அவருக்குப் பிரசாரம் கிடைத்தது. சில பத்திரிகைகள் முழுப்பக்கத்தில் கலர் படங்களுடன் அவரது கற்பனை கலந்த பேட்டியைப் பிரசுரித்திருந்தன. தொலைக்காட்சிகளில் அபாரமான பேட்டி. அவர் தனது வாகனத்திற்கு இழப்பீட்டிற்கும் மேலாக காப்புறுதி மூலமாகப் பணத்தினை நிச்சயம் பெற்றிருப்பார். இன்று பொலிஸ் விசாரணை என்று அலைவது யார்? படித்துப் பட்டம் பெற வந்த அப்பவிகளான நீங்களே. (மேலும்....)


காங்கோ அரசுடன்   புரட்சிப் படையினர் பேச்சு

காங்கோ அரசிற்கும் மார்ச் 23 இயக்கத் தினருக்குமிடையே இடையே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை சனி யன்று உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ளதாக உகாண்டா அரசு செய்தித்தொடர்பாளர் பிரெட் ஒபோ லாட் தெரிவித்துள்ளார். தங்களுடனான பேச்சுவார்த்தைக்கு அரசு சம்மதிக்கவில் லையெனில், காங்கோவின் கிழக்கு நகர மான கோமாவை திரும்ப எடுத்துக் கொள் வோம் என்று கடந்த திங்களன்று மார்ச் 23 இயக்கத்தினர் தெரிவித்திருந்தனர். இதனை யடுத்து அரசு இந்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த பலமாதங் களாக காங்கோ ராணுவத்தினருக்கும் மார்ச் 23 இயக்கத்தினருக்குமிடையே போர் நடைபெற்று வருகிறது. இதுமட்டு மன்றி, வறுமை, உள்கட்டமைப்பு ஆகிய வற்றாலும் காங்கோ கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டு களில் மட்டும் 55 லட்சத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா மீது TNA இரட்டை வேடம்; பாராளுமன்றில் அம்பலமாக்கிய சம்பந்தனும் சரவணபவனும்

‘தலைவர் புகழ்ச்சி, தொண்டன் இகழ்ச்சி’

தமிழ்க் கூட்டமைப்பு இந்தியாவுடன் உண்மையிலேயே உண்மையாக உள்ளதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ஏனெனில், தலைவர் சம்பந்தன் இந்தியாவைப் புகழ்ந்து நேசக் கரம் நீட்டி உதவி வழங்க முன்வருமாறு அழைப்பு விடுக்கிறார். இலங்கைத் தமிழர் விவகார தீர்வில் இந்தியாவிற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிகள் பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றார். தீர்வு விடயத்தில் ஒத்துழைப்பையும், ஒத்தாசையையும் பெற்றுக் கொண்டுவிட வேண்டுமென்ற துடிப்பில் தனது தாய் நாட்டை விடவும், தனது நாட்டு அரசாங்கத்தை விடவும் இந்தியாவை உயர்வாகப் பேசுகிறார். ஆனால், அவரது அதே கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ஈ. சரவணபவன் அதே பாராளுமன்றத்தில் தலைவரது கருத்துக்களுக்கு நேர் மாறாக இந்தியாவையும் அங்கு ஆட்சிசெய்யும் இன்றைய அரசாங்கத்தையும் எதிர்த்துக் கருத்துக்களை முன்வைக்கிறார். (மேலும்....)

சூடானில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட கழுகு

இஸ்ரேல் ராணுவத்தின் ரகசிய ஜிபி எஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப் பட்டிருந்த கழுகு ஒன்று சூடானின் மேற்குப் பகுதியான டர்பூரில் சுற்றித் திருந்தது. இதனை டர்பூர் அதிகாரிகள் பிடித்தனர். அந்தக் கழுகின் காலில், ‘இஸ் ரேல் இயற்கை சேவை’ ‘ஹீப்ரூ பல்கலைக் கழகம், ஜெருசலேம்’ என்ற எழுதிய லேபிள் ஒட்டியிருந்தது. இதில் பொருத்தப் பட்டிருந்த ஜிபிஎஷ் கருவி மூலம் புகைப் படத்தை எடுத்து அனுப்ப முடியும். சூடானின் இந்தக் குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது கழுகுகளின் இடமாற்றத்தை அறிந்து கொள்வதற்காக புவியலாளர்கள் பொருத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

எங்களை விற்கவேண்டாம்!

இரண்டு முன்னாள் போராளிகள் மனக்குமுறல்

நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! ஒரு முன்னாள் பெண்புலியின் வாக்கு மூலம் என்று ஒரு நேர்காணலை வெளியிட்டிருந்தது தமிழகத்தின் பிரபல வெகுசன வார இதழான ஆனந்தவிகடன். அந்த நேர்காணலை ஒரு புனைவு என்றும் அது ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட முன் னாள் பெண் போராளிகளை கொச்சைப்படுத்துகிறது என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்தன. இந்நிலை யில் விடுதலைப்புலிகள் இயக்கத் தின் இரண்டு முன்னாள் பெண் போராளிகள் தமது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். (மேலும்....)

 

புலிகளை உயர்த்தி படையினரை இறக்குகிறாராம்

உண்மைகளை மூடி மறைப்பதாக ஆயர் இராயப்பு மீது குற்றச்சாட்டு - அருட்தந்தை நிகலோஸ் செல்வராஜ்

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் புலிகளின் சார்பில் குரல் கொடுத்து வருவதாக அருட்தந்தை நிகலோஸ் செல்வராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். ஆயர் ராயப்பு ஜோசப், புலிகளின் கொள்கைகளை பிரசாரம் செய்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் இழப்பிற்கு படையினரே காரணம் என ஆயர் இராயப்பு ஜோசப் குற்றம் சுமத்திய போதிலும், புலிகளின் கொடுமைகள் குறித்து வாய் திறக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (மேலும்....)

பகிரப்பட்ட 380 வீடுகளில் 256 முஸ்லிம்களுக்கே!

அரசியல்வாதிகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் அதிருப்தி -  செல்வம் MP

இந்திய வீடமைப்புத்திட்டத்தில் மன்னார் மக்களுக்கு பாரபட்சம் இழைக்கப்பட்டு வருகின்றது. திட்டம் தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார்.  மன்னாரில் இந்திய வீடமைப் புத்திட்டப் பங்கீட்டில் சமபங்கு பேண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ள செல்வம் அடைக்கலநாதன்’ எம்.பி சில அரசியல்வாதிகளின் தலையீட்டினைத் தடுக்க வேண்டு மெனவும் சுட்டிக்காட்டினார். இந்திய வீடமைப்புத்திட் டத்தின் கீழ் மன்னாரில் இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பகிர்ந்தளிக்கப்பட்ட 380 வீடுகளில் 256 வீடுகள் முஸ்லிம்களுக்கும் 124 வீடுகள் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரிய அநியாயம் நடைபெற் றுள்ளது. தமிழ் மக்களைப் போன்று முஸ்லிம்களும் இடம்பெயர்ந் தவர்கள் என்பது மறுப்பதற் கில்லை. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகிர்ந் தளிப்பதில் விகிதாசாரம் பேணப் பட வேண்டும் அல்லது இரண்டு சமூகங்களுக்கும் சமமான பகிர்வு இடம்பெற வேண்டு மென்றே நாம் கோருகின்றோம். இந்த விடயங்களில் அரசியல் வாதிகளின் தலையீட்டை நாம் விரும்பவில்லை. இவ்வாறு செல்வம் எம்.பி தெரிவித்தார்.

புலிகள் விரட்டியபோது வாய் மூடி மெளனம்; மீள்குடியேறுகையில் கலகம்

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்களை ஓரங்கட்டுவதில் குறியாகவுள்ள செல்வம் MP

இந்திய வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம்கள் உள்வாங்கப்படக் கூடாது என்றும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதன் தலைமை யில் சில அரச எதிர்ப்பு குழுக்கள் மேற்கொள்ளும், பிரசாரங்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார். வடக்கில் புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 22 வருடங்களின் பின்னர் மீண் டும் தமது தாயக பூமிக்கு மீள் குடியேற ஆரம்பித்துள்ளனர். 1990ம் ஆண்டு புலிகள் வடக்கி லிருந்த முஸ்லிம்களை அம் மண்ணிலிருந்து வெளியேற்றிய துடன், அவர்களது உடமைகளை யும், சூறையாடினர், இவ்வாறு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் போதும், அதன் பின்னரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ் லிம்கள் குறித்து வாய்மூடி மெளனிகளாக இருந்தனர். இன்று முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்தை செல்வம் அடைக் கல நாதன் போன்ற இனவாத அரசியல்வாதிகள், அதனை தடுக்கும் வேலையினை செய் கின்றனர்.

மார்கழி 08, 2012

புலிகள் பயங்கரவாதிகள்
அதனால் தான் அவர்கள் அழிந்தார்கள் - சம்பந்தன் ஐயா

புலிகள் பயங்கரவாதிகள், அதனால் தான் அவர்கள் அழிந்தார்கள் என்கிறார் சம்பந்தன் ஐயா அவர்கள் ! பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதுடன் பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் எனவும், அவர்கள் ஆயுதங்களை ஏந்திப் போராடினார்கள் என்றும் கூறிய சம்பந்தன் அவர்கள், புலிகள் மனித உரிமை விடையங்களை மதிக்கவில்லை என்றும் அதனால் தான் தாமே அழிவைத் தேடிக்கொண்டார்கள் என்றும், பாராளுமன்றில் உரக்கக் கூறியுள்ளார். இவர் பேச்சைக் கேட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில எம்.பீக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகிவிட்டனர். பேசாமல் அரசியலை விட்டு விட்டு, வாழைத் தோட்டத்தை வைத்து பிழைக்கலாம் என்று தோன்றுகிறது என்று, பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். (மேலும்....)

பேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவனம்


(பாரதி தீட்சண்யா)


சோஷலிசத்தின் இலக்கு மனிதன் தான். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. இத்தகைய மனித குலத்தின் இலட்சியத்தை தமது எழுத்தாலும், நடைமுறையாலும் செயற்படுத்த முனைந்த கைலாசபதி பற்றி சிந்தித்த போது மேற்குறித்த வரிகள் நினைவில் நிலைத்து நிற்கின்றன. இருபதாம் நூற்றாண்டு பெற்றுத் தந்த தலை சிறந்த ஆய்வு அறிஞர்களில் கைலாசபதியும் ஒருவர். கால் நூற்றாண்டு தமிழியல் வரலாற்றில் தனித்துவமான ஆளுமைச் சுவடுகளைப் பதித்த அவர் பத்திரிகையாளர், எழுத்தாளர, விமர்சகர், விரிவுரையாளர் – பேராசிரியர், முதலாவது யாழ் வளாகத் தலைவர், கலைப்பீடாதிபதி என பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை தன்னகத்தே கொண்டிருந்தார். இத்தகைய சமூதாயம் சார்ந்த அவரது ஆளுமைகளே அவரை சிறந்ததொரு முன்மாதிரியாக கொள்கின்ற போக்கு வளர்வதற்கு காரணமாக அமைந்தது.
(மேலும்....)

 

உயிரே உனது விலை என்ன?

(நடேசன்)

ஈழவிடுதலைப் போராட்டத்தில் உயிர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்கப்படவில்லை. இதுவே இந்த போராட்டத்தின் தோல்வியின் மூலவேர் என்ற எனது கருத்து. இது எனக்கு அரசியல் அறிவு தெரிந்த காலத்திலே ஏற்பட்டது. தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அதை உறுதி செய்தபடி இருந்தது. பணத்தில் ஆசையில்லாதவன் வியாபாரம் செய்ய முடியாது என்பது போல் உயிரில் மதிப்பு வைக்காதவன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவோ தலைமை தங்கவோ தகுதியில்லதவன் என்பது எனது தர்க்கம். இந்த உண்மையைப் புரிவதற்கு ஆராச்சி செய்யவேண்டிது இல்லை. தனது உயிரை மதிக்காத மனிதன் மற்றவர்கள் உயிரை மதிப்பான் என எதிர்பார்க்க முடியாது. (மேலும்....)

புலிகள் யாராலும் அழிக்கப்படவில்லை, அவர்களாகவே அழிந்து போனார்கள்

  • ஜனநாயகம், மனித உரிமைகளை புலிகள் மதிக்கவில்லை

  • கொலைப்பட்டியலில் எனது பெயரும் இருந்தது

  • இராணுவத்தை தமிழர்களின் காணிகளில் இருந்து வெளியேறுமாறு தான் கேட்கிறோம்

தமிழ் மக்கள் மீது அடுத்து அடுத்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் காரணமாக புலிகள் உருவாக்கப்பட்டார்கள். புலிகளின் கொலைப்பட்டியலில் எனது பெயரும் இருந்தது. எனது சகாக்களின் பெயரும் இருந்தது. ஆனால், எம்மை புலிகள் என்றும், புலிகளின் பிரதிநிதிகள் என்றும் கூறுவது தவறு. புலிகள் தாம் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும், விதிமுறைகளையும் மதிக்காததன் காரணமாக அழிந்து போனவர்கள்; அவர்கள் அழிக்கப்படவில்லை. அவர்களாகவே அழிந்து போனார்கள். இன்று யார் யாரோ புலிகளை அழித்து விட்டதாகக் கூறுகிறார்கள். (மேலும்....)

விசா இல்லாமல் பீஜிங்கில் தங்க சீனாவில் புதுத் திட்டம் அறிமுகம்

விசா இல்லாமல் பீஜிங்கில் வெளிநாட்டினர் 72 மணி நேரம் தங்கும் வகையில் புதிய திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. ஆனால் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் சேர்க்கப்படவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு புதுத் திட்டம் ஒன்றை நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி தலைநகர் பீஜிங்கில் மட்டும் 72 மணி நேரம் தங்குவதற்கு விசா தேவையில்லை. விசா இல்லாமல் பீஜிங்கை வெளி நாட்டினர் சுற்றிய பார்க்கலாம். இந்த சிறப்பு அனுமதி 45 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற வில்லை. விசா இல்லாமல் பீஜிங்கில் தங்கும் சிறப்புத் திட்டத்தில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் சேர்க்கப்படவில்லை.  இதேபோல் பங்களாதேஷ், மியன்மார், இலங்கை ஆகிய நாட்டினருக்கும் விசா இல்லாமல் தங்குவதற்கு அனுமதி இல்லை. இந்த நாடுகள் அனைத்துமே சீனாவின் அண்டை நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழர்களை பயங்கரவாதிகளாக காண்பிக்க முனைவது தவறானது

பிரதம நீதியரசரின் பிரச்சினையோடு தமிழர்களை தொடர்புபடுத்தி பயங்கரவாதிகள் என தமிழர்களை காண்பிக்க முயல்வது தவறான செயல். தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை புரிந்து கொண்டு பேசவேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பி.யுமான ஜோன் அமரதுங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஷிராணி பண்டாரநாயக்கவின் விவகாரத்தில் பின்னால் தமிழர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் சட்டத்தரணிகளுக்கு பணம் வழங்கி குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாகவும், பயங்கரவாத ஆதரவாளர்கள் உள்ளதாகவும் குற்றம் சுமத்துகின்றனர் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மார்கழி 07, 2012

13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு வழங்க ஆரதவு கிடைத்துள்ளதா?

தேசிய பிரச்சினைக்கு பதின் மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று தீர்வை வழங்குவதற்கு அரசாங்கத்திலுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளினதும் ஆதரவு கிடைத்துள்ளதா என பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பிய ஐ.தே. கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள கூற்றில் உண்மையுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு 3 மாதகால அவகாசம் தேவையென இதன் போது அரசாங்க தரப்பால் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இக்கேள்வியை எழுப்பினார்.

யாழ் ஊடகங்களும் சாதியத்தை அங்கீகரிக்கின்றனவா?

(நடராசா தமிழ் அழகன்)

அண்மைக்காலமாக யாழ் மண்ணில் சர்ச்சைக்குரிய விடயமாகப் பேசப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அதிபர் நியமனம் என்னால் (நடராஜா தமிழ் அழகன்) வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் ஆளுநர் அவர்கள் குறித்த அதிபருக்கு உடனடி நியமனம் வழங்க பணிப்புரை விடுத்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதவிடத்து நான் அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு இப் பிரச்சனை பற்றிய விளக்கங்களையும் நடந்த உண்மைகளைப் பற்றியும் ஓர் அறிக்கையை அனுப்பியிருந்தேன். இது அனுப்பப்பட்டு பல நாட்களாகியும் எந்த ஒரு யாழ் ஊடகமும் இதனை கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. ஒரு சில இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமே எனது செய்தியை வெளியிட்டுள்ளன அவர்களுக்கு நன்றிகள். ஏனைய ஊடகங்களுக்கு நாம் தொடர்பு கொண்டு வினவிய போது அவர்கள் எமக்கு அளித்த பதில் பொறுப்பற்றதாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாக இருந்தன. (மேலும்....)

தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சியினர் வாபஸ்

பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையானது அரசியல் ரீதியானதும் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதுமான முழுக்க முழுக்க பக்கச் சார்பானதும் நேர்மையற்றதுமான விசாரணையை அமைத்திருப்பதாக இன்று சபையில் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிக்காட்டி எதிர்க்கட்சியை சேர்ந்த சகல உறுப்பினர்களும் இன்று சபையிலிருந்து வெளியேறினர். பாராளுமன்ற தெரிவுக்குழு கூடி சிறுது நேரத்திற்குள் அதன் நடவடிக்கைகளில் பிணக்கு ஏற்பட்டதையடுத்து தெரிவுக்குழு நடவடிக்கைகளின் இடையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஜோன் அமரதுங்க, லக்~;மன் கிரியெல்ல, இரா. சம்பந்தன் மற்றும் விஜித ஹேரத் ஆகிய நான்கு எம்.பி.க்கள் வெளியேறியிருந்தனர். இவ்வாறு தெரிவுக்குழுவிலிருந்து வெளியேறி சபைக்குள் நுழைந்து தெரிவுக்குழு தொடர்பில் தமது கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை முட்டாள்தனமானது

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது முட்டாள்தனமான செயலாகும். இவ்வாறான செயற்பாடுகளுகளினால் சர்வதேச ரீதியில் மேலும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையே இலங்கைக்கு ஏற்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு மனித உரிமைகள் பிரச்சினைகள் இலங்கைக்கு எதிராக காணப்படுகின்றன. இவற்றை எதிர் கொண்டு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளாமல் சர்வதேச அழுத்தங்களையும் தலையீடுகளையும் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றமை நாட்டின் நிலையான பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த பண்டார கூறுகையில், சர்வதேச நாடுகளின் கழுகுப் பார்வையில் இலங்கை உள்ளது. இதனை மறுக்க யாராலும் இயலாது. குறிப்பாக மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்கும் முயற்சிகள் காணப்படுகையில் அதனை முறியடிக்க தேவையான சூழலையே உள்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மார்கழி 06, 2012

இதுவரை யாழில் 25 பேர் கைது செய்துள்ளோம் - பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை யாழ்பபாணத்தில் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சந்திரா வாகிஸ்த பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளாக இருந்தவர்களும், விடுதலைப் புலிகளுடன் இணைந்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்றைய தினம் மற்றும் நேற்று முன்தினம் கோப்பாய், சாவகச்சேரி, உரும்பிராய் ஆகிய இடங்களில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் கைதுசெய்யப்படுவதற்கான ஆவணங்கள் கைதிகளின் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் 7 பேரின் கைது தொடர்பிலும் இன்று கோப்பாய், பொலிகண்டி மற்றும் இளவாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பேருடைய முறைப்பாடும்  மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி. கனகராஜ்  தெரிவித்துள்ளார். இருப்பினும் கைது செய்யப்பட்டவர்களது எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

உலக அழிவு சர்ச்சை

உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், இளைஞர்கள்!

(கவிதன் சண்முகராஜா)

இம்மாதத்தில் பலரும் அச்சத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தினமாக 21 ஐக் குறிப்பிடலாம். அதாவது இத்தினத்தில் உலகம் அழிந்துவிடப்போவதாக பலர் தங்கள் கற்பனைத் திறனில் வெவ்வேறேன கதைகளைக் கூறிய வண்ணமுள்ளனர். ஒரு சில ஊடகங்களும் எவ்வித சரியான மூலகமும் இன்றி உலக அழிவு தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். நாசாவே உலக அழிவு தொடர்பில் உறுதியாக கருத்து எதனையும் வெளியிடாத போதும் நாசாவை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடும் ஒரு சில ஊடகங்களையும், ஏராளமான தனிநபர்களையும் சமூகவலையமைப்புகளிலும் காணமுடிகின்றது. (மேலும்...)

யாழில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் தொடர்பு - ஜயக்கொடி

எவ்வித காரணமும், அறிவித்தலும் இன்றி விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 9 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குறித்த நபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட கைதுக்கும் தமக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லையெனவும் தம்மால் இதனையிட்டு எதுவும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட புலனாய்வின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர்களுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் தொடர்பிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொல்லைக் கொடுத்து கொடுத்து மீண்டும் மீண்டும் அடி வாங்கும் தமிழினம்

 (சிவகரன்)

1983 இனக்கலவரம் இலங்கை தமிழர்களுக்கு அவர்களின் எதிர்காலம் பற்றிய ஒரு பாரிய கேள்வியை எழுப்பியது.  கலவரம் நடந்து 29 வருடங்கள் உருண்டோடியும் தமிழர்களின் எதிர்காலத்திற்கு இன்னும் ஒரு பதில் கிடைக்கவில்லை. ஆனால் அந்த மாபெரும் இனக்கலவரத்தை நாம் எடுத்த ஒரு முட்டாள் தனமான நடவடிக்கைதான் ஒரு சிறு பொறிபோல் தூண்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது. திருநெல்வேலி அதாவது இன்று பிரச்சனை நடந்த யாழ் பல்கலைக்கழகத்தின் அதே பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் நடைபெற்ற ஒரு பொறுப்பற்ற கொரில்லா தாக்குதல் தான் 83 இனக்கலவரத்தை தூண்ட காரணமாயிருந்தது. அன்று நாம் கொரில்லா யுத்தம் என்று தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஆரம்பித்த போராட்டம் நம்மையே தாக்க நாம் இலங்கை அரசிடம் எடுத்து கொடுத்த ஒரு பொல்லு. இனக்கலவரம் என்ற பெயரில் அதே பொல்லால் நாம் மிக மோசமாக அடி வாங்கினேம். கொரில்லா தாக்குதல்கள் அழிவை கொண்டு வரும்! நாம் புத்தியுடன் செயற்பட வேண்டு;ம் இல்லை எதிரியை நாம் பலமாக்கி விடுவேம் என்று விமர்சித்தவர்கள் அன்று சோத்துப்பாசல்கள் என்று பரிகசிக்கப்பட்டார்கள். (மேலும்...)

தியாகிகள் மற்றும் துரோகிகளை நினைவு கூருதல்

(மகேந்திரன் திருவரங்கன்)

மாவீரர் தினம் பற்றி நான் எழுப்ப விரும்பும் ஒரு கேள்வி எல்.ரீ.ரீ.ஈ யினரால் விட்டுச் செல்லப்பட்ட தீர்வுகாணப்படாத ஒரு பிரசங்கத்தினைச் சுற்றியுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ இரக்கமற்ற முறையில் புளொட், ரெலோ ஈபிஆர்எல்எப், போன்ற சக போராளி இயக்க அங்கத்தவர்களை கொன்றொழித்தது. இந்த இயக்கங்களை பிரதிநிதிப்படுத்திய போராளிகள்; துரோகிகள் என்கிற இழி பெயரை சம்பாதித்துக்கொண்டு எல்.ரீ.ரீ.ஈயின் கைகளினால் கொல்லப்பட்டார்கள். இந்த இயக்கங்களின் அங்கத்தவர்களோடு எந்த தொடர்பையோ அல்லது கூட்டையோ வைப்பதை நிறுத்தும்படி தமிழ் சமூகத்தை எல்.ரீ.ரீ.ஈ வற்புறுத்தியது. இந்த துரோகி என்கிற முத்திரை ஒரு வழியில் சாதி மற்றும் தீண்டாமை பற்றிய புதியதோர் பிரசங்கத்தை தமிழர்களின் மையப் பிரதேசத்தில் ஏற்படுத்தியது, மற்றும் எல்.ரீ.ரீ.ஈயின் ஆணையை மீறியவர்களிடம் விளக்கமும் கோரப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்த மனித உரிமைகள் ஆர்வலர்கள், எல்.ரீ.ரீ.ஈ யை பற்றி வெளிப்படையாகவே தங்கள் விமர்சனக் குரல்களை வெளியிட்டவர்கள். தமிழ் தேசியத்துக்காக உயிர்நீத்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை தியாகிகள் என்று மரியாதையுடன் மகிமைப் படுத்தும் அதேவேளை, இந்த மாற்று இயக்க போராளிகள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மற்றும் ஜனநாயகத்துக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த செயற்பாட்டாளர்கள் ஆகியோர் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள்.(மேலும்...)

காரணங்கள், அறிவித்தலின்றி யாழில் 9 பேர் கைது

எவ்வித காரணமும், அறிவித்தலும் இன்றி 9 பேர் விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர்களின் உறவினர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட கைதுகளுக்கும் தமக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லையெனவும் தம்மால் இதனையிட்டு எதுவும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு விசாரணைகளுக்கென பொலிஸாரினால் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று யாழில் மாபெரும்? மக்கள் இல்லாத போரட்டம் நடத்தியுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சிலர் மாவீரர் தினம் கொண்டாட முற்பட்டபோது படையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் யாழ் பஸ் நிலையத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளும் படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் அழைப்பு விடப்பட்டிருந்தது. இது இப்படி இருக்கும் போது இவர்களின் இந்த போராட்டத்தில் தமிழ் மக்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்காக கூலிக்கி மாரடிக்கும் தமிழர்களின் அழிவுகளிலும் அவலங்களிலும்  பிணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் அவர்களின் ஊடகங்களில் மாபெரும் போராட்டம் என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள். இன்று இவர்களின் ஊடகங்களில் இவர்களால் வெளியிடப்பட்ட படங்கள், காணொளிகளை பாருங்கள். இன்று எவளவு தமிழர்கள் இவர்களுடைய இப்போராட்டத்தில் பங்கு பற்றியுள்ளார்கள். இந்த தமிழ் தேசிய இனவாத கூத்தாடிகளை தவிர வேறு எந்த தமிழர்களும் இதில் பங்கு பற்றியதாக தெரியவில்லை. (மேலும்....)

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைதுஇ பெண் மாணவர்களின் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்தமை ஆகியவற்றை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பேராதனை கலஹா சந்தியில் ஒன்று கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் பௌத்த பிக்குகள் உட்பட்ட நூற்றுக் கணக்கான மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோ~மிட்டு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். “வையாதே வையாதே எம் மீது கை வையாதே”, “பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே இராணுவம் செல்வதை உடன் நிறுத்து” இ “கைது செய்த மாணவர்களை உடன் விடுதலை செய்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.

இந்திய ரோலர்களின் அத்துமீறலுக்கு எதிராக முல்லைத்தீவில் பேரணி

முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம் பெறும் இந்திய மீன வர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. கொக் குளாய் முதல் இரணைப்பாலம் வரையிலுள்ள கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர். இந்திய மீனவர்கள் அத்துமீறி ரோலர் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதுடன், தென்பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் ரோலர்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் இறால் மீன்பிடி பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டிருந்த கிராம அபிவிருத்தி மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சமாஜங்களின் கரைதுறைபற்றுத் தலைவர் ரவிகரன் தெரிவித்தார். நேற்று முற்பகல் முல்லைத்தீவு சுனாமி ஞாபகார்த்த நினைவுத் தூபியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகம்வரை சென்றதாக அவர் குறிப்பிட்டார். இப்பேரணியின் இறுதியில் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

வவுனியா மாணவி மர்ம மரணம்

பொலிஸார் பலகோணங்களில் விசாரணை

வவுனியாவில் 14 வயதான மாணவியொரு வர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணை களை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் அல்பா நகர் வித்தியாலயத்தைச் சேர்ந்த அன்பலகம் சுலோஜனி (14) எனும் மாணவியே உயிரிழந் துள்ளார். செவ்வாய்க்கிழமை காலை வழமைபோல் பாடசாலைக்குச் சென் றவர் சடலமாகவே வீட்டுக்கு எடுத்துவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். குறித்த மாணவி காலை 7.30 மணிக்கு வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்றவர் மாலை 2.30 மணியாகியும் வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார் குறித்த மாணவியை பாடசாலைக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் சடலமாக இனங்கண்டுள்ளனர். மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மார்கழி 05, 2012

அமெரிக்க ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு!

அமெரிக்க ஆளில்லா விமானமொன்றை கைப்பற்றியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. வளைகுடா கடற்பகுதி வான்பரப்பில் வைத்தே இவ்விமானத்தைக் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது. ஈரானின் சக்தி மிக்க புரட்சிப்படைப் பிரிவே இவ் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளது. சிறிய 'ஸ்கேன் ஈகிள்' விமானமொன்றே கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விமானமானது வளைகுடா பகுதியில் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக ஈரானிய இராணுவ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் மண் ஆய்வு முடிவு வெளியீடு

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி இயந்திரம் செவ்வாய் மண்ணில் பல்வேறு மூலக் கூறுகளை கண்டு பிடித்துள்ளபோதும் அவைகளில் உயிர் வாழ்வதற்கு தேவையான இரசாயன கலவை இருப்பதற்கு உறுதியான அறிகுறி இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கியூரியாசிட்டியிலுள்ள ஆய்வு கூடத்தினூடே செவ்வாய் கிரகத்தின் மண் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் செவ்வாய் மண்ணில் தண்ணீர் உட்பட மேலும் பல இரசாயன மூலக் கூறுகள் கலவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத அடிப்படையிலான மூலக் கூறுகள் அவதானிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கிரக மண் ஆய்வில் கார்பன், சல்பர், நீர் மற்றும் கிளோரின் கலந்த பொருட்கள் மற்றும் மேலும் பல மூலக் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இதில் கார்பன் கலவை உள்ள மூலப் பொருட்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியமாக உள்ளது.

தமிழ்ச்சங்க ஒழுங்கை விவகாரம்

கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை விவகாரம் தொடர்பாக நேற்று (04) நடைபெற்ற கூட்டம் முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதாக உறுதியளித்திருந்த மேல்மாகாண சபை முதலமைச்சர் பிரசன்னா ரணதுங்க, தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் கலந்துகொள்வதாக எதிர்பார்க்கப்பட்ட எம்.பி. அஸ்வரும் இந்தக் கூட்டத்திற்கு வருகை தர வில்லை. மேல் மாகாண சபை முதல மைச்சர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற கூட்டத்தில் கொழும்பு மாநகர சபை மேயர் முசாம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர்கள் நல்லையா குமரகுருபரன், எஸ். ராஜேந்திரன், மாநகர சபை உறுப்பினர்கள் வேலணை வேணியன், பிரியாணி குணரத்ன, மன்சில், ரோய் போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாத்தளை ஆஸ்பத்திரி வளாகத்தில் இதுவரை 24 மனித மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் மீட்பு

மாத்தளை, வைத்தியசாலை வளாகத்திலிருந்து இதுவரை 24 மனித மண்டையோடுக ளும், எலும்புக் கூடுகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். கடந்த மாதம் 23ம் திகதி முதல் மீட்டெடுக்கப்பட்ட 24 மண் டையோடுகளும் எலும்புக் கூடுகளும் மனிதர்களுடை யது என்பது மாத்தளை வைத் தியசாலை அதிகாரிகளினாலும், நீதிமன்ற மருத்துவ அதிகாரிகளினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக உயிர்வாயு (பயோ கேஸ்) பிரிவு ஒன்றை நிர்மாணிப்பதற்காக பக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி நிலத்தை சமப்படுத்தும் நடவடிக்கைகளை கடந்த மாதம் 23ம் திகதி ஆரம்பித்துள்ளனர். இதன்போது, பல மண்டை யோடுகள் மீட்டெடுக்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து அந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் சமப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இதுவரை 24 மண்டை யோடுகளை மீட்டெடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக விவகாரம்

தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே இராணுவம் உள்நுழைய நேர்ந்தது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சுற்றுப்புறத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினரை முற்றாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக யாழ் பிராந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினர் நுழையவேண்டி ஏற்பட்ட தாகவும், இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார். யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், அனைத்துப் பீடங்களின் பீடாதி பதிகளுக் கும், இராணுவக் கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துரு சிங்கவுக்குமிடையில் நேற்று நண்பகல் முதல் சுமார் மூன்று மணிநேரம் நீண்ட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மேஜர் ஜெரல் மஹிந்த ஹத்துருசிங்க, அன்றைய சம்பவம் போன்று இனிவரும் காலங்களில் இராணுவத்தினரோ, பொலிஸாரோ பல்லைக்கழக வளாகத்துக்குள் நுழைய மாட்டார்கள். அவ்வாறு நுழைவதாயின் உரிய அனுமதியைப் பெற்றே நுழைவார்கள்.

ஆஸி. அரசுக்கு எதிராக 56 இலங்கையர்கள் வழக்கு

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக 56 இலங்கையர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். தாம் நாடு திருப்பி அனுப்பப்படுவதன் ஊடாக தமக்குக் காணப்படும் அச்சுறுத்தலை அவுஸ்திரேலியா புறக்கணிப்பதாகவும் அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவர்களில் 500 இலங்கையர்கள் நாடு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக அனுப்பப்படவிருந்த 56 இலங்கையர்களே உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர். தாம் நாடு திருப்பியனுப்பப்படுவதைத் தடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.

அபாயத்தின் பிடியில் புவிக்கோளம்

பூமிப்பந்து அபாயகரமான முறையில் சூடா கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தாவிட்டால் 2100ம் ஆண்டுவாக் கில் புவியின் வெப்பநிலை மேலும் 5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் தொடர்பான புதிய ஆய்வு ஒன்று சில நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் புவியின் துருவப்பகுதிகளில் உள்ள பனி மலை கள் அளவுக்கு அதிகமாக உருகியுள்ளன; இதன் காரணமாக ஒட்டுமொத்த உலக கடல் நீரின் மட் டம் 11 மில்லி மீட்டர் அளவிற்கு அதிகரித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 04, 2012

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் கணேஷமூர்த்தி சுதர்சன் பிணையில் விடுதலை!

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் கணேஷமூர்த்தி சுதர்சன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார. இதனை காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 28ஆம் திகதியும் 29ஆம் திகதியும் கைதான மாணவர்கள் நால்வரும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04.12.2012) ஆஜர்படுத்தப்பட்டவேளை, க.சுதர்சன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  எனினும் பரமலிங்கம் தர்ஷானந், கனகசபாபதி ஜெயன், சண்முகம் சொலமன் ஆகிய மூன்று மாணவர்களையும் தொடர்ந்தும் காவற்துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக விடுதிகளில் மாவீரர் தினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்ட வேளை இராணுவத்தினரும் காவற்துறையினரும் அத்துமீறி நுழைந்தாக குறிப்பிட்டு மறுநாள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதன்பின் கடந்த 28ஆம் திகதியும் 29ஆம் திகதியும் மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ். திருநெல்வேலியிலுள்ள சிறிரெலோ அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியமை மற்றும் மாவீரர் நாள் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டியமை ஆகிய குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறி வருகின்றனரா...?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்கிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரை போராட்டங்களை நடத்தப்போவதாக பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் அறிவித்துள்ளனர். இதனையடுத்தே சிங்கள மாணவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளின் ஏற்பாடுகள் மற்றும் ஸ்ரீரெலோ அலுவலகத்தின் மீதான குண்டுத் தாக்குதல் என்பவை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இன்னும் ஏன் இந்த சாதிவெறி….?    ஏன் இந்த அரசியல் தலையீடு….?

அண்மைக் காலமாக உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அதிபரை முடிவு செய்வது தொடர்பாக பல பிரச்சனைகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் தரம் குறைந்த அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாடசாலை சமூகத்தின் பெரும் பகுதியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை தகுதி உள்ளவர் சாதியத்தின் அடிப்படையில் நியமனம் பெறமுடியாது போன துர்ப்பாக்கிய  செயல்களும் அரங்கேறியுள்ளது. தற்போது உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு திருமதி.கௌரி சேதுராஜா நியமிக்கப்பட்டுள்ள போதும் இவரிற்கு அதிபர் தகுதி குறைவாகவே உள்ளதாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.இதற்கிடையில் திருமதி.நவமணி சந்திரசேகரம்; அனைத்து தகுதிகளும் இருந்தும் தனக்கு ஏன் அதிபர் நியமனம் கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இப் பிரச்சனையோடு அவர் என்னிடம் வந்த போது நான் உடனடியாக இப்பிரச்சனையை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். (மேலும்....)

மன்னாரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

இந்திய வீட்டுத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் அநீதியான முறையில் பகிரப்பட்டமையினை கண்டித்து மன்னார் பிரஜைகள் குழுவும், மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு மற்றும் காணியுரிமைக்கான மக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. (மேலும்....)

 

இலங்கையில் 40ஆயிரம் சிறுவர் பாலியல் தொழிலாளர்கள்..இன்றைய சிறுவர்களின் நாளைய எதிர்காலம் என்ன?

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, சிறுவர்கள் நாட்டின் கண்கள் என ஒருபுறம் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறத்தில் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பூமியில் உதயமாவதற்கு முன்னரே சில காம அரக்கர்களினால் சிறுவர்களின் வாழ்க்கை அஸ்தமனமாக்கப்படுகின்றது. காலம் காலமாக என்னதான் விழிப்புணர்வூட்டினாலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் எங்கோ ஒரு மூலையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன. காம ஆசையை சிறார்களிடம் காட்ட முயற்சிக்கும் காம அரக்கர்களிடமிருந்தே சிறார்களை நாமே பாதுகாக்க வேண்டும். விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதாரம், அபிவிருத்தி ஆகியன ஒருபுறம் வளர்ந்துகொண்டிருக்க சிறுவர் துஷ்பிரயோகமானது அசுரவேகத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. (மேலும்....)

நீதியரசர் சிராணி தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகி பதிலளிப்பு

பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தனக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது தடவையாக ஆஜராகி பதிலளித்தார். அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி தெரிவுக்குழுவின் முன்னிலையில் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தனது சட்டத்தரணிகளுடன் ஆஜராகியிருந்தார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற மேற்படி விசாரணை நடவடிக்கைகளில் பிரதம நீதியரசர் இன்று காலை 10.15 மணியளவில் பாராளுமன்றத்தை வந்தடைந்தார். குற்றப்பிரேரணை தொடர்பான பாராளுமன்ற விசாரணைகள் கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இதன் இரண்டாம் கட்ட விசாரணைகள் டிசம்பர் மாதம் நான்காம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று நான்காம் திகதி செவ்வாய்கிழமை இரண்டாம் கட்ட விசாரணைகள் பிற்பகல் வரை நீடித்திருந்ததுடன் அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஒரு அஸ்திரபாணம்...?

தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் - சபாநாயகர்

பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் குறித்து கருத்துக்கள் வெளியிடப்படுவதோ அல்லது விமர்சனங்களை முன்வைப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்~ இன்று சபையில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் தெரிவுக்குழு சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அது விவாதமாக சென்றது. இதன்போது பிரதியமைச்சர் லலித் தசாநாயக்க, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க எம்.பி., எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்டோர் முன்வைத்த கருத்துக்களை அடுத்தே சபாநாயகர் மேற்கண்டவாறு அறிவித்தார்.

யாழ்ப்பாணம் எஸ். எஸ். பி.யாக ஜெப்ரி நியமனம்

யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம். சி. மொஹம்மட் ஜெப்ரி நியமிக்கப்ப ட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் மா அதிபர் என் கே. இளங்ககோன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். எஸ்.எஸ்.பி. ஜெப்ரிக்கு விஷேட மரியாதை அணி வகுப்பு வழங்கப்பட்டது. மாவனெல்லை, அரநாயக்கவைச் சேர்ந்த மொஹம்மட் ஜெப்ரி பொலிஸ் திணைக்களத்தில் 32 வருடங்களாக சேவையாற்றி வருகிறார். 1980ம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டராக பொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இவர் அம்பலங்கொட, காலி, ஹிக்கடுவை, யாழ்ப்பாணம் உட்பட பல பிரதேசங்களில் சேவையாற்றியுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படை ஆரம்ப காலத்தில் இணைந்துகொண்ட இவர் 1998, 99ஆம் ஆண்டுகளில் யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியுள்ளார். யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக சேவையாற்றிய ஸ்ரீ குகநேசன் ஓய்வு பெற்றுக் கொண்டதையடுத்து அந்த இடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புல்மோட்டை கடலில் 37 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 இந்திய மீனவர்களை இலங்கை கடற் படையினர் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர். திருகோணமலை, புல்மோட்டை கடலில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய ஐந்து இந்திய மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கிழக்கு கடற்படைத் தலைமையக ரோந்து படகுகள் புல்மோட்டை கடலில் சட்ட விரோதமாக இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து ஐந்து மீன்பிடி படகுகளையும் கைப்பற்றிய கடற்படையினர் இதிலிருந்து 37 இந்தியர்களையும் கைது செய்துள்ளனர். நேற்றுக் காலை திருகோணமலை துறைமுகத்திற்கு கடற் படையினரால் அழைத்து வரப்பட்ட இந்திய மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக் கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கான தூதுவரை மீள அழைக்க பிரான்ஸ், பிரிட்டன் ஆலோசனை

பலஸ்தீனத்திற்குள் சட்ட விரோதமாக 3000 யூதக் குடியிருப்புகளை அமைக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம் குறித்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கான இஸ்ரேல் தூதுவர்களிடம் குறித்த நாடுகள் விளக்கம் கோரியுள்ளன. இஸ்ரேலின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுக்கான தமது தூதுவர்களை மீள அழைத்துக் கொள்ளவும் பிரிட்டன், பிரான்ஸ் அரசுகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பலஸ்தீனை ஐ.நா. சபை ஒரு நாடாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல், ஆக்கிரமிப்பு மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் மேலும் 3000 வீடுகளை கட்ட தீர்மானித்தது. இதற்கு இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே பிரான்ஸ¤ம், பிரிட்டனும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு விளக்கம் கோரி பிரான்ஸ¤க்கான இஸ்ரேல் தூதுவர் ஸொஸ்லி கெல்லுக்கு அழைப்பாணை விடுத்ததை இஸ்ரேல் தூதரகம் உறுதி செய்துள்ளது.

பதா உறுப்பினர்கள் காசாவுக்கு திரும்ப ஹமாஸ் அனுமதி

காசாவில் இருந்து கடந்த 2007 மோதலின்போது வெளியேறிய இருபது பதா அமைப்பு உறுப்பினர்களை மீண்டும் திரும்புவதற்கு காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. காசாவில் இருக்கும் பதா பிரிவின் உயர் மட்டக் குழு உறுப்பினர் ஜமால் உபைத் ‘மான்’ பத்திரிகைக்கு இந்த தகவலை உறுதி செய்தார். ஹமாஸ் அமைப்பின் இந்த முடிவு குறித்து தமது கட்சிக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஹமாஸ் - பதா அமைப்புக ளுக்கு இடையிலான மோதலில் சுமார் 400 பதா உறுப்பினர்கள் காசாவை விட்டு வெளியேறியதோடு 56 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் 2007 மோதலுடன் தொடர்புடை யோருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு இரு தரப்பினரும் இணங்கியதைத் தொடர்ந்தே ஹமாஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் கீழ் மேற்குக்கரை சிறையில் இருந்து ஹமாஸ் அரசியல் கைதிகளை விடுவிக்க பதா கடந்த வாரம் இணங்கியது. கடந்த 2006 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹமாஸ் அமைப்பு வென்றதைத் தொடர்ந்து ஹமாஸ் - பதா அமைப்புகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டது. ஹமாஸ் அமைப்பு காசாவை ஆளுவதோடு, ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பதா அமைப்பு மேற்குக் கரையை ஆண்டு வருகிறது.

மார்கழி 03, 2012

எப்போது நினைவுகூருவது?

(தலைநகரத்தான்)

முதலில் கடந்த முப்பது ஆண்டுகளில் போராட்டம் என்ற பெயரில் பலியான அனைவரையும் நினைவுகூரவேண்டுமெனில் அதற்கான திகதிஒன்றை தமிழ்த்தலைமைகள் நிர்ணயிக்கவேண்டும். அதைவிடுத்து புலிகளின் போராளிகளை மாத்திரம் நினைவுகூருகின்ற மாவீரர் தினத்தில்தான் அதனைச் செய்யவேண்டும் என்றால் அதனையும் அனைவரும் ஒருமித்து எடுக்கவேண்டும். அதைவிடுத்து புலிகளை மாத்திரம் நினைவுகூரவேண்டும் என்று அடம்பிடிப்பது எவ்வகையிலும் நியாயமானதல்ல. (மேலும்....)

யாழ். பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறிதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்தகால யுத்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மாணவர்களின் கல்விநிலை மிகவும் பின்னடைவு கண்டி ருந்தது. இது தற்போது படிப்படியாக சீர்செய்யப்பட்டு முன்னேறிவரும் நிலை யில், அமைதிச் சூழலில் மேற்கொள்ளப் பட்டு வந்த யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளைக் குழப்பும் செயற்பாடுகள் இனிமேலும் குழப்புவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் அமைச்சர், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (மேலும்....)

யாழ் பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காலவரையறையின்றி வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நான்கு மாணவர்களும் விடுவிக்கப்படும்வரை இப்பகிஷ்கரிப்பு தொடரும் என்றும் கூறியுள்ளனர். அதேநேரம், பல்கலைக்கழக சம்பவத்தைக் கண்டித்து தமிழ் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் சில தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருப்பதாக அக்கட்சிகள் அறிவித்துள்ளன. பல்கலைக்கழக சம்பவத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் சரவணபவனின் வாக னம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பட்டம் நடை பெறவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ். பல்கலையில் பொலிஸார் மாத்திரமே தடுப்பு நடவடிக்கையில்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப் பாட்டம் பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததையடுத்தே அதனை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்கள் திடீரென பேரணியாக வளாகத்திலிருந்து வெளியில்வர முற்பட்டனர். அவ்வாறு பேரணியாக செல்லும் பட்சத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதை கூறிய போதும் அதனை பொருட்படுத்தாது வெளியேற முற்பட்டதனாலேயே அதனை பொலிஸார் தடுத்தனர் என்றார்.இதேவேளை, சிறிரெலோ கட்சியின் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் மாவீரர்தின சுவரொட்டிகளை ஒட்டியமை போன்ற குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் செயலாளர் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்ல நாடகம் போங்கள்.....?

கலர் கலரா உடுப்புபோட்டு வந்து கலக்கிய நா.க உறுப்பினர்கள்

நாடு கடந்த அரசின் 4 வது அமர்வு லண்டனில்  நடைபெற்றது. இதற்கு முன்னதான அமர்வுகள் அமெரிக்காவில் உள்ள எருமை நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடையம். இம் முறை இந்த அமர்வுகள் பிரித்தானிய பாராளுமன்றின் வளாகத்தினுள் நடைபெற்றது. அதன் உறுப்பினர்கள் கலர் கலரா உடுப்பு போட்டு வந்து பார்வையாளர்களை அசத்தியுள்ளார்கள். உறுப்பினர்களுக்கு ஒரு கலர் உடுப்பு.... அமைச்சர்கள் மற்றுமொரு கலர்... செனட் சபை உறுப்பினர்கள் ஒரு கலர் என்று, வித்தியாசம் வித்தியாசமான ஈஸ்மன் கலரில் இவர்கள் வந்து கலக்கினார்கள். ஆனால் இலங்கை அரசு கலங்கியுள்ளதாக என்று கேட்டால் அது தான் இல்லை. இதிலும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த அங்கத்தவர்கள், பிரித்தானிய பாராளுமன்றம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று, முழு நேரப் புகழ் பாடினார்களே தவிர தமிழர்களுக்கு என்ன தீர்வு என்று, இல்லையேல் தமது நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்த மறந்துவிட்டார்கள். (மேலும்....)

தமிழ்க் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -  ‘ஹிந்து’ முன்னாள் ஆசிரியர் ராம்

'சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, தமிழர்களுக்கான சுதந்திரத்தை வென்றெடுக்கும் நோக்கத்துடன் ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய எல்.ரி.ரி.ஈயினர் சிங்களவர்களை கொன்ற எண்ணிக்கையை விட அவர்கள் கையில் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை பன்மடங்கு'

இலங்கை அரசாங்க படைகளுக்கும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கும் இடையிலான யுத்தம் நடந்து கொண்டிருந்த போது இந்திய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்கவில்லை என்று இந்தியாவின் முன்னணி ஆங்கில தினசரியான ஹிந்து பத்திரிகையின் முன் னாள் ஆசிரியரும், இந்த பத்திரிகை நிறு வனத்தை கட்டுப்படுத் தும் கஸ்தூரி அன் சன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான என். ராம் தெரிவித்தார். தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எல்.ரி.ரி.ஈ.க்கு இருந்து வந்த ஆதரவு அவ்வியக்கம் எடுத்த இரண்டு தவறான முடிவுகளினால் சீர்குலைந்து போனது. 1987ல் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக எல்.ரி.ரி.ஈ.யினர் யுத்தத்தை ஆரம்பித்தது முதலாவது தவறாகும். அதையடுத்து, 1991ம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அவர்கள் இழைத்த இரண்டாவது குற்றமாகும். (மேலும்....)

மக்கள் எம்முடன் இருக்கும்வரை

சர்வதேசத்தால் அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மக்கள் எம்மோடு இருக்கும் வரை சர்வதேச மட்டத் திலான எத்தகைய சூழ்ச்சிகள் மூலம் அர சாங்கத்தை ஒருபோதும் அசைக்க முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் கண்டியில் தெரிவித்தார்.  என்னையும், பாதுகாப்பு செயலாளரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு வெளிநாடுகளில் பிரசாரங்கள் முன்னெடுக்கப் படுகின்றன. சில அரசசார்பற்ற நிறுவனங் களும், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக் களும், தேசிய ரீதியில் சில சக்திகளும் டொலருக்கு சோரம்போய் இந்த நடவ டிக்கைகளில் ஈடுபடுகின்றனரென்றும் ஜனாதிபதி கூறினார். நாம் நாட்டை அபிவிருத்தியில் கட்டி யெழுப்பி வருகின்றோம். நாட்டின் அபிவிருத்திக்கு நெடுஞ்சாலைகளே உந்து சக்தியாக இருக்கின்றன. அதனாலேயே நாட்டில் முக்கிய நெடுஞ்சாலைகளை நாம் புனரமைத்து வருகின்றோம். யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கு நான்கு நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கண்டிக்கான அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை நாங் கள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம்.

மார்கழி 02, 2012

நிலைத்த வடு நீங்க வழியேற்படுமா...?

ஆறாத வடுவை ஏற்படுத்திய அந்த நாட்கள் வரலாற்றில் பதியப்படுமா.....? (பாகம் 2)

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக போராடிய விடுதலை அமைப்புகள் பலவும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டுக்கள் உள்ளன. இதில் உண்மைகள் இல்லாமல் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர்த்து ஏனைய ஆயுதம் ஏந்திய விடுதலை அமைப்புக்குகள் கொள்கை ரீதியாக முஸ்லீம் மக்களை வடக்கு கிழக்கில் இருந்து இன சுத்திகரிப்பு செய்வது என்பதைக் கொண்டிருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமே வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்களை அங்கிருந்து முற்று முழுதாக இன சுத்திகரிப்பு செய்தல் என்ற செயற்பாட்டை தமது இயக்கத்தின் கொள்கையாக கொண்டிருந்தவர்கள்.  வடக்கு கிழக்கு தமிழர்களின் (மட்டும்) பாரம்பரிய பிரதேசம். இங்கு வேற்று இனங்களுக்கு இடம் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் தலைவரால் வழி நடத்தபட்டவர்கள்.  இதற்கான (அ)நியாயங்களையும் அவ்வப்போது முன்வைத்து வந்தவர்கள்.  (மேலும்....)

தமிழ்ச் சமூகம் நெளிந்து வளைந்து வாழும் நிலைக்குக் காரணம் யார்?

பெரும்பான்மையின அரசாங்கங்களினால் மறுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காகவே விடுதலைப் புலிகள் தமது உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பது உண்மை. புலிகள் மட்டுமல்ல அன்று சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் இயக்கங்கள் இவ்வாறுதான் தமது போராட்டத்தை தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆரம்பித்தன. பின்னர் போட்டி மற்றும் சகோதரச் சண்டை காரணமாக சகல இயக்கங்களும் போராடுவதிலிருந்து அழிக்கப்பட புலிகள் ஏகப்பிரதிநிதிகளாக தமது போராட்டத்தை நடத்தி வந்தனர். காலப்போக்கில் எதற்காகப் போராட்டத்தை ஆரம்பித்தோம் என்பதை மறந்த நிலையில் புலிகள் செயற்பட ஆரம்பித்தனர். தாம் எதைச் செய்தாலும் தமிழ் மக்கள் தம்முடன் இருப்பார்கள் என்ற தப்புக்கணக்கை புலிகள் தமக்குள் போட்டுக் கொண்டனர். உண்மையில் பிற்காலத்தில் புலிகளிலிடமிருந்த ஆயுதங்களுக்குப் பயந்த நிலையிலேயே அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களில் அகப்பட்ட மக்கள் அவர்களை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகள் பலரின் தனிப்பட்டவர்கள். சுதந்திரத்தில் தலையிட்டு தட்டிக்கேட்டு அதட்டிப் பயமுறுத்த முனைந்தபோதும், தமது சர்வாதிகாரப் போக்கை மிகைப்படுத்தியபோதும், மக்கள் மீதுஏற்றுக் கொள்ளப்படமுடியாத கட்டுப்பாடுகளைத் திணித்தபோதும் போராட்டம் திசைதிரும்ப ஆரம்பித்தது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ்ச் சமூகத்திலுள்ள படித்த செல்வாக்குள்ள நற்பண்பு கொண்ட பலரும் தென்பகுதியை நாடி வந்தனர். (மேலும்....)

யாழில் ஆர்ப்பாட்டம்

ஜனநாக செயற்பாடுகளில் இராணுவம் தலையிடக்கூடாது

மாணவர்களினதும், பொதுமக்களினதும் ஜனநாயக செயற்பாடுகளில் இராணுவத்தினரும், பொலிஸாரும் தலையிடக் கூடாது என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து நாளை மறுதினம் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளன. இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில், மாணவர்களினதும் பொதுமக்களினதும் ஜனநாயக செயற்பாடுகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் தலையிடக் கூடாது எனக்கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் இணைந்து செயற்படுவார்கள். (மேலும்....)

கண்டவர்களும் அடித்துவிட்டு போகும் காற் பந்து போல அமைந்துள்ளது எனது நிலை

கவலைப்படுகிறார் KP எனும் குமரன் பத்மநாதன்

கேள்வி: சில வாரங்களின் முன்தான் நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இது தொடர்பாக பீ.பீ.ஸி செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்திருந்தார். ஐ.நாவின் உதவி யுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவர நோர்வே எவ்வாறு முயன்று கொண்டிருந்தது எனவும், இதற்காக உங்களை ஒஸ்லோவுக்கு கொண்டுவர அது எவ்வாறு முயன்று கொண்டிருந்தது எனவும் அவர் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உங்களை அவ்வாறு செய்ய விடாது தடுத்தார். இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தியதற் காக சொல்ஹெய்ம், வெளிநாட்டு தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதி யினரால் கடுமையாக விமர்சிக்கப் பட்டுள்ளார். நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தின் பிரதமர் எனப்படும் விசுவநாதன் உருத்திரகுமாரன், சொல்ஹெய்மின் கூற்றுகளை வெளிப்படையாக மறுத்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து யாது?

பதில்: எரிக் கூறியது 100 சதவீதம் உண்மை. அவ்வாறான முயற்சிகள் நடந்தன. அவை தமிbழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் தடுக் கப்பட்டன. இந்த மாதிரியான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக் கப்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு இரத்தம் சிந்தப்படாமல் தடுத்திருக்கலாம். எல்.ரி.ரி.ஈ. தலை வர்களில் பலர் இன்றும் உயிரோடு இருந்திருப்பர். (மேலும்....)

13 வது திருத்தம் ஒழிக்கப்படுமா?

காலத்துக்கு காலம் நமது தேசத்தில் அரசியல் பிரச்சினைகளும், சர்ச்சைகளும் தோன்றி மறையா விடில் அரசியல் அரங்குக்கு விமோசனமில்லை. அந்த வகையில் நமது நாட்டின் சமகால சூடான தலைப்புகளாக மாறியிருப்பவை - பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையும். 13வது திருத்தத்தை ஒழித்துக்கட்டல் கோஷமுமாகும். எதிலும், எப்படியும், நறுக்கென்று பதிலை எதிர்பார்க்கமுடியாத புறச்சூழலை கட்டியணைத்தபடி உள்ள இலங்கையில் நீண்டகால அடிப்படையைக் கொண்ட எதிர்பார்க்கையிலும் வீழ்ச்சியையும் சூழச்சியையுமே காணமுடிகின்றது. காலன் கருக் கொண்டால் மாத்திரமே காலக்கிரமத்திலாவது பலன் கிட்டும் என்ற அசாதாரண எண்ணத்துக்கு வந்துவிட்டனர் நலன் விரும்பிகள். (மேலும்....)

சிறிதரனுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் பல போர்க்கொடி

தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் உலக வானொலி ஒன்றிற்குத் தெரிவித்த கருத்திற்கு பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும், புத்திஜீவிகளும், பொதுமக்களும் தமது பலத்த கண்டனங்களைத் தெரி வித்துள்ளனர். குறிப்பாக இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பல தமிழ்ப் பெண்கள் இவரது கருத்திற்குத் தமது எதிர்ப்பை நேரடியாகத் தெரிவித்துள்ளனர். பெண் குலத்தினை அவமானப்படுத்தும் விதத்தில் இவர் தெரிவித்த கருத்து இராணுவத்தில் தொழில் நிமித்தம் தாமாக இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்களை மட்டு மல்லாது மேலும் இணையவுள்ள பெண்களையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாகவும் இவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப் படும் தமிழ்ப்பெண்கள் இராணுவத் தினரின் இச்சைகளுக்குப் பயன்படுத்தப் படலாம் எனும் தரக்குறைவான கருத்துப்பட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உலக வானொலி ஒன்றிற்குப் பேட்டி கொடுத் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படியும் நடந்ததா?

கணவனின் கடனை வசூலிக்க மனைவியை அறையில் பூட்டி வைத்த வங்கி அதிகாரிகள்

வடபகுதியிலுள்ள ஓர் அரச வங்கியில் கடன் பெற்றிருந்த விவசாயி ஒருவர் தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது அவதியுற்றிருந்த வேளையில் அவ்விவசாயியின் வீட்டிற்குச் சென்ற அக்குறிப்பிட்ட வங்கியின் அதிகாரியொருவர் அவரையும், அவரது மனைவியையும் வங்கி முகாமையாளர் அழைத்துவருமாறு கூறி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் முகாமையாளரும் அழைத்துச் சென்ற அதிகாரியுமாக விவசாயியின் மனைவியை வங்கியின் அறையொன்றினுள் தனியாக அழைத்துச் சென்று அமர்ந்துகொள்ளுமாறு பணித்து அந்த அறையைப் பூட்டிவிட்டு வெளி யேறிவந்து வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். வங்கி அதிகாரிகளின் இச்செய்கையால் அதிர்ச்சியுற்ற விவசாயி செய்வதறியாது வெளியே வந்து ஐந்து உறவினர்களிடம் நிலைமையை விளக்கி பணத்தைச் சேகரித்து வங்கியில் செலுத்தி மனைவியை மீட்டுச் சென்றுள்ளார். மனித உரிமைகள் வாரத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தின் அங்கீகாரத்துக்கு உலக நாடுகள் வரவேற்பு

பலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளமையை பல உலக நாடுகள் வரவேற்றுள்ளன. 193 உறுப்பினர் கொண்ட ஐ.நா. சபையில், இந்தியா உட்பட 138 நாடுகள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உட்பட 9 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. 41 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.  இந்த வெற்றியின் மூலம் பலஸ்தீனத்துக்கு, ஐ.நா. சபையில் உறுப்பினர் அல்லாத, பார்வையாளர் நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் பல உலகநாடுகள் இதனை வரவேற்றுள்ளன.

சிகப்பு நிறமாக மாறிவரும் சிட்னி கடற்கரையோர பகுதிகள்!

 

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பல கடற்கரையோர பகுதிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. பாம், டுரிமெடா, பொந்தி, குலொவெலி என சுமார் 10 கடற்கரைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதுடன் ஒரு வகை அல்காக்களினால் (பாசிகள்) கடற்கரையோர பகுதிகள் சிகப்பு நிறமாக மாறிவருவதனாலேயே இவை மூடப்பட்டு வருகின்றன. இதன்போது கடலில் மனிதர்கள் குளிப்பார்களாயின் அவர்களது தோலில் அரிப்பு முதலான நோய்கள் ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர நீரில் ஒட்சிசனின் அளவும் குறைவதால் மீன்களும் இறக்க நேரிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்நீரின் வெப்பம் திடீரென அதிகரித்தமையே இதற்கான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதேவேளை இலங்கையின் சில பகுதிகளில் அண்மைக்காலமாக பெய்த சிகப்பு மழைக்கும் ஒரு வகையான அல்காவே காரணமென ஆராய்சியாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பலித்தது பலஸ்தீன கனவு

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலை யைப் (non-member observer state) பெற்றுள்ளது. கடந்த வியாழன் மாலை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் இது நிறைவேற்றப்பட்டது. வாக்களிப்பில் வெ;றறி பெற்றதும், மேற்குக் கரையிலும் காசாவி லும் மக்கள் பட்டாசுகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வியாழனன்று காலை ஐ.நாவில்உறுப்புரிமையற்ற பார்வயாளர் அந்தஸ்துக்கான விண்ணப்பத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் சமர்ப்பித்திருந்தார். அதனையடுத்து மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனம் வெற்றிபெற்றது. ஐ.நாவில் உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்தைப் பெற, பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் தேவையில்லை. 193 அங்கத்தவர்களைக் கொண்ட பொதுச்சபையின் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதுமானது. வியாழனன்று மாலை இது குறித்து நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 132 நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலம் பலஸ்தீனத்துக்கு உறுப்;புரிமையில்லாத பார்வையாளர் அந்தஸ்து கிடைத்துள்ளது.  (மேலும்....)

மார்கழி 01, 2012

நிலைத்த வடு நீங்க வழியேற்படுமா...?

ஆறாத வடுவை ஏற்படுத்திய அந்த நாட்கள் வரலாற்றில் பதியப்படுமா....? (பாகம் 1)

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

இலங்கை வரலாற்றில் பாரியளவில் உள்ளுரில் அகதிகளாக அடித்து விரட்டப்பட்ட மக்கள் என்று கூறலாம். ஓரே மொழியை பேசும் இன்னொரு சிறுபான்மை மக்களின் விடிவிற்கான போராடப் புறப்பட்டவர்களினால் துரத்தியடிக்கப்பட்ட இந்த மக்களுக்கு ஆதரவாக வட புலத்து தமிழ் சிவில் சமூகம் வீதியில் இறங்கி போராட முடியவில்லை. தடுத்து நிறுத்த முடியவில்லை. பலர் தங்கள் மனதிற்குள் அழுது கொண்டே இருந்தனர். பரம்பரை பரம்பரையாக சகோதரர்களாக வாழ்ந்த இந்த மக்களை வலுக் கட்டாயமாக பிரித்தெடுத்த பெருமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வரை உள சுத்தியுடன் வருந்தியதாக அறிய முடிவில்லை. கூடவே இது நியாயமானது என்று பிரச்சாரப்படுத்தப்பட்டதினால் ஏற்பட்ட தவறுதலான புரிதலின் அடிப்படையில் இவர்களின் ஆதரவாளர்கள் இன்றுவரை தம்மை உள்ளபடுத்தியிருப்பது இன்று வரை வருந்தத் தக்கது, கண்டிக்க தக்கது. (மேலும்....)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வன்முறையைத் தூண்டியதால் அடக்கினோம் - இலங்கை பொலிஸ்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு இராணுவத்தினரின் உதவியை நாடவில்லை. பொலிசார் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை அடக்கியதுடன் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகளை சீர்செய்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேசாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதன் பின்பு மாணவர்கள் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனைக் கட்டுப்படுத்த பொலிசார் தீவிரமாக செயற்பட்டு நிலைமையை சுமுகமாக்கினர். இதில் இராணுவம் தலையிடவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பை மீறி பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் அங்கீகாரம்

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலஸ்தீனம், இறையாண்மை, தனியுரிமை ஆட்சியுள்ள நாடாக ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதற்கான வாக்கெடுப்பு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உள்ளிட்ட 138 நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன. 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. (மேலும்....)

தெய்வ மகன்!

(சமஸ்)

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான ஆட்டிஸம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் மனம் உறைந்த அவர்களுடைய பெற்றோருக்கும் தன்னுடைய இசையால் புது நம்பிக்கை கொடுத்திருக்கிறான் 15 வயது முகுந்த். தன்னுடைய 'தெய்வீகத்தின் ஆரம்பம்’ (டிவைன் அன்ஃப்ளக்ட்) இசைத் தொகுப்பின் மூலம்.  உலகெங்கும் ஆயிரத்தில் இரு குழந்தைகள் ஆட்டிஸம் குறைபாட்டுடன் பிறக்கின்றன என்கிறது மருத்துவ உலகம். அமெரிக்காவில் 88-ல் ஒரு குழந்தைக்கு; தென் கொரியாவில் 38-ல் ஒரு குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது. வளர்ந்த நாடுகள் இப்போது ஆட்டிஸம் குறை பாடு உடையவர்களுக்குத் தாங்கள் பொறுப் பேற்கும் வகையில், அவர்களுக்கு ஏற்ற சின்னச் சின்ன வேலைவாய்ப்புகள், சலுகைகள், உதவிகளில் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவிலோ எத்தனை பேர் ஆட்டிஸம் குறைபாடு உடையவர் கள் என்ற தரவுகளே இதுவரை இல்லை. அவர்களுக்கான வாழ்க்கையை எப்படி உருவாக்கித் தருவது என்ற கேள்விக்கும் இங்கு பதில் இல்லை. (மேலும்....)

 

இங்கு எல்லாளனால் புலம் என்று குறிப்பிடப்பட்டது எந்த நாட்டை?

வாழ்(வால்)உடன் அலையும் எல்லாளன் இருப்பிடம் அறியுமோ?

ர்வதேச நிலைப்பாடுகள், ஐ.நா. அறிக்கைகளை பரிசீலிக்காது அவற்றை நிராகரிப்பது நாட்டுக்கு பாதகமானது  - சம்பந்தன் எம்.பி.

இலங்கை தொடர்பிலான சர்வதேசத்தின் நிலைப்பாடுகளையும் ஐ.நா.வின் அறிக்கைகளையும் எந்தவித பரிசீலனைக்கும் உட்படுத்தாதவகையில் அவற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதானது நாட்டுக்கே பாதகமான விளைவுகளையே ஏற்படுத்துமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார். இறுதிக்கட்ட யுத்த படுகொலைகள் தொடர்பில் இராணுவமே விசாரணைகளை மேற்கொள்வது பொறுப்புக் கூறும் தன்மை கிடையாது, அத்துடன் அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றவை ஆகிய அனைத்தையும் அரசாங்கம் மூடி மறைத்து விடுவதற்கே செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் விசனம் தெரிவித்தார். சர்வதேசத்துடனான உறவுகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பில் நாம் கரிசனை கொண்டவர்களாக இருக்கின்றோம் எமது நாட்டின் மீது எழுந்துள்ள சர்வதேச நிலைமைகளுக்கு காரணமே உள்நாட்டுப் பிரச்சினையாகும்.

ஆஸியிலிருந்து 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடு திரும்பினர்

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று பிற்பகல் 3.20 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாகச் சென்ற 50 புகலிடக்கோரிக்கையாளர்களே கிறிஸ்மஸ் தீவிலிருந்து இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவுக்குச் செந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலமே விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த நபர்களை குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் இன்று காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான ஐ.கே. குஜ்ரால் இன்று காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐ.கே. குஜ்ரால் இறக்கும் போது அவரின் வயது 92. இந்தியாவின் 12 ஆவது பிரதமரான குஜ்ரால் அவர் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பதவி வகித்தார்.1919-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி பிறந்த பஞ்சாப்பின் ஜீலம் பகுதி ஐ.கே.குஜ்ரால், 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றவர். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய ஐ.கே. குஜ்ரால், 1975-ல் அதாவது எமர்ஜென்சி அறிவிக்கப்படும்போது தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் குஜ்ரால், பின்னர் சோவியத் யூனியனுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். ஐக்கிய முன்னணியின் தலைவராக ஐ.கே. குஜ்ரால் தேர்வு செய்யப்பட்டு 13 மாதங்கள் நாட்டின் 12-வது பிரதமராக பதவி வகித்தார்.பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த குஜ்ராலுக்கு அண்மையில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது.

நுரையீரல் கோளாறால் அவதியுறும் அசாஞ்சே!

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே நுரையீரல் கோளாறால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள ஈகுவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள அவர் பல நாட்களாக அங்கேயே வசித்து வருகின்றார். அமெரிக்க தூதரக இரகசிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அவர்மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க இருந்தது. இதற்கிடையில் அவர் மீது சுவீடன் கோர்ட்டில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வழக்கு தொடரப்பட்டது. இங்கிலாந்தில் தங்கியிருந்த அசாங்சே இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தார். ஆனால் அவரை சுவீடன் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதால், நாடு கடத்த இங்கிலாந்து முயன்றது. இதிலிருந்து தப்பிக்க அசாஞ்சே லண்டனிலுள்ள ஈகுவேடார் நாட்டு தூதரகத்தில் கடந்த ஜூன் மாதம் தஞ்சம் அடைந்தார். அது முதல் அவர் அங்கேயே தங்கி இருக்கிறார். பல மாதமாக தூதரக கட்டிடத்திற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் அவரது உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. வைத்தியரை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி அவருக்கான அனைத்து சிகிச்சை செலவையும் ஈகுவேடார் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது அசாங்கே நுரையீரல் கோளாறால் மிகவும் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com