Contact us at: sooddram@gmail.com

 

ஆடி 2015 மாதப் பதிவுகள்

ஆடி 31, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள்


 

(இவர்கள் சபைக்கு வந்தாவது தூங்கினார்கள். ஏனைய இவர்களின் சகாக்கள் சபைக்கு வராமல் வீட்டிலே தூங்கினார்கள்)

வெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே

போர் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்,

உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்,

கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்,

கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்,

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா!

"தூங்காதே தம்பி தூங்காதே தூங்கி விட்டு சோம்பேறி என்ற பெயர் வாங்காதே"

தலமைகளே கவலை வேண்டாம் மன்னாரில் பிரமாண்டமான வயோதியர் இல்லம் பஞ்சு மெத்தைகள் உங்கள் சுகமான தூக்கத்திற்கு இதமான இடம்

வாரீர்....... வாரீர் பலன் பெறுவீர்.

(Mannar Voice Mannar)

சிறுபான்மையின நிறங்களற்ற கொடி விவகாரம்

யட்டிநுவர பிரதேசத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகள் பறக்கவிட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் யட்டிநுவர பிரதேச சபை தலைவர் துசித குமார கைது செய்யப்பட்டுள்ளார். நடுவில் சிங்கமும் நான்கு மூலைகளில் அரச இலைகளும் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்த கொடி கடந்த திங்கட்கிழமை (27) குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த கூட்டத்தில் பறக்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்கா- கியூபா

பொருந்தா நட்பு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எல்லா உறவுகளும் ஒரேமாதிரியானவையல்ல. சில முறிந்த உறவுகளைச் சரிசெய்வது சாத்தியமற்றது. 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை' என்பது புகழ்பெற்ற வாக்கியம். உலக அரசியலில் அவ்வாக்கியம் எப்போதும் பொருந்திவருவதல்ல. அமெரிக்க-கியூப உறவின் கதை மிக நீண்டது. உறவும் நெடியது, பகையும் கூடத்தான். ஐக்கிய அமெரிக்காவின் மூக்கு நுனியின் கீழ் அமைந்திருக்கும் தீவு நாடுதான் கியூபா. ஸ்பானிய கொலனித்துவத்தின் கீழும் அதன் பின் அமெரிக்க பொம்மை ஆட்சிகளின் கீழும் தொடர்ச்சியாக இருந்து வந்தது. 'வாழைப்பழக் குடியரசுகள்' என அழைக்கப்பட்ட பல்தேசிய வாழைப்பழக் கம்பனிகளின் ஆதிக்கத்தின் கீழிருந்த இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று. 1959ஆம் ஆண்டு ஃபிடல் கஸ்ற்ரோ தலைமையிலான புரட்சிப்படைகள் கியூபாவின் சர்வாதிகாரியாக இருந்த பாடிஸ்டாவை விரட்டியடித்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.(மேலும்....)

ரியுனியன் தீவில் ஒதுங்கிய சிதைவு மாயமான மலேஷிய விமானத்தினுடையதென நம்பிக்கை

இந்திய பெருங்கடல் தீவான ரியு னியனில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விமானம் ஒன்றின் பாகங்கள் ஓர் ஆண்டுக்கு முன் மாயமான மலேஷியாவின் எம்.எச்.370 விமானத்துடைய தாக இருக்கலாம் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகள் அரம்பிக்கப்பட்டுள் ளன. குறித்த தீவுப் பகுதியில் இரண்டு மீற்றர் நீளம் கொண்ட விமானத்தின் சிதைந்த பாகம் ஒன்று கடந்த புதன் கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. போயிங் 777 விமானத்துடையதென நம்பப்ப டும் இந்த சிதைவு பெரும்பாலும் காணாமல்போன விமானத்துடைய தாக இருக்கலாம் என்று மலேஷிய பிரதி போக்குவரத்து அமைச்சர் அப் துல் அஸீஸ் கப்ராவி குறிப்பிட்டார். (மேலும்....)

சமஷ்டி கோரிக்கையை பிரிவினையாக திரிபுபடுத்த முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞா பனத்தில் சமஷ்டி யென்ற பிரிவினை கோரிக்கை உள்ளதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்ட பொய் என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். கடந்த காலத்தை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்ல முயற்சிக் கின்றது எனக் கூறி ஒரு தரப்பினரைப் பயமுறுத்துவதற்கே இவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப் படுவதாக அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறையிலான இலங்கைக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இலங்கை அல்ல. எனினும், பிரிக்கப்படாத இலங்கைக்குள் சமஷ்டி முறை பற்றியே கூறப்பட்டுள்ளது. அதில் பிரிவினை பற்றி எதுவும் குறிப்பிடப்ப டவில்லையென டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதான கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி. இது சமஷ்டி கொள்கையை கடைப்பிடிக்கும் கட்சியாகும். அப்படியான கட்சி சமஷ்டிக்கு பரிந்துபேசாமல் இருக்க முடியாது. மீண்டும் பழைய நிலைக்கே அவர்கள் செல்லப்போகிறார்கள் என மக்களை அச்சமூட்டுவதற்காக திரிபு படுத்தப்பட்ட பொய்யே த. தே. கூ பிரிவினை கோருவதாக முன்வைக்கப்படும் கருத்து என்றும் அவர் கூறினார். சமஷ்டிக் கொள்கை என்பது பிரிவினையைக் கோருவது அல்ல. இவ்வாறான கருத்துக்கள் முட்டாள் தனமானவை. இதற்கு மக்கள் வாக்குகள் மூலம் பதில் சொல்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதேநேரம், அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் இனரீதியான பிரசாரங்கள் துரதிஷ்டவசமானவை. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாக்காளர்கள் அதற்கான சிறந்த பதிலை வழங்குவார்கள் என்றும் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்வதே அரசாங்கத்தின் நோக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி அதிகாரம் கோரினாலும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அன்று மலைநாட்டு சிங்களவர்கள் சமஷ்டி கோரிய போது தமிழ் மக்கள் அதை எதிர்த்ததாக குறிப்பிட்ட அவர் இன்று தமிழ் மக்கள் சமஷ்டி கோருகையில் சிங்கள மக்கள் எதிர்ப்பதாகவும் கூறினார். தமிழ் கட்சிகள் 1950களில் சமஷ்டி அதிகாரம் கோரியதாகவும் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவே முதலில் சமஷ்டி பற்றி பேசியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ் கட்சிகள் 1950 கள் முதல் சமஷ்டி அதிகாரமே கோரி வந்தன. சமஷ்டி கட்சியொன்றையே அன்று தமிழ் கட்சிகள் அடையாளப்படுத்தி இலங்கையின் சமஷ்டி அதிகாரம் குறித்து எஸ்.டபிள்யு. பண்டாரநாயக்கவே முதலில் பேசினார். எமது நாட்டை முன்னேற்றுவதற்கு சமஷ்டி முறை சிறந்தது என அவர் குறிப்பிட்டார். சமஷ்டிக்கு பயமில்லாததால் அன்று மலைநாட்டு சிங்கள பெளத்தர்கள் சமஷ்டி கோரினர். ஆனால் தமிழ் மக்கள் அதனை எதிர்த்தார்கள். ஐக்கிய இலங்கைக்குள் வாழ வேண்டுமென்பது அவர்கள் கோரினார். தற்பொழுது தமிழ் மக்கள் சமஷ்டி அதிகாரம் கோருகையில் சிங்கள மக்கள் எதிர்க்கின்றனர் என்றார். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண தெரிவுக்குழு அமைத்து 02 வாரத்தில் அறிக்கை கோரியிருந்த மஹிந்த ராஜபக்ஷ அந்த அறிக்கையை தாமதப்படுத்துமாறு தெரிவுக்குழுவின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு கூறியிருந்ததாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

ஐரோப்பாவில் விவசாயிகளின் போராட்டம் வலுப் பெறுகின்றது

ஐரோப்பாவில் விவசாயிகளின் போராட்டம் நாடுகளிடையே பரவி வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு வீதிகளை மறித்து பிராஸ் இல் தமது விளை பொருட்களுக்கு நியாய விலை கோரி நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றது. இடைதரகர்கள் மூலம் பெரும் முதலாளிகள் உற்பத்தியாளர்களின் பொருட்களை வைத்து இடைத் தரகு மூலம் பெரும் பணம் ஈட்டி வந்தனர். உற்பத்தியாளனும் நுகர்வோனும் இதில் பயன் அடைவதற்கு பதிலாக உற்பத்திலோ அல்லது பயன் படுதலிலே எவ்வித பங்காளியாகவும் இல்லாத இடைத் தரகு முதலாளியை எதிர்த்து பிரெஞ் விவசாயிகள் நடாத்திய போராட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இந்தப் போராட்டம் பெல்ஜியம் வரை விரிவடைந்திருக்கின்றது. பிரெஞ்சு விவசாயிகளை பின்பற்றி, பெல்ஜிய விவசாயிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களும் தமது பொருட்களுக்கு நியாய விலை கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்துள்ளனர். பெல்ஜிய சூப்பர் மார்க்கட்டுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் மிகப்பெரிய வணிக நிறுவனமான Colruyt, நேற்று மாலை முற்றுகையிடப் பட்டது. இன்றும் சில சிறிய நகரங்களை இணைக்கும் வீதிகளை மறித்து போராட்டம் நடைபெற்றது. நாளை பெரிய வீதிகளிலும் மறியல் போராட்டம் நடக்கும் என்று விவசாயிகளின் சங்கம் அறிவித்துள்ளது.

ஆடி 30, 2015

பொன்னான வாழ்வு மண்ணாகி போனால் துயரம் நிலைதானா? உலகம் இதுதானா?


ஜூலை 29, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாள். இவ் ஒப்பந்தம் பின்வரும் முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

1) ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். இலங்கை ராணுவத்தினரும், போராளிகளும் போரை நிறுத்த வேண்டும்.

2) மூன்று நாட்களுக்குள் ராணுவத்தினர் அவர்களுடைய முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். போராளிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

3) இலங்கையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். ஆயுதங்களை ஒப்படைத்த போராளிகள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று, மற்ற குடிமக்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

4) தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரே தமிழ் மாகாணமாக அமைக்கப்படும். இந்த மாகாண சட்டசபைக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். ஒருவேளை தாமதமானால் அதே ஆண்டு டிசம்பர் 31 ற்கு முன்னர் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும்போது, அதை மேற்பார்வையிட இந்தியாவில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள். (மேலும்....)

ஒற்றுமைப்படார் அடுத்தவரை தூற்றி சிண்டு முடிவார்!

யாழிசம், மாக்சிசம் போலவே இப்போது புலியிசம் கூட தேர்தல் பரப்புரையை செய்ய தொடங்கி விட்டார்கள். யாழிசம் துரோகிகள் என கர்ச்சிக்க, கலப்பு மாக்சிசம் ( கட்சி சொத்துகள் தலைவர் சொத்தாக இருப்பது) பொறாமையுடன் திட்டித்தீர்க்க, புலியிசம் முன்பு போல எதிர்ப்பவரை போட்டுத்தள்ள முடியாததால் சிண்டு முடிய தொடங்கியுள்ளது.
எமது மக்களின் ஒற்றுமையை குலைப்பதன் மூலம் எமது பலத்தை குறைத்து எதிரியை பலப்படுத்தும் துரோகத்தனத்தை கஜேந்திரகுமார் செய்வதாக கர்ச்சிக்கிறது கூட்டமைப்பு. ஈபிடிபி இதுவரை அவர்களுக்கு வாக்களித்து என்னத்தை கண்டீர்கள் எமக்கு வாக்களியுங்கள் என கூட்டமைப்பின் வெற்றி மீது பொறாமை கொண்டு திட்டித் தீர்க்கிறது. புலி அணி அமைப்பாளர் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் என சிண்டு முடிகிறார். (மேலும்....)

பிரபாகரனை மகிந்த தாக்கிய பின்னரே கொல்லப்பட்டார் என்ற செய்தி உண்மை என்கிறார் தயா மாஸ்ரர்

பிரபாகரனை மகிந்த தாக்கிய பின்னரே கொலை செய்யப்பட்டார் என கருணா அண்மையில் தெரிவித்தது உண்மையே என 2009 ம் ஆண்டு: தை மாதம் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் ஊடக பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். படையினரிடம் சரணடைந்த பிரபாகரன் கைது செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டது உண்மைதான் என தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். பிரபாகரனை படையினர் கைது செய்த பின்னர் வெளிநாடு சென்றிருந்த மகிந்த அவசர அவசரமாக நாடு திரும்பி கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்து மண்ணை தொட்டு கும்பிடும் போது பிரபாகரன் கைது செய்யப்பட்டிருந்ததாக தயா மாஸ்டர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘Windows 10’ ஐ வெளியிட்டது மைக்ரோசொப்ட்

மிக நீண்ட காலமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 பதிப்பு, உலகளாவிய ரீதியில் இன்று (29) வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பு, ஏற்கனவே விண்டோஸின் 7, 8, 8.1 ஆகிய பதிப்பைக் கொள்வனவு செய்தோருக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்பதோடு, வருடந்தம் அதற்கான சந்தாவை செலுத்துவதன் மூலம் மீள்புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பதிப்பினை நேரடியாக இணையத்தின் மூலம் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளும் வகையில் வழியமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்காக முற்கூட்டிய பதிவு அவசியம் என மைக்ரோசொப்ட் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்படி முதலில் பதிவு செய்தோருக்கு முதலில் தரவிறக்கம் செய்வதற்கான அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏனையோர் படிப்படியாக ஒரு சில நாட்களில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம். விண்டோஸ் 8 இனது முகப்பை சற்று வித்தியாசமாக வடிவமைத்துள்ள இப்பதிப்பு கிட்டத்தட்ட விண்டோஸ் 8 இனை ஒத்ததாகக் காணப்படுகின்றது. ஆயினும் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியுள்ள விண்டோஸ் நிறுவனம் தனது இணைய உலாவியான இன்டர்நெற் புரோசருக்கு விடைகொடுத்துள்ளது. அதற்கு பதிலாக எட்ஜ் இனை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் ?

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை சொல்வதற்கு முன்பாக சில கசப்பான உண்மைகளை சொல்லவிரும்புகிறேன். இதை எழுதுவதற்கு முன்பாக ஊரில் உள்ள பலதரப்பட்ட மட்டங்களில் உள்ளவர்களிடமும் புலம்பெயர் நண்பர்களுடனும் தொலைபேசி, ஈமெயில், பேஸ்புக் ,இஸ்கைபி என பலதரப்பட்ட தொடர்பாடல் சாதனங்களினூடு தொடர்புகொண்டு தகவல்களை பெற்று மக்களின் மனநிலையை ஆராய்ந்திருக்கிறேன்.
அதைவிட வாழ்வைத் தொலைத்து நிற்கும் ஒருசில முன்னாள் போராளிகளுடனும் பேசியிருக்கிறேன். விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அரச அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள் , ஊடகவியலாளர்கள் , எழுத்தாளர்கள்,ஆசிரியர்கள் கூலிவேலை செய்வோர் என பலதரப்பட்ட வருடனும் தொடர்புகொண்டிருக்கின்றேன். (மேலும்....)

2013 லேயே டக்ளசின் வீழ்ச்சியை சொன்னது நானுங்க

கெளரவ வல்வை நகரபிதா இனிம பா.உ ஆக வரவிருக்கும் அனந்தராஜ் சேர் சாட்சியுங்க. இந்த மாகாண சபை தேர்தலின் முடிவுகள் ஒரு வகையில் முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நாலு ஆண்டுகளில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்சி பற்றிய மக்களின் மதீப்பீடாக கொள்ளத்தக்கது. புலிகள் அழிக்கப்பட்டபின்னர் அவர் தன்னுடைய கட்சியை போருக்கு பின்னரான ஜனநாயக சூழலில் மக்களின் விருப்புவெறுப்புகளை அனுசரித்து போகின்ற கட்சியாக மாற்றியமைக்கவில்லை. யாழ் மாநகரசபை மேயர் தெரிவிலிருந்து யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு வரை மக்களின் விருப்புத் தெரிவை புறக்கணித்து தனக்கு வேண்டப்பட்ட திறமையற்றவர்களையே தேவானந்தா நியமித்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை அதிகாரத்தை பாவித்து மிரட்டி பாலுறவுசெய்த முன்னைநாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் போன்ற பாலியல் குற்றவாளிகள் மீது விசாரணைகளை தொடங்குவதை தவிர்த்ததன் மூலம் மாணவர்களின் ஆதரவை இழந்தார். தேவானந்தா மீதான இன்னொரு குற்றச்சாட்டு தமிழ்ப்பகுதிகளில் முதலீடு செய்பவர்களுக்கான சுதந்திரமான போட்டிச்சூழலுக்கும் அவர் தடையாக இருக்கிறார் என்பது. வல்வெட்டித்துறையிலிருந்து தேவானந்தா பல பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும். தமிழ்த்தேசியத்தையும் பிரபாகரனையும் பூச்சாண்டி காட்டி மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கத்தைவிட திறமையான பாடசாலை அதிபராக இருந்து மக்களுக்கு களங்கமற்ற சேவைசெய்த ந.அனந்தராஜையே மக்கள் அதிக விருப்பு வாக்குமூலம் நகரபிதாவாக தெரிவுசெய்தார்கள். (நாட்டில் அதிதிறமையாக செயற்படும் நகரசபைகளில் வல்வெட்டித்துறை முதன்மையானது)
(நட்சத்திரன் செவ்விந்தியன்)

புலித் தோல் போர்த்த கழுதையை உரித்துக் காட்டிய சிவாஜி!

வவுனியாவில் நடந்த கூட்டமைப்பின் கூட்டத்தில் சிறிதரன் புலிகளைப் பற்றி கேவலமாகப் பேசியது உண்மை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கத்தைச் சந்தித்த முக்கியஸ்தர் ஒருவருக்கே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘முள்ளிவாய்க்காலில் புலிகள் சயனைட் கடித்து செத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாம் இங்கு எதற்காக வந்து நிற்கின்றார்கள்‘ என்று சிறிதரன் சொன்னார். சிறிதரன் இவ்வாறு சொல்லும் போது அருகில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான சிவஞானம் உட்பட பலர் இருந்தனர். சிறிதரன் இவ்வாறு சொன்ன போது நான் சொன்னேன் ‘புலிகளே இறுதி யுத்தத்தின் போது ஆயுதங்களை மௌனிக்கின்றோம் எனச் சொன்னார்கள். பின்னர் ஏன் புலிகள் சயினட் கடிக்க வேண்டும் என சிறிதரனைக் கேட்டேன்‘ இவ்வாறு சிறிதரன் குறித்த முக்கியஸ்தருக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். (மேலும்....)

யாழில் காணாமல் போனதாக கூறப்பட்ட தம்பிராஜாவின் மகன் கைது

யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான மு.தம்பிராஜாவின் 19 வயதான திருவளவன் தம்பிராஜா வெள்ளவத்தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதய குமார வுட்லரின் ஆலோசனைக்கு அமைய யாழில் இருந்து கொழும்புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த ஆகியோருடனான குழுவுடன் இணைந்து அவரை இவ்வாறு கைது செய்ததாகவும், நேற்று இரவு 11.00 மணியாகும் போதும் அவரிடம் விசாரணைகள் தொடர்ந்து வந்ததாகவும் பொலி ஸார் தெரிவித்தனர். காணாமல் போனதாக கூறப்பட்ட திருவளவன் தம்பிராஜா அவரது சுய விருப்பின் பேரில் யாழில் இருந்து கொழும்புக்கு பஸ் வண்டியில் வந்துள்ளமை நேற்று இரவு வரை இடம்பெற்ற ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அதனூடாக அவர் கடத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர், முறைப்பாட்டின் பின்னணி மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் தெரிந்துகொள்ள விஷேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் குறித்த காணாமல் போனமை தொடர்பிலான முறைப்பாடானது உள் நோக்கம் ஒன்றின் அடிப்படையில் செய்யப்பட்டது என்பதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் பல்வேறு கோணங்களில் தொடர்வதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் உறுதிப்படுத்தினார். (Tamil News Net)

45 இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்

அகதிகளாக இந்தியாவில் பல பகுதிகளிலும் உள்ள முகாம்களில் குடியேறியிருந்த இலங்கையர்கள் 45 பேர், நேற்று செவ்வாய்க்கிழமை (28) சர்வதேச விமான நிலையத்தனூடாக இலங்கையை வந்தடைந்தனர். இதன் பிரகாரம் திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமாரி, விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 45 பேரும் முகாம்களின் அதிகாரிகளின் அனுமதியைப்பெற்றுக்கொண்டு சொந்த அவர்களது சொந்த நாடான இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாட்டுக்கு வந்த அகதிகளில் மீது எந்தவொரு பொலிஸ் முறைப்பாடும் பதிவாகியில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த மே மாதம் 41 இலங்கை அகதிகள் இலங்கைக்கு நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முல்லா ஒமர் மரணம்?

தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முஹ மது ஒமர் மரணமடைந்திருப்பதாக ஆப்கான் அரசு மற்றும் உளவுப்பிரிவு வட்டாரங்கள் அறிவித்துள் ளன. எனினும் தலிபான் தரப்பினர் இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. வெளியுலகுக்கு வராத முல்லா ஒமர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே மர ணித்துவிட்டதாக ஆப்கான் அரச வட்டாரம் நேற்று குறிப்பிட்டது. எனினும் இந்த அறிவிப்பு குறித்து மேலதிக எந்த தகவலும் வெளியிடப்பட்டிருக்க வில்லை. எனினும் பாகிஸ்தான் அரசு முல்லா ஒமர் இர ண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்ததை உறுதி செய்ததாக ஆப்கான் அரச வட்டாரம் குறிப்பிட் டுள்ளது.இந்த தகவல் குறித்து கூடிய விரையில் பதில ளிப்பதாக தலிபான் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்த காலங்களிலும் பல முறை முல்லா ஒமர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகி இருந் தன. எனினும் ஆப்கானின் நம்பகமான அரச தர ப்பு முல்லா ஒமரின் மரணத்தை உறுதி செய்திருப்பது இது முதல் முறையாகும். ஆப்கானிஸ்தானி லிருந்து சோவியட் படைகள் விலகிக்கொண்ட பின்னர் அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், தாலிபானுக்கு எதி ரான இயக்கங்களைத் தோற்கடித்தவர் முல்லா ஒமர் ஆவார். (மேலும்....)

கொலைக்குற்றம்

ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினருக்கு மரண தண்டனை

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் கடந்த சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பி இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.2007 டிசம்பர் 25 ஆம் திகதி வந்தாறுமூலை ஏபீசி வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய கே. எஸ். பிரமாவதி என்ற குடும்பப் பெண் அவரது வீட்டில் உறங்கிக்கொண்டி ருந்தவேளை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். சந்தேக நபரை ஏறாவூர்ப் பொலிஸார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இக்கொலைச் சம்பவத்தின் சந்தேக நபராக ஈ.பி.டி.பி இயக்க முன்னாள் உறுப்பினர் திலகன் என்றழைக்கப்படும் பாலுதாஸ் குறிப்பிடப்பட்டிருந்தார். குற்றம் நிருபிக்கப்பட்டதை யடுத்து இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி நபர் ஏற்கனவே அவரது பேக்கரியில் வேலை செய்த முன்னாள் ஈ.பி.டி.பி இயக்க உறுப்பினர் என குரலின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தூக்கிலிடப்பட்டார் யாகூப் மேமன்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் இன்று காலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். 1993 மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த குண்டுவெடிப்பில் 257 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேமன். யாகூப் மேமனின் கடைசி கருணை முறையீட்டு மனுவை குடியரசுத் தலைவர் நேற்று நிராகரித்தார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் யாகூப் மேமன் தரப்பு வழக்கறிஞர்கள் இடைக்கால தடை கோரி மனு தாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தடைகோரிய யாகூப் மேமனின் மனுவை நிராகரித்தனர். மேலும், இன்று அதிகாலை 5 மணியளவில் யாக்கூப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள சிறையில், யாகூப் மேமன் இன்று காலை 6.35 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதை முன்னிட்டு நாக்பூர் சிறையை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து போலீசாரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆடி 29, 2015

என் மனவலையிலிருந்து.........

இன்று தோழர் சாருவின் நினைவு நாள்

(சாகரன்)

நக்சல்பாரி எழுச்சி என்னும்  வசந்தத்தின் இடி முழக்கச் சூத்ரதாரி. மேற்கு வங்கத்தில் பிறந்தவர். பல புரட்சியாளர்களை உருவாக்கியவர். நக்சல்பாரி கட்சியெனும்
இந்திய கம்யூனிஸ்ட் [ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ] (ML) கட்சியின் செயலர். இந்த நாளில் தான் அதிகார வர்க்கத்தினர் அவரை கொன்றார்கள். ஆனால், தோழர் சாருமஜீம்தார் எண்ணற்ற இதயங்களில் உயிர் வாழ்கிறார். ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் நாட்டை பின்புலமாக கொண்டு நாம் செயற்பட்ட காலம் எமக்கான அரசியல் வகுப்புக்கள் மட்டும் அல்ல வேறு பல வகையிலும் உதவிகளைப் புரிந்தவர்கள் இவர்கள். தோழர்கள் சுஜாதா, வள்ளி இன்னும் பல கும்பகோணத்துத் தோழர்கள் பலர் எம்முடன் இணைந்து ஈழவிடுதலைப் போராட்டதிலும் ஈடுபட்டனர். இந்திய அரசாங்கம் எம்மை எச்சரிக்கையுடன் பார்த்து அவதானித்து வந்ததிற்கு இவர்களுடனான உறவுகளும் காரணமாக அமைந்தன. சீனாவின் இந்தியா மீதான சண்டையை முன்னிறுத்தி சீனா ஒரு பகையான நாடு அவர்கள் கொண்டிருந்த மாவோயிசக் கொள்கை இந்தியாவிற்கு எதிரானது என்பதை பரவலாக இந்திய மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு மாவோயிசம் பற்றிய வெறுப்பை வளர்திருந்தது இந்திய ஆளும் வர்க்கம். இதனால் மாவோயிசக் கொள்கைகளை அதிகம் தூக்கிப்பிடித்த இந்த நக்சல்பாரிகளை ஒரு அளவிற்கு மேல் வளர முடியாமல் இந்திய ஆளும் வர்க்கம் தடுத்து என்னமோ உண்மைதான். ஆனாலும் ஆந்திராவிலும், இன்னும் பல பழங்குடி மக்கள் மத்தியிலும் இவர்கள் இன்றும் பலமாக அரசியல் வேலைகளைச் செய்து வருகின்றனர் என்பது உண்மையானது.இன்னமும் விவசாயிகளின் வீரம் மிக்க போராட்டம் நடைபெற்ற ஆந்திராவில் தோழரின் புகழ் நிலைத்தே நிற்கின்றது. இவ் அமைப்பின் உறுப்பினர்களுடன் நடாத்திய இரகசியச் சந்திப்புக்கள் இன்றும் பசுமையாக மனத்தில் வந்து போகின்றன. தமது பலத்தில் தமது மக்களில் தங்கி நின்று போராடும் போராட்ட வழி முறைகளை அன்று தொட்டு இன்றுவரை பின்பற்றி வருவதினால் இவர்களின் போராட்டத்தை இன்று வரை இந்திய ஆளும் வர்கத்தினால் அழிக்க முடியவில்லை. ஈழத் தமிழர் போல வெளிநாடுகள் ஏதும் செய்யும் என்ற எதிர்பார்பில் வீங்கிப் பெருத்த போராட்டம் முள்ளிவாய்கால் கோவணத்துடன் முடிவுற்றதற்கான காரணங்களை அறிய நாம் இவர்களிடம் பாடங்கள் எடுத்தேயாக வேண்டும் தோழர் சாருமஜீம்தாரின் நினைவு தினத்தில் இவ்விடயத்தை பகிர்வது சாலவும் பொருத்தமானதாகும்.
‘கிழவன் மலடில்லை
நாமெல்லாம் வாரிசுகள்தான்..’
என்ற கவிதை வரிகளுக்கேற்ப அவரது நினைவு என்றும் நீடூழி வாழும். (நன்றி கலையரசன் சில தகவல்களுக்கு)

இணக்க அரசியலும் பிணக்க அரசியலும்

(பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி)

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட மாகாண சபை அமுலாக்கப்பட்ட போதும், ஒஸ்லோ உடன்படிக்கையின் போதும், வலிய வந்த சீதேவிகளைத் தட்டிக் கழித்து, ‘விட்டால் குடுமி, சிரைத்தால் மொட்டை’ என்று போய் இன்று எதைக் கண்டோம்? இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில், அதிலும் மேற்குலகுடன் நட்பாக உள்ள ஐ.தே.க மீண்டும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறக் கூடிய சந்தர்ப்பத்தில், விட்டுக் கொடுத்தல்களுடன், நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளைத் தேடுவது புத்திசாலித்தனமானது.
அந்த நடைமுறைச் சாத்தியமான விடயத்திற்குள் தான் தமிழீழக் கோரிக்கை, யுத்தக் குற்ற விசாரணை எல்லாமே கைவிடப் படுகின்றன. மகிந்தவைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று எவ்வளவு தான் துள்ளிக் குதித்தாலும், சிங்கள அரசியல்வாதிகளாலேயே அதைச் செய்ய முடியவில்லை. (மேலும்....)

தேர்தல் இங்கே, இந்தியா எங்கே?

(ப. தெய்வீகன்)

இலங்கையின் சகல அரசியல் அதிர்வுகளையும் தனது அரூப கரங்களால் அருளாட்சி செய்யும் இந்தியா, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதானது இங்கு தற்போது சூடுபிடித்துள்ள சிக்கலான அரசியல் களத்தில் கவனம் செலுத்த நேரமில்லாத விடயமாக ஓரத்தில் கிடக்கிறது. ஆட்சிக்கட்டிலிருந்து மஹிந்தவை துரத்தியுதுடன் தனது பொறுப்பு முடிந்துவிட்டது என்று ஓய்வெடுப்பது போல காணப்படும் இந்தியாவின் மஹிந்தவுக்கு பின்னரான இலங்கை நோக்கிய அரசியல் வியூகம், தற்போது எப்படியான செயல்நிலையிலுள்ளது? அண்டை நாட்டில் வந்து நின்று அக்கப்போர் புரிவதற்கு இரகசிய திட்டங்களுடன், மஹிந்தவோடு கூட்டமைத்த சீனாவை இலங்கையிலிருந்து துரத்துவதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலை மைத்திரிக்கு ஆதரவான கருவியாக இந்தியா பயன்படுத்திக்கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். (மேலும்....)

பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு

விளாசித்தள்ளிய சசி தரூர் உரை

எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சசி தரூர். 189 ஆண்டு பாரம்பரியம் மிக்க 'ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி'யில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆற்றிய உரைதான் இணைய உலகில் இந்த வாரத்தின் வைரல். பிரிட்டனால் காலனியாதிக்க நாடுகள் பலன் பெற்றனவா, சுரண்டப்பட்டனவா எனும் விவாதப் பொருளில் நடந்த விவாதம் அது. காலனியாதிக்கத்தால் பிரிட்டன் எவ்வளவு சுரண்டியது என்று பேச ஆரம்பித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய 15 நிமிஷ உரையில், அன்றைய இந்தியாவை அப்படியே கண் முன் கொண்டுவந்த நிறுத்தியதோடு, பிரிட்டனின் சுரண்டல்களையும் அம்பலப்படுத்தினார். இணையத்தில் லட்சக்கணக்கானோரால், பார்க்கப்பட்ட / கேட்கப்பட்ட / பேசப்பட்ட சரி தரூரின் உரை இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி வெளிப்படையாக சசி தரூரைப் பாராட்டினார். (மேலும்....)

கிரேக்கம் கடன் நெருக்கடி

2 பில்லியன் யூரோக்களை செலுத்தியது

கிரேக்கம் செலுத்தவேண்டி இருந்த 2.05 பில்லியன் யூரோக்களை செலுத்திவிட்டதாகவும், தற்போது நிலுவையேதும் இல்லை என, சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது. கிரேக்கத்துக்கு குறுகிய கால கடனாக 7 பில்லியன் யூரோக்களை வழங்க, ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்ததையடுத்து, சர்வதேச நாணய நிதியத்துக்குச் செலுத்த வேண்டியிருந்த 2.05 பில்லியன் யூரோக்கள், ஐரோப்பிய மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டியிருந்த 4.2 பில்லியன் யூரோக்கள் ஆகியன செலுத்தப்பட்டுள்ளன. கிரேக்கத்தின் பிணைத் தொகையைப் பெற்றுள்ளதாக, ஐரோப்பிய மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. பணமில்லாத நிலை காரணமாக, சர்வதேச நாணயநிதியத்துக்கு ஜூன் மாதமும் இம்மாத ஆரம்பத்திலும் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்த, கிரேக்கம் தவறியிருந்தது.

தேசிய பிரச்சினைக்கு 13க்குள் அரசியல் தீர்வு

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லாத அரசியல் தீர்வொன்றை ஆட்சியமைத்து 6 மாத காலத்தினுள் முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சகல மக்களினதும் நியாயத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதற்காக பரந்த அதிகாரங்கள் மற்றும் மாவட்ட ரீதியிலான பொறிமுறை ஒன்றுடன் கூடிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்பதாகவும் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.(மேலும்....)

ஆடி 28, 2015

அப்துல் கலாம் காலமானார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சற்று முன்னர் மரணமடைந்துள்ளார். உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சற்றுமுன்னர் காலமாகியுள்ளார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.இல் திங்கட்கிழமை(27) நடைபெற்ற கருத்தரங்கில் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  மயங்கி விழுந்த அப்துல் கலாம், பெத்தானி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது மரணத்தையடுத்து முழு இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இணக்க அரசியல் விருப்புத் தெரிவு அல்ல, சந்தர்ப்ப சூழ்நிலை !  

(மாதவன் சஞ்சயன்) 

இணக்க அரசியல் மூலம் அபிவிருத்தி செய்தவரால் அரச அனுசரணை குடியேற்றங்களை தடுக்க முடியவில்லை. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு துணைபோய் வடபகுதி மக்களுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தித்தரத்தான் முடிந்தது. 1980 பதின் பிற்பகுதியில் ஜெயகாந்தன் கூறினார் உங்க யாழ்பாணத்தார் அப்போ எங்க ஆட்களை கள்ளத்தோணி என்றார்கள் இப்போ நீங்கள் தான் கள்ளத்தோணி என யதார்த்தமாக குறிப்பிட்டார். இணக்க அரசியல் மூலம் அதிகார அரசியல் என்றவர் திருகோணமலை கோணேசர் பூமியை புனித நகராக ஆக்கமுடியவில்லை. தென்னிலங்கை கட்சிகள் இரண்டும் பொங்கலில் பயறுபோல் தம்முடன் இணங்கும் தமிழர்களை தம் கட்சியில் மந்திரிகளாக வைத்திருந்தன. அவர்கள் எல்லோராலும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் எம் இளைஞர்களுக்கு கிடைத்தன. செல்லையா குமாரசூரியர் நியமன எம்பி. தபால் மந்திரி. அவரும்  ஆயிரக்கணகில் வேலைகள் கொடுத்தவர் தான். (மேலும்....)

ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்! (1931 - 2015)

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். ராக்கெட் நாயகனின் வாழ்க்கை பக்கங்கள்..

இதுதான் கலாமின் முழுப் பெயர். அக்டோபர் 15,1931-ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா. தந்தையார் படகு கட்டும் தொழில் செய்துவந்தார். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் வீட்டுக்கு உதவினார். நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாகச் சிலாகிப்பார் கலாம். உயர்நிலைக் கல்வியை முடித்த பின், திருச்சியில் ஒரு கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்றார். எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் ஏரோனாடிக்கல் பொறியியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் இருந்தபொழுது இவரின் சகோதரிதான் நகைகளைக் கொடுத்து படிக்க அனுப்பினார். கல்லூரி வந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லியதால் தன் புத்தகங்களை எடைக்குப் போட்டுப் பணம் திரட்டப்போன இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படிக்கச் சொன்ன பேப்பர்காரரை இன்னமும் நன்றியோடு குறிப்பிடுவார் கலாம். (மேலும்....)

பேராசிரியர் சாந்தசீலன் கதிர்காமர் மறைவு

(சுகு- ஸ்ரீதரன்)

கொழும்பு, யாழ் பல்கலைக்கழகத்திலும் பின்னர் ரோக்கியோ பல்கலைக்கழகங்களிலும் நவீன வரலாறு மற்றும் சர்வதேச அரசியல் கற்கைப் பேராசிரியராக பணியாற்றியவர். முற்போக்கு ஜனநாயகவாதியாகவாதியும் - உரிமைச் செயற்பாட்டாளருமான சீலன் கதிர்காமர்  25.07.2015 இல் தனது 81வது வயதில் காலமானார். அவர் 1930 களில் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிதமான இளைஞர் காங்கிரஸ் பற்றிய விவரணத்தை புதிய தலைமுறைக்கும் எதிர்காலத்திற்குமாக மும் மொழிகளிலும் பதிவு செய்தார். நாடு தழுவிய சமூக ஜனநாயக அக்கறைகளை அவர் கொண்டிருந்தார். இலங்கையின் உண்மையான சுதந்திரத்தை நேசித்த யாழ்ப்பாணத்தின் தீண்டாமை, அநீதிகளை எதிர்த்த ஒரு இயக்கம் யாழ்ப்பாணத்தில் உருவானது பற்றியும், இந்திய சுதந்திர இயக்கத்துடன் அதற்கிருந்த தொடர்பு பற்றியும் முக்கியமான வரலாற்றுப்பதிவை மேற்கொண்டவர். (மேலும்....)

ஆசிரிய உதவியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த கோரி மக்கள் ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்றவர்களும் மற்றும் பெற இருப்பவர்களும் இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு – 03 – தரம் IIற்கு தகுதியானவர்கள் என்பதனால் அவர்களை ஆசிரிய உதவியாளர்காக நிதியமித்த திகதியில் இருந்து ஆசிரியர் சேவைக்குள் இணைத்து கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க உரிய அதிகாரிகளை பரிந்துரைக்கும்படி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டை 23.07.2015ஆம் திகதி மக்கள் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜினால் பொதுநல அக்கறை விடயமாக குறிப்பிட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் முறைப்பாட்டு இலக்கமாக HRC/2638/15 வழங்கப்பட்டுள்ளது.(மேலும்....)

வடக்கு கிழக்கு முன்னாள் முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்......!

ஆப்கான் - தலிபான் இரண்டாம் சுற்று பேச்சு சீனாவில்

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்க ளுக்கும் இடையிலான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தையை சீனாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந் துள்ளது. அமைதி பேச்சு நடத்த ஆப்கானிஸ்தான் அரசு அமைத்துள்ள குழுவின் உறுப்பினர் முகமது இஸ்மாயில் குவாசிம் இது தொடர்பாக கூறியது: ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையிலான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடை பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை அனேகமாக சீனாவில் நடைபெற வாய்ப் புள்ளது என்றார். அதே நேரத்தில் அமைதி பேச்சு வார்த்தை குழுவின் துணைத் தலைவர் அப்துல் காகிம் முஜஹித் இதனை உறுதிப் படுத்த மறுத்துவிட்டார். பேச்சு வார்த்தை நடத்தும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் இடத் துக்கான பரிசீலனையில் உள்ளன என்று அவர் கூறினார். முன்னதாக முதல் சுற்று அமைதிப் பேச்சு வார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் புறநகர் பகுதியில் இடம்பெற்றது.

செம்மை மரபுப் பள்ளி துவக்கம்!

நண்பர்களே,
செம்மை மரபுப் பள்ளி, வரும் ஞாயிறு (02/08/15) முதல் செயல்பட உள்ளது.
மரபுப் பள்ளியில் கற்பிக்கப்பட உள்ள பாடங்கள்:
1. மொழி (அடிப்படை இலக்கணம், கணிதம்)
2. வரலாறு (குமரிக் கண்ட, சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலம்)
3. இயற்கையியல் (பிரபஞ்சத் தோற்றம், இயற்கையின் அங்கங்களை உணர்தல், வேளாண்மை, சூழல் அறிவியல்)
4. வாழ்வியல் (சக உயிர்கள் மீது அன்பு செலுத்துதல், மருத்துவம் தேவைப்படா வகையில் உடல் நலம் பேணுதல், வாழ்வியல் நெறிகள்)
5. தொழிற்கல்வி ( வீட்டிற்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைச் செய்துகொள்ளும் நுட்பங்கள்)

இவை தவிர, விருப்பமுள்ளோருக்கு சிலம்பாட்டம், பிற மொழிகள் உள்ளிட்ட கூடுதல் வகுப்புகள்.

மரபுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. பள்ளியில் இணைந்து கொள்ளும் குழந்தைகளும் வந்து சேர்ந்துள்ளனர்.
இனிதே துவங்குகிறது செம்மை மரபுப் பள்ளி.

பள்ளி குறித்த விவரங்களுக்கு:
திரு. நளினி: 74012 34981
திரு. கலாநிதி: 76018 33732

(Senthamizhan Maniarasan)

சபாநாயகர் கதிரைக்கு நான் மீண்டும் செல்லமாட்டேன் - சமல் ராஜபக்ஷ

ஐந்து வருடகாலமாக சபாநாயகர் பதவியிலிருந்து “பரிப்பு” சாப்பிட்டதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித் தார். பெலியத்தை நகரில் ஞாயிறன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது, நான் மீண்டும் அந்தக் கதிரைக்கு செல்லமாட்டேன். நான் இன்று இந்த மேடைக்கு வருகை தந்தது உங்கள் முன் உரையாற்றுவதற்கு அல்ல, எனது முகத்தை உங்களுக்கு காண்பிப்பதற் காகவே. நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 17ஆம் திகதி மஹிந்தவை பிரதமராக்குவோம். ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால் இவற்றில் எவ்வித உண்மையுமில்லை. நாம் மேற்கொண்ட அபிவிருத்திகள் அனைத்தும் இடையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. இவற்றை முன்னெடுத்து மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் தெரிவித்தார்.

கிரேக்கத்தின் முக்கிய சீரமைப்புக்கு பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்கு

86 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான பொருளாதார மீட்பு திட்டம் குறித்த பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக சர்வதேச கடன் வழங்குனர்களால் கேட்கப் பட்ட மறுசீரமைப்புக்கள் குறித்த திட்டத்தை கிரேக்க பாராளுமன்றம் நிறை வேற்றியுள்ளது. வங்கித்துறை மற்றும் நீதித்துறையில் பெரும் மாற்றங்களை செய்வதற்கான அங்கீகாரத்தை பிரதமர் அலக்ஸிஸ் சிப்ராஸ், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வென்றுள்ளார். இந்த ஒப்பந்தம் யூரோவலயத்தின் ஏனைய நாடுகளால் கிரேக்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் என்றும் ஆனால், ஒன்றை யூரோ நாணய வலயத்தில் கிரேக்கத்தை தொடரச் செய்ய இதனைவிட வேறு வழி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப் பினர் ஒருவர், கிரேக்கத்தில் தேசிய கருத்தொற்றுமை கட்டியெழுப்பப்பட வேண் டும் என்று கூறினார். எனினும் இந்த வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும்போது அதற்கு வெளியில் மக்கள் ஆர்ப்பாட்டம் வெடித்ததொடு வன்முறைகளும் இடம்பெற்றது.

மீண்டும் ஊழல் ஆட்சி வரக் கூடாது கரு பரணவிதான

ஜனவரி 8ஆம் திகதி பெறப்பட்ட வெற்றியை தொடர்ந்தும் நிலைநிறுத்துவதற்காகவே தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் ஊடகத்துறை செயலாளர் கரு பரணவிதான தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் போட்டியிடவுள்ள தான் ஐக்கிய தேசிய முன்னணியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தான் ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதற்கே தீர்மானித்திருந்ததாக தெரிவித்த அவர் தேர்தலில் தோற்கடிப்பட்ட முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு விரும்பாததன் காரணமாகவே ஐ.ம.சு.மு. செயலாளரிடம் தனது முடிவை மாற்றியுள்ளதாகத் தெரிவித்தாகவும் கூறினார். சுயாதிக்கம் மிக்க ஆட்சியை மீண்டும் வராது தடுக்கவும், குடும்ப ஆட்சியை ஒழிக்கவும், மீண்டும் ஊழல் ஆட்சி தலைதூக்குவதைத் தடுக்கும் நோக்கிலேயே தான் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆடி 27, 2015

மைத்திரி-சந்திரிகா சந்திப்பு விரைவில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் விரைவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதன் பின்னர், இவ்வாரத்துக்குள்ளே இடம்பெறலாம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியுடன் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கிதருமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான சந்திரிகா, பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் இடம்பெற்ற சில அரசியல் நடவடிக்கைகள் காரணமாக அதிருப்தியடைந்திருந்தார் என்று தகவல்கள் கசிந்திருந்தன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் கம்பஹா மாவட்டத்துக்காக தயாரிக்கப்பட்டிருந்த வேட்பு மனுப்பட்டியலை, கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மாற்றி, தனக்கு தேவையானவர்களை இணைந்துகொண்டார் என்றும் அதனாலேயே தான், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு முடிவுசெய்ததாகவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

LTTE முன்னாள் உறுப்பினர் இந்தியாவில் கைது

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து போலிக்கடவுச்சீட்டை பயன்படுத்தி சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்செல்ல முயற்சித்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை, இந்திய பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், குறித்த நபர் தப்பிச்செல்வதற்கு போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் இருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் சென்னை மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளார்கள்.

ஆமா...

சொல்லிபுட்டன் நக்கல் இருக்கலாம்.....? நளினம் இருக்கக் கூடாது......?

அண்மையில் இலங்கையின் பொதுத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ் தேசியத்திற்கான சந்தை வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன. தமிழ் மக்களின் மொத்த வியாபாரியான கூட்டமைப்பின் தேசியத்தில் கலப்படங்கள் இருப்பதாக புலம்பெயர் வியாபாரிகள் சங்கம் விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து நுகர்வோர் கூட்டமைப்பு வியாபாரிகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்கும் நிலை பங்குச் சந்தையில் அவர்களின் தேசியத்திற்கு சற்று வீழ்ச்சியை உண்டு பண்ணியிருப்பதாக வன்னி பொருளியல் இதழிலிருந்து அறியக் கடைக்கிறது. கூட்டமைப்பு பல்தேசியக் கம்பனி தனது தேர்தல் விஞ்ஞாபன கணக்கறிக்கையில் கலப்படம் ஏதுமற்ற சுத்தமான தேசியம் மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ற விலையில் கிடைக்கும் என்று உறுதியளித்திருக்கிறது. (மேலும்....)

வன்னி மாவட்ட கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் ஐயா!


நீங்கள் மறக்க நினைக்கும் பல விடயங்களில் ஒன்றிரண்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
சென்னை தாம்பரத்தில் இருந்த ரெலோ முகாமில் வைத்து முத்தண்ணாவை (அவர்தான் மோகன்) கதை முடித்த கதை.
நீங்கள் பாராளுமன்றம் செல்வதற்கு முன்பாக, ரெலோ தலைவர் ஸ்ரீகாந்தாவின் கொலைவெறித் தாக்குதலுக்குப் பயந்து சென்னை சென்று தங்கியதும், அங்கு நீங்கள் மற்ற வியாபாரத்துக்கு அடித்தளமிட்ட கதை.
(கோடாம்பாக்கம் ஈ என் டி எல் எவ் காரியாலயம்)
உங்களது தலைவர் சிறிசபாரட்ணத்தை படு கொலை செய்த புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நீங்கள் செயல்படத் தொடங்கிய துரோகத்தின் கதை.
இப்படியான பலவற்றில் எதை ஐயா உங்களுடன் பகிர்ந்து கொள்வது?
நானும் ஒரு ரெலோ தானையா? ஆமா, நீங்கள் இப்போ எந்த ரெலோ?

அருட்தந்ததை ஆசீர்வாதம் இருக்கும் வரை என்னை ஒன்றும் பண்ண முடியாது..... வேணும் என்றார் சூசைதாசனிடம் கேட்டுப்பாருங்கள் என்று முணு முணுப்பது எனக்கு கேட்கின்றது!! திருச்சிக்கு வா..... எனது மாபியா தாதாக்களை வைத்து நான் வியாபாரம் மட்டும் அல்ல உனக்கு வினையும் காட்டுவேன் என்று கண்ணை உருட்டுவதும் என்னால் பார்க்க முடிகின்றது!!!!

இப்படிக்கு,
கிளிநொச்சி தொடரூந்துத் தாக்குதலில் பங்கேற்ற போராளி.

தலைவர் பிரபாகரனை வைத்து வாக்குப் பிச்சை கேட்கும் தலைகள்! - ஈபிடிபி இன் புதிய பிரச்சாரப் பீரங்கி

வேலுப்பிள்ளை பிரபாகரனே அவர்களின் தலைவர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கொக்கரித்து உள்ளார்கள், அப்படியாயின் அவர்கள் ஏன் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் கொடுக்கவில்லை? என்று வினவி உள்ளார் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல். “திம்புப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு என்று இப்போது திடீரென்று ஓதுகின்றார்கள். ஆனால் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் திம்புப் பேச்சு வார்த்தையை ஏற்காதவர்கள். எந்த முகத்தோடு சம்பந்தன் ஐயா இப்போது திம்புப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு என்று கூறுவார்? நாடாளுமன்றத்தில் கடந்த பதவிக் காலத்தின்போது இவர்களின் தீர்வு என்ன? என்று கேட்கப்பட்டபோதெல்லாம் சும்மா இருந்து விட்டு, இப்போது தேர்தல் என்று வந்தவுடன் ஒரு வழியும் இல்லாமலே திம்பு என்று பேசுகின்றார்கள். மக்களே திம்புப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்று பேச இவர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது. ஏனென்றால் திம்புப் பேச்சுவார்த்தையின் அடித்தளமே இணைந்த வடக்கு, கிழக்கு என்பது. இவர்கள் பிரிக்கப்பட்ட வட மாகாண சபையில் தேர்தல் கேட்டு ஆட்சி அமைத்தார்கள். இதே போல பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் தேர்தல் கேட்டு முஸ்லிம் கட்சியுடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை பெற்றார்கள். பின்பு எப்படி திம்பு பற்றி இவர்களால் பேச முடியும்? ”

சரவணபவன் அணி மீது சிறீதரன் குண்டர்கள் தாக்குதல்!!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களிடையேயான குடுமிப்பிடி சண்டைகள் உச்சம் பெறத்தொடங்கியுள்ள நிலையினில் அது தற்போது வன்முறை கட்டத்தை எட்டியுள்ளது.
அவ்வகையினில் கிளிநொச்சியினில் பிரச்சார நடவடிக்கைகளிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் வேட்பாளரான சரவணபவனின் ஆதரவாளர்கள் மீது சிறீதரனின் ஆதவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு கட்டைப்பஞ்சாயத்து நடத்திவரும் சிறீதரனது குண்டர்களே தாக்குதல் நடத்தியதாக சரவணபவன் தெரிவித்தார். தன்னை தவிர வேறு எவரையும் கிளிநொச்சியினில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்துவரும் சிறீதரன் ஈபிடிபி போன்றவர்களை விட மோசமாக நடந்துகொள்வதாக சரவணபவன் மேலும் தெரிவித்தார். இதனிடையே தனக்கு அரசியல் வாழ்வு வழங்கிய சிறீதரனிற்கு நன்றி தெரிவித்து வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா சிறீதரனது ஆதரவாளர்கள் சகிதம் பிரச்சாரங்களை இன்று ஆரம்பித்துள்ளார்.

உண்மையில் முட்டாள் சிவா.....? சிவாஜி........?

நிர்வாக விவகாரங்களில் பெரிய சூரப் புலி என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் வட மாகாண சபையின் தவிசாளர் சி. வி. கே. சிவஞானம். இந்நிலையில் இவருக்கு நிர்வாக சட்டம் தெரியாதா? அல்லது இவர் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு முட்டாள் பட்டம் கட்டி உள்ளாரா? என்கிற சந்தேகம் வலுவாக தோன்றி உள்ளது. கடந்த வட மாகாண சபை அமர்வில் பங்கேற்க சிவாஜிலிங்கம் சென்று இருந்தார். இவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில் இச்சபைக்கு முன்னறிவித்தல் வழங்க தவறிய காரணத்தால் அமர்வில் பங்கேற்க முடியாது என்று தவிசாளர் சிவஞானம் ஒரேயடியாக பிரகடனப்படுத்தினார். சிவாஜிலிங்கம் கதைத்த நியாயங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறி விட்டன. ஆனால் உண்மையில் உயர்நிலைத் தேர்தல்களில் போட்டியிடுகின்றபோது கீழ்நிலைச் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள் இக்கீழ்நிலைச் சபைகளுக்கு அறிவிக்க வேண்டிய தேவை எதையும் சட்டம் விதிக்கவே இல்லை. எனவே சிவாஜிலிங்கம் சட்டப் பிழை எதையும் செய்து இருக்கவே இல்லை. இவ்வகையில் வட மாகாண சபை அமர்வில் பங்கேற்கின்ற உரிமை சிவாஜிலிங்கத்துக்கு உள்ளது என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத விடயம் ஆகும். ஆனால் சிவாஜிலிங்கம் இம்மாகாண சபையில் இப்போதைக்கு உரையாற்ற முடியாது. ஏனென்றால் மாகாண சபையும் அரச சொத்து ஆகும். வேட்பாளர்கள் அரச சொத்து எதையும் தேர்தல் காலத்தில் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் சட்டம் கூறுகின்றது.

ராகுல் காந்தியின் திருச்சி வருகை... தமிழக காங்கிரஸுக்கு புத்துணர்வா?

(எஸ்.கல்யாணசுந்தரம்)

திருச்சியில் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு திரண்ட கூட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புத்துணர்வுடன் புதிய அரசியல் பாதையில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வி, கட்சியிலிருந்து ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் பிரிந்து தனிக்கட்சி தொடங்கியது உள்ளிட்ட சோதனையான நிகழ்வுகளுக்கு பிறகு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தானே முன்னின்று மேற்கொண்டார். மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்த கூட்டத்தைப் பார்த்து ராகுல் காந்தியும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே காணப்பட்டார். (மேலும்....)

கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்!

கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி)
கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு)

கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்.
கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...

மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே!

ஆடி 26, 2015

ஒரு பதிலுரைக் கட்டுரை........!

இணக்க அரசியல் மூலம் ஈபிடிபி சாதித்தவை என்ன?

(சூரியன்)

{சில வாரங்களுக்கு முன்பு மாதவன் சஞ்சயன் என்பவர் டக்ளஸ் தேவானந்தா பற்றிய விமரசனக் கட்டுரை ஒன்றை வரைந்திருந்தார். இதனை நாம் சூத்திரம் இணையத் தளத்தில் பிரசுரித்து இருந்தோம் இதற்கு பதில் கட்டுரையாக இதனை ஒரு அன்பர் அனுப்பியுள்ளார் வாசகரின் பார்வைக்கு முன்வைக்கின்றோம். (மாதவன் சஞ்சயனின் கட்டுரையை வாசிக்க.....)}

எதிர்ப்பு அரசியல் செய்து TNA இதுவரை சாதித்தது என்னவென்று கேட்டால் சிலர் கேட்கிறார்கள் EPDP இணக்க அரசியல் செய்து இதுவரை சாதித்தது என்னவென்று. EPDP யின் இணக்க அரசியல் மூலம் ஆயிரம்ஆயிரம் இளைஞர் யுவதிகளிற்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் சின்னாபின்னப்பட்ட பிரதேசங்கள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டார்கள். இந்தமண்ணில் இருந்து மக்கள் பெருவாரியாக வெளியேறுவது தடுக்கப்பட்டது. அவர்களிற்கு கிடைத்த இரண்டு அல்லது மூன்று பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு கூடுமானதை செய்தார்கள். அரசியற் தீர்வுக்காய் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் கொடுக்கும் நிலையில் இவர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. ஒரு கட்சிக்கு வாக்களித்துவிட்டு மற்றைய கட்சியிடம் என்ன செய்தீர்கள் எனக் கேட்பது முறையல்ல.(மேலும்....)

வாக்குறுதிகளும் ஆணைகளும்

மக்களிடையே இருந்து பொது நிர்வாகங்களிற்கு மக்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்கின்ற முறைமை 17ம் நூற்றாண்டிலிருந்து நடைமுறையிலிருந்து வருகின்றது. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு திறம்பட சேவையாற்றுவதாக கூறுவதை நம்பியே, மக்கள் பிhதிநிதிகளை தெரிவு செய்கின்றனர். ஆனால் அவ்வாறு சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கத் தவறினால் மக்களால் எதுவும் செய்ய முடியாது. அதாவது அடுத்த தேர்தலொன்று வரும்வரை மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை, அதே மக்களால் வாபஸ் பெறமுடியாது. ஆனால் அடுத்த தேர்தலில் மீண்டுமொருமுறை வேறு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். அதனை மக்கள் சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதைப் பொறுத்தே மக்கள் அரசியல் ரீதியாக ஏதாவது கற்றுக் கொண்டிருக்கிறார்களா என்பது பற்றி கருத்துக் கூறமுடியும். (மேலும்....)

என்ன தீர்க்கதரிசனம்......!

தண்ணிய போட்டா... தடங்கல் இல்லாம போகலாம்

1 லிட்டர் நீரில் 500 கி.மீ., பறக்கும் 'பைக்!'

''ஐம்பது ரூபாய்க்கு போடுங்க, 30 ரூபாய்க்கு போடுங்க, 20 ரூபாய் தான் இருக்கு,'' என்று, பெட்ரோல் பங்க்கில் சற்று கூச்சத்துடன் பெட்ரோல்போடும் இருசக்கர வாகன ஓட்டிகளே... இதோ உங்களை ரட்சிக்க ஒருவர் வந்து விட்டார். ''சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே பெட்ரோல் காலியாகி விட்டதா? பையிலும் 10 பைசா கூட இல்லையா? அதற்காக கவலைப்பட வேண்டாம். அருகில் ஏதாவது குளம், குட்டை இருக்கிறதா என்று தேடுங்கள். இல்லையென்றால், சாலையில் எங்காவது தண்ணீர் தேங்கிக் கிடக்கிறதா என்று பாருங்கள்,'' என்கிறார், ரிக்கார்டோ ஆஸேவெடோ.நபரின் பெயரைப் படித்தவுடனேயே வெளிநாட்டு சங்கதி தானே என்று புலம்பாமல் தொடர்ந்து படித்தால், சுவாரசியம் கூடும்! (மேலும்....)

சிறுபான்மையினர் விடயத்தில் மஹிந்த மாறிவிட்டாரா?

இது தேர்தல் காலமாக இருந்த போதிலும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் எதற்காக போட்டியிடுகின்றன என்பதை அக் கட்சிகளும் கூட்டணிகளும் இன்னமும் நாட்டு மக்களுக்குக் கூறவில்லை. அதனைக் கூற அவற்றுக்கு சந்தர்ப்பம் வரவும் இல்லை. ஏனெனில் அவை வேறு விடயங்களை முக்கியமாக கருதிச் செயற்படுகின்றன. இப்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் வருகையே அரசியல் களத்தில் பிரதான தலையங்கமாக பேசப்பட்டு வருகிறது. மஹிந்தவுக்கு போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தர்ப்பம் வழங்கியமை சரியா? மஹிந்தவை பிரதமராக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா? ஜனாதிபதியால் அதனைத் தடுக்க முடியுமா? இதுபோன்ற பிரச்சினைகளே இப்போது ஆராயப்பட்டு வருகின்றன. (மேலும்....)

புலிகள் தலைத்தூக்க இடமில்லை இராணுவத்தளபதி

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் அதற்கு ஒருபோதும் ஆபத்து ஏற்படாது என்றும் இராணுவத்தளபதி ஜெனரல் ஏ.டப்ளியு. ஜே.சி. டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு கருத்தி முன்னெடுக்கவேண்டிய சகல முன் நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும். தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. யாழ்ப்பாணம் உடுவிலில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறும் கூட்டத்திலேயே தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வுள்ளனர். இனப்பிரச்சினைத் தீர்வு, வடக்கின் இராணுவப் பிரசன்னம், ஜெனீவா அறிக்கை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கின் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டி ருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவி த்தன. பலாலி விமான நிலையத்தை சர்வதேச இறங்குதளமாக தரமுயர்த்து வது உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங் கள் குறித்தும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப் பதாகத் தெரியவருகிறது.

சாதியம்

என் தாத்தா அந்தக் காலத்து டிஸ்ட்ரிட் போர்டு பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி 1961இல் ஓய்வு பெற்றார். 1992இல் மறைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் முடிந்தபின் எங்கள் பகுதியைச் சேர்ந்த கவுண்டர் சாதியைச் சேர்ந்த நிலச்சுவான்தார் ஒருவரை அவருடைய இல்லத்திற்குச் சென்று சந்தித்து அவருடைய அனுதாபங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென நான் வலியுறுத்தப்பட்டேன். நான் அதைக் கடுமையாக ஆட்சேபித்தேன். என்னிடம் துக்கம் விசாரிக்க விரும்புபவர் என் வீட்டுக்கல்லவா வர வேண்டும், அதுதானே முறை எனக் கேட்டேன். அதை யாரும் பொருட்படுத்தவில்லை. பிறகு என் சித்தப்பாவுடன் அந்த நிலச்சுவான்தாரைப் பார்க்கப் போனேன். அவரது மாளிகையின் நுழைவாயிலை எட்டியதுமே தாழக்குனிந்து வணங்கிக்கொண்டே முற்றத்தை அடைய வேண்டுமென அறிவுறுத்தப்ட்டேன். குறிப்பிட்ட அந்த நிலச்சுவான்தார் துயில் கலைந்து எழுந்து வருவதற்காக நன்பகல் 12 மணிவரை காத்திருந்தோம். அவர் வந்தவுடன் என்னையும் என் சித்தப்பாவையும் அழைத்தார். இருவரும் பணிவுடன் அவர் முன்னால் போய் நின்றோம். என்னை ஏற இறங்கப் பார்த்தார்
’என்னடா நீ ............... ........ன் பேரனா?’
’சாமி ஆமாங்க‘ எனச் சித்தப்பா பதிலளித்தார்.
’என்ன பண்றே?’
சொன்னேன்.
பிறகு இருபது ரூபாய்த் தாளொன்றை எடுத்து நீட்டினார். நான் அதை வாங்காமல் நின்றேன். பிறகு சித்தப்பா தன் துண்டை விரித்து ஒரு பிச்சை போல் அதைப் பெற்றுக்கொண்டார். பெருத்த அவமானத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.
ஒரு கவுண்டர் வீட்டில் ஏதாவது இழவு என்றால் துக்கம் விசாரிக்க அவரே வருவார். கீழ்ச்சாதிக் காரர்கள் அவரை அவரது மாளிகைக்குச் சென்று சந்தித்து அவரிடம் பிச்சை வாங்கிக்கொண்டு வர வேண்டும்.
கேட்டால் நாங்கள் சாதிப்பாகுபாடு பார்ப்பதில்லை என்பார்கள். தங்கள் சாதிப் பெண்களைக் காதலிக்கும் கோகுல்ராஜ் போன்ற தலித் இளைஞர்களை வெட்டுவது இதுபோன்ற சாதியப் பண்பாட்டின் ஒரு அங்கமே.

(Rajasekaran Devibharathi)

ஆடி 25, 2015

கறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்

(எஸ்.எம்.எம்.பஷீர்)

” சிங்கள அபிலாஷய இடு கரமி;
ரட தெகட கடன்னட இட நொதிமி”

(“நான் சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேன்; நாடு இரண்டாக துண்டாடப்படுவதற்கு இடமளிக்க மாட்டேன்.”)

(28.ஜுலை 1983 ஜே. ஆர் . ஜெயவர்தனா “நாட்டு மக்களுக்கு” தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் ஆற்றிய உரையிலிருந்து)

கறுப்பு ஜூலை 83

இலங்கையில் தமிழர்கள் மீதான சகல இன வண்முறைகளில் ஜே ஆரின் முத்திரை இருப்பதை -ஐக்கிய தேசிய கட்சியின் அடையாளமிருப்பதை- வரலாறு தெரிந்தவர்கள் மறுக்கமுடியாது. கறுப்பு ஜூலை எனப்படும் ஜூலை கலவரங்கள் தொடங்கி முடிவுற்ற நான்காம் நாள் இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் (28.ஜுலை 1983) ஜே. ஆர் . ஜெயவர்தனா “நாட்டு மக்களுக்கு” தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் ஆற்றிய உரையில் காட்டமாக வெளிப்படுத்திய மேற்சொன்ன செய்தி அவரின் பிரதிக்கினைக் அப்பால் அவரின் வண்மத்தையும் துல்லியமாகவே எடுத்துக்காட்டியது. ஒரு புறம் பிரபாகரன் நாட்டை துண்டாட பெரும் தாக்குதலுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஜூலை 23ல் 1 3 இரானுவத்தினரை திருநெல்வேலியில் கொன்று குதூகலிக்க ஜே ஆரும் அவரின் பரிவாரங்களும் நாடு துண்டாடுவதை “தடுக்க” பிள்ளயார் சுழி போட்டுத்தான் பெரியளவிளான 1983 ஜூலை கலவரங்களை தொடங்கி இருக்க வேண்டும் ( பிள்ளையாரை பவுத்தர்களும் வழி படுவார்கள்! ) ஆனால் ஜே . ஆர் . விரிவாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஏற்று தனது வாக்குறுதியில் வெற்றி பெறவில்லை, நாட்டை ஏதோ ஒரு விதத்தில் இரன்டு படுத்தும் ஒரு ஒப்பந்தத்தில் தன்னை நாலு வருடத்துள் முடக்க வேன்டி ஏற்பட்டது. (இறுதியில் இந்தியப்படைகள் வெளியேறிய போது வரதராஜ பெருமாள் தனினாடு பிரகடணம் செய்ய முயன்ற நிகழ்வுடன் பார்க்கும்போது) அதேவேளை பிரபாகரன் ஆயிரக்கனக்கான சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களை கொன்றழித்து முரண் நகையாக நாடு துண்டாடப்படுவதை 25 வருடங்களுக்கு “போரடி” தடுத்து முள்ளிவாய்க்காளில் முடங்கி தானுமழிந்து போனார். (மேலும்....)
 

ஒன்றும் (1) அதனை முன்னிலைப்படுத்தும் பூச்சியங்களும் (0) !

(மாதவன் சஞ்சயன்)

எத்தனை பூச்சியங்கள் சேர்ந்தாலும் அதற்கு பெறுமதி கிடையாது. உ+ம் 0+0 = 0 என்ற முடிவு தான் வரும். இதனுடன் 1 சேர்ந்தால் பெறுமதி வரும். அதில் கூட 1ஐ முன்னிலைப் படுத்தினால் மட்டுமே பெறுமதி கூடும். உ+ம் 1க்கு பின் 0 போட்டால் 10 ஆகும். அதை விடுத்து 1க்கு முன் எத்தனை பூச்சியங்கள் போட்டாலும் அது பெறுமதியை கூட்டாது. (01 அல்லது 001 எனவே இருக்கும்) வலிமையான 1ன் பின் வலிமையற்ற பூச்சியங்கள் சேர்ந்து 1ஐ வலிமைப்படுத்துவதன் மூலம் தம்மையும் வலிமைப்படுத்தி கொள்ளும். மகிந்த என்ற 1ஐ முன்னிலைப்படுத்தி அதன் மூலம் தம்மை பலப்படுத்த பல பூச்சியங்கள் தேர்தல் மேடைகளில் சபதமெடுக்க தொடங்கிவிட்டன. மகிந்தவை அடுத்த பிரதமராக்குவோம், அதன் மூலம் மீண்டும் அவரை ஜனாதிபதி ஆக்குவோம். தனித்து ஆட்சி அமைப்போம். தேசிய அரசாங்கம் அமைக்க விடமாட்டோம். தடுத்தால் சுனாமியை உருவாக்குவோம் என தேர்தல் மேடைகளில் சன்னத மாடுகின்றன இந்த பூச்சியங்கள். (மேலும்....)

யாழ். நாவலர் மண்டபத்தில் டக்ளஸ் அலை!

விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர் ஆகியோரை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டும் என்றே தவிர்த்து உள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று மாலை இக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று முன்கூட்டியே ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்து இருந்தபோதிலும் இவர்கள் கடைசி நேரத்தில் காய் வெட்டி விட்டார்கள்.  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தா தேர்தல் கால பிரசார வேலைப் பளுக்களுக்கு மத்தியிலும் இக்கூட்டத்தில் பங்கேற்றார். இதனால் இக்கூட்டத்தில் டக்ளஸ் அலை ஏற்பட்டது. முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர் ஆகியோர் கருத்துக் கூறியபோது தமிழ் தேசிய கூட்டமைப்பை நேரடியாகவும், சூட்சுமமாகவும் கடிந்து கொண்டனர். அத்துடன் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்தை பாராட்டி பேசினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் இல்லாத பற்றுறுதி, விசுவாசம், நம்பிக்கை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை டக்ளஸ் தேவானந்தாவிடம் காண்கின்றனர் என்று முன்னாள் போராளிகள் உணர்வுபூர்வமாக தெரிவித்தனர். இவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க உரிய நடவடிக்கையை உரிய சந்தர்ப்பத்தில் எடுப்பார் என்று கூட்டத்தின் நிறைவில் டக்ளஸ் தேவானந்தா உறுதிப்பட தெரிவித்தார்.

நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் சனம் நம்பாது!! - சிறிதரன்

வவுனியாவில் சிறிதரன் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தால் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையான விடுதலைப் புலிப் போராளிகள் என்றால் முள்ளிவாய்க்காலில் செத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன்னாள் புலிப் போராளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் இவ்வாறு தான் பேசவில்லை என சிறிதரன் கூறிவருகின்றார். சிறிதரன் வவுனியாவில் புலிகளைப் பற்றி கூறிய வேளையில் அங்கு இருந்த ஏனைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஊடாக சிறிதரன் கூறியது உண்மை என்பதை அறிந்த சிறிதரனின் விசுவாசியான ஒருவர் இது தொடர்பாக சிறிதரனிடம் நேரடியாகக் கேட்டுள்ளார். அதற்கு சிறிதரன் இவ்வாறு பதில் சொன்னாராம் ”அண்ணை நான் கதைக்கும் போது என்னோட இருந்தவங்களைப் பற்றியோ அல்லது என்னோட இருந்தவங்கள் சொல்லுறதைக் கேட்டுவிட்டு என்னோட கதைக்கிறவங்களைப் பற்றியோ நான் கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால் நீங்கள் என்னத்தைதான் சொன்னாலும் சனம் நம்பாது என்று எனக்குத் தெரியும். அவங்கள் (முன்னாள் போராளிகள்) அந்தக் கூட்டத்துக்குள்ள வந்து நின்று குழப்பியடிப்பாங்கள். மற்றவங்கள் போல நானும் பார்த்துக் கொண்டு நிக்குறதோ? ” இவ்வாறு சிறிதரன் சொன்னாராம். கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் வெறும் பத்தாயிரம் வாக்குகளுடன் வந்த சிறிதரன் அதுவும் புலிகளின் தளபதி தீபனின் மச்சான் (தங்கையின் கணவர்) என்ற போர்வையில் வந்த புலித்தோல் போர்த்தி நரி இவ்வாறு கூறியதைக் கேட்டு மிகவும் கோபத்துடன் எழுந்து வந்துள்ளார் சிறிதரின் விசுவாசி.

அனந்தியை அம்பலப்படுத்தும் புலிகள்

இறுதியுத்த கணம் வரையினில் விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி யுத்த நடவடிக்கைகளினில் தப்பித்து வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களுள் பதுங்கியிருந்த பல முன்னாள் போராளிகளை வேட்டையாடுவதினில் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டிருந்தனர். அவர்களால் கடத்தப்பட்ட மற்றும் அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட பல போராளிகள், ஆதவாளர்களென பலர் பற்றி தகவல்களிலுள்ளது. (மேலும்....)

லஞ்சம் பெற்று கடிதம் கொடுக்கும் ஸ்ரீதரன் ஐயா! எப்போ ஆணிவேர் கொண்ட மரமானீர்கள்?

ஸ்ரீதரன் ஐயா! எதற்கெடுத்தாலும் ஒட்டுக்குழு ஒட்டுக்குழு என முழங்கிறீர்கள். நீங்கள் பிரிகேடியர் தீபன் அண்ணாவின் படத்துக்கு முன்னால் சத்தியம் பண்ண முடியுமா? நீங்கள் வெளிநாடு சென்ற ஆக்களுக்கு, உதாரணமாக கனடாக்கு வந்தவர்களுக்கு 1 1/2 லட்சம் ரூபா பெற்றுக் கொண்டு, அவர்களது வீட்டுக்கு சி.ஐ.டி வந்து விசாரிப்பதாக அங்கிருந்து அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பும் கடித்தத்துக்கு நீங்கள் பாராளுமன்ற உறுப்பினரென கையொப்பமிட்டு, பிராங்கும் அடித்து நிறைய பேருக்கு அனுப்பியிருக்கிறீர்கள். ஒரு 10 ஆயிரம் குறைத்து விடச் சொன்னால் கூட ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் சி.ஐ.டி க்கும் காசு வெட்ட வேண்டுமென்று. (மேலும்....)

இலங்கைத் தேர்தல்

தலித்துகள் பிரதிநிதித்துவம் எங்கே?

இலங்கையின் வடக்கே இன்றைய வாக்காளர்களில் சுமார் சரிபாதிப் பேர் சாதிய ஒடுக்குமுறைகளை சந்திக்கும் சமூகத்தவர்களாக இருந்தும், நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாமல் இருப்பதாக கூறுகிறார் இலங்கை அரசியல் திறனாய்வாளர் நிலாந்தன். தேர்தல்கள் என்பவை ஒரு சமூகத்தின் அனைத்து தரப்பின் பிரதிநிதிகளையும் தேர்வு செய்வதற்கான வழிமுறையாகப் பார்க்கப்படும் பின்னணியில், இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள் வாக்காளர்களாக மட்டுமே இருக்கிறார்களே தவிர, வேட்பாளர்களாக மாறவில்லை என்றும் நிலாந்தன் தெரிவித்தார். சுமார் 38 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் வடமாகாணத்தில் சாதிய ஒடுக்குமுறைகளின் கூர்மையை, தீவிரத்தன்மையை, சாதி சார்ந்த வன்முறைகளைக் குறைத்திருந்தாலும், சாதி என்பது அங்கே முற்றாக ஒழியவில்லை என்று கூறும் நிலாந்தன், தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள் தலித்துகளை அரசியல் அதிகாரத்துக்கு கொண்டுவருவதில், அரசியலில் வளர்ப்பதில் இன்னமும் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார். (BBC ஒலிவடிம்.....)

புரிந்து கொள்ளுங்கள்

மாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து
கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர். கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி பாலத்தினை வந்தடைந்தார். மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தால். இருட்டில் எதுவும் தெரியவில்லை. மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. (மேலும்....)

ஆடி 24, 2015

 

இனவாதத்துக்கு எதிராக வாக்களியுங்கள் ஜே.வி.பி

தேர்தலின் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என அனைவரும் இனவாதத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோருகின்றது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால், இன்று வியாழக்கிழமை (23) துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிமல் ரத்நாயக்க, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

 

கூட்டமைப்பை ஆதரவளிப்பதில் குழப்பம், கைகலப்பில் மூவர் காயம்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் புதன்கிழமை (22) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தின்போது, ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த மூன்று பேர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் கிரான்குளத்திலுள்ள கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆரையம்பதி தொடக்கம் கிரான்குளம் வரையான பகுதிகளிலுள்ள கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரிப்பது தொடர்பில் மூன்று ஆசிரியர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்று, அது இறுதியில் கைகலப்பாக மாறியது. இதிலேயே மேற்படி மூன்று பேரும் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

பூமி போன்ற புதிய கிரகத்தை கண்டறிந்த கெப்ளர் விண்கலம்

கெப்ளர் விண்கலம் ஒரு மாபெரும் விண் தொலைநோக்கியாகும். கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வரும் வருகிரது. இந்த தொலை நோக்கி இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாகவும். இதுகுறித்த ஆய்வின் கடைசிக் கட்டத்தில் விஞ்ஞானிகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இதற்கு கெப்ளர் 186எப் எனறு பெயரிடப்பட்டது. இது பூமியலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நம்மைப் போலவே உள்ள ஒரு கிரகமாக இது கருதப்படுகிறது. இது பூமியை விட பெரியது. அதேபோல இந்த ஆண்டு ஜனவரியில் கெப்ளர் 438 பி, 442 பி என மேலும் இரு கிரகங்களை கண்டுபிடித்தது. இதில் பி கிரகமானது பூமியை விட 12 சதவீதம் பெரிதாகும். 442 பி கிரகமானது 33 சதவீதம் பெரிதாகும். ஜூலை மாதத்தில் கெப்ளர் அதே நட்சத்திரத்தை 4 கிரகங்கள் சுற்றி வருவதாக கண்டுபிடித்தது. அந்த நட்சத்திரத்திற்கு கெப்ளர் 444 என பெயரிடப்பட்டுள்ளது.

 

இலங்கையில் அதிகம் விளையும் பழம்

முள்ளு சீத்தாபழத்தை வீடுதோறும் வளர்க்கும் கேரள மக்கள்-  புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதாக நம்பிக்கை

விருத்தாசலம் மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்று நோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 120 நாடுகளைச் சேர்ந்த 420 அமைப்புகள் சேர்ந்து உலக புற்று நோய் ஒழிப்பு அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகளின் விலை அதிகம். ஹீமோ ஊசி விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஆகும். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 6 தவணை வரை ஹீமோ கொடுக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சு சிகிச்சைக்கு ரூ.50,000 ஆகும். ஆனால், இயற்கை அளித்துள்ள பழங்களில் ஒன்றான முள் சீத்தா பழம் புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது என வேளாண் துறையினர் கூறுகின்றனர். எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய முள் சீத்தா பழம், கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படும். (மேலும்....)

 

படித்ததில்..... வலித்தது.......‬

 

தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை. 'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர் டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, 'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் கண்டக்டர். ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு, தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக்கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது. (மேலும்....)

 

சூரிய உதயத்துக்காக காத்திருக்கும் நாவலடி மக்கள்

(லஹிரு கிதலகம)

கிழக்கே உதிக்கும் சூரியன், கலப்பு நீரை காதல் கொண்டு உறிஞ்சுவதுண்டு. navaladyபதிலுக்கு நாவலடி மக்களுக்கு மட்டும் இந்த வானம் சுட்டெரிக்கும் ஒளியை மட்டுமே தருகிறது. மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைப் பிரதான வீதியில் செல்லும் பிரயாணிகள் அனைவரும் அதிவேகமாக இப்பிரதேசத்தைக் கடந்து செல்கின்றனர். இதனால், இப்பிரதேசம் யாருடைய கண்களுக்கும் தென்படுவதில்லை என்பதே நாவலடி மக்கள் கருத்து. சுட்டெரிக்கும் சூரிய ஒளியையும் தாண்டி நாவலடி மக்களோடு ஒரு தருணம். (மேலும்....)

 

ஆடி 23, 2015

 

வாழ்கையைத் தொலைத்திருக்கும் சமூகம்

 

சந்தை அரசியல் ! (மானிப்பாய் ரவுக்கை சந்தையின் மன ஆதங்கம்)

(மாதவன் சஞ்சயன்)

யாழ்ப்பாணத்தின் கொழும்பு 7 (Colombo 7) என்று குறிப்பிடப்படும் மானிப்பாயில் என்னை அழைக்கும் பெயர் ரவுக்கை சந்தை. மானிப்பாயை சேர்ந்த பலர் வெள்ளையர் காலத்திலேயே கொழும்பு சென்று உத்தியோகம், தொழில்துறை என்று கொடிகட்டி பறக்கும்போது கொழும்பு 7ல் உள்ள பான்ஸ் பிளேஸ், ரோஸ்மெட் பிளேஸ், வோட் பிளேஸ் என இலங்கையின் பிரதமார்கள், பெரும் பணக்காரர்கள் தொழிலதிபர்கள் வசித்த இடத்தில் அவர்களுக்கு சமமாக தாங்களும் பெரிய பங்களாக்களில் வசித்தால் மானிப்பாயாரை கொழும்பு 7 ஆட்கள் என்று பெருமையா அவர்களே சொல்லிக் கொள்வார்கள். இதே மாதிரியான மோகம் வவுனியாவிலும் ஏற்பட்டதன் விளைவு 'குருமன் காடு' என்றும் இடம் தற்போது 'குருமன் கார்டின்' (சினமன் கார்டின் போல்)ஆக மாறிவிட்டதாகவும் அறிந்தேன் (மேலும்....)

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சி.ஐ.ஏ. ஊடுருவியது எப்படி?

உலகில் பல நாடுகளில், உள்நாட்டு யுத்தங்களை உருவாக்குவது மட்டுமல்ல, முடித்து வைப்பது கூட சி.ஐ.ஏ. யின் பணிகளில் ஒன்றாக இருந்துள்ளது. இலங்கையிலும், கடந்த பல தசாப்த காலமாக சி.ஐ.ஏ. ஊடுருவி செயற்பட்டு வந்துள்ளது. முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க கொலையிலும் அது சம்பந்தப் பட்டிருப்பதாக நம்பப் பட்டது. அண்மைக் காலமாக, சி.ஐ.ஏ. நேரடியாக தலையிடுவதை குறைத்துக் கொண்டு, பல தொண்டு நிறுவனங்களின் ஊடாக உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. USAID எனும் தொண்டு நிறுவனம், சி.ஐ.ஏ. தன்னை உருமறைப்பு செய்து கொள்வதற்கு பயன்படுகின்றது. அண்மைக் காலத்தில், USAID ஊழியர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டில், கியூபா, பொலீவியா, எக்குவடோர் ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர். (மேலும்....)

யார் துரோகிகள்?

கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் உரிமையைக் கேட்டனர். இதே காலங்களில் தமிழர் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வந்த சொற்பதங்களே ‘துரோகிகள்’ ‘புல்லுருவிகள்’ ‘களைகள்’ என்பனவாகும். தமிழனின் தனிச்சிறப்பே மற்றவனின் உயர்வில் பொறாமைப் படுவதும், தனது பதவிக்காக மற்றவர்களை காட்டிக்கொடுக்கும் தன்மையும், தருணம் பார்த்து காலை வாரிவிடும் குணமும் ஆகும். இவற்றின் வெளிப்பாடே மற்றவர்களைத் துரோகி என ஒரு வசனத்தில் இழிவு படுத்துவதுமாகும். (மேலும்....)

படித்தேன், ருசித்தேன்.

24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா
இங்கே பாருங்கள்," மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த
அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில்
இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப
பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள் நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள்
மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம்
இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.
என் மகன் பிறவிக்
குருடு .இன்றைக்கு தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
அன்பு நண்பர்களே.,
உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம். சில
நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம். உருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடை போடாதீர்கள்.

ISIS, தீவிரவாதம், பின்னணிகள்...

நண்பர் ஷர்மிலா செய்யித் அவர்களின் ஒரு முக்கிய பதிவு, அதற்கு நான் இட்ட பின்னூட்டம், அவரது மறுமொழி ஆகியன, நண்பர்களின் பார்வைக்கு:
Sharmila Seyyid :சிரியாவில் நடைபெற்றதொரு விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ISIS போராளி/ தீவிரவாதியொருவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாகக் கடந்த வாரம் வெளியான செய்தி தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தபடியேயுள்ளன.
இஸ்லாத்தின் கோட்பாடுகள், வாழ்வு நெறிகள் கொங்கிறீட் தரையில் வீசியெறிப்பட்ட தேங்காயின் துண்டுகளாக சிதறிக்கிடக்கின்றன. அவரவர் கையில் கிடைத்த துண்டுகளைப் பொறுக்கிப் பசியாறிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் சொல்ல ஆயிரம் உண்டு. ஆனாலும் மௌனமும், அவதானிப்பும் இன்னமும் நிறையக் கற்கச் செய்கிறது.
(மேலும்....)

'பெண்ணுரிமைப் போராளி' மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் நினைவு நாள் இன்று


இவரைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்...
100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்குப் பிரசவம் பார்ப்பதற்கு ஒரு பெண் மருத்துவர்கூட கிடையாது. ஆண் மருத்துவர்கள்தான் இருந்தார்கள். மருத்துவர்கள் இல்லாமல் கிராமத்தில் பெண் மருத்துவச்சிகள் மூலம் மருத்துவம் பார்க்கப்பட்டு நிறைய பெண்கள் இறந்துபோயிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஒரு பெண் தனியாக பள்ளியில் படித்து, தனியாகத் தேர்வு எழுதி 15 பேரில் தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. முத்துலெட்சுமி வகுப்பறைக்குப் போனால், 'இந்தப் பெண் டாக்டராகி என்ன செய்யப் போகிறாள், இவளுக்கு எதுவுமே கற்றுத்தராதீர்கள்’ என்று சொல்லி எதுவுமே கற்றுத்தர மாட்டார்கள். ஆனால் முத்துலெட்சுமி, வீட்டிலும் நூலகத்திலும் புத்தகங்களைப் படித்து அறுவைச் சிகிச்சை பாடத்தில் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் கோல்டு மெடல் வாங்கினார். கஷ்டப்பட்டு படித்து டாக்டராகிய முத்துலெட்சுமியை மருத்துவம் பார்க்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். பெண்ணிடம் வைத்தியம் பார்ப்பதா என்று ஏளனம் பேசினார்கள். ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் பார்க்கலாமே என்று அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தார். இவரிடம் மருத்துவம் பார்க்க வரும் பெண்கள் முக்காடு போட்டுத்தான் வருவார்கள். மருத்துவரிடம் போவதே தெரியக் கூடாது. அதுவும் பெண் மருத்துவரிடம் போவது தவறு என்று கருதினார்கள். அதன் பிறகு சென்னை சட்டமன்ற உறுப்பினராகி தேவதாசி முறையை ஒழித்தார். பெண் கல்வியை சட்டமாக்கினார். பெண் சுதந்திரத்துக்குப் பாடுபட்டார். நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது இவருடைய வாழ்க்கையைத்தான்!'
(ஜீனியர் விகடன்.)

ஆடி 22, 2015

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் அவர்களால் தொடங்கப்பட்டது 'ஜீவாமுழக்கம்' வார இதழ்

இந்திய ஐக்கியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப் பூர்வ வார இதழாக விளங்கிய 'ஜீவா முழக்கம்' முதலில் தோழர் தா.பாண்டியன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.அதைத் தொடர்ந்து வழக்கறிஞர் மா.சுந்தரராஜன் இதன் ஆசிரியர் பொறுப்பேற்றார்.1990களில் தமிழக அரசியலிலும் இலங்கைப் பிரச்சனையிலும் இந்த இதழின் பங்கு மிகப் பெரிய அளவில் இருந்தது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபாவுக்கு மிகப் பெரிய பலமாக இந்திய ஐக்கியக் கம்யூனிஸ்ட் கட்சியும் - ஜீவா முழக்கமும் தமிழகத்தில் முன் நின்றன. 'வலிமையான பாரதத்தில் வளமான தமிழகம்' எனும் முழக்கத்தை தோழர் எம்.கல்யாணசுந்தரம் முன்வைத்தார். (இந்த கோஷம் பிறகு மூப்பனாரால் சுவீகரிக்கப்பட்டு - இப்போது அது மூப்பனாரின் கோஷமாக மாறிவிட்டது). அந்த முழக்கத்தை முன் வைத்து தோழர் மொஹித்சென் தலைமையில் அரசியல் செய்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி - தேசிய ஜனநாயக சக்திகளுடன் இணைந்த இடதுசாரி அணியை வலியுறுத்தியது. இதை மற்ற கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் விளைவு இன்று பாரதிய ஜனதாவின் ஆட்சியாக அரங்கேறி இருப்பதை சாமான்யர்கள்கூட உணர்ந்து கொள்ளலாம். மீண்டும் ஜீவா முழக்கம் வார இதழ் வெளியாகப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். பாராட்டுகளுடன் நமது உதவியும் இணையட்டும். நல்லதொரு அரசியலுக்கு துணை நிற்கட்டும்.........

பிரபாகரன் உயிருடன் பிடிபட்டாராம்....??  - கருணா.

இறுதியுத்தத்தில் பிரபாகரனைப் படையினர் உயிருடன் பிடித்தது நுாறுவீதமான உண்மை.
ஆனால் பிரபாகரன் எவ்வாறு உயிருடன் பிடிக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியாது. பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் என்னைக் கொண்டு சென்று காட்டினார்கள்.
பிரபாகரன் கடுமையான சித்திரவதையின் பின்னரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. பிரபாகரன் இறந்ததை நம்பாத சுரேஸ் பிரேமச்சந்திரனும் இன்னும் சில கூட்டமைப்பு உறுப்பினர்களும் என்னை அனுகி 'அச் சம்பவம் உண்மையா' எனக் கேட்ட போது எனக்கு சிரிப்பாக இருந்தது. பிரபாகரனின் உடலைப் பார்த்தவுடன் எனக்கு தாங்கமுடியாத அழுகை ஏற்பட்டது. இருந்தும் அடக்கிக் கொண்டேன். சிறிது நேரத்திலேயே நான் நோமல் நிலைக்கு வந்துவிட்டேன். (மேலும்....)

மஹிந்த எனக்கு நாயகனல்ல -  திஸ்ஸ விதாரண

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு நாயகனல்ல என லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூறி னார். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்க த்திலே எனக்கும் அவருக்குமிடையில் பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தன. அமைச்சரவையிலும் அது அடிக்கடி ஏற்படுவதுண்டு. என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஐ.ம.சு.மு களமிறங்கியுள்ளதால் மஹிந்தவின் தலைமையின் கீழ் நாங்களும் (LSSP) போட்டியிடுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், ல.ச.ச. கட்சி (LSSP) எப்போதும் ஸ்ரீல.சு. கட்சியுடன் இணைந்தே செயற் பட்டு வந்துள்ளது. ஐ.தே.க. எப்போதும் மேற்கு நாடுகளுடன் இணைந்தே செயற்படும். இவர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டி ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார். நல்லாட்சியை நடத்தப் போவதாக ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. அரசு தோல்வி கண்டுள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தூக்கு மேடை ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் உரியதா?

இன்று காலை கலைஞர் செய்திகளின் நாடும் ஏடும் நிகழ்ச்சியில் இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வந்த ஒரு புள்ளி விபரத்ததை பார்த்தபோது மனம் மிகவும் கனத்துவிட்டது. இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறவர்களின் சமூக பொருளாதார பின்புலம் குறித்து தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நட்த்திய ஒரு ஆய்வு அதிர்ச்சியூட்டும் பல உணமைகளை வெளிப்படுத்தியிருந்தது. இந்தியாவில் மரண தண்டணை விதிக்கபடுகிறவர்களில் நான்கில் மூன்று பங்கினர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாகவோ மத சிறுபான்மையினராகவோ பழங்குடியினராகவோ இருக்கிறார்கள். 75 சதவிகிதம் பேர் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான் நிலையில் இருப்பவர்கள். 23 சதவிகிதம் பேர் கல்வியறிவில்லாதவர்கள். பெரும்பாலோர் பள்ளி இறுதியைத் தாண்டாதவர்கள். (மேலும்....)

பிரபாகரனின் முக்கியஸ்தர்கள் தமிழகத்தில் கைதால் பதட்டம்

இந்தியாவில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடித்து வருவதால், புலிகள் இயக்கத்தினரை சிறப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தமிழகத்திலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் அவரது ஆதரவாளர்களும் கியூபிரிவு மற்றும் உளவு பிரிவு போலீ சாரால் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களி லும் உள்ள இலங்கை அகதிகள் முகாமும் போலீசாரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இந்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாகன சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. (மேலும்....)

வேற்று கிரகவாசிகள் அறிந்து கொள்ள ரு 640 கோடியில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் புதிய திட்டம்

பிரபஞ்சத்தில் வேறு கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்பதை ஆராய ரூ. 640 கோடியில் புதிய திட்டம் ஒன்றை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்கு ரஷ்ய தொழில் அதிபர் யூரி மில்னர் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார்.
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். (மேலும்....)

முல்லைத்தீவில் குவிக்கப்பட்டிருந்த புலிகளின் வாகனங்களை நசுக்கி இரும்புக்கு விற்பனை

வடக்கின் இறுதி யுத்தத்தின் பின் பல்வேறு இடங்களிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டு முல்லைத் தீவில் குவிக்கப்பட்டிருந்த பத்தா யிரம் வாகனங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குழுவினரினால் பழைய இரும்பு க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கு சொந்தமாக இருந்த வாகனங்களைப் போன்று தீவிரவாதிகளால் தென் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் மிகவும் குறைந்த விலையில் வாங்கிய பெருமளவிலான வாகனங்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினரால் தேடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களில் பெறுமதியான வாகனங்கள் புலிகளாலேயே அழிக்கப்பட்டிருந்ததோடு சில வாகனங்கள் பாதி எரிந்த நிலையில் இருந்தன.அவற்றில் இன்னும் சில வாகனங்கள் சிறந்த நிலையில் இருந்தன. இந்த அனைத்து வாகனங்களும் முல்லைத்தீவில் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருந்தன. உரிமையாளர்களை தேடிக் கண்டுபிடித்து அவற்றை உரிமையாளர் களுக்கு வழங்க முதலில் தீர்மானிக்கப் பட்டிருந்தாலும் அந்த நடவடிக்கை உரிய முறையில் நடைபெற வில்லை.

ஆடி 21, 2015

20  வது கிடைத்தால் இறுதித் தீர்வு ?

(மாதவன் சஞ்சயன்)

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைத்தால், 2016ல் தமிழ் மக்களுக்கான தீர்வு பெறப்படும் என்றும் அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடித்துக்கொள்ளும் என்றும், திருமலையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய திரு சம்மந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்கள் மொத்தமாக 29 உறுப்பினர்களை கொண்டது. அதில் 20 ஐ தமக்கு தரும்படி கூட்டமைப்பின் தலைவர் கேட்கிறார். யாழில் 7, வன்னியில் 6, திருமலையில் 4, மட்டக்களப்பில் 4, அம்பாறையில் 7 என மொத்தம் 29 உறுப்பினர்களில் 20 பேரை, கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் தெரிவு செய்ய, வாக்காளருக்கு அழைப்பு விடுக்கிறார் அதன் தலைவர். (மேலும்....)

சுகம் வரும் ஆள் தப்பாது !

கூட்டமைப்பா ?
யார் கூட்டமைப்பு?
யாருக்கு கூட்டமைப்பு?
ஏன் உருவாக்கப்பட்டது?
எப்படி உருவாக்கப்பட்டது ?
2004 இற்கும்2015 இற்கும் எத்தனை வருடங்கள் ?
உருவாக்கப்பட்ட நோக்கம் என்னவாயிற்று?
அந்த நோக்கம் இன்னும் அப்படியே தான் இருக்கின்றதா?
தூர நோக்குகள் எவை?
சமகால நோக்கு என்ன?
செயல்பாடுகள் எவை?
உங்களுக்கு பலம் என்ன?
பலவீனம் என்ன?
வாய்ப்பு என்ன ?
அச்சுறுத்தல் என்ன?
அடிப்படை கொள்கை என்ன?
கோட்பாடு என்ன?

(மேலும்....)

தேர்தல் நிலவரம் என்ன?

தேர்தல் நிலவரம் என்ன என்று பல நண்பர்களும் கேட்கிறார்கள்.


இதற்கு என்னிடம் இரண்டு சாதாரண கேள்விகள்தானுண்டு.
1. தமிழர்கள் தமிழ் அடையாளத்துக்காக தொடர்ந்து தமிழ் உணர்வுடன் வாக்களித்து வந்திருக்கிறார்கள். - அப்படித்தான் வாக்களித்து வருகிறார்கள். தமிழர்கள் என்றால் கெட்டிக்காரர்கள், புத்திசாலிகள், அதிகம் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எங்களால் ஏன் சிங்களத்ரப்பை வெற்றி கொள்ள முடியவில்லை? அதாவது, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, தமிழ்தலைவர்கள் வெற்றியடைகிறார்களே தவிர, தமிழ் மக்கள் இன்னும் வெற்றியடையவில்லையே. மக்களுடைய உரிமைகள் கிடைக்கவும் இல்லை. அவர்களுடைய பிரச்சினைகள் எதுவும் தீரவும் இல்லை. ஆகவே, தமிழர்கள் உச்சிக்குப்போக முடியாமல், நிரந்தர வெற்றியைப் பெற முடியாமல் கிறிஸ் கம்பத்திலேயே சறுக்கி விழுந்து கொண்டிருப்பது ஏன்? (மேலும்....)

The revolutionary legacy of the Sandinistas

(By Danny Shaw)

Today all progressive and revolutionary people should stand with the workers and oppressed people of the world to celebrate the 36th anniversary of the Sandinista Revolution in Nicaragua. This article looks at the historic accomplishments of the 1979 revolution and honors the fallen Sandinista fighters who risked and sacrificed everything to free their country.

“A Son of a Bitch, but Our Son of a Bitch”

Beginning in 1502, Christopher Columbus and the Spanish empire invaded the land that would come to be known as Nicaragua. They massacred and enslaved the indigenous resistance and underdeveloped the economy to meet the needs of the colonizer. The Niquirano, the Chorotegano, and the Chontal peoples valiantly resisted the conquest. Their resistance was led by the Chiefs Nicarao and Diriangán. It is from Chief Nicarao of the Niquirano nation that Nicaragua derives its name. (more......)

இந்தியா-இலங்கை இடையே பாலம்


இந்தியாவின் காலடியில் கண்ணீர்த் துளி போல் இருக்கும் அழகான குட்டி தேசம்.
பூகோள ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான தீவு நாடு. சமூக, கலாசார பழக்க வழக்கங்கள் மற்றும் உறவிலும் இந்தியாவுக்கு ஒரு சின்னத்தம்பி.
தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் அங்கு மண்ணின் மைந்தர்களாக வாழ்கிறார்கள். தென் மாவட்டங்களில் இலங்கை தமிழர்களின் உறவுகள் அதிகம். உறவு ரீதியாகவும், வணிக ரீதியாகவும் தமிழர்கள் இங்கிருந்து இலங்கைக்கு செல்வதும், அங்கிருந்து இங்கே வருவதும் தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் பழக்கம். (மேலும்....)

மொரிஷியஸ்  தீவின் அழிந்து போன உயிர்கள்

மனிதனின் வேட்டைப் பசிக்கு பலியான டோடோ பறவையினம்

டோடோ வின் மறைவு, இத்தீவின் உயிரின ங்கள் மனிதரால் எவ்வாறு சீரழிக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது. இத்தீவில் இருந்த கருங்காலி மரக்காடுகள் கப்பல் கட்டுவத ற்காக அழிக்கப்பட்டன. மனிதர் கொண்டு வந்த நாய்களும் பூனைகளும் பல உயிர்களைக் தீர்த்துக் கட்டின. பறக்கும் திறன் அற்ற ஒரு கிளி இனமும் மறைந்து போனது’ கருநீல சமுத்திரத்தின் மீது தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த எங்கள் விமானம். இடது புறம் செங்குத்தாகச் சரிந்து திரும்பி நீலப்பச்சை கடலோரத்தைக் கடந்த சில நொடிகளில் மொரிஷியஸ் தீவிலுள்ள போர்ட்லூயி நகரில் தரையிறங்கியது. வெளியில் இலேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அப்பால் தொடுவானம் வரை கரும்புத் தோட்டங்கள் தெரிந்தன. விமானம் நிலைக்கு வந்த பின்னர் இறங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு முதலில் நினைவு வந்தது டோடோ பறவைதான். (மேலும்....)

மன்னவன் சென்றானடி!

இன்று சிவாஜி கணேசன் நினைவு தினம்

காலத்தாலும் எண்ண ஓட்டத்தாலும் உலகமெல்லாம் இருக்கும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற்ற நிறைந்து இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படத்தில் 'சக்சஸ்' என்ற முதல் வசனத்தைப் பேசி நடிப்பில் பிரபலமானார். 'சிவாஜி கண்ட இந்து ராஜியம்' என்ற நாடகத்தில் நடித்ததைக் கண்டு இவருக்கு 'சிவாஜி' என்ற பட்டத்தை பெரியார் கொடுத்தார். காதல், வீரம், சோகம் என்ற அனைத்து கதாபாத்திரத்திலும் தனது முத்திரையை பதித்தவர். நடிப்பில் இவரை மிஞ்சியவரை காண்பது அரிது என்று நேருவால் பாராட்டப் பெற்றவர்.நடிகர் திலகம், நவரசத் திலகம், சிம்மக்குரல் கணேசன், கலைகுரிசல் கணேசன், பத்மஸ்ரீ கணேசன் என சிவாஜி கணேசனை அழைப்பதில் பெருமைப்படுகிறேன் என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பெற்றவர். (மேலும்....)

இருபக்கமும் கூருள்ள‬
இருபாசிஸ்ட்டுகளின்ஒத்துப்போகும்‬
பாசிச ராசிபலன்கள்‬
 

அந்த இருவர் மோடியும், ஜெயலலிதாவும்தான். இருவரும் முதல்வர் மரணத்தால் பதவிக்கு வந்தவர்கள். இருவரும் மந்திரிகள் MLA, MPக்களை பொம்மையாக வைத்திருப்பார்கள். இருவரும் தனது கையில் அதிகாரத்தை குவித்துவைப்பவர்கள். மோடி, குஜராத்தில் லோக் ஆயுக்தா, தகவல் அறியும் சட்டத்தை மதிக்காதது போல, இங்கு ஜெ.வும் அந்த சட்டங்களை மதிப்பதில்லை. இருவருமே சட்டசபையை குறைவாக நடத்தியவர்கள் (ஆண்டுக்கு 30நாட்கள்) இங்கு ஜெ.சட்டசபையில் எதிர்கட்சியை விரட்டிவிரட்டி அடிப்பது போல் அங்கு மோடி காங்கிரசை சட்டசபையில் நுழையவிடுவதே இல்லை. இங்கு பன்னீர் செல்வத்தை வைத்து பொம்மையாக ஆட்சி செய்தது போல  அங்கு மோடி ஆனந்தி பென்னை வைத்து பொம்மை ஆட்சி செய்கிறார். (மேலும்....)

ஆடி 20, 2015

பத்மநாபா அணியின் தேர்தல் பணி

(மாதவன் சஞ்சயன்)

அன்று கோவில் திருவிழாவில் பங்கெடுக்கும் 8 கூட்டம் 10 கூட்டம் மேளதாளம் போல இன்று ஆகிவிட்டது யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட தேர்தல் கள நிலமை. கோவில் திருவிழாவில் 8 அல்லது 10 கூட்ட மேளதாளம் ஒரு எழுச்சி. அதனால் மக்களுக்கு ஏற்படுவது மன மகிழ்ச்சி. ஆனால் மக்கள் பிரதி நிதிகளை தெரிவு செய்யும் தேர்தல் ஒரு வேள்வி. வேள்வியில் தேவதைகளும் தோன்றலாம், துஷ்ட முனிகளும் வெளிப்படலாம். தேவதைகள் மக்களுக்கு வரப்பிரசாதமாகும், துஷ்ட முனிகள் அவர்களுக்கு மனச்சிதைவை ஏற்படுத்தி அவர்களை வாட்டி வதைக்கும். இன்று கோவில் திருவிழா போல் மாறிவிட்ட தேர்தலில் பலர் பங்கு போட நினைக்கும் அந்த 7 ஆசனங்களை துஷ்ட முனிகள் பெற்று விடக்கூடாது, அதற்கு தம் பங்களிப்பு பயன்பட கூடாது என இப்போதாவது முடிவெடுத்த பத்மநாபா ஈபி.ஆர்.எல்.எப் அந்த முடியை தமது கடந்த கால அனுபவத்தின் மூலம் தான் எடுத்திருப்பர் என்பது எனது அனுமானம். (மேலும்....)

தென்னை மரமா நிற்கும் தேவானந்தா! பனை மரமாக நிற்கும் இன்னெருவர்!!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டிய மக்கள் சந்திப்புக்களில் தென்னை மரக் கதை கூறுகின்றார். இவரின் தென்னை மரக் கதை வருமாறு:- தென்னை மரம் வளர்ந்து பயன் தரும் என்பதற்காக வீடுகளில் வளர்ப்பார்கள், தென்னம் பிள்ளை என்று அழைப்பார்கள், தென்னை மரமும் வளர்ந்து இளநீர், தேங்காய், மட்டை, ஓலை, சிரட்டை, பொச்சு... என்று ஏராளம் பலன்களை கொடுக்கும், வேண்டும் என்றால் மரத்தையே விறகாகவும் பயன்படுத்தவும் முடியும், இதே என்னையும் தென்னையாக ஒவ்வொரு வீட்டிலும் வளருங்கள். நானும் தென்னை மரம் போல நிச்சயம் பலன் தருவேன். இவரிக் கோட்டையில் இன்னொருவர் பனை மரமாக நிற்கின்றார். அவரின் தெரிவு தென்னையை விட பனைமரம் சிறந்தது என்பதை வரலாறு கூறவேண்டும்.

பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறைவைத்த சாதிவெறியர்கள்!

தங்கமில்லாமல் நாமில்லை என்று தமிழர்கள் இலங்கையிலும், புலம்பெயர்நாடுகளிலும் வரிசையாக நகைக்கடைகளை திறக்கிறார்கள். புத்தகக்கடைகள், பதிப்பகங்கள் எத்தனை இருக்கின்றது என்று கேள்விகள் கேட்கக் கூடாது. இமயமலையின் பனிச்சிறுத்தைகள் போல மிக அரிதாகவே புத்தகங்கள் தமிழ்ச்சூழலில் காணப்படும். சந்தனம் மிஞ்சினால் எங்கேயோ தடவுவது போல் பணம் மிஞ்சிப் போனதால் வடமராட்சி, கரவெட்டி, தச்சன்தோப்பு பிள்ளையாருக்கு தங்கமுலாம் பூசி ஒரு தேர் செய்திருக்கிறார்கள்.
இயற்கையான மரத்திற்கு தங்கமுலாம் பூசி அலங்கோலப்படுத்தியதைப் போல இந்தக் கோவில் நிர்வாக சபையினரின் மனங்களில் சாதிவெறி இறுகப் பூசி மனிதத்தை கேவலப்படுத்துகிறது. (மேலும்....)

பிரபாகரனின் மனைவிக்கும் மகளுக்கும் நடந்தது எனக்குத் தெரியும் கருணா
 

புலித்தலைமை எவ்வளவு கொடூரமானது என்பது என்னுடன் முரண்பட்ட பின்னரே எனக்குத் தெரிந்தது. மகிந்தவும், கோத்தபாயவும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்குப் புரிந்தது. இருந்தாலும் மகிந்தவும் கோத்தவும் என்னுடன் நட்பாகப் பழகியதாலும், பிரபாகரன் எனக்கு செய்த துரோகத்தாலுமே எனக்கு மகிந்தவும், கோத்தாவும் செய்தது பெரிதாகப்படவில்லை. எனது அண்ணனையும் தமிழீழத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காது பிரபாகரனுடன் சேர்ந்து போராடிய கிழக்குப் போராளிகளையும் என்னுடன் சேர்ந்து இருந்ததற்காக கொடுமையான முறையில் புலிகள் கொன்றார்கள்.வெருகல் பகுதியில் தங்களது சகோதரிகள் போல் இருந்த பல பெண் போராளிகளை புலிகளின் வன்னிப் படையணி கொடூரமாக கற்பழித்துக் கொன்றது. (மேலும்....)

சம்மந்தரின்

அடுத்த பொங்கல் தமிழ் ஈழத்தில் என்ற தேர்தல் கோஷம்

பொதுத் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ளமுடியும் எனக் கூறினார். நாம் அதிகப்படியான ஆசனங்களான 20 பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெறுவதன் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இன்றியமையாத பேரம்பேசும் சக்தியைப் பெற முடியும். இதனை நாம் 2016ம் ஆண்டு 6ம் மாதத்திற்குள் நிறைவு செய்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பயணத்தை நிறைவு செய்ய தயாராகவுள்ளோம். (மேலும்....)

ஆடி 19, 2015

அனுராதபுரத்தில் மீண்டும் பிரபாகரன் அலை !

(மாதவன் சஞ்சயன்)

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதுபோல் மரணத்தின் பின்பும் மகிந்தரின் வாக்கு வங்கியாக பிரபாகரன் அவருக்கு பயன்படுகிறார். தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை அனுராதபுரத்தில் ஆரம்பித்த மகிந்த பல தடவைகள் பிரபாகரனை நினைவு கூர்ந்தார். எனது தகவல் சரி எனின் புலிகள் நடத்திய எல்லாளன் தாக்குதல் நடவடிக்கைக்கு பின் பிரபாகரன் அனுராதபுரத்தில் நினைவு கூரப்பட்டது அந்த மேடையில் தான். புலிகளுக்கும் அனுராதபுரத்துக்கும் அவர்களின் நடவடிக்கை மூலம் தொடர்பு உண்டு. அவர்களின் பிரச்சாரங்களில் பிரபாகரனை அனுராதாபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட எல்லாளனின் ஆசீர்வாதம் பெற்றவராக குறிப்பிடுவர். அதை நிரூபிக்க பிரபாகரின் தந்தை வேலுப்பிள்ளை அனுராதபுரத்தில் அரச கடமை புரிந்தபோது மாலை வேளைகளில் கருவுற்றிருந்த தன் மனைவியுடன் காலாற நடந்தது விட்டு, எல்லாளன் நினைவு மண்டபத்தில் சிறிது நேரம் அமர்வார்களாம். அப்போது கருவாக இருந்தவர் பிரபாகரன். (மேலும்....)

திருமதி. விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கு ஒரு பகிரங்கமடல்!!!

அண்மையில் தாங்கள் வடமராட்சிப் பருத்தித்துறைப் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது எமது மக்களைக் கொன்றொழித்தவர்களுக்கு இம்முறை நாம் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் எனத் தெரிவித்திருந்தீர்கள்! தாங்கள் பாவம்! அனுபவம் தெரியாதவர்! தங்கள் கணவர் கொலையின் பின் அரசியலுக்கு வந்தீர்கள்! எமது நாட்டின் சரித்திரத்தை ஒரு தடவை சரியாக வாசித்துவிட்டு அறிக்கைகளை விடவேண்டும். (மேலும்....)

புலிகளின் முக்கியஸ்த்தர் புலித்தேவன் எஸ்.நடேசன் ஆகியோர் மகிந்தவுடன் இரகசியமாகப் பேசினர்

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்திருந்தார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2005ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றியீட்டினார் என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பினை புறக்கணிக்க வேண்டும் என்பதே இந்த இரகசிய உடன்படிக்கையின் பிரதான விடயமாக அமைந்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் மற்றும் காவல்துறைப் பொறுப்பாளர் எஸ்.நடேசன் ஆகியோர் ராஜபக்ஸ தரப்புடன் இந்த இரகசிய பேச்சுவார்த்தை குறித்து பேசியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய வடக்கு கிழக்கு நிர்வாக அலகினை தமிழீழ விடுதலைப் புலிகள் கோரியதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமயிலான அரசாங்கம் இதனை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 18

'ஆப்ரிக்க காந்தி’எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா பிறந்த தினம் 

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை. இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது, ‘மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. ‘எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

தமிழ் மக்களை மீண்டும் படுகுளியில் தள்ளும் பாதகச் செயல் - சாகரன்

தமிழ்த் தேசியத்தின் காவலன் "மாவை அண்ணன்" எமது மக்களுக்கு சேவையாற்றுவதற்காக நீதியரசர் க வி விக்னேசுவரன் அவர்களை பெருந்தன்மையுடன் தனக்குரிய இடத்தை விட்டுக்கொடுத்ததன் மூலம் முதலமைச்சராக கொண்டு வந்த பெருந்தகை. தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை அண்ணருக்கு யாழ்ப்பாணத் (கிளிநொச்சியை உள்ளடக்கியதான) தேர்தல் தொகுதியில் வாழுகின்ற அனைத்து ஈழதேச மக்களும் தங்களது முதலாவது வாக்கினை மாவை அண்ணருக்கு வழங்கி இதுவரை வரலாறு காணாத மகோன்னத வெற்றியை மாவை அண்ணருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் இந்த வெற்றிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைவரும் இதயசுத்தியுடன் பாடுபடவேண்டுமென மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றேன்.- தம்பி மு தம்பிராசாகூறுகின்றார் இவ்வாறு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் போல் செயற்படும் உங்களிடம் ஒரு கேள்வி இவர்கள் (த. தே. கூட்டமைப்பு) இதுநாள்வரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்களிடம் ஆணையைக் கேட்கின்றோம் என்று மட்டும் சொல்லியே பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பி தமது சொந்த நலன்களை மட்டும் நிறைவேற்றுவதில் கண்ணாக இருக்கின்றனர். இது பொன்னம்பலத்தில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கின்றது. மற்றயபடி இவர்கள் சுத்த உதவாக்கரைகள். பலர் 100 வீதம் சுயநலவாதிகள் சொத்து சேர்பவர்கள் அரசுடன் பின்கதவால் சலுகை பெறுபவர்கள். மறுபுறத்திலும் இங்கொன்றும்இ அங்கொன்றும் சில நல்லவர்கள் இருந்தாலும் இவர்களின் நல்ல கருத்துக்கள்இ செயற்பாடுகள் முன்னிலை பெற முடிவதில்லை. இது தமிழ் பேசும் மக்களின் சாபக் கேடுதான் உங்களைப் போல் வக்காலத்து அல்லது வால் பிடிக்கும்(இதைத்தவிர வேறுவார்தை எனக்கு தெரியவில்லை) பலரால்தான் ஈழவிடுதலைப் போராட்டமும்இ ஈழ மக்களின் அரசியல் போராட்டமும் தோற்றுப் போனதுஇ போய்கொண்டு இருக்கின்றது. தற்போது தேர்தலில் நிற்பவர்களைத் தவிர்த்து புதிய தலைமை ஒன்று உருவாக்கப்பட்டே ஆகவேண்டும். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அப்பால் சகலரையும் சேர்த்துதான் குறிப்பிடுகின்றேன். இப்படி எழுதுவதற்காக என்னை இலகுவாக அரசாங்கத்தின் ஆள் என்று வழமைபோல் பட்டம் சூட்டாதீர்கள். எங்கள் மக்களின் அரசியல் விடுதலைமீது உண்மையான பற்றுதியுடன் 40 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வரும் பலரைப் போல் நானும் ஒருவன். மிகச் சாதராணமானவன் பிரமுகர் அல்ல. 

எமது இலட்சியம் வெள்ளையின அதிகாரம் - வெள்ளை நிறவெறியர்களின் இயக்கமான KKK

அமெரிக்காவில் இன்று, வெள்ளை நிறவெறியர்களின் இயக்கமான KKK உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். கு கிளாஸ் கிளான் (KKK) அமெரிக்காவின் பழமையான, தீவிர வலதுசாரிய, நாஸிஸ இயக்கமாகும். தெற்கு கரோலினா மாநிலத்தில், கொலம்பியா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக, பாசிச எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. நெதர்லாந்து தொலைக்காட்சி நிருபர், KKK குழுவின் தலைவரை பேட்டி கண்டார். Will Quigg என்ற KKK உறுப்பினர் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு :
- KKK வெள்ளை இன மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் இயக்கம்.
- கறுப்பினத்தவர்கள் அரசின் உதவிப்பணத்தில் வாழ்ந்து கொண்டு, நிறையப் பிள்ளைகளை பெறுகிறார்கள். அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். எமது பிள்ளைகளுக்கு போதைவஸ்து விற்கிறார்கள். நம் நாட்டு சிறைகளில் கறுப்பின மற்றும் ஹிஸ்பானிய கைதிகள் தான் அதிகமாக உள்ளனர். கருப்பர்களை ஆப்பிரிக்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
- கறுப்பின முஸ்லிம் ஒபாமா ஜனாதிபதியாகிய பின்னர் நாட்டு நிலைமை மோசமடைந்து கொண்டு செல்கின்றது. ஒபாமாவை யாராவது சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி நடந்திருந்தால் அவர் ஒரு தியாகியாகி இருப்பார். அதையும் நாங்கள் விரும்பவில்லை.
- எமது இலட்சியம் வெள்ளையின அதிகாரம்.

(Kalaiyarasan. Tha)

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாம்.....?


இங்கிருக்கும் மாவை அண்ணன் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளே! ஈழதேச மக்களின் இயலாமையை இவர்களைப்போன்ற அரசியல்வாதிகள் நன்கு பயன்படுத்துகின்றார்கள். Thampi Mu Thambirajah

ஆடி 18, 2015

ரம்ஜான் பண்டிகை

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்!

உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் இன்று உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்களின் புனித திருநாளான ரம்ஜானை முன்னிட்டு, அவர்களின் 5 கடமைகளில் 4 கடமைகளை ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து நிறைவேற்றி உள்ளனர். இதை தொடர்ந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா, கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நேற்று முன் தினம் பிறை தென்பட்டதை தொடர்ந்து, அங்கு ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்று பிறை தென்பட்டது. மேலும்,  ஆசிய நாடுகள் முழுவதும் ரமலான் பண்டிகை சனிக்கிழமை (ஜுலை 18) கொண்டாடப்படும் என்று அறியப்படுகின்றது. இதை தொடர்ந்து இன்று ரம்ஜான் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமிய மக்கள் மசூதிகளில் தொழுகை நடத்தி வருகின்றனர்.சகோதரத்துவத்தை வலியுறுத்தி 30 நாட்கள் நோன்பிருந்து கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில் மதங்களை கடந்து சூத்திரமும் தனது வாசகர்களுடன் இணைந்து கொள்கின்றது.
 (மேலும்....)

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் தொடர்..7

புலிகள் பிரேமதாச பேச்சுவார்த்தையை தோழர் நாபா இதயசுத்தியுடன் வரவேற்று அறிக்கைவிட்டார். முன்பு அவர்கள் இடைக்கால நிர்வாக சபையை ஏற்றிருந்தால் நாம் இந்த சபைக்கு வந்திருக்க தேவையில்லை என்பதையும் குறிப்பிட்டார். ஆனால் புலிகளின் குறி மாகாண அரசை முடக்குவது. அதனால் அவர்களின் பக்கபலத்துடன் பன்சலைக்கு புத்தரை வழிபட சென்ற பிரேமதாசா அமைதிப்படையை வெளியேறச்சொல்லி அறிவிப்பு செய்தார். அதை துரிதப்படுத்த புலிகளுக்கு பெரும்தொகை ஆயுதங்களும் கொடுத்தார். அமைதிப்படையை கட்டம் கட்டமாகத்தான் மீளப்பெற முடியும் என்ற, இந்திய பிரதமர் ராஜீவுடன் முறுகல் நிலையை ஏற்படுத்தினார். இந்த நேரத்தில் அன்னை இந்திரா திடீர் மறைவால் ஏற்பட்ட கொள்கை மாற்றம் போல போபோஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டில் ராஜீவ் காந்தி பதவி விலக, பிரதமரான வி பி சிங் அமைதிப்படை துரித விலகலுக்கு சம்மத்தித்தார்.  அவரை அந்த முடிவை எடுக்க தூண்டியவர் அப்போது புலிகளை ஆதரித்த வி பி சிங் அரசின் பங்காளியான கலைஞர் கருணாநிதி. (மேலும்....)

தேர்தல் பரப்புரையில் தூற்றலும் போற்றலும் !?

(மாதவன் சஞ்சயன்)

நாணயத்தின் இருபக்கம் போன்றதே அரசியலில் ஒருவரை போற்றுவதும் தூற்றுவதும். அவர் தமது அணியில் இருக்கும்போது போற்றுவது, மாற்று அணிக்கு சென்றால் தூற்றுவது எனும் அரசியல் அநாகரீகம் கருணாநிதிக்கு பின் தமிழ் நாட்டின் வரவு. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அறிஞர் அண்ணா வழி வந்த கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆரின் சினிமா பிரபலம் கட்சிக்கு பலம் சேர்த்தபோது, அவரை நண்பர் என போற்றிவிட்டு எம் ஜி ஆர் தனக்கு சவாலானபோது, அவரை மலையாளி என தூற்றியது முதல் தொடங்கிய கலாச்சாரம். போராட்டகால பயிற்சி முகாம்களை தமிழ் நாட்டில் வைத்திருந்த போராளிகளையும் அந்த நோய் தொற்றிக்கொண்டது. (மேலும்....)

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான எமது நிலைப்பாடு

தேர்தல் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான நடைமுறை. நாம் தேர்தல் ஜனநாயக நடைமுறைகளில் கடந்த 27 வருடங்களாக பங்கு பற்றி வந்திருக்கிறோம். மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் -யாருமே தேர்தல்களில் பங்கு பற்றுவதை நினைத்துப்பார்க்காத காலத்தில் ஜனநாயகம் மறுக்கப்பட்ட காலத்தில் பங்கு பற்றியவர்கள். யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் ஜனநாயக மீட்சிக்கான முன்னோடி நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம். இந்த ஜனநாயகத்திற்கான தொடர் இடையறாச் செயற்பாட்டில் பல நூற்றுக்கணக்கான தோழர்கள் பலியாகி இருக்கிறார்கள். இழப்புக்களை சந்தித்திருக்கிறார்கள். (மேலும்....)

அடியோடு ஒழிக்க வேண்டியது.......?

சிங்கள பேரினவாதத்தை விடத் தமிழ்த் தேசியம் மிக மிக ஆபத்தானது. அரச பயங்கரவாதத்தை விடப் புலிப் பயங்கரவாதம் மிக மிகக் கொடியது. இவை எல்லாவற்றையும் விட ஆபத்தானதும் அடியோடு ஒழிக்க வேண்டியதும் எது என்று தமிழ்ப் பெரும்பான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, மற்றவையும் ஒதுக்கப்பட வேண்டியவையே. (Arul Birt)

ஆடி 17, 2015

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் தொடர்..6

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பிறந்த மாகாண சபை என்னும் குழந்தை தன் தகப்பன் தர மறுத்ததை தாயிடம் கேட்டது. பிரேமதாசா பின்னடித்ததால் முதல்வர் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் அதிகாரபகிர்வின் குறைபாடுகளை பட்டியல் இட்டார். விபரீதத்தை உணர்ந்த பிரேமதாசா தந்திர நடவடிக்கையாக தனது பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தினவை திருமலை அனுப்பிவைத்தார். ஜனாதிபதி தேர்தலின் போது பொதுப்பட்டியல் பிரச்சனையை தீர்ப்பதாக சொல்லி ஆதரவு கேட்டதை முதல்வர் அவருக்கு ஞாபகமூட்ட அவர் இந்திய அமைதிப்படை பிரசன்னத்தை காரணம் காட்டி தெற்கில் ஜே வி பி கலவரம் தொடர்வதால் அதை நிறுத்த இந்திய அமைதிப்படை வெளியேற்றத்துக்கு முதல்வர் ஒத்துழைத்தால் அதிகாரபகிர்வு விடயம் சுலபமாகும் என பிரேமதாசாவின் சதிவலைக்குள் முதல்வரை சிக்கவைக்க முயன்றார். (மேலும்....)

மாற்றமடையும் யாழ் தேர்தல் களம் !

(மாதவன் சஞ்சயன்)

வடக்கில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 17ல் இடம்பெறும் தேர்தல் வாக்களிப்பு ஒப்பீட்டளவில் 1977ல் இருந்து 2010 வரை இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பு தினங்களை விட ஆரோக்கியமானதாக அமையும் போலத்தான் தெரிகிறது.
காரணம் சட்டத்துறையின் இரு கண்களான நீதிமன்றங்களும், பொலிசாரும் அரசியல் அழுத்தங்களுக்கு உட்படாமல் சுதந்திரமாக பக்கச்சார்பின்றி நடப்பதற்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் வேட்பாளராக இருந்தாலும் தேர்தல் முடியும்வரை பிணை மறுப்பு என்ற நீதிமன்ற அறிவிப்பு, பொது போக்குவரத்து நிலையங்கள் வாகனங்களில் தேர்தல் விளம்பரம் ஒட்டப்பட்டால் கவலாளிகள், ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொலிஸ் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தல் என்பன இந்த ஆரோக்கியமான வாக்களிப்புக்கு வழி வகுக்கும் என எதிபார்க்கலாம். (மேலும்....)

முன்னாள் புலி இன்று ஈபிடிபி இல் வேட்பாளர்

கவியரசு கண்ணதாசனின் உறவினர் யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்!

அடுத்த மாதம் இடம்பெற உள்ள ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் கவியரசு கண்ணதாசனின் உறவினரும், ஊரவருமான இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் போட்டியிடுகின்றார். ஈழத்து எம். ஜி. ஆர் என்று அறியப்படுகின்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்துக்கு வந்து குடியேறினர். இவர் பிரசித்தி வாய்ந்த யாழ். இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவர். இவர் சைவத் தமிழ் வித்தகரும், நாடறிந்த பேச்சாளரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். அத்துடன் பிரபல விஞ்ஞான ஆசிரியராகவும், சமூக சேவையாளராகவும் விளங்குகின்றார். தமிழர் உரிமைப் போராட்டம் இவரையும் இழுத்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவையில் இணைந்து செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் கல்வித் துறைப் பொறுப்பாளராக, தமிழ்மொழிச் சீர்திருத்த குழு உறுப்பினராக செயற்பட்டார். இப்பொழுது டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர்களில் ஒருவர் ஆவார். (மேலும்....)

ரஷ்யாவின் மீள்வருகை

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பெர்லின் சுவரின் வீழ்ச்சியின் பின்னர் 'புதிய உலக ஒழுங்கு' என அழைக்கப்பட்ட அமெரிக்கத் தலைமையிலான ஒரு மைய உலகம் தனது மரணத்தை மெதுமெதுவாக எட்டுகிறது. எந்த விளையாட்டிலும் சிறந்ததொரு வீரரின் காலம் முடிதலும் அடுத்தவரின் மேலெழுச்சியும் இயல்பானதே. அரசியல் விளையாட்டும் அவ்வாறானதே. அதிலும் குறிப்பாக சர்வதேச அரசியல் அரங்கு காலங்காலமாக அவ்வாறே இருந்துள்ளது. சோவியத் ரஷ்யாவின் தோல்வியுடனும் உடைவுடனும் தோன்றிய 'புதிய உலக ஒழுங்கு', விளாடிமிர் புட்டின் தலைமையிலான ரஷ்யா உலக அரங்கில் தன்னை ஒரு பிரதான அரங்காடியாகத் தனது மீள்வருகையை அறிவிக்கும் போது அதிர்வது தற்செயலல்ல. ஒருவகையில் சர்வதேச அரசியலை விளங்குதற்கான முரண்நகை என்றும் இதை அழைக்கலாம். (மேலும்....)

இந்தியாவிலேயே மிக மோசமான மாசடைந்த நகரம் சென்னை

இந்தியாவிலேயே மிக மோசமான மாசடைந்த நகரமாக சென்னை உள்ள தாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் உலக அளவிலும் மாசடைந்த நகரங்களின் பட்டியலிலும் சென்னை இடம்பெற்றுள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான 10 மாசுபாட்டு கண்காணிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட ஆய்வில் டெல்லியை விட சென்னை, கான்பூர் நகரங்களில் தான் காற்றின் தரம் மிக மோசமாக இருந்து வருவது தெரிய வந்துள்ளது. உயிர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் காற்றில் இருக்கும் அளவைக் கொண்டு இந்த புள்ளிவிபர அறிக்கை தயாரிக்கப்பட் டுள்ளது. சென்னை, லக்னோ, நாக்பூர் ஆகிய நகரங்களில் நச்சு பொருட்க ளின் அளவு அதிகம் உள்ளதால் இந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் நுரை யீரல் மற்றும் இதய நோய்கள் அதிகம் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள் ளது. காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த நகரங்களில் முதல் இடத்தில் சென் னையும் 2வது இடத்தில் லக்னோவும் 3வது இடத்தில் டில்லியும் 4வது இடத் தில் மேற்கு லக்னோவும் 5வது இடத்தில் கானபூரும் உள்ளன. வடசென்னையில் தொழிற்சாலைகளால் மாசு ஏற்படுகிறது. கட்டுமான பணிக ளால் போக்குவரத்து நெரிசலால் தென் சென்னை உள்பட மொத்த சென்னை நகரும் மாசடைந்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் 700 புதிய வாகனங்கள் சென்னை வீதிகளில் ஓடுகின்றன. இதனால் தலைநகர் டெல்லியை விட மாசடைந்த நகரமாக சென்னை உருவாகி உள் ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வெளியிடப்படும் புகையில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு மற்றும் சல்பைடு ஒக்சைடால் மாநகரின் காற்று மாசடைந்து மக்களுக்கு ஆரோக்கிய கேட்டை ஏற்படுத்துகிறது.

ஆடி 16, 2015

மணல் கொள்ளையின் அளவு சாட்சி

இது தமிழ் நாட்டிற்கு மட்டும் அல்ல இலங்கையிற்கும் பொருந்துகின்றது

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் தொடர்..5

எனது தொடர் பகுதி 4ல் தாங்கள் போட்ட தோற்றம் போன்றதே, 1978ல் நான் சந்தித்த நாபா. சிறு மாற்றம் செய்தால் உண்மை சொரூபம் வெளிப்படும். தாடி மீசை அற்ற நீல டெனிம் ஜாக்கற், டெனிம் கால்சட்டை போட்ட மெலிந்த தோற்றமுடைய நாபா வெளிப்படுவார். அந்த தோற்றத்தில் முதலில் நான் கண்ட நாபாவை பின் நாளில் கட்டுமஸ்த்தனான உடலுடன் பார்த்த வேளை அவரிடம், நான் எவ்வளவு உண்டாலும் என் உடல் கட்டுமஸ்த்தாக இல்லை என குறைப்பட, அவர் தான் கூறும் உணவு பழக்கத்தை, உடல் பயிற்சியை தொடர்ந்து செய்வேன் என சத்தியம் செய்தால் சொல்லித் தருவேன் என தனது கரத்தை, சிறுபிள்ளைகள் நீட்டுவது போல நீட்ட நானும் அளிச்சாட்டிய ( பொய் ) சத்தியம் செய்து அவரை ஏமாற்றிய பலனை, பின்னாளில் கண்டதையும் உண்டு, உடல் பயிற்சி இன்றி கொளுப்பை சேரவிட்டு இதய இரத்தோட்ட அடைப்புக்காய், அறுவை சிகிச்சை செய்த போது உணர்ந்தேன். அதிக கொழுப்பற்ற அளவான உணவு, அதற்கு தேவையான உடல் பயிற்சி, அது தான் நாபாவின் அறிவுரை. நல்லார் சொல்புத்தி கேளான் தன் உடல் நிலை கெட்ட பின்பு தான் அதுபற்றி உணர்வான் என்பது என் அனுபவம். (மேலும்....)

சிலுவையில் சிதறிய இரத்தம்

(ப.தெய்வீகன்)

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் எதிர்வரும் தேர்தலில் குதிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரை களமிறக்கும் யோசனைகளை மைத்திரி தரப்பு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன. மஹிந்தவின் அரசியல் பிரவேசத்துக்கு அனுமதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரியின் முடிவு தொடர்பாக வெளிப்படையாக அதிருப்தி வெளியிட்டிருந்த சந்திரிகா அம்மையார், தான் அரசியலுக்கு மீண்டும் வருவது தொடர்பாக கோடி காட்டிவிட்டு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் புறப்பட்டுள்ளார். அங்கிருந்து வந்து தனது அரசியல் செல்நெறி குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்போவதாகவும் கூறியிருந்தார். (மேலும்....)

நாடு திரும்புகிறார் சந்திரிகா

முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம்

முன்னாள் ஜனாதி பதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் அறிவிக் கப்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல் கூட்டங்கள் பலவற்றில் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருத்த முடியாத ஜென்மங்கள்

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று சர்வதேசத்துக்கு மார் தட்டிக் கொள்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கு ஒழுங்காக கட்சியின் பெயரை எழுதவே தெரியவில்லை. மெத்தப் படித்த சட்டத்தரணிகளும், அப்புக்காத்துகளும் அதிகமாக காணப்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கு ஒழுங்காக தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யத் தெரியவில்லை. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன் தினம் காலை 11.30 மணிக்கு நிறைவு பெற்றது.நேற்று முளைத்த காளான்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் நையாண்டி செய்யப்படுகின்ற ஏனைய கட்சிக்காரர்கள் ஒழுங்காக வேட்பு மனுக்களை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடத் தாக்கல் செய்து இருந்தனர்.(மேலும்....)

சிறுபான்மையினரே அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தி

இன்று இந்த அரசியல் கட்சியில் இருந்து மற்றொரு கட்சியை துரோகிகளின் கட்சி என்று சாடுபவர், நாளை எவ்வித வெட்கமுமின்றி அந்த இரண்டாவது கட்சியில் சேர்ந்து கொண்டு தாம் முன்னர் இருந்த கட்சியைப் பார்த்து துரோகிகள் என்கிறார். இன்று ஒருவரைப் பார்த்து துரோகி என்பவருக்கு நாளை அந்த துரோகியோடே கூட்டு சேர்வதற்கு காரணமே தேவையில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதும் தலைவர் என்ற முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐமசுகூவின் சார்பில் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேரதலில் போட்டியிட அனுமதி வழங்கியமை அண்மையில் இடம்பெற்ற அதுபோன்ற எதிர்பாராத ஒரு முக்கிய விடயமாகும். (மேலும்....)

டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர்

போட்டு உடைத்தார் ஈ. பி. டி. பி பிரமுகர்!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நடத்தப்படுகின்ற மகேஸ்வரி பவுண்டேசன் நிறுவனம் உண்மையில் மக்கள் சேவை நிலையமே ஆகும், மாறாக மணல் கொள்ளை நிறுவனம் அல்ல என்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சமூக சேவையாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். இவர் வட்டுக்கோட்டையில் துணவி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு கூறினார். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-  யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக கடமையாற்றி வந்தவர்களை நிறுத்த அரசாங்கம் தீர்மானம் எடுத்தது. இத்தொண்டர்களில் அநேகர் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள்,யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள் ஆவர். (மேலும்....)

சிவாஜிலிங்கம் பேசுகின்றேன்...........!

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக தமிழர்களின் எதிர்ப்பைக் காட்டவே குருநாகலையில் போட்டி

மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுகின்ற காரணத்தினால் அவரை ஈழத் தமிழ் மக்கள் சார்பில் எதிர்ப்பதற்காகவே குருநாகல் மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று பிரசாரத்தை எமது அணி மேற் கொள்ளப் போவதில்லை. பொதுக் கூட்டங்களை அங்கு நடாத்துவதற்கான சூழல் இல்லை. இலங்கையில் மிகப் பெரியளவில் இராணுவ வீரர்களையும், போரின்போது கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் இடம் தான் குருநாகல் மாவட்டம் இதன் காரணமாகவே போர் வெற்றியைக் கொண்டாடிய மஹிந்த ராஷபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கியிருக்கின்றார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் சிங்கள ஊடகவியலாளர்கள் இனவாதத் தினை தூண்டுவதற்காக குருநாகலில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினார்கள். மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் இருந்துவர முடியுமென்றால் நான் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து வர முடியும் தானே என கேள்வி எழுப்பினேன். ஆசனங்களை பெற வேண்டுமென்றோ, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெறவேண்டுமென்ற நோக்கமோ இல்லை, இது கொள்கை அடிப்படையிலான விடயம் என்றும் அவர் மேலும் கூறினார்.

கயானாவின் பிரதமர் நாகமுத்து என்ற தமிழர்

"கயானாவின் பிரதமர் நாகமுத்து என்ற தமிழர் என்பதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும்" என்று ஒரு தகவலை, சி.ஐ.ஏ. தமிழர்கள் மத்தியில் பரப்பி இருந்தது. அதனை "தமிழ் இன உணர்வாளர்கள்" பலர் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.
நான் அப்போதே கயானா அரசியல் பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட்டிருந்தேன். கூடவே "சென்னைத் தமிழரான" நாகமுத்து ஒரு சி.ஐ.ஏ. கைக்கூலி என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து இருந்தேன். சி.ஐ.ஏ. அனுசரணையின் பேரில், கயானா நாட்டில் நடந்த ஆட்சி மாற்றத்தின் உண்மையான நோக்கம் என்ன என்ற உண்மை, தற்போது மெல்ல மெல்ல வெளிவருகின்றது. (மேலும்....)

 ஆடி 15, 2015

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் ! தொடர்..4

அதுவரை ஜனாதிபதியாக இருந்த ஜே ஆர் பதவிக்காலம் முடிய ஜனாதிபதி  தேர்தலில் பிரேமதாசா சிறிமாவுடன்  போட்டியிட்டார். அப்போது இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்துக்கு முதல்வர் மற்றும் அவரது செயலாளர் விக்னேஸ்வரனுடன் சென்றபோது அங்கு யுஎன்பி செயலாளர் ரஞ்சன் விஜயரத்தின தூதுவர் டிக்சிட் உடன் முதல்வர் வரவுக்காக காத்திருந்தார். சிறிமா பண்டாரநாயக்க இலங்கை இந்திய ஒப்பந்ததை எதிர்ப்பதால், யுஎன்பி அரசு ஒப்பமிட்டதால் அதன் வேட்பாளர் பிரேமதாசாவை தெரிவு செய்வது சிறந்தது என டிக்சிட் எம்மிடம் கூற,  ரஞ்சன் தன் பங்குக்கு 13வது திருத்தத்தில் உள்ள பொதுப்பட்டியல் சிக்கலை பிரேமதாசா தீர்த்து வைப்பார் என உத்தரவாதம் தந்தார்.  முதல்வர் எமது கட்சி ஏற்கனவே ஐக்கிய சோசலிச கூட்டில் இணைந்  திருப்பதால் விஜய் கொல்லப்பட்ட பின் வேட்பாளராக நியமிக்கப்பட்ட ஓசி அபய குணவர்த்தனவை ஆதரிக்கும் முடிவை கூறி இதுபற்றி நாபாவுடன் கலந்துதான் முடிவெடுக்கலாம் என கூறிவிட்டு வந்தார். (மேலும்....)

மஹிந்த தொடர்ந்தும் தோற்பார் மைத்திரி


மனுக்கொடுக்க அதிருப்தி தெரிவித்தேன்

இராஜினாமா குறித்து ரணிலுக்கு கூறினேன்

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கமாட்டேன்

ஜே.ஆரே பெரும் தவறு செய்துள்ளார்

தேர்தலில் நடுநிலை வகிப்பேன்


கடந்த இரண்டு வாரங்களில் தான் தாக்கப்பட்டதைத் போன்று, எந்தவொரு ஜனாதிபதியும் தாக்கப்பட்டதில்லை எனவும், துஷ்டன் எனவும் துரோகி எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள தான் எடுத்த தீர்மானம் சரியானது என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தோற்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(மேலும்....)

வித்தியாதரன், ஸ்ரீ ராங்கா விபரீத வரவு

(மாதவன் சஞ்சயன்)

பெண்பார்க்கும் நிகழ்வில் தங்கையை காட்டிவிட்டு மணமேடையில் அக்கா அமர்வதுபோல, முன்னாள் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளை காட்டியும் மலையக பாட்டாளி மக்களை காட்டியும், தாம் பாராளுமன்றம் செல்ல தயாராகிவிட்டார்கள் தம்மை ஊடகவியலாளர்களாக அடையாளப்படுத்தும் வித்தியும், ரங்காவும். தன் பின்னால் முன்னாள் புலிகள் இருப்பதை காட்டி செய்த பேரம் படியாததால், தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல அவர்களுக்கு தலைமை தாங்கும் சாட்டில் சுயேட்சையாக களம் காணவருகிறார் வித்தி.
புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின் வட மாகாண சபைக்கு தானே முதல்வர் வேட்பாளர் என செய்திகளை பரவவிட்ட வித்தி, இடையில் வந்த பாராளுமன்ற தேர்தலில் குறிவைத்தார். அப்போது கூட்டமைப்பு அவருக்கு ஆசனம் தர முன்வந்தபோது அதற்கு தடையாக வந்தது அவரது மைத்துனர் சப்ரா சரவணபவன். உதயன் உரிமையாளரின் தயவு தேவை என்பதால் மாகாண முதல்வர் பதவி உமக்குத்தான் என கூறி வித்தியை மைத்துனருக்கு விட்டுக்கொடுக்க செய்தார்கள். வித்தி சம்மதித்தாலும் அதுவரை ஆசிரியராக தான் கடமையாற்றிய உதயனை விட்டு விலகினார். (மேலும்....)

மஹிந்தவுக்கு வேட்புமனு: மைத்திரி அதிருப்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியமை தொடர்பின் தான் அதிருப்தியடைவதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள தான் எடுத்த தீர்மானம் சரியாது என்றும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இருந்திருந்தால், 100நாட்கள் திட்டத்தினையும் மக்களுக்கான பயன்களையும் அவர் ஆதரித்திருக்க மாட்டார்; எனத் தெரிவித்தார்.

ஈரான் அணு விவகாரத்தில் வரலாற்று முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது

'வரலாற்று சரணடைவு' என இஸ்ரேல் விமர்சனம்

ஈரான் அணுசக்தி விவகாரம் குறித்து உலக ஆதிக்க நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. ஈரானின் அணு சக்தியை கட்டுப் படுத்தி அதன் மீதான சர்வதேச தடைகளை தளர ;த்தும் இந்த உடன்பாடு மத்திய கிழக்கில் பாரிய மாற்றங்களை கொண்டுவரும் என்று நம்பப்படு கிறது. எனினும் இந்த உடன்பாட்டை 'வரலாற்றுச் சரணடைவு" என்று இஸ்ரேல் விமர்சித்துள்ளது. ஆஸ்திரிய தலைநகரில் இடம்பெற்ற மரதன் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹமது ஜவாத் 'ரீப் மற்றும் ஐரோ ப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் பெட்ரிகா மெகரினி நேற்று கூட்டாக விடுத்த அறிக்கையில் புதிய அறிவிப்பு விடுக்கப்பட்டது.(மேலும்....)

எம்.எஸ்.வி என்றொரு இமயம்

கண்ணதாசன் பாடல் எழுத, விஸ்வநாதன் இசையமைக்க, செளந்தரராஜன் பாடல் பாட... இனிமேல் என்று வரும் அந்தக் காலம்!” பல வருடங்களுக்கு முன்னர் பேட்டியொன்றின் போது பாடகர் ரி. எம். எஸ். துயரத்துடன் கூறிய வார்த்தைகள் இவை. தமிழ் சினிமாப் பாடல்களை தம்வசம் ஆக்கிரமித்து வைத்திருந்த அந்த மும்மூர்த்திகளில் இறுதியாக எஞ்சியிருந்த மெல்லிசை மன் னர் விஸ்வநாதனையும் கலையுலகம் நேற்று இழந்து நிற்கிறது. (மேலும்....)

ஆடி 14, 2015

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் ! தொடர்..3

தேர்தல் நடந்த தினம் சுவாரசியமானது. நவம்பர் 19 . அது அன்னை இந்திரா காந்தியின் பிறந்த தினம் மட்டுமல்ல தோழர் நாபாவின் பிறந்த தினமும் ஆகும். அந்த தின தெரிவின் பின்புலத்தில் வரதன் செயல்பட்டது பலருக்கு தெரியாது.  கட்சி முகம்கொடுத்த முதல் கேள்வி மாகாண சபையை எங்கு அமைப்பது என்பதே. நாபாவின் பதில் திருமலை. ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தன வரதனிடம் திருமலை தவிர வேறுங்கும் அமைத்தால் தமிழ் ஆளுனரை தருவேன் என பேரம் பேசினார். வரதன் பேரத்துக்கே இடமில்லை என உறுதியுடன் கூறிவிட்டார். இளைப்பாறிய ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் நளின் செனிவரட்ன ஆளுநராக திருமலை வந்தார். (மேலும்....)

தேர்தல் திருவிழா கொடி ஏறிவிட்டது ! ?

(மாதவன் சஞ்சயன்)

ஈழத் தமிழர் உரிமை போராட்ட வரலாற்றை எழுதும் எவரும் மறைக்க முடியாத சரித்திர நாயகனும், அமிர் அண்ணா என இளைஞர்களால் வாஞ்சையோடு அழைக்கப்பட்டவரும், தந்தை செல்வாவின் தளபதி என தமிழரசு கட்சியினரால் மதிக்கப்பட்டவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், அவரின் அரசியல் அனுபவ வயது கூட இல்லாத இளைஞர்களால் 1989ல் வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட, ஜூலை 13 ம் திகதியே ஸ்ரீலங்கா பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் கடைசி தினமாக அமைந்ததும் விதியின் விளையாட்டா ? கால ஓட்டத்தில் மறக்கப்படும் மனிதர்களை நினைக்க தூண்டும் நிகழ்வுகளும் தற்செயலாகவேனும் நடந்தேறுவது காலத்தின் கட்டாயம். (மேலும்....)

டக்ளஸின் வெற்றியை ஒப்புக் கொண்ட மாவை!

தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தரும், தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை சேனாதிராசா தலைமையில் ஆதரவாளர்கள் கூடி தேர்தல் வியூகம் குறித்து கடந்த தினங்களில் மந்திராலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார்கள். அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 06 ஆசனங்களை பெறுவதற்காகவே போட்டியிடுகின்றது என்று மாவை சேனாதிராசா பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த மனிதருக்கு வயதாகி அறளை பிடித்து விட்டதோ? என்று சிலர் குசுகுசுக்கவும் செய்தனர். ஒரு வேளை யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 06 ஆக குறைக்கப் பட்டூ விட்டதோ? என்று இன்னும் சிலர் வலுவான சந்தேகம் கொண்டனர். அப்போது மாவை தொடர்ந்து பேசுகையில் ஈ. பி. டி. பியின் டக்ளஸ் தேவானந்தாவுக்கு என்று தனிப்பட்ட வாக்கு வங்கி இருக்கவே செய்கின்றது, டக்ளஸ் எப்படியும் நிச்சயமாக நாடாளுமன்ற உறுப்பினராக வந்தே விடுவார், இதில் மாற்றம் கிடையவே கிடையாது, ஏனென்றால் இது வரை போட்டியிடுகின்ற நாடாளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் இவர் வெற்றியே கண்டிருக்கின்றார். ஆகவேதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 06 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றது என்பதை கட்டாயம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்றார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ் காலமானார்

மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம். எஸ் விஸ்வநாதன்( வயது 87) இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம். எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி தம்பதியினருக்கு 1928இல் பிறந்தார். (மேலும்....)

அனந்தி பின்வாங்கினார்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்ஷ, திங்கட்கிழமை (13) தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்;ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுவதற்கு வாய்ப்புத் தருமாறு அனந்தி சசிதரன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியிருந்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில், அனந்திக்கு வாய்ப்புக் கொடுக்காமல் கடந்த வெள்ளிக்கிழமை (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல் செய்தது. இதனையடுத்து, அனந்தி சுயேட்சையாக தனித்து போட்டியிடவுள்ளதாகவும் அதற்கான வேட்புமனுத் தாக்கல் விண்ணப்பப்படிவத்தை பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இருந்தும், அவர் நேற்று வெட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. புலிகள் முள்ளிவாய்காலுக்குள் முடங்கியது போன்று அனந்தியின் பின்வாங்கல் அவரின் அரசியல் வாழ்வில் அமையப் போகின்றது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இரு பிரதமர்களுக்கும் இடமில்லை 6,151, பேர் போட்டி

எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை 13ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலின் ஊடாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை 300, அரசியல் கட்சிகளும் 201, சுயேட்சை குழுக்களும் களத்தில் குதித்துள்ளன. அரசியல் கட்சிகளின் சார்பில் 312 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 12 மணிக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 225 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேசிய பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். (மேலும்....)

கிரீஸுக்கு மேலும் கடன்மீட்பு உதவி வழங்க யூரோ வலய நாடுகள் ஒப்புதல்

கிரீஸ{க்கு மூன்றாவது கடன்மீட்பு உதவித் திட்டத்தை வழங்குவதற்கு யூரோ வலய தலை வர்கள் ஒருமனதாக இணக்கம் தெரிவித் துள்ளனர். பிரசல்ஸில் 17 மணிநேரம் நடந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிரேக்கத்துக்கு நிதியுதவி அளிப்பதற்கும் தீவிரமான மறுசீரமைப்புகளை முன்னெடுப் பதற்கும் எல்லா ஏற்பாடுகளும் தயார்நிலை யில் இருப்பதாக ஐரோப்பிய கவுன்சில் தலை வர் டொனால்ட் டஸ்க் கூறியுள்ளார். புதிய திட்டப்படி கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை கிரீஸ் மேற்கொள்ள வேண் டும். சீர்படுத்தப்பட்ட சட்டங்கள் கிரீஸ் பாரா ளுமன்றத்தில் உடனே நிறைவேற்றப்பட வேண் டும். பொருளாதார சீர்திருத்தம் செயல்படுத்தி னால் கிரீஸ் நாட்டுக்கு மேலும் கடன் வழங் கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த மீட்புத் திட்டத்தால் ஐரோப்பிய அமைப் பிலிருந்து கிரீஸ் விலகுவது தடுக்கப்படும். ஐரோப்பிய கூட்டமைப்பு நாணயமான யூரோ வின் மதிப்பும் காப்பாற்றப்படும். சர்வதேச நாடுகளிடம் கிரீஸ் வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்த வழி ஏற்படும். ஐரோப்பிய கூட்டமைப்பின் மீட்புத் திட்டத்தால் கிரீஸ் நாடு திவாலாவதும் தடுக்கப்படும்.

கிரேக்கத்தின்

இடதுசாரித் தலைவர் வலதுசாரிக் கொள்ளை(க)களை அமுல்படுத்துவாரா....?

கிரேக்க பிரதமர் சிப்ராஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நாடு திரும்புகின்றார். "வலதுசாரி சீர்திருத்தங்களை ஒரு இடதுசாரி பிரதமர் நிறைவேற்றப் போகிறார்" என்று, பணக்கார ஐரோப்பிய நாடுகள் பெருமை அடித்துக் கொள்கின்றன.

கடன் கொடுக்கும் நாடுகள் விதித்த நிபந்தனைகள் சில:
- ஓய்வூதியம் குறைக்க வேண்டும்.
- ஓய்வூதியம் பெறும் வயதை 67 ஆக்க வேண்டும்.
- பொருட்களுக்கான மதிப்புக் கூட்டு வரி அதிகரிக்கப் பட வேண்டும்.
- மின்சார சபை, விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றை தனியார் மயப் படுத்த வேண்டும்.
- அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்று, அந்தப் பணத்தில் கடனை திருப்பிக் கட்ட வேண்டும். (மேலும்....)

ஆடி 13, 2015

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் ! தொடர்..2

(படம்: தோழர் நாபா, நிவாஷ், வரதன் உடன் போராட்டத்தில் மரணித்த தோழரின் குடும்பம்)
எம் மக்களின் நியாயமான கோரிக்கைகள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்க்கான முன்னெடுப்புகள் மேற்கொண்ட இரு பெரும் தலைவர்களை இழந்த கோபம் விஜய் மரண அஞ்சலி கூட்டத்தில் பேசிய வரதனின் பேச்சில் சுதந்திர சதுக்கத்தை அதிரவைத்தது.
சோகத்தை விடுத்து அநீதிக்கு எதிராக அனைவரையும் அணிதிரள அவர் விடுத்த அழைப்பின் நேரடி ஒளிபரப்பு அனைவர் வீடுகளுக்கும் ரூபவாகினி தொலைகாட்சி மூலம் சென்றடைந்தது. இந்த இடத்தில் நாபாவின் தீர்க்கதரிசனம் தான் என் நினைவில். திறமைகளை அடையாளம் கண்ட நாபாவை வீழ்த்தி விட்டு புலிகள் தாமும் மாண்டு மடிந்து விட்டார்கள். (மேலும்....)

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு.....

நீங்கள் எந்த நாட்டில் ஒளிந்திருந்தாலும் பரவாயில்லை. தமிழீழத்தில் மட்டும் காலடி எடுத்து வைத்து விடாதீர்கள்! "இந்த நன்றி கெட்ட தமிழ் மக்களுக்காகவா போராடினேன்" என்று, வருந்த வேண்டி இருக்கும். நீங்கள் மீண்டும் தமிழ் தேசிய அரசியலுக்கு வந்தால், உங்களுக்கும் "புலனாய்வுத் துறையின் கைக்கூலி" முத்திரை குத்துவார்கள். நீங்கள் மீண்டும் ஆயுதமேந்தினால், சிங்கள இராணுவத்திடம் பிடித்துக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். அவர்கள் வேறு யாருமல்ல. நீங்கள் நம்பிக் கெட்ட, அதே "புலி ஆதரவாளர்கள்" தான்! நீங்களே உருவாக்கி விட்ட, தமிழ் முதலாளிகளும், தமிழ் வலதுசாரிகளும், சிறிலங்காவின் "ஜன நாயக நீரோட்டத்தில்" ஐக்கியமாகி விட்டார்கள்.(Kalaiyarasan Tha)

அனந்தி சசிதரன் அம்மையாரிடம் ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா?

இராணுவத்திடம் சரணடைந்த உங்கள் கணவராகிய மாவிலாறு புகழ் எழிலன் என்பவரைத் தேடி பொது வெளிக்கு வந்தீர்கள். அரசியல்வாதியாகி விட்டீர்கள். புலிகளால் நிராகரிக்கப்பட்ட மாகாணசபையில் அங்கத்தவராகி விட்டீர்கள். நல்லது. இறுதி யுத்தத்தின் போது, எழிலன் கனிமோழியோடு தொலைபேசியில் பேசும் போது, பக்கத்தில் இருந்ததாகச் சொல்லுகிறீர்கள். புலிகளிடம் இருந்து தப்பி, இராணுவக் கட்டுப்பாட்டுப்குப் பகுதிக்குப் புறப்பட்ட மக்களை நோக்கி எழிலன் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?(Arulbert Julian)

பிரபாகரன் தமிழ் மக்களுக்காகப் போராடினாரா?

கலையரசு அண்ணா நீங்கள் கொலையரசு ஆகிவிட்டீங்கள். பிரபாகரன் தமிழ் மக்களுக்காகப் போராடினாரா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். தமிழ் மக்களுக்கு ஒத்து வராத கொம்ம்யூனிசம் பற்றி எழுதுகிறீர்கள் அது உங்கள் ஆர்வம். ஆனால் பிரபாகரன் மக்களுக்காகப் போராடினார் என்று எழுதி ஒரு பொய்யர் ஆகிவிட்டீங்களே? ஆயுதம் தூக்கியவன் எல்லாம் போராளியா? எம் இனத்தைக் கொன்றழித்தவன் எம் இனத்துக்காகப் போராடினானா? அரசியல்தலைவர்கள், மாற்று இயக்க உறுப்பினர்கள், மாற்று இயக்கத் தலைவர்கள். ஊடகவியலாளர்கள், கல்லூரி அதிபர்கள், பேராசிரியர்கள், ப்லகலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், இஸ்லாமியர்கள் என்றெல்லாம் கொன்றழித்தவன் மக்களுக்காகப் போராடினானா? தமிழ் மக்களைக் கேடயங்களாக வைத்து தற்காப்பு யுத்தம் செய்தவன், தப்பியோடிய மக்களைச் சுட்டுக்கொன்றவன் தமிழ் மக்களுக்காகப் போராடினானா? இந்திய இராணுவத்துடன் வலிந்த யுத்தம் புரிந்து தமிழ் மக்களைப் பலி கொடுத்து , தமிழ்ப் பெண்களின் கற்பைக் கேடயமாக்கியவன் தமிழ் மக்களுக்காகப் போராடினானா? பிரபாகரனுடன் இருந்து சிங்களத்தை எதிர்த்தவர்கள் , தமிழர் பிரச்சனை தீர்வுக்கான சந்தர்ப்பங்களையெல்லாம் தட்டிக் கழித்தவர்கள் இன்று சிங்களப் பாராளுமன்றத்தில் ஆசனம் தேடி அலைகிறார்கள். இதற்காகவா இத்தனை ஆயிரம் மக்களைப் பலி கொடுத்தார்கள் கலையரசு அண்ணா நீங்கள் உங்கள் மன்சாட்சியுடன் எழுதுகிறீங்களா? அல்லது புலி வால்களின் நன்மதிப்பைப் பெற இப்படி எழுதுகிறீங்களா?

(Rahu Rahu Kathiravelu)

மாணவிகளின் அந்தரங்கங்களில் பாடம் நடாத்தியவர் ரொம்ப நல்லவராம்! - வாதாடிய சிறிகாந்தா!

வரணியில் ஐந்து மாணவிகளுடன் பாடசாலைக்குள் வைத்து அங்கசேஷ்டையில் ஈடுபட்ட ஆசிரிய ஆசாமிக்காக சட்டத்தரணி சிறிகாந்தா ஆஜராகியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சமயத்தில் அஜரான சிறிகாந்தா, ஆசாமி மிக நல்லவர். அப்படியான வேலைகளில் ஈடுபட மாட்டார். அவரை பிணையில் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்தார். எனினும், நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது. கடந்த மாதம் 24ம் திகதி சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடொன்றின் அடிப்படையில், கொடிகாமம் பொலிசார் வரணியிலுள்ள பாடசாலை மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பாடசாலை ஆசிரியரான 45 வயது ஆசாமி ஒருவரின் சில்மிசங்கள் அம்பலமானது. ஆசாமி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப்பட்ட சமயத்தில், ஆசாமியை பிணையில் விடுவிக்க பொலிசார் ஆட்சேபம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒவ்வொருவரிடமும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் முன்னிலையில் வீடியோ மூலம் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசாமியின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறீகாந்தாதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் செல்வம் அடைகலநாதனின் ரெலோ பிரிவின் ஆஸ்தான 'பாலசிங்கம்' என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் கி பி ! கிழக்கில் ரட்ணம் !

வருடங்களுக்கு மேல் தொடர்பில் இல்லாத 30 வருடங்களுக்கு முன் அறிமுகமான இரு தோழர்கள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேளையில் அவர்களுடனான என் பழைய நினைவுகளை பதிவிடுகிறேன். இருவருமே 1988 ல் உருவான வடக்கு – கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர்கள். நாபாவை நேசித்தவர்கள். இன்று இருவேறு கட்சிகளில் வேறு வேறு மாவட்டங்களில் போட்டியிட்டாலும் மக்களை நேசிப்பதில் அவர்களின் நலன்களுக்காக உழைப்பதில் ஆளுக்காள் சளைத்தவர்கள் அல்ல.(மேலும்....)

தமிழ்த்தேசியத்தை வைத்து பிழைப்பவர்கள் புலிகளின் முற்றுகையில்

தங்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தங்களைப் புறக்கணித்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முன்னால் போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளைக் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளது என ஜனநாயகப் போராளிகள் தெரிவித்துள்ளனர். ஜனநாயகப் போராளிகளின் முக்கியஸ்தரான துளசியின் ஒருங்கிணைப்பில் இன்று மாலை ஒன்று கூடிய விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் முக்கியஸ்தர்கள் ஜனநாயகப் போராளிகளின் இணைப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தியாதரன் அவர்களின் இடத்தில் இருந்து ஊடகத்திற்கு பேட்டி வழங்கியுள்ளனர். (மேலும்....)

விக்னேஸ்வரன் மீது அமெரிக்கா அழுத்தம்

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கடுமையான பாடம் நடத்தப்பட்டதாக அறியவந்துள்ளது என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, இனப்படுகொலை என்ற சொல்லாட்சி விடயத்தை மென்மைப்படுத்துமாறும், நல்லிணக்கம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி விடயங்களில் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், நல்லிணக்கம், மீள்கட்டுமானம், புனர்வாழ்வு விடயங்களில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், நிஷா பிஸ்வால் எடுத்துக் கூறியதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

கூட்டமைப்பிடம் சில கேள்விகள்!

(நிலாந்தன்)

2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது. 2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் கூட்டமைப்பிடம் கைமாறிய பின்வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் ஒரு சரியான மதிப்பீடு இருந்தால்தான் அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ன செய்ய வேண்டியிருக்கும்? என்பது தொடர்பாகவும் ஒரு சரியான கணிப்பீட்டுக்கு வர முடியும்.(மேலும்....)

ஐ.தே.கவின் புதிய கூட்டமைப்பு எமக்கு சவாலாக அமையாது - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியைவிட தற்பொழுது உருவாகியிரு க்கும் கூட்டணி சிறிது என்பதால் பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐ.தே.மு. சவாலாக அமையப் போவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற விருக்கும் பொதுத் தேர்தலில் 14ற்கும் அதிகமான தேர்தல் மாவட்டங்களை வெற்றிபெற்று ஐ.ம.சு.மு ஆட்சியமைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற பாரியதொரு கூட்டணி இருந்தது. ஐ.ம.சு.முவில் அங்கம்வகித்த சிலர் வெளியேறி கூட்டணி அமைத்துள்ளனர். இது எமக்கு சவாலாக அமையாது. கட்சிக்குள் எதுவித பிளவும் இல்லை. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதும் நாளை முதல் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்திருப்பது ஐ.ம.சு.முவுக்கு மேலும் பலம்சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், கட்சியின் ஒற்றுமையைப் பறைசாற்றியிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த டலஸ் அழகப்பெரும கூறினார்.

ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுவது தமிழினத்தை இல்லாமல் செய்வதற்கு சமம் - தா. பாண்டியன்

புதுக்கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப் பினர் தா. பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இலங்கையை எதிரி நாடாகவே கருத முடியாது. இலங்கைக்கு பாலம் அமைப்பது தமிழக மக்களின் நெடுநாளையக் கனவு. தேசியக்கவி பாரதியார் உட்பட பலரது கனவும் நிஜமாவது வரவேற்புக்குரியது. இந்நிலையில், இலங்கையில் சிறிசேனா தலைமையிலான அரசில் ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை மோடி அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். இது இலங்கையில் தமிழினத்தை இல்லாமல் செய்வதற்கு சமம் என்றார்.

இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது
அவர்களை போராளிகள் என்றார்கள்
அவர்கள் மண்ணுக்காக மரணித்தபோது
அவர்களை மாவீரர்கள்; என்றார்கள்
அவர்கள் துப்பாக்கியை மௌனித்தபோது
அவர்களை முன்னாள் போராளிகள் என்றார்கள்
அவர்கள் தேர்தலில் தமக்கும் சீட் கேட்டதும்
அவர்களை அரசின் ஏஜென்டுகள் என்று
சிறீதரன் எம்.பி சொல்லுகிறார்கள்
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

தமக்கு எம்.பி பதவி தேவை என்றபோது
பிரபாகரன் தேசிய தலைவர் என்றார்கள்
புலிகளே ஏக பிரதிநிதி என்றும் கூறினார்கள்
தற்போது புலிகள் இல்லை என்றவுடன்
பிரபாகரன் பயங்கரவாதி என்கிறார்கள்
புலிகளின் எச்சங்கள்கூட தேவையில்லை என்று
தலைவர் சம்பந்தர் அய்யா சொல்கிறார்கள்
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

தமிழர்கள் வோட்டால் ஜனாதிபதியான
மைத்திரியின் 100 நாள் ஆட்சியில்
கைதிகள் விடுதலை செய்யும்படி கோரவில்லை
மீள் குடியேற்றம் செய்யும்படி கேட்கவில்லை
காணாமல் போனோரையும் கண்டுபிடிக்கவில்லை
ஆனால் ,
சுமந்திரன் தனக்கு சொகுசு வாகனம் வாங்கியுள்ளார்
சுரேஸ் பிரேமச்சந்திரன் பணம் வாங்கியுள்ளார்
இதனை முதல்வர் விக்கி பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஆனந்தி மீது நடவடிக்கை எடுத்த மாவையார்
முதல்வர் விக்கி மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

(பதிவு: Tholar Balan)

ஆனாலும் ஆகஸ்ட் 17 இல்

தமிழ் சனம் விடிய எழும்பி

கண்ணை கசக்கியபடி

வீட்டுக்கு நேரே

புள்ளடி போடத்தான் போகுது

ஒன்றுமே புரியவில்லை

- சாகரன்

ஆடி 12, 2015

நாபா நினைவு மீட்சியும் வடக்கு கிழக்கு மாகாண சபை நிதர்சனமும் ! தொடர்..1

நாபா எனக்கு ஒரு வினோதம் என்றால் வடக்கு கிழக்கு மாகாணசபை எனக்கோர் மனத்தாக்கம். இன்று தம் அரசியல் லாபங்களுக்கா பலரும் பலவிதமாக விமர்சிப்பது போல, இந்தியாவால் தங்க தாம்பாளத்தில் வைத்து ஈ பி ஆர் எல் எப் வசம் அது தரப்படவில்லை.
பல முன்னணி தோழர்களை பலிகொடுத்து எத்தனையோ பழிகளை சுமந்து அமைதிப்படை முகாம்களில் முடங்கி எம் மக்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை நனவாக்க அந்த சபையின் உருவாக்கத்திற்கு ஈ பி ஆர் எல் எப் முகம்கொடுத்த துன்பங்களை பலர் அறியமாட்டார்கள். அதனால் வடக்கு கிழக்கு மாகாண சபையின் உருவாக்கம் அதற்கு ஏற்பட்ட இடையூறு என்பன பற்றி பதிவு செய்கிறேன். 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட பின் பொது வாழ்க்கைக்கு திரும்ப விரும்பியவர்களை புலிகள் விடவில்லை. தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு இடையூறானவர்கள் என சந்தேகித்து மீண்டும் தாக்குதலை தொடுத்தனர். வேறு வழி இன்றித்தான் இந்திய அமைதிப்படையிடம் பாதுகாப்பு தேடவேண்டிய நிலை ஈ பி ஆர் எல் எப் தோழர்களுக்கு ஏற்பட்டது. (மேலும்....)

இன்று போராட முடியாதவரின் போக்கிடம் பாராளுமன்றமா ?

(மாதவன் சஞ்சயன்)

ஏனோ தெரியவில்லை மக்களுக்கு மட்டுமல்ல முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்க ஒரே வழி தாம் பாராளுமன்றம் செல்வதுதான் எனும் எண்ணக்கரு, ஆயுதப்போராட்டம்தான் முடிந்த முடிவு என்று புறப்பட்ட அன்றைய இளைஞர்களின் இன்றைய மனதில் பதிந்துவிட்டது. தேர்தல் வந்துவிட்டால் போதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்காக, எம் முன்னாள் போராளிகளுக்காக, தாம் தான் பாராளுமன்றம் போகவேண்டும் என கூறிக்கொண்டு வாக்கு கேட்க பலர் அணிகளாக களம் இறங்குவார்கள். 1977 வரை தேர்தல் செலவு, போட்டியிடுபவரின் சொந்த பணமாகும். அதனால் தான் அப்போது அமிர்தலிங்கம் ஒவ்வொரு தேர்தலின் போதும் பண்ணாகத்தில் தன் காணிளை ஈடுவைப்பது அல்லது விற்பது போன்ற நிகழ்வுகள் நடந்தேறின. (மேலும்....)

Paranavitana resign as Media Ministry Secretary


Karunaratne Paranavitana has resigned from his position as the Secretary to the Ministry of Mass Media and Information, with effect from Friday (10). Speaking to Ada Derana, Paranavitana stated that he resigned from the position based on policy decisions. He stated that President Maithripala Sirisena has accepted his letter of resignation yesterday. It was reported yesterday that Paranavitana had turned down nominations extended to him from the United People’s Freedom Alliance (UPFA) to contest the forthcoming General Election from the Ratnapura District. The former diplomat, journalist and author was the one-time Ratnapura District Organiser of the Sri Lanka Freedom Party (SLFP). Paranavithana has held the posts of Assistant Secretary to the Ministry of Justice and Constitutional Affairs, Director General - Sri Lanka Broadcasting Corporation, Editorial Director - Associated Newspapers of Ceylon Ltd., Chief Executive Officer - Sri Lanka Rupavahini Corporation and Consul General - Consulate General of Sri Lanka in Totonto, Canada. A special grade officer of the Sri Lanka Administrative Service (SLAS), he was appointed as the Secretary to the Media Ministry by President Sirisena, following the election victory in January.

அல்பேர்ட்டா ரவுனில் ஒரு துண்டு நிலம் 10 டொலர்கள் மட்டுமே.

கனடா- அல்பேர்ட்டாவிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் குடியிருப்பு மனைக்குரிய ஒரு துண்டு நிலம் 10 டொலர்களிற்கு வழங்கப்படுகின்றது. டெலியா என்ற இக்கிராமத்தில் தற்போதைய மக்கள் தொகை 186. சனத்தொகையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த விற்பனை இடம்பெறுகின்றது. டெலியா சிறிதாக இருந்தாலும் இங்கு நூல்நிலையம், பனி சறுக்கு ,உணவகங்கள் மற்றும் கிரடிட் யூனியன் போன்றன உள்ளன. இந்த சிறிய இடத்தில் வசிப்பதால் பெரிய நன்மைகள் உள்ளன என மேயர் டான் பன்குறொவ்ட் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் தங்கள் சைக்கிள்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் அவர் கூறியுள்ளார். வாழக்கைத் தரமும் சிறந்த இடமாகும். டெலியா மற்றய சில சிறிய கிராமங்கள் மற்றும் ரவுன்களை போன்று தனிமைப்படுத்தப்பட்டதல்ல. அரை மணித்தியால வாகன மோட்டும் தூரத்தில் ,8000 சனத்தொகை கொண்ட டிரம்ஹெலர் என்ற ரவுன் அமைந்துள்ளது. பிஸியான கல்கரிக்கு காரில் செல்ல இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கும்.

பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்

2020 ஆண்டு முதல் 2030 வரை சூரியன் வேலை செய்யாது

எதிர்வரும் 2020 ஆண்டு முதல் 2030 வரை சூரியனில் இருந்து வரும் கதிர்களில் அளவுகள் குறையக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 1645ம் ஆண்டு முதல் 1715ம் ஆண்டு வரை சூரியனில் இருந்து வரும் கதிர்களின் தாக்கம் குறைந்ததால் பூமியில் கடும் குளிர் நிலவியது. இதன் காரணமாக லண்டனின் தேம்ஸ் நதிகூட முழுமையாக உறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் 2020 முதல் 2030 வரை மீண்டும் இதேபோல் ஒரு நிலை ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பிரித்தானியாவின் லெண்டுட்னொ பகுதியில் நடைபெற்ற தேசிய வானவியல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேராசிரியர் வாலெண்டின ஷர்கோவா சமர்பித்துள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது, சூரியனின் கதிர்வீச்சில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் வரும் 2020ம் ஆண்டு சூரியனின் கதிர் வீச்சு குறைய தொடங்கும். மீண்டும் உயராமல் சிறிய அளவிலேயே இது இருக்கக்கூடும். இதன் காரணமாக 2030ம் ஆண்டு சூரிய செயல்பாடுகளில் பெரிய தேக்கம் ஏற்படடும். இந்த நிலை 2030- 2040 வரை கூட தொடரக்கூடும். எனவே பூமியில் சூரியனின் கதிர்வீச்சுகள் இல்லாமால் குளிர் அதிகமாக இருக்கும். மீண்டும் கடும் குளிர்நிலைக்கு பூமி செல்ல வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரோகிகளின் கூடாரமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு! - அனந்தி சசிதரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் கொடுக்கின்ற பட்சத்தில் தமிழர் போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டு விடும் என்று தேவாரம் பாடி உள்ளார் சம்பந்தர் பெருமான். ஆனால் தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்த எட்டப்பர்களும், காக்கை வன்னியர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பில்தான் காணப்பட்டார்கள்… காணப்படுகின்றார்கள். இதற்கு மிக பொருத்தமான உதாரண புருஷராக மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விளங்குகின்றார். இவர் இந்திய அமைதிப் படையுடன் சேர்ந்த துணை ஆயுத குழுவாக இயங்கி போராளிகளை வகை, தொகை இன்றி கொன்றவர். விடுதலைப் புலிகளை அழிக்க உதவி செய்ய வேண்டும் என்று தினத்தந்தி பத்திரிகை ஊடாக இந்திய அரசாங்கத்துக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தவர். இவருக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பிஸ்டல் கொடுத்து இருந்தது. காக்கா.. குருவியை சுட அல்ல. புலிகளைச் சுடத்தான். (மேலும்....)

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியம்?

ஆச்சரியமும் ஏக்கமும் கலந்த பார்வையுடன் வடக்கு வாழ் தமிழ் மக்கள்

இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கின் களநிலவரம் தமிழ் மக்கள் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இறுதிப்போருக்கு பின்னரான 5 தேர்தல்களில் அரசுடன் பங்காளிக்கட்சி என்ற நிலையில் ஈபிடிபியும் அவ்வாறே அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கின் தமிழ் சூழலில் தம்மை தடம்பதித்திருந்தன. ஆனால் இம்முறை இந்த தேர்தல் களம் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு சற்று விரிவடைந்திருப்பதாக தெரிகிறது. தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தை கோஷமாக கையில் எடுத்துக்கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறை தேர்தலுக்காக தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது. (மேலும்....)

ஆப்கானின் சண்டையோடு சமாதானம் பேசும் அரசியல்

சண்டை பிடித்துக் கொண்டே சமா தானம் பேசும் கலை எல்லோருக் கும் வராது. கொலம்பியாவின் பார்க் கிளர்ச்சியாளர்கள், பிலிப்பைன்ஸின் மோரோ கிளர்ச்சியாளர்கள் அரசுடன் ஒரு பக்கம் சமாதானம் பேசிக்கொண்டு மறுபக்கத் தில் சண்டையும் நடத்துவதில் கைதேர்ந்த வல்லவர்கள். இந்த வல்லவர்களையே விழுங்கிச் சாப்பிடும் அளவுக்கு தலிபான்கள் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை ஆப்கான் தலைநகர் காபுலில் தலிபான்கள் இரு தற்கொலை தாக் குதல்களை நடத்தி ஒருவரை கொன்று நான்கு பேருக்கு காயம் ஏற்படுத்தினார்கள். (மேலும்....)

சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி தீர்மானம்

பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பக்கசார்பின்றி சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனுவை வழங்கியமை மற்றும் பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதி திங்கட்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் வேட்புமனுக்களை தயாரிப்பதில் ஜனாதிபதி எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார். அதேவேளை தன்னை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பங்களிப்பு வழங்கிய அமைச்சர்களை அழைத்து அவர்கள் உருவாக்கியுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளார்.

ஆடி 11, 2015

இலங்கை - இராமேஸ்வரம் இடையே பாலம் அமைக்க 22,000 கோடி ரூபா - ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்க இணக்கம்

இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போக்குவரத்தை மேம்படுத்த ரூ. 22,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்து ள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 22 ஆயிரம் கோடி நிதி யுதவி அளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.நெடுஞ்சாலைத்துறை எந்திரங்கள் தொடர்பான கருத்தரங்கு புதுடில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய தரை வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு வாகனப் போக்கு வரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் இராமேஸ்வரத்திலி ருந்து இலங்கைக்கு கடல் வழிப் பாலங்களும், கடலுக்கு அடியில் சுரங்கங்களும் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இராமேஸ்வரத்தின் தனுஷ் கோடியி லிருந்து இலங்கைக்கு பாதை அமைப்பது மூலம் சார்க் நாடுகள் அனைத்தும் சாலை மார்க்கமாக இணைக்க வழி ஏற்படும். ின் கட்கரி தெரிவித்தார்.

ஈ. பி. டி. பி பிரமுகரை சுட மறுத்த புலிப் பொறுப்பாளர்!

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உதயத்தை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இடம்பெற்ற சுவாரஷிய சம்பவங்கள் பலவும் தற்போது வெளியில் வந்த வண்ணம் உள்ளன. 2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலம். ஆயினும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களை புலிகள் படுகொலை செய்து கொண்டிருந்தனர். யாழ்ப்பாண நடவடிக்கை அணியின் பொறுப்பாளர்களில் ஒருவராக மலரவன் என்பவர் விளங்கினார். இவர் ஒரு புலனாய்வுப் போராளியும் ஆவார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை படுகொலை செய்கின்ற கடமை இவருக்கு வழங்கப்பட்டது. இப்பிரமுகர் குறித்த தகவல்களை சேகரித்தார் மலரவன். பின்பு ஒரு நாள் இப்பிரமுகரின் வீட்டுக்கும் நேரில் சென்றார். முதலில் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இப்பிரமுகருடன் நீண்ட நேரம் உரையாடினார். உரையாடல் நிறைவு பெறுகின்ற பட்சத்தில் அடையாளத்தை வெளிப்படுத்திய மலரவன் வரவின் நோக்கத்தையும் வெளிப்படையாகவே சொன்னார்.
ஆயினும் இப்பிரமுகரின் சுய நலம் அற்ற மக்கள் சேவை, நேர்மை, விடா முயற்சி, அர்ப்பணிப்பு, அரசியல் வேலை ஆகியவற்றால் கவரப்பட்டு விட்டார் என்று தெரிவித்த மலரவன் புலிகள் இயக்கத்தில் இணையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆயினும் இப்பிரமுகர் மறுத்து விட்டார். (மேலும்....)

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் வேட்புமனு தாக்கல்

2015 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) சுப நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முதன்மை வேட்பாளராக முன்னிறுத்தி அவரது தலைமையில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதிக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் செயலாளர் நாயகம் அவர்களை முன்னிறுத்தியதாக பின்வருவோர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் (கிபி)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி பிரதேச அமைப்பாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் (ரங்கன்)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி பிரதேச அமைப்பாளர் சூசைமுத்து அலெக்ஸ்சாண்டர் (சாள்ஸ்)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் பிரதேச அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேச அமைப்பாளர் இராமநாதன் ஐங்கரன்
யாழ். மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா
சமூக சேவையாளர் “சொல்லின் செல்வர்” இரா. செல்வவடிவேல்

(ஆயுதப் போராட்ட காலத்தில் (வாசித்தாரோ தெரியாது) சதா மாவோ இன் 'தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள்' என்ற புத்தகத்தை சதா காவித்திரிந்தவர். இணக் அரசியல் காலத்தில் நேற்றுவரை மாவோ இன் 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்...' என்ற கோஷத்தை ஐனநாயகப் போராளிகளை வரவேற்பது வரைக்கும் பேசுபவர்...... தேங்காய் உடைப்பதுதான் புரியவில்லை. இப்படிக் கேட்டால் என் மீது, என்கருத்தின் மீது அல்ல பாய சிலர் தயாராக இருப்பதுவும் எனக்குத் தெரியும். கருத்துக்களை கருத்துக்களால் சந்திப்போம்.... - சாகரன்)

அனைத்து இடங்களிலும் நாம் வெற்றிபெறுவோம் - மாவை சேனாதிராஜா

யாழ் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மதியாபரணம் சுமந்திரன் ஆகியோர் இன்றுபிற்கல் 2.45 மணியளவில் யாழ். கச்சேரியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா அவர்கள், மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது. நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றிபெறவோம் என்றார். யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மதியாபரணம் சுமந்திரன், என்.சிறீகாந்தா, ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் சிறீதரன், அருந்தவபாலன், மதினி நெல்சன் (பருத்தித்துறை, பிரதேசசபை அங்கத்தவர்), ந.அனந்தராஜ் (முன்னாள் தலைவர், வல்வெட்டித்துறை நகரசபை) ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

(அனைத்து இடங்களிலும் நாம் வெற்றிபெறுவோம் என்பது சேனாதியின் கோஷம் மட்டும் அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியில் உள்ள அனைவரினதும் கோஷம்தான். என்ன அனைத்து இடங்களிலும் தாம் மட்டுமே வெல்ல வேண்டும் என்பதையை இவர்கள் யாவரும் மனதுக்குள் சொல்லிக் கொள்கின்றார்கள் என்பது அவர் அவருக்கே தெரிந்த இரகசியம் - சாகரன்)

முதல் குடிமகன் என்ற கௌரவம்

முதல் குடிமகன் என்ற 'கௌரவம்' உம், வரிச் சலுகையும் இந்த முதல் குடி மக்களை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி முழுவதுமாய் இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகள் ஆகும். இவர்களின் புழக்கத்தில் இருந்த 10 இற்கும் மேற்பட்ட மொழிகள் இன்று முழுவதுமாய் இலத்தீன் மொழியில் இருந்து மருவி உதித்த ஆங்கில மொழியினால், கலாச்சாரத்தினால் இல்லாமல் செய்யப்பட்டு விட்டது என்பது பலரும் கவனத்தில் கொள்ள மறுக்கும் விடயம். இது அவுஸ்திரேலியா முதல் கொண்டு அமெரிக்கா, கனடா வரையிலும் நடைபெறுகின்றது. கொலம்பஸ் வட அமெரிக்காவின் முதல் குடியை இல்லாமல் செய்வதற்கு இடப்பட்ட முதல் விஷ விதை என்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் மறைந்தே வருகின்றனர். - சாகரன்

தருணம் அறிந்து பின்வாங்கினார் அனந்தி!

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற நோக்கத்தை கை விட்டு விட்டார் என்று இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பில் சந்தர்ப்பம் கேட்டு இருந்தார். மாவை சேனாதிராசா வில்லனாக மாறி கெடுத்து விட்டார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தூது அனுப்பி பார்த்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அசைந்து கொடுக்கவே இல்லை. சுயேச்சையாக களத்தில் இறங்குகின்ற ஜனநாயக போராளிகள் கட்சியின் கதவுகள் இப்போது வரை இவருக்காக திறக்கப்பட்டுத்தான் உள்ளன. ஆனால் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுடன் சேர்ந்து செயற்படுகின்றமை எதிர்காலத்துக்கும், பாதுகாப்புக்கும் நல்லது அல்ல என்று யோசிக்கின்றார்.இவர் சுயேச்சைக் குழுவாக போட்டியிட விண்ணப்பப் படிவம் வாங்கி வைத்திருக்கின்றார். ஆனால் போதுமான ஆட்கள் கூட்டுச் சேரவில்லை. இதே நேரம் இவர் ஒதுங்கி இருக்கின்ற பட்சத்தில் வரங்களும், வரப்பிரசாதங்களும் வழங்கப்படும், வட மாகாண சபையில் அமைச்சர் பதவிகூட கிடைக்கப் பெறலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமையிடம் இருந்து இவருக்கு விலை பேசப்பட்டு உள்ளது என்றும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(அனந்தி நாடாளுமன்றம் போக நாயாய் பேயாக பறக்கிறார். மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் முன்னாள் போராளிகளை தேர்தல் களத்தில் சுயேட்சையாக இறக்குகிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காடு மேடு என்று அலையோ அலையென்று அலைகிறார். அவர் ஒரு நாடு இரண்டு தேசம் என்கிறார். சரி அது கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். இவர் எந்தத் தேசத்தில் குடியிருப்பு? சிங்கள தேசத்தில்தான்! காரணம் அவரது சொத்துக்கள் கொழும்பில்தான் இருக்கின்றன. தமிழ் தேசத்தில் ஒரு பரப்பு காணி கிடையாது! ஏன் அவரது அகில இலங்கை கட்சிகூட சிங்கள தேசத்தில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகவரி 3 இராணி வீதி, கொழும்பு.! - நக்கீரன்)

கனடாவின்

சுருங்கிவரும்பொருளாதாரம்

சுருங்கிவரும் பொருளாதாரம் பாரிய வேலை இழப்புக்களை கொண்டு வரும் என எதிர்பார்த்த பல பொருளாதார வல்லுநர்களிற்கு யூன் மாதத்தில் கனடாவின் வேலையின்மை படம் மாறுதல் அடையாமல் இருந்தமை ஆச்சரியத்தை அளித்துள்ளது. கடந்த மாதம் பொருளாதாரம் 6,400 வேலைவாய்ப்புக்களை இழந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் தெரிவித்துள்ளது. இத்தொகை பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்த 10,000 வேலை இழப்புக்களை விட குறைவாக உள்ளது. இந்த மாத பகுதியில் 71,200 பகுதி நேர வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ள போதிலும் முழு நேர வாய்ப்புக்கள் 64,800 ஆக அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்பின்மை 6.9விகிதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உயர்வை அதிகரிக்க போதுமான வேலை இழப்புகள் ஏற்படவில்லை என கனடா புள்ளியியல் தெரிவித்துள்ளது. மாதாந்த பொருளாதார வேலை வாய்ப்புக்கள் குறைவடைந்து காணப்பட்டாலும் பொருளாதாரம் இந்த வருடம் 96,000புதிய முழு நேர வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என நிதி அமைச்சர் ஜோ ஒலிவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான உறுப்பினர்களை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று, திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், உதிரிகளைத் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றார். ஜனநாயக விடுதலைப் போராளிகளாக போட்டியிடும் முன்னாள் விடுதலைப் புலிகள் மற்றும் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வேண்டுமென தங்களை சந்தித்த முன்னாள் விடுதலைப்புலிகள், தமிழ் மக்களின் எதிர்காலம் மற்றும் உடனடித் தேவைகள் பற்றிய உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற உறுதிப்பாடு மட்டுமே அவர்களிடம் இருந்தது என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

(எனது கணவர் வன்னியில் துவக்குடன் திரிந்தபோது கை கட்டி வாய்பொத்தி திரிந்த கூட்டமைப்பினர் தற்போது இவ்வாறு எக்காளம் அடிப்பதை அடக்கவாவது எனது கணவர் எழுந்து வர மாட்டாரோ என்று அனந்தியன் குரல் சம்மந்தருக்கு கேட்காதோ.....? - அனந்தி சசிதரன்)

இறந்த பின்னரும் உயிர்வாழ்வது சாத்தியமா?

‘நாம் முப்பரிமாண உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.ஆனால் நவீன அறிவியல் முப்பரிமாணத்துக்கு அப்பால், நான்காவது , ஐந்தாவது என பதினொரு பரிமாணங்கள் இருப்பதாகச் சொல்கிறது. நாம் ஒரு பேரண்டத்தில் (யுனிவர்ஸ்) வாழ்வதாகக் கருதி வருகிறோம். ஆனால் மேலும் பல பேரண்டங்கள் அதாவது Multiverse இருப்பதாக ஒரு கோட்பாடு உள்ளது. நமது அண்டத்துக்கு பக்கத்திலேயே இன்னொரு இதே மாதிரியான அண்டம் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் கோட்பாடொன்றை உருவாக்கி இருக்கிறார்கள். ஆச்சரியமாக இல்லை’ நமது பிரபஞ்சத்தை ஒத்ததாக ஒரு சமாந்தர பிரபஞ்சம் இருக்கலாம் என்ற கோட்பாடு உள்ளது. (மேலும்....)

ஆடி 10, 2015

சம்பள உயர்வு வேண்டி பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுக்கும் மெதுவாக வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட் டத்தில் புசல்லாவ டெல்ற்றா தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டபோது எடுத்த படம். (பட உதவி: திருஞானம்)

லண்டன் சென்றுள்ள சந்திரிகா நாடு திரும்பியதும் முடிவு

பொதுத் தேர்த லுக்கான அரசியல் சூடுபிடித்திருக்கும் சூழ்நிலையில் முன் னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவசரமாக லண்டன் புறப்பட்டுச் சென்று ள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட குடும்ப நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு அவர் லண்டன் சென்றிருப்பதாக அவருடைய ஊடகச் செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.ம.சு.முவில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் சந்திரிகா குமாரதுங்க தொடர்ச்சியாக எதிர்ப்புக் காட்டிவந்தார். இந்நிலையில் வேட்பாளர் பத்திரத்தில் மஹிந்த ராஜபக்ஷவும் அவருக்கு ஆதரவான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்கள் நேற்று ஐ.ம.சு.மு. வேட்பாளர் பத்திரத்தில் கைச்சாத் திட்டிருந்தனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பாளராகப் போட்டியிட அனுமதிக்கப்பட்டால் தானும் தேர்தலில் போட்டியிடப் போவதாக சந்திரிகா குமாரதுங்க சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். லண்டன் சென்று திரும்பியதும் அவருடைய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.

வடக்கில் சட்டத்தின் ஆட்சிஆரம்பம்

(மாதவன் சஞ்சயன்)

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்த மக்கள், அதன் பலனை தற்போது அனுபவிக்க தொடங்கும் சூழலை, நீதிமன்றங்கள் தமது நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்த தொடங்கிவிட்டன. இதுவரை நடந்த எத்தனையோ தேர்தல்களில் வாக்களித்ததன் மூலம் அவர்கள் பெற்றது, பெறாமல் போனது பற்றி எழுதி அவர்களின் வயிற்றெரிச்சலை கிழப்ப நான் விரும்பவில்லை. இம்முறை அவர்கள் அளித்த வாக்குகளால் அமைந்த நல்லாட்சியில், முன்பு கட்டப்பட்டிருந்த நீதியின் கரங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது. முன்பு இருந்த அரசியல் தலையீடு இப்போது இல்லை. மறைமுகமான அடக்குமுறைக்குள் மக்கள் மட்டுமல்ல, நிர்வாக கட்டமைப்புகளும் கடந்த காலத்தில் வடக்கில் அகப்பட்டிருந்தன.
பல சமூக சீர்கேடுகளை தட்டிக் கேட்கவோ தண்டனை வழங்கவோ முடியாத அளவுக்கு, ஏதோ ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் பின்புலத்தில் குற்றவாளிகளை காக்கும் கரங்களாக செயல்ப்பட்டது. (மேலும்....)

அனந்தி சுயேச்சையாக களமிறங்க திடீர் முடிவு

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் யாழ். மாவட்டத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் பொருட்டு இதற்காக அவர் நேற்றையதினம் கட்டுப்பணம் செலு த்தியிருந்தார். பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட தனக்கு அனுமதி வழங்குமாறு கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்திருந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை சென்றிருந்த அனந்தி சசிதரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து தனக்கு போட்டியிட அனுமதி வழங்குமாறு கோரியிருந்தார். இது குறித்து கவனம் செலுத்துவதாக அவர் உறுதிமொழி வழங்கியிருந்த போதும் எனினும், அவருக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மறுத்துவிட்டார். இந்த நிலையில் சுரேஷ் பிரேமசந்திரன் கட்சியில் அவருக்கு இடமொதுக்க முன்வந்தபோதும், மாவை சேனாதிராஜா காட்டிய எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த முயற்சியும் கைவிடப்பட்டுள்ளது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் போட்டியிடுவதற்கு அனந்தி சசிதரன் விண்ணப்பிக்காத நிலையில், அனுமதி வழங்கப்படவில்லையென அனந்தி கூறி வருவதாக மாவை சேனாதிராஜா கூறியிருந்தார்.

கத்தோலிக்க போப்பாண்டவருக்கு

கம்யூனிச சின்னம் பொறித்த பரிசுப்பொருள் வழங்கப் பட்டது!

சிலுவையுடன், அரிவாளும், சுட்டியலும் சேர்ந்த வித்தியாசமான பரிசுப் பொருள் ஒன்றை, பொலிவிய ஜனாதிபதி ஏவோ மொராலேஸ், போப் பிரான்ஸிஸிடம் கொடுத்தார். எண்பதுகளில் பொலிவியாவை ஆண்ட வலதுசாரி இராணுவ ஆட்சியாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட கத்தோலிக்க பாதிரியார் Luis Espinal, அதே மாதிரியான சின்னம் ஒன்றை வைத்திருந்தார். ஸ்பெயினில் பிறந்த பாதிரியார் லூயிஸ், பொலிவிய குடியுரிமை பெற்று, அந்நாட்டு ஏழை மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தார்.  எசுயிஸ்ட் கத்தோலிக்க பாதிரியாரான லூயிஸ், பொலிவியாவின் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளராகவும், இடதுசாரி பத்திரிகையாளராகவும் இருந்தார். 21 மார்ச் 1980, வீட்டுக்கு வரும் வழியில் அவரைக் கடத்திச் சென்ற வலதுசாரி துணைப் படையினர், பல மணிநேரம் சித்திரவதை செய்த பின்னர் சுட்டுக் கொன்றனர். இடதுசாரி பாதிரியார் லூயிஸின் பிரபலமான கூற்று ஒன்று, அவரது வாழ்க்கையை புரிந்து கொள்ளப் போதுமானது.
"மற்ற மனிதர்களுக்காக பேசும் தைரியமற்ற யாரும், கடவுளுடன் பேசுவதற்கு உரிமையற்றவர்கள்."
(Kalaiyarasan Tha)

போராளிகளின் சுயேச்சை குழுவில் யோகி மாஸ்டரின் மனைவி போட்டி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர் யோகரட்ணம் யோகி மாஸ்டரின் மனைவி ஜெயவதி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் சுயேச்சைக் குழுவில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவருடன் ஜனநாயக போராளிகள் கட்சிப் பிரமுகர்கள் நடத்திய பேச்சுக்கள் மூலம் இம்முடிவு எட்டப்பட்டு உள்ளது என்று தெரிய வந்து உள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் முல்லைத்தீவு வட்டவாகல் பகுதியில் இராணுவத்திடம் சரண் அடைந்த இயக்க பிரமுகர்களில் யோகி மாஸ்டரும் ஒருவர் ஆவார். அன்று முதல் இன்று வரை இவர் குறித்து எந்தத் தகவலும் கிடையாது. கணவன் உயிரோடு உள்ளார் என்கிற நம்பிக்கையில் யோகி மாஸ்டரை கண்டு பிடிக்கின்ற போராட்டத்தில் ஜெயவதி தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார். ஒரு காலத்தில் புலிகளில் கொடி கட்டி பறந்த யோகி இறுதி காலத்தில் ஒரு வகையில் புலகளால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட கைதி போல் இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

’ஊர்’ நூலிலிருந்து சில பத்திகள்

(ம.செந்தமிழன்)

மனித சாதனைகளைப் பெரிதாகப் பீற்றுவதும் படைப்பின் அற்புதங்களை ‘இவையெல்லாம் தற்செயலாக நடப்பவை’ எனத் தூற்றுவதும் இப்போதைய வழக்கங்கள். பரிணாமக் கொள்கை எனும் பேரில் நவீன மனிதர்கள் இந்தச் செயலை மிகத் தெளிவாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆமைகள் எப்படித் தோன்றின? நிலம் எவ்வாறு வளம் கூட்டுகிறது? மனிதர்கள் எப்படி வளர்ச்சியடைந்தனர்? என்றெல்லாம் கேட்டால், பரிணாமக் கொள்கை அழகான விடை ஒன்றை முன்வைக்கிறது. ‘இயற்கையின் விருப்பத் தேர்வுதான்’ (Natural selection) எல்லாவற்றுக்கும் காரணம் என்கிறது அது. இந்த விளக்கத்தைக் கேட்கும் போதெல்லாம் நான் ஓர் எதிர்க் கேள்வியைக் கேட்பதுண்டு. ‘இயற்கையின் விருப்பத் தேர்வு என்கிறீர்களே, இயற்கைக்கு விரும்பத் தெரியுமா என்ன? அப்படி அது விரும்பினால் அதுதான் எல்லா உயிரினங்களையும் தேர்ந்தெடுக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?’ என்பதே அக்கேள்வி. (மேலும்....)

சம்பந்தருக்கு தமிழ்நாட்டில் வீடு, விடுதலைப் புலிகள் பத்திரிகை சூடு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் சின்னம் வீடு ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்பும் வீட்டுச் சின்னத்திலேயே தேர்தல் கேட்டு வருகின்றது. தேர்தல் தேவைக்கு அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்றைய தலைவரும், தமிழரசுக் கட்சியின் முன்னைய தலைவருமான இரா. சம்பந்தனுக்கும், வீட்டுக்கும் நிறையவே சம்பந்தம் இருந்து வருகின்றது. தனி நாடு கேட்டு போராட நாடாளுமன்றம் வந்த சம்பந்தன் குழுவினருக்கு தமிழ்நாட்டில் கிடைத்தவை தனி வீடுகள். 1984 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி தமிழ்நாடு அரசாங்கத்தால் சம்பந்தனுக்கு சென்னையில் தனி வீடு வழங்கப்பட்டது. சம்பந்தரின் மனைவி சம்பிரதாயபூர்வமாக வீட்டுத் திறப்பை பெற்றுக் கொண்டார். இச்செய்திகள் தமிழ்நாட்டு பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளியானது. (மேலும்....)

கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நாடு ஜேர்மனி கிரேக்க நாடு அல்ல

கிரேக்க நாட்டை, நாஸி ஜெர்மனி ஆக்கிரமித்திருந்த காலத்தில் வாங்கிய €279 பில்லியன் கடனை திருப்பித் தருமாறு, கிரீஸ் ஜெர்மனியிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. 2 ம் உலகப்போரில், கிரீஸ் நாஸிப் படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அப்போது கிரேக்கம் 476 மில்லியன் ரைஷ் மார்க் (அன்றைய நாணய மதிப்பில்) கடனாக கொடுக்க வேண்டுமென நாஸி ஜெர்மனி பலவந்தப் படுத்தி வாங்கியது. ஆனால், அந்தத் தொகை இன்று வரையில் திருப்பிக் கொடுக்கப் படவில்லை. நாஸிகள் காலத்தில் வாங்கிய கடன் தொடர்பான இன்றைய கிரேக்க அரசின் கோரிக்கையை, இன்றைய ஜெர்மன் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை. இருப்பினும் கடந்த பல வருடங்களாகவே கிரேக்க மக்கள் மத்தியில் பிரபலமான அரசியல் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது.
’கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே’!
(Kalaiyarasan Tha)

 

சம்பள உயர்வை வென்றெடுப்பதற்கு கோமளித்தனமான வழிமுறைகளை கைவிட்டு சரியான வழிமுறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் - மக்கள் தொழிலாளர் சங்கம்

பெருந்தோட்டக் கம்பனிகள், பெருந்தோட்ட தொழிலாளர்களை நிரந்தர தொழிலற்ற நாடோடிகளாக்குவதற்கான திட்டங்களை முன்வைத்து செயற்படுகின்ற போது அவ்வாபத்திருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் திட்டங்களை பற்றி சிந்திக்காது தொழிலாளர்களின் ஐக்கியத்தை கூறுபோடும் இ.தொ.கா.வும் அதற்கு எதிரான அணியினரும் ஏட்டிக்கு போட்டியாக சத்தியாகிரக போராட்டங்கள் என முன்னெடுக்கும் கோமாலித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறது என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா அதன் மத்திய குழு சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

ஆடி 09, 2015

யாழில் ஏழு குதிரைகள்

அதை கைப்பற்ற களமிறங்கும் பல அணிகள் !

(மாதவன் சஞ்சயன்)

பிரபாகரன் முள்ளிவாய்க்கால் வரை அழைத்து சென்று இறுதியில் அதில் பலருக்கு கதிமோட்சம் கொடுத்ததன் பலாபலன் இந்த தேர்தலில் குடிசன மதிப்பீட்டின்படி சூரியனின் 7 குதிரைகள் (கதிர்கள்) போல யாழ் தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு 7 உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் நிலை. அந்த 7 குதிரைகளில் பாய்ந்து ஏறி பாராளுமன்ற கதிரைகளில் அமர போட்டி போடுபவர்கள் அதற்கு தம்மை தயார்படுத்த ஒன்றாய், பலவாய் அணி திரளுகின்றனர். 1977ல் இருந்த 11 ஆசனங்கள் யுத்த உயிரிழப்பு, இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்ற காரணிகளால் படிப்படியாக குறைந்து இன்று 7 ஆசனங்கள் ஆகிவிட்டது. (மேலும்....)

தோழர் ஜோதிபாசு பிறந்ததினம் இன்று

இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் கூட ஆபூர்வமாக வெகு சிலரே அரசியலை அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடப்படவேண்டியவர் மேற்கு வங்கத்தின் சிவப்பு சிங்கம் தோழர் ஜோதி பாசு. பிறரை சுரண்டாத சிங்கம். என்று கூறினார் ஜோதி பாசு. அவருடைய வாழ்க்கை மிகவும் எளியது. அவர் "பாரிஸ்டர்' பட்டம் பெற்றிருந்தபோதிலும், மார்க்சீய லட்சியத்துக்காக, தொழிலாளி வர்க்க இயக்கத்துக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தன்னடக்கத்தின் மறு உருவம். அவருடைய கட்சி அவரை முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதால், அதை ஏற்றுக்கொண்டார். ஜவாகர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர் போன்ற தேசியத் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர். (மேலும்....)

போலிப்புலி சிறீதரன்

நேற்று வரைக்கும் புலி புலி என உறுமியவர்கள் இன்று தேர்தல் என்றவுடன் புலியை பார்த்து பூனை என்கின்றனர்! விடுதலை புலிகள் அமைப்பின் உண்மையான போராளிகள் முள்ளிவாய்க்காலில் சயனைட் உட்கொண்டு இறந்து விட்டதாகவும், புலம்பெயர் நாடுகளில் தப்பி பிழைத்திருப்பவர்கள் ‘போலிப்புலிகள்’ என்றும், உள்ளுரில் ஜனநாயக போராளிகள் என்று கூறுபவர்கள் ‘அரச முகவர்கள்’ என்றும், யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

என்னதான் நடந்தது யூகோஸ்லேவில்

நாஸி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான, யூகோஸ்லேவிய கம்யூனிச கெரில்லாக்களால் தூண்டப்பட்ட, செர்பிய மக்களின் எழுச்சி நடந்த நினைவுதினம் இன்று. 1 ஜூலை 1941, மேற்கு செர்பிய பகுதியில், ஒரு ஆயுதமேந்திய மக்கள் எழுச்சி இடம்பெற்றது. காடுகள் நிறைந்த பிரதேசம் என்பதால், அது மக்கள் எழுச்சிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப் பட்டது. தலைமறைவாக இயங்கிய கம்யூனிச கெரில்லாக்கள், மக்கள் எழுச்சிக்கு உதவினார்கள். ஆரம்பத்தில், கம்யூனிஸ்டுகளும், செர்பிய தேசியவாதிகளும் தத்தமது விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கிக் கொண்டார்கள். ஆயினும், காலப்போக்கில் இரண்டு பிரிவினருக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகள் கூர்மையடைந்தன. கம்யூனிஸ்டுகள் யூகோஸ்லேவியாவை ஒரு சோஷலிச நாடாக்க விரும்பினார்கள். தேசியவாதிகள் மன்னராட்சியை மீண்டும் கொண்டு வர விரும்பினார்கள். (மேலும்....)

பெண் பயணியின் அச்சத்தை போக்கிய கண்ணியமிக்க ஆட்டோ ஓட்டுநர்

பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இரவு நேரங்களில் பெண்கள் தனியே செல்ல அச்சப்படும் சூழலே உள்ளது. இந்நிலையில் ரஞ்சனி ஷங்கர் என்ற பெண்மணி தனது வலைதளத்தில் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், தான் பெங்களூர் சிட்டியில் இருந்து கனக்புரா என்ற இடத்திற்கு செல்ல இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் காத்துகொண்டிருந்த பின் ஆட்டோவில் ஏறிதாக தெரிவித்தார். போகவேண்டிய இடத்தை சொன்னதும், அந்த இடத்திற்கு ஆட்டோவை அனுமதிக்கமாடார்கள் அதனால் வேறு ஒரு வழியில் செல்லலாம் என ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச்சென்றதாக கூறிய அவர், கூகுள் மேப் மூலம் ஓட்டுநரிடம் வழியை சொல்லி அழைத்து செல்லும்படி கூறியதாக தெரிவித்துள்ளார். (மேலும்....)

அப்பன் பெயர் சொல்லாத மாவை சேனாதிராசா!

தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய தொடர்பு நிலை குறித்த சுவாரஷிய தகவல்கள் பலவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உதயத்தை தொடர்ந்து வெளியில் வந்த வண்ணம் உள்ளன. புலிகள் இயக்கத்திலும் நகைச்சுவை கலந்த குறும்பு நிறைந்த உறுப்பினர்கள் இருந்து உள்ளனர். தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி வன்னிக்கு வருகின்றமை வழக்கம். வன்னியில் தம்பிமார்களுக்கு முன்னால் பிரசன்னமாகின்றபோது இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை கொட்டி, வாய் பொத்தி நிற்பார்கள். (மேலும்....)
 

ஆடி 08, 2015

தேர்தலில் போட்டியிடுவோர் தகுதி என்ன ?

(மாதவன் சஞ்சயன்)

நல்லாட்சியின் தேவை உணரப்படும் சூழ்நிலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளை கொண்டதாக அமையவேண்டிய பாராளுமன்றத்தில் அண்மை காலத்தில் ஊழல் பேர்வழிகளும் அதிகார துஸ்பிரயோகம் செய்பவரும் அங்கத்துவம் வகித்ததால் நாட்டில் ஆள் கடத்தல், கப்பம் அறவிடல் போதைபொருள் கடத்தல் போன்றவை பல்கி பெருகியதாக தெரிவித்து அடுத்த தேர்தலில் அவ்வாறான நபர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்க கூடாது என நாடுமுழுவதும் 10 லட்சம் பொது மக்களின் கையொப்பம் பெற நடாத்தப்பட்ட மார்ச் 12 பிரகடத்தின் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. (மேலும்....)

வடக்கில் போட்டியிடுவதற்கு முக்கூட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் நபர்களும் இணைந்து முக்கூட்டை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இந்த புதிய கூட்டு போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு வழங்காமல் தவிர்க்கப்படும் அனந்தி சசிதரன் யும் இணைந்துகொண்டே இந்த முக்கூட்டை அமைக்கப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்திருந்தும் வேட்பு மனு கிடைக்காத வடமாகாண சபையை சேர்ந்த ஒருவருடனேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தெரியவருகின்றது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவிருக்கின்ற வேட்பாளர்களின் விவரங்களை கூட்டமைப்பு வெளியிடாத நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

மட்டக்களப்பில் தனித்து போட்டியிட முடிவு - ஆனந்தசங்கரி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். அத்துடன், இன்று புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறும் கூட்டத்தின்போது வேட்பாளர் தெரிவு இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த எமது கட்சியை அக்கூட்டமைப்பிலிருந்து விலக்கியுள்ளதாக அக்கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், எமது கட்சியை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவரையில் எமக்கு கிடைக்கிவில்லை' என்றார்.'இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எமது கட்சி சார்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பேட்டியிடுவதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாமலுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே எமது கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியலில் குமார் குணரத்னம் குதிப்பார்

முன்னிலை சோஷலிஸ கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளில் அக்கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டை விட்டு வெளியேறுமாறு, குடிவரவு- குடியகல்வு திணைக்களம் அவருக்கு அறிவுறுத்தியிருந்த போதிலும் அவர் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் போராளிகளுக்கு சங்கரி அழைப்பு

பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க தயாராகவுள்ளதாக கட்சியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவி த்துள்ளார். முன்னாள் போராளிகள் போட்டியி டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆனந்த சங்கரியிடம் கேட்ட போதே அவர் இதை தெரிவித்தார். விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள், அவர்களே தேசியத் தலைவர்கள் என்று அவர்களது பெயரைக் கூறியே வளர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் போராளிகளுக்கு அரசியலில் சந்தர்ப்பம் வழங்க மறுத்துள்ளமை தவறான விடயமென இதன் போது அவர் சுட்டிக்காட்டினார். நேர்மையான, விசுவாசமான, தமிழர் களின் இனப்பிரச்சினை பற்றி நன்கு விளங்கியவர்களே நாடாளுமன்றம் செல்ல வேண்டும். இதற்கமைய முன்னாள் போராளிகளுக்கும் தேர்தலில் சந்தர்ப்பம் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தோற்கடித்து முன்னாள் போராளிகள் நாடாளுமன்றம் செல்வதற்கு வழிவகுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் விரும்பும் பட்சத்தில் அவருக்கும் தமது தொகுதி யில் சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக ஆனந்த சங்கரி தெரிவித்தமை குறிப் பிடத்தக்கது.

கிரீஸ் வங்கிகளில் பணம் இல்லை: எந்த நேரமும் திவாலாகும் அபாயம்

கிரீஸின் கடன் மீட்பு நிபந்தனைகளை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அந்நாட்டு மக்கள் நிரா கரித்த நிலையில் கிரேக்க வங்கிகள் பணம் இல் லாத நிலைக்கு முகம்கொடுத்து வருகிறது. இந்த நெருக்கடியான நிலையில் கடன் பிணையை பெறுவதற்கு ய+ரோ வலய கடன்வழங்குனர்க ளுக்கு புதிய பரிந்துரைகளை முன்வைக்க கிரீஸ் பிரதமர் அலக்சிஸ் சிப்ராஸ் தயாராகியுள்ளார். இதில் அவர் கிரீஸின் மொத்த கடனில் இருந்து 30 வீதத்தை அகற்றிக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வியாழக்கிழமை வரை வங்கிகள் முடப் பட்டிருக்கும் என்று கடந்த திங்களன்று உத்தி யோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய மத்திய வங்கியும் கிரீஸ{க்கு நிதி வழங்குவதை மெதுமெதுவாக இறுக்கி வருகிறது. இதனால் கிரீஸ் எந்த நேரமும் திவாலாகும் நிலை உள்ளது. (மேலும்....)

ஆடி 07, 2015

1983ல் ஜூலை இனக்கலவரம் 2015ல் ஜூலை தேர்தல் நிலவரம்.

(மாதவன் சஞ்சயன்)

பொறுத்தது போதும் என்று தமிழ் இளைஞர்களை பெரிய அளவில் ஆயுதம் ஏந்த செய்தது 83 ஜூலை இனக்கலவரம் தான். அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக சி ஐ டி யினர் மீது தாக்குதல்கள், நிதி தேவைக்காக வங்கிகள் முற்றுகை, சிறு குழுக்களாக இரகசிய முகாங்களில் ஆயுத பயிற்சி, மக்களை அரசியல் மயப்படுத்தி மக்கள் போராட்டமாக்கும் முயற்சி என மெதுவாக நகர்ந்த விடுதலை போராட்டம் திருநெல்வேலி கண்ணிவெடி தாக்குதலால் தென்னிலங்கை சிங்கள பேரினவாத திட்டத்துக்கு சந்தர்ப்பம் கொடுத்தது.
ஏற்கனவே தமிழர்களுக்கு ஒரு கசப்பான மருந்து கொடுத்து அவர்களின் விடுதலை வேட்கையை தணிக்கச் செய்ய காத்திருந்த சிங்களம் பொரளையில் பற்றவைத்த நெருப்பு நாடு முழுவதும் தமிழர் உயிர்களை, அவர்தம் உடமைகளை சூறையாடியது, தீக்கிரையாக்கியது. இது திட்டமிட்ட செயல் என்பதற்கு தாக்க வந்தவர்கள் கைகளில் தேர்தல் இடாப்பு இருந்ததே சாட்சி. தமிழர் வீடுகளை, வியாபார நிலையங்களை, கோவில்களை, படமாளிகைகளை அடையாளம் கண்டு தாக்கி அழித்தனர். (மேலும்....)

We as " Weediy Wirodaya " Is organizing a "BLACK PROTEST" on 10th Friday.

I have attached the Sinhal invitation.

We do like to invite You  to join us  in the march starting from the technical collage junction, Maradana @ 2 and the rally in front of the Fort railway station from 3 to 5 pm.  if You do agree with our main slogans.You have the right to join with Your organization's banner, if You represent an organization or as an individual. Please be kind enough to inform Us whether you are joining Us or not. If You do join We request You to dress in  black  as much as possible.

Thank You
Brito
 
Chintaka Rajapakse
Moderator - MONLAR
 
No 185/2/1, Koswaththa, Thalangama North, Sri Lanka
Office:    +94 11 2791912    Fax: +94 11 2790073 
K. J. Brito Fernando
Right to Life Human Rights Center
Families Of the Disappeared


Office - 555, Negombo Road,
 Kurana- Katunayake
      SriLanka.

T/P - 00 94 31 2221604 ( Office)
Mobile - 00 94 77 1092921

(more.....)

முன்னாள் விடுதலைப்புலிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய நடேசபிள்ளை வித்தியாதரன் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தச் சந்திப்பு இன்று வவுனியாவில் நடைபெற்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் விருப்பம் தெரிவித்து, அதனைத் தமது கோரிக்கைகளாக இந்தச் சந்திப்பின்போது முன்வைத்ததாக வித்தியாதரன் தெரிவித்தார்.
எனினும் இப்போதைய அரசியல் சூழலில் முன்னாள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்படுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் என கூறி தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் வித்யாதரன் கூறுகிறார்.
முன்னாள் போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியலில் ஈடுபடுவதற்கு கூட்டமைப்பு இணங்கவில்லை என்பது தமக்கு வேதனையும் மனவருத்தமும் அளிக்கிறது கூட்டத்தில் பங்குபெற்ற முன்னாள் புலி உறுப்பினர் துளசி கூறுகிறார். அடுத்த கட்டமாக தங்களுக்குள் பேச்சுக்கள் நடத்தி முடிவெடுக்கப் போவதாகவும், இந்தப் பொதுத் தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவதாகவும் துளசியும் வித்தியாதரனும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

உண்மையான புலிகள்

மண்டியிட்டு மாண்டுவிட்டனர் அல்லது சயனைட்டு அருந்தி தற்கொலை செய்துவிட்டனர் -  சிறீதரன்

‘உண்மையான போராளிகள்’ சயனைட் கடித்து இறந்துவிட்டார்கள்! - சொல்கிறார் சிறீதரன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் உண்மையான போராளிகள் முள்ளிவாய்க்காலில் சயனைட் உட்கொண்டு இறந்து விட்டதாகவும், புலம்பெயர் நாடுகளில் தப்பி பிழைத்திருப்பவர்கள் ‘போலிப்புலிகள்’ என்றும், உள்ளுரில் ஜனநாயக போராளிகள் என்று கூறுபவர்கள் ‘அரச முகவர்கள்’ என்றும், இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.  இன்று (06.07.2015) தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், தவிசாளர்களின் கூட்டம், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. (மேலும்....)

கிரேக்க மக்கள் கற்றுக் கொடுத்த பாடம்

முதலாளித்துவம் என்றால் என்னவென்று, கிரேக்க மக்கள் முதலாளிகளுக்கு பாடம் படிப்பித்துள்ளனர். ஒரு நாடு கடன் வாங்கினால் அதை அப்படியே திருப்பிக் கொடுப்பது தான் முறை என்று பலர் நினைக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்து ஜெர்மனியும் அவ்வாறு தான் கூறி வந்தது. ஆனால், சந்தைப் பொருளாதாரம் மிகவும் சிக்கலானது. நாடுகளுக்கு கடன் கொடுப்பவர்கள் அது மீண்டும் கிடைக்குமா என்று தெரியாத சந்தேகத்தில் தான் கொடுக்கிறார்கள். கிரீசுக்கு கொடுத்த பெருமளவு கடன்கள் Goldman Sachs என்ற தனியார் வங்கிக்கு சொந்தமானவை. கிரேக்க மக்கள் அதை அறிந்து வைத்திருக்கிறார்கள். IMF, ECB என்பன ஒரு தனியார் வங்கியிடமிருந்து கடன் வாங்கிக் கொடுத்ததன் மூலம் தற்கொலைப் பாதையை தெரிவு செய்துள்ளன. முதலாளித்துவம் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.  (read article....)(Kalaiarasan Tha)

பாசிசம்

பாசிசம்....பாசிசம் என அரசியல் பேசும் அனைவரும் இச்சொற்பத்தைப் பாவிக்கிறார்கள். இதைத் தெரிந்துதான் பாவிக்கிறார்களா? அல்லது மொழி அழகுக்காகப் பாவிக்கிறார்களா என்பது கேள்வியாகவே உள்ளது. இது உண்மையில் ஒரு அரசியல் சொற்பதமே
 இது 1919ல் இருந்து முசோலி எனும் இத்தாலிய சர்வாதிகாரிகாலத்தில் இருந்தே பாவிக்கப்பட்டு வருகிறது. இச்சொல்லானது இத்தாலியமொழி வழி வந்ததே. இதை 1922-43வரை உருவாக்கி பயன்படுத்தி வந்தார் முசோலினி. இந்த இத்தாலியச் சொல்லானது பாசியோவில் இருந்து பாசிஸ்மோவாகி பின் முசோலினியால் பாசிசம் ஆனது. (மேலும்....)

முன்னாள் புலிகளுக்கு கூட்டமைப்புக்குள் இடமில்லை -  சம்பந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் வவுனியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே சம்பந்தன் மேற்படி கூறியுள்ளார். (மேலும்....)

இராமேஸ்வரம் - தலைமன்னார் ரயில் இணைப்பு குறித்து பேச்சு

இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையில் ரயில் பாதை நிர்மாணிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தான் முன்மொழிந்துள்ளதாக பாதை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஏற்றுமதி மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பில் தான் கலந்து பேசியதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான சிறுதூர படகு சேவைகள் 1966ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றது. தலைமன்னர் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையிலான கடற்பரப்பில் இலங்கையின் எல்லை தூரம் சுமார் 23 கிலோமீற்றர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

29 கிலோகிராம் கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதயிலிருந்து தலைமன்னார் பகுதிக்கு கஞ்சா கடத்திய இந்திய மீனவர்கள் 4 பேரை இன்று திங்கட்கிழமை(06) காலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 29 கிலோகிராம் கஞ்சாவையும் மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர். தலைமன்னார் கடற்பகுதியில் அத்துமீறி வருகை தந்த இந்திய மீனவர்களின் படகை சோதனையிட கடற்படையினர் சென்ற போது குறித்த மீனவர்கள் தமது படகில் வைத்திருந்த மூடைகளை கடலில் தூக்கி எறிந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த நான்கு இந்திய மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கஞ்சா மூடைகள், இராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் வாசி ஒருவருக்கு கைமாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கடலில் வீசிய கஞ்சா மூடைகளை கைப்பற்றியதுடன் குறித்த நான்கு மீனவர்களையும் கைதுசெய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்ததோடு கஞ்சா மூடைகளையும் ஒப்படைத்தனர்.

ஆடி 06, 2015

திருமதி எழிலன் வெளியே! திருமதி ரவிராஜ் உள்ளே!!

பொதுத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இறுதி முடிவெடுக்கவுள்ளது. ஆசன ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூடி முடிவெடுக்கவுள்ளன. இன்று காலை 10 மணிக்கு வவுனி யாவில் கூடவுள்ள கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயவிருப்பதாக கூட்டமைப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இக்கூட்டம் நடை பெறவுள்ளது. ஆசன பங்கீடு தொடர் பில் பங்காளிக் கட்சிகள் விரிவாக ஆராய்வதுடன், மாகாணசபை உறுப் பினர்களுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஒருங் கிணைப்புக் குழுக் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டங்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். யாழ் தேர்தல் மாவட்டத்தின் 7 ஆசனங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேர் போட்டியிடுகின்றனர். வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படாது எனத் தெரியவருகிறது. அதேநேரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவிக்கு வேட்புமனு வழங்குவது பற்றி ஆராயப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைத்திரியிடம் விளக்கம் கோரிய சந்திரிகா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் கொழும்பில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலுக்கு வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மகிந்த ராஜபக்ஷ இற்கு ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பில் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய அனுமதித்த விடயத்தில் சந்திரிகா ஏமாற்றம் அடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்ற நிலையில் இச்சந்திப்பு இடம் பெற்றது இங்கு குறிப்பிடத் தக்கது.

மாற்று வழியை நாடும் மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்படின், வேறு கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் மேற்கொண்டுள்ளனர். இதற்காக, கொழும்பு, விஜேராம வீதியில் அலுவலகமொன்றும் திறக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையேற்படின், தனித்து போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.

ஐ.ம.சு.முவிலிருந்து வெளியேறியது ஜாதிக்க ஹெல உறுமய

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து ஜாதிக்க ஹெல உருமய விலகுவதாக கட்சியின் பிரதம செயலாளர். அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் ஆசீர்வாதம் எமக்குக் கிடைக்குமென நம்புகிறோம். அவரின் போராட்டத்தை முன்கொண்டு செல்லவே நாம் முயற்சிக்கிறோம். அமையவிருக்கும் புதிய முன்னணிக்கு இன்னும் பெயர் தீர்மானிக்கப்படவில்லை. அது பற்றி நாம் எம்முடன் சேர இருக்கும் கட்சிகள். நபர்களுடன் பேசித் தீர்மானிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். மஹிந்தவுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படுவது ஸ்ரீ. ல. சு. கட்சியின் தீர்மானமாகும். “புரட்டமுடியாது: அசைக்கு முடியாது” என்று கூறப்பட்ட மஹிந்தவை நாம் புரட்டினோம். மக்கள் ஹெல உருமயவை நம்புகின்றனர். மஹிந்த. மைத்திரி ஆகியோரைக் கொண்டு நாம் நாட்டுக்கு ஏதோ செய்தோம். எம்முடன் ஒன்று சேருமாறு நாட்டுக்கு ஆதரவாக உள்ள சகலரையும் அழைக் கின்றோம். நல்லாட்சி தொடர்பாக சவாலை வெற்றிகொள்ள நாம் தயார். நாட்டுக்குத் தேவையான அரசியல் முன்னணியாக நாம் செயற்படுவோம். ஊழல், மோசடி பேர்வழிகளுக்கு மீண்டும் நாட்டைச் சூறையாட இடம் கொடுக்க வேண்டாம். இவ்வாறு அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கிரீஸ் கடன் விவகாரம்

தீர்க்கமான தேர்தலில் மக்கள் வாக்களிப்பு


(வலதுசாரிகளையும் இடதுசாரிகளையும் வேறுபடுத்திக் காட்டும் புகைப்படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது)

(கிரேக்க பொது வாக்கெடுப்பு முடிவுகள்: "இல்லை" ஓட்டுகள் அதிகப் படியாக விழுந்துள்ளன. இந்த நிமிடம் வரையில் "இல்லை" முன்னணியில் நிற்கிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பெரும்பான்மையான வாக்குகள் எண்ணப் பட்டு விடும்.)

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக் கும் கிரீஸ் நாட்டில் நேற்று கடன் மீட்புத் திட்டம் தொடர்பாக மக்களின் கருத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடைபெற்றது. கிரீஸில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பொருளாதாரம் முற்றிலும் சரிவதைத் தடுக் கும் நடவடிக்கையாக அண்மையில் வங்கிகள் மூடப்பட்டன. ஏ.டி.எம்களில் எடுக்கும் பணத்தின் அளவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவை யெல்லாம் அந்நாட்டு மக்களைக் கடும் நெருக் கடியில் தள்ளியுள்ளன. (மேலும்....)

துனீஷியாவில் அவசரகால நிலை

துனீஷியாவில் 38 சுற் றுலா பயணிகள் கொல் லப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் அந் நாட்டில் அவசரகால நிலை அறிவிக்கப்பட் டுள்ளது. ஏற்கனவே நாட்டிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் கடற்கரைகளில் இரா ணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இவ் வாறான அசாதாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது கட்டாயமாகும் என்று துனீஷிய ஜனாதிபதி செயித் எசப்சி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது வலியுறுத்தினார். இதில் அவசரகால நிலை 30 தினங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையிலேயே அமுலுக்கு வருகிறது. கடந்த ஜுன் 26 ஆம் திகதி சவுசே நகரில் துப்பாக்கிதாரி ஒருவர் கடற்கரை மற்றும் ஹோட்டல் மீது நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் பொலிஸாரினால் துப்பாக்கிதாரி கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர்களில் 30 பேர் பிரிட்டன் நாட்டவர்களாவர். தாக்குதல் நடத்தியவர் சைபத்தின் ரெஸ்குய் என்ற மாணவர் என்றும் அவர் லிபியாவில் பயிற்சி பெற்றவர் என்றும் அடையாளம் காணப்பட்டது. இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டதாக எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டதோடு தீவிரவாதத்தை பரப்பியதாக 80 பள்ளிவாசல்கள் மூடப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

ஒன்றுமே புரியலே உலகத்திலே!

'சப்ரா' என்ற நிதி நிறுவனத்தை புலிகளின் நிதியில் நிறுவி 80 களில் பல கோடிகளை சுருட்டிய வித்தியாதரன் மீண்டும்

உதயன் - சுடர் ஒளி நாளிதழ்களின் ஆசிரியர் ஒரு சிறந்த ஊடகவியலாளர்? என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, எனினும் அவர் அந்த தகுதியை தக்கவைத்து கொள்ளாமல் இன்று அரசியலில் இறங்கியிருப்பது ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாகவே உள்ளது. உதயன் பத்திரிகையின் முதலாளி ஈ. சரவணபவன் யாழ்பாணத்தில் சப்ரா" என்ற நிதி நிறுவனத்தை நிறுவி 80 களில் பல கோடிகளை சுருட்டிக்கொண்டு நாட்டை ஓடி லண்டனில் இருந்துவிட்டு திரும்பி வந்து உதயன் பத்திரிகையை ஆரம்பித்து அதில் மறண அறிவித்தல்கள் மட்டும் பல கோடிகளை ஈட்டியவர். (மேலும்....)

ஆடி 05, 2015

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி – பிரான்ஸ்கிளையின் 25 வது தியாகிகள் தினம்.

கடந்த 28 யூன் ஞாயிற்றுக்கிழமை பரிஸின் புறநகர் பகுதியான லனியில் நடைபெற்றது. தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொன்டனர்.
ஈழப்போரில் இன்னுயிர்நீர்த்த தோழர்கள், போராளிகள், பொதுமக்களுக்குமாக தோழர் பிரான்சிஸ் சேவியரும், அந்தோனிப்பிள்ளை ரஞ்ஐpனியும், தியாகதீபத்தை ஏற்ற அனைவரும் எழுந்து நின்று மொளனஅஞ்சலி செலுத்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். தோழர் பிரான்சிஸ்ஸின் ஆரம்ப உரையின் போது, தோழர் பத்மநாபாவுடன் நேரடியாக பழகும் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் அவரைப்பற்றி அறிந்திருப்பதோடு இவ்வாறான நிகழ்வில் கலந்துகொள்வதை கடமையாக கருதுகிறேன் எனக் குறிப்பிட்டார். அவரைத்தொடர்ந்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் போரட்டத்தின் ஆரம்ப காலங்களிலேயே மிதவாத அரசியல் அமைப்புக்ககளோடு பணியாற்றியவரும், ஊடகத்துறைசார்ந்த அரசியல் ஆய்வாளரும், பிரான்சில் பொதுஅமைப்பக்களுடன் தற்போதும் செயலாற்றிவருபவருமான தோழர் உதயன் கருத்துரைக்கூகையில் பத்பநாபா ஈபிஆர்எல்எவ் மீண்டும் ஐக்கியத்துடனும் புத்துணற்சியுடனும் இயங்கவேண்டும். தியாகிகள் தின ஏற்பாடுகளுக்காக இறுதிநாள் வரை காத்திராமல் காலக்கிரமத்துடன் ஆயுத்தவேலைகளை ஆரம்பித்து இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். (மேலும்....)

ஜனநாயக போராளிகள் கட்சிக்கு ஈ.பி.டீ.பி வரவேற்பு

தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிதாக உருவாகியிருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 'அரசியல் கட்சிகள் தோன்றுவதும் அவைகள் சுதந்திரமாக செயற்படுவதும் அவரவர் ஜனநாயக உரிமை. அதை மறுப்பதும் தடுப்பதும் அப்பட்டமான ஜனநாயக மறுப்பாகும். முன்னாள் போராளிகள் வெறுமனே புனர்வாழ்வு பெற்றுவிட்டு ஊமைகளாக உறங்கிக்கொண்டிருக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். புதிய கட்சிகளின் வரவை எண்ணி சிலர் அச்சப்படுவது தாம் கொண்டிருக்கும் அரசியல் கொள்கை மீதான நம்பிக்கையீனங்களையே எடுத்துக்காட்டுகிறது. எமக்கென்றொரு இலட்சியக்கனவு உண்டு. அதற்கான நம்பிக்கை தரும் யதார்த்த வழியும் கொண்ட கொள்கையின் உறுதியும் எம்மிடம் உண்டு. எந்தவொரு புதிய கட்சிகளின் வரவையும் நாம் நேசமுடன் வரவேற்போம் என்றும் தயாராகவே இருப்போம். ஆயிரம் பூக்கள் மலரட்டும். ஒவ்வொரு கட்சிகளும் எமது மக்களின் இலட்சிய நலன் சார்ந்து யதார்த்த வழியில் செயலாற்றி புனித இலட்சிய பயணம் தொடரட்டும். அனுபவங்களை பாடங்களாக ஏற்று திருத்தி எழுதிய பாதையில் தீர்வின் திசை நோக்கி யார் வந்தாலும் வரவேற்போம்' என்று அவர் மேலும் கூறினார்.

25 வது தியாகிகள் தினம் (சுவிஸ்)

இன்று (04.07.15) தியாகிகள் தினம் சுவீஸ், பிறிக் நகரில் மிகவும் உணர்புபூர்வமாக அனுஷட்டிக்கப்பட்டது. முதலில் எம்மனதில் என்றும் சுடர் விட்டு பிரகாசிக்கும் தீபச்சுடர்களான தியாகிகள், (இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால்), பொது மக்கள், சுனாமி அனர்த்தால் உயிர் நீத்தவர்கள் எல்லோருக்காகவும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து மலர் தூவி ஆராதனை செய்யப்பட்டது. பின் நாட்டிலிருந்து தோழர் மோகன் அவர்கள் அனுப்பிய அனுதாபமடல் கொக்கட்டிசோலை தோழர். பெனான்டோ அவர்களால் வாசிக்கப்பட்டது. பின் என்னும் பலர் உரை நிகழ்த்தினர். 1983களில் பல்வேறுபட்ட பாசறையிலிருந்த இருந்த எல்லா மாவட்ட தோழர்களையும் 30 வருடங்களின் பின் சந்திக்கும். ஓர் சந்தர்பம் கிடைத்தது. நிகழ்ச்சிக்கு முன் எம் ஒவருவரும் சுயவிமர்சனம், விமர்சன அடிப்படையில் பல விடயங்களை எமக்குள் பகிந்து கொண்டோம். உண்மையில் இதனை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி.

கம்பஹாவில் கோட்டா, தேசிய பட்டியலில் பசில்?

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. அவர், எந்த கட்சியில் போட்டியிடபோகின்றார் என்று தெரியவரவில்லை. இதேவேளை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மீது சுமத்தப்பட்டுள்ள நிதிமோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக அவர், இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வருவார் என்றும் தெரியவருகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரமேஜயந்தவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Hartley College முன்னாள் அதிபர் குணசீலன் மாணவிகளை  பாலியல் துர்ப்பிரயோகம் செய்து கைதுசெய்யப்பட்டதை அடுத்து குணசீலன் பல வருடங்களாக நிகழ்த்திய பாலியல் குற்றங்கள் அம்பலத்திற்கு வருகிறது

Hartley பழைய மாணவரும் எழுத்தாளரும் சமுகநீதிப் போராளியுமான ஜீவமுரளி(ஜேர்மனி) ன்
வாக்குமுலம் பின்வருவது. "புலிக்குட்டியின் பாலியல் துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்தி எங்களுக்குத்தான் புதியதாக இருக்கின்றது! ஆனால் இதை அவர் பலவருடங்களாக செய்து வந்திருக்கின்றார் என்பதை இப்பொழுது அறியமுடிகின்றது. 2006 ல் இருந்து 2010 வரைக்கும் என் தங்கை பருத்தித்துறை மெதடிஸ்த கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர். அவர் புலிக் கு ட் டி பற்றி சொன்ன தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன. புலிக்குட்டி காட்லிக் கல்லூரியிலிருந்து இழைப்பாறிய பின் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் தொடர்ந்து பணியாற்றியிருக்கின்றார். அவர் வீட்டில் ரியுசன் சொல்லிக் கொடுப்பதை வழமையாகக் கொண்டிருந்தார். 6வது வகுப்பிலிருந்து 10 வது வகுப்பு மாணவர்கள் வரைகும் கல்வி கற்பித்திருக்கின்றார். (மேலும்....)

ஐதே கட்சியும், புலிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்

கடந்தகாலத்தில் விடுதலைப்புலிகளைப்பிரித்து தமிழர்களின் இனஅழிப்பிற்கு முதற் காரணகர்த்தாவாக இருந்த ஐக்கியதேசியக்கட்சி. தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக எதிர்வரும் தேர்தலில் தமிழ்மக்களின் தமிழ்தேசியஉரிமையை உடைத்து எறிய புதிய
சதித்திட்டத்தை தீட்டயுள்ளனர். இதற்கு இளைஞ்ஞர்யுவதிகளை வைத்தே அவர்கள் செயற்பட்டுள்ளனர் அதாவது இளைஞர்யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு
பெற்றுத்தருவதாகக்கூறி அவர்களிடம் தங்கள் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் எனவும் கேட்டுள்ளனர். அதுமட்டுமன்றி தமிழ்த்தேசியம் என்று கூறும் கட்சிகள் மற்றும் விடுதலைப்புலிகள் எல்லாம் போலியானவர்கள் என்று இளைஞர்களை ஏமாற்றி தனது குள்ளநரித்தனமான தமது தந்திரவிளையட்டைக்காட்ட ஆரம்பித்துள்ளனர்
ஐக்கியதேசியக்கட்சியினர். (மேலும்....)

மீண்டு(ம்) வந்தனர் புலிகள்!

வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதான தளமாக கொண்டு நேற்று உதயம் ஆகி உள்ளது ஜனநாயக போராளிகள் கட்சி. 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, விழுமியங்கள் விலை போயின. குழப்பவாதிகளும், சுயநலவாதிகளும் தமிழ் தேசியம் என்கிற புனிதமான வார்த்தையை தேர்தல் மந்திரமாக உச்சரித்துக் கொண்டு அரசியல் விபச்சாரம் நடத்தி வருகின்றார்கள்.  போதைப் பொருள் வியாபாரத்தின் கூடாரமாக வட மாகாணம் மாற்றப்பட்டு உள்ளது. சட்டத்துக்கு புறம்பான குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரித்து அடிக்கடி வாள் வெட்டுக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்கிற ஆசையில் புலம்பெயர் தமிழர்கள் பலரும் வேசையாட கிளம்பி வருகின்றார்கள். (மேலும்....)

ஆரியகுளம் சந்திக்கு அண்மையில்

படிப்பகம் எனும் புத்தக நிலையம்

இன்று மாலை படிப்பகம் எனும் புத்தக நிலையம் ஆரியகுளம் சந்திக்கு அண்மையில் திறக்கப்படிருக்கிறது . இது முன்னிலை சோசலிசக் கட்சி என்ற இடது சாரிக் கட்சியின் ,புத்தக கூடம் , இதை நூல் நிலையமாகவும் பாவிக்கப் போகிறார்கள் , 20,000 புத்தகங்கள் வருவிக்கப்பட இருப்பதாக சொன்னார்கள் , இனிக் கொண்டாட்டம் தான் , அங்கு இன்று நான் சிறிய வயதில் படித்த சில ரஷ்ய மொழிபெயர்ப்புக்களை பார்த்து வாங்கினேன் , 50 ரூபாய் 60 ரூபாய் தான் விலை .மேலும் இடது சாரிய நூல்களும் , இலக்கிய வகையறாக்களும் அங்குண்டு , புத்தகக் காதலர்கள் சென்று வாங்கி விடவும் . ஏனென்றால் , இன்று மாலை மட்டும் . இருந்த 4 தாஸ்தயேவ்ஸ்கி யின் குறுநாவல்கள் அடங்கிய புத்தகங்களை நண்பர்கள் வாங்கி விட்டோம் , கவிஞர் கருணாகரன் கெஞ்சிக் கூட கேட்டுப் பார்த்தார் , நீயும் ஆதியும் பக்கத்தில பக்கத்தில தானே இருக்கிறியள் ரெண்டு புத்தகம் எதுக்கு , ஒண்ட தாங்க எண்டு , நான் சொன்னேன் , இந்த புத்தகத்துக்கும் எங்கள் காதலிகளுக்கும் மிகத் தொடர்புண்டு , இது காதலின் புத்தகம் என்று , போரில் தான் 6000 புத்தகங்களை தொலைத்ததை கருணாகரன் சொல்லிய போது வருத்தமாக இருந்தது , இன்னும் எத்தனையை இழந்து அவர்கள் திரும்பியிருக்கிறார்கள் . நிற்க . இது நான் வாங்கிய புத்தகங்களின் ஒரு தொகுதி புகைப்படம் . குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள் . உங்கள் குழந்தைகளுக்கும் உங்களுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கும்.

வெற்றிலை சின்னத்தில் போட்டி

மக்கள் ஐக்கிய முன்னணி உள்ளே! ஜாதிக ஹெல உறுமய வெளியே!!

தினேஷ் குணவர்த்தன தலைமை வகிக்கும் மக்கள் ஐக்கிய முன்னணி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன கலந்து கொண்ட மத்தியகுழுக்கூட்டம் நேற்று இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இதேவேளை நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் போட்டியிடவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வெளியே அரசியல் சக்தியாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

ஆடி 04, 2015

மஹிந்தவுக்கு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ்  வேட்புமனு வழங்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையை மஹிந்த தரப்பு வரவேற்றுள்ளது. ஐ.ம.சு.கூ.வின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் டினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

புலிகளை அழித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், இதன் தலைவர் வே. பிரபாகரனையும் இறுதி யுத்த காலத்தில் காப்பாற்றக் கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டும் என்றே நழுவ விட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேசம் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி உள்ளது. இதனால் புலிகள் இயக்கத்துடன் நேரடியாக பேச்சுக்களில் ஈடுபட முடியாத சங்கடம் உலக நாடுகள் பலவற்றுக்கும் நேர்ந்தது. ஆனால் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்துவதில் இவற்றுக்கு தடை எதுவும் இருக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்கா, நோர்வே, இந்தியா அடங்கலான நாடுகள் பலவும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி யுத்தத்தை நிறுத்த பகீரத முயற்சிகள் எடுத்தன. ஆனால் யுத்தத்தை நிறுத்த தவறுகின்ற பட்சத்தில் ஏற்படக் கூடிய விளைவுகளை அறிந்து கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு வீம்பு பண்ணியது. உதாரணமாக யுத்த நிறுத்தம் சம்பந்தமாக பேச்சு நடத்த வாருங்கள் என்று இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக இருந்த சிவசங்கர் மேனன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார். ஆனால் யுத்தத்தை நிறுத்துங்கள், பேச்சுக்கு வருகின்றோம் என்று இந்த அழைப்புக்கு இந்தியாவுக்கு பதில் கொடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இதனிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தியாவின் தினத்தந்தி பத்திரிகைக்கு அதிரடிப் பேட்டி ஒன்று வழங்கி இருந்தார். புலிகளை அழிக்க இந்தியா உதவ வேண்டும் என்று இவர் இதில் பகிரங்கமாக கோரி இருந்தார்.

மைத்திரி படுகொலை முயற்சி குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது அவரை கொலை செய்வதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் தமிbழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005/2006 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே இந்த கொலை முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. மொஹமது சுல்தான் காதர் மொஹிடீன் ஏ. கே. ஏ. சேனன் என்றழைப்படும் சிவராஜ் ஜெனிவன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்ட பணத்தை செலுத்த தவறின் மேலதிகமாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கிளைமோர் குண்டை வைத்தே இந்த கொலை முயற்சியை மேற்கொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 37 வயதான சந்தே நபர் யாழ்ப்பாணம் கோவிலடி பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவையிலிருந்து மட்டக் களப்புக்கு 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதியன்று பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தபோதே பொலிஸார் இவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை 3,1979

ஆப்கன் போராளிகளுக்கு அமெரிக்க உதவி

கம்யூனிசத்தை எப்பாடுபட்டாவது உலகெங்கும் பரப்ப  சோவியத் ரஸ்ஸியா முயன்றது. அதை தடுக்க பிரம்ம பிரயத்தனம் செய்தது அமெரிக்கா. சுமார் 45 ஆண்டுகள் நடந்த இந்த பனிப்போரின் களமாக பல மூன்றாம் உலக  நாடுகள் அமைந்தன. தென் அமெரிக்கா, மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கம்யூனிச புரட்சியை நிறுவ பெரும் போராட்டங்கள் நடந்த காலங்கள் அவை. இந்தியாவில் நக்ஸல்பாரிகளும், இலங்கையில் ஜேவிபி கட்சியும் பெரும் கலவரங்களை உருவாக்கிய கொந்தளிப்பான கால கட்டம் அது. (மேலும்....)

ஆடி 03, 2015

சாத்தான் வேதம் ஓதுகிறது!

புலி வேதம் ஓதிய பாதிரி, பாவமன்னிப்பு கேட்பாரா?

புலி செய்த அட்டூழியங்கள், கொலை பாதகங்கள் அனைத்தையும் ஏற்றிப் போற்றிய பாதிரிக்கு திடீர் ஞானோதம். இலங்கையில் மதங்களின் இணைந்த செயற்பாட்டினால்தான் இதயசுத்தியான ஒப்புரவை உருவாக்கமுடியும். அரசாங்கங்களாலோ, அரசியல்வாதிகளாலோ இது முடியாத காரியம் என அருட்பணி. எஸ். ஜே. இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியிலிருக்கும் அருட்பணி கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் மதங்களின் இணைந்த செயற்பாட்டினால் தான் இதயசுத்தியான ஒப்புரவை உருவாக்கமுடியும்.(16.04.2015) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் அவர் மேலும் தெரிவிப்பதாவது, இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கத்தினாலும் அரசியல்வாதிகளாலும் ஒப்புரவுக்கான பேச்சுக்களும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனது கணிப்பின்படிஇ இம் முயற்சிகள் சிறிதும் பயனளிக்காமல் போவதற்குக் காரணம் என்னவெனில் அரசியல்வாதிகள் மக்களின் மனங்களை வெல்லும் குறுகிய நோக்கத்தோடு சுயலாபம் கருதி இவற்றை செய்ய முற்படுகிறார்களேயொழிய, சமூக, சமயத் தலைமைகளின் காத்திரமான ஒத்துழைப்பைப் பெற முன் வருவதில்லை. (மேலும்....)

கசக்கின்றது மைத்திரியின் சிறுநீர், கணக்கு விடுகின்றது சம்பந்தன் கூட்டணி!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசனங்களை கைப்பற்றுவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் கச்சிதமாக ஆரம்பித்து உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஜனாதிபதியானவர் மைத்திரிபால சிறிசேன. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் கொடுக்கவே இல்லை.  ஆனால் நாடாளுமன்ற கலைப்புத் தீர்மானம் எடுக்கப்படுகின்ற வரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான தேனிலவு மிகவும் சந்தோசமாக தொடரவே செய்தது. அரசாங்கத்திடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரொக்கப் பணம் பெற்று சட்டைப் பைகளை நிரப்பினர் என்று தமிழரசுக் கட்சிப் பிரமுகரும், வட மாகாண முதலமைச்சருமான ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனே பகிரங்கமாக தெரிவித்து உள்ளார். (மேலும்....)

ஜனாதிபதி நிராகரிப்பு

மஹிந்த இன்றிரவு இறுதி முடிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்புமனு வழங்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் என அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ அல்லது சுதந்திரக் கட்சி அல்லாத வேறு கட்சியிலோ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் எனவும் இது தொடர்பில் மஹிந்தவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை (02) இரவு இடம்பெறவுள்ள முக்கிய கூட்டமொன்றின் போது இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈ.பி.டீ.பி தனித்து போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 'எமது கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர். அதனடிப்படையில் 'உரிமைக்கு குரல் உறவுக்கு கரம்' என்னும் தொனிப்பொருளில் தனித்து போட்டியிடவுள்ளோம்' என்றார். 'பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து நாங்கள் விலகவில்லை. அவர்களுடன் உடன்பட்டு இருக்கின்றோம். எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளோம். தமிழ் மக்களின் கௌரவமான, ஒளியமான எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் செயற்படுகின்றோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதில் முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகின்றோம். இதற்கு தென்னிலங்கை கட்சியுடன் சேர்ந்திருப்பது, அல்லது பிரிந்து இருப்பது தொடர்பில் பிரச்சினையில்லை. நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்திருந்ந காலத்தில் யாழ்ப்பாணத்தில் 17,522 ஹெக்டேயர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதி இராணுவத்தினரிடம் இருந்து விடுவிப்பதற்கும் நாங்கள் தான் நடவடிக்கை எடுத்தோம்' என்றார்.

சபைக்கலைப்பின் பின்னணியும் விளைவுகளும்

ஜனாதிபதிக்கு முன் மூன்று மாற்றுத் தீர்வுகள் இருந்தன. 20ஆவது திருத்தம் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றிவிட்டு, தாம் அந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றியதாக கூறி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைப்பது ஒன்றாகும். அல்லது பெரும்பான்மை பலம் கொண்ட ஐ.ம.சு.கூவுக்கு ஆட்சியை கையளிக்கவும் முடியும். மூன்றாவதாக 20ஆவது திருத்தத்தை கைவிட்டுவிட்டு நாடாளுமன்றத்தை கலைக்கலாம். முதலில் ஜனாதிபதி, 20ஆவது திருத்தம் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றிவிட்டு நாடாளுமன்றத்தை கலைக்கத் தான் முயற்சி செய்தார். அதற்காக கடந்த 12ஆம் திகதி அமைச்சரவைக்கு ஓர் அரசியலமைப்பு நகலை அவரே சமர்ப்பித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விடயத்தில் ஐ.தே.க. நிலைப்பாட்டுக்கு கூடுதலாகவும் ஸ்ரீ.ல.சு.க. நிலைப்பாட்டுக்கு குறைவாகவும் உள்ள நடுநிலை எண்ணிக்கை அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அது சகல கட்சிகளினதும் எதிர்ப்புக்குள்ளாகியது. குறிப்பாக சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் அதனை கடுமையாக எதிர்த்தன. எனவே, ஜனாதிபதியால் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாது போயிற்று.(மேலும்....)

ஐ. தே. கவுடன் இணைந்து 10 மாவட்டங்களில் போட்டி - முஸ்லிம் காங்கிரஸ்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பத்து மாவட்டங்களில் போட்டியிடவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்து ள்ளது. இது தொடர்பாக ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. வடக்கு, கிழக்கில் நான்கு மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி யிடவிருப்பதாக சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார். இது தொடர்பில் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும், ஐ.தே.க வேட்புமனு வழங்காத இடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்றும் அவர் குறிப் பிட்டார். அதேநேரம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப் பொன்றும் நேற்று நடைபெற்றது. இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த நஜா முஹமட் மற்றும் சிராஜ் மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டி ருந்தனர். கருத்து இணக்கப்பாட்டுடன் எதிர்வரும் தேர்தலில் இணைந்து செயற்படுவது தொடர்பில் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.

ஆடி 02, 2015

புலிகள் இயக்கத்தில் முன்னிலைத் தளபதிகளில் ஒருவர் பேட்டி

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏன் பிரபாகரன் உருவாக்கினார்? அமெரிக்க ஆவணத்தில் பேரதிர்ச்சி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதன் பின்னணி குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டன் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் கசிந்து உள்ள தகவல்கள் பேரதிர்ச்சி தருபவையாக உள்ளன. புலிகள் இயக்கத்தில் முன்னிலைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய குமணன் என்பவர் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கக் கூடிய பேட்டி ஒன்றின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கின்ற போதிலும் நம்பிக்கைக்கு உகந்தனவாக உள்ளன என்று இந்த ஆவணத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. (மேலும்....)

யாழில் "இடதுசாரிய நடவடிக்கை" நூல் வெளியீடு கருத்தரங்கம்

நேற்றைய தினம் ஜூன் 30 பிற்பகல் 3 மணிக்கு முன்னிலை சோசலிச கட்சியின், "இடதுசாரிய நடவடிக்கை" எனும் தமிழ் மொழி மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள உணவக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இடதுசாரி கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் வட பொது மக்கள் என 75 பேர்கள் அளவில் கலந்து கொண்டனர். முன்னிலை சோசலிச கட்சி பொதுச் செயலாளர் சேனாதீர புத்தகத்தை வெளியிட்டு வைக்க, முதலாவது பிரதியினை புதிய ஜனநாயக மாக்சிய லெனிய கட்சி செயலாளா தோழர் செந்தில்வேல் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரும் புத்தத்தினை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து நிகழ்ந்த கருத்தரங்கில் தோழர்கள் புகுது ஜெயகொட, கிருபாகரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். பத்மநாபா ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகம் தோழர் சுகு சிறீதரனும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டு புத்தகப் பிரிதி வெளியீட்டில் பங்கு கொண்டார்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்

வரும் 2039ம் ஆண்டுக்குள், செவ்வாய் கிரகத்தில், மனிதர்களை குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளில், நாசா விண்வௌி ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள, நாசாவின் ஜெட் புரபல்ஷன் ஆய்வக விஞ்ஞானிகள் இதற்கான திட்டத்தை தயாரித்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டிலேயே விண்வௌி பயணிகள் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர். வரும் 2033ம் ஆண்டு, நான்கு பயணிகள், 2039ல் இரண்டு பேர், 2043ல் நான்கு பேர் என தனித்தனி குழுக்களாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுவர். செவ்வாய் கிரகத்தில், இவர்கள் தங்குவதற்கு தேவையான இருப்பிட வடிவமைப்பு மற்றும் சாமான்களை கொண்டு செல்லப்படும். இவர்களின் உதவியுடன், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்க முடியுமா இல்லையா என்பதை விஞ்ஞானிகள் சோதிக்க உள்ளனர்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் - மஹிந்த

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள தாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மெதமுலனயில் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மெதமுலனவிலு ள்ள கால்டன் இல்லத்தில் நேற்று புதன்கிழமை விசேட உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். நாட்டின் எதிர்காலத்திற்காகவும் மக்களின் வேண்டுகோளுக்கு தலைசாய்க்கும் நோக்குடனும் இந்த முடிவை எடுத்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார். நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளி லுமுள்ள மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் பொது மக்கள் பலரும் கால்டன் இல்லத்தின் வளாகத்திற்கு சென்றிருந்தனர். நாட்டையும் கட்சியையும் பாதுகாக்கவென அனைத்து மக்களையும், 2015 இல் தங்களுடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களும் நாட்டின் பாதுகாப்பு எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தங்களோடு இணைந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சி 1989, 1990 காலத்தில் செய்த அநியாயங்களை மறக்க முடியாது என்றும் புலிகள் அமைப்புடன் 11 வருடங்களுக்கு முன்னர் செய்து கொண்ட நாட்டை பிளவுபடுத்தும் ஒப்பந்தத்தை மறக்க முடியாது என்றும் அவை தற்போதுள்ள இளைய சமுதாயத்திற்குத் தெரியாது என்றும் பழையவர்களுக்கு அனுபவம் உண்டு என்றும் சுட்டிக்காட்டனார்.

எங்கும் சாதி! எதிலும் சாதி!!

தேர்தல் என்றவுடன், நமக்குள்ளே என்னையா சாதி? தமிழ்த் தேசியம் என்னும் மாயத் திரையால் சாதிப் பாகுபாடு ஓரளவு மறைக்கப்பட்டது போன்ற தோற்றம் கண்டது. ஆனால் அது உண்மையல்ல. இந்தப் பிரச்சனை பற்றிப் பேச முற்பட்டால், சிங்களத்தின் ஏவலர்கள் என வசைமாரி பொழிய ஆரம்பித்து விடுவார்கள் குருட்டுத் தமிழ்த் தேசியவாதிகள். மிக முக்கியமான துரோகப் பட்டமும் கட்டிவிடுவார்கள். துணுக்காய் என்ற இடத்தில் புலிகளால் நடத்தப்பட்ட பாரிய சித்திரவதை முகாமில் கூட, சாதி பார்த்து சித்திரவதை செய்து கொன்ற வரலாறு தமிழத் தேசியத்துக்கு உள்ளது. சிங்கக் கொடி புகழ் சம்பந்தனையும், அவர் சகபாடிகளை விடவும் சிங்களத்தின் ஏவலர்களாக யாருமே இருந்ததில்லை. புலிகளை ஏகப் பிரதிநிதிகள் என ஏற்றுக் கொண்ட இவர்கள், பின்னர் நீதிமன்றம் ஏறி புலிகளை மறுதலித்தார்கள்.  தமிழரசுக் கட்சிக்கு, ரெலோவுக்கு, புளொட்டுக்கு, சுரேஸ் குழுவுக்கு என வேட்பாளர்களைப் பங்கு போடும் இந்தப் புலிக் கூட்டமைப்பு, தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மையாக உள்ள தமிழ்த் தலித் மக்களுக்கு எத்தனை வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறது. புலம்பெயர்ந்து வந்த தேசங்களிலும் சாதி பார்க்கும் தமிழ்த் தேசியத்திடம் தலித் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

புதிய வியூகம் அமைத்து மீண்டும் களத்தில் குதிக்கின்றனர் புலிகள்!!

போர்க் களத்தில் சமராடிய விடுதலைப்புலிகள் தற்போது புதிய வியுகம் ஒன்றை ஆரம்பித்து மீண்டும் களமிறங்க ஆயத்தமாகின்றனர். ஜனநாயக ரீதியாக களமிறங்கி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமி்ழ்மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான பணியை இவர்கள் முன்னெடுத்துள்ளனர். இவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இறங்குவதால் ஏற்படப்போடும் அரசியல் மாற்றங்கள் பாரதுாரமானதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுவரை காலமும் புலிகளை வைத்துப் பிழைப்பு நடாத்தி வந்த அரசியல் கட்சிகளின் நிலை என்ன என்பது இனி கேள்விக்குரிய ஒன்றாகிவிடும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி அவர்களால் மதிக்கப்பட்ட முக்கிய சிரேஸ்ட தமிழ் ஊடகவியலாளரான வித்தியாதரனின் ஒருங்கிணைப்பிலேயே இவர்கள் களத்தில் குதிக்கவுள்ளனர். எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கூடவுள்ள இப் போராளிகள் தங்களது தீர்மானங்கள் தொடர்பாக பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றையும் கூட்டி அங்கு வைத்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் மறைந்த பின்னர் தமிழ்ர் வாழ்விடங்களில் தலைதுாக்கியுள்ள பல்வேறுபட்ட பிரச்சனைகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இவர்கள் அதிரடியாக இறங்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்து கடல் பகுதியில் "விண்கல் சுனாமி' அபாயம்

இங்கிலாந்து கடல் பகுதிகளில் மிகப்பெரிய விண்கல் விழ இருப்பதால், அந்நாட்டின் கடற்கரைப் பகுதிகள் சுனாமியால் பாதிகப்படும் அபாயம் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் சவுத்ஹாப்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், பூமியின் மீது மோதக் கூடிய விண்கற்களின் ஓடு பாதைகளை ஆராய்ந்து வருகின்றனர். ஆராய்ச்சி முடிவில், இங்கிலாந்தின் கடல் பகுதியில் சில ஆண்டுகளில் பெரிய விண்கல் விழும் அபாயம் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், இங்கிலாந்தில் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த பல்கலை விஞ்ஞானிகள் "ஆர்மர்' எனும் சாப்ட்வேரை உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் விண்கற்களால் பூமியில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் அறிய முடியும். (மேலும்....)

பிரபாகரன் உயிருடன்!!

கஜேந்திரனைக் கொல்ல முயன்ற பொதுமக்கள்!! துன்னாலையில் சம்பம்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என வடமராட்சி துன்னாலையில் தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரன் பொதுமக்களின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இன்று துன்னாலைப் பகுதியில் உள்ள நுாலகம் ஒன்றில் அரசியல் நடாத்துவதற்கா சிலரைச் சந்தித்த கஜேந்திரன் அவர்களுக்கு புலிகளின் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கதையளந்துள்ளார். இந்தக் கதையால் அப்பகுதியில் பரபரப்புத் தோன்றியது. புலம்பெயர்ந்து வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒருவர் கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்ததை அறிந்து கடும் கோபமுற்று அவர் நின்றிருந்த இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து ”இன்னும் நீ இவ்வாறு கூறுவதை நிறுத்தவில்லையா, சனத்தை நீ இப்பவும் ஏமாற்றிக் கொண்டு திரிகின்றாயா? உன்ர தம்பியை காப்பாற்றுவதற்காக நீ மகிந்தவுடனும் கோத்தாவுடனும் பேரம் பேசியது எங்களுக்குத் தெரியும்” என்று கூறிக் கொண்டு கஜேந்திரனைத் தாக்கச் சென்றுள்ளார். அந்த இடத்தில் இருந்து தப்பியோடிய கஜேந்திரன் அப்பகுதியில் விடுமுறையில் வந்திருந்த தமிழ்ப் பொலிசாரிடம் தஞ்சம் புகுந்துள்ளார். இருப்பினும் அவர்களையும் மீறி தாக்க முற்பட்ட போது அவர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடியதாகத் தெரியவருகின்றது.

கருப்பட்டியுடன் இணைந்த தமிழ் கலாச்சாரம் ...!

”தமிழர்களின் கலாசாரத்தோடு கருப்பட்டிக்கும், சர்க்கரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் பாட்டனும், பூட்டனும் தங்கள் தேக த்தை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ள இவற்றைத்தான் அதிகமாகச் சாப்பிட்டார்கள். கருப்பட்டி உடலுக்கு வலிமையையும், குளிர்ச்சியையும் தர வல்லது. அன்றாட உணவில் கருப்பட்டியைச் சேர்த்துக் கொண்டால்… எலும்புத் தேய்மானம், மூட்டுவலி, கருப்பைக் கோளாறு, தசைப்பிடிப்பு, பல் சம்பந்தமான நோய்கள் அண்டாது. காரணம், கருப்பட்டியில் இருக்கும் கால்சியம் சத்துதான்.
தினசரி மிச்சமாகும் சோற்றில் தண்ணீர் விட்டு வைப்பது நம் வீடுகளில் வழக்கம். இதை ‘நீர் ஆகாரம்’ என்பார்கள்; சித்த மருத்துவத்தில் ‘நிசிநீர்’ என்போம். அந்தக் காலத்தில் காலையில் எழுந்ததும் இந்த நீர் ஆகாரத்தை ஒரு மடக்கு குடித்துவிட்டு, கருப்பட்டியை ஒரு கடி கடித்துக் கொள்வார்கள். இது, உடல் சோர்வை ஓட ஓட விரட்டி விடும். பின்னர் வயல் வரப்பில் எவ்வளவுதான் உடலை வருத்தி வேலை செய்தாலும் களைப்பே தட்டாது. கைக்குத்தல் அரிசியையும், கருப்பட்டியையும் கலந்து சாப் பிட்டால் உடலுக்குத் தேவையான ‘வைட்டமின் பி’ சத்து அதிகமாகக் கிடைக்கும். (மேலும்....)

ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட ம.ம.மு தீர்மானம்

இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தன்னையும், பதுளையில் அரவிந்தகுமாரையும் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட மலைய மக்கள் முன்னணியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதென மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களிடமும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் எங்களுக்கு வழங்க வேண்டிய முன்னுரிமை மற்றும் மலையக மக்களுடைய தேவைபாடுகளை செய்யும் அளவுக்கு கலந்துரையாடிய பின்னர், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் உத்தியோபூர்வமாக வெளியிடுவோம். (மேலும்....)

தமிழ்த் தலைமையில் மாற்றம் தேவை - தேவானந்தா

தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் தலைமையில் மாற்றம் ஏற்படாவிட்டால் எமது மக்களுக்கு எவ்விதமான பயன்களும் கிடைக்கப்போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஐ.எஸ்.எப். கடனை செலுத்த தவறியதால் கிரீஸ் பாரிய நிதி நெருக்கடியில் தவிப்பு

யூரோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வெளியேறும் நிலை

கிரீஸ் சர்வதேச நாணய நிதியத் திற்கு (ஐ.எம்.எப்.) கொடுக்க வேண் டிய கடன் தொகையை செலுத்து வதற்கான கால அவகாசம் கடந்த செவ்வாய் நள்ளிரவுடன் காலாவதி யானதை அடுத்து அந்த நாடு பாரியதொரு நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. இதன்படி கிரீஸ் ஐ.எம்.எப்பிற்கு கொடுக்க வேண்டிய 1.8 பில்லியன் டொலர் கடனை செலுத்த தவறிய தன் மூலம் நிலுவை தொகையை கொடுக்க முடியாமல்போன முதலா வது அபிவிருத்தி அடைந்த நாடாக இடம்பிடித்துள்ளது. இவ்வாறான நிலைக்கு கடைசியாக 2001 ஆம் ஆண்டு சிம்பாப்வேயே முகம் கொடு த்திருந்தது. இதன்மூலம் கிரேக்கம் அதன் ஐந்தாண்டு கால கடன் நெருக்கடி யில், முதல்தடவையாக எந்தவித மான சர்வதேச நிதியுதவிகளையும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. (மேலும்....)

மருத்துவத்தில் இன்னும் ஒரு சாதனை

தாய் - குழந்தை எச்.ஐ.வி. பரவலுக்கு கியூபாவில் தடுப்பு

தாயிடம் இருந்து குழந் தைக்கு எச்.ஐ.வி. மற்றும் பால்வினை நோயான சிபிலிஸ் கடத்தப்படு வதை கியூப சுகாதாரத் துறை வெற்றிகரமாக தடுத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (டபிள் யூ.எச்.ஓ.) அறிவித்துள் ளது. இது பொது மருத்து வத்தில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்று டபிள்யூ.எச்.ஓ. தலைவர் மார்கிரேட் சான் குறிப்பிட்டுள்ளார். ஏனைய நாடுகளும் இந்த வெற்றியை அடைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் ஒவ்வொறு ஆண்டும் சுமார் 1.4 மில்லியன் பெண்கள் எச்.ஐ.வியுன் கர்ப்பமுருகின்றனர். இவர்களுக்கு உரிய சிகிச்கைள் வழங்காத பட்சத்தில் கர்ப்ப காலத்தில் பிரசவத்தின்போதோ அல்லது தாய்ப்பால் வழங் கும்போதோ குழந்தைக்கு வைரஸ் கடத்தப்படும் அபாயம் 15 முதல் 45 வீதம் வரை காணப்படுகிறது. எனினும் தாய் மற்றும் குழந்தைக்கு ரெட்ரோ வைரல் மருந்துகள் வழங்கு வதன் மூலம் இந்த அபாயத்தை சுமார் ஒரு வீதமாக குறைக்க முடியும். அதேபோன்று முன்கூட்டிய பரிசோதனை மற்றும் சிகிச்சை மூலம் சிபிலிஸ் பால்வினை நோய் தாயிடம் இருந்து குழந்தைக்கு கடத்தப்படுவது தவிர்க்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி 01, 2015

விரோதத்தை விதைத்தால் சோகம்தான் விளையும்

(மாதவன் சஞ்சயன்)

பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமை தாயக அமைப்பு, அமெரிக்க தமிழர் பாதுகாப்பு அமைப்பின் அனுசரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அலுவக அறையில் ஏற்பாடு செய்த இறுதி யுத்த சாட்சிகளை பதிவு செய்யும் நிகழ்வில் கலந்துகொண்ட புலித்தேவன், நடேசன், மலரவன் உறவுகளின் கண்ணீர் வாக்கு மூலங்கள் நாகரீக மனித சமூகத்தின் மனச்சாட்சியை நிச்சயம் உலுக்கியிருக்கும்.
காட்டுமிராண்டி சமூகத்தில் தான் எதிரியின் தலையை கொய்து வேல்கம்பில் குத்தி பொது இடத்தில் பார்வைக்கு வைப்பார். தம்மை எதிர்ப்பவர்களை மிரட்டும் செயலாக அந்தக்காலத்தில் அது அமைந்தது. (மேலும்....)

சந்திரிகா போட்டியிடுவார்

மகிந்தா போட்டியிட இடம் இன்றி தவிக்கின்றார்

பொதுத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயலாளர் பி.திஸாநாயக்க, சந்திரிகா, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியாகியுள்ள ஊடக செய்திகள் உண்மையானது என்றும் அவர், கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயார் என்றும் அதற்காக மக்களின் வரத்தை கேட்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை (01) உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். தங்காலை, மெதமுலனையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இன்று நடைபெறவுள்ள எசல பௌர்ணமி தின தர்மதேசனைக்கு பின்னர், காலை 10 மணிக்கு இருக்கும் சுபநேரத்தில் அவர் இந்த அறிவிப்பை விடுவார். பிரதமர் வேட்பாளராக களமிறங்குவேன் என்ற அறிவிப்பை விடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பதற்காக கொழும்பிலிருந்து தங்காலைக்கு வாகனப்பேரணிகள் செல்லவுள்ளன. இந்த வாகனப்பேரணியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் வழிநடத்தவுள்ளனர்.

இன்னொரு வாசகரின் கருத்து.......

(எழுத்துப் பிழைகள், சொல் நடை எதிலும் மாற்றம் செய்யாது பிரசுரிக்கின்றோம் - ஆர்)

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களிற்கு,
சந்திரன் அவர்கள் எழுதிய கருத்து என்மனதினுள்ளும் எழுந்தது. எழுதப் பிந்திவிட்டது. வாசகர்கருத்தென்பது ஒன்று. திட்டமிட்ட சமூக சீர்குலைப்பு என்பது இன்னொன்று. டக்லஸ் முதுமொழ்கள் கூறுவார். அவர் அவ்வாறு அண்மையில் கூறியது ஆடுறமாட்டை ஆடிக்கறக்க வேண்டும் பாடுகிற மாட்டைப் பாடிக்கறக்க வேண்டும் என்று. இதை வால்லாத்திக்க சக்திகளும் கைக்கொள்கின்றன என்று எண்ணத்தோன்றுகிறது. சரிபிழைக்கு அப்பால் ஆயுதம் மூலம் விடுதலை என்பதில் விலைபேசப்பட முடியாத புலிகளை ஆயுதம் மூலம் அழித்தொழித்த வல்லாதிக்க சக்திகள் ஜனனாயகம் மூலம் உரிமைகள் என்ற கொள்கையை உறுதியாகப் பின்பற்றும் விலைபேசமுடியாத ஓர் தலைவனை ஜனநாயகவழியில் அழிக்க முனைகின்றன. புலிகளின் தந்திரோபாயத்தை இவ்வல்லாதிக்க சக்திகள் பின்பர்ருகின்றன போலும். புலிகள் முதலில் அழித்தது பலம்பொருந்திய டெலோ அமைப்பை. பின்னர் ஒவ்வொன்றாய் அழித்து இறுதியில் ஈரோஸ். அது புலிகள் அமைப்பில் உள்வாங்கப்பட்டது. இங்கு இவ்ஆதிக்கசக்திகளும் இதைத்தான் செய்கின்றன. புலிகளை அழித்ததன் பின்னர் ஜனநாயவழியில் இயங்குகின்ற முன்னாள் போராளிகள் அமைப்புக்களை ஒடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றன. டக்லசில் தொடங்கி கருணா, பிள்ளையான், எனவந்து இப்போ சுரேஷ் சித்தார்த்தன் என அவர்களின் கடந்தகால போராட்டகால வாழ்வைக் களங்கப்படுத்தி அதன் மூலம் தாக்கம்மிக்கதோர் உரிமைக் குரலைநசுக்க முயல்கின்றன. மாறாக உப்புசப்பற்ற வீரமுழக்கமிடும் ஊதாரிப் பேர்வழிகளை தமிழர்களின் தலைவர்களாக சித்தரிக்கின்றன. இதற்காக பலஊடகங்களும் புத்திஜீவிகள் எனப்படுவோரும் பயன்படுத்தப்படுகின்றனர். அதன் அதிஉயர் வேடிக்கைதான் டக்லஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன், சுரேஷ் என அனைவரையும் துரோகிகளாகக்காணும் ஊடக தர்மம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பின்தள்ளி மகேஸ்வரன், விஜயகலா, துவரகேசன் போன்றோரை பிந்திய மீட்பர்களாக விளம்பரம் செய்து நிற்கின்றன. மாற்றுக் கருத்துக்கு களம் கொடுத்தல் எனும் பெயரில் அடிப்படை அற்ற மலினமான கருத்துக்களை வெளியிடுவோறிற்கு களம் கொடுத்து ஆதிக்க சக்திகளிற்கு சூத்திரம் துணைபோக வேண்டாம். இக்கருத்தை நீங்கள் பிரசுரிப்பீர்கள் எனின் டக்ளசின் பலம் பற்றி என் கருத்தை மேலும் பகிர ஆவலாய் உள்ளேன்.
(சூரியன்)

மட்டக்களப்பு, வன்னி குறித்து முடிவில்லை - கூட்டமைப்பு

யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தெந்தக் கட்சிகள், எந்தெந்த அடிப்படையில் போட்டியிடவுள்ளன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சிக்கும் வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்மிரருக்குத் தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், மட்டக்களப்பு, திகாமடுல்லவுக்கான இடங்கள் இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். 'அது குறித்து நாங்கள் அடுத்த சில நாட்களில் முடிவினைப் பெறலாம்' என அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இம்முறை யாழ்ப்பாணத்திலிருந்து போட்டியிடவுள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.விநாயகமூர்த்தி, உடல்நிலை காரணமாகப் இம்முறை போட்டியிடமாட்டார்.

பத்து வருட பாராளுமன்ற 'சேவை' போதும்,  ஏனையவருக்கு வழி விடுங்கள்

10 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் வெற்றிநடை போடும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடைக்கலநாதன் ஐயா, வினோதரலிங்கம் ஐயா, சிவசக்தி ஆனந்தன் ஐயா இது உங்களின் மேலான கவனத்திற்கும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்குமாக Mannar Voice Mannar குழு உங்களுக்காக.... கடந்த 10 வருட காலமாக வன்னி மண்ணில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து இற்றவரைக்கும், அதாவது யுத்த சூழ் நிலைக்குள்ளும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றோம் எனவும், தமிழ் தேசியத்தை நேசிப்போம் என்றும் கூறி உங்களுக்கு முடிந்த அளவு மக்களுக்கு விரும்பியோ, விரும்பாமலோ, அல்லது மக்கள் விரும்பியோ விரும்பாமலோ, மக்களுக்கு நீங்கள் செய்ததையும், மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் உங்களை கொண்டு சென்ற விடயத்தில் நீங்கள் மக்களை மறந்தாலும் மக்கள் உங்களை மறக்க வில்லை என்பதனை சுட்டிக்காட்டுவதுடன் உங்கள் பணிக்கும், சேவைக்கும் மக்களுடன் சேர்ந்து mannar voice mannar குழுவினர் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து நிற்பதுடன் சில விடயங்களையும் உங்களுக்கு தெளிவு படுத்தலாம் எனவும் எண்ணி இதனை mannar voice mannar குழு மூலம் வெளியிடுகின்றோம். (மேலும்....)

இங்கிலாந்து அளவு நிலம் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு - விலை -$320 மில்லியன் மட்டுமே!
 

உலகில் அதிகபட்ச நிலம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் 11 மில்லியன் (ஒரு கோடி பத்து லட்சம்) சதுர கிலோமீட்டர் அளவிலான நிலம் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த நிலம் தெற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா, வட பிராந்தியம் (Northern Territory) என்று விரிந்து கிடக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் நான்கில் மூன்று அளவிலான அந்த நிலத்தில் பண்ணையை பராமரிக்கும் 150 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள். அந்த நிலத்தை வாங்க வெளிநாடுகள் உட்பட 30 பேர் போட்டியிடுகின்றனர். சீனா இந்த நிலத்தை வாங்க மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலத்தின் சொந்தக்காரர் அடலைட் நகரில் 1857ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த சர் சிட்னி கிட்மேன் ஆவார். தனது 13 வயதில் ஐந்து ஷில்லிங்க் பணம் மற்றும் ஒற்றைக்கண் குதிரையுடன் வீட்டை விட்டு ஓடி பின்னர் நிலம், பண்ணை என்று வாங்கி பெரும் பணக்காரர் ஆனவர். அவர் துவங்கிய எஸ். கிட்மேன் அன்ட் கம்பெனிக்கு சொந்தமாக ஏராளமான நிலம் உள்ளது. இந்நிலையில் ஐந்து தலைமுறைகளாக கிட்மேன் குடும்பத்திடம் இருந்த அந்த நிலம் தற்போது $320 மில்லியன் டாலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது.  நிலத்தை வாங்க விரும்புவோர் நிலத்தை வானிலிருந்து சுற்றிப்பார்க்க சிறு விமானத்தில் குறைந்தது ஒருவாரம் பயணிக்கவேண்டும்.

கேரள இரப்பர் எஸ்டேட்டில் அடிமைகளாய் நடத்தப்படும் இலங்கை அகதிகள், புற்று நோயால் அவதி!

தென்மலை ரப்பர் எஸ்டேட்டில் அடிமைகளாய் நடத்தப்படும் இலங்கை அகதிகள் புற்று நோயால் அவதிப்படும் அவலம் தற்போது வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலையில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மத்திய அரசுக்கு சொந்தமான ஆர்.பி.எல். எனப்படும் ரப்பர் எஸ்டேட் உள்ளது. இங்குள்ள ரப்பர் தொழிற்சாலையில் இருந்து பால் எடுக்கப்பட்டு மும்பை, புனே போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இங்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அகதிகள் 650 குடும்பங்களாக வந்து தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது இந்த குடும்பங்கள் பெருகி 1,500 தொழிலாளர்கள்வரை வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.300 சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தில் தான் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தை நடத்துகிறார்கள். (மேலும்....)

உணவு நஞ்சாவதன் அடிப்படை!
(ம.செந்தமிழன்)

உணவு ஏன் நஞ்சானது எனக் கேட்டால் பல வகையான விளக்கங்கள் தர முடியும். எல்லா விளக்கங்களுக்கும் அடிப்படையான ஒன்றைப் பற்றி உங்களிடம் உரையாட விரும்புகிறேன். ’உணவு தயாரிக்கப்படுவதல்ல, படைக்கப்படுவது’ என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால் உங்களுக்கு அதிக விளக்கங்கள் தேவையில்லை. ஆனால், சமூகத்தின் கணிசமான தொகையினர் ‘படைப்பை’க் காட்டிலும் ‘தயாரிப்பில்’ நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.
கதை எழுதுவதைம் கவிதை எழுதுவதைம் ‘படைப்புகள்’ எனக் கூறுவது இச் சமூகம். இதற்கு உணவும் உயிரின வாழ்க்கையும் ‘படைப்புகள்’ அல்ல. (மேலும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com