Contact us at: sooddram@gmail.com

 

கார்த்திகை 2014 மாதபபதிவுகள

நவம்பர் 30, 2014

யேர்மனியில் நடைபெற்ற தமிழ் நாஜிகள் தின நிகழ்வு


இவர்கள் எல்லோரையும் பிடித்து இலங்கைக்கு அனுப்பினால் விரைவாக ஈழம் எடுத்து விடுவார்கள். போர்க் குணம் முகங்களில் தெரிகிறது. நாஜிகளுக்கு நாஜிகள் கூட கூட்டம் கூடி அஞ்சலி செலுத்த வெட்கப்படும் போது, புலிப் பயங்கரவாதிகளுக்கு தமிழ் நாஜிகள் அஞ்சலி செலுத்தும் கேவலம். பச்சிளங் குழந்தைகள் உட்பட 30000 க்கு மேற்பட்ட தமிழ் மக்களைப் படுகொலை செய்து, வெருகல் ஆற்றுக் கரையினிலே தமிழ் பெண்பிள்ளைகளையே கற்பழித்துக் கொன்று புதைத்து, நந்திக்கடல் வரை தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்று, அவர்களைச் சிங்களவனின் கருணைக்கு விட்டுவிட்டு, மண்டியிட்டு சரணாகதி அடைந்தவர்களை, எப்படித்தான் மாவீரர்கள் என்று கொண்டாடுகிறார்களோ?


புலிகளின் தலைவரைப் பற்றி முக்கிய கருத்துடன் தமிழ்கவி அன்ரி…

ஈழத் தமிழர் போராட்டம் முடிவுறவில்லை என்று கூறும் எழுத்தாளர் தமிழ்கவி, அதன் வடிவங்கள் மாற்றம்பெறலாம் கூறியுள்ளார். அந்த அமைப்பின் உள்ளே நடந்த காட்டிக்கொடுப்புகளே, உள்முரண்பாடுகளே போரின் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார். அத்துடன் சர்வதேச நலன்களும் போராட்டத்தை நசுக்கின எனக் கூறுகின்றார். அதேவேளை, தற்போதைய நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வே முதன்மையானது என்று கூறும் அவர், அடிபட்டுப் போயிருக்கும் ஒருவனால், தற்போதைக்கு தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். அரசாங்க புனர்வாழ்வுத்திட்டம் முன்னாள் போராளிகளுக்கு போதிய உதவிகளை செய்யவில்லை என்று கூறும் அவர் ஊரில் எஞ்சியுள்ள போராளிகளின் குடும்ப நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

காலாவதியாக வேண்டியது வரம்பற்ற,  எல்லையற்ற அதிகாரம்

(சுகு-ஸ்ரீதரன்)
ஆயுட் பரியந்தம் அதிகாரத்தில் ஒருவர் இருக்க முயல்வது ஒருநாட்டுக்கோ அல்லது சமூகத்திற்கோ ஏன் கட்சிக்கோ எமது இதர சமூக நிறுவனங்களுக்கோ நல்லதல்ல. பொருத்தமானதுமல்ல. இதனால் நிகழ்ந்த விபரீதங்கள் உலகவரலாறு ழுமுவதும் காணப்படுக்கிறது. அதேபோல் மரபு வழி வாரிசு அரசியலும் பிரபுத்துவ மரபும் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது. இலங்கையில் விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை எவ்வாறு இலங்கையர்களுக்கான ஜனநாயக இடைவெளியை பொது வெளியில் அரித்தழித்து வந்திருக்கிறது. இந்த விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டு வந்ததன் பின் ஆணைப்பெண்ணாக்க அல்லது பெண்ணை ஆணாக்க முடியாதே தவிர வேறு அனைத்து காரியங்களையும் செய்யமுடியும் என்று ஜே. ஆர் சொன்னது பிரபலமான கதை.
(மேலும்.....)

அமைச்சர் நவீன் இராஜினாமா

எதிரணியுடன் இணைந்துகொள்வார்

அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சரான நவீன் திஸாநாயக்க அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துகொள்வதாகவும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அவர், எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் எதிரணியுடன் நாளை உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் செவ்வாயன்று கடையடைப்புக்கு அழைப்பு

மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூடி எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக மன்னார் நகர வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் பண்டிகைக்கால வியாபாரத்துக்காக மன்னார் நகர சபையால் மன்னாரில் வழங்கப்படவுள்ள தற்காலிக கடைகளுக்கான அனுமதியை நிறுத்துமாறு மன்னார் நகர சபை தலைவர்,செயலாளர்களுக்கு மன்னார் நகர வர்த்தக சங்கத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. குறித்த அறிவித்தல்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.இந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி மன்னார் நகர வர்த்தக சங்க நிர்வாகம் மேற்படி விடயம் தொடர்பில் கலந்துரையாடியது. இதற்கமைவாக எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடி முழு அளவிலான கடை அடைப்பை மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக மன்னார் நகர வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் வெற்றியை விரும்பும் கூட்டமைப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ப தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதாக அறிய முடிகிறது. இதன் காரணமாகவே கூட்ட மைப்பின் தலைவர் சம்பந்தன் இதுவரை தேர்தல் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க வில்லை. மேலும், எதிரணியின் எந்தவொரு கூட் டங்களிலும் சம்பந்தன் இதுவரை பங்குகொள் ளவும் இல்லை. இத்தனைக்கும் சம்பந்தனுடன் தனிப்பட்ட ரீதியில் நட்பை பேணிவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக் கிரமசிங்க ஆகியோர் பலமுறை சம்பந்தனுடன் தொடர்புகொண்டு அழைத்த போதும்கூட, சம்பந் தன் எந்தவொரு கூட்டத்திலும் பங்கு கொள்ள வில்லை என்று கூட்டமைப்பின் உள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏன் சம்பந்தன் எதிரணியை ஆதரிப்பதில் தயக்கம் காட்டுகின்றார்? இத்த னைக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தீவிர முரண்பாட்டை கொண்டிருந்த சரத்பொன்சேகாவை ஆதரித்து வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு வேண்டு கோள்விடுத்த சம்பந்தன் இம்முறை ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?(மேலும்.....)

மனித உரிமைகளை அவமதித்து ஈராக், லிபியாவை ஆக்கிரமித்து,
இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்துவது நியாயமா?

இலங்கை போன்ற உலகின் சிறிய நாடுகள் மீது மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் அமெரிக்கா, உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட அதிகமான அளவில் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்து இலட்சக்கணக்கான மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதியன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தி இரண்டு விமானங்கள் மூலமான கொடிய தாக்குதலினால் அன்றைய தினம் 2996 பேர் கொல்லப்பட்டனர்.(மேலும்.....)

காங்கிரஸ் இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சியல்ல -  குஷ்பு

ஆசைக்காக அரசியலுக்கு வரக்கூடாது. உழைப்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ள நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சி என்றுமே இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை, ஆனால் இலங்கை தமிழர்களுக்கு எதிரான ஒரு கட்சி என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார். தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களுக்கும் முன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். காங்கிரஸ் கட்சியால் நாட்டை எவ்வாறு காப்பற்ற முடியும் என்பதை விளக்க நான் கிராமங்கள் மற்றும் தெருக்கள் தோறும் பிரசாரம் மேற்கொள்வேன். தி.மு.க.வில் இருந்து ஏன் வெளியேறினேன் என்று அப்போதும் சொல்லவில்லை. இன்றும் சொல்லமாட்டேன். நாளை கேட்டாலும் சொல்லமாட்டேன். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழருக்கு எதிரானதாக இருந்தது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு கட்சி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயமாக ஒரு தீவிரவாத இயக்கம்தான்.

எஸ்.பொ. வரலாற்றில் வாழ்பவர்

ஈழ மண்ணில் பிறந்து, ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, பெரும்பான்மை வருடங்களைத் தமிழ்நாட்டில் தமது அயராத இலக்கியப் பணியில் கழித்த எஸ்.பொ என்னும் எஸ்.பொன்னுத்துரை நவம்பர் 26-ம் தேதி காலமானபோது ‘இறுதியில் இந்தச் சாலையில்தான்/ வந்தாக வேண்டும் நான்/ என நன்றாகத் தெரியும்/ ஆனால்/ இன்றுதான் அந்த நாள் என்று/ எனக்குத் தெரியாது நேற்று' என்ற ஜென் கவிதைதான் நினைவுக்கு வந்தது. (மேலும்.....)

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200 கிலோ கஞ்சா தனுஷ்கோடியில் பறிமுதல்! 4 பேர் கைது

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 200 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு பொலிஸார் நேற்றுப் பறிமுதல் செய்துள்ளனர். கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை கடலோரப் பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தினார். இதன்போது அரிச்சல் முனை கடற்கரைப் பகுதியில் இலங்கை படகிற்காகக் காத்திருந்த தனுஷ்கோடியைச் சேர்ந்த பாக்கியராஜ், மாரியராஜ், இராமேஸ்வரத்தை சேர்ந்த பாலமுருகன்,சரவணன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கஞ்சாவையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்ட நால்வரும், தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 2 தினங்களில் மட்டும் இலங்கைக்கு கடத்த இருந்த 450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நவம்பர் 29, 2014

என் மனவலையிலிருந்து…..
மாவீரர்களும், மாற்றுப் போராளிகளின் தியாகங்களும்

(சாகரன்)

போர்கள் நடைபெற்று இதன் அனுபவங்களைப் பாடங்களாக கொண்டு போரே வேண்டாம் என்று சமாதான, சக வாழ்விற்குள் புகுந்து வெற்றி நடைபோடும் பல சமூகங்கள், நாடுகள் உருவாகி இருக்கின்ற வரலாற்றுப் பக்கங்களில் எங்கள் தமிழ் பேசும் சமூகம் மட்டும் இன்றும் அதே பச்சை மட்டையடி வீரத்தை மட்டும் புகழும் மன நோயாளராக இருப்பது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் மாவீரர் தினம் என்ற கொண்டாட்டத்தில் தெரிகின்றது. அது எழுதிக்கொடுத்த பிரபாகரனின் பேச்சாக இருக்கலாம், இதற்கு பாலசிங்கம் கொடுத்து தூசண வார்த்தை விளக்கங்களாக இருக்கலாம், அல்லது இன்றுவரை 2009 மே இற்கு பின்பு இவர்களின் வழித் தோன்றல்களின் செயற்பாடுகளாக இருக்கலாம் ராதிகா. லோகன் போனறவர்களின் நடவடிக்கையாக இருக்கலாம் சீமான் வைகோ போன்றவர்களில் செயற்பாடுகளாக இருக்கலாம் எல்லாம் புலிகள் தவிர்ந்த யாவரும் கொல்லப்படல் மாவீரம் என்றே புகழப்படுகையில் எவ்வகையில் மாவீரர் தினம் தமிழ் தேசிய தினம் என்று பொதுமைப்படுத்த முடியும். (மேலும்.....)

 

கல்லூரிக்குள்ளும் அரசியல் வியாபாரம்

கடந்த வாரம் யாழ் இந்துகல்லுரி கனடா உறுப்பினர் குழு, உறுப்பினர் குடும்பங்களுக்கு மாத்திரம்இராப்போசன விருந்து வழங்க ஏற்பாடு செய்தனர். . உணவு வழங்குவதற்கு முன்பாக ஒருவர் எழுந்து தான் புலிகளின் இயக்கத்தில் இருந்த யோகி என்பவரை பற்றி பேசவேண்டும் அவர் தனது நண்பர் என்று கூறிவிட்டு, பின் “நான் இந்த மாவீரர் மாதத்தில் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதில்லை ஆனால் குழு வற்புறுத்தியதனால் கலந்து கொண்டதாகவும், அதேபோல் அங்கு வந்திருந்தவர்களும் மாவீரர்களை நினவுகூர்ந்தால் நல்லது, இனிமேலும் இந்த மாதிரியான கொண்டாட்டங்களை நவம்பர் மாதத்தில் வைக்காமல் தவிர்த்தல் நன்று என வேண்டிக்கொண்டார்.” இவர் ஒரு பிரபல உணவு தாபனத்தை வைத்து நடத்துபவர். (அப்படியானால்அவர் ஒரு மாதத்திற்கு தனது இரண்டு உணவு கடைகளை மூடி வைத்திருக்கலாமே. முக்கிய குறிப்பு: கனடாவில் நவம்பர் மாதமே சனம் பார்ட்டி போடத் தொடங்கி விடும்.) மேலும் தமிழ் நாட்டில் சீமான் ஈழ தமிழர்களுக்காக போராடுகின்றார், நாமும் இலங்கை அரசை நெருக்குவோம் என கொஞ்சம் புலிக்கதை பேசிவிட்டுபோனார்.. வந்திருந்த எல்லோருக்குமே முகத்தில் இருந்த சந்தோஷக்களை போய்விட்டது. மாவீரர் என்றால் “விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து வந்தவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்ட விடயம் என்று எலோருக்குமே தெரியும்.. சிலவருடங்களுக்கு முன் யாழ் இந்து கல்லூரியின் விளையாட்டு நிகழ்ச்சியின் போது புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள். யாழ் இந்துகல்லுரியில் எல்லா இயக்கத்தை சேர்ந்த போராளிகளும் படித்திருக்கிறார்கள். இதுபோன்ற தனிப்பட்ட அரசியல் விடயங்களை கல்லூரிகளுக்குள் கொண்டுவருவதை தடை செய்யவேண்டும். நன்கொடை வழங்குகின்றார்கள் என்பதற்காக அவர்கள் எதைபேசினாலும் கண்டும் காணாமலும் விட்டு விடுகின்றார்கள். விடுதலைக்காக போராடிய அனைத்து போராளிகள், அராஜக போராளிக்குழுக்களுக்கு எதிராக போராடி மடிந்தவர்கள்,விடுதலைக்காக தாமும் போராடி, தமது பிள்ளைகளயும் போராட அனுப்பி தியாகம் செய்த பெற்றோர்கள், இவர்கள் எல்லோருமே “மாவீரர்கள்தான். “விடுதலைக்காய் போராடி உயிர் நீத்த அனைத்து மக்களுக்கும்” இது பொதுவானதாய் அமைந்தால்தான் இந்த மாவீரர் தினம் அர்த்தமுள்ளதாக அமையும். (Thanu Parathan)

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜ.தே.கவில் இணைவு

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜ குகனேஸ்வரன் ஜக்கிய தேசியக்கட்சியில் இணைந்துகொண்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் டெலோ ஆகியவற்றில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி பிராந்திய தலைவராக அண்மைக்காலமாக செயற்பட்டு வந்திருந்த நிலையிலேயே தற்போது ஐ.தே.கவுடன் இணைந்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி பிராந்தி தலைவராக செயற்பட்ட இவர் அண்மைக்காலமாக அக்கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் வைத்து அவர், இணைந்துகொண்டுள்ளார்.  பாவம் அவரும் என்ன செய்வார் அவருக்கு தெரிந்த ஒரு தொழில் எம்.பி ஆகி பணம் பண்ணுவதே ....? பிழைச்சுப் போகட்டும்?

வட மாகாண ஆளுநர் ஆகிறார் அஸ்வர்?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் வட மாகாண ஆளுநராக நியமனம் பெற இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர், குறித்த பதவியினை நேற்று நண்பகல் இராஜினாமாச் செய்தார். இதனையடுத்தே இவரை வட மாகாண ஆளுநராக நியமிப்பதற்கான நடவடிக்கையினை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாத தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த நியமனம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் நாடு முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டியமையினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த வட்டாரங்கள் தெரிவித்தன. வட மாகாண ஆளுநராக தமிழ் பேசும் சிவில் சமுகத்தில் உள்ள ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

OIC ஜெயரட்ணம், கெப்டன் லக்கீ உட்பட 80 தமிழர் 2006ல் எல்.ரி.ரி.யினரால் படுகொலை
 

பொலிஸ் பரிசோதகர் துரைரட்ணம் ஜெயரட்ணம் அடங்கலான 80 பேர் புலிகளால் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி விசாரணை முன்னெடுக்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். பயங்கரவாத புலனாய்வு பிரிவின் மூலம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் புதுக்குடியிருப்பு வள்ளிபுரம் பகுதியில் புலிகளினால் சட்டவிரோதமாக சிறைக்கூடமொன்று நடத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம், இராணுவ கப்டன் லக்கி அடங்கலாக 80 தமிழ் இளைஞர்கள் புலிகள் இயக்கத்தினால் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக கிடைத்த தகவல் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Canadian minister urges MP Rathika to apoligise for honouring LTTE

Canada’s public safety minister Steven Blaney said Thursday he was “shocked and appalled” after a New Democratic Party MP rose in the House of Commons to commemorate Tamil Heroes Day, which honours fallen Tamil Tigers rebels. According to the National Post, Steven Blaney has urged Rathika Sitsabaiesan, a Sri Lankan-born rookie MP, to apologize “to veterans and all Canadians” for her statement that called the day “an important event” and likened it to Remembrance Day. Held each Nov. 27, Tamil Heroes Day was created by the Tamil Tigers to mark the date the first member of the armed separatist group was killed in combat. The rebel boss Velupillai Prabhakaran traditionally gave a defiant speech on that day. “Tamil Heroes Day is dedicated to the glorification of the terrorist group Liberation Tigers of Tamil Eelam, known more commonly as the Tamil Tigers,” said Mr. Blaney, pointing out the Tigers are on Canada’s list of designated terrorist entities. “I am shocked and appalled that an NDP member of Parliament would not only endorse the celebration of terrorists, but would also equate it to the solemn occasion of Remembrance Day where we honour our fallen Canadian heroes.” He called on Ms. Sitsabaiesan, the MP for Scarborough-Rouge River, “to stop shopping for votes from terrorist-linked groups, and to immediately apologize to veterans and all Canadians for these comments.” In an email Thursday, Ms. Sitsabaiesan said she was not supporting terrorism or encouraging violence. “Rather, as the first Tamil MP elected, I join Tamil-Canadians and all across our country in mourning those who have died in wars at home or abroad, and in supporting those who work tirelessly for the cause of peace.” But photographs of a Heroes Day event held Thursday in Markham, Ont., and posted on the Facebook page of the Tamil Youth Organization-Canada, showed the Tamil Tigers’ militaristic flag and visitors walking past a wall of portraits of men and women in rebel uniforms. During their three-decade campaign for Tamil independence, the Tigers conducted hundreds of suicide bombings and assassinated moderate Tamil leaders as well as Rajiv Gandhi, the former Indian prime minister. They were crushed by Sri Lankan forces in 2009.

மைத்திரிக்கு 59% மகிந்தவுக்கு 41% ! புலனாய்வு அறிக்கை கசிவு

மைத்திரிக்கு 59 வீதம் மகிந்தவுக்கு 41 வீதம் எனக் கூறிய புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி நீக்கம் என்ற தலைப்பில் சிங்கள பத்திரிகையான ராவய பிரதான தலைப்புச் செய்தி​ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு செய்தி மக்களின் கைகளில் கிடைக்க முன்னர் பத்திரிகையின் இந்த வார வெளியிட்டை மொத்தமாக கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரியவருகிறது. கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பத்திரிகை விற்பனை முகவர் நிலையங்ளுக்கு இன்று காலை சென்ற புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறிக்கொண்ட சிலர், ராவய பத்திரிகை விநியோகிக்கும் ஏனைய முகவர்களின் விபரங்கள் மற்றும் பத்திரிகை தொகை பற்றி தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர். இன்று வெளியாகியுள்ள இந்த வார ராவய பத்திரிகை, புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தனது பிரதான தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷவை விட மைத்திரிபால சிறிசேன அதிகமான வாக்குகளை பெறுவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

பேட் மூலம் சச்சின் இரங்கல்

ஹியுஸ் மரணத்துக்கு பல்வேறு விதத்திலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தங்களது ‘பேட்’ மூலம் சச்சின், ரெய்னா உட்பட உலகின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய அணி வீரர் பிலிப் ஹியுஸ், உள்ளூர் தொடரில் அபாட் வீசிய ‘பவுன்சர்’ தாக்கி உயிரிழந்தார். இதற்கு விளையாட்டு உலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய அணி ‘ஜாம்பவான்’ சச்சின், ஹியுஸ் 25 வயதில் மரணம் அடைந்ததை நினைவு படுத்தும் வகையில், தனது 25 வயதில் விளையாடிய பேட் மீது தொப்பியை வைத்து, அஞ்சலி செலுத்தினார். (மேலும்.....)

Canada’s public safety minister said Thursday he was “shocked and appalled” after a New Democratic Party MP rose in the House of Commons to commemorate Tamil Heroes Day, which honours fallen Tamil Tigers rebels.

Steven Blaney urged Rathika Sitsabaiesan, a Sri Lankan-born rookie MP, to apologize “to veterans and all Canadians” for her statement that called the day “an important event” and likened it to Remembrance Day.

THANK YOU NATIONAL POST  ;

Rathika Sitsabaiesan’s statement

“Mr. Speaker as Canadians of Tamil heritage in November we commemorate two important events, Remembrance Day and the Tamil Heroes Day. This month symbolizes the beauty of life because we remember all those who sacrifice their lives for the rest of us to live in peace and freedom. We remember that each and every one of the people who have been caught in the crossfires of war throughout the ages have embraced life over death but those who made the ultimate sacrifice ensured that we who survived would be able to live with dignity and with liberties. This month provides us with the occasion not only to remember and pay tribute to the heroes but also to reflect on the lessons of the struggle for justice, peace and a life free from discrimination. Sadly on the island country of Sri Lanka where I was born as a child of war the discrimination and injustices continue and the ethnic and religious minorities continue to live without peace and in fear. Mr. Speaker let us always work for peace at home and abroad and as always support those who put their lives on the line. From the bottom of my heart I thank you all lest we forget.”

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்- மைத்திரி சந்திக்க ஏற்பாடு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அடுத்தவாரமளவில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றது. இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருகின்றார். கடலோர கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர், திங்களன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். காலியில் நடைபெறும் 'காலி உரையாடல்-2014' எனும் மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றவுள்ளார்.

 

ஆலையடிவேம்பு பிரதேச சபையில் ஆட்சி மாற்றம்

 
மக்களுக்கு சேவை செய்யாத கட்சியில் இருப்பதைவிட பல சேவைகளை மக்களுக்காகப் புரிந்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து செயற்படுவதே தனது கிராம மக்களுக்கு நன்மையளிக்கும் என ஆலையடிவேம்பு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர் க. தியாகராஜா தெரிவித்தார். நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக உழைக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் கே. இரத்தினவேல் தலைமையில் பிரதேச சபை நூலக கட்டடத்தில் நேற்று நடைபெற்ற மாதாந்த 44 ஆவது கூட்டத் தொடரின் போதே அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து செயற்படப்போவதாகத் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஆலைய டிவேம்பு பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 5 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 4 உறுப்பினர்களும் அங்கம் வகித்தனர். தியாகராஜா ஐ. ம. சு. மு. வுடன் இணைந்ததைத் தொடர்ந்து ஐ. ம. சு. மு. பெரும்பான்மை பெற்றுள்ளது.

 

அரசில் இருந்து வெளியேற தயாராகிறது முஸ்லிம் காங்கிரஸ்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கள பௌத்த கடும்போக்குடைய அமைப்பான பொதுபல சேனா அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தது. முஸ்லிம்களுக்கு பல்வேறு வழிகளில் நெருக்குதல்களையும், அழுத்தங்களையும் கொடுத்த பொதுபல சேனா அமைப்பு ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதனை முஸ்லிம் காங்கிரஸ் விரும்பவில்லை. பொதுபல சேனா ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரி வருகின்றனர். முஸ்லிம்களை தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்த பொதுபல சேனா ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது துரோகச் செயல் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
 

நவம்பர் 28, 2014

பாசத்திற்க்குரிய தமிழ் ஈழ மக்களே!

(சந்திரமோகன்)(கனடா)

மாவீரர் தினத்தில் எனது குரலைக்கேட்டு இதோ வந்திட்டானடா எங்கள் தலைவன் என்று கற்பனையை கன்னாபின்னாவாக ஓடவிடவேண்டாம் இது மாவீரர் தின உரையல்ல மாவீரனாகிபோன என் மனக்குறை. என் குரலை கேட்டு பலபேருக்கு பயத்துடன் கூடிய அதிர் ச்சியாகவும், சிலபேருக்கு மகிழ்வான அதிர்ச்சியாகவும் இருக்கலாம். எனக்கு இறப்பில்லை நான் மறுபடியும் வருவேன் என அப்பாவிதனமாக காத்திருக்கும் மக்களே உங்கள் உண்மையான அன்புக்கு தலைவணங்கி உங்களால் தாங்கிக்கொள்ளமுடியாத விடயம் இது என்றாகினும் நான் மாவீரரானதை சொல்லிக்கொள்ளவேண்டிய இறுதிதருணம் இது என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன்.  மரணத்தை தழுவிய நான் எப்படி உங்கள் முன்னால் உரையாற்ற முடிகிறது என்ற நியாயமான சந்தேகம் உங்களை போல் எனக்கும் ஆச்சரியமான ஒன்றுதான். (மேலும்.....)

பிரிந்தே நிற்கும் உலகத்தமிழர்கள்

வளர்த்த கடாக்கள் மார்பில் பாய்ந்தன
மாவீரர்களையே குறிவைத்தன
கனடாவில் கலியுகம்
 

மாவீரர்கள் ஈழத்தமிழர்களின் சரித்திர புருசர்கள். அவர்கள் விடயத்தில் மட்டும் எந்த விட்டுக் கொடுப்பையும், ஈழத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இது தேசியம் சார்ந்த விடயம். மாவீரர்நாள் குறித்து எமது தேசியத்தலைவர் தெளிவான விளக்கங்களை, செயற்பாட்டு வரைமுறைகளை வகுத்துத் தந்திருக்கின்றார். வெளிநாடுகளில் ஒன்றாக ஒரே இடத்தில் கூடி உரத்துக் குரல் எழுப்புங்கள் என்று பணித்திருக்கின்றார். அதனையே நாம் வருடா வருடம் செய்து வருகின்றோம். இந்தவருடம் திடீரென ஒரு சிலர், மாவீரர் நாளை எங்கும் செய்யலாம், யாரும் செய்யலாம் என்ற கோசத்துடன் களம் இறங்கியுள்ளனர். தேசியத் தலைவரின் சிந்தனை வடிவங்களையும், செயற்பாட்டு வழிகாட்டுதலையும் சிதைக்க முனைந்து நிற்கின்றனர். (மேலும்.......)

அரசின் முழுப் பற்களையும் தனித்தனியாகவே பிடுங்குவோம்! - ராஜித

பொது எதிரணியினர் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண மாவட்ட உறுப்பினர்களை சந்தித்த போது கருத்து தெரிவித்த ராஜித்த, தனது புலனாய்வு பிரிவினர் சிறந்தவர்கள் என மார்பு தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்-டது. தனது போட்டியாளரை தன்னுடனேயே வைத்திருந்துள்ளார் என குறிப்பிட்ட ராஜித சேனா-ரத்ன, அரசாங்கத்தின் மொத்த பற்களையும் ஒன்றொன்றாக கழற்றி எடுப்போம். மஹிந்தவின் தூக்கத்தை கெடுப்போம் எனவும் தெரிவித்தார். நாங்கள் அரசில் இருந்து வெளியேறுவோம் என குறிப்பிட்டோம் இன்று அதை செய்து காட்டிவிட்டோம். ஜனநாயகத்தை வென்றெடுக்கும் புதிய கூட்டணியினையும் உருவாக்கி விட்டோம். இந்த கூட்டணி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உரிமைக்கான கூட்டணி. இதில் சகல மக்களின் உரிமைகளும் சுதந்திரமும் தங்கியுள்ளன. ஆகவே, அனைவரும் கைகோர்த்து எமது பயணத்தினை வெற்றிப் பயணமாக மாற்றியமைக்க வேண்டும். (மேலும்.....)

இன்னும் விலகாத மர்மம்!

மணிவிழா கொண்டாட்டம்...

''மாவீரர்கள் ஒரு சத்திய லட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல... எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன. சத்தியத்துக்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு!' இப்படிச் சொன்னவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்!(மேலும்.....)
 

கிழக்கு மாகாணசபைக்கு பொம்மையான முதலமைச்சர்

கிழக்கு மாகாணசபைக்கு பொம்மையான முதலமைச்சர் ஒருவரை வைத்து, கிழக்கு மாகாணசபையை அரசாங்கம் சீரழிப்பதாக மக்கள் தங்களிடம் சுட்டிக்காட்டுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.'கிழக்கு மாகாணசபைக்கு பொம்மையான முதலமைச்சர் ஒருவரை அரசாங்கம் வைத்துள்ளது. இதன் மூலம், கிழக்கு மாகாணசபையும் கிழக்கு மாகாணமும் சீரழிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணசபையால், கிழக்கு மாகாண மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன், அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பவில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இந்த அரசாங்கம் தவறியுள்ளது போன்ற பல்வேறு விடயங்களை கிழக்கு மாகாண மக்கள் எம்மிடம் முன்வைக்கின்றனர். கிழக்கு மாகாணசபையின் இரண்டு தடவை ஆட்சிக்காலத்திலும்; எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, கிழக்கு மாகாணசபையின்; ஸ்திரதன்மைக்கு பாரிய பங்களிப்பைச் செய்துள்ளோம். ஆனால், எமது கட்சிக்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை' எனவும் கூறினார்.

ஊவா மாகாண சபையில் கட்சி தாவல் இல்லை ஆட்சியை கவிழ்க்க எவராலும் முடியாது -  ஊவா மாகாண முதலமைச்சர்

ஊவா மாகாண சபையின் எந்தவொரு அமைச்சரோ உறுப்பினர்களோ எதிர்க் கட்சிக்கோ அல்லது பொது அபேட்சகருக்கோ ஆதரவளிக்கப்போவதில்லை என ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். அந்த அங்கீகாரத்தை ஒருபோதும் நாம் வீணடிக்கப்போவதில்லை. ஐ.தே.கட்சி வங்குரோத்து நிலையில் நினைப்பதை யெல்லாம் சொல்லிக்கொண்டு, எமது கட்சியிலுள்ளவர்களிடம் வெவ்வேறு கருத்துக்களை கூறி எம்மை வேறுப்படுத்த முயற்சிக்கின்றனர்.அரசியலில் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருக்கொள்கை இருக்கலாம். ஆனால் நாம் அன்று முதல் இன்றுவரை ஒருகுழுவாக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றோம். ஊவா மாகாண சபையின் ஆட்சியை ஒருபோதும் மாற்ற முடியாது தொடர்ந்து ஐந்து வருடக் காலத் துக்கு நாமே ஊவா மாகாண சபையில் ஆட்சியில் இருப்போம். ஊவா மாகாண மக்களும் மகிந்த சிந்தனைக்கு பூரண அங்கீகாரம் வழங்கியுள்ளனர். அது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புரியும் என்றார். இதன்போது ஊவா மாகாண முதலமைச்சர் உட்பட நான்கு அமைச்சர்கள் ஐ.ம.சு.முவின் மாகாண சபை உறுப்பினர்களும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவை விஞ்சி இந்தியா வைபர் பயன்பாட்டில் முதலிடம்

ஸ்கைப்புக்கு போட்டியாக துவங்கப்பட்ட வைபர் தகவல் பரிமாற்றம் மற்றும் பேசுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இன்டெர்நெட் மூலம் மற்றொரு வைபர் உறுப்பினருக்கு இலவசமாக பேசவும் தகவல்கள் அனுப்பவும் முடியும். இந்த சேவை துவக்கத்தில் ஐபோனுக்கு மட்டும் வழங்கப்பட்டது. பின்னர் ஆன்டிராய்டு, விண்டோஸ் போன்றவை களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் 3.3 கோடி பேர் வைபர் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா 2ம் இடத்தில் உள்ளது. இங்கு 3 கோடி பேர் வைபர் பயன்படுத்துகின்றனர். இதை தொடர்ந்து ரஷ்யா (2.8 கோடி பேர்), பிரேசில் (1.8 கோடி பேர்), லண்டன் (50 லட்சம் பேர்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள வைபர் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 46 கோடி. பயன்பாட்டாளர் எண்ணிக்கையில் மட்டுமின்றி, வருவாய் பெற்றுத்தருவதிலும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது. வைபர் ஸ்டிக்கர்களை அனுப்புவோர் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் அதிகம். வோட்ஸ் அப், பேஸ்புக், ஸ்கைப் போன்று பிரபலப்படுத்தும் வகையில், லைன், ஹைக் போன்ற மெசஞ்சர் அப்களை போல வைபரும் தனது சேவை பற்றி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்ய தொடங்கியது. பேஸ்புக் பயன்படுத்துவதிலும் இந்தியா 10 கோடி வாடிக்கையாளர்களுடன் உலக அளவில் 2ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகிந்தவுக்கே ஆதரவு! - பொதுபல சோனா

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பூரண ஆதரவு வழங்க உள்ளதாக சற்று முன்னர் அறிவித்துள்ளது. பொதுபல சேனா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார். நிறைவேறாத தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள புலி பயங்கரவாதிகளும், முஸ்லிம் பயங்கரவாதிகளும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கடந்த 12 நாட்களாக நாடு முழுவதும் உள்ள பௌத்த மக்கள், பௌத்த அமைப்புகள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட முக்கியமான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எமது அமைப்பின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த எண்ணியுள்ளதாகவும் கலகொட அத்தே ஞானசார குறிப்பிட்டுள்ளார்.

பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான்.

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள். (மேலும்.....)

குமரன் பொன்னுத்துரையின் "நான் நடந்து வந்த பாதை" என்னும்.....

முரண்பாடு கொண்டவர்களை பழிவாங்கும் "ஆயுதமாக" இயக்க வரலாறுகள் எழுதப்படும் ஒரு குரூரமான மனநிலை கொண்ட காலகட்டதில் நாம் வாழ்கின்றோம்.
ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட நான் உட்பட எவருமே "புனித முகத்தினை" அடைந்திடல் சாத்தியம் அற்றது. தவறுகளும், குற்றங்களும், குறைபாடுகளும் கொண்டதாகவே எம் ஒவ்வொருவரினதும் வரலாறு உள்ளது. சமீபகாலங்களில் இணையவலைத்தளங்களில் வந்த புளொட் இயக்க வரலாற்றுக் குறிப்புக்கள் எத்தகை மலிவுத்தனமானவை என்பதும், தன்னோடு உடன்படாத் தோழர்களை ‘‘தூக்குமரத்திற்கு’‘ அனுப்பவும் தயார் என்ற வன்முறை மனோபாவத்தோடு வெளிவந்தததையும் நாம் அவதானித்தே வந்துள்ளோம். (மேலும்.....)

ராதிகாவும், குஷ்பூவும் மற்றும் திமுகவும்.

கற்பு பற்றி பேசியது, கடவுள் படத்துக்கு முன்னாள் செருப்பு காலுடன் அமர்ந்திருந்தது போன்ற குஷ்பூவின் செயல்களை , சில அமைப்புகள் ஆட்சேபித்து , கோர்ட்டுக்கு இழுத்து அலைக்கழிப்பது , துடைப்பம் , முறத்துடன் வந்து அவரை அவமதித்தது என விரட்ட ஆரம்பித்தபோது தான் , அடைக்கலம் தேடி சிபி சக்கரவர்த்தியின் காலடியில் விழுந்த புறாவாய், பாதுகாப்பு தேடி திமுகவுக்கு வந்தார் . சென்ற தேர்தலில் தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்தது, ஆங்கில சேனல்களில் திமுக பிரதிநிதியாக பங்கெடுத்தது என அதற்க்கு நன்றிக்கடனும் செலுத்தினார். (மேலும்.....)

நவம்பர் 27, 2014

ராஜபக்சவின் குடும்ப ஆட்சியின் மேல் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பை அறுவடை செய்வாரா சிறிசேன?

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மிகுந்த அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. நகர்வுகள், திருப்பங்கள், திடீர் செய்திகள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே போரொன்று வெடித்திருப்பதையே நிரூபணம் செய்கின்றன. அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகராக (வேட்பாளர்) வெளிப் பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு பலத்த சவாலாகியுள்ளது. இதுவரை ராஜபக்ச அரசிலிருந்து அமைச்சர்கள் மூவர், பிரதியமைச்சர் ஒருவர், பாராளுமன்ற உறுப் பினர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். இன்னும் 20 பேர் அளவில் விலகிச் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாள் டிசம்பர் 8 என்றும், வாக்கெடுப்பு 8 ஜனவரி 2015-ல் என்றும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். (மேலும்.......)

கே.பத்மநாபாவின் அரசியல் தத்துவம் மற்றும் நடைமுறை

(தயான் ஜயதிலகா)

தோழர் பத்மநாபா முதலில் ஒரு புரட்சிகர லெனினிச மார்க்கசியவாதி,ஒரு தேசிpathmanaba-5ய விடுதலையாளர் மற்றும் ஒரு மனிதாபிமான சோசலிசவாதி. அவருடைய குணாதிசயங்களை நாங்கள் மறப்போமானால் பின்னர் அவருடைய பங்களிப்பையும் மறந்தவர்களாவோம். தமிழீழ விடுதலைப் புலிகளால் சாதாரணமாக வெட்டி வீழ்த்தப்பட்ட தமிழ் தேசிய இயக்கத்தின் மற்றொரு தலைவரல்ல பத்மநாபா. அவர் அதையும் விட மேலானவர் இதை நாங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும். தோழர் பத்மநாபாவின் அரசியல் வாழ்க்கை 1970ன் தசாப்தங்களின் ஆரம்ப வருடங்களை நோக்கிப் பின் செல்கிறது. அந்த நாட்களில் இருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக எழுச்சி பெற்ற தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர் முன்னணியினர் மேற்கொண்ட செயற்பாடுகளில் அவர் பங்கெடுத்திருந்தார். இந்த அரசாங்கத்தில்தான் தமிழ் ஈழக் கோரிக்கைக்கு உறுதியான அத்திவாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த முற்போக்கான இடதுசாரிக் கட்சிகள் என அழைக்கப்பட்ட கட்சிகள் அங்கம் வகித்தன, 1956ல் பண்டாரநாயக்காவின் சிங்களம் மட்டும் கொள்கைதான் அந்தக் கோரிக்கைக்கு அடிக்கல் நாட்டியது. 70களின் ஆரம்பத்தில் மொழி வாரியாகவும் மற்றும் மாவட்ட வாரியாகவும் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறைக்கும் மற்றும் பாகுபாடான 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிப் பிரச்சாரங்களில் தோழர் பத்மநாபா ஆர்வத்துடன் பங்குபற்றினார். (மேலும்.....)

பிரபாகரன் யார்?

தீவிரவாதி பிரபாகரனால் கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்!!!

இன்றைய தினத்தில் பிரபாகரனால் கொல்லப்பட்டு ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கின்றன.அவர்களில் ராஜனி திரணகம, செல்வி,சரோஜினி யோகேஸ்வரன்,மகேஸ்வரி வேலாயுதம் ரேலங்கி செல்வராஜா..... ...... என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்களாயுள்ளோம். (மேலும்.......)
 

கறுப்பின இளைஞனின் கொலை
அமெரிக்காவெங்கும் கலவரம் பரவுகிறது

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் பெர்கு சன் நகரில் கறுப்பின இளைஞனை சுட்டுக் கொன்ற வெள்ளையின பொலிஸ் அதிகாரி மீது எந்த குற் றச்சாட்டும் சுமத்தப்படாததற்கு எதிரான ஆர்ப்பாட ;டம் அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் பரவியு ள்ளது. நியூயோர்க் தொடக்கம் சியட்டில் வரை பல நக ரங்களில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட் டங்கள் அமைதியாக இடம்பெற்றபோதும் கலிபோ ர்னியாவின் ஒக்லான்ட் நகரில் இடம்பெற்ற ஆர்ப் பாட்டத்தில் கலவரம் வெடித்தது. அதேபோன்று சற்று பதற்றம் நிலவிய பெர்குசன் நகரில் 44 பேர் கைதுசெய்யப்பட்டனர். எனினும் திங்கள் இரவு போன்று நேற்றுமுன்தினத்தில் நகரில் கலவரம் ஏற்படவில்லை. (மேலும்.......)

யுத்தகாலம் எல்லோரையும் போல இவர்களையும் இடம்பெயர வைத்தது.

இயக்கச்சியில் வாழ்விடமற்றிருந்த வறியநிலையில் உள்ள 51 குடும்பங்களுக்கு திரு.சுரேஸ் மேதர் என்பவர் 15 ஏக்கர் காணியை அன்பளி்ப்பாக வழங்கியுள்ளார். அதற்கான உறுதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (25.11.2014) நடைபெற்றது. காணிகளுக்கான உறுதிகளை முருகேசு சந்திரகுமார் எம்பியும் காணி உரித்தாளரான சுரேஸ் மேதரும் பச்சிலைப்பள்ளிப்பிரதேச செயலர் திருமதி ஜெயராணியும் வழங்கினர். இது ஒரு முக்கியமான -முன்னுதாரணமான நிகழ்வாகும். தனி ஒரு மனிதர், அரசியல் செல்வாக்கோ, பணபலமோ, பெரிய வசதிகளோ இல்லாத ஒரு மனிதர் இப்படி பெருமளவு காணியை - அதிலும் பெறுமதியான இடத்தில் உள்ள நிலத்தை வழங்க முன்வந்தது பாராட்டப்பட வேண்டியது.இதைப்பற்றிய பதிவை விரிவாகப்பின்னர் எழுதுகிறேன். (மேலும்.......)

இது என்ன உலகமடா......?

அப்பான்னு நினைச்சேன்
அசிங்கமாய் தொட்டான்....!
சகோதரன்னு பழகினேன்
சங்கட படுத்தினான்......!
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்......!
உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!

(மேலும்.......)

தாவத் தயாராக இருக்கும் மேலும் 20 பேர்!

ஆளும் கட்சியில் இருந்து பொது எதிரணிக்கு தாவுவதற்கு இன்னமும்20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். என்று அடித்துக் கூறியுள்ளார் நேற்று கட்சி தாவியுள்ள நுவரெலியா மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள இலங்கை தொளிலாளர் காங்கிரஸ்சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் 2010 ஆம் ஆண்டுநாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிருந்தார். ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த இவர் கடந்த 21ஆம் திகதி எதிர்க்கட்சிக்குதாவப்போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஐ.தே.கட்சியில் நேற்றய தினம் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டார். ஆளும் கட்சியை சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் எதிர்க்கட்சியுடன் இணையக்காத்திருக்கின்றனர்.ஆளும் கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு எதனையும் செய்ய முடியாது. மலையக மக்களுக்கு ஜனாதிபதி மகிந்தவால் 2005 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டுஜனாதிபதித் தேர்தல்களின் போது கொடுக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதிகளையும்நிறைவேற்றவில்லை என்றார்.

 ஹக்கீமை அடக்க குமாரி குரேயின் FILE ஐ கையில் எடுத்த மகிந்த!

அமைச்சர் ரவூப் ஹக்கீமை சி.ஐ.டி மூலம் மெளனமாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு எதிராக மூன்று கோப்புக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது

1. ரவூப் ஹக்கீம் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக இருந்தபோது கேள்விப்பத்திர மோசடிகள்

2.அவரது உதவியாளரான ஹுசைன் பைஸ் மூலம் பணம் பெற்றுக் கொண்டு அரச துறையில் தொழில் வாய்ப்பு பெற்றக் கொடுத்தமை,

3. தற்கொலை செய்து கொண்ட, முன்னாள் செயலாளர் குமாரி குரேயின் வழக்கு தொடர்பானது

​குமாரி குரேயின் தற்கொலை வீடியோ ஆதாரங்களை வைத்திருந்த இரு இலத்தீன் புகைப்படக்காரர்களிடம் சி.ஐ.டியினர் இரண்டு இறுவெட்டுக்களை (CD) பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்த ஆதாரங்கள் ஹக்கீமுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்ய போதுமானதாக இருப்பதால், வழக்கு, C3 என வகைப்படுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும், மேலும், அவரை பயமுறுத்த இந்த வழக்கை மீண்டும்.தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிறப்பு விசாரணை பிரிவு இயக்குனர் ஜெனரல் சந்திரா பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர், ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. ரவூப் ஹக்கீம் எதிரணிக்கு தாவமல் இருக்க மகிந்த அரசு குமாரி குரேயின் வழக்கை தூசு தட்டி மீண்டும் கையில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை மாநகர சபை மோதல்

மு.கா. உறுப்பினர்களை தாக்கியவர் கைது

கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வின் போது மாநகர உறுப்பினர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் நேற்று கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் வெஸ்டர் றியாஸ் கல்முனையிலுள்ள வீதி ஒன்றுக்கு பெயர் சூட்டும் பிரேரணையை சபையில் முன்மொழிந்துள்ளார். இப்பிரேரணை தொடர்பாக ஆளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் றியாஸ¤க்குமிடையில் பெரும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இவ்வாக்குவாதம் முற்றியதனால் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தெளஸ், ஏ.நிசார்தீன் மற்றும் றியாஸ¤க்குமிடையே சபையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இக் கைகலப்பில் இருசாராரும் சரமாறியாக ஆளை ஆள் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலினால் காயமடைந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தெளஸ் சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 26, 2014

கிழக்கையும் கைப்பற்ற பாரிய திட்டம்!

கிழக்கு, வடமத்திய,மேல், ஊவா, மாகாணங்களின் ஆட்சியை கைப்பற்ற பொது எதிர்கட்சி பாரிய திட்டம் ஒன்று வகுத்து வருவதாக தெரியவருகிறது. இதில் அதிக கவனம் மேல் மாகாண சபை குறித்து செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியை பிடிப்பதற்கும் மக்களை தெளிவூட்டவும் இது மிகவும் அவசியம் என எதிர்கட்சி நம்புகிறது. மேல் மாகாண சபை ஆட்சியை பிடித்து முதலமைச்சராக ஜாதிக ஹெல உறுமய பிரதி செயலாளர் உதய கம்மன்பிலவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மேல் மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சேரவுள்ளனர். மேல் மாகாண சபை வரவு செலவுத் திட்டம் டிசம்பர் 1 தொடக்கம் 4 வரை இடம்பெறவுள்ள நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற பாரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

தப்பிக்கத் தயாராகும் கருணா “KP” பிள்ளையான்…

மகிந்தர் ஜனாதிபதி என்னும் பட்டத்தை இழந்தால் மறு நிமிடமே அவர் செல்லாக் காசு ஆகிவிடுவார் என்பது அனைவரும் அறிந்த விடையம். அவர் பல உலக நாடுகளுக்கு செல்லும்வேளை ஒரு நாட்டின் அதிபர் என்ற வகையில் தான், அவருக்கு அதி உயர் ராஜதந்திர பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன் நிலையில் மகிந்தரின் பக்கம் இருந்த பல செல்வாக்கு மிக்க தலைவர்கள் எதிர்கட்சிக்கு தாவிட்டார்கள். தற்போது கூட மேலும்சிலர் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். வரும் ஜனவரி மாதம் தேர்தலில் மகிந்தர் தோற்றுப்போனால், அவரை ஏப்பிரல் மாதம் சர்வதேச நீதிமன்றில் ஒப்படைப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர் ஒருவர் கூறியுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. (மேலும்....)

ஈழம் சக முள்ளிவாய்க்கால் வியாபாரம்
(தோழர் சுகு)

பிரபலமான தமிழ் வியாபாரப்பண்டம் ஈழம் அதில் முள்ளிவாய்க்காலுக்கு கேள்வி அதிகம். அதை சர்வதேச வணிக வளாகமாக்கும் முயற்சியில் சிலர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏதும் பயன் பெறுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. ஈழவியாபாரத்தில் தமக்கு கிடைத்த பலன்கள் தமது பிள்ளைகளுக்கும் உற்ற சுற்றத்திற்கும் கடத்தியுள்ளார்கள். மனித உரிமை மீறல்கள் எல்லாம் பணப்பட்டுவாடாவாக மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு புலம்பெயர்வாழ்வு கிடைத்தது உள்ளுர் தமிழர்களின் தியாகத்தாலேயே. அது இன்று நானாவித வியாபாரிகளுக்கும் வாழ் வழிக்கும் வரப்பிரசாதமாகியுள்ளது. யுத்த காலத்தில் நிதி யுத்த யந்திரத்தை பலப்படுத்துவதற்கும் மரணங்களுக்கும் உதவியது. இப்போது தமிழ் மக்களின் அவலம் தீவிர சூறையாடலுக்குள்ளாகியுள்ளது. எல்லாப்பாதையும் ரோமுக்கே என்பதுபோல் இன்றைய பல நாடகங்கள் சர்வதேச சமூகம் -புலம்பெயர் தமிழர் பொருளாதாரம் என்பவற்றை குறிவைத்தே நடைபெறுகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல் அவசர அவசரமாக காரியங்கள் நடைபெறுகின்றன. முள்ளிவாய்க்கால் மண்ணும் சாம்பலும் இன்னும் கொஞ்ச நாட்களில் வியாபாரப்பண்டமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த கடைவிரிப்பால் ஈழத்தில் துன்புறும் தமிழர்களுக்கு எந்த லாபமும் இல்லை. மக்கள் கடந்து வந்த 30 வருடங்களில் பல்வேறு துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள் மனித உரிமை மீறல்களோ மனிதப்பேரவலங்களோ ஒரு குரூர வரலாற்று தொடர்ச்சி கொண்டவை. அதில் அரச பயங்கரவாதிகளுக்கு மாத்திரமல்ல, விடுதலையின் பேரில்; ஆயுதமேந்தியவர்களுக்கும் கனதியான பங்கிருக்கிறது. இழப்புக்களைச் சந்தித்தவர்கள் எதையாவது பெறுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. இவர்கள் இருட்டில் தான் வாழ்கிறார்கள்.

வடமத்திய மாகாண சபையை கவிழ்ப்பேன்!

மைத்திரிக்கு ஆதரவானவர் என்ற சந்தேகத்தின் பேரில் பதவி பறிக்கப்பட்ட வடமத்திய மாகாண அமைச்சர், அந்த மாகாண சபையை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வடமத்திய மாகாண அமைச்சர் பேசல ஜயரத்னவின் அமைச்சுப் பதவி ஜனாதிபதியின் உத்தரவின் பேரி்ல் பறிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்தப் பதவியை தற்போதைக்கு மாகாண முதலமைச்சர் ரஞ்சித் வைத்துக் கொண்டுள்ளார். இது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாகாண அமைச்சுப் பதவியை எதிர்பார்த்திருந்த பலர் கடும் ஏமாற்றத்துக்குள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய ஊடக சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் மாகாண அமைச்சர் பேசல ஜயரத்ன, மிக விரைவில் வடமத்திய மாகாண சபை கவிழும் என்று தெரிவித்துள்ளார். தன்னைப் போலவே இன்னும் சில மாகாண சபை உறுப்பினர்களும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தாலும், தற்போதைக்கு அவர்கள் தங்களை வெளிக்காட்டாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய தகவல்களின் பிரகாரம் டிசம்பர் நடுப்பகுதியில் வரும் மாகாண சபை வரவு செலவுக் கூட்டத்தொடரில் வடமத்திய மாகாண சபை கவிழ்க்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஆயுதப் பெண் அருந்ததிராய்!
 

(பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி)

"காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை' என்று, 2010-இல் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாளராகக் கருதப்படுபவ ரான எழுத்தாளர் அருந்ததிராய் ஒரு கருத்தினை தைரியமாக வெளியிட்டிருந்தார். அக்கருத்து வெளி யான உடனேயே சில ஏடுகள் உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அலர் தூற்றின. இந்திய அரசும் அவர்மீது வழக்குத் தொடர ஆலோசித்தது. யாரெல்லாம் தங்களுக்கு ஆதரவாளர்கள் இல்லையோ அவர்கள்மீது தீவிரவாதிகள் என்றும் அமைதிக்கு எதிராகக் குழப்பம் ஏற்படுத்துபவர்கள் என்றும் முத்திரை குத்த முயன்றது. அருந்ததிராய்மீதும் அத்தகைய முத்திரை குத்த வரிந்துகட்டியது. (மேலும்.......)

இராஜதுரை எம்.பி., ஐ.தே.க.வில் இணைவு

நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளார். மேலும், முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாரும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளருமான மைத்திரி பால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்;.

கிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்து இயங்க தீர்மானம்

கிழக்கு மாகாணசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள், தனிக்குழுவாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் கொழும்பில் திங்கட்கிழமை (24) இரவு நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த மேற்படி மூன்று உறுப்பினர்களும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளராக எம்.எஸ்.சுபைர் மற்றும் உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சிப்லி பாறூக் ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரி-ரணில் இன்று கன்னி சந்திப்பு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிடவிருக்கின்ற முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது கட்சி அமைப்பாளர்கள், மாவட்ட முகாமையாளர்ளக் மற்றும் மாகாண, உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். எதிர்க்கட்சித்தலைவருக்கும் எதிரணியின் பொது வேட்பாளருக்கும் இடையில் உத்தியோகபூர்வமாக இடம்பெறும் கன்னிசந்திப்பாகும்.

அமெரிக்காவில் கலவரம்

கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் பெர்குசன் நகரில் கறுப்பின இளைஞரான மைக்கல் பிரவுனை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி வில்சன் மீது விசாரணை நடத்த முடியாது என்று நீதிபதிகள் அறிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் அங்கு வன்முறை வெடித் துள்ளது. பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் நகரில் கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி மைக்கல் பிரவுன் என்ற கறுப் பின இளைஞரை பொலிஸ் அதிகாரி டேரன் வில்சன் சுட்டுக்கொன்றார். இதனால் அப் போது அங்கு பெரும் வன்முறை வெடித்தது. கடைகள் சூறையாடப்பட்டன. பல இடங்க ளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. (மேலும்.....)

நவம்பர் 25, 2014

தற்போது கிடைத்த செய்தி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் தொடர்ந்து இடம்பெற்றுக் (இரவு 11 :13) கொண்டிருக்கின்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 95 சத வீதமானோர் அரசிலிருந்து தங்களது கட்சி வெளியேற வேண்டுமென்றும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளனர். ஏனைய ஐந்து சத வீதமானோர் இந்தக் கருத்துக்கு முரண்பட்டவாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இதேவேளை இந்தக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஹுனைஸ் பாரூக் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக குறுஞ் செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை அவர் வந்த சேரவில்லை. (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

எதிரணி வசமாகிறது மேல்மாகாண சபை! மங்கள அதிரடி ஆட்டம்

மங்கள சமரவீரவின் இரண்டாம் இன்னிங்ஸ் அரசியல் அதிரடி ஆட்டம் சற்று முன்னர் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. இதன் பிரகாரம் இன்னும் ஒரு வாரத்துக்குள் மேல் மாகாண சபை ஆளுங்கட்சியிடமிருந்து பறிபோகவுள்ளது. ஹிருணிக்கா உள்பட ஐந்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கட்சி தாவும் முடிவை சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பொது எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னரே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் உதய கம்மன்பில மேல்மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப்படவுள்ளார். ஹிருணிக்கா பிரேமச்சந்திர, பைரூஸ் ஹாஜியார், ஒரு தமிழ் உறுப்பினர் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன. ஹிருணிக்கா கட்சி தாவப் போகும் முடிவு தெரிய வந்தவுடன் இன்று காலை முதல் நாமல் ராஜபக்ச மீண்டும் ஹிருணிக்காவை நெருங்கிவர கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதன் மூலம் ஹிருணிக்காவை ஆளுங்கட்சிக்குள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் எதிர்பார்த்துள்ளார். இதற்கிடையே புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்கள் இன்று அலரி மாளிகைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கட்சி தாவும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பில் தெளிவான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத புலனாய்வுச் சேவை தொடர்பில் ஜனாதிபதி அவர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டுள்ளார். (கொழும்பு சுதந்திர இணையச் செய்தி)

ரணிலை ஏமாற்றினார் சந்திரிகா
பொதுவேட்பாளராக மைத்திரி களமிறங்க ரணில் ஒரு போதும் இடமளிக்க மாட்டார் - விமல் வீரவன்ச

டிசம்பர் 8ம் திகதி எதிர்க்கட்சி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார். அதற்கு ரணில் விக்கிரமசிங்க இடமளிக்கமாட்டார். ஏனென்றால் அவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக கொண்டு வருவதற்கே மாதுலுவாவே சோபித தேரர் முயன்றார். ஒரு வெளிநாட்டு தூதரகம் பொது வேட்பாளராக சந்திரிகா குமாரதுங்கவின் பெயரை சிபார்சு செய்தது. அதற்கு அவர் விரும்பினாலும் குடும்பத்தார் எதிர்த்ததால் அவர் பின் வாங்கினார். நூறு நாட்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 64 பேருடன் வருவதாக சந்திரிகா குமாரதுங்க கூறியதாலேயே ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுக்கு இணக்கம் தெரிவித்தார். ஆனால், அவர் தற்பொழுது ஏமாந்து விட்டார். அந்தக் கவலையிலேயே அவரல் இருக்கிறார். பட்டப்பகலிலே முழு ஐ.தே.க.வையும் சந்திரிகா குமாரதுங்க ஏமாற்றியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப் பதை விட இந்த பொதுவேட்பாளரை தோற்கடிப்பது இலகு. டிசம்பர் 8ம் திகதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்போவது மைத்திரிபால சிறிசேனவா ரணில்விக்கிரமசிங்கவா என பார்ப்போம்.
 

எஞ்சி இருப்பது குடுகாரர்களும் கொள்ளையர்களு​மே! - ஹிருணிகா

எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நல்ல மனிதர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜித சேனரத்ன போன்றவர்கள் வெளியேறி விட்டார்கள். போகிற போக்கைப் பார்த்தால் எமது கட்சிக்குள் எஞ்சிய இருக்கப் போகிறவர்கள் போதைப் பொருள் மற்றும் எத்னோல் காரர்களும் கொள்ளையர்களும் வியாபாரிகளும் தான் போல் தெரிகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் மேல் மாகாண​சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, உண்மையான நீலக் கட்சிக்காரர்களை எதிர்காலத்தில் தேடிப் பிடிப்பதும் கஷ்டமாகிப் போய்விடுமோ? என்று தலையில் கை வைத்து தனது கவலையை வெளியிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல்மாகாண சபை உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர

கொள்ளையர் குழுவின் தலைவனே மகிந்த! - அநுர

அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் ஜனாதிபதியிடம் கோவைகள் இருப்பின் ஏன்? அவர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் தம்மிடம் கோவைகள் இருப்பதாகவும் எனினும் தாம் பழிவாங்கப்போவாதில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று கூட்டம் ஒன்றில் எச்சரித்திருந்தார். இந்தநிலையிலேயே ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தமது கேள்வியை நேற்று 24-11-2014 நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார். போர் முடிந்த பின்னர் நாட்டில் ஊழல்களை ஒழிக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனவே குறித்த கோவைகளை கொண்டவர்களுக்கு எதிராக ஏன்? ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை என்று திஸாநாயக்க கேட்டார். கொள்ளைக்கூட்டத் தலைவன் கொள்ளையர்களை பாதுகாப்பது இயல்பு. அந்த கொள்ளையர்கள் இல்லாமல் கொள்ளைக்குழு தலைவனுக்கு சீவிக்கமுடியாது. எனவேதான் கொள்ளையர்களை கொள்ளைக்குழு தலைவன் பாதுகாக்கிறான் என்று அநுரகுமார சுட்டிக்காட்டினார்.
 

ஓமந்தை சோதனைச்சாவடியும் உள்ளுர்,வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும்!

இலங்கையில் பாதுகாப்பு தோரணைகள் காலத்திற்கு காலம் மாற்றமடைந்து வருகின்றமை பல்வேறு வழிகளிலும் இடையுறுகளையும் விசனங்களையும் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. எனினும் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு வியூகங்கள் இன்றியமையாத ஒரு விடயமாக காணப்பட்ட போதிலும் அதனூடாக சாதிக்கப்பட்டவை என்ன என்பது கருத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது. அந்த வகையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தங்களின் போது ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி முக்கிய பங்கை வகித்திருந்தமை மறுக்க முடியாத விடயமாகும்.(மேலும்......)

முஸ்லிம் சமூகம் தெளிவாக சிந்தித்து செயற்படவேண்டும்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம், மிகத் தெளிவாக சிந்தித்து செயற்படவேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 'நாங்கள் கடந்தகாலங்களில் துன்பங்களை அனுபவித்தோம். அத்துன்பங்கள் மீண்டும் இம்மண்ணில் இடம்பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாங்கள், மிகக்கவனமாக அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குப்பலத்தோடு, யார் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார் என்பதை புரிந்துகொண்டு இந்தச் சமுதாயத்தை வழிநடத்தவேண்டிய தேவையும் கடப்பாடும் எங்களுக்குண்டு. அண்மைக்காலமாக எமது நாட்டில் சில பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்படுத்துகின்ற பல்வேறுபட்ட சூழ்நிலைகள், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தொடுத்துவருகின்ற குரல்கள் என்பன போன்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் சக்திகளாக நாம் மாறவேண்டும். எங்களுடைய சகோதர சமூகமான தமிழ்ச் சமூகம் எதிர்ப்பு அரசியலை செய்ததற்காக அனுபவித்த துன்பங்களை நாங்கள் அறிந்துவைத்துள்ளோம். கோடிக்கணக்கான சொத்துக்களை, இலட்சக்கணக்கான மக்களை இழந்து அகதிகளாக இன்னும் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் அரசியல் கட்சிகளினதும் பிழையான வழிகாட்டல்களால், தமிழ்ச் சமூகம் அனுபவித்த துன்பங்களை நாங்கள் நேரில் கண்டவர்கள். அத்துன்பங்களை முஸ்லிம் சமுதாயம் அனுபவிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனத் தெளிவாக கூற விரும்புகின்றோம்' என்றார்.
 

ஆளும்தரப்பு எம்.பிக்களின் ஆசன வரிசையில் மாற்றம்

ஆளும் தரப்பு எம்.பி.கள் சிலர் எதிர்தரப்புடன் இணைந்துள்ள நிலையில் நேற்று ஆளும் தரப்பு உறுப்பினர்களின் ஆசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் ஆசனம் பிரதிநிதி அமைச்சரும் சிரேஷ்ட அமைச்சருமான சரத் அமுனுகமவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. ஜனாதிபதி பிரதமர், சபை முதல்வர் மற்றும் ஆளும் தரப்பு பிரதம கொரடா ஆகியோரின் ஆசனங்கள் தவிர ஏனைய எம்.பி.க்களின் ஆசனங்களில் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. முதலாம் வரிசை கட்சித் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் குறிப்பிடும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை. முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னாள் செயலாளருமான மைத்திரிபால சிரிசேனவுக்கு முதல் வரிசையில் முதலாவது ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவரின் அமைச்சு பதவியும் கட்சி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளதால் பின் வரிசையிலே ஆசனம் ஒதுக்கப்படும் என அறிய வருகிறது.

 

கணனிகளில் உலவும் சிக்கலான உளவு மென்பொருள் கண்டுபிடிப்பு

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் தீங்கிழைக்கக்கூடிய மிக சிக்கலான மென்பொருள் ஒன்று அவதானிக்கப்பட் டிருப்பதாக முன்னணி கணனி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அரசொன்றின் அனுசரணையில் உருவாக்கப்பட்டிருப்ப தாக நம்பப்படும் ரெஜின் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த மென்பொருள் கடந்த ஆறு ஆண்டுகளாக உலகெங்கும் இலக்கு வைத்து இயங்கிவருவதாக மேற்படி சிமென்டெக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த மென்பொருள் கணனியில் நிறுவப்பட்டால் அதனால் கணனி திரையை படம்பிடிக்கவும் கடவுச் சொற்களை திருடவும் அல்லது அழிக்கப்பட்ட ஆவணங்களை மீள பெற்றுக்கொள்ளவும் முடியும். இந்த மென்பொருளால் ரஷ்யா, சவூதி அரேபியா மற்றும் அயர்லாந்து நாட்டின் கணனிகள் அதிகம் பாதிக் கப்பட்டிருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். அரச அமைப்புகளின் உளவு வேலைகளுக்கு,  வர்த்தக நடவடிக்கைகளுக்கு தனிப்பட்டோரை இலக்குவைத்து இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளின் சிக்கலான தன்மையை ஆராய்ந்த ஆய்வாளர்கள், இது இணைய உளவு வேலைக்காக அரசொன்றினால் மேம்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர். இந்த மென்பொருளை மேம்படுத்துவதற்கு அதனை உரு வாக்கியவர்களுக்கு மாதங்கள், ஆண்டுகளை கடந்து பல காலம் தேவைப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. "இது உருவாக்கப்பட்டிருக்கும் நிபுணத்துவம், எடுத்துக் கொண்ட காலம் ஆகியவற்றை பார்க்கும்போது மேற்குலக அமைப்பொன்றினாலேயே இது வந்திருக்க வாய்ப்பு உள்ளது" என்று சிமென்டெக் நிறுவனத்தின் பாதுகாப்பு திட்டவல்லுனர் சியான் ஜோன் விபரித்துள்ளார்.

 

நவம்பர் 24, 2014

இலங்கை அரசு கவிழவில்லை

2015 பட்ஜெட் நிறைவேறியது

2015 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைத்துள்ளதுடன் வாக்களிப்பில் 14 பேர் கலந்து கொள்ளவில்லை. வட மத்திய மாகாண வர்த்தக அமைச்சர் பேஷல ஜயரட்ன, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரவளிக்க போவதாக அறிவித்துள்ளார். அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்துகொள்ள மாட்டோம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தெரிவித்தனர். புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரபெருமவுமே நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அரசாங்கத்துக்கு தீர்க்கமான நாள்

இலங்கை அரசாங்கம் கவிழுமா....? தப்புமா.....?

பொது எதிரணியின் காய்நகர்த்தலால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிரணியினர் தொடர்ச்சியாக மந்திராலோசனை செய்துவருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினரே இந்த மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசாங்கத்துக்கும் எதிரணிக்கும் இன்று 24ஆம் திகதி திங்கட்கிழமை தீர்க்கமான நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.(மேலும்........)
 

சிறுபான்மையினரிடம் தீர்மானம்

இறுதியில் தம்மாலும் எதனையும் சாதிக்க முடியும் என்பதை இந்நாட்டு எதிர்க்கட்சிகள் நிரூபித்துவிட்டன. ஒரு நீண்ட கால போரில் வெற்றி பெறுவதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு வழிகாட்டிய உளவுத்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அக் கட்சிகள் அரசாங்கத்தின் முக்கிய நபர் ஒருவரை தமது அணியில் சேர்த்துக் கொண்டன. சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் மைத்திரிபாலவை பாராட்டியிருந்தது. தேர்தலின் பின்னர் இந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இப்போதிருந்தே தாம் மக்கள் அமைப்போன்றை உருவாக்குவதாகவும் அதன் படி மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை தீர்மானிக்கட்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறினார். அதாவது அவர்களும் மைத்திரிபாலவின் திட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்பதே. இப்போது ஜனாதிபதித் தேர்தலின் இரண்டு பிரதான அணிகளும் தீர்மானிக்கப்பட்டுவிட்டன. பெரும்பான்மை மக்களின் வாக்குகள் அனேகமாக சரி சமமாக பிரியலாம். இந்தநிலையில், தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதே முக்கியமான கேள்வியாகும். ஏனெனில், அவர்களிடமே சுமார் 25 வீத வாக்குகள் இருக்கின்றன. (மேலும்.......)

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள், இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. (மேலும்.....)

காலங்கள் பல கடந்தும்
உன் நினைப்பு பசுமையாய் வாழ்கிறது


நீ புத்தனாய் இருந்து போதிக்கவில்லை
ஆனாலும் நாம் நிழலுக்கு போதிமரத்தையே நாடினோம்
நீ சிலுவையை எமது தோழில் சுமக்கவைக்கவில்லை
ஆனாலும் நாம் பாவிகளை மன்னிக்க பழகிகொண்டோம்
நீ குர்ஆனையையும், பகவத்கீதையையும்
எமது கைகளில் திணிக்கவில்லை
ஆனாலும் நாம் மானிடத்தின் மகிமையறிந்து நடந்தோம்
நீ தலைமையத்துவத்தை நாடவில்லை
நாங்களாகவே உன் தலைமையை விரும்பிக்கொண்டோம்
உன் அமைப்புக்குள் அதிகாரம் இருக்கவில்லை
அன்பின் ஆதிக்கம் இருந்தது
பகைவனே போற்றும் பண்பு இருந்தது
உன் கட்டுமானத்தில் கட்டுப்பட்டிருந்தவர்கள்
ஆயுதத்தை நேசிக்கும் ஆதமாக்கள் அல்ல
அதை ஏந்தியதற்க்காய் ஆதங்கப்பட்டவர்கள்
நீ துப்பாக்கியை இயக்க கற்றுத்தரவிரும்பவில்லை
அதை இயக்காமல் தவிப்பதற்க்கான வழியை தேடினாய்
இவையெல்லாம் நீ மக்களை மட்டும் நேசியுங்கள்
என்பதற்க்காய் கற்றுத்தந்தாய்
பிறக்கும் போது இறப்பு நிச்சயிக்கபடுகிறது
ஆனால் இறப்புக்கு பின்னால்தான்
அவர்களின் பிறப்பின் மகிமை நிச்சயிக்கபடுகிறது
ஆதலால்தான் உன் மகிமை இங்கு மகாத்தான தேவையாய் இருக்கிறது
அதுவே காலங்கள் பல கடந்தும்
உன் நினைப்பு பசுமையாய் வாழ்கிறது

(மோகன்)

காணாமல் போன முன்னாள் புலி உறுப்பினர் கள்ளனாகப் பிடிக்கபட்டார்

யாழ்ப்பாண பகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் நபரை, வெள்ளிக்கிழமை (21) திருட்டு சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார், சனிக்கிழமை (22) தெரிவித்தனர். குருநகர் 5மாடிக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த அந்தோனி முத்து அன்ரன் ஜெயரோன் (வயது 31) கடந்த 17ஆம் திகதி கடைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் மேற்படி நபரின் மனைவி கடந்த 18ஆம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில் காணாமல் போனதாக கூறப்படும் சந்தேக நபர், வெள்ளிக்கிழமை (21) சுன்னாகம் நகரப்பகுதியில் உள்ள வீடொன்றில் திருட முற்பட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வரும் சுன்னாகம் பொலிஸார், மருத்துவ பரிசோதனையின் பின்னர், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். குறித்த நபா் முன்னாள் புலி உறுப்பினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலைபேசியே சின்னம்?

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதி தேர்தலில், எங்கள் தேசிய முன்னணியின் கீழ் அலைபேசி சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 'ம' பிரிவுக்கு பதிலாகவே பதிவு செய்யப்படவிருக்கின்றது. இதேவேளை, பொது எதிரணியின் சின்னமாக அலைபேசியை எதிரணியில் இருக்கின்ற பலர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திஸ்ஸவும் கட்சி தாவுவார்?

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்ளவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது போன்றதாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் எதிரணியின் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜே.வி.பி., உபாய ஆதரவு?

எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு 'உபாய முறையில்' ஆதரவளிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்ட ரீதியில் இடமில்லை என்று தெரிவித்துள்ள அக்கட்சி, மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு தங்களால் இயன்ற சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

17ஐ எதிர்த்தால் நாடாளுமன்றத்தை கலைப்பேன் - மைத்திரிபால


நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கவும் அரசியலமைப்புக்கான 17ஆவது திருத்தத்தை மீளச் செயற்படுத்தவும் தற்போதைய நாடாளுமன்றம் மறுக்குமாயின் தற்போதைய நாடாளுமன்றத்தை கலைத்துவிடுவேன் என  ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நேற்று (23) தெரிவித்தார். நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும் ஜனாதிபதி முறைமையை கொண்டு வருவதும் அரசியலமைப்பு திருத்தம் மூலம் 100 நாட்களுக்குள் சுதந்திரமான நீதி சேவை, ஊழல் மற்றும இலஞ்சம், பொலிஸ், தேர்தல்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுக்கள் அமைப்பதும் இந்த நாட்டு மக்களுக்கான எனது வாக்குறுதிகளாகும் எனவும் அவர் கூறினார். இந்த வாக்குறுதிகளை நாடாளுமன்றம் மூலம் செய்ய முடியாது போயின், மக்களிடம் புதிய அனுமதி கோரும் வகையில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். நேர அவகாசம் மட்டுமட்டாக இருப்பதால், தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை வரையும் வேலைத்திட்டத்தை சட்ட வல்லநர் குழு தொடங்கிவிட்டது. நாட்டின் நலனுக்காக இரண்டு பிரதான கட்சிகள் இது முதல் தடலை அல்ல. '2006 ஒக்டோபரில் ஒரு பொது வேலைத்திட்டத்துக்காக நான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் என்ற வகையில் ஐ.தே.க.வின்; மாலிக சமரவிக்ரமவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டேன்.

நவம்பர் 23, 2014

யாருக்கு ஆதரவு வழங்குவது

ஆழமாக ஆராய்ந்து TNA இறுதி முடிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் இன்று கூடவுள்ளது.

மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகவும் யாருக்கு ஆதரவு வழங்கு வது என்பது குறித்து கட்சி ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் கூறினார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் இன்று கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார். இன்று கூடும் அதியுயர் பீட கூட்டத்தில் 18வது திருத்தச் சட்டம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மைத்திரிக்கு நான் தவறிழைக்கவில்லை - ஜனாதிபதி

முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தான் ஒரு தவறும் செய்யவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதியமைச்சர் சிறிபால கம்லத்தினால் சோமாவதியில் நிர்மாணிக்கப்பட்ட தர்மசாலையை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொலன்னறுவை மாவட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், மைத்திரிபால சிறிசேன சென்ற வழியில் தாங்கள் செல்லப்போவதில்லை என்று ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர். 

பாரிஸ் மாநகரில் இரு நூல்கள் வெளியீடு..!

பாரிஸ் மாநகரில் அண்மையில் இரு நூல் கள் வெளியிடப்பட்டன. இலங்கையில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்த வரும் தற்போது பாரிஸ் மாநகரில் வசிப்பவருமான என். கே. துரைசிங்கம் எழுதிய 'உயிரி" (சிறுகதைத் தொகுதி) 'காலம் ஆனவர் கள்" நூல்களின் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் (09 - 11 - 2014) பாரிஸ் மாநகரில் சிறப்புற நடைபெற்றது. இலக்கிய ஆர்வலர் சி. தர்சன் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன் 'உயிரி" சிறுகதைத் தொகுதி குறித்துக் கருத்துரை வழங்கினார். 'காலம் ஆனவர்கள்" நூல் குறித்து தலித் சமூக மேம்பாட்டு முன்னணியைச் சேர்ந்த தேவதாசன் கருத்துரை வழங்கி னார். மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்;. நூலாசிரியர் என். கே. துரைசிங்கம் ஏற்புரை யாற்றினார். படைப்பாளிகள், இலக்கிய ஆர் வலர்கள், நூலாசிரியரின் சொந்த ஊரான கைதடிக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நூலா சிரியர் யாழ் நகரில் அன்று 'ஈழநாடு" பத்திரி கையில் பணிபுரிந்தவராவார்.

மோடியின்

வெளிநாட்டு விஜயங்கள்

இந்தியாவின் பதினைந்தாவது பிரதமர் நரேந்திர மோடி மும்முரமாக வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு வருகிறார். சீனாவை விட தாம் முந்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் இங்கு இருக்க கூடும். முன்வரும் இருபது வருடங்களில் உலக பொரு ளாதாரத்தை வழிநடத்த முயற்சி செய்யும் நாடுகளே இந்த இந்தியாவும் சீனாவும். தனது முதல் விஜயத் தினை ‘சார்க்’ நாடுகளின் ஒன்றான பூட்டானுக்கு இவர் மேற்கொண்டார். இது இந்தியாவுடன் எல்லையை கொண்ட நாடும் கூட. இவருடன் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியு றவு அமைச்சின் செயலாளர் சுதாத்தா சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோரும் சென்றனர். மன்னருடனும் பிரதம மந்திரியுடனும் இவர் பேச்சுவார்த்தை களை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரு நாடுகளுக்கிடையேயும் இரு தரப்பு வர்த்தகம் மற்றும் நீர் மின்வலு சக்தி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டதாக தெரிய வருகின்றது. இது தவிர 600 மெக்ஹோவாட் மின்சக்தி வலு கொண்ட நிலையம் ஒன்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். (மேலும்.....)

பல ஆயிரம் மக்களின் அழிவை தவிர்க்க பத்மநாபா தவறியுள்ளார்.

காலம் கடந்து கருணாவுக்கு வந்த ஞானம் அன்று பத்மநாபாவுக்கு வராமல் போனது எப்படி? பல ஆயிரம் மக்கள் அழிவை தடுப்பதற்கு பத்மநாப தவறியுள்ளார் என்றால் பத்மநாபா கொல்லப்பட்டதிலிருந்து (1990 )அவரது அமைப்பு ஜனநாயக பாதைக்கு வந்ததிலிருந்து முள்ளிவாய்க்கால் வரைக்கும் ஒரு லட்சம் பேர் மட்டில் இறந்து போனதும் பத்மநாபா விட்ட தவறுதானோ. கருணாவுக்கு ஞானம் வரவில்லை. மாத்தையாவுக்கு நேர்ந்த கதி தனக்கும் நேர்ந்து விடுமோ என்ற பயத்தால் ஏற்பட்ட மாற்றம் வெருகலில் எத்தனை உயிர்களை பலி வாங்கியது. பத்மநாபா நினைத்திருந்தால் டக்லஸ் கருணாவை விட சிங்கள அரசுகளுக்கு செல்லப்பிள்ளையாக இருந்திருக்கலாம். ஆனால் கொள்கை வீரர்கள் எத்தருணத்திலும் யாருக்கும் சோரம் போவதில்லை. பத்மநாபா என்கின்ற மனிதனின் வாழ்வையும் அவர் கடந்து வந்த போராட்ட பாதையையும் அவருடைய ஆளுமையையும் வெறுமனே ஒரு சந்திப்பிலோ அல்லது அவர் சொன்ன ஒரு வார்த்தையிலோ எடை போட முடியாது. அது தவறானதும். புலிகள் அவர்களை தடை செய்கிறோம் என்று தாக்கிய பொழுது தனது போராளிகளை சகோதர யுத்தம் வேண்டாம் என்று திருப்பி தாக்குவதை தடுத்திருந்தார். புலிகளின் அளவில் சம பலம் இல்லாதிருந்த போதிலும் திருப்பி தாக்கும் அளவிற்கு வல்லமையோடுதான் EPRLF அப்பொழுது இருந்தது. ஆனால் வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகளிடமும் பிரேமதாசா இரானுவத்திடமும் இருந்து பாதுகாப்பதில் தனது ஆயிரக்கணக்கான போராளிகளை இழந்தவர். அவரது ஆருடமும் இணைந்த இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கல் என்பதும் 13வது திருத்தமுமே இன்றைய அரசியலை அலங்கரிக்கும் பதாகையாக இருக்கிறது. (Paul Pragalathan)
 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!!! ஏமாற்றப்படும் கனேடிய தமிழர்கள்..!!

கனடாவில் தமிழீழ படத்தை விளம்பர படுத்தி ஒரு கூத்து...!!

தமிழீழ வரைபடம் மலிவானதா?? இழிவானதா??

கனடாவில் நடைபெறவுள்ள உள்ளத்தில் இருந்து ஒரு துளி நிதி சோ்ப்பு நிகழ்வை யார் நடாத்துகிறார்கள் ? அதன் உண்மையான நோக்கம் என்ன? என்பதில் மக்கள் மத்தியில் பெரும் கேள்விகளை உண்டுபண்ணியுள்ள நிலையில் இந்தப்பதிவு அவசியமாகிறது..
இந்த அரிசித்திட்டம் உண்மையிலேயே இலங்கை அரசால் திட்டமிட்டு நடாத்தப்படுகிறது.. இதனது பின்னணியில் இருவர் மறைந்திருக்கிறார்கள். அவா்கள் தான் தமிழ் சீ என் என் இணையதள இயக்குனர் கண்ணன் மற்றும் அவரது உதவியாளா்களில் நெருக்கமான வடமராச்சி செல்வா.. இவா்களது வியாபார தந்திர நோக்கம் தான் இந்த அரிசி கொடுக்கும் ஒரு துளி விழையாட்டு. (மேலும்.....)

நவம்பர் 22, 2014

மைத்திரிபால சிறிசேன

அரசியல் வாழ்க்கையும் பின்னணியும்

பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். உள்ளூர் பள்ளிக்கூடமொன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார். அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத்தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார். 1971-ம் ஆண்டில் ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் மைத்திரிபால சிறிசேனவும் இருந்துள்ளார். (மேலும்......)

எதிர்க்கட்சிகள் சிறந்த ஒரு போட்டியாளரைத் தெரிவு செய்திருக்கின்றன! - விக்டர் ஐவன்

அரசியல் ஆய்வாளரான விக்டர் ஐவன் நேற்றிரவு பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் இருந்து... எதிர்க்கட்சிகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன, மஹிந்தவுக்கு பாரிய சவாலாக அமைவார் என்று விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் சிறந்த ஒரு போட்டியாளரைத் தெரிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார்.அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஜனாதிபதியைத் தோற்கடிப்பதற்காக களமிறங்கியிருப்பதாகச் கூறும் அவர், முழுப் போராட்டத்துக்குச் செல்வதற்கு முன்னரேயே அது முடிந்துவிட்டது. “பாரியதொரு வீழ்ச்சி, உடைவு, தோல்வியின் முன்கூட்டிய எதிர்வுகூறல்“ என்றுதான் இதனை குறிப்பிட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கான போராட்டம் 70 வீதமளவு முடிந்துவிட்டது. ஜனாதிபதி அனைத்து துரும்புகளையும் பயன்படுத்தி முடிந்து விட்டதாகவும், எதிர்க்கட்சி இப்போதுதான் ஆரம்பித்திருப்பதாகவும் விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார். விக்டர் ஐவனின் கூற்று சரியாக இருக்குமிடத்து மகிந்தவின் நிலைமைதான் என்ன?

ரத்னசிறி தலைமையில் மேலும் 10 பேர் சந்திரிகாவுடன் இணையவுள்ளனர்!

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்க தலைமையில்ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு ஒன்று சந்திரிகாவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று சந்திரிகாவுடன் அமைச்சர்களான மைத்திரிபாலசிறிசேன,ராஜித சேனாரத்ன உட்பட்ட 6 பேர் இணைந்துள்ள நிலையில் இவர்களுக்கு மேற்படியாக இந்த 10 பேரும் இணையவுள்ளனர். அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா,சுசில் பிறேம் ஜயந்த,ஜனக பண்டார தென்னகோன்,பிரதியமைச்சர்களான ரெஜினோல் குரே,முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரம நாயக்கவின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரம சிங்க ஆகியோர் இணையவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

லீக் ஆகியது இரகசிய தகவல்! அதிர்ச்சியில் ராஜபக்ஷவினர்

அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான ஊடகங்களாக இருக்கும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ராஜபக்ஷவினர் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த திட்டத்திற்காக கொழும்பு நாராஹேன்பிட்டியில் ஒரு இடத்தில் விசேட கணனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் வானொலி ஒன்றின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய ஒருவரின் கீழ் இயங்கும் இந்த கணனிப் பிரிவில் கடந்த காலத்தில் ஜே.வி.பியில் இருந்து விலகிய கணனி மற்றும் பிரசார பிரிவுகளில் பணியாற்றியவர்கள் சிலரும் இதில் இணைந்து செயற்படுகின்றனர். அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிநடத்தலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த கணனி பிரிவின் மூலம் சில போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோல்வியால் பைத்தியம் பிடித்து போயுள்ள ராஜபக்ஷ அரசாங்கம் இணையத்தளங்களையும் சமூக வலைத்தளங்களையும் இவ்வாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

'ரணிலும் சந்திரிகாவும் தான் குறைந்தபட்ச நம்பிக்கை' - மனோ கணேசன்
 

ரணிலும் சந்திரிகாவும் எதிரணி கூட்டு தலைமையில் இருப்பதே குறைந்தபட்ச நம்பிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக, முன்னணியின் தலைமையகத்தில் இன்று(20) நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடி செயற்பாடுகள், நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கை துளிர்களை தோற்றுவிக்கவேண்டும். ஆட்சி மாற்றத்தால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல், கலாச்சார, வர்த்தக, சமூக நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியும். இன்றைய இன, மத நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டு, எம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இவையே தமிழ்பேசும் மக்களின் நம்பிக்கைகளாக இருக்க வேண்டும். (மேலும்.....)

பொது வேட்பாளரின் பின்னால் வெளிநாட்டு சக்திகள் என்பது பொய - மைத்திரிபால

பொது எதிரணியின் பின்னாலோ பொது வேட்பாளராகிய எனக்குப் பின்னாலோ, எந்தவிதமான வெளிநாட்டு சக்திகளும் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகின்றேன். நாட்டு மக்களின் நலனுக்காகவே நாங்கள் இணைந்திருக்கின்றோம். இதனைக் குழப்புவதற்காக எம்மீது தேவையில்லாமல் பழி போடுகிறார்கள். ஜனவரி 8ஆம் திகதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றமை மகிழ்ச்சி தருகிறது. காரணம், அன்றையதினம்தான் பண்டாரநாயக்கவின் பிறந்ததினம். அவரது கட்சிக்கு புத்துயிர் கிடைக்கும் தினமாக அன்றைய தினம் அமையவிருப்பதால், பண்டாரநாயக்கவின் ஆசை நிறைவேறும் என பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறும் பாரிய அணி! இதோ பெயர்கள்….

ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவ காத்திருக்கும் முக்கியஸ்தர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தற்போதைக்கு நாடாளுமன்ற அங்கத்தவர்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாண ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் இன்று மாலை வெளியாகவுள்ளது. 14 மாவட்டங்களின் கட்சி தாவல் முடிவுகள் வெளியாகியுள்ளன.(மேலும்.....)

 60 நாடளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியுடன் இணையவுள்ளனர்!

ஆளும் கட்சியை சேர்ந்த 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில், 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினத்துடன் ஆளும் கட்சியுடன் இருந்து விலகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அவரது உரைக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையூறு விளைவித்ததாக பாராளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 8இல் ஜனாதிபதி தேர்தல்

எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்த அறிவித்தலை வர்த்தமானி மூலம் விடுத்துள்ளார்.  வேட்புமனுக்களை டிசெம்பர் 8ஆம் திகதி முதல் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலும் ஜனவரி 8ஆம் திகதியே இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

யாரிந்த பத்மநாபா...?

தோழர்.பத்மநாபா காட்டிய வழியில்...

பாசிசத்திற்கெதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், இந்தியாவின் நண்பனாக, சர்வதேச முற்போக்கு விடுதலை இயக்கங்களின் உற்ற தோழனாக, அமைதி, சமாதானம், ஜனநாயகத்தை ஏற்படுத்த உறுதியோடு போராடிய போராளி. மார்க்சிய, லெனினிய சித்தாந்தத்தில் அதிக ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். இடது சாரிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தினார். இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இயங்கிய பல்வேறு இடதுசாரி தலைவர்களோடும், நெருங்கியத் தொடர்பினை வைத்திருந்தார். சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றதுடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்கும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதிலும் சகல முற்போக்கு சக்திகளோடும் இணைந்து நின்று செயலாற்றினார். (மேலும்.....)

மைத்திரிபால, ராஜித உட்பட நால்வரின் அமைச்சுப் பதவிகள் பறிப்பு

 

மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை எதிரணியின் பொது வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பதுடன் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் இதற்கு ஆதரவளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MR ஐ எதிர்த்து MS


எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார்.
நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்...
ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது...
சட்டம் சீர்குழைந்துள்ளது...
யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது...
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்...
2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்... ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் யுத்தம் செய்ததில் முழு நாடே கடனாளியாகியுள்ளது...
2004ஆம் ஆண்டில் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது...
1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார்...
1974 - 1994 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார்...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது...
வரலாறு எனக்கு தந்த பரிசு...
ரணில், சந்திரிகா ஆகியோருக்கு நன்றிகள்...
சு.க.வை பலப்படுத்த வேண்டும்...
போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் சந்தித்தேன்...
நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது...
இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை...
பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன்...
சகலதையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன்...
நாட்டின் நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது...
அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்...
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும்...
இளைஞர் பிரச்சினைகளுக்கு தீர்வு...
சுதந்திர தேர்தல் உரிமையை உருவாக்குவேன்...
இது கூட்டமைப்பின் ஒரு முன்னணி...

 

அரசியல் கொலைப் பட்டியல் தயார் நிலையில்

 

ஜனவரி மாதம் நடைபெறப் போகும் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கோக்தபாஜா ராஜபக்சாவால் அரங்கேற்றப் போகின்ற அரசியல் கொலைப் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக கடிநொடியின் காதிற்கு வந்திருக்கின்றது. வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்சா தோல்வியடைந்தால், அந்தப் பரம்பரையின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக அமையும். அப்படி ஒரு நிலைமையை வரவிடாமல் தடுப்பதற்காக கோத்தபாஜா எதையும் செய்ய துணிந்துவிட்டார். இந்த ராஜபக்சா குடும்பம் அரசியல் கொலைகளை செய்து அதனை விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் வீண்பழிகள் போடும் திட்டத்தை வகுத்துள்ளார்கள். மேற்குலக நாடுகளினதும் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களின் உதவிகளும் இருந்தால் மட்டும் தான் கோத்தபாஜாவின் திட்டத்தை முறியடிக்கலாம். கடிநொடி எங்கும் செல்லும் எதிலும் நுழையும் ஆனால் உண்மைகளை மட்டும் வெளிக்கொண்டு வரும்.
(கடிநொடி)

 

வாழ்த்தப்பட வேண்டிய நாள்...


இலங்கைத் தமிழர் பேராட்டத்திற்று ஒரு தோழமைத் தலைவனைக் கொடுத்த நாள் இன்றைய நாள். தோழர் நாபா என அழைக்கப்பட்ட கந்தசாமி பத்மநாபாவிற்கு இன்று வயது 63. பாசிசப் புலிகளின் கோழைத் தனத்திற்று அவன் பலியாகாமல் இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களின் அன்றைய குடிசன மதிப்பீட்டு ஆவணப் பக்கங்கள் பல காணாமல் போயிருக்காது, சில வேளை பிரபாகரனின் பக்கங்கழும் கூட காப்பாற்றப் பட்டிருக்கும். அவனை அழித்த அந்த கரங்களுடன் கைகுலுக்கிய கறைபடிந்த முகங்கள் ,தேசிய சகதியில் இன்றும் தோய்ந்து, புரண்டு, மாய்ந்து கொண்டிருக்க மக்களுக்கான அவன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் அனைவர் மனங்களிலும். தேசியத்தலைவர்,மக்கள்தவைலர் எனப்பட்டவர்கள் எல்லாம் அவர்களை நேசித்தவர்களாலேயே நினைவு கூரப்பட முடியாமல் அழிந்து போக, 24 வருடங்களாக இன்றும் வருடா வருடம் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருக்கிறான் எங்கள் நாபா. அனைத்து வசதிகளுடனுமான தனது சொந்த வாழ்வியலை துறந்து தோழர்களுடனேயே வாழ்ந்து தோழர்களுடனேயே மரணத்தையும் தழுவிய பெருமையை பெற்றவன் தோழர் நாபா. அவனுடனேயே என்றும் இருக்கும் தோழமை உணர்வு, பரோபகார சிந்தனை,மக்கள் துயர் பற்றிய கவலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு நோக்கு என்பன எதிர்கால சமூக்கத்தவர் மத்தியிலாவது நிலை நிறுத்தப்பட்டு வேரூன்றுமானால் நம் சமூகமும் தலை நிமிர்ந்து வாழ வளி பிறக்கும். சமத்துவ-சகோதரத்துவ சமூகக் கனவுடன் வாழ்ந்த அந்த தோழனின் இன்றைய நாள் வாழ்த்தப்பட வேண்டிய நாளே!
(கோவை நந்தன்)

 

சுமுக உறவுதான் சாதிக்கும்

 

ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் பெரும் நிம்மதி! போதைப்பொருள் கடத்தியதாகக் கைதுசெய்யப்பட்டு, பிறகு மரண தண்டனையும் விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், பி. அகஸ்டஸ், ஆர். வில்சன், கே. பிரசாத், ஜே. லாங்லெட் எந்த வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்கும் வந்துசேர்ந்துவிட்டனர். இதே வழக்கில் தண்டனை பெற்ற 3 இலங்கை மீனவர்கள் இன்னமும் விடுதலை பெறாமல் சிறையிலேயே இருக்கிறார்கள். (மேலும்.....)

 

தமிழ்த் தலைமைகளுக்கு ஓர் உரிமை மடல்

பல்வேறு பட்ட நெருக்கடிகளால் நொந்து போய் விரக்தி நிலையில் வாழும் எம்மினத்திற்கு விமோசனம் அளிப்பதற்குரிய மிகச் சிறந்த தருணம் ஓன்று இலங்கை அரசியலில் மலர்ந்துள்ளது. இதைப் பயன்படுத்தி தமிழர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சரியான இராஜ தந்திர நகர்வுகளை முன்னெடுத்து வெல்லப் போகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வெளிப்படையாக ஆதரவு தந்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண முன்வர வேண்டும். இதற்காக தார்மீக ஆதரவை வேட்பாளருக்கு வழங்கி வேட்பாளரின் வெற்றிக்கு தாமும் காரணமாக இருந்து தமது கோரிக்கைகளுக்கு தலைசாய்க்கக்கூடிய வல்லமையைப் பெறவேண்டும். (மேலும்.....)

நவம்பர் 21, 2014

காலம் அனைத்தையும் மாற்றும் - மைத்திரிபால

 

'காலம் பலவற்றை மாற்றுகின்றது. நான் கலந்துகொள்ளும் இறுதி அரசாங்க உற்சவம் இதுவாகவும் இருக்கலாம். நாம் காலத்திடம் எல்லாவற்றையும் சமர்ப்பித்துவிட்டு காத்திருப்போம்' என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் பத்தரமுல்லயில் இடம்பெற்ற நிகழ்வின் போது தெரிவித்தார். சொத்துக்களை குவிப்பதற்காக மக்கள் எமது கைகளில் அதிகாரத்தை வழங்கவில்லை. ஊழல், மோசடிகளைச் செய்வதற்காகவும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அதிகாரம் கிடைத்துவிட்டது என்ற மமதையில் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அந்த அதிகாரத்தில், மக்களை அடிபணியச் செய்யவும் கூடாது என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். அத்துடன், அதிகாரத்தின் போதையில் நாம் சிக்குண்டிருக்கக்வும் கூடாது என்று தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால, பொதுமக்களின் பொறுப்பாளன், ஒருபோதும் அந்த மக்களை அடிமைகளாக்கி நசுக்கக் கூடாது' என்றுத் கூறினார்.

 

சத்தியமே எங்கள் பலம் - சந்திரிகா

 

இது வரலாற்று நடவடிக்கை...
அரசியல் பயணத்தில் மீண்டும் இணைந்து கொண்டதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்...
மஹிந்தவை நியமித்தமைக்காக என்னை பலர் எதிர்த்தனர்...
மஹிந்தவை நியமித்த 6 மாதத்தில் என்னை துரத்திவிட்டார்...
எனது மௌனமே கட்சியை நிலைகுலையச் செய்தது...
9 வருடங்கள் காத்திருந்தேன்...
அதிகாரத்திலுள்ள தலைவர், பொறுக்கமுடியாதளவு கொடுமைகளைச் செய்தார்...
எனது வரலாற்றுப் பதிவை எழுதி வருகிறேன்...
யுத்த வெற்றியைப் பாராட்டுகிறேன்...
யுத்தத்தை வென்றவரை சிறையில் அடைத்தனர்...
அரச ஊழியர்களின் சம்பளம் உயரவில்லை...
வாழ முடியவில்லை என மக்கள் வருந்துகின்றனர்...
சட்டம் சீர்குலைந்துள்ளது...
மனிதப் படுகொலை, மோசடிகளே ஆட்சியமைக்கின்றன...
பொலிஸ் துறை கேவலப்படுத்தப்பட்டுள்ளது...
இவை பயங்கரமானவை...
17ஆவது திருத்தம் வீசப்பட்டுள்ளது...
ஆட்சியாளர்கள் சிரித்துக்கொண்டே பொய்களைக் கூறி ஆட்சியமைத்து வருகின்றனர்...
எதிர்த்தவர்களுக்கு, எதிர்ப்பவர்களுக்கு வெள்ளை வான்...
என்னை மீண்டும் போட்டியிடுமாறு பெரும்பாலானோர் கோரினர்...
அதிகாரத்திலிருக்கும் பேராசை எனக்கு இல்லை...
பழிவாங்கும் தலைவர்கள் இருக்கின்றனர்...
பாதுகாப்பு தேவைப்படுகிறது...
எங்களுடைய உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை...
எங்களுக்குரிய சகல வரப்பிரசாதங்களுமத் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன...
பிள்ளைகள் எதிர்க்கின்றனர்...
எனினும் நாட்டுக்காக தீர்மானம் எடுத்தேன்...
வெளியில் இறங்கும்போது உயிர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும்...
பயப்படமாட்டேன்...
சத்தியமே எங்கள் பலம்...
நாம் ஜனாதிபதி போராட்டத்தில் இறங்குவோம்...
சகலரும் வெளியில் வருவதற்கான சந்தர்ப்பம் இது...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க எதிர்க்கட்சிகளின் உதவி கிடைக்கவில்லை...
நாட்டைப் பிளவுபடுத்த பிரபாகரன் என்னை கொல்ல முயன்றார்...

மைத்திரிபாலவுக்கு ஐ.தே.க-ஜீ 20 ஆதரவு


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன கலமிறங்குவாராயின், அவருக்கு ஆதரவளிப்பதென ஐக்கிய தேசிய கட்சியும் அக்கட்சியின் ஜீ 20 அமைப்பும் இன்று தீர்மானித்துள்ளன.  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

Maithripala's "Reasons" To Leave the Govt: CBK Was The "Chief Architect" Behind The Scene

Former President Chandrika Bandaranaike Kumaratunga, who was prevented from contesting at the upcoming presidential election by her close associates due to legal impediments, was the chief architect of the entire process behind making SLFP General Secretary Maithripala Sirisena the common candidate of the opposition. The Minister was livid at the government for two main reasons. One was the incident where his son, Daham Sirisena, was drawn into a brawl with the son of a senior Police officer, last year. Several newspapers - particularly the pro-government ones - reported the story saying the Minister's had threatened the senior Police officer's son claiming he was the son of the future Prime Minister. 

ஜனாதிபதி தேர்தல் 42 நாட்களுக்குள்
 

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியசரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை வெளியானது. பரப்பரப்பாக பேசப்பட்ட ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று பிற்பகலில் இருந்த சுபநேரமான 1.18க்கு கைச்சாத்திட்டார். அலரிமாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனத்தில் கைச்சாத்திடும்போது, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரி காமினி செனரத், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்களில் ஒருவரான யோசித்த ராஜபக்ஷ ஆகியோரும் உடனிருந்தனர். மற்றொரு பதவிக் காலத்துக்காக ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்ற பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டதையடுத்து அந்த பிரகடனம் தொலைநகல் ஊடாக தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதியை இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவிருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 1988ஆம் ஆண்டு 16ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் திருத்த சட்டத்தின் பிரகாரம் வர்த்தமானியில் கைச்சாத்திட்ட நாளிலிருந்து வேட்புமனுத்தாக்கல் 16 அல்லது 21 நாட்களுக்கு கோரப்படும் என்பதுடன் தேர்தல் 28 நாட்களிலிருந்து 42 நாட்களுக்கு உட்பட்ட நாளொன்றில் நடத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பச்சை மண்ணில் விதைத்த மாவீரர் விஷம்



நோர்வேயில் பிறந்து வளர்ந்து சரளமாய் தமிழ்பேசும் ஒரு பெண்பிள்ளையை சந்திக்கக்கிடைத்தது. அவளுக்கு 16 வயதிருக்கலாம். வேண்டும் என்றால் 18 என்றும் வைத்துக்கொள்வோம்.

மாவீரர்நாளைப்பற்றி கதைவந்தது. உரையாடத்தொடங்கினோம்.

”மாவீரர் என்றால் யார்? யார் யார் அதற்குள் அடங்குவார்கள்?” இது நான்
”பிரபாகரன் மாமாவும் அவரின் போராளிகளும்” இது அவள்.
”அப்ப மற்றைய இயக்கத்தவர்கள்”
”துரோகிகள். பிரபாகரன் மாமாதான் போராடினவர்”
”மற்றையவர்கள் போராடவில்லையா”
”முதல் கொஞ்சம் போராடியிருக்கலாம். மாமாவின்ட ஆட்களைப்பொல் சண்டை பிடிகேல்ல”
”உங்கட மாமா அவர்களை சுட்டு கலைத்தது சரியா?” (மேலும்......)

பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !
 

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன். தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது. (மேலும்.....)

மீனவர்கள் விடுதலைபோல் போதைப்பொருளும் இல்லாதொழிக்க வேண்டும்

மீனவர்கள் விடுதலைபோல் போதைப்பொருளும் இல்லாதொழிக்க வேண்டும்


போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மனிதாபிமான ரீதியில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் வரவேற்கத்தக்கது. குறித்த மீனவர்களின் விடுதலைக்காக தமிழகத்தில் போராட்டங்கள் நடாத்தி, அழுத்தங்களை உருவாக்கி, தமிழக மீனவர்கள் தங்கள் சகாக்களை விடுதலை செய்ய வைத்துள்ளனர். அவர்கள் போராட்டம் மதிக்கத்தக்கது. ஜனாதிபதி, பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்தமையின் படி, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்காக இலங்கையிலும் பலர் குரல் கொடுத்து இருந்தனர். விடுதலையின் பின்னரும் கூட கருத்துக்களை கூறியுள்ளனர். ஆனால், இந்த விடயத்தின் மறுபக்கம் பற்றி யாரும் யோசிக்கவில்லை, பெரிதுபடுத்தவில்லை, பேசவும் இல்லை. (மேலும்.....)
 

தொழிலாளர்களின் நிலைமைக்கு பிரித்தானியா காரணம்?

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதான காரண கர்த்தாக்கள் பிரித்தானியர்களே. அவர்கள்தான் இந்த மக் களை அழைத்து வந்தனர் ,இன்று இந்த நிலைமையில் அவர்கள் இருப்பதற்கு அவர்களே பதில் சொல்ல வேண்டும் என ஒரு சில மலையக பிரதிநிதிகள் குறைகூறத் தொடங் கியிருக்கின்றனர். காலனித்துவ ஆட்சி காலத்தில் போர்த் துகேயர் ஒல்லாந்த ருக்குப்பிறகு இலங்கையை கைப்பற் றிய ஆங்கிலேயர்கள் 133 வருடங்கள் ஆட்சி செய்தனர். அனைவருமே இலங் கையை தமது வர்த்தக நோக்கத்திற்கே பயன்படுத்தினர் என்பது முக்கிய விடயம். இதில் ஆங்கி லேயர் இலங்கையின் மத்திய மலை நாட்டை ஆரம்பத்தில் கோப்பி ,கொக்கோ பின்னர் தேயிலை பயிர்ச்செய்கைக் காக பயன்படுத்தினர்.
சிலோன் டீ என்ற பெயரை உலகறியச்செய்தவர்கள் ஆங்கிலேயர்களே இந்த சந்தர்ப்பத்தில் மேலதிக வேலைக் காகவும் தமது பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையை விரிவு படுத்தவும் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் செயற்பாட்டில் ஆங்கிலேயர்கள் ஈடுபட் டனர். இந்த பணி கிழக்கிந்திய கம்பனி மூலமாகவே முன் னெடுக்கப்பட்டது.
(மேலும்.....)

வாரணாசியில் வாழ்கிறார் 179 வயது மனிதர் !

வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயது டைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தி ருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்க@ரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்து விட்டு ஓய்வு பெற்றுவிட்டார். மகாஸ்தா முராசியின் பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களைப் போல் எங்கள் பிள்ளைகளையும் விடுதலை செய்ய வேண்டும்.


இந்திய மீனவர்களைப் போல் எங்கள் பிள்ளைகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். குருநகர் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் உருக்கமான கோரிக்கை 20.11.2014 - வியாழக்கிழமை இந்திய மீனவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கியதுபோல், அதேவகையான குற்றச்சாட்டில் ஒரே மாதிரியான தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் எங்களது பிள்ளைகளையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென போதைப் பொருள் கடத்தலில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளோரின் மனைவிமார், பிள்ளைகள், பெற்றோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கைவிடுத்தனர். (மேலும்......)

நவம்பர் 20, 2014

Non Resident Tamils (of Sri Lanka)
புகலிட ( இலங்கை ) தமிழர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

ஐக்கிய ராஜ்யத்தில் அரசியல், ஊடகத்துறைமற்றும் பல்வேறுதுறைகளில் நீண்டகாலமாகசெயற்பட்டுவரும் 7 முக்கியசெயற்பாட்டாளர்கள் இணைந்துபுகலிட ( இலங்கை ) தமிழர் அமைப்பு ஒன்றினை உருவாக்கிஉள்ளனர். இவ் அமைப்புபுலம்பெயர் தமிழர்களின் நலன்களைப் பேணும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.  இதன் இடைக்காலத் தலைவராகபிரபலஅரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் அமைப்புத் தொடர்பாகஅவர் வெளியிட்டுள்ள செய்தியில் கடல் கடந்தநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பரந்த அபிப்பிராயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலும்,அம் மக்களின் தாயகநலன்கள், ஜனநாயகம், நல்லாட்சி, நீதிபோன்றவற்றிற்காகபாடுபடும் எனவும், இலங்கையில் தற்போதுநிலவும் தேக்கமானஅரசியல் நிலமைகளிலிருந்துமாறி, அரசியல் தீர்வினைத் துரிதப்படுத்தும் வகையில் இப் பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ளதரப்பாருடன் தொடர்புகளைமேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.  இக் குழுவினர் தமிழ் மக்களுக்குநீதிகிடைக்கப் போராடும் அதேவேளைதேசியமுக்கியத்துவம் வாய்ந்தபிரச்சனைகளில் நீதி, ஜனநாயகம் என்பவற்றிகாககுரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள்,செயற் குழுக்கள், சமூகங்களுடன் இணைந்துசெயற்படும் எனத் தெரிவித்தஅவர்  தேசிய இனப் பிரச்சனைக்கானநியாயமானதீர்வைஎட்டுவதற்குபுலம்பெயர் தமிழர்களின் பங்குமுக்கியமானது. எனவே இவ் இலக்கைஎட்டுவதற்காகமுயற்சிக்கும் இதரதேசியமற்றும் சர்வதேசசக்திகளுடன் இவ் அமைப்புதொடர்ந்துஇணைந்துசெயற்படும் எனமேலும் தெரிவித்தார். இவ் அமைப்புபுலம் பெயர்இந்தியர்களால் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளாக இயங்கி இன்றுமிகவும் சாதனைபடைத்துவரும் புலம் பெயர் இந்தியர் அமைப்பின் முன் மாதிரியைமையமாகக் கொண்டுஅமைக்கப்பட்டுள்ளது.

இவ் அமைப்பின்

இடைக்கால தலைவர்
திரு வி.சிவலிங்கம்
திரு இரா.ஜெயதேவன்
திரு தம்பா
மருத்துவர் இரவிந்திரன்
திரு மாகலிங்கசிவம்
மருத்துவர் ரொஜர் சீனிவாசன்
திரு வீ.ராம்ராஜ்

ரஷ்யாவின் மர்ம விண்கலம் குறித்து அவதானிகள் அச்சம்

ரஷ்யா அனுப்பியிருக்கும் ஒரு மர்மமான செய்மதி பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் ஏனைய விண்கலங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்று அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த மே மாதம் ரஷ்ய ரொக்கெட் மூலம் விண்கலம் போன்ற மர்ம எந்திரத்தை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது குறித்து மர்மம் காத்து வந்தது. இந்த நிலையில் தற்போது அது விண்ணில் பறப்பதை சில நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் கண்டு பிடித்துள்ளன. தெற்கு பசிபிக் கடலின் மீது பறந்த போது இது கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் இது விண்ணில் சுற்றி வரும் விண்கலங்களை கண்காணிக்கவும், விண்வெளியில் உடைந்து மிதக்கும் விண்கல இடிபாடுகளை அகற்றவும் உதவும் என கருதப்பட்டது. தற்போது அது எதிரி நாட்டு விண்கலங்களை அழிப்பதற்காக அனுப்பப்பட்டதாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விண்கலம் போன்ற மர்ம எந்திரத்துக்கு 2014-28 இ என பெயரிடப்பட்டுள்ளது.

 

போராட்டம், சத்தியாக்கிரகங்களால் உரிமைகளைப் பெறும் காலம் இன்றில்லை


தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் அபிலாஷைகளைப் பெறுவதற்கு போராட்டம், சத்தியாக்கிரகம் அவசியமில்லை என்னைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டு அனைத்தையும் பெறலாம் என்ற நம்பிக்கையுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப் பாளர் சாணக்கியன் இராசமாணிக் கம் தெரிவித்துள்ளார். களுமுந்தன்வெளிக் கிராமத்தின் தலைவர் தெ. சவுந்தரராசா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கிராம பெரியோர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அப்போதைய காலகட்டத்தில் என்னு டைய அப்பப்பா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து பல சத்தியாக்கிரக போராட்டங்களை நடத்தி தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியி ருந்தார். அது அப்போதைய காலகட்டத் திற்குப் பொருந்தும். ஆனால் தற்போதைய காலகட்டத்திற்கு இவ்வா றான சத்தியாக்கிரகப் போராட்டங்கள் எதுவும் சரிவராது. தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியூடாக அவர்களது உரிமையினைப் பெற தற்போது வழிபிறந்துள்ளது. அதுதான் அபிவிருத் தியூடாக உரிமைகளைப் பெறுவதாகும். எமது தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராட்டம், சத்தியாக்கிரகம் போன்ற வழி வகைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனைவிட தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடியும் இதுவரை உரிமை கிடைக்கவில்லை.

 

நவம்பர் 19, 2014

தோழர் பத்மநாபா

 

தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன், ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்கான அயராத உழைப்பாளி, எதிரிகளையும் மதித்த உயரிய மனிதாபிமானி இன மொழி மதங்களைக் கடந்த சர்வதேசப் புரட்சியாளன். இன்று நவம்பர் 19. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களாலும் மற்றும் கட்சியின் நெருங்கிய நண்பர்களாலும் எஸ் ஜி தோழர் என அழைக்கப்பட்ட தோழர் நாபா அவர்களின் பிறந்த தினமான இன்று அவர் தொடர்பான மறக்க முடியாத நினைவுகள்.

 

தோழர் பத்மநாபா இன்
வரலாறு மறைப்பதும் இல்லை! மறுப்பதும் இல்லை!!
(தோழர் ஜேம்ஸ்)


இலங்கையில் வாழும் உழைக்கும் வர்க்கம் இணைந்து போராட முடியாத அளவிற்கு பேரினவாதம் மேலோங்கி தலைதூக்கி இருந்தமையினால் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைகளின் அடிப்படையில் பிரிந்து செல்வதற்கான போராட்டங்களை முதலில் முன்னெடுப்பது என்ற முடிவிற்கு வந்த இவர் இதற்கான தலமை சக்தி தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருந்த உழைக்கும் வர்க்கமே என்று விடாப்பிடியாக நம்பினார். இதற்கான அணிதிரட்டல்களை செய்வதற்காக ஈபிஆர்எல்எவ் என்ற விடுதலை அமைப்பை உருவாக்கி இதன் தலமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். கூட்டுத் தலமையில் என்றுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இவர் தனது விடுதலை அமைப்பிற்குள்ளும், வெளியேயும் கூட்டுத் தலமையிற்காக கடுமையாக உழைத்தார். இவர் எப்போதும் தலமைப் பதவியை நோக்கி ஓடியவர் அல்ல என்பது இவருடன் இணைந்து வேலை செய்தவர்களுக்கு அப்பால் பல்வேறு மட்டத் மக்களுக்கும் தெரியும். இவரின் செயற்பாடுகள், உழைப்புக்கள், அர்பணிப்புக்கள், தான் கொண்ட இலட்சியத்தில் விடாப்பிடியானதன்மை போன்றவையே இவரை தலமைப் பதவியை நோக்கி நகர்த்தியது என்றே கூறவேண்டும். (மேலும்.....)

 

தார்மீக வலுவிழந்த தமிழ் அரசியல் சூழல்


தோழர் நாபா சில நினைவுகள்

(நவம்பர் 19 தோழர்நாபாவின் 63 வது பிறந்த நாள்)
(தோழர் சுகு- ஸ்ரீதரன்)


மகா புருஷன் எனப்படுபவன் ஏனையோரை விட தீர்க்கத்தரிசனம் மிக்கவன் என்றார் ரஷ்ய தத்துவஞானி பிளக்காநோவ். இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு ஒரு நியாயபூர்வமான தீர்வை உருவாக்குவதில் அவர் தீர்க்கமான பங்களிப்பை வழங்கியிருந்தார். அவருடைய அரசியல் தூரதிருஷ்டி- ஒரு பேரழிவில் இருந்து சமூகத்தை காப்பாற்றும் அக்கறையைக் கொண்டிருந்தது. அவர் மலையக மக்களை பெரிதும் நேசித்தார். இலங்கையில் நடக்கும் சமூக மாற்றத்தில் மலையக மக்களின் பங்கை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரான சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள், வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தேசிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்குமுறைக்குள்ளான பெண்கள் அத்தனை சமூக பிரிவினர் மீதும் அதீத ஈடுபாட்டை காட்டினார். தோழமை என்றால் என்ன என்பதற்கு அவர் ஒரு வாழும் உதாரணமாக திகழ்ந்தார். அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மக்களே அவர் எத்தகைய மானிடர் என்பதற்கு சான்று பகன்றன. (மேலும்.....)

The Political Philosophy And Praxis Of K. Pathmanabha
 

November 19, 2014 | Filed under: Colombo Telegraph,Opinion | Posted by: COLOMBO_TELEGRAPH

(Dr. Dayan Jayatilleka)

EPRLF Leader K. Pathmanaba’s 63rd birthday is today. Comrade Pathmanabha was first of all a revolutionary, a Marxist-Leninist, a national liberationist and a humanitarian socialist. If we were to forget his characteristics we would then also forget his contribution. Pathmanabha was not just another leader of the Tamil national movement cut down by the LTTE. He was more, and this we should always remember. Comrade Pathmanabha political career goes back to the first years of the decade of 1970’s. He participated in the activities of the rising Tamil student and youth fronts, in protest against the racist policies implemented by the United Front Government of the day. It is this Government, consisting of so called progressives and left parties, that reinforced the foundation of the Tamil Eelam demand, the cornerstone of which was laid by the Bandaranaike policy of Sinhala Only in 1956. Comrade Pathmanabha participated in the early 70’s in the campaigns of agitation launched against media wise and district wise standardisation and discriminatory 1972 Constitution. (more.....)

 

அன்னைஇந்திராகாந்தி, தோழர்பத்மநாபா பிறந்த தினம் (19.11.14)
 

இந்திரா பிரிதர்சினி எனும் பெயருடைய இந்திராகாந்தி 19.நவம்பர் 1917 அன்று அகலாபாத் எனும் இடத்தில் ஐவர்லலல்நேரு கமலா தம்பதிகளுக்கு மகளாக .பிறந்தார். தோழர்பத்மநாபா காங்கேசன்துறையில் 19 நவமபர் 1951 இல் மத்தியதர குடும்பத்தில் பிறந்தார். இவர்கள் இருவரினது அரசியல் வாழக்கையும் பார்க்கும்போது ஒரே நேர்கோட்டில் அவர்களது சிந்தனைகள் பயனித்துள்ளது. தீவிரவாதம்,,பிரராந்திய வாதம் மனிதகுலத்தையே அழித்துவிடும் என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து செயல்பட்டார்கள்.இதனால் இவர்கள் தீவிரவாதிகளுக்கு சிம்மசொப்பனமானார்கள். இலங்கைதமிழர்கள் நலனில் பல துணிச்சலான முடிவுகளை எடுக்க இந்த இருவரும் தயங்கியதில்லை அந்த முடிவுள் மக்களை காவுவாங்காத நன்மை பயக்கும் முடிவுகளாகவே அமைந்தன. (மேலும்.....)

 

 5 இந்திய மீனவர்களும் விடுவிப்பு

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஐவரும் இலங்கை குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் அதிகாரிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஹெல உறுமய விலகினாலும் ஜனாதிபதியின் பலம் குறையாது'

அரசாங்கத்திலிருந்து, ஜாதிக ஹெல உறுமய விலகி சென்றாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் காணப்படும் சக்தியில் எவ்வித குறைவும் ஏற்படாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறியுள்ளார்.

 

நவம்பர் 18, 2014

என் மனவலையிலிருந்து…..


அரசியல் நாகரீகம் மட்டும் அல்ல மனித நாகரீகமும் அற்ற செயல்
(சாகரன்)


உலகத்தின் வளர்சியடைந்த முதல் இருபது நாடுகளின் மகாநாடு அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்திருக்கின்றது. பொருளாதாரம், காலநிலை மாற்றம் போன்றவற்றை முதன்மைப்படுத்தி பேசுவதாக கூட்டப்பட்ட இந்த மகாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமின் புட்டின், கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹாபர் இற்கு காலாக்கு கொடுக்க முற்பட்ட போது கைலாக்கை ஏற்பதற்கு முன்பு நிபந்தனை ஒன்றை முன்வைக்கும் நாகரீகம் அற்ற மூன்றாம்தர அரசியல் ‘சாணக்கியம்’ ஐ செய்கின்றேன் என்று தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளுவதாக நினைத்து சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டை செய்திருக்கின்றார கனடியப் பிரதமர்.(மேலும்......)

 

ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு நாளை விடுக்கப்படும்?

ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு , நாளை புதன்கிழமை உத்தியோகபூர்வமாக விடுக்கப்படும்?அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் அன்றிரவே விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 72 மணிநேரத்துக்குள், உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படும் என்று அமைச்சர் டலஸ் அழகபெரும கடந்த சனிக்கிழமை (15) அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச, எதிரணி பங்காளி கட்சிகளுக்குள் பிளவு

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, நாளை புதன்கிழமை (19) வெளியாகும் என்று எதிர்பார்த்திருக்கின்ற நிலையில், ஆளும் மற்றும் எதிரணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் இணைத் தலைவருமான அத்துரலிய ரத்ன தேரர், திவுல பிட்டிய பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் பதவியிலிருந்து நேற்று திங்கட்கிழமை இராஜினாமா செய்தார். இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவை நியமிக்காவிடின் கட்சி தொடர்பில் நாம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளிலிருந்தும் விலகிக்கொள்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய பிக்கு முன்னணியின் ஆலோசகர் கிராபே ஆனந்த தேரர் அறிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற பாணந்துறை நகரசபைத் தலைவர் நந்தன குணத்திலக்க, நகரசபைத் தலைவர் பதவியை கடந்த 11ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிரணியை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கு சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் மேற்கொண்ட முயற்சி கைகூடுமா இல்லையா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
 

மலையக அரசியல் கோமாளிகளின் 'ஊழிக்கூத்து'

இரத்தம், வியர்வையை மண்ணுக்கு சிந்தி, மண்ணை பொன்னாக்கிய மலைய தங்கங்கள்- மழைக்கு முளைத்த காளான்களால் அடகுகடையில் ஒரேதடவையில் அடகு வைக்கப்படுகின்றனர். மலையக அரசியல் தலைமைகள் தங்களை தேசிய அரசியல் நீரோட்டத்துக்கு சவாலாக்கிகொண்டு, காளான்களை களையெடுக்காவிடின் 'மலையக மக்களின் அரசியல் இருப்பு' எதிர்காலத்தில் பெரும் சவாலாகவே இருக்கும். இதற்கிடையில் மலையகத்தில் தனி வீடுகளை அமைப்பதற்கு, தோட்ட நிறுவனங்கள் பாதுகாப்பான காணிகளை வழங்குவதில்லை. மாறாக தோட்ட நிறுவனங்களுக்கு பயன்படாத மலை அடிவாரங்களில் உள்ள கரடுமுறடான காணிகளை வழங்குகின்றனர். ஆபத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ஆபத்தான இடங்களில் வீடுகளை அமைத்து கொடுப்பது வரவேற்கத்தக்க விடயம் அல்ல. எனவே, மலையக மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க தோட்ட நிறுவனங்கள் பாதுகாப்பான காணிகளை வழங்க வேண்டும். (மேலும்.......)

 

பல் மொழிப் பயன்பாடு பற்றி ஒரு கம்யூனிஸ்ட்
 

மத்தியப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொடுக்க ஜெர்மன் அமைப்புடன் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது ஒரு குற்றம். அந்தக் குற்றத்திற்கு மாற்று, அதைக் கைவிடுவதுதானே தவிர, இன்னொரு குற்றம் அல்ல. எந்த மொழியையும் குழந்தைகள் விரும்பித் தேர்ந்தெடுத்துப் படிக்க வசதிகள் செய்துகொடுப்பதுதான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமேயன்றி, எந்த மொழியையும் திணிப்பது ஏற்க முடியாதது. (மேலும்......)
 

முற்போக்கான பொருளாதார பயணத்தைப் பலப்படுத்த ஜனாதிபதியையே மீண்டும் தெரிவு செய்ய வேண்டும் - அமைச்சர் திஸ்ஸ விதாரண

இந்த முற்போக்கான தேசப்பற்று பொருளாதார பயணத்தை மேலும் பலப்படுத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே மீண்டும் தெரிவு செய்ய வேண்டும். அதற்கு சமசமாஜ கட்சி ஆதரவு வழங்குவதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஐ.ம.சு.மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் படி செயற்படாது நாட்டின் தேவைக்கமைய நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செல்வந்த பொருளாதார அடிப்படையிலான நிர்வாகத்தில் மோசடி, லஞ்சம் என்பன இருக்கவே செய்யும். இதனாலே இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். இது குறித்து அரசாங்கத்தை கோரியுள்ளோம். இந்த அரசாங்கத்தினாலேயே அது சாத்தியம். நிறைவேற்று ஜனாதிபதி முறையை இந்த அரசாலே மாற்ற முடியும். சிலர் தாம் ஆட்சிக்கு வந்தால் இதனை மாற்றுவதாக கூறினாலும் அது முடியாத விடயம். எமது கோரிக்கைகளை வெல்ல அரசிலிருந்து தொடர்ந்து குரல் கொடுப் போம்.

நவம்பர் 17, 2014

இப்படியும் மனிதர்கள் இருந்தார்கள்...!

ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார்,  தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்.  கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர். தன்னலமற்ற அரசியல்வாதி! காமராஜரின் நெருங்கிய நண்பர். முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. (ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே!)  ஒருமுறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு சென்னை திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை. பிறகு அங்கேயே படுத்து கொண்டார். இப்போது போலவே அப்போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை. இரவு உணவு கூட உண்ணவில்லை. விடியற்காலை அவ்வழியாக வந்த காமராஜர் நண்பர் ஜீவாவை பார்த்ததும் மகிழ்ந்து அவரிடம் பேச தொடங்கினார். ஜீவா அவர்கள் சிறிது பேசிவிட்டு பிறகு தன் நண்பரிடம் எனக்கு ரொம்ப பசிக்கிறது கையில் பணம் இல்லை ஒரு டீயும் பண்ணும் வாங்கி தாருங்கள் என்றார். உடனே காமராஜர் விரைந்து வாங்கிக் கொடுத்தார். அதனை வாங்கும் போது அவர் சட்டை பையில் உள்ள சில்லறைகள் சத்தம் கேட்டது. காமராஜர் உடனே என்ன ஜீவா கையில் பணம் இல்லை என்று சொன்னீர்களே, ஆனால் சத்தம் கேட்கிறதே, அதை வைத்து சாப்பிட வேண்டியது தானே என்று அக்கறையோடு கேட்டார். அதற்கு ஜீவா உடனே சொன்னார், "அது கட்சி பணம் எனக்கு உரியது அல்ல" என்றார். கையில் பணம் இருந்தும் அது கட்சி பணம் என்பதனால் இரவு முழுவதும் பட்டினியாய் இருந்த அந்த நேர்மையை கண்டு உளம் மகிழ்ந்து தன் நண்பரை ஆர தழுவிக்கொண்டார்.

இந்தியாவின் 8 வாகனங்களால் வடக்கு மாகாணசபையில் அடிபாடு….?

இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களின் பாவனைக்கென எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆயினும், இந்த நடவடிக்கை மாகாணசபை உறுப்பினர்களிடையே குழப்ப நிலையை உருவாக்கும் என்றும், அவ்வாறு வழங்குவதாக இருந்தால் எல்லா உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வழங்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
அதேநேரம், எட்டு வாகனங்கள் மட்டுமே வழங்கப்படுமானால், அவற்றை உறுப்பினர்கள் யாரும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி சபை உறுப்பினர்களுக்கு மொட்டைக் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
வடமாகாணசபை உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்று, பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது, சபையின் 38 உறுப்பினர்களுக்கும் இந்தியா வரி விலக்களிக்கப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்து வழங்க முன்வந்திருந்ததாகவும், எனினும் இலங்கையின் நிதியமைச்சு அதற்கு ஒப்புதலளிக்க மறுத்துவிட்டது என்றும் மாகாணசபையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். (மேலும்......)

போராளிகளுக்கு அதிக தண்டனை கொடுத்தவர் சி.வி - சீமான்

இலங்கையில் தனது மண்ணுக்காக போராடிய போராளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கொடுத்தது, ஐயா சி.வி.விக்னேஸ்வரன் மட்டும் தான். அது போன்று அதிக பேரை சிறையில் தள்ளியதும் ஐயா தான் என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கு விக்னேஸ்வரன் சென்றிருந்தபோது, இந்திய மக்கள் செய்யும் நடவடிக்கைகள் காரணமாக தங்களுக்கு நெருக்கடி வந்துள்ளதாக தெரிவித்திருந்த கருத்து தொடர்பில், தந்தி தொலைக்காட்சி நிரூபர் கேள்வி எழுப்பியபோதே, சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த ஈழ போராட்டம் எத்தனை காலமாக இடம்பெற்று வருகின்றது என ஐயா விக்னேஸ்வரனுக்கு தெரியுமா? இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 60 வருடங்களாக போராட்டம் நடந்து வருகின்றது. இதில் எதிலாவது இவருக்கு பங்கு உண்டா? உதாரணமாக சொல்ல போனால் அரசியல் போராட்டமாக இருக்கட்டும் இல்லை, ஆயுதப் போராட்டமாக இருக்கட்டும். அப்போது எங்கே போய் இருந்தார் விக்னேஸ்வரன். இதில் உண்மை என்னவென்றால் இலங்கையில் தனது மண்ணுக்காக போராடிய போராளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கொடுத்தது, ஐயா மட்டும் தான் அது போன்று அதிக பேரை சிறையில் தள்ளியதும் ஐயா தான் என தெரிவித்துள்ளார்.

சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு…!!
உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு கியூப ராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது. அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பொலிவியாவில் மத போதகர் லூயிஸ் கார்டேரா என்பவரிடம் இருந்தன. 2012ஆம் ஆண்டில் அந்த மத போதகர் இறந்த போது, அவரது உடைமைகளை உறவினர்கள் சோதனையிட்டதில், சேகுவாராவின் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த புகைப்படங்களை, அவரது உறவினரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான இமானுல் ஆர்டியா என்பவர் தனது நாட்டுக்கு எடுத்து வந்தார். தற்போது அந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், ஒரு படத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், கம்பீரத்துடன் சேகுவாராவின் முகம் இருப்பது போன்றும், மற்றொரு படத்தில் சேகுவாராவின் உடல் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதும் இருக்கின்றன. சேகுவாரா கொல்லப்பட்ட பிறகு, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் மார்க் ஹட்டனால் எடுக்கப்பட்ட புகைப்படமே சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகின. அதுதவிர, வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. எனவே இந்த புகைப்படங்களை மதபோதகர் கார்டேராவிடம் மார்க் ஹட்டனே கொடுத்திருக்கலாம் என இமானுல் தெரிவித்துள்ளார்.
 

புலிகளுக்கு நிதி வழங்கிய சோல்ஹெய்ம் நாட்டுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

புலிகளுக்கு நிதி வழங்கிய சோல்ஹெய்ம் இப்போது எமக்கெதிராக ஐ.நா.வில் சாட்சி சொல்ல தயாராகிறார். அவர் தொடர்பில் நோர்வே முழுமையான விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிரபாகரன் வடக்கு காட்டில் பிறந்தவரென்றால் நான் தெற்குக் காட்டில் பிறந்தவன் என்ற துணிவிலேயே புலிகளை அழிக்க புறப்பட்டதாகக் கூறிய ஜனாதிபதி, சோல்ஹெய்ம் புலிகளை மகாவல்லவர் களாகக் காட்டி யுத்தத்தை நிறுத்த முயற்சித்தவர் என்றும் தெரிவித்தார். சோல்ஹெய்ம் எமக்கெதிராகச் சாட்சி சொல்ல தற்போது முண்டியடித்துக்கொண்டு தயாராவதாக அறிய முடிகிறது. சோல்ஹெய்ம் புலிகளுக்கு நிதி வழங்கியதற்கான சாட்சி எம்மிடமுள்ளது. அவர் அக்காலத்தில் என்னிடம் வந்து என்ன கூறினார் என்று பலருக்குத் தெரியாது. உங்கள் இராணுவத்துக்கு எந்த முறையிலும் புலிகளை அழிக்க முடியாது அவர்கள் பாரிய திறமையுள்ள வர்கள். அவர்களுக்கு எதிரான போராட் டத்தைக் கைவிடுங்கள். அவர்கள் யுத்தம் புரிவதில் மகாவல்லவர்கள் என்றார். யுத்தம் முடிந்த பின்பும் இவர்களின் சிந்தனை மாறவில்லை. ‘டயஸ்போர’வை நம்புகின்றனர். இங்கிலாந்து. அமெரிக்கா என அலைந்து டயஸ்போராவுக்குப் பின்னால் செல்கின்றனர். ‘டயஸ்போரா வையே அவர்கள் இப்போது தமது இரட்சகர்களாக எண்ணியுள்ளனர்.
 

சொல்ஹெய்ம், நாளை அறிக்கை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்வைத்துள்ள என்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவரமான அறிக்கையை நாளை திங்கட்கிழமை (17) வெளியிடுவேன் என்று முன்னாள் நோர்வே அமைச்சரும் சமாதான ஏற்பாட்டாளருமான எரிக் சொல்ஹெய்ம் அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய் சொல்லுகிறார் என்றும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவது 19 வரை ஒத்திவைப்பு

அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது, இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவது எதிர்வரும் 19ஆம் திகதிவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானத்துக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் வண. மாதுலுவாவே சோபித்ததேரர்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, 17ஆம் திகதி திங்கட்கிழமை கைச்சாத்தப்படவிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இவ்வாறு 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வண. மாதுலுவாவே சோபித்த தேரருடன் இணைந்து வேலை செய்ய தீர்மானித்துள்ள அரசியல் கட்சிகளும் குழுக்களும், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய, அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை இன்று திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

 

மலையகத்தில்

ஏட்டிக்குப் போட்டியாக மாடி வீட்டுப் பிரசாரம்

'எமது மக்களுக்கு தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு ஏழு பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும் என்றும் நாம் வலியுறுத்தி வருகின்ற நேரத்தில் ஏட்டிக்குப் போட்டியாக மாடி வீடு தேவை என்று பிரசாரம் செய்து வருகின்றார்கள். நாம் எமது நிலைப்பாட்டில் இருந்து மாறப் போவதில்லை. வீட்டு உரிமைக்கும் காணி உரிமைக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம்' என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவித்தார். 'மலையகத்தில் அனைத்து தோட்டங்களிலும் எமது அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். நான், என்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்துதான் சங்கத்தை வளர்த்து வருகின்றேன். நாம் எமது உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கு அரசியல் ரீதியில் பலம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு தொழிற்சங்க அங்கத்துவம் அவசியமாகின்றது. தொழிற்சங்கம் பலமாக இருப்பதற்கு தொழிலாளர்களின் அங்கத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க அங்கத்துவத்தைப் பெருக்கிக்கொள்ள அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும்.

அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !

 

ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள். ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 தேவைப்படுகின்றது.

1. வருடம் ஒன்றில் ஒரு நாளைய உணவை உங்களின் குடும்பத்தின் பெயரால் இக் குழந்தைகளுக்கு வழங்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்.

2. உங்களின் அல்லது உங்கள் பிள்ளைகளின் பிறந்த தினத்தின் போதும் கொண்டாட்டங்களின் போதும் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவு வழங்குங்கள்.

3. காலம் சென்ற உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரால் வருடாந்தம் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் நாள் உணவு வழங்குங்கள்.

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்

நன்றி.
(மேலும்......)

எதிரணிகளின் பொதுவேட்பாளர் தெரிவு
டயஸ்போரா, த.கூட்டமைப்பின் சிந்தனை


டயஸ்போரா, த. கூட்டமைப்பினரின் ஆலோசனைக்கிணங்கவே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த ரணில் விக்ரமசிங்ஹ தீர்மானித்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாட்டை சீரழிக்கும் நோக்குடன் டயஸ் போராக்கள் முன்வைத்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டுள்ள ரணில் நாட்டுக்கு என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை. ஆட்சியைப் பிடிப்போம் என்ற வேட்கையுடன் செயற்படுவதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார். இதில் ரணிலா, கரு ஜயசூரியவா, அல்லது சஜித்தா, அர்ஜுனவா, சரத் என் சில்வாவா அல்லது சந்திரிக்கா பண்டார நாயக்காவா, யார் பொது வேட்பாளர். எதிர்க் கட்சிகள் ஒரு நோக்கில் இருந்துகொண்டு இன்னும் முடிவு எடுக்காமல் திண்டாடுகின்றன. மஹிந்தவுடன் எதிராக நிற்கக் கூடிய ஒருவர் இந்த எதிர்க் கட்சிக்குள் இல்லை என்றே நான் திட்டவட்டமாகச் சொல்வேன். ரீ. என். ஏ. தலைவர் இரா சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றுத் தருவதாக ரணிலிடம் பேசியுள்ளார். அவர் 6 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத் துள்ளார். அவரது கோரிக்கை திவயின சிங்களப் பத்திரிகையில் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கில் உள்ள 15 ஆயிரம் இராணுவப் படைகளை அகற்ற வேண்டும். வட, கிழக்கில் சுயநிர்ணய சபை வழங்கப்படல் வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

 

மேற்குலகின் அழுத்தத்திற்கு மத்தியில்
புடின் ஜி-20 இலிருந்து முன்கூட்டியே வெளியேற்றம்


கிழக்கு உக்ரைன் பிரிவினை வாதிகளுக்கு ஆதரவளிப்பதாக மேற்குலகத்தின் கடும் அழுத் தத்திற்கு மத்தியில் ரஷ்ய ஜனா திபதி விளாடிமிர் புடின் அவுஸ் திரேலியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டிலிருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார். ரஷ்யாவுக்கு நீண்ட தூரம் பயணிக்கவேண்டி இருப்பதாலும் சற்று நித்திரை கொள்ளவேண்டி இருப்பதாலும் ஜி-20 உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படு வதற்கு முன்னர் தாம் விடை பெறப்போவதாக புடின் நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். அவுஸ்திரேலியாவில் நேற்று முடிவுக்கு வந்த இரண்டு நாள் ஜி-20 மாநாட்டில் பொருளாதார விவ காரங்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது. எனினும் உக்ரைன் விவகாரம் மற்றும் கால நிலை மாற்றம் தொடர்பிலும் விவா திக்கப்பட்டது. ஜி-20 மாநாட்டில் கடந்த சனிக்கிழமை கூட்டத்தில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹாபர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் ஆகியோர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தனர். ஜி-20 மாநாட்டில் கடனா பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர், புட்டினுடன் கைகுலுக்கிக்கொள்ளும்போது, "உக்ரைனிலிருந்து வெளியேறிவிடுங்கள்" என்று நேரடியாகவே குறிப்பிட் டுள்ளார். "உங்களுடன் நான் கைலாகு கொடுக்க நினைக்கிறேன் ஆனால் நீங்கள் ஒரு விடயத்தை செய்ய வேண்டும் “நீங்கள் உக்ரைனில் இருந்து வெளியேறிவிட வேண்டும்" என்று புட்டினிடம் ஹாப்பர் குறிப்பிட்டுள்ளார்.

பரோட்டா பயங்கரம்!
 

 ''இன்றைக்கு பல ஆயிரக்கணக்கான உணவுக்கூறுகள் நம்முடைய உணவில் கலந்துவிட்டன. 30 வயது இளைஞருக்கு சர்க்கரை நோய் வருவதற்கும், 20 வயது பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் நம்முடைய கண்களுக்குத் தெரியாமல் உணவுகளில் கலந்துவிட்ட அந்த உணவுக்கூறுகள்தான் காரணம். ஆனால் இன்று என்ன நடக்கிறது? ஒரு கோழி வறுவலுக்கு 108 ரசாயனங்களைத் தெளிக்கிறார்கள். அந்த ரசாயனங்கள் அனைத்தும் நம்முடைய மக்களைத் தொற்றாத நோய்க்கூட்டத்தில் சிக்கவைக்கிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் பேசிய ஒரு பேராசிரியர், 'நம்முடைய அடுத்த தலைமுறையின் மரணத்தைக் கண்ணால் பார்க்கப்போகிற முதல் தலைமுறை நாம்தான்’ என்று எச்சரித்தார். இன்றைக்குப் பலருக்கு சிறுதானியங்களைப் பற்றியே தெரியாது. குதிரைவாலி, தினை அரிசி, கம்பு, கேழ்வரகு இவற்றின் முன்னால் நாம் ருசித்துக்கொண்டிருக்கும் பீட்ஸாவும், பர்கரும் நிற்கவே முடியாது. (மேலும்.....)

 

நவம்பர் 16, 2014

 

விக்னேஸ்வரன் யார்? - சீமான்

 

ஐயா விக்னேஸ்வரன் யார்? இவ்வளவு காலமும் அவர் எங்கிருந்தார்? என்று சீமான் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழர் போராட்டம் எத்தனை கால மாக இடம்பெற்று வருகின்றது என ஐயா விக்னேஸ்வரனுக்கு தெரியுமா?விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு வந்திருந்த போது இந்திய மக்கள் செய்யும் நடவடிக்கைகள் காரணமாக தங்களுக்கு நெருக்கடி வந்துள்ளதாக தெரிவித்திருக்கும் கருத்து வேதனை அளிக்கின்றது. இலங்கையில் தமிழ் மக்கள் 60 வருடங்களாக போராட்டம் நடத்துகின்றனர். இதில் எதிலாவது இவருக்கு பங்கு உண்டா? உதாரணமாக சொல்ல போனால் அரசியல் போராட்டமாக இருக்கட்டும் இல்லை, ஆயுதப் போராட்டமாக இருக்கட்டும். அப்போது எங்கே போய் இருந்தார் விக்னேஸ்வரன். இறுதிக் கட்டப் போரில் கூட எந்தவிதமான நன்மைகளும் தமிழ் மக்களுக்கு செய்யவில்லை. ஒரு கடிதம் கூட வெளிநாடுகளுக்கு இவர் எழுதவில்லை. இவருக்கு எப்படி தெரியும் போராட்டம் என்றால் என்ன என்று? ஐயாவிற்கு தெரிந்தது கோவில் வாசலும், நீதிமன்ற வாசலும்தான் வேறு ஒன்றும் இவருக்கு தெரியாது. அதுசரி....? வன்னிக் காட்டிற்குள் பிரபாகரனுடன் படம் எடுத்த பின்புதானே(1991 இற்கு பின்பு) இந்த சீமானுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் என்றொரு இனம் இருப்பதாக தெரிய வந்தது என்பதை சீமான் மறுக்க முடியுமா....!
 

ஹரீன் – செந்தில் தொண்டமான் - உள்ளாடை விவகாரம்

 

நேற்று ஊவா மாகாண சபையின் ஆறாவது கூட்டத்தொடரின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஊவா மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் விநியோகம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோவுக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது. ஹரீன் பெர்னாண்டோ தனது வாதத்தின்போது, “இ.தொ.கா.வின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கடந்த ஐந்து வருட காலமாக எந்த அபிவிருத்தி வேலையும் செய்யவில்லை. ஐ.தே.கட்சியே எதிர்க்கட்சியிலிருந்து அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது” என தெரிவித்திருக்கிறார். (மேலும்.....)

 

மலையக மக்கள் மீது தமிழ் கூட்டமைப்பு திடீரென கரிசனைகாட்டுவது ஏன்?


ஒரு மனிதன் இறந்துவிடுதல் என்பது அவனின் உறவினர் அயலவர் என்று, பலருக்கும் துன்பகரமான ஒரு சம்பவமாகும். ஆனால், எத்தனை மனிதர்கள் இறந்தாலும் ஒருவனுக்கு மட்டும் கவலைபேற்படாது மாறாக மகிழ்ச்சியே ஏற்படும். ஏனென்றால் அவன் ஒரு சவப்பெட்டி கடைக்காரன். மனிதர்களது மரணம் அதிகரித்தால் அவனுக்கோ நல்ல வியாபாரம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலும் கிட்டத்தட்ட ஒரு சவப்பெட்டிக்கு கடைக்கு ஒப்பானதுதான். அண்மையில் கொஸ்லாந்தை மீரியபெத்த மண் சரிவினால் பலர் இறக்க நேர்ந்தது. எங்காவது எவராவது சாகமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூட்டமைப்பினரே, இதுதான் சந்தர்ப்பமென்று, மண்சரிவினால் இறந்தவர்களை தங்களின் அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டனர். மண்சரிவு இடம்பெற்றதைத் தொடர்ந்து. அப்பகுதிக்கு விஜயம் செய்த கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதமைச்சர் விக்னேஸ்வரன், பேரனர்த்தம் ஏற்பட்டு துயரம் நிலவிவரும் இந்த தருணத்திலும், மகிழ்ச்சியடையக் கூடிய ஒரு விடயமாக வடக்கு மலையக மக்களுக்கிடையிலான உறவு வலுப்பெற்றுள்ளதை குறிப்பிட முடியுமென்று தெரிவித்திருக்கின்றார். (மேலும்.....)

திராவிட கோமாளி வைகோ

 

'நான் ஏறாத மேடையும் இல்ல....
போடாத வேஷமும் இல்லை,
நான் ஆடாத ஆட்டமும் இல்ல...
பாடாத பாட்டுகளும் இல்ல'

ஜனாதிபதியை ஆதரிக்க ஆழமான பரிசீலனை - சம்பந்தன்
(எஸ். சுரேஷ்)


ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை தாம் ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்தை தமிழ் மக்கள் மற்றும் தமிழ்ப் புத்திஜீவிகள் பலரும் பெரிதாக வரவேற்றுள்ளனர். தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரது இந்த அறிக்கையானது தமிழ்த் தலைவர்களது மனமாற்றத்தை உணர்த்தியுள்ளதோடு இப்போதே அவர்கள் நடைமுறையிலுள்ள உண்மையான யதார்த்தத்தினைப் புரிந்து தாம் சார்ந்த மக்களுக்காக செயற்பட முதற் தடவையாக முனைந்துள்ளதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர். (மேலும்.....)

முதலமைச்சருக்கு பாதுகாவலர்களாக சென்ற இரு அழையா விருந்தாளிகள்

கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னைக்கு ஒரு நினைவுச் சொற்பொழிவு ஆற்றச் சென்றிருந்தார். அங்கு வருமாறு அவருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்ட தாம். நிச்சயம் ஏற்பாட்டாளர்களால் அவருக்கு செலவும் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் அவருடன் கூடவே இருவர் தமது சொந்தப் பணத்திலோ அல்லது கட்சியின் கணக்கிலோ செலவழித்துச் சென்றனராம். ஒருவர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை, மற்றவர் தேசியப் பட்டியல் எம்.பி சுமந்திரன். இவர்கள் ஏன் சென் றனர் என்று கேட்டால் நகைச்சுவையாக உள்ளது. முதலமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதாம். தமிழக ஊடகவியலாளர்களின் குறுக்குக் கேள்விகளுக்கு அவரால் தந்திரமாகப் பதில் கூற முடியாதாம். அவர்களிடம் கண்டதையும் பேசி இந்தியாவைத் தம்முடன் பகைக்க வைத்து விடுவாராம். அதன் பின் அங்குள்ள இவர்களது உறவினர்களுக்கு இந்திய அரசால் கிடைப்பதும் கிடைக்காது போய்விடுமாம். அதனால் கூடவே சென்று அவரது வாய்க்குப் பூட்டுப் போட்டு வைத்திருந்தனராம். எத்தனை பேரை குறுக்கு விசாரணை செய்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரது நிலை இப்படியிருக்கிறது. அரசியலில் இதுவெல்லாம் சகஜம் என்பது இதைத்தானோ?

பொது இடத்தில் முத்தம் கொடுத்தால் தனிமனிதனின் உரிமைப் பாதிப்பாம்

- இந்து மக்கள் கட்சி

ஆனால் இவனுங்க அம்மனமா திரிந்தால் தனிமனிதன் உரிமைப் பாதிக்காதா ????

நவம்பர் 15, 2014

ஆயிரம் குரல்கள் ஒலிக்கட்டும்!, ஆதரவுக் கரங்கள் இணையட்டும்....!!

2014.11.13 வியாழனன்று சமூக நீதிக்கான மலையக வெகுஐன அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட,20 பேர்ச் காணி வீட்டுரிமையை வழியுறுத்தியும் மீரியபெத்தை பேரவலத்தை நினைவுறுத்தியதுமான மக்கள் பேரணி மாத்தளை,எல்கடுவ,உண்ணஸ்கிரிய தோட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்த மக்களுடன் நடைப்பெற்றது.

(பங்கு பற்றிய மக்களின் கருத்துக்கள்.......காணொளியல்...)

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு
(சாகரன்)

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். இதன்படி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு 7,000 இருந்து 20,000 (285 வீதம் அதிகரிப்பு) வரையும் பிரதி நகரசபைத்தலைவர்களுக்கான கொடுப்பனவு 10,000 இருந்து 25,000 (250 வீதம் அதிகரிப்பு) வரையிலும் நகரசபைத்தலைவர்களுக்கான கொடுப்பனவு 15,000 இருந்து 30,000 (200 வீதம் அதிகரிப்பு) வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பண வீக்கம் அதிகரித்துள்ளது, வலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் வாழ்கைச் செலவும் அதிகரித்துள்ளது உண்மை. ஆனால் சாமான்ய மக்களின் வருமான அதிகரிப்பு இதற்கேற்றார் போல் அதிகரித்துள்ளதா? என்றால் இல்லை என்பதே பதில். மலையக மக்கள் கூலி அதிகரிப்பிற்காக தொடர்ந்து போராடி வந்தபோதும் அவர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கீழ்தட்டு மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பட்டினிச் சாவை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர். அரசியல்வாதிகள் தங்கள் (ஆளும்)வர்க்கத்திற்கான சம்பள அதிகரிப்பை மட்டும் 200 வீதத்திற்கு மேல் உயர்த்தியது போல் அடித்தட்டு மக்களின் வருவாய் உயர்ச்சிக்கு ஆவன செய்யவேண்டும் சிந்திப்பார்களா...?

என்மனவலையிலிருந்து…..

கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்…

(சாகரன்)

பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு 25 வருடக் கொண்டாட்டத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைவர் கோர்பச்சேவ் இன் பேச்சு என்னை இக் கட்டுரையை எழுதத் தூண்டியது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அவர் ‘உலகம் மீண்டும் ஒரு புதிய பனிப் போரின் ஆரம்பத்தை அண்மிக்கின்றது’ என்று குறிப்பிட்டு இருந்தார். என்னைப் பொறுத்தவரையில் பனிப்போர் எப்போதும் நிறுத்தப்பட்டதாக நான் நம்பவில்லை. பல வேளைகளில் சோவியத் ஒன்றியத்தின் சிறல்களுக்கு பின்னால் ரஷ்யாவினால் ஒரு தலைப்பட்டசமாக தற்காலிகமாக அமத்தி வாசிக்கப்பட்டது என்பதே உண்மை. இவரின் பேச்சில் சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்கு வருத்தம் அளிப்பதாக நேரடியாக கூறாவிட்டாலும் மறைமுகமாக இது தொக்கு நிற்பதை என்னால் உணரப்படுகின்றது. அதுதான் இவர் தனது பேச்சின் நடுவில் ‘ரஷ்ய நலன்களை பாதுகாக்கும் ஒரு மனிதராக ஜனாதிபதி புட்டினுக்கு ஆதரவு’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். (மேலும்....)
 

பொதுவேட்பாளர்களாக மூன்று பெண்களை சிபாரிசு செய்த அஸ்வர் எம். பி.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் களாக இரண்டு பெண் எம்.பிக்கள் உட்பட மூன்று பெண்களை ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி நேற்று சபையில் பிரேரித்தார். ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தப் பெயர்களை பிரேரித்தார். எதிர்க்கட்சியினர் இப்போது பொது வேட்பாளர்களைத் தேடி அலைகின்றனர். நீங்கள் இவ்வாறு அலையவேண்டியதில்லை. நானே மூன்று பெயரைத் தெரிவுசெய்து தருகிறேன் என்றார். அஸ்வர் எம்.பி தொடர்ந்தும் பேசும்போது, பொது அபேட்சகர் யார் என்று கேட்டதும் கரு ஜெயசூரிய குழம்புகிறார். ஏன் குழம்ப வேண்டும். நாட்டு மக்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். சந்திரிக்காவை பொது வேட்பாளராகத் தெரிவுசெய்யவுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இதனைத்தான் கேட்டேன். பொது வேட்பாளர்கள் இல்லையென்றால் நான் இங்கு மூன்று பெயரைத் தெரிவுசெய்து கொடுக்கிறேன். ரோசி சேனாநாயக்கவை பொது வேட்பாளராக்குங்கள். அடுத்தது அஞ்சான் உம்மாவை பொது வேட் பாளராக்குங்கள். அடுத்ததாக விஜயகலா மகேஸ் வரனை பொது வேட்பாளராக்குங்கள். இவர்கள் மூன்று பேரும் சிறந்தவர்கள். இவர்களையே தெரிவுசெய்து கொடுக்கி றேன் என்றார்.

அக்டோபர் புரட்சியும் பெர்லின் சுவரும்

யார் சொன்னது அக்டோபர் புரட்சியின் அறங்கள்  தோற்றதென்று ! அது காட்டாற்று வெள்ளம்!!

நாம் வாழும் காலத்து பதிய தலைமுறைக்கு அகடோபர் புரட்சி பற்றிய அறிவு பிரக்ஞை இல்லை என்றே கூறிவிடலாம். 1990 பெரும் பிரளயம் போல் உருவான நுகர்வுக்கலாச்சாரம் மற்றும் தாராளவாத பொருளாதாரமுறையில் அடிபட்டுச் செல்லும் தலைமுறை இது. பொதுவாகவே சுதந்திரப்போராட்டம் ,சமூகமாற்றம் பற்றிய கருத்துக்கள் பலவீனப்படுத்தப்பட்ட நகர்ப்புற இளைஞர் குழாம் ஒன்று உருவாகியுள்ளது. ஆனால் லட்சோபலட்சம் தொழிலாளர்கள் விவசாயிகள் வறியவர்களும் பஞ்சமும் நோயுடன் உலகளாவிய அளவில் அவலமுறுகிறார்கள். அக்டோபர் புரட்சியைப் பாரதி “ஆகா என்றெழுந்தது பார் யுகப் புரட்சி” என்றான். (மேலும்....)

வடக்கு, மலையகத்துக்கான அதிவேக நெடுஞ்சாலை அங்குரார்ப்பணம்

அதிவேக நெடுஞ்சாலை வரலாற்றில் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த ‘முக்கதவு’ வடக்கு - மலையகத்திற்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான நிர்மாணப் பணிகள் நேற்றுக் காலை 10.15 சுபவேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தி யோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப் பட்டது. எட்டுக் கட்டங்களாக நிர்மாணிக்கப் படவுள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலை 170 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டுள்ளதுடன் 350 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படவுள்ளது. ‘செங்கடகல தொரடுவ’ என்ற பெயரில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலைக்கான பெயர்ப்பலகையை மதத்தலைவர்களின் நல்லாசியுடன் ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். நிகழ்வுக்கு வருகைதந்த ஜனாதிபதியை வீதியின் இருமருங்கிலும் திரண்டிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந்திர ளான பொதுமக்களும் வரவேற்றனர்.

மோடியின் குஜராத்தில் ஹிட்லர் கதாநாயகன், காந்தி வில்லன். ..

(ராஜேந்திர மாதூர் நினைவுப் பேருரையில் ஆனந்த பட்டவர்தன்)
2004, செப் 30 Times of India நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி இது:
மோடி ஆட்சியில் குஜராத் அரசின் 8ம் வகுப்புப் பாட நூலில் "காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் எதிர்மரை அம்சங்களை"ப் பேசுகிறது ஒரு பாடம்;
10 ம்வகுப்பில் "மகத்தான ஹிட்லர்" மற்றும் "நாசிசத்தின் உள்ளகச் சாதனைகள்" குறித்துப் பாடங்கள்.(Marx Anthonisamy)

சம்பந்தன், சுமந்திரன், விக்கி ஆகியோர் புலிகள் அல்லர்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் சிலர் இருக்கின்றனர். ஆனால் சம்பந்தனோ, சுமந்திரனோ, சி.வி.விக்னேஷ்வரனோ புலிகளல்லர். தமிழ் பெயர் இருப்பதற்காக ஒருவரை புலி என்று கூற முடியாது. ஆனால் தமிழ் பெயர் உள்ள ஒருவருக்கு இலங்கை நிரந்தர வதிவிட பிரதிநிதியால் உத்தியோகபூர்வ வாசஸ்தல திருத்த பணி வழங்கப்பட்டதற்காக சஜித் எம்.பி அவரை புலி என்கிறார். இந்தியாவுடன் கூடுதல் தொடர்பு வைப்பதாக த.தே.கூ. குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் ஜே.வி.பி யோ நாம் இந்தியாவுடன் கூடுதல் தொடர்பு வைப்பதாக குறை கூறுகிறது. சஜித் பிரேமதாஸ 13 ஆவது திருத்தத்தை முழுமையாக ஏற்கவில்லை. ஆரம்பத்தில் அவர் அதற்கு எதிரான நிலைப்பாட்டிலே இருந்தார். அவரது தந்தையும் 13ஆவது திருத்தத்தை எதிர்த்து வந்தார். 13ஆவது திருத்தத்தை குப்பையென்று யுத்த காலத்தில் கூறிய சம்பந்தன் இன்று அதனை அமுல்படுத்துமாறு கோருகிறார். நான் நீண்ட காலமாக இருந்த நிலைப்பாட்டிற்கு சஜித் பிரேமதாஸ வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஐ.எஸ். தலைவர் அல் பக்தாதி

உலகெங்கும் ஜிஹாத் எரிமலையை வெடிக்கச் செய்யுமாறு பக்தாதி அழைப்பு விடுத் துள்ளார்.

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவின் தலைவர் அபு+பக்கர் அல் பக்தாதி காயமடைந்தோ அல்லது கொல்லப்பட்டோ இருப்பதாக வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் உரையாடும் ஒலிநாடா ஒன்று வெளியாகியுள்ளது. சமூக தளத்தின் ஊடாக வெளியாகி இருக்கும் இந்த ஓடியோவில், ஒரு போராளி கூட எஞ்சியிருந்தாலும் தாக்குதலை நிறுத்த வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களை அவர் வலுயுறுத்தியுள்ளார். பக்தாதி கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை மறுப்பது போன்றே இந்த ஓடியோ வெளியாகி இருப்பதாக அவதானிகள் நம்புகின்றனர். அமெரிக்கா தலைமையிலான கூட்டணி ஈராக்கின் மொசூல் நகரில் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் பக்தாதி சிக்கிக்கொண்டதாக சந்தேகங்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் 17 நிமிடங்கள் கொண்ட இந்த ஓடியோ கடந்த வியாழனன்று வெளியானது. குறித்த விமானத் தாக்குதல் குறித்து அந்த ஓடியோவில் எதுவும் கூறப்படாத போதும் அதற்கு பின்னர் நிகழ்ந்த பல விடயங்கள் தொடர்பில் பக்தாதி, குறிப்புகளை வெளி யிட்டிருந்தார். உலகெங்கும் ஜிஹாத் எரிமலையை வெடிக்கச் செய்யுமாறு பக்தாதி அழைப்பு விடுத் துள்ளார். ஐ.எஸ். எதிர்ப்பாளர்களை, "யூதர்கள், சிலுவை வீரர்கள், மதத்தை நிராகரித்தவர்கள், சாத்தான்கள்" என்று ஏளனமாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க கூட்டணி அதிகாரமற்ற, பலவீனமான மற்றும் பயந்த கூட்டணி என்று அவர் வர்ணித்துள்ளார்

கனடாவில் விபத்துக்குள்ளான விமானம்! இரு தமிழர்கள் பலி!

கனடாவில் சிறு வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் செஸெனா 150 என்ற சிறு வகை விமானத்தில் லோகேஷ் லக்ஷ்மிகாந்தன்(25) மற்றும் ரவீந்திரன் அருளானந்தம்(31) என்ற இரு நபர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் நியூயார்க் நகரில் வசித்துவரும் தமிழர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் விமான ஓட்டுநர் லோகேஷ் விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்து அடர்ந்த காட்டில் உள்ள மரத்தில் விமானத்தை மோதியுள்ளார். இதனை அடுத்து விமானம் விபத்துகுள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். ஹெலிகாப்டரின் மூலம் நடந்த தேடுதல் வேட்டையில் விமானத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தை ஓட்டிய லோகேஷிற்கு ஏற்கனவே 200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும், விபத்துகுள்ளான விமானத்தை 30 மணி நேரம் முன்கூட்டியே ஓட்டியுள்ளார் என்றும், தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு தாம் ஆபத்தில் இருப்பதாக விமானி உதவிக்கு அழைத்த போதும் விமானப்படையினரால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் மறுநாள் செவ்வாய்க்கிழமையே கண்டுபிடிக்கப்பட்டபோது லோகேஸ் , மற்றும் ரவீந்திரன் ஆகியோரை சடலமாகவே மீட்க முடிந்தது என தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 14, 2014

முன்னாள் புலி உறுப்பினர் சுட்டுக் கொலை

மன்னார் - வெள்ளாங்குளம் கணேசபுரம் என்ற பகுதியில் வீடொன்றில் இன்று புதன்கிழமை (12) இரவு 8.50 மணியளவில் புகுந்த ஆயுததாரிகள், வீட்டிலிருந்தவரை சுட்டுக்கொன்றுள்ளதாக இலுப்பை கடவை பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் புலிகள் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் என்றும் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர் என்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மேசன் வேலைகளைச் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் இவர், சம்பவ தினம் இரவு, தனது வீட்டு முற்றத்தில் சீமெந்துக் கற்களை வெட்டிக்கொண்டிருந்த போது அங்கு புகுந்த ஆயுததாரிகள் சிலர், அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவர் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரங்கள் தெரியவரவில்லையெனவும், சடலம் இன்னமும் அப்புறப்படுத்தப்படவில்லை  எனவும் பொலிஸார் கூறினர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Marx Anthonisamy கூறுகின்றார்

சின்ன வயசில என்னை ஆகர்சித்த கவிஞர் Rudhramoorthy Cheran. இன்னுஞ் சொல்லப்போனால்  புலிகள் Fascist என்பதை எனக்கு போதித்ததே அவருதான். சேரனும் பாண்டியன் பிறந்த அதே 1958 ல் தான் பிறந்தார்.ஆனா இப்ப 1960 அப்படீன்னு பொய் சொல்றாரு. அவரைப்போல ஒரு மன்மதனா வரணும் எண்டதுதான் என் டீனேச் ஆசை. என்னால முடியல. முதல்ல காதல் வசப்பட்டப்பதான் புரிஞ்சேன். 5 வயசில அம்மாவையும் 7 வயசில அப்பாவையும் இழந்தநான் ஒருபோதுமே ஒரு மன்மதன்/பொறுக்கியா வர முடியாதென்பதை. 2000 க்கு பிறகு அவரு புலிகளால் விலைக்கு வாங்கப்பட்டாரு. அன்டன் பாலசிங்கத்துக்கு முதலே அவரோட Narcissistic complex... தெரியும். சேரனைப்போல புலிகளில் அரசியல் முதலீடு செய்திருந்த பலரு 2009 ல புலிகள் அழிஞ்ச பிறகு நோய் வசப்பட்டாங்க. சேரன் ஒரு மாரடைப்பு வ ந்து தப்பினார். இப்ப விலைபோகாத அசலான ஒரு தமிழ் intellectual மாரடைப்பு வந்து போயிட்டாரு.
 

போதைப் பொருள் கடத்திய
இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்க தீர்மானமில்லை - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். தி இந்து பத்திரிகைக்கு தகவல் வழங்கியுள்ள அவர், இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதான தீர்மானமொன்று இதுவரையில் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.  எவ்வாறாயினும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ, மன்னிப்பு வழங்குவார் என பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்ததாக தி இந்து பத்திரிகை, நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையிலேயே, மொஹான் சமரநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். எவ்வாறெனினும், இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நீக்கப்பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிப்பதான தீர்மானமொன்றையே ஜனாதிபதி ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ளார் என ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிப்பதாக தி இந்து மேலும் குறிப்பிட்டுள்ளது. (மேலும்.....)
 

பணம் கொட்டுகின்றது

யாழ் - கொழும்புக்கு மேலதிக ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். இந்த மேலதிக ரயில் சேவையானது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளிலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஞாயிறு, செவ்வாய், மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளிலும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். கொழும்பிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அதேபோல், யாழ்ப்பாணத்திலிருந்து காலை 8.40 மணிக்கு ஆரம்பமாகும் இநடத ரயில் சேவை, மாலை 5.30 மணிக்கு கொழும்பை அடையும். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான சேவை, நாளை வெள்ளிக்கிழமை (14) முதல் ஆரம்பிக்கும் அதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான சேவை ஞாயிற்றுக்கிழமை (16) முதல் ஆரம்பிக்கும் என புகையிரத நிலைய அதிபர் மேலும் தெரிவித்தார்.வடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்
 

வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார். வடக்கில் அதிவேகப் பாதை நிர்மாணிக்கப் படுவதால் கொழும்பிலிருந்து கண்டிக்கும், தம்புள்ளைக்கும் ஒன்றரை மணித்தியாலத்தில் செல்லலாமென தகவல், ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். 500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்க ப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான அடிக்கல் ரம்புக்கன, கலகெதர, கலேவல மற்றும் குருணாகலை ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் இடம்பெறும். உள்ளூர் ஒப்பந்தக்காரர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும் முதலாவது அதிவேகப் பாதை இதுவாகும். முழுத் தூரத்தில் 60 வீதத்தை உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் நிர்மாணிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த அதிவேகப் பாதையில் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கலாம். முதல் கட்டம் 42-45 மாதங்களுக்குள் பூர்த்தி பெறுமென்று பெருந்தெருக்கள், துறைமுக, கப்பற்துறை அமைச்சின் செயலர் ரன்ஜித் பிரேமசிரி தெரிவித்தார். வடக்கு அதிவேக பெருவீதி ஆரம்பப் பணிகள் ஆரம்பமாவதையிட்டு கண்டியை மையமாகக் கொண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளும் சமய ஆராதனைகளும் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன.

பொதுவேட்பாளர் எவராக இருந்தாலும் ஐ.தே.கட்சியின் மேல்வர்க்க சிந்தனையையே பிரதிபலிப்பார்

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் என்ற பெயரில் யார் போட்டியிட்டாலும் அவர் ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியே இருப்பார். அத்துடன் இந்நாட்டின் உயர் வர்க்கத்தைச் சேர்ந்த செல்வந்தர்களின் முதலாளித்துவ பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகவே அவர் இருப்பார் என்று இடது சாரி கட்சியின் தலைவரும், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சமவுடைமை கொள்கைக்கு எதிராக சமூக பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக செயற்படும் உயர்வர்க்கத்தின் சக்திகளே எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்துள்ளவர்கள் உயர்வர்க்கத்தினரும், மேற்கத்தேய, செல்வந்தர்களுமாகும். அவர்கள் இந்நாட்டு சாதாரண பிரஜைகளின் சுதந்திரம் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுபவர்களே இவர்களுக்கு எதிராக இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயற்பட வேண்டி யுள்ளது. சமூக பொருளாதாரத்தை கடைப்பிடிக்கும், மக்களின் தேவைகளை நன்கு உணரும் ஆட்சியாளர் ஒருவருக்கே எமது ஆதரவை தெரிவிக்க வேண்டும். அவ்வாறான ஒரு தலைவரே மஹிந்த ராஜபக்ஷ என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வால் நட்சத்திரத்தில் இறங்கிய விண்கலம் பூமிக்கு முதல் புகைப்படத்தை அனுப்பியது

மனித வரலாற்றில் முதல் முறையாக வால் நட்சத்திரத்தில் தரையிறக்கப்பட்ட ஆய்வு இயந்திரம் பிலே அங்கு உறுதியாக நிலைகொண்டிருப்பதோடு பூமிக்கு புகைப் படங்களையும் அனுப்பியுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த ஆய்வு இயந்திரம் வால் நட்சத்திரத்தில் நிலைகொண்டிருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிலே ஆய்வு இயந்திரம் வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பை கடந்த புத னன்று முதல் முறை தொட்டபோதும் அது நூற்றுக்கணக்கான மீற்றர்கள் விலகிச் சென்று விட்டதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வால் நட்சத்தை ஆய்வு செய்வதன் மூலம் ஆய்வு இயந்திரம் எமது சூரிய குடும் பத்தின் பூர்வீகத்தை கண்டறிய முயற்சிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பூமியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிலே ஆய்வு இயந்திரத்தை ஏந்திக் கொண்டு புறப்பட்ட ரொசெட்டா விண்கலம் 640 கோடி கிலோமீற்றர் (4 பில்லியன் மைல்கள்) பயணித்து 67பீ - ரிமோவ் - கெரசிமென்கா என்ற வால் நட்சத்திரத்தை சென்றடைந்தது.(மேலும்.....)

ரஷ்ய துருப்புகள் உக்ரைனுக்குள்?

பனிப்போர் காலத்து விமான ரோந்து நடவடிக்கையை ஆரம்பிக்க ரஷ்யா திட்டம்

உக்ரைனின் கிளர்ச்சியாளர் பகுதிக்கு ரஷ்யா புதிதாக துருப்புகள், பீரங்கிகள் மற்றும் இராணுவ தளபாடங்களை அனுப்பியிருப்பதாக நேட்டோ குற்றம்சாட்டிய நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியுள்ளது. எனினும் இந்த தகவல் ஆதாரமற்றது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. கிழக்கு உக்ரைன் யுத்தத்தில் பங்களிப்புச் செய்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை கடந்த ஏப்ரல் தொடக்கம் ரஷ்யா மறுத்து வருகிறது. எனினும் ரஷ்யா மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா மற்றொரு யுத்தத்திற்கு தயாராகி வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய எல்லையில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் இரு பிராந்தியங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து உக்ரைன் கடந்த ஏப்ரலில் அங்கு இராணுவத்தை அனுப்பியது. உக்ரைன் விவகாரத்தில் மேற்குலகுடன் பதற்றத்திற்கு முகம்கொடுத்திருக்கும் ரஷ்யா பனிப்போர் காலத்தில் நேட்டோவுக்கு எதிராக முன்னெடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தி வருவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக கியூபா, வெனிசுவேலா மற்றும் நிகரகுவா உட்பட பல்வேறு நாடுகளிலும் இராணுவ தளங்களை அமைக்க ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நவம்பர் 13, 2014

யாழ்மதிக்கு கம்பி நீட்டினான் சீமான்.

புலம்பெயர் புலிகளின் தமிழ் நாட்டு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றான் சீமான். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான கதாநாயகனாகவும் சீமான் உள்ளான். இவன் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு முகாம் ஒன்றில் தங்கியிருந்த முன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவரை இந்தியாவுக்கு அழைப்பித்துக்கொண்டான். (இதற்காக செலவிடப்பட்ட பணம் பல லட்சங்கள் என்பது குறிப்பிடத்தக்கது) இவ்வாறு அழைப்பித்துக்கொள்ளப்பட்ட பெண் வேறு யாருமல்ல புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழ் செல்வனின் பிரத்தியேகச் செயலாளர் அலெஸ்சின் மனைவி யாழ்விழி ஆகும். இவர் வன்னியில் செயற்பட்டுக்கொண்டிருந்த தமிழ் தேசியக் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

என் மனவலையிலிருந்து……

மலையக மக்களின் நட்பு சக்திகளை சரியாக அடையாளம் காண்போம்

மலையகத்தில் பதுளை மீரியபெத்த என்ற இடத்தில் அண்மையில் நடைபெற்ற மண்சரிவினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கரங்களை நீட்டும் முகமாகவும், மரணித்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலிக்காகவும் இந்திய வம்சாவழித் இலங்கைத் தமிழர் (SLTCIO) என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பொன்று எனக்கு கிடைத்தது. இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் இந்த உழைக்கும் மக்களின் நலன்களில் நீண்ட காலமாகவே எனக்கிருந்த ஈடுபாடு என்னை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என்னை இழுத்துச் சென்றது.
புலம் பெயர் தேசம் ஒன்றில் முதல்? தடவையாக மலையக மக்களின் நிகழ்வு ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரநிதிகள் கலந்து கொண்டதாக கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களின் பேச்சுக்களில் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை நிதிகளாகவும், பொருட்களாகவும் சேர்த்து அனுப்புதல் என்பதுவும் இந்த நிகழ்வின் ஒரு நோக்கமாக இருந்தது. மேலும் மலையக மக்களின் பிரச்சனையை மலையக மக்கள் தவிர்ந்த ஏனை வடக்கு, கிழக்கு மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு ஏற்பாடாகவும் இதனைப் பார்க்கலாம் என்ற கருத்துக்களையும் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்தனர்.
(மேலும்....)

அனந்தியை பின்தொடர்ந்த மர்ம நபர்கள்

கொழும்பில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் இருவர், தன்னை செவ்வாய்க்கிழமையன்று (11) பின்தொடர்ந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். அவர்கள் மிகவும் கொடூரமான தோற்றமுடையவர்களாகவும் என்னை கொல்ல வேண்டும் என்ற நோக்குடன் காணப்படுவதையும் நான் அவதானித்தேன்.
இது தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரிடம் தெரிவித்தேன். அத்துடன், எனக்கு தொடர்ந்து இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிலவி வருவதாக வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் பலமுறை முறையிட்டுள்ளேன் என்றும் அவர் கூறினார். வடமாகாணசபை உறுப்பினர்களில், எனக்கும் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இது தொடர்பில் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் வடமாகாண சபை எடுக்கவில்லை. இது தொடர்பாக நான் அவைத்தலைவரிடம் கேட்கும் போதெல்லாம் அவர் சிரித்தபடி பதில் சொல்கிறார். முன்பொரு காலத்தில் இவரது கணவன் பல பொது மக்கள் மாற்றுக் கருத்தாளர்களுக்கு பின்னால் இவ்வாறுதான் மர்ம நபராக துப்பாக்கியுடன் அலைந்தார். இதனை மாலையில் தமது மனைவி அனந்திக்கு கதை கதையாய சொல்வாராம். அனந்தியும் தனது கணவரின் 'வீரச்செயல்'களை எண்ணி மகிழ்ந்து போவாராம். இது நடைபெற்றது கொழும்பில் அல்ல வன்னியில்.
 

Questions Raised On The Transparency And Integrity Of The OISL

(By Camelia Nathaniel)


Serious concerns regarding the credibility of the Office of the High Commissioner for Human Rights (OHCHR) investigation on Sri Lanka (OISL) being carried out has arisen, due to the recent discovery of signatures being obtained in blank forms, from the families of those affected by the conflict. The minister of foreign affairs Professor G.L. Peiris convened a meeting last week with representatives of the OISL and Heads of Missions, and briefed them on the recent arrest of Sinnathamby Krishnarasa who had possessed blank forms containing signatures of conflict affected persons who had been promised monetary compensations by the UN in exchange for their signatures and copies of National Identity Cards and death certificates. The minister during the meeting pointed out that investigations following his arrest have revealed that the information collected by deceiving conflict affected families was to be utilised in reports to the OISL. (more.....)

 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட, ஜெயலலிதா தகுதியிழப்பு

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 27ஆம் திகதி முதல், தமிழக சட்டப்பேரவை உறுப்பினரில் இருந்து தகுதியிழப்பு ஆகிறார். தண்டனைக்காலம் மற்றும் அதற்குப் பிந்திய 6 ஆண்டுகளும் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார். இந்த உத்தரவு அவரது விடுதலை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மாறுபடும். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதலமைச்சர் பதவியுடன் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் இழந்தார். அவரது தகுதியிழப்பு குறித்து முறையான அரசாணை, கடந்த 8ஆம் திகதி தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா - சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனுக்களில் விடுதலை அல்லது தண்டனையில் மாற்றம் இல்லாவிட்டால், தற்போதைய உத்தரவுப்படி ஜெயலலிதா 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

பின்லேடனை கொன்ற அனுபவம் குறித்து நேவி சீல் வீரர் பேட்டி

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றவராக அறிவித்திருக்கும்; அமெரிக்க முன்னாள் நேவி சீல் வீரர் ரொபட் ஓனைல், அந்த சம்பவம் குறித்து பொக்ஸ் நியுஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அல் கொய்தா தலைவரை தாமே இறுதியாக பார்த்தவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பாகமாக ஒளிபரப்பப்பட்ட இந்த பேட்டியில் முதல் பாகம் கடந்த செவ்வாய் இரவு வெளியானது. "அவரை கடைசியாக பார்த்தவராக இடம்பிடிப்பதற்கு அங்கு போதுமான வெளிச்சம் இருந்தது" என்று ஓனைல் குறிப்பிட்டுள்ளார். பின்லேடனை சுடுவதற்கு முன்னர் நான் அவரது கண்களை நேராக பார்த்ததாக ஓனைல் விபரிக்கிறார். "எனக்கு இரண்டு அடிக்கு முன்னால் அவர் நின்றுகொண்டிருந்தார். அவரது கையை மனைவி பற்றிக்கொண்டிருந்தார். அந்த முகத்தை நான் ஆயிரக்கணக்கான தடவைகள் பார்த்திருக்கிறேன். நாம் அவரை பிடித்துவிட்டோம். இந்த யுத்தத்தை எம்மால் முடிக்க முடியும் என்று நான் அப்போது நினைத்துக் கொண்டேன்" என்கிறார் ஓனைல். (மேலும்.......)

பசுமை இல்ல வாயுவை கட்டுப்படுத்த சீனா, அமெரிக்கா உடன்பாடு

பசுமை இல்ல வாயுவை குறைப்பது தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் புதிய உறுதிப்பாடு எட்டப்பட்டுள்ளது. பீஜீங்கில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்டபோதே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளும் இணைந்து உலகின் 45 வீதமான கரியமில வாயுவை உற்பத்தி செய்கின்றன. இந்த எதிர்பார்க்காத அறிவிப்பின் மூலம் 2020க்கு பின்னர் பசுமையில்ல வாயுக்களை குறைக்க அடுத்த ஆண்டில் உடன்பாடொன்றை எட்டுவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் மாற்ற முடியாததும் கடுமையானதாகவும் மாறிவருகிறது என்றும் கடல்மட்டம் உயர்வு, பாரிய வெள்ள அனர்த்த அபாயம் மற்றும் பயிர் விளைச்சலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஐ.நா. அண்மையில் கடுமையாக எச்சரித்திருந்தது.

 
பொதுவேட்பாளரை ஆதரிக்க கூட்டமைப்பு விதிக்கும் 3 நிபந்தனைகள்


வடக்கில் இருந்து படைகளை விலக்கவும், சட்டவிரோத காணி அபகரிப்பை நிறுத்தவும், வலிகாமம் வடக்கிலும், சம்பூரிலும் மக்களை மீளக்குடியேற்றவும் தயாராக இருந்தால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். “குறைந்தபட்சம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க பொதுவேட்பாளர் முன்வந்தால் அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும். அது சந்திரிகா குமாரதுங்கவாகவோ, ரணில் விக்கிரமசிங்கவாகவோ, அல்லது கரு ஜெயசூரியவாகவோ இருக்கலாம். கடந்த அதிபர் தேர்தலுக்கப் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்துடன் 18 சுற்றுகள் பேச்சு நடத்தினோம். சிறிலங்கா அரசாங்கமே அதனை முறித்துக் கொண்டது. அதனால் தான், இனிமேல் அனைத்துலக கண்காணிப்பின் கீழ் தான் பேச்சுக்களை நடத்த முடியும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் தமக்கு குறைந்தபட்சம் தம்மை ஆதரிக்குமாறு அண்மையில் பசில் ராஜபக்ச கேட்டிருக்கிறார். எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கு நாம் பிச்சை கேட்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

நவம்பர் 12, 2014

விடுதலை என்றால் இந்த மக்களுக்கு தான் வேண்டும்.


மலையக மக்களின் மனதில் இருந்து.... ஒரு நிமிடம் இந்த வீடியோவை பாருங்கள் எம்மக்களின் வேதனைகளை
 

25 வருடங்களுக்கு முன் காணாமல் போனவர் தடுப்பு முகாமில்


கடந்த 25 வருடங்களிற்கு முன்னர் காணாமற்போயிருந்த சுன்னாகம் பகுதியை சேர்ந்த நபர் ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாகவும் அவரை அழைத்துச் செல்லுமாறும் ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் அவரது உறவினர்களுக்கு கடிதம் மூலம் செவ்வாய்க்கிழமை (11) அறிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மத்தி, தேவாலய வீதியைச் சேர்;ந்த கே.வைரவநாதன் (தற்போது வயது 53) என்ற நபரே, இவ்வாறு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு, ஆமர் வீதியிலுள்ள கடையொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, கடந்த 1990ஆம் ஆண்டு கொழும்பில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து வைரவநாதனும் காணாமற்போயிருந்தார். இதன் பிறகு இவரது பெற்றோர்கள் பல இடங்களில் அவரைத் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. காலப்போக்கில் இவரது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர். வைரவநாதனும் உயிரிழந்திருப்பார் என அவரது உறவினர்கள் முடிவு செய்துவிட்டனர். இந்நிலையிலேயே, இவர் தொடர்பான கடிதம், செவ்வாய்க்கிழமை கிடைத்துள்ளது. வைரவநாதனை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை உறவினர்கள் (சகோதரியும், சகோதரியின் கணவரும்) மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியத்தை வைத்து உழைத்த சரவணபவன் ஐஸ்கிறீமை வைத்து உழைக்கின்றார்

தமிழ்த்தேசியத்தை வைத்து உதயன்பத்திரிகையை வைத்து எவ்வாறு சரவணபவன் உழைத்தாரோ அதே பாணியில் தற்போது ஐஸ்கிறீம் முகவராக மாறி உழைக்கத் தொடங்கியுள்ளார். குடாநாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஐஸ்கிறீம் வகைகளில் மலத் தொற்று என பத்திரிகையில் எழுதச் செய்து அந்த ஐஸ்கிறீம் வகைகளின் மதிப்பை இறங்கச் செய்து தற்போது தான் முகவராக மாறியுள்ள எலிபன் ஐஸ்கிறீம் கம்பனியில் உற்பத்தி செய்யும் ஐஸ்கிறீம் வகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்வதற்காக பலருடன் சோ்நது பெரும் சதித் திட்டத்தை உதயன் முதலாளி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(மேலும்....)

ஜனாதிபதிக்கு 3 முறை முடியும்: உயர்நீதிமன்றம்


மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, மஹிந்த ராஜபக்ஷவினால் முடியும் என்றும் அதில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை எனவும் உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தின் பத்து நீதியரசர்கள் கொண்ட குழுவினால், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள அபிபிராயத்தை அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியலமைப்பின் 31(3)ஏ(1)(1) பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயற்படுத்தி மீண்டுமொரு தடவையை தெரிவு செய்து கொள்வதற்கு, போட்டியிடுவதற்கு சட்டத்தில் எந்தவொரு தடையும் இல்லை என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலை அறிவிப்பதற்கும் தேர்தலை அழைப்பதற்கும் அவருக்கு உரிமையுண்டு என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மீன்பிடித்துறையின் கேந்திர நிலையம் வடமாகாணம்


ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் மீன்பிடித்துறை வளர்ச்சி முன்நிலையில் உள்ளது. தனிநபர் மீன் பாவனை 28 வீதத்திலிருந்து 43.2 வீதமாக உயர்ந்திருப்பதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். மீன் உற்பத்தி அதிகரிப்புடன் கருவாட்டு இறக்குமதி 32 வீதத்தினாலும் மாசி இறக்குமதி 26 வீதத்தினாலும் ரின் மீன் இறக்குமதி 25 வீதத்தினாலும் குறைந் துள்ளது. மீன் ஏற்றுமதி 15,662 மெற்றிக்தொன்னிலிருந்து 19,709 மெ.தொன் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 31 வீதமான மீன்களே ஏற்றுமதி செய்யப்படுகிறது. வடபகுதி முதலமைச்சர், மீன்பிடித்துறை அமைச்சர் ஆகியோருடன் இணைந்து செயற்படுகிறேன். நான் அங்கு சென்றபோது முதலமைச்சர் மாலை அணிவித்து என்னை வரவேற்றார். அதிகாரப் பகிர்வு என்பது பேச்சிலன்றி செயலிலேயே இருக்க வேண்டும். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மீன்பிடி வளர்ச்சியில் இலங்கை முன்னணியில் உள்ளது.

இரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்
 

வட பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இரணமடு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்தார்.கிளிநொச்சி குடிநீர்த் திட்டம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்பட இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அடுத்த வருடம் புதிதாக நான்கரை இலட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். இரணமடு குடிநீர் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக பூநகரி முதல் முல்லைத்தீவு வரை மக்கள் குடிநீர் வசதி பெற உள்ளனர். இதற்கான ஒப்பந்தக்காரரும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடுபூராவும் பல புதிய குடிநீர் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பதலே, ருகுணுபுர, தெதுருஓயா உட்பட பல திட்டங்கள் இதில் அடங்கும். ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி.யின் கனவான கலஉட குடிநீர்த் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீரை சுத்திகரித்து மீள் பயன்படுத்துவது முக்கியமாகும். சில நிறுவனங்கள் அசுத்தமான நீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது. நிலத்தை கழுவவும் சுத்தம் செய்யவும் சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீரை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். மழை நீரை வீணாக்காமல் பயன்படுத்துவதற்காக 45 ஆயிரம் மழை நீர் திரட்டும் தாங்கிகள் வழங்கப்படும்.

வெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் மக்களின் பயண அனுமதி தொடர்பில் விரைவில் தீர்வு

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்திற்கு திரும்பும் போது அவர்களுக்கான பயண அனுமதியில் நடைமுறைப்படுத்தப்படும் தடைதொடர்பில் அரசுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் மீண்டும் தாயகத்திற்கு திரும்பும் போது அரசின் புதிய நடைமுறைகளால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எனது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்விடயம் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி விரைவில் அதற்கான தீர்வுகளை ஏற்றுக் கொள்ள முடியும். இருந்த போதிலும் நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் அரசுக்கு இருக்கும் நிலையில்தான் இவ்வாறான பயண அனுமதி தொடர்பிலான பிரச்சினைகளும் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் வெளிநாட்டவர்களுக்கு இத்தடை சாத்தியமானதாக இருந்தாலும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்களுக்கு இவ்விடயத்தில் அரசு விசேட கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளும் அதேவேளை இவ்விடயம் தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

நவம்பர் 11, 2014

தமிழர்களை பாதுகாக்க வந்தவனா பிரபாகரன் ???  - TNTJ அல்தாபி.

(இந்த காணொளியைப் பாருங்கள் பல வேளைகளில் இது ஏற்புடையது அல்லாமல் இருக்கலாம்.....)

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புங்கள் - விக்னேஸ்வரன்

''இந்தியாவில் உள்ள, இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புங்கள்,'' என, அந்நாட்டின், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்., இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை திரும்பி அனுப்ப, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தேபோது பேச்சு நடத்தினோம். இதையடுத்து, அகதிகளைத் திருப்பி அனுப்ப, குழு ஒன்றை இந்திய அரசு அமைத்தது. தற்போது, மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்று உள்ளது.  அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து, மோடி அரசுடனும் பேச்சு நடத்தி வருகிறோம். அகதியாக இந்தியாவுக்கு வந்து, பல ஆண்டுகளாகின்றன. திரும்பி தாய் நாட்டுக்குப் போனால், தங்களுடைய நிலங்கள் கிடைக்குமா? போதிய பாதுகாப்பு அளிக்கப்படுமா? என்பதால் இங்குள்ள அகதிகள், நாடு திரும்ப அச்சப்படுகின்றனர். இந்த அச்சத்தைப் போக்கி, அவர்களது நிலங்களை அவர்களுக்கே அளித்து, மீள்குடியமர்வு செய்ய, இலங்கை அரசை, இந்தியா வற்புறுத்த வேண்டும். இரண்டு லட்சம் அகதிகளை பாதுகாப்பதும், இந்தியாவுக்கு சுமை தான். எனவே, தமிழர் நலனுக்காக, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். (மேலும்....)

பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற சமூகத்துக்காக இணைவோம்

(செய்திகள், மனித உரிமை, யாழ் நிருபர்)

கடந்த 20ம் திகதி அரியாலையில் நிகழ்த்தப்பட்ட18 வயது பெண் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் முள்ளி மக்களால் வெளிப்படுத்தப்பட்ட இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கான சட்ட மற்றும் சமூக நீதி கோரும் பிரச்சாரம் ஓன்று இன்று 10ம் திகதி காலை 8.30 க்கு யாழ் ஆஸ்பத்திரி வீதி பலாலி வீதி சந்தியில் செய்யப்பட்டது. யாழ் பெண்கள் உரிமை செயர்பாடடாள்ளர்களால் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற சமூகத்துக்காக இணைவோம். முள்ளி வீதி, அரியாலையை சேர்ந்த சோதிநாதன் யசிந்தனும் அவரது அடியாட்களும் – பாலியல் கொடுமைகளும்:- கேட்பாரற்று அல்லலுறும் மக்கள் நீதி வேண்டி மன்றாட்டம்: (மேலும்....)



புதிய பனிப் போர் குறித்து சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கோர்பச்சேவ் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா மமதையில் செயற்படுவதாக குற்றச்சாட்டு

உலகம் மீண்டும் ஒரு புதிய பனிப் போரின் ஆரம்பத்தை அண்மிப்பதாக சோவியத் ஒன்றியத் தின் முன்னாள் தலைவரான மிக்கெய்ல் கோர் பச்சேவ் எச்சரித்துள்ளார். பேர்லின் சுவர்கள் வீழ்த்தப்பட்ட 25 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், பேர் லினில் உள்ள பிரண்டன்பேர் கேட்டுக்கு அருகே நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார். சோவியத் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்த பின்னர் மேற்கு நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, வெற்றி மமதையில் செயற்படுவதாக அவர் குற்றஞ் சாட்டினார். ரஷ்ய நலன்களை பாதுகாக்கும் ஒரு மனிதராக ஜனாதிபதி புட்டினுக்கு ஆதரவு தெரிவித்த அவர், ரஷ்யாவை பலிக்கடாவாக்குவதற்கு, உக்ரைனிய பிரச்சினையை அமெரிக்கா பயன் படுத்துகிறது என்று கூறினார். "வல்லரசு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த் தைகள் முறிவடைந்த பின்னணியில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் இரத்தக்களரி கவலை அளிக்கிறது. உலகம் புதிய பனிப் போரை எதிர்நோக்கி இருக்கிறது. அது ஏற்கனவே ஏற்பட்டு விட்டதாக ஒருசிலர் கூறுகிறார்கள்" என்று கோர்பச்சேவ் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சக்திகள் யுகோஸ்லாவியா, மத்திய கிழக்கு தற்போது உக்ரைன் பிரச்சினையில் தீர்வு காண தவறியதே இதற்கு காரணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (மேலும்....)

தமிழர்களை முட்டாளாக நினைக்கிறது ஈ.பி.டி.பி - சப்றா சரவணபவன் MP

தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருப்பதுடன் தமிழ் மக்களை பின்னடையச் செய்வதற்கான வழிவகைகளையும் அவர்கள் செய்கின்றனர். ஜனாதிபதி மகிந்தவுக்கும், அரசாங்கத்திற்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே ஈ.பி.டி.பியினர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருக்கிறது.தமிழ் மக்களை பின்னடைவைச் செய்வதற்கான வழிவகைகளையும் செய்கின்றனர்.ஜனாதிபதி மகிந்தவுக்கும், அரசாங்கத்திற்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே ஈ.பி.டி.பியினர். மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த முறை வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் புதிதாக முன்மொழிந்தார் அவர்களுக்கு 2500 சம்பளம் வழங்கப்பபோவதாக ஆனால் வடக்கு மாகாண சபையும் அவர்களுக்கு ஏற்கனவே 2500 சம்பளமாக வழங்கி வருகின்றது அவரும் தற்போது வழங்கவுள்ளார். வடக்கு மாகாண சபை பிரதேசங்களுக்கு அபிவிருத்தி வங்கி என்ற உண்டு ஆனால் வடமாகாண சபைக்கு அந்த அபிவிருத்தி வங்கிக்கு அனுமதிக்கிறார்கள் இல்லை.அப்படி இருந்தால் புலம்பெயர் தமிழர்கள் இதனை பெற்று தமது இடங்களை அபிவிருத்தி செய்யலாம்.ஆனால் செய்ய முடியாத சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு உக்ரைனில் மீண்டும் உக்கிர மோதல்

கிழக்கு உக்ரைன் நகரான டொனஸ்க்கில் அரச படை மற்றும் பிரிவினைவாதிகளுக்கு இடை யில் பரஸ்பரம் பீரங்கி தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோசமான மோதல் இதுவென அங்கிருக்கும் செய்தியாளர் கள் விபரித்துள்ளனர். இந்த தாக்குதல்கள் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துள்ளது. உக்ரைனில் கிளர்ச்சியாளர் பகுதியில் அடையாளம் தெரியாத இராணுவ வாகனங்கள் அதிகரித்திருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட் டிய நிலையிலேயே இந்த மோதல்கள் இடம் பெற்றுள்ளன. கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து புதிய ஆயுதங்கள் கிடைத்திருப்பதாக உக்ரைன் அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நிரா கரித்து வரும் ரஷ்யா, விடுமுறையில் சென்றிருக் கும் தமது படையினர் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து மோதலில் ஈடுபடுவதாக விளக்கியுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடந்த ஏப்ரலில் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ் பிராந்தியங்களை ஆக்கிர மித்ததை அடுத்து ஏற்பட்ட மோதல்களில் இது வரை 4,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி தொடக்கம் ஒரு பலவீனமான யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் அதன் பின்னரும் ஏற்பட்ட மோதல்களில் நூற்றுக்கணக் கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

முகநூலில் Segudawood Nazeer என்ற முஸ்லிம் நண்பர் கவிஞர் ஜெயபாலனிடம் கேட்ட கேள்வியும், கவிஞரின் பதிலும்:

Segudawood Nazeer: முஸ்லிம்களைப்பற்றி முஸ்லிம் தலைவர்கள் அக்கறை கொள்ளாத சமயம் முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சனைகளை இனம் கண்டு கருத்து சொன்ன ஒரு சாமான்னியன் நீங்கள் அதுவும் விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு தமிழர்களை எதிரிகளாக்கிய சமயம். வடகிழக்கு இணைந்து 13 அமுல்படுத்தப்பட்டால் அதில்முஸ்லிம்களுக்கு என்ன பங்குண்டு என்பதை சொல்லமுடியுமா?

Jaya Balan: தமிழரதும் முஸ்லிம்களதும் எஞ்சியுள்ள நிலங்களைப் பாதுகாக்க வேறு மார்க்கம் தெரியவில்லை. முஸ்லிம்கள் தனித்துப்போய் தங்கள் நிலங்கலைப் பாதுகாக்க முடியுமானால் அவர்கள் தனி மாநிலமாகப் பிரிந்து செல்வதுதான் நியாயம். வடகிழக்கு தமிழர்கள் இணையாமல் தமிழரது கிராமங்களை காப்பாற்றவோ இழந்தவற்றை மீட்கவோ வழியில்லை. தமிழரும் முஸ்லீம்களும் சரிநிகர் சமமாக செயல்ப்படக்கூடிய அமைப்போடு வடகிழக்கு மாகாணம் இணைய வேன்டும் எபதுதான் என் விருப்பம். அதுபற்றி உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நீங்கள் கேட்டதால் என்கருத்தை தனிக் கட்டுரையாக விரிவாக எழுதுவேன்,

(நன்றி: தமயந்தி முகநூல்)

இதைவிட மிகச்சிறந்த, தெளிவான தீர்வை முஸ்லீம் மக்களுக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது இரண்டாவது காங்கிரஸ் இல் (இது நடைபெற்றது 1984 களில்) தெரிவித்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் சபாரத்தினத்தை ஆசிரியராக கொண்ட ஈழநாடு பத்திரிகை இதனைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டும் இருந்தது. இதன் அடிப்படையிவேயே அவர்கள் தமது அரசியல் வேலைப்பாடுகளை முஸ்லீம்இ தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுத்தனர் என்பது பலராலும் இன்று வரலாற்று திரிபிற்காக மறைக்கப்பட்டிருக்கின்றது. ஜெபாலன் எந்தக்காலத்திலும் தான் வெளிப்படுத்தும் கொள்ளைக்காக  உண்மையாக நடப்பவர் அல்ல எப்பது அவருடன் நெருங்கிப் பழகும் யாருக்கும் தெரியும். உரக்க ஜெயபாலன் கூறுவதினால் இவரின் போலி வேஷங்கள் மறைந்து விடப்போவது இல்லை. - சாகரன்

ஸ்பெயின் பிராந்தியம் சுதந்திரம் பெற சர்ச்சைக்குரிய சர்வஜன வாக்கெடுப்பு

வட கிழக்கு ஸ்பெயின் பிராந்திய மான கடலோனியா தனி நாடாக சுதந் திரம் பெறுவது குறித்த சர்வஜன வாக் கெடுப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த வாக்கெடுப்பு சட்டவிரோத மானது என்று ஸ்பெயின் நீதித்துறை குறிப்பிட்டபோதும் இதற்கு இடையு+று செய்ய மேற்கொள்ளப்படும் முயற்கள் குறித்து பிராந்திய தலைவர் ஆர்தர் மார் எச்சரிக்கை விடுத்திருந்தார். சுதந்திரம் கோரி முன்னர் நடத்தப்படவிருந்த சர்வஜன வாக்கெடுப்பை ஸ்பெயின் அரசியலமைப்பு நீதிமன்றம் ரத்துச் செய்திருந்தது. இந்த வாக்கெடுப்பால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று குறிப்பிட்ட ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரnஜhய், பிராந்தியம் தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வலியுறுத்தினார். இதில் கடலோனியா பிராந்தியம் சுதந்திரம் பெறுவது குறித்து சர்வஜன வாக்கெடுப்பில் மக்களிடம் விருப்பம் கோரப்படவுள்ளது. 7.5 மில்லியன் மக்கள் வாழும் ஸ்பெயினின் செல்வந்த பிராந்தியமாக கடலோனியா நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பு செய்து வருகிறது.

பிரியங்கா! - யார் இவர்?
முகநூலில் மட்டுமல்ல என்னால் முடிந்தவரையிலும் முகத்திற்கு நேராகவும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன்.இந்தப் பெயரில் உள்ள எல்லாப் பிரபலங்களையும் தெரிந்திருப்பவர்களுக்கு, பிரபலப் படுத்தவேண்டிய இவரைத் தெரிந்திருக்கவில்லை. சிலநாள்களுக்கு முன்பு ஒரு அமெரிக்கப் பேச்சாளரின் பேச்சின் மூலம் தான் எனக்கும் இந்தப் பிரியங்கா தெரியவந்தார். சரி, கல்யாணக்கோலத்தில் இருக்கிறாரே? ஆம் திருமணத்திற்கு அடுத்த நாளே கணவன் வீட்டிலிருந்து பிறந்தவீட்டிற்குத் திரும்பிய பிரியங்காவை இரண்டு மாதங்கள் கழித்து அழைத்து வந்தபோது ஊரே திரண்டு உற்சாகமாய் வரவேற்றபோது எடுத்த படமாம் இது. கோபித்துக்கொண்டு போனவரை ஊர்கூடி அழைத்ததா? அப்படி என்ன செய்துவிட்டார் என்று வியப்பாய் இருக்கிறதல்லவா?
(மேலும்....)
 

நவம்பர் 10, 2014

என்மனவலையிலிருந்து………

மரணித்தவர்களின் வணக்க நிகழ்வு என்ற பொறிக்குள்…….?

(சாகரன்)

கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. இலங்கையில் புலிகளின் யுத்தம் நடைபெற்ற காலங்களில்  யுத்தத்தை காட்டி அதிகம் பணம் வசூல் செய்த மாதமாக திகழ்ந்தது இந்த கார்த்திகை மாதம்தான். ஏனைய மாதங்களிலும் தலைவரின் அவசரநிதி, சாந்தாப்பணம், போர்காலநிதி, என்றெல்லாம் மாதாமாதம் வங்கிக் கணக்கணக்குகளில் இருந்து பெருந்தொகையான பணங்களை புலிச் செயற்பாட்டாளர்கள் பொது மக்களிடம் இருந்து வசூலித்தது ஒரு வகை வரலாறே. இவற்றில் ஒரு சிறு பகுதியேனும் மக்களின் நல்வாழ்விற்காக பாவிக்கப்பட்டதாக பதிவுகள் இல்லை. கருவிகளும், வன்னியில் புலித்தலைவர்களின் சுகபோக வாழ்விற்கும், கள்ளக்கணக்கும், கபீளகரம் செய்ததுமாக போக மீதி பல்வேறு தனி நபர்களின் வங்கிக் கணக்கில் போய் சேர்ந்தன. இன்னொரு பெரும் தொகை போருக்கான முதலீடு என்று அங்காங்கே போய் சேர்ந்தன. யுத்தமும் முடிய தலைவரும் சரணடைந்து கொல்லப்பட அவரவர்கள் தம் பங்கிற்கு இந்த மக்களின் பணத்தைச் சுருட்டியதே வரலாறு. இதில் பெருவாரியான நிதிகள்  புலிகளின் பினாமி அமைப்புக்களின் வங்கிக் கணக்கில் தங்கிவிட்டன. இவற்றை பங்கு போடுவதற்கான சண்டையில் இன்று நாடுகடந்த தமிழ்ழீழம், தமிழ் பேரவை, ரி.ஆர்.ஓ. நெடியவன், கே.பி எற்று எல்லாம் நிதிகள் பிரிந்து அவர்ரவர் பெயர்களின் சொத்தாகிப் போகின. இதன் பின்பு புதிய நிதியொன்றினை இவர்களால் திரட்ட முடியவில்லை. கிடைத்து ஒரே ஒரு நம்பிக்கைதான் இதுதான் மாவீரர் தினக் கொண்டாட்டம். இதிலும் நான்கு, ஐந்து அணிகள் இருந்தாலும் (இதில் சீமானும் தம் பங்கிற்கு நாம் தமிழர் என்று நிதிதிரட்ட புறப்பட்டு மூக்குடைபட்டு நிற்பது இன்னொரு முசுப்பாத்தி) தமது உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் வலிகளை, உணர்வுகளை தமக்கு சாதகமாக்கி தொடர்ந்தும் நிதி சேகரித்து தமது பாக்கெட்டுக்களை நிரப்பும் செயற்பாடுகளில் விக்கிரமாதித்தன் கதைபோல் தொடர்ந்த வண்ணம் உள்ளன . ஐரோப்பி யூனியனும், அவுஸ்திரேலிய, வட அமெரிக் நாடுகளும் பெயர் அளவில் புலிகள் மீதான தடைகளை விதித்து இலங்கை அரசை தனது நலன் சார்ந்த வலைக்குள் வீழ்த்துவதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் கனடா பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆயுதக் தாக்குதல் இவர்களை(குறிப்பாக கனடாவை) சற்றே விழிப்படையச் செய்திருக்கின்றது. இதன் தொடர்சியாக பாதுகாப்பு உயர்நிலை உத்யோகஸ்தர்கள் மட்டம் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதக்கலாச்சாரத்தைக் கொண்டுள்ள புலிகளின் பினாமி அமைப்புக்கள் மீதும் ‘ஒரு துப்பாக்கி குழு’ என்ற வகையில் புதிய கவனம் செலுத்தியுள்ளது. இதனை அவர்கள் கனடிய பாராளுமன்ற தாக்குதலின் பின்பு பகிரங்கமாகவும் தெரிவித்திருக்கின்றனர். 1990 – 2000 ஆண்டு காலப்பகுதியல் கனடிய அரசால் தட்டிக் கழிக்கப்பட்ட ‘Demostic Violence’இன் சூத்திரிதாரிகள் இந்த புலிகள் அமைப்பின் பின்புலங்கள் என்பது கனடிய அரசுக்குத் தெரியும். இது எல்லை மீறி சாதாரண கனடிய மக்களைப் பாதித்தபோதே இந்த செயற்பாட்டாளர்களை (எய்தவர்களை அல்ல) நாடுகடத்தி இந்த ‘Demostic Violence’ கட்டுக்குள் கொண்டு வந்தது கனடிய அரசு. இந்த செயற்பாட்டிற்கு முன்பு பல அப்பாவித் தமிழ் மக்கள் கனடாவிலும், ஏனைய புலம் பெயர் தேசங்களிலும் கொல்லப்பட்ட சம்பவங்கள் இன்று மறந்து போன வடுக்களாக, சோகங்களாக இருக்கின்றன. இதில் காயப்பட்டு உயிர் தப்பிய இளையபாரதிகளும், ஜெயராஜ்களும் ஏதோ ஒருவகையில் கொதி நிலையில் இன்றும் உள்ளனர். இவற்றின் அடிப்படையில் இதுவரையும் கண்டும் காணாமலும் இருந்து வந்த புலிஆதரவுச் செயற்பாடுகளும், இதன் ஆதரவு சக்திகளும் இனிவரும் காலங்களில் தீவிர கண்டகாணிப்பிற்குள் உள்ளாக்கப்படலாம் என்ற நம்பப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக இவ்வருட மாவீரர்தின நிகழ்வுகள் கண்காணிக்கப்படலாம் என்று அறியக் கிடக்கின்றது. பக்கத்து இலைக்கு பருப்பு என்பது போல் தனது பிறந்த நாள்(நவம்பர் 26, 1954) கொண்டாட்டத்திற்கான முஸ்தீபாக பிரபாகரனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமே இந்த நவம்பர் 27ம் திகதி. எனவே தமிழ் பேசும் மக்களே! புலிகளின் பினாமி அமைப்புக்கள் பின்னும் வலைக்குள் விழாமல் தப்பித்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். 2009 மே மாதத்தின் பின்பு 90 வீதத்திற்கும் மேலான தமிழ் பேசும் புலம்பெயர் தேசத்து மக்கள் இந்த பொறிக்குள் இருந்து தம்மை விலக்கிக் கொண்டுள்ளனர். இலங்கை அரசும் புலிகள் என்ற பூச்சாண்டியைக் காட்டியே இன்னமும் தனது தேர்தல் வெற்றிகளை எதிர்பார்த்து நிற்கின்றது. எனவே தமது கொல்லைக்குள் குண்டு விழாத புலிச் செயற்பாட்டை மறைமுகமாக ஆதரித்து செயற்படுதல் ஒன்றும் அவர்களுக்கு புதிய அனுபவம் அல்ல. இதற்கு சாதகமாக அண்மையில் புலிகளின் தடை பற்றிய ஐரோப்பியூனியனில் நீதி மன்ற முடிவுகளும் அமைந்துள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

(Saakaran) (நவம்பர் 10, 2014)

கனடாவில் பயங்கரவாதிகள் ஒன்றுகூடுகிறார்கள்
மாவீரர் நாளை முன்னிட்டு முட்டிமோதும் வெளிநாட்டு புலிப் பயங்கரவாதிகள்
கனடியஅரசு என்ன செய்யப்போகிறது.?

 
கனடாவில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள இவ்வேளையில் மாவீரர்நாள் நெருங்கி வருகின்றது. இந்த நிலையில் கனடாவில் பல்வேறு நிகழ்வுகளை நோக்கி பல தரப்பட்ட புலி அமைப்புக்கள் தயாராகி வருகின்றன. கீழ்வரும் நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்கள் மற்றும் கட்டுரைகள் தமிழ் மக்கள் மத்தியில்  எவ்வாறான தாக்கத்தை  உண்டு பண்ணும் என்பதை நாம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டி வரலாம். உலகம் எங்கும் பயங்கரவாத எதிர்ப்பு எனக் கூறி வரும் கனடா அரசு புலிகள் பற்றி மௌனம் சாதிப்பது எதற்காக ? வரும் நவம்பர் மாதம் நிகழவிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வு கனடாவில் நிகழ்த்துவது பற்றி கலந்துரையாடல் நிகழ்வொன்று கடந்த செவ்வாய்கிழமை 'தமிழ் நினைவு அறக்கட்டளை' எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
(மேலும்....)

பிரபாகரன், வட மாகாணத்தினமுதலமைச்சராக இருந்திருக்கலாம - ஆனந்தசங்கரி

கடந்த காலத்தில் உள்ளுர் வெளிநாட்டு ஊடகங்கள் சில ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார் என்பது மட்டுமல்ல வட மாகாணத்தின் முதலமைச்சராக கூட இருந்திருக்கலாம். தூரதிஸ்டவசமாக எனது செய்தி மக்களை சென்றடையாததால் மக்கள் என்னை தப்பாக நினைக்கத் தோன்றியதோடு பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களின் இழப்புக்களுக்கும் காரணமாக அமைந்தது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.  (மேலும்....)                  

ஜனாதிபதித் தேர்தலும் ஆளும் – எதிர் கட்சிகளின் கொள்கை நிலைப்பாடும்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்கும் என்பது அறிவிக்கப்படாத போதும், அவர்கள் யாரை எதிர்த்து அல்லும் பகலும் அரசியல் நடாத்தி வருகின்றார்கள் என்பதை வைத்தும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் யாரை ஆதரித்தார்கள் என்பதை வைத்தும், அவர்கள் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. அவர்களது நிலைப்பாடு வழமை போல தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப்போடும் செயல் என்ற போதிலும், அது தனியாக ஆராயப்பட வேண்டும். (மேலும்....)

(வானவில் - 45 முழுமையாக வாசிக்க.......)

மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை இந்தியா அனுப்ப மஹிந்த இணக்கம் - சு.சுவாமி

போதைப்பொருள் கடத்தியதான குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐவரையும், இந்தியா அனுப்ப இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒப்புக்கொண்டதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐவரை, போதைப்பொருள் கடத்தியதான குற்றச்சாட்டில் கைது செய்த இலங்கை கடற்படை, அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் நிரூபித்தது. இதனையடுத்து, அவர்களுக்கு கடந்த மாதம் 30ஆம் திகதி, மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் கையளிக்கவும் கோரிக்கை விடுத்தார் என சுப்பிரமணியன் சுவாமி, தனது ட்விட்டர் வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும், இதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ, இணக்கம் தெரிவித்ததாகவும் ட்விட்டரில் தொடர்ந்து தெரிவித்துள்ள சுப்ரமணியம் சுவாமி, தான் நினைத்ததை சாதித்து விட்டதாகவும் அந்த ட்விட்டில் மேலும் கூறியுள்ளார்.

இளம் ஈரானிய பெண்ணுக்கு மரண தண்டனை

தனக்கே சொந்தமான ஷியா இஸ்லாமிய மதக் கொள்கையினை அரசியல் ஆயுதமாக இன்றுவரை இஸ்லாமியப் புரட்சி காலத்தில் இருந்து ஈரானிய இஸ்லாமிய குடியரசு பாவித்து வருகின்றது. சோவியத் யூனியன் உலக நாடுகளுக்கு காட்டிக்கொடுத்த சோஷலிஸ அரசியல் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு எழுபது வருட காலங்கள் எடுத்தன. இமாம் கொமெய்னி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து வரைந்த இஸ்லாமிய புரட்சியின் வரை படத்தில் ஏற்கனவே மாற்றங்கள் வளர ஆரம்பித்துள்ளன.  ஈரானின் அரசியல் வாழ்வில் இப்படியான சீர்திருத்தங்களுக்கு அடித்தளம் இட்டவராக ஜனாதிபதி முஹம்மத் ஹாத்தமி அவர்களை கூறலாம். இவர் சர்ச்சைக்குரிய மஹ்மூத் அஹமதி நஜாத் ஜனாதிபதிக்கு முன்னர் 1997 - 2005 வருட காலப்பகுதிகளில் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியாக இருந்தவர்.(மேலும்....)

பகுத்தறிவாளர் ஆப்ரஹாம் கோவூர்

நண்பர் ஒருவர், காலம் சென்ற பகுத்தறிவாளர் ஆப்ரஹாம் கோவூர் பற்றி எழுதியிருந்ததை இன்று படித்தேன் . இதைப்படித்ததும் , பழைய ஞாபகம் ஒன்று வருகின்றது, 1976ம் ஆண்டு ஆரம்பப் பகுதியில் நடந்த சம்பவம் இது. யாழ் .பலாலி வீதியில் இருக்கும், தோழர் ஹென்ஸ் மோகன் வீட்டுக்கு இயக்க அலுவலாக நானும் இன்னும் சிலரும் சென்றிருந்தோம். நாம் சென்றிருந்த சமயம் பகுத்தறிவாளர் ஆப்ரஹாம் கோவூர் அவர்களின் நிகழ்ச்சியொன்று அங்குள்ள சன்மார்க்க சனசமூகநிலையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கோவூர் பற்றி நிறையக் கேள்விப்பட்டும் ,அவர் எழுதிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்புக்களையும் ஏற்கனவே படித்தும் இருந்ததால் ,அவரை நேரில் பார்க்க நாமும் அங்கு சென்றோம். அப்போது கோவூர் அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழில் ஒருவர் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். (மேலும்....)

தமிழர் மருத்துவ நிலையம்

(நடேசன்)
1984 சித்திரை மாதத்தில் நான் இந்தியாவுக்கு சென்றிருந்த காலத்தில் (ENLF)எனறொரு அரசியல் கூட்டணி அக்காலத்து ஆயுத இயக்கங்களான தமிழ் ஈழவிடுதலை இயக்கம்(TELO) ஈழப்புரட்சிகர முன்னணி (EROS)மற்றும் ஈழமக்கள் புரட்சிகரமுன்னணி(EPRLF) ஆகிய மூன்றிற்கும் இடையே உருவாகியிருந்தது. இந்தக்கூட்டணியின் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் கருணாநிதியை சந்தித்து படமெடுத்துக்கொண்டனர். இந்தப் படம் தமிழக பத்திரிகைகள் யாவற்றிலும் பிரசுரமாகியிருந்தது.இந்த நிகழ்வு அக்காலத்தில் பலருக்கும் மகிழ்வைக் கொடுத்தது. எனினும் இந்த நிகழ்வையிட்டு கவலை கொண்டவர்களையும் ஓன்று சேர்க்க உதவியது. அத்துடன் இந்தக் கூட்டணியினர் அவ்வேளையில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் ஆதரவை இழந்தது என்றும் பல கதைகள் அக்காலத்தில் பேசப்பட்டது. எனக்கும் அந்தச்செய்தி காற்றுவாக்கில் எட்டியது.
(மேலும்....)

அபூர்வ மூலிகைகள்...சிறுதானியங்கள்...கொல்லிமலை

கூடுவிட்டு கூடு பாயும் அதிசய சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடங்களில் ஒன்றுதான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு. கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்தில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மூலிகை பூமி. இங்கு 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். வளமான 16 மலை நாடுகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டதுமான இம்மலை நாட்டிலும், நவநாகரீக புதிய கலாச்சாரங்கள் மூக்கை நுழைத்தாலும் இரண்டு விஷயங்களை அதற்கு விட்டுக்கொடுக்காமல் பழமை காத்து வருகிறார்கள். (மேலும்....)

நவம்பர் 09, 2014

 

மட்டக்களப்பு முதலைக்குடாவைச்சேர்ந்த முன்னாள் இலங்கை போக்குவரத்துச்சபை, மண்முனை தென்மேற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் சாரதியும், முன்னாள் வடகிழக்கு மாகாணசபை உறுப்பினர் சி.பரமேஸ்வரமூர்த்தியின் (பெர்ணாண்டோ)தந்தையாகிய சின்னத்தம்பி சின்னத்துரை தனது 82 வயதில் நேற்று(07.11.2014) முதலைக்குடாவில் காலமானார்

தொடர்புகளுக்கு:  தோழர்  (சி.பரமேஸ்வரமூர்த்தி)பெர்ணாண்டோ  சுவிஸ்   004162.8713222    0041799365819

தமிழர்களுக்காக எதுவும் செய்ய முடியவில்லை -  சி.வி

இலங்கையில் தமிழர் பகுதிகளில் எங்களால் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இதற்காக வருந்துகிறோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னஷ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பள்ளியில் இன்று கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 'இலங்கை வாழ் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் மக்கள் சார்பாக 1987ஆம் ஆண்டில் ஏற்பட்ட உடன் படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது. ஒற்றை ஆட்சி அரசியல் சட்டத்தின் கீழ் உண்மையான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியவில்லை. அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியதிகாரத்திலுள்ள மத்திய அரசின் கையில் உள்ளது. அதனால், இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் நலனுக்காக பாடுபட முடியவில்லை. அப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அங்கு இந்த நிலைமை தான் உள்ளது. எங்களை சிங்கள அரசு செயற்பட விடாமல் தடுத்து வருகிறது. அதுதான் அவர்களது முக்கிய குறிக்கோளாக உள்ளது. என்னைக் கேள்வி கேட்கிறார்கள். அதிகாரமில்லாத வட மாகாண சபையில் முதல்வராக ஏன் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்கிறார்கள். தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. அது, தமிழ் பேசும் மக்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. கிழக்கு மாகாணத்தில் சிங்களர் ஊடுருவல்கள் அதிகரித்து வருகிறது' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 08, 2014

என் மனவலையிலிருந்து……….

நாடு கடத்தப்பட்ட சிலோன்காரர்களும்! வீடற்று வாழும் மலையகத்தவர்களும்!!

(சாகரன்)

1984 ம் ஆண்டு நடுப்பகுதியளவில் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு சக்திகளைத் தேடி தமிழ்நாடு எங்கும் அலைந்து திரிந்த காலம். எம்.எல். குழுக்கள் பல தமிழ்நாட்டிலும் காலூன்றி மக்கள் புரட்சிக்கென வேலைகள் செய்து கொணடிருந்த காலம். இவர்கள் தமது தலைமறைவான அரசியல் வேலைகளைச் தமிழ் நாடெங்கும் செய்து கொணடிருந்தனர். இதே போல் தி.க வினரும் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி செயற்பட்டுக் கொணடிருந்தனர். ஈழவிடுதலை அமைப்புக்களில் இடதுசாரிக் கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்ட நாங்கள் இப்படியான இடதுசாரி, பகுத்தறிவு செயற்பாட்டாளர்களுடன் எமது தொடர்பை பேணி அரசியல் வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. இந்திய உளவுப்பிரிவு இரு தரப்பு நடமாட்டங்களையும் கண்காணித்திக் கொண்டே இருந்தனர். எனவே எமது சந்திப்புக்கள் பெரும்பாலும் இரகசியமானதாகவே இருந்தன. ஆந்திராவில் இந்த மாக்சிச லெனினிச குழுக்கள் சற்றே பலமாக செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். எமது ஈழவிடுதலைப் போராட்டதில் இடதுசாரிச் செயற்பாடுகள் சற்ற தூக்கலாக இருந்த அமைப்புக்கள் மீது இவர்களுக்கு நம்பிக்கையும், தங்கள் போராட்டத்திற்கான உத்வேகமானவர்கள் என்றும் பார்க்கப்பட்ட காலகட்டம். நாம் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவியாக இருந்து செயற்பட்ட காலகட்டம். அரசியல் வகுப்புக்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல் என்ற ஆரோக்கியமாக சென்று கொணடிருந்தன எமது உறவுகள். மறுபுறத்தில் பாரம்பரிய இந்திய இடதுசாரிக் கட்சிகளுடனும் நல்ல உறவு நிலையிலிருந்தது எங்களுக்கு. கல்யாணசுந்தரத்திலிருந்து ஆரம்பித்து தா. பாண்டியன் வரைக்கும் கி. வீரமணி தொடக்கம். சாருமஜுந்தார் வரைக்கும். அருணமுறுவல் தொடக்கம் வள்ளி வரைக்கும் உறவுகள் பலமாக இருந்தன. இந்த தமிழ்நாட்டு எங்கள் சகாக்கள் எல்லோருக்கும் இலங்கைத் தமிழர்களின் போரட்டங்களைப் பற்றி ஒவ்வொரு புரிதல் இருந்தன. ஆனால் இவர்கள் எல்லோரும் ஒன்றை மட்டும் எப்போதும் முதன்மைப்படுத்தி சொன்னார்கள். இலங்கையில் மலையக மக்களையும் இணைத்துக் கொண்டு இந்த மக்களை போராட்டத்தின் தலமைச்சக்தியாக கொண்டு விடுதலை அமைப்புக்களை கட்டியெழுப்பி ஒரு பலமான மக்கள் போராட்டதை முன்னெடுங்கள் என்பதுவே அது. இதேபோல் மலையகத்திருந்து நாடுகடத்தப்பட்ட மலையக மக்கள் சிலோன்காரர் என்று தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் கொலனி அமைத்து வாழ்கின்றனர். இவர்களையும் சந்தித்து இவரகளையும் போராட்டத்தில் இணைத்து செயற்படுங்கள் என்றனர். இதன் அடிப்படையில் நானும் எமது தோழர்களும் திருச்சியில் உள்ள சிலோன் காலனிக்கு தொடர்புகளை ஏற்படுத்த சென்றோம். இலங்கையின் மலையகத்தை விட மோசமான ஒரு வாழ்வை இவர்கள் கொண்டிருப்பதைக் கண்டோம். இவர்களை அப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டு மக்களுடன் சேரமுடியாமல் சிலோன்காரர்கள் என்று வகைப்படுத்தி தனிமைப்பட்டிருந்ததைக் கண்டோம். தமது விருப்புடன்? சிலோனில் இருந்து தாம் இங்கு வந்தது தப்பு, அட்டைக் கடிக்குள், அந்த வறுமையிலும் லயன் வாழ்க்கை எவ்வளவோ மேல் என்ற பொதுவான போக்கு எல்லோரிடமும் நிலவுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்து. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தமும் இதனைத் தொடர்ந்த செயற்பாடுகளும் ஆரம்ப நிலையில் மூன்றில் ஒரு பங்கு மலையகத் தமிழருக்கு இலங்கைப் பிரஜா உரிமையும், மூன்றில் இரண்டு பிரிவினரும் இந்திய பிரஜா உரிமையும் வழங்கப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். தங்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிகையில் தமது தாய் நாடென்று நம்பி இந்தியாவிற்கு சென்று இன்றுவரை தமிழ் நாட்டில் சிலோன்காரர்கள் என்ற அடைமொழியுடன் அல்லல்படும் ஒரு சமூகமாக வாழும் அவல நிலையே அங்கு தொடர்கின்றன. இந்த மக்களின் நலன்களை மேம்படுத்த தமிழ் நாட்டிலோ அல்லது இதற்கு வெளியிலோ இன்று வரை ஒரு சிறிய அளவிலான சமூக இயக்கம் நடாத்தப்படவில்லை என்பது வருதத்திற்குரியதாகும். இதே போன்று இலங்கை நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் இந்த முழு உழைக்கும் மக்களும் இன்று வரை முன்னணி பிரஜைகளாக இலங்கையில் வளர முடியவில்லை. தேர்தல் காலங்களிலும் தொழிற் சங்க சந்தாப் பணத்திற்குமாக கிள்ளுக் கீரையாக பாவிகப்பட்ட சோக வரலாறே இன்றுவரை இவர்ககைத் தொடர்ந்த வண்ணம் உள்ளன இனக்கலவரங்களால் வடக்கு, கிழக்கு இற்கு இடம்பெயர்ந்தவர்களையும் குறைந்த கூலியிற்கு உழைப்பை வாங்கும் அடிமைகளாக பயன்படுத்துவதற்காக உள்வாங்கப்பட்ட அனுபவங்களையே இவர்கள் கொண்டுள்ளனர். தமக்கிடையே பிரத்தியேகமான கலாச்சார, பழக்வழக்கள். புவிசார் வாழ்நிலைப் பின்னணிகளைக் கொண்ட இவர்களின் தனித்துவங்கள் பேணப்பட்டு உரிமைகள் வென்றெடுக்க இவர்கள் மத்தியிலிருந்து முற்போக்கு ஜனநாயக தலமைகள் முன்னெழும்பி வரஆவன செய்ய வேண்டும். இந்த விதி இலங்கையில் உள்ள சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தனால் சிலோன்காரர் ஆக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும். மண் சரிவு இடருடன் நிவாரணங்கள், அனுதாபங்கள், அஞ்சலிக் கூட்டங்கள். அரசியல் சுற்றுலாக்கள் என்பதற்கு அப்பால் எதிர்காலத்தில் ஒரு பலமிக்க சமூகமாக இந்த சமூகம் எழுந்து வந்து தாம் வாழும் பிரதேசங்களில் எல்லாம் ஏனைய சமூகளுடன் சம உரிமையுடன் வாழும் வாழ் நிலையை ஏற்படுத்த அனைவரும் இணைந்து போராடியே ஆகவேண்டும். இதற்கான உறுதி மொழியுடன் கூடிய செயற்பாடுகளே அண்மையில் நடந்த மண்சரிவு அனர்த்தங்களுக்கான நாம் செலுத்தும் அஞ்சலியாக அமைய முடியும்.

(சாகரன்)

(நவம்பர் 08, 2014)

 

பேனாவால் சாதனை படைத்த சச்சின்

துடுப்பால் பல  உலக சாதனைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் பேனாவால் உலக சாதனை படைக்க ஆரம்பித்துள்ளதாக ஹச்செட் இந்தியா நிறுவனம் வர்ணித்துள்ளது. ஏனெனில், சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள சுயசரிதைப் புத்தகமான, பிளேயிங் இட் மை வேய், வயது வந்தவர்களுக்கான புத்தகங்களில்  அதிகமாக விற்கப்பட்ட புத்தகமாக சாதனை படைத்துள்ளதாக, குறித்த புத்தகத்தின் பதிப்புரிமை நிறுவனமான நிறுவனமான ஹச்செட் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், அதிக புத்தகங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்ட புத்தகமாகவும் இந்த புத்தகம் சாதனை படைத்துள்ளதாக  குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.  வயது வந்தவர்களுக்கான கற்பனை மற்றும் உண்மைப் புத்தகங்களுக்கான பிரிவிலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் அரசியல் செய்ய த.தே.கூ.வுக்கு உரிமை உண்டு - இராதாகிருஷ்ணன் எம்.பி

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ள பொழுது மற்றவர்கள் அலட்டிக் கொள்வது ஏனென்று புரியவில்லை'

'தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீன்டத்தகாதவர்கள் அல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அது மீண்டும் கட்டியெழுப்பப்படுகின்றதென்றால் அதனை நாம் வரவேற்க வேண்டும்' என தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுதுபோக்கு அலுவல்கள் பிரதி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிததார். 'வெறுமனே எல்லாவிடயங்களையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. மலையகத்தில் வந்து அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. இது ஒரு ஜனநாயக நாடு. அவர்களின் வருகையால் இங்கு நல்லது நடக்கும் என்றால் அதனை நான் வரவேற்கின்றேன்' என்றும் அவர் தெரிவித்தார். 'எமது நாட்டில் சுனாமி ஏற்பட்ட பொழுது எந்த உணர்வுடன் மலையக மக்கள் வடக்குக்கும் ஏனைய பகுதிகளுக்கும் சென்று மனிதாபிமான உதவிகளை செய்தார்களோ அதே மனிதாபிமான ரீதியில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொஸ்லந்தை மீரிய பெத்தை பகுதிக்கு விஜயம் செய்தார்கள். இதில் எந்தவிதமான அரசியல் நோக்கமும் அவர்களிடம் இருக்கவில்லை என்பதை என்னால் தெளியாக கூற முடியும். (மேலும்....)

ஜனவரி 2 ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரப்பது என்பது தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர் டி.யூ குணசேகர தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை முடிவெடிக்கும். முடிவை எடுப்பதற்காக கட்சி மத்தியக்குழுவின் விசேட கூட்டம், கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய, அரசியல் ரீதியான முக்கியமான தீர்மானமொன்றை, எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எடுக்கவிப்பதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மத்தியகுழு அன்றைய தினம் கூடுவதுடன் அரசாங்கத்துக்கும் ஹெல உறுமயவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பிலான அறிக்கையும் மத்தியக்குழுவுக்கு கையளிக்கப்படவிருக்கின்றது.

மங்கள, நாமல் நான்கு முறை சந்திப்பு

மங்கள இணைந்தால் அமைச்சரவை மாற்றம்?

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும்  இடையில் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, சிங்கபூருக்கு பயணிப்பதற்கு முன்னர், அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், கொழும்பிலுள்ள மங்களவின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்து கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர், நாடு திரும்பியதன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்டாராயின் அமைச்சரவையில் இன்று அல்லது நாளை திங்கட்கிழமை மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவருகின்றது. மங்கள சமரவீர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம் இணைங்கி கொண்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அப்போது காமராஜர் முதல்வராக இருந்த சமயம்...

ஒருநாள் அவரிடம் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி, தனது இல்லத் திருமணத்துக்கு காமராஜர் வரவேண்டுமென்று கேட்டு, அழைப்பிதழோடு வந்தார்.
அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த காமராஜர் தியாகியின் வறுமை நிலையை உணர்ந்து கொண்டார். அந்தத் திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு வர இயலாது என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். தியாகி வருத்தத்தோடு வீடு திரும்பினார். திருமண நாள் வந்தது. காமராஜரின் கார் அந்தத் தியாகியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வந்த காமராஜரைப் பார்த்ததும் தியாகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. காமராஜர் அவரிடம், "நீ அழைப்பிதழ் கொடுத்தபோது உன் வீட்டுத் திருமணத்துக்கு வர முடிவு செய்துவிட்டேன். ஆனால் இதை நான் அப்பவே சொல்லியிருந்தால், முதலமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட கடன் வாங்கித் திருமணத்தைத் தடபுடலாக நடத்தியிருப்பாய். உன்னை கடன்காரனாக ஆக்க நான் விரும்பவில்லை'' என்று கூறியதும் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

மீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு தொடர்கள்

(இலக்கியா)

கடந்த ஆண்டு முதன்முறையாக இலங்கையில் தனது 41வது சந்திப்பை இலங்கைக்கு எடுத்து சென்றதனூடாக மேலுமொரு பரிமாணத்தை இந்த இலக்கிய சந்திப்பு எட்டியிருக்கின்றது. தாயகத்து இலக்கியவாதிகளும் புகலிட இலக்கிய வாதிகளும் சந்திக்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை இந்த இலக்கிய சந்திப்பு உருவாக்கியிருக்கின்றது. இந்த முயற்சியானது தங்களை மிகவும் ஆகர்சித்திருப்பதாக யாழ்ப்பாண இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்ட தாயகத்து இலக்கியவாதிகள் பலர் கருத்துக்களை வெளிப்படுத்தியிருதார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்று பின்னணியோடுதான் 1994ம் ஆண்டு தனது 18வது நிகழ்வை சுவிஸ் பெர்ண் நகரில் நடத்திய பின்னர் நீண்ட இடைவெளி கடந்து 43வது இலக்கிய சந்திப்பு அண்மையில் சூரிச் நகரில் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக பல இலக்கிய ஆர்வலர்கள் இச்சந்திப்பில் மிக ஆவலோடு பங்குகொண்டத்தை காணமுடிந்தது. சுமார் 70-100 வரையானோர் கலந்து கொண்டு இந்த இருநாள் அமர்வையும் அர்த்தமுள்ள பொழுதுகளாக்குவதில் பங்களித்தனர். (மேலும்....)

இணையங்கள் நடத்துபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

அன்பான இணைய உரிமையாளர்களே!

ஊடகத்தர்மம் என்று ஒன்று இருக்கின்றது. அதை தாங்கள் மதித்து நடப்பது மிக நல்லது. அண்மையில் எமது ( lankaNN )இணையத்தில் வெளியாகிய பாரிஸ் லாச்சப்பலில் நடந்த சம்பவ  செய்தியை லங்கா ஸ்ரீ இணையம்   தங்களின் இணையத்தை விளம்பரப் படுத்தும் நோக்குடன் எமது செய்தியை கொப்பி எடுத்து தமது இணையத்தில் வெளியிட்டிருந்தனர். ஆனால் எமது அனுமதி பெறவில்லை. எமது இணையத்தில் மட்டுமல்ல பல தமிழ் இணையங்களில் வெளியாகும் செய்திகளை இவர்கள் கொப்பி எடுத்து வெளியிட்டு வருகின்றனர். நீங்கள் உழைக்க விரும்பினால் ஊடகவியலாலர்களுக்கு சம்பளம் கொடுத்து உங்கள் இணையத்தினை நடத்துங்கள், அதை விட்டு அடுத்தவனை வளரவிடக் கூடாது என்ற நோக்கில் செயற்பட வேண்டாம். (மேலும்....)

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் கருஜயசூரிய?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரியவை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக கரு ஜயசூரிய போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கரு ஜயசூரியவுக்கு, மக்கள் விடுதலை முன்னணியும் தனது ஆதரவை வழங்க உள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில் எவரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கரு ஜயசூரியவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். மாதுலுவாவே சோபித்த தேரருடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 10ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்றும் மேற்படி தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இந்திய மீனவர்களுக்கு இலங்கையில் தண்டனை

சென்னையில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு

போதைப்பொருட் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஐவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்ய ப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களுக்கும் உயர்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித் திருந்தது. இவ்வாறு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் விடயத்தில் தலையிட்டு இரு நாட்டுக்கும் இடையிலான உடன்படிக்கைக்கு அமைய அவர்களை சென்னை மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவிடுமாறு கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் ஐவருக்கும் இலங்கை சட்டப்படியே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன  மேலும் தெரிவித்தார்.

நவம்பர் 07, 2014

மலையகமும் கணேசன் குடும்பமும்

மலையக தமிழ் மக்களின் மண்சரிவை தனது அரசியல் வளர்ச்சியின் திருப்பத்துக்காக பாவிக்க மனோ கணேஷன் முயற்சிக்கிறார். அதன் வெளிப்பாடு தான் கூட்டமைப்பினருடன் மலையகம் சென்றதின் நோக்கம். எல்லாம் ப்ளான் பண்ணி தான் நடக்குது. தான் ( மனோ) அரசை எதிர்த்து தேர்தலில் நின்றாலும் புலம் பெயர் tamils உங்களை கைவிட மாட்டார்கள் என்பதை கூட்டமைப்பு மூலம் சொல்லப்பண்ணி வாக்கு வங்கியை நிரப்பலாம் என்ற நப்பாசை தான் இது. எதுவோ ஏமாறப்போவது மலையமக்களும் தான். ஏன் என்றால் மாபெரும் ஏமாற்று பேர்வழிகள் மனோவுடன் இணைந்திருப்பதாலும் , தொண்டைமான் மக்களின் பிரச்சனைகளை சரியாக அனுகாததினாலும் மக்கள் இருக்கும் பிசாசுகளில் ஒன்றை தானே தெரிவு செய்ய முடியும். மலையக மக்களுக்கு ஒரு நல்ல புதிய தலைமை தேவை.

வெளிநாடு செல்வோரின் தேசிய அடையாள அட்டைக்கு புதிய சிக்கல்

6 மாதங்களுக்கு அதிகமாக வெளிநாட்டில் தங்கியிருப்பதற்காகச் செல்லும் இலங்கையர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் விநியோகிக்கப்படவுள்ள புதிய அடையாள அட்டை, வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு அதிகமாக வைத்திருந்தால் அது செல்லுபடியற்றதாகிவிடும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார தெரிவித்தார்.

சந்திரிகாவின் புதிய செயற்பாடுகள்


எதிர்கட்சிகள் யாவற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் ஒரு பொது வேலைத்திட்டத்தை அமைப்பதில், நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முக்கிய பங்கெடுத்து வருகிறார் என்று தெரியவருகிறது. ஆனால், அவர் திடீரென ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கட்சியகளிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து வலுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்துக்கு தலைமை தாங்கும் வண.மாதுலுவாவே சோபித தேரர், ஐ.தே.க உட்பட எதிர்கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து வருகின்றார். இந்த கூட்டங்கள் கோட்டையிலுள்ள அவரது விகாரையில் நடைபெற்றது. அரசாங்கத்துடன் கடும் அதிருப்தியுற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், ஏற்புடைய பொதுவேற்பாளர் நிறுத்தப்பட்டால் எதிர்கட்சிகளுடன் கைகோர்த்துக்கொள்ள திட்டமிட்டு வருகின்றார்கள் என்றும் அறியப்படுகின்றது.

சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க சி.வி மறுப்பு

சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும்  செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகும் இந்தியச்செய்தி தெரிவிக்கின்றது. இது தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் வரும் 9 ஆம் திகதியன்றே சி.வி. விக்னேஸ்வரன் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தனது பயணத்திட்டத்தை மாற்றினார் விஸ்னேஸ்வரன். அதன்படி சென்னையை இன்று வந்தார். வடக்கு மாகாண முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்தில் நிருபர்கள் குவிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் எதுவும் பேசாமல் விக்னேஸ்வரன் சென்றுவிட்டார். இன்னும் இரு நாட்களுக்கு அவர் சென்னையில்தான் தங்கியிருக்க உள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்நாட்டுக்கு மட்டுமே இம்முறை பயணம் செய்வார் என்றும், டெல்லிக்கு செல்லமாட்டார் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பயணத்தின் போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையோ, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையோ விக்னேஸ்வரன் அதிகாரபூர்வமாகச் சந்திக்கமாட்டார் என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். ஆனால், இரு நாட்களுக்கு முன்பே விக்னேஸ்வரன் சென்னை வந்துள்ளதால், அவர் தமிழக அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தக்கூடும் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விக்னேஸ்வரன் மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகள் மீதான தடை வழக்கு: இறுதி விசாரணை முடிந்தது

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மத்திய அரசு அவ்வப்போது நீடித்து வருகிறது. இந்த தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி. பி. மிட்டல் தலைமையிலான சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பாயத்தின் இறுதிகட்ட விசாரணை நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் வளாகத்தில் நீதிபதி ஜி. பி. மிட்டல் தலைமையில் நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் இந்தியாவில் இன்னும் தொடர்ந்து வருகின்றன என்று உளவுத் துறையின் தகவல்கள் கிடைத்து வருகின்றன. “விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால் அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012, மே 14 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இலங்கையில் விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்திய அரசே காரணம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இத்தகைய பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பிரிவினையைத் தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருதி தடையை நீடிக்க வேண்டும்.

நெத்தியடி........

தம்பி: ஐயா சம்பந்தரே என்னங்க இப்படி பண்ணிட்டீங்க?
ஐயா: அடடா யாரது தம்பியா? என்ன இந்தப்பக்கம், ஆமா அப்படி என்ன பண்ணிட்டேன்?
தம்பி: மகிந்தாவோட ரீ பாட்டியில ரொம்பவும் அந்நியமாக.. நான் எதரிர்பார்க்கல
ஐயா: அதென்ன பெரிய விடயம் இதெல்லாம் சம்பிராதாய நிமித்தம் நடப்பது தானே
தம்பி: பிறகு எதற்க்கு மகிந்தர் வடபகுதிக்கு வரும்போதெல்லாம் மூஞ்சியை அப்படி தூக்கி வைச்சமாதிரி இருக்கிறீங்கு?
ஐயா: இது சங்கட நிமித்தம், ஒண்ணும் செய்யமுடியாது
தம்பி: அப்போ எல்லாம் நிமித்தம் காரணமாகத்தான் எல்லாமே? உங்கள் கொள்கையின் நிமத்தமென்று எதுவுமே கிடையாதா?
ஐயா: தம்பி ஏதோ வெபகாரத்தோட பேசுறாப்போல, கட்சி நடத்திறது ஒண்ணும் லேசுப்பட்ட காரியமில்ல நீ மட்டும் ஒரு நாள் ஒரு கட்சிக்கு தலைவனா இருந்துபார் தெரியும்
தம்பி: அப்படி கஸ்டப்பட்டு எதுக்கய்யா இதெல்லாம்
ஐயா: அப்ப நம்ம மக்கள உங்கப்பனா வந்து காப்பாற்றுவான், வந்திட்ட பெரிசா எல்லாம் தெரிஞ்சமாதிரி நீ முதல்ல கிளம்பு.

(மோகன்)

இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு புலிச் செயற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 600 புலிச் செயற்பாட்டாளர்கள் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு கோரியுள்ளனர்.  வடக்கில் வெளிநாட்டு முதலீடுகளை ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்து இரட்டைக் குடியுரிமை கோரியுள்ளனர். புலம்பெயர் புலி செயற்பாட்டாளர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு வடக்கு வர்த்தகர்களும் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
எவ்வாறெனினும், புலம்பெயர் புலிச் செயற்பாட்டாளர்கள் ஈழத் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக சிங்கள ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாக இரட்டை குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அழைப்புச் செய்தி:

மக்கள் சிவில் உரிமைக் கழகம் [PUCL] நடத்தும் கே.ஜி கண்ணபிரான் நினைவுச் சொற்பொழிவு நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை [09-11-2014] காலை 11 மணிக்கு நடை பெறுகிறது.

இடம்; வித்யோதயா பள்ளி வரவேற்பரங்கு.இல;1, திருமலை சாலை, தி.நகர் [வள்ளுவர் கோட்டம் அருகில்]

இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி .வி விக்கினேஸ்வரன் அவர்கள் முதல் முறையாக தமிழகத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கும் முதல் நிகழ்வு இது.

பொருள் : "பாதுகாப்பையும் இறையாண்மையையும் காத்தல் "

அனைவரும் கலந்து சிறப்பிக்க மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் அன்போடு அழைக்கிறோம்.

கருத்து:

இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் அமுலில் இருந்த சுமார் 30 வருட காலகட்டத்திலும் பூசா,வெலிக்கடை சிறைச்சாலைகளில் ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்கள் அடைக்கப்பட்டனர் .அக்காலகட்டம் முழுக்க சிறிலங்கா பேரினவாத அரசுகளின் கைபொம்மை நீதிபதியாக கொழும்பில் பணிசெய்தவர் இந்த விக்கினேஸ்வரன். அதனூடாக தமிழின போராட்டத்தை ஒடுக்கி இலங்கையரசின் முக்கிய பாகமாக இயங்கிய நீதி துறையின் உச்ச பதவியாகிய உயர் நீதி மன்ற பதவியை பெற்றுக்கொண்ட இந்த விக்கினேஸ்வரன். இவர் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின். முன்னாள் தேசியத் தலைவரும், மனித உரிமைப் போராளியுமான மறைந்த கே.ஜி.கண்ணபிரான். அவர்களின் நினைவு சொற்பொழிவு ஆற்ற எப்படி முடியும்?

ஏ-9 வீதியில் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 வீதியில் குறிப்பாக மாங்குளத்திலிருந்து கிளிநொச்சிக்கு இடையில் வாகனங்களை விரைவாகச் செலுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு  வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வருடம் மாங்குளத்திலிருந்து கிளிநொச்சிக்கு இடையில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 30 இற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 'குறித்த பகுதியில் வீதி நேராக உள்ளதால் சாரதிகள் வாகனங்களை விரைவாகச் செலுத்த முற்படுகின்றனர். புதன்கிழமை வாகனம் ஒன்று பாதையிலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளானதால், பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்துக்களினால் பலர் காயமடைந்துள்ளதாகவும்  ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். நேரிய வீதியில் வாகனங்களைச் செலுத்தும்போது, விரைவாகச் செலுத்துவதை தவிர்த்துக்கொள்வதுடன், கூடிய கவனம் எடுக்குமாறும் அவர் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

மீரியபெத்த மண்சரிவில் 57 குடும்பங்களே பாதிப்பு

கொஸ்லந்த, மீரியபெத்த பகுதிகளில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக 521 குடும்பங்களைச் சேர்ந்த 1878 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மீரியபெத்த மண்சரிவில் மாத்திரம் 57 குடும்பங்களைச் சேர்ந்த 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் 12 உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப் பட்டிருப்பதுடன், 6 பேர் காயமடைந்திருப்பதாகவும், 22 பேர் காணாமல் போனமை உறுதிப்படுத்தப்படவில்லை யென்றும், 44 பேர் வேறு பகுதிகளுக்குச் சென்றிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மீரியபெத்தை பகுதியில் 66 வீடுகள் முற்றாகச் சேதமடைந்திருப்பதுடன், 2 பால் சேகரிப்பு நிலையங்கள், கோவில், 2 தொலைத்தொடர்பு நிலையங்கள், 2 கடைகள் உட்பட 7 ஏனைய கட்டடங்களும் மண்சரிவால் சேதமடைந்துள்ளன. மண்சரிவு ஏற்பட்ட இந்தப் பகுதிகளைச் சேர்ந்த 395 குடும்பங்களைச் சேர்ந்த 1366 பேர் பாதுகாப்பான இரண்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் மீரியபெத்தை பகுதியில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 296 பேர் உள்ளடங்குவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்லேடனை சுட்ட அமெரிக்க படை வீரரின் விபரம் அம்பலம்

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க நேவி சீல் வீரர் ரொப் ஓனைல் முதல்முறையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 2011, மே 2 ஆம் திகதி பாகிஸ்தானில் வைத்து பின்லேடனின் தலை மீது மூன்று முறை சுட்டு 38 வயது ரொப் ஓனைல் அவரை கொன்றிருந்தார். இந்த தாக்குதலை நடத்தியவரின் விபரம் குறித்த இரகசியம் பேணப்பட்டு வந்தபோதும் ஒனைல் தனது அடையாளத்தை வெளிப்படுத்தி இம்மாத இறுதியில் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்க திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் நேவி சீல் படையின் முக்கிய வீரரான ஓனைல் 400க்கும் அதிகமான யுத்த நடவடிக்கைகளில் பங்கேற்றிருப்பதோடு 52 தடவைகள் கௌரவிக்கப்பட்டுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சீரோ டாக் தேட்டி, கெப்டன் பிலிப்ஸ் மற்றும் லோன் சவைவர் ஹொலிவுட் திரைப்படங்களிலும் ஓனைல் சித்தரிக்கப்பட்டுள்ளார். எனினும் தனது 16 ஆண்டு இராணுவ பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இராணுவத்தால் கிடைக்கும் .சலுகைகளையும் இழந்த நிலையில் உண்மைகளை வெளிப்படுத்த ஓனைல் முன்வந்திருக்கிறார்.

இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு: 13 மாவட்டங்களில் 3 லட்சம் மீனவர்கள் போராட்டம்

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளதைக் கண்டித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 13 கடற்கரை மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கினர். இதனால் 3 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. சென்னையில் மீனவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையில் கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இந்நிலையில், 2011 நவம்பர் 28-ம் தேதி தமிழக மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகிய 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக ஒரு வழக்கை இலங்கை அரசு புனைந்து, அவர்களை கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைத்து, வழக்கு நடத்தி இப்போது அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. இது  தமிழகத்தின் ஆன்மாவை அசைத்துப் பார்க்கக்கூடிய பேரிடியாக அமைந்துள்ளது.

ஜிடிவி தொலைகாட்சி தனது செய்தியின் தவறுக்காக கவலை – ஒலிபரப்பு மூலம் பதிவு

புதன்கிழமை 22.10.14 எமது செய்தி மற்றும் செய்திவீச்சுநிகழ்ச்சியில்
இடம்பெற்ற தவறு ஒன்று குறித்து எமது கவலையை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு லண்டன் வந்த இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்த புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர்கள் குறித்த செய்தியிலேயே இந்தத் தவறு இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் ராமராஜ், ஜெயதேவன், தம்பா மற்றும் டாக்டர் ரவி ஆகியோர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்தமை குறித்த தகவலை வெளியிடும் போது, இவர்கள் நால்வரும் ஐக்கிய தேசியக் கட்சியின்ஆதரவாளர்கள் என்று எமது செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல் தவறானதாகும்.இவர்கள் நால்வரும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள். இவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. ஆனால் இவர்கள் புலம்பெயர் தமிழர்களின் சார்பில் அவர்களது சில முக்கிய விடயங்கள் குறித்து ஆராயவே, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தனர். ஆகவே எமது செய்தியில் இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்று நாம் குறிப்பிட்ட தவறுக்காக நாம் மிகவும் வருந்துகிறோம். இதன் காரணமாக இவர்களுக்கும், இவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படக் கூடிய மன உளைச்சலுக்காக நாம் இவர்களிடம் எமது ஊடகத்தின் சார்பில் தவறுக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். இனிமேல் இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் இருக்க உறுதி கூறுகிறோம். என 4.11.2014. செவ்வாய்க்கிழமை தனது மாலை 5.00 மணி இரவு 8.00 மணி நள்ளிரவு 12.00 ஆகிய செய்திகளில் தனது கவலை வெளிபடுத்தி ஒலிபரப்பு செய்துள்ளது

நவம்பர் 06, 2014

இருவரில் ஒருவருக்கு தவராசா சவால்

வடமாகாண சபையில் கடந்த ஒருவருடகாலமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அல்லது வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகிய இருவரில் ஒருவருக்கு வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சவால் விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபை பதவியேற்று ஒரு வருட காலம் முடிவுற்ற நிலையில், இது வரை மாகாண சபை மக்களுக்கு என்னத்தை செய்துள்ளது என்பது தொடர்பாக மாகாண சபையின் முதலமைச்சரோ, அமைச்சர்களோ அல்லது அவைத் தலைவரோ தொலைக்காட்சியின் முன்பு அல்லது மக்கள் அரங்கொன்றில் நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிர்க் கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு பக்கசார்பாக பிழையான கருத்துக்களை வெளியிடாமல் நேரடியாக மக்கள் மன்றின் முன் இது தொடர்பான விவாதத்திற்கு வருமாறு வடமாகாண முதலமைச்சரையும் அமைச்சர்களையும் அவைத் தலைவரையும் அழைப்பு விடுவதாக அவர் தனது அழைப்பில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் வட மாகாண சபையின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் முதலமைச்சரும், அமைச்சர்களுமே. அவர்களே நிதிச் செலவீனம் தொடர்பான விடயங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். அவைத் தலைவர் சபை நடவடிக்கைகளுக்கே பொறுப்பானவர். இருந்தும் இவர்களில் ஒருவரை நேரடி விவாதத்திற்கு தான் மீண்டும் அழைப்பதாக அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு 3ஆம் முறை முடியுமா? திங்கள் தெரியும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா இன்றேல் முடியாதா என்பது தொடர்பிலான வியாக்கியானம் உயர் நீதிமன்றத்தால், திங்கட்கிழமை அனுப்பிவைக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு இடையூறு இருக்கின்றதா என்பது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இதுதொடர்பில் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் எம்.எம். ஜயசேகர இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு நேற்று புதன்கிழமை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இதன்படி சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயம் பற்றிய எழுத்து மூலமான தமது வாதத்தை நாளை வெள்ளிக்கிழமை பி.ப 3மணிக்கு முன்வைக்கும்படி கோரப்பட்டுள்ளது.

ஆண்டவனே! நீயும் ஆமிப் புலனாய்வாளனா? அரசாங்கத்திட ஆளா?

தற்போது யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட வடபகுதி எங்கும்  கோவில்கள், சனசமூக நிலையங்கள், சமூகக் குழு அமைப்புக்கள், விவசாய குழுக்கள், அரசியல்கட்சிகள் ஆகியவற்றுக்குள் உள்வீட்டுப் பிரச்சனை தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சண்டை என்றால், ஒரு குழு இன்னொரு குழுவை எப்படி வில்லனாக சித்தரிப்பது என்பது பற்றி ஆழ்ந்து யோசித்து தம்மைச் சோ்ந்தவா்களுக்கு வாய் மூலமாகவோ, அல்லது ஊடகம் மூலமாகவே அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்கிறன. அந்த அறிக்கைகளில் பெரும்பாலன அறிக்கையில் வில்லனாகச் சித்தரிப்பதற்கு அவா்கள் ஆழ்ந்து யோசித்து வெளிக் கொண்டுவரும் விடயம் என்னவெனின் எம்மை எதிர்ப்பவா்கள் ஆமிப் புலனாய்வாளா்களின் தூண்டுதலில் எதிர்க்கின்றார்கள்  அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்று எம்மை எதிர்க்கின்றார்கள் என்பது தான்.
(மேலும்....)

சவக்குழியை வெட்டிவிட்டு சா வீட்டிற்கு இடம் கொடுக்கின்றார்கள்

கொஸ்லந்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனித்தனி வீடுகள்

கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழப்புகளையும், உடமைகளையும் இழந்த மக்களுக்கு உடனடியாக உரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முதற்கட்டமாக 1000 வீடுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இ. தொ. கா. பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை மாற்றத்திற்கேற்ப மலையக பிரதேசங்களில் மண்மேடு சரிவுகள் அபாயங்கள் நிலவும் தோட்டப்பகுதிகளில் தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீரற்ற கால நிலையாலும் அடைமழையினாலும் பாதிப்புக்கு உள்ளாகும் என அடையாளம் காணப்படும் தோட்டங்களில் காணிகளை தோட்ட முகாமையாளர் ஊடாகவும் அக்காணிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளின் கண்காணிப்போடு வீடுகளை அமைப்பதற்கான நிலப்பரப்பினைத் தெரிவு செய்து தனி வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் இணக்கம் காணப்பட்டது. இதன் அடிப்படையில், கொஸ்லந்தை மீரியபெத்த பிரதேசத்திற்கு அவசரமாக 75 வீடுகள் நிர்மாணிப்பதற்கு, ஆரம்பகட்ட வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் இ. தொ. கா. தலைவரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், எம். இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தின் இடப்பெயர்வு!

1995 அக்டோபர் 30, கந்தசஷ்டி இறுதிநாள். பெரும்பாலானவர்கள் உபவாசமிருந்து சூரன்போரை கண்டு வீடு திரும்பியிருந்தார்கள். ஒலிபெருக்கியில் வித்தியாசமான ஒரு அறிவித்தலை விடுத்துக்கொண்டு அந்த வாகனம் யாழ்ப்பாண வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தது. அது இத்தனை விபரீதமானது என்பதை யாராலும் நம்பமுடியவில்லை. ‘யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு’. ஆனாலும் ஸ்தம்பித்துப் போனவர்கள் உடனடியாகவே செயற்படவும் தொடங்கினார்கள். ‘எப்படி? எப்படி? போவது? எதை எடுப்பது? எதை விடுவது? ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்குள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தோம்.  காரணமில்லாமல் ஒருவரையொருவர் திட்டினோம். அதை எடு, இதை எடு, என்று ஒரே சத்தம் போட்டுக்கொண்டோம். இறுதியில் ஒவ்வொரு கையிலும் இரண்டு பைகள், நகைகளையும் காசையும் அம்மா எடுத்து கவனமாக வைத்துக்கொண்டா. கதவை கவனமாக இழுத்துப் பூட்டிக்கொண்டோம். பூட்டினால் எந்தவித பயனும் இல்லை, ஆமி வந்து எல்லாவற்றையும் உடைக்கப் போகிறாங்கள். ஏதோ கடவுள் விட்ட வழி. உயிர் தப்பினால் போதும் என்று மனதை அமைதிப்படுத்திக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டோம். (மேலும்....)

ஜனரஞ்சகமான ஆணாதிக்க  மற்றும் தீண்டாமை சிந்தனைகள்

வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் வவுனியா வைபவமொன்றில் ஆற்றிய உரையில் இருந்து

 “அடுத்த வீட்டுக்காரன் அரவணைப்பிலுள்ள மனைவிபோல் இருக்காதீர்கள்” ; அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை

 “நடமாடும் சேவைக்கு சில அலுவலர்கள் வராமைக்குக் காரணம் அரசியலே. இதைத்தான் நாங்கள் ஊரறிய உலகறியக் கூறிக்கொண்டு வருகின்றோம்” என்றார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வடமாகாணசபையால் வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். (மேலும்....)

காஷ்மீரில் மோடி ஆசியுடன் ராணுவத்தின் கொலையாட்சி

முஸ்லிம்களை இந்து மதவெறியர்கள் கொல்ல முடியாத இடங்களில் போலீஸும், ராணுவமும் அவர்களின் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள். த்திய காஷ்மீரில் அமைந்திருக்கும் பட்கம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் – 02.11.2014 -  மாலை ஐந்து மணி அளவில் மாருதி கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த நான்கு இளைஞர்களை நோக்கி இந்திய ராணுவம் சுட்டதில் இருவர் பலியானார்கள். மற்ற இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனது கொலை முகத்தை மறைத்து கொல்லப்பட்டவர்கள் முதலில் ராணுவத்தினர் என்று கதையளந்தது ராணுவம். கொல்லப்பட்டவர்கள் பட்கம் மாவட்டத்தின் நவ்கம் கிராமத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் என்ற செய்தி விரைவிலே வெளியானது. அவர்கள் பெயர்கள் ஃபைஸல் மற்றும் மேஹ்ராஜுதீன். ஃபைஸல் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன். காயமடைந்திருப்பவர்கள் ஜாகித் மற்றும் ஷகீல். (மேலும்....)

பயங்கரவாதிகள் தாக்கி 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாய் பொங்கி எழும் டைம்ஸ் ஆஃப் இந்தியா !

காருக்குள் இருந்தவர்கள் எந்தவிதமான எதிர் தாக்குதலலிலும் ஈடுபடாத நிலையில் ஏன் அவர்கள் அப்பாவிகளாகவும் இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றவில்லை போன்ற கேள்விகளுக்கு ராணுவத்திடம் பதிலில்லை. காரில் சென்றவர்கள் பயங்கரவாதிகள் என்ற துப்பு உண்மையென்றால் அவர்களை உயிருடன் பிடித்து அவர்களின் தாக்குதல் இலக்கு, நோக்கம், அமைப்பு ஆகியவை பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் ராணுவம் செயல்பட்டிருக்குமா? (மேலும்....)

ஐ.எஸ். போராளிகள் வடக்கு ஈராக்கில் குர்திஷ் நகரை நோக்கி முன்னேற்றம்

அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் வான் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈராக்கில் தொடர்ந்து முன்னேறிவரும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போராளிகள் தற்போது ஈராக்கின் குர்திஷ் நகரான இர்பில்லை நெருங்கியுள்ளனர். இர்பில் நகரில் இருந்து தென்மேற்காக 60 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் அல் குவைரியா நகரில் ஐ.எஸ். போராளிகள் குர்திஷ் தன்னார்வ துருப்புகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். எனினும் ஐ.எஸ். இர்பில் நகரை நெருங்கும் உடனடியான அபாயம் எதுவும் இல்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிபுணர் டக்லஸ் ஒலிவன் குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ். குவைரியா நகரில் குர்திஷ்களிடம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருவதாகவும் டக்லஸ் விபரித்துள்ளார். பழங்குடி உறுப்பினர்களை கொலைசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஈராக் அரச தரப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2006 மற்றும் 2007 காலப்பகுதியில் அமெரிக்காவின் ஆதரவில் ஹீட் நகரில் பழங்குடி உறுப்பினர்கள் எழுச்சிப் படை என்ற ஆயுதக் குழுவை உருவாக்கி அல் கொய்தா அமைப்புக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 05, 2014

எதிர்பார்த்த கொழுத்திப் போடல்களும் கொழுவல்களும்.......?

மலையக மக்களிடம் நாம் வாக்கு கேட்டு வரமாட்டோம் - த.தே.கூ

மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால் அவர்களுக்கு வடக்கு - கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, எங்களுடைய பயணம் என்பது எந்தவித அரசியல் நோக்கமும் கொண்டதல்ல. மலையக மக்களிடம் நாங்கள் வாக்குகேட்டு வரப்போவதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதென ஏற்கனவே  அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஊவா மாகாண அமைச்சராக இருக்கும் செந்தில் தொண்டமானும் சரி, ஏனைய அமைச்சர்களும் சரி இந்த மக்கள் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. (மேலும்....)

மீரியாபெத்த மண்சரிவுக்கு மாகம்புரவும் மத்தலவுமே காரணம்

ஹம்பாந்தோட்டையில், மாகம்புர  துறைமுகம் அமைப்பதற்காக கடல் தோண்டப்பட்டமைதான் கொஸ்லந்த, மீரியாபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படக் காரணம் என பொறியியலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுசெயலாளரும் மேல்மாகாண சபையின் கொழும்பு மாவட்ட உறுப்பினருமான சண்.குகவரதன், இன்று(04) தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை துறை முகத்தை அமைப்பதற்கு கடல் ஆழமாக தோண்டப்பட்டமையும்  மத்தல பிரதேசத்தில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுமே மீரியாபெத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டமைக்கு காரணம் என சில புவியியலாளர்கள் கூறுவதாக சண்.குகவரதன்  கூட்டிக்காட்டினார். திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலும் மக்களை பாதிக்கும் வகையில் அனல் மின் நிலையம் நிறுவப்படவுள்ளது. மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தளம் நுரைச்சோலையில் அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு எற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. அதேபோன்று காலி முகத்திடலுக்கு அருகில்; 233 ஹெக்டேயர் பரப்பளவு கடற்பரப்பை மூடி, துறைமுக நகரம் ஒன்றை அமைப்பதற்கு சீனாவுடன் அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
 

வடக்கில் தெரு சண்டைகள், குழு மோதல்கள் அதிகரிப்பு

வடமாகாணத்தில் குழு மோதல்கள் மற்றும் தெரு சண்டைகள் அதிகரித்துள்ளன. அரசியல் தரப்புக்கள் சில தமது தேவைகளுக்காக இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதாக குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் வடக்கில் ஏற்பட்டிருக்கும் இயல்பு வாழ்க்கையைக் குழப்பும் வகையில் தெருச் சண்டைகள், குழுச் சண்டைகள் என்பன அதிகரித்துள்ளன. இவ்வாறான சண்டைகளை சில அரசியல் தரப்புக்கள் தமது தேவைகளுக்காகத் தூண்டிவிடுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  இவ்வாறான செயற்பாடுகளுக்கு சில அரசியல் தரப்பினரின் ஒத்துழைப்பும் உள்ளது. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது மட்டுமன்றி முறைப்பாடு செய்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டில் சட்டம், ஒழுங்கு திருப்திகரமாக இருக்கும்போதுதான் அந்நாட்டின் நன்மதிப்பு வெளியில் தெரியும். ஆகையால் சட்டம் ஒழுங்கு துறை சுயாதீனமாக இருக்க வேண்டும். எனினும் இதில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. பொலிஸார் சுயாதீனமாக செயற்பட அனைத்துத் தரப்பினரும் இடமளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தன்னால் வளர்த்துவிடப்பட்ட பயங்கரவாதத்தை குறை கூறுகின்றது அமெரிக்கா

பயங்கரவாதிகளை பயன் படுத்தி இந்தியா மீது பாகிஸ் தான் மறைமுகப் போரை தொடர்ந்து நடத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப் பான பென்டகன் தெரிவித் துள்ளது. பாகிஸ்தானை தலைமை யிடமாக கொண்டு பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, பயங்கரவாத பயிற்சி அளிக்கப் படுகிறது. இந்த பயிற்சியை முடித்தவர்கள் பயங்கரவாத செயல்களை நிறை வேற்றுவதற்காக இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தானுக்கும் செல்கின்றனர். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ பாக்.இராணுவம் உறுதுணையாக உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் குறித்தும், அவர்கள் இந்தியா, ஆப்கானிஸ் தானில் நடத்தும் பயங்கரவாத செயல்கள் குறித்தும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் 100 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'பலமிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள முடியாத சு+ழ்நிலையில் பாகிஸ்தான் உள்ளது. இந்தியா ஆதரவு கொடுத்து வருவதால், ஆப்கானிஸ்தானிலும் அதன் ஆதிக்கம் பலிக்கவில்லை.  இதனால் எரிச்சல் அடையும் பாகிஸ் தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது மறைமுக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பயங்கரவாதிகளை பயன்படுத்திக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் அல் கொய்தா கிளை துருக்கி எல்லை வரை முன்னேற்றம்

அல் கொய்தா அமைப்பின் சிரிய நாட்டு கிளையான அல் நுஸ்ரா முன் னணி சிரியாவின் துருக்கி எல்லை க்கு மிக அருகாமை வரை முன்னே றியுள்ளது. மேற்குலக ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தீர்க்கமான எல்லைக் கடவையை கைப்பற்றவும் நுஸ்ரா முன்னணி முயற்சித்துள்ளது. சிரிய ஜனாதிபதி பசிர் அல் அஸாத் அரசு மற்றும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போராளிகளுக்கு எதிராக ஒரே நேரத்தில் யுத்தம் புரியும் திறன் கொண்டதாக மிதவாத கிளர்ச்சியாளர்களை மாற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கு அல் நுஸ்ராவின் முன்னேற்றம் பாரிய சவாலாக மாறியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய அயுதங்களின் உதவியோடு போரா டும் சிரிய புரட்சி முன்னணியின் கட்டுப்பாட்டில் இருந்த இதிலிப் மாகாணத்தின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களையும் கடந்த ஒரு சில தினங்களுக்குள் அல் நுஸ்ரா முன்னணி கைப்பற்றியுள்ளது. மறுபுறத்தில் நுஸ்ரா முன்னணிக்கு சவாலாக இருக்கும் ஐ.எஸ். போரா ளிகள் சிரியாவின் துருக்கிக்கான கிழ க்கு எல்லையாக இருக்கும் கொபானி நகரை கைப்பற்ற குர்திஷ்களுடன் போராடி வருகின்றனர்.

நவம்பர் 04, 2014

என் மனவலையிருந்து……..

மலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்

(சாகரன்)

மலையக மக்களின் அண்மைய அவலங்களை வைத்து அரசியல் நடாத்த கிளம்பிவிட்டனர் அரசியல்வாதிகள். பாராளுமன்றக் கதிரைகள் தமது பரம்பரைச் சொத்து என்பதை மனதில் நிறுத்தி இதற்கான வேஷங்கள் போடும் கூத்தாடிகள் இவர்கள். இந்த வேஷக்காரர்களை மலையக மக்கள் தமது பாரம்பரிய கலையான காமன் கூத்திற்கூடாக சாட்டையடி கொடுத்து விரட்ட வேண்டும். தமது உறவுகளின் ஒரு பகுதியை தம்மிடம் இருந்து பிரித்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப காரணமாக இருந்தவர்களிடம் இவர்கள் கேள்விகள் கேட்க வேண்டும். இந்தக் கேள்வி வேள்வியில் இந்த மக்களே இறுதியில் வெல்லவும் வேண்டும். இதற்காக அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் ஒரு அணியில் நின்று குரல்கொடுக்க வேண்டும். அன்றேல் மீண்டும் ஒருமுறை இவர்கள் சந்தர்பம் பார்த்து மலையகத்து அப்பாவி மக்களை தர்மபுரங்களில் குடியேற்றி குறைந்த கூலிகளை வழங்கி, மாலை நேரங்களில் இவர்களின் வறுமைக்கு தமது வழங்களைக்காட்டி  எமது மலையக பெண்களை தங்கள் மேய்சல் நிலங்களாக்க முயலுவர். வன்னியின் நிலச்சுவாந்தர்கள் பலருக்கு இந்த வரலாறு ஒன்றும் புதியன அல்ல. இதில் இவர்களில் பலரும் புனிதர்களும் அல்லர். இன்று மீண்டும் வெள்ளை வேட்டி கட்டி புனிதர்கள் போல் வேஷம் போட்டு நீலிகண்ணீர் வடிக்கின்றனர் இவர்கள். ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட இதே மலையக குழந்தைகளை ‘வேலைக்காரி’ என்று தத்து எடுத்து அடிமைகளாக 24 மணிநேரமும் கூலி இல்லா வேலை வாங்கிய வடுக்களைக் கொண்டவர்கள் இவர்கள். நாய்க்கு போடும் மிகுதியில் ஒருபகுதியை ஒரு வேளை மட்டும் ‘தீனி’யாகப் போட்டு நாய்கள் படுக்கும் கொட்கைகளில் சாக்கில் படுந்துறங்க வைத்த கொடுமை அனுபவங்கள் இந்த பிஞ்சுகள் பலருக்கும் உண்டு. இன்றுவரை எந்த தமிழ் பாராளுமன்ற அரசியல் தலைவர்களும் இதற்கு வருந்தியது கிடையாது. ஏன் எனில் இவர்களும், இவர்களின் மூதாதையரும் இதன் பங்காளிகள் அல்லவா. அப்போ எப்படி ஐயா நம்ப முடியயும் இவர்களின் மலையகத்து வெள்ளை வேஷ்டி விசிட்டை. என்ன….. இது எல்லாம் இவர்களுக்கு அரசு சொகுசு வாகனங்களில் கூட்டமாக எமது அழகிய மலையத்திற்கு ஒரு சுற்றுலா அவ்வளவுதான். இதற்கு மேல் ஏதும் இவர்கள் செய்யப் போவது இல்லை. தாய் தந்தையரை இழந்த 75 வரையிலான மலையகக் குழந்தைகளை பொறுப்பெடுத்து வளர்க்கப்போகின்றனர் என்று வடமகாண சபையில் முழக்கம் வேறு. இதே போலத்தானே அன்றும் தமது பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவு இல்லாத வறுமையில் உங்களிடம் பிஞ்சுகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றனர் உயிருடன் இருந்த தாய் தந்தையர். நீங்கள் அந்த பிஞ்சுகளை ‘வேலைக்காரி’ என்று வஞ்சனையுடன் அடிமைகள் போல் நடத்தியது இன்றும் கல்லில் எழுதிய எழுத்துக்களாய் தலைமுறை கடந்தும் தணர்ந்துகொண்டு இருக்கின்றது. இதுதான் ஒட்ட முடியாத உறவுகளாய் எம்மினத்து உழைப்பு மக்கள் எட்டவே உயரத்தில் அட்டைகடிகளுக்கும், பேரினவாத அடிகளுக்கும் இடையில் யாழ்ப்பாணமும் வேண்டாம், கொழும்பும் வேண்டாம், தருமபுரமும் வேண்டாம் என்று இன்றுவரை இருக்கின்றர். இன்றும் எம்மில் பலருக்கு இவர்கள் ‘தோட்டக்காட்டான்’, ‘வயித்துகுத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக்கூடாது. ‘கள்ளத் தோணி’ என்று பழிப்பதில், பாகுபடுத்துவதில், தரம் குறைத்து பார்பதில், தள்ளிவைப்பதில் புழகாங்கிதம் இல்லை என்று யாராவது உரத்து கூறட்டும் பார்க்கலாம். இதைதானே ‘தொப்பி பிரட்டி’, ‘காக்க’ என்று இனச்சுத்திகரிப்பு செய்தனர் யாழ்பாணத்தில். இதற்கு எல்லாம் எதிர்குரல் கொடுத்தவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டனர், சுட்டக்கொலப்பட்டனர், துரத்தியடிக்கப்பட்டனர், காணாமல் செய்யப்பட்டனர். இலங்கை இராணுவம் ஒரு புறம் என்றால் மறுபுறம் நீங்கள் நின்று அதேயளவில் சுட்டக்கொல்லவில்லையா. இன்றுவரை மீள்குடியேற்றம் என்று வந்தால் முஸ்லீம் மக்களும், தருமபுரத்து மக்களும் இரண்டாம்தர பிரஜைகளாக கையாளுவதில் இந்த வீரர்கள் பின் நிற்கவில்லை என்ற செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. எனவேதான் சொல்கின்றோம் எமது மலையகத்து சகாக்களே இந்த பொய்யர்களுக்கு எதிராக காமன் கூத்தாடுங்கள், வேள்வி நடத்துங்கள்கள், பொய்யர்களை அனுமதிக்காதீர்கள். இது கொழும்பில் ஜாகைபோட்டு வீரவசனம் பேசும் சட்டை கசங்காத நடிகர் விபி கணேசனுக்கும் பொருந்தும். இந்த வேள்விகளில் என்றென்றும் நாம் உங்களோடு தோளோடு தோள்கொடுத்து நிற்போம். இவ்விடத்தில் இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உளவியல் மாணவர் அமைப்பு இந்த அனர்ந்தங்களுக்கு செய்துவரும் நிவாரணப் பணிகளையும், மேலும் முகமறியாத பல தனி நபர்களையும், ஸ்தாபனங்களையும் நாம் கரிசனையுடன் எடுத்துப்பார்பதும் நலம் என்று நினைக்கின்றோம்.

(சாகரன்) (நவம்பர் 04, 2014)

(ள்)ள விஜயம்...

கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதியில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் ஞாயிறறுக்கிழமை(2) சென்று பார்வையிட்டனர். இக்குழுவில்,  தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுதுபோக்கு பிரதி அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஸ்ணன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஈ.சரவணபவன், பொன்.செல்வராசா, எஸ்.ஸ்ரீதரன், ப.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், வினோநோகதர ராஜலிங்கம் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் சண்முகவரதன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.இராஜதுரை, ஜனாதிபதியின் இணைப்புப் பணிப்பாளரும்,மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளருமான அ.அரவிந்தகுமார் உட்பட பலர் உள்ளடங்கியிருந்தனர். இவர்கள் பாதிக்கப்பட்ட மீரியபெத்த பகுதிகளுக்கு சென்று கள நிலவரங்களை பார்வையிட்டதோடு, தேடுதல் நிலவரங்களை கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா மகா வித்தியாலயத்திலும் பூனாகலை இல: 1, 2 பாடசாலைகளிலும் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு   நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறை இலங்கையில் இனி மேலும் நீடித்திருக்க வேண்டுமா?

(சுகு-ஸ்ரீதரன)

ஜனாதிபதி தேர்தல் 2015 முற்பகுதியில் அனேகமாக நடைபெறும் என்பது போல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.மகிந்த ராஜபக்ச 3 வது தடவையாக தேர்தலில் நிற்கப் போகிறார். 2 தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்கமுடியாது என்றிருந்த நிலை இப்போது எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் என்று 18 வது திருத்தச்சட்ட மூலத்தின் மூலம் வழி வகுக்கப்பட்டிருக்கிறது. (மேலும்....)

ஐந்தில் ஒரு நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில்

நாட்டின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி மண் சரிவு ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு இயற்கை காரணங்களைப் போன்று மனிதனின் நடவடிக்கைகளும் காரணமாகி இருப்பதாக நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி குமாரி வீரசிங்ஹ தெரிவித்துள்ளார். மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்கள் ஏற்கனவே மண்சரிவு அபாய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத கல் உடைப்பு. காடுகளை அழித்தல், மாணிக்கக் கல் அகழ்வு, கடல் மண் எடுத்தல் போன்றவை தொடர்பாக உடன் அறியத்தர வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதி இன்றி நிலப்பரப்பை மாற்றுதல், கட்டடங்களை நிர்மாணித்தல் போன்றவற்றி லிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புலட் இற்காக இந்தியா சீனாவை நெருங்குகின்றது....?

சென்னையிலிருந்து டில்லிக்கு 7 மணி நேரத்தில் அதிவிரைவுப் பயணம்

சென்னையில் இருந்து டில்லிக்கு 7 மணி நேரத்திலே சென்றுவிடும் விதத்தில் புல்லட் ரயில் இயக்குவதற்கான ஆய்வுப்பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக் கிறது. அதிவேக புல்லட் ரயில் என்பது இந்தியாவில் இன்னும் கனவாகவே இருக் கிறது. இந்த நிலையில் சென்னை - டில்லி இடையே புல்லட் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயும் பணியை சீனாவை சேர்ந்த சீன ரயில் ஹைஸ்பீட் நிறுவனத்திடம் ரயில்வே வாரியம் கடந்த சில தினங் களுக்கு முன் ஒப்படைத்தது. இந்த ஆய்வில் அந்த நிறுவனத்துடன் ரயில் விகாஸ் நிகாம் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  சீன அதிபர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது, மத்திய அரசு, சீன அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு அங்கம் தான் இந்த நடவ டிக்கை என அறிவிக்கப்படுகிறது. ஆய்வுப்பணியை நடத்தி முடிக்க 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை ஆகும். சாதாரணமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் தடம் அமைக்க ரூ.5 கோடி செலவு ஆகும். அதுவே புல்லட் ரயிலுக்கான தடம் என்றால் ரூ.126 கோடி வரை செலவாகும்;. இந்த புல்லட் ரயில் தடத்தை பிரான்சு, ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா அமைத்து தந்தால் 30 சதவீதம் மலிவாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து டில்லிக்கு ராஜ் தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயண நேரம் 28 மணிநேரமாகிறது.

கூரை ஏறி கோழி பிடிக்காத வடக்கு மாகாண சபை வானம் ஏறி வைகுண்டம் செல்லப்போகின்றதாம்

(என்.பிருந்தாபன்)

பதுளை மாவட்ட கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம் பெற்ற மண்சரிவில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் 75 பேரையும் பொறுப்பேற்று அவர்களைப் பராமரிப்பதற்கு வடக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இவ்வாறானதொரு காரியத்தை வடக்கு மாகாண சபை செய்யுமாயின் அது வரவேற்கப்படவேண்டிய விடயம். தெற்கு தமிழர்களுக்கும் வடக்கு தமிழர்களுக்கும் இது ஒரு உறவுப்பாலமாக கூட அமையும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
குறித்த சம்பவத்தில் தமது பெற்றோரை இழந்த மேற்படி சிறுவர்களின் வலிகளுக்கு ஒத்தணம் கொடுப்பதற்கு எவராலும் முடியாது என்றாலும் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண சபை சிந்தித்திருப்பது வரவேற்கப்படவேண்டிய விடயம்.
(மேலும்....)
 

கனடா இந்திய பூர்வீக இலங்கைத் தமிழர் பேரவையினர் (மலையகத் தமிழர் ) அஞ்சலி நிகழ்வு

கனடாவில் வாழும் இந்திய பூர்வீக இலங்கைத் தமிழர் பேரவையினர் (மலையகத் தமிழர் )கொஸ்லாந்தை மெரியபத்தை பேரழிவினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் முகமாக ஒரு கலந்துரையாடல் நிகழ்வினை ஒழுங்கு செய்து இருந்தது. மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு உயிர் இழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. பேரவையின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் நடை பெற்ற இக் கலந்துரையாடலில் பலரும் தமது கருத்துகளைத் தெரிவித்தார்கள். எவ்வாறு நிதி சேகரிப்பது என்றும் சேகரித்த அந்த நிதிக்குச் சரியான நம்பிக்கையான கணக்கு வைத்து இருக்க வேண்டும் என்றும் இந்த நிதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் கலந்துரையாடப்பட்டது. செயலாளர் ஜெயஹிந்தராஜா பல வினாக்களுக்குத் தகுந்த விளக்கம் அளித்தார். அத்துடன் உடைகள், பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்களும் சேகரிக்கப் பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது. சேகரிக்கப் படும் நிதிக்காக புதிய ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப் படவேண்டும் என்றும் நிதி அளிப்பவர்கள் நேரடியாக இந்தக் கணக்கில் செலுத்தலாம் என்றதும் தீர்மானிக்கப் பட்டது. இத் துயர நிகழ்வு பற்றி ஊடகங்கள் பெரிய அளவில் கவனம் செலுத்தாமை பற்றி கவலை தெரிவிக்கப் பட்டது

நவம்பர் 03, 2014

என் மனவலையிலிருந்து….

மலையகம்….. வாழ்வின் அவலம் தொடர்கின்றது

(சாகரன்)

லயன்களுக்குள் அடைபட்டு தமது வாழ்வை தொலைத்தும் நிற்கும் அவலம் மலையக மக்களுக்கு ஒன்றும் புதிய அனுபவங்கள் அல்ல. மரணத்துடன் வாழ்தல் என்பதை தமது அன்றாட வாழ்வாக கொண்டிருக்கும் இலங்கையின் முதன்மை உழைப்பாளிகளை இன்றுவரை இலங்கையில் யாரும் முன்னிலைப்படுத்தி, அடையாளப்படுத்தி அரசியல் செய்யவில்லை. இடதுசாரிகள் பலமாக இருந்த காலங்களில் பலமான தொழிற் சங்கங்களை அமைத்து போராடியது என்னமோ உண்மைதான். ஈழவிடுதலை அமைப்புக்களும் தமது அகண்ட ஈழத்தின் வரைபடத்தில் இவர்களை உள்ளடக்கியது என்னமோ உண்மைதான். ஆனால் இந்த மக்களின் அன்றாட பிரச்சனைகளை மையப்படுத்தி இவர்களை அணிதிரட்டி இவர்களின் விடிவிற்காக போராடியது இல்லை. இவர்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் என்பனவற்றில் இருப்பிடம் பற்றி கவனத்தில் எடுத்திருந்தால் மண்சரிவினால் ஏற்பட்ட நேற்றைய அவலங்களை ஓரளவு தவிர்த்திருக்கலாம். பாதுகாப்பற்ற, மழைகளினால் மண்சரிவு ஏற்படக் கூடிய பிரதேசங்களைத் தவிர்த்து இருப்பிடங்களை அமைத்திருந்தால் இந்த மண்சரிவு இவர்களுக்கு இத்தகைய இழப்புக்களை ஏற்படுத்தியிருக்காது. வசதி படைத்தவர்களும், அரசியல்வாதிகளும் மலையகத்தில் மண்சரிவு அற்ற பலமான பிரதேசங்களில் தமது இருப்பிடங்களை அமைத்து இருந்து கொண்டு இவர்களின் இருப்பிடம்பற்றி யாரும் கவனமற்றதாக செயற்பட்டதாகவே அறிய முடிகின்றது. புலம்பெயர்  தேசம் எல்லாம் 2004 ல் சுனாமியைக் காட்டி உண்டியலைக் குலுக்கி லட்சக்கணக்கில் டாலர்களைச் சேர்த்ததே வரலாறு. இதில் பெரும்பகுதி அன்றை வன்னி 'மன்னர்கள்' புலிகளிடம் நிவாரணம் என்று ஆயுதம் வாங்க சென்றிட, ஒரு பகுதி உண்டியல் குலுக்கியவர்கள் சுருட்ட உண்மையில் பாதிக்கப்பட்டவர்களிடம் நிவாரணம் போய் சேர்ந்தது என்னமோ பொரி விளாங்காய்தான். சில நல்ல உள்ளங்கள் இந்த மோசடியை உணர்ந்ததினால் தமக்கு நன்கு தெரிந்தவர்கள் ஊடாக  நேரடி உதவிகளை வழங்கியது பாராட்டத்தக்கது. இன்று புலம்பெயர் தேசத்து தமிழ்தொலைக்காட்சி, வானொலிகள் எல்லாம் இலங்கையின் மத்திய பகுதியில் நடைபெற்ற இந்த அனர்ந்தங்கள் பற்றி ஒரு சோக கீதமும் பாடியதாக அறிய முடியவில்லை. 'வெடி'யை வைத்து வியாபாரம் செய்த இந்த விண்ணர்கள் இந்த உழைக்கும் மக்களை வைத்து வியாபாரம் செய்தால் அது எடுபடாது என்பதனால் தேமே என்று இருந்துவிட்டனர். இந்நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் போராட்டதிற்கு எப்படி ஐயா ஏனைய இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் உங்களுக்கு ஆதரவுகளை வழங்கும். எல்லாவற்றிற்கும் அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது மொழிபேசும் தனது நாட்டில் வாழும் ஒரு பிரிவினருக்காக கட்டைக்குரலில் ஏனோதானே என்று அவலங்கள் நடைபெற்று 3 தினங்களின் பின்பே பேச ஆரம்பித்திருக்கின்றனர். இது இவர்களின் 'தேசியம்' பற்றியும், மக்கள் நலன் பற்றியும் கேள்விகளை எழுப்பியே நிற்கின்றன. வாக்கு வங்கியை நம்பி கோஷம்போடும் இவர்கள் தமது வாக்குகளுக்கு சம்பந்தம் இல்லாத பிரதேச மக்களைப் பற்றி கோஷம் போடுவார்களா என்ன….? பாதிக்கப்பட்ட இந்த மலையக மக்களுக்காக இவர்களின் கோஷத்தை எதிர்பார்த்திருப்பவர்களே இங்கு முட்டாள்கள். வாக்குரிமை மறுக்கப்படும் சட்டமூலத்தை ஆதரித்த செல்வநாயகத்தின் வழித்தோன்றல்கள் அல்லவா இவர்கள். பிரித்தானியரால் தமிழ்நாட்டில் இருந்து தலைமன்னார் ஊடாக மலையகத்திற்கு அடிமைகளாக தாம் பயணிக்க வேண்டிய பாதையை தாமே உருவாக்கி 75000 பேருக்கு மேல் தமது உறவுகளின் உயிர்களைத் தியாகம் செய்த இந்த மக்களில் பலர் இன்றுவரை இதே பாதையில் மீண்டும் ஒருமுறையேனும் பயணிக்காமல் மலை முகடுகளில் லயன்களுக்குள் அடைந்து கிடந்து மண்சரிவுகளினால் புதையுண்டு போன சோகமே இறுதியில் இவர்களின் வாழ்வின் வரலாறாக மாறி இருக்கின்றது. இம் மக்களின் வாக்குகளால் மந்திரிப்பதவி பெற்ற மலையகத்தின் பரம்பரை தொழிற்சங்கவாதியும், மந்திரியுமான தொண்டைமான் கூறுகின்றார் '.....பாதிக்கப்பட்ட பிரதேசம் மண்சரிவு அபாயகரமானது.........' என்று தனக்கு தெரிந்திருக்கவில்லை என்று. எவ்வளவு பொறுப்பற்றதனமான பேச்சு இது. மலையக மக்களில் உழைப்பு ஆதாரத்தில் ஒரு பகுதியை தமது சொகுசு வாழ்விற்காக ஒதுக்கியுள்ள இவர் போன்ற பொறுப்பற்ற அமைச்சர்களால் இந்த மக்களுக்கு எந்த விடிவும் வரப் போவது இல்லை.

(சாகரன்)(நவம்பர் 03, 2014)

வட மாகாண சுகாதார அமைச்சர் விழிப்படைகின்றார்.....?

 ஐஸ்கிறீம்களில் மலத் தொற்று காணப்படுவதாகத் தெரிவித்த விடயம் உண்மைக்குப் புறம்பானது! யாழில் வடமாகாண சுகாதார அமைச்சர் விளக்கம். ஐஸ்கிறீம்களில் மலத் தொற்று காணப்படுவதாகத் தெரிவித்த விடயம் உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறான சொற்பதத்தை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையும் பாவித்திருக்கவில்லை. நுண் கிருமித் தொற்றுக் காணப்படுவது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஊடகங்கள் சில தான் இவ்விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளன. எதிர்காலத்தில் ஊடகங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார். தண்ணீரில் நுண் கிருமித் தொற்றுக் காணப்பட்டால் அந்த தண்ணீரைக் கொண்டு உருவாக்கப்படும் ஐஸ்கிறீம்கள் பாவனைக்கு உகந்தவையா? தங்களால் தரப்பட்டுள்ள தகவலில்லிருந்து உருவாக்கப்பட்ட கேள்வி இது? இது கூட வடமாகாண சுகாதார அமைச்சரான வைத்திய கலாநிதிக்கு விளங்கவில்லையா? அல்லது அரசியலால் தெரியாமல் போனதா ? இது தான் படித்தவர்கள். பட்டம் பெற்றவர்கள். என்று கூறி அமைச்சரான தமிழ் அரசு அமைச்சர்களின் இலட்சனமா? யாழ் வர்த்தக சங்க தலைவர் ஜெயசேகராவின் பிரசன்னமும், அவரது படமும் தெரிகிறது...எது எப்படியிருந்தபோதிலும் உங்களது படிப்பு, பட்டங்களை பார்த்து தமிழ் அரசுக் கட்சியின் அழுத்தத்தினாலும் தவிர்க்க முடியாது உங்களை அமைச்சராக்கின முதலமைச்சர் அவர்களின் காலை வாரிவிடாதீர்கள் ஐயா.. மக்கள் உயிருடன் இருக்கவேண்டும்.

அரசியல் வேறு காட்சி வேற!

யாழ்ப்பாணத்தில் இப்பவெல்லாம் பாட்டுக் கச்சேரிகள் விழாக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஒரே அமர்க்களமாகத்தான் இருக்கு. அங்கெல்லாம் ஜே ஜே என்று சனம் அலைமோதுவதைக் காணக்கூடியதாய் இருக்கு. சனங்கள் சந்தோசமாய்க் கூடிக் களிப்படையும் காட்சியைப் பார்க்கவும் சந்தோசமாய்த்தானிருக்கு. பூங்காக்கள் கடற்கரை ஃபுட்சிற்றி கே.எஃப்சி கடைத்தெருக்கள் என்று இங்கேயும் நாட்டின் மற்ற மற்ற இடங்களைப் போலவே காட்சிகளில் வேறுபாடுகளில்லை. நமக்கு, அதிகாரப் பகிர்வொன்றின் மூலம் அரசியலுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் தீர்வொன்றைக் கண்டுவிட்டால் மற்றப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.(மேலும்....)

எம்.ஆர்.ராதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து....
 

ஜெயில்லே நானே சமைச்சுக்குவேன். குலாப்ஜாமூன், ஜாங்கிரி, இட்லி எல்லாம் செய்துக்குவேன். என் கூட வெள்ளைக்கார கைதி இருந்தார். இட்லியை மட்டும் அவருக்குக் கொடுப்பேன். நான் செய்து கொடுத்த இட்லியை புகழ்ந்து, அவருடைய சம்சாரத்துக்குக் கூட லெட்டர் போட்டார் அவர்.

என் இட்லிக்குக் கூலியா, திட்டுறதுக்கு சில வார்த்தைகளை மட்டும் அவர்கிட்டே கேட்டு கத்துக்கிட்டேன். அவங்க நாட்டை பத்தியெல்லாம் கேட்கும் போது, பொறுமையா பதில் சொல்வார்.
"வக்கீல்களே ஜட்ஜா வர்றது சரியா?'ன்னு அவர்கிட்டே கேட்டேன்.
"அதுதானே வழக்கம்?' என்றார் அவர்.
"உங்க நாட்டிலேயும் அப்படித்தானா?' என்றேன்.
"ஆமா!'ன்னார்.
"முப்பது வருஷமா பொய் சொல்றதையே பிழைப்பாக கொண்ட ஒரு வக்கீல், பதவி உயர்வுங்கிற பேரிலே ஜட்ஜ் ஆனதும், எல்லாரும் அவரை கடவுளுக்கு சமம்ன்னு சொல்றாங்களே... இது நியாயமா?'ன்னு கேட்டேன்.
அதுக்கு அவர் பதில் பேசவேயில்லை.
ராதா கேட்பதில் நியாயம் இருக்கா?

மலையிலிருந்து மண்ணுக்குள்...

(எஸ். ஹமீத்) 

**மலையிலிருந்து மனிதர் விழுதல்
  பரிதாபகரமானது...
  மலையே இடிந்து மனிதர் மேல் வீழ்தலானது...? 

**வலியுரைக்க வார்த்தைகளில்லை 

**வரைபடத்தில் மட்டும் அவர்கள்
  உயரத்தில் இருந்தார்கள்...
  வாழ்க்கைத் தரம் என்றுமே
  பாதாளம்தான்...! 

**எப்பொழுதுமே
  சுருங்கிய அவர் வாழ்வை
  நொருங்கிய மலை
  சூறையாடிவிட்டது...! 

**ஈமச் சடங்குகளுக்குக் கூடப்
  பணம் இல்லாத
  ஏழைகள் அவர்கள்...
  அதனால்தானோ,
  இலவசமாய்ப் புதைந்து போனார்கள்..! 

**அந்தத் தேயிலைச் செடிகளுக்கு
  இதுநாள் வரை ஊற்றிய
  இரத்தமும் வியர்வையும்
  போதாதென்றா இப்பொழுது
  உயிர்களையும் புதைத்திருக்கிறார்கள்..? 

**இனி..
  அருந்தத் தொடங்கும் ஒவ்வொரு
  கோப்பைத் தேநீரிலும்
  அவர் உயிர் மணக்கத் தொடங்கும்..!

தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளை மையமாக வைத்தே யாழ்தேவி ரயில் சேவைகள்

தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டே யாழ்தேவி ரயில் சேவை கல்கிஸை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதேயொழிய இராணுவத்தினரின் வசதிக்காகவில்லையென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பொதுமக்களுக்காகவன்றி இராணுவத்தினருக்காகவே யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை முற்றாக மறுத்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட விளக்கத்தையளித்தார். தற்போது கல்கிஸ்ஸையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நான்கு ரயில்கள் செல்கின்றன. சுமார் 2500 பயணிகள் மாத்திரமே செல்லக்கூடிய இந்த ரயில்களுக்காக நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பேர் ரயில் சீட்டைப் பெற்றுக் கொள்ள வருகின்றனர். ‘யாழ் தேவி’ ரயிலுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் புதிதாக மேலும் பல ரயில் வண்டிகளை சேவையிலீடுபடுத்து மாறும் எமக்கு கோரிக்கைகள் கிடைத்துள்ளன. நடைமுறையிலுள்ள ரயில் வண்டிகளுடன் புதிதாக ரயில் பெட்டிகளை இணைத்துக் கொள்வது சாத்தியமாகாது என்பதால் ரயில் வண்டிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பது குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் வெகு விரைவில் ‘யாழ் தேவி’ ஊடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மரக்கறி வகைகளை எடுத்து வருவது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

கொஸ்லந்தை மண்சரிவுக்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையே காரணம்

கொஸ்லந்தை மீரியவத்தையில் மண்சரிவு ஏற்பட பிரதான காரணம் அங்கு வசித்த மக்கள் அப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மரக்கறி உற்பத்தி செய்தமையே என ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இற்றைக்கு எட்டு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய ஓரிடம் என எல்லையிடப்பட்டு தூண்களும் நடப்பட்டு இலக்கமிடப்பட்டதாகவும் பிரஸ்தாப ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பேராதனை பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானப் பேராசிரியர் கபில தஹநாயக்கா, மேல் நீர்பரப்பு பாதுகாப்பு திட்ட முன்னாள் பணிப்பாளரும் சுற்றாடல் ஆய்வாளருமான டி. ரீ. முனவீர ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இப்பகுதியில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட கூடாதென எட்டு வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்துக்கும் அறிவிக்கப் பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இவ்விடயமாக அதிகாரிகளும், தோட்ட மக்களும் கவனம் செலுத்தவில்லை இப்பகுதியில் மரக்கறி உற்பத்தி வியாபித்து உள்ளதாகவும் முனவீர தெரிவித்தார்.

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர் பகுதிகளில் நேற்று தனியான தேர்தல்

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் மேற்குலகின் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனியாக தேர்தலை நடத்தியுள்ளது. கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கைவசம் இருக்கும் மக்கள் குடியரசு என்று பிரகடனம் செய்யப்பட்ட டொனஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்களிலேயே ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. ரஷ்யா ஆதரவுடனான இந்த தேர்தலை அங்கீகரிப்பதில்லை என்று உக்ரைன் மத்திய அரசு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளன. இந்த பிராந்தியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிவினைவாதிகளுடனான மோதலில் குறைந்தது 7 உக்ரைன் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். உக்ரைனில் கடந்த வாரம் பொதுத் தேர்தல் இடம்பெற்றபோதும் சுதந்திர நாடு என்ற வகையில் உக்ரைன் சட்டத்திற்கு கட்டுப்பட தேவையில்லை என்று அறிவித்த கிளர்ச்சி தலைவர்கள் அந்த தேர்தலை புறக்கணித்தனர். டொனஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்கள் கடந்த ஏப்ரலில் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது தொடக்கம் அரச படையுடன் இடம்பெற்று வரும் மோதலில் இதுவரை குறைந்தது 3700 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்த விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், தற்போது கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இவர் கட்டாருக்கு சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நவம்பர் 02, 2014

ஒரு வருட சாதனை இது என ஒன்றையாவது கூற முடியுமா?

வட மாகாண சபை ஆட்சி பீடமேறி கடந்த வார இறுதியுடன் சரியாக ஒரு வருடம் கழிந்துவிட்டது. இந்த ஒரு வருடத்தில் வடமாகாண சபையை தலைமையேற்று நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தம்மால் மேற்கொள்ளப்பட்ட ஓர் அபிவிருத்தி நடவடிக்கை அல்லது முன்னேற்றகரமான ஒரு சிறு திட்டம் இது என ஒன்றையாவது வெளியுலகிற்குக் கூற முடியுமா? நிச்சயமாக இல்லை. இந்த ஒரு வருட காலத்தில் எத்தனையோ விடயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. (மேலும்....)

அரசுடன் இணைந்து செயற்பட நாம் தயார் - TNA தலைவர் இரா. சம்பந்தன்

இனப்பிரச்சினைக்கு நல்லதோர் தீர்வினை முன்வைத்து தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் தயார் என்றால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தயாராகவே உள்ளது என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். கடந்த வியாழனன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இவ்விடயத்தைக் கூறுவது இது ஒன்றும் முதற் தடவையல்ல. தமக்குக் தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தைக் குறை கூறுவதும் இத்தகைய அழைப்பு விடுவதும் அவர்களது வழமையான விடயம். அவர்கள் இவ்வாறு பிரசாரம் தேடி மக்களை ஏமாற்றுவதிலும் பார்க்க உண்மையான இதய சுத்தியுடன் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அரசாங்கம் பேசத் தயார் என ஏற்கனவே பல தடவைகள் கூறிவிட்டது. ஜனாதிபதி அவர்களே நேரடியாக இந்த அழைப்பையும் விடுத்துள்ளார் எனச் சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால சில்வா இவ்விடயம் தொடர்பாக கேட்ட போது தெரிவித்தார்.

தானும் செய்யாது செய்பவரையும் செய்ய விடாது... - வடமாகாண எதிர்கட்சி முதல்வர்

வடமாகாண சபை உருவாக்கப்பட்டு சரியாக ஒரு வருடமாகியுள்ளது. இந்த ஒரு வருட பதவிக்காலப் பகுதியினுள் வடபகுதி மக்களுக்கு அம்மாகாண சபை செய்த சேவை அல்லது சாதனை என்ன?

உண்மையைச் சொல்வதானால் உருப்படியாக எதனையுமே செய்யவில்லை. இதில் சாதனை என்று கூற என்ன இருக்கிறது. மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியிலும் கடந்த 10 மாதகாலத்தினுள் 25.71 வீதம் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இந்த வருடத்தில் வட மாகாண சபைக்கு மீண்டுவரும் செலவினமாக 13,650 மில்லியனும் மூலதன செலவாக 1876 மில்லியனும் ஒதுக்கப்பட்டது. இவற்றில் 25 வீதமே செலவிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே அவர்களது சாதனையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். (மேலும்....)

நடேசன் எழுதிய “அசோகனின் வைத்திய சாலை”

பிராணி - மனித சமரசம்

மெல்பேர்ண் வளர்ப்பு பிராணி வைத்தியசாலை ஒன்றை பிரதான தளமாக கொண்டு இந்த நாவல் இயங்குகிறது. மௌரிய சாம்ராச்சியத்து அசோகமன்னர் மிருக வைத்தியசாலை அமைத்திருந்தாரம். அது கருதியே இப்புத்தகத்திற்கு இப்பெயர் மானிடம் அதனோடு இரண்டறக்கலந்த பிராணி -வாழ்வுச் சிக்கல்கள்  தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. வியட்னாமிலிருந்து 1970களில் சென்ற படகு மக்களில் இருந்து அவுஸ்திரேலிய பூர்வ குடிகள் உலகின் வௌ;வேறு பகுதிகளில் இருந்து வந்த மனிதர்கள் பிராணி உலகம் -வரலாறு -வைத்தியம் தொடர்பான விசயாதாரங்கள் நிரம்பி வழிகின்றன.(மேலும்....)

மண் மூடிய துயர வரலாறு.

1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை. தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம். ஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர். (மேலும்....)

மோடியின் இரண்டு முகங்கள்

கிரேக்க புராணங்களில் மனித-குதிரை வடிவ புராண உயிரிகளும், மனித உடலில் எருதின் தலை உள்ள புராண உயிரிகளும், பெர்சியர்களிடத்தில் உடல், வால், பின்கால்கள் ஆகியவை சிங்கத்துடையதாகவும், தலையும், இறகுகளும் பருந்தினுடையதாகவும் உள்ள கற்பனை உருவம் உள்ளது. பிரித்தானியர்களிடத்தில் யுனிகார்ன் உள்ளது. மேலும் தேவதைக் கதைகளில் கடற்கன்னி, மனித உருவத்திலிருந்து ஓநாய் உருவத்திற்கும் பின்பு மனித உருவத்திற்கும் மாறும் உயிரிகள் இருக்கின்றன. மோடியின் நம்பிக்கை அளவுகோல்களின் படி பார்த்தால் மேற்கூறியவையும் உண்மையில் இருந்தனவென்றே ஆகும். ஆனால் யாராவது ஒருவர் இதனை நம்ப முடியுமா? அல்லது நம் கனவுகளில் இருக்கிறதோ? அல்லது நாம் குழந்தைகளாக இருக்கும் போது இந்த நம்பிக்கை இருக்குமோ என்னவோ? (மேலும்....)

இல்லவே " இல்லாத" நாடுகள்

1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - பூட்டான்

2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - காம்பியா

3) "காகங்கள்" இல்லாத நாடு - நியூசிலாந்து

4) "ரயில்" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்

5) "பாம்புகள் " இல்லாத நாடு - அயர்லாந்து

6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு - நவ்ரு

7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

8) "பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு -பெரு

9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - பெர்முடா

நவம்பர் 01, 2014


துயரங்கள் பகிர்வோம்........!

கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கிழக்குப் பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதைக் காணலாம்.

உதவுங்கள் உறவுகளுக்காய் !

பதுளையின் கொடூர மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காய் நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் யாழ் பல்கலைக் கழக சமுதாய வழிகாட்டல் மையத்தினர் ஈடுபட்டுள்ளனர் அன்புள்ளம் கொண்ட உறவுகளே நீங்களும் உதவுங்கள் உதவிக்கரம் நீட்டுங்கள். உடனடியாக இந்த உதவி தேவைப்படுவதால் விரைந்து எம்முடன் செயற்பட தயாராகுங்கள் உங்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம்
தொடர்புகளுக்கு:
சமுதாய வழிகாட்டல் மையம்
யாழ்பல்கலைக் கழகம்

0776372458
0776336611
0779201344
Centre for hope
Counselling & Community Guidanc e Centre
Department of Philosophy & Psychology
University of Jaffna

என்மனவலையிலிருந்து……

எபோலா(Ebola) இனி மெல்லச் சாகும்…….?

(சாகரன்)

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இன்று உயிர்க் கொல்லியாக மாறி மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் நோயாக உருவெடுத்திருக்கின்றது எபோலா(Ebola) என்னும் வைரஸ் வியாதி. ஆபிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை, வெப்ப சீதோஷண கால நிலை இதனை மேலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. அண்மையில்தான் எபோலா(Ebola)  முதலில் கண்டு பிடிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவ நிறுவனங்களால் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த வைரஸ் 2002 ம் ஆண்டு மனிதக் குரங்கினங்களில் இருந்ததாக அறியப்பட்டது அன்று. வைரஸ் இற்கு இருக்கும் பொதுத்தன்மையான கால ஓட்டத்துடன் மாற்றமடையும் போக்கால் அது இன்று புது அவதாரத்தை எடுத்திருக்கின்றது என்னமோ உண்மைதான். இது ஒது பொதுவான போக்கும் ஆகும். இந்த எபோலா(Ebola) வசதிபடைத்த அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாததினால் இது அதிகம் ஆராய்சிக்களுக்குள் உள்ளாக்கப்படாமல் விடப்பட்டுவிட்டது. இது எங்கள் கொல்லைக்குள் இல்லை அடுத்தவன் கொல்லைக்குள்தான் இருக்கின்றது எனவே எம்மைப் பாதிக்க போவதுதில்லை என்ற மாற்றான் தாய் மனப்பாங்கால் இன்று கட்டுக்கள் கொண்டு வர முடியாத ஒரு நோயாக உருவெடுத்திருக்கின்றது. இந்த தொற்றும் வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வருதல் என்ற செயற்பாட்டில் மேற்குலக நாடுகளின் அரசியல் சூட்சமமங்கள் இல்லாமல் இல்லை. இந்நாடுகளில் நிலவும் வறுமையையும், உள்நாட்டுக் கலவரங்களையும் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் மேற்குலகம் கவனமாகவே செயற்பட்டு வருகின்றன. கெயிட்டியில் 2010 தை மாதம் இடம்பெற்ற பூமி அதிர்சியும் இதனைத் தொடர்ந்த அழிவு அனர்தங்களும், இதனால் ஏற்பட்ட சுகாதார சீர்கேடும் அங்கு பாரியளவில் வாந்திபேதி(cholera)  நோயை உருவாக்கி கட்டுக்குள் அடங்காமல் பரப்பிவிட்டது. பூமியதிர்ச்சி நிவாரணப் பணிகளுக்கென ரெட் குறஸ்(Red cross), உலக சுகாதார நிறுவனம்(WHO), அமெரிக்கா, இன்ன பிற நாடுகள் தங்கள் குழுக்களை அனுப்பியிருந்தன. தொடர்ந்த நாட்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பலர் வாந்திபேதி (cholera) நோய்களுக்குள் உள்ளாக்கப்பட்டதினால் தமது பணிகளை தொடராமல் கெயிட்டியை விட்டு ஓடத் தொடங்கினர். கெயிட்டியில் மரணங்களின் எண்ணிகை அதிகரிக்கத் தொடங்கின. இந் நிலையில் கியூபாவின் விசேட மருத்துவக்குழு அங்கிருந்து ஓட்டம் எடுக்காமல் வாந்திபேதி(cholera)  நோயைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டை தனது தலையில் தூக்கிப்போட்டு கட்டுக்குள் கொண்டு வந்து கெயிட்டி மக்களை காப்பாற்றியது. இது மேற்குலக மக்கள் தொடர்பு சாதனங்களால் முற்று முழுதாக மறைக்கப்பட்ட உண்மைகள் ஆகும். உலகிலேயே மிகச் சிறந்த மருத்துவ சேவைகளை தனது நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கிவரும் நாடுகளில் முதன்மையானது கியூபா ஆகும். சிறப்பாக முதியவர்கள், குழந்தைகள் அதிக கவனம் எடுத்து பராமரிக்கப்படுகின்றனர். இந்த அனுபவங்களையே, சேவையையே இவர்கள் கெயிட்டி போன்ற நாடுகளுக்கு வழங்கினர். இன்று சில தினங்களுக்கு முன்பு மீண்டும் எபோலாவின் அதிக தாக்கத்திற்குள்ளான மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு தனது விசேஷட மருத்துவக் குழுக்களை அனுப்பி இருக்கின்றது கியூபா என்ற மக்கள் தேசம். எனவேதான் கூறுகின்றோம் எபோலா இனி மெல்லச்சாகும்……..! இதே வேளை நைஜீரியா தனது நாட்டை எபோலா தாக்கத்திலிருந்து வெற்றிகரமாக மீட்டெடுத்திருக்கின்றது என்பதை நாம் பாடமாக கொள்ள வேண்டும். இதேபோல் இலங்கை போன்ற வளரும் மூன்றாம் உலக நாடுகளும் நுளம்பினால் காவப்படும் டெங்கு என்ற வைரஸ் காய்சலைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் பெரும் பகுதி வெற்றியடைந்துள்ளது என்பதை அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் மகிழ்வுடன் நினைவு கூர்தல் சாலச் சிறந்தது.

(Saakaran)(நவம்பர் 01, 2014)

காஸ்ட்ரோ, எபோலா, மற்றும் ஐ.எஸ்

(சுகு-ஸ்ரீதரன்)

மேற்கு ஆபிரிக்காவில் பலநூற்றுக்கணக்கானோரை காவு கொண்ட எபோலா இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. வறுமை, அறியாமை மற்றும் பின்தங்கல்கள் ஆயுதமேந்திய குழுக்களின் மோதல்கள் சபிக்கப்பட்ட மக்களாக வாழும் மேற்கு ஆபிரிக்க மக்களின் கூட்டம் கூட்டமான மரணத்தை விளைவித்து வரும் எபோலோவைக் கட்டுப்படுத்த ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட தயாராயிருப்பதாக கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ட்ரோ அண்மையில் தெரிவித்திருந்தார். நாம் எபோலாவைத் தோற்கடித்து மேற்கு ஆபிரிக்க மக்களை சாவின் விழிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்கிறார். (மேலும்....)

திருக்கேதீஸ்வரம் வரை பரீட்சார்த்த ரயில் சேவை

மடு ரயில் நிலையத்திலிருந்து மன்னார், திருக்கேதீஸ்வரம் ரயில் நிலையம் வரையிலான பரீட்சார்த்த ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை (31) காலை நடத்தப்பட்டது.  இன்று காலை 10 மணியளவில் மடு ரயில் நிலையத்திலிருந்து பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்த ரயில், 10.30 மணிக்கு திருக்கேதீஸ்வரம் ரயில் நிலையத்தை அடைந்தது. மடு ரயில் நிலையத்திலிருந்து தலைமன்னார் ரயில் நிலையம் வரை 63 கிலோ மீற்றர் தூரம் உள்ளது. மடு ரயில் நிலையத்திலிருந்து திருக்கேதீஸ்வரம் நிலையம் வரைக்குமான 26 கிலோ மீற்றர் தூரத்துக்கான சேவை இடம்பெற்றது. இந்த ஆரம்ப நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்டான்லி டி மேல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீ பாஸ்கரன் புகையிரத திணைக்கள அதிகாரிகள், மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள், திணைக்களத்தின் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து நாடுகள் அனுதாபம்

கொஸ்லந்தை இயற்கை அனர்த்தத்தில் மரணமடைந்த மக்களுக்கு சுவிற்சர்லாந்து, பங்களாதேஷ், போலந்து, பெல்ஜியம், கியூபா போன்ற நாடுகள் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளன. நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்த மேற்படி நாடுகளின் தூதுவர்கள் தமது அரசாங்கத்தின் சார்பில் மேற்படி அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக் கான உதவிகள் தொடர்பில் இலங்கை வேண்டுகோள் விடுக்குமானால் அவற்றை தமது நாடுகளின் அரசாங்கங்களுடன் பேசி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com