Contact us at: sooddram@gmail.com

 

பங்குனி 2012 மாதப் பதிவுகள்

பங்குனி 31, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றம்!

இந்தியா காலை வாரியதா? அல்லது சூழ்ந்நிலைக் கைதியாகியதா? - வானவில்

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் 2012 மார்ச் 21ஆம் திகதி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இந்தியா முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தத் தீர்மானம் வெளித் தோற்றத்துக்குப் பார்க்கையில் இலங்கைக்கு உதவுவது போலத் தோன்றினாலும், உண்மையில் இதை ஒரு 'சீனி பூசிய தோட்டா' என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கை நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்குக்கான ஆணைக்குழு அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை, இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு 3 மாதங்களே ஆகியுள்ள சூழ்நிலையில், அரசாங்கம் அதை அமுல்செய்ய முயற்சிகளை ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இத்தகைய ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்ததின் உள்ளாந்த நோக்கம், நிச்சயமாக சந்தேகத்துக்கு உரிய ஒன்றாகவே இருக்கின்றது. (மேலும்.....)

பங்குனி 31, 2012

முல்லைத்தீவு செல்லும்  பயணிகளுக்கு அறிவுரை

வடக்கில் முல்லைத்தீவு பகுதியைப் பார்வை இடுவதற்காக செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகளை தேசிய பாதுகாப்பு மத்திய ஊடக நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல வெளியிட்டு ள்ளார். முல்லைத்தீவு பகுதியைப் பார்வையிட வரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இப்பகுதியின் நிலைமையைப் போன்று இப்பகுதியில் வசிக்கும் மக்களின் கலாசார இலட்சணங்களையும் தெரிந்து அவற்றை மதித்து உல்லாச பிரயாணம் மேற்கொள்வது தொடர்பாகவும் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுவது தடுக்கப்பட வேண்டும். பார்வையிட வருவோருக்கும் வசதிகள் வேண்டும். பின்வரும் விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. (மேலும்.....)

பங்குனி 31, 2012

பணம் பலதும் செய்யும்! தனது வாதத்திறமையை காட்டினார் சிறீகாந்தா

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றவாளி விடுதலையானார்!

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயது ஏழைச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவில் கோட்டக் கல்வி பணிப்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிணையில் இன்று வெள்ளிக்கிழமை வெளியில் எடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்டத்தரணியான என்.சிறிகாந்த தனது வாதத்திறமையினால் மன்றில் தூள் கிளப்பி ஏழைச் சிறுமியின் கண்ணில் இரத்தக் கண்ணீர் வடிக்கவிட்டுள்ளார். (மேலும்.....)

பங்குனி 31, 2012

ஒற்றுமை தொடரட்டும் !

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி உலகின் பன்முனைகளையும் ஆட்டம் காணச்செய்தது. இந்நிலையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த ‘பிரிக்ஸ்’ அமைப்பின் நான்காவது மாநாடு தில்லியில் கூடியது. இதில் மிக முக்கிய மான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. காரணம், உலகையே தனது ஆளுமையின் கீழ் வைத்திருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் டாலரை, தங்களுக்குள்ளான பரிவர்த்தனையில் கைவிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக தங்களுடைய கரன்சியை பயன்படுத்திக் கொள்வது என தீர்மானிக்கப்பட் டிருக்கிறது. (மேலும்.....)

பங்குனி 31, 2012

மக்கள் வங்கியின் மக்கள் சேவை பல்லாண்டுகளுக்கு தொடர வேண்டும்

1956ம் ஆண்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் தலைமை யில் பதவிக்கு வந்த மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தன்னை ஒரு மக்கள் அரசாங்கமாக பிரகடனம் செய்த போதி லும் அவ் அரசாங்கத்தின் கீழும் ஏழைகள் தங்கள் பொருளாதார வளத்தை பெருக்கிக் கொள்வதற்கு வங்கிகளில் வைப்புகளை ஆரம்பிப்பதற்கு பல்வேறு சிக்கல்களையும், முட்டுக்கட்டைகளை யும் எதிர்நோக்கினார்கள். திரு. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்ட பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட டாக்டர் டபிள்யு. தஹநாயக்கவும் இதுவிடயத்தில் அந்தளவிற்கு அக்கறை காட்ட வில்லை. இறுதியில் 1960ம் ஆண்டு ஜூலை பொதுத் தேர்தலில் பிரதம மந்திரியாகி, உலகில் பிரதம மந்திரி பதவி வகிக்கும் முத லாவது பெண்மணி என்ற சாதனையை படைத்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் சோஷலிச கொள்கையை நிறை வேற்றுவதில் அக்கறை கொண்ட பல அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களின் அரசாங்கத்தில் நிதி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட திரு. டி.பி. இளங்கரத்ன இந்நாட்டின் பாட்டாளி மக்களுக்கு பணி செய்த ஒரு பெரும் அரசியல் தலைவராவார். (மேலும்.....)

பங்குனி 31, 2012

அரசரை மிஞ்சும் விசுவாசியாக ஜப்பான்!  வடகொரிய ஏவுகணையை மறிக்க உத்தரவு

வடகொரியா விண்ணில் செலுத்தவிருக்கும் செயற் கைக்கோளை இடைமறிக் கும் திட்டத்தை அமெரிக் காவின் கூட்டாளியான ஜப் பான் உருவாக்கியிருக்கிறது. இந்த செயற்கைக்கோள் வடகொரியாவால் சொந்த மாகத் தயாரிக்கப்பட்டதா கும். சொந்தக் கால்களில் எந்த நாடு நின்றாலும் அதை அமெரிக்காவால் பொறுத் துக் கொள்ள முடியாது. செயற்கைக்கோளை செலுத்தக்கூடாது என்று அமெரிக்கா முரண்டு பிடித்து வருகிறது. அதன் கூட்டாளி யான ஜப்பானோ ஒரு படி மிஞ்சும் வகையில், விண் ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோளை தேவைப்பட்டால் இடை மறித்து தகர்ப்போம் என்று கூறியுள்ளது. இந்நிலையில், உயிரைக் குடிக்கும் குண்டுகளைக் கொண்டு அமெரிக்காவும், தென் கொரியாவும் போர்ப் பயிற்சி நடத்திக் கொண்டி ருக்கின்றன. கொரியப் பகுதி யில் அமைதியைக் கேள்விக் குறியாக்கும் இந்தப் பயிற்சி பற்றி ஜப்பான் அமைச் சரவை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தனது செயற்கைக்கோ ளை ஏப்ரல் 12 முதல் 16 ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்போவதாக வட கொரியா அறிவித்திருக்கி றது. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திலும், அதன் மூலமாக தகவல்க ளைச் சேகரிப்பதிலும் வட கொரியா எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என் பதை இந்த செயற்கைக் கோள் எடுத்துக்காட்டும் என்கிறார்கள் அந்நாட்டு விஞ்ஞானிகள்.

பங்குனி 31, 2012

இந்திய பாராளுமன்ற குழு இலங்கை வர முடிவு

இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்புக்கு வரவிருப்பதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இந்தக் குழுவினர் இலங்கையில் தங்கியிருந்து பிந்திய நிலைமைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என சுஷ்மா சுவராஜ் இந்திய ஊடகவியலா ளர்களுக்குத் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் தாம் இந்தப் பயணத்தை மேற்கொள்ள விருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்புக்கும், புதுடில்லிக்கும் இடையில் காணப்படும் பரஸ்பர அக்கறையின் அடிப்படையில் இக்குழுவினர் இலங்கை வரவிருப்பதாக உயர்ஸ்தானி கராலய வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை செல்லும் குழுவுக்குத் தான் தலைமை தாங்க விருப்பதாக இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கும் சுஷ்மா சுவராஜ், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதி யில் நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகளை இந்தியப் பாராளுமன்றக் குழுவினர்கள் நேரில் பார்வையிடவிருப்ப தாகவும் கூறினார்.

பங்குனி 31, 2012

தொழிலாளர் விரோதப் போக்கைக் கைவிடுக!  ஸ்பெயின் தொழிலாளர்கள் போர் முழக்கம்

புதிய அரசு பொறுப் பேற்ற பிறகு நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத் தம், ஸ்பெயின் ஆட்சியா ளர்களை மிரளச் செய்திருக் கிறது. கடந்த ஆண்டு நவம்பர் 20 அன்று ஸ்பெயின் நாடா ளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்று மரியானோ ரஜோய் தலைமையில் அமைச்சரவை பொறுப் பேற்றுக் கொண்டது. நாட் டின் நிதிப்பற்றாக்குறை யைக் குறைக்க ஏராளமான அளவில் மக்களின் சலுகை களை வெட்டுவதற்கான நட வடிக்கைகளை அரசு எடுத் திருக்கிறது. இது மக்கள், குறிப்பாகத் தொழிலாளர் கள் மத்தியில் பெரும் அதி ருப்தியை ஏற்படுத்திவிட்டது. தொழிலாளர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு வேலையை விட்டு நீக்கிக் கொள்ள புதிய சட்டம் அனுமதியளிக்கிறது. இது குறித்துக் கருத்து தெரிவித் துள்ள தொழிற்சங்கங்கள், இது வேலைவாய்ப்புகளை மறுப்பதோடு, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் பறிக்கும் வேலையைச் செய் கிறது. மேலும், பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கான இழப்பீட்டை பெருமள வுக்கு வெட்டியுள்ளனர் என்று கூறியுள்ளன. உள்துறை அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கையொன்றில், எட்டு லட்சம் தொழிலாளர் கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் போராட்டங்கள் விரைவில் துவங்கும் என் றும் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

பங்குனி 31, 2012

ஐ. நா. மனித உரிமை பேரவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையின் செயற்பாடுகளை ஜெனீவாவுக்கு வழங்க நாம் தயாரில்லை. தற்பொழுது நாட்டில் முன்னெடுக்கப்படும் செயற் பாடுகளில் எந்த மாற்றத்தையும் அரசாங்கம் ஏற்படுத்தப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நீதியை நிலைநாட்டு வதற்காக ஸ்தாபிக்கப்பட்டு ள்ள ஐ. நா. மனித உரிமை பேரவை தமது நோக்கங்களுக்கு அப்பால் சென்று அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன் வெளிநாடுகளும் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை கூறிவருவதாகவும் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார். (மேலும்.....)

பங்குனி 30, 2012

ஜெனீவா தீர்மானம் தொடர்பில்

அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு விரைவில்

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுவது தொடர்பில் அரசாங்கம் எதுவித முடிவும் எடுக்கவில்லை. இலங்கைக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையென வாக்களித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையில்லையென வாக்களித்ததன் மூலம் அதன் இரட்டை வேடம் தெளிவாவதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக் குழுவினூடாகவே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூறிய அமைச்சர், இதில் அங்கம் வகிப்பதினூ டாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்ட முடியும் எனவும் குறிப்பிட்டார். (மேலும்.....)

பங்குனி 30, 2012

லிபிய சபா நகரில் உக்கிர மோதல் : 70 பேர் பலி

இலங்கையிலும் இதனை பரீட்சித்துப்பார்க்க முயற்சி

லிபிய சபா நகரில் போராளிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 70 பேர் பலியாகியுள்ளதுடன் 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முன்னாள் கிளர்ச்சியாளர்களும் தோபோ துப்பாக்கிதாரிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்படி போராளிக் குழுக்களிடையே புதன்கிழமை மோதல்களை நிறுத்துவதற்கு இணக்கப்பாடு காணப்பட்ட போதும் பின்னர் மோதல் கிளர்ந்தெழுந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறைகளையடுத்து ஆளும் தேசிய அதிகார மாற்று சபையின் உள்ளூர் அதிகாரிகளில் ஒருவரான அப்டெல் மஜீத் செயிப் அல் நாஸர் பதவி விலகியுள்ளார். அமெரிக்க, மேறகுலக கூட்டாளிகள் எதனை விரும்பினார்களோ அதுவே தற்போது லிபியாவில் நடைபெறுகின்றது. ஆமாம் தீராத உள்நாட்டுக் கலவரத்தையே அவர்கள் விரும்பினார்கள், சோமாலியாவில் நேட்டோ கூட்டாளிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீராத உள்ள நாட்டுக்கலவரங்கள் ஆபிக்காவின் புரூண்டி, ருவண்டா போன்ற நாடுகளில் நடைபெறுவதைப் போலவே இன்று லிpயாவிலும் நடைபெறுகின்றது. இலங்கையிலும் இதனை பரீட்சித்துப்பார்க்கவே அமெரிக்க, மேற்குலகம் விரும்புகின்றது என்பதை தமிழ் குறம் தேசியவாதிகள் புரிந்து கொண்டால் சரி.சிரியாவில் நடைபெறுவதும் இதன் ஒருவடிவமே. கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத விநியோகத்தை அமெரிக்க கூட்டாளிகளே வழங்குகின்றனர்

பங்குனி 30, 2012

டாலரை கைவிட முடிவு

பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா-தென் ஆப்பிரிக்கா இணைந்து வளர்ச்சி வங்கி உருவாக்கவும் திட்டம்  ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு முக்கியப் பிரகடனம்

அமெரிக்காவில் மையங் கொண்ட முதலாளித்துவ பொருளா தார நெருக்கடி மேலும் மேலும் ஆழமாக தீவிரமடைந்துவரும் நிலையில், தங்களது பொருளாதா ரங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முகமாக தங்கள் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பரிவர்த்த னையில் டாலரை கைவிடுவது என ‘பிரிக்ஸ்’ நாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவி னை எட்டியிருக்கின்றன. உலகின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேரை கொண்டிருக் கிற பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்ட மைப்பான ‘பிரிக்ஸ்’ மேற்கொண் டுள்ள இந்த முடிவு உலக அரங் கில் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளது. (மேலும்.....)

பங்குனி 30, 2012

பால் வெளியில் மனிதர் வாழ பல பில்லியன் கிரகங்கள்

எமது பால்வெளியில் மனிதர்கள் வசிக்கத்தக்க பல பில்லியன் கிரகங்கள் இருப்பதாக சர்வதேச வானி யலாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறிந் துள்ளனர். பால்வெளியில் சிவப்பு குள்ள நட்சத்திரங்களை வலம் வரும் கிரகங்களை ஆய்வு செய்த ஐரோப்பிய வானியலாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இதன்படி எமது பால் வெளியிலுள்ள சிவப்பு குள்ள நட்சத்திரங்களை வலம்வரும் கிரகங்களில் 40 வீதமான வைகளில் நீருடன் கூடிய மனிதர் வாழ்வதற்கு பொருத்தமான கிரகங்கள் இருப்பதாக ஊகிப்பதாக ஐரோப்பிய வானியல் ஆய்வுக் குழுவின் தலைவர் எக்சாவிர் பொன்பில்ஸ் குறிப்பிட்டுள்ளார். பால்வெளியில் சிவப்பு குள்ள நட்சத்திரம் பொதுவாகக் காணப்படுகிறது. இவ்வாறான நட்சத்திரங்கள் 160 பில்லியன் அளவில் இருப்பதாக வானியலாளர்கள் ஊகித்துள்ளனர். எனவே இவைகளில் மனிதர்கள் வசிக்க பொருத்தமான பல பில்லியன் கிரகங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 100 க்கும் மேற்பட்ட சிவப்பு குள்ள நட்சத்திரங்கள் பூமியில் இருந்து 30 ஒளி ஆண்டுகளுக்குள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்குனி 30, 2012

ரி.பி.சி. வானொலியில் மனநோய் ஆய்வாலர்களின் அமெரிக்க பற்றிய அலட்டப்போவது யாரு நிகழ்சி.

இன்று ரி.பி.சி. வானொலியில்; ஆய்வு நடத்தும் ஆய்வாலர்களுக்கு மனநோய் வியாதி முத்திவிட்டதாக அறியக் கூடியதாக இருக்கின்றது. ஆகயால் இவர்களின் வியாதிக்கு அமெரிக்காவால் கூட மருத்துவம் செய்ய முடியாமல் இருப்பதாகவும் அமெரிக்கா மிகவும் அதிர்சி அடைந்துள்ளதாக அறிவித்ததாகவும் அறியகூடியதாக உள்ளது. எனவே நாங்கள் இனி இவர்கள் பற்றிய ஆய்வுக்கு வருவேம் இன்று ரி.பி.சி வானொலியின் இன்றைய நிலைமையை பார்க்கும்போது இவ் வானொலியை எத்தனை வீதமானவர்கள் இப்போது கேட்பார்கள் என்பது தான் சந்தேகம் என்பது எல்லோருக்கும் புரிகின்றது. (மேலும்.....)

பங்குனி 30, 2012

பூகோள அரசியல் கற்பனை கணிப்பீட்டுக்காக இலங்கைத் தமிழரை பணயம் வைக்க முடியாது

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது  ராஜபக்ஷ அரசாங்கத்தினதும் சிங்கள இன மேலாதிக்க வாதிகளினதும் நிலைப்பாட்டை இறுக்கமாக்கிய பெறுபேறை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை, நீதிக்கான இலங்கைத் தமிழர்களின் நீண்டகால விருப்பத்தை கற்பனை செய்யப்பட்ட பூகோள அரசியல் கணிப்பீடுகளுக்காக பணயம் வைக்க முடியாது. இவ்வாறு இந்தியா ருடே சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் விளையாட முயற்சிக்கும் பேராபத்துக்கள் எனும் தலைப்பில் எம்.சி.ராஜனின் கட்டுரையை நேற்று முன்தினம் புதன்கிழமை இந்தியா ருடே பிரசுரித்திருக்கிறது. (மேலும்.....)

பங்குனி 30, 2012

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான தீவில் அமெ. கடற்படைத் தளம்

அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா உளவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்கவுள்ளது. கடந்தாண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அவுஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளி டையே இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் அவுஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலை நிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கோக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. மேலும் இந்த கோக்கோஸ் தீவிலிருந்து நவீன உளவு விமானங்களை பறக்கவிடவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா பல வகையான ஆளில்லா உளவு விமானங்களை வடிவத்திலும் திறனிலும் தம் வசம் வைத்துள்ளது. இவை அனைத்தையும் கோக்கோஸ் தீவில் களமிறக்கினால் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதுமே அமெரிக்காவின் கண்காணிப்பில் தான் இருக்கும். இதன் மூலம் இந்தியா, சீனா ஆகிய இருநாட்டு கடற்படை செயற்பாடுகளை முழுவதுமாக அமெரிக்கா உளவு பார்க்கும்.

பங்குனி 30, 2012

நெருக்கடிக்கு ஜெர்மனி, பிரான்ஸ் காரணம்  இத்தாலி பிரதமர் குற்றச்சாட்டு

யூரோ மண்டலம் தற் போது சிக்கியுள்ள நெருக் கடி உருவானதற்கு ஜெர் மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும்தான் காரணம் என்று இத்தாலி யின் பிரதமர் மரியோ மான்டி குற்றம் சாட்டியுள் ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர், இது வரை யூரோ மண்டலத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு இந்த இரு நாடுகளும் மோச மான எடுத்துக்காட்டுகளா கவே இருந்துள்ளன. இரு நாடுகளுமே நிதிக் கொள் கைகளை கறாராக அமல் படுத்தியதில்லை. 2003 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பிரச்சனை இருந்து வரு கிறது. அப்போது யூரோ மண் டலம் குழந்தையாகவே இருந்தது. அரசு நிதிப்பற் றாக்குறை மற்றும் கடன்கள் பற்றி இந்த நாடுகள் கவ லைப்பட்டதே கிடையாது. மேலும் அலட்சியமாகவே இருந்து வந்தன. பல முறை பட்ஜெட் பற்றாக்குறை வரம்பை மீறியுள்ளன. ஆனால் ஒருமுறை இந்த இரு நாடுகளுக்கும் எச்சரிக் கை கூட விடுக்கப்பட வில்லை. (மேலும்.....)

பங்குனி 30, 2012

இராமர் பாலம் தேசிய சின்னமாகுமா? பதிலளிக்க அவகாசம் கோரும் மத்திய அரசு

இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்து விடலாமா என்று உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு 2 வாரம் கால அவகாசம் கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கடந்த திங்கட்கிழமை நீதிபதிகள் எச். எல். தத்து, அனில் ஆர். தவே ஆகியோர் மத்திய அரசுக்கு ஒரு கேள்வியை எழுப்பினர். ‘பழமையான இராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவித்து விடலாமா? இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசு துறைகளில் அறிவுரைகள் பெற்று தெரிவியுங்கள். அரசு பதில் அளிக்கத் தவறினால், அதன் கருத்து கேட்கப்படாமல் விசாரணை நடத்தப்படும்’ என்றனர். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

பங்குனி 29, 2012

வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இந்தியா இலங்கைக்கு இரகசிய அறிவுரை

இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை விரைந்து நடத்தி, அப்பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் நடைபெறுவதற்கான வழிவகையை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசு ஓரளவாவது விடுபட முடியும் என இந்தியா, இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் இராணுவ நெருக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி அடைவதற்கு முன்பு அங்கு தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அப்பகுதி நிர்வாகத்தை ஒப்படைப்பதால் தற்காலிகமாக மக்கள் இராணுவ நெருக்குதல்களில் இருந்து மீண்டும் நிம்மதியாக வாழ வழி ஏற்படும் என்று இலங்கைக்கு இந்தியா அறிவுரை கூறியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தை மறைமுகமாகவும் சூசகமாகவும் இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ள இந்திய அரசு, விரைவில் இது குறித்து பகிரங்க கோரிக்கை ஒன்றை வைக்கப்போவதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பங்குனி 29, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற இன ஐக்கிய சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்! - ஈழ மக்கள் ஐனநாயக கட்சி

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் வெல்லப்பட வேண்டுமேயானால் இனங்களுக்கிடையிலான நல்லுறவும் ஐக்கியமும் நிலவுகின்ற சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இன முரண்பாடுகளை வளர்ப்பதன் ஊடாக அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதே கடந்த கால அனுபவங்கள் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் மத்திய குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

பங்குனி 29, 2012

ராஜீவ் காந்தி கொலை

3 பேரின் தூக்குத் தண்டனை வழக்கு தள்ளி வைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், இவர்கள் கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். எனவே இதை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்து 3 பேரையும் தூக்கில் போட இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சட்டத்தரணி ரவீந்திரன் ஆஜராகி கொலை வழக்குகளில் தூக்குத் தண்டனை பெற்ற முல்லர், அசாமை சேர்ந்த பாஸ் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு ள்ளன. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதன் நிலைமையை பார்த்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 பேரின் தூக்குத் தண்டனை ரத்து வழக்கு வருகிற 30 ஆம் திகதிக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளி வைத்தனர். அமெரிக்காவின் புண்ணியத்தினால் சீமான், வைகோ வகையறாக்களினால் மறக்கப்பட்ட 'அப்பாவிகள்' இவர்கள்.

பங்குனி 29, 2012

மேற்குலக சூழ்ச்சிக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில்

 “இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட சில மேற்கு நாடுகள் மேற் கொண்டுள்ள சூழ்ச்சியை எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம். இத்தருணத்தில் நாட்டின் ஒருமைப்பாடு, இறைமை, தன்னாதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க நாட்டு மக்கள் சகலரும் கொண்டுள்ள ஒருமித்த கருத்து எமக்கு மேலும் பலத்தையும் தைரியத்தையும் தருகிறது” இவ்வாறு பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்திருக்கிறார். மிகவும் தீர்க்கமான ஒரு சூழ்நிலையில் நாம் தற்போது உள்ளோம். மேற்குலகம் எம்மீது இறுக்கமான நடவடிக்கையை மேற்கொள்ளப் பார்க்கிறது. நாம் தவறு இழைக்காமலேயே அவர்கள் எமக்கு எதிராக செயற்படுகின்றனர். ஆனால் இதன் பின்னணியில் மட்டும் ஒரு இரகசியம் இருப்பது தெளிவாகிறது. எனவே எமது தாய்நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு. இக்கட்டான இந்நேரத்தில் நாம் பொறுமைகாக்க வேண்டும். அனைத்து விடயங்களையும் விட நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதே நாட்டு மக்கள் அனைவர் மீதும் இன்றுள்ள முக்கிய பொறுப்பாகும். சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு எதிராக சகல அரசியல் கட்சிகளும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளமை முக்கிய அம்சமாகும். அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியை எதிர்கொள்ள நாம் தயாராகியுள்ளோம்.

பங்குனி 29, 2012

சிரியாவில் யுத்த நிறுத்தத்திற்கு ஜனாதிபதி அசாத் ஒப்புதல்

சிரியாவில் உடனடி யுத்த நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தனது ஆறு அம்ச பரிந்துரைகளுக்கு ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஒப்புதல் அளித்துள்ளதாக ஐ. நா. - அரபு லீக் சிறப்பு பிரதிநிதி கொபி அனான் தெரிவித்துள்ளார். அவரது இந்த திட்டத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது ஜனாதிபதி இராணுவத்தை ஏவிவிட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது. இந்தப் போராட்டம் இன்று வரை நீடிக்கிறது. இதற்கிடையில், சிரியாவில் அமைதியை நிலைநாட்ட ஐ. நா. வும், அரபு லீகும் தங்கள் சிறப்பு பிரதிநிதியாக, ஐ. நா. முன்னாள் பொதுச் செயலர் கொபி அனானை நியமித்து சிரியாவுக்கு அனுப்பின. ஆனால், அப்போதைய நிலையில் ஜனாதிபதி அவரது திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அனானின் பயணம் தோல்வியில் முடிந்தது. எனினும், இதுகுறித்து பேச்சு நடத்த ஐவர் குழுவை அனான் சிரியாவுக்கு அனுப்பி வைத்தார். அதில் ஓரளவு பலன் கிட்டியது. இந்நிலையில் இரு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் சீனத் தலைநகர் சென்றார் கொபி அனான். அங்கு, பிரதமர் வென் ஜியாபோவுடன் இது குறித்துப் பேசினார். (மேலும்....)

பங்குனி 29, 2012

1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி

இலங்கையில் 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிச் சிங்கள மொழிச்சட்டத்தால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இது தமிழருக்கு மட்டுமல்ல நாட்டுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. இதனால் ஆங்கில மொழியை இழந்தோம். சமூக நல்லிணக்கத்தை இழந்தோம். நிம்மதியை இழந்தோம். இந்தியா எம்மை விட வறுமையானது தான். வறுமை என்பது அங்கு சனத்தொகை கூடியதனால் மட்டும் தவிர அறிவியல் வறுமை அல்ல. ஆனால் எம்மைப் பொறுத்த மட்டில் சனத்தொகையும் இல்லை. அறிவியலும் இல்லை. அதற்குக் காரணம் 1956 ஆம் ஆண்டு சட்டமே.  (மேலும்....)

பங்குனி 29, 2012

சோசலிசப் பாதையில் மாற்றமில்லை-வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் உறுதி

வரும் ஆண்டுகளில் பொருளாதாரப் புரட்சியை நோக்கி வெனிசுலா நடைபோடும் என்று தற்போது கியூபாவில் சிகிச்சை பெற்று வரும் அந்நாட்டின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் கூறியுள்ளார். துணை அமைச்சர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கியூபா தலைநகர் ஹவானாவிலிருந்து வீடியோ மூலமாக அமைச்சர்களிடம் அவர் உரையாடினார். நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகக் கூடுதல் நிதியை அவர் ஒதுக்கித் தந்திருக்கிறார். இது பற்றி அந்த உரையாடலில் குறிப்பிட்ட சாவேஸ், நாட்டின் ஒட்டுமொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தொழில் மாதிரியை வெனிசுலாவில் உருவாக்குவோம். வரும் ஆண்டுகளில் பொருளாதாரப் புரட்சியை வெனிசுலாவில் நடத்திக் காட்டுவோம் என்று குறிப்பிட்டார். (மேலும்....)

பங்குனி 29, 2012

உறுதிமொழிகளை நிறைவேற்றாமையே இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கக் காரணம்

அமெரிக்க பிரேரணை மீது கணக்கீட்டு வாக்குப் பதிவு ஒன்றையே ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இந்தியா வழங்கியதாக இந்திய தேசியப் பாதுகாப்பு பேரவையின் செயலக இராணுவ ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை தான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை போரை வெற்றி கொண்ட போதும் அமைதியை இழக்க நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 21 ஆம் நூற்றாண்டின் "இந்திய தேசிய பாதுகாப்புச் சவால்கள்' என்ற தலைப்பில் சென்னையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முடிவில் கூட்டணி அரசியல் தாக்கம் இருந்தது என்று பலர் சொல்லலாம். ஆனால் இறுதியில் அது தேசிய நலனை நோக்காகக் கொண்டதாகவே அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கூறியவற்றை செய்யவில்லை. இலங்கை செய்தது போதுமாக இல்லை என்பதன் அடிப்படையிலேயே இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என இந்திய தேசிய பாதுகாப்புப் பேரவையின் செயலக இராணுவ ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் மேனன் குறிப்பிட்டுள்ளார். ___

பங்குனி 29, 2012

கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையை முறியடிப்போம்!  கம்யூனிஸ்ட் கட்சிகள் அறைகூவல்

கஜகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து ஜனநாயகக் குரல்களை ஒடுக்க முயற்சிக்கும் அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளை முறியடிப்போம் என்று பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. கஜகிஸ்தான் ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத மற்றும் கம்யூனிச விரோதத்தன்மை மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. கஜகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். கட்சியின் நடவடிக்கைகள் திட்டமிட்டு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியைப் பங்கேற்க விடாமல் செய்வதற்கே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். தற்போது, நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கவில்லை என்று கூறி நிரந்தரமாக அக்கட்சியைத் தடை செய்யப் போகிறார்கள். கம்யூனிஸ்ட் மற்றும் உழைப்பாளர்களின் கட்சிகள் இந்த ஜனநாயக விரோதச் செயலைக் கடுமையாகக் கண்டிக்கின்றன. தடை முயற்சி தடுக்கப்பட வேண்டும். கஜகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாங்கள் முழுமையாக ஆதரவு தருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ஆர்மீனியா, அஜெர்பைஜான், ஜார்ஜியா, மோல்டோவா, கிர்கிஸ்தான், அப்காசியா, தெற்கு ஓசெட்டியா, எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

பங்குனி 29, 2012

இஸ்ரேல் ஐ.நா மனித உரிமைப் பேரவை உறவைத் துண்டித்தது

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமை அமைப்புடனானஅனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரம் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அமெரிக்கா மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது. இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ___

பங்குனி 28, 2012

வலம்புரியின் முரண்நகை....?

தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம்

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்கு மாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும். (மேலும்...)

பங்குனி 28, 2012

யாழில் 9A பெற்ற கல்லூரிகள்

 

கடந்த டிசம்பரில் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் தமிழ்மொழி மூலம் 14 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 4 மாணவர்களும், யாழ். இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் 11 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 4 மாணவர்களும் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட (A தர) சித்தி பெற்றுள்ளனர். மேலும் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் ஒருவரும், ஆங்கில மொழி மூலம் ஒருவரும், கொக்குவில் இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் மூவரும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் மூவரும் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட (A தர) சித்தி பெற்றுள்ளனர். இதேவேளை வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் ஒருவருக்கு 8 Aயும், 1B யும், ஒருவருக்கு 4A யும், 3B யும், 1C யும், 3 பேருக்கு 3 Aயும், 3B யும், 3 Cயும் கிடைத்துள்ளன. _

 

பங்குனி 28, 2012

பங்குனி 28, 2012

India's UN 'yes' vote was a wrong move on Sri Lanka

(KANWAL SIBAL)

Many arguments can be made against our decision to vote against Sri Lanka in the Human Rights Council in Geneva, a decision highly questionable from the foreign policy point of view. Domestic compulsions seem to have outweighed foreign policy considerations in this case. India and the West have been at odds on how best to address the issue of human rights internationally. India shares the view that the West uses the issue to embarrass, destabilise or topple politically uncongenial governments. During the Cold War the Soviet Union was succesfully destabilised through the human rights basket of the Helsinki Accords. Cuba has been a favourite target year after year. (more...)

பங்குனி 28, 2012

அமெரிக்கா அப்பாவி மக்களை படுகொலை செய்கிறது அந்நாட்டு மனித உரிமை மேம்பாட்டாளர் கண்டனம்

அமெரிக்காவின் முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டா ளரான வண. ஜெசி ஜெக்ஸன் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இடம்பெற்ற பிறிதொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றி னார். இவர் அமெரிக்காவின் முன்னோடி மனித உரிமை மேம்பாட்டாளராக விளங்கி துப்பாக்கி குண்டுக்கு பலியான கறுப்பு இனத்தைச் சேர்ந்த மார்டின் லூதர் கிங்கின் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். ஜெனீவாவில் நடந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், லக்பிம நிவ்ஸ் ஆங்கில வார இதழின் ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க, அமெரிக்காவின் கறுப்பு இன மக்கள் ஆட்சியாளர்களினால் கொடு மைப்படுத்தப்படுகிறார்களா என்று கேட்ட கேள்விக்கு 'ஆம்' என்று கூறுவதற்கு பதில் 'நான் என்ன சொல்வது' என்று கூறினார். (மேலும்...)

பங்குனி 28, 2012

வடக்கு, கிழக்கு மீள் நிர்மாணத்துக்கு ரூ. 160 பில். செலவீடு

2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் நிர்மாண நடவடிக்கை களுக்காக 160 பில்லியன் ரூபாவை செலவிட்டிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சின் மேலதிக செயலாளர் நிஹால் சமரவீர, வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்கு விப்பதற்காக அரசாங்கம் 15 பில்லி யன் ரூபாவை செலவிட்டிருக்கிற தென்று கூறினார். கிழக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு 6 சதவீத பங்களிப்பை இப்போது வழங்கு கின்றது. இது வடமத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் பெற்றுக் கொடுக்கும் பங்களிப்பை விட கூடுதலாகும். வடமாகாணம் தேசிய பொரு ளாதாரத்திற்கு 3 சதவீத பங்களிப்பை வழங்குகின்றதென்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் பல்வேறு அமைச்சுகள் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங் களை நடைமுறைப்படுத்தி வருவதாக வும் அவர் கூறினார். தற்போது பல குறுகிய கால திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதுடன், நடுத்தர அளவிலான அபிவிருத்தி திட்டங்களும் இப்போது முடிவுபெறும் நிலையை எட்டியிருக்கின்றது.

பங்குனி 28, 2012

 

புனர்வாழ்வு பெற்ற 328 பேர் நாளை உறவினரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வு நிலையங்களில் தமது பயிற்சிகளை முடித்துக்கொண்ட முன் னாள் புலி உறுப்பினர்கள் 382 பேர் நாளை (29) தமது உறவினரிடம் ஒப்ப டைக்கப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் தெரிவித்தார். இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை காலை வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் அமைச்சரின் தலைமையில் நடை பெறவுள்ளது. இந்நிகழ்வுடன் ஒத்த தாக முன்னாள் புலி உறுப்பினர்களுக் கான புதிய கடன் திட்டமொன்று நாளையதினம் அறிமுகப்படுத்தி வைக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். உறவினரிடம் ஒப்படைக்கப்படவிருக்கும் 382 முன்னாள் புலி உறுப்பினர்களுள் 63 பேர் பெண்களாவர். (மேலும்...)

பங்குனி 28, 2012

லிபியாவில் கிளர்ச்சி வீரர்கள் மோதல், 20 பேர் பலி

முஅம்மர் கடாபி அரசுக்கு எதிராகப் போராடிய கிளர்ச்சிப்படை வீரர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லிபியாவின் நான்காவது மிகப்பெரிய நகரான சபாவிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கிளர்ச்சிப் படையிலும், டைபு பழங்குடி இனத்தவர்களுமே மோதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. சபா விமான நிலைப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது டைபு போராளிகள் ஒரு சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளனர். இதில் ஒரு விமானமும் தாக்கப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். லிபியாவில் ஆளும் இடைக்கால அரசு அந்நாட்டு அரச சொத்துக்களை பாதுகாப்பதில் தொடர்ந்தும் சிக்கலை எதிர்நோக்கி வரும் நிலையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. லிபியாவின் பல பகுதிகளிலும் கிளர்ச்சிப்படைவீரர்கள் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

பங்குனி 28, 2012

 

இந்திய மீனவர் அத்துமீறலுக்கு எதிர்ப்பு, வடமராட்சியில் நேற்று ஆர்ப்பாட்டம்

வடமராட்சிக் கடற் பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களைத் தடுக்கக் கோரி வடமராட்சிப் பகுதியில் நேற்று (22/03) 21 கடற்றொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை வடமராட்சி மீனவர் சங்கங்களின் சமாசத் தலைவர் இ. அருள்தாஸ் தலைமையிலான சுமார் 25 பேர் அடங்கிய மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளப் பிரதிப் பணிப்பாளர் எஸ். கணேசமூர்த்தியிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கான மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இந்த மகஜரின் பிரதிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடமும் கையளித்தனர். அந்த மகஜரில், கடந்த 30 வருட காலத்தில் யுத்தத்தினால் பெறுமதியான சொத்தழிவுகளை எதிர்கொண்ட வடமராட்சி மீனவர்கள் தற்பொழுது வங்கியில் கடன்பட்டு மீண்டும் கடற்றொழில் உபகரணங் களைக் கொள்வனவு செய்து தொழிலை ஆரம்பித்துள்ளனர். இந்தத் தொழில்களை அத்துமீறி இலங்கைக் கடற் பகுதியில் றோளர் தொழில் முறையில் மீன்பிடிக்கும் இந்தியர்கள் அதிகரித்து வருவதால் தமது மீனவர்கள் தொழிலை இழந்து வருவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது தொழிலையும் வளத்தினையும் இந்தியர்கள் சூறையாடுவதை இனியும் அனுமதிக்க முடியாது உடனடியாக தடுத்து நிறுத்த அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோசமிட்டமை குறிப்பிடத் தக்கது.

பங்குனி 28, 2012

மகாராஷ்டிராவில் நக்ஸல்கள் கண்ணிவெடி தாக்குதல், 15பேர் பலி

மகாராஷ்டிராவில் உள்ள புஷ்டோலா மாவட்டத்தில் நக்ஸ லைட்டுகள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் சி.ஆர். பி.எப். வீரர்கள் 15 பேர் பலியா கியுள்ளனர். சி.ஆர்.பி.எப். வீரர்கள் புஷ்டோலா விலிருந்து கட்டாவிற்கு செல்லும் வழியில் இந்த தாக்குதல் நடை பெற்றதாகவும், சம்பவ இடத்திலேயே 15 வீரர்கள் பலி யானதாகவும் மேலும் பலவீரர் கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இது குறித்து தகவலறிந்ததும் சி.ஆர்.பி.எப். தலைவர் கே. விஜயகுமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந் துள்ளார். கட்சிரோலியிருந்து நான்கு கிலோ மீற்றர் தொலை வில் கர்வபா-புல்போடி குட்டாசாலை யில் இப்படை வீரர்கள் செல்லும் போது இத்தாக்குதல் நடை பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சம்பவம் நடைபெற்ற இடத்தை பொலி ஸார் சுற்றி வளைத்துள்ளனர் எனவும், அப்பகுதியை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள் எனவும் நாக்பூர் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கண்ணிவெடித் தாக்குதலில் படுகாயமடைந்த சி.ஆர். பி.எப். வீரர்க ளின் நிலைமை கவலைக்கிடமாக இருப் பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. உடனடி மீட்பு பணிகளுக்காக மற் றொரு சி.ஆர்.பி.எப். படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இச்சம்பவம் குறித்த தகவல்களை திரட்டி வருவதாகவும் விரைவில் இது குறித்து சட்டசபையில் அறிக்கை தாக் கல் செய்வதாகவும் மகாராஷ்டிரா உள் துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டில் தெரிவித்துள்ளார்.

பங்குனி 28, 2012

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்

இலங்கைக் கான புதிய அமெரிக்கத் தூதுவராக அமெரிக்க சிரேஷ்ட இராஜதந்திரி யான மிசேல் சிஸன் (Michele J Sison)  நியமிக்கப்பட்டுள்ளதாக அமெ ரிக்க தூதரக வட்டாரங்கள் கூறின. இவரின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரேரித் துள்ளார். பாகிஸ்தான், இந்தியா, கெமரூன், மோகோ, ஹெய்ட்டி, ஐக்கிய அரபு இராச்சியம், உட்பட பல தூரகங்களில் இவர் பணியாற்றியுள்ளதோடு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதி உதவிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். லெபனானுக்கான அமெரிக்கத் தூதுவராகவும் இவர் சேவையாற்றியுள்ளார். இவர் 1984 முதல் இராஜதந்திர சேவையில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதியினால் சிபார்சு செய்யப்பட்டுள்ள இவருக்கு அமெரிக்க செனட் சபையின் அனுமதி வழங்கப்பட்ட பின் இலங்கைத் தூதுவராக பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார்.

பங்குனி 28, 2012

இந்தியாவிற்கு ரஷ்யா கண்டனம்! இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு ரஷ்யா கண்டனம்!

நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு, ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் இந்தியாவுக்கான தூதுவர் எலக்ஷேன்டர் எம். கடாகின் இதனைத் தெரிவித்துள்ளார். புதுடில்கியில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது கருத்து வெளியிட்ட அவர், நேரடியாக இந்தியாவை விமர்சிக்காத போதிலும், இந்தியா இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை அரசியல் ரீதியான நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என சுட்டிக்காட்டினார். இன்னொரு நாட்டின் சுயநிர்ணய உரிமையில் மற்றுமொரு நாடு தாக்கம் செலுத்துவதை ரஷ்யா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்குனி 28, 2012

இந்தியா உள்பட 12 நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை?.

ஈரான் பயங்கர அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டி, அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அந்நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதியை குறைத்து கொள்ள வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதனை இந்தியா நிராகரித்து விட்டது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 23 நாடுகளில், இறக்குமதியை குறைத்து கொள்ளாத இந்தியா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக இந்த நாடுகளுடன் பேச்சு நடைபெற்று வருவதாகவும், வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியுலேண்ட் நிருபர்களிடம் தெரிவித்தார். கோரிக்கையை ஏற்று ஈரானில் இருந்து இறக்குமதியை கணிசமாக குறைத்து கொண்ட ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மீது தடை இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

பங்குனி 27, 2012

 

இந்திய பிரதமரின் அறிக்கையால் ஜெனீவா நிலைமைகள் மாறின

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தபோதும் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் எதுவித விரிசலும் ஏற்படாது. இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பிரிஸ் தெரிவித்தார். மனித உரிமை பேரவை வாக்கெடுப்புக்கு முன்னர் இந்திய பிரதமர் வெளியிட்ட அறிக்கை வாக்கெடுப்பில் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அமைச்சர் கூறினார். இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக பலமான வரலாற்று ரீதியான இராஜதந்திர உறவு காணப்படுகிறது. ஜெனீவா விவகாரம் தொடர்பில் இந்திய லோக் சபாவில் இரண்டரை நாட்களாக பேசப்பட்டது. அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக இந்திய பிரதமர் அறிவித்தார். இதனால் இலங்கைக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் முடிவு எமக்கு பெரும் அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. (மேலும்....)

பங்குனி 27, 2012

புலிகளின் தாக்குதலிலேயே அன்டனோவ்-26 விழுந்து நொருங்கியது

பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸா ரினால் கிளிநொச்சியில் வைத்து அண்மையில் கைதுசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமே இந்தத் தகவல் தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். புலிகள் இயக்கத் தலைவர்களின் ஆலோசனைக்கு அமைய தாங்கள் இருவருமே வில்பத்து காட்டுப் பகுதியிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட தாக தமது வாக்குமூலத்தில் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். (மேலும்....)

பங்குனி 27, 2012

இலங்கைக்கு பயன்தரும் வகையில் இராஜதந்திர உறவில் மாற்றம்

ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம்

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்த நாடுகள் தொடர்பில் இலங்கையின் சர்வதேச கொள்கையில் மாற்றம் ஏற்படாது. ஆனால், இலங்கைக்கு முழுமையான பிரயோசனம் கிடைக்கக் கூடியவாறு இராஜதந்திர உறவில் மாற்றம் செய்யவும் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் அதிக முக்கியம் வழங்கவும் கவனம் செலுத்த உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் ஜெனீவா மாநாட்டுக்கு முன்னரே ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட முடிவின்படி இராஜ தந்திர உறவில் மாற்றம் செய்யப்படும். 1948 இன் பின்னர் முன்னுரிமை வழங்க வேண்டிய நாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. ஆபிரிக்கா கண்டத்தில் 4 தூதரகங்களே உள்ளன. பல ஆபிரிக்க நாடுகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. எனவே இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஆசியா கண்டத்தில் இந்தியா தவிர சகல நாடுகளும் எமக்கு ஆதரவு வழங்கின. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்கனவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் முக்கியத்துவம் வழங்க அவசியமில்லை. வேறு நாடுகளுக்கு முக்கியம் வழங்க வேண்டும். கட்டம் கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பங்குனி 27, 2012

தொண்டமான் இராஜினாமா?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான தொண்டமான் தனது அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையின் பணிப்பாளரை நியமிப்பது தொடர்பில் எழுந்த முரண்பாடே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. _

பங்குனி 27, 2012

பெஷாவரில் அமெ. எதிர்ப்பு பேரணி-அமெரிக்க - பாகிஸ்தான் மோதல் முற்றுகிறது

அமெரிக்க- பாகிஸ்தான் மோதல் முற்றி வருகிறது. பெஷாவர் நகரில் மாபெரும் அமெரிக்க எதிர்ப்பு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகா மிட்டு தலிபான் தீவிரவாதி களை ஒடுக்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பாகிஸ்தானில் இருந்து உணவு மற்றும் எரி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் வட மேற்கு பகுதியில், அமெரிக்க விமானப்படையின் குண்டு வீச்சில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டனர். இதற்கு பாகிஸ் தான் கடும் கண்டனம் தெரி வித்தது. மேலும் பாகிஸ் தானில் இருந்து ஆப் கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்துக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட பாதைகள் அனைத்தையும் பாகிஸ் தான் மூடிவிட்டது. பாகிஸ் தானின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை அதிர்ச்சி அடைய செய்தது. இதை யடுத்து அமெரிக்க அரசு பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்டது. என்றாலும் பாகிஸ்தானில் உள்ள அரசி யல் கட்சிகள் அமெரிக் காவை மன்னிக்க தயாராக இல்லை. இதனால் அமெரிக்க - பாகிஸ்தான் மோதல் முற்றி வருகிறது. (மேலும்....)

பங்குனி 27, 2012

Lobbyists, Guns and Money

(By PAUL KRUGMAN)

Florida’s now-infamous Stand Your Ground law, which lets you shoot someone you consider threatening without facing arrest, let alone prosecution, sounds crazy — and it is. And it’s tempting to dismiss this law as the work of ignorant yahoos. But similar laws have been pushed across the nation, not by ignorant yahoos but by big corporations. Specifically, language virtually identical to Florida’s law is featured in a template supplied to legislators in other states by the American Legislative Exchange Council, a corporate-backed organization that has managed to keep a low profile even as it exerts vast influence (only recently, thanks to yeoman work by the Center for Media and Democracy, has a clear picture of ALEC’s activities emerged). And if there is any silver lining to Trayvon Martin’s killing, it is that it might finally place a spotlight on what ALEC is doing to our society — and our democracy. (more...)

பங்குனி 27, 2012

 

தமிழ் கூட்டமைப்பின் இழுத்தடிப்பே அரசியல் தீர்வு தாமதத்திற்கு காரணம் - இலங்கை அரசு

அரசியல் தீர்வு தாமதமாவதற்கு அரசாங்கம் காரணமல்ல. பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தமது பிரதிநிதியை நியமிக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே காலங்கடத்துவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்ப தற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு வொன்றை அமைத்துள்ளோம். இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தராதுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதியை நியமிக்குமாறு அழைப்பு விடுத்தாலும் இதுவரை யாரும் நியமிக் கப்படவில்லை. அரசியல் தீர்வு தாமதமடைவதற்கு நாம் காரணமல்ல. தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதியை நியமிக்குமாறு கூறும்படி நாம் புலம்பெயர் அமைப்புகளிடமும் கூறினோம். ஜெனீவா வில் சக நாடுகளுக்கும் இது குறித்து அறிவூட்டினோம். பாராளுமன்றத் தெரிவுக் குழு 6 மாதங் களே செயற்படும். 6 மாதத்தில் அதன் அறிக்கை கையளிக்கப்பட வேண்டும். கடந்த கால முயற்சிகள் போன்று பாராளு மன்றத் தெரிவுக் குழுவுக்கு நீண்ட காலம் பிடிக்காது. இது தீர்வுக்கான சிறந்த அவகாசமாகும். 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது பற்றியும் தீர்வு யோசனை குறித்துப் பேசினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக் குழுவுக்கு தமது பிரதிநிதியை அனுப்பாது எவ்வாறு அரசாங்கத்தை குற்றஞ்சாட்ட முடியும்? என்றார். தீர்வு யோசனையை அமுல்படுத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் இதற்காக பாராளுமன்றத் தில் 2/3 பெரும்பான்மையாக யோசனை நிறைவேற்றப்படுவதோடு சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். எனவே இதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பதே ஒரே வழியாகும். இதனைத் தவிர வேறு மாற்றீடு கிடையாது என்றார்.

பங்குனி 27, 2012

சிரிய அமைதி முயற்சி

ரஷ்ய ஜனாதிபதி - கொபி அனான் சந்திப்பு

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஒன்றை தடுக்கும் கடைசி முயற்சியிலேயே கொபி அனான் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடெவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் அமைதி முயற்சியில் ஈடுபட்டிருக்கு ஐ.நா. மற்றும் அரபு லீக் விசேட பிரதிநிதி கொபி அனான் நேற்று முன்தினம் மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி மெட்வடெவ்வை சந்தித்து சிரிய விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் போதே மெட்வடெவ், அனானிடம் இந்த எச்சரிக்கையை விடுத்தார். ‘சிரியாவில் மோசமான சிவில் யுத்தம் ஒன்று ஏற்படுவதை தவிர்க்கும் கடைசி வாய்ப்பு இதுவாகும் என்று மெட்வடெவ் கூறியதாக ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சிரியாவில் மேற்கொள்ளப்படும் சமாதான நடவடிக்கைக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாக மெட்வடெல் கொபி அனானிடம் உறுதி அளித்துள்ளார். (மேலும்....)

பங்குனி 27, 2012

ஐரோப்பிய கண்டத்தின்  முதல் 10 பில்லினியர்கள்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மொத்த பணக்காரர்களில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் (பிரான்ஸ்) 41 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமானிசியோ ஒர்டெகா (ஸ்பெயின்) 37.5 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாமிடத்திலும், ஸ்டீபன் பெர்சான் (ஸ்வீடன்) 27 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். நான்காமிடத்தில் கார்ல் ஆல்ப்ரெசட் (ஜெர்மனி) 25.4 பில்லியன் டாலர், ஐந்தாமிடத்தில் லிலியான் பெட்டன் கோர்ட் (பிரான்ஸ்) 24 பில்லியன் டாலர், 6 வது இடத்தில் மைக்கேல் பெர்ராரோ மற்றும் குடும்பத்தினர் (இத்தாலி) 19 பில்லியன் டாலர், 7 வது இடத்தில் அலிசர் உஸ்மனோவ் (ரஷ்யா) 18.1 பில்லியன் டாலர், 8 வது இடத்தில் பெர்தால்ட் மற்றும் தியோ ஆல்ப்ரெசட் (ஜெர்மனி) 17.8 மில்லியன் டாலர், 9 வது இடத்தில் மைக்கேல் ஓட்டோ மற்றும் குடும்பத்தினர் (ஜெர்மனி) 17.6 பில்லியன் டாலர், 10வது இடத்தில் ரினாட் அக்மெதோவ் (உக்ரைன்) 16 பில்லியன் டாலர் என்ற வரிசையில் பில்லினியர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பங்குனி 27, 2012

ஜெனீவா தீர்மானம்

மக்கள் வீண் அச்சமடைய தேவையில்லை; பொருளாதார தடைகளும் விதிக்க முடியாது

எந்தவித வெளிநாட்டுத் தலையீட்டிற்கும் அரசாங்கம் தலைசாய்க்காது. எமது நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற என்ன தேவையோ அதனையே அரசாங்கம் முன்னெடுக்கும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எமது மக்களின் நலன்களுக்கேற்ற அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கைக்கு எதிராக எதுவித பொருளாதாரத் தடையும் விதிக்க முடியாது. இது குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவை யில்லை எனவும் இதனால் எமது பொருளாதாரம் பாதிக் கப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்....)

பங்குனி 27, 2012

தங்கள் யுத்தக் குற்றச்சாட்டுகளை மறைக்கும் அமெரிக்காவுக்கு இலங்கையை தண்டிப்பதற்கு அருகதை இல்லை

(எஸ். தில்லைநாதன்)

இந்நாட்டு மக்களை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்டு, அவர்களின் வாழ்க்கையை வளமாக்கி வரும் புனிதப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா வீராவேசத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கண்டனப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி இருக்கின்ற போதிலும் அமெரிக்கா அதைவிட படுமோசமான மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றச் செயல்களையும் புரிந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டுவதற்காக நியூஸ் வீக் என்ற சர்வதேச அமெரிக்க சஞ்சிகையில் மார்ச் மாதம் 27ம் திகதி வெளிவந்த ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பை இங்கு தருகின்றோம். (மேலும்....)

பங்குனி 26, 2012

அமெரிக்கப் பொறிக்குள் இலங்கை?

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு?

இலங்கை அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையை அமெரிக்கா உட்பட அதன் பின்னால் உள்ள சர்வதேச சமூகம் எவ்வாறு கையாளப் போகின்றன? என்பதைத் தீர்மானிக்கும் காலகட்டமாக இனிவரும் காலங்கள் அமையப் போகின்றன. இலங்கையைப் பொறுத்து அமெரிக்காவும் தமிழ்நாடுமே தமக்கு சாதகமான சூழ்நிலையை சுக்கு நூறாக்கின என்ற ஆதங்கத்தில் உள்ளது. அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் கடந்த வருடம் ஜூலை 20 ஆம் திகதி சென்னை சென்றிருந்தவேளையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்தார். அமெரிக்காவின் வர்த்தகம், முதலீடு தொடர்பானதாகவே ஹிலாரியின் சென்னை விஜயம் அமைந்திருந்ததாக கூறப்பட்டபோதும் அதற்குமப்பால் அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டு வந்த பிரேரணை தொடர்பாகவும் அவ்வேளையில் பேசப்பட்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. (மேலும்....)

பங்குனி 26, 2012

ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியும் இணைந்து செயற்படுவது குறித்த பேச்சுவார்த்தை?

ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியின் மட்டு.-அம்பாறை மாவட்ட தலைவர் இரா.துரைரெட்னத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை ஒருங்கிணைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இந்த சந்திப்பில் அக்கட்சியின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் கலந்துகொண்டார். இந்த சந்திப்புக் குறித்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார். அத்துடன் எதிர்காலத்தில் மக்களின் பொதுவான நலன் தொடர்பில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும் இதுவரையில் அது தொடர்பில் முடிவெதுவும் எட்டப்படவில்லையென அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்தும் பேசுவதற்கு தாங்கள் முடிவெடுத்துள்ளதா அவர் தெரிவித்தார். பாம்புக்கு(பிரேமசந்திரன்) பால் வார்க்கும் செயல்பாடு இது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்

பங்குனி 26, 2012

பங்குனி 26, 2012

அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு அடிபணியாதீர்!

(கி.இலக்குவன்)

எண்ணெய் வள நாடுகளில் எல்லாம் தனது கட்டளைப்படி இயங்கக்கூடிய ஆட்சிகளைத் திணிப்பதற்காக ஆட்சிமாற்றங்களைக் கொண்டுவருவதையே தனது அயலுறவுக் கொள்கையாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டுவருகிறது. ஆப்கானிஸ்தான், இராக், லிபியா என்று தொடரும் அதன் பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடு ஈரான். இந்த நாடு யுரேனியத்தை செறிவூட்டும் பணியைக் கைவிட மறுத்ததால் அதற்கு எதிரான கடுமையான வர்த்தகத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ளன. ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்று இந்தியாவின் மீது அமெரிக்கா வெளிப்படையான நிர்ப்பந்தங்களைக் கொண்டுவந்ததை அடுத்து மிகவும் இக்கட்டான சூழலில் இந்தியா வைக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

பங்குனி 26, 2012

இலங்கைக்கு இந்தியா ஆதரவளித்திருந்தால் முடிவு மாறியிருக்கும்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்திருந்தால் இறுதி முடிவு வித்தியாசமாக அமைந்திருக்கும் என அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எமது வெற்றிகரமான இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் ஜெனீவாவில் உள்ள பல்வேறு இராஜதந்திரிகள் எமக்கு வரவேற்பளித்தனர். எனினும், பலம்மிக்க நாடுகளின் அழுத்தம் காரணமாக எமக்கு முன்னர் ஆதரவளித்த நாடுகள் இறுதியில் ஆதரவு வழங்கவில்லையென்றும் அமைச்சர்கள் கூறினார்கள். (மேலும்....)

பங்குனி 26, 2012

பர்மாவும் புவி அரசியலும்

மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மா, மேற்குத் திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முதல், அந்நாட்டின் நாசகர உளவு ஸ்தாபனமான சிஐஏவின் இயக்குநர் டேவிட் பீட்ராஸ் வரை அமைச்சர்களும் அதிகாரிகளும் முன்னர் ரங்கூன் என அழைக்கப்பட்ட தலைநகர் யாங்கோனுக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களின் மூலமே ஜனநாய கத்தை மீண்டும் மலரச்செய்கிற ‘அற்புதத்தை’ நிகழ்த்திவிட அமெரிக்கா முயற்சித்துக்கொண்டிருக்கிறது. அதை மறு பேச்சின்றி, ஜனநாயகப் போராளி ஆங் சான் சூ கியும் ஏற்றுக்கொள்ளச் செய்யும் விதத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் ராணுவ பலத்தை பிரயோகித்து ஜனநாயகத்தை மலரச்செய்த அனுபவம், மியான்மரில் அமெரிக்கா வுக்கு உதவுகிறது போலும். (மேலும்....)

பங்குனி 26, 2012

முப்பது வருடங்களின் பின்னர்

துரித மேம்பாடு காணும் வட மாகாண வீதிகள்

வட பகுதியில் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக நிலவிவந்த யுத்தசூழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிரதான வீதிகள் உள்ளடங்கலாக உள்ளூர் வீதிகள் பலவும் செப்பனிடப்பட்டு வருகின்றன. வட பகுதியையும் நாட்டின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் பிரதான தரை வழிப்பாதையாகவிருக்கும் ஏ-9 வீதி புதிதாக புனரமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளின் உதவியுடன் மீள்புனரமைக்கப்பட்டு வரும் இந்த ஏ-9 வீதி முழுமையாகப் புனரமைக்கப்பட்டதும் குறைந்த நேர காலத்திற்குள் வட பகுதியை மக்கள் சென்றடைய முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், யாழ்ப்பாணத்தை இணைக்கும் மற்றுமொரு பிரதான வீதியான ஏ-32 வீதியின் அபிவிருத்திப் பணிகளும் நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன. குறிப்பாக ஏ-15 வீதியில் காணப்படும் சங்குப்பிட்டி பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் கம்பீராக காட்சியளிக்கிறது. (மேலும்....)

பங்குனி 26, 2012

வட, தென் கொரிய எல்லையை ஒபாமா பார்வை

இராணுவமயமாக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தென் கொரியாவின் வட கொரியாவுக்கான எல்லைப் பகுதிக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று பயணம் மேற்கொண்டார். தென் கொரியாவின் கண்காணிப்பு முகாமுக்கு சென்ற ஒபாமா அங்குள்ள அமெரிக்க வீரர்களை சந்தித்தார். ரொக்கெட் மூலம் செய்மதி அனுப்பவுள்ளதாக வடகொரியா அறிவித்து பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஒபாமா தென் கொரிய எல்லைப் பகுதிக்கு சென்றுள்ளார். தென் கொரியாவில் 50க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ள அணு சக்தி மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்கவே ஒபாமா தென்கொரியா சென்றுள்ளார். இதன்போது அவர் ஈரான், வடகொரியாவின் அணு செயற்பாடுகள் குறித்து சர்வதேச கவனத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒபாமா இந்த மாநாட்டிற்கு இடையில் சீன மற்றும் ரஷ்ய நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன்போது ஈரான், வட கொரியா விவகாரம் குறித்து கலந்துரையாடுவார் என நம்பப்படுகிறது. இன்று ஆரம்பமாகும் அணு சக்தி மாநாட்டில் குற்றவாளிகள் மற்றும் ஆயுதக் குழுக்களிடம் அணு ஆயுதம் செல்வதை தடுப்பது குறித்து சர்வதேச நாடுகள் கலந்துரையாடவுள்ளன. இந்த மாநாட்டில் வட கொரியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி 26, 2012

ஜெனீவா தீர்மானமும் எதிர்விளைவுகளும்

யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கையை இந்தியா வலியுறுத்தி நின்றது.
தமிழ் மக்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து சமூகத்தலைவர்களுக்கு இடையில் உண்மையான நேர்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான சில முன் நடவடிக்கைகளையே நாம் பேரவையில் முன்வைத்திருந்தோம் என இந்தியாவின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவானது இலங்கையின் அயல்நாடாக இருப்பதால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இறுக்கமான நட்பு பேணப்பட்டு வருகின்றது. அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஆத்மார்த்தமான கலாசார ரீதியான உறவு பேணப்பட்டு வருகிறது எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேலும்....)

பங்குனி 26, 2012

வட, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க நடவடிக்கை - கோதாபய ராஜபக்ஷ

வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கில் பொலிஸ் படையில் 1600 தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட இருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர்  கூறியுள்ளார். கடந்த வருடம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு, கிழக்கிற்கு வருகை தந்திருந்தனர். தமது குடும்பங்கள் உறவினர்களைப் பார்ப்பதற்கு அவர்கள் வந்திருந்தனர். கடந்த மாதம் மட்டும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தந்திருந்தனர். மோதலின் போது நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் மக்களில் பலர் இப்போது நாட்டில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேலேயே வருகை தருகின்றனர். (மேலும்....)

பங்குனி 26, 2012

சிங்களவர் அனுபவிக்கும் சகல உரிமைகளும் விரைவில் தமிழர்களுக்கும் கிடைக்கும் - மத்திய அமைச்சர் வாசன்

“இலங்கையில் சிங்களவர்கள் என்னென்ன சலுகைகள் அனுபவித்து வருகின்றார்களோ அத்தனை சலுகைகளையும் அங்குள்ள தமிழர்களும் விரைவில் அனுபவிப்பார்கள்’ என மத்திய அமைச்சர் வாசன் கூறினார். இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு கண்ணியத்துடனும் நிதானத்துடனும் செயற்பட்டு ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. முள் வேலியில் அடைபட்டுக் கொண்டிருப்பவர்களை விடுவிக்கும் நேரம் வந்து விட்டது. இலங்கையில் சிங்களவர்கள் என்னென்ன சலுகைள் அனுபவித்து வருகின்றார்களோ அத்தனை சலுகைகளையும் அங்குள்ள தமிழர்களும் விரைவில் அனுபவிப்பர்.மத்திய அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா மற்றும் வெளியுறவு செயலாளர், வெளியுறவுத் தூதரக அதிகாரிகள் மூலம் இலங்கை தமிழர்களின் நலன்கள் குறித்து கவனித்து வருகின்றோம். இலங்கை விடயத்தில் தொடர்ந்து இந்தியா கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையைத் தொடர்ந்து மத்திய அரசு அணுகி வருகின்றது.

பங்குனி 26, 2012

சாவேஸ் மீண்டும் கியூபா பயணம்  கதிர்வீச்சு சிகிச்சை தொடரும்

வெனிசுலா ஜனாதிபதி மீண்டும் கியூபா சென்றுள் ளார். சமீபத்தில் நடந்த புற் றுநோய் அறுவை சிகிச் சைக்குப் பின் தொடர வேண்டிய கதிர்வீச்சு சிகிச் சைக்காக அவர் கியூபா சென்றுள்ளார். மைகுவெட்டியா சர்வ தேச விமான நிலையத்தில் ஹவானா செல்லும் விமா னத்தில் வெனிசுலா நேரப் படி சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு அவர் புறப்பட் டார். ராணுவ மரியாதை யுடன் அவர் வழியனுப்பப் பட்டார். ஹவானா செல்வது குறித்து அவர் வெளியிட்ட செய்தி வெனிசுலா வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப் பப்பட்டது. ஞாயிறு முதல் ஹவானாவில் கதிர்வீச்சு சிகிச்சை பெறத் திட்டமிட் டுள்ளதாகவும், சிகிச்சை நான்கு அல்லது ஐந்து வாரங் கள் வரை நீடிக்கக் கூடும் என்றும் அவர் அச்செய்தி யில் குறிப்பிட்டுள்ளார்.
(மேலும்....)

பங்குனி 26, 2012

ஈழத்துக்கான படுகொலைகள் - சர்வதேசத்தின் தீர்மானம்.

- தேவன் (கனடா)

‘கூட்டமைப்பில் இருக்கும் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட தமது தலைவர்களுக்கே இரங்கல் கூட்டம், கண்டிப்பு தெரிவிக்காதவர்கள். பொறுப்பு கூறல்கள் பற்றி கதைப்பது வேடிக்கையாக இருக்கிறது. அத்துடன் போர் பற்றி சாட்சி சொல்ல முன்வராதவர்கள் இன்று அதைப்பற்றி கதைப்பது அபத்தமாக இருக்கிறது.

மேற்கு ஒரு விடையத்தை முக்கியமாக இலங்கை வரலாற்றில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். சந்திரிகா அதிபராக இருந்தபோது வட- கிழக்கு பிராந்திய சுயாட்சி அல்லது சம்ஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு பொதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது சந்திரிகாவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாததாலும் எதிர்கட்சிகள் இனவாதக் கட்சிகள், தமிழ் தரப்பில் கூட்டமைப்பு, புலிகள் இம் முயற்சிக்கு ஆதரவு வழங்காதாலும் தீர்வு பொதியை நாடாளுமன்றத்தில் தீயிட்டு எரித்ததாலும் தற்போதைய தீர்வான 13வது திருத்தச்சட்டத்துக்கு மேலாக அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டதற்கு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தமிழ் சமூகத்துக்கு பொறுப்பு கூறவேண்டும். அத்துடன் இத்தகைய ஒரு சிறப்பான தீர்வை புலிகளும் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் சதைகள் நீக்கப்பட்ட எலும்பு என நிராகரித்து யுத்தத்தையும் ஆரம்பித்து தமிழ் சமூகத்தை நந்திகடல் அழிவுவரை இழுத்துச் சென்றார்கள். இதற்கு யார் பொறுப்புக்கூறுவது? இலங்கையின் நீண்டகால அமைதியை சீர்குலைத்துவந்த புலிகளை மகிந்த அரசு வெற்றி கொண்டதன் பயனாக இலங்கை மக்கள் பெரும்பான்மை பலத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த பெரும்பான்மை அரசியல் அதிகாரத்தை மகிந்த அரசு இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கும், இனமுரண்பாட்டை தீர்ப்பதற்கும் பதிலாக ஜனாதிபதிற்கு மேலதிகமான அதிகாரத்தை ஏற்படுத்துவதிலும் தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அலட்சியப் போக்கை கடைப்பிடிப்பதாலும் மேற்குலக கழுகுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. மேற்குலகுக்கு இலங்கை மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அல்லது ஆக்கபூர்மாக செய்ய ஏதாவது நினைத்தால் ஐநா சபை மனித உரிமை கவுன்சிலின் ஊடாக மகிந்த அரசுக்கு நெருக்கடிகள் கொடுத்து ஸ்திரத்தன்மைiயையும் இனங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படுத்துபதற்குப் பதிலாக மகிந்த காலத்திலேயே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு தார்மீக ஆதரவு கொடுக்க வேண்டும். (மேலும்)

பங்குனி 25, 2012

இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்

ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தில், நடுநிலைத்தன்மையை உறுதி செய்ய இந்தியா பாடுபட்டதாக, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஒட்டளித்த நிலையில், அதிருப்தியில் இருக்கும் இலங்கையை சமாதானப்படுத்தும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஐ.நா., தீர்மானத்தின் போது, இலங்கை குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு இந்திய குழுவை தான் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். இதன்படி, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நடுநிலைத்தன்மையுடன் அமைய இந்தியா முயற்சி மேற்கொண்டாகவும் பிரதமர் கூறியுள்ளார். எனினும், இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அளிப்பதே பிரச்னைக்கான தீர்வு என்பதை குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் நேர்மையான, மதிப்புமிக்க, சமமான மற்றும் சுயமரியாதையுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்றும் ராஜபக்சேவை கேட்டுக்கொண்டார். (மேலும்.....)

பங்குனி 25, 2012

இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது

உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினமணி தனது ஆசிரியத் தலைங்கத்தில் தெரிவித்துள்ளது. (மேலும்.....)

பங்குனி 25, 2012

நீதி கேட்டு ஐ.நா.முன்றலில் திரண்ட தேசிய பற்றாளர்கள்! இலங்கை மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.

ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனிதவுரிமைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் இலங்கைக்கு ஆதரவு தர அணிதிரண்டு வருகைதந்து ஐ.நா முன்றலில் தேசிய பற்றாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்ட பேரணிக்கு தார்மீக ஆதரவினை வழங்கும் பொருட்டு ஐ.நா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல நிகழ்ச்சி நிரல்களுக்கு மத்தியிலும் நேரடியாகச் சென்று அவ்விடத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றியதுடன் தனதும், அரசாங்கத்தினதும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். அவருடைய வருகைதனை சற்றும் எதிர்பார்த்திராத மக்கள் அவரைக் கண்டதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றதுடன், அவருடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

பங்குனி 25, 2012

அச்சுறுத்தலுக்கு அடிபணிய போவதில்லை! - ஜனாதிபதி

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை எதிர்கொண்ட தோல்வி குறித்து, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவதாகவும், எனினும், எப்பொழுதும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அடிபணிய இடம்தரப் போவதில்லை எனவும்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். களுத்துறை மாவட்டத்தில் உள்ள பண்டாரகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (மேலும்.....)

பங்குனி 25, 2012

இலங்கை தமிழ் அகதி குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை - ஜெயலலிதா

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கி வாழும் இலங்கைத் தமிழர்கள் நலன்காக்க தமிழக முதல்-அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.அகதிகள் முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் எற்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,தமிழக  அரசால் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியப் பலன்களையும் இலங்கைத்  தமிழர்களுக்கு வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். (மேலும்.....)

பங்குனி 25, 2012

Hiroshima and Nagasaki  At 1945

Now  =+= wow!!!!

We all know that Hiroshima and Nagasaki were destroyed
in August 1945 after explosion of atom bomb.
However little we know about progress the people of that
land made during the past 62 years.
THE  COLOURFUL  CITY- ...
 

பங்குனி 25, 2012

அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா -  விஜயகாந்த்

அமெரிக்காவும், இந்தியாவை தன் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதி, திருத்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட அனுமதிக்ககூடாது என்றும், அந்நாட்டின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்தியா காரணம் கற்பித்துள்ளது. இறையாண்மை என்பதன் மூலம், தன் சொந்த மக்களை கொன்று குவிப்பதற்கு எந்த அரசையும் அனுமதிக்ககூடாது. அமெரிக்க தீர்மானம் நீர் மோர் என்றால், இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போக செய்துவிட்டது. இலங்கை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பட வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாக கருதுகிற அணுகுமுறையையே, இந்திய அரசு மேற்கொண்டது. தீர்மானத்தை திருத்தியதன் மூலம், தங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சலுகையை செய்துள்ளதாக, இலங்கை அதிகார வர்க்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. (மேலும்.....)

பங்குனி 25, 2012

வரலாற்றில் மிகப்பெரிய தவறாக அமையும்-அமெரிக்காவுக்கு காஸ்ட்ரோ எச்சரிக்கை 

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால் தனது வரலாற்றிலேயே அமெரிக்கா செய்யும் மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும் என்று கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு ஈரானைத் தாக்க அமெரிக்கா முடிவெடுத்தால், அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஈரானின் அணுசக்தி மையத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட குண்டுகளுக்காக கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்கா செலவழித்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, வரலாற்றிலேயே மிகப்பெரிய தவறை அமெரிக்கா செய்யத்தான் போகிறது. ஒரு குண்டைக்கூட பாய்ச்சாமல் ஈரான் ராணுவம் சரணடைந்துவிடும் என்று அமெரிக்கா நினைத்துக் கொண்டிருக்கிறது. அது தவறான எண்ணமாகும். (மேலும்.....)

பங்குனி 25, 2012

வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடித்த TNA !

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்வைக் கப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வர வேற்பதாக அறிவித்துள்ளது. தமிழ் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பானது பாதையில் கிடந்த வழித் தேங்காயை எடுத்து தெருவோரப் பிள்ளையாருக்கு அடித்த கதையாகவே உள்ளதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். உள்ளூரில் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள தமிழ் கூட்டமைப்பு அதனைக் களைவதற்கு கச்சிதமாக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டுமொரு தடவை தமிழ் மக்களை மடையர்களாக்க எண்ணியுள்ளதாகவும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். (மேலும்.....)

பங்குனி 25, 2012

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுத்த ஜனநாயகம்!

இலங்கைக்கு எதிராக போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுப் பிரேரணையை ஜெனீவாவில் முன்வைத்த அமெரிக்கா அதில் எதிர்பார்த்த வெற் றியைப் பெற முடியாது முதற் தடவையாக சர்வதேச அரங்கில் பாரிய தலைகுனி வைக் கண்டுள்ளது. உலக நாடுகளுக்கெல்லாம் தானே தலைவன் என்றும் எந்த நாட்டில் எது நடந்தாலும் அதனைக் கண்காணிப்பது மட்டுமல்லாது கட்டுப்படுத்தும் உரிமையும் தனக்குள்ளதாக மார்தட்டி வந்த அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக இருபத்து நான்கு நாடுகள் வாக்களித்திருந்தன எதிராக பதி னைந்து நாடுகள் வாக்களித்திருந்த நிலையில் எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. உண்மையில் இந்த எட்டு நாடுகளும் எதிர்காலத்தில் அமெரிக்காவின் நெருக்குதல்கள் தமக்கு ஏற்படலாம் எனக் கருதியே வாக்களிப்பில் கலந்துகொள்ள வில்லை. இல்லையேல் நிச்சயம் அந்நாடுகள் அனைத்தும் இலங்கைக்குச் சார்பாக வாக் களித்திருக்கும். (மேலும்.....)

பங்குனி 25, 2012

தனது இருப்பை தக்கவைக்க பிரபாகரனை துணைக்கு அழைக்கும் கலைஞர் கருணாநிதி

தன்னால் தான் இந்தியா ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டது எனக் கூறி தமிழகத்தில் தனக்கு வீழ்ச்சி கண்டிருந்த மக்கள் செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பவும், தனது குடும்பத்திற்கு எதிராக மத்திய அரசினால் தொடுக்கப்பட்டுள்ள நிதி மோசடி வழக்குகளைத் தள்ளுபடி செய்யவும் முன் னாள் முதல்வர் கருணாநிதி பகீரதப் பிரயத் தனம் செய்து வருகிறார். இதற்காக அவர் இப்போது மரணித்த பிரபாகரனையும் துணைக்கு அழைத்துள்ளார். தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டை தான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று தி. மு. க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். (மேலும்.....)

பங்குனி 25, 2012

துன்பங்களை இன்பங்களாக சுமந்து வாழும் எழுவை தீவு மக்கள்

வறுமையும் நேர்மையும் இம்மனிதர்களிடத்தில் இருப்பதை நான் உணர்கிறேன். பெண்களைக் கற்பழித்தல், கொள்ளையிடல், களவுகள் என்பன அவர்களிடையே இல்லை. இவை உருவாகக் காரணம் சமூகமொன்று சிக்கல்களுடன் ஒரு முகப்படுத்தப்படும்போது தான் என்று நான் நினைக்கிறேன். நாம் லேன்ட் மாஸ்டர் மூலம் எழுவை தீவின் பெரிய பாடசாலையான எழுவை தீவு முருகவேல் பாடசாலைக்குச் சென்றோம். உலக உணவு அமைப்பினால் கிடைத்த பருப்பு போன்றவை அந்த பாடசாலைகளின் முற்றங்களில் வெய்யிலில் காயவிடப்பட்டிருந்தன. சரியாக செருப்பு சப்பாத்து கூட இல்லாமல் சிறு பிள்ளைகள் அச்சந்தர்ப்பத்தில் பகல் போசனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சிறிய பலகையினாலான ஒரு பலகைக் கட்டொன்றில் உட்கார்ந்து இருந்த இந்த சின்னஞ் சிறுசுகள் எல்லோரினது முகங்களிலும் துக்கத்துடன் கூடிய போஷாக்கின்மையால் வாடுவதன் அறிகுறிகள் வரைந்திருப்பதாக நினைக்கிறேன். (மேலும்.....)

பங்குனி 24, 2012

அமெரிக்காவிற்கான எதிர்ப்பு இலங்கையில் வலுக்கின்றது

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியதால், இலங்கை கடும் கோபத்தில் உள்ளது. இதனால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும்படி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் புலிகளுடன் உச்ச கட்ட போர் நடந்த போது,மனித உரிமைகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் கடந்த 22ம் தேதி நிறைவேறியது. இதையடுத்து, அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பு உள்பட பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கொழும்பு ரயில் நிலையத்தில் நேற்று நடந்த போராட்டத்தின் போது, கோதுமை மாவு, கோக கோலா, பெப்சி போன்ற எந்த அமெரிக்க பொருளையும் பயன்படுத்த வேண்டாம். அமெரிக்க பொருட்களை ஒழிப்போம், புறக்கணிப்போம்Õ என்று கோஷமிட்டனர்.இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் குணதாசா அமரசேகரா கூறுகையில், அமெரிக்க பொருட்களை நாங்கள் புறக்கணிப்பதை பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான எண்ணத்தை இலங்கை மக்களிடம் அதிகரிப்போம் என்றார்.

பங்குனி 24, 2012

ஒரு புறம் இலங்கைக்கு எதிரான பிரேரணை மறு புறம் இலங்கைக்கு ஆயுத விற்பனை

அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகிறது,   இலங்கைக்கு ஆயுத விற்பனை  கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா

1980களில் இலங்கை அரசுக்கு விதிக்கப்பட்ட ஆயுதக் கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தற்போது திடீரென தளர்த்தியுள்ளது. ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு, இந்த ஆயுத விற்பனை கட்டுப்பாடுகள் தளர்த்தல் என்பது அமெரிக் காவின் இரட்டை வேடத் தை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த இரண்டுக் கும் இடையே எந்தவித மான தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளி யுறவுத்துறை விளக்கம் கூறிக்கொண்டிருக்கிறது. எல்டிடிஇக்கு எதிரான போரின் கடைசிக் கட் டத்தில் தமிழ் மக்கள் மீது நடந்த மனித உரிமை மீறல் கள் தொடர்பாக இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முக்கியமாக வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் வியாழ னன்று நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இலங் கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தடாலடியாக தளர்த்தியுள்ளது. வியாழக்கிழமை முதல் இந்த கட்டுப்பாடு தளர்வு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவுப்படி, இலகு ரக விமானங்கள், கண் காணிப்பு கேமராக்கள், அதுதொடர்பான பொருட் களை அமெரிக்காவி லிருந்து இலங்கை வாங்கிக் கொள்ள முடியுமாம். குறிப்பாக வான் மற்றும் கடல் மார்க்கமான கண் காணிப்புக்குத் தேவையான உபகரணங்களை இனி அமெரிக்காவிடமிருந்து இலங்கை பெற முடியும். இதனிடையே, இலங்கை அரசுடன் இணைந்து செயல் பட தயாராக இருக்கிறோம் என்றும், இலங்கையுடன் பேச ஆவலாக உள்ளோம் என்றும் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

பங்குனி 24, 2012

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது ஏன்?

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டளித்ததால் அமெரிக்கா பக்கம் சாய்ந்ததாக அர்த்தம் இல்லை . ஏனெனில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கையின் எதிர்கால நல்வாழ்வைச் சுட்டிக்காட்டும் வகையில் சில வாசகங்களை இந்தியா சேர்த்த செயல் அதற்கு ஆதாரம். ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இந்தியா மேற்கொண்ட நிலை இலங்கையை சற்று பாதித்திருக்கிறது. அதே சமயம், தமிழகத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆதரவாக இந்தியா இம்மாதிரி முடிவை எடுத்தது என்று பேசப்படுகிறது. தீர்மானம் கொண்டு வரப்படும் வரை, இந்தியா தனக்குத் தான் ஓட்டளிக்கும் என இலங்கை மிகவும் நம்பிக்கையுடன் கூறி வந்தது. (மேலும்....)

பங்குனி 24, 2012

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்தப்பட்டது அமெரிக்கா!

இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த உத்தரவிடும் தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள், பாலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும் இத்திட்டத்தின் மூலம் தங்களது பகுதியை ஆக்கிரமிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய நாடுகள் சார்பில் பாகிஸ்தான் முன்வைத்தது. கியூபா, வெனிஸுலா நார்வே, இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட 36 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இத்தாலி, ஸ்பெயின், உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக அதாவது தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது. இத்தகைய தீர்மானங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நிராகரித்துள்ளார். தங்களது பிரதேசத்தில் இத்தீர்மானம் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதும் இஸ்ரேலின் கருத்து.

பங்குனி 24, 2012

ஜ.நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை மக்கள் மத்தியில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என யாழ் அரச அதிபரிடம் ஆலேசனை பெற்ற கனடா நாட்டு பாரளுமனறக் குழு!

ஜ.நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்று யாழ் அரச அதிபரிடம் ஆலேசனை பெற்ற கனடா நாட்டு பாரளுமனறக் குழு இதுவரை காலமும் தீர்க்கப்படாத தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர். நேற்று யாழ்மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட கனடா நாட்டு பாரளுமன்ற உறுப்பினர்களான வோன் வைற், கிறிஸ் அலக்சான்டர் ஆகியோரைக் கொண்ட குழுவினர் யாழ் அசர அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை மாலை 5 மணியளவில் எக்ஸ் போ விடுதியில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டடுள்ளனர் இச் சந்திப்பின் போதே மேற்படி விடையம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. (மேலும்....)

பங்குனி 24, 2012

சகலரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வை விரைவில் முன்வைப்போம் - டி. யூ. குணசேகர

எமது நாட்டின் பிரச்சினைகளுக்கு எமக்கே உரித்தான தீர்வை சகல தரப்பினரும்ஏற்கும் வகையில்உரிய காலப் பகுதிக்குள் நாம் முன்வைப்போம். வெளிநாடுகள் முன்வைக்கும் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் தெரிவிக்கப்படும் முன்னேற்றமான கருத்துகளை நாம் ஏற்கத்தயார். சர்வதேச சமூகம் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கிறோம். உள்நாட்டு விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்க முடியாது. சில அயல் நாடுகளும் சம்பிரதாய நட்பு நாடுகளும் உள்ளக அழுத்தம் காரணமாக வேறு விதமாக முடிவு எடுத்தது குறித்து நாம் தெளிவாகவே உள்ளோம். ஆனால் எமது நாடுகளுக்கிடையிலான நீண்ட கால இராஜதந்திரி தொடர்புகள் இந்தப் பிரச்சினையால் குறையவோ வீழ்ச்சியடையவோ மாட்டாது. எக்காரணம் கொண்டும் எந்த நாட்டுக்கும் எமது நாட்டின் மீது அழுத்தம் மேற்கொள்ள இடமளிக்க மாட்டோம். எமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி கூறுவதோடு வாக்களிப்பில் இருந்து தவிர்த்த நாடுகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்த போதும் 23 நாடுகள் இதனை எதிர்த்தன. எனவே, ஒரு மேலதிக வாக்காலேயே இந்த பிரேரணை நிறைவேறியது. (மேலும்....)

பங்குனி 24, 2012

முடிவல்ல... துவக்கம் தான்

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர் மானம் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் ஆதர வுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட் டார்கள் என்றும், மருத்துவமனை, செஞ்சிலுவை சங்க மையங்கள் போன்றவை கூட ராணுவத் தினரின் தாக்குதலிலிருந்து தப்பவில்லை என்றும் ஐ.நா. சபை நியமித்த குழு கூறியது. எஞ்சியுள்ள மக்களுக்கு அளிக்கவேண்டிய நிவாரணம் குறித்த சில பரிந்துரைகளையும் அந்தக்குழு வழங்கியது. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு முயற்சி யையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. (மேலும்....)

பங்குனி 24, 2012

எமது காதலின் பரிசு என்றும் எம்முடன்

பங்குனி 24, 2012

மாவை சேனாதிராஜாவிற்கு விசா வழங்குவதற்கு கனடிய தூதரகம் இழுத்தடிப்பு!

கடந்த ஆண்டு நவம்பரில் கனடா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான திரு மாவை சேனாதிராஜாவிற்கு விசா வழங்குவதற்கு கனடியத் தூதரகம் பின்னடித்துள்ளது. இந்தக் குழுவினர் உத்தியோகபூர்வமாக வருகை தந்திருந்ததன் பிற்பாடு பாரளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் கனடியத் தமிழ்க்காங்கிரஸின் பொங்கல் விழாவிற்கான சிறப்பு விருந்தினராக கனடா செல்வதற்கு கனடியத் தூதரகம் விசா வழங்கியிருந்தது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இடம்பெற்ற பத்திரிகையொன்றின் நிகழ்விற்கு செல்வதற்காக சில வாரங்களிற்கு முன்னர் திரு. மாவை சேனாதிராஜா விசாவிற்கு விண்ணப்பித்திருந்த போதும். கனடாவிலிருந்து பதில் வரவில்லை என்ற காரணம் கூறி விசா விண்ணப்பம் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாரமும் கனடாத் தூதரகத்திற்கு மாவை சேனாதிராஜா சென்றிருந்த போதும் அவருக்கு அதே காரணம் கூறப்பட்டதையடுத்து தான் கலந்து கொள்ள வேண்டிய விழா முடிவடைந்து விட்டது எனக் காரணம் கூறி அவர் தனது கடவுச்சீட்டை தூதரகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார். சுமார் நான்கு மாதங்களிற்கு முன்னர் கனடாவிற்கு சென்றிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் கனடா செல்வதற்கு வெளிநாட்டலுவல்கள் பணியகம் கனடாவிலிருந்து பதில் வரவில்லை என்று கூறியது வியப்பிற்குரியதாக நோக்கப்படுகிறது.

பங்குனி 24, 2012

இலங்கை வானொலிக் குயிலின் ஓசை நிரந்தரமாகவே நின்று போனது!

இலங்கையின் 'வானொலிக் குயில்' என அழைக்கப்பட்ட புலமை வாய்ந்த வானொலி அறிவிப்பாளர் ராஜேஷ்வரி சண்முகம் இயற்கை எய்தினார். தனது பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று மீண்டும் கொழும்புக்கு புறப்பட்ட வேளை மாரடைப்பால் அவர் காலமானார். கொழும்பில் வாழ்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை காலமான அவர் இறக்கும்போது 72 வயதை அடைந்திருந்தார். இன்று உலகமெங்கும் கொடிகட்டிப் பறக்கும் பல மூத்த மற்றும் இளைய அறிவிப்பாளர்களை உருவாக்கிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவையில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். 1980களுக்கு முன்னரே அறிவிப்புத் துறையில் கால் பதித்த ராஜேஸ்வரி என்ற வானொலிக் குயில் அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், வானொலி நாடகங்களின் சிறந்த பாத்திரகர்த்தாவாகவும் தனது பல்துறை சார் திறமைகளை வெளிப்படுத்தியவர்

பங்குனி 24, 2012

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த 14ம் திகதி அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.

உண்மையைக் கூறுவது மற்றும்  தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இலங்கை அரசாஙகத்துக்கு தீவிரப் பிரச்சனைகள் உள்ளன. 2011  செப்டெம்பர் 12ஆம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் (ஐநாமஉபே) 18  ஆவது கூட்டத்தொடரில் அமைச்சர் மகிந்தா சமரசிங்கா ஆற்றிய உரையை அடுத்து, அந்த உரையின் தவறுகளைத் திருத்தியும்;; 'இலங்கையின் நிலவரத்தை அனைத்துலகச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும்போது  நேர்மையாகவும் உண்மையாகவும';  இருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியும் அதற்கடுத்த நாளே தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஓர் அறிக்கையை வெளியிட்டது. துரதிஸ்டவசமாக, தற்போது நடைபெறும் ஐநாமஉபே இன்  19ஆம் கூட்டத்தொடரிலும் அரசாங்கம் அனைத்துலகச் சமூகத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது. (மேலும்....)

பங்குனி 24, 2012

தியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம்

புரட்சி உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம் , துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது". - பகத்சிங்

மார்ச் 23 தியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம் 25 .03 .2012 ( ஞாயிறு ) , மாலை 6 மணியளவில் சமயநல்லூர், தொலைபேசி நிலையம் அருகில் (மேலும்....)

பங்குனி 24, 2012

சவுதி அரேபியா, குவைத், கட்டார், பிலிப்பைன்ஸ் போன்ற

அமெரிக்காவின் மிக நெருங்கிய தோழமை நாடுகள் கூட இலங்கைக்கு ஆதரவு

இலங்கையில் வாழும் ஒன்று இரண்டு அல்ல இருபது மில்லியன் மக்கள் அதுவும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மூன்று இனங்களையும் சேர்ந்த பெளத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்ற நான்கு மதத்தவர்களதும் குரலை சிறிதளவேனும் கவனத்தில் எடுப்பதற்கு அமெரிக்கா தவறிவிட்டது. நீண்டகால வரலாற்று பெருமைக்குச் சொந்தமான தேசத்தின் குரலைக் கூட மதிக்காத இவர்கள் தான் மனித உரிமைகளினதும், ஜன நாயகத்தினதும் காவலர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19 வது மாநாட்டில், தாம் சமர்ப்பித்திருக்கின்ற பிரேரணைக்கு ஏன் இல ங்கை மாதாவே ஆட் சேபனை, தெரிவிக்கின்றது என்று ஒரு தரம் அமெரிக்கா நின்று நிதானித்து பார்த் திருக்கலாம். ஆனால் அதனை அமெ ரிக்கா செய்யவில்லை. அதற்கு அதன் அதிகார மமதையும், ஏகாதிபத்திய சிந்தனையும், எண்ணமுமே காரணமேயொழிய மனிதாபிமான பார்வை அல்ல. இலங்கையரின் எதிர்ப் பையும், ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல் இப்பிரேரணையை அமெரிக்கா தூக்கிப் பிடித்து நிறைவேற்றி இருக்கின்றது. (மேலும்....)

பங்குனி 24, 2012

உலகின் மிகப் பெரிய அணுமின் உற்பத்தி மையமாக கூடங்குளம் உருவாகும்

கூடங்குளம் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய அணுமின் உற்பத்தி மையமாக உலகில் அடையாளம் காட்டப்படும் என்று முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அப்துல் கலாம் வெளியிட்டுள்ள அறிக்கை, மின் தேவையில் இந்தியா தன்னிறைவு அடைய, அணு மின் உற்பத்தி தேவை என்று உணர, கூடங்குளம் சம்பவம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அணு மின் உற்பத்தி செய்யப் படும் முறை, அணு மின் நிலையங்களின் நம்பகத் தன்மை, அவற்றின் பாதுகாப்பு மட்டு மின்றி, 2030க்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவடைய அணு மின் சக்தி எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்ந்து கொள்ள இந்த அனுபவம் உதவியுள்ளது. இது தொடர்பாக எழுந்த விவாதங்கள், பொது மக்களின் மனதைத் தூண்டிவிட்டு, அணு மின் சக்தியின் மூன்று கட்டச் செயல்பாடு களையும், நிலையான எதிர்காலத்துக்கு அது தேவை என்பதையும் புரிந்து கொள்ள வைத்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில், கூடங்குளத்தை மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக உலகுக்கு அடையாளம் காட்ட இந்த அணு மின் திட்டம் பயன்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பங்குனி 24, 2012

உள் விவகாரங்களில் தலையீடு செய்ய சர்வதேசம் பிரேரணையை பயன்படுத்தலாகாது

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டுக்கு கொண்டு வந்த இப்பிரேரணையானது காண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் வீசும் செயலை ஒத்ததேயன்றி வேறில்லை. இதனை எவரும் மறுக்க மாட்டார்கள். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், பலஸ்தீனிலும் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவோ அவர்களது கூட்டாளிகளோ கண்டு கொள்கிறார்களுமில்லை அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கின்றார்களுமில்லை. அவை குறித்து பேசவே அவர்கள் தயாரில்லை. இப்படியானவர்கள்தான் எம்மை நோக்கி சுட்டு விரலை நீட்டுகின்றார்கள். எமக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தமது ஏனைய நான்கு விரல் களும் தம்மையே அடையாளம் காட்டுகின்றன என்பதை மறந்துவிடுகின்றார்கள். அதனால்தான் அடுத்தவரை குற்றம் சாட்ட முன்னர் அதற்குரிய தகுதி எம்மிடம் இருக்கிறதா என்பதை முதலில் பரிசீலித்துக் கொள்வது மிக அவசியம் என வலியுறு த்தப்படுகின்றது. (மேலும்....)

பங்குனி 24, 2012

மாலியில் ராணுவக்கலகம்

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள குட்டி நாடான மாலியில் ராணுவக் கலகம் நடத்தி, ஜனாதிபதி மாளிகை கைப் பற்றப்பட்டுள்ளது. ஆயுதமுனையில் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடு முழுவதிலும் ராணுவம் அவசர நிலையை பிரகட னம் செய்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவ தற்கு தடைவிதிக்கப்பட் டுள்ளது. இச்சம்பவம் ஆப் பிரிக்க நாடுகளில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதமேந்தி 20 ராணுவ வீரர்கள் ஜனாதிபதி மாளி கையில் முக்கிய ஆலோச னை நடத்தும் காட்சியை மாலி தேசிய தொலைக் காட்சி ஒளிபரப்பியது. முன்னதாக ஜனாதிபதி மாளிகை முன்பு அரசு ஆதர வாளர்களுக்கும் ராணுவத் தின் ஒரு பிரிவினருக்கும் இடையே கடும் துப்பாக்கி மோதல் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜனாதிபதி யாக உள்ள அமதவ் டூரே, 2002ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர். அடுத்த மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நாட்டின் முக்கிய இனக்குழுவான தவ்ரக் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு தனிநாடு கோரி மோதல் நடந்து வரும் நிலையில், ராணுவக்கலகம் நடந்துள்ளது.

பங்குனி 23, 2012

இந்தியாவின் மனமாற்றம்?

(பரம் ஜி)

ஜ.நாவில் சிறீலங்காவின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு தாம் ஆதரவாக வாக்களிக்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளதானது, மக்கள் சக்த்தியே மகேசன் சக்தி என்பதனை, ஆயுத சக்தியை நம்பும் அல்லது விரும்பும் மனிதர்களுக்கு மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி இருக்கின்றது எனலாம். மதில்மேல் பூனையாக இதுவரை காலமும் இருந்து வந்த இந்தியா எந்தப்பக்கம் பாயும் என்பது கோள்விக்குறியாக சென்ற வாரம் வரை இருந்ததனால், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எத்தனை நாடுகள் ஆதரவு கொடுத்தாலென்ன, எத்தனை நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலென்ன, அதாவது சிறீலங்காவிற்கு ஆதரவு தெரிவித்தாலென்ன, உலக நாடுகள் பார்த்து கொண்டிருப்பது இந்தியா என்ன செய்யப்போகின்றது என்பதையே பிரதமர் மன்மோகன்சிங் இப்போது தந்து இருப்பதானது ஜ.நாவில் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் பற்றிய தீர்மான நிலைமைகளை சூடேற்றி வைத்துள்ளது எனலாம். இந்தியாவிடம் இந்த மனமாற்றத்தை கொண்டு வரவைப்பதற்கு பல விடயங்கள் காரணமாக இருந்திருப்பதாவே எண்ணத்தோன்றகின்றது.(மேலும்....)

பங்குனி 23, 2012

இந்தியாவின் நிலைப்பாட்டின் மூலம் இரு தரப்பு உறவுக்கு பாதிப்பில்லை

ஜெனீவா விவகாரம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டின் மூலம் இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவுகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என்று தகவல், ஊடகத்துறை பதில் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளரு மான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள உள்ளூர் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை மிகவும் புரிந்துணர்வுடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜெனீவா விவகாரத்தை வைத்து சிலர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்ற போதிலும் இரு நாடுகளும் புரிந்துணர்வுகளுடன் செயற்படுகின்றன. மேலும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. நாங்களாக இருந்தாலும் சரி, அல்லது எந்தவொரு நாடாக இருந்தாலும் தமது ஆட்சியை பாதுகாத்துக் கொண்டே ஏனைய நாட்டும் உதவி செய்ய முன்வரும் என்றார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் பலம் வாய்ந்தது. எமது பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடுகளில் ஒன்று அந்த அடிப்படையில் இந்தியாவின் உதவி எமக்கு எப்போதும் தேவைப் படுகின்றது. அவர்கள் தங்களது உள்நாட்டு நிலைமையை கருத்திற் கொண்டு எந்த ஒரு தீர்மானங்களை எடுத்தாலும் பரவாயில்லை, அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்பது எமது பொறுப்பாகும். எனவே எதிர்காலத்திலும் இந்தியாவின் உதவி, ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் என்றார்.

பங்குனி 23, 2012

UN to probe West Bank settlements

Netanyahu slams UN Human Rights Council as “hypocritical” after the passage of 5 resolutions condemning Israel

( ILAN BEN ZION and RAPHAEL AHREN)

UN Human Rights Council passed five resolutions against Israel on Thursday, including one resolution calling for a UN investigation into Israeli settlements, triggering fierce reactions from Israeli and American diplomats. Thirty-six countries voted in favor of the resolution condemning Israel’s settlement policy and calling on Israel ”to reverse the settlement policy in the occupied territories,” as a first step towards dismantling all of the Jewish communities in the West Bank, East Jerusalem, and Golan Heights. The resolution also called upon the Israeli government to adopt stricter measures against settlers, including the “confiscation of arms and enforcement of criminal sanctions,” in order to protect Palestinians. (more....)

பங்குனி 23, 2012

ஜெனீவா தீர்மானம் இலங்கைக்கு இராஜதந்திர வெற்றி

அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணை வெற்றி பெற்றிருப்பது என்பது பெரும் ஆச்சர்யத்திற்குரியதல்ல. 47 நாடுகள் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 24 நாடுகள் பிரேரணையை ஆதரித்திருக்கின்றன. 15 நாடுகள் பிரேரணையை நேரடியாக எதிர்த்து வாக்களித்திருக் கின்றன. அதாவது இலங்கையை நேரடியாக ஆதரித்திருக்கின்றன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்காவின் நேரடி அச்சுறுத்தலினாலேயே இந்த 8 நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளன என்றாலும் இந்த நாடுகள் அனைத்தும் இலங்கைக்குச் சார்பான கருத்துக்களை கூறிவிட்டே வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கின. ஜோர்தான், மலேசியா, செனகல், அங்கோலா, தர்கிஸ்தான் உட்பட 8 நாடுகளுமே இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி களை வெளிப்படையாகவே பாராட்டியுள்ளன. அமெரிக்காவின் அச்சுறுத்தல் இல்லாமல் இவைகளும் வாக்களித்திருந்தால் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் சமபலம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகி யிருக்கும். (மேலும்....)

பங்குனி 23, 2012

ஐ.நா.மனித உரிமை பேரவை

இந்தியாவின் முடிவுக்கு ப. சிதம்பரமே காரணம்

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களித்தமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் இந்திய மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் என்று நம்பகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டின் சிவகங்கை தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு ப.சிதம்பரம் தெரிவானார். இந்தத் தேர்தலில் ப. சிதம்பரம் மிகவும் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியீட்டினார். இந்தத் தடவையும் தனக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியே, தமிழ் நாட்டு மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கு எதிராக இவ்விதம் செயற் பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கொண்டுவந்த அழுத்தங்கள் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பிரேரணையை இந்தியா ஆதரித்து வாக்களித்தால் தமிழ் நாட்டில் உள்ள தி.மு.க. எம்.பிக்களும் வேறு தமிழ் ஆதரவு எம்பிக்களும் பாராளுமன்றத்தில் தற்போது விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பர் என்று சிதம்பரம் தெரிவித்த கருத்தை அடுத்தே இந்திய மத்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

பங்குனி 23, 2012

அமெரிக்கா வென்றது

அதிகாரம் நீதியை தோற்கடித்தது

உலக வல்லரசு என்ற போர்வையில் அமெரிக்கா தனது அதிகாரத்தை சிறு சிறு நாடுகள் மீது பிரயோகித்ததால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் அழுத்தங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் ரஷ்யா, சீனா, கியூபா, பங்களாதேசம், மாலைதீவு கொங்கோ, ஈக்குவடோர், இந்தோனேசியா, குவைத், மொரிட்டானியா, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா ஆகிய 15 நாடுகளும் இப்பிரேரணைக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவளித்து வாக்களித்தன. இந்த நாடுகள் இப்பிரேரணையை முழுமையாக நிராகரித்தன. இதேநேரம் அங்கோலா, பொட்சுவானா, புர்கினா பாகோ, ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல், டிஜிபோட்டி ஆகிய எட்டு (08) நாடுகளும் இப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இப்பிரேரணைக்கு ஆதரவாக அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, நோர்வே, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, ஒஸ்ரியா, பெல்ஜியம், பெனின், கெமரூன், சிலி, கொஸ்டாரிக்கா, கெளத்தமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஸியஸ், மெக்ஸிகோ, நைஜீரியா, பேரு, போலந்து, மோல்டோவா, ருமேனியா, ஸ்பெயின், உருகுவே ஆகிய 24 நாடுகளுமே வாக்களித்தன. (மேலும்....)
 

பங்குனி 23, 2012

ஆண் வழுக்கைக்கு காரணி கண்டு பிடிப்பு

ஆண்களுக்கு வழுக்கை விழுவதற்கான உயிரியல் காரணிகளை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் வழுக்கை விழுவதை தடுக்க அல்லது புதிதாக முடியை வளரச் செய்ய சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு முடி இழப்பதற்கான காரணி பற்றி எலிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முடி இழப்பை தூண்டும் புரதம் ஒன்றே ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட காரணம் என அனு மானிக்க ப்பட்டுள்ளது. இதற்கு பகரமாக சிகிச்சை அளிக்க முடியும் என ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். நடுத்தர வயதை எட்டும் போது பெரும்பாலான ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட ஆரம்பிக்கிறது. இதற்கு ஆண்களின் மரபணு காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பங்குனி 22, 2012

ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மான சுருக்கம்!

அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முன்வரைவு, 2012 மார்ச் 7 ஆம் திகதி, ஐநா மனித உரிமைச் சபையின் 47 உறுப்புநாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் முன்வரைபு இவ்வாறு அமைந்திருந்தது  (மேலும்....)

பங்குனி 22, 2012

இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐநா பேரவையில் வெற்றி : ஆதரவாக 24 நாடுகள், எதிராக 15 நாடுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சற்று முன்னர் சம்ர்ப்பித்த பிரேரணை வெற்றியளித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாக்களிப்பின் போது அமெரிக்காவுக்கு ஆதரவாக 24 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்திருந்தன. இலங்கை தொடர்பில் அமெரிக்கா மிதமான சமச்சீரான பிரேரணை ஒன்றையே ஐநா மனித உரிமை பேரவையில் முன்வைத்ததெனவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே பிரேரணையின் நோக்கம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கைக்கு 3 வருட கால அவகாசம் இருந்ததாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. பிரேரணை நிறைவேறுவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் அமைதி, சமாதானம் என்பவற்றை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரேரணை குறித்த விவாதத்தின்போது சபையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க, மொகான் பீரிஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இலங்கை தரப்பு வாதங்களை முன் வைத்து விசேட தூதுவர் மகிந்த சமரசிங்க உரையாறியிருந்தார். அமெரிக்காவின் பிரேரணை 9 அதிகப்படியான வாக்குளால் நிறைவேறியது.  இப்பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா உட்பட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஷ்யா உட்பட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

பங்குனி 22, 2012

இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியா, ஆதரவாக வாக்களித்த மலேசியா

மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது. வரலாற்றில் முதற்தடவையாக இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கைக்கு எதிராக செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உள்நாட்டு அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்தியா இம்முடிவை எடுத்ததாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க உறுப்பினர் அரசிற்கான தமது ஆதரவினை வாபஸ் பெறப் போவதாக அறிவித்தமையே இதில் முக்கிய பங்குவகிப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இந்தியாவின் இந்நடவடிக்கையானது இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான இராஜதந்திர உறவில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்பது தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக மலேசியா வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நாவிற்கான மலேசியாவின் விசேட பிரதிநிதி பரம் குமாரசுவாமியே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்தே இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மலேசிய ஊடகமொன்றிற்குக் கருத்துத் தெரிவித்துள்ள குமாரசுவாமி, ஜெனீவாவில் இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அது குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை ஏற்படுத்தாது. இது ஒரு வலுவற்ற பிரேரணை எனவும் குறிப்பிட்டுள்ளார். ___

பங்குனி 22, 2012

ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்பு

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட் டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜெனீவா நேரப்படி காலை 9 மணிக்கு (இலங்கை நேரப்படி 12.30க்கு) இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுமென ஜெனீவா வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடர் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானது. நாளை 23 ஆம் திகதியுடன் கூட்டத் தொடர் நிறைவடைகிறது. இந்த ஒரு மாதகால கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அமெரிக்கா, இலங்கை மீதான பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித் திருந்தது. இதனைத் தோற்கடிப்பதற்கு இலங்கை நேசநாடுகளின் உதவியுடன் சகல முயற்சிகளையும் எடுத்துள்ளது. அமெரிக்கா கொண்டு வந்துள்ள போலிக் குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரே ரணையைக் கண்டித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இலங்கையர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பங்குனி 22, 2012

Best to abstain

(Varatharaja Perumal)

But if India decides to support the resolution, it must first talk to Sri Lanka

With the annihilation of the LTTE leadership, the Sri Lankan government and the Sinhala nationalists may have thought that the 80-year-old ethnic conflict in the country has been settled, fully and finally. But now the basic issues of the conflict have been resurrected in international fora, with allegations of war crimes and violations of human rights. The Sinhala-Tamil ethnic conflict ceased to be an internal affair of Sri Lanka in the 1980s — it first became a bilateral issue between India and Sri Lanka, and after 2000 it caught the attention of international communities. Although the internationalisation of the ethnic problem of Sri Lanka began with the engagement of Norway in the talks between the Sri Lankan government and the LTTE, it escalated with the release of a UN expert panel report, called the Darusman Report, which blamed both the Sri Lankan government and the LTTE for war crimes during the final stages of war. Now with the Channel 4 videos and the US-proposed resolution, the Sri Lankan conflict has been entrenched as an important international issue. (more....)

பங்குனி 22, 2012

வழிகாட்டும் லத்தீன் அமெரிக்க நாடுகள்!

(வெ.மன்னார்)

வாழைக்குடியரசுகள் என்றும், அமெ ரிக்காவின் கொல்லைப்புற நாடுகள் என்றும் அறியப்பட்டிருந்த லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்காவின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட காலம் மலையேறி விட்டது. நிதி மூலதனம் தன் தாராளமயக் கொள்கையை முதன்முதலில் இங்குதான் பரிசோதனை செய்து பார்த்தது. ஜனநாயக அரசாக இருந்தாலும் சர்வாதிகார அரசாக இருந்தாலும் அவையனைத்தும் அமெரிக் காவின் இஷ்டப்படியே செயல்பட்டுக் கொண் டிருந்தன. இந்த நாடுகள் அனைத்தையும் ஓஏயு என்ற அமைப்பின் கீழ்கொண்டு வந்து தன் மேலாதிக்கத்தை செலுத்தி வந்த அமெரிக்கா, இன்று தானே நம்ப முடியாத அளவுக்கு செல்வாக்கிழந்து, வெறுக்கப்படும் நாடாக லத்தீன் அமெரிக்க மக்கள் மத்தியில் மாறிவிட்டது. இந்த பிராந்தியத்தில் உள்ள 33 நாடுகளும் ‘செலாக்’ என்ற அமைப்பை உரு வாக்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடும் நிலைக்கு வளர்ந்து வருகிறது. (மேலும்....)

பங்குனி 22, 2012

ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக

இலங்கை தமிழர்களை கடத்தியவர் கைது நாகபட்டினத்தில் சிக்கினார்

இலங்கையில் வாழ வழியின்றி தவிக்கும் இலங்கை தமிழர்களின் மனதை மாற்றி அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் சென்றவர் பொலிசில் சிக்கினார். இலங்கையில் ஜப்னா பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்(43) இவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிச் சென்று இத்தாலியில் குடிபுகுந்தார். இதனால் அவரை இத்தாலி ராஜன் என்று அழைப்பார்கள். இவர் இலங்கைத் தமிழர்களை கடல் வழியாக நவீன படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்லும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.இது தொடர்பாக இலங்கையில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.தலைமறைவான இவரை இன்டர்போல் போலிசாரும் தேடிவந்தனர். இந்நிலையில் இத்தாலி ராஜன், நாகபட்டினம் பகுயிதில் சுற்றிதிரிவதாக கியூ பிரிவு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை பிடிப்பதற்காக போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நாகபட்டினம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்தி செல்லதிட்டம் போட்டு செயல்பட்ட இத்தாலி ராஜன் போலிசில் சிக்கினார். அவரை கைது செய்து போலிசார் சிறையில் அடைத்தனர். (மேலும்....)

பங்குனி 22, 2012

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இடமளிக்க முடியாது - ஜனாதிபதி

முப்பது வருட யுத்தத்துக்குப் பின் நாடு அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் இத்தருணத்தில் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அதேவேளை, நாட்டுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் வரும்போது அரசியல், கட்சி பேதம் பார்க்காது எதிர்க் கட்சி உட்பட சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டிற்கும் மக்களுக்குமான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எவ்வித பேதங்களுக்கும் இடமில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் என தெரிவித்தார். மக்களுக்குப் பொறுப்புக் கூறுபவர்களாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் செயற்படுவது முக்கியமெனவும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

பங்குனி 22, 2012

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல்  இடது முன்னணிக்கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அதிகரிப்பு

நடப்பாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இடது முன்னணி வேட்பாளரான ஜீன் லக் மெலென்சோனுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. போட்டியில் அவர் இருக்கிறார் என்ற செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஊடகங்கள் மறுத்து வருகின்றன. இந்நிலையில்தான் கருத்துக் கணிப்புகளில் இரட்டை இலக்க சதவிகித வாக்குகள் ஜீனுக்குக் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இன்னும் பிரச்சாரங்கள் தீவிரமடையாத நிலையில் அவருக்கு 11 சதவிகித வாக்குகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய முன்னணியின் லீ பென் மற்றும் நடுத்தரக் கொள்கைகளை பின்பற்றுபவர் என்று முன்னிறுத்தப்படும் பிரான்கோயிஸ் பேய்ரூ ஆகிய இருவருக்கும் இணையாக அவர் வாக்குகளைப் பெறுவார். (மேலும்....)

பங்குனி 22, 2012

இந்தியாவின் தீர்மானம் வரவேற்கத்த​க்கது - புளொட் தலைவர் சித்தார்த்​தன்

அமெரிக்காவின் ஜெனீவாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு இந்தியா எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும், இதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளே உந்துசக்தியாக அமைந்ததாகவும் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் சர்வதேசத்தின் நேரடித் தலையீடுகளுக்கு இடமே இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இலங்கை இந்தியாவிடம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை முன்வைத்தது. அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நிறுவியதோடு, பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். அதனை நிறைவேற்றுமாறே பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இப்பிரேரணை தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் உரிமைகளோடு வாழ வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்வதற்கு தமிழ் நாட்டு காங்கிரஸ் உட்பட திராவிட கட்சிகள் முக்கிய பங்களிப்பையும், அழுத்தத்தையும் கொடுத்தன. இவர்களின் தீவிரமான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இனி இலங்கை அரசாங்கத்தின் பக்கத்திலேயே பந்து உள்ளது. எனவே, பரிந்துரைகளை நிறைவேற்றி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு சர்வதேசத்தின் நேரடியான தலையீடுகளை இலங்கை அரசாங்கத்தால் தவிர்த்துக்கொள்ள முடியும் என புளொட் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பங்குனி 22, 2012

American Resolution failed to recognize the contribution of Sri Lankan President to end LTTE terrorists Dr.Swamy

Today when America presents the resolution against Sri Lanka in the 19th session of the UN Human Rights Conference, it is learnt that America intends to substitute a clause giving details of the atrocities of the LTTE. Dr. Subramanian Swamy, Janata Party President when speaking to Asian Tribune said that the first draft of the American resolution is insipid and it is one-sided. He said that the resolution has not got the horrendous atrocities committed by the LTTE for the last 26 years and more. He said that is not sufficient. He further said that the American resolution also does not recognize the contribution of Sri Lankan President who determinedly brought to an end to LTTE terrorists in Sri Lanka. Janata Party President Dr. Subramaniam Swamy also said, “Therefore it is best if India brings a substitute resolution urging Sri Lanka’s President to devolve power in the constitution as per the 13th + amendmend and if there are any issues human rights it should be raised bilaterally as the requirement under the SAARC arrangements.”

By K.T.Rajasingham

New Delhi, 22 March, (Asiantribune.com):

- Asian Tribune –

பங்குனி 22, 2012

மே 1 அன்று முழு வேலை நிறுத்தம்-அமெரிக்க வரலாற்றில் புதிய திருப்பம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவில் கடந்த ஆறு மாதங்களாக கைப் பற்றுவோம் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தப் போராட்டங்கள் மீது அமெரிக்கா கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த வாரத்தில் மட்டும் இதுவரையில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டிவிட்டது. முதன்முதலில் கடந்த ஆண்டு செப்.17 ஆம் தேதியன்று சுக்கோட்டி பூங்காவில்தான் இந்தப் போராட்டம் துவக்கப்பட்டது. ஆறு மாதங்கள் நிறைவு பெறுவதையொட்டி, அந்தப் பூங்காவை மீண்டும் கைப்பற்றப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க கைது மற்றும் மிரட்டல் போன்ற வழிகளில் காவல்துறையினர் இறங்கினர். (மேலும்....)

பங்குனி 22, 2012

நெருக்கடியை மீறி   லத்தீன் அமெ.நாடுகள் வளர்ச்சி

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற் பட்டுள்ள நெருக்கடியைத் தாண்டி லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வ தில் வெற்றி பெற்றுள்ளன. அமெரிக்காவுக்கிடை யிலான வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவரான சாண் டியாகோ லெவி இதைத் தெரிவித்துள்ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்த அவர், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளை பொறுத்தவரை நாங்கள் எச்சரிக்கையுடன் இருந்தாலும், வளர்ச்சியைப் பற்றி எந்தவித சந்தேகமும் கிடையாது. கடந்த ஆண்டு களில் இந்தப் பிராந்தியம் நல்ல வளர்ச்சியைக் கண்டி ருக்கிறது. பொருளாதார ரீதியாக ஏற்படவிருந்த அதிர்ச்சிகளைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு வளர்ச்சி இருந்தது. இந்த நிலைமைக்குக் காரணம் வலுவான கொள்கைகளை லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகள் உருவாக் கியதேயாகும் என்று குறிப் பிட்டார். (மேலும்....)

பங்குனி 22, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அ.தி.மு.க அமோக வெற்றி

தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க டெபாசிட் இழப்பு

அமைச்சர் கருப்பசாமி மரணம் அடைந்ததால் சங்கரன்கோவில்(தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தகதி நடந்தது. அ.தி.மு.க சார்பில் முத்தச்செல்வி,தி.மு.க சார்பில் ஜவகர் சூரியகுமார்,ம.தி.மு.க சார்பில் சதன் திருமலைக்குமார்,தே.மு.தி.க சார்பில் முத்துக்குமார், பா.ஜ.க சார்பில் முருகன் உட்பட 13பேர் போட்யிட்டனர். 242 வாக்கு சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம்1,59,760 வாக்குகள் பதிவாகின.இது 77.52 சதவீதமாகும். முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.மொத்தமிருந்த 16 தபால் ஓட்டுக்களில் அ.தி.மு.க வுக்கு 13 ஓட்டுகளும்,ம.தி.மு.க வுக்கு 3 ஓட்டுகளும் கிடைத்தன.தி.மு.க,தே.மு,தி.க வுக்கு தபால் ஒட்டுக்கள் எதும் கிடைக்கவில்லை. (மேலும்....)

பங்குனி 22, 2012

சிரியாவின் தலைமைத்துவம் குறித்து ரஷ்யா கடும் விசனம

சிரியாவின் தலைமைத்துவம் நாளுக்கு நாள் பல்வேறு தவறுகளை இழைத்து வருவதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட்டது முதல் இன்று வரை ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் நிர்வாகம் நியாயமற்ற விதத்தில் செயற்படுவதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. வழமையாக சிரியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா, முதற் தடவையாக கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை, சிரியாவிற்கான ஐ. நாவின் விசேட பிரதிநிதி கொபி அனானின் சமாதானத் திட்டம் தொடர்பான பிரேரணையை ஐ. நா. வின் பாதுகாப்புச் சபை ஆதரிப்பது குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேற்குலக நாடுகள் சிரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் சீனாவும் ரஷ்யாவும் ஜனாதிபதி பஷார் அசாத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்குனி 22, 2012

யூதப் பாடசாலை துப்பாக்கிச் சூடு

மொஹமட் மராஹ் என்ற சந்தேக நபர் பிரான்ஸ் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

பிரான்ஸில் யூதப் பாடசாலைக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று சிறுவர் உட்பட நால்வரை கொன்ற சந்தேக நபரின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொணட மொஹமட் மராஹ் என்ற 24 வயது இளைஞனே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த இளைஞனை கைதுசெய்த தெற்கு பிரான்ஸில் உள்ள அவரது வீட்டை 300க்கும் மேற்பட்ட பொலிஸார் நேற்று சுற்றிவளைத்திருந்தனர். மொஹமட் மராஹ் என்ற சந்தேக நபர் அல் கொய்தா அமைப்புக்கு கீழ் செயற்படுவதாகவும் பலஸ்தீன சிறுவர்களுக்காக பழிக்கு பழி வாங்குவதாகவும் கூறியுள்ளார். இவரை கைதுசெய்ய பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் தம்மிடம் ஆயுதம் இருப்பதாக தனது வீட்டுக்குள் பதுங்கியிருக்கும் சந்தேக நபர் பொலிஸாரை எச்சரித்துள்ளார். இதன்போது இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு பொலிஸார் காயமடைந்தனர்.

பங்குனி 22, 2012

இலங்கையின் ஏகோபித்த குரலுக்கு செவிசாய்க்குமா அமெரிக்கா?
 

க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19வது மாநாடு ஜெனீவா வில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான இம்மாநாடு நாளை 23 ஆம் திகதி (மார்ச் மாதம் 2012) நிறைவ டையவிருக்கின்றது. என்றாலும், இம்மாநாடு இல ங்கையர் மத்தியில் அதிக முக்கியத் துவம் பெற்றிருக்கின்றது. இதனை பரவலாக அவதானிக்க முடிகின்றது. இந்நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களும் இம்மாநாடு தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையொன்றை சமர்ப்பித்திருப்பதே இதற்கான அடிப்படைக் காரணம். அமெரிக்காவானது அபிவிருத்தி அடைந்த ஒரு வல்லரசு நாடு. இது இலங்கை போன்ற வளர்முக நாடுகளின் மேம்பாட்டுக்கு உதவி களையும், ஒத்துழைப்புகளையும் நல்க வேண்டும். அதுவே வளர்ச்சி அடைந்த நாட்டின் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் இதனை ஒரு தார்மீக கடமையாகக் கருதி செயற்பட வேண்டியது அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொறுப்பாகும். (மேலும்....)

பங்குனி 22, 2012

நம்பிக்கையோடு முகம் கொடுப்போம்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மாநாட்டுக்கு அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் பிரேரணையை இலங்கை நம்பிக்கையோடு முகம் கொடு ப்பதாக முன்னாள் சட்டமா அதிபரும் ஜெனீவா சென்றுள்ள இல ங்கை தூதுக்குழுவின் முக்கியஸ்தருமான சட்டத்தரணி மொஹான் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார். உண்மையில் இலங்கையானது உலகில் எந்தவொரு நாட்டுக்கும் எதி ராக செயற்பட்ட தேசம் அல்ல. அதே நேரம் அணி சேரா கொள் கையில் உறுதியாக இருக்கும் நாடும் கூட. அதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இலங்கையின் குரலுக்கு செவி சாய்க்குமென உறுதிபடக் கூற லாம். இலங்கையானது புலிப் பயங்கரவாதத்தினால் சின்னாபின்னமாக்கப்ப ட்ட ஒரு நாடு. புலி பயங்கரவாதத்தின் செயற்பாடுகளால் இந் நாட்டின் அபிவிருத்தி பல தசாப்தங்களுக்கு பின்னடைந்து இரு க்கின்றது. (மேலும்....)

பங்குனி 21, 2012

இந்திய அரசாங்கமே எமது பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்

(ஸ்ரனிஸ்)

அமெரிக்காவால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவந்துள்ள, இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வரும் 23 இல் நடக்கவிருக்கிறது. இந்த தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளதாக, செய்திகள் வெளிவரத் தொடங்கியதும் தமிழகத்தில் ஒரு கொதிநிலை ஏற்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு அறிக்கைகள் போராட்ட அறிவிப்புகள், வழக்கமான தமிழ் அமைப்புகளின் ஆர்பாட்டங்கள், எழுச்சி போராட்டங்கள் என சுட்டெரிக்கும் வெயிலையும் விஞ்சிய அளவிற்கு சூடு எகிறிக்கொண்டே போனது. எந்த ஊடகங்களை கண் பார்த்தரலும், காது கேட்டாலும் இதே செய்தியை மாறி மாறி அவதானிக்க முடிந்தது. (மேலும்....)

பங்குனி 21, 2012

Tamil migrant ordered deported for alleged war crime

(JAMES KELLER)

A Tamil refugee claimant who arrived off Canada's West Coast aboard the MV Sun Sea last year has been ordered deported over allegations he committed a war crime in his home country of Sri Lanka.The migrant, who can't be identified, appeared before the Immigration and Refugee Board in April. A written decision was issued this week. The man admitted he was a member of the Liberation Tigers of Tamil Eelam, or Tamil Tigers, which is considered a banned terrorist organization in Canada. The written decision was heavily redacted and did not outline the specific allegations against the migrant, but he was accused of counselling others to commit a war crime. (more....)

பங்குனி 21, 2012

அமெரிக்காவுக்கு என்ன அருகதை?

ஜெனீவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா இலங் கைக்கு எதிராக சமர்ப்பித்துள்ள பிரேரணையானது இல ங்கையில் வாழும் தமிழ் மக்களையோ மனித உரிமை களையோ சார்ந்த செயற்பாடல்ல. முழுக்க முழுக்க தனது நலனை இலக்காகக் கொண்டதென்பதை எவரும் மறந்துவிட கூடாது. மனித உரிமைகளைப் பற்றியோ, மனிதாபிமானம் பற்றியோ குரல் கொடுத்து பேசுவதற்கு அமெரிக்காவுக்கு எந்தவொரு அருக தையும் கிடையாது. இலங்கை மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முற்பட்ட அமெரிக்கா, அது நிறைவேறாமல் போனதும், மூக்கை நுழைப்பதற்கு மாற்று வழியில் முயல்கின்றது. அதன் வெளிப்பாடே ஜெனீவா பிரேரணை. நாடுகளை தனது ஆதிக் கத்திற்குள் கொண்டு வருவதற்கு உலகம் முழுவதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் அமெரிக்கா இலங்கை மீது குற்றம் சுமத்த முயல்வது வெறும் அபத்தமாகும். (மேலும்....)

பங்குனி 21, 2012

Ruling Rajapaksa dynasty must be held accountable for the atrocities they are responsible for

(By Viresh Fernando)

An Open Letter to Sinhala Canadians

Dear Fellow Sinhala Canadians:

It is time that we express our immeasurable gratitude to Sri Lanka for our early education, facility in language, social skills, leadership qualities and all other factors that have led to our many successes in Canada. We can best do so by asserting the founding principles of the country of which we are now residents and citizens – peace, order and good government and helping Sri Lankans residents to wrest back our common homeland from an increasingly despotic family dynasty. Let us not close our eyes to the vast human rights abuses that continue to occur in Sri Lanka just as many average Germans did when they pretended the Holocaust never happened. (more...)

பங்குனி 21, 2012

கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் ஆரம்பம், விஞ்ஞானிகள் பாராட்டு

கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கலாம் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை அடுத்து அங்கு பணிகள் தொடங்கியுள்ளது. தமிழக மற்றும் மத்திய பாதுகாப்பு படை பொலிசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுனாமிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்புப் படை பொலிஸ் வானத்தின் மீது ஒரு மர்ம கும்பல் கல் வீசியது இதனையடுத்து அங்கு சிறிய பதட்டம் ஏற்பட்டது. நேற்று காலையில் இருந்து அணுமின் நிலையத்திற்கு பணிக்கு செல்லும் நபர்கள் பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 3 வேளைகளுக்கு மொத்தம் 900 பேர் நேற்று பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்ய விஞ்ஞானிகள் பலரும் நேற்று நிம்மதியாக பணிக்கு சென்றனர். இவர்கள் நீண்ட காலமாக வெளி நாட்டில் இருந்து வந்து பணியில் ஈடுபடாமல் இருந்து வந்தனர். இதனால் நாடு திரும்பி விடலாம் என்ற நிலையில் தமிழக அரசின் முடிவு பெரும் மகிழ்ச்சியை தந்திருப்பதாக தெரிவித்தனர். இந்தநாள் எங்களுக்கு மிகச் சிறப்பு வாய்ந்தநாள், என கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பணிக்குச் சென்ற ரஷ்ய விஞ்ஞானி மமினெவ் அலெக்சாண்டர் தெரிவித்தார். கூடங்களும் அணுமின் நிலைய பணிக்காக, அணுமின் நிலைய பஸ்களில் ரஷ்ய விஞ்ஞானிகள், 90 பேர் உள்ளே சென்றனர். மூத்த விஞ்ஞானியும், அணுஉலை வடிவமைப்பு நிபுணருமான மமினெவ் அலெக்சாண்டர் கூறியதாவது : 'இந்தநாள் உங்களுக்கு மிகச் சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாள் விரைவில் வரும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தோம்.

பங்குனி 21, 2012

ஜெனீவா பிரேரணைக்கு கடும் எதிர்ப்பு

கொழும்பில் ஆர்ப்பாட்டம், கையெழுத்துவேட்டை

ஜெனீவா மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றப் பிரேரணையைக் கண்டித்து நேற்றுக் கொழும்பிலும் கொழும்பை அண்டிய பல பிரதேசங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பல்வேறு துறை சார்ந்த அமைப்புக்கள் கண்டனப் பேரணிகளை நடத்தி வருவதுடன் பல்லாயிரக்கணக்கான மக் கள் இதில் கலந்து கொண்டு கண் டனக் குரல்களை எழுப்பி வருகின் றனர். நேற்றைய தினம் கொழும்பு கெம்பல் பூங்காவில் நாட்டைப் பாதுகாக்கும் அமைப்பு மாபெரும் கண்டனப் பேரணியொன்றை நடாத்தியதுடன் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் வரை சென்று மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.(மேலும்....)

பங்குனி 21, 2012

அமெரிக்காவின் அட்டூழியங்களை விரல் நீட்டி குற்றம் சுமத்த முடியாத நிலை

ஆப்கானிஸ்தானில் நிலை கொண் டிருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நேட்டோ படைகள் அங்கு மனித உரிமைகளை மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற னர். நாம் அதற்கு எதிராக விரல் நீட்டி குற்றம் சுமத்த முடியாத நிலையிலேயே இருப்பதாக ஆப்கானிஸ்தானுக்கான மனித உரிமை மேம்பாட்டாளர் கருத்து வெளியிட்டுள்ளார். ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் இப் போது விறுவிறுப்பாக நடந்து கொண் டிருக்கும் இவ்வேளையில் கடந்த திங்களன்று அந்த கூட்டத்தொடர் நடக்கும் அதே மண்டபத்தின் இன்னு மொரு அறையில் மனித உரிமை பிரச் சினைகள் குறித்து இருதரப்பு கலந்துரை யாடல்கள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  (மேலும்...)

பங்குனி 21, 2012

நாட்டில் மேலைத்தேய சக்திகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி

புலிகளின் தலைவர் பிர பாகரனுக்கு மரண தண் டணை விதித்த இந்தியா வும், பயங்கரவாதத்தை ஒழிப்பதாக எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மேலைத்தேய நாடுகளும் இன்று பயங்கரவாதம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டதன் பின்னர் அதனை ஒரு போர்க்குற்ற மாக கூறுகின்றன. புலிகள் பயங்கரவாத அமைப்பு என முதலில் தடைசெய்தவர்கள் இந் தியா. அதன் பின்னர் தான் மேலைத்தேய நாடுகளும் புலிகள் அமைப்பை தடை செய்தன. புலிகளுக்கு பலதடவைகள் சந்தர்ப்பம் வழங்கி, வழங்கி இறுதியாகவே இலங்கை புலிகள் அமைப்பைத் தடைசெய்தது என மீள்குடி யேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். பிரபாகரன் அழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் பின்னர் இன்றுவரை ஒரு வேட்டுச்சத்தம் இல்லை.  (மேலும்...)

பங்குனி 20, 2012

இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்  ஐ.நா.தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

இலங்கையில் எல்டிடி இக்கு எதிரான போரில் அப் பாவி தமிழ்மக் களுக்கு இழைக்கப்பட்ட கொடூர மான மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசைக் கண்டிக்கவும், உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத்த வும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப் படும் தீர்மானம், இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலத் திற்கு உதவ வேண்டும் என்கிற இந்தியாவின் நோக்கத்தை பூர்த்திசெய்யும் பட்சத்தில், அத்தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கும் என்று பிரத மர் மன்மோகன் சிங் நாடாளு மன்றத்தில் கூறினார். (மேலும்....)

பங்குனி 20, 2012

தமது தாளத்திற்கேற்ப அரசியல் ஆட்டம் போடும் கைப்பொம்மை அரசை உருவாக்க சதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக தமது தாளத்திற்கேற்ப அரசியல் ஆட்டம் போடும் கைபொம்மை அரசொன்றை ஆட்சியில் அமர்த்தி அதனூடாக மீண்டும் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான சதிமுயற்சிகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே புலி பிரிவினைவாத சக்திகள் ஈழக்கொடியையும், அமெரிக்க கொடியினையும் ஏந்தியே ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் இருந்தே ஏகாதிபத்தியவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்குமிடையே உறவு என்னவென்று மிகவும் தெளிவாகத் தென்படுகின்றது. புலிக்காக அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எமக்கு எதிராக சதிமுயற்சிகளை முன்னெடுத்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்துக்கு வெளிவந்துள்ளது. எமது நாட்டில் மீண்டும் தீவிரவாதத்தை தோற்றுவிப்பதற்கான தேவைப்பாடு அந்நாடுகளுக்கு உள்ளது. (மேலும்...)

பங்குனி 20, 2012

செனல் 4 க்கு பதிலடியாக இலங்கை அரசின் ' 'பயங்கரவாதத்தின் நிழல்கள்' _

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் ' கொலைக் களங்கள்- தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' ஆவணப்படத்திற்கு பதிலடிகொடுக்கும் வகையில் 'பயங்கரவாதத்தின் நிழல்கள்' (shadows of terror) என்ற காணொளி இலங்கையினால் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி காணொளியானது பாதுகாப்பு அமைச்சினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை www.defence.lk என்ற இணைய முகவரியில் காணலாம். ___

பங்குனி 20, 2012

இலங்கையை சீரழிக்க முயலும் அமெரிக்க தலையீட்டிற்கு தமிழர்கள் துணைபோக கூடாது

இலங்கை அரசியல் சாசனத்திற்கு கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம் இன்னும் சரியான முறையில் அமுலாக்கப்படவில்லை. 1987ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்த 13வது திருத்த சட்ட மூலத்தைக் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முனையவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டம் ஒரு ஆரம்பமே ஆகும். அதை வைத்துக் கொண்டே பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு மென்மேலும் நட வடிக்கை எடுக்க வேண்டும். சிங்கள மக்களின் ஆதரவின்றி, எந்த அரசியல் தீர்வையும் ஏற்படுத்த முடியாது. (மேலும்....)

பங்குனி 20, 2012

New possibilities in post-LTTE Sri Lanka

(G. PARTHASARATHY)

India should focus on development of Trincomalee Port.Visiting Colombo barely three years ago was a traumatic experience. With the country torn apart in a seemingly endless civil war, one could sense a nation on edge, even while disembarking at Colombo's International Airport. The airport itself then looked like an armed citadel. The security screening across the country was suffocating. Colombo itself felt like a city under siege, with roadblocks virtually at every street corner and traffic light, monitored by armed police and army check posts. Returning to Colombo last week, I was immensely relieved to see Sri Lanka's capital virtually devoid of irksome security presences, with thousands of Indian tourists being welcomed with a smile, from the moment of disembarkation. (more....)

பங்குனி 20, 2012

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவினை ஈ.என்.டி.எல்.எப். வரவேற்கிறது.

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை வரவேற்பதில் இந்தியாவுக்கு தயக்கம் இருந்தது உண்மையே, கூடியவரையில் நடுநிலை வகிப்பது என்ற முடிவிலிருந்து விலகி அப்பிரேரணையை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) வரவேற்பதுடன் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட கசப்புணர்வை மறப்பதற்கான அறிகுறியைத் தெரியப்படுத்தியதற்காகவும் வாழ்த்து தெரிவிக்கிறது. யுத்தக்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும், குறைந்த பட்ச உரிமையான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்திருந்தால் இந்தியா எப்போதோ தன் முடிவினை அறிவித்திருக்கும். (மேலும்....)

பங்குனி 20, 2012

ஐன்ஸ்டினின் கோட்பாடு பிழையாகவில்லை: தவறு விட்டது தற்கால விஞ்ஞானிகளே?

 

ஒளியை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாதென்பது ஐன்ஸ்டினின் வாதமாகும். இதுவே 'Theory of Relativity' கோட்பாடு எனப்படுகின்றது. ஒளிக்கு திணிவில்லையென்பதனால் அதனை விட வேகமாகப் பயணிக்க எதனாலும் முடியாது என ஐன்ஸ்டின் பல தசாப்தங்களுக்கு முன்னர் விளக்கியிருந்தார். வெற்றிடமொன்றில் ஒளியானது (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீற்றர். எனினும் இக்கோட்பாடு பிழையென விஞ்ஞானிகள் சிலர் கடந்த வருடம் தெரிவித்திருந்தனர்.(மேலும்....)

பங்குனி 20, 2012

ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு

லண்டனில் அமெ. தூதரகம் முன் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் ஆயிரக்கணக்கான இலங்கை ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். பிரித்தானிய இலங்கை போரம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அமைதியான பேரணியில் இலங்கையின் தேசியக் கொடியைத் தாங்கியவாறும், அமெரிக்காவுக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இலங்கையின் ஜனநாயகத்தில் அமெரிக்கா கையிடக்கூடாது, அமெரிக்கா இரட்டைவேடம் போடுகிறது போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக் காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இலங்கையின் உண்மையான நிலையை பிரித்தானிய பிரஜைகள் நாட்டுக்குச் சென்று பார்வையிடவேண்டு மென்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

பங்குனி 20, 2012

தூதரகத்தில் தஞ்சமடைந்த 98 பேரை தாயகம் அனுப்ப ஏற்பாடு

சவூதி அரேபியாவின் ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த 98 இலங்கையர்களை தாயகம் அனுப்பிவைப்பதற்காக ஜித்தாவின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் நாயகம் ஏ. உதுமாலெவ்வை தெரிவித்தார். இரு கைக்குழந்தையுடன் ஆறு சிறுவர்கள் உட்பட 98 பேரையும் அவர்களுக்குரிய தற்காலிக பயண அனுமதி சீட்டுடன் சனிக்கிழமையன்று ஜித்தாவின் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார். ஜித்தாவின் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் தரிப்பிட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 98 இலங்கையர் களும் படிப்படியாக கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் தொழிலின்றி நிர்க்கதியான நிலைக்குள்ளான இலங்கையர்கள் இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைவது வழக்கம். இவ்வாறு தஞ்சமடைந்தவர்களே திருப்பி அனுப்பப் படுகின்றனர். இவர்களில் 42 பேருக்கு இலங்கை யிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விமான பயணச் சீட்டுகளை வழங்கியுள்ளது. எஞ்சியவர்கள் தமது செலவிலேயே பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

பங்குனி 20, 2012

இலங்கையை அகெளரவப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் முயற்சி

அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறது. இத்தகைய சந்தர்ப்பத்தில் அமெரிக்கா இந்த பிரேரணையை ஜெனீவா மனித உரிமை மகாநாட்டில் கொண்டு வந்து எங்கள் நாட்டை அகெள ரவப்படுத்த முயற்சி செய்கிறது என்று கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். இந்நாட்டில் சகல இன மக்களும் கடந்த காலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இந்த ஒற்றுமையை சீர்குலைத்த வர்கள் எல்.ரீ.ரீ.ஈ.யினர் தான் எனவும் அமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் இருந்த அப்பாவி முஸ்லிம்களை எல்.ரீ.ரீ.ஈ.யினர் விரட்டியடித்தனர். காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற போது, இன்று மனித உரிமை பேசும் அமெ ரிக்காவோ வேறு எந்த வல்லரசுகளோ ஒருவார்த்தை கூட கண்டனம் தெரிவிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பங்குனி 20, 2012

அமெரிக்காவுக்கு ஜப்பான் மூக்குடைப்பு  ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடர்கிறது

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று அனைத்து நாடுகளி டமும் அமெரிக்கா சொல்லி வரும் நிலையில் அதன் கூட்டு நாடான ஜப்பான் எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தங்களைப் புதுப்பித்து வருகிறது. ஈரானிடமிருந்து அதிக மான அளவில் கச்சா எண் ணெய் வாங்கும் நிறுவனங் களில் ஜப்பானின் ஷோவா ஷெல் நிறுவனமும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந் தத்தைப் போட்டு கச்சா எண் ணெய் வாங்கி, சுத்திகரித்து இந்த நிறுவனம் விநியோகித்து வருகிறது. ஜப்பானில் ஐந்தா வது பெரிய சுத்திகரிப்பு நிலை யத்தை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. ஈரானிடமிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம் பீப்பாய் கச்சா எண் ணெய் இந்த நிறுவனத்தால் வாங்கப்படுகிறது.
(மேலும்....)

பங்குனி 20, 2012

ஆப்கானிஸ்தான்  தடையின்றித் தொடர்ந்த  சிறை சித்ரவதைகள்

சண்டையின்போது பிடிபட்ட பலரை மனிதத் தன்மையற்ற முறையில் அமெரிக்க ராணுவத்தினர் நடத்தியுள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் சுயேச் சையான மனித உரிமை ஆணையமும், அமெரிக்கா விலிருந்து இயங்கும் ஓபன் சொசைட்டி தொண்டு நிறு வனமும் குற்றம் சாட்டியுள் ளன. ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள பல் வேறு சிறைகளில் கைதிகள் மிகவும் மோசமான முறை யில் சித்ரவதை செய்யப் பட்டு கொடுமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்று “சித்ர வதை, மாற்றங்கள் மற்றும் நீதி மறுப்பு” என்ற தலைப் பில் இந்த அமைப்புகள் ஒரு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. ஏற் கெனவே பல மையங்களில் சித்ரவதைகள் நடத்தப்படு கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்று உறுதிப்படுத்தி யிருந்தது. இந்த கண்டுபிடிப்புக் குப் பிறகு, இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள 16 சிறைகளுக்கு யாரையும் அனுப்பப் போவதில்லை என்று அமெரிக்கா தலை மையிலான ராணுவக்கூட் டான நேட்டோ அறிவித் தது. ஆனால், இவ்வாறு அறிவிக்கப்பட்ட பிறகும், ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள காந்த ஹாரில் உள்ள சிறைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் கடும் சித்ரவதைக்கு ஆளாக் கப்பட்டுள்ளனர். ஆப் கானிஸ்தானின் உளவுத் துறையால் இந்த சிறை நிர் வகிக்கப்பட்டு வருகிறது. கைதிகள் இந்த சிறைக்கு அழைத்து வரப்படுவதற் கும், அவர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதற்கும் ஆதாரங்கள் உள்ளன என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பங்குனி 20, 2012

தமிழக எம்.பி.க்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் - எஸ்.எம்.கிருஷ்ணா

இலங்கை மனித உரிமை மீறல் தொடர் பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட உள்ள தீர்மான நகல் இறுதியாக உரு வாக்கப்பட்டவுடன் அதை இந்திய அரசு ஆய்வு செய்யும் என்றும் அதுகுறித்து தமிழக எம்.பி.க்களுடன் கலந்தா லோசிக்கப்படும் என் றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். “இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடந்துள்ள மனித உரிமை மீறல் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் மிகுந்த கவலை கொண்டுள்ளார். இதுதொடர்பாக தீர் மான வரைவு இறுதி செய்யப்பட்டவுடன் அதை இந்தியா ஆய்வு செய்யும். அதுகுறித்து இறுதியாக நாடாளு மன்ற உறுப்பினர்களு டன் ஆலோசிக்கும். குறிப்பாக தமிழக எம்.பி.க் களின் கருத்துக்கு அமைச்சர் கிருஷ்ணா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்” என்று வெளியுறவுத்துறை அமைச்சக அதிகார வட் டாரங்கள் திங்களன்று தெரிவித்தன.

பங்குனி 19, 2012

அமெரிக்காவில் மீண்டும் வால் ஸ்டிரீட் போராட்டம் 73 பேர் சிறையிலடைப்பு!

இது அமெரிக்காவில் கேள்வி கேட்க முடியுமா....?

பங்குனி 19, 2012

ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் இறுதிக் கட்ட அமர்வுகள் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரின் இறுதிக்கட்ட அமர்வுகள் இன்று திங்ட்கிழமை ஆரம்பமாகின்றன. எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதுடன், தொடர்ந்தும் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் பல அறிக்கைகள் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமான மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை வாக்கெடுப்பின் போது தோற்கடிப்பதற்கான கடின முயற்சியிலும் உழைப்பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை விவகாரத்தில் சர்வதேச நாடுகள் இரண்டு அணிகளில் பிரிந்து நிற்கின்றன. இது மனித உரிமைப் பேரவைக்கு ஆரோக்கியமான விடயமல்ல. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பங்குனி 19, 2012

இஸ்ரேல் தொடர்பிலான மனித உரிமை அமைப்புக்களின் அவதானத்தை திசைத் திருப்பும் வகையிலேயே அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்வைத்துள்ளது - சோ.ராமசாமி!

இஸ்ரேல் தொடர்பிலான மனித உரிமை அமைப்புக்களின் அவதானத்தை திசைத் திருப்பும் வகையிலேயே, அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்வைத்துள்ளதாக தமிழகத்தின் துக்லக் பத்திரிகை ஆசிரியர் சோ. ராமசாமி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பல்வேறு வன்முறைகளை, மனித உரிமைகள் மாநாட்டில் எடுத்துக் கொள்ளப்படாமல் தடுக்கும் வகையில், அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை பலராலும் தெரிவிக்கப்படுவது போல, அமெரிக்காவின் பிரேரணை இலங்கைக்கு பாதகமான ஒன்று இல்லை என சோ ராமசாமி தெரிவித்துள்ளார். கற்றுக் கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்குமாறு மத்திரமே வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் போது, இந்த பிரேரணையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு பதில் வழங்கிய அவர், இந்த பிரேரணையில் போர்க்குற்றங்கள் குறித்த எந்த விடயமும் இதில் உள்ளடக்கப்படவில்லை எனவும், எவ்வாறாயினும் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கூறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பங்குனி 19, 2012

பிரேரணையை எதிர்ப்பதன் ஊடாக 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிரான பிரேரணையை வைத்து 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதனால் இலங்கை 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வகையிலேயே இந்தியா அழுத்தங்களைக் கொடுத்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் 13 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவாறு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்து வழங்குமாறு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றதா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்று இதுவரையில் இந்தியா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி 19, 2012

ஜெனீவா யுத்தக்குற்றப் பிரேரணையின் நோக்கம், இலங்கையில் அமெரிக்க பொம்மை ஆட்சி!

இலங்கையைப் பொறுத்தவரையிலும் அமெரிக்க மேற்கத்தைய நாடுகளின் நலன்களுக்கு குந்தகமாக இலங்கை அரசு செயற்படுவதாக அமெரிக்காவும் மேற்குநாடுகளும் கருதுகின்றன. சீனாவுடனும், இந்தியாவுடனும் இன்றைய அரசாங்கம் கொண்டிருக்கும் நெருங்கிய உறவுகள் அமெரிக்காவுக்கு எரிச்சல் ஊட்டுகின்றன. அதுமட்டுமல்ல இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இலங்கை அமைந்திருக்கிறது. இவைதான் மனித உரிமைகளையும் யுத்தக் குற்றங்களையும் அமெரிக்கா தூக்கிப் பிடிப்பதற்கான காரணங்கள். புலிகளை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தடைசெய்ததைப் போன்று கொசோவோ விடுதலை இராணுவத்தையும் அமெரிக்கா தடை செய்திருந்தது. பின்னர் தனது தேவையையொட்டி அந்தத் தடையை நீக்கிவிட்டது. மனிதஉரிமை மீறல்களைப் பற்றி பேசுவதற்கு அமெரிக்காவுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஹிரோசிமா மீதும் நாசகாகி மீதும் அணுகுண்டுகளை வீசி மனிதப் பேரழிவைப் புரிந்த நாடு அமெரிக்கா. வியட்நாமில் மைலாய் படுகொலை உட்பட பல்வேறு படுகொலைகளை அமெரிக்க இராணுவம் புரிந்திருக்கிறது. (மேலும்.....)

பங்குனி 19, 2012

அமெரிக்கத் தீர்மானம் உதவுமா?

(ஞாநி)

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா இலங்கை நிலை பற்றிக் கொண்டு வந்திருக்கும் தீர்மானம் குறித்த விவாதம் உலகெங்கும் சூடு பறக்கிறது. இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டுமென்று தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பிகளும் (முதன்முறையாக ? ) ஒருமித்த ஆவேசக் குரலில் நாடாளுமன்றத்தில் வற்புறுத்துகிறார்கள்.இந்தப் பிரச்சினையில் எனக்குத் தோன்றும் கருத்துகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.  (மேலும்.....)

பங்குனி 19, 2012

பங்குனி 19, 2012

ஆட்சி மாறும் வரை மக்கள் வாழ்வில் சுபீட்சமில்லை  - யாழில் ரணில் _

ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை நாட்டு மக்கள் வாழ்வில் சுபீட்சம் ஏற்படாதென யாழ். மக்கள் சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ். விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றுக் காலை முதல் யாழ்.குடா நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அவருடன் திஸ்ஸ அத்தநாயக்க, ரவிகருணாநாயக, டி.எம்.சுவாமிநாதன், ஜயலத்ஜயவர்த்தன ஆகியோருடன் யாழ். மாவட்ட எம்.பி விஜயகலா மகேஸ்வரனும் சென்றிருந்தார். சாவகச்சேரி, நெல்லியடி, பருத்தித்துறை, கரவெட்டி, பொலிகண்டி, தெல்லிப்பழை, மாதகல் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்த இக்குழுவினர் மக்களைச் சந்தித்து உரையாடினர். நேற்று மாலை மாதகலில் நடைபெற்ற கூட்டத்திலும் ரணில் விக்ரமசிங்க உட்பட பலர் உரையாற்றினர். அமெரிக்க மேற்குலக நாடுகளின் இனிப்பான செய்தியை காவிக்கொண்டு தமிழ் குறும் தேசியம் வலுவான உள்ள யாழ்ப்பாணத்தில் ஆட்சி மாற்றம் பற்றிய பரப்புரையில் ரணில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசீர்வாதமும் ரணிலுக்கு உண்டு.___

பங்குனி 19, 2012

நாட்டுப்பற்றுள்ள புலம்பெயர் தமிழரும் இலங்கைக்கு சார்பாக செயற்பாடு

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர் களில் ஒரு சிலர் நாட்டுக்கு தீங்கிழைக்கக்கூடிய வகை யில் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள சில தமிழர்கள் நாட் டுப் பற்றுடன் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஆசியாவிற்கான உலக அமைப்பின் தலைவர் கே.டி. ராஜசிங்கமும் ஒருவர். இவர் ஏசியன் ரிபியுன் இணையத்தளத்தின் பிரதம ஆசி ரியராக பணியாற்றி வருகின்றார். இவருடன் லண்டனில் புலம் பெயர்ந் துள்ள தமிழ்ப் பெண் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியும் இலங்கை யின் சார்பில் பிரசாரம் செய்வதற்காக ஜெனிவா வந்துள்ளார். இவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் டயஸ்போரா டயலொக் என்ற அமைப்பின் முக்கிய அங்கத்தவராக வும் இருக்கின்றார். (மேலும்...)

பங்குனி 19, 2012

பூமி தோன்றியது எப்போது?

இந்தக் கேள்விக்கு இதுவரை துல்லியமான விடை கிடைத்தபாடில்லை. இருந்தாலும், பல விஞ்ஞானிகளும் தோராயமாக பூமி தோற்றம் குறித்த கருத்துகளை பல கால கட்டங்களில் தெரிவித்திருக்கிறார்கள். புதிதாக இப்போது கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூமியின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து ஒரு முடிவை வெளியிட்டிடிருக்கிறார்கள். பூமி தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பது தான் இவர்கள் வெளியிட்டிருக்கும் புதிய முடிவு. அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கொண்டு இதை யூகித்திருக்கிறார்கள் இவர்கள். (மேலும்...)

பங்குனி 19, 2012

த.ம.விடுதலைப்புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஜகத் புஸ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், பிரியானி விஜேசேகர, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை, சுபைர், துரையப்பா நவரட்ண ராஜா உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அக் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கட்சியின் புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டதுடன் கட்சிக்கு சேவையாற்றிய முக்கியஸ்தர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.

பங்குனி 19, 2012

ரணிலும் கூட்டமைப்பும் தமிழரை பகடைக்காய்களாக பயன்படுத்த முயற்சி

கடந்த காலத்தில் நாட்டை வெளிநாட்டுக்கு ஆளக்கொடுத்துவிட்டு, சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துவந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது தமிழ் மக்களைக் பகடைக்காய்களாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பார்க்கும்போது ரணில் விக்ரமசிங்க வெளிநாடுகளுக்கே நாட்டை ஆளக்கொடுத்துள்ளார். அந்த நாடுகளிடமிருந்து கிடைக்கும் சுகபோகங்களைக் கொண்டு அவர் வாழ்க்கையை நடத்தியுள்ளார். இவர் தற்போது யாழ் குடாநாட்டிலுள்ள தமிழ் மக்களை பகடைக்காய்களாக்குவதற்கு முயற்சிப்பதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேதின ஊர்வலத்தை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எதிர்க்கட்சித் தலைவரைப் போன்றே, யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் களும் வெளிநாடுகளை நம்பி இருக்கின்றனர். இவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கின்றனர். வெளி நாடுகளில் தலைவர் களை வைத்துக்கொண்டு இவர்கள் இங்கு காய்நகர்த்தல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது இரண்டு கட்சிகளின் நோக்கங் களும் ஒன்றிணைந் திருப்பதால் தமிழ் மக்களை பகடைக்காய் களாகக் கொண்டு அரசியல் காய் நகர்த்தல்களுக்கு முயற்சிக் கின்றனர். இரண்டு கட்சிகளும் வெளிநாடுகள் தயாரித்துக்கொடுத்த அட்டவணைகளை நிறைவேற்றும் முயற்சிகளிலேயே தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.

பங்குனி 19, 2012

கச்சதீவில் நிரந்தரமாக கடற்படை முகாம் அமைப்பு _

வடக்கு கடற்பரப்பு மீதான தனது கண்காணிப்பை கடற்படை முடுக்கியுள்ள நிலையில் கச்சதீவிலும் நிரந்தர கடற்படைத் தளங்களை அரசு அமைத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிரந்தர பாரிய கடற்படை தளம் கடந்த வாரம் நாச்சிக்குடாவில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மன்னார் முதல் காங்கேசன்துறை வரையான கடற்பரப்பு முற்று முழுதாக இலங்கை கடற்படையின் பூரண கண்காணிப்பினுள் கொண்டு வரப்பட்டுள்ளது. கச்சதீவின் மேற்குப் பகுதியிலுள்ள மேட்டு நிலப்பரப்பினை உள்ளடக்கி இந் நிரந்தர கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. முறிகண்டிப் பகுதி வழியில் படையினருக்கான குடியிருப்புக்களை அமைக்க சீன அரசு வழங்கிய பொருத்துக்களை கொண்டே இத்தளமும் நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இடம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்பட்ட சீன அரசின் "டென்ற்' கொட்டகைகளும் கடற்படை தள அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திலிருந்து ஊடுருவல்களைத் தடுக்கவே இக்கடற்பரப்பின் கண்காணிப்பை கடற்படை முடுக்கி விட்டுள்ளது. அதிலும் கச்சதீவில் நிரந்தர கடற்படைத் தளமொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் கடற்படைக் கப்பல்கள் இரண்டு இக்கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பங்குனி 19, 2012

புனர்வாழ்வு பெற்ற 384 இளைஞர், யுவதிகள் 29இல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

மோதல்களின் போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட 384 இளைஞர், யுவதிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அன்றைய தினம் தமது புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக் கொண்ட 384 பேர் தமது குடும்பத்தாருடன் ஒன்றிணைக்கப் படுவர். இவர்களுள் 55 பேர் பெண்களா வரெனவும் செயலாளர் கூறினார். படையினரிடம் சரணடைந்த ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் முறை யான புனர்வாழ்வுப் பயிற்சிக்குப் பின்னர் கட்டம் கட்டமாக தமது குடும்பதாரிடம் ஒன்றிணைக்கப்பட்டதுடன் சமூகத்திலும் பல்வேறு அந்தஸ்துகளில் சேவையாற்றி வருகின்றனர். இதுவரையில், புனர்வாழ்வுப் பெற்ற 11 ஆயிரத்து 200 பேர் தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இறுதியாக 700 பேர் வரையிலானோரே தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். 29 ஆம் திகதி 384 பேரும் விடுவிக்கப்பட்டால் இன்னும் சிறிய தொகையினரே தமது பயிற்சிகளை முடித்துக் கொள்ளும் வரையில் எஞ்சியிருக்கின்றனர்.

பங்குனி 19, 2012

இலங்கை மீதான அமெரிக்காவின் நெருக்குவாரங்கள் கண்டனத்துக்குரியவை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை அரசாங்கம் இன்று அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றது. அத்துடன் இனங்களி டையே நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்தி நாட்டில் உண்மையான சமாதானத்தை நிலைபெற பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு அமெரிக்கா முன்மொழிந்துள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை நியாயத்திற்கு புறம்பான திருப்பமாக பார்க்கப்பட வேண்டும். அர சாங்கம் தமிழ் மக்களுக்கு பல விடயங்களை செய்து கொண்டிருக்கிறது. அவர்களின் தாய்மொழி மூலம் அரசாங்க அலுவல கங்களில் பணிகளை செய்து கொடுப்பதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. (மேலும்...)

பங்குனி 18, 2012

அமெரிக்க வல்லரசின் சிறுபிள்ளைத்தனமான செயல்

உலக நாடுகளுக்கு தான் தான் பொலிஸ்காரன் வேலை செய்வதாக எண்ணும் அமெரிக்கா, அழிவுப் பாதையிலிருந்து மீண்டெழுந்து அபிவிருத்திப் பாதையை நோக்கி நகரும் வளர்ச்சியடைந்து வரும் ஒரு சிறிய நாடான இலங்கை மீது இத்தனை தூரம் பழிகளை சுமத்தி எமது நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளமையானது ஒரு மாபெரும் வல்லரசு நாடொன்றின் சிறுபிள்ளைத்தனமான செயல் என்றே கூறவேண்டும். உலகில் எந்த நாட்டிலுமே பயங்கரவாதம் இருக்கக்கூடாது என்பதற்காக பிறிதொரு நாட்டின் அனுமதியைக் கூடப் பெறாது அடுத்த நாட்டிற்குள் அத்துமீறி அழிக்கும் நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்கா, இன்று இலங்கை அரசாங்கம் தனது முயற்சியால் பல கொடூரங்களைச் செய்து வந்த ஒரு அமைப்பான புலிகளை அழித்தமை தொடர்பாக பாடம் கற்பிக்க முனைந்துள்ளமையானது வேடிக்கையாகவே உள்ளது. (மேலும்.....)

பங்குனி 18, 2012

பிரபாகரன் கொல்லப்பட்டதை பிரகடனப்படுத்தி

புலிகளின் துரோகி பட்டியலில் முதலிடம் பிடிக்கின்றதா சனல் 4?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரின் தாக்குதல்களின்போது கொல்லப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டார். இதுதவிர அவர் படையினரால் உயிரோடு கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்று சனல் 4 இன் புதிய வீடியோ காட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யானது. பிரபாகரன் கொல்லப் பட்டதான வீடியோ காட்சிகள் இராணுவத்திடம் உள்ளன. அதனை வெகுவிரைவில் உலகுக்கு வெளிப்படுத்துவோம் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியேறிய பொதுமக்களுக்காக இராணுவத்தினரால் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் குறித்து மேற்பார்வை செய்வதற்காக இராணுவத் தளபதி நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார். துணுக்காய் பிரதேசத்தில் அமைந்துள்ள 69ஆவது காலாற்படை முகா மில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்ட இராணுவத்தளபதி அங்கு உரையாற்றும் போதே மேற் கண்டவாறு குறிப்பிட்டார். தேசியத் தலைவர்? பிரபாகரன் சண்டையில் கொல்லப்படாமல் சரணடைந்து இலங்கை இராணுவத்திடம் 2 தினங்கள் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு கொல்லப்பட்ட அவமானத்தைவிட சண்டையில் புற முதுகு காட்டியேனும் கொல்லப்பட்டதை நிறுவவே புலிகளின் எச்சங்கள் இன்றும் முனைந்து கொண்டிருக்கையில் சனல் 4 இன் செய்திகள் நேற்றுவரை புலிகளின் 'தேசத்தின் குரல்' பட்டியலில் இருந்து நம்பர் 1 துரொகியாக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. (இவைபற்றி கேபியின் கருத்து....)

பங்குனி 18, 2012

காங். கூட்டணியை விட்டு வெளியேறுவோம் - தொல்.திருமாவளவன்

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி முடிவு செய்வோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். இவ்வாறான மிரட்டல்? ஒன்றை கருணாநிதியும் அண்மையில் விட்டிருந்தார். இவர்கள் யாவரும் தமது பதவியை இறுக்கப்பிடித்துக்கொண்டு இருப்பதில் மட்டும் குறியாக இருப்பார்கள் என்று தமிழக மக்கள் பேசிக் கொள்கின்றனர். ஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டு உள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு அந்த தீர்மானத்தில் வலு இல்லை. இலங்கை அதிபர் ராஜபக்சே அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள், தமிழர் பகுதியில் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை என்பதை சுட்டிக் காட்டித்தான் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டு உள்ளது. (மேலும்.....)

பங்குனி 18, 2012

காதோடு காதாக...

சனல் 4ல் பெருத்த சந்தேகம்!

சனல் 4 ல் காட்டியதை பார்த்துச் சனம் அழுததாம், எங்கட சனம் ரி.வியில் தமிழ் நாடகங்களைப் பாத்துவிட்டே அழுது புலம்புறதுகள். இப்படியொரு காட்சியைக் கண்டா சும்மாவே! யுத்தம் எண்டா இப்படித்தானே. அழிவில்லை, சனம் சாகேலை எண்டு யாரும் சொல்லவே இல்லையே. உந்த வீடியோவை பார்த்தா சண்டைக்குள்ள சனம் சிக்குப்பட்டு சாகத் துடிக்கும் போதும் கூட படமும், வீடியோவும் எடுக்கிறதிலதான் இவை குறியா இருந்திருக்கினம். அதாலதான் உதில பெருத்த சந்தேகமாக இருக்குது!

தமிழக தலைவர்களின் நீலிக்கண்ணீர்!

கலைஞரும், நடிகையும் இலங்கைத் தமிழருக்காக வடிக்கிற கண்ணீர் இந்து சமுத்திரத்தின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கும். அந்தளவுக்கு தங்கட அரசியல் இருப்புக்காக நாடகம் உதில ஒரு துளியையாவது இங்க யுத்தம் நடக்கேக்க காட்டியிருந்தா எத்தனை தமிழ்ச்சனம் உயிர் பிழைத்திருக்கும். அப்ப கவிதை எழுதியும் அறிக்கை விட்டும் நடித்துவிட்டு இப்ப நடந்ததெல்லாத்தையும் சனம் கெட்ட கனவா நினைத்து நிம்மதியா வாழ்ந்து வரேக்க ஏன் இந்த குரங்குச் சேட்டை. இலங்கைத் தமிழரை நிம்மதியா வாழ விடுவதில்லையெண்டு நீங்க முடிவெடுத்து விட்டீங்களோ?

எல்லாரும் மனுசர் தானே!

முஸ்லிம்கள் புலிகளால் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எடுத்துரைத்திருக்கினம். உண்மைதான். சனல் 4 ஐ பார்க்கும் போது அந்தச் சனம் மூட்டை முடிச்சுக்களுடன் ஓடி வருவதைப் பார்த்தா அண்டைக்கு வடக்கிலயிருந்து இப்படித்தானே அப்பாவி முஸ்லிம்களையும் புலிகள் மூட்டை முடிச்சுக்களோட ஓட ஓட அனுப்பி வைத்தவை எண்டதுதான் ஞாபகத்துக்கு வருகுது. அந்த நேரம் யாராவது வீடியோ எடுத்திருந்தா அதை புலி - 4 எண்டு ஒளிபரப்பியிருக்கலாம். எல்லாரும் மனுசர் தானே!

(நன்றி: தினகரன்)

பங்குனி 18, 2012

"மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை''

இலங்கை பற்றிய உலக நாடுகளின் கருத்தொற்றுமையும் மாறுபட்ட நிலைப்பாடுகளும் நாடுகள் ரீதியான நோக்கு

(சட்டத்தரணி இஸ்மாயில் பி. மஆரிஃப் ) (தலைவர் சுயாதீன தேசிய முன்னணி (ஐநா)

கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட லாம் என்ற ஊகம் குறிப்பிட்ட சிலரிடையே இருந்திருக்கலாம் என கருதப்பட்ட தருணத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்ட செய்தி அமெரிக்கா அதன் முயற்சிகளில் அக்கறை கொள்ளவில்லை என்றும் வெறுமனே பிதற்றுவதாகவும் தற்காலிகமாக சிவப்புக் கொடி காண்பிப்பதாகவும் உலாவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுலாக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானம் வலியுறுத்துக்கிறது. ஆனால் இறுதி வாசகத்தில் உண்மையான எதிர்பார்ப்பு புலனாகிறது. மனித உரிமை பேரவையில் தொழில் நுணுக்க உதவியை இலங்கை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கூறப்பட்டிருக்கிறது. 2009 மேயில் இலங்கையின் வடபுலத்தே புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகான ஐரோப்பிய யூனியன், கனடா போன்ற நாடுகளின் செயல்பாடுகள் மீதான அனுபவத்தை கொண்டு இலங்கை அரசாங்கத்தால் குறித்த விடாப்பிடியான பின்புல சூழ்ச்சி தடுக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. (மேலும்.....)

பங்குனி 18, 2012

நேட்டோவின் நிலைப்பாட்டில் ஆப்கானின் அடுத்த கட்டம்

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் வெளியேற்றம் ஏற்கனவே இரண்டு நாடுகளும் திட்டமிட்டபடி 2013ல் தொடங்கி 2014 கடைசிப்பகுதியிலே முடியவுள்ளது. எஞ்சியுள்ள காலங்களில் நேட்டோ வீரர்களை ஆப்கானிஸ்தானில் வைத்துக் கொள்வதில் காபுலும், வொஷிங்டனும் கடுமையான சாவல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நேட்டோ வீரர்களின் பொறுப்பற்ற நடத்தைகள் போக்குகள் என்பன இஸ்லாமியர்களை ஆத்திரம் கொள்ளச் செய்கின்றன. ஏற்கனவே புனித குர்ஆன் பிரதிகளை எரித்தமை சுட்டுக் கொல்லப்பட்ட சடலங்கள் மீது சிறுநீர் கழித்தமை உள்ளடங்கலான பல்வேறு விடயங்களில் நேட்டோ, அமெரிக்கா, மேற்குலகம் மீது முஸ்லிம்கள் வெறுப்புடன் உள்ளமை தெரிந்ததே. இந்நிலையில் சென்ற வாரம் ஆப்கானில் ஹெல்மன்ட் மாகாணத்தில் 16 முஸ்லிம்கள் அமெரிக்க வீரரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் சிறுவர்கள் முதியவர்களே இந்த வீரரின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். (மேலும்.....)

பங்குனி 18, 2012

‘Tamil people for peace, development’

It was the US which commenced the war on terror and banned many terrorist organizations, including the LTTE after 9/11.The US identified the LTTE as a terrorist organization and encouraged the government to destroy it. But now, they are saying a different thing and trying to find fault with us for destroying a terrorist group. Sri Lanka has been able to eradicate terrorism, which the US has not been able to do in Iraq and Afghanistan. The people of the Northern and Eastern Provinces are happy today after the ending of the war. Everything is getting better in Sri Lanka especially in the North and East. People live without fear and in peace, and the country is experiencing massive development, said Vice President of the Sri Lanka Freedom Party (SLFP) and Resettlement Deputy Minister Vinayagamoorthy Muralitharan in an interview with the Daily News. (more.....)

பங்குனி 18, 2012

இலங்கையின் உறக்கத்தை கலைக்கும் அமெரிக்காவின் எச்சரிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக் கூறாவிட்டால் இலங்கையில் மீண்டும் போர் உருவாகக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா விடுத்த இந்த எச்சரிக்கையை எவரும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது. இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வருகின்ற அமெரிக்கா, வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் மிகத் தெளிவாக உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. (மேலும்.....)

பங்குனி 18, 2012

'இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன்' டெண்டுல்கரின் 100வது சதம்

டெண்டுல்கர் விசிறிகள் மாத்திரமல்லாமல், உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த வெள்ளியன்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். காரணம், அவர்களது சுமார் ஒரு வருட காலக் காத்திருப்புக்கு சுபமாக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் இதே மாதத்தில், அதாவது மார்ச் 12ம் திகதி, உலகக் கிண்ணப் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியின் போது தனது 99வது சதத்தை அடித்து, நூறாவது சதம் என்ற மைல் கல்லுக்கான ஏக்கத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் விதைத்து விட்டார் டெண்டுல்கர். அன்று முதல் அவர் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் 100 சதத்தை அவர் அடித்து விடுவார் என்ற ஏக்கத்திலேயே காத்திருந்தனர் கிரிக்கெட் ரசிகர்கள். அவர்களது ஒரு வருட காலக் காத்திருப்பு வீண் போகவில்லை. (மேலும்.....)

பங்குனி 18, 2012

இலங்கைக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் துருக்கி!

நேட்டோ நாடுகளின் உறுப்பு நாடான துருக்கி என்றும் இலங்கைக்கு ஆதரவு தெரி வித்து வந்துள்ளது. சென்ற வருடம் துருக்கி நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதியுடன் அஸ்வர் எம்.பி. தூதுக் குழுவில் இடம்பெற்றார். தற்போதைய ஜெனீவா பிரச்சினை சம்பந்தமாக துருக்கி நாட்டின் அதனை எடுப்பதற்கு துருக்கி நாட்டின் தூதுவராக நியமனம் பெற்ற திருமதி பாரதி மனோ விஜேரத்ன அவர்களோடும் தொடர்பு கொண்டு நேற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். துருக்கி ஒரு நேட்டோ நாடாக இருந் தாலும் துருக்கி நாட்டு ஜனாதிபதி உமர்குல் அவர்களுக்கும் எமது ஜனாதி பதிக்கும் நெருக்கிய நட்பு நிலவி வருவ தாகவும் ஜெனீவா மனித உரிமைகள் 0மகா நாட்டில் துருக்கிக்கு வாக்குரிமை பெற்ற நாடாக இலாவிட்டாலும் உரிமை பெற்ற முஸ்லிம் நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் மீதும் தமது செல்வாக்கை பிரயோகித்து இலங்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கு துருக்கிய நாட்டின் உதவிகளைப் பெற இலங்கை ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மேலும் அவர் கூறினார். இலங்கையின் முதல் தூதுவராக திருமதி பாரதி மனோவிஜயரத்ன ஏப்ரல் மாதம் நடுப் பகுதியில் துருக்கிக்கு பதவிபெற்று செல்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

பங்குனி 18, 2012

இனப்பிரச்சினை தீர்வுக்கு ஐ.நா.விடம் உறுதிப்பாட்டைக் கோரும் இரா. சம்பந்தன்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேசிய இனப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலியுறுத்த வேண்டுமென சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்ட காலமாக தமிழ் மக்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு காத் திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படுவதனை மனித உரிமைப் பேரவை உறுதி செய்ய வேண்டுமென கோரியுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட் டில் சமாதானத்தை நிலைநாட்ட கிட்டி யுள்ள சந்தர்ப்பம் நழுவிக் கொண்டிருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் மீளவும் ஏற்படுவதனை தடுப்பதற்கு மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

பங்குனி 18, 2012

யாழ்ப்பாணச் சோசலிசம் 1

“சோசலிசம்” என்ற சொல்லைக் கேள்விப்படாத வாசகர்கள் எவரும் இருக்கமாட்டார்கள், என்பது மறுக்க முடியாத உண்மை. உலக நாடுகள் பல ஒரு காலத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைமையின் கீழ் சோசலிச அணியாகவும், அமெரிக்கா தலைமையில் பல நாடுகள் முதலாளித்துவ அணியாகவும் இருந்தது பழைய கதையாகிப் போய் விட்டது. மூன்றாவது உலக யுத்தம் தோன்றுமோவென முழு உலக மக்களுமே பனிப்போரின் (Cold War) வெம்மை தாளாமல் அச்சப்பட்ட காலமும் இருந்தது. இவற்றை விபரிக்க விழைந்தால், நான் சுவைபடக் கூறப்போகும் யாழ்ப்பாணச் சோசலிசம் சுவை கெட்டுப் போய் விடுமென்பதால் கைவிடுகின்றேன். மிக நீண்ட காலம் அரச சேவையிலிருந்து இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உத்தியோகத்தரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. யாழ்ப்பாண வாழ்வியல் குறித்து நீங்கள் எழுதியவற்றை வாசித்துள்ளேன். என் அரச சேவைப்பட்டறிவால் பெற்ற 4 வகை யாழ்ப்பாணச் சோசலிசம் பற்றி எழுதுங்கள் என்றார். (மேலும்.....)

பங்குனி 18, 2012

The 7 Best Reasons To Retire Overseas

(Kathleen Peddicord | U.S.News & World Report )

Relocating overseas is often a grand adventure. You get to reinvent yourself in a new place and completely start over. Moving to a foreign country in retirement could also dramatically lower your cost of living, housing, and medical care, meaning you could afford more luxuries than would ever be possible in the U.S. Here are the seven best reasons to retire overseas. (more.....)

பங்குனி 18, 2012

அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்ற  அமெரிக்க ராணுவ வீரர்

அமெரிக்கப் படை வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் 9குழந்தைகள் உள்ளிட்ட 16 பேரை அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து அமெரிக்கா வெகு விரைவில் புலனாய்வு செய்து, குற்றவாளிக்குச் சட்டப்படி கடும் தண்டனை விதிக்க வேண்டுமென ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கி மூன் நியூயார்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் தெரிவித்தார். பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் படையினர் மக்களைப் பாதுகாக்குமாறு பான் கி மூன் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் இச்சம்பவத்தை முழுமையாக புலனாய்வு செய்து, தொடர்புடையோர் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மிகக் கடினமான அறைகூவலை எதிர் கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே முடிவான திட்டத்தை நிறைவேற்றுவது, அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வது, ஆப்கானிஸ்தான் போருக்கு முடிவு காண்பது ஆகியவற்றில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று ஒபாமா கூறினார்.

பங்குனி 18, 2012

படையணி பயிற்சியில் ஈடுபட்டிருந்த யாழ்.மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்!

தேசிய மாணவர் படையணி பயிற்சிக்காக ரந்தம்பை என்னும் இடத்துக்கு கடந்த 7 ம் திகதி அழைத்துச்செல்லப்பட்ட யாழ் மாணவர்கள், அங்கே பயிற்சியில் காட்டிய அதீத திறமையை பார்த்து, சிங்கள மாணவர்களுக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியே கடந்த 12 ம் திகதி யாழ் மாணவர்கள் மீது நடத்திய முதலாவது தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது. அதன்பின்னர் கடந்த 14 ம் திகதி மதிய உணவு எடுக்க சென்ற யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் மாணவன் ஒருவர் தலையில் படுகாயமடைந்தார். இவ்விடயம் உடனடியாக ஆசிரியர்களால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் அவர்களால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதிலடியாக யாழ். மாணவர்களும் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பல சிங்கள மாணவர்களும் படுகாயமடைந்தனர். (மேலும்.....)

பங்குனி 17, 2012

இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார மாற்றத்திற்கான நெருக்கடி

(ஸ்ரீதரன் - பத்மநாபா ஈபிஆர்எல்எப்)

இலங்கையில் வரலாறு காணாத சமூக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். 1953 ஹர்த்தாலுக்குப் பின் 1981 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிலிருந்து துரத்தப்பட்டதன் பின்னர் இதுவொரு புதிய வித்தியாசமான எழுச்சி நிலையாகும். ரயில்வே தொழிலாளர்களின் குடும்பங்கள் தண்டவாளங்களில் சமையல் செய்து தமது எதிர்ப்பை தெரிவித்தது ஒரு சில தலைமுறைகளுக்கு முந்தியவர்களுக்கு அனுபவமாக இருக்கும். அரிசி விலையுயர்வு இங்கு பிரதான பிரச்சினையாக இருந்தது. 60 ஆண்டுகளை எட்டும் நிலையில் இங்கு நாடளாவியளவில் மக்கள் கிளர்ச்சிகளும் களநிலைமைகளும் தோன்றியுள்ளன என்றால் அது மிகயைல்ல. உலகளாவிய பின்புலத்திலேயே நாம் இதனை பார்க்க வேண்டும். ஐரோப்பிய நாடான மேற்கத்திய கலாச்சாரத்தின் தொட்டிலான கிரேக்கத்தில் வெடித்தெழுந்த கிளர்ச்சித் தீ இன்னும் ஓயவில்லை. அமெரிக்காவின் வால் தெரு ஐரோப்பா எங்கணும் மக்கள் வீதிக்கு வந்துள்ளார்கள். (மேலும்....)

பங்குனி 17, 2012

இன நல்லிணக்கமே இன்றைய தேவை

(கலாபூஷணம் எஸ். எம். சஹாப்தீன் )

கடந்த மூன்று தசாப்த காலமாக நம் அன்னை பூமியாகிய இலங்கை கொடூர யுத்தம் ஆட்டிப்படைத்தது. 2009 மே மாதம் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு, நாட்டில் சமாதானம் மீண்டும் நிலைநாட்டப்பட்டு விட்டது. மக்கள் இப்போது எங்கும் சுதந்திரமாக உலா வருகின்றனர். இயல்பு வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. அசாதாரண சூழ்நிலை சுழன்றடித்த வேகத்தில் அமைதியின்மையும், சமூகங்களுக்கிடையே பிளவுகளும், பொருளாதார வீழ்ச்சியும், அனர்த்தங்களும் சொல்லொணா அளவுக்கு இடம்பெற்றன. இன்று நிலைமை அப்படியல்ல. யுத்தம் முடிவுற்று, பயங்கரவாதம் படுதோல்வி கண்டு நாட்டில் சமாதானம் நிலைகொண்டிருப்பதை மறுக்க முடியாது. இந்த சமாதான சூழலில் பல்லின சமூகங்கள் வாழும் நம் நாட்டில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம ஏற்பட வேண்டியது அவசியமும், அவசரமுமாகும். இந்த நல்லிணக்கமே இன்றைய அவசரத் தேவை என்பதில் கடுகளவும் ஐயமில்லை. (மேலும்.....)

பங்குனி 17, 2012

நீதி நிலைத்திட வேண்டும்

“இலங்கை கொலைக்களமும் தண்டிக்கப் படாத போர்க்குற்றமும்” என்ற தலைப்பில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப் படம் நெஞ்சத்தைக் கிழித்து ரத்தம் வரவழைப்ப தாக உள்ளது. மனச்சாட்சி உள்ள யாரும், மனிதன் என்று தன்னைக் கருதிக்கொள்கிற யாரும் இந்தக் காட்சிகளைக் கண்டு மனம் கலங்காமல் இருக்கமாட்டார்கள்.  இலங்கையில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப் பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அமைத்த குழு கூறியுள்ளது. உண்மையில், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும். (மேலும்.....)

பங்குனி 17, 2012

Photographs, Videos found in terror TV station bare dark secrets

South Indian Politician Viko had been photographed in LTTE uniform

Sri Lankan soldiers of Army 58 Division have made a startling discovery exposing an abominable conspiracy against Sri Lankan citizens. The soldiers have found several recently taken photographs and video footages from a building earlier occupied by the LTTE terrorists showing certain South Indian politicians in LTTE camps in Wanni . According to the defence sources in Puthukkudiyiruppu, the items have been found by the infantrymen of 6 Gamunu Watch (6GW) this afternoon (Feb 28), while engaged in clearing operations at the captured LTTE satellite communication center, in Puthukkudiyiruppu West. (more....)

பங்குனி 17, 2012

ஈரான் மசகு எண்ணெய் விவகாரம்

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை மிரட்டல்?

ஈரானுடன் இந்தியா தொடர்ந்து பொருளாதார உறவுகளை வைத்துக் கொள்ளுமேயானால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியிருப்பதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்கவேண்டும். அவ்வாறில்லையெனில் பொருளாதாரத் தடை பரிசீலிக்கப்படும் என்று பெயர் கூறவிரும்பாத அமெரிக்க அரசு நிர்வாகி ஒருவர் கூறியதாக புளூம்பர்க் ஒயர் செய்திகள் கூறியுள்ளது. இது குறித்து ஜூன் 28ஆம் திகதி முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டியிருப்பதாக அந்தச் செய்திகள் கூறுகின்றன. அதாவது இந்தியாவுக்கு 10 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஈரானுடனான மசகு எண்ணெய் இறக்குமதிகளை இந்தியா குறைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. (மேலும்.....)

பங்குனி 17, 2012

World’s first Gold jewelry car seen in Mumbai, India

The World's first Gold jewelry car, claimed by Tata, is seen during an unveiling ceremony in Mumbai, India, Sept. 19, 2011. About 80 kg of 22 karat gold, approximately 15 kg of silver and 10,000 gemstones were used to decorate the Tata Nano car.

பங்குனி 17, 2012

பெண்களைப் பழித்த ஒளவையின் பெயரால் விருது வழங்கலாமா?

(சு.பொ.அகத்தியலிங்கம்)

ஒளவை யின் பெண்கள் பற்றிய பார்வை பழுதானது.அவர் வாழ்ந்தகாலத்து நிலப்பிரபுத்துவ சிந்தனை சார்ந் தது. எனவே அவர் பெயரால் பெண் கள் விருது பொருத்தம் தானா? டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மணலூர் மணியம்மா, மூவ லூர் ராமாமிர்தம் அம்மையார், தில்லையாடி வள்ளியம்மை போன் றோர்கள் பெயரில் வழங்கலாமே, பெண்விடுதலையை உரக்கப் பாடிய பாரதி, போராடிய பெரி யார், சிங்காரவேலர் இவர்கள் பெய ரில் வழங்கினாலும் தகுமே. ஏன் கணவன் வாக்களிக்கும் கட்சிக்குத் தான் மனைவியும் வாக்களிக்க வேண்டும் என்ற மரபு பழக்கத்தை உடைத்த எம்.ஜி.ஆர் பெயரில்கூட வழங்க லாம்.. ஒளவை பெயரில் வழங்குவது பொருத்தமற்றதே. (மேலும்.....)

பங்குனி 17, 2012

High Commissioner Wagiswara addressed Canadian Parliamentarians

The High Commissioner for Sri Lanka in Canada Mrs. Chitranganee Wagiswara addressed a gathering of the Members of the House of Commons at a breakfast meeting convened by Joe Daniel, M.P, for Don Valley East constituency, held in the Canadian Parliament on March 13, 2012.  The meeting was Chaired by Brad Butt, M.P, for Mississauga-Streetville constituency.In her address, High Commissioner Wagiswara briefed the parliamentarians on the historical perspective of the ethnic conflict in Sri Lanka and the resort to terrorism by the LTTE. She spoke of the ruthless terrorist campaign waged by the LTTE in Sri Lanka and abroad over the last three decades, which ended with their defeat in May 2009. (more....)

பங்குனி 17, 2012

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100வது சதம் பெற்று சச்சின் சாதனை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி யில் பங்க ளாதேஷ் அணியுட னான நேற்றைய ஆட்டத் தில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண் டுல்கர் பெற்ற சதமானது கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் வீரர் ஒருவர் பெற்ற 100வது சதம் என்ற சாதனையை நிலை நாட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதங்களையும், 461 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களையும் பெற்று இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1989ம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் தனது முதல் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றார். இதேவேளை அதே ஆண்டு பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் போட்டித் தொடரில் தனது முதலாவது போட்டியில் களமிறங்கினார். இதேவேளை சச்சின் டெண்டுல்கர் 100வது சதத்தை அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

பங்குனி 17, 2012

Times Higher Education ranks three Canadian universities among top 25 in the world

Canada has three of the top 25 universities in the world, according to the 2012 Times Higher Education  magazine's reputation rankings. The survey rates 100 schools based on the opinions of more than 17,000 academics from 137 countries. The British-based publication's rankings are dominated by universities in the United States, United Kingdom and Japan. Harvard was first, scoring 100 points, followed by the Massachusetts Institute of Technology and Cambridge University. The University of Toronto was the top Canadian institution, ranked 16th, which was one spot better than last year. The University of British Columbia and McGill University in Montreal tied for 25th place, with UBC jumping six places. (more....)

பங்குனி 17, 2012

பிரபாகரன் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டனர், சேனல்-4 வீடியோ வெளியீடு

“இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றனர்’’ என்கிற அதிர்ச்சிகரமான தகவலுடன் கூடிய ஆவணப்படத்தை பிரிட்டனின் சேனல் - 4 தொலைக்காட்சி வியாழனன்று வெளியிட்டது. “இலங்கைக் கொலைக்களம் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” என்கிற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி கட்டப் போரில் இலங்கை ராணுவத்தினர் கடுமை யான போர்க்குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் கூறுகிறது. இந்தக் காட்சிகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. (மேலும்.....)

பங்குனி 17, 2012

புனர் வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் தென்பகுதியில் வாழ விரும்பின் காணிகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர்களுக்கு தெற்கில் வாழ்வதற்குக் காணிகள் வழங்கவும் தயார் என தெரிவித்த பிரதமர் தி. மு. ஜயரத்ன அதற்கு விருப்பமுடைய பயிலுனர்கள் இருப்பின் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக் கொண்டார். கம்பளை, அம்புலுவாவ உயிர் பல்வகைமைத் தொகுதியினைப் பார்வையிட வந்திருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். எம்மிடையே இன, மத, கலாசார ரீதியான பிரிவு இருக்கின்றது. ஆனாலும், பிழையான அரசியல் நோக்கங்களினால் மனிதன் தவறான முறையில் வழிநடத்தப் படுகின்றான். மனிதர்களைச் சரியான முறையில் வழிநடத்துவதனை விடவும் அவர்களை தவறான முறையில் வழிநடத்துவது இலகுவான காரியமாகும். ஆனாலும், தறவான வழியில் சென்ற மனிதனை மீண்டும் சரியான வழிக்குக் கொண்டு வருவதற்கு பாரிய அர்ப்பணிப்பினை மேற்கொள்ள வேண்டும்.

பங்குனி 17, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே ! வறுமையினால் தற்கொலை

(தோழர் சுகு)

வரணிப்பகுதியில் 21 வயது பெண்ணும் அவளது ஆறு வயது மகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகைகளில் பார்க்க நேர்ந்தது. இந்த பெண்ணின் கணவர் 2007 இல் காணாமல் போய்விட்டார். இந்த இருவரும் உறவினர் வீட்டில் வசித்ததாக பத்திரிகைச் செய்தி. இது சாதாரண அன்றாடச் செய்தி .பாரிய மன அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி. இப்படி அன்றாடம் நடக்கலாம். அதற்காக இதனை வழமை என்று எடுத்துவிட்டு போய்விட முடியாது. இந்த சிறு பெண்ணினதும் குழந்தையினதும் நிலைமை ஒரு சோக சரிதம். இளம் பராயத் திருமணம். திருமணம் செய்த குறுகிய காலத்திலேயே கணவர் காணாமல் போனது வறுமை, உறவுகளின் தயவில் வாழ வேண்டிய நிலை மரணம். (மேலும்.....)

பங்குனி 16, 2012

அமெரிக்காவிற்கு எதிரான ஆர்பாட்டத்தில் இலங்கை மக்கள்

பங்குனி 16, 2012

சொல்லுவதெல்லாம் உண்மை

(யாழ்பாடி)

இலங்கைவாழ் தமிழ் மக்களின் இன்றைய நிலமைகளையும், தேவைகளையும் ஆயுதப் போராட்டத்தின் போக்கில் ஏற்பட்ட தவறான செயற்பாடுகளையும் மிகச்சரியான கண்ணோட்டத்தில் எடுத்தியம்பி நிற்கின்றது இக்கட்டுரை. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எமது சமூகத்தில் இருந்த சில (மிகச்சில) தீர்கதரிசிகள் படித்து படித்து சொல்லி வந்த பல உண்மைகளையும் யதார்தங்களையும் இக்கட்டுரை மிக எளிய நடையில் எடுத்தியம்புகின்றது. மேற்குலகின் போர்க்குற்றம் சம்மந்தமான செயற்பாடுகளின் நோக்கங்களை மேற்குலகு நடாத்திய, நடாத்திக் கொண்டிருக்கின்ற அண்மைக்கால சர்வ தேச நிகழ்வுகளின் பாடங்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் இக்கட்டுரை எம்மில் பலரின் அறிவுக் கண்களை சரியான திசை வழியில் செலுத்த உதவ வேண்டும் என்பதே என்(ம்) அவா. இது நிகழுமா...? என்பதைவிட நிகழவேண்டும் என்பதே என(ம)து நியாயாதிக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு ஆகும். வாழ்த்துக்கள் யாழ்பாடி இற்கு நல்ல கட்டுரையை வரைந்தமைக்காக.... -  சாகரன்

(கட்டுரையை வாசிக்க......)

பங்குனி 16, 2012

சனல் 4 காணொளி வெளியாகியது!

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கையின் கொலைக்களம் - தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள் என்ற காணொளி இன்று வெளியிடப்பட்டது.

ஏற்கனவே இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் செனல் 4 தொலைக்காட்சி, இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான காணொளி ஒன்றை தயாரித்து வெளியிட்டது. இந்த நிலையில் அதன் தொடர்சியான இன்றைய தினம் புதிய காணொளியை வெளியிட்டுள்ளது. இதில் 12 வயதான புலிகளின் தலைவர்.பிரபாகரனின் மகன் பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை குறித்த விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 49 நிமிடங்கள் கொண்ட இந்த காணொளி குறித்து, இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாட்டை இன்று வெளிப்படுத்தியது. கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சாரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின் போது, பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். சனல் 4 தொலைக்காட்சியின் இந்த காணொளிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்.கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் நியமித்த தாருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழுவின் அறிக்கை பின்தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் மகிழ்சியடைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். (காணொளியை பார்க்க....)

பங்குனி 16, 2012

சேனல் 4 வசம் பிரபாகரன் குறித்த ’பரபரப்பான’ வீடியோவும் சிக்கியுள்ளது?

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனத்திடம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாகடெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்தரின் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை) ஒளிபரப்பப் போவதாக சானல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சியும் இடம் பெற்றிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.  (மேலும்.....)

பங்குனி 16, 2012

‘தமிழ்வின்’ இணையத்தளம் இப்படி கூறுகின்றது

தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சர்ச்சைக்கு உள்ளாகும் சனல் 4

தமிழ் மக்கள் ஆவலுடன், பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது காத்து நிற்கும் விடையம் என்னவென்றால், அது சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள கொலைக்களங்கள் பாகம்- 2 தான். இலங்கை இராணுவம் புரிந்த பல போர்குற்ற ஆதாரங்களைத் தாங்கிவரும் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக அது தெரிவிக்கிறது. இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும், அதில் அவர் கொல்லப்பட்டாரா ? இல்லை அப்படி இலங்கை அரசு நம்புகிறதா என்பது போன்ற சந்தேகத்துக்குரிய விடையங்களை சனல் 4 இதில் அலசியுள்ளது. (மேலும்.....)

பங்குனி 16, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கூடாது

ஐ. நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஒருதலைப் பட்சமானது என்றும், அதனால் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கூடாது எனவும் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாகப் பேசிய சாமி :- இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் ஒருதலைப் பட்சமானது. ஏனெனில் அத்தீர்மானத்தில் விடுதலைப் புலிகள் செய்த கொலைகள் மற்றும் கற்பழிப்புகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அப்பாவி சிங்களவர்கள், தமிழர்கள் உட்பட பலர் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்டனர். ஆகவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பிரதமர் ஆதரிக்கக் கூடாது. ஆனால் இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு, உரிமைகளும், அதிகாரங்களும் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும்படி செய்ய ஜனாதிபதி ராஜபக்ஷவை வலியுறுத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்றார்.

பங்குனி 16, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கிடையில் இருவேறு கருத்துக்கள் - சுரேஸ் பிரேமசந்திரன் குத்துக்கரண அரசியல் அறிக்கை!

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்காமல் இருக்க தீர்மானித்துள்ளமையின் காரணமாக கூட்டமைப்பிற்கிடையில் இருவேறு கருத்துக்கள் தோன்றியுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை சேர்ந்த ஒரு கட்சியினர் மாத்திரம் தமக்கு விரும்பியவாறு செயற்படுவது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான (சுரேஸ்) விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

பங்குனி 15, 2012

சேனல் --4 அல்ல., சேனல்  போர்ர்…..!

பிரபாகரன், கொல்லப்பட்ட விதம் வீடியோவில் இல்லை

தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற பெயரில் , இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேனல் -4 என்ற தொலைக்காட்சி இன்று வெளியிட்ட வீடியோவில் எதிர்பார்த்த அளவிற்கு பெரும் அதிர்ச்சியை வெளிக்கொணரும் வகையில் எந்தவொரு காட்சிகளும் இதில் இடம்பெறவில்லை. ஏற்கனவே காட்டப்பட்ட விஷயங்களும், சில குண்டுவெடிப்புகளும், சில மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதும் போன்ற காட்சிகளும், பிரபாகரன் மகன் இறந்து கிடக்கும் காட்சிகளும் இருந்ததே தவிர அப்பட்டமான வெறிச்செயல்கள் எதுவும் இந்த கோப்பில் ( சேனல் --4 க்கு கிடைக்கவில்லை ) இடம்பெறவில்லை. குறிப்பாக புலித்தலைவர் பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார், எவ்வளவு தூரம் கொடுமை படுத்தப்பட்டார் என்ற விவரம் இன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் 40 நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த கோப்பில் இவ்வாறு இடம் பெற்றுருக்குமாயின் பெரும் எதிர்ப்பையும், கண்டணத்தையும் எழுப்பியிருக்கும். ஆஸ்பத்திரி மீது குண்டு வீச்சு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இறந்து கிடப்பது போன்ற ஒரு காட்சி இருக்கிறது. ( அதுவும் சில புகைப்படமாக தெரிகிறது ) புலித்தலைவர் பிரபாகரன் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்ற காட்சிகள் எதுவும் வீடியோவில் இல்லை. இந்த வீடியோ கொடூர காட்சிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் தெரிந்ததாகவும், ஆசிய நாடுகளுக்கு சரிவர தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இலங்கை தூதர் மன்னிப்பு கோரினார்: இதற்கிடையில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத்கரியவாசம் இன்று மத்திய வெளியுறவு துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார். நேற்று அளித்திருந்த பேட்டியில் அவர் எம்.பி.,க்கள் புலி ஆதரவாளர்களால் தூண்டப் படுகின்றனர் என குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விளக்கம் அளிக்க அவருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து அவர் வெளியுறவு துறை அமைச்சகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்திய எம்.பி.,க்களை தாம் மதிப்பவன் என்றும். தவறு இருக்கும் பட்சத்தில் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார். - தினமலர்

பங்குனி 15, 2012

ஐ.நா. இல்

இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நாளையாகும். இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை அமெரிக்கா வாபஸ் பெறுவதற்கு இடம் இருக்கிறதென ஜெனீவா மனித உரிமைகள் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. அமெரிக்காவின் பிரேரணையை செல்லுபடியற்றதாக்கும் முயற்சியில் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இறங்கியுள்ளன. இதற்காக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, (No action motion)  நடவடிக்கை எடுக்கக்கூடாதென்ற பிரேரணையைக் கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகின்றது. (மேலும்.....)

பங்குனி 15, 2012

மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரம்

நல்லிணக்கம் பாதிக்கப்படாத வகையில் இந்தியா இறுதித்தீர்மானத்தை எடுக்கும்

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்துக்கும், தமிழ்க் கட்சிகளுக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்தே ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். இந்தியாவின் மாநிலங்களவையில் நேற்று இலங்கை தொடர்பாக விசேட உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டிருக்கும் பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுக்கும்போது பலதரப்பட்ட விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

பங்குனி 15, 2012

கனேடிய டொரோண்டோ தமிழர்கள் தேர்தல் மோசடி

கனடிய செய்தி நிருபனமான CBC தனது செய்தி விசாரணையில்; டொராண்டோ ஸ்கார்பரோ கிழக்கு Scarborough – Rouge River. தமிழ் சமூகத்தில் கனடிய  பாராளுமன்ற, மகாணசபை  மற்றும்  நகரசபை தேர்தல் காலத்தின் போது தமிழர்கள் செய்த மோசடி குற்றச்சாட்டுக்களை தற்போது கனடிய செய்தி  CBC நிருபணமாக்கியது.

Voter fraud allegations dog east Toronto riding

Namu Ponnambalam said once a voter's name is fraudulently added to a municipal voters list,

 it will be automatically moved to the provincial and federal voters list.

CBC News :

http://www.cbc.ca/news/canada/toronto/story/2012/03/13/voting-scarborough.html

பங்குனி 15, 2012

தமிழக மக்களின் ஒன்றுபட்ட ஆதரவினை வரவேற்கின்றோம்

ஸ்ரீலங்கா இனவாத அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கட்டுமீறிய இனப்படுகொலை மற்றும் தமிழர் வாழ்விடங்களில் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள், உட்பட சிங்கள இனவாத அரசினால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் மேற்கொண்ட இன அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரணியாக தமது ஒன்றுபட்ட ஆதரவினை வெளிப்படுத்தியிருப்பது ஈழத்தமிழ் மக்களிற்கு ஆறுதலை தந்துள்ளது. (மேலும்.....)

பங்குனி 15, 2012

Muslims lash out at LTTE terrorism

A cross section of the Muslim community in Sri Lanka yesterday condemned LTTE terrorist atrocities which were aimed at ethnic cleansing. They recollected the gloomy era of the country when Muslims in the North and East were subjected to untold  hardships and harassment from LTTE terrorists who wanted to carve out a separate homeland by killing tens of thousands of Muslim and Sinhala civilians. They said that their basic rights were snatched by the LTTE during this era. Mohammed S Anees , a farmer living in Eravur remembers how the LTTE brutally killed 173 civilians in his village on August 4, 1990. Anees said hundreds of LTTE cadres who invaded the village with clubs and swords, began killing innocent civilians in the village who were asleep at midnight. He said even pregnant women were not spared by LTTE terrorists. "Infants were dashed to death," he added.Anees said that the Muslim community in the Eastern region depend on fishing and farming. (more....)

பங்குனி 15, 2012

பங்குனி 15, 2012

புலிகள் புரிந்த கொடூரங்களுக்கு முஸ்லிம்கள் வன்மையான கண்டனம்

கடந்த காலங்களில் இன அழிப்புக்காக எல்.ரீ.ரீ.ஈ.யினர் மேற்கொண்ட கொடூரமான செயற்பாடுகளை இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம்களும் வன்மையாகக் கண்டித் துள்ளனர். பிரிவினை கோரிப் போராடிய எல்.ரீ.ரீ.ஈ.யினரால் தமக்கு ஏற்பட்டிருந்த பல்வேறு பாதிப்புகள் மற்றும் கொடிய யுகத்தில் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்ட நிலைமைகள் குறித்தும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம், சிங்கள மக்கள் கொல்லப் பட்டமைக்கும் அவர்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி தனது ஊரான ஏறாவூரில் 173 பேர் எல்.ரீ.ரீ.ஈ.யினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்த ஏறாவூரைச் சேர்ந்த விவசாயியான அனீஸ், வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்த எல்.ரீ.ரீ.ஈ.யினர் நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகக் கூறுகின்றார். (மேலும்.....)

பங்குனி 15, 2012

கொல்லப்பட்ட கடாபியிடம் பணம் வாங்கிய சர்கோசி

கொல்லப்பட்ட லிபியா தலைவர் கடாபியிடம் பிரான்ஸ் ஜனாதிபதி பணம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் இருந்து வெளியாகும் இணையத்தள பத்திரிகை ஒன்று இத்தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது. கொல்லப்பட்ட லிபியா தலைவர் கடாபியிடம் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி கடந்த தேர்தலின் போது பிரசாரத்துக்காக 60 மில்லியன் டொலர் நிதி உதவி பெற்று உள்ளார். கடந்த 2006ம் ஆண்டு டிசம்பரில் இப்பணம் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது சர்கோசி உள்துறை அமைச்சராக இருந்தார். இப்பணத்தை பெற சர்கோசியும் அவரது உதவியாளர்களும் லிபியா சென்று இருந்தனர் என்று அப்பத்திரிகை கூறி உள்ளது.

பங்குனி 15, 2012

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கொள்கையை சர்வதேசம் கைவிட வேண்டும்

யங்கரவாத யுத்தம் முடிவடைந்ததனால் இன்று நாட்டில் ஒரு உண் மையான சமாதானமும், இனங்களுக்கிடையே நல்லுறவும், புரிந்துணர் வும் வலுப்பெற்று வருகின்றது. இதனால் எங்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு உள்ளூரில் எதிரிகள் இருக்க மாட்டார்கள் என்று ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். இவ்விதம் நாட்டை பிரிவினை வாதத்தில் இருந்து காப்பாற்றி ஐக்கியப்படுத் திக் கொண்டிருக்கும் எமது அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச அரச சார் பற்ற அமைப்புகளும், விரல் விட்டு எண்ணக்கூடிய இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்களும் வெளிநாட்டு டொலர்களுக்காக நாட்டையே காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலில் ஈடுபடுகின்றனர். சுதந்திர ஊடக அமைப்பின் ஓரிரு தலைவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள் ளும் சதி முயற்சிகளும் எவ்விதத்திலும் வெற்றியளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (மேலும்.....)

பங்குனி 15, 2012

ஊருக்குத்தான் உபதேசம்! 

அமெரிக்காவின் மனிதஉரிமை மீறல்கள் அதிகரிப்பு

மற்ற நாடுகளை மனித உரிமை மீறல்களுக்காகக் கண்டித்து வரும் அமெரிக் காவில் எந்தத்தடையுமில் லாமல் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. நடப்பாண்டின் துவக் கத்திலேயே அமெரிக்க குடி மக்களான மூன்று ஆப் பிரிக்க-அமெரிக்கர்கள் நாட்டின் காவல்துறையின ரின் அத்துமீறல்களுக்குப் பலியாகியுள்ளனர். பதின் பருவத்தைச் சேர்ந்த ரமர்லே கிரஹாம் நியூயார்க் நகருக்கு அருகில் உள்ள ஹார்லெம் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்தவுடன், கிர ஹாம் ஆயுதங்களோடு இருந்ததாகக் காவல்துறை யினர் கூறினர். ஆனால் பின்னர், கிரஹாம் வசம் எந்தவிதமான ஆயுதங் களும் இல்லை என்பது நிரூபணமானது. மற்றொரு சம்பவத்தில், கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மானுவல் லாக்கின்ஸ் என்பவர் காவல் துறையினரால் கொல்லப் பட்டார். இந்த சம்பவம் மானுவலின் குழந்தைகள் கண் முன்பாகவே அரங் கேற்றப்பட்டது. அதற்குக் காவல்துறையினர் சொன்ன காரணமோ, சொந்தக் குடும் பத்திற்கு அவர் ஆபத்து என்று கருதினோம் என்பது தான். இந்தக் குற்றச் சாட்டை அவர் குடும்பத் தினரும், நண்பர்களும் மறுத்திருக்கிறார்கள். கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்து பகுதியில் டோனி ஜோன்ஸ் என்ற 24 வயது இளைஞர் காவல் துறையினரால் முதுகில் சுடப்பட்டார். அதில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. காவல் துறையினரிடமிருந்து தப்பி ஓடுகையில் சுடப்பட்ட தாகக் கூறப்பட்டாலும் அதற்கான எந்தவித ஆதா ரங்களையும் அவர்களால் கொடுக்க முடியவில்லை. டேனியல் மோஸ்லே என்ற பெண்ணை காவல்துறை யினர் தாக்கியதில் கடந்த பல நாட்களாக அவர் நினைவு இழந்திருக்கிறார். சாதாரண சம்பவம் நடந் தாலே கலவரத்தை ஒடுக்கும் பிரிவினரை இறக்கிவிடுவ தும் அதிகரித்துள்ளது. இந்த சம்பவங்கள் பற்றிக் கருத்து தெரிவிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமையை உலகம் முழு வதும் பாதுகாப்போம் என் கிற அமெரிக்காவின் கூற்று கேலிக்குரியதாகிவிட்டது என்கிறார்கள்.

பங்குனி 15, 2012

என்சைக்கிளோபீடியா அச்சுப் பதிப்பு நிறுத்தம்

244 ஆண்டு பழைமை வாய்ந்த என்சைக்கிளோ பீடியா பிரிட்டனிக்கா தனது அச்சுப் பதிப்பை முற்றாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பதிலாக 32 பாகங்களாக வெளி யாகும் என்சைக்கிளோ பீடியாவை ழுழுமையாக டிஜிடல் முறையில் கொண்டுவருவதாக அதனை பதிப்பிக்கும் சிக்காகோவை மையமாகக் கொண்ட நிறுவனம் அறிவித்துள்ளது. விகிட்பீடியா’ போன்ற தகவல் திரட்டு இணையதளங்களின் வருகையால் பாதிக்கப்பட்ட என்சைக்கிளோபீடியா இந்த முடிவை எடுத்துள்ளது ‘பதிப்பை நிறுத்துவது குறித்து அண்மைக்காலமாகவே ஆலோசித்து வந்தோம். தற்போது புதிய மாற்றமாக அனைத்தையும் டிஜிடல் மயமாக்கவு ள்ளோம்’ என்று என்சைக்கிளோபீடியா தலைவர் ஜோர்ஜ் கவுஸ் குறிப்பிட்டார். 1950, 60 ஆம் ஆண்டுகளில் விற்பனை யில் சாதனை புரிந்த என்சைக்கிளோ பீடியா பாதிப்பு இணையதள வருகையின் பின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதில் 1990 ஆம் ஆண்டு இதன் 120,000 முழுப் பதிப்புகள் அமெரிக்காவில் மாத்திரம் விற்பனையானது.  ஆனால் 2010 ஆம் ஆண்டு என்சைக்கிளோ பீடியா 12,000 முழுப் பதிப்புகளை அச்சிட்டது. அதில் 8000 பதிப்புகள் தான் விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.

பங்குனி 14, 2012

பேசும் படம்

(நன்றி: தினமலர்)

பங்குனி 14, 2012

புலிகள் சார்பான சர்வதேச தமிழ் குழுக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும்

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதை தடுக்கவே முயற்சிக்கின்றன - வாசுதேவ நாணயக்கார

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி தற்போதைய அரசியலமைப்பைக் 'கிழித்தெறிவதன்' மூலமே எமது நாட்டுக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டைத் தடுக்க முடியும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மார்பில் அடித்துக் கொண்டு தாய்நாடு தாய்நாடு எனப் புலம்புவதாலும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் உரையாற்றுவதாலும் எதுவுமே நடக்கப் போவதில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்....)

பங்குனி 14, 2012

அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்களான பாக்கியசோதி சரவணமுத்து, நிமால்கா, பெர்னாண்டோ சுனிலா ஆகியோர் புலிகளுக்காக சேவையாற்றுகின்றனர்¨-அரசாங்கம்!

அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்களான பாக்கியசோதி சரவணமுத்து, நிமால்கா பெர்னாண்டோ மற்றும் சுனிலா அபேசேகர ஆகியோர் புலிகளுக்காக சேவையாற்றி வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. டொலர்களுக்காக சில அரச சார்பற்ற நிறுவனங்களும் அதன் செயற்பாட்டாளர்களும் நாட்டுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாக்கியசோதி சரவணமுத்து, நிமால்கா பெர்னாண்டோ மற்றும் சுனிலா அபேசேகர ஆகியோர் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் முன்வைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. (மேலும்....)

பங்குனி 14, 2012

இந்தியாவின் நிலைப்பாடு

பிரதமர் மன்மோகன் இன்று அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று பாராளுமன்றத்தில் பதில் அளிப்பார் என்று, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியுள்ளார். முன்னதாக ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்குமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை, இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும் என இந்திய பாராளுமன்ற ராஜ்ய சபையில் (மாநிலங்க ளவை) அறிவிக்கப்பட்ட போதிலும் தமிழக எம்.பிக்களின் தொடர் கூச்சலால் இன்றைய இராஜ்ய சபை நடவடிக்கைகள் மூன்றாவது முறையாகவும் ஒத்திவைக்கப் பட்டுள்ளன. முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப் பட்ட இராஜ்ய சபை (மாநிலங்களவை) பின்னர் 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டு சற்று முன்னர் 2 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பங்குனி 14, 2012

பிரபாகரன் உயிருடன் வாழ்கிறார்! உடன் பிறப்புகள் சொல்கிறார்கள்!!, யார் அந்த உடன் பிறப்புகள் ?

(எஸ்.ஜி . ராகவன்) (கனடா)

ஒடுக்கப் படும் தமிழ் மக்கள் நலன் சார் இணையங்கள் இணையவெளியில் தமது சேவையை ஆற்றி வருகின்றன. தமிழ் மக்களை முட்டாள்களாக நினைத்து செய்தி வெளியிடும் பல இணையவெளி செய்தி ஊடகங்களும் உண்டு. புலிகளும் பல பினாமி ஊடகங்களை தமது முகவரி அற்ற செயல் பாடுகளுக்கு வைத்திருந்தனர் அதே வித்தையை பார்த்து இலங்கை, இந்திய புலனாய்வுப் பிரிவுகளும் பல பினாமி இணையங்களை உருவாக்கி விட்டு உள்ளது. இதில் எவை ஒடுக்கப் படும் தமிழ் மக்கள் நலன் சார் இணையங்கள் என்பதை கண்டு அறிவது சாமானியர்களுக்கு சற்று கடினமாகவே உள்ளது. இருப்பினும் தற்போது இணையவழி ஊடக வாசிப்போர் பலரிடம் எந்த எந்த இணையங்கள் எவர் நலன் சார்ந்து இயங்கு கின்றன என்பதை தெளிவாகவே உணரும் திறமை இருப்பதை அறிய முடிகிறது. இதில் இணையச் செய்திகளை வாசிக்கும் மிகச் சாமானிய மக்களே இதனை உய்த்து அறிந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் மக்கள் விரோத இணையங்கள் வெளியிடும் செய்திகளை பகுத்து ஆராயும் திறன் இலங்கையிலும் புலம் பெயர் பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் மத்தியில் காணப் படுகின்றமையே. (மேலும்....)

பங்குனி 14, 2012

சூரியதேவன் பிரபாகரன்’ இராணுவத்தினரிடம் சரணடைந்தது தலையில் கொத்து வாங்கி இறந்தது எப்படி? ?

நிழலை கூட நெருங்க முடியாத ‘எங்கள்  சூரியதேவன் பிரபாகரன்’ இராணுவத்தினரிடம்  எப்படி   சரணடைந்தது?    எப்படி   தலையில்   கொத்து  வாங்கி   மரணமடைந்தார்  என்பதை,   ‘சனல் – 4 இல்’ நாளை   காண்பதற்காக      புலியாதரவாளர்கள்   பெரும்   ஆவலுடன்  காத்துக்கிடக்கிறார்களாம்.    தேசிய   தலைவர் (மாபெரும்   துரோகி) பிரபாகரனுடன்  மனைவி  மதிவதனியும்,  மகள்  துவாரகா,  மகன்   பாலச்சந்திரனுடன்  சேர்ந்து  அவர்களது    மெய் பாதுகாவலர்களோடு    கிட்டதட்ட  50பேர்   சரணடைந்தவர்களாம். தேசிய  தலைவி மதிவதனியம்மாவும்,  மகளும்  இராணுவத்தினரின்   கட்டுப்பாட்டில்    உயிருடன்  தான்  இருக்கிறார்கள். ஆனால்   அவர்கள்  பற்றிய  முழு  விபரங்களை  அறியவேண்டும்  என்றால்   புலம்  பெயர்  புலியாதரவாளர்கள்   ‘சனல்- 4 ’ நிறுவனத்துக்கு   நிறைய     காசுகொடுத்தால்  முழு   விபரமும்   வெளிச்சத்துக்கு  வரும்   என்பதை   அறியத் தருகிறோம். (மேலும்....)

பங்குனி 14, 2012

கருணாநிதிக்கு மன்மோகன் பதில்

எந்த நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இந்தியாவின் செயற்பாடு அமையும்

இலங்கைக்கெதிரான அமெரிக்க தீர்மானம் தொடர்பாக தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு பிரத மர் மன்மோகன் சிங் பதில் எழுதியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்ஸிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையொன்றைத் தாக்கல் செய்துள்ளது. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினர். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பதில் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, இவ்விவகாரத்தில் எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாதவகையில், இந்தியாவின் செயற்பாடு அமையும். எந்நாட்டிற்கும் அவநம்பிக்கை ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது என அதில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

பங்குனி 14, 2012

பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்களா?

(கா. சிவனேசன், ரெரன்ரோ)

 புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனும் அவரது மகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாக சனல்-4 தொலைக்காட்சி ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. மாடு சும்மா சொன்னால் கேட்காது மணிகட்டின மாடு சொன்னால்தான் கேட்கும்  என்பார்கள் அதேபோல வெளிநாட்டில் உள்ள புலிகள்  இயக்கத்தொண்டர்களுக்கு அமைப்புகளுக்கு பிரச்சார வியாபாரத்திற்காக மணிகட்டின மாடுபோல முன்னர் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட மனிதஉரிமை வீடியோ ஒளிப்பதிவு நாடாக்களை ஆயிரக்கணக்கில் சி.டி.க்களாக தமிழர்களுக்கும் ஏனைய இனத்தவர்களுக்கும் இலவசமாக விநியோகம் செய்தார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் இதுபோலியான வீடியோ எனக்கூறியது. (மேலும்....)

பங்குனி 14, 2012

இலங்கையில் மனித உரிமையை மீறியவர்களை தண்டிக்க வேண்டும்  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் எல்டிடிஇ தோற்கடிக்கப்பட்டு மோதல் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன பின்பும் கூட, இறு திக்கட்டப்போரின்போது நடந்த மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது இன்னமும் நடைபெறாமலே உள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசு கற்றுக்கொண்ட படிப் பினைகள் மற்றும் மறுவாழ்வுக்கான குழு (எல்எல்ஆர்சி) ஒன்றை அமைத்தது. இந்தக்குழு தனது பரிந்துரைகளை ஐந்து மாதங்களுக்கு முன்பு அளித்துவிட்ட நிலையிலும் கூட இலங்கை அரசு இதுவரை அவற்றை செயல்படுத்தவில்லை. எல்எல்ஆர்சி குழு பரிந்துரைகளை மேலும் தாமதமின்றி இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு நிலை எடுக்க வேண்டும். நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப் பட்டவர்கள் குறித்து நம்பகத்தன்மையுள்ள விசாரணை நடத்தப்படவேண்டும், மாகாணங்களுக்கு அதிகாரப்பரவல் உள்ளிட்ட அரசியல் தீர்வை இந்தியா வலியுறுத்த வேண்டும்.  அப்பாவி பொதுமக்கள் படுகொலை மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து அதிகமான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் இந்தக்குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகத்தன்மையுள்ள, சுயேட்சையான அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு பொறுப்பானவர் கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.

பங்குனி 14, 2012

உலக வர்த்தக அமைப்பில் சீனாவுக்கு எதிராக அமெ. வழக்கு

சீனா அரிதான நிலமூலப் பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தியதற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் வழக்கு தொடுக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகியன அமெரிக்காவுக்கு ஆதரவாக செயற்படும் என நம்பப்படுகிறது. உலகில் அரிதான நில மூலப் பொருள் ஏற்றுமதியில் சீனா 95 வீத பங்கு வகிக்கிறது. இந்த நில மூலப் பொருட்களைக் கொண்டே உயர் தொழில்நுட்ப பொருட்கள் முதல் ஏவுகணை வரை தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கனணி, கையடக்க தொலைபேசி, ஐபோட், இறுவட்டுகள், ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனா தனது அரிதான நில மூலப் பொருள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி அதன் இந்த ஆண்டுக்கான ஏற்றுமதி கேட்டா 30,000 தொன் என சீன அரசு நிர்ணயித்துள்ளது. இதனால் தொழில்நுட்ப பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் உயரும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு எதிராக சர்வதேச வர்த்தக அமைப்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. எனினும் சூழல் பாதிப்பை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீன அரசு அறிவித்துள்ளது.

பங்குனி 14, 2012

அப்பாவிகள் மீது துப்பாக்கிச் சூடு, அமெரிக்க - ஆப்கான் உறவில் விரிசல்

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் 16 அப்பாவிகளை அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் தற்போது விசுவரூபம் எடுத்து வருகிறது. இச்சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதமாக தலிபான்கள் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால், ஆப்கானில் உள்ள அமெரிக்கப் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆப்கனின் கந்தஹார் மாகாணத்தில் அமைந்துள்ள நேட்டோ படைத் தளத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3 மணிக்கு துப்பாக்கியுடன் வெளியேறிய அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர், அல்கொஜாய் மற்றும் நஜீபான் ஆகிய இரு கிராமங்களுக்குள் சென்று, இரு வீடுகளின் கதவுகளை உடைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 16 பேர் பரிதாபமாகப் பலியாயினர். இச்சம்பவம் தற்போது அமெரிக்காவிற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கான் பாராளுமன்றம், ஆப்கான் மக்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் பொறுமையை இழந்துவிட்டனர் எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நடந்த சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதத்தில், அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஆப்கான் தலிபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பங்குனி 13, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதை இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே மறைமுகமாக உறுதிபடத் தெரிவித்து விட்டார். ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளும் இதன் மூலம் தூக்கி குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன. இன்று மக்களவை கூடியதும் தமிழக எம்.பிக்கள் எழுந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். அப்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து, ஐக்கிய நாடுகள் சபையில் பொதுவாக எந்த ஒருநாட்டுக்கும் எதிரான தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிப்பதில்லை. (மேலும்....)

பங்குனி 13, 2012

தமிழ்தெரியாத புலம்பெயர் தமிழ் இளைஞர்களும் - ஆங்கிலம் தெரியாத முன்னாள் விடுதலைப் புலிகளும்

சிறிலங்காவைப் பூர்விகமாகக் கொண்டவர்களும் தற்போது புலம்பெயர் பிரதேசமான ஐரோப்பாவில் வசிக்கின்ற தமிழ் இளைஞர்கள் குழுவொன்று, வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் புனர்வாழ்வுப் பயிற்சிகளைப் பெற்று வரும் முன்னாள் விடுதலைப் புலிகளை சந்தித்தபோது, அவர்களுடன் தமிழில் உரையாடுவதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்தனர். ஐரோப்பாவிலிருந்த தம்மை சந்திக்க வந்திருந்த தமிழ் இளைஞர்கள் தம்முடன் ஆங்கிலத்தில் உரையாடியதாகவும், தாம் அவர்களுடன் தமிழில் உரையாடியதாகவும், இதனால் புனர்வாழ்வு முகாமில் கடமையாற்றும் இராணுவ அதிகாரிகள் இரு தரப்புக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்ற வேண்டியிருந்ததாகவும், புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று வரும் முன்னாள் புலிகள் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

பங்குனி 13, 2012

‘இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்'

அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகள் எடுத்துரைப்பு, எதிர்ப்பு

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாமென அமெரிக்காவுக்குப் பல்வேறு நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. ஜெனீவாவில் நடைபெற்ற உத்தியோகபற்றற்ற கூட்டங்களில் பங்கெடுத்த பல நாடுகள் அமெரிக்காவுக்கு இந்த அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக மகZர் மற்றும் சிறுவர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடும் விடயம் என பல்வேறு நாடுகள் அமெரிக்காவுக்கு அறிவுறுத்தியிருப்பதாகப் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்....)

பங்குனி 13, 2012

கனடிய தமிழர்களும் வானொலிகளும்

கனடாவின் பெரும்பான்மை சனத்தொகையை கொண்ட  மாகாணம் ஒன்டாரியோ. அதிலும் டொரோண்டோ மற்றும் அதன் மேற்பகதிலும் தான் அதி கூடுதலாக மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இதில் தமிழர்களும்  அடங்குவர். கனடிய தமிழர்கள் என்று சொல்லும் வகையில் பல துறைகளை உயர்ந்தவர்களும் மொழி,பண்பாடு கலாச்சாரம் என்று வளர்ப்பதிலும் இடுபாடு கொண்டவர்கள்.  தமிழ் மக்கள் ஊடகங்கள் என்று  இலவச தமிழ் பத்திரிகைகள், 24மணிநேர வானொலிகள், தொலைக்காட்சிகள் என்று பல உள்ளன அதிலும் குறிப்பாக மாதாந்த கட்டணம்  செலுத்த வேண்டிய  24மணிநேர தொலைக்காட்சி சேவை, 24மணிநேர வானொலிகள் என்று நான்கு வானொலிகள் உள்ளன அவைகள் யாவும் தனிப்பட்ட அலைவரிசையூடாக அதற்கான பிரத்தியோக அலை வரிசை  வானொலி மூலம் சேவைகளை வழங்குகின்றது. (மேலும்....)

பங்குனி 13, 2012

திருச்சி கருத்தரங்கில் உரையாற்ற வந்த இலங்கை பேராசிரியைக்கு எதிராக கல்லூரி முன் போராட்டம்

(தமிழ் நாட்டிலிருந்து எமது சிறப்பு நிருபர்: அருள்)

திருச்சி கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பேசிய இலங்கை பேராசிரியைக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் பெரியார் திராவிட கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை பொலிசார் கைது செய்தனர். திருச்சி விசப் ஹிபர் கல்லூரியின் வணகவியல்துறை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில்  'கம்பெனிகள் வளர்ச்சியில் தனிமனித பங்களிப்பின் முக்கியத்துவம்' என்பது பற்றிய சர்வதேச கருந்தரங்கு 12.3.12 அன்று நடைபெற்றது. இதில் இலங்கை.இந்தோனிசியா, உக்ரைன் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சி மானவர்கள், பேராசிரியவ்கள் கலந்து கொண்டு ஆய்வறிக்கைகள் சமர்பித்தனர். இலங்கை ஜெயவர்தனாபுர பல்கலைக்கழத்தை சேர்ந்த வணிக நிர்வாகதுறை பேராசிரியை ஹேமாமாலினி குணதிலக என்பவரும் கலந்து கொண்டு ஆய்வறிக்கை சமர்பித்து பேசினார். (மேலும்....)

பங்குனி 13, 2012

Let's take accountability seriously

Terrorists alleged to have been summarily executed

The United States has tabled a resolution on Sri Lanka at the 18th Session of the Human Rights Council in Geneva. While it appears on the surface to endorse the report of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC), calling for the swift implementation of recommendations, the resolution includes a demand for the kind of oversight mechanism that the USA itself has not and will not allow with respect to her general conduct. These include the conduct of military operations, the treatment of prisoners and the overall internal processes of accountability and loopholes in the law that consistently let perpetrators off the hook. (more....)

பங்குனி 13, 2012

உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி இந்தியா ஸ்திரநிலையில்

நேற்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை துவக்கி வைத்து ஜனாதிபதி பிரதீபா பட்டில் பேசுகையில், உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி இருந்த போதிலும் இந்தியாவின் பொருளாதாரம் ஸ்திரமாக உள்ளது என்றும், வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 8.9 சதமாக உயர்ந்து இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைகள் மிக பாதுகாப்பாக உள்ளது என்றும் இந்த விடயத்தில் யாருடனும் சமரசமில்லை என்றும், தெரிவித்தார். ஊழல் மற்றும் கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். (மேலும்....)

பங்குனி 13, 2012

எகிப்து அரசுக்கு எதிராக பாராளுமன்றம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றம்

எகிப்தில் ஆளும் இராணுவ கவுன்ஸில் நியமித்த அரசுக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றம் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்துடன் பிரதமர் கமால் அல் கன்ஸரியை பதவி விலகும்படியும் பாராளுமன்றம் அழுத்தம் கொடுத்துள்ளது. இந்நிலையில் எகிப்தில் ஆளும் இராணுவ கவுன்ஸிலுக்கும் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றத்திற்கும் இடையிலான அதிகாரப் போட்டி வலுத்துள்ளது. வெளிநாட்டு நிதிகளை சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க தன்னார்வ தொண்டர்களை நாட்டை விட்டு வெளியேற எகிப்து அரசு அனுமதி அளித்ததற்கு அதிருப்தி தெரிவித்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கூடிய எகிப்து பாராளுமன்றத்தில் சபாநாயகர் சாத் அல் கத்தானி கன்சுரி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். அதற்கு பெரும்பா லான எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். எனினும் எகிப்து அரசை கலைக்கும் அதிகாரம் ஆளும் இராணுவ கவுன்ஸிலிடமே உள்ளது. எவ்வாறாயினும் எகிப்து பாராளுமன்றம் அந்நாட்டு அரசின் மீது நம்பிக்கை இல்லாத பட்சத்தில் அரசு கலைக்கப்பட வேண்டும் அல்லது ராஜினாமா செய்யப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்கள் பெற்றுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு கருதுகிறது.

பங்குனி 13, 2012

தமிழர்களின் நலன்கள் - விருப்புகளுக்கு மாறாக அரசு ஒருபோதும் செயற்படாது

தமிழ் மக்களின் நலன்களுக்கும் விருப்பங்களுக்கும் மாறாக இந்த அரசு எச்சந்தர்ப்பத்திலும் செயற்படாது அத்தோடு எமது மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் பிரதிபலித்தே நாம் அரசில் அங்கம் வகிக்கின்றோம் என பாரம்பரிய சிறுகைத்தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 11.03.2012 அன்று கிளிநொச்சி கல்மடுகுளத்தை விவசாய நடவடிக்கைக்கு திறந்து வைத்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு எம்மக்கள் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழலிலேயே வாழ்ந்தார்கள். ஆனால் இன்று அந்நிலைமையிலிருந்து மீட்கப்பட்டு நிரந்தரமான சமாதானத்தையும் கெளரவமான எதிர்காலத்தையும் நோக்கி சென்றுகொண்டி ருக்கின்றனர். இந்நிலைமையினை பெறுவதற்காக எம் மக்கள் அளவுக்கு அதிகமான இழப்புக்களை சந்தித்திருக்கின் றனர். (மேலும்....)

பங்குனி 13, 2012

ஆப்கானில் 100 ஆண்டுகளின் பின் ரயில் போக்குவரத்து

ஆப்கானிஸ்தானில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததால், அங்கு 100 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளது. ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளின் ரெயில் ஓடாத ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் இருந்து வந்தது. கிழக்கு பகுதியில் ஆங்கிலேயர்களின் மிரட்டலும், வடக்கு பகுதியில் ரஷ்ய இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாகவும் அங்கு ஆட்சி செய்த மன்னர் ரெயில் போக்குவரத்துக்கான நடவடிக்கையை தொடங்கவில்லை. இதனால் அங்கு ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. இந்த நிலையில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் முதன் முறையாக அங்கு ரெயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் எல்லையில் உள்ள ஹைரதானில் இருந்து ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் உள்ள மஷார்- இ- ஷெரீப் நகருக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இது 75 கி. மீட்டர் தூரமாகும். இந்த தண்டவாளத்தில் விரைவில் சரக்கு ரெயில் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளது.

பங்குனி 13, 2012

வலுப்பெறுகிறது முதலாளித்துவ எதிர்ப்பு முன்னணி-பாகிஸ்தானில் புதிய எழுச்சி 

அமெரிக்காவில் நடைபெற்று வரும் முதலாளித்துவ எதிர்ப்பு கைப்பற்றுவோம் போராட்டங்கள் உலகின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் பாகிஸ்தானும் ஒன்றாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று அமெ ரிக்காவில் துவங்கிய போராட்டம், ஒரு மாதத்திலேயே பாகிஸ்தானில் பிரதிபலித்தது. ஐரோப்பிய நாடு களில் முதலாளித்துவ எதிர்ப்பு கைப் பற்றுவோம் போராட்டங்கள் நடப்ப தற்கு முன்பாகவே இங்கு துவங்கிவிட்டன. அமெரிக்க எதிர்ப்பு என்பது ஏற்கெனவே பாகிஸ்தானில் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதற்கு கொள்கை ரீதியான வடிவம் கொடுக்கும் வாய்ப்பாகவே அந்நாட்டிலுள்ள முற்போக்காளர்கள் மற்றும் இடதுசாரிகள் இதைப் பார்த்தனர். ஒன்றுபட்ட இயக்கத்திற்கான தயாரிப்புகளில் இறங்குவது என்றும் அவர்கள் முடிவெடுத்தனர். (மேலும்....)

பங்குனி 12, 2012

பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்கிறது சனல் 4 ஆவணப்படம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் இரண்டாவது ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரச படையினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு ஆதாரமாக சனல் 4 புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த வீடியோ நேற்று ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்ற இந்த ஆவணப்படம்  60 நிமிடங்களை கொண்டது. நாளை மறுதினம் சனல் 4 தொலைக்காட்சியில் இது ஒளிப்பரப்பாக உள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பதற்கு சில வீடியோ ஆதாரங்கள் இப்படத்தில் காண்பிக்கப்படுகின்றன. (மேலும்....)

பங்குனி 12, 2012

பிரபாகரனின் இளைய மகன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி: புதிய காணொளி தொகுப்பை வெளியிடுகிறது சேனல் 4

இலங்கையில், 2009ல் நடந்த போர்க் குற்றங்களை மேலும் நிரூபிக்கும் வகையில், பிரிட்டனில் இயங்கி வரும் சேனல் 4 செய்தி நிறுவனம், நாளை மறுநாள் (14ம் தேதி) மற்றொரு காணொளித் தொகுப்பை வெளியிட உள்ளது. இதன் மூலம், சர்வதேச அளவில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுட்டுக் கொல்லப்பட்டாரா பிரபாகரன் மகன்?இது குறித்து பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளிவரும் "தி இண்டிபெண்டென்ட்' பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: "இலங்கையின் கொலைக் களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்ற தலைப்பிலான இந்த காணொளித் தொகுப்பில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், 12, உடலில், ஐந்து குண்டுகள் பாய்ந்துள்ள காட்சி பதிவாகியுள்ளது.பாலச்சந்திரனோடு, மேலும் ஐந்து உடல்கள் கிடந்துள்ளன. இவர்கள் பாலச்சந்திரனின் பாதுகாவலர்களாக இருக்கக் கூடும். இவர்கள் அனைவரும் உடைகள் கழற்றப்பட்டு, பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில், ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். (மேலும்....)

பங்குனி 12, 2012

இலங்கை செல்ல விருப்பமில்லை அகதிகள் தகவல்

(தமிழ் நாட்டிலிருந்து எமது சிறப்பு நிருபர்: அருள்)

அகதிகள் முகாமல் தங்கியிருப்பவர்களுக்கு அரசு உதவி தொகையை அதிகமாக்கியதை அடுத்து,அவர்கள் இலங்கை செல்ல விருப்பமில்லை என, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இலங்கையில் இனக்கலவரம்  ஏற்பட்டதையடுத்து, 1984  முதல் தமிழர்கள்,அகதிகளாக வந்தனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள 117 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க,அரசு பொறுப்பேறற்வுடன், அகதிகள் முகாமில் உள்ள குடும்பத்தின் தலைவருக்கு,1000ரூபாய், அடுத்த பெரியவருக்கு 750 ரூபாய்,அதற்கு அடுத்து உள்ளவர்களுக்கு தலா 450 ரூபாய் வழங்கவும், அரிசி கிலோ 55 காசுக்கு வழங்கவும் உத்தரவிட்டது. முதியவர்களுக்கு மாதந்தோறும் தனியாக 1000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது. தற்போது, இலங்கை செல்வதற்கு விருப்பம் குறித்து, அனைத்து அகதிகள் முகாம்களிலும் தாசில்தார்கள் கணக்கெடுப்பு நடத்தினர். இதில், பலரும் இங்கிருந்து செல்வதற்கு விருப்பம் இல்லை என்றே தெரிவித்தனர். ஆனால், அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை, அரசின் நலத்திட்டங்களையும் தங்களுக்கு வழங்கவேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்வமாக சிலர், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து இலங்கை திரும்பினர். ஆனால் தமிழர் பகுதியில் இன்னமும் முழுவதுமாக சீரடையவில்லை என்ற தகவல் அதிகமாக வெளிவருகின்றன.தற்போது அரசு வழங்கும் நிதியும் அதிகரித்திருப்பதால், இலங்கை நிலைமை கண்டு அச்சப்பட்டு இவர்களில் சிலர் திரும்ப விருப்பம் இல்லாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பங்குனி 12, 2012

புலிகளால் தகர்க்கப்பட்ட முல்லைத்தீவு கல்மடுக்குளம் புனரமைக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பங்குனி 12, 2012

ரிபிசி வானொலி மனநோய் ஆய்வாளர்களின் அலட்டப்போவது யாரு மன்னர்களின் நிகழ்ச்சி.

அன்பான உறவுகலே இந்த ரிபிசி வானொலியில் முன்னம் பல ஜனநாயக முற்போக்கான சிந்தனையாளர்கள் புலிகளின் அராயக அடக்குமுறைக்கும் அஞ்சாமல்; துனிந்து நின்று ஜனநாயக முறைப்படி தங்கள் கருத்துகளை முன்வைத்து அதில் அவர்கள் அப்போது வேற்றியும் கண்டுள்ளார்கள் என்ற உண்மை யாராலும் மறுக்கமுடியாது. எனவே இப்போது ரிபிசி வானொலியின் நிலைமையப் பார்க்கும்போது மிகவும் கவலைகிடமாக உள்ளது. காரணம் இவ் வானொலியில் இப்போது ஆய்வு நடத்துவர்களின் வார்த்தைகள் மிகவும் சயிக்கமுடியாமல் இருக்கிறது. இவர்கள் ஏன் இவளவுக்கு மனநோய்பட்டுள்ளார்கள் என்பது புரிகிறது. இவர்கள் தங்கள் கட்சிகளின் இன்றைய நிலைமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் இப்போது தமிழ் மக்களுக்கு என்ன நன்மை நல்லது செய்கிறார்கள் என்பது யாரலும் கூறமுடியாது.மற்றும் தற்போது ஓருசில அரசியல் கட்சிகள் நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் நின்று அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்து முன்னுக்கு வரக்கூடியதை பார்க்க கூடியதாய் உள்ளது. (மேலும்....)

பங்குனி 12, 2012

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

(தமிழ் நாட்டிலிருந்து எமது சிறப்பு நிருபர்: அருள்)

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று(10.3.12) கடலுக்கு 619 படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மாலை கச்சதீவு அருகே மீன் பிடித்தக்  கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 30 பேர் 5 ரோந்து படகுகளில் அங்கு வந்தனர். இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை  பார்த்து எத்தனை முறைதான்  சொல்வது? இங்கு மீன் பிடிக்க கூடாது என்று மிரட்டினர். பின்னர் அவர்கள் திடிரென்று கிரேசன் என்பவரது படகில் ஏறி மீன் பிடிசாதனங்களை கடலில் வீசினர். படகில் இருந்த மீனவர்களை சாராமாரியாக தாக்கினர். இதில் மதியரசன் இடது கை முறிந்தது. மேலும் எடிசன், அருள், முனியசாமி, ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மீனவர்களை தாக்கி ஆவேசம் அடைந்த இலங்கை படையினர். கடலில் வீசப்பட்டு இருந்த மீன் வலைகளை அறுத்து எறிந்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதனால் மீனவர்கள் கிடைத்த மீன்களுடன் இரவோடு இரவாக கரை திரும்பினர். காயம் அடைந்த ஐந்து மீனவர்களும் ராமேஸ்வரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

பங்குனி 12, 2012

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு

(கலையரசன் )

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத்தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)(மேலும்....)

பங்குனி 12, 2012

வீட்டிலேயே மூலிகை நீர் தயாரிக்கலாம் வாங்க

இந்த உலகில் நோய் நொடியில்லாத மனிதர்களையே காணமுடியாதுள்ளது. எப்போது என்ன நோய் வந்து வைத்தியர்களிடம் ஓடினாலும் அவர்கள் முதலில் சொல்வதுசுத்தமான நீரை குடித்து பழகுங்கள் என்பதுதான். இந்த சுத்தமான நீரை குடிக்க நிறைய பேர் போத்தல் வாட்டரையே பருகுகின்றார்கள். ஏன் நம்மால் அதே சுத்தமான நீரை தயாரித்து குடிக்க முடியாதா. முடியும். சுத்தம் மட்டுமல்ல, உடலிலுள்ள பல நோய்களை களையக்கூடிய நீரை நாமே தயாரித்து குடிக்கலாம். அந்த நீரை மூலிகை நீராக்கி நோயை நம்மை அண்ட விடாமல் தடுக்கலாம். (மேலும்....)

பங்குனி 12, 2012

வடக்கிலிருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகள் நேரடியாக ஏற்றுமதி

"அப்ப இனி உடன் ஊர்க்காய்கறிகளை உண்மையாக புலம் பெயர் தேசங்களில் புசித்து மகிழலாம்"

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி வகைகள், உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்யப்படும் என்று வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.  வடபகுதி உற்பத்திப் பொருட்களை, காய்கறிகளை ஏற்றுமதி செய்வதற்கான கேந்திர மையமாக கிளிநொச்சி அமைய வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், இதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட வர்களுக்கு பணிப்புரை விடுத்தார். (மேலும்....)

பங்குனி 12, 2012

பொருளாதார சுபீட்சம் நோக்கி முன்னேறும்

நாடுகளை குழப்புவதே அமெரிக்காவின் நோக்கம்

அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் முழு உலக மக்களுக்கும் எதிராகவே செயற்படுகின்றார்கள். மேற்குலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகளின் மக்கள் வீதிகளில் இறங்கி ஆட்சியாளர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் அண்மைக் காலமாக அரபு நாடுகளும், சில ஆசிய நாடுகளும் பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவினதும், மேற்கு நாடுகளினதும் பிடிக்குள் இருந்த பொருளாதார சுபீட்சம் ஆசிய நாடுகளுக்குக் கைமாறி இருப்பதை அந்நாடுகள் பொறுத்துக் கொள்ள முடியாதுள்ளன. அதனால் பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் குழப்பங்களையும், சீரழிவுகளையும் மாத்திரமல்லாமல் அந்நாடுகளைத் துண்டாடவும் இந்நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. (மேலும்....)

பங்குனி 12, 2012

ஈரான் மீது விரைவில் தாக்குதல், இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரானின் அணு சக்தி நிலை யங்கள் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாஹு தெரிவித் துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல், பிரதமர் கூறுகையில், ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கான காலகட்டம் ஆண்டுக் கணக்கில் இல்லை, வார அல்லது நாள் கணக்கில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா போன்ற நாடுகள் ஈரானை விட்டு மிகத் தொலை யில் உள்ளது. இஸ் ரேலோ ஈரானுக்கு மிக அருகில் உள்ளது. ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் இஸ்ரேலுக்கே மிக அதிகம். எனவே தாக்குதல் நடத்தப்படுவது குறி த்து மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஈரான் முதன் முறையாக மேலை நாடுகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கின்றது. ஆனால் இன்னும் அதற்கான இடமும், நாளும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி 12, 2012

அமெரி. வீரரின் துப்பாக்கிச்சூட்டில் 10 ஆப்கானியர் பலி

ஆப்கானிஸ்தானில் அமெ ரிக்க வீரர் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக் கிச்சூட்டில் 10 பொது மக்கள் கொல்லப்பட்டனர். கந்தஹாரின் தென் பகுதி யிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில் பணிபுரிந்த வீரர், திடீரென வீதியில் போவோர் வரு வோரை யெல்லாம் கண் மூடித்தனமாக சுட ஆரம் பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு காவலில் இருந்த ஏனைய அமெரிக்க வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கட்டுப்படுத்தி யுள்ளனர். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்கா, நேட்டோ படைகள் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளன. இதன்போது பெண்கள், சிறுவர்கள் என 10 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பங்குனி 12, 2012

சிரியாவில் மோதல்களை நிறுத்தும் அனானின் கோரிக்கைக்கு அசாத் மறுப்பு

சிரியாவில் நடந்து வரும் மோசமான மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஐ.நா., அரபு லீக் சிறப்பு பிரதிநிதி கொபி அனான் சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்தைச் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இத்லிப் மாகாணத்தில் இராணுவம் நடத்திய கடுமையான தாக்குதலில் 70 அப்பாவி மக்கள் பலியாயினர். சிரியாவில் ஜனாதிபதி இராணுவத்திற்கும், சிரியா விடுதலை இராணு வத்திற்கும் இடையிலான சண்டையை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், கொபி அனான், ஜனாதிபதி அசாத்தைச் சந்தித்தார். ஆனால் எதிர்த் தரப்பினர் ஆயுதம் வைத்திருக்கும் வரை, அது சாத்தியமில்லை என தெரிவித்த அசாத் இச்சூழல் தொடரும் வரையில் பேச்சு வார்த்தைக்கும் வாய்ப்பில்லை என உறுதியாக கூறினார். அதேநேரம், அமைதியை உருவாக்கும் எந்த முயற்சிக்கும், தான் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித அல் முவால்லமைச் சந்தித்த பின் கொபி அனான் அசாத்தைச் சந்தித்தார். அனான் அசாத் சந்திப்பு, இரண்டு மணி நேரம் நீடித்தது. அதேநேரம், சிரியா விவ காரத்தில் இராணுவ நடவடிக்கை என்பது சாத்தியமில்லை எனத் தெரிவித்த அமெரிக்க வெள்ளை மாளிகை சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் சேர்ந்து சிரியா மீதான நெருக்கடியை அதிகரிப்பதன் மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனக் கூறியுள்ளது.

பங்குனி 12, 2012

மாணவர்களின் ஒழுக்கத்தை கிரிக்கட் சீர்குலைப்பதை தடுக்க வேண்டும்

நாட்டின் எதிர்கால சந்ததியினர் சட்டத்தையும், ஒழுங்கையும் மதிக்கும் நற்குணசீலர்களாக மாறுவதற்கு விடலைப் பருவ த்தை அடையும் மாணவர்களுக்கு பாடசாலைகளில் இருந்தே நற்பண்புகள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஒரு மாணவன் பாடசாலைகளுக்குள் குற்றமிழைப்பது அபூர்வமான செயலாகும். அந்தளவிற்கு பாடசாலைகளில் நல் ஒழுக்கம் தளைத் தோங்கி வருவதே அதற்கான காரணமாகும். பாடசாலைக்குள் ஒரு மாணவன் அப்பாடசாலை கலவன் பாடசாலையாக இருந்தால் காதல் கடிதம் எழுதுதல், அல்லது பாடசாலை பரீட்சைகளில் கொப்பி அடித்தல், பாடசாலை கழிவறைகளில் ஆபாசமான வசனங்களை எழுதுதல் போன்ற சிறு குற்றங்களை இழப்பது சகஜமாகும். அத்தகைய குற்றங்களுக்கு பாடசாலை அதிபர் அவர்களை கடுமை யாக கண்டிப்பதுடன் அந்த மாணவர்கள் தொடர்ந்தும் அந்தக் குற் றங்களை செய்வதை தவிர்த்துக் கொள்வார்கள். இவ்விதம் பாடசாலைக் குள் மிகவும் ஒழுக்கமாக இருக்கும் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியில் சென்றவுடன் சற்று சுதந்திரம் கிடைத்துவிட்டதென்ற எண் ணத்துடன் சிகரட் புகைத்தல், மற்ற பாடசாலை மாணவிகளுக்கு கிண்டல் செய்து துன்புறுத்துதல் போன்ற சேஷ்டைகளில் ஈடுபடுவதுண்டு. (மேலும்....)

பங்குனி 12, 2012

16 பலஸ்தீனர்கள் பலி

காஸா மீது இஸ்ரேல் மூன்றாவது நாளாகவும் வான் தாக்குதல்

பலஸ்தீனின் காசா பகுதி மீது இஸ் ரேல் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடத்திய வான் தாக்குதல்களில் பலி யானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந் துள்ளது. இதில் 26 பலஸ்தீனர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான தாக்குதல்கள் நேற்று அதிகாலையும் தொடர்ந்தன. காசாவின் கிழக்குப் பகுதியில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும் பலஸ்தீன ஆயுதக் குழுக் கள் பதில் தாக்குதலாக இஸ்ரேல் மீது நூற்றுக்கு மேற்பட்ட எறிகணைத் தாக்குதல்களை நடத்திய தாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக் கின்றன. இதில் நேற்று முன்தினம் மாலை எகிப்துக்கு எல்லையாக உள்ள தெற்கு நகரான ரபாவில் மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பஸ்தீனர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். இதேபோன்ற மற்றுமொரு தாக்குதலில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மேலும் இருவர் கொல்லப்பட்டனர். (மேலும்....)

பங்குனி 12, 2012

உலகைச் சுற்றி

எத்தனை பேரைக் கொல்வீர்கள்?

நாம் ஏற்கெனவே திட்டமிட்டதைவிட இன்னும் கூடுதலாக எத்தனை அப்பாவி மக்களின் உயிர்கள் போகும் என்பது குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. அப்படிச் செய்வதற்கு உங்களுக்கு அதிகாரம் அளித்தாலும், நாங்கள் முன்மொழிந்துள்ளபடி பஷார் அல்- அஸாத்தை அதிகாரத்திலிருந்து துரத்தியடிக்க முடியுமா என்பதை நீங்கள் விளக்க வேண்டும்”. அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை நியமித்துள்ள ராணுவ ஆய்வுக்குழுவின் முன்பு, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பனேட்டாவும், ராணுவத் தளபதி ஜெனரல் மார்ட்டின் டிம்ப்சேயும் ஆஜரானபோது, அந்தக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் அரிசோனா மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெய்ன் கேட்ட கேள்வி இது. சிரியாவில் எப்போது தாக்குதல் நடத்துவது, எத்தனை ராணுவத்தினரை இறக்குவது, எந்தெந்த மையங்களிலிருந்து குண்டு வீச்சுக்களை துவக்குவது என்பது குறித்தெல்லாம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் விரிவான அறிக்கையை தயார் செய்துவிட்டது. இந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு கடந்த புதன்கிழமை யன்று செனட் குழுவின் முன்பு மேற்கண்ட தளபதியும் அவரது உயரதிகாரிகளும் ஆஜரானார்கள். தங்களது போர்த்திட்டத்திற்கு பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பியக் கூட்டாளிகளும், வளைகுடா பிரதேசத்தில் தங்களது கைக் கூலிகளாகச் செயல்படுகிற சவூதி அரேபியாவும் கத்தாரும் முழு ஆதரவு தெரிவித்துவிட்டதை செனட் குழுவிடம் மேற்படி தளபதிகள் உறுதிப்படுத்தினார்கள். சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல்-அஸாத் எங்கும் தப்பி ஓடிவிட முடியாது. லிபியாவில் நடந்ததைவிட இன்னும் உக்கிர மான தாக்குதலை நடத்துவதற்கு அமெரிக்க ராணுவம் தயார் என அவர்கள் அறிவித்தார்கள்.

பங்குனி 12, 2012

இன்னொரு "கொலவெறி' விடியோ

இன்னொரு "கொலவெறி' விடியோ யூடியூப் இணையதளத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இரண்டு மூன்று நாள்களில் சுமார் 5 கோடி பேருக்கு மேல் இந்த விடியோவை பார்த்திருக்கிறார்கள். ஆனால், கொலவெறி விடியோவைப் போல் இல்லாமல், இந்த முறை அரசியல், மனித உரிமை போன்ற நோக்கங்களுடன் இந்த விடியோ இண்டர்நெட்டில் உலா வருகிறது. விடியோவின் பெயர் கோனி 2012. அது என்ன கோனி? கோனி "அது' அல்ல, அவர். உகாண்டா, சூடான், தெற்கு சூடான், டி.ஆர்.காங்கோ ஆகிய நாட்டு ராணுவங்களைக் கடந்த 20 ஆண்டுகளாக நடுங்கச் செய்த நக்சல் அமைப்பின் தலைவரின் பெயர்தான் கோனி. முழுப் பெயர் ஜோசப் கோனி. அவரது எல்.ஆர்.ஏ. எனப்படும் கடவுளின் தடுப்புப் படையினர் செய்த மனித உரிமை மீறல்களைப் பற்றியது யூடியூப் விடியோ. (மேலும்....)

பங்குனி 11, 2012

சர்வதேச மன்னிப்பு சபையின் ‘நம்பகத்தன்மை' ஒரு நோக்கு

ஒரு நிறுவனத்துக்காக நிதிசேகரித்தல், தொண் டாற்றுதல், சிறப்பேற்பாடு களை மேற்கொள்ளல், தன்னார்வ நட வடிக்கைகளில் ஈடுபடுதல் அனைத்துமே ஏற்புடமை கொண்ட நடவடிக்கைகளே! குறித்த நிறுவனம்- பலராலும் ஏற்றுக் கொள் ளத்தக்கதான பொதுவானது ராஜதந்திரம் மிக்கதுமான நடவடிக்கைகள் மேற் கொள்ளத்தக்கதானதாக இருக்குமிடத்து அதன் நம்பகத்தன்மை கட்டுக்குலையாததாக இருத்தல் வேண்டும் என்பது பலராலும் ஒத்துக் கொள்ளத்தக்கதே! அந்தவகையில் அத்தகைய ஸ்தாபனம் தனது நடுநிலைப் போக்கைத் தக்கவைத்துக் கொள்வதும், அதற்கேற்றவாறு பணியாற்றுவதும் அத்தியாவசியமானதாகும். (மேலும்...)

பங்குனி 11, 2012

இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் இன விரிசலை துருவப்படுத்தவே வழிகோலும்

அவசியமற்ற நேரத்தில், தேவையற்ற விதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தத்தை பிரயோகிப்பது ஏற்கனவே இனங்களுக்கிடையே காணப்படும் விரிசலை அதிகரித்து, மேலும் துருவப்படுத்துவதற்கே வழிகோலும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19வது அமர்வுக்குச் சென்று விட்டு வந்துள்ள அமைச்சர் ஹக்கீம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணை, அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். (மேலும்...)

பங்குனி 11, 2012

Expatriate LTTE cadres hell bent on revenge

(P. Krishnaswamy )

Many expatriate LTTE cadres, including an NGO activist are in Geneva canvassing support for the US-backed resolution on Sri Lanka and are holding meetings and hosting lavish parties in an effort to influence delegates at the UNHRC sessions, Deputy Minister of Child Development and Women’s Affairs M.L.A.M. Hisbullah told the Sunday Observer. They are the least worried in the welfare of their people back home and are hell bent on taking revenge because their leader and patron Velupillai Prabhakaran was eliminated, the Deputy Minister said. (more...)

பங்குனி 11, 2012

கனேடிய தமிழனின் ஏமாற்று வேலையை காட்டிக் கொடுத்த கார்க் கமரா!

காருக்கு சேதத்தை ஏற்படுத்தினார் என்று இன்னொரு கார்க்காரர் மீது பொய்யாக குற்றம் சுமத்தி 500 அமெரிக்க டொலரை அறவிட முயன்ற கனேடிய தமிழர் வசமாக மாட்டுப்பட்டு உள்ளார். இவரின் பெயர் ரகுரூபன் யோகராஜா. Ajax என்கிற இடத்தைச் சேர்ந்தவர். ரொரன்ரோ பெருந்தெரு – 401 இல் கடந்த மாதம் மாலை 4.20 மணி அளவில் பயணித்துக் கொண்டு இருந்தார். சரியான வாகன நெரிசல். Herman Sham என்பவரின் கார் இவரது காருக்கு பின்னால் நின்றது. யோகராஜா காரை பின்னால் எடுத்தபோது Herman Sham இன் காரை இடித்து விட்டார். யோகராஜா காரை விட்டு இறங்கினார். Herman Shamதான் காரை முன்னோக்கி செலுத்தி இடித்தார் என்று பொய் சொல்லி இருக்கின்றார். 500 அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு இருக்கின்றார். பொலிஸையும் வரவழைத்து இருக்கின்றார். ஆனால் Herman Sham மசியவில்லை. ஏனெனில் உண்மையில் நடந்த சம்பவம் அனைத்தும் Herman Sham இன் காரில் பொருத்தப்பட்டு இருந்த கமராவில் பதிவாகி இருந்தன. யோகராஜாதான் மோசடிப் பேர்வழி என்பதை பொலிஸார் கண்டு கொண்டனர். பொது இடத்தில் தவறாக நடந்தமையுடன் ஏமாற்று வேலையிலும் ஈடுபட்டார் என்று யோகராஜா மீது வழக்குத் தாக்கல் செய்து உள்ளனர். கார் கமராவில் பதிவு செய்திருந்த வீடியோவை Herman Sham யூ ரியூப்பில் ஏற்றி உள்ளார். ஏராளமானவர்கள் இவ்வீடியோவை பார்வையிட்டு வருகின்றனர். ஆனால் மோசடியில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தவறுதலாக நடந்து விட்டது என்றும் மேற்சொன்ன வீடியோ யூ ரியூப்பில் இருந்த அகற்றப்பட வேண்டும் என்று கூறுகின்றார் யோகராஜா.

பங்குனி 11, 2012

ஒஸாமாவின் உயிருக்கு உலை வைத்த உறவு?

இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் அல்கைதா என்பவற்றின் ஏக தலைவன் என வர்ணிக்கப்பட்ட ஒஸாமா பின்லேடனின் மரணத்தின் தொடர் கதைகள் இன்னும் வந்து கொண்டேயிருக்கின்றன. எவ்வளவு பெரிய கெரில்லா இயக்கத்தின் தலைவர் என்ற பெருமை மட்டும் ஒஸாமாவை உயர்த்தி விடவில்லை. பொறியியல்கலையில் அவரது பாண்டித்தியம், கொண்ட கொள்கைக்காக அவர் எடுத்துக் கொண்ட கோலம், கணக்கில்லாத கோடிக் கணக்கான சொத்துக்களுக்கு உரிமையாளராகவிருந்த செல்வந்தம் போன்றவை ஏதோவொரு வகையில் ஒஸாமாவைப் பெரிய மனிதராக்கிற்று என்பதே வரலாறுகளின் தடயம். அரபு நாடுகள் அனைத்தும் உட்பட ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்காவென ஒஸாமா பணியாற்றாத நாடுமில்லை, பறந்து திரியாத தேசமுமில்லை. 1998-1999ம் ஆண்டு காலங்களில் கென்யா, தன்ஸானியா ஆகிய நாடுகளிலிருந்த அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்ட பின்னரே மலைப் பொந்தில் பதுங்கிய பூதம்போல் ஒஸாமா பின்லேடன் உலகின் முன் தோன்றலானார், பேசப்படலானார். இவ்வளவு பெரிய அல்லது முக்கியமான மனிதனின் அல்லது தளபதியின் அல்லது பயங்கரவாதியின் இல்லாவிட்டால் வேறென்னவோ ஒவ்வொருவரது அணுகுமுறைகளுக்கேற்ப இந்த சொற்பிரயோகத்தை பாவித்துக் கொள்ளுங்கள்.  (மேலும்...)

பங்குனி 11, 2012

இறுதி யுத்த காலத்தில் மக்களை அநாதரவாக கைவிட்டு ஓடிய சீமான்கள்  - ந. கீதாஞ்சலி

வன்னித் தமிழினம் இன்னமும் புளித்துப் போன பழம் அரசியல் தலைமைகளின் பின்னால் செல்லத் தயாராக இல்லையென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மீள்குடியேற்ற இணைப்பாளருமான திருமதி ந. கீதாஞ்சலி தெரிவித்தார். “நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ் மக்களை அநாதரவாக விட்டு கொழும்பிலும் வெளிநாடுகளிலும் உல்லாசமாய் இருந்துவிட்டு இன்று தமிழர் உரிமை பேசும் கோமாளி அரசியலை தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலோடு ஓரங்கட்டிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார். என்னைக் கத்துக் குட்டி என்று கூறும் பழுத்த அரசியல்வாதி சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதால் தமிழ் மக்களை வென்று விடலாம் என்பது விவேகமற்ற சிந்தனையாகும்” என்று தெரிவித்த கீதாஞ்சலி, “வன்னி மக்களுக்குக் கல்விக் கண்ணைத் திறக்கும் பணியை முழு மூச்சாக மேற்கொண்டிருக்கிறேன். குருட்டுத் தனமான அரசியலை கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி மக்களையும் தவறாக வழி நடத்தினார்கள். ஆகவே அந்த மக்களுக்கு நல்ல கல்வியைப் புகட்டி அரசியலிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும். இதனைச் சகித்துக் கொள்ளாத முதியவர்கள் தமது இறுதி வாழ்வாதார அரசியல் இருப்பு ஆட்டங் கண்டுவடுமென அஞ்சுகிறார்கள். எவர் எதைச் சொன்னாலும் என் சமூகப் பணியில் எந்தப் பின்வாங்கலும் கிடையாது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பங்குனி 11, 2012

நேற்று முளைத்த அரசியல் கத்துக்குட்டிகள் திடீரென பெருந்தலைவராக கடும் முயற்சி ! - வி. ஆனந்தசங்கரி

கிளிநொச்சி மாவட்டத்தில் அரசியல் என்ற போர்வையில் பணிபுரிந்து வருபவர்கள் வெறும் அரசியல் கத்துக்குட்டிகளேயென்றும் மக்கள் பணியை விட தங்கள் சுய இலாபத்திற்காகவே அவர்கள் பாடுபடுவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் அபிவிருத்தி என்பதற்கு அப்பால் தமது அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இந்த அபிவிருத்தி நடவடிக்கையில் தம்மை வளப்படுத்துவதற்கும் அம்மணி ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். தம்மை மக்களின் தொண்டனாகக் காட்டிக் கொள்ளுவதில் அவர் காட்டும் பிரயத்தனம் உண்மையில் செயலில் இல்லை. செய்யுந் தொழிலே தெய்வம் என்பதற்கொப்ப புனிதமான ஆசிரியத் தொழிலில் இருந்த அப்பெண்மணி மாணவர்களையும் பாழாக்கி இப்போது முழு நேர அரசியல்வாதியாக இருக்கின்றார். அரசியல் என்பது எதுவென எனக்குக் கற்றுத்தர அவர் முனைகின்றார். இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள். பட்டம், பதவிகளுக்காக சோரம் போனவர்கள். கிளிநொச்சி மக்கள் உண்மையான மக்கள் தலைவர்களை இனங்கண்டுள்ளனர். யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி தற்போது அதிலிருந்து படிப்படியாக மீட்சிபெற்றுவரும் இந்த மக்களின் விமோசனத்துக்கு உண்மையாகப் பாடுபட வேண்டும். சலசலப்புக்கள் இந்த மக்களுக்குச் சோறுபோடாது என்று தெரிவித்துள்ள கூட்டணித் தலைவர், மக்கள் இவ்வாறானவர்களை இனங்கண்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

பங்குனி 11, 2012

நினைச்சுப் பார்த்தால் நல்லது!

தம்பப்பா... ஒரு கிழமை சிலமனைக் காணும் என்ன நீங்களும் ஜெனிவாவுக்கு போனனிங்களோ? ஒவ்வொரு நாளும் பேப்பரிலை ஜெனிவாக் கதைதான் அனல் பறக்கிது. உங்களையும் காணக்கிடைக்கியில்லை. கண்டால் 'லோக்கல்' பொலிற்றிகிள் ஆவது கொட்டித் தீப்பியள் உங்கடை அபிப்பிராயம் என்ன தம்பப்பா கொஞ்சம் நிதானமாச் சொல்லுங்கோ பாப்பம். தம்பி பொடி நானும்கொஞ்சநாளாப் பார்க்கிறன் நீயும் கொஞ்சம் கொஞ்சமாய் அரசியலை பிடிக்க விரும்புறாய் போல. வந்ததும் வராததுமாய் தம்பப்பாவின்ர சுகதுக்கத்தை விசாரிப்பாய், நல்லது கெட்டதைக் கேப்பாய் என்று பார்த்தால் ஒரே அடியா ஜெனீவாவுக்கு பறக்குறாய். இங்கனேக்க சனங்கள் கதைக்கிறமாதிரி என்ன மகிந்தவுக்கு ஜெனீவாவில் இருந்து பிடிவிறாந்தோ வரப்போகுது அல்லது அரசாங்கத்தை தள்ளி விழுத்திப் போட்டு வேறேயாரையும் கொப்பிலை ஏத்தப் போகினமே சும்மா விடடா? பொடி என்ற கணக்கில பார்த்தால் பெரிசாய் அங்கை எதுவும் நடக்கப் போறதில்லை. (மேலும்...)

பங்குனி 10, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்

மத்திய அரசின் நிலை குறித்து கிருஷ்ணா

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.  பெங்களூரில் இருந்து சொந்தப் பயணமாக சிங்கப்பூர் செல்லும் வழியில் நேற்று மதியம், 1.15 மணிக்கு வந்த அமைச்சர் கிருஷ்ணா விமான நிலையத்தில் பேட்டியளித்தார். (மேலும்...)

பங்குனி 10, 2012

அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்டருக்கு எனது கண்ணீர் அஞ்சலி

கரித்தாஸ், எகெட் நிறுவனத்தின் மட்டக்களப்பு, அம்பாரை மாவட்ட நிதி பொறுப்பாளரும், முன்னாள் இயக்குனருமான அருட் தந்தை கலாநிதி த.சில்வஸ்டர் சிறிதரன்2/3/12 அன்று மாரடைப்பால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோரில் நானும் ஒருவன். மட்டக்களப்பு தாண்டவன்வெளியை அவர்கள் பூர்வீகமாக கொண்டிருந்தாலும், கல்முனை 3ம் குறிச்சியில் இருந்தே அவன், நாங்கள் படித்துக் கொண்டிருந்த கல்முனை பாத்திமா கல்லூரிக்கு வருவான். நாங்கள் அவனை, சிறி என்றே அழைப்போம், சரியான துடுக்காக இருப்பான். ஒரு இடத்தில் நிலை கொண்டு இருந்ததை நான் பார்த்ததில்லை பொதுவேலை என்றால் சிறிக்கு நல்ல விருப்பம். உதவி செய்யும் குணம் அவனிடம் இயல்பாகவே இருந்தது. சரியான இரக்ககுணம் சிறியிடம் காணப்பட்டது. (மேலும்...)

பங்குனி 10, 2012

காதலைத் தேடும் பெண்

(நடேசன்)

செல்லப்பிராணிகளை வைத்திருப்பவர்கள் வேலைகளை முடித்து வீடு திரும்பிய பின்புதான் அவைகளில் கவனம் செலுத்துவார்கள். இதைக்கருதி ஆஸ்திரேலியாவில் எல்லா மிருக வைத்தியர்களும் இரவு ஏழரை மணி வரை தொழில் செய்வார்கள். சனிகிழமைகளிலும் கிளினிக்கை திறந்து வைத்திருப்பார்கள். இதற்கு நானும் விதி விலக்கல்ல. ஊரொடு ஒத்து ஓடவேண்டும். ஏழு நாட்கள் வேலை செய்யும் உணவு விடுதிப் பணியாளர்கள் மற்றும் இலங்கை இந்திய மளிகைக் கடைக்காரர்களை ஒப்பிட்டு ஆறுதல் கொள்ள முடியும். ஆஸ்த்திரேலிய அரசாங்கத்தின் லேபர் விதிகள் செல்லாத இடங்கள் இவையாகும். உங்கள் அலுவலகத்தை மூடுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னால் வந்து மேலும் பத்து நிமிடங்கள் தனது பூனையை பற்றியும் அதனது உணவு வகைகளையும பற்றி ஒரு பெண் ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் பேசிக்கொண்டிருந்தாள் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? ஓரு ஆள் பலமுறை வந்தால் மனதில் எரிச்சல ஏற்படும்தானே. (மேலும்...)

பங்குனி 10, 2012

Many facets of Puthirasigamani Sugunya

RECOVERED DOCUMENTS EXPOSE TERROR IDENTITY OF DEPUTY SPEAKER OF SO CALLED TGTE

Soon after the military defeat of the ruthless blood thirst LTTE Terrorist Organization by the Sri Lankan Security Forces, the LTTE Terrorist Fronts drifted from military outlook and obtained the coat of democratic and political approach. Thus, they formed the so called Transnational Government of Tamil Eelam (TGTE) to whitewash the crimes they committed against humanity and also to survive in the foreign soils. Terrorism should only be called terrorism, may it be in any form. (more...)

பங்குனி 10, 2012

உயிர் பெரிது, மானம் பெரிது, வீரம் பெரிது, கொலை மட்டுமே கொடிது என்கிறான் அரவான்!

(வித்யாசாகர்)

முகமெல்லாம் கரி பூசி; பூசிய கரிக்கு உணர்வு கூட்டி; உணர்வின் உச்சத்தை படச்சுருளில் தோய்த்து என் முன்னோர் வாழ்ந்த கதையொன்றை திரைப்படமாக்கி, அதன் நெளிவுசுளிவு பிசகாமல் காட்ட எடுத்த பாராட்டத்தக்க திரையுலக பிரயத்தனம் இந்த 'அரவான்'. உண்மையில் ஒரு பிறவி முடிந்து இருநூறு வருடங்களுக்கு பின்னே போய் உடல்கட்டை விழ மீண்டும் திரையரங்கம் விட்டு வெளியே வருகையில் ஒரு தமிழராகவே மறுபிறவி எடுத்து நான் பிறந்துவந்ததொரு உணர்வு; படம் பார்த்து வந்து ஒரு நாள் ஆனபின்புமுண்டு எனில் அது இயக்குனரின் வெற்றியும் அப்படத்தில் நடித்த நடிகர்களின் உழைப்பிற்கான வெகுமதியுமன்றி வேறில்லை. (மேலும்...)

பங்குனி 10, 2012

சிரியா விவகாரத்தில் தடுமாறும் ஐ.நா.

சிரியாவில் அதிகரித்துள்ள படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து உலக சமாதானம் என்ற தனது பொறுப்பை நிலைநாட்டுவதில் ஐக்கிய நாடுகள் சபையானது பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. சிரியாவில் மலிந்துள்ள உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. சிரியாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்துடன் உலகம் சிரியாவின் மீதான தனது கவனத்தைக் குவித்துள்ளது. வடக்கே துருக்கியையும் மேற்கில் லெபனானையும், தென்மேற்கில் இஸ்ரேலையும், ஜோர்தானையும் கிழக்கில் ஈராக்கையும் எல்லையாகக் கொண்டது சிரியா. இங்கு தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இது வன்முறைகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. எங்கும் மரண ஓலம். வெறிச்சோடிய நகரங்களில் இரும்புத் தொப்பிகளுடன் இராணுவ நடமாட்டம். உறுமும் யுத்த டாங்கிகள், கவசவாகனங்களின் ஓசையில் மிரண்டு துயில் கலையும் காலைப் பொழுதுகள் சாவுக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கை என அங்கு சோகம் தொடர்கிறது. (மேலும்...)

பங்குனி 10, 2012

அறிமுகம் ஆகிறது 'மின் காசோலை'!

நாம் இன்று பயன்படுத்திவரும் காசோலைகள் விரைவில் வழக்கொழிந்துவிடப்போகின்றன. அவற்றின் இடத்தை 'ஈ-செக்' (E & cheque) எனப்படும் மின் காசோலை பிடிக்கப்போகிறது. ஓர் இங்கிலாந்து ஆய்வுக் குழு இந்த மின் காசோலையை உருவாக்கியிருக்கிறது. இதில் வழக்கமான காசோலை முறையின் அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஆனால் வங்கிகளுக்கு ஆகும் செயல்முறை மற்றும் அனுப்புதல் செலவுகள் குறையும் என்கிறார்கள். இந்த 'ஹை-டெக்-செக்' பல தலைமுறைகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வழக்கமான காசோலை போலவே உள்ளது. ஆனால் இதில் எழுதுவதற்கு ஒருவருக்கு டிஜிட்டல் பேனா தேவை. அந்தப் பேனாவில் உள்ள நுண்ணிய கமரா பல இலட்சம் புள்ளிகளால் ஆன எந்தக் கையெ ழுத்தையும் பதிவு செய்துவிடுகிறது. அந்தப் பதிவை, வயர்லெஸ் தொடர்பு மூலம் டிஜிட்டல் பேனா நேரடியாக வங்கிக்கு அனுப்புகிறது. இந்த மின் காசோலையும் டிஜிட்டல் பேனாவும் வாடிக்கையாளருக்கு மட்டுமே உரிய பாதுகாப்பான முறையில் செயல்படும் என்பதால், ஏமாற்று வேலைகளுக்கு இங்கு இடமில்லை என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.

பங்குனி 10, 2012

புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடுக்குளம் மீண்டும் மக்களிடம் கையளிப்பு

புலிகளால் தகர்க்கப்ப ட்ட முல்லைத்தீவு கல் மடுக்குளம் புனரமைக்கப் பட்டு நாளை உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனை க்காகத் திறந்துவைக்கப்பட வுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 260 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த குளம் திறந்துவைக்கவிரு க்கின்றது. அதேநேரம், 100 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சி அரசாங்க அதிபர் அலுவலகக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கலந்துகொள்ளவிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாட் பதியுதீன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தின்போது 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடுக் குளத்தைப் புனரமைக்கும் பணிகள் 2010ஆம் ஆண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டன. இக்குளம் மீண்டும் புனரமைக்கப்பட்டுத் திறந்துவைக்கப்படுவதால் இப்பகுதியைச் சேர்ந்த 1500 விவசாய குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. இதேவேளை, இந்தக் குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதி வெகுவிரைவில் வழங்கப்படும் என்றும் வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

பங்குனி 10, 2012

அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா. பேரவையில் பிரேரணை

அமெரிக்க அரசாங்கம் அமுலாக்கியுள்ள புதிய தேர்தல் சட்டத்தினால் அந்நாட்டின் 21மில்லியன் கறுப்பின மக்கள் வாக்குரிமையை இழக்கிறார்கள். இந்த சட்டம் கறுப்பின மக்கள் அதிகமாக உள்ள மாநிலங்களையே பாதிக்கின்றது. இதனால் 25சதவீதமான அமெரிக்க பிரஜைகளுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது. கறுப்பின மக்களின் மனித உரிமைக்காக போராடும் NAACP அமைப்பு இதுபற்றிய முறைப்பாடொன்றை எதிர்வரும் புதன்கிழமை ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க உள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் மாநில தேர்தல் சட்டங்கள் அமெரிக்காவில் உள்ள சிறுபான்மை மக்களின் சிவில் மற்றும் மனித உரிமைகளை அடக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறதென்று அந்நாட்டின் கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காக செயற்பட்டு வரும் தேசிய அமைப்பு (NAACP) ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன் கிழமையன்று முறைப்பாடொன்றை தாக்கல் செய்ய உள்ளது. (மேலும்...)

பங்குனி 09, 2012

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில்

கடமையில் ஈடுபட்டிருந்த 3 இராணுவ வீரர்கள் சுட்டு பலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் மூன்று இராணுவப் படைவீரர்கள் நேற்றிரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ முருகன் கோயில் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர்களே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த படைவீரர்களின் பெயர் விபரங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் இவர்கள் தனிப்பட்ட பிரச்சிரனை காரணமாக தம்மை தானே சுட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ___

பங்குனி 09, 2012

சிறுகதை:

சாந்தி தேடும் ஆவி

(நடேசன்)

யுத்தம் முடிந்து பதினாலு மாதங்களில் சரியாகச் சொன்னால் அதாவது ஜுலை 2010 இல் சில நாட்களை யாழ்ப்பாணத்தில் கழித்துவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டபோது இரவு நேரமாகிவிட்டது. நானும் நண்பன் நாதனும் அவனது காரில் புறப்பட்டு தெற்கு நோக்கி பிரயாணம் செய்தோம். நான் ஆரம்பத்தில் சாரதியாக காரை வவுனியா வரை செலுத்துவது பிறகு கொழும்பு வரை அவன் செலுத்துவது என்பது எமது ஒப்பந்தம். இரவு எட்டு மணிக்குப்பின்னர் கொழும்புத்துறையில் இருந்து குண்டும் குழியுமான A9 வீதியால் பிரயாணம் செய்து கொழும்பு செல்ல எப்படியும் அடுத்த நாள் மதியமாகிவிடும் என்பதால் இரவு உணவை முடித்துக்கொண்டு ஆறுதலாக வெளிக்கிட்டோம். சாரதியாக இருந்த எனக்கு நாதன் கதை சொல்லவேண்டும். (மேலும்...)

பங்குனி 09, 2012

RCMP charge first suspect in MV Sun Sea human smuggling case

Two years ago, Royal Thai Police raided a Bangkok apartment building and arrested Thayakaran Markandu and three others suspected of amassing supplies for a human smuggling ship that was preparing to sail to Canada. They were let off with a fine. But on Wednesday, the RCMP issued an arrest warrant for a man with that same name, alleging he helped organize the MV Sun Sea, the cargo vessel that arrived off the British Columbia coast in August 2010 carrying 492 Sri Lankan asylum seekers. While police would not confirm it was the same man, Mr. Markandu is the first suspect to be charged over the Sun Sea, a well-organized smuggling operation that was centred in Bangkok. He is accused of organizing entry into Canada. He is living abroad and has not been arrested. (more....)

பங்குனி 09, 2012

இலங்கை விவகாரத்தில் மேற்கு நாடுகளின் முயற்சி வெற்றியடையாது

மேற்குலக நாடுகளும், அமெரிக்காவும் ஓர் அணி சேர்ந்து இல ங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மீது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பிரேரணை ஒன்றை ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வைக் கூட்டத்தில் முன்மொழியும் செயற்பாடுகள் இலங்கையை தோல்வி யடைந்த நாடு என்று பட்டம் சூட்டி ஒரு அரசாங்க மாற்றத்தை ஏற்படுத் துவதற்கு மேற்கொள்ளும் முயற்சி எக்காரணத்தாலும் வெற்றி பெறப் போவதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளின் அச்சுறுத்தலுக்கு நாம் அடிபணிவது எமது நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் அவற்றிற்கு தாரைவார்க்கும் ஒரு செயலாகவே அமையும். (மேலும்...)

பங்குனி 09, 2012

ஒருவருட காலப் பகுதிக்குள் எவ்வித பஸ்கட்டண அதிகரிப்பும் கிடையாது

தற்போது பஸ்கட்டணம் இருபது சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அடுத்துவரும் ஒரு வருட காலப் பகுதிக்குள் எதுவிதக் கட்டண உயர்வும் மேற்கொள்ளப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். பஸ் கட்டணம் இருபது சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அது பொது மக்களைப் பாதிக்கவில்லை. பொது மக்கள் இரு மடங்கு கட்டணத்தை கொண்டிருக்கும் சொகுசு பஸ் வண்டிகளில் பயணிப்பதற்கு முண்டியடிப்பது இதற்கு நல்ல உதாரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். தற்போது நாட்டில் 23 ஆயிரம் தனியார் பஸ் வண்டிகளும், ஐயாயிரம் இ.போ.ச. பஸ் வண்டிகளும் பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. நாட்டு மக்கள் சிறந்த போக்குவரத்து சேவையையே எதிர் பார்க்கின்றார்கள். அவர்களை பஸ் கட்டண உயர்வு பாதிக்கவில்லை. சொகுசு பஸ் வண்டிகளில் பயணம் செய்யவே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

பங்குனி 09, 2012

ஜெனீவா மனித உரிமை பேரவை

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை நேச நாடுகளின் ஆதரவுடன் தோற்கடிக்கப்படும்

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான ஒரு பிரேரணையை முன்மொழிவதற்கு அமெரிக்கா அறிவித்தல் கொடுத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஆயினும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக் கொண்டு அமெரிக்காவும் அதன் சில நேச நாடுகளும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழிந்திருந்தாலும் கூட, இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் காட்டி வரும் ஆர்வம் குறித்து மிகவும் தெளிவாக அறிந்து வைத்திருக்கும் எமது நேச நாடுகள் இந்தப் பிரேரணையை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் பிரேரணையை, ஏற்கனவே இருந்த அதன் உள்ளடக்கத்தை விடவும் இன்னும் சற்று குறைந்த தாக்கம் உள்ள தாக மாற்றுவதற்கு சில நாடுகள் முயற் சித்து வருவதாக நாம் கேள்விப்படுகின் றோம். அது எவ்வாறாயினும், தனிப்பட்டதொரு நாட்டை இலக்கு வைத்து இவ்வாறானதொரு பிரேரணையை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் துருவப்படுத்தலை ஏற்படுத்தியுள்ள இனப்பிரச்சினையை இன்னும் பாரதூரமானதாக ஆக்குவதற்கும், குழப்புவதற்குமான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எண்ணத் தோன்றுகின்றது.

பங்குனி 09, 2012

ஆஸ்திரேலியா

அதிகரிக்கிறது வேலையின்மை!

உலக நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி ஆஸ்திரேலியாவையும் தாக்கியதில் அந்நாட்டின் வேலையின்மை விகிதம் கடுமையாக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான புள்ளிவிபரப்படி, 5.2 விழுக்காடு அளவுக்கு வேலையின்மை உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகாதது மட்டுமல்ல, வேலையிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 15 ஆயிரத்து 400 பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்று ஆஸ்திரேலியாவின் தேசிய புள்ளிவிபர மையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இவ்வாறு வேலையிழந்தவர்களில் பகுதிநேரம் வேலைபார்த்தவர்களும் அடங்குவர். முழுநேர வேலையில்லாமல் தவித்து வந்தவர்களுக்கு இருக்கும் அந்த வேலையும் பறிபோய்விட்டது. பொருளாதார வளர்ச்சியின்மையும் இதற்குக் காரணம் என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வெறும் 0.4 சதவிகித வளர்ச்சியைத்தான் ஆஸ்திரேலியப் பொருளாதாரம் அடைந்திருக்கிறது.

பங்குனி 09, 2012

திராவிட் ஓய்வு?

திராவிடின் சொந்த ஊரான பெங்களூரில் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசனும், ராகுல் திராவிடும் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர் என்ற மின்னஞ்சல் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் 9 அன்று நடைபெறும் இக்கூட்டத்தில் ராகுல் திராவிட் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் படுமோசமான ஆட்டத்தையடுத்து இச்செய்தி வெளியாகியுள்ளது. திராவிட் எட்டு இன்னிங்சில் 194 ஓட்டங்கள் மட்டும் எடுத்துள்ளார். திராவிட் 164 டெஸ்ட்டுகளில் ஆடி 13,288 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவருடைய சராசரி 52.31 ஆகும். அவர் 36 சதங்களும் 63 ஐம்பதுகளும் அடித்துள்ளார். 344 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள திராவிட், 39.16 சராசரியுடன் 10,889 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவற்றில் 12 சதங்களும் 83 ஐம்பதுகளும் அடங்கும். 25 டெஸ்ட்டுகளில் இந்திய அணிக்கு தலைமையேற்ற திராவிட் எட்டில் வென்றுள்ளார். ஆறு டெஸ்ட்டுகளில் தோற்ற திராவிட், 11ஐ சமன் செய்துள்ளார்.

பங்குனி 09, 2012

உலகக் கோடீஸ்வரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள்

அம்பானி சகோதரர்கள், அசிம் பிரேம்ஜி, என்.ஆர். நாராயண மூர்த்தி ஆகியோர் போர்பஸ் இதழின் பட்டியலில் வாரன் பஃப்பெட் மற்றும் பில் கேட்ஸ் வரிசையில் உள்ளனர். இவர் களையும் உள்ளடக்கி உலகக் கோடீஸ் வரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று போர்பஸ் குறிப்பிட்டுள்ளது. போர்பஸ் பட்டியலில் இடம் பெற் றுள்ள 1,226 கோடீஸ்வரர்களில் மெக்சி கோ நாட்டைச் சேர்ந்த தொலைத் தொடர்புத்துறைத் தொழிலதிபர் கார் லோஸ் ஸ்லிம் முதலிடம் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 69 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மேலும் கார்லோஸ் தொடர்ந்து 3 வருடங்களாக முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் 2வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 61 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இவ்வரிசையில் மூன்றாவ தாக வாரன் பஃப்பெட் இடம் பெற்றுள் ளார். அவருடைய சொத்து மதிப்பு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கடந்த வருடம் இருந்த கோடீஸ் வரர்களின் எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது என்று போர்பஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த கோடீஸ்வரர்களின் எண் ணிக்கை 57 ஆகும். இந்தியர்களின் வரிசையில் முதலிடம் பிடிப்பவர் ரிலை யன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம் பானி ஆவார். அவருடைய சொத்து மதிப்பு 22.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். கடந்த ஆண்டு 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டமடைந்த போதி லும் 54 வயதான முகேஷ் அம்பானி பட்டி யலில் 19வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பங்குனி 08, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்தது அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா நேற்று அதிகாரபூர்வமாக முன்வைத்துள்ளது. இந்தத் தீர்மானத்தில்:

1. இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.
2. அதற்கான திட்டம் மற்றும் கால அட்டவணையைக் கூற வேண்டும்.
3. ஐ.நா. மனித உரிமை ஆணையம் இதனைக் கண்காணித்து, ஐ.நா மனித உரிமைக்குழுவின் 22 ஆவது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் விசாரணை முழுமையானது அல்ல என்கிற கவலையையும் இந்தத் தீர்மானம் உள்ளடக்கியதாக இருக்கிறது.

பங்குனி 08, 2012

சர்வாதிகாரி பஷார் அல் அஸாத் வீழ்ச்சியடைவார் - ஒபாமா

சிரியாவில் தற்போது நிலவும் நிலைமை வேதனை தரக்கூடியது எனத் தெரிவித்த பராக் ஒபாமா , அமெரிக்கா தனித்து அங்கு இராணுவத் தலையீடு செய்வது தவறாக அமையும் எனக் கூறினார். ஜனாதிபதி பஷார் அல் அஸாத் ஏனைய சர்வாதிகாரிகள் வீழ்ச்சியடைந்ததைப் போன்று வீழ்ச்சியடையவுள்ளார் எனத் தெரிவித்த பராக் ஒபாமா , சிரியாவை தனிமைப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா அதனை அடையும் எனக் கூறினார். சிரியா எங்கும் செவ்வாய்க்கிழமை உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சிரியாவின் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதில் சர்வதேச சமூகம் தொடர்ந்து பிரிவுபட்டு நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் கடந்த 12 மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளில் 7,500 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. இந்த ஆண்டிலான ஒபாமாவின் முதலாவது செய்தியாளர் மாநாட்டின்போது தன்னைக் குற்றஞ்சாட்டுபவர்கள் போருக்கு செலுத்த வேண்டிய விலையை மறந்துவிடக் கூடாது என எச்சரித்துள்ளார். சிரியாவை லிபியாவுடன் ஒப்பிடுவதை நிராகரித்த அவர் சிரிய விவகாரம் மிகவும் சிக்கல் மிக்கது என்று கூறியுள்ளார். இந்நிலையில் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடப் போவதாக சூளுரைத்துள்ளார். நேட்டோ உலகம் லிபியாவில் நடாத்தியது போன்ற ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பங்குனி 08, 2012

இருவழிப் பாதைகளாக மாற்றப்படும் கிளிநொச்சி ஏ-9 வீதி

கிளிநொச்சி நகரின் இரண்டரைக் கிலோ மீற்றர் நீளமான ஏ-9 வீதி இருவழிப் பாதைகளாக புனரமைக்கப்பட்டு வருகிறது. ஏ-9 வீதியில் தற்போது புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. வட மாகாணத்திலுள்ள முக்கிய வீதிகளில் சுமார் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அரசின் நிதி உதவியுடனேயே இந்த வீதிகள் புனரமைக்கப்படுகின்றன. இதில் ஏ-9 வீதியின் கிளிநொச்சி நகரை அண்டிய இரண்டரைக் கிலோமீற்றர் தூரம் இருவழிப் பாதைகளாகப் புனரமைக்கப்பட்டு வருவதுடன் நீர் வடிகாலமைப்புக் கால்வாய்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 153 கிலோமீற்றர் நீளமான கிராமிய வீதிகளிலும் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பங்குனி 08, 2012

உலகப் பெண்கள் தினம்

உரிமைகளை உயர்த்திப் பிடிப்போம்!

(உ. வாசுகி)

எல்லாமே வணிகமயமாகும் போது, ‘தினங்கள்’ மட்டும் விதி விலக் காகி விட முடியுமா? அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் வகையோடு, பெண்கள் தினமும் ஊட கங்களில் புரட்டி எடுக்கப்படுகிறது. எந்த உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங் கள் பெண்களின் உழைப்பைச் சுரண்டு கின்றனவோ, அவை, ஸ்பான்சர் செய்து, மகளிர் தினக் கொண்டாட்டங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி மகிழ் கின்றன. தங்க, வைர நகைகள், பட்டுப் புடவைகளுக்கான விளம்பரங்கள் வலம் வருகின்றன. அர்த்தமற்ற, பொருத்தமற்ற நிகழ்ச்சிகள், பெண்ணுரிமை என்றால் கிலோ என்ன விலை என்பவர்களின் பேட்டிகள் தான் பொதுவாக அன்றைய தினத்தை ஆக்கிரமிக்கின்றன. இடை யிடையே, சில நல்ல நிகழ்ச்சிகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. (மேலும்....)

பங்குனி 08, 2012

ஐந்து மாநில தேர்தல்  முடிவு உணர்த்துவது என்ன?

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இருகட்சிகளுக்குமே மகிழ்ச்சியளிப்பதாக அமையவில்லை என்பது தான் உண்மை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலை யில், இந்த ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கரு தப்பட்டது. அதிலும் குறிப்பாக உ.பி. மாநில தேர் தலில் வெற்றிபெற காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி கள் கடுமையாக முயற்சி எடுத்தன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்த தேர்தலை தன்னுடைய தனிப்பட்ட கௌரவப் பிரச்சனையாகவே கருதிக்கொண்டார். பாஜக வும் இழந்த தன்னுடைய தளத்தை பிடிக்க தலைகீழாக நின்றது. (மேலும்....)

பங்குனி 08, 2012

துச்சாதனர்களைத் தோலுரிப்போம்

முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் பிணவாடை வீசிக் கொண்டிருக்க, பிணங்களின் மேல் நடந்து சென்று சரணடைந்தவர்களும், அங்கே வசந்தம் வீசுவதாக கோசம் போட்டவர்களும் இன்று ஜெனீவாவில்……

புத்திசாலித்தனமும், புத்திசாதுரியமும் தமக்குத் தான் உள்ளது என்று கருதிக் கொள்ளக் கூடாது

ஜெனிவா தீர்மானத்தை முறியடிக்க – 56 பேர் கொண்ட பெரியதொரு பட்டாளத்தை கொண்டு போனது அரசாங்கம். அவர்களில் தமிழர்கள் பலரும் அடக்கம். பிணங்களின் மேல் நடந்து சென்று சரணடைந்தவர்களும், முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் பிணவாடை வீசிக் கொண்டிருக்க, அங்கே வசந்தம் வீசுவதாக பிரசாரம் செய்தவர்களும் அரசுக்கு ஆதரவு தேட ஓடிப் போனார்கள். இப்படியான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்கி நின்று கொண்டது. நாங்கள் சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லி விட்டோம் என்று கூறித் திருப்திப்பட்டுக் கொண்டது கூட்டமைப்பு. “தற்போதுள்ள நிலையற்ற சூழல் தொடருமேயானால், அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. “ இந்தக் காரணங்களால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டதாக, கடந்தவாரம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார். (மேலும்.....)

பங்குனி 08, 2012

மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்காமல்

இலங்கை முக்கிய பிரமுகர்கள் தமிழகம் வர அனுமதிக்க கூடாது பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று(7.3.12) ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் தமிழர்கள் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. சிங்களவர்களுக்கு இயைணாக அங்குள்ள தமிழர்களுக்கு கவுரவமாக வாழும் உரிமை,சுயமரியாதை,சசமான அரசியல் சட்டபூர்வமான அந்தஸ்து போன்றவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசு முற்றிலுமாக தோல்வியடைற்திருக்கிறது. அதை நீங்களும் அறிவீர்கள் இந்த பின்னணியில் இலங்கையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பிரபலங்களும் தனிப்பட்ட பயணமாக தமிழகம் வருவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் அவர்கள் வருகை பற்றி தமிழக அரசுக்கு தகவல் கொடுப்பதில்லை. (மேலும்....)

பங்குனி 08, 2012

Have pro-LTTE Tamils heard of Raman Varathan Kumar?

Wars are made of a lot of things, including of course death and consequent sorrows.  There is a give and take in war and prices that have to be paid.  Wars end, sooner or later, and war-end is as good a time as any to take stock, write up the balance sheet and, if one has a conscience, assign oneself relevant quantities of guilt.  When close to a hundred thousand perish over a period of thirty years it is easy for name to slip into number, faces to be erased and guilt to become amenable to general spread.  It is easy to absolve oneself of complicity.  Still, there must be times when people ask themselves ‘what did I achieve, what has my “contribution” generated?’  On March 2, 1991 the Minister of National Security of the then Government, Ranjan Wijeratne, was assassinated by the LTTE using a remote controlled car bomb.  A total of 19 people died in the blast, including five of his bodyguards and 13 civilian bystanders. Dozens were injured. (more...)

பங்குனி 08, 2012

வாகை சூடவா’ படத்திற்கு தேசிய விருது  வித்யா பாலன் சிறந்த நடிகை, அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர்

பாலிவுட் திரைப்பட நட்சத்திர மான வித்யாபாலன், ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் சிறப்பாக நடித்ததற் காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். சிறந்த பிராந்தியப் படமாக தமிழில் வந்த வாகை சூடவா விருது வென்றது. தலைநகர் தில்லியில் 59வது தேசிய விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. சிறந்த படத்திற் கான தேசிய விருதை பயாரி படமும், மராத்திபடமான தூய்-யும் பகிர்ந்து கொண்டன. தூய் படத்தில் நடித்த நடிகர் கிரிஷ் குல்கர்னி சிறந்த நடி கருக்கான தேசிய விருதை வென்றார். ஒனிர் இயக்கிய ஐயம் படம், சிறந்த இந்திப்படமாக தேர்வு செய் யப்பட்டது. அடையாளம் குறித்த, 4 கதைகளின் தொகுப்பு இந்தப்பட மாகும். (மேலும்....)

பங்குனி 08, 2012

கிழக்கு பல்கலைக்கழக புதிய உப வேந்தர் பதவியேற்பு

கிழக்கு பல்கலைக்கழத்தின் புதிய உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா இன்று திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது, கிழக்கு பல்கலைக்கழகத்தினால் புதிய உப வேந்தருக்கு மகத்தான் வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரெட்ண, உயர் கல்வி அமைச்சின் ஆலோசகர் கலாநிதி நிமால் குணதிலக உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். உப வேந்தராக கடமையாற்றிய கலாநிதி என்.பத்மநாதன் 2010ஆம் ஆண்டு பதவி விலகியதிலிருந்து குறித்த பதவி வெற்றிடம் காணப்பட்டது. இதனால் கலாநிதி பிரேம்குமார் பதில் உப வேந்தராக கடமையாற்றி வந்தார். (மேலும்.....)

பங்குனி 08, 2012

Arun humiliates Diaspora during Geneva confrontation

(By Shamindra Ferdinando)

Slain EPRLF MP Sam Tambimuttu’s son, Arun, targeted the Tamil Diaspora on the sidelines of the current session of the United Nations Human Rights Council (UNHRC), in Geneva. The outspoken SLFP organizer for Batticaloa, Arun Tambimuttu told the Diaspora that he wouldn’t seek revenge from those who had assassinated his father and mother in Colombo over two decades ago. They were shot dead on May 7, 1990. Tambimuttu said that he wouldn’t go after LTTE personnel responsible for the killings, though he could have pursued the issue. "I was 14 years of age when the LTTE assassinated my parents. I fled the country. Now I’m back and I want to move on without seeking revenge." Arun Tambimuttu was speaking at a ‘side-event’ arranged by the Sri Lankan government in Geneva, where government delegates clashed with Diaspora groups, led by the Global Tamil Forum (GTF), over accountability issues as well as the national reconciliation process. Human Rights Minister Mahinda Samarasinghe presided over the event. (more....)

பங்குனி 08, 2012

பிரான்ஸ் அதிபரின் வெளிநாட்டவருக்கெதிரான துவேஷம்

பிரான்ஸில் அதிகளவான வெளிநாட்டவர் இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் சர்கோசி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தாம் மீண்டும் ஜனாதிப தியாக தேர்வாகும் பட்சத்தில் வெளிநாட்டவர்களை பாதியாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் உறுதி அளித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள சர்கோசி தொலைக் காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றபோதே இதனைத் தெரிவித்தார். குடியேற்றவாசிக ளுக்கு வரப்பிரசாதமாக பிரான்ஸ் இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தி கடுமையான தேர்வு விதிகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றார். ஹங்கெரியாவில் இருந்து குடியேறிய தந்தைக்கு பிறந்த சர்க்கோசி குடியேற்ற விவகாரம், இனவாத கருத்துகளை கூறி சர்ச்சையை கிளப்பிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி 08, 2012

இன்று தாய்குலத்தின் பெருமையை உணர்த்தும் சர்வதேச மகளிர் தினம்

பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், பாலியல் வல்லுறவுகள், உள ரீதியிலான தாக்கங்கள், கொலை கள் போன்றவற்றை அதிகமாக தாய்குலமே எதிர்நோக்குகின்றது. அதிலும் இந்த கொடூரத்திற்கு மிகவும் இலகுவாக ஆளாகுவது பெண் பிள்ளைக ளாகும். யுவதியாகவும், மனைவியாகவும், தாயாகவும் சமூகத்தில் பாரிய பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ள பெண்களுக்கு சிறுவயதிலேயே இவ்வாறான அழுத் தங்களுக்கு முகம் கொடுப்பது கவலைக்குரிய விடயமாகும். பெண்களுக்கு எதிராக நாளாந்தம் நாடு பூராவும் கேள்விப்படுகின்ற வல்லுறவு களை இல்லாதொழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்பமும் இன்றைய தினம் ஒருங்கிணைவாக மேற்கொள்ளப்படும். பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் பொருத்தமான சமூக கட்டமைப்பையும் நோக்கத்தையும் அடையும் போது, உரிமைகளையும், பொறுப்புகளையும் வென்றெடுத்து, பொரு ளாதார ரீதியில் வலுப்படுத்தி மென்மேலும் உறுதியுடனும், ஒழுங்கமைப்புட னும் நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்.  (மேலும்.....)

பங்குனி 08, 2012

Migrant ship arrival cost Canada $25M

RCMP have launched an international manhunt for the first person charged in connection with a ship that brought hundreds of Tamil migrants to Canada's West Coast a year and a half ago. Thayakaran Markandu has been charged with organizing illegal entry into Canada, the Mounties announced Wednesday. The charge relates to the MV Sun Sea, which arrived in August 2010 carrying 492 Tamil migrants. Markandu, who court records indicate was born in 1972, is currently believed to be living abroad, although the Mounties haven't confirmed where, said Sgt. Duncan Pound."We believe he's not inside Canada, so we're working with our international partners to have the warrant executed in an effort to bring him to justice," Pound said in an interview. (more....)

பங்குனி 08, 2012

கடவுளின் துகள் பற்றி அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

கடவுளின் துகள் இருப்பதற்கான சாத்தியங்களை நெருங்கிவிட்டதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்க ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுத் துகள் மோதல்கள் தொடர்பான தரவுகளைக் கொண்டு இந்த முடிவை அறிவித்துள்ளனர். எனினும் இந்த ஆய்வுகளில் துகள் இருப்பதற்கான உறுதியான முடிவை எடுக்க முடியாதுள்ளதாக அமெரிக்க பெளதிக விஞ்ஞானியான ரொப் நொஸர் தெரிவித்துள்ளார். இதில் குறுகிய காலம் இருக்கும் அணுத் துகள் ஒன்றைக் கண்டுபிடித்ததாகவும் எனினும் அது ஏனைய துகள்களால் உடன் சிதைவடைகிறது என அவர் குறிப்பிட்டார். முன்னதாக ஐரோப்பிய விஞ்ஞானிகளும் கடவுளின் துகள் இருப்பதற்கான வாய்ப்பை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு அணு என்பது புரோத்திரன், நியூத்திரன், இலத்திரன் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோத்திரன் என்பது குவாக், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் ஆனது. ஒரு புரோத்திரனின் நிறை, என்பது இந்த அணுத் துகள்களின் நிறைதான். (மேலும்.....)

பங்குனி 08, 2012

கிழக்கு லிபியாவில் சுயாட்சிக் கோரிக்கை

எண்ணெய் வளம் மிக்க கிழக்கு லிபியாவில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லிபியாவில் மீண்டும் ஒரு உள்நாட்டு மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழங்குடித் தலைவர்கள், இராணுவத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பேங்காசியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வைபவம் ஒன்றிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மத்திய நகரான சிர்த்தில் இருந்து கிழக்கில் எகிப்து எல்லை வரையான பகுதியைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கோரிக்கையை ஆளும் இடைக்கால அரசு நிராகரித்துள்ளது. இது நாட்டை பிரிக்கும் செயற்பாடு எனவும் அது கூறியுள்ளது. ‘லிபியாவுக்கு எதிரான சதி முயற்சியின் ஆரம்பம் இது.இதற்கு ஒரு சில அரபு நாடுகளும் ஆதரவாக செயற்படுகின்றன என்று இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலில் கூறினார். அமெரிக்காவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட உள்நாட்டு யுத்தம் லிபியாவிலும் தொடரவேண்டும் என்பதே நேட்டோ கூட்டணிகளின் விருப்பங்கள். இதனை நேட்டோ ஆதரவு லிபிய 'புரட்சியாளர்கள்' நிறைவேற்றி வருகின்றனர். இதனையே புலம் பெயர் புலியின் ஆதரவாளர்கள் இலங்கை அரசுக்கெதிரான மேற்குலகின் போர்க்குற்ற நடவடிக்கைகள் ஊடாக செய்ய முற்படுகின்றனர் என்பதை அவதானிக்க முடிகின்றது.

பங்குனி 08, 2012

பின்லேடன் உடல் அமெரிக்காவில் - விக்கிலீக்ஸ்

பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட அல் - கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக அமெரிக்க அரசுக்காகவும் இராணுவத்துக்காகவும் உளவுப் பிரிவுக்காகவும் அமெரிக்க நிறுவனங்களுக்காகவும் பல்வேறு நாடுகளில் உளவு பார்த்துவரும் தனியார் அமைப்பான ஸ்ட்ராட்போர் நிறுவனத் தின் ரகசிய மின்னஞ்சல் பரிமாற்றங் களை வெளியிட ஆரம்பித்துள்ளது விக்கிலீக்ஸ். ஸ்ட்ராட்பேகார் நிறுவனத்தின் ரகசியப் பிரிவின் துணைத் தலைவர் பிரட் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள மின்னஞ்சலை நேற்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். (மேலும்.....)

பங்குனி 08, 2012

உ.பி. தேர்தல் முடிவால் தேசிய அரசியலில் திருப்பம், மூன்றாம் அணி உருவாக வாய்ப்பு

உ.பி.யில் தனிப்பெரும்பான்மையுடன் முலாயம் சிங் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேசிய அரசியலிலும், மத்திய அரசிலும் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தே.ஜ, கூட்டணி மற்றும் ஐ.மு. கூட்டணி ஆகியவற்றுக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாவதற்கான வாய்ப்புகளை உ.பி. தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தித் தந்துள்ளன. அடிமேல் அடிவாங்கி வரும் காங்கிரஸ் கட்சியின் பிடி தளர்ந்து வருவதால், மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு, தொடரும் சிக்கல் மேலும் வலுப்பெறும் என தெரிகிறது. உ.பி.யில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாகத்தான் அலை வீசுகிறது என பலரும் கூறி வந்தது நிரூபணம் ஆனாலும், உ.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரசின் வெற்றி என்பது இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. (மேலும்.....)

பங்குனி 07, 2012

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் - ஹெல உறுமய

மன்னார் ஆயர் ராயப்பு  ஜோசப், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருப்பதானது,  இலங்கையின்  அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயலென்பதால்  அவரை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்  குற்றங்கள் குறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென மன்னார் ஆயர் ராயப்பு  ஜோசப்   ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்திருப்பதானது இலங்கையின்  அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயலென்பதால்  அவரை  உடனடியாக நீதிமன்றத்தில்  நிறுத்த வேண்டுமென ஜாதிக ஹெலஉறுமய அமைப்பு தெரிவித்துள்ளது. ஆயர் ராயப்பு ஜோசப் கடந்த 30 வருடங்களாக புலிகளின்  பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவே குரல்  கொடுத்து வந்துள்ளார். அவர்  நாட்டின் ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளாத அரசியல்   நிலைப்பாட்டிற்கு குரல்  கொடுத்து வருபவர். இதனால்  புலிகளுக்கு ஆதரவான இவ்வாறான கோரிக்கைகளை விடுப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கக் கூடாதென ஆயர்கள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் போது மன்னார் ஆயர் அதற்கு முரணாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனால்  ஆயர்கள்  சபையின் நிலைப்பாடு என்ன என்பதை பேராயர்  மல்கம் ரஞ்சித் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமெனவும் ஜாதிக ஹெல  உறுமய  கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில்  மன்னார் ஆயரின் கருத்து ஆயர்கள் சபையின் நிலைப்பாடல்ல என அந்த சபை அறிவித்துள்ளது.

பங்குனி 07, 2012

இலங்கையில் ஆட்சி மாற்றம் மட்டுமே மேற்குலகின் விருப்பம் - இலங்கைத் தூதர் தமரா குணநாயகம்

இலங்கையில்"ஆட்சி மாற்றம்' மட்டுமே மேற்குலகின் விருப்பமாக  உள்ளது என்று இலங்கையின் தூதுவரும் ஐ.நா.வுக்கான ஜெனீவாவிலுள்ள நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான தமரா குணநாயகம் கடுமையாகச் சாடியுள்ளார். "அவர்களின் உண்மையான நோக்கம் ஆட்சி மாற்றமே. ஜெனீவாவிலுள்ள தூதுவர்கள் பலர் இலங்கையில் தாங்கள் இதனையே வென்றெடுக்க விரும்புவதாக எனக்குக் கூறிக்கொண்டிருக்கின்றனர்.  ஆதலால் இந்த விடயத்தை நாங்கள் மிகத் தீவிரமான விடயமாக எடுத்துக்கொள்கிறோம். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக "பாதுகாப்பதற்கான பொறுப்பு' அல்லது கீ2க என்ற கோட்பாட்டை அமுல்படுத்த  அமெரிக்கா நாடியிருந்தது. நாடுகள் மீது இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்த இந்தக் கோட்பாட்டை அமுல்படுத்த அமெரிக்கா நாடுகிறது. அந்த நாடுகளில் அரசாங்கத்தால் தனது சொந்த மக்களைப் பாதுகாக்க முடியாது' என்பதே அமெரிக்காவின் கருத்தாக இருந்து வருகிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் தமரா குணநாயகம் கூறியுள்ளார். (மேலும்....)

பங்குனி 07, 2012

நீலநிற பட்டியணிந்து வருகை தந்த பியசேன எம்.பி.

ஆளும் தரப்பிற்கு மாறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட எம்.பியான பியசேன நீல நிறத்திலான பட்டியை அணிந்திருந்தவாறு சபைக்குள் இருந்தார். பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூடியது. சபை கூடுவதற்கு முன்னரே அவைக்குள் பிரவேசித்த எம்.பியான பியசேன கழுத்தில் நீல நிறத்தினால் பட்டியொன்றை அணிந்திருந்தார். அவைக்குள் பிரவேசித்த அவர் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுடன் ஏதேதோ உரையாடிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவரைக் கட்சியிலிருந்து நீக்க முயற்சித்தமையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவையடுத்து அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான பொடியப்பு பியசேன மீதுநடவடிக்கை எடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கொழும்பு மாவட்ட நீதி மன்றம் இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ___

பங்குனி 07, 2012

சிரியாவில் பணயத்தில் இருப்பது என்ன?

(கிறிஸ் மாஸ்டன்)

அமெரிக்காவும் மற்ற முக்கியச் சக்திகளும் சிரியாவில் கொண்டிருக்கும் உண்மையான நோக்கங்களையும் விருப்பங்களையும் சர்வதேச ஊடகங்கள் மறைக்கும் சதியில்தான் ஈடுபட்டுள்ளன. பஷிர் அல்அசாத்தின் ஆட்சியை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கிறது எனக்கண்டிக்கும் தீர்மானம் ஒன்று ஐ.நா.வில் நிறைவேற்றப்படுவதற்கான புதிய உந்துதலுடன், செய்தியாளர்கள் உட்பட ஹோம்ஸ் நகரில் பெருகும் இறப்பு எண்ணிக்கைகள் பற்றியும் முரசுகள் முழங்குகின்றன. இத்தகைய செய்தி ஊடகங்களின் ஏராளமான தகவல்கள் எதிர்த்தரப்பின் சமூக மற்றும் அரசியல் தன்மை பற்றிய புறநிலைப் பகுப்பாய்வை ஒதுக்குகின்றன, ஏகாதிபத்திய சக்திகளுடன் அதன் பிணைப்புக்களையும் பொருட்படுத்துவதில்லை மற்றும் தற்போதைய நெருக்கடியின் வரலாற்று மூலங்கள் பற்றி ஆராய்வதும் இல்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தூண்டிவிட்டுள்ள உள்நாட்டுப் போரினால் விளைந்துள்ள இறப்பு எண்ணிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளினால் செய்யப்பட்டவையே எனக் கூறப்படுகிறது. (மேலும்....)

பங்குனி 07, 2012

ஐ.நாவில் துள்ளிக்குதித்தது எகிப்த்தும் பாக்கிஸ்தானும் மட்டுமே !

ஐநா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இன்று தனது வருடாந்த அறிக்கையை வாசித்தவுடன் சூடு பிடித்தது கருத்துக் கண்மணிகளின் பேச்சுக்கள். அம்மையார் பேசும்போது ஐநா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை பற்றி சொல்லி விட்டார். முழுமையாகப் பொறுப்புக் கூறும் கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாகவும் வெடியொன்றை வீசிவிட்டார். தமக்குச் சார்பாக எந்தக் கண்மணி பேசவருமென்று காத்திருந்த தமாரா குணநாயகம் கும்பலுக்கு கை கொடுத்தது எகிப்தும், பாகிஸ்தானும் மட்டுமே. (மேலும்....)

பங்குனி 07, 2012

Tamils demonstrate in Geneva

About 2,000 Tamils demonstrated in Geneva on Monday, calling for the establishment of a tribunal to judge alleged “war crimes” committed by the Sri Lankan authorities in 2009. The Tamils, who had come from all over Europe, marched from the station to the United Nations headquarters, carrying the flags of Tamil Eelam, Britain and France. They also had placards calling for self-determination. Tamil Eelam is the name given by Sri Lankan Tamils to the state they wish to create in the northern and eastern parts of the island. The demonstration was the culmination of a “march for justice” organised by three exiled Tamils who had walked from Brussels to Geneva over the past month. (more....)

பங்குனி 06, 2012

அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா எதிர்க்கும்

இனக்கலவரத்தை ஏற்படுத்த தீயசக்திகள் கடும் முயற்சி - வாசுதேவ _

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமற்றதாகும் என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்த சில தீயசக்திகள் முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார். (மேலும்.....)

பங்குனி 06, 2012

வஞ்சிக்கப்படும் இலங்கை தமிழர்கள்  இந்திய அரசு தலையிட வேண்டும்  இலங்கைத் தூதரகம் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசுக்கும், எல்டிடிஇக்கும் போர் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இலங்கைத் தமி ழர்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப் படவில்லை. முள்வேலி முகாம்களில் இருப்பவர் களை சொந்த இடத்தில் மீள்குடியமர்த்த நட வடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங் களை இணைத்து மாநில சுயாட்சி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம உரிமை, சம அந்தஸ்து கிடைக்கும் வகையில் அரசி யல் தீர்வுகாண இந்தியா தலையிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திங்க ளன்று சென்னையில் மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் இலங் கைத் தூதரகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. (மேலும்.....)

பங்குனி 06, 2012

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல்

நேர்மையற்ற, நாணயமற்ற தேர்தல்  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குற்றச்சாட்டு

ரஷ்ய ஜனாதிபதித் தேர் தல் நேர்மையற்ற, நாணய மற்ற முறையில் நடந்துள் ளது என்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளரான கென் னடி சுகானோவ் குற்றம் சாட்டியுள்ளார். 95 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 64 சதவிகித வாக்குகளை தற் போதைய பிரதமரும், ஜனா திபதி தேர்தல் வேட்பாள ருமான விளாதிமீர் புடின் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ ருக்கு அடுத்தபடியாக கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட் பாளர் கென்னடி சுகா வோன் 17.14 சதவிகித வாக்கு களும், சுயேட்சையாக போட்டியிட்ட மிக்கைல் புரோகோவ் 7.42 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளனர்.
(மேலும்.....)

பங்குனி 06, 2012

ஊழல்கள் ,முறைகேடுகள் இடம்பெறாதவாறு முன்னெடுப்பதே தனது இலக்கு - புதிய உபவேந்தர்

(பே.சபேஷ்)

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் எவ்வித ஊழல்கள் மற்றும்  முறைகேடுகள் இடம்பெறாதவாறு நிதி, நிருவாகம் மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை எதிர்காலத்தில முன்னெடுப்பதே தனது இலக்கு என கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய உபவேந்தராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்துள்ளார். கடந்த 7 வருடங்களாக கனடாவிலுள்ள பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய அவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றதையடுத்து மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இன்று திங்கட் கிழமை பல்கலைக் கழகத்தில் தனது பொறுப்புக்களை ஏற்ற பின்னர் இடம்பெற்ற பத்தரிகையாளர்கள் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.(மேலும்.....)

பங்குனி 06, 2012

64TH NATIONAL DAY OF SRI LANKA-CANADA CALLS UPON MEMBERS OF THE SRI LANKAN TAMIL COMMUNITY TO DEVELOP CREATIVE IDEAS ABOUT HOW TO CONTRIBUTE CONSTRUCTIVELY

The High Commission of Sri Lanka in Ottawa celebrated the 64th Anniversary of Independence on 4th February at the High Commissioner’s Residence with the participation of the High Commission Staff and their families and the main Office Bearers of the Sri Lanka Canada Association of Ottawa. Outside the snow covered grounds of the official residence the programme commenced with hoisting of the National Flag, and singing of the National Anthem. Religious observances of the Buddhist, Hindu, Islam and Christian religions, the reading of the Messages of the President, Prime Minister and Foreign Minister were followed by a brief speech by the High Commissioner who spoke on the current developments in Sri Lanka, and urged the Sri Lankan community to extend their support to their Motherland. On the 8th of February a grand function was held at the Theatre of the Canadian Museum of Civilization in Ottawa which was attended by over 500 participants. The Guest of Honour was Hon. Deepak Obhrai, Parliamentary Secretary to the Minister of Foreign Affairs who was joined by Mr. Mac Harb, Senator and, Ms Louise Brown, Member of Parliament. (more...)

பங்குனி 06, 2012

5 மாநில சட்டசபை தேர்தல்  இன்று முடிவு வெளியாகிறது

5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு செவ் வாய்க்கிழமை (மார்ச் 6) வெளியாகிறது. உத்தரப்பிரதேசம் (403), பஞ்சாப் (117 தொகுதி), உத்தர் காண்ட் (70), மணிப்பூர் (60), கோவா(40 தொகுதி) ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்துள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்திற்கு கடைசி 7வது கட்டத் தேர் தல் முடிவடைந்த நிலை யில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மேற் கொள்ளப்படுகிறது. காலை 8 மணிக்கு துவங்கும் வாக்கு எண்ணிக்கையில் ஒரு மணி நேரத்தில் முடிவுகள் தெரிய ஆரம்பிக்கும். மாலைக்குள் அனைத்து சட்டசபைத் தொகுதிகள் முடிவுகளும் வெளியாகிவிடும்.
(மேலும்.....)

பங்குனி 06, 2012

உற்பத்திச் செலவு அதிகம், விற்பனை விலை சரிவு

காய்கறிகளை விவசாயிகள் வயல்களில் வீசி விட்டு செல்லும் அவலம்!

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் தங்களது உற்பத்திப் பொருட்களை வயல்களிலும் வீதியோரங்களிலும் இறக்கி விட்டுச் செல்கின்றனர். தக்காளி ஒரு கிலோ 3 ரூபாவாகவும், கத்தரிக்காய் 5 ரூபாவாகவும் கறிமிளகாய், போஞ்சி, பீர்க்கு, புடோல் போன்றவை 15 ரூபாவாகவும் விலை குறைந்துள்ளதாலேயே இத்தகைய அவலம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற விலைகளில் மரக்கறிகளை விற்கும் போது உற்பத்திச் செல்வில் அரைவாசியைக் கூட பெற முடியாமல் பெரு நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு காய்கறிவகைகள் வருவதும் குறைவாக உள்ளது. கத்திரிக்காய், தக்காளி போன்ற மரக்கறிகளை விவசாயிகள் உற்பத்திச் செலவுகளை கருத்திற் கொண்டு வயல்களில் விட்டுச் செல்கின்றனர்.

பங்குனி 06, 2012

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை இந்திய மீனவர்களிடையே நட்பு பாலத்தை ஏற்படுத்தியுள்ளார்

கடல் தொழிலாளர்களின் காவல் தெய்வமான புனித அந்தோனி யார் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையே இருந்துவரும் சிறு மனஸ்தாபங்களையும், பகைமை உணர்வையும் போக்கி அவர் கள் மத்தியில் நல் உணர்வையும், சகோதரத்துவத்தையும், நல் இணக் கப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு அருள் புரிவார் என்ற நம்பிக்கை கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் பலிப் பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்ட இலங்கை, இந்திய மக்கள் குறிப்பாக இவ்விரு தேசங்களின் கடல் தொழிலாளர் மனதில் வேரூன்றியிருக்கிறது. இலங்கை இந்திய கடல் தொழிலாளர் மத்தியில் இந்த நல்லுணர்வையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு எமது நாட்டின் பாரம்பரிய கைத் தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரு சிறந்த அனுசரணையாளராக தனது பங்களிப்பை வழங்கியமை பாராட்டக்கூடிய விடயமாகும். (மேலும்.....)

பங்குனி 06, 2012

லிபியாவிலுள்ள பிரிட்டன் வீரர்களின் கல்லறைகள் சேதம், அரசு மன்னிப்பு

லிபியாவில் இரண்டாவது உலகப் போரின்போது புதைக்கப்பட்ட பிரிட்டன் மற்றும் பொதுநலவாய நாடுகளின் இராணுவ வீரர்களது கல்லறைகள் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவின் பெங்காசியிலுள்ள இந்த கல்லறைகளை ஆயுதமேந்திய ஒரு சிலர் தமது காலால் உதைத்து சிதைப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக இணைய தளங்களில் வெளியானது. இதனை அடுத்து பிரிட்டன் உட்பட மேற்கு நாடு கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இது ஒரு மோசமான செயல் என பிரிட்டன் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு லிபிய இடைக்கால அரசு மன்னிப்புக் கேட்டுள் ளதோடு இந்த குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளது. இரண்டாவது உலக மகா யுத்தத்தில் கொல்லப்பட்ட 1,214 பொதுநலவாய நாடுகளின் இராணுவ வீரர்களின் உடல்கள் பெங்காசிலிலுள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 851 பிரிட்டன் வீரர்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலை யில் மேற்படி ஆயுதக் குழுவின் தாக்குதலால் 200 கல்லறைகள் சேதமடைந்துள்ளன.

பங்குனி 06, 2012

DAWN OF PEACE AND HARMONY IN OUR MOTHERLAND

LTTE terrorism has been eradicated in Sri Lanka and there have been no security incidents and no injuries or loss of life due to terrorism since the conflict ended in May 2009. Long awaited Peace has been restored throughout Sri Lanka. The following include some of Government’s initiatives and actions to consolidate and fortify the peaceful conditions that prevail across the country, with the elimination of LTTE terrorism, and to assist those affected by the LTTE intimidation and menace: (more....)

பங்குனி 05, 2012

வேறு உள்நோக்கத்துடனே அமெரிக்கா இலங்கைக்கெதிராக பிரேரணை தயாரிப்பு

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வு குறித்தே தற்பொழுது பரபரப்பாகப் பேசப்படுகிறது. இலங்கைக்கு எதிரான சதி குறித்தும் 2012ல் அனைவருக்கும் மின்சார வசதி அளிக்கும் அரசின் இலக்கு குறித்தும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்கவுடன் நடத்திய நேர்காணல் :
கேள்வி : இலங்கைக்கு எதிராக அமெரிக்க பிரேரணையொன்றை கொண்டுவர உள்ளது. அமெரிக்கா திடீரென ஏன் இலங்கைக்கு எதிராக கடும் போக்கைப் பின்பற்றுகிறது? பதில் : பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற கோசத்தை அமெரிக்கவே ஆரம்பித்தது. சர்வதேச மட்டத்தில் நடந்த பல்வேறு பயங்கரவாதச் செயல்களுடன் புலிகளுக்கு தொடர்பு இருப்பதையும் அமெரிக்கா அறிந்தே இருந்தது. இலங்கை புலிகளை அழித்தது அமெரிக்காவுக்கும் ஒரு வகையில் சாதகமாகவே இருந்தது. (மேலும்.....)

பங்குனி 05, 2012

லிபியாவில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அரசியல் கட்சி அமைப்பு

லிபியாவில் முஸ்லிம் சகோதரத் துவ அமைப்பு தனது அரசியல் கட்சியை அமைத்துள்ளது. நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி என்ற அரசியல் கட்சியை அந்த அமைப்பு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வ மாக அறிவித்தது. திரிபோலியில் நடந்த கூட்டத் திற்கு பின் நாட்டின் 18 நகரங்களின் 1,400 அங்கத்த வர்களைக்கொண்டு புதிய அரசியல் கட்சி அமைக்கப் பட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் மொஹமட் ஜைர் குறிப்பிட்டார். இதில் முஅம்மர் கடாபியின் ஆட்சிக் காலத்தில் 8 ஆண்டுகள் அரசியல் கைதியாக இருந்த மொஹமட் சவான் மேற்படி கட்சியின் தலை வராக தேர்வாகியுள்ளார். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு 1949 ஆம் ஆண்டு தொடக்கம் லிபியாவில் செயற்பட்டு வருகிறது. எனினும் கொல்லப்பட்ட முஅம்மர் கடாபியின் ஆட்சிக் காலத்தில் அந்த அமைப்பு கடுமையாக எடுக்கப்பட்டதோடு அதன் முக்கிய தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் லிபியாவில் அது முன்னணி அமைப்பாக செயற்பட்டு வருகிறது. அத்துடன் அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு பின்னரான தேர்தல்களில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புடைய கட்சிகளே வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

பங்குனி 05, 2012

ஜெனீவாவில் மேலும் பல நாடுகள் இலங்கைக்குச் சார்பு

53 இஸ்லாமிய நாடுகள் பேரவை இலங்கையை ஆதரிக்க தீர்மானம்

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நேற்றுத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு 53 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய மாநாட்டுப் பேரவை (ஓ.ஐ.சி) முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கென விசேட தீர்மானமொன்றை நிறைவேற்றி அத்தீர்மானத்தை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போதே இஸ்லாமிய மாநாட்டு பேரவை அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை மாநாட்டின் நிமித்தம் ஜெனீவா சென்று திரும்பியுள்ள இலங்கை அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பங்குனி 05, 2012

வாகரையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

வாகரை பொலிஸ் பிரிவில் கதிரவெளி பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகை ஆயுதங்களை நேற்று முன்தினம் இரவு பொலிஸார் மீட்டுள்ளனர். வாகரை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கதிரவெளியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆர்.பி.ஜி. குண்டு-09, மோட்டார் குண்டு- 31, 50 மில்லி மீற்றர் துப்பாக்கி ரவைகள்- 201, துப்பாக்கி ரவைகள்- 183, கிளைமோர பெற்றரிகள்- 12, மோட்டார் பியூஸ் – 49 என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி ஆயுதங்கள் யுத்த காலத்தில் புதைக்கப்பட் டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பங்குனி 04, 2012

இலங்கைக்கு ஆதரவு வழங்க மேலும் பல நாடுகள்

  • சரிகிறது மேற்குலகின் கனவு பின்வாங்குகிறது அமெரிக்கா!

  • நாடு திரும்பிய அமைச்சர்கள் குழு ஜனாதிபதிக்கு விளக்கம்

  • சகல குற்றச்சாட்டுகளும் வெற்றிகரமாக முறியடிப்பு

ஜெனீவாவிலிருந்து நேற்று காலை நாடு திரும்பிய இலங்கைத் தூதுக்குழு நேற்று நண்பகலளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து நிலைமைகளை விளக்கியது. இந்த சந் திப்பு தியத்தலாவையில் நடந்தது. ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப் பினர்களுக்கு தியத்த லாவையில் இடம் பெற்ற பயிற்சிப்பட்ட றையில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்த ஜனாதிபதியை அங்கு சென்று சந்தித்த அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரிசாத் பதியுதீன், அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடு களுடன் தமது பேச்சுக்கள் குறித்து விரிவாக விளக் கினர். புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் அவர்களின் சகபாடிகள் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளும் முயற்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து தெளிவு படுத்திய அவர்கள், இலங்கையின் நேசநாடுகள் இந்தப் பிரேரணையை தோற்கடிக்க தமக்கு கைகொடுத்து உதவுவதாகவும் குறிப்பிட்டனர். (மேலும்....)

பங்குனி 04, 2012

Let Us Unite Against Proposed UN Resolution Undermining Sri Lanka’s Reconciliation Process !

Secretary of State Hillary Rodham Clinton has announced that the United States will support a resolution in the United Nationals Council on Human Rights meeting this month directed against Sri Lanka. The resolution will call for Sri Lanka to adopt the recommendations made recently by the Lessons Learnt and Reconciliation Commission (LLRC). This resolution will undermine the domestic process towards progress on all issues related to post-conflict development, reunification, accountability and healing upon which Sri Lanka intends to make progress in the coming months and years. What we now need from the international community is their support towards the government’s efforts in implementing the LLRC recommendations, and the time and space necessary to ensure effective implementation and lasting results.  Let’s unite and raise our voices against the attempts to destroy the hard-earned peace in our country! (more....)

பங்குனி 04, 2012

ஊடக அறிக்கை (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கனடா)

இன்றைய உலக ஒழுங்கில்  அனைத்துலக சமூகத்தை வெட்டியோட முடியாது  ஒட்டித்தான் ஓடவேண்டும்

ததேகூ எடுத்த முடிவுக்கு திரு சுமந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மட்டும் அதற்குப் பொறுப்பல்ல. ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  (திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் நீங்கலாக அந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் குறிப்பாக ததேகூ இன் பொதுச் செயலாளர்  திரு மாவை சேனாதிராசா, கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அப்படியிருக்க  திரு சுமந்திரன் மீது மட்டும் சேறுவாரிப் பூசுவது ஏன் அதன் உள்நோக்கம் என்ன? திரு சுமந்திரன்  ஒரு மூத்த வழக்கறிஞர். கட்சிப் பணிகளை செவ்வனே செய்து வருகிறார் வன்னிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அதனை ஆவணப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.   கபாநஆ இன் அறிக்கையை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து  105 பக்கங்களைக் கொண்ட திறனாய்வை மூன்று  மொழிகளிலும் தயாரித்து வெளியிட உதவினார்.  அரசு தமிழ்ப் பகுதிகளில் மேற்கொண்ட தனியார் காணிப் பதிவு சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் சென்று வழக்காடி வெற்றிபெற்றார் கடந்த நான்கு மாதங்களில் இரண்டுமுறை அமெரிக்கா வந்து இராசாங்க திணைக்களத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். (மேலும்....)

பங்குனி 04, 2012

Canadian Tamil Congress (CTC) insults Hindus by serving beef on Thai Pongal day

Cathy Pillay, from TorontoCanadian Hindu Tamils claiming, Canadian Tamil Congress (CTC) which is run by majority of pro LTTE Catholics such as David Poopalapillia, Dantan Thurairaja have insulted them and have acted with no sensitivity on their Hindu Holy day. CTC organized a Thai Pongal day Dinner on January 21st, 2012 at the Grand Baccus, Banquet and Conference Centre in Toronto for a ticket prize of $ 100.00 each. Canadian Hindu Tamils are claiming that Canadian Tamil Congress served Whiskey and Beef on this CTC organized Gala fundraising dinner claiming to be celebrating Thai Pongal. Thai Pongal (தைப்பொங்கல்) is the harvest festival celebrated by Tamils in Sri Lanka and the Indian state of Tamil Nadu. Sri Lankan Hindu Tamils also use this festival to thank the, animals and equipments helped them in their cultivation. They consider cow as a sacred animal. Using the meat of their sacred animal on the occasion of their holy day is nothing but a insult to Tamil Hindus. Hindus claimed CTC used the occasion just to collect money but not to celebrate the values of the Hindu culture. They also claimed CTC started a hate campaign against Hindu Priests who took part in the Hindu cultural events organized by Sri Lankan Consul General in Toronto. Thai Pongal is a Public Holy day in Sri Lanka.

பங்குனி 04, 2012

கூட்டமைப்பின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய கிளிநொச்சி மாநாடு

கடந்த 19 ஆம் திகதி கரைச்சி (கிளிநொச்சி) பிரதேச சபை மண்ட பத்தில் தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் யாழ். மாவட்டப் பாரா ளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் ஏற்பாட்டில் ஜனநாயக அடிப்படை யில் அரசியல் சமூக உரிமைகளை வென் றெடுப்பதற்கான விழிப் புணர்வுக் கருத் தரங்கு நடைபெற் றது. அதில் அதிகாரப் பகிர்வூ டாக இனப்பிரச்சினைக்கான தீர்வு என்னும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திர னும் தேசியப் பிர ச்சினையும் 13வது அரசியலமைப் புத் திருத்தமும் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையா ளர் குமார வடிவேல் குருபரன் அவர் களும், இனப்பிரச்சினையும் மனித உரிமைகளும் தொடர்பில் கே. தயாபரனும் உரையாற்றியிருந்தனர். அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பாக அங்கு சமுகமளித் திருந்த தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா சம்பந் தனும் உரையாற்றியிருந்தார். (மேலும்....)

பங்குனி 04, 2012

போர்க்குற்றங்களை மறுக்கும் சிறிலங்கா

(அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Boston Globe  என்ற நாளேடு எழுதியுள்ள ஆசிரிய தலையங்கத்தின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளது படையைத்  தோற்கடித்துப் போரை முடிவுக்குக் கொண்டு  வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சென்றுவிட்டன.  இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டார்கள்.  ஜெனீவாவில் இந்த வாரம் கூடுகிற அய்.நா மனிதவுரிமை அவை  சிறிலங்கா அரசு போர்க்குற்றங்களை இட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்த வேண்டும்.  ஆனால் நடந்து முடிந்த குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறல் என்பது அதன் எதிர்காலத்தைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது. போரில் தோல்வியைச் சந்தித்த தமிழ் மக்கள் மிகவும் கசப்பான மனநிலையில் இருக்கிறார்கள். இருந்தும்  அவர்கள் தொலைநோக்கோடு  சமாதான முறையில் சிங்கள மக்களோடு ஒத்துவாழும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது.   இந்தப் பயங்கரமான மோதலின் தோற்றத்துக்கு காரணமாக இருந்த கேள்விகளுக்கு விடை காணப்படவில்லை.  எந்தளவு தன்னாட்சி உரிமை சிறுபான்மைத் தமிழர்களுக்கு இருக்கும்? (மேலும்....)

பங்குனி 04, 2012

மார்க்சியப் பகுப்பாய்வு தேவை தானா?

(கோசலன்)

வரலாற்றையும் நாம் சார்ந்த சமூகத்தையும் அணுகும் போது அவற்றைப் புரிந்து கொள்ள முனையும் போதும் பல்வேறு சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஈழ விடுத்லைப் போராட்டத்தையே உதாரணமாகக் கொண்டால் தவறுகள் ஆரம்பத்திலிருந்தே நிறுவன மயமாகியிருக்கிறது என்ற கருத்தை ஐயர் முன்வைக்கிறார். நீதிக்கும் அநீதிக்கும், உண்மைக்கும் பொய்மைக்கும், சரிக்கும் தவறுக்கும் இடையிலான போராட்டம் என்பது எல்லா சூழ்நிலைகளையும் போலவே ஈழப்போராட்டத்திலும் நடந்திருக்கிறது. இங்கெல்லாம் உண்மை வெற்றிபெற வேண்டும் என்பது தான் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் விருப்பு. (மேலும்....)

பங்குனி 04, 2012

இனப்பற்றுடன் தாய் நாட்டுப் பற்றுக்கும் முன்னுரிமை அளித்த தலைவர்

  • இரா. சம்பந்தனின் முடிவில் தவறுமில்லை தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவுமில்லை

  • தமிழரை வழிநடத்த சம்பந்தனே சரியான தலைவர் எனப் புகழாரம்

  • விளங்கிக் கொள்ளாதோர் வெறும் விதண்டாவாதக்காரரே!

(எஸ். சுரேஷ் )

ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அங்கு எமது நாட்டைச் தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்திவரும் நிலையில் அதனை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட விரும்பாமலேயே தமிழ்க் கூட்டமைப்பு அதன் ஜெனீவா பயணத்தை நிறுத்தியது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்ததும் விடயத்தை அதன் அர்த்தத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத சிலர் அவர் மீது ஏறிப்பாய்ந்தனர். ஆனால் இப்போது சம்பந்தன் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு தமிழ்த் தலைவர்களையும், அதேபோன்று விதண்டாவாதத்தை மட்டுமே குதர்க்கமாகப் பேசிவரும் ஓரிரு பொது மகன்களையும் தவிர ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே ஏற்றுக் கொண்டுள்ளது. (மேலும்....)

பங்குனி 04, 2012

சுரேஷ் MP போன்றோரின் புளித்துப்போன கதைகளை கேட்க தமிழர் தயாரில்லை!

தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தக்க வேளையில் தனது அரசியல் சாணக்கிய முடிவுக்கு ஏற்ப ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று அவர் எடுத்த முடிவு சிறந்ததென ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர். பாபுசர்மா தெரிவித்துள்ளார். இலங்கை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வேறு காரணங்களினால் அவர்களது வாழ்வு பாதிக்கப்படக்கூடாது. யுத்தம் அற்ற இலங்கையில் பல்லின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஜெனீவா பிரச்சினை காரணமாக இன நல்லுறவு பாதிக்கப்படக்கூடாது என்ற தோரணையில் சம்பந்தன் ஐயாவின் முடிவு அரசியல் சாணக்கியமாகும் இந்த முடிவினை இலங்கை அரசும் வரவேற்று இருப்பதும் அனை வரும் அறிந்ததே. அதேவேளை சுரேஷ் பிரேமச் சந்திரன் இம் முடிவு பற்றி தம்மிடம் கட்சி கலந்து ஆலோ சிக்கவில்லை எனவும் இந்த முடிவு தெரிவிக்கப்படும் வேளையில் தான் இந்தியாவில் இருந்த தாகவும் தெரிவித்திருக்கின்றார். இது தமிழ் மக்களை மிகவும் ஏளனப்படுத்தும் பதிலாகவே இருக்கின்றது. (மேலும்....)

பங்குனி 04, 2012

கிழக்கு முஸ்லிம்களுக்கு தனியலகா? இப்போது அது தேவையற்ற விடயம் - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

முஸ்லிம்களுக்கு தனியலகு தேவையில்லை என்று கூறுவதற்கு பிள்ளையான் யார் ? - உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மெளலவி

வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் போதுதான் முஸ்லிம்களுக்கு தனியலகு தேவையாக இருந்தது. கேட்டதில் நியாயமும் இருந்தது. ஆனால் இன்று இரு மாகாணங்களும் பிரிந்து தனித்தனியாக இயங்கு வதால் முஸ்லிம் தனி அலகு என்ற தேவை இல்லாது போய்விட்டது. இப்போதும் எவராவது இது பற்றிப் பேசுவார்களேயானால் அது அவர்களது அரசியல் தேவைகளுக்காகவே என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித் திருக்கிறார். தனது இந்த நிலைப்பாட்டை கிழக்கிலுள்ள சகல முஸ்லிம் தலைவர்களும் நிச்சயம் ஏற்றுக்கொள்வர் எனத் தெரிவித்த அவர், தனது நிர்வாகத்தில் முஸ்லிம்களுக்கு சகலவிதமான விடயங்களிலும் சமமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித் துள்ளார். (மேலும்....)

பங்குனி 04, 2012

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதை நிரூபித்த சம்பந்தன்!

“தான் ஆடா விட்டாலும் தன் தசையாடும் என்பது போல தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவின் நாட்டுப்பற்றைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. தனது தாய் நாட்டிற்கு ஒரு அவமானம் நேரிடப் போகிறது என்பதை அறிந் ததும் அதற்காக ஒருகணம் தன்னையே மறந்து தனது தாய் மண் மீதுள்ள பற்றை சம் பந்தன் அவர்கள் இந்த உலகிற்கே எடுத்துக்காட்டியுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 19ஆவது மனித உரிமை கள் தொடர்பான மாநாட்டில் இலங்கை மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே போலியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உலக அரங்கில் எமது நாட்டிற்கு அபகீர்த் தியை ஏற்படுத்தி எம்மைத் தனிமைப்படுத்தத் திட்டமிட்டுவருகின்றன. பயங்கரவாதத்தை அழிப்பதற்கு உந்துசக்தியாக இருந்துவிட்டு இன்று அதில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களைக் கண்டுபிடித்து போர்க்குற்றவாளியாகச் சித்திரிக்க முனைந்துவரும் நாடுகளின் சுயநலப் போக்கினை, இன்று சம்பந்தன் ஐயா போன்ற எதி ராகக் குரல்கொடுத்து வந்த உள்நாட்டவர்கள் பலரும் உணர்ந்துள்ளனர். (மேலும்....)

பங்குனி 04, 2012

தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாடும் தடுமாற்றங்களும்

இலங்கையின் மீதான வெளி அழுத்தங் களை எதிர்த்து நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தலைமையில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை எதிர்க்கும் போராட்டங்களே நடந்துள்ளன. இந்தப் போராட் டங்களுக்கு இலங் கையின் பெரும்பாலான கட்சிகள் ஆதரவளித் துள்ளன. சிங்களக் கட்சிகள் பெரும்பாலும் தேசிய நிலைப்பாட்டு சிந்தனையுடன் இயங்கியுள்ளன. இலங்கையின் மீதான எத்தகைய அழுத்தங்களும் இலங்கையர் அனை வரையும் பாதிக்கும் என்ற உணர்வு சிங்களக் கட்சிகளிடம் இருந்துள்ளது. ஐ.தே.க. கூட இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இதேவேளை, தமிழ் தரப்பிலும் இந்த விசயத்தில் ஓரளவு ஒத்த நிலைமையே காணப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மட்டுமல்ல, முற்றிலும் வேறான ஒரு அரசியல் நிலைப்பாட் டையுடைய தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) கூட இந்த விச யத்தில் அதனுடைய அரசியற் பாரம் பரியத்துக்கும் சிந்தனைப் பாரம்பரியத்துக் கும் அப்பால் ஒரு தீர்மானத்தை எடுத் திருக்கிறது. (மேலும்....)

பங்குனி 04, 2012

தமிழ் அரசியல்வாதிகளையும், பிரபாகரனையும் உச்சக்கொப்பில் ஏற்றிவைத்ததன் விளைவு  

சில தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற செயற்பாடு தமிழினத்தின் எதிர்காலத்திற்கும் பெரும் சாபக்கேடே?

இந்நாட்டில் தமிழர் தொடர்பான இனப்பிரச்சினை ஆரம்பமான காலம் முதலே நாட்டிலுள்ள தமிழ் ஊடகங்கள் பலவும் தமதினத்திற்கு சார்பாக நடந்து கொள்வதாக தமக்குள் எண்ணி அப்பிரச் சினையை அன்று முதல் இன்று வரை பெரும் சிக்கலுக்குள் தள்ளிவிட்ட நிலையையே காண முடிகிறது. டட்லி - செல்வா, பண்டா - செல்வா, சிறிமா - சாஸ்திரி, ஜே. ஆர். - ராஜீவ், ரணில் - பிரபா என்று இந்நாட்டில் தீர்வைக் காண முயற்சிகள் எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் இந்தத் தமிழ் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாது செயற்பட்டமையைக் காண முடிகிறது. சுமுகமான தீர்வு எட்டப்படும் சூழ்நிலைகளில் இருதரப்பு இனவாதிகளிடமிருந்தும் எதிரான கருத்துக்களை வேண்டுமென்றே கேட்டு எழுதி பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தடுத்து வந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. கேட்டால் தமிழினத்திற்காக குரல் கொடுக்கிறோம் என்ற ஒன்றைக் கூறி பலரதும் வாயை அடைத்து விடுவார்கள். ஆனால் அது அவர்களது விற்பனைக்காக என்பதுவே உண்மை. (மேலும்....)

பங்குனி 04, 2012

ரஷ்ய அரசியலில் விளாதிமிர் புட்டின்

ரஷ்யாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

ரஷ்யாவில் இன்று (04) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதால் எல்லோருடைய கண்களும் கிரம்ளினுக்குள் மீண்டும் விளாதிமிர்புட்டின் நுழைவாரா என்பதையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. ரஷ்ய அரசியலில் விளாதிமிர் புட்டின் அணையா விளக்கு. பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் மாறி மாறிப் பதவி வகித்து அயல் நாடுகளையும் அகிலத்தையும் ஒரு கலக்குக் கலக்கியவர். 1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ரஷ்யாவின் ஜனாதிபதியாக பொரிஸ்யெல்ஸ்ரின் கடமையாற்றும் போது பிரதமராகவிருந்து பிரபலம் பெறத் தொடங்கியவரே விளாதிமிர் புட்டின். பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் 2008 வரை இரண்டு முறைகள் ஜனாதிபதியாகவிருந்தார். ரஷ்ய அரசியலமைப்பின் படி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். ஒருவர் எத்தனை முறைகளேனும் ஜனாதிபதியாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து இரண்டு முறைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. (மேலும்....)

பங்குனி 03, 2012

இலங்கையின் இறைமையை பாதுகாக்க சீனா ஒத்துழைப்பு

இலங்கையின் சுதந்திரத்தையும், இறைமையையும், ஆட்புல ஒருமைப் பாட்டையும் பாதுகாப்பதற்கு சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி ரீதியான உதவிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என சீனா உறுதிமொழி வழங்கியுள்ளது. சீனா சென்றிருக்கும் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, பீஜிங்கில் சந்தித்த பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்கிலி லியாங் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார் என Xinhua செய்தி சேவை தகவல் வெளி யிட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் நட்புறவு மேலும் தொடரும் எனத் தெரிவித்திருக்கும் அவர், இரு நாட்டு இராணுவத்தினரும் நன்மைய டையும் வகையில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கும் தயாரெனக் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை யொன்றைக் கொண்டுவருவதற்கான பிரயத்தனங்களில் சில சர்வதேச நாடுகள் முனைப்புக்காட்டிவரும் நிலையில், இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமையைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. கடந்த 55 வருடங்களாக இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் இராஜதந்திர ரீதியிலான தொடர்புகள் காணப்படும் நிலையில் இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவி வழங்கப்படும் என சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பங்குனி 03, 2012

புலிகள் தொடர்பான சில உண்மைகள்

இலங்கை தடைசெய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்பொன்ரை இராணுவ ரீதியாக தோற்கடித்த முதல் நாடாகும். இலங்கை அரசானது சிறுவர் போராளிகளை இராணுவத்தில் இணைக்கக் கூடாது என சட்டரீதியான ஒரு கொள்கையை கொண்டிருந்தது. விடுதலை புலிகள், 82 தமிழ் அரசியல்வாதிகள் / 54 தமிழ் அரச அதிகாரிகள் / 24 தமிழ் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்களை கொலை செய்திருக்கின்றனர். புலிகள் இயக்கமானது தற்கொலை குண்டுத்தாக்குதல், மனிதவெடிகுண்டில் முன்னோடியான முதல் தீவிரவாத இயக்கமாகும்.இரண்டு சர்வதேச அரசியல் தலைவர்களை கொலை செய்த ஒரே இயக்கமாக புலிகள் இயக்கம் திகழ்கின்றது ( ஒன்று இலங்கை மண்ணில் 1993 மற்றையது இந்திய மண்ணில் 1991இல்) தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமானது சொந்தமான விமானங்கள் தரையிறக்கும் விமான ஓடு பாதைகளைக் கொண்ட முதலாவது தீவிரவாத இயக்கமாகும்.
புலிகள் இயக்கமானது வெளிப்படையாக பயங்கரவாத பிரச்சார வேலைகளுக்கென புலிகள் தடை செய்யப்பட்ட 54 நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டிருந்த சில பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக இருந்தது.
புலிகள் அமைப்பானது உலகம் முழுவதும் வரிச் சலுகைகளை அனுபவிக்கக்கூடிய அறக்கட்டளை நிறுவனங்களாக இயங்கும் 32 முன்னணி நிறுவனங்களை சட்டவிரோதமாக கொண்டு இயங்கி வந்துள்ளது.
(மேலும்.....)

பங்குனி 03, 2012

உருத்திரகுமாரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அமெரிக்காவின் செயற்பாடுகள்  - அமைச்சர் வீரவன்ச

விடுதலைப்புலிகளின் சர்வதேச தலைவராகச் செயற்பட்டுவரும் உருத்திரகுமாரின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே அமெரிக்கா செயற்படுவதாக குற்றம் சாட்டிய அமைச்சர்  விமல் வீரவன்ச, இலங்கையில் புலிகளின் செயற்பாட்டை ஊக்குவிக்கவே அமெரிக்கா முயற்சிப்பதாகவும் கூறியதுடன், தமது நிலைப்பாட்டில் இருக்கும் உருத்திரகுமாரை அமெரிக்கா இதுவரையில் ஏன் கைது செய்யவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மூன்று இலட்சம் தமிழ் மக்களை மனிதக் கேடயமாக வைத்திருந்தனர். இந்நிலையில் படையினர் அவர்களை மீட்டு பராமரித்து  பாதுகாப்பு அளித்தனர். இதற்காகவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் என்ற பிரேரணையை கொண்டுவந்துள்ளது. (மேலும்.....)

பங்குனி 03, 2012

கூட்டமைப்பின் பத்மினியிடம் சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் குறித்து விசாரணை!

கூட்டமைப்பின் பத்மினியிடம் சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் குறித்து விசாரணை:- வன்னியில் கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை தம்மிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கேட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தருமான திருமதி;.பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் தலைமையகத்திற்கு திருமதி;.பத்மினி சிதம்பரநாதன் விசாரணைக்கென அழைக்கப்பட்டிருந்தார். முன்னதாக கடந்த 28ம் திகதியே விசாரணைக்கு வருமாறான அழைப்பு தமக்கு கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் எனினும் அது கால தாமதமாக கிடைத்தமையினால் இன்றைய தினம் விசாரணைக்கு சமூகமளித்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சிவனேசன் 2008ம் ஆண்டின் பங்குனி 6ம் திகதி கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.அவரது மரணம் நடந்து நான்கு வருடங்களை அண்மித்து வருகின்ற நிலையில் இப்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் திட்டமிட்டு சிக்க வைக்கும் ஓர் உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. சிவனேசனின் இறுதி கிரியையில் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

பங்குனி 03, 2012

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கரையோர காவல் படையால் கைது

இல ங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட் டுள்ளதாக மீன்பிடித்திணைக் களம் கூறியது. திருகோணமலையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்கள் சட்ட விரோதமாக இந்திய கடற் பிர தேசத்துக்கு நுழைந்தனர் என்ற குற் றச்சாட்டின் பேரில் கைது செய் யப்பட்டுள்ளனர். ஆந்திரா பிரதேசத்தில் வைத்து கைதான மேற்படி மீனவர்கள் படகுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு இவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியது. இவர்களுடன் சேர்த்து 10 மீனவர்கள் 2 படகுகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்குனி 03, 2012

பிரித்தாணியப் பெண்ணை கொலை செய்தவர் கணவர் கைது

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ரேணுகா ஹோட்டல் அறையில் கத்திக்குத்துக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்இ 47 வயதான சுதர்ஷினி ஷகில கணகசபை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இப்பெண் பிரிட்டனிலிருந்து தனது தாயாருடன் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில்  இலங்கைக்கு வந்ததாகவூம் எனினும் அவரின் தாயார் சில நாட்களின்பின் திரும்பிச் சென்றதாகவூம் தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டலின் முதல் மாடியில் முதலாவது அறையில் இவர் தங்கியிருந்தார். (மேலும்.....)

பங்குனி 03, 2012

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவா: அமெரிக்கா மழுப்பல்!

கூடங்குளம் விவகாரத்தில், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் இருந்து நிதியுதவி வருவதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிறுவனங்கள் தான் போராட்டத்தைத் தூண்டி விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், கூடங்குளம் விவகாரத்தில், 77 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு தனது கண்காணிப்பில் வைத்துள்ளது. இது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் நேற்று கூறியதாவது: இந்தியாவின் ஆக்கப்பூர்வ அணுசக்தித் திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. அதற்காக அங்கு எதிர்த்துபோரிடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமல்ல. இந்தியாவில், வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அமெரிக்கா ஆதரவளிக்கிறது. ‘சயின்ஸ்' பத்திரிகைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டி பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அமெரிக்காவில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அணுசக்தி திட்டங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மின்சக்தியை அதிகரிக்க வேண்டிய தேவையை இந்த நிறுவனங்கள் கணக்கிலேயே எடுத்துக் கொண்டு கருத்து தெரிவிப்பதில்லை. இவ்வாறு நுலண்ட் தெரிவித்தார்.

பங்குனி 03, 2012

இது எனது மண்இது எனது மண்

இது எனது மண்இது எனது மண், நான் தவண்டு, புரண்டு, ஓடி விளையாடி, தடம் பதித்த மண், இந்த மண்ணில் உள்ள வளங்களும், இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் திறமைகளும்ஏராளம், ஏராளம். ஆனால் இவையனைத்தும் கிணற்றுத்தவளையாக இருப்பதை விரும்புகின்றீர்களா ? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. எமது மண்ணினதும், மக்களினதும் திறமைகள் வெளியே வர வேண்டும். அது உலகமெல்லாம் பரப்பப் பட வேண்டும். அதனூடாக பல பாரிய அபிவிருத்திகளை நானும், எனது மாவட்டமும், அனுபவிக்கவேண்டும்.எப்படி? (மேலும்.....)

பங்குனி 03, 2012

அரசியல் ஞானம் இல்லாத சுரேஸ் பிரேமச்சந்திரன்! - விக்கிலீக்ஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரனால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற பெரும்பாலான அரசியல் எதிர்வு கூறல்கள் தவறானவை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கண்டு உள்ளது. சுரேஸ் பிரேமச்சந்திரன் கடுமையான எதிர்வு கூறல்களை முன்வைப்பார் என்றும் ஆனால் அவரால் முன்வைக்கப்படுகின்ற எதிர்வு கூறல்களில் அநேகமானவை ஒருபோதும் நடந்ததாக இல்லை என்றும் தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.  இந்த ஆவணம் 2005 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி அனுப்பப்பட்டு உள்ளது. (மேலும்.....)

பங்குனி 03, 2012

ரூ. 2,230 கோடியில்

தமிழ்நாட்டில் புதிய நான்கு வழி வீதிகள்; மத்திய அரசு அனுமதி

மதுரை- ராமநாதபுரம், தஞ்சாவூர்- விக்கிரவாண்டி இடையே நான்கு வழி வீதி அமைக்கும் ரூ. 2,230 கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 49ல் ராமநாதபுரம்- மதுரை இடையே நான்கு வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும். 115.110 கிலோ மீட்டர் தூரமுள்ள இடத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 828.07 கோடி. அதில் ரூ. 145.07 கோடி நிதி, நிலம் கையகப்படுத்துதல், நில உரிமையாளர்கள் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், சாலை மறுநிர்மாணக் கட்டுமானம் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 45ல் விக்கிரவண்டி- தஞ்சாவூர் இடையே நான்கு வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும். 164.22 கிலோ மீட்டர் தூரமுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 1,402,50 கோடி. அதில் ரூ. 312.50 கோடி நிதி, நிலம் கையகப்படுத்துதல், நில உரிமையாளர்களுக்கு மறுவாழ்வு, மீள்குடியேற்றம், சாலை மறுநிர்மாணக் கட்டுமானம் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

பங்குனி 03, 2012

உலகின் பணக்கார கிராமம்

உலகிலேயே பணக்கார கிராமமான சீனாவின் ‘ஹுவாக்ஸி’யில் ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்கும் குறைவான ஹுவாக்ஸி, இன்று உலகையே வியந்து பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஏழை விவசாய சமூகம் தான் அங்கு இன்று பெரும் பணக்காரக் குழுமமாக வளர்ந்திருக்கிறது. தற்போது ‘மாதிரி சோசலிஷ கிராமம்’ என்று அழைக்கப்படும் இக்கிராமத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர், உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரான வு ரென்பா. அவர் தனது முயற்சியை 1961ம் ஆண்டு தொடங்கினார். ரென்பாவின் தொலைநோக்கு அடிப்படையிலான வழிகாட்டலும், புத்திசாலித்தனமான கடின உழைப்பும் ஹுவாக்ஸிக்கு அசுர பணக்கார அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன. சில உதாரணங்களைப் பார்த்தால் புரியும். இங்குள்ள 328 அடி 60 மாடிக் கட்டடம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள அதிகபட்ச உயரக் கட்டிடத்திற்கு இணையானது. லண்டன் மாநகரத்தில் உள்ள கட்டிடங்களைவிட உயரமானது. இந்தக் கட்டிடத்தின் 60 வது மாடியில் உள்ள பசு சிற்பம் ஆயிரம் கிலோ தங்கத்தாலானது. (மேலும்.....)

பங்குனி 03, 2012

இந்நாட்டு மக்களின் இறைமையை எந்த சக்தியாலும் பறித்துவிட முடியாது

எங்களுக்கு உதவுவதற்கு முன்வந்திருப்பது சீனா, இந் தியா, தாய்லாந்து மற்றும் உகண்டா போன்ற ஆபிரிக்க நாடுகளும் அரபு உலக நாடுகளுமேயாகும். இலங்கையின் நட்பு நாடுகளான இவை, எமது நாட்டின் இயற்கை வளங்களையோ, பொருளாதாரத்தையோ சூறை யாடும் எண்ணமின்றி, நட்புக்கு முக்கியத்துவம் அளித்தே இவ்விதம் இலங்கைக்காக சர்வதேச அரங்கில் குரல் கொடுக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் எங்கள் நாட்டின் வரலாற்றை பின்னோக்கி பார்த்தல் அவசியமாகும். 1505ம் ஆண்டு முதல் போர்த்துக்கேயர், ஒல் லாந்தர் அதையடுத்து ஆங்கிலேயர் எங்கள் நாட்டை ஆக்கிரமித்து, எமது பொருளாதாரத்தை சூறையாடியதுடன் நின்றுவிடாமல், நம்நாட்டு மக்களை அடிமைகளைப் போல் வழிநடத்தி வந்தார்கள். குறிப்பாக, மலையகத்தின் பெருந்தோட்டங்களுக்கு இந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர் கள் தென்னிந்தியாவில் இருந்து அடிமைகளாக பலவந்தப்படுத்தி கொண்டுவந்த தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் இன்றும் அதே நிலையில் லயன் வாழ்க்கையில் முடங்கிக் கிடக்கக்கூடிய வகை யிலேயே அமைந்துள்ளது. (மேலும்.....)

பங்குனி 02, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு எழுதியுள்ள கடிதம்

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசாரணைகள் நடத்தப்படுவதோடு மக்களுக்கு உரிய தீர்வுகள் ஏற்படுத்தித் தரப்படும் என மே 2009 இல் சிறிலங்கா ஜனாதிபதி அளித்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து இந்த விடயம் குறித்து அறிவுறுத்த ஜூன் 2010 இல் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்டது. 31 மார்ச் 2011 அன்று இந்தக் குழுவினர் தங்கள் அறிக்கையை  தாக்கல் செய்தனர். போரின் இறுதிக் கால கட்டங்களில் இரு தரப்பிலும் போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஐ.நா வின் அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றதுடன் அதில் குறிப்பிடப்பட்டிருந்த பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்துமாறும் கேட்டுக் கொண்டோம். உண்மையை அனைவருக்கும் விளங்கச் செய்வதும் அதற்கான பொறுப்புக்களை எடுத்துக் கொள்வதுமே இது போன்ற துயரங்கள் மீண்டும் நடக்காத வண்ணம் தடுக்கும் என்ற ஆறுதலும் அடைந்தோம். (மேலும்.....)

பங்குனி 02, 2012

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் சுமந்திரன் எம்.பி.யின் உருவ பொம்மை எரிப்பு

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனிதஉரிமை ஆணைக்குழுவின் 19ஆவது அமர்வில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் அமர்வு குறித்த கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் ஆத்திரமடைந்துள்ள பல்கலைக்கழக மாணவர் சமூகம் கூட்டமைப்பின் முடிவு தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வளாகத்தில் கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பின் இந்த முடிவுக்கு சுமந்திரனே காரணம் என குற்றம் சாட்டியதுடன் சுமந்திரனின் உருவ பொம்மைகளையும் எரித்துள்ளனர். இதன் பின்னணியில் சுரெஷ் பிரேமசந்திரனின் கைகள் உள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்மந்தனைத் தவிர்த்து மாவைக்கு அடுத்த நிலையில் தானே ஊகபோகம் செலுத்தி வந்த சுரேஷூக்கு சுமந்திரனின் நியமன எம்பி பதவியும் அப்புக்காத்து ஆங்கிலமும் தன்னை பின்னுகு தள்ளிவிட்டாக உணரும் சுரேஸின் விருப்பை சிலர் நிறைவேற்றியிருப்பதாக மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

பங்குனி 02, 2012

வடக்கின் உண்மை நிலையை தெளிவுபடுத்தும் தொகை மதீப்பீட்டு அறிக்கை ஜெனீவாவில்

  • அங்கத்துவ நாடுகளுக்கு தொடர்ந்தும் தெளிவுபடுத்தல்

  • மனித உரிமை தொடர்பில் பிரிட்டன் நற்சான்றிதழ்

  • கிர்கிஸ்தான், ஈக்குவடோர், அணிசேரா நாடுகள் ஆதரவு

இலங்கை தொடர்பான தவறான குற்றச்சாட்டுகள், தெளிவின்மை என்பவற்றுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் எமது தூதுக்குழு அறிவூட்டி வருகிறது. வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் அங்கு சுயாதீனமாக தகவல்கள் திரட்டப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. 1981 ன் பின் நடந்த இந்த புள்ளி விபரங்களின் மூலம் காணாமல் போனதாகவும் கொல்லப்பட்டதாகவும் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பேர் இறுதிக் கட்ட யுத்தத்தில் இறந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டாலும் 2009 ஜனவரி முதல் மே மாதம் வரை சுகவீனம், முதுமை உட்பட பல்வேறு காரணங்களினால் 8998 பேரே இறந்துள்ளனர். இப்பகுதியில் 90 சதவீதத்திற்கு மேல் கல்வி நடவடிக்கை நடைபெறுகிறது. 481 குடும்பங்கள் மட்டுமே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளது. இந்த விடயங்கள் குறித்து ஜெனீவாவில் ஏனைய நாடுகளை அறிவூட்டி வருகிறோம். (மேலும்.....)

பங்குனி 02, 2012

அழகான ஆபத்து.... செல்போன்....

உலகத்தை உள்ளங்கைகளுக் குள் கொண்டு வந்துவிட்ட அழ கான விஞ்ஞான குழந்தை. எந்த இடத்தில் இருந்தபடியும் தொலை வில் இருக்கும் நபர்களை தொடர்பு கொள்ள உதவுவதன் மூலம் காலம் மற்றும் பணவிரயத்தை தவிர்க்க செல்போன் மிகவும் உதவியாக இருக்கிறது என்றால் அது மிகை யல்ல. இன்றைய சூழலில் பலர் செல்போனுக்கு அடிமையாகவே மாறிவிட்டனர். உலக சந்தையில் இந்தியாதான் செல்போன் பயன் பாட்டில் வேகமாக வளர்ந்துவரு கிறது. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சி னால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் திடுக் கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். (மேலும்.....)

பங்குனி 02, 2012

கொள்ளுப்பிட்டி நட்சத்திர ஹோட்டலில் பெண் கொலை

ஒரே அறையில் தங்கியிருந்துவிட்டு தப்பியோடிய (இரண்டாவது)கணவன் கைது

கொள்ளுப்பிட்டி, காலி வீதியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட் டெடுக் கப்பட்ட பெண் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி 5வது ஒழுங்கையைச் சேர்ந்த சந்தேக நபர் அந்தப் பிரதேசத்திலுள்ள முன்னணி தனியார் மருத்துவமனைக்கு அருகில் வைத்து பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட மேற்படி பெண் மணியை மேற்படி சந்தேக நபர் இரண்டாவது தாரமாக திருமணம் முடித்தவர் என ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சந்தேக நபரிடம் இந்தக் கொலை தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்.....)

பங்குனி 02, 2012

தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!  இலங்கை தூதரகம் முன்பு   மார்ச் 5- சிபிஎம்  ஆர்ப்பாட்டம்

இலங்கையில் அரசுக் கும், விடுதலைப்புலிகளுக் கும் இடையிலான இறுதிக் கட்டப் போரில் இலங்கைத்தமிழர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்ட தும், கைது செய்யப்பட்ட வர்கள் இதுவரை விடுதலை செய் யப்படாததும், பலத்த காய முற்றவர்களுக்கு சிகிச் சை மறுக்கப்பட்டதும் உள் ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்கள் மீது போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இலங்கை அரசு எந்த நட வடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசும் இலங்கை அரசை நிர்ப்பந் திக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. (மேலும்.....)

பங்குனி 02, 2012

ஆபிரிக்க நாடுகளும் இப்போது இலங்கையை ஆதரிக்கின்றன

எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தம் இலங்கையில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண் டிருந்த இலங்கை மக்கள் நாட்டுப்பற்றுடன் அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பு நடவடிக்கைகளை பகிரங்கமாக ஆதரித்து, எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் மேற்கு நாடுகளில் மேற்கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பிரசார செயற்பாடுகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தனர். யுத்தம் முடிவடைந்து நாட்டில் மீண்டும் சமாதானம் ஏற்பட்டதை அடுத்து வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக் கள் நாட்டுப் பற்றுடன் இருந்த போதிலும், இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் எதிராக அந்நாடுகளில் மேற்கொள் ளப்படும் போலிப் பிரசாரங்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு இப் போது அந்தளவிற்கு உற்சாகத்துடன் செயற்படவில்லை. (மேலும்.....)

பங்குனி 02, 2012

கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஜெர்மனியிலிருந்து ரூ. 12 கோடி?

கூடங்குளம் போராட்டக் குழு வுக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஹெர் மனிடமிருந்து மட்டும் ரூ. 12 கோடி அளவுக்கு பணம் வந்துள்ளதாகவும், அதிலும் கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.4 கோடி பணத்தை போராட்டக்காரர்கள் பெற்றுள்ள தாகவும், இதுகுறித்து சிபிஐ தீவிர விசா ரணை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால்மோகன் ஆகியோரு டன் இவருக்கு தொடர்பு இருந்ததாக வும், இதற்கான ஆதாரங்கள் இவரின் லேப்டாப், செல்போனில் இருப்ப தாகவும் தெரிய வந்தது. ஹெர்மனின் லேப்டாப்பில் கூடங் குளம் அணுமின் நிலையம் தொடர் பான படங்கள், போராட்டங்கள் நடந்த படங்கள் உள்ளிட்டவை இரு ந்தன. அதை விட முக்கியமாக பணப் பட்டுவாடா குறித்த விவரங்களும் சிக்கியுள்ளன. (மேலும்.....)

பங்குனி 02, 2012

ஈராக் வன்முறைகளில் 69,263 பேர் பலி, அரசு உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஈராக்கில், 2004 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில், 2003ல் அங்கு புகுந்த அமெரிக்கப் படைகள், கடந்தாண்டு டிசம்பர் 18ம் திகதி போரை முடித்துவிட்டு, கடைசியாக வெளியேறின. இக்காலகட்டத்தில், போர், பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக் கையை, ஈராக்கின் சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இரண்டும் இணைந்து வெளியிட்டன. அதன்படி 2004 ஏப்ரல் 5 முதல், 2011 டிசம்பர் 31ம் திகதி வரையிலான காலகட்டத்தில், 69 ஆயிரத்து 263 பேர் பலியாகியுள்ளனர். (மேலும்.....)

பங்குனி 02, 2012

ஐரோப்பா

மீண்டும் அலை, அலையாய் போராட்டங்கள்

தங்களின் தவறான முத லாளித்துவப் பொருளாதா ரக் கொள்கைகளின் விளை வாக ஏற்பட்ட சீரழிவை மக்கள் தலைமேல் சுமத்தும் ஐரோப்பிய ஆட்சியாளர்க ளின் நடவடிக்கைகளுக்கு எதிராக மீண்டும் பெரும் போராட்டங்கள் வெடித் துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடியை யும், அதே நேரத்தில் அத் தனை நெருக்கடிகளையும் மக்கள் மேல் சுமத்தும் ஆட் சியாளர்களின் போக்கை யும் எதிர்த்து செக் குடியரசு, பிரான்ஸ், கிரீஸ், பெல்ஜி யம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பெருந்தி ரள் ஆர்ப்பாட்டங்கள் நடந் திருக்கின்றன. பெல்ஜியத் தின் தலைநகர் பிரஸ்ஸல் சில் உள்ள ஐரோப்பிய கவுன்சில் அலுவலகத்திற்கு முன்பாகக் கூடிய தொழிலா ளர்கள் சிக்கன நடவடிக்கை கள் என்ற பெயரில் மக்கள் மீது சுமத்தப்படும் சுமை களை அகற்றுமாறு கோரிக் கை வைத்தனர். (மேலும்.....)

பங்குனி 02, 2012

முகநூலின்(Facebook) முகங்கள்...

ஃபேஸ் புக் இன்றைய தலைமுறையின் சந்திப்புத்தளம் என்று கூறினால் யாரும் மறப்பதற்கில்லை. இத்தனை பிரபலமான இந்த இணையத்தளத்தின் முக்கியமானவர்களாகக் கூறப்படுவது ஜோ க்ரீன் மற்றும் ஷெரில் சேண்ட்பெர்க், முதலாமவர் முகநூல் தொடங்கும் நேரத்தில் அதன் உரிமையாளர் மார்க்குடன் இருந்தவர், இரண்டாமவர் அதனை முன்னேற்றப்பாடுபட்டவர். முகநூலின் உரிமையாளரான மார்க் சுகெர்பெர்க்கின் நண்பர் தான் ஜோக்ரீன். இருவரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். பல்கலைக்கழக விடுதியில் இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டனர். 2004 ஆம் ஆண்டில் மார்க் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு "ஃபேஸ்புக்" என்ற முகநூல் இணையத்தளத்தைத் தொடங்கத் திட்டமிட்டார். இதற்கு ஜோ க்ரீனின் உதவியையும் நாடினார். ஆனால் நண்பரின் அழைப்பை ஜோ ஏற்றுக்கொள்ளவில்லை. படிப்பையும் பாதியிலேயே நிறுத்துவதில் அவருக்கு உடன்பாடில்லை. (மேலும்.....)

பங்குனி 02, 2012

அமெரிக்க கோரிக்கைக்கு முதன் முறை செவிசாய்த்தது வட கொரியா

யுரேனியம் செறிவூட்டுதல் உட்பட பல்வேறு அணு ஆயுத நடவடிக்கைகளை நிறுத்த வட கொரியா ஒப்புக் கொண்டுள்ள தாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா - வடகொரியா இடையிலான உறவு மேம்படும் எனவும் விக்டோரியா கூறியுள்ளார். அமெரிக்கா - வட கொரியா இடையிலான 3 வது சுற்று பேச்சுவார்த்தை சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு, வட கொரியாவில் நீண்ட காலமாக ஆட்சி நடத்தி வந்த ஜனாதிபதி கிம் ஜாங் செவிசாயக்க வில்லை. ஆனால் தற்போது கிம் ஜாங் மறைந்த இரண்டே மாதங்களில் அணு ஆயுத நடவடிக்கைகளை நிறுத்த வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி வட கொரியா அணு ஆயுத பரிசோதனையை நிறுத்துவதற்கும், யுரேனிய செறிவூட்டலை நிறுத்துவதற்கும் நீண்ட தூர ஏவுகணை சோதனை களை நிறுத்துவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளது. அத்துடன் அணு சக்தி கண்காணிப்பா ளர்களுக்கு யொன்பி யோன் அணு உலையை சோதனை செய்வதற்கும் வடகொரிய அரசு அனுமதி அளித்துள்ளது. வட கொரிய அரச ஊடகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வட கொரியாவுக்கு 240,000 மெட்ரிக்தொன் உலர் உணவுகளை வழங்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோன்று அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது. வேண்டாம் இந்த துஷ்டனுடனான 'நட்பு’ 1985 ஆரம்பித்த  துஷ்டனுடனான 'நட்பு’ லிபியாவை இன்று சர்வ நாசம் பண்ண வழி கோலியது என்பதை வட கொரியா பாடமாக கொள்ள வேண்டும்.

பங்குனி 02, 2012

ஆசியாவின் ஜீவ நதி பிரம்மபுத்ரா வறண்டதால் பரபரப்பு

ஆசியாவின் முக்கிய ஜீவநதியான பிரம்மபுத்ரா நதி, திடீரென்று வறண்ட சம்பவம் அருணாச்சலம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை அருணாச்சல் பிரதேச மாநில முதல்வரின் அரசியல் ஆலோசகரும், மாநில அரசின் செய்தித் தொடர்பாளருமான டாக்கோ தாபி உறுதி செய்துள்ளார். இது சீனாவின் சதி வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரம்மபுத்ரா நதி வரும் பாதையில், சீனா ஏற்படுத்தியுள்ள செயற்கை தடுப்புகளினாலேயே நதி வறண்ட சம்பவம் நடைபெற்றுள்ளதாக டாக்கோ தாபி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, 2000ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் திகதி பிரம்மபுத்ரா நதியின் நீர் மட்டம் திடீரென்று 30 அடி அளவிற்கு அதிகரித்தது. இதன் காரணமாக அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பெரும் பகுதி தண்ணீரில் சிக்கி தத்தளித்தது. (மேலும்.....)

பங்குனி 01, 2012

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்படும் தமிழருக்கு அச்சுறுத்தல்

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கைத் தமிழர்கள் அங்கு சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவுக்கான ஆபத்துக்களை எதிர்நோக்குவதாக இரு மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது. மற்றுமொரு தொகுதி இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள நிலையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிரீடம் போரம் டோச்சர் (சித்திரவதையில் இருந்து விடுதலை) ஆகிய அமைப்புக்கள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் அங்கு கொடூரமாக நடத்தப்படுவார்கள் என்று கூறி அவர்களை அங்கு அனுப்புவதற்கான விமான சேவை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. ஒவ்வொரு நபரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும்போது அங்கு அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை என்று பிரிட்டிஷ் அரசாங்கமும் நீதிமன்றமும் திருப்தி அடையும் பட்சத்திலேயே பிரிட்டன், தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு பி.பி.சி. க்கு கூறியுள்ளது.  அரசியல் தஞ்சம் கோரும் எல்லா தமிழர்களுக்கும் பாதுகாப்பு தேவை என்று கூற முடியாது என்று மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருப்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. ___

பங்குனி 01, 2012

பங்குனி 01, 2012

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு வெளிநாட்டு அரச தலைவர் என்பதால் அவருக்கு சிறப்பு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளதை அடுத்து, தான் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டியுள்ளதாக அமெரிக்க மாவட்ட நீதிபதி Colleen Kollar-Kotelly அறிவித்தார். இதுதொடர்பாக தனது தீர்ப்பில் அவர், “ நீதிமன்றம் இந்த முடிவை சாதாரணமாக எடுக்க முடியாது. வாதிகளின் முறைப்பாடுகள் அமெரிக்க மற்றும் அனைத்துலக சட்டங்களுக்கு முரணான வகையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்த அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகளை கொண்டுள்ளது. இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுவதானது, வாதிகளின் குற்றச்சாட்டுகள் அல்லது பிரதிவாதிகளின் தற்காப்பை பிரதிபலிக்கும் வகையில் அமையாது. மாறாக, இரண்டு நூற்றாண்டுகளாக உள்ள சட்டங்கள், அடிப்படை அரசியலமைப்பு மற்றும் சட்டக்கொள்கைள் என்பன, வாதியின் இந்த முறைப்பாட்டை இந்த நீதிமன்றம் தொடர்ந்து விசாரிப்பதைத் தடுக்கிறது.“ என்று கூறியுள்ளார். (மேலும்.....)

பங்குனி 01, 2012

Asylum shopping and how AI earns its keep in Canada

(By Lucien Rajakarunanayake)

‘One principle of asylum law is that you seek protection at the first available opportunity. You don’t asylum shop,’ said Canadian Citizenship and Immigration Minister Jason Kenney. These are important words in a world where asylum is a heavily traded commodity, with both calculating Tamils and human smuggling mentors seek to score high of the asylum shopping list by vilifying Sri Lanka on human rights. (more....)

பங்குனி 01, 2012

52 இலங்கையரை லண்டன் நாடு கடத்தியது

லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட 52 இலங்கை இளை ஞர், யுவதிகள் நேற்று நாடு திரும்பி னர். நேற்றுக் காலை 10.40 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பீ. வி. 8342 ரக புளூபனரோமர் என்ற விசேட விமானத்தில் 52 இலங்கையரும் நாடு திரும்பியுள்ளனர். 29 தமிழர், 10 முஸ்லிம்கள், 13 சிங்களவர் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர் விசாவில் சென்று விசா காலம் முடிவடைந்த நிலையில் சட்டவிரோத மாக தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி றது.

பங்குனி 01, 2012

இலங்கைக்கு எதிரான பிரேரணையை முறியடிக்க பல்வேறு நாடுகள் ஆதரவு

  • ஆதரவு திரட்ட அமெரிக்கா கடும் பிரயத்தனம்

  • இலங்கைக் குழு பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சு

  • கொங்கோ, அல்ஜீரியா இலங்கையை ஆதரிக்க முடிவு

இலங்கைக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக சக நாடுகளின் ஒத்துழைப்பைத் திரட்டுவதில் இலங்கைத் தூதுக்குழு தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் இலங்கைக்கான ஆதரவு பெருகி வரும் அதே வேளை அமெரிக்காவும் இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக ஜெனீவாவில் இருந்து பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். (மேலும்.....)

பங்குனி 01, 2012

புகலிடம் கோர உதவும் போலி ஆவண நிலையம் வவுனியாவில் முற்றுகை

வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கு ஏதுவாக போலி ஆவணங்கள் தயாரிக்கும் இடமொன்றை வவுனியாவில் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை விசாரணையொன்றுக்காக இராணுவ முகாமுக்கு வருமாறு தெரிவித்துப் போலி கடிதங்கள் தயாரித்து ரப்பர், சீல் குத்தப்பட்டு பெருந்தொகையான பணத்துக்கு விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். ஜோசப் முகாம், கண்டி வீதி, வவுனியா என்ற விலாசத்தை குறிப்பிட்டே இந்த போலி கடிதங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன என வவுனியா இராணுவ முகாமின் அதிகாரிகள் சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவத்துள்ளன. இத்தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் போலி ஆவணங்கள் தயாரித்தவர்களை கைது செய்துள்ளனர். போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள், ரப்பர் சீல்கள் என்பனவும் கைப்பற் றப்பட்டுள்ளன. வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமை புரியும் லிகிதர் ஒருவரும், அலுவலக உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்குனி 01, 2012

சிரியாவில் மனிதாபிமான உதவிக்கு பாதுகாப்பு சபையில் புதிய பிரேரணை

சிரியாவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான பிரேரணை ஒன்றை பாதுகாப்புச் சபையில் முன்வைக்க சர்வதேச நாடுகள் திட்டமிட்டுள்ளன. இந்த பிரேரணைக்கு சீனா, ரஷ்யாவின் உதவியை பெறும் முயற்சியில் மேற்கு நாடுகள் ஈடுபட்டுள்ளன. எனினும் இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், சீனா ஆதரவளிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சமூகம் இது தொடர்பில் வரையறை ஒன்றை கொண்டு வந்து சிரியாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் யங் ஜெயிச்சி எக்சிங்ஹொ செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாதுகாப்புச் சபையின் புதிய தீர்வுத் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சிரிய வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட இரு பிரேரணைகளுக்கு எதிராக சீனா, ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே நவநீதம்பிள்ளையின் பேச்சைத் தொடர்ந்து உரையாற்றிய ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத் தின் சிரிய நாட்டுக்கான தூதுவர் பைஸல் கப்பாஸ் ஹமய், மனித உரிமை கவுன்ஸில் தமது நாட்டில் தீவிர வாதத்திற்கு அனுசரணை வழங்குவதாக கூறி கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறிச் சென்றார்.

பங்குனி 01, 2012

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 123 ரூபாவாக குறைந்தது

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமை அதி குறைந்த மட்டத்துக்கு வீழ்ச்சி கண்டு ரூபா 123.20 சதமாக மாறியுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவதைத் தடுக்கும் நோக்கில் ஓர் அரசாங்க வங்கி டொலர்களை விற்பனை செய்தது. இந்த நடவடிக்கை இலங்கை நாணயத்தின் பெறுமதியைப் பேணுவதற்காக இனிமேல் தலையிடுவதில்லை என்ற மத்திய வங்கியின் தீர்மானத்தை மீறுவதாகவுள்ளது. ஓர் அரசாங்க வங்கி டொலரை 123 ரூபாவுக்கு விற்ற பின்னர் படிப்படியான 121 ரூபா என்ற மட்டத்துக்கு கொண்டு வந்தது என பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அந்நிய செலாவணி வர்த்தகர் கூறினார். ஒரு டொலரின் விலையை 121 ரூபாவில் பேணுவதற்கு தார்மிக ரீதியான தூண்டுதலை நாணய மாற்றுநர்கள் அளிக்க வேண்டும் என மத்திய வங்கி கூறியுள்ளதாக சில நாணய மாற்றுநர்கள் தெரிவித்தனர். சொற்ப அளவான டொலர்களே இவ்வளவு குறைந்த ரூபா பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி ஆளுநர் கூறினார். இலங்கை நாணயத்தின் பெறுமதியைப் பாதுகாக்க தார்மிக ஊக்குதலை மத்திய வங்கி பயன்படுத்துமா எனக் கேட்ட போது ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அதையும் நாம் பயன்படுத்தக் கூடும் எனக் கூறினார்.

பங்குனி 01, 2012

பிரிட்டனில் குடியேற்ற விதிமுறைகளில் மாற்றம்

பிரிட்டனில் குடியேற்ற விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக மட்டுமே இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் அந்நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்குப் பதிலாக நிரந்தரமாக வாழும் உரிமையை மட்டும் பெற்றுக் கொண்டனர். ஆனால் தற்போது அறிமுகமான “பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம்” என்பது ஒரு மின்னணு அடையாள அட்டையைப் போன்றதாகும். சம்பந்தப்பட்டவரின் பெயர், பிறந்த தினம், பிறந்த இடம் உட்பட சுயவிவரங்களுடன் கைரேகை, முகப்பதிவு ஆகியவை அதில் அடங்கியிருக்கும். குடியேற்ற நிலை பிரிட்டனில் அவர் பெற்றிருக்கும் உரிமைகள் போன்றவை பற்றிய விபரங்களையும் இந்த அட்டையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டால் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பங்குனி 01, 2012

ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வில் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா எதிர்ரெதிர் நிலைப்பாடு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின்  பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கையை ஊக்குவிக்க வேண்டுமென ஐ. நா.   மனிதஉரிமைகள்   பேரவையிடம்  ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது. ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை அமர்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின்  சார்பில்  உரையாற்றிய டென்மார்க்கின்  வெளிவிவகார அமைச்சர்  வில்லி சவுண்டாப்  நிபுணர் குழுவின்  அறிக்கை தொடர்பாக ஐ. நா. வுடன் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு  இலங்கைக்கு கூறப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை நாடுகளை நல்லவையெனவும் தீங்கானவையெனவும் பிளவு படுத்துவதற்கும்  அரசியல்  அழுத்தத்திற்கான கருவியாகப் பயன்படுத்துவதற்கும்  ஐ. நா.  மனிதஉரிமைகள் பேரவையை மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு  ஆதரவளிக்க முடியாது என்று ரஷ்யா கூறியுள்ளது. (மேலும்.....)

பங்குனி 01, 2012

ஈரான் எண்ணெய்க்கு பதில் தங்கம்

ஈரான் எண்ணெய்க்கு டொலருக்கு பதில் தங்கத்தை பெற அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் எண்ணெய்க்கு தடைவிதித்துள்ள நிலையில் ஈரான் வங்கி வெளிநாட்டிலிருந்து எண்ணெய்க்கு பதில் டொலரை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குவதனாலேயே அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பில் ஈரான் மத்திய வங்கி ஆளுநர் மஹ்மூத் பஹ்மானி கூறும்போது, எந்த முன்னறிவிப்பும் இன்றி ஈரான் எண்ணெய்க்கு பதில் தங்கத்தை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார். உலகில் அதிக எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஈரான் ஏற்கனவே ஏனைய நாணயங்களிலும் எண்ணெய் கொள்வனவுக்கு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்குனி 01, 2012

கடற் தொழிலாளர்களின் காவல் தெய்வமான புனித அந்தோனியார் திருவிழா கச்சத்தீவில்

ச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா மார்ச் மாதம் 3ம், 4ம் திகதிகளில் கச்சத் தீவில் கோலாகலமாக நடைபெற வுள்ளது. இலங்கை கடற்படையினர் இங்கிருந்து இலங்கை ஊடகவிய லாளர்களை இந்தத் திருவிழா நிகழ்ச்சியை கண்டுகளித்து, செய்திகளை எழுதுவதற்காக அழைத்துச் செல்ல வுள்ளார்கள். கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் கீழ் நிர்வ கிக்கப்படுகின்றது. பண்டிகை காலத்தில் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கத்தோலிக்க குருமார் அங்கு சென்று ஆராதனைகளை நடத்துவார்கள். இந்தத் தடவை அந்தோனியார் திருவிழாவில் இலங்கையில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் 5000இற்கும் அதிகமானோர் வருவதாக எதிர் பார்க்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இலங்கை கடற் படையினர் குடிநீர் மற்றும் உணவு போன்ற வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். (மேலும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com