Contact us at: sooddram@gmail.com

 

மாசி 2012 மாதப் பதிவுகள் 

மாசி 28, 2013

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!!  (பகுதி 2)

(வரதர் பெருமாள்)

த.தே.கூவுடன் இணைந்து செயற்பட முற்படுபவர்கள் எல்லோரும் நாடாளுமன்ற அல்லது மாகாணசபை அல்லது குறைந்த பட்சம் உள்ளுராட்சிச்சபை பதவிகளுக்கான ஆசையால் மட்டும்தான் இணைந்து செயற்பட முனைகிறார்கள் என ஒரு பொது முடிவுக்கு வந்தால் அது ஒரு மிகத் தவறான முடிவாகும், எண்ணமாகும். அவ்வாறு கருதுவது அவர்கள் இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கா  ுப்பது ஆண்டுகளுக்கு மேலாக சமூக, இலட்சியக் கனவுகளுடன் செலுத்திய உழைப்பையும் வழங்கிய தியாகங்களையும் கொச்சைப்படுத்துவதாகவே அமையும். இங்கு பலரிடம் ஒரு சமூக அக்கறை முதன்மையாக இருப்பதை மறுக்க முடியாது. அரசாங்கத்தின் போக்குகளும், செயற்பாடுகளும், அரச படையினரின் நடவடிக்கைகளும் அப்படியான தவிர்க்க முடியாத நிலைமைகளையே, தேவைகளையே கட்டாயப்படுத்தியிருக்கின்றன என்பதே இங்கு பிரதானமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். அரசாங்கத்தின் கொள்கைகளும், அரச படைகளின் செயற்பாடுகளும் எதைக் காட்டுகிறதென்றால் இங்கு நேர்மையான அரசியல் நடத்தையும் நியாயமான அரசியல் சமூக பொருளாதாரக் கோரிக்கைகளும் கொண்ட மூன்றாவது அரசியற் சக்திகள் தமிழ்ச் சமூகத்தில் தலையெடுத்து விடக்கூடாது என்பதில் அவை திட்டவட்டமாக முனைப்புடன் செயற்படுகின்றன என்பதே. (மேலும்..)

கனடாவில் காலமான முற்போக்குச் செயற்பாட்டாளர்

பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்களின் இறுதிச் சடங்குகள் பற்றிய அறிவித்தல்

4164 Sheppard Avenue East

Toronto, On, M1S 1T3

என்னும் முகவரியில் அமைந்துள்ள

Ogden Funeral Home இல்

பெப்ருவரி 28, 2013 – வியாழக்கிழமை மாலை 5.00 – 9.00 வரை

பூதவுடல் உறவுனர்கள், நண்பர்கள், தோழர்களின் பார்வைக்கும் அஞ்சலிக்கும் வைக்கப்படும்.

அதே இடத்தில் மறுநாள் மார்ச் 01, 2013 வெள்ளிக்கிழமை காலை 8.00 – 10.00 வரை இறுதிச் சடங்குகள் நடைபெற்று,

256 Kingston Rd, Toronto, On, M4L 1T6  முகவரியில் அமைந்துள்ள

Public at St.John’s Norway Crematorium  இல்

உடல் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு: தொலைபேசி இலக்கங்கள் - 647 – 878 – 2478,

647 – 706 – 7426, 416 – 431 – 0718 அல்லது 416 – 494 – 5813

விசுவமடுவிலுள்ள பிரபாகரனின் வீட்டை பார்வையிட படையினர் அனுமதி

முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இந்த வீட்டைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் படையெடுத்து வருகின்றனர். விசுவமடு பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் இரண்டு அடுக்கில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதுடன் இங்கிருந்தவாறே பிரபாகரன் சர்வதேச தொடர்புகளை மேற்கொண்டு வந்தார் என்று படையினர் தெரிவித்தனர். குறித்த வீட்டில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி விசைப்படகு மற்றும் முன்னாள் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த பயணம் செய்யும் போது இயந்;திரக் கோளாறு காரணமாக தரையிறங்கிய உலங்குவானூர்தி என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய போர்க் கருவிகள், விடுதலைப் புலிகளின் சீருடைகள், புலிக்கொடி மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய உபகரணங்கள் என்பனவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலக நான்கு கட்சிகள் உத்தேசம்?

ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் மாத்திரம் இணைந்து தங்களை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவை மேற்கொள்ள அந்நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன. இருப்பினும், இதற்கான இறுதித் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.

கனடாவில் காலமான முற்போக்குச் செயற்பாட்டாளர்

பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்களின் அஞ்சலிக் கூட்டம்

கனடாவில் மாற்றுக் கருத்தாளர்களின் களமாக இருந்த 'தேடகம்' அமைப்பைப் புலிகள் அழித்து, பின்னர் தமது கையாட்கள் மூலம் அதைக் கைப்பற்றிய பின், அதில் தீவிரமாக உழைத்த தோழர் சண்முகலிங்கமும் அவரது நெருங்கிய தோழர்களும் முன்முயற்சி எடுத்து, 'கனடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை' என்ற அமைப்பை நிறுவி சிறப்பாகச் செயற்பட்டு வந்தனர். தற்பொழுது தோழர் சண் காலமாகியுள்ளதால், அப்பேரவையில் அவரது பங்கு பணியை நினைவுகூர்ந்தும், அவருக்கு அஞ்சலி செலுத்து முகமாகவும், நிவைஞ்சலிக் கூட்டம் ஒன்றை அப்பேரவை ஏற்பாடு செய்ய உள்ளது. அது பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். (மேலும்..)

பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்டவர்களின் இரத்தவாடையும் வரலாற்றுத் துரோகமும்

இலங்கையில் இனப்படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் யார்யாரெல்லாம் உதவினார்கள் என்று பட்டியல் போட்டால் அவர்களில் பெரும்பாலனவர்கள் ஒன்று கூடியதை இன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பார்த்திருக்கலாம். பாராளுமன்றம் பன்றித்தொழுவம் என்பார்கள். பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் இரத்தவாடை வீசியது. உலகத் தமிழர் பேரவை என்று அழைக்கப்படும் அன்னிய நிதியில் இயங்கும் முன்னைநாள் புலிகளின் நேரடி ஆளுமைக்கு உட்பட்ட அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கூட்டம் பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத்துள் நடைபெற்றது. (மேலும்..)

13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வல்ல - தமிழரசுக் கட்சி

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் 13ஆவது திருத்தச் சட்டமும் இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என தமிழரசு கட்;சி அறிவித்துள்ளது. 'நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களை நாமும் அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். இருப்பினும் இந்த அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கோ அல்லது ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கோ ஒருபோதும் செவிசாய்க்கவில்லை' என்று தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். தற்போது அரசாங்கம் கையாளுகின்ற உத்தி ஓர் தந்திரோபாயமான உத்தியாக நாங்கள் பார்க்கின்றோம். நாங்கள் வேண்டாம் என்று சொல்லும் விடயத்தினை நாங்கள் நீக்குவோம் என சொல்லுவதன் மூலமாக நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம். 13ஆவது திருத்த சட்டம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வோம் என்ற நிலைப்பாட்டினை கொண்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் எதையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை.

மாசி 27, 2013

புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம், தங்கம், கப்பல்கள் எங்கே" : போஸ்டர் ஒட்டிய மூவர் கைது

'விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேர் மோதர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 'ஊழலுக்கு எதிரான குரல்" என்ற அமைப்பின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த நடராஜா, லக்ஷ்மன் மற்றும் எசேல ஆகியோரே இவ்வாறு மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

கலங்க அடிவாங்கிய கறுப்பு எம்.ஜி.ஆர்

இந்தியாவின், தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தை அவருடைய கட்சி எம்.எல்.ஏ ஒருவர் அடித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று விஜயகாந்த் சென்றுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் வெளியே வந்தார். இதன்போது தேமுதிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்தார் அவரது கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், தீடீரென்று சில தொண்டர்களை அடிக்கவும் செய்தார். பிறகு அவர் விஜயகாந்தையும் ஓங்கி அடித்துள்ளார். இதனால் விஜயகாந்த் கடும் அதிர்ச்சியடைந்தார். கட்சி எம்.எல்.ஏ.வே விஜயகாந்த்தை அடித்த காட்சியைப் பார்த்த தொண்டர்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உரைந்துப்போனார்கள். ஆனால் அடித்தவோ தனக்கு எதுவும் தெரியாத வகையில் நடந்துகொண்டார். ஆனால் இக்காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் பொது இடத்தில் தனது கட்சி உறுப்பினரொருவரை அடித்தவர். இந்நிலையில் அவரே பொது இடத்தில் அடிவாங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடித்தவருக்கு என்ன நிலை ஏற்படப்போகுதோ என தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. (காணொளியில் பார்க்க.....)

இரு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை கனடாவில் மறுப்பு

இரண்டு இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கையை கனடாவின் மத்திய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எம்.வி. சன் சீ கப்பலின் மூலமாக கனடாவிற்குள் பிரவேசித்த இருவர், புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். எம்.வி. சன் சீ கப்பலில் பயணித்த காரணத்திற்காக கனேடிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கனவே புகலிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த இலங்கையர்களை கனடா நாடு கடத்தினால் சொந்த நாட்டில் அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம், குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் மீள விசாரணை நடாத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது - டி.ராஜா

உலக நாடுகளை ஏமாற்றும் இலங்கையை இந்தியா ஏன் நம்ப வேண்டும். ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா தெரிவித்தார். இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவிக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை தமிழர்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அரசு செய்து வரும் துரோகத்தை மறைத்து தமிழ் சமூகத்தை ஏன் மத்திய அரசு ஏமாற்றவேண்டும். இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது. அரசை விமர்சிக்கும் இலங்கை ஊடகங்கள் தாக்கப்படுகின்றன.  தமிழரை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழ் சமுகத்தை அரசு ஏன் ஏமாற்றுகிறது. இலங்கையில் ரத்த ஆறு ஓடுகிறது. ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக ஓட்டுப்போட வேண்டும். இலங்கையில் சுதந்திரமாக தேர்தல் நடப்பதில்லை. இலங்கை தமிழர்களின் அடையாளங்கள், பாரம்பரிய உரிமைகள் அழிக்கப்பட்டுள்ளன என கூறினார்.

இலங்கை போர்க்குற்றம்

இந்தியமாநிலங்களவையில் இன்று விவாதம்!

இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக சிறப்பு விவாதம் நடத்தக் கோரி அதிமுக சார்பில் மைத்ரேயன், திமுக சார்பில் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி. ராஜா உள்ளிட்ட எம்.பி.க்கள் அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர். மேலும், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த வெங்கையா நாயுடு, சிவசேனா கட்சியின் சஞ்சாய் ராட் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அளித்தனர். இதையடுத்து, இதுதொடர்பாக இன்று மதியம் 12 மணியளவில் மாநிலங்களவையில் சிறப்பு விவாதம் நடைபெறும் என தெரிகிறது. இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  இந்நிலையில்,இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற உள்ள விவாதம்,இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் எனத் தெரிகிறது.

என்றும் எதற்கும் விலை போகாத மக்கள் தொண்டன் தோழர் சண்முகலிங்கம்  - கனேடிய ஜனநாயக தமிழர் கலாச்சார பேரவை (CDTCA)

சண், சண் அண்ணா என அழைக்கப்படும் தோழர் பொன்னம்பலம்  சண்முகலிங்கம் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பின்னர் 22-02-2013 அன்று கனடாவில் காலமானார். அவரது  மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது அவரது உறவினர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரையும் சொல்லணாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் இளம் பராயத்திலிருந்தே அரசியல் ,சமூக விடயங்களில் ஆர்வமுள்ளவராக  இருந்தார் .இடதுசாரி இயக்கம் அவரை இளம் பராயத்தில் ஈர்த்துக்கொண்டது .மலையகத்தில் தொழில் பார்த்தபோது  தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டதனால் அரசினால் கைதுசெய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தார் .பின்னர் இவர்  வவுனியாவில் இயங்கிய காந்தீயம் அமைப்பில்  இணைந்து  அப்பகுதியிலுள்ள மிகவும் வசதி குறைந்த   மக்களுக்கு அளப்பரிய சேவை செய்தார் .(மேலும்..)

உண்மைகள் உறங்குகின்றன..

(Koviloor Selvarajan)


நமது தாயகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும்,கனடா, அவுஸ்த்ரேலியா போன்ற நாடுகளுக்கும் ஏதுமில்லாதவர்களாக வெறுமனே ஏதிலிகளாக வந்த எம் மக்கள் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டார்கள். மொழி,வேலைவாய்ப்பு, கலாச்சாரம், காலநிலை, என்று பல காரணிகளால் கஷ்டப்பட்டார்கள். ஊரிலிருந்த காணிபூமி, அம்மா, அல்லது மனைவியின் தங்க நகைகள், ஏன் பத்துசத வட்டிக்கு கூட கடன் வாங்கியே முகவர்களுக்கும், விமான பயணத்திற்கும் கொடுத்தார்கள். அப்படித்தான் அநேகம் பேர் இந்த மேற்குலக நாடுகளுக்குள் வந்தார்கள். இவர்களில் தாயகத்தில் தரமான உத்தியோகத்தில் இருந்தவர்கள் கூட தங்களின் நிலத்தைவிட்டு  புலத்துக்கு வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. இங்கு வந்தபோது இவர்கள்தான் மிகவும் கஷ்டப் படவேண்டியதாகப் போய்விட்டது. (மேலும்..)

புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில் வைத்து காரொன்றை கடத்திச்செல்வதற்கு முயன்றவேளையில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்து இவ்விருவரும் தப்பிச்சென்று விட்டனர். இதனையடுத்து திம்புலாகல மலையில் இராணுவத்தினர் தேடுதல் நடத்தியதுடன் தப்பியோடுவதற்கு முயன்ற இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளர். அந்த துப்பாக்கி பிரயோகத்திலேயே இருவரும் சற்று முன்னர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் கொள்ளை கோஷ்டியின் உறுப்பினர்கள் என்றும் நகைகள் மற்றும்  பணங்களை கொள்ளையடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்விருவரும்  வெளிநாட்டுக்கு செல்வதற்காகவே காரை கடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சுற்றிவளைப்பு தேடுதலில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை - அமெரிக்கா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இலங்கையில் இனப் பிரச்சினைக்கான உரிய தீர்வினை இதுவரையில் அந்நாட்டு அரசு பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்களுக்கான துணைச் செயலாளர் எஸ்தர் பிரிம்மர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரின் 2வது நாள் உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இம்முறையும் இலங்கைக்கு எதிராக புதியதொரு பிரேரணையை அமெரிக்கா முன்வைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் இதன்போது அவர் கூறினார்.

இருமனப்போக்கில் பான் கீ மூன்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஐக்கிய நாடுகள் சபையின் இருமனப்போக்கு தொடர்ந்தும் காணப்பட்டே வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான மகன் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை சித்தரித்துக் காட்டும் நிழற்படங்கள் குறித்து செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு நன்கு தெரியுமென அவரது பேச்சாளர் கடந்தவாரம் இன்னர் சிற்றி பிரஸிடம் தெரிவித்திருந்தார். இத்தகைய நிழற்படங்கள் சனல் 4 தொலைக்காட்சி சேவையின் புதிய ஆவணத்திரைப்படமான போர் அற்ற வலயம் இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது இத்திரைப்படம் காட்டப்படுவதனை தடுக்கும் விதத்தில் இலங்கை அரசு தற்போது செயற்படுகின்றது.

இலங்கைக்கு எதிரான சக்திகள் இணையத்தில் ஊடுருவல்

தகவல் ஊடகத்துறை அமைச்சின் இணையத்தளத்தில் இலங்கைக்கு எதிரான சக்திகளின் ஊடுருவல் இருப்பது இனங்காணப்பட்டதாலேயே இணையத்தளத்தை மீளமைக்கும் தேவை ஏற்பட்டதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 12.03 மணியளவில் அமைச்சின் செயலாளர் எனக்குத் தகவல் தந்தார். அதனையடுத்து இணையத்தளம் நிறுத்தப்பட்டு ஊடுருவல் தடுக்கப்பட்டதன் பின் மீள்புதுப்பித்தலுக்கு உள்ளாக்கப்பட்டது. மீள் புதுப்பித்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பின் காலம் தாழ்த்தாது சில மணித் தியாலங்களுக்குள்ளேயே இணையத்தளம் மீளமைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஊடக மற்றும் தகவல்கள் அமைச்சின் இணையத்தளங்களை தாக்குவது கணனி முறை பயங்கரவாத நடவடிக்கை என கூறியுள்ள அரசாங்கம் வெளிநாடுகளில் எஞ்சியுள்ள தமிbழ விடுதலைப் புலிகள் இணையங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றஞ்சுமத்தியுள்ளது.

இருநூறு தீவிரவாதிகள் ஐதராபாத்திற்குள் ஊடுருவல்

தீவிரவாதிகள் 200 பேர் ஐதராபாத்தில் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத் துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஐதராபாத் நகரில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் 17 பேர் பலியானார்கள். 130 பேர் காயம் அடைந்தனர். எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் தில்சுக் நகர் பகுதியில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை. என்றாலும் இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்புதான் இதனை செயல்படுத்தி இருக்க வேண்டும் என்று பொலிஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. ஐதராபாத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப் பட்ட குண்டுகள் போலவே தற்போதைய குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குண்டுகள் ஐதராபாத் நகரிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளன. அதாவது 700 கிராம் அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை வைத்து பந்துபோல குண்டு தயாரித்து உள்ளனர். அதனை செப்பு கம்பியால் சுற்றி அலுமி னிய டப்பாவில் வைத்துள்ளனர். டப்பா வில் காலியாக இருக்கும் இடத்தில் ஆணி, பேரிங் இரும்பு குண்டுகள், மற்றும் இரும்பு நட்டு துகள்களை நிரப்பி உள்ளனர். குண்டு வைத்தவன் ஒருவனாகவும் அதனை வெடிக்கச் செய்தவன் வேறொரு வனாகவும் செயல்பட்டுள்ளனர். இந்த தகவல்களை தேசிய புலனாய்வு பொலிஸ் விசாரணையின் பின்னர் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதி கள்தான் இந்தியாவில் ஊடுருவி இது போன்ற சதி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எகிப்தில் நடுவானில் பலூன் வெடித்து 19 பேர் பலி

எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள லக்ஸர் நகரத்தின் அருகே வெப்ப காற்று பலூன் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 19 சுற்றுலா பயணிகள் பலியாகியுள்ளனர். இவர்களில் 9 ஹொங்கொங் நாட்டவர் இருப்பதாகவும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டவர்களும் உள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நைல் நதிக்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள லக்ஸர் நகரமானது சிதைந்து போன புராதன எகிப்து அரசர்கள் வாழ்ந்த இடமாகும். இது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்கிருந்து சுமார் 1000 அடி உயரத்தில் இந்த பலூன் பறந்த போது எரிவாயு வெடித்துள்ளது. இதில் பயணித்த 20 பேரில் 19 பேர் மரணமடைந்தனர். ஒரு பயணியும் பலூனை இயக்கிய நபரும் தப்பித்தனர். எகிப்தில் புராதன சின்னங் களை பார்வையிட சுற்றுலா பயணிகள் வெப்பக் காற்று. பலூன்களை பயன் படுத்துவது வழமையானதாகும். இந் நிலையில் என் பி. சி. தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் மேற்படி விபத்தில் கொல்லப் பட்டோர்களில் 9 பேர் ஹொங்கொங் நாட்டவர்கள் என்றும் நான்கு ஜப்பான், இரு பிரிட்டன் மற்றும் இரு பிரான்ஸ் நாட்டவர்கள் அடங்குவதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

ரஷ்யாவில் விழுந்த எரிகல் அப்பல்லோ விண்கல் கூட்டத்தைச் சேர்ந்தது

ரஷ்யாவில் அண்மையில் விழுந்து ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயத்தை ஏற்படுத்திய எரிகல், விண்வெளியில் பூமிக்கு அருகால் சுற்றிவரும் அப்பல்லோ விண்கல் கூட்டத்தைச் சேர்ந்தது என புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழைந்து வெடித்துச் சிதறிய எரிகல் தொடர்பில் பெறப்பட்ட பல்வேறு வீடியோ ஆதாரங்கள் கொண்டு கொலம்பியாவின் வானியலாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் இந்த எரிகல் அப்பல்லோ விண்கல் கூட்டத்தைச் சேர்ந்தது என வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமிக்கு அருகால் மிதந்து கொண்டிருக்கும் சுமார் 9,700 விண் கற்களை வானியலா ளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த விண் கற்களை வானியலாளர்கள் அப்பல்லோ, அடன் அல்லது அமெரர் என பல்வேறு கூட்டங்களாக பிரித்துள்ளனர். விண்கற்களின் தன்மை அதன் சுற்றுப்பாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இவை பல்வேறு கூட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் அப்பல்லோ விண்கல் கூட்டத்தில் சுமார் 5,200 விண்கற்கள் அளவு இருப்பதாக நம்பப்படுகிறது.

இத்தாலி  இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது

இத்தாலியில் இடது சாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்ற தால் ஆட்சியை பிடிக்கிறது. இடதுசாரி கட்சியை சேர்ந்த பியர்லூகி பெர்சானி பிரத மராக தேர்ந்தெடுக்கப்படு வார் என எதிர்பார்க்கப்படு கிறது. இத்தாலியில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் இத்தாலி பொருளாதார நெருக்கடி யிலும் சிக்கி தவிக்கிறது. இத்தா லியில் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் நாடாளுமன்ற கீழ் சபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 630 இடங் களுக்கு நடந்த இந்த தேர்த லில் , பியர்லூகி பெர்சானி யின் இடதுசாரி கட்சி தனி யாக போட்டியிட்டது. முன்னதாக பாலியல் குற் றச்சாட்டில் பதவி விலகிய சில்வியோ பெர்லுஸ்கோனி யின் வலதுசாரி கட்சி எதிர்த்து போட்டியிட்டது. மரியோ மாண்டியின் மத் தியசாரி கட்சி தனியாகவும், 5 ஸ்டார் இயக்கம் தனியாக வும் போட்டியிட்டன. தேர் தலில் பியர்லூகி பெர்சானி யின் இடதுசாரி கட்சி 29.6 சதவிகித ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. சில்வியோ பெர்லுஸ்கோனி வலதுசாரி கட்சி 28.2 சதவிகித ஓட்டுகளும், 5 ஸ்டார் இயக்கம் 26 சத விகிதமும், மரியோ மாண்டி யின் மத்திய சாரி கட்சி 10.4 சதவிகித ஓட்டுகளும் பெற்றது. இதனால் குறைந்த சத விகித ஓட்டுகளுடன் வெற்றி பெற்ற பியர்லூகி பெர்சானியின் இடதுசாரி கட்சி, 10.4 சதவிகித ஓட்டு கள் பெற்ற மரியோ மாண்டி யின் மத்திய கட்சியுடன் கூட்டணி அமைத்து நிலை யான அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதையடுத்து இடது சாரி கட்சியை சேர்ந்த பியர் லூகி பெர்சானி பிரதமரா கிறார்.

மேலை நாடுகளின் உறவை புறக்கணியுங்கள்!  ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளின் மாநாட்டில் - சாவேஸ்

மேற்கத்திய நாடுகளின் உறவை புறக்கணியுங்கள் என்று ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுக ளுக்கு வெனிசுலா அதிபர் சாவேஸ் அறைகூவல் விடுத்தார். ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுக ளின் 3-வது மாநாடு ஈக் வடார் கயாவில் நடந்தது. இந்த மாநாட்டில் ஆப் பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களை சேர்ந்த 63 நாடுகளின் தலை வர்கள் கலந்து கொண் டனர். மாநாட்டுக்கு பொலி வியா நாட்டு அதிபர் இவோ மொரல்ஸ் தலைமை தாங்கி னார். மாநாட்டை ஈக் வடாரில் கயா நாட்டின் அதிபர் டியோடரோ ஒபி யாங் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் வெனி சுலா அதிபர் சாவேஸ் கலந்து கொள்வதாக இருந் தது. ஆனால் அவர் கியூபா வில் கடந்த டிசம்பர் மாதம் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் இப்போது அவர் வெனிசுலா திரும்பி ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் இவருடைய கடிதத்தை வெனிசுலா வெளியுறவுத் துறை அமைச்சர் இலியாஸ் ஜவா வாசித்தார். (மேலும்..)

மாசி 26, 2013

பொன்னம்பலம் சண்முகலிங்கம்

1944 ஆண்டு ஜூன் 23ம் திகதி கரவெட்டியில் பிறந்த பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் தனது சிறுவயதில் நேரடியாகக் கண்ணுற்ற மோசமான அநியாயமான சம்பவங்களால் மிகவும் பாதிப்படைந்து அவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கவும் போராடவும் புறப்பட்டார். இவருடைய இளம் பராயத்தில் தமிழ் பேசும் இலங்கையரின் தானைத் தலைவராக ஈழத்துக்  காந்தி தந்தை செல்வநாயகம் இருந்தார். செல்வநாயகத்தின் அரசியலோ சிங்கள வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட இனவாதத்துள் பிறந்து, யாழ்ப்பாண நடுத்தர வர்க்க தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தியது.  பரந்த மனிதம் தழுவிய கருத்தியல் செல்வநாயகம் அறியாத ஒன்று.  ஒரு பிரிட்டிஷ் விசுவாசியான செல்வநாயகம் இலங்கை வரலாற்றிலேயே மோசமான  இனவாதக் கட்சியான UNPயுடன் உறவாக இருந்தார். N.M பெரேரா, கொல்வின் R.D.சில்வா, பீற்றர் கெனமன், சண்முகதாசன் போன்றவர்களுக்கு இருந்த சிந்தனை விருத்தி, ஒரு சாதாரண மேடைப்பேச்சைக் கூட நிகழ்த்த முடியாத செல்வநாயகத்துக்கு இருக்கவில்லை. இதனைக் கண்ணுற்ற சண்முகலிங்கம் அவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் முழு நேர தொண்டனாக சேர்ந்தார். (மேலும்..)

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!!  (பகுதி -1)

(வரதர் பெருமாள்)

இந்தியாவின் உதவிகளைப் பெற்று இலங்கை அரசை புலிகள் எதிர்த்து, பின்னர் இலங்கை அரசின் உதவிகளைப் பெற்று இந்தியப் படைகளை புலிகள் எதிர்த்தது மட்டுமல்லாது, இந்திய - இலங்கை சமாதான உடன்பாட்டின் மூலம் வராது வந்த மாமணி போல் கிடைத்த வடக்கு-கிழக்கு மாகாண சபையையும் புலிகள் இல்லாதொழித்து, அதன் பின்னர், எந்தவொரு சிங்களத் தலைவரும் தானாகச் செய்திருக்க மாட்டார்கள் என்ற வகையான ஓர் அரசியற் தீர்வை சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் தானாக முன்வந்து ஏறத்தாழ அதிகபட்சமான மாநில சுயாட்சி அதிகாரங்கள் கூடிய அரசியற் தீர்வை முன் வைத்த போதும் அதனை நடைமுறைக்கு வராது பண்ணிய புலிகள், பல சர்வதேச மேலைத்தேய நாடுகள் இந்திய அரசினது மறைமுக அங்கீகாரத்தையும் பெற்று ரணில் விக்கிரமசிங்காவை சமஷ்டி அரசியற் தீர்வுக்கு ஒப்புக்கொள்ள வைத்த போதும் அதனையும் ஏற்க மறுத்து சண்டையைத் தொடர்ந்த புலிகள் கடைசியில் எந்த நாடும் தமது பயன்பாட்டுக்கு துணை தராமற் போய்விடுமோ என்ற நிலையைப் புரிந்து கொண்டதால் மீண்டும் தமிழ் மக்களின் வாக்குகளைத் தஞ்சமாகக் கொண்டனர். அதனால் தம்மைக் காப்பாற்றும் ஆயுதமாகத் தமிழ் மக்களின் வாக்குரிமைகளைப் பயன்படுத்தினர். அதற்கான ஏஜண்டுக் குரல்களாகச் செயற்பட சட்டபூர்வமாக இருந்த சில தமிழ்க் கட்சிகளை வளைத்துப் போட்டனர். அதன் விளைவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பதை அனைவரும் அறிவர். (மேலும்..)

இரா ஜனார்த்தனம் மறைவு! வரலாற்றுத்துயர்

ஈழத்தமிழர் துயர் தீர்ப்பதற்கு கைமாறு கருதாமல் பகட்டில்லாமல் ஆரவாரமில்லாமல் பணியாற்றியோர் பலர். அவர்களில்; முதன்மையானவர் இரா ஜனார்த்தனம்.
1975 ஜனவரி 10 யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாட்டில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோதுதான் பொலிசார் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டு 9 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் நேர்ந்தது. அந்த நாளில் இருந்து அவர் ஈழத்தமிழர்களுக்காக ஆற்றிய பணிகள் நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டியவை. அவர் ஈழத்தமிழர்கள் பால் அளவற்ற நேசம் கொண்டிருந்தார். சகோதரப்படுகொலைகள் அவரை மிகுந்த துயருக்குள்ளாக்கி இருந்தன.

இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள்  - நவநீதம்பிள்ளை

இலங்கையில் பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்ற வண்ணமேயுள்ளன. பல்வேறு உள்நாட்டு யுத்தங்களிலும் போர்க் குற்றங்கள் தொடர் கதையாகவே மாறியுள்ளன. இத்தகைய குற்றச் செயல்களையும் மனித உரிமை மீறல்களையும் புரிந்து வருவோருக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை முறைமையை நாம் தொடர்ந்தும் போஷிக்கவும் பலப்படுத்தவும் வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமானது. அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார். ருவாண்டா, பொஸ்னியா, மற்றும் ஹேர்ஸிகோவினா ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள்ள இன அழிப்பு நடவடிக்கைகளின் போது இலட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். என்று சுட்டிக்காட்டிய நவநீதம்பிள்ளை ஈராக்கிலும் இலங்கையிலும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன என்றும் எடுத்துக் கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் விரைவாக அமுல்படுத்துங்கள் - தென்னாபிரிக்கா

கற்றரிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் விரைவாக அமுல்படுத்த வேண்டும் என்று தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகளுக்கான பிரதி அமைச்சர் இப்ராஹிம் தெரிவித்தார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகளுக்கான பிரதியமைச்சர் இப்ராஹிம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாடும் பெண்களை கொலை செய்யுங்கள் ஜம்மு காஷ்மீரின் தலைமை மெளலவ

மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை கோருகிறேன். இதை அவர்கள் மீறினால் “ஏக இறைவனின் திருப்பெயரால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரின், ஒரு பகுதியில் உள்ள இமாம் பஸீருதீன் அகமது வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார். அந்த இளம் பெண்களுக்கு– கலைத்தாகம் கொண்ட பெண் சிறார்களுக்கு எதிராக கொலைமிரட்டல் விடுத்தவர் ஜம்மு காஷ்மீரின் தலைமை மெளலவி. இதற்கு எதிராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசிய மாநாட்டுக் கட்சியின் இளம் முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவி மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கூட அந்த ஃபத்வா எனும் பகிரங்கக் கொலை மிரட்டலைக் கண்டிக்காமல், நடவடிக்கை எடுக்காமல் அந்த இளம் பெண்களின் இசைக்குழுவான “பிரகாஷ்” (paragaash)-க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தனர். (மேலும்..)

GTF ஒன்று கூடலும் போர்க்குற்றம் குறித்த சந்தேகங்களும்

இலங்கை அரசபடைகளாலும் அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம்சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் இருதரப்பு உறவுகளுக்கு மிகவும் கடினமானதாக அமையும் என கொழும்பிலுள்ள அமரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அறிவித்த விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்ம்பு ரெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ளது. அமரிக்க ராஜங்கத் திணைக்களமும் மனித உரிமைக்கான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குறங்களை குறிப்பிட்டுள்ளன. பெரும்பாலும் புலிகளின் தலைமைகள் போரில் கொல்லப்படுவிட்டன. சிறிய அளவிலானவர்கள் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் விடப்பட்டுள்ளனர் என கொழும்பு அமரிக்கத் தூதரகம் அனுப்பிவைத்த தகவலில் தெரிவிக்கப்படுகின்றது. (மேலும்..)

உலகை உறைய வைக்கும் போகும் ஒளிப்பட செய்திகள் எவை? புலிகள் செய்த படுகொலைகளா அல்லது இராணுவம் செய்த படுகொலைகளா?

சனல் 4 தொலைக்காட்சியில்  ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படங்களை   தயாரித்து  வெளியிட்டு  வரும்  இயக்குனர்  கல்லும் மக்ரே  தமக்கு  கிடைத்ததாக  கூறி  நான்கு  ஒளிப்படங்களில்  மூன்றை, அவர்  கடந்த  19ம் திகதி  லண்டனில்   இருந்த வெளியாகும்   ‘தி இன்டிபென்டென்ட்’   பத்திரிகை   பிரசுரித்த  நாளிலிருந்து…. புலம்பெயர்   புலியாதரவு   ஊடகங்களிலும்,  இந்திய   ஊடகங்களிலும்,   தங்களுக்கு  தாங்களே   இச்செய்தியானது    ‘உலகை  உறைய  வைத்ததாக’ பிரச்சாரம்  செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால்,  தலைவர்  பிரபாகரனின்  ‘பொடி’  இராணுவத்தினரிடம்  சரணடைந்த  பின்பு  சுட்டுக்கொல்லப்பட்ட  படக்காட்சிகள்,  எந்தவொரு  வெளிநாட்டு  ( ‘தி இன்டிபென்டென்ட்’   பத்திரிகையை  தவிர) ஊடகங்களிலும்  ஒரு  பெட்டிச்செய்தியாக   கூட வெளியாகவில்லை  என்பதுதான்  உண்மை. (மேலும்..)

சிறந்த திரைப்படமாக ஆர்கோவுக்கு ஒஸ்கார் விருது

ஈரான் இஸ்லாமிய புரட்சி தொடர்பாக எடுக்கப்பட்ட ஹொலிவூட் திரைப்படமான ‘ஆர்கோ’ சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றுள்ளது. 85 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் வைபவம் லொஸ் ஏஞ்சல்ஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை ‘லின்கன்’ படத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லின்கனின் பாத்திரத்தை ஏற்று நடித்த டானியல் டே லுவிஸ் வென்றார். இதன் மூலம் அவர் மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்ற முதல் நடிகராக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 55 வயதான டே லுவிஸ் 1990 இல் ‘மை லைப் பூட்’ மற்றும் 2008 ‘தெயார் வில் பி பிளட்’ படத்தில் நடித்ததற்காக ஒஸ்கார் விருதை வென்றிருந்தார். கடந்த 1979 இஸ்லாமிய புரட்சியன்போது ஈரானில் சிக்கிக்கொண்ட அமெரிக்க இராஜதந்திரிகளை அங்கிருந்து மீட்டுவரும் சி.ஐ.ஏ. திட்டத்தை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான ‘ஆர்கோ’ சிறந்த திரைப்படமாக விருதுபெற்றது.

ஐதராபாத் குண்டு வெடிப்பு: மூன்று தீவிரவாதிகள் கைது

ஐதராபாத் தில்சுக் நகர் இரட்டை குண்டு வெடிப்பு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் பற்றி தேசிய புலனாய்வு அமைப்புடன், ஐதராபாத் பொலிஸாரும், தீவிரவாத தடுப்பு படை பொலிஸாரும் பலமுனைகளில் விசா ரித்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையே சம்பவ இடத்தில் கண்காணி ப்பு காமராவில் பதிவான உருவத்தை வைத்து ஒரு தனிப்படை பொலிஸார் துப்பு துலக்கி வருகிறார்கள். இதில் நேபா ளத்துக்கு தப்ப முயன்ற 2 பேர் பீகாரில் கைது செய்யப் பட்டனர். இவர்களில் ஒருவர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர். இந்த தாக்குதலில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த இயக் கத்தின் முக்கிய நிர்வாகியான சையத் மக்பூர் சில மாதங்களுக்கு முன் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஐதராபாத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ரைஸ்சுதீன் மற்றும் கூட்டாளிகளை தீவிரமாக தேடினார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரைஸ் சுதீனின் நண்பர்கள் மஞ்சிர், வக்கார் ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலம் ரைஸ்சுதீன் இருப்பிடத்தை கண்டு பிடித்தனர். நேற்று இரவு ரைஸ் சுதீன் தங்கி இருந்த இருப்பிடத்தை முன்தினம் பொலிஸ் படை முற்றுகையிட்டது.

மாசி 25, 2013

டக்ளஸ் இந்தியாவை வம்புக்கு இழுக்கின்றார் - கருணாநிதி

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி அவர் தனது பேச்சின் மூலம் இந்தியாவை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார். பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் டக்ளஸ் தேவானந்தா, 1986 ஆம் ஆண்டு ஒன்பது நபர்களுடன் இணைந்து, சென்னை சூளைமேடு பகுதியில் வாழும் மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், ஒருவரைக் கொன்று விட்டதாகவும் குற்றம் சாற்றப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றம் செய்ததற்கான குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. (மேலும்..)

'தமிழ் தேசிய முன்னணி கட்சி' உதயமாகிறதென வவுனியாவில் சுவரொட்டி

'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி உதயமாகுவதாகக் கூறி வவுனியாவில் பல இடங்களிலும்  சுவரொட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சமகால ஆக்கபூர்வமான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காய், அரசியல் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் புத்திஜீவிகளினதும் பங்குபற்றுதலை உறுதி செய்வதற்காய், பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை  விரைவுபடுத்தவதற்காய், எமது தேசத்தை நாமே ஆளும் சக்தியாக உருவெடுப்பதற்காய், மேலும் பல அரசியல் புதுமைகளுக்காய்  இந்தக் கட்சி  உதயமாகின்றது என சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சி தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக 024 2226436, 0777642329 என்ற தொலைபேசி இலக்கங்களும் இடப்பட்டுள்ளன.

ஐ. நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர் இன்று (25) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு பங்கேற்கிறது. இலங்கைக்குழுவிலுள்ள பலர் ஏற்கனவே ஜெனீவா சென்றுள்ளதோடு, நேற்று சிலர் அங்கு பயணமானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சின் இரு உயரதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை மறுதினம் ஜெனீவா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின. 22 ஆவது கூட்டத் தொடரில் சுமார் 80 நாட்டு அமைச்சர்கள் உரையாற்ற உள்ளதோடு இலங்கை சார்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரை நிகழ்த்துவார். இதேவேளை, அமைச்சர் தலைமையிலான இலங்கைக் குழு மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் வெளிநாட்டுத் தூதுக் குழுக்களை சந்தித்து பேச உள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் கூறின.

த.தே.கூ.வின் உயர்மட்டக்குழு அமைவதில் சந்தேகம் - ஆனந்த சங்கரி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று அமைவதென்பது சந்தேகமாகவே உள்ளது. கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போதும் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படாத நிலையில் அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு அது ஒத்திவைக்கப்பட்டது. இதனால், உயர்மட்டக் குழுவொன்று அமைவதில் சந்தேகமே' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். 'தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக கூறப்படும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் கடந்த 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையகத்தில் நடைபெற்றபோது உயர்மட்டக்குழுவும், மாவட்ட குழுவும் அமைப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டது. சில தலைவர்கள் ஜெனீவா செல்வதால் அடுத்த மாதம் 20ஆம் திகதி மீண்டும் கூடி தமிழரசு கட்சியின் கருத்துக்களையும் கேட்டறிந்து அக்கட்சியின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டபோதும் இது சம்பந்தமாக எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் இன்றைய சூழ்நிலைக்கேற்ற முடிவாக அம்முடிவு எனக்குத் தோன்றவில்லை. (மேலும்..)

உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும்

உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 6000 ஏக்கர் காணிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக் கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.பாதுகாப்பு படைப்பிரிவின் கீழ் இருந்த 11,284 ஏக்கர் காணிகளில் 5,282 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டு ள்ளன. ஐந்து கட்டங்களாக இந்த காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, 2000 வீடுகளும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மிகுதியாக இருக்கும் 6000 ஏக்கர் காணியில் 80 சதவீதமான காணிகளில் அரச காணிகளும், தனியார் காணிகளும் உள்ளடங்குகின்றன. உயர்பாதுகாப்பு வலயமொன்று யாழ். மாவட்டத்தில் இல்லை அவ்வாறு இல்லாத உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை இராணுவம் சுவீகரிப்பதென்பது பொய்யான கருத்து என்றும் அவர்கூறினார். தனியார் காணிகளில் இருந்த இராணுவத்தினர் அக்காணிகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக பலாலி பகுதியில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் யாழ். கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மேலும் கூறினார்.

சிற்றுண்டிச்சாலையை பகிஷ்கரிக்க முஸ்லிம் எம்.பிக்கள் தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலையை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவுகளில் பன்றி கறியையும் வழங்கலாம் என கடந்த வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்தே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். அத்துடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேட சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலாக மகஜரொன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் விரைவில் கையளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பன்றி இறைச்சியினால் சமைக்கப்பட்ட கறிகள்இ ஏனைய கறிகளுடன் கலந்துவிடக்கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக 8 அறிக்கைகள்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு அப்பால் இலங்கை தொடர்பில் 8 அறிக்கைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இந்த அறிக்கைககளில், ஆட்கள் தடுத்து வைக்கப்படல், பேச்சு சுதந்திரமின்மை, நீதித்துறைக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் இனப்பிரச்சினை தீர்வுக்கு வழியேற்படுத்தப்படாமை போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் 22ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பல சர்வதேச அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த அறிக்கைகள் முன்வைக்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெல் அறுவடைக்கு இந்திய தொழிலாளர்கள் இங்கு வந்து உதவி செய்கின்றார்கள்

வடக்கு, கிழக்கில் உள்ள நெற்காணிகளில் அறுவடை செய்வதற்கு ஆளணிப் பற்றாக்குறை இருந்து வருவதனால் இந்தியப் பிரஜைகள் இங்கு வந்து அறுவடைப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவர்களுக்கு 3 மாதகால விசா வழங்க இருப்பதாக கமநலசேவை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இலங்கையர் இன்று மேற்காசிய நாடுகளுக்கும் சிங்கப்பூர் தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளுக்கும் வேலை வாய்ப்பைத் தேடி செல்வதனால் எமது நெற்காணிகளில் அறுவடை செய்யும் பணியை மேற்கொள்வதற்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதனால் அரசாங்கம் இந்தியப் பிரஜைகளுக்கு 3 மாதகால உல்லாசப் பயணிகளுக்கான விசாவை வழங்கி இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நெற்காணிகளில் பணியாற்றுவதற்கு அனுமதி அளித்துள்ளது. (மேலும்.....)

மற்றொரு ஆளில்லா விமானம் ஈரான் வசம்

எதிரிகளின் மற்றொரு ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளது. தெற்கு ஈரானிலுள்ள இராணுவ தளத்திலிருந்தே இந்த ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. யுத்த விவகாரம் தொடர்பான எமது இலத்திரனியல் கருவி எமது நாட்டுக்குள் வெளிநாட்டு ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைவதை அவதானித்ததைத் தொடர்ந்து எமது விசேட படை அதனை கட்டுப்படுத்தி தரையிறக்கியது என ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படையின் லுதினன் ஜெனரல் ஹமத் சர்காலி குறிப்பிட்டுள்ளார். இந்த ஆளில்லா விமானத்தின் வீடியோ படம் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் அமெரிக்க ஆளில்லா விமானத்தை தறையிறக்கிய விதம் குறித்த வீடியோ ஆதாரத்தை இம்மாத ஆரம்பத்தில் ஈரான் வெளியிட்டிருந்தது. கடந்த 2011 டிசம்பர் 4 ஆம் திகதி கைப்பற்றிய ஆளில்லா விமானத்தின் வீடியோவையே ஈரான் வெளியிட்டது. இந்த ஆளில்லா விமானத்தை திருப்பித்தரும்படி அமெரிக்கா கேட்டபோதும் அதனை ஈரான் மறுத்தது. பின்னர் கடந்த 2012 டிசம்பரில் மற்றொரு ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவித்தது.

யாழ். ஆயர் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பு

கச்சத்தீவு திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த இலங்கை அரசாங்கத்திற்கும் திருவிழாவுக்கான அனுமதியை வழங்கிய பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கும் ஆயர் தோமஸ் செளந்தர நாயகம் ஆண்டகையும் இந்திய கத்தோலிக்க மதக் குருக்களும் நன்றி தெரிவித்தனர். நேற்றைய தினம் திருவிழா திருப்பலியின் இறுதியில் அவர்கள் தமது நன்றியுரையை நிகழ்த்துகையிலேயே குறிப்பாக இலங்கை அரசுக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் நன்றி தெரிவித்தனர். இரு நாட்டு மக்களினதும் நல்லுறவுக்குச் சிறந்த அடித்தளமாக இந்த திருவிழா நிகழ்வதாகவும் அதற்கு சகல வழிகளிலும் உதவி, ஒத்தாசைகளை வழங்கிய சகலருக்கும் அவர்கள் தமது நன்றியைத் தெரிவித்தார். யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை நாட்டுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நல்லாசிகளைத் தெரிவித்ததுடன் புனித அந்தோனியாரை விசேடமாகப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார். இந்திய கத்தோலிக்க மக்கள் சார்பில் இராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் ஆண்டகையின் சார்பில் அருட் தந்தை சகாயராஜ் நன்றியுரை நிகழ்த்தினார்.

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இலங்கை - இந்திய பக்தர்கள் பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா நேற்று இலங்கை- இந்திய மக்களின் பங்கேற்றலுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற திருவிழா நிகழ்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 7000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். யாழ். ஆயரின் தலைமையில் இலங்கை இந்திய நாடுகளின் அருட் தந்தையர்கள் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றியதுடன், திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் இணைந்து மேற்கொண்டி ருந்தன. நேற்று முன்தினம் திருவிழா நிகழ்வுகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்ப மாகியுள்ளதுடன், நேற்றுக் காலை 8.00 மணி க்குத் திருவிழா திருப்பலி தமிழில் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, யாழ்ப்பாணத்திலுள்ள பிரதி இந்தியத் தூதுவர் மகாலிங்கம், வட மாகாணத்திற்கான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். கடற்படை கட்டளைத் தளபதி ஷிரந்த உடவத்த, யாழ் மாவட்ட நீதிபதி அமலவன் உட்பட இலங்கை இந்திய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகளும் இம்முறை திருவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

மாசி 24, 2013

தோழர் சண் எம்மைவிட்டு பிரிந்துவிட்டார்

கனடாவில் வாழ்ந்து வந்தவரும், 'சண்' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டு வந்தவருமான, கரவெட்டியைச் சேர்ந்த முற்போக்கு சமூக செயற்பாட்டாளரான பொன்னம்பலம் சண்முகலிங்கம், கடந்த சில ஆண்டுகளாக சுகவீனமுற்றிருந்த நிலையில், 2013 பெப்ருவரி 22ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முன்னிரவு 8.30 மணி அளவில் அங்குள்ள ஸ்காபரோ நகரில் காலமாகிவிட்டார். அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய விபரமான அறிவித்தல் பின்னர் வெளியிடப்படும்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான போர்க்குற்ற விசாரணை

இப்போது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு முதுகெலும்பு முளைத்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கிறார்கள் உணர்சி அரசியல் நடத்தும் தமிழ் தேசிய வியாபாரிகள்! இலங்கையில் முள்ளிவாய்கால் மூலையில் நடைபெற்ற மனிதப்படுகொலைகள் பேரினவாத அரசின் இனப்படுகொலைகள். இனப்படுகொலைகளை மறைக்கின்ற ஏகாதிபத்தியங்கள் அதனைப் போர்க்குற்றம் என்ற குறுகிய எல்லைக்குள் முடக்கிவிட்டன. கையிருப்பில் வைத்திருக்கும் ராஜபக்சவின் அரசின் கொலைக்கான ஆதரங்களை தேவையேற்படும் போதெல்லாம் கண்காட்சி நடத்தி அமரிக்க அரசின் உளவாளிகளாக தமிழர்களை உருமாற நியாயம் சொல்கிறார்கள். போர்க்குற்றமாக முடக்கப்பட்ட இனப்படுகொலை வெறுமனே ஆட்சி மாற்றத்திற்கான கருவியகவே பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிற்கும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இலங்கையில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கு மேல் எதனையும் இவர்கள் எதிர்பார்க்கவில்லை. புலம்பெயர் நாடுகளிலுள்ள தன்னார்வ நிறுவனங்களுக்கு பணப்பட்டுவாடா செய்கின்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்தையே எதிர்பார்க்கின்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், புதிய அரசு  போர்க்குற்றச் சுமையின்றி இனச்சுத்திகரிப்பை நடத்துவது மட்டுமல்ல இலங்கையின் அனைத்து வளங்களையும் ஒட்டச் சுரண்டுவதற்கும் வழிசெய்யும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னைநாள் புலிசார் அமைப்புக்கள் அனைத்தும் ஆட்சி மாற்றத்திற்கான ‘புரட்சியில்’ ஈடுபட்டுள்ளன.

யாழில் இந்திய கோணர் திறப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராயலத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்திய கோணர் நேற்று சனிக்கிழமை திற்ந்துவைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரினாலேயே  இந்திய கோணர் திறந்துவைக்கப்பட்டது. அத்துடன் வட மாகாண முன் பள்ளி பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு 1,000 புத்தக பைகள் மற்றும் 200 முன்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் புத்தகங்கள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியிடமும் 200 சங்கீத நூல்கள் மற்றும் இராமநாதன் நுண்கலை பீட பேராசிரியர் சத்தியசீலனிடமும் உயர் ஸ்தானிகரினால் கையளிக்கப்பட்டது.

கிழக்கு முதலமைச்சர், கல்முனை மேயர் ஆகியோரின் ஈரான் விஜயம் இரத்து

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதின் ஈரானுக்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்தின் அழைப்பினையேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தனர். எனினும் இந்த விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் கிழக்கு முதலமைச்சரின் ஈரானுக்கான விஜயம் நாட்டில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதனாலேயே இந்த இரத்து செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் பொதுபலசேன உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பில் முறையிடவே முதலமைச்சரின் விஜயம் அமைவதாக பல சர்ச்சைகள் வெளியாகும் என்பதாலும் இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

மாகாண சபைத் தேர்தல்

ஐ.தே.க. வுக்கு எதிராக மாற்றுக்குழு களத்தில்

நடைபெறவுள்ள மாகா ணசபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாற்றுக்குழுவொன்றை தேர்தலில் போட் டியிட வைப்பதற்கான ஆயத்தங்களை செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்தார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்கவையும், கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல் லும் வேலைத் திட்டத்துக்கு எதிராகவும் தாம் இந்த மாற்றுக் குழுவொன்றை களத்தில் இறக்கவுள்ளதாகவும், கட்சிக்குள் இருக்கும் பெரும்பான்மை யானவர்கள் இந்த வேலைத் திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப் பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அணை (ஜாதிக பவுர) என்ற பெயரில் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த ரங்க பண்டார, ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேலதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கட்சிகள் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், இது தொடர்பாக மக்களுக்கு விரைவில் தெளிவூட்டவி ருப்பதாகவும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இந்த மாற்றுக்குழு அமையும் எனத் தெரிவிக்கப்ப டுகிறது.

இலங்கை தொடர்பான அறிக்கை ஐ. நா. செயலாளரிடம் கையளிப்பு

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண உள்ளிட்ட குழுவினர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனிடம் இலங்கை தொடர்பான அறிக்கை யொன்றை சமர்ப்பித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜப்பானின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சனியோ நிஷிடா தலைமையிலான நான்கு நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இக்குழுவினர் தமது விஜயம் தொடர்பில் நேரில் கண்ட விடயங்கள் குறித்து அறிக்கையொன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்திருப்பதாக வெளிவி வகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக் கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

மாசி 23, 2013

கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்கும்  அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைப்பதென்றும் முடிவு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா மூவர் இணைக்கப்படும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த உயர் பீடம் அமைக்கப்படவுள்ளது. உயர் பீடம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், மாவட்ட ரீதியிலும் குழுக்களை அமைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவுசெய்யவேண்டும் என்ற கோரிக்கையினை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கோரிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எவை எப்படி இருப்பினும் ஒரு கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்த பின்பு இதனை நம்புவதே சரியாக அமையும் என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஜெனீவாவில் வரவிருக்கும் அமெரிக்கத் தீர்மானம்

ஒரு சில நாடுகளைத் தவிர விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு சகல நாடுகளும் முழு ஆதரவு வழங்கின. அவை தத்தம் நாடுகளில் விடுதலைப்புலிகளை தடைசெய்தும் இலக்கை அடைய பலவித உதவிகளும் புரிந்துள்ளன என்பதை தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். அத்தகைய நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் இன்றும் தடைவிதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இப்போது சில நாடுகள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானங்களை ஆதரித்தும், ஆதரிக்கவும் உள்ளமையால் அந்த நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை என குற்றஞ்சாட்டுவது நீதி  நியாயமற்ற செயலாகும். இலங்கையில் தூதரகங்களை வைத்துள்ள சகல நாடுகளுக்கும் தகவல்கள் சேகரிப்பதற்குரிய சகல ஏற்பாடுகளும் உண்டு. அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களை அவர்கள் தமக்குள் பரிமாறிக்கொள்வர். இந்த விடயத்தில் ஒரு நாடும் இன்னொரு நாட்டை தனிப்பட்ட விசேட காரணங்கள் ஏதும் இருந்தால் அன்றி கட்டுப்படுத்த முடியாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் எதையும் பெயர் குறிப்பிடாது அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு கூலிப்படைகளை அனுப்பி உள்ளனர் என பல்வேறு அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் வெளிவருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.(மேலும்..)

Eelam War II: LTTE takes upper hand at the onset

War on terror revisited

At the conclusion of the conflict in May 2009, Gen. Sarath Fonseka’s army built a special monument for those who sacrificed their lives at Kokavil

(by Shamindra Ferdinando)

A message from London

Having destroyed the Kokavil army detachment on the afternoon of July 13, 1990, the LTTE declared that its political wing, People’s Front for Liberation Tigers (PFLT), wouldn’t have any further role to play. Interestingly, the announcement was made by the LTTE’s International Secretariat in London after President Premadasa had postponed nominations for fresh PC elections in the temporarily merged province due to the rapidly deteriorating situation. (PFLT won’t contest polls––The Island July 15, 1990). (more...)

அச்சுவேலி கைத்தொழில்பேட்டை அடிக்கல் நாட்டு விழா நாளை

யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (24) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும். அச்சுவேலியில் 1970 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கைத்தொழில் பேட்டை யுத்த காலத்தின் போது சேதமடைந்திருந்தது. இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன் இதன் கட்டுமானப் பணிகள் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. அமைச்சு இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியுடன் கண்ணி வெடியகற்றல், நிலத்தை சுத்தம் செய்தல், சூழல் பரிசோதனை, நிர்வாகக் கட்டடப் பணிகள் ஆகியன விருத்தி செய்யப் பட்டுள்ளதுடன் நிர்வாக நடவடிக்கைக ளுக்காக நிர்வாகக் கட்டடமொன்றும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காணித்துண்டுகள் அபிவிருத்தி செய்யப்பட்டு உள்ளக பாதைகள், உள்ளக வீதி, உள்ளக ஒளி, நீர் வசதிகள் தீயணைப்பு முறைகள் என்பன ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பட்டிருப்பு தொகுதிக்கு ஸ்ரீல.சு.க. அமைப்பாளர்நியமனம்

மட்டக்களப்பு மாவட் டத்தின் பட்டிருப்புத் தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக சாணக்கியன் இராஜபுத்திரம் இராசமாணிக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சித் தலைவராகப் பதவி வகித்த எஸ். எம். இராசமாணிக்கத்தின் பேரனாவார். நேற்று முன்தினம் இவர் அலரி மாளிகையில் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராகவும் பதவி வகித்த எஸ். எம். இராசமாணிக்கம் ஏற்கனவே எழு வருடங்கள் சமஷ்டிக் கட்சியின் சுயேட்சை உறுப்பினராகவும் அதன்பின்னர் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக 13 வருடங்களும் பதவி வகுத்துள்ளார்.இராசமாணிக்கத்தின் உறவினர்கள் பலர் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் செயற்பட்டுள்ளனர். 1987 ல் இந்திய அமைதிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட சக்கரவர்த்தி இராசமாணிக்கம் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் உறவினராவார்.

மாசி 22, 2013

ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரவிருக்கின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்தனர். ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டார். 'அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில், சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம்' என்று பிரதமர் உறுதி கூறினார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக உரிமையை பெற்றுத் தருவது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது, பறிக்கப்பட்ட அவர்களின் சொத்துகளை உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்குவது தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா வற்புறுத்தும் எனவும் பிரதமர் வாக்குறுதி அளித்தார் என்றும் அவர் சொன்னார்.

பாலச்சந்திரன் கொலையும், தவணை முறை உணர்ச்சியும்

(கலாதரன்)

இன்று எமக்குத் தேவை அடிப்படைவாத அடையாளங்களா அன்றி ராஜபக்ச பாசிசத்தையும், பேரினவாதிகளையும் பலவீனப்படுத்தும் உடனடி நோக்கமா என்ற கேள்விக்குப் பதில் கிடைத்தால் நண்பர்களை சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டது குறித்த காட்சிகளின் பின்னர், ஜெயலலிதா, கருணாநிதி, சீமான், வை.கோபாலசாமி, ராமதாசு போன்ற அதே முகங்கள் மறுபடி களத்தில் குதித்து நாளை மரணித்துப் போகும் சீசன் வியாபாரத்திற்கு வந்துவிட்டார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றுமே ஆகிவிடாத உண்ர்ச்சி வயப்படுத்தலுக்கு இவர்கள் அனைவரையும் உள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். (மேலும்...)

ஹைதராபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு

இந்தியாவின் ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சுமார் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இக்குண்டுவெடிப்புகளில் சிக்குண்டு சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தின் தில்சுக் நகர் பகுதியின் திரையரங்கு மற்றும் சந்தைத் தொகுதியடங்கிய மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலேயே இக்குண்டு வெடிப்பு சம்பவம் நிழ்ந்துள்ளது. தேசிய பாதுகாப்பு பிரிவினரும் மீட்பு படையினரும் தற்சமயம் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே உத்தியோகபூர்வ இழப்பு பற்றி அறிந்துகொள்ள முடியுமெனவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மீது தாக்குதல்

கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான பிரியந்த பத்திரன தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சபைத் தலைவர் ஆரியவதி கலப்பதியின் புதல்வரான சுசந்த கலப்பதியினால் பிரியந்த பத்திரன தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பினரும் உப்புவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரத்தை மாகாண சபைகளிலிருந்து ஒழிக்க முடியாது - சம்பந்தன்

பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என்று சொல்வதற்கு கிழக்கு முதலமைச்சருக்கு எந்த தகுதியுமில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன் என்ற அடிப்படையிலேயே இதனை மிக உரிமையுடன் கூறுகின்றேன் என அவர் குறிப்பிட்டார்.'கிழக்கு முதலமைச்சரின் தந்தையான முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.ரவிராஜ் மற்றும் மகேஸ்வரன் உட்பட பல அரசியல் முக்கிஸ்தர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு யார் காரணம். அத்துடன் 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலரத்தின்போது சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு பெற்ற இந்த பொலிஸ் அதிகாரங்களை ஒருபோது மாகாண சபைகளில் இருந்து ஒழிக்க முடியாது' எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் கூட்டமைப்பு அரசுடன் பேசவேண்டும்

இலங்கையில் மழைபெய்ய கூட்டமைப்பினர் அமெரிக்காவிலும் ஆபிரிக்காவிலும் குடைபிடிப்பது தவறு. தமிழ் மக்கள் குறித்து உண்மையான அக்கறை இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச வேண்டும். இதற்காக நாங்கள் மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம். தவறும் பட்சத்தில் இருக்கும் தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் பேசி தீர்வை வழங்கும் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்....)

ஜாலியன் வாலாபாக் சம்பவம்; பிரிட்டன் பிரதமர் வருத்தம்

மூன்று நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள, பிரிட்டன் பிரதமர், டேவின் கமரூன், நேற்று முன்தினம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்றார். நூற்றுக்கணக்கான இந்தியர்களை கொன்று குவித்த, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, பிரிட்டன் பிரதமர், தனது பயணத்தின் கடைசி நாளான நேற்றுமுன்தினம், அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார் கோவிலை சுற்றி பார்த்த பின், அருகில் உள்ள, ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் பதிவேட்டில், “இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, பிரிட்டன் வரலாற்றில் மறக்க முடியாத தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது வெட்கத்திற்குரிய செயல் இந்த சம்பவம் மறக்க முடியாத ஒன்று உலக அமைதிக்கு, பிரிட்டன் தொடர்ந்து பாடுபடும்’ என, குறிப்பிட்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்று, 94 ஆண்டு முடிவடைந்த நிலையில், இங்கு வந்து பார்வையிட்ட முதல் பிரிட்டன் பிரதமர், டேவிட் கமரூன் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கு முன், இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், 1997ம் ஆண்டு, இங்கு வந்து பார்வையிட்டார்.

மாசி 18, 2013

முதலமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானம்

பொலிஸ் அதிகாரம் தேவையில்லை, காணி அதிகாரத்தினை அதிகரிக்க வேண்டும்

13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கு 31ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தலைமையில் 31ஆவது முதலமைச்சர்கள் மாநாடு கடந்த சனிக்கிழமை பதுளையில் இடம்பெற்றது. இதன்போதே, 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார். எனினும் தற்போதைய நிலையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என அரசாங்கத்தை வற்புறுத்துவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, மாகாண சபைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரத்தினை அதிகரிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுவது என இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு ஆயுதங்களை விற்றது பிரித்தானியா

மோசமான மனித உரிமைமீறல்கள் இடம்பெற்ற போதிலும், இலங்கைக்கு மில்லியன் கணக்கான பவுண்ட்ஸ் பெறுமதியான சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பிரித்தானியா கடந்த ஆண்டு விற்பனை செய்துள்ளதாக, பிரித்தானியாவின் ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கப் புள்ளிவிபரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, குறைந்தது, 3 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்கள் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளன. கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத உடற்கவசங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளன. மனிதஉரிமை மீறல்கள் காரணமாக, கவலைக்குரிய நாடாக இலங்கையை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பட்டியலிட்டுள்ள போதிலும் இந்த ஆயுதங்கள் விற்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட, கடந்த ஜுலை தொடக்கம் செப்ரெம்பர் வரையிலான காலாண்டுத் தரவுகளில் இருந்தே இலங்கைக்கு ஆயுதங்கள் விற்கப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஜுலையில் ஒரு தடவையும், ஓகஸ்ட் மாதம் மூன்று தடவைகளும் என நான்கு சந்தர்ப்பங்களில் இந்த ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 600 தாக்குதல் துப்பாக்கிகள், 650 துப்பாக்கிகள், 100 கைத்துப்பாக்கிகள், 50 தாக்குதல் சொட் கண்கள், என்பனவற்றை விற்க பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் இலங்கைக்கு 330,000 பவுண்ட்ஸ் பெறுமதியான வெடிபொருட்களையும், 665,000 பவுண்ட்ஸ் பெறுமதியான குண்டு துளைக்காத உடற்கவசங்களையும் விற்கவும்,அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாங்கேணியில் மூவர் புலனாய்வு பிரிவினரால் கைது

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்று பயங்கரவாத தடுப்பு புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவின் தலைமைக் காரியாலயத்திற்கு (4ம் மாடி) அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கைதுசெய்யப்பட்ட உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 50 முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கடைகளை மூட வேண்டுமெனவும் அவ்வாறு செய்யத் தவறினால் கொலை செய்ய நேரிடும் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல்கள் தொடர்பில் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சாதர் தகவல் வெளியிட்டுள்ளார். இதேவேளை, அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீண்டும் 1983ஆம் ஆண்டைப் போன்று வன்முறைகள் வெடிக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

13,500 இராணுவத்தினர் இருக்க எனக்கு எதற்கு இரகசிய ஆயுதக்குழு - ஹத்துரு சிங்க

யாழ். குடாநாட்டில் 13,500 இராணுவ வீரர்கள் துப்பாக்கி சகிதம் எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்நிலையில் இரகசிய ஆயுதக் குழுக்களை வைத்திருக்க வேண்டிய தேவை எனக்கில்லை என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் அடிப்படையற்ற வகையில் இரகசிய ஆயுதக்குழுக்கள் யாழில் உள்ளதாகவும் அதனை இராணுவம் பின்னின்று செயற்படுத்துவதாகவும் பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளார். இதனை யாழ். கட்டளைத் தளபதி என்ற வகையில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் வீழ்ந்த எரிகல் ஹிரோஷிமா அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது

ரஷ்யாவின் வான் பகுதி யில் வெடித் துச் சிதறிய எரிநட்சத்திரத்தின் சக்தியானது ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு சக்தியை விட பன்மடங்கு சக்தி வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் யுரால் மலைத் தொடர் பகுதியில் வான் வெளியில் எரி நட்சத்திரம் ஒன்று 2 நாட்களுக்கு முன்பு விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் 1100 பேர் படுகாயமடைந்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீற்றர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இந்த பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டன. வானிலிருந்து பயங்கர வேகத்தில் தரையை நோக்கி பாய்ந்து வந்த இந்த நட்சத்திரம் தரையை நெருங்கும்போதே அதாவது பூமியிலிருந்து 50 கிலோ மீற்றர் உயரத்தில் வெடித்துச் சிதறியது. அதிர்ஷ்டவசமாக இந்த எரிநட்சத்திரம் அப்படியே கீழே விழவில்லை. விழுந்திருந்தால் மிகப் பெரிய உயிரிழப்புகள் நேர்ந்திருக்கும். இந்த எரிநட்சத்திரத்தின் எடை 10,000 தொன் என்று கூறப்படுகிறது. ஆனால் தரையில் விழுவதற்கு முன்பே இது வெடித்துச் சிதறி விட்டதால் பேராபத்து நீங்கியது.

யுத்தத்தின் போது பிரிந்தோரை இணைக்கும் நடவடிக்கை

யுத்தத்தின் போது தனது உறவுகளைப் பிரிந்து சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடி ஒன்றிணைக்கும் இரண்டாவது கட்ட வேலைத்திட்டம் வடக்கில் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக உறவுகளை பிரிந்து நிற்கும் சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைப்பதற்கான பிரதான நிலையம் கிளிநொச்சி நகரில் இந்த வாரம் உடடினயாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை காலம் யுத்தத்தின் போது பிரிந்து தவித்த சுமார் 600 சிறார்கள் அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் வவுனியாவில் இயங்கி வந்த மேற்படி நிலையம் மூடப்பட்டு வந்த நிலையிலேயே ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் கிளிநொச்சியில் புதிதாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிலவிற்கு விண்கலனை   அனுப்ப ரஷ்யா திட்டம்!

2015ம் ஆண்டு நிலவிற்கு ஆளில்லா விண்கலனை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதன் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ் ஸோமோஸ் அறிவித்துள்ளது. இந்த விண்கலம் வோஸ்டோக்னி விண்கல ஏவுதளத்திலிருந்து ஏவப்படவுள்ளது. இந்த ஏவுதளம் ரஷ்யாவின் கிழக்கு பகுதியான அமரில் அமைந்துள்ளது. இதற்கான கட்டுமானப் பணியில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஏவுதளத்திலிருந்து நிலவிற்கு ரஷ்யா அனுப்பும் முதல் விண்கலம் இதுவாகும். இது ஆளில்லா விண்கலம் என்பதால் நிலவில் தானாகவே தரையிறங்குவதற்கு தேவையான தொழில்நுட்பப் பொருட்கள் அதில் இணைக்கப்படவுள்ளன. இந்த விண்கலம் ஆயிரத்து 400 கிலோகிராம் எடையுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சியை உலகிற்கு அறிவிப்பதற்கே இந்த முயற்சியை ரஷ்யா எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 2018ம் ஆண்டு சர்வதே விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்துள்ள சோயுஷ் விண்வெளி ஓடத்திற்கு பதிலாக புதிய விண்வெளி ஓடத்தை இணைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்த சோயுஷ் விண்வெளி ஓடம் கடந்த 1967ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஓடமான அப்போலோவின் ஓய்விற்கு பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்துடன் இணைந்துள்ள ஒரே ஒரு மனிதர்களைக் கொண்ட விண்வெளி ஓடம் என்ற பெருமையை சோயுஷ் பெற்றுள்ளது. இதேபோன்று செவ்வாயிற்கு மனிதர்களுடன் கூடிய விண்கலத்தை அனுப்பும் முயற்சியிலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'சமத்துவமான நிலையை உருவாக்குவதே எமது இலக்கு'

இலங்கையில் வெவ்வேறு மொழிகளைப்  பேசுகின்ற மக்களுக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் களைந்து, அவர்களுடைய தனித்துவங்களின் அடிப்படையில் சமத்துவமாக நிலைமைகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும் எனவும் அவர் கூறினார். வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் உணர்வுகளையும் அவர்களுடைய நிலைமையையும நாங்கள் புரிந்திருக்கிறோம். அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தேவையான அடிப்படைகளை உருவாக்குவதில் நான் நிச்சயமாக நேர்மையாக உழைப்பேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்டறிந்துகொண்டார்.  (மேலும்....)

எதிர்க்கட்சிக்கூட்டணி புரிந்துணர்வில் கைச்சாத்திடுவதா? கூட்டமைப்பு செவ்வாய் ஆராயும்


'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' கூட்டணியுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாளை (19) ஆம் திகதி ஆராயவிருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒன்பது கட்சிகள் கொழும்பில் வைத்து கடந்த 11 ஆம் திகதி கைச்சாத்திட்டன. தமிழ்தேசியக்கூட்டமைப்பு அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் அன்றையதினம்  கைச்சாத்திடவில்லை. எனினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதால் அவர் நாடு திரும்பியதன் பின்னர் கூடி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று அவர் தனதுரையில் தெரிவித்திருந்தார். இதற்கான  புரிந்துணர்வு உடன்படிக்கையில் 12 கட்சிகள் கைச்சாத்திடவிருந்தன என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சமசமாஜ கட்சி, மவ்பிம ஜனதா கட்சி, றுஹுனு ஜனதா கட்சி, எக்சத் ஜனதா பெரமுன மற்றும் முஸ்லிம் தமிழ் முன்னணி உட்பட 9 கட்சிகள் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

100 பேர் நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டனர் - மீட்கப்பட்ட மியன்மார் நாட்டவர்கள்

இலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள மியன்மார் நாட்டவர்கள், தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர்வரையில் நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கிழக்குக் கரையிலிருந்து சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டனர். இவர்களுடன் குறித்த படகில் பயணித்த 98 பேர் உணவு, குடிநீர் இன்றி நடுக்கடலிலேயே உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் கடலில் வீசப்பட்டுவிட்டதாக உயிர்தப்பியமியன்மார் நாட்டவர்கள் தெரிவித்துள்ளதாக அவர்களை சந்தித்து கலந்துரையாடிய பௌத்த பிக்கு ஒருவர் பிபி.சியிடம்தெரிவித்துள்ளார். காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட 32 பேரும் அவர்களின் உடல்நிலை காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் அரசுக்கு எதிராக அரிதான ஆர்ப்பாட்டம்

வெளிநாட்டினரை அனுமதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக சிங்கப்பூரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூர் அரசின் கொள்கை அறிக்கையில் 2030 இல் சிங்கப்பூர் மக்கள் தொகை 69 இலட்சமாக அதிகரிக்கும் என்றும் அதில் வெளிநாட்டினர் சுமார் பாதிப்பேராக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளின் அதிகரிப்பால் காணி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்திருப்பதாக உள்நாட்டினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு எதிராக கடந்த சனிக்கிழமை கடும் மழைக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் 4000 க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளதோடு இது சிங்கப்பூரில் இடம்பெற்ற மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ஸ்திரதன்மை கொண்ட சிங்கப்பூரில் இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெறுவது அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.

வீரப்பனின் நண்பர்களின் மரண தண்டனையை நிறுத்த உச்சநீதிமன்று மறுப்பு

வீரப்பனின் நண்பர்கள் நால்வரின் தூக்குத் தண்டனையை நிறுத்த உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து இன்று அவர்களைத் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்கு பாலாறு வனப் பகுதி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நால்வரும் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நிராகரித்தார். இதையடுத்து கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கசாப், அப்சல் குரு ஆகியோரைப் போல இவர்களையும் ரகசியமாக தூக்கில் போட்டு செய்தியை மட்டும் வெளியில் விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து நால்வரையும் காப்பாற்ற அவர்களது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மாசி 17, 2013

வெளி வந்து விட்டது கண்ணோட்டம் 65....!

அதிகாரப் பகிர்வு ஏன்?

இந்தக் காலத்தில் இன அடிப்படையிலான அதிகாரப்பரவலாக்கல் தேவையில்லை என்பது யதார்த்தத்திற்கு புறம்பானதும் சமகால வாழ்வியலுக்கு எதிரானதுமாகும் அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்றக் குழு செயற்படுவதற்கான சூழல் சாத்தியமானால் அதிகாரப்பரவலாக்கல், இன சமூகங்களிடையே நல்லுறவு இவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். இன- மனித உரிமைப் பிரச்சனைகள் தொடர்பான சர்வதேசத்தின் அக்கறைகள் உதாசீனப்படுத்தப்பட முடியாதவை நவீன அரசியலில் மக்கள் பங்கு பற்றுதல் என்பது முன் எப்போதையும் விட முக்கியமான விடயமாகும் டூவிட்டர், பேஸ்புக், கூகிள் சக என வெகுஜனங்கள் பங்கு பற்றக் கூடிய வலைத் தளங்கள் வந்து விட்டன. ஓவ்வொரு விடயத்திலும் வெகுஜனங்களின் கருத்துக் கணிப்பு என்பது இன்று சாதாரண விடயமாகி வருகிறது. (மேலும்.....)

வவுனியா நலன்புரி முகாமில்

திருமண நிகழ்வொன்றில் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’

வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்தபோது இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டது. சுப்பிரமணியம் சிவகாமி என்னும் சொந்த பெயர் கொண்ட தமிழினி கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர். 1991ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைந்துகொண்டார். 27.05.2009 அன்று வவுனியா நலன்புரி முகாமில் கைது செய்யப்பட்ட தமிழினி கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு கடுமையான விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமய வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். 26.06.2012 அன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு புனர்வாழ்வு பெற்று வருகிறார். ஒருவருட காலத்திற்கான புனர்வாழ்வுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.(நன்றி: பூந்தளிர்)

அமரிக்க நாணயம் சேடமிழுக்கிறது

உலகத்தின் நாணயம் வழங்கும் தொகையில் அமரிக்க நாணயத்தின் அளவு தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்று உலகின் நாணயச் சந்தையில் ஆறு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான பணத்தொகை புழக்கத்திலுள்ளது. அதன் 62 வீதத்தை இன்றும் அமரிக்க டொலர்களே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. அமரிக்க டொலர்களின் தொலை 3.2 ரில்லியன் ஆகும். இருந்த போதும் அமரிக்க டொலர் பதினைந்து வருட தொடர் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஜப்பானிய யென், சீன யுவான், சுவிஸ் பிராங் ஆகிய நாணயங்கள் சந்ததையை ஆகிரமித்துவரும் அதே வேளை வேறு நாணயங்களும் சந்தையில் அமரிக்க நாணயத்தை நிரப்பிவருவதாக ஐ.எம்.எப் தெரிவிக்கின்றது. அமரிக்க மக்களின் பெரும்பன்மையினர் நம்பவில்லை என்றாலும் டொலர் உலகத்திலிருந்து அகற்றப்படும் நிலை உருவாகிவருவதை நிறுத்தமுடியாது என்று அமரிக்க சந்தை ஆய்வாளர் டிக் போவி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஒரு ரில்லியன் டொலருக்கு மேல் அதிகரிக்கும் கடன் நாடான அமரிக்காவின் நாணயம் இன்னும் உலக நாணயமாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார். கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பெரி எச்சன்கிரீன் கூறுகையில் டொலர் இன்று பாதுகாப்பான நாணயமாகமுதலீட்டாளர்கள் கருதவில்லை என்கிறார். பெரும்பாலான பொருளியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி 2015, 2016 ஆம் ஆண்டுகளில் டொலரின் ஆதிக்கம் முற்றாக வீழ்சியடைய ஆரம்பிக்கும் என்கிறார்.

லங்கா சமசமாஜக் கட்சியின் அலுவலகம் யாழில் திறப்பு


லங்கா சமசமாஜக் கட்சியின் புதிய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.கண்டிவீதியிலேயே இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பத்மநாபா ஈபிஆர்எல்எவ் செயலாளர் தி. சிறீதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

'தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாமைக்கு தனிச்சிங்கள சட்டமும் காரணம்'

இலங்கையில் வாழும் பிரதான இரண்டு சமூகங்களுக்கிடையிலும் தேசிய ஒருமைப்பாடை யுத்தம் முடிந்த பின்னரும் ஏற்படுத்த முடியாமைக்கு நாட்டில் உள்ள தனிச்சிங்கள சட்டமும் காரணம். இதனால் அரசியல் யாப்பபை மாற்றியமைத்து தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்க சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்று சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். (மேலும்.....)

வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதிகாரத்தை த.தே.கூட்டமைப்பே கைப்பற்றும் - ரணில்

வட மாகாண சபைக்கான பொதுத் தேர்தலை வடப் பகுதியில் வாழும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்துமாயின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்­பா­ணத்­தி­லு­ள்ள விருந்­தினர் விடு­தி­யொன்றில் பொது எதி­ர­ணி­யி­­னர் ஏற்­பா­டு செய்த ஊட­க­வி­யலாளர் சந்­திப்­பி­ல் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே­யே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அங்கு அவர் உரை­யாற்­று­கை­யில், வட மாகாண மக்களின் வட மாகாண சபைக்கான தேர்தல் விருப்பத்தை கருத்தில் கொண்டு தேர்தலை உடன் நடத்த வேண்டும். இதன் மூலம் மக்களின் பிரதிநிதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் போட்டியிடும். எமக்கும் ஒரு சில இடங்கள் கிடைக்கலாம் என்றார்.

துப்பாக்கி சூட்டில் சண்டேலீடர் ஊடகவியலாளர் காயம்; உடன் விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாராஸ் செளக்கத் அலி இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணைளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாராஸ் செளக்கத் அலி நேற்றுமுன்தினம் இரவு கல்கிஸ்சை ஹோட்டல் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருக்கும்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இனந்தெரியாத மூவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றிருப் பதாக பொலிஸார் தெரிவித்துள் ளனர். கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்கான செளக்கத் அலி, களுபோவில வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்க ப்பட்ட இவருக்கு சத்திரசிகிச்சை மேற் கொள்ளப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

அதிகரித்துவரும் ஆசிட் வீச்சு

(பி.சுகந்தி)

தில்லி மாணவியின் மரண அதிர்ச்சி அடங்குவதற்குள் ஆசிட் வீச்சால் பாதிக் கப்பட்ட வினோதினியின் மரணம் நம்மை யெல்லாம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி யிருக்கிறது. தன் காதலில் வெற்றிபெற முடியாத இளைஞர்கள், இளம் பெண் களை ஆசிட் வீசியும், கொலை செய்தும் தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளும் கொ டூரம் தமிழகத்தில் அதிகரிக்கத் துவங்கி யுள்ளது. திராவகம் பெண்களுக்கெதிரான ஆயுதங்களில் ஒன்றாக மாறியிருப்பது, வருத்தமளிக்கிறது. 23 வயது வினோதினி சென்னையில் தனியார் துறையில் சாஃப்ட்வேர் இன்ஜி னியராக பணிபுரிபவர். குடும்ப நண்ப னாக வீட்டுக்கு வந்து செல்லும் சுரேஷின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால், கடந்த நவம்பர் 14ம் தேதி காரைக்கால் பஸ் நிறுத்தத்தில் தன் தந்தை அருகில் நின்று கொண்டிருந்தபோதே ஆசிட் வீச்சுக்குள் ளானார். வினோதினியின் அழகிய முகம் சிதைந்து, கேஎம்சி மருத்துவமனையில் நாங்கள் சந்திக்க சென்றபோது உடலில் ஒரு பாகம்கூட இல்லாமல் பேண்டேஜ் துணியால் சுற்றப்பட்டிருந்தார். வாய் மட்டும் திறந்திருந்தது. (மேலும்.....)

மாசி 16, 2013

மறு பக்கம்

பறக்கத்தயாராகும் ஜெட் விமானம் போல்  யாழ்ப்பாணம்.

(சுகு-ஸ்ரீதரன்)

வேகமாக நிகழ்ந்து வரும் பிரமாண்ட சாலை அமைப்பு பணிகள், வடக்கு-தெற்கு புகையிரதப்பாதை ,விடமைப்புத் திட்டங்கள் ,சேவைத்துறைகளில்; சுகாதாரம்- கல்வி- மின்சாரம் நிகழும் மாற்றங்கள் மறுநிர்மணங்களுடன் சேர்ந்து மக்களுடைய வாழ்க்கை முறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எமது மக்களில் ஒரு பகுதியினர் கடின உழைப்பாளிகள் என்பதில் ஐயமில்லை. அந்த கடின உழைப்பு கலாச்சாரம் இன்றும் தக்கவைக்கப்படிருக்கிறது. விசாலமான சாலைகளுடன்  சேர்த்துப்பார்த்தால் யாழ்ப்பாணத்தின் 6 முக்கிய வீதிகளும் தொழில் மயமாகி வருகின்றன. வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகள் வர்த்தக அல்லது தொழிலகங்களாக மாறி வருகின்றன. உள்ளக சிறுவீதிகளும் களை கட்டுகின்றன. (மேலும்...)

உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்றுமாறு கோரி வடக்கில் உண்ணாவிரதப் போராட்டம்

வலி. வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்றுமாறும் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் வீடுகளை இராணுவத்தினர் உடைப்பதை நிறுத்துமாறும் இடம் பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற அனுமதிக்கக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எற்பாட்டில் உண்ணாவிரதப்போராட்டம் இன்று காலை 8.45 மணியளவில் யாழ். தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இடம்பெறுகின்றது. இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, இ.சரவணபவன், எஸ்.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த மனோகணேசன், விக்கிரமபாகு கருணரத்ன, பாஸ்கரா, முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன் உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், யாழ். மாவட்ட பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.

யாழில் எதிர்க்கட்சித் தலைவர் உரையின் பின்னர் தாக்குதல்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இன்று காலை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் அவ்விடத்தை விட்டு சென்றதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் உதயன் பத்திரிகையின் செய்தியாளரும் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது கமெராவையும் இனந்தெரியாத நபர்கள் பறித்துச்சென்றுள்ளனர். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்கினர்  - சரவணபவன் எம்.பி.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது தாக்குதல் நடத்திய நபர்கள் இராணுப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் அங்கு வந்த மூன்று பேர் 'எல்லாம் முடிஞ்சது போ.. போ" எனக் கூறிய வண்ணம் வந்தனர். எதிர்ப்பாராத இச்சம்பவத்தினால் நாமும் பொதுமக்களும் அதிர்ச்சிக்கு உள்ளானோம். பொதுமக்களை விரட்டத் தொடங்கிய அவர்கள் சிலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் பத்திரிகையாளர்களின் கமெராக்களையும் உடைத்தனர். அவர்களைக் கைது செய்யுமாறு அருகில் இருந்த பொலிஸாரிடம் கோரினேன். எனினும் அவர்கள் உடனடியாகத் தப்பிச் சென்று வாகனமொன்றில் ஏறிச் சென்றுவிட்டனர். இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள். ஜனநாயக ரீதியிலான போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் என்பதை அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

வானில் தீப்பிழம்பு! பாரிய வெடிப்பு சத்தம்!

ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 950 பேர் காயம்

உலகம் அழியப்போவதாக அச்சம்; மக்கள் அல்லோலகல்லோலம்

ரஷ்யாவின் ஊரல்ஸ் பிராந்திய மலைப் பகுதியில் விண் கற்கள் விழுந்துள்ளன. நேற்று காலை விண் கற்கள் விழுந்ததால் சுமார் 950 பேர் வரையில் காயம டைந்துள்ளனர். விண்கற்கள் பூமியை நோக்கி வந்ததால் ஏற்பட்ட அதிர்வுகளால் பாரிய வெடிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. கட்டடங்களின் கண்ணாடிகள் நொறுங்கியதாலேயே சுமார் 950 பேரும் காயம டைந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. வெள்ளிக் கிழமை காலை முதல் அப் பிரதேசமெங்கும் மிகவும் அசாதாரண சூழ்நிலையே காணப்பட்டது. தம்மைச்சூழ என்ன நடக்கிற தென்பதை புரிந்துகொள்ள முடியாதவர்களாக அப்பகுதி மக்கள் தவித்தனர். அனைவரும் தமக்கு தெரிந்த வீட்டுக்கு வீடு ஓடி மக்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்தக் கிராமம் ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலிருந்து 1500 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. அக்கிராமவாசி ஒருவர் கூறுகையில், “வானத்தில் திடீரென பாரிய ஒளிப்பிழம்பு ஒன்று தோன்றுவதை நான் அவதானித்தேன். அது என்னவென்று பார்ப்பதற்காக வெளியே ஓடிக்சென்ற போது பாரிய இடிச் சத்தம் ஒன்று கேட்டது” என இந்நபர் தெரிவித்தார்.

எல்லை தாண்டிய பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொலை!

காஷ்மீரில் ஏகே 47 ஆயுதத்துடன் எல்லையைத் தாண்டி வந்த பாகிஸ்தான் ராணுவ வீரரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இதுதொடர்பாக, இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெக்தீப் தாஹியா கூறுகையில், "நவ்ஷேரா பகுதியில் அடையாளம் தெரியாத நபர், நமது படையினர் மீது தாக்குதல் நடத்தினார். இதில் இருவர் காயம் அடைந்தனர். நமது படையினர் திருப்பிச் சுட்டதில் அந்த நபர் கொல்லப்பட்டார்" என்றார். இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர், பாகிஸ்தான் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது. அவரது உடலை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் இந்திய வீரரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற இன்னமும் தனை த்ராமல் இருக்கும் பாகிஸ்தானை போன்று நாங்கள் நடந்துகொள்ளமாட்டோம் என்று இந்தியா தரப்பில் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சுட்டுக் கொல்லப்பட்ட தங்களது ராணுவ வீரர் தவறுதலாக எல்லையைத் தாண்டிவிட்டதாக பாகிஸ்தான் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. 

மாசி 15, 2013

'ஜனநாயகம். இன நல்லுறவு, சமூகப்பாதுகாப்பு  (பகுதி 2)

(சுகு-ஸ்ரீதரன்)

பெரும்பான்மை இன சமூக மக்கள் இன்றைய வாழ்க்கைச் செலவு உயர்வினால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். றோட்டுக்களும் தெருக்களும் அலங்காரமாக இருக்கும் அளவிற்கு மக்களுடைய வாழ்க்கை அலங்காரமாக இல்லை. அது அலங்கோலமாக இருக்கிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் தொழிலாளர்கள் ,அறிவு ஜீவிகள் மாணவர்கள் அமைதியிழந்து காணப்படுகிறார்கள்.இது இலங்கையின் வௌ;வேறு இன சமூகங்களில் வௌ;வேறு அளவுகளில் வௌ;வேறு இயல்புகளுடன் காணப்படுகின்றன. சிறுபான்மைச்  சமூகங்களின் மீது அது இனவாத மேலாண்மையுடன் காணப்படுகிறது. அரச மட்டத்திலான வன்முறை சமூக மட்டத்திலும் பரவிக் காணப்படுகின்றன. (மேலும்...)

வடக்கில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளால் பயன்படுத்தாத நிதி 569 மில்லியன் ரூபா திறைசேரி திரும்பியது

வட மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் நிர்வாகத்தின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களால் பயன்படுத்தப்படாத 569 மில்லியன் ரூபா அபிவிருத்தி நிதி திறைசேரிக்கு திரும்பி வந்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்றுத் தெரிவித்தார். வடக்கிலுள்ள வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இந்நிதியை அவர்கள் பயன்படுத்தாததாலேயே அவை திறை சேரிக்குத் திரும்பி வந்திருப்பதாகவும் அவர் கூறினார். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி குறிக்கப்பட்ட காலப் பகுதிக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில் அந்நிதி தானாகவே திறைசேரிக்குத் திரும்பி விடும் என்றும் அவர் குறிப்பிட்டார். எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை அரசாங்கம் மீளப் பெறுதில்லை. மாறாக ஒதுக்கப்படும் நிதி உரிய காலப் பகுதியில் பயன்படுத்தப்படாவிட்டால் அது தானாகவே திறைசேரிக்குத் திரும்புவது வழமை. அதுவே சட்ட ஏற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு அழைப்பாணை

குற்றப்பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையை அதிகாரமற்றதாக்க உத்தரவிடப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முதலாவது பிரதிவாதியான ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு அழைப்பாணை விடுப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவழக்கில் சம்பந்தப்பட்ட ஏனையோருக்கும் அழைப்பாணை விடுப்பதற்கு மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய அந்த அழைப்பாணையை உச்ச நீதிமன்ற பதிவாளரின் ஊடாக பிரதிவாதிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் அனுப்புவதாக மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நைஜல் ஹெஜ் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்தார். அதற்கமைய உரிய விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக மனு மீதான விசாரணையை மார்ச் மாதம் 5 ஆம் திகதி மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களிக்கும்

ஜெனீவாவில் இவ்வாண்டு நடைபெற வுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங் கைக்கு எதிராக கொண்டு வரப்படும் மனித உரிமை தொடர் பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது இந்தியா இலங்கையை ஆதரிக்குமென்று நாம் திடமாக நம்புவதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்தார். உலகில் உள்ள பெரும்பாலான வளர்முக நாடுகளைவிட இலங்கை மனித உரிமையை பேணிப் பாதுகாப்பதில் முன்னிலையில் இருக்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்கட்டினார். இவற்றின் அடிப்படையிலேயே இந்தியா ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்படும் பிரேரணையின் போது இலங்கையை ஆதரித்து வாக்களிக்கும் என்று நாம் திடமாக நம்புவதாகவும் அமைச்சர் கூறினார். இந்தியா எங்களுடைய நெருங்கிய அயல் நாடு மட்டுமன்றி நீண்டகால நட்பு நாடாகும். இந்தியாவை எப்போதும் இலங்கைக்கு உதவி செய்த நண்பனாகவே பார்க்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார். இந்தியாவும் இலங்கையும் நீண்டகாலம் பரஸ்பர வர்த்தக தொடர்புகளை கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளுக் கிடையில் 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இலங்கையும் இந்தியாவும் ஒன்றிணைந்து பல்வேறு முதலீடுகளை இரு நாடுகளிலும் செய்திருக்கின்றன. நட்பு நாடுகளான இலங்கையும் இந்தியாவும் என்றென்றும் பரஸ்பர உதவி செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளன

நவனீதம்பிள்ளை எங்களை நிம்மதியாக வாழவிட வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பயங்கரவாதிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களும் மரணித்தது சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் தான் தாம் இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பித்ததாக நவனீதம்பிள்ளை கூறுகிறார்.(மேலும்...)

சீக்கிய குழந்தைகள் தலைப்பாகை அணிய தடை

இந்திய அரசு தலையிட வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை

பிரான்சில் சீக்கியக் குழந்தைகள் தலைப்பாகை அணித் தடை விதிக்கப்ப ட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டுகோள் விடுக்கப்பட்டு ள்ளது. பிரான்ஸ் அரசு பள்ளிக் குழந்தைகள் தலைப்பாகை அணிந்துவர தடைவிதித்தது. இதனால் அங்கு சீக்கிய மதத்தை சேர்ந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள சீக்கிய அமைப்பு, இது எங்களுடைய மத உணர்வுகளை பாதிப்பதோடு மட்டுமின்றி, எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் தடையை ஏற்படுத்தியுள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியா வருகிற பிரெஞ்சு அதிபர் பிராங்காய்ஸ் ஹொலாண்டாவிடம், அந்த தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டியுள்ளனர். மேலும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இப்பிரச்சினை குறித்து பிரான்ஸ் அதிபரிடம் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கொத்து ரொட்டி தயாரிக்கும் சத்தம் உங்களுக்கு தொல்லையா?

இலங்கை, மேல்மாகாணத்தில் கொத்து ரொட்டி தயாரிக்கும்போது ஏற்படும் சத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு மாகாண சுகாதர அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் பொதுமக்களை சங்கடத்துக்கு உள்ளாக்கும் விதத்தில் சத்தமாக கொத்து ரொட்டி தயாரிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வா வீரகேசரி இணையத்தளத்துக்குத் தகவல் தருகையில், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அல்லது சங்கடத்துக்கு உள்ளாக்கும் வகையிலான சத்தங்களை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொத்து ரொட்டி தயாரிக்கும் போது ஏற்படும் சத்தம் குறித்தும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கொத்துரொட்டியை தடை செய்தல் என்று இதற்கு அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது. மேல்மாகாணத்தை அழகு படுத்தி சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். அதன் அடிப்படையில் அநாவசியமாக ஏற்படுத்தப்படும் சத்தங்களையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி ஊர்வலம்

அனர்த்த முகாமைத்துவ பெண்கள் அமைப்பு, கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகியன இணைந்து இன்று மட்டக்களப்பு நகரில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வூர்வலம் மட்டக்களப்பு நகரச் சுற்று வட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு-திருகோணமலை வீதி இணையும் சுற்றுவட்டம் வரைக்கும் சென்று முடிவுற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து பெண்களுக்கான கௌரவமான வாழ்க்கையை இந்நாட்டிலே உருவாக்குவோம், வெளிநாட்டுப் பணிப்பெண்களின் தொழில் உரிமை வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும், வதைத்தலைத் தொலைப்போம், வாழ்க்கையை மீட்போம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியாக சென்றனர்.

TNA following beaten track of LTTEDouglas

Tamil National Alliance (TNA) leaders are following in the footsteps of the LTTE in spreading falsehoods about the country. They travel from India to Geneva to concoct stories against the country, Traditional Industries and Small Enterprise Development Minister Douglas Devananda said. The minister said LTTE leaders were also in the habit of traveling in many countries and cities including Oslo and propagating falsehoods. “They preferred to tarnish the country’s image through fabricated accounts than solving their problems within the country,” Devananda said. (more...)

வடகொரிய அணு குண்டு சோதனை: கதிரியக்க ஆதரமில்லை

வட கொரியாவின் அணு குண்டு சோதனையின் கதிரியக்க ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தென்கொரிய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். வட கொரியாவின் அணு குண்டு சோதனை தொடர்பான விபரங்களை பெற எட்டு மாதிரிகளைப் பெற்று தென் கொரிய அணு அவதான மற்றும் பாதுகாப்பு ஆணைக்குழு ஆய்வு நடத்தியுள்ளது. இதில் கதிரியக்க மூலக்கூறுகள் சேர்ந்த ஓரிடத்தான்கள் மற்றும் ஷினொன் வாயு துகளை கண்டறிய நிபுணர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதன் மூலம் வட கொரியா புரோத்தன் அல்லது யுரேனியத்தைக் கொண்டு அணு குண்டு சோதனை நடத்திய என்பதை தென் கொரியா உறுதி செய்ய முயற்சித்துள்ளது. எனினும் இந்த ஆய்வில் எந்த கதிரியக்க ஆதாரத்தையும் தென் கொரியா கண்டறியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது தென் கொரியாவில் இயங்கும் 122 ஆளில்லா கதிரியக்க பதிவு முறையின் ஊடாகவே மேற்படி மாதிரிகள் பெற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. எனினும் சீனா தனது வட கொரிய எல்லையில் இருக்கு கதிரியக்க பதிவு கருவியில் மாற்றம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

திரிபுரா தேர்தல்

93 சதவீத வாக்குப்பதிவு !

திரிபுரா சட்டசபைக்கு இன்று நடைபெற்ற தேர்தலில்,  93  சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. திரிபுராவில் இடதுசாரி கூட்டணி ஆட்சி, தொடர்ந்து 20 ஆண்டுகளாக நீடிக்கும்  நிலையில், முதலமைச்சராக மாணிக் சர்க்கார் பதவி வகித்து வருகிறார். இவரது ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி சட்டசபை தேர்தலுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டு, இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில்,  இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி  நிலவியது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில், இடதுசாரி கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்டு கட்சி 56 தொகுதிகளிலும், புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி 2 தொகுதிகளிலும்,  இந்திய கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக் ஆகியவை தலா ஒரு தொகுதியிலும்  போட்டியிட்டன. காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் 48 தொகுதிகளிலும்,  திரிபுரா பூர்வகுடிகள் தேசியவாத கட்சி 11 தொகுதிகளிலும், திரிபுரா தேசிய மாநாட்டு  கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. முதலமைச்சர் மாணிக் சர்க்கார், திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர் சுதிப் ராய் பர்மன்  உள்பட 249 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாசி 14, 2013

ஜனநாயகம், இன நல்லுறவு, சமூகப்பாதுகாப்பு  (பகுதி 1)

 சுகு-ஸ்ரீதரன்

இனரீதியாக வேறுவேறு நிர்வாகங்கள் சாத்தியமில்லை . இன ரீதியான அதிகாரப்பரவலாக்கல் சாத்தியமில்லை. அது பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற சாரப்பட இலங்கையின் ஜனாதிபதி திருகோணமலை சுதந்திர தின உரையில் சொல்லியிருந்தார். தமிழ்மக்களுக்கு, இந்தியாவுக்கு, உலகத்துக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து குறிப்பிடத்தகுந்த பின்வாங்கலாக அது அமைகிறது. இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி 13 வது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு பாகமாகி கால்நூற்றாண்டு கடந்த நிலையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருப்பது பேரினவாத மேலாண்மை ஆட்சியே இலங்கைக்கு பொருந்தும் என்று தெரிவிப்பது போல் உள்ளது.(மேலும்....)

காதலர் தினம் இளவட்டங்களை ஏமாற்றும் ஒரு மாயை

காதலர் தினம் என்ற பெயரில் இன்று புனிதமான காதல் என்ற மனித வாழ்க்கையில் இளம்பருவத்தில் ஏற்படும் இன்பகரமான அனுப வத்தை கொச்சைப்படுத்தும் ஒரு தினம் கொண்டா டப்படுகிறது. காதலின் புனிதத்துவத்தை பாது காப்பதற்காக காதலர் தினம் அனுஷ் டிக்கப்படவில்லை. காதலர் தினம் என்ற பெயரில் வர்த்தகத்தை பிரபல் யப்படுத்துவதற்காகவே இந்த தினம் உலகெங்கிலும் இன்று நினைவுகூரப் படுகிறது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இன்று களியாட்ட விழாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அங்கு மதுவுக்கும், மாதுக்கும் இடையில் இனங் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு கொண்டாட்டங்கள் மனிதனின் சிந்தனை சக்தியை சீர்குலைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையிலான பந்த பாசத்தையே நாம் காதல் என்று அன்று அழைத்தோம். இன்று ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கு பதிலாக ஒருத்திக்கு பலர் ஒருவனுக்கு எத்தனையோ பேர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு இந்த காதலர் தினம் காதலின் புனிதத்துவத்தை சீர்குலைத்துள்ளது. காதலர் தினம் விடலைப் பருவத்தில் உள்ள ஆண், பெண்களை நல்வழிப்படுத்துவதற்கு பதில் அவர்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு ஒரு அடிதளமாக அமைந்துள்ளது. காதலர் தினம் என்ற இந்த மாயையில் சிக்குண்டுள்ள நம்நாட்டு இளைஞர்களையும், யுவதிகளையும் சரியான அறிவூட்டல் மூலமே காப்பாற்ற வேண்டும்.

தேசிய மொழிக் கொள்கையை பொலிஸார் மீறுகின்றனர் - வாசுதேவ

தேசிய மொழிக் கொள்கையினை பொலிஸ் திணைக்களம் மீறியுள்ளது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பு நகரினுள் நுழையும் அனைத்து சிறியரக வாகனங்களும் தற்போது கணக்கெடுப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.  இதற்காக வழங்கப்பட்ட விண்ணப்ப படிவம் சிங்கள மொழியில் மாத்திரமுள்ளது. இது தேசிய மொழிக் கொள்கையினை தெளிவாக மீறும் செயற்பாடானும். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் வேண்டியுள்ளேன் என அமைச்சர் குறிப்பிட்டார். "இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் பதிலை எதிர்பார்த்துள்ளேன். தேசிய மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபரிடம் பூரண ஒத்துழைப்பு கிடைக்கின்றது. எனினும் இது அவருக்கு தெரியாமல் இடம்பெற்றிருக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.

சிறிதரன் எம்.பி. நான்காம் மாடிக்கு அழைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீண்டும் கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த விசாரணைக்கு சமூகமளிக்குமாறு இன்று அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அலுவலகத்தில் அரசு மீட்டதாக தெரிவித்த வெடிபொருள் மற்றும் இறுவட்டு தொடர்பிலேயே மேலதிக விசாரணைக்கு சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார். முன்னதாக எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்ககோரும் அழைப்பாணைக் கடிதம் சிங்களமொழி மூலமே தமக்கு அனுப்பப்பட்டிருந்ததாக சிறிதரன் தெரிவித்தார். எனினும் அன்றைய தினம் அரசின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடத்தப்படவுள்ள கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்த கொள்ள வேண்டியிருப்பதாகவும் அத்துடன் சிங்களத்தில் எழுதப்பட்ட அழைப்பாணையில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பில் தம்மால் வாசித்து அறிய முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தனி தமிழ் மூலம் எழுதப்பட்ட அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிறிதரனது உதவியாளர் பொன்காந்தன் மற்றும் மாவட்ட கூட்டமைப்பு அமைப்பாளர் வேழமாலிகிதன் ஆகிய இருவரும் தற்போது 4ஆம் மாடியிலேயே தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக நம்பப்படுகின்றது.

கூட்டமைப்பு தனது முடிவை உரிய முறையில் அறிவிக்கவில்லை - அப்பாத்துரை

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற யாழ். அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முடிவு எனக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை. அதனால்தான் நான் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டேன்' என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். அத்துடன் யாழ் வைத்தியசாலையின் கட்டிடத்திறப்பு விழாவுக்கு தனக்கு பிரத்தியேக அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

Midway is 4-minute film,
worth more than a million words

See how our present lifestyle affects all beings on this earth

 

குதிரை இறைச்சி உட்கொண்ட பிரித்தானிய மக்கள் : பல்தேசிய சில்லரை வணிகத்தின் கொலை வெறி

பல்தேசிய வியாபார வெறிக்குப் பலியான பிரித்தானிய அப்பாவி மக்கள் கடந்த ஆறு மாதங்களாக குதிரை இறைச்சி உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். உறைந்த உணவு தயாரிக்கும் -frozen food-நிறுவனம் ஒன்றின் ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து டெஸ்கோ -TESCO- என்ற பல்தேசிய சில்லறை விற்பனை நிலையம் பிரித்தானியா முழுவதும் உள்ள தனது கிளைகளில் குதிரை இறைச்சி விற்பனை செய்து வந்ததாக கண்டறியப்பட்டது.(மேலும்....)

Venue confirmed, Queen would be coming

Commonwealth Secretary-General, Kamalesh Sharma, who visited Parliament yesterday, assured Speaker Chamal Rajapaksa, the Queen and other Heads of the Member States of the Commonwealth would be attending the Commonwealth Heads of Government Meeting (CHOGM), scheduled to be held in Colombo later this year, Deputy Speaker of the House, Chandima Weerakkody, said. He said the venue had been confirmed and the Queen would be coming. On Monday, the Commonwealth Secretariat in London issued a statement, which said Sharma had not made any public statement confirming Colombo as the venue. "I specifically asked him about the attendance of the Canadians. He (Sharma) said the Canadians have already booked rooms for the CHOGM," the Deputy Speaker said.

He also said Sharma expressed his support to the amendments mooted by Speaker Rajapaksa to 'strengthen parliamentary democracy' in Sri Lanka."Sharma also said he believed that all the people of the Commonwealth should enjoy freedom of movement within the Commonwealth. He said he would raise those matters in the future," the Deputy Speaker said.

5000 ஆண்டுகளுக்கு முந்தை கோவில் பெருவில் கண்டுபிடிப்பு

தென்னமெரிக்க நாடான பெருவில், எல் பராய்சோ என்னுமிடத்தில் 5000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். செவ்வக வடிவில் நுழைவு வாயிலை கொண்டுள்ள இந்த கோவிலின் மையத்தில் யாகம் வளர்ப்பதற்கான இடம் இருப்பதையும் கண்டனர். இங்கு சுமார் 8 மீற்றர் அளவிலான பிரமிட் ஒன்றும் உள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் கிறிஸ்து பிறப்பிற்கு 3000 வருடங்களுக்கு முன்பே நாம் நினைத்ததை காட்டிலும், மக்கள் மிகவும் நாகரிகமாகவும் நெருக்கமாகவும் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது. ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் அப்போது வளமுடன் வாழ்ந்த முக்கிய இடங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. இது அகழ்வாராய்ச்சியாளர் மற்றும் புதையல் வேட்டையாளர்களின் ஒரு உறுத்தலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாசி 13,2013

உலக நாடுகளின் தண்டனையில் இருந்து இலங்கை தப்ப முடியாது - கருணாநிதி

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்த 367 இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள கருணாநிதி,  உலக நாடுகளின் தண்டனையில்  இருந்து இலங்கை தப்பி விட முடியாது என்பதே உலகெங்கிலும் வாழும் தமிழர்களின்  நம்பிக்கையாகும் என்றும்  கூறியுள்ளார். (மேலும்....)

இரு பல்கலைக்கழக மாணவர்களையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் நாளை (இன்று) விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார். தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு நேற்று மாணவர்கள் இருவரதும் தாய் மார் நேரில் ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக அவர் அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜனமேஜயன், தர்ஹானந்தன் ஆகிய பல்கலை மாணவர்களின் தாய்மார் களே நேற்று இந்த வேண்டுகோளை ஜனாதிபதியிடம் நேரடியாக விடுத் தனர். இதன்போது மேற்படி மாணவர்களை விடுதலை செய்தால் அவர்கள் நற்பிரஜைகளாக உருவாக பராமரிக்க உங்களால் முடியுமா என ஜனாதிபதி அவர்கள் தாய்மாரைக் கேட்டுக் கொண்டார். முடியும் என அவர்கள் பதிலளித்ததையடுத்து நாளையே (இன்று) விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார். (மேலும்....)

வடக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கிய நிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்தத் தவறிவிட்டது

வட மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்த நிதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் தற்போது உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள தவறிய காரணத்தினால் அந்த நிதி திறைசேரிக்கு திரும்பிச் சென்றதாக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். (மேலும்....)

பின்லாடனை சுட்டவர் முதல் முறை பேட்டி

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையின் நேவி சீல்ட் வீரர் முதல் முறையாக ஊடகத்திற்கு பேட்டியளித் துள்ளார். அதில் அவர் ஒசாமா பின்லாடனை சுட்டது பற்றி விபரித்துள்ளார். “அவர் இறந்துவிட்டார். எந்த அசைவும் இல்லை. அவரது நாக்கு வெளியே தள்ளி இருந்தது. அவர் கடைசி மூச்சு விடும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் கடைசி மூச்சை விட்டது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. “அந்த தருணத்தில் அவரது தலையை இலக்கு வைத்து இரு துப்பாக்கி ரவைகளை செலுத்தினேன். அவரது கட்டிலுக்கு முன்னால் விழுந்து துடி துடித்தார். பின்னர் அதே இடத்தில் மீண்டும் சுட்டேன்” என்றும் அந்த வீரர் தெரிவித்தார். இதில் ஒசாமா பின்லாடன் தங்கியிருந்த அபோதாபாத் கட்டடத்தில் இருண்ட அறையில் இருளில் தென்படும் கண்ணாடி மூலமே ஒசாமா பின்லாடனை அடையாளம் கண்டதாக நேவி சீல்ட் வீரர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பின்லாடன் சத்தம் எழுப்பாமலேயே அறையிலிருந்ததாகவும் அவருடன் அவரது மனைவி மற்றும் குழந்தையும் அந்த அறையில் இருந்ததாகவும் அந்த வீரர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். “துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் அவரது தலை கொடூரமாக இருந்தது.

வடகொரியாவிற்கு கண்டனம்! பாகிஸ்தானுக்கு கண்டனம் இல்லை!!

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா நிலத்துக்கு அடியில் நேற்று வெற்றிகரமாக மூன்றாவது அணு குண்டு சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின் நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு ஐ.நா. பாதுகாப்புச் சபை உடன் கூடியது. வட கொரியாவின் அணு ஆய்வு தளத்தில் நேற்றுக்காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது அவதானிக்கப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் அணு குண்டு சோதனை மேற்கொண்டதை வடகொரியா உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து வட கொரியாவின் செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைப்பு விடுத்ததோடு வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் கண்டனத்தை வெளியிட் டுள்ளது. எனினும் செய்மதியை நிறுவும் தமது அமைதியான திட்டத்திற்கும் தமது இறையாண்மை உரிமையையும் மறுக்கும் அமெரிக்காவின் ‘மூர்க்கத்தனமான’ எதிர்ப்பை இலக்குவைத்தே இந்த அணு குண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரச ஊடகம் அறிவித்துள்ளது. இதேவேளை அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ‘ஹாப் 9’ ஏவுக ணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாசி 12,2013

சரவணபவன் எம்.பி.க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும்

உதயன் பத்திரிகை நிறுவனத்தின் இணைப்பாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவனனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இன்று தெரிவித்தார். 'யாழ். தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதலுக்கு ஹத்துருசிங்க பொறுப்பேற்ற வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபன் தெரிவித்த கருத்தொன்று உதயன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றங்கள் அனைத்திற்கும் இராணுவத்தின் மீது பழி சுமத்த வேண்டாம். சட்டத்தினையும், ஒழுங்கையும், சீர்குலையாமல் பாதுகாப்பதே எனது கடமை. அவற்றினை தான் நான் செய்து கொண்டிருக்கின்றேன். உங்களுக்கும் குடும்பம் இருக்கின்றது. அவற்றினை சிந்தித்து பத்திரிகையில் செய்திகளை பிரசுரிக்க வேண்டும். உண்மைகளை மட்டும் பத்திரிகையில் பிரசுரியுங்கள். அவற்றினை விட்டு தவறான தகவல்களை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாம். யாழ். மாவட்டத்தில் எத்தனையோ பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. எத்தனை பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை வெளியிடுங்கள், சமூகத்தினை மேம்படுத்துவதற்கான செய்திகளை பிரசுரியுங்கள்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை

நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அந்த ஒப்பந்தத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை  தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட 12 கட்சிகள் பொது வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பிய பின்னர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை

'இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்' என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க உறுதியளித்தார். 'யாழ். பல்கலைக் கழகத்தில் தீபமேற்றுவதற்கு தடை இல்லை. ஆனால் இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூறுவதற்காகவே அம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தீபமேற்றினார்கள். அது குற்றம். அதற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது' என்று அவர் கூறினார். கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் இருவர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவர்' யாழ். கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.

ஒன்லைன் வீசா மூலம் 10 மில்லியன் பேர் இலங்கைக்கு வருகை

ஒன்லைன்(online)மூலம் இலங்கை வீசா வழங்கும் (Electronic Travel Authurization) என்றழைக்கப்படுகின்ற ETA முறைமை ஊடாக கடந்த ஆண்டிலே 10 மில்லியன் பேர் இலங்கைக்கு வந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார். இதனூடாக அரசாங்கம் இரண்டு பில்லியன் ரூபா வருமானமாக உழைத்ததாகவும் அவர் மேலும் கூறினார். உலகிலே ETA முறைமையை பயன்படுத்தும் அபிவிருத்தியடைந்த நாடுகள் உட்பட 48 நாடுகளில் இலங்கையானது முதலிடம் பெற்றுள்ளதாகவும், இலங்கை (online) சேவையில் காண ப்படுகின்ற துரித வேகம், வசதித்தன்மை மற்றும் நெகிழ்வுத் தன்மை என்பனவே அதற்கான பிரதான காரணமாகும் என வும் தெரிவித்த அவர், அதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு ‘பியுச்சர் கப்’ விருது கிடைக்கப்பெற்றதாகவும் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டிலே வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்குவதற்கு இச்சேவையில் மேலும் பல வசதிகளை வழங்க உள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் கூறினார். இலங்கையர்களின் வசதி கருதி இரட்டைப் பிரஜாவுரிமை பற்றிய சட்ட ஆவணங்களை தயாரித்து வருவ தாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஆப்கானிலிருந்து அமெ. படையின் வெளியேற்றம் ஆரம்பம்

அமெரிக்கப் படை ஆப்கானில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தரைவழியாக ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ஆப்கானில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளபாடங்கள் பாகிஸ்தான் ஊடாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆப்கானிலிருந்து கப்பலில் கொண்டு செல்வதற்காக 50 கண்டைனர் வண்டிகள் பாகிஸ்தான் ஊடாக கொண்டு செல்லப்பட்டதாக ஆப்கானுக்கான அமெரிக்கப் படையின் பேச்சாளர் மார்கஸ் ஸ்பாட் குறிப்பிட்டார். அமெரிக்க இராணுவ தளபாடங்களை ஆப்கானிலிருந்து வெளியேற்றும் பிரதான தரைவழி மார்க்கமாக பாகிஸ்தான் அமைந்துள்ளது. ஆப்கானில் இருக்கும் வெளிநாட்டுப் படை 2014 ம் ஆண்டு அங்கிருந்து முழுமையாக வெளியேற வுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிலுள்ள அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து 25 கண்டைனர் வண்டிகள் பாகிஸ்தானை வந்தடைந்துள்ளது. இவைகளில் கனரக இராணுவ தளபாடங்கள் இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பு உறுதி செய்துள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் அபாயம்

இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங் களில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ. தொய்பா, ஜெய்ஷ் – இ. முகம்மது ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங் கரவாத இயக்கங்களான லஷ்கர் இ. தொய்பா, ஜெய்ஷ் – இ முகம்மது ஆகிய இயக்கங்களின் தளபதிகள் கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு பாகிஸ் தானின் ராவல்பிண்டியில் நடைபெற்றதாக இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்குவது குறித்து அவர்கள் விவாதித்து இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

மாசி 11,2013

தமிழகக் கதாநாயகர்களும் இலங்கைத் துணை நடிகரும்!

(வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்))

புலிகள் தமது 30 வருடப் போர் வரலாற்றில் பெறுமதி வாய்ந்த தமிழ் தலைவர்கள், அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் உட்பட சுமார் 30,000 ஆயிரம் தமிழ் மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இந்தக் கொலைக் கலாச்சாரத்தைத் தமிழகத் தலைவர்கள் என்றாவது கண்டித்தது உண்டா? புலிகளின் இந்த இழிவான, மனித விரோதச் செயல்களையெல்லாம், ‘வீரதீரச் செயல்கள்’ எனத் தமிழகக் கட்சிகள் புகழ்ந்திருக்கின்றன. இவைதானா இலங்கைத் தமிழர்களுடனான தொப்புள்கொடி உறவு? இல்லைவே இல்லை! எல்லோருக்கும் தெரியும், அன்றும் சரி, இன்றும் சரி, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகப் பிழைப்புவாதக் கட்சிகளும், அவற்றின் கோமாளித் தலைவர்களும் சிந்தும் ‘கிளிசரின் கண்ணீர்’, புலிகளின் சர்வதேசப் பினாமிகள் மாதாமாதம் வழங்கும் பணக் கொடுப்பனவுகளுக்காகத்தான் என்பதை. வேண்டுமானால் புலிப் பினாமிகள் ஒருமாதம் இந்தத் தமிழகப் பிழைப்புவாதிகளுக்குப் பணப் பட்டுவாடாவை நிறுத்திப் பார்க்கட்டும். அதன் பின்னர் தமிழகத்தில் இலங்கைத் தமிழகர்களுக்காக ஒரு நாயாவது குரைக்கிறதா என்பதை! (மேலும்....)

முல்லைத்தீவில் மனதை உருக்கிய பாசமான உபசரிப்பு

“இழக்கவேண்டிய அனைத்தையும் இழந்துவிட்டோம். இனிப்போதும். இவ்வாறான பேரழிவொன்று மீண்டும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் நாம் எமது வாழ்க்கையை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளோம்” எனக் கூறினார் சமூக இணைப்பாளராகச் செயற்படும் கலைச்செல்வி. இந்த அடிப்படையில் புதிய வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர் கடந்த யுத்தகாலத்தில் இல்லாதிருந்த போக்குவரத்து வசதிகள் மற்றும் தடையின்றிய பிரயாணங்கள் மூலம் வாழ்வாதாரத்துக்குப் புதிய பாதையொன்று தோன்றியிருப்பதாகக் கூறினார். குறிப்பாக நாட்டின் எப்பகுதிக்குச் செல்வதற்கும் காணப்படும் போக்குவரத்து வசதியானது இனங்களுக்கிடையில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கலைச்செல்வி சுட்டிக்காட்டினார்.  (மேலும்....)

நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை

‘பேட்ஸ்’ கிருமிநாசினிகளுக்கு பதில் பி.ரி.ஐ. நுண்ணங்கி பக்றீரியா அறிமுகம்

பேட்ஸ் (Bates) உள்ளிட்ட கிருமிநாசினிகள் நுளம்பு ஒழிப்புக்கெனப் பயன்படுத் தப்படுவதை உடனடியாகத் தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பி. ரி. ஐ. பக்றீரியா  நுண் ணுயிரைப் பாவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கு மாறும் அவர் ஆலோ சனை வழங்கியுள்ளார். பயிர்ச் செய்கைகளுக்குத் துணைபுரியும் தேனீக்கள், குளவிகள், வண்ணாத்திப்பூச்சிகள், சிலந்திகள் போன்றவற்றுக்கு ‘பேட்ஸ்’ போன்ற கிருமிநாசினிகள் பாதிப்பு ஏற்படுத்துகின்றபோதிலும் பி.ரி.ஜ. பக்றீரியாக்கள் அவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார். இதேவேளை கொழும்பு மாநகர சபை, தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபை, கொலன்னாவ நகர சபை உள்ளிட்ட பிரதேசங்களில் மாத்திரம் நுளம்பு ஒழிப் புக்காக பி.ரி.ஐ. பக்றீரியாவை ஒரு தடவை விமானம் மூலம் விசிறுவதற்கு 225 மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம் பி.ரி.ஐ. பக்றீரியா சுமார் இருவாரங்கள் அளவில் தான் உயிருடன் காணப்படும் என்றும் அதனால் அதனை மீண்டும் மீண்டும் விமானம் மூலம் விசிற அதிக செலவு ஏற்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருப்பதையும் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் வைத்தியசாலைகள் இன்று திறப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக இன்று கிளிநொச்சி பிரதேசத் திற்கு செல்லவுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று ஆராயவுள்ள அவர் நாளை பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தை முதலில் திறந்து வைக்கவுள்ள அவர், 80 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி வைத்தியசாலை, 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒட்டுசுட்டான் வைத்தியசாலையையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு வழங்கவுள்ளார்.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம்

யாழ். மாவட்டத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் நாளை கையளிப்பு

  • சுன்னாகம் மின் நிலையம் திறப்பு

  • நயினாதீவு இறங்குதுறை அங்குரார்ப்பணம்

  • யாழ் வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் ஜனாதிபதி அவர்கள் யாழ். மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்து பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கவுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை காலை சுன்னாகத்திற்கு செல்லும் ஜனாதிபதி அவர்கள் சுன்னாகத்தில் புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். இதன் மூலம் 204 மெகா வோட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டு நாளை முதல் யாழ். குடா நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நயினை நாகபூசணி அம்பாள் கோயிலுக்கும் நாகவிகாரைக்கும் சென்று சமய வழிபாடுகளில் ஈடுப்பட வுள்ளதுடன், நாக விகாரை பிரதேசத்தில் சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் கடற்படையினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இறங்கு துறையையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இதேவேளை நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வுள்ள ஜனாதிபதி அவர்கள் சுமார் 3000 மில்லியன் ரூபா செலவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதியையும் திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு கையளிக்கவுள்ளார்.

கிராமப்புற பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை 2014ல் முற்றாக தீர்ந்துவிடும்

சமீபத்தில் வெளிவந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் பின் தங்கிய கிராமப் புறங்களில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய பெரும் பாலான மாணவ, மாணவியர் சித்தியடைய தவறியிருக்கிறார்கள் என்று பரீட்சைகள் திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்கள் சான்று பகர்கின்றன. கிராமப்புற மாணவ, மாணவியரின் திறமையின்மை இதற்கு ஒரு காரணமல்ல. இவர்களுக்கு கற்றுக் கொடுக்க போதியளவு பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு இருக்கும் பற்றாக்குறையே இந்த அப்பாவி மாணவ, மாணவியர் இந்தத் தடவையில் பரீட்சையில் தோல்வி யடைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.(மேலும்...)

வாக்குறுதிகளை மீறும் ராஜபக்சே

இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்சே தன்னுடைய சுதந்திரநாள் உரையில், ‘‘இந்நாட் டின் இன அடிப்படையில் வெவ்வேறு வித மான நிர்வாகங்களை நடத்துவது என்பது நடை முறைச் சாத்தியமல்ல’’ என்று கூறியதன் மூலம் நாட்டில் உள்ள தமிழ்ச் சிறுபான்மையின ரின் உணர்வுகளுக்கு ஊறு விளைவித்திருக் கிறார். இவ்வாறு அவர் கூறியிருப்பதானது, 2009ஆம் ஆண்டில் எல்டிடிஇ-யினருக்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தின்போது, ஆட்சே பணைக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி ராணுவ ரீதியாக அவர்களை வென்ற பின்னர், தமிழர்களுக்கு அவர் அளித்த உறுதிமொழிகளி லிருந்து அவர் பின்வாங்குகிறார் என்றே பொருள். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் 13 ஆவது அத்தியாயத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் அடிப்படையில் அதிகாரங் கள் பரவலாக்கப்படும் என்று அவர் உறுதிமொழி அளித்திருந்தார்.(மேலும்...)

விஸ்வரூபம்

இலங்கையிலும் தடைநீக்கம்

கொழும்பு: இலங்கையில் விஸ்வ ரூபம் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் கடந்த 7ம்தேதி திரையிடப்பட்டது. ஆனால் இலங்கை , மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் படத்துக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இலங்கையில் விதிக்கப் பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அமைச்சர் டி.ஏ. ஏக்க நாயகே கூறுகையில், படத் தினை திரையிட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில்  இந்திய தூதரக அதிகாரி வீடு மீது தாக்குதல்

இலங்கை யாழ்ப் பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக அதி காரி வீட்டின் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு பகுதி களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை வங்கியும் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ஆத்திரமடைந்த சிங்கள அமைப்பினர் இலங்கை யாழ்ப்பாணத் தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி வீட் டின் மீது தாக்குதல் நடத்தினர். வீட்டில் இருந்த வீடியோ மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினர். அங்கிருந்து பணத்தையும் கொள்ளை யடித்துச் சென்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரி வீட் டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாசி 10,2013

இலங்கையின் நிர்வாகத்தில் தலையிட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழு?

இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் விஷேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் அடிப்படையிலேயே மேற்படி குழுவை நியமிப்பதற்கான யோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி குழுவை இலங்கையில் வைத்தே செயற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் யோசனையாக உள்ளது என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.(மேலும்....)

இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்

இரட்டை பிரஜாவுரிமை என்ற பெயர் மாற்றப்பட்டு ‘வெளிநாட்டில் வாழும் இலங்கையர்’ என்ற பெயரில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார். ‘Overseas Srilankan Citizen’’ திட்டம் தொடர்பாக சட்ட வரைஞர் திணைக்களத்தின் திருத்தங்கள் வந்தவுடன் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் உடனடியாக இத் திட்டம் அமுல்படுத்தப்படும். (மேலும்....)

பிரபாகரணை கைதுசெய்யச் சொன்னது ஜெயலலிதா தான்  - அ.தி.மு.க

‘பிரபாகரன் குற்றவாளி, அவரை கைது செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டதை நியாயப்படுத்தினார். “புரட்சித் தலைவி எப்போதும் தீவிரவாதத்தை ஏற்றுக் கொண்டதாக வரலாறு இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, “புரட்சித் தலைவி தீவிரவாதத்தைதான் எதிர்த்தார். ஆனால், இலங்கை தமிழர்களை எப்போதும் ஆதரித்து வருகிறார். ஆனால் நீங்கள் ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலை என்று இலங்கை தமிழர் பிரச்சினையில் நடந்து கொள்கிறீர்கள் என்றார். நீங்கள் ஆட்சியில் இருந்த போது, இந்தியா சார்பில் ஒரு எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது. அதில் கனிமொழியை இடம் பெற வைத்து 3-ம் தர அரசியல் நடத்தியவர் உங்கள் தலைவர்” என்றார்.(மேலும்....)

எனக்கு எல்லா நாடுகளிலும் எதிர்ப்பு இருக்கிறது - ஜனாதிபதி

தமக்கு பல நாடுகளிலும் எதிர்ப்பு இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் தான் கவலைப்படப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திருப்பதியில் வைத்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று இந்தியாவுக்கு பயணமானார். அவரது விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், புதுடில்லி மற்றும் பீகார் மாநிலங்களில் கடும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில், நேற்று புத்தகாயாவிலுள்ள மகாபோதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், நேற்று மாலையே திருப்பதி புறப்பட்டிருந்தனர். ஜனாதிபதியின் இந்த விஜயம் காரணமாக குறித்த பிரதேசங்களில் கடும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், அதிகாலை 3 மணிக்கு ஜனாதிபதியும் அவரது குழுவினரும் திருப்பதியில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் ஒரு மணிநேரம் கோயிலில் சிறப்பு தரிசனத்தில் இவர்கள் ஈடுபட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

வன்முறைகளால் அச்சுறுத்தப்படும் யாழ். குடாநாட்டு சிறுவர்கள்

சிறுவர்கள் மீதான வன்முறைகளும், துஷ்பிரயோக சம்பவங்களும் மலிந்த பூமியாக மாறிவிட்டது இன்றைய யாழ். குடாநாடு. கடந்த 30 வருடகால யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிப்போன யாழ். குடாநாடு மீளெழுச்சி கண்டு வருகிறது. அமைதியும் இயல்பு வாழ்வும் படிப்படியாக திரும்பத் தொடங்கியுள்ள இந்த தருணத்தில் யாழ். குடாநாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகளான சிறார்கள் உடல், உள ரீதியில் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது எதிர்காலத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும். (மேலும்....)

துனீஸியாவில் இடதுசாரி தலைவர் கொலை  வேலைநிறுத்தம்

துனிஸியா நாட்டின் எதிர்க்கட்சித்தலைவரும் மனித உரிமை ஆர்வலரு மான ஷோர்கி பெலய்ட் புதன் கிழமையன்று தனது வீட்டிற்கு முன்பாக கொலை செய்யப்பட்டார். துப்பாக்கி ஏந்திய நபர் சரமாரியாக சுட்டதில் அவரது உயிர் பிரிந்தது. பெலய்ட் கொலையை கண்டித்து அந்த நாட்டின் மிகப்பெரும் தொழிற்சங்கம் பொது வேலை நிறுத்தத் திற்கு அழைப்பு விடுத்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தலைநகர் துனிஸ் மற்றும் மத்திய சுரங்க பகுதியான கபாவில் பதற்றம் காணப்பட்டது. இடதுசாரி கட்சி தலைவர் கொல்லப்பட்டதை தொட ர்ந்து காவல்துறையினரு டன் பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. பெலய்ட் கொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன் முறை தீவிர மானதால் பெலய்ட்டின் டெமாக்ரடிக் பாட்ரியாட் கட்சி அங்கம் வகிக்கும் பாப்புலர் பிரண்ட் உள்பட எதிர்கட்சி குழுக் கள் நாடாளுமன்றத்தில் இருந்து விலகின. பெலய்ட்டின் இறுதி சடங்கு நடைபெறும் நாளில் துனிஸியாவின் ஜெனரல் யூனியன் துனிசியா தொழி லாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

மாசி 09,2013

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?

மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாபுக்கும், பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கும் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டால் விரைவில் மூவருக்கும் ரகசியமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ். மாநகர சபையை உடன் கூட்டவும் - எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

யாழ். மாநகர சபையை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாழ்.மாநகர சபையின் மேயரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் மற்று கடைகள் தொடர்பில் விவாதங்களை நடத்துவதற்கே சபையை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணித்துண்டுகள் மற்றும் கடைகள் திட்டமிடப்படாத நிலையில் வரையறையில்லாமல் பலருக்கு வர்த்தக நோக்கத்திற்காக கையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்விடயங்கள் குறித்து விவாதிப்பதற்கு விசேட கூட்டமொன்று உடனடியாக நடத்தப்படல் வேண்டும். ஒழுங்கற்ற இக்காணிகளை பகிர்ந்தளிப்பதனால் எமது வரியிறுப்பாளர்களும் சபை எல்லைக்குள் வதிவோரும் நிரந்தர வர்த்தகர்களும் பாதிக்கப்படுவதாக எமக்கு புகார் தெரிவித்துள்ளனர். திட்டமிடப்படாத இச்செயற்பாட்டினால் அழகான எமது நகரமும் அழகிழந்து காணப்படுகின்றது. இவ்விடயம் சம்பந்தமக விவாதிக்கும் பொருட்டு  இம்மாத இறுதிக்குள் விசேட கூட்டமொன்றினை கூட்டுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியை நிறுத்த கோரி கண்டன பேரணி

இந்திய மீனவர்களின் இலுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடியை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கண்டன  பேரணி நடத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் இந்த ஆர்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் இலுவைப்படகுகளின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தக்கோரி இடம்பெயர்ந்தோர் மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவனால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபவனி இன்று பருத்தித்துறை நகரத்தை வந்ததடைந்தது. இந்த நடைபவனிப் போராட்டத்திற்கு ஆதரவாக வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சமாசத்தினால் ஆர்ப்பாட்டப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்பாட்டத்தின் போது வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சமாசத்தினால்  பாதுகாப்பு அமைச்சு, அமைச்சர் டக்களஸ் தேவானந்தா, யாழ்.அரச அதிபர், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பருத்திதுறை 521 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

நாட்டில் சர்வாதிகார ஜனநாயக விரோத ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சுமத்தி ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அமைப்பு கொழும்பில் நேற்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இலங்கையரின் பாதுகாப்பை உறுதி செய்க, இந்தியாவிடம் அரசு வேண்டுகோள்

சென்னையில் இலங்கை வங்கிக் கிளை மீதான தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி அந்நாட்டிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள இலங்கை வங்கியின் கிளை தாக்குதலுக்குள்ளானது. இதில் வங்கிப் பணியாளர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர். இதைத் தொடர்ந்து இலங்கையின் வெளியுறவு அமைச்சகம்  இந்தியாவில் வசித்துவருகின்ற இலங்கையர்கள்,  மஹாபோதி சமூகம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் போன்ற இலங்கை நிறுவனங்களுக்கும் இந்திய அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

பிணையில் விடுக்கப்பட்ட 14 பேர் ஆஸி சென்றுவிட்டனர்

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லமுயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பிணையில் விடுக்கப்பட்ட சந்தேகநபர்களில்  14 பேர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றுவிட்டனர். 101 சந்தேகநபர்கள் மே 2012 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்றதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கபுலி முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு மோசடிப்பிரிவு பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இந்த 14 பேரையும் பிணையில் எடுத்தவர்கள் நீதிமன்றத்தில் இருப்பதாக கொழும்பு மோசடிப்பிரிவு பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். புகலிடம் கோரிய 101 பேரை அவுஸ்திரேலியாவுக்கு களவாக அனுப்புவதில் முக்கியமாக பங்காற்றிய ஏழு பேரை பெப்ரவரி 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ஏனைய 14 சந்தேக நபர்கள் மீதும் நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.

ஜம்மு காஷ்மீரில் டில்லியை விட பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம்

உத்தரபிரதேச மாநிலம் அஜ்மீரில் உள்ள காஜாமொய்தீன் தர்காவுக்கு சென்ற ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா தனது தந்தையும் மத்திய மந்திரியுமான பாரூக் அப்துல்லாவுடன் அஜ்மீர் வந்திருந்தார். காஷ்மீரில் மாணவிகளால் நடத்தப்படும் இசைக் குழுவை தடை செய்ய மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அப்போது உமர் அப்துல்லா கூறியதாவது: மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்த 4 நபர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இதை போன்று பெண்களுக்கு எதிரான மிரட்டல்களை விடுக்கும் பேர்வழிகளுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக எனது அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் பெண்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை வெளியிட முடிகிறது. சுற்றுலாவுக்காக எங்கள் மாநிலத்துக்கு வரும் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடிகிறது. இந்தியாவின் தலைநகரான டில்லியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகமாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்!

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குரு இன்று காலை 8 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கருணை மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து, அவரது தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையையை நிறைவேற்ற உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 23-ல் பரிந்துரைத்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2001-ல் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட அப்சல் குரு குற்றவாளி என அறிவிக்கபட்டார். அவருக்கு 2004-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மாசி 08,2013

தமிழக கட்சிகள் எதிர்ப்பு

டெல்லி பயணத்தை கைவிட்டார் ராஜபக்சே!

தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, இலங்கை அதிபர் ராஜபக்சே தனது பயணத்தை மாற்றிக்கொண்டு, டெல்லி செல்வதை தவிர்த்துள்ளார். அதற்குப் பதிலாக நேரடியாக ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கிற்கு செல்கிறார். அங்கிருந்து தனியார் பிரத்யேக விமானத்தில் பீகாரில் உள்ள புத்த கயா செல்லும் அவர், இன்று மாலை திருப்பதி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமலைக்கு செல்லும் ராஜபக்ச, இரவு மலையிலேயே தங்குகிறார். நாளை அதிகாலையில் திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்யும் அவர், காலை 9 மணிக்கு சிறப்பு விமானத்தில் கொழும்பு புறப்பட்டு செல்கிறார். இதற்கிடையே ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

எமது தாயகத்தில் நிலத்தடி நீரை சரிவர பயன்படுத்தாவிட்டால்...? இதுதான் நடக்கும்

இதுவும் நடந்தே தீரும்....?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகின்றது.இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடம் கேட்டபோது கையிலும் மார்பிலும் பலமாக அடித்து உணர்ச்சி வசப்பட்டு பேசிய அவர் நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாரிய பற்றுடன் உள்ளேன் . ஆனால் சிலர் திட்டமிட்டு எனக்கு சதி செய்கின்றார்கள். இந்நிலையில் நான் மாற்று முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றேன். ஆனாலும் பொறுமைகாக்கின்றேன்.நான் எனக்கு வாக்களித்த மக்களிடம் அனுமதி பெற வேண்டும்.என்னை அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு தொடர்ந்தும் அழைக்கப்படுகின்றது.இணைந்தால் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பிரதி அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்றார். குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் ஏன் இந்தியப் பயணம்?

(கே.சஞ்சயன்)

இது ஒரு அரசுமுறைப் பயணம் அல்ல என்றும் புனித தலங்களுக்கான யாத்திரையே என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இதற்குள்ளேயும் ஒரு அரசியல் நோக்கம் இருக்காமல் இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வரப்போகிறார் என்ற செய்தி கடந்தவாரம் வெளியானதுமே, அதற்கு எதிரான போராட்டங்களை நடத்தும் முயற்சிகளும் ஆரம்பமாகி விட்டன. இப்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியாவில் மூன்று இடங்களை மையப்படுத்தி நடக்கப் போகின்றன. முதலாவது சென்னையில், இரண்டாவது திருப்பதியில், மூன்றாவது புதுடில்லியில். (மேலும்....)

பொதுநலவாய மாநாட்டு ஏற்பாடு; கமலேஷ் சர்மா இலங்கை வருகிறார்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கம லேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு நாளை மறுதினம் (10) இலங்கை வருகிறதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இலங்கையில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதன் பெருட்டே செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலை மையிலான குழு இலங்கை வருவதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவினை லண்டனில் சந்தித்து உரையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து கமலேஷ் சர்மா உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக இலங்கை வரவுள்ளார். இவரது வருகைக்கு முன்னதாக மேலதிக ஏற்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு பொதுநலவாய அமைப்பின் பிரதிநிதிகள் சிலர் முன்கூட்டியே இலங்கைக்கு வருகை தந்து அதற்கான ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களை வகுத்து வரும் குழுக்களுக்கு தமது ஒத்துழைப்பு க்களை வழங்கி வருவதாகவும் அமைச்சின் அதிகாரி கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகளை எவருடைய அழுத்தங்களுக்காகவும் அவசரமாக அமுல்படுத்த முடியாது

எத்தகைய அழுத்தங்களுக்காகவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அரசாங்கம் நியமிக்கவில்லை. அத்துடன் எவரது தேவைக்காகவும் அவசரமாக தவறான முறையில் செயற்பட முடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முப்பது வருட பிரச்சினைகளுக்கான தீர்வை மூன்று வருடங்களில் பெற்று விட முடியாது. எனினும், குறுகிய கால பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் தீர்வு காணப்பட்டுள்ளன. நடுத்தர, நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். யாருக்காவது இந்தப் பிரச்சினைகள் ஓரிரு வருடங்களில் தீர்க்கப்பட வேண்டும் என்ற தேவை இருக்கலாம். அவர்கள் இந்த நாட்டின் பின்புலத்தை அறியாத வர்கள் என்றே கூற வேண்டியுள்ளது.

மியன்மார் இனக்கலவரத்தின் பின் 6000 ரொஹிங்கியா அகதிகள் தாய்லாந்து பயணம்

\மேற்கு மியன்மாரில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு பின்னர் சுமார் 6000 ரொஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோத மாக தாய்லாந்து கடற் பகுதிக்குள் ஊடுருவி இருப்பதாக தாய்லாந்து இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேற்கு மியன்மாரில் இடம்பெற்ற ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் ரகினெ பெளத்தர்களுக்கும் இடையிலான இனக்கலவரத்திற்கு பின் தாய்லாந்து எல்லைக்குள் 5,899 ரொஹிங்கியா முஸ்லிம்கள் ஊடுருவி இருப்பதாக தாய்லாந்து இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு செயற்பாட்டு தளம் குறிப்பிட்டுள்ளது. உலகில் அதிக துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுபான்மையினராக ஐ.நா. வர்ணிக்கும் ரொஹிங்கியா முஸ்லிம்கள் எந்த நாட்டினதும் குடியுரிமை இன்றி பங்களாதேஷ், மியன்மார், மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இதில் கடந்த ஆண்டு ஜூனில் மியன்மாரில் இடம்பெற்ற இனக்கல வரத்தில் 180 பேரளவில் கொல்லப் பட்டதோடு 110,000 பேர் இடம்பெயர்ந்தனர். இதில் கடந்த 2012 ஆம் ஆண்டில் மியன்மார், பங்களாதேஷிலிருந்து படகு மூலம் 13,000க்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணித்திருப்பதாக ஐ.நா. கணித்துள்ளது. இவர்களில் ஒரு சிலர் நடுக்கடலில் படகு மூழ்கி இறந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாசி 07,2013

உள்ளுக்குள் நகமும் தசையும் மாதிரி, வெளியே வந்தால் நான் தேசியவாதி! (படம் பார்த்து கதை சொல்லுங்கள். )

தமிழ் தேசியம் பேசுவதில் இன்று முன்னிலையில் நிற்பவர் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அண்மையில் அவரது இணைப்புச் செயலாளர் மற்றும் பிரத்தியேக செயலாளர் என இருவர் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வெடி மருந்துகளுக்கு அப்பால் மீட்கப்பட்ட ஆபாச சீடிக்கள் , பிரதேச யுவதிகளின் புகைப்படங்கள், வகைவகையான பிரிதிப்பக்கட்டுக்கள் மக்களின் புருவங்களை உயர வைத்தது. (மேலும்....)

அறிவார்ந்த யாழ்பாணத்தாரின் கண்டுபிடிப்பு

வாய்ப்பூட்டு போடப்பட்ட யாழ் மாடுகள் !!!

யாழ்ப்பாணம், அராலி, கல்லுண்டாய்வெளி பிரதேச பயிர் நிலங்களில் மாடுகள் மேய்ந்தால் அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டு வருகின்றது. இதற்கென கிராம சேவகர்களின் கீழ் ஒரு அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேற்படி வயல் நிலங்களை கடந்து மேய்ச்சலுக்காக மாடுகளைக் கொண்டு செல்லும் மாட்டு உரிமையாளர்கள், மாடுகளின் வாய்களில் தண்ணீர்ப் போதல்கலைப் பொருத்தி அழைத்துச் சென்று மேய்ச்சல் இடத்தில் விடும்போது மட்டும் அவற்றை அகற்றி விடுகின்றனர். இதே மாதிரி தமிழ் (தேசிய?)அரசியல்வாதிகளுக்கும் வாய் பூட்டு போட்டு வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.

அமெரிக்க வர்த்தகக் குழு இலங்கைக்கு விஜயம்

பல்துறை அமெரிக்க வர்த்தகக் குழுவொன்று இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இம்மாதம் 8ஆம் அல்லது 9ஆம் திகதிகளில் கொழும்புக்கு வருகின்றது.  இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் முதன்முதலில் இக்குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றனர். வர்த்தக உறவுகள் மேம்பட்டால் இலங்கைக்கு எதிரான..? அமெரிக்காவின் செயற்பாட்டில் மாற்றம் ஏற்படும். இதற்கான வெள்ளோட்டமாகவே இந்த வியாபாரிகளின் விஜயம் அமைகின்றது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம்

இலங்கைத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என்று அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. ''தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என்று இலங்கையின் 65-வது சுதந்திர தின விழாவில் அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும், பின்பும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்ற பல முறை அளித்த உறுதிமொழியை அவர் மீறியிருக்கிறார். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையின் ஒட்டுமொத்த நலன்களுக்கும் கேடு விளைவிப்பதாகும். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்குவதும், தமிழர்களின் இன, மொழி கலாசாரத்தின் தனித்தன்மையை காப்பதும், சம அந்தஸ்து அளிப்பதும் தான் இணக்கமான சூழல் உருவாக அடிப்படைத் தேவையாகும். இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த இலங்கை அரசு இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களின் ஜனநாயக உரிமை களுக்காவும், வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை வைத்தியசாலையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட விவகாரம்

மாத்தளை வைத்திய சாலை வளாகத்திலிரு ந்து மீட்கப்பட்ட எலும் புக் கூடுகள் மற்றும் மண்டையோடுகள் எக்காலத்திற்குரியவையென திட்டவட்ட மாக வரையறுக்க முடியாத நிலையில் இது காணாமல் போனவர்களுடையதென ஜே. வி. பியினர் முன்வைக்கும் குற்றச் சாட்டினை ஏற்றுக்கொ ள்ள முடியாதென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத் தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். இதேவேளை இந்த எலும்புக் கூடு கள் எக்காலப் பகுதிக்குரியவையென கண்டுபிடிக்கும் நோக்கில் அவற்றின் மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக களனி பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் குறித்து ஆய்வு நடத்த தேவைப்பட்டால் வெளிநாட்டிலிருந்து மருத்துவ நிபுணர்களை வரவழைக்க தயாரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயகொடி அண்மையில் தெரிவித்திருந்தார்.

சவூதியில் செயற்படும் சி. ஐ. ஏ. ஆளில்லா விமானத் தளம் அம்பலம்

அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. சவூதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டு களாக ஆளில்லா விமானத்தளத்தை செயற்படுத்தி வந்தது விபரம் அம்பலமாகி யுள்ளது. யெமன் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் அரேபிய தீபகற்பத்திற்கான அல்-கொய்தா உறுப்பினர்களை வேட்டையாடவே சி. ஐ. ஏ. சவூதி அரேபிய தளத்தை பயன்படுத்தியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் பிறந்த அல்கொய்தா முன்னணித் தலைவர் அன்வர் அவ்லாக்கி மீதான ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா சவூதி அரேபிய தளத்திலிருந்தே செயற்படுத்தியுள்ளது. அப்போது தொடக்கம் இந்த ஆளில்லா விமானத் தளம்பற்றி அமெரிக்க ஊடகங்களுக்கு தகவல் தெரிந்தபோதும் அதனை வெளிப்படுத்தவில்லை. எனினும் இந்த ஆளில்லா விமானத் தளம் குறித்த தகவலை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த தளத்திலிருந்து முதல் தாக்குதலை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவிலேயே யெமனில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. யெமன் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு அந்நாட்டு அரசிடமிருந்து அனுமதி பெறப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் 6 பேரும் சாக வேண்டும் - மாணவியின் தந்தை

டில்லியில் ஆர்.கே. புரத்தில் உள்ள அறிவியல் அருங்காட்சிகயத்திற்கு, பாலியல் வன்கொடுமைக்கு பலியான மருத்துவ மாணவியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெற்கு டில்லி நகரபிதா சவிதா குப்தா இதனை அறிவித்தார். பாலியல் வன்கொடுமைக்கு பலியானவ ரின் பெயரை வெளியிடுவது தண்டனைக் குரியது என்று குற்றவியல் சட்டம் சொல்கிறது ஆனால், அவரது குடும்பத்தினர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தால் பொது மக்களுக்கு தெரியும் வகையில் பெயர் வெளியிடலாம் அந்த வகையில், மாணவியின் பெயரை அருங்காட்சியகத்திற்கு வைப்பதற்கு அவரது தந்தை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பதால் இதில் சட்டச் சிக்கல் இல்லை என்று நகர பிதா குப்தா தெரிவித்தார். அப்போது மாணவியின் தந்தை பேசும் போது, 'என் மகளை பாலியல் வன்கொடுமைக்கு பலியான மாணவி என்று கூறுவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அவள் பெயர் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைக்கிறோம் தைரியமான இதயம் கொண்ட அவள், ஒட்டுமொத்த நாட்டையே விழித்தெழச் செய்தாள். அவளது சாவுக்கு காரணமான 6 பேரும் சாக வேண்டும்' என்று ஆவேசமாக கூறினார்.

மாசி 06,2013

ரிசானா நஃபீக்  எழுதிய கடிதம்! 

குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார். அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெரித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள். கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன். சரியான நினைவு எனக்கில்லை, குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன். அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன், நான் அக்குழந்தையின் கழுத்தை நெரிக்கவில்லை. (மேலும்....)

ஆணவத்தின் உச்சம்

இஸ்ரேல் ராணுவ விமானம் சிரியாவின் வான் எல்லையில் அப்பட்டமாக அத்துமீறிச் சென்று தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் இரு விஞ் ஞானிகள் பலியாகியுள்ளனர். பலர் படுகாய முற்றுள்ளனர்.சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் - அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண் டும் என அமெரிக்காவும், அதன் கூட்டாளி களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தன. இந்த முயற்சியை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையை அமெரிக்கா பயன்படுத்தியது. அப் போது ரத்து அதிகாரத்தின் மூலம் ரஷ்யாவும், சீனாவும் அந்த முயற்சியை முறியடித்தன. இதனிடையே சிரியாவுக்குள் பயிற்றுவிக்கப் பட்ட பயங்கரவாதிகளை அமெரிக்க ராணுவம் துருக்கி வழியாக அனுப்பியது. அதன்மூலம் சிரியாவில் ரத்தக்களரியை உருவாக்கி, அந்த தேசத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண் டிருக்கிறது.(மேலும்....)

யாழ். முஸ்லிம்களை அமைச்சர் டக்ளஸ் புறக்கணித்துவிட்டார் - முஸ்லிம் சம்மேளனம்

'யாழ். மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் மக்களுக்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, எதுவித உதவிகளையும் செய்யவில்லை என யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான முஸ்லிம் சம்மேளன தலைவர் கே.எம்.நிலாம் தெரிவித்தார். 'யாழ். மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், மீண்டும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீள்குடியேறியுள்ளனர். அவ்வாறு மீள்குடியேறிய மக்கள் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், யாழில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் புத்தளம், கொழும்பு பகுதிகளில் தஞ்சமடையும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.(மேலும்....)

இதய அஞ்சலி

அறவழி போராட்டக் குழுவின் செயலாளரும், ஊடகவியலாளருமான எம்.கே. ஜீவகதாஸ் அவர்கள் 02;.02.2013 அன்று காலமானார். தென்மராட்சி மட்டுவில் கிராமத்தை பிறப்பிடமாகவும, வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவகதாஸ் அவர்கள் ஈழநாடு,, வீரகேசரி, Weekend Express,  தினக்குரல், வலம்புரி ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக பணிபுரிந்தவர். 1979 இல சமுதாய மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு அறவழி போராட்டக் குழு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே அதன் பணிப்பாளர்களில் ஒருவராக பொறுப்பேற்று செயற்பட்டவர். (மேலும்....)

சில்வெஸ்திரி அலன்ரின் எம்.பி. தொடர்ந்து வைத்தியசாலையில்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவரது ஊடக இணைப்பாளர் எஸ்.ஜெயதீபன் தெரிவித்தார். இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த சில்வெஸ்திரி அலன்ரின் எம்.பி.யின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சில்வெஸ்திரி அலன்ரின் எம்.பி. பயணித்த வாகனம் கிளிநொச்சிக்கும் மாங்குளத்துக்கும் இடையில் ஏ - 9 வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் தெலுங்கானா பிராந்திய கவுன்சில்

தெலுங்கானா பிரச்சினையை தீர்க்கும் விதமாக தெலுங்கானா பிராந்திய கவுன் சிலை உருவாக்க இந்திய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா பகுதிகளைச் சார்ந்தவர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பர். இந்த கவுன்சிலுக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்படும். குறிப்பாக இப்பகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தும் அதிகாரம் இந்த கவுன்சிலுக்கு வழங்கப்படும். எனினும் இப்பகுதி சட்டம். ஒழுங்கு தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் கட்டுப் பாட்டிலேயே இருக்கும். விரைவில் இதற்கான இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தெலுங்கானா பற்றி எடுக்கப்படும் முடிவுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்க வேண்டும். இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம் விரைவில் நடைபெறும். காங்கிரஸ¤ம் தெலுங்கானாவுக்கு ஆதரவான நிலையிலேயே இருக்கிறது என்றார். எனவே இனியும் தாமதப்படுத்தாமல், தெலுங்கானா அமைப்பது குறித்து மத்திய அரசு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அதிகாரப் பூர்வமாக இது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

வடக்கில் இழுவைப் படகை பயன்படுத்தி உள்ளூர் மீனவர்கள் மீன்பிடிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைப் படகு மீன்பிடியைக் காரணம் காட்டி உள்ளூர் மீனவர்களும் இழுவைப் படகைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் வி.சகா தேவன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துமீறிய இந்திய மீன வர்களின் மீன்பிடியைக் கண்டித்து மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரை கரையோரமாக பாதயாத்திரை பேரணி நடத்திவரும் சகாதேவன், 9வது நாளான நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பாஷையூரை அடைந்தார். தடைசெய்யப்பட்ட இழுவைப் படகுகளால் உள்ளூர் மீன வர்களால் மேற்கொள்ளப் படும் மீன்பிடி மூலம் இல ங்கையின் கடல்வளம் பாதி க்கப்படுவது குறித்து பாஷை யூர் மீனவ சமூகங்கள் தன்னி டம் சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிட்ட சகாதேவன், இத னைத் தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மரணதண்டனைக்கு எதிரான இஸ்லாமிய படைப்பாளிகளின் கூட்டறிக்கை

கொலைக்குற்றங்களுக்கு தலை வெட்டு தண்டனை வழக்கில் இருக்கும் ஒரு நாட்டில் அதன் தண்டனை முறைகள் அதற்கான நியாயப்பாடோடு இருக்கும் சூழலில் அதைத் தாண்டிய மனித உரிமைகள், குற்றத்தன்மை, குற்றத்தின் தர்க்கம் மற்றும் குற்றம் உருவாகும் சூழல் இவை ஆராயப்பட வேண்டும். மேலும் இஸ்லாம் போதிக்கும் ஆரம்பகால குற்றவியல் சட்டங்கள் தற்காலிக பரிகாரம் தான் குற்றத்தை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வு தான். அதை விட நிரந்தரமான ஒன்று கருணையும், மன்னிப்பும் தான். மன்னிப்பு என்பதன் எதிரிணையாக தான் அது குற்றத்தை பார்க்கிறது. இஸ்லாம் இதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறது.(மேலும்....)

மாசி 05,2013

ஸ்ரீதரன் எம்பியின் தொடரும் தில்லுமுல்லு.. லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் செயல்பாட்டையும், தனது பெயரில் பதிந்தார்.. "லங்கா ஸ்ரீ"யின் அப்பட்டமான பொய்!!

லண்டனில் புலம் பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மக்களின் லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஊடாக புங்குடுதீவில் வாழும் மக்களுக்கு ஆயிரம் தென்னங்கன்றுகள் அண்மையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீதரன் எம்பியின் சகோதரரால் நடாத்தப்படும் "லங்காஸ்ரீ" இணையதளம் இதனை தனது சகோதரனின் செயல்பாடு என உரிமை கொண்டாடி உள்ளது. ஆயினும் இது குறித்து லண்டன் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் நாம் விசாரித்த போது "இந்த நடவடிக்கை முன்னெடுக்க  காரணமாக அமைந்தவர் ஸ்ரீதரன் எம்பி தான் எனவும், அவர் சிலகாலங்களுக்கு  முன்னர் (ஸ்ரீதரன்) லண்டன் வந்திருந்த போது புங்குடுதீவு அபிவிருத்திக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கும்படி கூறியதாகவும், இதன்பின்னர் எமது அமைப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடியே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு நாம் நிதி சேகரித்து எமது அமைப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. (மேலும்....)

‘தாயகத்தின் தாய்’

‘ஒரு அடி கூட பின்வாங்காதே!’

1942 ஆகஸ்ட் 23ம் தேதி அந்த மகத்தான நகரின் மீது பாசிச சர்வாதிகாரி ஹிட்லரின் படைகள் முதல் குண்டைப் பிரயோகித்துத்தாக்குதல் தொடுத்த நாள். அந்த நாள் முதல், அந்த நகரை மட்டுமல்ல, அந்த நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் மனிதகுலத்தையே பாசிசத்தின் பிடியிலிருந்து விடுதலை செய்த 1943 பிப்ரவரி 2ம் தேதி வரை போர்க்களத்தில் ஒலித்துக்கொண்டிருந்த குரல் இது. ‘ஸ்டாலின் கிராடு’ என்பதே வரலாற்றின் கதாநாயகனாக மாறிய அந்த மகத்தான நகரம். ‘சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம்’ என்ற முழுப் பெயர் கொண்ட சோவியத் ஒன்றியத்தின் வீரஞ்செறிந்த செஞ்சேனையின் கைகளால், ஹிட்லரின் படைகள் மீள முடியாத இழப்பையும் அழிவையும் சந்தித்த மாநகரம் அது.
(மேலும்....)

இந்திய வீடமைப்பு திட்டத்தில் பாரபட்சம் - புளொட் தலைவர் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு

வவுனியா மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்ட ஒதுக்கீட்டில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்றையதினம் இந்திய தூதரக உயரதிகாரிகளை இந்திய தூதரகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது கருத்துரைத்த இந்திய தூதரக அதிகாரிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின்கீழ் வீடுகள் கிடைக்கும். இதனை நாம் உறுதிப்படுத்துவோம். வீடமைப்புத் திட்ட ஒதுக்கீடு தொடர்பில் எந்தவொரு இனத்திற்கும் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது. இந்த விவகாரத்தினால் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன், யுத்த காலத்தின்போதும் முஸ்லிம் மக்கள் யாழ். குடாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போதும் வன்னியில் தமிழ், முஸ்லிம் உறவு சீர்குலையாது பாதுகாக்கப்பட்டது.

கூகுள் முகப்பு பக்கத்தில் இலங்கையின் வாள் ஏந்திய சிங்கம்

கூகுள் தேடல் முகப்பு பக்கம் இலங்கையின் சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. இதன்படி (google.lk மற்றும் google.com) முகப்பு பக்கத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தேசியக் கொடியில் இருக்கும் வாள் ஏந்திய சிங்கம் கூகுல் தேடல் பக்கத்தில் அவதானிக்கக் கூடிய தாக உள்ளது. இதேவேளை, தேசியக் கொடியிலுள்ள மூன்று நிறங்கள் கூகுள் எழுத்துக்களில் காணப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய தினங்களின் போதும் கூகுள் தேடல் முகப்பு பக்கத்தில் அந்நாட்டு தேசிய தினங்களிற்கு ஏற்றாற்போல் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் வகையில் சட்டமூலம்

பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுப்பது தொடர்பான சட்டமூலம் நாளை (6) பாராளு மன்றத்தில் நிறைவேற் றப்பட உள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரகாரம் இந்த சட்டமூலம் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுப்பது மீதான சமவாய திருத்த சட்டமூலம் மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளது. இந்த சட்டமூலத்தின் பிரகாரம் ஐ. நா. வினால் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டவிரோதமாகவோ விருப்பத்தின் பேரிலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதும் நபர் பயங்கரவாத அமைப்பொன்றிற்கு பொருளாதார ரீதியில் உதவுவது இந்த சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத அமைப்புசார் பட்டியலில் எல். ரி. ரி. ஈ., அல்- குவைதா, தலிபான் அடங்கலான பல அமைப்புகள் உள்ளதோடு, அவற்றின் பட்டியல் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட உள்ளன.

தினமும் 22 அமெரிக்க முன்னாள் படை வீரர்கள் தற்கொலை

அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 22 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அமெரிக்காவின் முக்கிய அரசாங்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 18 பேர் இவ்வாறு இறக்கிறார்கள் என்று முன்னர் கூறப்பட்டதைவிட இது சற்று அதிகமாகும். சுமார் 60 வயதைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களே இவ்வாறு அதிகமாக தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதுவரையிலான ஆய்வுகளில் மிகவும் பரந்துபட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளின்படி இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். (மேலும்....)

மாலி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள்

அன்சார் தின் - மாலி நாட்டு இஸ்லாமிய ஆயுத குழுவாகும். இதில் லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபிக்கு ஆதரவாக அங்கு யுத்தத்தில் ஈடுபட்ட துராக் இனப் போராளிகள் இணைந்துள் ளனர். அஸ்வாத் இஸ்லாமிய முன்னணி -அன்சார் தினிலிருந்து பிரிந்துவந்த குழுவாகும். இந்த குழு தீவிரவாதத்தை எதிர்ப்பதோடு பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளது. அல் கொய்தா இஸ்லாமிய மக்ரிப் - அல் கொய்தா அமைப்பின் வடக்கு ஆபிரிக்க கிளையாகும். இது அயல் நாடான அல்ஜீரியாவை மையமாக கொண்டு செயற்படுகிறது. மேற்கு ஆபிரிக்காவின் ஐக்கியம் மற்றும் ஜிஹாதுக்கான முன்னணி - மேற்கு ஆபிரிக்க நாடுகள் எங்கும் ஜிஹாத் போராட்டத்தை பரப்புவதை குறிக்கோளாக கொண்டு இயங்குகிறது. இரத்தத்தால் கையொப்பமிட்ட படை - சர்வதேச ஷிஹாத் பிரிவாக செயற்படுகிறது. இந்த குழுவே அண்மையில் அல்ஜீரிய எரிவாயு ஆலையில் பிணைக் கைதிகளை பிடித்து தாக்குதல் நடத்தியது.

மாசி 04,2013

இலங்கையின் 65வது தேசிய சுதந்திர தினம் இன்று

சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் பல் வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளன. சுபீட்சமான தாய் நாடு- ஒளிமயமான நாளைய தினம் என்ற தொனிப் பொருளில் சுதந்திர தின பிரதான வைபவம் இம்முறை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையோரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் மிகப் பிரமாண்ட மான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நகர் முழுவதும் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. சுதந்திர தின பிரதான வைபவத்தை முன்னிட்டு திருகோணமலை உட்பட அதனை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நான்காயிரத்திற்கும் அதிகமான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதிரியார்

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி 2 கோடி ரூபா மோசடி

2 கோடி ரூபாவிற்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பாதிரியார் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியே குறித்த பாதிரியார். அப்பாவி மக்களிடம் இலட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கனடாவுக்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றிவந்த நிலையிலேயே பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாதிரியாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இருபாலை, நல்லூர் மற்றும் கோப்பாய் போன்ற பகுதிகளிளைச்சேர்ந்தவர்களையே இவ்வாறு ஏமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றிய பாதிரியார் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தா பொலிஸார். அவர் தொடர்பிலான விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இது இன்னொரு ரிசானாவின் கதை

தம்பலகமம் முள்ளிப் பொத்தானையின் புலிக் குட்டி பஜார் எனும் கிராமத்தைச் சேர்ந்த கபிபுல்லா என்பவரின் மூத்தமகள் ரிசானா 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது குடும்ப வறுமையைப் போக்கவும் தனது சகோதரிகளின் கல்விக்கு உதவுவதற்காகவும் சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்றார். சென்றவர் 2010.04.11 ஆம் திகதி 3 ஆவது மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது. (மேலும்.....)

நடைபயணி

(ஜெயமோகன்)

தலைமை உரை நடந்துகொண்டிருந்தபோது வெள்ளைவெள்ளை உடையில் தாளாளர் உள்ளே நுழைந்தார். அதற்கு முன்னரே ‘நாட்டாமை கெளம்பியாச்சு..’ போன்ற அறிவிப்புகள் வெளியே ஒலித்ததை நான் கேட்டேன். மெல்ல, மிகமெல்ல, மிகமிகமெல்ல தாளாளர் நடந்து வந்துகொண்டே இருந்தார்.. சினிமாவின் ’ஸ்லோமோஷன்’ போல ஒரு மனிதர் நடக்கமுடியுமென்பதே எனக்கு திகிலாக இருந்தது. அவர் வந்ததும் அரங்கமே எழுந்து நின்றது. தலைவர் பேச்சை நிறுத்திவிட்டுத் தாளாளர் புகழ்பாட ஆரம்பித்தார். அவர் அவ்வளவு தாமதமாக, அரங்கின் மறு எல்லையில் தோன்றியதன் நோக்கமே எல்லாரையும் எழுந்துநிற்கச்செய்வதுதான். இரண்டாம்தர அரசியல்வாதிகள் எப்போதும் செய்யும் உத்தி அது. என் ரத்தம் முழுக்க தலைக்குள் பாய்ந்தது. நான் எழுந்திருக்கவில்லை. மேடையில் இறுக்கமாகக் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தேன். (மேலும்.....)

வடக்கு கிழக்கை இணைக்க முயற்சி - ஜே.வி.பி

வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து அதிகார பகிர்வு அலகொன்றை அமைக்க ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு இலங்கையை வலியுறுத்துவதற்காக சர்வதேச அமைப்புகள் தயாராகி வருவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாயம் போன்ற அமைப்புகளே இவ்வாறு தயாராகிவருவதாக ஜே.வி.பி தலைமையிலான ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்களின் இயக்கம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்களை சிங்களவர்களிடமிருந்து பிரித்து தமிழர் பக்கம் தள்ளிவிடுவதற்காகவே சர்வதேச நிறுவனங்கள் முஸ்லிம் உணர்வை தூண்டிவிடுகின்றன என அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வண. தம்பர அமில தேரர் தெரிவித்தார். மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாலும் பொதுநலவாயம் இலங்கைக்கு எதிரான ஒரு நடவடிக்கைக்கு தயாரா வருவதாலும் இந்த நாடு ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது.

பீடைகொல்லி, கிருமிநாசினி பாவனைசுற்றாடலை பாதுகாக்க விரைவில் சட்டம்

பீடைகொல்லி, கிருமிநாசினி மற்றும் இரசாயன பசளைப் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விவசாயத்திற்காக கண்டபடி பீடைகொல்லி கிருமிநாசினி மற்றும் இரசாயன பசளைகளை பயன்படுத்துவதால் பெரும் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. அளவுக்கதிகமாக இரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதனால் வருடாந்தம் 10 ஆயிரம் பேர் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 2000 பேர் இறப்பதோடு பெருமளவானவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனரென சுகாதார அமைச்சு தெரிவித்தது. இரசாயனப் பசளை, பீடை கொல்லி மற்றும் கிருமிநாசினி பாவனையால் நிரந்தரன நோயாளர் தொகையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையிலே இவற்றின் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக கடும் சட்டங்களை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வசூலை குவிக்கும் விஸ்வரூபம்

விஸ்வரூபம் படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இப்படம் தமிழில் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவிக்கிறது. சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம் சத்தியவேடில் உள்ள சீனிவாசா தியேட்டரில் விஸ்வரூபம் படம் தமிழில் திரையிடப்பட்டுள்ளது. இதேபோல ஆந்திர மாநிலம் முழுவதும் இப்படம் எந்தவித பிரச்சினையுமின்றி ஓடுகிறது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள தியேட்டர்களில் படம் பார்ப்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்தும் பாலக்காடு சித்தூர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் கேரளா மாவட்டத்தினரும் சென்று விஸ்வரூபம் படம் பார்த்து வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் 54 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் தமிழில் வெளியாகியுள்ளது. பெங்களூரில் திரையிடப்பட்டுள்ள இப்படத்தை கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகிறார்கள். கேரள மாநிலத்தில் 83 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் தமிழில் திரையிடப்பட்டு உள்ளது.

பறந்துகொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமான ஓட்டி மீது நடவடிக்கை

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருக் கும்போது, தூங்கி கொண்டிருந்த விமான ஓட்டியை விமானி அறையில் பூட்டி விட்டு சென்ற சக விமானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானங்கள் பறந்துகொண்டிருக்கும்போது விமானிகள் தூங்குவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பரில், நெதர்லாந்தின், ‘டிரான்ஸ்சேவியர்’ விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. சக விமான ஓட்டி ஒருவர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். இவருடன் இருந்த மற்றொரு விமானி விமான அறையை பூட்டிகொண்டு, கழிப்பறைக்கு சென்று விட்டார். இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும் விமானி அறைக்கு வந்தபோது அந்த விமான ஓட்டி எழுந்திருக்காமல் தொடர்ந்து தூங்கி கொண்டிருந்தார். கதவை திறக்க முடியாததல், ‘இன்டர்காம்’ ஒலித்ததை கேட்டு, தூங்கி எழுந்த சக விமான ஓட்டி கதவை திறந்தார். அவ்வளவு நேரமும், விமானமும் தானாகவே பறந்துகொண்டிருந்தது. இந்த சம்பவம் தற்போது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. பொறுப்பில்லாமல் தூங்கிய விமான ஓட்டி மற்றும் விமானி அறையை பூட்டி சென்ற சக விமானி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

சிரியா எதிர்க்கட்சி தலைவருடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

சிரியா அரசுடன் அந் நாட்டின் எதிர்க்கட்சி பேச் சுவார்த்தைகளைத் தொடங் கும் என்று நம்புவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச் சர் செர்ஜி லாவ்ரோவ் சனிக் கிழமையன்று மூனிச்சில் நடந்த பாதுகாப்பு மாநாட் டின் இடைவெளியில் செய்தியாளர்களிடம் கூறி னார். மாநாட்டில் கலந்து கொண்ட சிரிய எதிர்க்கட் சித்தலைவர் மௌவாஸ் அல்-கடிப்பை சந்தித்துப் பேசிய பின் அவர் இவ்வாறு கூறினார். சிரிய அரசுடன் பேச்சு வார்த்தை குறித்து அவர் கூறிய சாதகமான கூற்றுக்க ளுக்கு வரவேற்பு தெரி வித்தார். அரசுடன் எவ்வித தொடர்பையும் நிராகரித்து வந்த கூட்டணியில் இருந்து வந்துள்ள இக்கருத்துக்கள் முக்கியமானவையாகும் என்றும் அவர் கூறினார். யதார்த்தவாதம் வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார். சிரிய புரட்சி மற்றும் எதிர் சக்திகளின் தேசியக்கூட் டணியின் தலைவர்களில் ஒருவராகிய அல்-கடிப், மூனிச் மாநாட்டின் போது, லாவ்ரோவ், அமெரிக்க குடியரசு துணைத் தலைவர் ஜோ பிடேன், ஐ.நா./அரபு லீக் சிறப்பு தூதர் லக்தர் பரா‘ஹிமி ஆகிய நால்வரைச் சந்திக்க தயாராய் இருப்ப தாகக் கூறியிருந்தார்.  நான்கு தரப்பு சந்திப்பு நடைபெறக்கூடும் என்று கூறப்பட்டது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச் சகம் நான்கு தரப்பு சந்திப் பை முற்றிலும் மறுத்துவிட் டது.

மாசி 03,2013

மாவட்ட ரீதியில் அமைச்சுப் பதவிகள்?

இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியில் அதிக வாக்குகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட அமைச்சர் என்ற ரீதியில் இப்பதவிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்நியமனங்கள் இடம்பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதன்போது நாமல் ராஜபக்ஷ, லக்ஷ்மன் வசந்த பெரேரா, நிஷாந்த முத்துஹெடிகம உட்பட சிலருக்கு  அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். குடாநாட்டை மிரட்டும் 'பியர் கான்' கலாசாரம்

யாழ். குடாநாட்டில் தலைதூக்கியுள்ள ‘பியர்கான்’ கலாசாரம் குடாநாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டின் அனேகமான உள்ளக வீதிகளில் தினமும் சிதறிக்கிடக்கும் வெற்று ‘பியர் கான்கள்’ குடாநாட்டு இளைய தலைமுறையின் சமூக எழுச்சியில் பாரிய சறுக்கல் படிகளாகவே உள்ளன. யாழ்ப்பாணம் என்பது தமிழர்களின் கலை, கலாசார, வாழ்வியலின் அடையாளச் சின்னம். வாளெடுத்து போர் தொடுத்து தமிழர் வாழ்வியலை காத்துநின்ற மன்னவர்கள் வாழ்ந்த பூமி. கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்த யுத்தம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளால் ஏராளமான வடுக்களென தாங்கி நிற்கும் மண் யாழ். மண். (மேலும்.....)

19ஆவது திருத்தம் தொடர்பில் ஆலோசனை

அரசியலமைப்புக்கு 19ஆவது திருத்தம் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டவல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் முறையில் மாற்றம் கொண்டு வருவது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவது, பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நிர்ணயிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலை பலப்படுத்தும் மத்திய கிழக்கின் முதிர்ச்சியில்லா ராஜதந்திரம்

ஸ்தீனத்திற்கு வயது 64. உலக வரைபடத்தில் எகிப்து, சிரியா, ஜோர்தான், லெபனானுக்கு அருகில் சிறிய கோடொன்று இருக்குமே அதுதான் இஸ்ரேல். 64 ஆண்டுகளுக்கு முன்னருள்ள வரைபடத்தையோ, ஈ மொய்க்கும் வரைபடத்தையோ எடுத்து ஆராயாதிர்கள். ஒன்றில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது. மற்றதில் ஈ மொய்த்து மறைத்திருக்கக் கூடும். இந்த சிறு புள்ளி அரசியல்தான் உலகையே ஆட்டிப்படைக்கிறது. இங்கே பலஸ்தீனத்தை பற்றி கேட்டால் அது வாய்மொழியாக மட்டுமே இருக்கிறது. தப்பித் தவறி உலக வரைபடத்தில் தேடிவிடாதீர்கள். அங்கே பலஸ்தீனம் இருக்காது. இஸ்ரேல் என்ற புள்ளிக்குள் மேற்குக்கரை என்று ஒரு கோணத்திலும் காசா என்று மற்றொரு கோணத்திலும் எழுதப்பட்டிருக்கும். இவைகளைச் சேர்த்துத்தான் பலஸ்தீனம் என்கிறார்கள். (மேலும்.....)

மாசி 02,2013

விஸ்வரூபம் பேச்சில் உடன்பாடு: இஸ்லாமியர் போராட்டம் வாபஸ்

விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, இஸ்லாமிய அமைப்பினர் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். விஸ்வரூபம் பட ரிலீஸ் பற்றி விரைவில் தகவல் வெளியிடப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு இஸ்லாமிய அமைப்பினரின் பிரதிநிதிகள் கூறியது:  "விஸ்வரூபம் துவக்கக் காட்சியில் 'இது உண்மைத் தொகுப்பு' என்று இருந்தது. அதை மாற்றக் கோரினோம். அதன்படி 'இப்படம் முழுக்க முழுக்க கற்பனையே" என்று பதிவு செய்ய கமல்ஹாசன் ஒப்புதல். படத்தில் 15 காட்சிகள் நீக்கக் கோரினோம்; அதில் 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல் அளித்தார். அதை ஏற்றுக்கொண்டோம். எங்கள் போராட்டங்களை வாபஸ் பெறுகிறோம்."
 (மேலும்....)

அமெரிக்காவின் பிரேரணை சாதாரண விடயமல்ல - அமைச்சர் திஸ்ஸ விதாரண

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாகக் கருத முடியாது. இதன் மூலம் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு யோசனை முன்வைக்கும் சாத்தியம் உண்டு என அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இந்த நிலைமையை புலி ஆதரவு புலம்பெயர் மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்வர். எனவே கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்துவதாக சர்வதேசத்துக்கு வலியுறு;திக் கூறுவதே அழுத்தங்களைக் குறைப்பதற்கான ஒரே வழியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி பாராளுமன்றத் தெரிவுக்குழுவை கூட்டி அரசியல் தீர்வை விரைந்து காண்பதன் மூலமே இந்தியாவின் ஆதரவை ஜெனிவாவில் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வறுமை ஒழிப்பில் பாரிய பங்களிப்பு

பீ. ஏ. அந்தோனிமார்க்
(நேற்றைய தொடர்)

விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் இன்னும் பல முறைகளை கண்டு பிடிக்க வாய்ப்புண்டு. வருடத்தில் வரட்சிக்காலமாக கணிக்கப்படும் 4-5 மாதங்களில் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி 1750 மில்லி மீற்றராகும். சில வருடங்களில் மழையே பெய்வதில்லை. இதனால் பாரிய பயிர் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை நிவர்த்தி செய்து வெற்றி பெற வேண்டுமாயிருந்தால் நீர்ப்பாசன தொழில் நுட்பங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். வரண்ட வலயத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு குளங்கள், பலவிதமான அளவுப் பிரமாணங்களில் உள்ளன. வாய்க்கால் மூலம் இவை நெற் பயிருக்கு நீரை பாச்சுகின்றன. வீடுகளிலும் தொட்டிகளிலும் மழைத் தண்ணீரை சேகரிக்கும் முறையும் அதை பாய்ச்சும் முறையும் தண்ணீர் தட்டுப்பாட்டை ஓர் அளவிற்கு நீக்கியுள்ளது. பல நூற்றாண்டுகளாக உலகம் மழையை நம்பித் தான் வாழ்ந்தது. இந்த மழை நீர் வீட்டுத் தோட்டங்களுக்கு, காணி அபி விருத்திக்கு விவசாய அபிவிருத்திக்கு பயன்பட்டது. (மேலும்....)

த.தே.கூ.பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி வவுனியாவில் இன்று   பொது மக்களால் ஆர்ப்பாட்டம்

வவுனியா மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களிடையே காணப்படும் இன உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாகவும்,அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வதாகவும் தெரிவித்து அதனை தோற்கடிக்க அனைத்த மக்களும் ஒன்று படுமாறு வவுனியா நகரத்தில்;இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்ட பேரணி வவுனியா பசார் வீதியிலிருந்தும்,வவுனியா மன்னார் வீதியிலிருந்தும் இரு வேறு பேரணிகளாக ஆரம்பமாகி வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையினை வந்தடைந்தன.(மேலும்....)

இலங்கையில் சித்ரவதையா? ஆதாரம் இல்லை -  பிரித்தானியா

இலங்கை தமிழ் தஞ்சக் கோரிக்கையாளர்களை அவர்களது நாட்டுக்கு வழமையாக திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை பிரித்தானியா மறுத்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுவது போன்று, அப்படியாக திருப்பி அனுப்பப்படுபவர்கள் சில சந்தர்ப்பங்களில் இலங்கையில் சித்ரவதைக்கு உள்ளாகுகிறார்கள் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கொழும்பில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னரும்கூட இன்றுவரை இலங்கையில் மனித உரிமைகள் குறித்த கவலைகள் பரவலாக காணப்படுகின்றன. அடுத்த நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் எந்த மட்டத்திலான பிரிட்டிஷ் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து இப்போதே முடிவு செய்ய முடியாது என்றார்.

சிறுமியுடன் வீதியில் காத்திருந்த அபுதாபியின் முடிக்குரிய இளவரசர்!

அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சயிட் பின் சுல்தான் அல் நயான் சிறுமியொருவருடன்  வீதியில் காத்திருந்த சம்பவமானது தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் வீதியில் தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சிறுமியொருவர் வீதியில் தனியாக நின்றுகொண்டிருப்பதினை கண்டுள்ளார். இதனையடுத்து தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி அச்சிறுமியிடம் சென்று அவ்விடத்தில் நின்றுகொண்டிருப்பதற்கான காரணத்தை கேட்டுள்ளார். தான் தனது தந்தை வரும் வரை காத்துக்கொண்டிருப்பதாக சிறுமி பதிலளித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை அவளது வீட்டில் கொண்டு போய் சேர்க்கவா என இளவரசர் கேட்டுள்ளார். இதற்கு அச்சிறுமி மறுப்புத் தெரிவித்துள்ளார். அதன்போது வந்திருப்பவர் முடிக்குரிய இளவரசர் என அவரின் உதவியாளர் சிறுமியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு  அச் சிறுமி வந்திருப்பவர் மன்னர் என தனக்கு தெரியுமமெனவும் ஆனால் தந்தை முன் பின் தெரியாத நபர்களுடன் செல்லவேண்டாம் என தனக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் மன்னர் அச்சிறுமியின் தந்தை வரும் வரை அவருடனே வீதியில் காத்திருந்துள்ளார். இக் காட்சியை சிறுமியின் பள்ளி ஆசிரியர்கள் படம்பிடித்துள்ளனர். தற்போது அப்படம் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மன்னரின் இரக்க குணம் தொடர்பில் பலர் பாராட்டுக்களை இணையமூடாக தெரிவித்த வண்ணமுள்ளனர்.

முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு கமல் தரப்பு கடிதம்

‘விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து உள்துறைச் செயலரிடம் கமல் சார்பில் நேற்று மாலை, கடிதம் வழங்கப்பட்டது. இதையடுத்து, இன்று பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக, கமலின் சகோதரர் சந்திரஹாசன் கூறியதாவது, விஸ்வரூபம் படப் பிரச்சினையில், சுமுகமான முடிவு ஏற்படுத்துவதற்கு, இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள், கமல்ஹாசனை சந்தித்து பேசினர். படத்தில் அவர்கள் நீக்கச் சொன்ன காட்சிகள், வசனங்களை, நீக்கி விடுவதாக கமல் தெரிவித்தார். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, இஸ்லாமிய அமைப்புகளுடன் பேசி, சுமுக உடன்பாடு காணுமாறு தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஆணவத்தின் உச்சம்

இஸ்ரேல் ராணுவ விமானம் சிரியாவின் வான் எல்லையில் அப்பட்டமாக அத்துமீறிச் சென்று தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் இரு விஞ் ஞானிகள் பலியாகியுள்ளனர். பலர் படுகாய முற்றுள்ளனர். சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் - அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண் டும் என அமெரிக்காவும், அதன் கூட்டாளி களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தன. இந்த முயற்சியை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையை அமெரிக்கா பயன்படுத்தியது. அப் போது ரத்து அதிகாரத்தின் மூலம் ரஷ்யாவும், சீனாவும் அந்த முயற்சியை முறியடித்தன. இதனிடையே சிரியாவுக்குள் பயிற்றுவிக்கப் பட்ட பயங்கரவாதிகளை அமெரிக்க ராணுவம் துருக்கி வழியாக அனுப்பியது. அதன்மூலம் சிரியாவில் ரத்தக்களரியை உருவாக்கி, அந்த தேசத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண் டிருக்கிறது. (மேலும்....)

மாசி 01,2013

அமெரிக்காவே பயங்கரவாதத்தில்  முன்னிலையில் உள்ளத- நோம் சோம்ஸ்கி

உலக அளவில் பயங்கர வாதத்தில் அமெரிக்காவே முன்னிலையில் இருக்கிறது என்று உலக புகழ் பெற்ற அமெரிக்காவின் தலை சிறந்த சிந்தனையாளர், வர லாற்று ஆய்வாளர் நோம் சாம்ஸ்கி தெரிவித்துள்ளார். ஈரானின் பிரஸ் டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டி யில் கூறியிருப்பதாவது : சர் வதேச சட்டம் முறைாயக அமலாக்கப்படுமானால் உலக அளவில் பயங்கரவா தத்தில் அமெரிக்காவே முன் னிலையில் இருக்கிறது என அங்கீகரிக்கப்படும். பயங்கர வாதத்திற்கு அதிகாரப்பூர்வ மான விளக்கத்தை பார்த் தோமானால் மிகவும் நன் றாக இருக்கிறது. அதே போல் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பயங்கரவா தத்திற்கு கொடுக்கப்பட்டி ருக்கும் விளக்கம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் அதில் சில குறைபாடுகள் இருக்கிறது. அதனை பொருத்தி பார்த்தாலும் அமெரிக்கதான் உலக அளவில் பயங்கரவாதத்தில் முன்னணியில் இருக்கும் நாடு என்பது தெரிய வரும். (மேலும்....)

கற்றுக்கொடுக்கிறார் காந்திஜி

(வெ.ஜீவகுமார்)

ராகுல் காந்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் என்று நினைப்பவர் களும் இருக்கலாம். இந்திரா காந்தியின் கணவர் “பெரோஸ் காந்தி’ என்றே நம்மில் பலர் அறிந்துள்ளோம். இந்திரா வின் கணவர் பெயர் “பெரோஸ் கான்’ என் பதும் நேரு இந்தத் திருமணத்தை விரும் பாத சூழலில் பெரோஸ் கான், பெரோஸ் காந்தி ஆக்கப்பட்டார் என்பதும் வரலாற்று உண் மைகள். ஜவஹர்லால் நேருவின் மனைவி கமலா நேரு நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவமனையில் பெரோஸ் கான் பெரிதும் உதவுகிறார். 1942-இல் பெரோஸ், இந்திரா மணவிழா நடக்கிறது. 1944-இல் ராஜீவ், 1946-இல் சஞ்சய் பிறக்கின்றனர். ராஜீவ் கான், சஞ்சய் கான் என்று அழைக்கப்பட வேண்டியவர்கள், ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று அழைக்கப்படுகின்றனர். ராகுல் காந்தி, வருண் காந்தி வரை அந்தப் பெயர் நீடித் துக்கொண்டே போகிறது. ராஜீவ் காந்தி யின் மனைவி சோனியா பெயருடனும் “காந்தி’ சேர்க்கப்பட்டது.(மேலும்....)

விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வறுமை ஒழிப்பில் பாரிய பங்களிப்பு

(பீ. ஏ. அந்தோனிமார்க்)

30 வருட போராட்டங்களின் பின்பு வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற வகையிலும், குறை வருமானம் பெறும் நாடு என்ற வகையிலும், இடைத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலைக்கு உயரும் நிலையிலும் நீடித்து நிலை நிற்கக் கூடிய செயல் திட்டங்களை முன்வைப்பது மிகவும் முக்கியமாகும். இப்படியான ஒரு உள்நாட்டு சூழ் நிலைக்கு பொருத்தமாக விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் பங்களிக்க வேண்டும். (மேலும்....)

மன்னார் 2ம் கட்ட எண்ணெய் அகழ்வு

நான்காவது கிணற்றின் அகழ்வு இன்று ஆரம்பம்

மன்னார் கடற்பரப்பில் இரண்டாம் கட்ட எண்ணெய் அகழ்வின் நான்காவது எண்ணெய்க் கிணற்றின் அகழ்வு வேலைகளை கெய்ன் லங்கா நிறுவனம் இன்று முதலாம் திகதி ஆரம்பிக்கிறது. கெய்ன் இந்தியா மற்றும் கெய்ன் லங்கா நிறுவனங்களின் தொடர்பாடல் தலைவர் கலாநிதி சுனில் பாரதி இன்று முதலாம் திகதி முதல் அகழ்வு வேலைகளை தமது நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார். கற்பிட்டி கடற்பரப்பிலிருந்து 22 கிலோ மீற்றர் (கடல் தொலைவு) தொலைவிலேயே அகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இக்கிணறு CLPL Wallago என பெயரிடப்பட்டுள்ளது. தோண்டப்படவுள்ள இக்கிணறு கடலிலிருந்து ஒரு கிலோ மீற்றர் ஆழத்திலும் மூன்று கிலோ மீற்றர் கடல் படுகையிலிருந்தும் அமைந்துள்ளது. தர்க்க ரீதியாக நோக்கும் போது இக்கிணற்றில் எரிவாயு காணப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் அங்கு எண்ணெய் இல்லை என்று கூற முடியாது என்றும் பேச்சாளர் சுனில் பாரதி தெரிவித்தார். (மேலும்....)

கணித பிரிவில் யாழ். இந்து மாணவர் 8 பேருக்கு 3 ஏ, வேம்படி மாணவியர் மூவருக்கு உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி

க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளில் இணையவழி மூலம் பெறப் பட்ட தகவல் களின் அடிப் படையில் யாழ். இந்துக் கல்லூரி கணிதம் மற்றும் வர்த்தகப் பிரிவிலும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை விஞ்ஞானப் பிரிவிலும் முன்னிலையில் உள்ளன. (மேலும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com