Contact us at: sooddram@gmail.com

 

செப்ரம்பர  2013 பதிவுகள்

செப்ரம்பர் 30, 2013

அனந்தியின் அங்கத்துவத்தினை வலியுறுத்துகின்றோம் - பெண்கள் அமைப்பு

'வடமாகாண சபை அமைச்சரவையில் அனந்திக்குக்கு அங்கத்துவம் வழங்கவேண்டும்' என்று பெண்கள் அமைப்புக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக யாழ்.மாவட்ட பெண்கள் சமாசம், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, புத்தளம் மாவட்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பு, திருகோணமலை மாவட்ட அரசியற்கட்சி பெண் உறுப்பினர்களின் குழு, பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஆகிய பெண்கள் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். (மேலும்.......)

வடமாகாண சபை

பெண் ஒருவருக்கு இரண்டாவது போனஸ் இடம்

இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை சுழற்சி முறையில், முதலாவதாக ஒரு பெண்மணிக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வடமாகாண சபைக்குரிய போனஸ் இடங்களில் ஒன்றை பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு வருடாந்த சுழற்சி முறையில் அளிப்பது என்று கூட்டமைப்பு இன்று அதிகாரபூர்வமாக முடிவெடுத்துள்ளது. அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட மேரி கமலா குணசீலன் என்பவருக்கு முதலாம் ஆண்டு அந்த இடத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இரண்டு போனஸ் இடங்களில் ஒன்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபடி, மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஸ்மின் அயூப் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது தொடர்பான முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் எங்கு வைத்துப் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்தும் பின்னர் கூடித் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன்  இணைந்து செயற்பட ம.ம.மு தீர்மானம்

மத்திய மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம் என மலையக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மக்களின் நன்மை கருதியும் காலத்தின் தேவை கருதியும் ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கை ஆகியவற்றினாலேயே ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். "மத்திய மாகாண சபை தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளோம். இதன் மூலம் நாம் ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்படுவதா அல்லது எதிர்கட்சி ஆசனத்தில் அமர்வதா என்ற தீர்மானத்தை நாம் எடுக்க முடியும். அதற்காண அங்கீகாரத்தை மக்கள் எமக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் நாம் எமது மக்களின் நம்மை கருதியும் காலத்தின் தேவை கருதியும் அரசாங்கத்துடன் இணைந்து மத்திய மாகாண சபையில் செயல்படுவதென தீர்மானித்துள்ளோம்.

ஆளுநர் சந்திரசிறியுடன் விக்னேஸ்வரன் இன்று சந்திப்பு

வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும் இடையில் இன்று முதற் தடவையாக சந்திப்பு ஒன்று இடம்பெற வுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. வட மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்களின் நியமனங்கள், அமைச்சுப் பொறுப்புகள், பதவிப் பிரமாணம் போன்ற விடயங்கள் தொடர்பில் சம்பிரதாய முறைப்படி இந்த விசேட சந்திப்பின் போது கலந்துரையாடப் படவுள்ளதாக தெரிய வருகிறது. நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முதலமைச்சர் பதவிக்கு தெரிவாகியுள்ள சி. வி. விக்னேஸ்வரனுக்கான நியமனத்தை வழங்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. வட மாகாண ஆளுநருக்கு கடந்த 23 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வட மாகாண ஆளுநர் கடந்த 25 ஆம் திகதி கையொப்பமிட்டு தனது பதில் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது

நாடெங்கிலும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இராணுவ முகாம்களை வைத்திருக்கிறது. விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கில் இருந்து இராணுவத்தை எனது அரசாங்கம் வெளியேற்றாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இதுபோன்று நாட்டின் ஏனைய மாகாண சபைகளும் இராணுவத்தை தங்கள் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுமாறு கேட்டால் எமது இராணுவத்தை வைத்திருப்பதற்கு இடமே இருக்காது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அயல்நாடான இந்தியாவுடன் நாம் நெருங்கிய நட்புறவை வைத்திருக்கிறோம். இந்தியாவுக்கு வேறு விதமான அரசியல் பிரச்சினைகள் இருப்பதனால் இந்தியாவின் சில செயற்பாடுகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். வடக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது எமக்கு நன்கு தெரியும். வெளியில் இருந்து குற்றம் காண்பது எளிது. எனவே, வடமாகாணத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சீரான நிர்வாகத்தை நடத்த வேண்டுமென்று நான் சவால் விடுக்கிறேன் என ஜனாதிபதி இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். உலகத்திற்கு பொலிஸ்காரர்களின் தேவை அவசியமில்லை, சில நாடுகள் தாங்களே உலகத்தின் பொலிஸ்காரர்கள் என்று இறுமாப்பில் செயற்படுகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பொலிஸ்காரர்களை போன்று நடந்து கொள்ளும் இந்நாடுகள் மற்ற நாடுகள் மீது அழுத்தங்களை கொண்டுவர எத்தனிக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவில் பல அரச சேவைகளும் முடங்கும் அபாயம்

அமெரிக்காவின் அரசியல் இழுபறி காரணமாக எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் அந்நாட்டின் பல்வேறு அரச சேவைகளும் பணி நிறுத்தத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிதியாண்டு இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதன்மூலம் அரசின் பல சேவைகளுக்கான நிதி காலியாகவுள்ளது. இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் புதிய நிதியாண்டில் அரசின் திட்டங்களுக்கான நிதியைப் பெற கொங்கிரஸ் சபையின் ஆதரவு பெறவேண்டியுள்ளது. இந்நிலையில் புதிய நிதியாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி ஒபாமா சுகாதார சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார். இந்த சட்டமூலம் தோல்வியடையும்பட்சத்தில் நாட்டின் பல்வேறு அரச சேவைகளும் பணி நிறுத்தத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 800,000 பணியாளர்கள் ஊதியமில்லா விடுப்புக்கு முகம்கொடுக்கவேண்டி வரும். அதேபோன்று நாட்டின் தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும். தவிர, 1.4 மில்லியன் இராணுவத்தினரின் சம்பளம் தாமதமாவதோடு, ஒருசில வெள்ளை மாளிகை பணியாளர்களும் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களின் இழப்புகளும் அவற்றை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகளும்

எதபோன் கரைசலில் சுண்ணாம்புக் கரைசலைச் சேர்க்கும் போது வெளிவிடப்படும் எதிலீன் வாயு பழங்களின் இழையங்களைத் தூண்டி பழுக்க வைத்தல் செயன்முறை நடைபெற உதவுகின்றது. இதன்போது தீங்கற்ற வாயுக்கள் உற்பத்தியாக்கப்படமாட்டாது. அத்துடன் பெறப்படும் பழங்களும் சுவை மிக்கதாகவும் தரமானதாகவும் இருக்கும். இம்முறையை உபயோகிப்பதற்கான உற்பத்திச் செலவு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதாகும். ‘எனவே பழ உற்பத்தியாளர்களே பழ வியாபாரிகளே தங்களையும் தங்கள் சந்ததியின் ஆரோக்கியத்தினைக் கருத்திற் கொண்டு மேற்குறித்த முறையை உபயோகித்து சுகாதாரக்கேடற்ற, சுவை மிக்கதாகவும் தரமானதாகவும் பழங்களை உற்பத்தி செய்யுங்கள் சர்வதேச சந்தை வரை சந்தை வாய்ப்பைப் பெற்றிடுங்கள்.’ (மேலும்.......)

இரணைமடுவில் இருந்து நீரைக்கொண்டு செல்வது பிரதேச முரண்பாட்டை தோற்றுவிக்கும்

இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக்கொண்டு செல்வதால் பிரதேச முரண்பாட்டை உருவாக்க இது வழி சமைக்குமென கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு போதியளவு நீர் கிடைக்காத நிலையில் எவ்வாறு இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல முடியுமெனவும் கேள்வியெழுப்பியுள்ளன. இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி நீரைக் கொண்டு செல்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள், கல்வி மான்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான சந்;திப்பு கிளிநொச்சி பிரதேச சபைத் தலைவர் வி.குகராசா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போதே கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாம் யாரும் யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுக்குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புக் காட்டவில்லை. எமது பிரதேசத்தில் இருபத்து இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு சிறு போகத்தில் நீர்ப்பாசனத்தை நம்பியே விதைக்கப்படுகின்றது. ஆனால் எட்டாயிரம் ஏக்கரில் இருந்து பத்தாயிரம் ஏக்கர் வரையான காணிகளுக்கு பயிர் செய்யும் காலத்தில் நீரை வழங்கக் கூடியதாகவுள்ளது. இத்தகைய நிலையில் யாழ்ப்பாணத்திற்கு எந்த வகையில் இரணைமடுக்களத்தில் இருந்து நீரைக் கொண்டுசெல்ல முடியும். கிளிநொச்சி மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவுசெய்த பின்னரே யாழ்ப்பாணத்திற்கு இரணை மடுக்குளத்தில் இருந்து நிரைக்கொண்டு செல்வதில் எந்த வகையான தடைகளும் இல்லையென கூட்டத்தில் கலந்துகொண்டவாகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செப்ரம்பர் 29, 2013

ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை, சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் தொடரும் 

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ibon international என்ற அமைப்பு சுய நிர்ணய உரிமை, மக்கள் விடுதலை மற்றும் ஜனநாயகம் என்ற தலைப்பில்  ஆய்வரங்கு ஒன்றை 23.09.2013 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இத்தலைப்பில் மூன்று ஆரம்ப உரையாளர்களும், நான்கு ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.  Cynthia McKinney, Former member, House of Representatives, USA , Dr. Hans Koechler, University of Innsbruck, Austria, Luis Jalandoni, National Democratic Front, Philippines ஆகிய மூவரும் ஆரம்ப உரை நிகழ்த்தினர். ஆரம்ப உரையைத் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆய்வுரையின் முதல் பேச்சாளராக ஈழப் போராட்டம் குறித்த ஆய்வை சபா நாவலன் நிகழ்த்தினார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த ஆய்வில் ஈழப் போராட்டம் இனப்படுகொலையின் முடிவில் வன்னியில் இலங்கை பாசிச அரசால் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது குறித்தும், இன்னும் அந்தப் போராட்டம் தொடரப்பட வேண்டும் என்றும் உலகின் ஏனைய தேசிய விடுதலைப் போராட்டங்கள் போன்று ஈழப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏகாதிபத்திய அரசுகள் தமது நலன்களுக்காகப் போராட்டத்தைக் கையகப்படுத்தி அழித்ததை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து மீண்டும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் மேலெழும் என அவர் குறிப்பிட்டார். (மேலும்.......)

முகமாலை கண்ணி வெடியும் மாவட்ட அமைச்சர் கண்ணி வெடியும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மூன்று மாகாண சபைகளுக்காக கடந்த 21 ஆம் திகதி தேர்தல்கள் நடைபெற்று இரண்டு நாட்களில் முகமாலையில் வெடித்த நிலக் கண்ணி வெடியும் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களில் காணியானது மத்திய அரசாங்கத்திகுரிய பொறுப்பு என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அரசாங்கம் மாவட்ட அமைச்சர்களை நியமிக்கப் போவதாக தேர்தலுக்கு மறுநாள் வெளியான செய்தியும் வடமாகாண சபையின் எதிர்க்காலத்தை கோடிட்டுக் காட்டுவதைப் போலாக அமைந்திருக்கின்றன. முகமாலை கண்ணி வெடி வட மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராகப் போகும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அவரது முன்னுரிமை பட்டியலை மீளாய்வு செய்வதற்காக விடுத்த அழைப்பைப் போன்றதாகும். அதேவேளை நீதிமன்றத் தீர்ப்பும் மாகாண அமைச்சர் நியமனத்திற்கான முயற்சியும் அவர் எவ்வளவு பெரும் சவால்களை எதிர்நோக்கப் போகிறார் என்பதை முன் கூட்டியே அறிவித்தலைப் போலாகும்.
(மேலும்.......)

ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம்?

வட­மா­காண முத­ல­மைச்­ச­ராக தெரிவுசெய் ­யப்­பட்­டுள்ள முன்னாள் நீதி­ய­ரசர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ முன்­னி­லையில் சத்­தியப் பிர­மாணம் செய்­து­கொள்ள வாய்ப்­புக்கள் இருப்­ப­தாக கூட்­ட­மைப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. ஏலவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட­மா­காண ஆளுநர் முன்­னி­லையில் புதிய முத­ல­மைச்சர் சத்­தியப் பிர­மாணம் செய்­து­கொள்ள மாட்டார் என்று தெரி­வித்­தி­ருந்­தது. அவ்­வாறு அவர் சத்­தியப் பிர­மாணம் செய்து கொள்­ளாத பட்­சத்தில் ஜனா­தி­பதி முன்­னி­லை­யிலோ அல்­லது கட்சித் தலைவர் முன்­னி­லை­யிலோ சத்­தியப் பிர­மாணம் செய்து கொள்­ளலாம் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது. இதே­வேளை, நியூ­யோர்க்­கி­லுள்ள ஐ.நா. சபையில் உரை­யாற்றச் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாளை திங்கட் கிழமை நாடு திரும்­புவார் என எதிர்பார்க்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதி நாடு திரும்­பி­யதும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மை ப்பு இது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்சு நடத்­த­வுள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதே­வேளை புதிய அமைச்­ச­ர­வையை அமைப்பது தொடர்பிலும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நாளை மீண்டும் கூடி ஆராயவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின் றன.

பிரிவினைக்கு ஒருபோதும் துணை போக மாட்டேன் - விக்னேஸ்வரன்

“நாட்டைத் துண்டாடாமல் ஒரே நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்து முன் னேற்று வதே எனது குறிக்கோ ளாகும். அதற்கு சகல மக்களும் ஒன்றுபட்டுழைக்க வேண்டும் என்று வட மாகாணத்தில் போட்டியிட்டு முதன்மை உறுப்பினராக அதிக விருப்புவாக்கு பெற்றுத் தெரிவாகியுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் எதிர் காலத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நேச மனப்பான்மையுடன் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன். நாட்டைப் பிரித்தால் நான் ஒத்துழைக்க மாட்டேன். அதற்குத் துணைபோகவும் மாட்டேன். உதவிகளும் செய்யமாட்டேன். இன்று சில பெளத்த குருமார்கள் நாம் நாட்டை பிரித்தாளப் போகின்றோம். அதற்கான முஸ்தீபு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் எம்மீது சேறு பூசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் எதுவித உண்மையும் இல்லை. இது உண்மைக்கு முற்றிலும் முரணானது என்று அவர் மேலும் தெரிவித்தார். உண்மையாகவே நாம் எமது வட மாகாண சபையின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யவே எதிர்பார்க்கின்றோம். இதற்காக நாம் மத்திய அரசின் உதவியையும் நாடி செயல்பட தயாராக இருக்கின்றோம். (மேலும்.......)

சங்கரி ஐயாவிற்கே போனஸ் ஆசனம் ல்லையேல் தீக்குளிக்கவும் தயங்கேன்

வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கு கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங் களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் என்று அக் கூட்டணியின் அடுத்த தலைவர் பதவிக்குத் தெரிவாகவுள்ள தம்பிராசா (தம்பி) தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து தீக்குளிப்புப் போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது. கிளிநொச்சியில் கூட்டணியின் தலைவர் சங்கரி ஐயா திட்டமிட்ட முறையில் தோற்கடிப்பட்டுள்ளார். அவராலேயே கிளிநொச்சி தனி மாவட்டமாக உருவானதை மக்கள் மறந்துவிடாது வாக்களிக்கத் தயாரான வேளையில் சக கட்சியில் போட்டியிட்ட சிலர் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர் வெற்றியைத் தடுத்துவிட்டதாகவும் தம்பிராசா தெரிவித்தார்.

எதிரானவர்களை அழித்தொழிப்பது எப்படி?

தமது முதலாவது கூட்டத்திலேயே கூடி ஆராய்ந்த கூட்டமைப்பினர்

வட மாகாணத்தின் அதிகாரத்தை கைப் பற்றியதும் தாம் நடத்திய முதலாவது கூட்டத்திலேயே தமக்கு எதிரானவர்களை எப்படி அழிப்பது என்பது குறித்தே கூட்டமைப்பின் தலைவர்கள் ஆராய்ந்திருப்பதாகத் தெரிய வருகின்றது. கூட்டமைப்பின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் அரசியல் ஆலோசகருமான என். கே. சிவாஜிலிங்கம், தேர்தல் காலத்தில் தமக்கு எதிராக செயற்பட்டு வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றை இடிக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். அவர் இவ்வாறு கூறியதனை அவதானித்த குறிப்பிட்ட அத்தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு பொறுப்பதிகாரி சிவாஜிலிங்கத்திடம் தனது கடுமையான கண்டனத்தை பதிவுசெய்திருக்கிறார். (மேலும்.......)

வவுனியா மாவட்டத்திற்கும் அமைச்சுப் பதவி தேவை

வட மாகாண சபையின் அமைச்சு பதவியொன்றை மூவின மக்களும் செறிந்து வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வழங்கவேண்டுமென வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி. ரி. லிங்கநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டமானது வட மாகாணத்தின் எல்லையாகவும் மூவின மக்கள் வாழும் பிரதேசமாகவும் இருப்பதுடன், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் தலைநகரமாகவும் விளங்கி வருவதை தாங்கள் அறிவீர்கள். இதற்கு மேலாக நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் நாம் எதிர்பார்க்காத வகையில் சிங்கள இனத்தைச் சேர்ந்த அரச தரப்பு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழர்களுக்கும் பெரும் சவாலாக அமையும் என்பதை தாங்கள் அறிவீர்கள். தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் கடந்த காலங்களில் வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்தம், இயற்கை அனர்த்தங்களின் போது வைத்திய அதிகாரியாகவும் மனிதாபிமான நிறுவனங்களிலும் அளப்பரிய சேவையாற்றி இவர் சிறந்த முகாமையாளராகவும் செயற்பட்டாளராகவும் விளங்கியுள்ளார். எனவே இவருக்கு கடந்த 15 வருட கால அனுபவம் அமைச்சொன்றை சிறந்த முறையில் செயற்படுத்துவற்குள்ள தகுதியை கொண்டுள்ளமையை மேலும் உறுதி செய்கின்றது என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டுமொரு முறை உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட வடபுலத்து தமிழர்கள்

நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தல் களிலும் வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வடபுலத்துத் தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களது உணர்ச்சிமிகு வீரவசனப் பேச்சுக்களுக்கு இரையாகி அடிமைப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதைத் தெளிவாகக் காட்டு கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் வெளியி டப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படாத, இலங்கை அரசிய லமைப்புச் சட்டக் கட்டுக்கோப்புக்களுக்கு முரணான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவை வெறுமனே தேர்தலில் வெற்றி கொள்ள மக்களை ஏமாற்றுவதற் காகவெனத் தயாரிக்கப்பட்டதாக அமைந்திருந்த நிலை யிலும் வடக்கு வாழ் தமிழர்கள் நம்பி ஏமாந்திருக்கிறார்கள்.  (மேலும்.......)

ஐக்கிய நாடுகள் சபையில் இரு முக்கிய ந்திப்புகள்

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த உலக மகா சபையில் அங்கத்துவ நாடுகளின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டு விடயங்கள் இங்கு முக்கிய இடத்தினை வகித்தன. சிரியாவின் இரு வருட கால யுத்தமும் இஸ்லாமிய குடியரசான ஈரானின் அணுவிவகாரமுமே மேற்படி இரண்டு முக்கிய விடயங்களாகும். சர்வதேச விவகாரங்களில் அக்கறை செலுத்துபவர்கள் அமெரிக்க ஈரானிய ஜனாதிபதிகளின் நேரடி சந்திப்பு நடைபெறும் என நம்பினர். இப்படியான சந்திப்புக்கு ஈரானின் புதிய ஜனாதிபதி பல கடிதங்களை அமெரிக்க ஜனாதிபதிக்கு பல தடவை எழுதி அத்திவாரமிட்டார். பதில் கடிதங்களையும் அமெரிக்க தலைவர் அனுப்பியதாக நம்பப்படுகின்றது. எப்படியும் பொதுக்கூட்டத்தில் முதல் நாளிலேயே இரண்டு நாட்டு தலைவர்களும் பேசினர். ஆனால் நேருக்கு நேர் தனிப்பட்ட ரீதியில் இரண்டு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலே பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை. (மேலும்.......)

முரண்பாடுகளை களைந்தால் முன்னேற்றம் நிச்சயம்

மலையகத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதும் இதுவே!

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்களில் மத்திய மாகா ணத்தில் கடந்த முறையை விட இம்முறை தமிழ்க்கட்சிகள் கூடுதலான இடங்களைப் பெற்றுள் ளன. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குப் பின்னர் இப்போதுதான் தமிழ்ப்பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேர் தல் காலத்தில் மலையக கட்சிகளி டையே இருந்த முரண்பாடுகளைக் களைந்துவிட்டு மக்களின் எதிர்கால நலனில் கூடிய அக்கறை செலுத்த வேண்டுமென மலையக புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (மேலும்.....)

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால்

ரி. என். ஏ.க்கு பக்க பலமாக செயற்பட ஈ. பி. டி. பி. முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற போது, நாமும் அவர்களுக்கு பக்கபலமாக இருப்போம் என ஈ. பி. டி. பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் எமது மக்கள் எதிர்நோக்கிய உடனடி மனிதாபிமானப் பணிகள் தொடக்கம் துயரத்தின் விளிம்பில் நின்ற அவர்களின் வாழ்வை மீள் நிலைநிறுத்துவதற்கான அனைத்து அடிப்படைத் தளங்களையும் நாம் கடந்த நான்கு வருடங்களுக்குள் ஏற்படுத்தியிருக் கின்றோம். முற்றாக அழிந்துபோய்க் கிடந்த அனைத்து துறைகளையும் மீள உருவாக்கியிருக்கின்றோம். இனி மக்கள் அந்த செயற்பாடுகளின் பலன்களை பெற்றுக்கொள்கின்ற காலத்தில் தடம்பதித்துள்ளனர். எனினும் மக்களின் தேவைகள் அனைத்தையும் முற்றாக நிறைவுசெய்வதாயின் மேலும் சில காலங்கள் பொறுத்திருக்க வேண்டி வரும். இந்நிலையில் தற்போது வட மாகாண சபையின் அதிகாரங்களை ஏற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் முன்வர வேண்டும். அவ்வாறு முன்வருகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களின் செயற்பாடுகளுக்கு நாம் பக்க பலமாக செயற்படத் தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

“முருகுப்பிள்ளை நிர்மலன்” விபத்தில் காலமானார்.

நிமோ என எல்லோராலும் அறியப்பட்ட முருகுப்பிள்ளை நிர்மலன் இலங்கையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமானார். ரெலோ இயக்கத்தின் முன்னாள் போராளீயான இவர் ஜேர்மனியில் வசித்து வந்தவர். இவர் ஒரு மேடைக் கலைஞருமாவார். நிமோவின் தந்தையாரும் ஒரு கலைஞர் ஆவார்.ரி.பி.சி வானோலியின் முக்கிய அறிவிப்பாளராகவும்,நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அரசியல் ஆய்வாளராகவும் சேவை செய்த இவர் ஐரோப்பாவில் புலிப் பினாமிகளால் பலத்த நெருக்கடிக்குள்ளாகியிருந்தவர்.. ரி.பி.சி வானொலியின் பணிப்பாளர் ராமராஜ் வங்கி அட்டை மோசடியின் காரணமாக சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவித்தபோது தனது குடும்ப நலன்களைக்கூடக் கைவிட்டு ரி.பி.சி வானொலியை ஒரு வருடமாக பொறுப்பேற்று நடத்தியவர் நிமோ அவர்கள். நிமோ அங்கு பணியாறிய வேளையில் ரி.பி.சி வானொலி புலிப் பினாமிகளால் சேதமாக்கப்பட்டது. ஆனால் சிறைத்தண்டனை முடிந்து மீண்டும் லண்டனுக்கு வந்த ராமராஜ்  நிமோவை வெளியேற்றி தனது நன்றிக்கடனைத் தீர்த்துக் கொண்டது ரி.பி.சி வானொலியின் நேயர்கள் அறிவார்கள். புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் வெளீநாட்டு வாழ்க்கையைத் துறந்து மீண்டும் இலங்கை சென்று தனது சமூகப்பணிகளை மேற்கொண்ட நிமோ அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததும் ஜீரணித்துக்கொள்ள முடியாததுமாகும். அவரது கும்பத்தினருக்கு சலசலப்பு இணையத்தி சார்பாக வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செப்ரம்பர் 28, 2013

என் மனவலையிலிருந்து....

ஐ.நா. சபை தனது இருப்பிடத்தை மாற்ற வேண்டுமா?

(சாகரன்)

தற்போது ஐ. நா. சபைக் கூட்டம் நடைபெற்றுவருகின்றது. ஐ. நா. சபையான உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட சிக்கல் நிலைமைகளுக்கு ஒரு மத்தியஸ்தராக இருந்து அவற்றை சார்பு நிலையின்று நீதியின்பால் தீர்த்து வைத்த வரலாற்றைக் கொண்டது. இவ் ஐ. நா. சபை 1945 இல் உலகநாடுகள் இணைந்து உருவாக்கின. இதன் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது. சோவியத் யூனியனின் உடைவிற்கு பின்னரான ஒரே முகாமாக உருவெடுத்திருக்கும் அமெரிக்கா தனது நாட்டில் இருக்கும் ஐ. நா. சபையை தனது நாட்டின் ஒரு சொத்தாக கருதிச் செயற்பட்டுவருவதை அண்மைக் காலங்களில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் சிறப்பாக அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கையை எதிர்க்கும் நாடுகளுடன் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றது. குறிப்பாக சோசலிச சித்தாந்தங்களை தழுவிவரும் தென் அமெரிக்க நாடுகளை, அவர்களின் தலைவர்களை ஐ. நா. மகாநாடுகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதில் தான் தோன்றித்தனமாக நடந்து வருகின்றது, அல்லது தவிர்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றது. ஐ. நா. சபை தற்போது அமெரிக்காவில் இருப்பதைக் காரணம் காட்டி இதனை செய்து வருகின்றது. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற போலிக் காரணங்களைக் அமெரிக்கா இதற்கு கூறுகின்றது என்றே நம்பவேண்டியுள்ளது. இதனால் தனது நாட்டின் பாதுகாப்புதுறை, உளவுத்துறையில் பலம்மிக்கவை என அமெரிக்கா பீற்றிக் கொள்கின்றதா என்பது கேள்வியாகியுள்ளது. எவ்வளவுதான் இராணுவ படைப்பலம், ஆயுதங்கள் இருந்தாலும் மக்கள் ஆதரவு அற்ற நிலையில் இவையெல்லாம் வெறும் துருப்படித்த உலோகங்கங்கள்தான். இதனை கடந்த காலத்தில் பல வீரம் மிக்க மக்கள் போராட்டங்கள் நிறுவி நிற்கின்றன. அமெரிக்கா இதில் பல கசப்பான அனுபவங்களைத் தன்னகத்தே கொண்டது. ஐ. நா. சபையிற்கு சுதந்திரமாக வந்து தமது கருத்துக்களைத் தெரிவிக்க ஒரு உலக நாட்டுத் தலைவருக்கு உரிமையற்ற நிலமையை நியூயோர்க் ஐ. நா சபை உருவாக்கியுள்ள நிலையில், ஐ. நா சபையின் இருப்பிடம் கேள்விக்குறியாகியுள்ளது. தனது 'இச்சை'க்கு இணங்காத தலைவர்களை அச்சுறுத்தும் இச் செயற்பாட்டை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் ஐ. நா. வின் இருப்பிடம் இடம் மாறவேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். அன்றேல் இதற்கு மாற்றீடான பலமான இன்னும் ஒரு உலக பொது அமைப்பு தோன்றுவது தவிர்க்க முடியாமல் போகலாம்.

த.தே.கூ . வில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இவ் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில்  வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவருகின்றது. இதில் வடக்கு மாகாண சபைக்கான பதவிப்பிரமாணம் செய்வது,   போனஸ் ஆசனங்கள், அமைச்சர்கள் உட்பட பல விடயங்கள் குறித்து முடிவு செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

காசோலை மோசடிக் குற்றச்சாட்டு

த. தே. கூட்டமைப்பு வெருகல் பிரதேசசபை தலைவர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேசசபை தலைவர் எஸ்.விஜயகாந்தை நேற்று மாலை கைதுசெய்து பிணையில் விடுவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காசோலை மோசடிக் குற்றச்சாட்டிலேயே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதான திருத்த வேலைகளுக்கு மண் தருவிப்பதற்கான ஒப்பந்தத்தில், லொறி சாரதி ஒருவருக்கு ரூ.5 லட்சம் என குறிக்கப்பட்ட போலி காசோலை வழங்கியமை தொடர்பிலேயே பிரதேசசபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட வெருகல் பிரதேசசபை தலைவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது ரூ.2 லட்சம் பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SLFP Is Not A Racist Party - Chandrika Kumaratunga

Racism and religious extremism have no place in the Sri Lanka Freedom Party, former President Chandrika Kumaratunga said at the commemoration of her father S.W.R.D. Bandaranaike’s death yesterday. Addressing a crowd during the ceremonies to commemorate the former Sri Lankan Premier, Kumaratunga said that the pact signed between her father and Federal Party Leader, popularly known as the Banda-Chelva Agreement, went far beyond the power sharing provisions of the 13th Amendment. “At that time, the Federal Party was asking for power sharing under a federal system,” she said. “Nowadays they are speaking of too many powers in the 13th Amendment. The Banda-Chelva pact was willing to share power far more significantly than that,” the former President said. The SLFP was started with the Bandaranayake vision, said Kumaratunga, adding that in these days various convoluted visions had been incorporated into the party. “Of late various people claim their fathers created the SLFP along with my father – at that time I don’t think they were around,” she charged. Defending her father’s controversial Sinhala Only Act, Kumaratunga said it was an attempt to uphold the rights of the majority that had been suppressed by European colonialists for hundreds of years. “He also brought the Tamil language bill at the same time. He had no intention to implement racist policies. But because he was assassinated, there was no way to enact that bill,” President Kumaratunga said.

விக்னேஸ்வரனின் பயம்!

வடமாகாணசபை நிர்­வா­கத்­துடன் இணைந்து செயற்­பட தயார் என்று தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர் பஷில் கூறியிருந்தமையில் நம்பிக்கை உள்ளதாக சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்டாயமாக அவர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. ஆனால் விமல் வீரவன்ச போன்றவர்கள் வெவ்வேறு பேச்சுக்களை பேசுகின்றார்கள். சில நேரங்களில் அவர்களின் கருத்­துக்­க­ளுக்கு ஜனாதிபதி செவி சாய்ப்பதால் ஏதாவதொன்றை கூறிவிட்டு மாறாக வேறு எதனையும் செய்யக்கூடும் என்றதொரு பயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்­துடன் சிங்கள மக்­களை குழப்­பு­வ­தற்கு இனத்துவேஷத்துடன் செயல் படுவதற்கு சிலர் இருக்கின்றார்கள். அதன் காரணத்தினால் அவர் ஏதாவது பிரச்சினைக்கு உட்பட்டு தனது நிலைப்­பாட்டை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுமோ என்று தெரியாது. நாங்கள் இவற்றை அனு­ப­வத்தில் நன்­றாக படித்துள்ளோம். உதாரணமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க செல்வநாயகத்துடன் ஓர் உடன்படிக்கை வைத்த போது எமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கின்றது என்று நாம் எதிர்பார்த்திருந்தோம் ஆனால் 200 பௌத்த பிக்குகள் அவரது வீட்டிற்குச் சென்று பல எதிர்ப்பு வார்த்தைகளை கூறிய பின்னர் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டார். டட்லி சேனாநாயக்கவுடனும் அவ்வாறு தான் இடம்பெற்றது. இப்படி ஒவ்வொரு சந்­தர்ப்­பத்­திலும் தலைவர்கள் சில நல்ல காரியங்கள் செய்யும் போது அதை முறி­ய­டிப்­ப­தற்­கான நடவடிக்கைகளே இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தேய் பிறைக் காலம் தென்படத் தொடங்குகிறது....!

(எஸ். ஹமீத்)

தீ நிகர்த்த தேர்தல் மேடைகளில் அனல் பறக்கும் ஆவேசப் பேச்சுக்கள் அரங்கேறி முடிந்து விட்டன. வாய்க்கு வந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் கலக்க விடப்பட்டு, வாக்காளப் பெருமக்களின் நெஞ்சங்களுக்குள் நிரப்பப்பட்டுவிட்டன.  தேர்தல்  விஞ்ஞாபனங்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகை அறிக்கைகள், பதாகை வசனங்கள் என்று அள்ளி வீசிய கொள்கை விளக்கங்கள் மூலம் மக்களின் மூளையைச் சலவை செய்தாகிவிட்டது. இவற்றின் பெறுபேறாக, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலிலே வரலாற்று முக்கியத்துவமிக்க பெரும்  வெற்றியையும் பெற்றாகிவிட்டது. (மேலும்.......)

வட மாகாண சபைக்குரிய கட்டடம் யாழ். கைதடியில்

வட மாகாண சபைக்குரிய கட்டடத்தை யாழ். கைதடி பகுதியில் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வட மாகாண சபைக்கான கட்டட நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதுடன், ஒக்டோபர் 10 ஆம் திகதியளவில் முழுமையாக கட்டடத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷ் நியூஸ்பெஸ்டுக்கு கூறினார். மாகாண சபை அமர்வுகள் நடத்தப்படும் திகதி, விபரங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் வட மாகாண சபை இயங்குவதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே நிர்மாணப் பணிகள் முன்​னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வட மாகாண சபைக்கான தேர்தலின்மூலம் ஆட்சி நிருவாகம் உருவாகியுள்ளதை அடுத்து அந்த பணிகள் துரிதப்பட்டுள்ளதாகவும் பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து ஐ.நா. சபையை மாற்ற வேண்டும்

அமெரிக்காவில் இருந்து ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் ஐ.நா. சபையில் பேசினார். மேலும் பேச்சின் போது அமெரிக்காவின் ஏகாதிபத்திய அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1945 -ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முதல் ஐ.நா. சபை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வருகிறது. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பான் கி மூன் உள்ளார்.இப்போது ஐ.நா. சபையின் 68-வது ஆண்டு பொது சபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். (மேலும்.......)

த. தே. கூட்டமைப்பினரை

“நாட்டை பிளவுபடுத்தும் விஞ்ஞாபனம்” விளக்கமளிக்க வருமாறு அழைப்பாணை

கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான காரணங்களை விளக்க எதிர்வரும் அக்டோபர் 02 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு உத்தரவிட்டு உயர் நீதிமன்றம் நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது. (மேலும்.......)

வடமேல் மாகாண முதல்வராக தயாசிறி ஜயசேகர

வடமேல் மாகாணத்தின் ஆறாவது முதல்வராக தயாசிறி ஜயசேகர பதவியேற்கவுள்ளதாக  குருணாகலையிலுள்ள அவரது அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், அவர் எதிர்வரும் முதலாம் திகதி அலரிமாளிகையில்  ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். புதிய அமைச்சரவையில் கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ இடம்பெற உள்ளமை உறுதியாகியுள்ளது.

திருச்சியில் கேலிக் கூத்தாக முடிந்த மோடிக் கூத்து

பிரதமர் வேட்பாளர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் பரிவட்டம் கட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி திருச்சியில் வந்து குதியாட்டம் போட்டுவிட்டு சென்றுள்ளார். இவரை மோடி என்று அழைப்பதைவிட மோசடி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். நடிகர் ரஜினிகாந்த்தை பாஜக கூட்டணிக்கு வருமாறும், வாய்ஸ் கொடுக்குமாறும் பாஜக தலைவர்கள் இல.கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நச்சரித்தனர். ஆனால் அவர் இவர்களை கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் ரஜினி படத்தையும் மோடி படத்தையும் ஒன்றாகப் போட்டு பல இடங்களில் டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர். (மேலும்.......)

சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும்

இன்று இந்த நாட்டில் இன வாதம் தலை தூக்கியுள்ள நிலையில் பெரும்பான்மை சமூகம் பேரினவாதத்தை நோக்கி செல்கின்றன. அதனால் சிறுபான்மை சமூகங்களான தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும். வட மாகாணத்தில் நடந்து முடிந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் தீர்வு பற்றி பேசவேண்டும். அதன் மூலம் தீர்வொன்றை எட்ட முடியும். முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு எந்த தீர்வையம் பெற்றுக்கொள்ள முடியாது.  (மேலும்.......)

மாத்தறை - கிளிநொச்சிக்கு மற்றுமொரு ரயில் சேவை

மாத்தறையில் இருந்து அனுராதபுரம் வரை வார இறுதி நாட்களில் சேவையில் ஈடுபட்டுவந்த புகையிரத சேவையை கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப் படும் புகையிரதம் மு.ப. 9.50க்கு கோட்டை புகையிரத நிலையத்தையும் பி. ப. 3.50க்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தையும் சென்றடையவுள்ளது. கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை மு. ப. 11 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் மாலை 5.15க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினையும் இரவு 7.15 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்தையும் வந்தடையவுள்ளது. வடக்கு தெற்கு உறவு பாலமாக இந்த போக்குவரத்து சேவை செயற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கொலை சதி எதிரொலி

வெனிசுலா ஜனாதிபதியின் அமெரிக்க பயணம் ரத்து

கொலை சதி தெரியவந்ததால் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ ஐ.நா கூட்டத்திற்காக அமெரிக்க செல்லவிருந்த தனது பயணத்தை ரத்து செய்தார்.அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை இயங்கி வருகிறது. இங்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கலந்து கொள்வதாக இருந்தது. சீன பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் அவர் அமெரிக்கா செல்வதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் அமெரிக்க பயணத்தின் போது மதுரோவை கொல்ல செய்யப்பட்ட சதிதிட்டம் வெளியாது. இது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அமெரிக்க பயணத்தை மதுரோ ரத்து செய்தார். (மேலும்.......)

யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களின் இழப்புகளும் அவற்றை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகளும்

பழங்கள் சந்தைப்படுத்தலின் தற்போதைய நிலை

உலர் வலயப் பழங்களிற்குச் சிறப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தில் மாம்பழம், வாழைப் பழம், பலாப் பழம், பப்பாசிப் பழம், திரட்சைப் பழம் போன்ற பழ மரங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. இப்பழங்களின் சுவைக்கு சர்வதேச சந்தைவரை நல்ல கேள்வி உண்டு. இப்பழங்கள் யாவும் தரமானவையாக உற்பத்தி செய்யப்பட்டுச் சந்தைப்படுத்தப்பட்டால் மாத்திரமே விவசாயிகள் நியாயமான சந்தை விலையை தமது உற்பத்திகளுக்கு பெற கூடியதாக விருக்கும். (மேலும்.......)

செப்ரம்பர் 27, 2013

என் மனவலையிலிருந்து......

நம்பிக்கை தரும் முன் உதாரணங்கள்

(சாகரன்)

வட மகாண சபையின் போனஸ் ஆசனம் முஸ்லீம் பிரதிநிதிக்கு ஒருவருக்கு வழங்குதல் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு வரவேற்கத்தக்க முடிவாகும். கூடவே மூத்த அரசியல் தலைவர் சங்கரியருக்கு மாகாண சபையில் தனது அரசியல் பிரசன்னத்தை ஏற்படுத்த வாய்ப்புக்கள் அழிக்கவும் வேண்டும். யாழ்ப்பாணத்தைவிட்டு முஸ்லீம் மக்கள் உடுத்த உடையோடு கலைக்கப்பட்டபோது மௌனம் சாதித்து அங்கீகாரம் வழங்கியதற்கு இவ் போனஸ் ஆசனம் முழுமையான ஒத்தடங்களை கொடுக்க முடியாவிட்டாலும் சக சிறுபான்மை இனத்துடன் நாமும் இணைந்து செயற்படுவதற்கு இவை எதிர்காலத்தில் ஒரு திறவு கோலாக அமையலாம். நடப்பு யாழ் மாநகரத் தேர்தல் முடிவுற்ற கையோடு மாநகரசபை ஆடசியைக் கைப்பற்றியவர்களுடன் உதவி மேயர் பதவி முஸ்லீம் ஒருவருக்கு வழங்குதல் நல்லெண்ணத்தை எடுத்துகாட்ட உதவும் என்றேன். இதற்கு அவர்கள் 'விருப்பு வாக்குகளில் அதிகம் பெற்ற ஒருவருக்கே அந்தப் பதவி வழங்குதல் நியாயம்' என்று தமது தரப்பு நியாயங்களை எடுத்தியம்பினர். விருப்பு வாக்குகளை விட சக சிறுபான்மை இனத்தின் நட்புறவு எமக்கு அவசியம் இதனைக் கட்டியெழுப்பவேண்டிய தேவை எமக்கு உள்ளது என்ற அடிப்படையிலேயே இதனை மீண்டும் இவ்விடத்தில் மீள் வேண்டுகோளுக்கு உள்ளாக்குகின்றேன். சம்மந்தப்பட்டவர்கள் இதனைச் சீர்தூக்கிப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உண்டு. கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் தமிழரசுக் கட்சி,  தமிழ் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் நிலவிய முரண்பாட்டடைப் பயன்படுத்தி சுல்தான் என்ற முஸ்லீம் மாநகரசபை உறுப்பினரை முதல்வராக்கினார். இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை நாம் மீண்டும் நிறுவி நிற்பதன் மூலம்தான் புலிகளால் முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட ஆறாத ரணத்தை ஆற்ற முடியும். தனி மனிதன் ஒருவரது பழக்க வழக்கங்களை விமர்சிப்பது அழகு அல்ல. ஆனாலும் இன்று விக்னேஸ்வரன் தனி மனிதர் அல்ல. யார் விரும்பியோ, யார் விரும்பாவிட்டாலோ அவர் இன்று வட மாகாண முதல் அமைச்சர். எனவே சகல சமூகப் பிரிவினரையும் பிரநிதித்துப்படுத்தும் முகமாக அவர் தன் நெற்றியில் உள்ள அந்த சிவப்பு பொட்டை தவிர்ப்பது நலம். அவரின் நம்பிக்கையை தனது வீட்டு நாலு சுவருக்குள் மட்டுப்படுத்திக் கொள்வதே அவர் சகல தரப்பு மக்களினதும் முதல்வர் என்பதை ஏற்புடையதாக்கும். இதனை விக்னேஸ்வரன் செய்வாரா என்பதை அவர் முடிவிற்கே விட்டுவிடுகின்றோம். வவுனியா கம்யூனிஸ்ட் பத்மநாதனின் மகன் வைத்தியக் கலாநிதி சத்தியலிங்கம் கம்யூனிஸ்ட் நம்பிக்கையினால் மொஸ்கோவில் படித்துப் பெற்ற வைத்தியக் கலாநிதிப் பட்டத்தை தமிழ் குறும் தேசியவாதம் என்னும் அழுக்கு சேற்றுக் குளத்திற்குள் மூழ்கடிக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் இருந்து காத்திரமான மக்கள் சேவையை எதிர்பார்த்து நிற்கின்றது தமிழ் பேசும் சமூகம். இதில் அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

ஒரு வாகசரின் (Shri Rama Jaya - tamilarn@gmail.com) கருத்துக்கள் இவை

சூத்திரமே உன் ஆத்திரம் புரியவில்ல நியாயமில்லாத உன் ஆத்திரத்துக்கு தமிழர்கள் என்ன செய்வது

{சட்டத்தை மீறும் (முன்னாள்)நீதியரசர்........?

நீதியரசர் சட்டத்தை மீறவில்லை தவறு நடந்தது எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தவறாக பருப்புரை செய்வதில் சூத்திரம் இன்று முன்னிலையில்

 --------------------

இது எப்படியிருக்கு நாடுகடந்த தமிழீழக்காரர்களே?

இப்படியான ஓர் சந்திப்பு நடக்கவில்லை அமெரிக்க ஜனாதிபதிக்கும்  இலங்கை ஜனாதிபதிக்கும் கணணி மூலம் எதையும் நிஜப்படுத்தலாம்  

சூத்திரமே அடக்கி வாசி

----------------------------

அடுத்து ஆடப் போகிறார், ஓங்கி அடித்து!!

தோற்றது என்றோ மக்களிடமிருந்து தூக்கி ஏறியப்பட்டவர்கள்
மக்களிக்கு தெளிவான முடிவு தெரியும் தற்போது சூத்திரம் போன்ற இணையதளம் இனியும் தேவை இல்லை மக்களையும் மாகாண சபை விமர்சிக்க}

இலங்கை தேர்தல் முடிவே இந்தியாவின் வெற்றி

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழர்களின் வெற்றி, இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் அலுவலக விவகாரத்துறை மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி கருத்து தெரிவித்தார். கோவையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இலங்கையில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில், 13-வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில், வடக்கு, வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியது. அதன் விளைவாகவே, தற்போதைய தேர்தல் நடந்து முடிந்து தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி கண்டிப்பாக அச் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றியே தீர வேண்டும். அதற்கான முன்முயற்சிகளை அங்கு வெற்றி பெற்றுள்ள கட்சிகள் மேற்கொள்ளும். இதனால் தமிழர்களுக்கு புனர் வாழ்வு கிடைக்க வழி ஏற்படும்” என்றார்.

மனித உரிமை பேரவையில் பிளவு

இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இன்று இரண்டாக பிளவுபட்டிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கியதுடன் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தன.
இந்த நிலையில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, வெனிசுவேலா ஆகிய நாடுகள் இலங்கையை கடுமையாக ஆதரித்து கருத்துக்களை முன்வைத்தன. அதேவேளை இலங்கை அரசாங்கம், மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றி ஊக்குவிப்பதாக இந்தியா தெரிவித்தது. புனரமைப்பு, கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் சாதனைகள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் போதுமான அங்கீகாரத்தை வழங்கவில்லை என இந்திய பிரதிநிதி குறிப்பிட்டார்.
(மேலும்.......)

புலிகளை விடவும் இந்த புலிகள் பொல்லாதவை'

பிரபாகரன் விட்ட இடத்திலிருந்து விக்னேஸ்வரன் இந்த அரசியல் போராட்டத்தை தொடக்குவார் என ஜாதிக ஹெல உறுமய  உறுபினர் உதய கமன்பில கூறினார். இந்த புலிகள் பிரபாகரன் காலத்து புலிகளைவிட ஆபத்தானவை மற்றும் பொல்லாதவை எனவும் அவர் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட யாவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் கீழ் வேலை செய்தவர்கள் எனவே  ஈழயுத்தம் தற்போது இராஜதந்திர ரீதியான இலக்காகியுள்ளது என்றும் கமன்பில கூறினார். (மேலும்.......)

செப்ரம்பர் 26, 2013

என் மனவலையிலிருந்து......

ஊழலை ஒழிக்க ஹிட்லரை அழைத்துவராதீர்கள்

(சாகரன்)

இந்தியாவில் அண்மைய நாட்களில் நடந்துவரும் அரசியல் மாற்றங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருக்கும் பல அமைச்சர்கள் செய்துவரும் ஊழல்களால் இவ் அரசு மீது மக்கள் வெறுப்படைந்து இருக்கின்றார்கள். மத்தியில் இருக்கும் அரசு மோசடியான மக்கள் விரோத அரசு அல்ல, ஆனால் ஊழல் நிறைந்த மோசமான அரசுதான். பல கட்சிகளை தன்னகத்தே கொண்ட கூட்டாட்சியில் நடைபெறும் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் இவ் அரசிலும் நிறையவே இருக்கின்றன. சிறுபான்மை அரசிற்கு அதன் கூட்டணிக் கட்சிகளினால் கொடுக்கும் நெருக்கடியினால் அமைச்சர்கள், அரசில்வாதிகள் செய்யும் ஊழல்களை கட்டுப்படுத்த முடியாமல் ஐக்கி முற்போக்கு கூட்டணி அரசு தத்தளிகின்றது. கூடவே அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை உடைய மன்மோகன் சிங், சிதம்பரம் போன்றவர்களால் இந்தியத் தேசியத்தின் நிலையும் வெளிநாட்டு முதலிடு என்ற போர்வையில் கேள்விக்குறியாகி நிற்கின்றது. அண்மைக் காலத்து டாலருக்கு எதிரான ரூபாய் இன் வீழ்ச்சியும் இந்த அமெரிக்க சார்பு பொருளாதாரத்தின் தாக்கங்கள்தான். தேசிய உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் அந்நிய முதலீட்டுடன் கூடிய தொழிற்துறைகளில் மக்களைச் சாய்த்துச் செல்லும் அணுகு முறையானது அத்தியாவசியப் உணவுப் பொருட்களின் விலைகளை வானளவிற்கு உயர்த்திச் சென்றுள்ளது. பண்ட உற்பத்தியே ஒரு நாட்டின் வளர்ச்சியை உயர்த்திப் பிடிக்கும். இதிலும் இந்தியா போன்ற விவசாயம் முக்கியத்துவம் பெற்ற நாடுகளில் விவசாயத் துறையை நாசம் பண்ணும் பொருளாதார தொழில்துறைகளை ஊக்கிவிக்கும் அணுகுமுறையானது நாட்டில் சாமான்ய மக்களை மேலும் வறுமைக் கோட்டிற்குள் கீழ் கொண்டு சென்று உணவுபொருட்கள் இன்றி பட்டினிச் சாவிற்குள் தள்ளிவிடும். நகரத்தில் காப்ரேட் நிறுவனங்களில் தொழில்புரியும் மத்தியதர வசதி படைத்தவர்களிடம் பணம் இருக்கலாம் ஆனால் பண்டங்கள் இருக்காது. புண்டங்களை வாங்குவதற்கு வண்டியில் பணம் கொண்டு சென்று கூடைக்குள் பொருட்களைக் வாங்கிவரும் நிலமைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் ஹிட்லர் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபித்திருக்கும் நரேந்திர மோடி ப.ஜ.க வின் அடுத்த பிரதம மந்திரி வேட்பாளர் என்ற அறிவிப்பும் அதனைத் தொடரந்த சங்க பரிவாரங்களின் ஆர்ப்பரிப்பும் மத நல்லிணகத்தை இன்னமும் கட்டிக்காத்துவரும் இந்தியாவில் மீண்டும் ஒரு மும்பாய், பாபர் மசூதி. குஜராத் கலவரங்களை உருவாக்கமாட்டாது என்று அடித்துக் கூற முடியவில்லை. மோடியை முன்னோக்கி நகர்த்துவது எந்தவகையிலும் இந்தியாவிற்கு நல்லதல்ல. இதன் பலாபலன்களை இந்திய மக்கள் எதிர்காலத்தில் அனுபவிக்க நேரலாம். அமெரிக்காவும், பாகிஸ்தானும் சீனா என்ற பூச்சாண்டிக்குள் இந்தியாவில் இரத்த ஆற்றை ஓடவைக்க மோடி செய்த, செய்ய இருக்கின்ற படுகொலைகளை எதிர்காலத்தில் காரணங்களாகக் காட்ட முற்படலாம். இதற்கு பலியாக அப்பாவி; முஸ்லீம் பிரஜைகளை இவர்கள் பலியிட மோடியின் நகர்வு ஊக்க மருந்து போல் அமையலாம். எனவே இந்திய மக்களே ஊழல் அரசை இல்லாது ஒழிக்க ஒரு ஹிட்லரின் மாற்றீடான மோடியை முன்னிறுத்தவதற்கு உடன்படாதீர்கள். இது இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க நினைப்பவர்களுக்கு தீனிபோட்டதாக அமைந்து விடும். தேசிய உற்பத்தியை முன்னிறுத்தும் அந்நிய ஆதிக்க தொழிற்துறை முதலீட்டை எதிர்த்து நின்று வென்று காட்டுங்கள்.

காணி அதிகாரங்கள் மத்திய அரசிற்கு மாத்திரமே

காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றிற்கு தீர்ப்பு வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் நீதியரசர்களான எஸ்.ஸ்ரீபவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரை கொண்டு குழவினரே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

போனஸ் ஆசனத்தை முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்க கூட்டமைப்பு தீர்மானம்

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழக்குவதற்கு தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணியின் வேட்பாளர் அய்யூப் அஸ்மினுக்கே அந்த போனஸ் ஆசனம் ஒன்றினை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள போனஸ் ஆசனத்தை ஐந்து வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், முதலாவது வருடத்தை யாருக்கு வழங்குவது என்று இன்னும் ஓரிரு தினங்களில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, ஐந்து வருட மாகாண சபை பதவி காலத்தில் ஐவர் தலா ஒவ்வொரு வருடம் மாகாண சபை உறுப்பினராக பதவி வகிக்கவுள்ளனர். வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த போனஸ் ஆசனம் பகிரப்படும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில், வடமாகாண சபையில் முஸ்லிம் பதவி வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது எப்படியிருக்கு நாடுகடந்த தமிழீழக்காரர்களே?

(இதற்கு தொடர்புடைய கட்டுரை....)

நவீபிள்ளை காலக்கெடு விதிப்பு, இலங்கை நிராகரிப்பு

போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும்இ அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவி பிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் வாயிலாக வாய்வழி அறிக்கையாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. (மேலும்.......)

புலிச் சுறாவிற்கும் நீச்சல் பிழைக்கும்.......

வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகொன்று 1,500 கிலோ கிராம் எடையுடைய  புலிச்சுறா இன மீன் ஒன்றை இன்று புதன்கிழமை பிடித்துள்ளது. அண்ணளவாக 24 அடி நீளமும் 15 அடி சுற்றளவையும் இந்த மீன் கொண்டிருக்கும் என குறித்த படகின் உரிமையாளரான ஏ.எல்.எம்.முபாறக் தெரிவித்தார்.

சமூகங்கள் சமத்துவமாக மீள் இணைவதற்கான இழந்து விடக் கூடாத சந்தர்ப்பம்

(ஸ்ரீதரன் சுகு)

விருப்பு வாக்குகள் 2004 பாராளுமன்ற தேர்தலின் பிரதிபலிப்புக்களை கொண்டிருக்கின்றன. திரு கஜன் பொன்னம்பலம் , திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் தெரிவை ஒத்ததாகவும்  காணப்படுகிறது.  தீவிர தேசியவாத நிலைப்பாடுகளும் உள்ளார்ந்து காணப்படுகின்றன என்பதை மறுத்து விட முடியாது. கொந்தளிக்கும் சமுத்திரத்தில் லாவகமாக  மாகாண சபையை இயங்கச் செய்வதில் இவர்களுக்கு குறிப்பாக திரு. விக்கினேஸ்வரன் அவர்களுக்கு மிகுந்த  நிதானம் தேவைப்படுகிறது. கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் வெ'வ்'வேறு தங்கள் தனிப்பட்ட நலன்கள் சார்ந்து இயங்கக் கூடியவர்கள். ஆக்கபூர்வமாக மாகாணசபையை இயங்கச் செய்வது அதற்கான அதிகாரங்களுக்காக போராடுவது என்பதை விட அதனை குறுந்தேசியவாத அரசியல் நோக்கி இழுத்துச் செல்வது விபரீதங்களுக்கு வழி வகுக்கும். (மேலும்.......)

“நாடக ஹீரோ முதல்வர் விக்கினேஸ்வன் அயோக்கியர்” - நாடுகடந்த கவிஞர் காசி.ஆனந்தன்

 
“தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கின்ற யோக்கியதை எவனுக்கும் கிடையாது. நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தழைவிட்ட (முதல்வர்) விக்னேஸ்வரனுக்கு நிச்சயம் கிடையாது” என்று போட்டு தாக்கியிருக்கிறார், விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகரும், தமிழகத்தில் நீண்ட காலமாக வசிப்பவருமான கவிஞர் காசி.ஆனந்தன். இலங்கையில் வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றதே தவறு என்ற கருத்தை முன்வைத்துள்ள காசி.ஆனந்தன், “இந்த தேர்தல் மகிந்த அரசிற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது. மகிந்தவின் அரசு ஒரு நேர்மையான அரசு, தேர்தல் நடத்தி, ஜனநாயகத்தை மதிக்கிற அரசு, ஆகவே அந்த ஜனநாயவாதியான மகிந்த போற்றுதலுக்கு உரியவர் என்று காட்டுகின்ற நாடகத்திற்கு இந்த மாகாணசபை பயன்பட்டிருக்கின்றது” என்கிறார்.
“தமிழர் பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று கோரிக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மட்டும் இருந்தல்ல, பல உலக நாடுகளிடமும் இருந்துதான் வந்தன. திரு. ஆனந்தனின் இந்த சாடலைக் கேட்டவுடன், “அடாடா… இந்த நாடகம் நடக்கும் விஷயத்தை உலக நாடுகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து, எச்சரிக்கை செய்திருக்கலாமே” என்ற அங்கலாய்ப்பு ஏற்படுகிறது அல்லவா?
(மேலும்.......)  (காசியின் சொற்பொழிவை காணொளியில் பார்க்க......)

13 ஆவது திருத்தத்திற்கான உறுதிமொழியை நிறைவேற்றவும்: இந்தியா

வடமாகாணம் உட்பட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை வெற்றிகரமாக முடித்துள்ளதை இந்திய அரசாங்கம்  வரவேற்றுள்ளது. மொத்தத்தில் இந்த தேர்தல்களில் மக்களின் விருப்பம் பிரதிபலிப்பதை தெளிவாக காணக்கூடியதாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள இந்தியா 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பில் வழங்கிய உறுதி மொழிகளையு நிறைவேற்றுவதை நாம் ஆவலுடன் எதிர்பாத்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. வடமாகாணசபை தேர்தலை நடத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும்,  இலங்கை அரசாங்கமும் நம்பிக்கை தரவல்ல அறிக்கையை வெளியிட்டுள்ளதை  நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். வடபகுதி மக்கள் நலனை கருத்தில்கொண்டு மறுதரப்புடன் ஒற்றுமையாக இயங்க இருதரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளமை திருப்தியளிக்கின்றது. இவ்வாறான ஒத்துழைப்பு மனப்காங்கு மட்டுமே இரு சமூதாயத்தினருக்கும் இடையில் மனப்பூர்வமான நல்லிணக்கம் ஏற்பட வழிவகுக்கும். சிறும்பான்மையினர் உட்பட இலங்கையிலுள்ள சகல சமுதாயங்களும் ஐக்கிய இலங்கையில் தாம் சமமான பிரஜைகள் என உணரவும் சமத்துவம், நீதி, கௌரவம, சுயமரியாதை  என்பவற்றை கொடுக்கவல்ல எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையுடன் வாழவும் வழிவகுக்கும் செயல்முறையை ஊக்குவிக்க இரு தரப்பினருடனும் செயற்பட இந்தியா உறுதியாக உள்ளது.

சிங்கள மாணவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை தமிழ், முஸ்லிம் மாணவர்களும் அனுபவிக்க வேண்டும்

சிங்கள மாணவர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் தமிழ், முஸ்லிம் மாணவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நாட்டின் கல்விக் கொள்கை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்தார். இன்று பிரபல பாடசாலைகள் எனக் கருதப் படுபவைகள் அனைத்தும் 1ஏபி தரப்பாடசாலைகளாகும். இவற்றிற்கு மாணவர்களைச் சேர்க்கவே இன்று பெற்றோர் பெரும் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். மாணவர்களும் ஓய்வின்றி அதிகாலை முதல் நகரப் பாடசாலைகளுக்கு படை எடுக்கின்றனர். இச்சிரமத்தைக் குறைக்க நாம் கிராமப்புறங்களில் 1ஏபி சுப்பர் தரப்பாடசாலைகளை அமைக்கவுள்ளோம். அடுத்த வருடம் முடிவடைவதற்குள் இவ்வாறான 1ஏபி சுப்பர் பாடசலைகள் 200 ற்கும் மேல் அமைக்கப்பட்டு விடும். க.பொ.த. உயர்தரத்தில் கலைத்துறைக்கு 25 சதவீதமாகவும், வர்த்தகத்துறைக்கு 35 சதவீதமாகவும், விஞ்ஞான தொழில் நுட்பத்துறைக்கு 40 சதவீதமாகவும் மாற்றப்படவேண்டும். அத்துடன் இன்று தொழிற்சந்தையில் பாரிய கேள்வி நிலவுவது வர்த்தகத்துறைக்கும் தகவல் தொழில் நுட்பத்துறைக்குமாகும். இதற்காகக் கல்வித் திட்டத்தில் பாரிய மாற்றம் ஒன்று தேவைப்படுகிறது. அதனையே நாம் மேலே சொன்ன 1ஏபி சுப்பர் பாடசாலை மூலமாக அடையவுள்ளோம் என்றார்.

விக்னேஸ்வரனை சந்திக்கின்றார் குர்ஷித்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ள சி.வி. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார். அடுத்த மாத ஆரம்பத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு அடுத்த மாத ஆரம்பத்தில் குர்ஷித் விஜயம் செய்யவுள்ளார். அவர் ஒக்டோபர் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரியவருகிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்கும் குர்ஷித், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் விக்னேஸ்வரனையும்  அவர் சந்திக்க உள்ளார்.

பாக். பூகம்பத்தால் கடலில் உருவான குட்டி தீவு

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியை பூகம்பம் உலுக்கிய வேகத்தில் கடலில் புதிய குட்டித்தீவு ஒன்று தோன்றி உள்ளது. பாகிஸ்தானின் க்வாடர் கடலோரப் பகுதியில் இந்த தீவு உருவாகி இருக்கிறது. சுமார் 60 மீற்றர் நீள அகலத்தில் தோன்றியுள்ள இந்த தீவின் மணல் பகுதி சுமார் 20-30 மீற்றர் உயரத்துக்கு உயர்ந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இது போன்ற தீவு உருவாகி இருந்தது. நாளடைவில் அந்த தீவு கடலில் கரைந்து காணாமல் போய்விட்டது. தற்போது பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிய குட்டித்தீவு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலோரத்தில் திரண்டு அந்த புதிய குட்டித் தீவை பார்த்தனர். இந்த தீவு 100 மீ சுற்றளவு கொண்டுள்ளது. கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருப்பதால் இந்தத் தீவு கண்களுக்குத் தெரிந்தது. இவ்வளவு பெரிய பூகம்பத்தின் விளைவாக இதுபோன்று குட்டித் தீவு தோன்றுவது ஒன்றும் ஆச்சரியமல்ல என்று ஜாகித் ரஃபி என்ற பூகம்ப ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்க பூகம்ப ஆய்வு மைய நிபுணர் கூறுகையில் பொதுவாக தீவு தோன்றுவது அரிதானதே. தீவு தோன்றும்போது பேரலைகள் எழும் என்று கூறியுள்ளார்.

கென்யாவில் நான்கு நாள் நீடித்த ஆயுததாரிகளின் முற்றுகை முறியடிப்பு

கென்ய தலைநகர் நைரோபி வணிக வளாகத்தில் நான்கு தினங்களாக நீடித்த இஸ்லாமிய ஆயுததாரிகளின் முற்றுகை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய 5 அயுததாரிகள் கொல்லப்பட்டதாகவும் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கென்ய ஜனாதிபதி உஹ்ரி கென்யாட்டா தொலைக்காட்சி ஊடே நாட்டு மக்களுக்கு அறிவித்தார். தமக்கு எதிரான தாக்குதல்தாரிகளை கென்யா தோற்கடித்தது. ஆனால் நாம் இழப்பை சந்தித்தோம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். (மேலும்.......)

செப்ரம்பர் 25, 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியதோர் ஆரம்பமாக எடுக்க வேண்டும்

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் மூலம் பிரதான எதிர்க்கட்சிகளான இடதுசாரிகளினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் வாக் குகளின் சதவீதம் மற்றும் ஆசனங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியுற்று காணப்பட்ட மையானது அவர்கள் மரணிக்கும் தறுவாயில் உள்ளதையே எடுத்துக் காட்டுகிறது என ஜனநாயக இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் வாசு தேவ வெளியிட்டுள்ள அறிக் கையிலேயே மேற்கண்ட வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாகாண சபைத் தேர்தலில் பொதுவான முடிவாக வெளிப்படுத்தப் படுவது என்னவெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் கீழ் ஜனநாயகம் செயற்படுவதாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை புதியதோர் ஆரம்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்.......)

ஆசியப் பெண்களின் நம்பிக்கைச் சுடர்!

சுனிலா அபேசேகரா...

ஆசியப் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராகவும் உரிமைகளுக்காகவும் போராடிய சிங்களப் பெண். இலங்கையில் தமிழர்கள் வாழும் வடபகுதியில் தொடங்கி, உகாண்டா வரை, பாதிக்கப்படும் பெண்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாக ஒலித்த குரல் சுனிலா அபேசேகராவினுடையது. 61 வயதான சுனிலாவை கடந்த சில வருடங்களாகவே தொந்தரவு செய்துகொண்டிருந்த புற்று நோய், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அவரை மரணிக்க வைத்துவிட்டது! (மேலும்.......)

வடக்கு தமிழ் முதல்வர் விக்கினேஸ்வரன் கார் அருகே.. யார் அந்த சிங்களர்கள்?

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரன், இலங்கை அரசுடன் ‘கண்ணை மூடிக்கொண்டு’ எதிர்ப்பு அரசியல் நடத்த மாட்டார்.  அதற்கான அறிகுறி, நேற்று இரவே வவுனியா நகரில் தெரிந்தது. மாகாண சபை தேர்தல் வெற்றியை அடுத்து, யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த முதல்வர் விக்கினேஸ்வரன், கூட்டம் முடிந்தபின் தமது காரில் கொழும்பு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது கார், வவுனியா நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் அந்த காருக்கு 60 லீட்டர் எரிபொருளை நிரப்பியபோதுதான், தற்செயலாக பெட்ரோலுக்கு பதிலாக டீசல் நிரப்பப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மெக்கானிக் ஒருவரை அழைத்துவந்து, காரின் பெட்ரோல் டேங்க் கழட்டப்பட்டு துப்பரவு செய்தபின் மீண்டும் பொருத்த வேண்டியிருந்தது. வடக்கு மாகாண முதல்வர் சுமார் 3 மணி நேரம், பெட்ரோல் நிலையத்தில் காத்திருந்தார். இந்த தகவல் கிடைத்ததை அடுத்து, வவுனியா பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரி டி.கே.அபயரட்ண அங்கு வந்ததுடன், வடக்கு மாகாண முதல்வருக்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தார். வவுனியா போலீஸ் நிலையத்தில் இருந்து, போலீஸார் தருவிக்கப்பட்டனர். அதன்பின், அப்பகுதி ஆளும்கட்சி (ராஜபக்ஷே கட்சி) மாவட்ட செயலாளர் பிரேமரட்ன சுமதிபால அங்கு வந்து, கார் திருத்தி முடியும்வரை வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுடன் சிங்களத்தில் பேசிக்கொண்டிருந்தார். இரு தினங்களுக்கு முன்புவரை, இரு கட்சியினரும் ஆளையாள் மேடைகளில் திட்டிக் கொண்டிருந்தனர். புதிய தமிழ் முதலமைச்சரின் காரை பின்தொடர்ந்து வேறு கார்களில் வந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர், இந்தக் காட்சியை வைத்த கண் வாங்காமல் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை ஆச்சரியமான காட்சிதானே அது!
ஆமா… பெட்ரோலுக்கு பதில் டீசல் நிரப்பப்பட்டதன் பின்னணியில் ‘சிங்கள ஏகாதிபத்திய சதி’ ஏதாவது இருக்குமோ.. எதற்கும் தேசிய மீடியாவை ஒருமுறை நோட்டமிடவும்.

(Viruvirupu)

எரிந்த யாழ்.நூலகத்துக்கு நூல்களை சேகரித்தவர் மரணம்

உலகத் தமிழர்களின் சொத்தாக இருந்த யாழ்ப்பாண பொது நூலகம்; 1981ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவு நேரத்தில், தீ வைத்து எரிக்கப்பட்டதைதொடர்ந்து அந்த எரியூட்டப்பட்ட நூலகத்திற்காக நூல்களை திரட்டிய நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி மரணமானர். தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் அன்றைய கணக்குப்படி 97,000 அரிய நூல்களுடன் திகழ்ந்த அந்த நூலகம் எரிந்த போது கண்ணீர் விட்டு அழாத தமிழர்களே இல்லை. அப்படி அழுதவர்தான் இந்த நா.ப.இராமசாமியுமாவார். எல்லோரும் அழுததுடன் நின்று விட்டார்கள். ஆனால், நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி எரிந்து போன நூலகத்தை புதுப்பிக்க புதிய நூல்களை திரட்ட துவங்கினார். கண்ணில் தென்படும் பழைய நூல்களை வாங்கத் தொடங்கினார். பழைய நூல்கள் எங்கு கிடைக்கும் என்று சொன்னாலும், உடனடியாக கிளம்பி போய்விடுவார். பகுத்தறிவு, வரலாறு, அறிவியல், புரட்சி, போராட்டம், விடுதலை, மொழி, இனம், வீரம், குழந்தைகள் கதை என்று தமிழர் சமுதாயத்துக்கு தேவையான அனைத்து நூல்களையும் வாங்கி குவிக்கத் துவங்கினார். இடைவிடாத பயணம், தேடல் என்று போன நா.ப.இராமசாமியிடம் இன்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைக் கொண்ட நூலகத்தைப் பாதுகாத்து பராமரித்து வந்தார். 2004 ஆம் ஆண்டு ஜனவரியில், யாழ்ப்பாணம் சென்ற நா.ப.இராமசாமி, ரூபாய் ஐந்து இலட்சம் மதிப்புள்ள 3800 நூல்களை  அன்பளிப்பாக வழங்கினார். மீதமுள்ள நூல்கள்  அனைத்தும் யாழ்பாண நூலகத்துக்கு என தன்னுடைய உயிலில் எழுதி வைத்துள்ளார் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

ஏன் இந்தப் படுதோல்வி?

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 2005இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தேர்தல் ரீதியாகவும், அரசியல் ரீதியாக சந்தித்துள்ள மிகப்பெரிய தோல்வி இது. இப்படியொரு தோல்வி அரசாங்கத்துக்கு ஏற்படும் என்றோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தளவு பெரிய இமாலய வெற்றி கிடைக்கும் என்றோ எவரும் நினைத்திருக்கவில்லை. காரணம், வடக்கில் அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களால், அரசியல் ரீதியாக மக்கள் கவரப்படக் கூடும் என்ற கருத்து பரவலாக இருந்து வந்ததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தளவு பெரிய வெற்றியை எவராலும் கணிக்க முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட இதனை எதிர்பார்க்கவில்லை. அவர்கள், 30 ஆசனங்களை வென்றால், தமது குரலை உலகம் காது கொடுத்துக் கேட்கும் என்று பிரசாரங்களை செய்திருந்தனரே தவிர, எவரும் 30 ஆசனங்களை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவிக்கவில்லை. (மேலும்.......)

செப்ரம்பர் 24, 2013

சட்டத்தை மீறும் (முன்னாள்)நீதியரசர்........?

வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன்

அடுத்து ஆடப் போகிறார், ஓங்கி அடித்து!!

இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அக் கூட்டணியின் பிரதான வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன், வடக்கு மாகாணத்தின் முதல்வராக போகிறார். அடுத்து என்ன? இனித்தான் இருக்கிறது திருவிழா! தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மக்களுக்கு காட்டிய அரசியல்வாதிகளில் இருந்து விக்னேஸ்வரன் வித்தியாசமாக இருப்பது, கூட்டமைப்பு இதுவரை செய்துவந்த அரசியலில் இருந்து வேறுபட்டு இருக்கப்போகிறது. அதை இதுவரை காலமும் தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சகித்துக்கொள்வது நல்லது. தேர்தலில் ஜெயித்து 24 மணி நேரம் முடிவதற்கு முன்னரே விக்னேஸ்வரன், “இலங்கை அரசுடன் இணக்கமாக முறையில் செயல்பட்டு ஆட்சி செய்வோம்” என்றார். (மேலும்.......)

மாகாண சபை அமைச்சரவைக்கு முன் அமைச்சரவையில் மாற்றம்?

நடந்து முடிந்த மூன்று மாகாண சபைகளுக்கான அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உயர்மட்டவட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவத்தை வழங்கும் வகையிலேயே இந்த மாற்றம் கொண்டுவரப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மாகாண சபை தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் தி.மு.ஜயரட்னவின் மகன் அனுராத ஜயரட்ன ஆகக்கூடிய 107,644 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கும் நோக்கிலேயே அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நியமனத்தினால் பிரதமர் பதவியிலிருந்து தி.மு.ஜயரட்ன இராஜினாமா செய்து அரசியலிருந்து ஓய்வுபெறவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் ஜயரட்னவின் இராஜினாமாவை அடுத்து ஏற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.

மத்திய மாகாண சபையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் பலர் வெற்றி

மத்திய மாகாண சபையில் கண்டி மாவட்டத்தில் இம்முறை அரசியல்வாதிகளின் உறவினர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் மகன் அனுராதா ஜயரத்ன, காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் சகோதரர் மகன் திலின தென்னக்கோன், விளையாட்டு அமைச்சரின் மைத்துனர் ஆனந்த வீரசிங்க, கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் எரிக் பிரசன்ன வீரவர்தனவின் தந்தையான முன்னாள் பிரதி அமைச்சர் எதிரிவீர வீரவர்தன, மறைந்த அரசியல் வாதி காமினி திசாநாயக்காவின் மகன் மயந்த திசாநாயக்கா ஆகியோர் கண்டி மாவட்டத்தில் தெரிவானதுடன் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் இருந்து இன்னும் பல உறவினர்கள் தெரிவாகியுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் மகன் பிரமித்த பண்டார தென்னக்கோன் பிரதி அமைச்சர் ரோகண திசாநாயக்காவின் சகோதரர் பராக்கிரம திசாநாயக்கா, உயர்கல்வி பிரதி அமைச்சரின் மகன் சிந்தன ஏக்கநாயக்கா, உயர் கல்வி பிரதி அமைச்சரின் சகோதரர் சரத் ஏக்கநாயக்கா(முன்னாள் முதலமைச்சர்), வசந்த அலுவிகாரையின் சகோதரர் ரஞ்சித் அலுவிகார (அலிக் அலுவிகாரையின் மகன்), உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவின் சகோதரர் ஜயலத் திசாநாயக்கா, முதலானவர்களை விசேடமாகக் குறிப்பிடலாம். இவர்களை விட இக்னும் பலர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சபை

பிரிவினையின் மையமா? நல்லிணக்கத்தின் மையமா?

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளை வாக்கெடுப்புக்கு முன்னரே மக்கள் அறிந்திருந்தனர். வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறும் என்பதும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றியை பெறும் என்பதும் முன்னரே எல்லோருக்கும் தெரிந்திருந்தது. தமிழ் வேட்பாளர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட விக்னேஸ்வரனும் சிங்கள வேட்பாளர்களில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகரவும் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமரின் மகன் அனுராத ஜயரத்னவும் விருப்பு வாக்குகளில் முன்னணியில் இருப்பார்கள் என்பதும் முன்கூட்டியே பலரது அனுமானமாக இருந்தது. சரியான புள்ளி விபரங்களை மட்டுமே மக்கள் அறியாமல் இருந்தனர். (மேலும்.....)

தமிழர்களின் விடயத்தில் மீண்டும் இந்தியா கரிசனை

தமிழ் மக்களுடைய விடயத்தில் இந்தியா மீண்டும் கரிசனைகாட்டத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் காட்டிய கரிசனையை இந்தியா இடையில் காட்டாத போதிலும் தற்போது மீண்டும் தலையிடுவதனால் இந்தியாவின் கருத்துக்களை உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தியா எமது தாய் நாடு இந்தியா இலங்கையில் வாழும் தமிழ் மக்களுடைய பிரச்சினை நியாயமான முறையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் கடந்த காலத்தில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டது. இடைக் காலத்தில் துரதிஸ்டவசமாக கைவிடப்பட்ட நிலைமை காணப்பட்டது. தற்போது யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் எமது பிரச்சனைகளின் பால் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அண்மையில் கூட கொண்டுவரப்படவிருந்த ஒரு சட்டமூலம் இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் கருத்துக்களை உலக நாடுகள் மதிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் கருத்துக்கு எதிராக எமது பிரச்சினையில் ஏனைய நாடுகள் செயல்பட மாட்டாது. இந்தியாவில் தமிழ் நாடு மட்டும் அன்றி ஏனைய மாநிலங்களில் வர்ழும் மக்களும் கூட எமது விடயத்தில் அக்கறையாக இருக்கின்றார்கள். தமிழ் நாட்டில் உள்ள தமிழ் தலைமைகள் அனைத்தும் ஒரே கருத்தில் செயல்படுமாக இருந்தால் கூடிய நன்மையை பெறமுடியும் எனவும் தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை

வடக்கில் வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் எவ்வித மோசடிகளும் இல்லாத வகையில் அனைத்து செயற்பாடுகளும் நீதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட்டதனை இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் என். கோபாலசுவாமி உறுதி செய்துள்ளார். அவை தவிர்ந்த வெளியிடங்களில் தேர்தல் வன்முறைகள் இடம் பெற்றிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதும், தமக்கு அவை குறித்து எவ்வித நேரடி அனுபவங்களும் இல்லையெனவும் அவர் கூறினார். இதேவேளை, இலங்கைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்துள்ளார். இராணுவத்தினர் சிவில் உடைகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற போதிலும், அவை குறித்த எவ்வித அத்தாட்சிகளும் இல்லாத நிலையில் எம்மால் அதனை ஊர்ஜிதம் செய்ய இயலாதுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இடம் பெயர்ந்தோர் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வருவதற்கான வாகன வசதிகளை செய்து கொடுத்தமை மற்றும் எழுந்தமானமாக வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டமை ஆகிய தேர்தல்கள் ஆணையாளரின் செயற்பாடு களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

சிரிய இரசாயன ஆயுதங்களை அகற்ற ரஷ்யா இராணுவ உதவி

சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் திட்டத்திற்கு உதவியாக அங்கு இராணுவத்தை அனுப்ப தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா - ரஷ்யாவுக்கு இடையில் இணக்கம் ஏற்பட்ட இந்த திட்டத்திற்கு ரஷ்ய இராணுவ கண்காணிப்பாளர்கள் உதவ முடியும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரொவ் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். எனினும் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா பயமுறுத்துவதற்கு பயன்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். சிரியா தன்னிடம் உள்ள இரசாயன ஆயுதங்கள் குறித்த தரவை சமர்ப்பித்ததாக சர்வதேச இரசாயன ஆயுத கண்காணிப்பு நிறுவனம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. சிரியாவிடம் சுமார் 1000 தொன் இரசாயன ஆயுதம் கையிருப்பில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அகற்ற பெருந்தொகை படையினர் தேவையில்லை என்றும் ஒரு சிறு தொகை கண்காணிப்புப் படை போதுமானது என்றும் லவ்ரொவ் விபரித்தார். அத்துடன் அரபு நாடுகள் மற்றும் துருக்கியும் இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட அழைப்பு விடுத்தார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகள் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான தனது குறுட்டுத்தனமாக செயற்பாட்டுக்கு முயற்சித்து வருவதாகவும் இந்த பேட்டியில் லவ்ரொவ் குற்றம் சாட்டினார்.

விக்னேஸ்வரன் ஜனாதிபதியை சந்திப்பது பிரச்சினையை தீர்க்க நல்ல அறிகுறியாகும்

ஜனாதிபதி அவர்களை நான் சந்தித்து பேசத்தயாராக இருக்கிறேன் என்று திரு.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்து உண்மையிலேயே பாராட் டப்பட வேண்டியதாகும். எதிர்ப்பு அரசியலை நடத்தாமல் இணக்கப்பாட்டு அரசியலின் மூலமே நல்லெண்ணத்தை வலுப்படுத்தி, வடபகுதியின் வளர்ச்சிக்கு உதவ முடியுமென்ற திரு.விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டின் காரணமாகவே ஜனாதிபதியை சந்தித்து பேசவிரும்புவதாக கூறியிருக்கிறார் என்று அரசியல் அவதானிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வடமாகாண மக்களின் தீர்ப்புக்கு நாம் மதிப்பளிக்கிறோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப் பாளருமான திரு. பசில் ராஜபக்ஷவும் அறிவித்திருக்கிறார். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். (மேலும்.....)

போனஸாக கிடைத்த ஆசனங்களை கூட எனக்கு தரவில்லை !

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வரலாறு காணாத வெற்றியை ஈட்டியுள்ளார்கள். இதன் மூலமாக 2 ஆசனங்கள் போனஸாகக் கிடைத்தது. கிடைக்கப்பெற்ற இந்த ஆசனங்களில் ஒன்றை, முஸ்லீம் சகோதரர் ஒருவருக்கும் மற்றையதை பெண் ஒருவருக்கும் கொடுத்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு. நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்த்தலில் ஆனந்த சங்கரி போட்டியிட்டு படுதோல்வியை தழுவியுள்ளார். இன் நிலையில் போனஸ் ஆசனங்கள் 2 இருக்கிறது அதில் ஒன்றையாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு தரும் என்று அவர் நம்பியிருந்துள்ளார். ஆனால் அந்தக் கனவிலும் தற்போது மண் விழுந்துள்ளது. இதேவேளை வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி, திரு.விக்னேஸ்வரன் அவர்களை உத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்ற செய்திகளும் தற்போது வெளியாகியுள்ளது.

செப்ரம்பர் 23, 2013

வட மாகாண சபை தேர்தல்  உண்மையில்  வெற்றி யாருக்கு?

(மட்டக்களப்பிலிருந்து - எழுகதிரோன் )

தமிழ் மக்களின் கடந்த கால இழப்புகளையும் அழிவுகளையும் நினைவு படுத்தியே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தேர்தலை எதிர்கொண்டனர். இறுதி யுத்தம் முடிந்த பின்னர் சமாதானம், சமூக நல்லிணக்கம், இனங்களிடையேயான ஒருமைப்பாடு என்பன மெல்ல மெல்ல முளை விட ஆரம்பித்தன. சுமார் நான்கு வருடங்கள் மீட்சி பெற்று வந்த இயல்பு வாழ்க்கைக்கு இந்த இரு மாதங்களுக்குள் கூட்டமைப்ப்பினர் ஆப்பு வைத்துள்ளனர். இந்த தேர்தலில் கூட்டமைப்பினர் பிணங்களை தோண்டிஎடுப்பதுபோல் இனங்களிடையேயான வெறுப்புணர்வை, பகைமையை, பழிவாங்கும் உணர்வை மீண்டும் தூண்டி விட்டுள்ளனர்.வாக்குகளை பெற்று கொள்வதற்காக மிக மோசமான முறையில் இனவாதமும், இனவெறியும் கூட்டமைப்பினரின் பிரச்சார மேடைகளில் அரங்கேற்றப்பட்டன. அதுமட்டுமன்றி தமிழ் மக்களை மீண்டும் ஒரு யுத்தத்துக்கு தயார் படுத்துவது போன்று இராணுவத்தினருடனான முறுகல்களுக்கு தூண்டிவிட்டனர். எத்தனையோ தமிழ், முஸ்லிம், சிங்கள அப்பாவி சிவிலியன்களை கொன்றுகுவித்த பிரபாகரனை ஒரு மாவீரனாக கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் நீதியரசர் விக்கினேஸ்வரன் பேசிய பேச்சுக்கள் சிவஜிலிங்கத்தைவிட அவரை தரம் தாழ்த்தியிருக்கின்றன.இந்த மிக மோசமான வழி முறைகள் ஊடாகவே சிங்களவர்களுக்கும் அரசுக்கும் எதிராக தமிழ் மக்களின் மன உணர்வுகளை சூடாக்கி அதனை தமக்கான வாக்குகளாக அபகரிப்பதில் கூட்டமைப்பினர் வெற்றி பெற்றுள்ளனர். (மேலும்.....)

வட மாகாணசபை அதிகாரங்கள் இறைமையின் நிமித்தம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் -  சம்பந்தன்

'வட மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் பெறப்பட்டுள்ள மாகாணசபைக்கான அதிகாரங்கள் அனைத்தும் இறைமையின் நிமிர்த்தம் பகிர்தளிக்கப்பட வேண்டும்' என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், 'எமது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப் போன்று வடக்கு மாகாணசபை ஆட்சியை நடத்துவதற்கான அதிகாரம், நிர்வாக மற்றும் நீதி அதிகாரங்கள் அனைத்தும் மக்களுக்குரிய இறைமையின் நிமிர்த்தம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்' என்றார். 'வடக்கு மாகாணத்தில் தற்போது இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்றது. இராணுவமானது தனது வேலைக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இது தொடர்ந்து இடம்பெற நாங்கள் இடமளிக்கமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவினை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். (மேலும்.....)

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம்

வடமாகாண சபைக்கு முழுமையான ஒத்துழைப்பு - பசில் ராஜபக்ஷ

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாரென பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டமானது தேர்தலை இலக் காக கொண்டு முன்னெடுக் கப்பட்டதொன்றல்ல. அது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே நாம் கருதுகின்றோம். வட மாகாணத்தின் புதிய முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகம் அந்தப் பகுதி மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமென தான் நம்புவதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (மேலும்.....)

ஐ.தே.க., ஜே.வி.பி. பெருந்தோல்வி மு.கா. வாக்கு வங்கியில் பாரிய சரிவு

நடந்து முடிந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி (ஜே.வி.பி) என்பன படுதோல்வி அடைந்துள்ளதோடு முஸ்லிம் காங்கிரஸ் பாரிய பின்னடைவை அடைந்துள்ளதாக தேர்தல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். மத்திய மாகாணத்தில் ஐ.தே.க. உறுப்பினர் தொகை 6 இனாலும் வடமத்திய மாகாணத்தில் இரண்டினாலும் குறைவடைந்துள்ளதோடு வடக்கில் ஒரு உறுப்பினரைக் கூட ஐ.தே.க. பெற முடியாது போனமை குறிப்பிடத்தக்கது. (மேலும்.....)

TNA victory in SL "a verdict against Rajapaksa govt" - D Raja

Hailing the Tamil National Alliance's victory in provincial council polls in Sri Lanka as being "significant" one, CPI Leader D Raja today said "it is a verdict against the (Mahinda) Rajapaksa government". "It is a significant verdict given by Tamil people in the Northern Province of Sri Lanka. Primarily, it is a verdict against the Rajapaksa government", Raja told PTI. "Now the Rajapaksa government should own accountability for all it did to Tamil people," Raja added. "If the Rajapaksa government has any respect for the verdict of the people, it should immediately stop militarisation of the Tamil areas and the forced disappearance of Tamil youth," he said. The island government should come forward for a political solution. It is for the Tamil people of Sri Lanka to decide what kind of political solution they want, he said. (more...)

தெற்கு அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கும் ஜனநாயக கட்சி

முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா தலை­மை­யி­லான ஜன­நா­யக கட்­சி­யா­னது தென்­ப­குதி அர­சி­யலில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக மூன்­றா­வது சக்­தி­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. நடந்து முடிந்த மத்­திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்­தலில் இது­வரை காலமும் தெற்கில் மூன்­றா­வது சக்­தி­யாக வலம் வந்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியை பின்­தள்­ளி­விட்டு ஜன­நாயக் கட்­சி­யா­னது மூன்­றா­வது சக்­தி­யாக வந்­துள்­ளது. மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் சரத் பொன்­சேகா தலை­மை­யி­லான ஜன­நாயக் கட்­சி­யா­னது ஐந்து ஆச­னங்­களை கைப்­பற்­றிக்­கொண்­டுள்­ளது. எனினும் இது­வரை காலமும் தெற்கில் மூன்­றா­வது சக்­தி­யாக காணப்­பட்ட மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யா­னது வடமேல் மாகா­ணத்தில் மட்டும் ஒரு ஆச­னத்தை பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

இரசாயன ஆயுத தரவுகள் சிரிய அரசினால் கையளிப்பு

சிரியா தனது இரசாயன ஆயுதம் குறித்த செயற்பாடுகளை தம்மிடம் வழங்கியிருப் பதாக சர்வதேச இரசாயன ஆயுத கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. ரஷ்யா - அமெரிக்காவுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்ட சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் திட்டத்திற்கு அமைய, சிரியா தன் மீதான ஒரு வார கெடு முடிவதற்குள் இந்த தகவலை வழங்கியுள்ளது. சிரியாவிடம் சுமார் 1000 தொன்கள் இரசாயன ஆயுதங்கள் கையிருப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது. புதிய உடன்படிக்கையின்படி அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சிரியாவிடம் இருக்கும் அனைத்து இரசாயன ஆயுதங்களும் அகற்றப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. “எமக்கு கிடைக்கப் பெற்றிருப்பது சிரிய அரசின் முழுமையான இரசாயன ஆயுதம் தொடர்பான செயற் திட்டம் என்பதை எம்மால் முழுமையாக உறுதி செய்ய முடியாது” என இரசாயன ஆயுதங்களை தடுக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. டமஸ்கஸ் புறநகர் பகுதியில் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி நூற்று க்கணக்கானோரை பலி கொண்ட இரசாயன தாக்குதல் குறித்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு மீது குற்றம் சாட்டுகின்றன. எனினும் அதனை மறுக்கும் அஸாத், இந்த தாக்குதலுக்கு கிளர்ச்சி யாளர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார். இந் நிலையில் சிரியா தொடர்பில் பாதுகாப்பு சபையில் கொண்டுவர திட்டமிடப்பட்டி ருக்கும் தீர்மானம் குறித்து நிரந்தர அங்கத்துவ நாடுகளுக்கு இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

பாகிஸ்தான் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு: 52 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ தேவால யத்திற்கு வெளியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 52 பேர் கொல்லப் பட்டதோடு 40 க்கும் அதிகமானவர் கள் காயமடைந்தனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை ஆராதனை யில் பங்கேற்க மக்கள் தேவாலய த்தில் ஒன்றுகூடி இருந்தவேளை இரு தற்கொலைதாரிகள் குண்டை வெடிக்கச் செய்ததாக குண்டு செயலிழக்கும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். கொல்லப்பட்டோரில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். குண்டு வெடித்தபோது தேவாலயத்தில் 500 முதல் 600 பேர் வரை இருந்துள்ளனர். முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில் 1.6 வீதம் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர்.

கென்யாவில் வணிக வளாகத்தில் ஆயுததாரிகள் தாக்குதல்: 59 பேர் பலி

கென்ய தலைநகர் நெய்ரோபிலுள்ள வணிக வளாகத்தின் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளதோடு 175 பேர் காயமடைந்துள்ளனர். அல் ஷபாப் ஆயுதக் குழுவால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த தாக்குதல் இரண்டாவது நாளாக நேற்றைய தினத்திலும் நீடித்தது. இதில் மேலும் பலர் தொடர்ந்து பிணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வணிக வளாகத்தை சுற்றி இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதோடு தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டவாறு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் வணிக வளாகத்தின் ஒரு பகுதியை ஆயுததாரிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். சோமாலியாவில் கென்ய இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அல் ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. சோமாலியாவில் அல் ஷபாபுக்கு எதிராக 2011 தொடக்கம் சுமார் 4000 கென்ய படைகள் போராடி வருகிறது. இந்த தாக்குதல் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரும் பாரிய இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கென்ய அரசு அறிவித்துள்ளது.

ஈராக்கில் இறுதிக் கிரியையில் குண்டு தாக்குதல்; 60 பேர் பலி

ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தலைநகர் பக்தாதின் சத்ர் பகுதியில் இறுதிக் கிரியை நிகழ்வொன்றின் போது இடம் பெற்ற குண்டு தாக்குதல்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். இறுதிக் கிரியையில் பங்கேற்றோர் ஒன்று கூடியிருந்த பகுதியை இலக்குவைத்து ஒரு தற்கொலை கார்குண்டு தாக்குதல் உட்பட இரு குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர், அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் பொலிஸார் விரைந்த நிலையில் மூன்றாவது குண்டு வெடித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள், பெண்களும் உட்படுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் 120 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம் பெற்ற இந்த தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை.

செப்ரம்பர் 22, 2013

என் மனவலையிலிருந்து.....

தேர்தலின் ஜனநாயக முடிவுகளை மதிப்போம்

(சாகரன்)

வட மாகாணசபைத் தேர்தல் முடிவுற்று தேர்தல் முடிவுகளும் முழுவதுமாய் வெளிவந்தும் விட்டன. பொதுவான எதிர்பார்ப்புக்கள் கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் தமிழ் அரசுக் கட்சி பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. த.தே. கூட்டமைப்பு மக்களின் வேண்டி நின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அப்பால் 38 இல் 30 ஆசனங்களை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளனர். அபிவிருத்திகளை தொடர்ந்தும் செய்வதற்கு தமக்கு வாக்களிக்குமாறு கோரிநின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இற்கு மக்கள் 25 வீதமான ஆதரவுகளை மட்டும் வழங்கியிருக்கின்றனர். அரசின் அபிவிருத்தியைவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் மக்கள் கூடுதலான நம்பிக்கை வைத்திருப்பதை இது எடுத்தியம்பி நிற்கின்றது. இத் தேர்தலை தமிழ் மக்கள், தமிழ் மக்கள் எதிர் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க மறுக்கும் இலங்கை அரசு என்ற கோதாவில் பார்த்திருப்பதாகவே எனக்கு புலப்படுகின்றது. மக்களின் பார்வை சரியா பிழையா என்பதை தீர்மானிக்கும் விடயம் அமையப்போகும் மகாணசபை ஆட்சிக்காலம் ஆகும். தமிழ் அரசுக் கட்சி எவ்வாறு மகாணசபையை ஆட்சி புரியப்போகின்றது என்பதில் இது தங்கியிருக்கின்றது. தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் ஒரு ஐக்கியமான மாற்று அணி தமிழ் தேசிக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக தேர்தல் களத்தில் நின்றிருந்தால் தமிழ் அரசுக் கட்சியின் வெற்றி வாய்புக்களில் ஒரு மாற்றத்தைக் கண்டிருக்க முடியும். இதனைத் தேர்தலுக்கு முன்னைய காலங்களிலும் வலியுறுத்தி வந்தாலும் இது சாத்தியப்படவில்லை. சரி எப்படி இருப்பினும் தற்போது வடமாகாண சபையின் முதல்வர் விக்னெஸ்வரன்தான். எப்படி கிழக்கின் முதல்வர் சந்திகாந்தன் என்பதை நாம் ஏற்று அன்று செயற்படவேண்டும் என்று கோரினோமோ இதேபோலவே இன்றும் வடமாகாணத்தில் முதல்வர் விக்னேஸ்வரன்தான். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதல் அமைச்சர் வரதராஜப்பெருமாள் என்பதை தமிழ் மக்கள் ஏற்கவேண்டுமோ அதேயளவு நியாயங்கள் இன்றும் விக்னேஸ்வரனை முதல் அமைச்சராக ஏற்கவேண்டும் என்பதிலும் உண்டு. மறு வழத்தில் இலங்கை அரசு வடமாகாணசபை தவிர்ந்த ஏனைய 8 மாகாண சபைகளில் தனது ஆட்சியை நடத்தினாலும் இலங்கையின் ஒன்பதாவது மகாணமான வட மாகாணத்திலும் ஆட்சியிலுள்ள மாகாண அரசை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும். இதில் இரு தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும். வட மாகாண தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை தமது முதல் அமைச்சர், ஏனைய மகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மத்திய மாகாண அரசுகளிடையேயான சம்பிரதாயங்களுக்கு ஏற்ப சந்திப்புக்கள், வரவேற்புகள், பேச்சுவார்த்தைகள் என்பனவற்றில் ஈடுபடும்போது இவற்றின் தார்ப்பரியங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் பல விடயங்கள் எங்கள் மக்களுக்கு புதியனவையாக இருக்கலாம்,. ஏன் எனில் 25 வருடங்களுக்குப் பின்னரான முதலாவது மாகாணசபையல்லவா இது.

மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் நாம் அதை வரவேற்போம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பெற்ற ஆணையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவேண்டுமென்றும், அவ்வாறு நிறைவேற்றினால் அதை நாம் எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சிக்காக வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.  நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வந்திருப்பதும், நீதியானதும், நேர்மையானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைத்தமையும் வரவேற்கத்தக்க விடயம். அதற்காக நாம் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.  இதேவேளை, எமது வழிமுறைகளை ஏற்று எமக்கு வாக்களித்த மக்களுக்கும் விஷேடமாக நாம் நன்றி கூறுகின்றோம். (மேலும்.....)

இழப்புக்கள் ஏற்பட்ட போதும் வடக்கு மக்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை

நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எத்தனை இழப்புக்கள் ஏற்பட்ட போதும் வடக்கு தமிழ் மக்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை என்பது தெரிகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி பிழைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய ஏமாற்றுக்கட்சிகளை பெரும்பாலான முஸ்லிம்கள் நிராகரித்துள்ளமையையும் காட்டுகிறது. மன்னார், அமைச்சர் ரிசாதின் மாவட்டமாக இருந்தும் அங்கு ஆளுங்கட்சி ஒரு ஆசனத்தையே பெற்றுள்ளதன் மூலம் அவரது கட்சி வட மாகாண முஸ்லிம்களுக்கு உதவாமல் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறது என்பது தெரிகிறது. எதிர்காலத்தில் அவர் தனது கட்சியை தூக்கி வீசிவிட்டு வன்னி முஸ்லிம்களுக்கு வேலை செய்யாவிட்டால் அடுத்த பாராளுமன்ற தேர்தல் அவருக்கு கேள்விக்குறியாகி விடும். அதன் பின் அவரை வைத்து பிழைப்பு நடத்தும் செயலாளர் நாயகம் கல்முனைக்கு ஓட வேண்டிய நிலைவரும். (மேலும்.....)

தேர்தல் சிறப்புச் செய்திகள்

ஆனந்த சங்கரி தோல்வி

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி  மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இலங்கை தமிழரசு கட்சி சார்பாக ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளையும் குருகுலராஜா 26,427 விருப்பு வாக்குகளையும் பசுபதிப்பிள்ளை 26,132 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக தவநாதன் 3,753 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

யாழ். விருப்பு வாக்குகள்

சி.வி.விக்னேஸ்வரன் க்கு முதலிடம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளையும் அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளையும் தர்மலிங்கம் சித்தார்த்தன் 39,715 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். அத்துடன் பாலச்சந்திரன் கஜதீபன் 23,669 விருப்பு வாக்குகளையும் இ.ஆர்னோல்ட் 26,888 விருப்பு வாக்குகளையும் கந்தையா சிவஞானம்  26,747 விருப்பு வாக்குகளையும் எம்.கே.சிவாஜிலிங்கம் 22,660 விருப்பு வாக்குகளையும் ஐங்கரநேசன் பொன்னுத்துரை 22,268 விருப்பு வாக்குகளையும் எஸ்.சுகிர்தன் 20,541 விருப்பு வாக்குகளையும் கே.சயந்தன் 20,179 விருப்பு வாக்குகளையும்  விந்தன் கனகரத்தினம் 16,463  விருப்பு வாக்குகளையும் ஏ.பரம்சோதி 16,359 விருப்பு வாக்குகளையும் கந்தையா சர்வேஸ்வரன் 14,761 விருப்பு வாக்குகளையும் வி.சிவநேசன் 13,479 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலலேந்திரன் 13,632 விருப்பு வாக்குகளையும், அங்கஜன் இராமநாதன் 10,034 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள்

வவுனியா மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பினை வவுனியா மாவட்ட செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அறிவித்துள்ளது. இதனால் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் 19,656 விருப்பு வாக்குகளையும், கந்தர் தாமோதரம் லிங்கநாதன் 11,901 விருப்பு வாக்குகளையும் ம. தியாகராசா 11,681 விருப்பு வாக்குகளையும் ஐ.இந்திரராசா 11, 535 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பகா தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும் ஏ.ஐயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

முல்லை. மாவட்ட விருப்பு வாக்குகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக அன்ரனி ஜெகநாதன் 9,309 விருப்பு வாக்குகளையும் சிவப்பிரகாசம் சிவயோகன் 9,296 விருப்பு வாக்குகளையும், துரைராஜா ரவிகரன் 8,868 விருப்பு வாக்குகளையும் கனகசுந்தரம் சுவாமி வீரபாகு 8,702 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக அகமட் லெப்பை காசீம் 1,726 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர் - சி.வி.விக்கினேஸ்வரன்

'வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரான இரா. சம்பந்தன், 'மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள். அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள். அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம்' என்றும் கூறியுள்ளார். (பி.பி.சி)

பதுமன்

யுத்த தர்மத்திற்கு மாறாக தூதுவனை கைது செய்து சிறை வைத்த புலிகள்

2004 இல் கிழக்கிலிருந்து வன்னிக்கு தூது சென்றவர் றுதி யுத்தத்தில் பாதாள சிறையில் தடுத்து வைப்பு

2004 ஆம் ஆண்டு மார்ச் 4ம் திகதி புலிகளுக்குள் உருவான கிழக்கு பிளவினை சமாதானமாக தீர்த்து வைக்கும் முகமாக வடக்கிற்கு சமாதான தூது சென்றவர்தான் பதுமன். அவ்வேளை திருமலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த பதுமன் கிழக்கிலிருந்து வன்னிக்கு சமாதான தூது சென்றார். அனைத்து வித யுத்த அறங்களுக்கும் மாறாக தூதுவனை கைது செய்து பாதாள சிறையில் அடைத்தனர் வன்னி புலிகள். கிழக்கு பிளவை ஜனநாயக வழிகளில் தீர்க்கும் முயற்சியில் தனது உயிரை பணயம் வைத்து வன்னி சென்ற பதுமனை காணாத கிழக்கு மக்கள் “பதுமன் எங்கே? என்ற கேள்விகளோடு மெளனித்து கொண்டனர். எப்படியோ இறுதி யுத்தம் வரை புலிகளின் பாதாள சிறையினில் உயிரை கையில் பிடித்துகொண்டிருந்த பதுமன் இறுதி யுத்த வேளையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தனது கடந்த கால பயங்கர வாத செயல்பாடுகளுக்காக நீதியை எதிர் கொண்டு இப்போது விடுதலையாகி உள்ளார். விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் திருகோணமலை தலைவர் பதுமன் என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் கடந்த புதன் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாணத்தில் தமிழ் அரசுக்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கைப்பற்றியது

வட மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி  30 ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக)  கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது. இதுதவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. யாழ் மாவட்டத்தில் 213,907 வாக்குகளை மொத்தமாக பெற்ற தமிழரசுக் கட்சி  14 ஆசனங்களைக் கைப்பற்றியது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் 2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தினை முற்றாக ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தவிர வட மாகாணத்தின் மற்றைய மாவட்டங்களில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு,

மன்னார் :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1

கிளிநொச்சி :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

முல்லைத்தீவு :
இலங்கை தமிழரசுக் கட்சி   - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

வவுனியா :
இலங்கை தமிழரசுக் கட்சி  - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2

வட மேல் மாகாணத்தையும் ஐ.ம.சு.கூ கைப்பற்றியது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களுடன் வட மேல் மாகாணத்தை கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி வட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

மத்திய மாகாணத்தை கைப்பறியது ஐ.ம.சு.கூ

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தை கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 16ஆசனங்களையும் ஜனநாயக கட்சி இரண்டு ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படுவது வழமை. அதற்கமைவாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மேலதிக 2 ஆசனங்கள் மத்திய மாகாணத்தில் கிடைக்கவுள்ளன.

1987இல் மாகாணசபை சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நேற்று தான் முதல் தடவையாக வடமாகாணசபை தேர்தல் நடைபெற்றது

தென்னிலங்கையையும், வட இலங்கையையும் இணைக்கும் நட்புறவுப் பாலமாக இருந்த யாழ்தேவி மீண்டும் செயற்பட ஆரம்பித்துவிட்டாள். 1987ம் ஆண்டில் இந்திய பிரதமமந்திரி ராஜீவ்காந்தி திடீரென ஒருநாள் முடிவு செய்து கொழும்பு மாநகரத்திற்கு விமானம் மூலம் தனது பரிவாரங்களுடன் அதிகாலையில் வந்து சேர்ந்தார். அதையடுத்து அவர் ஜனாதிபதி மாளிகையில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மீது அழுத்தங்களைக் கொண்டு வந்தோ, அல்லது அச்சுறுத்தல்களை மேற்கொண்டோ எதிர்ப்புகளுக்கு இடமளிக்காமல் இலங்கை இந்திய நட்புறவு ஒப்பந்தத்தை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கையில் அதிகார பரவலாக்கலுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக மாகாணசபைகள் என்ற புதியதொரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. (மேலும்......)

மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்

நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய 3 மாகா ணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய மாகாணம்

கண்டி - 60%,

மாத்தளை - 62%

நுவரெலியா -  60%

வடமேல் மாகாணம்

புத்தளம் - 55-60%,

குருநாகல் - 55%

வட மாகாணம்

யாழ்ப்பாணம் - 62%,

கிளிநொச்சி - 70%

வவுனியா - 65%,

முல்லைத்தீவு - 71%

மன்னார் - 70%

செப்ரம்பர் 22, 2013

யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 213,907

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 35,995

ஐக்கிய தேசியக் கட்சி - 855

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 253,542

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20,279

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 273,821

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 426,813

 இலங்கை தமிழரசுக் கட்சி - 14 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

மன்னார் மாவட்டத்தை தனதாக்கிக்கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி

வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 33,118

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,104

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4,571

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 51,374

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,972

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 54,346

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,737

 இலங்கைத் தமிழரசுக் கட்சி - 03 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 01 ஆசனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்

வவுனியா இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது

வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 41,225

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,416

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,781

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644

இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம்

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

வடமாகாண சபைத் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 7625

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1099

ஐக்கிய தேசியக் கட்சி - 35

சுயேச்சைக் குழு 6 - 16

சுயேச்சைக் குழு 7 - 12

செல்லுபடியாகும் வாக்குகள் - 8835

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 114

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 8949

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 9301

வவுனியா மாவட்டம்

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

வடமாகாண சபைத் தேர்தலின் வவுனியா மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 901

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 323

ஐக்கிய தேசியக் கட்சி - 65

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 24

மக்கள் விடுதலை முன்னணி - 15

ஜனநாயகக் கட்சி - 12

சுயேச்சைக் குழு 6 - 05

சுயேச்சைக் குழு 7 - 01

செல்லுபடியாகும் வாக்குகள் - 1346

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 25

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 1371

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 1402

கிளிநொச்சி மாவட்டம்

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 756

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 160

ஐக்கிய தேசியக் கட்சி - 01

 பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 970

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 929

செல்லுபடியாகும் வாக்குகள் - 919

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 10

முல்லைத் தீவு மாவட்டம்

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 646

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 146

ஐக்கிய தேசியக் கட்சி - 02

ஜனநாயக கட்சி - 01

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 831

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 800

செல்லுபடியாகும் வாக்குகள் - 795

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 05

மன்னார் மாவட்டம்

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

வடமாகாண சபைத் தேர்தலின் மன்னார் மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 1300

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 408

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 135

ஐக்கிய தேசியக் கட்சி - 7

செல்லுபடியாகும் வாக்குகள் - 1852

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 17

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 1869

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 1917

மாகாணசபைத் தேர்தல்

மொத்த வாக்களிப்பு வீதம் (மாவட்ட ரீதியில்)

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு:

மத்திய மாகாணம்

கண்டி 60%

மாத்தளை 62%

நுவரெலியா 60%

வடமேல் மாகாணம்

புத்தளம் 55-60 %

குருநாகல் 55%

வடமாகாணம்

யாழ்ப்பாணம் 62%

கிளிநொச்சி 70%

வவுனியா 65%

முல்லைத்தீவு 71%

மன்னார் 70%

வட மாகாணத் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது-  விக்னேஸ்வரன்

வட மாகாணத் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை சிவிலியன்களாக வருகை தந்த இராணுவத்தினால் பல பகுதிகளில் தமிழ் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு முறையிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபைக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் தேர்தல் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையத்தின் முன் நடமாடிய சந்தேக நபரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்த மாவை

தெல்லிப்பளை, கொல்லங்கட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சைவ தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் முன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞனொருவரை பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்நபரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெல்லிப்பளை, கொல்லங்கட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சைவ தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது அப்பகுதியில் இளைஞரொருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடி வருவதை மாவை சேனாதிராஜா அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர் குறித்த இளைஞனிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு அவ்விளைஞன் மறுப்புத் தெரிவித்ததையடுத்து அந்நபரை அவர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

எம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழில்  தனது மற்றும் ஆதரவாளர்களது வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் வைத்து சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது இனந்தெரியாதாரோல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நாம் அவரிடம் வினாவிய போது இத்தகைய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென தெரிவித்தார்.

யாழில் தாக்குதல், ஒருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்களிப்பு நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகளை ஏற்றிச்சென்ற பஃரல்  வாகத்தை இடைமறித்த  முகமூடி நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அந்த வாகனத்தின் சாரதியை தாக்கியுள்ளனர். இச்சம்வம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முகமூடி அணிந்தவாறு மோட்டார் சைக்கிலில் வருகை தந்த ஆயுதம் தரித்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த வாகனத்தின் சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருது ஹீத்ரோ நோக்கி பயணித்த விமானம் அவசரமாக திசை திருப்பப்பட்டது

இலங்கையிலிருந்து லண்டனின் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கி பயணித்த விமானமொன்று  ஸ்டேன்ஸ்டெட் விமானநிலையத்திற்கு அவசரமாக திசை திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான யு.எல். 503 விமானம் 267 பயணிகளுடன் லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து விமானத்தில் இரு பிரித்தானிய பிரஜைகள் பயணித்ததாகவும் இவர்களில் ஒருவர் தம்மிடம் வெடிகுண்டொன்று உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த விமானம் நேற்று மாலை 7.30 மணியளவில் ஸ்டேன்ஸ்டெட் விமானநிலையத்திற்கு திசைதிருப்பப்பட்டுள்ளது. பின்னர் குறித்த பிரித்தானிய பிரஜைகள் இருவரும் எசெக்ஸ் பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விமானத்தில் பயணித்த மற்றையோர் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஹீத்ரோ விமானநிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செப்ரம்பர் 21, 2013

என் மனவலையிலிருந்து......

வன்முறைகளை தவிர்ப்போம், கண்டிப்போம்

(சாகரன்)

வன்முறைகள் எந்த வடிவில் இருந்தாலும் அது ஏற்புடையது அல்ல. அனந்தி எழிலன் வீட்டில் தாக்குதலாக இருந்தால் என்ன, வேறு எங்கு நடந்தால் என்ன இதனை யார் செய்திருந்தால் என்ன அது கண்டிக்கத்தக்கது. இது அப்பட்டமான ஜனநாயக மறுப்பு, மனித உரிமை மீறல். இதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை. இதேபோல் யாழ் உதயன் பத்திரிகை தொடக்கம் தமிழ் குறும் தேசியத்திற்கு வால்படிக்கும் சகல பத்திரிகைகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றோர் மீது விமர்சனம் என்ற நாகரிகச் செயற்பாட்டிற்கு அப்பால் அவதூறுகளை அள்ளி வீசுவதும் மனித உரிமை மீறல்கள்தான். அதுவும் சரவணபவன் போன்ற த.தே. கூட்டமைப்பு எம்பிகளின் பொய் முகங்களும், சுரேஸ் போன்றவர்களின் போர் அறை கூவல்களும் மக்கள் விரோத, மனித உரிமையை மீறவதற்கான செயற்பாடுகளின் வடிவங்கள்தான். புலிகளின் காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள், மாற்று இனத்தவரகள் புலிகளால் கொல்லப்படும் போது இவற்றிற்கு எல்லாம் அதரவாக நேரடியாகச் செயற்பட்வர்கள் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அன்று நடைபெற்ற மனித உரிமை மீறல்களை ஐக்கியப்பட்டு தடுத்திருந்தால் இன்று நடைபெறும் மனித உரிமை மீறல்களைப்பற்றி இவர்கள் கதைப்பதில் உள்ள நியாயங்கள் வலுவானதாக, உண்மையானதாக இருக்கும். இதேபோல் தனது கணவன் எழிலன் உடன் இணைந்து மாற்றுக் கருத்தாளர்களின் குரல்களை மட்டும் அல்ல அவர்களின் உயிர்களையும் நிரந்தர மௌனமாக்கியபோது இவர்களின் மனித உரிமை மீறல் பற்றிய எதிர்ப்புக் குரல்கள் இவர்களிடம் இல்லாது விட்டாலும் ஆதரவுக்கரல் அல்லவா ஒலித்தது. அதுபற்றி இன்றுவரை வாய் திறக்காத ஜீவன்கள் இவை. இதில் கேபி உம் அடக்கம் கருணாவும் அடக்கம் ஏன் பிள்iளாயனும் அடக்கம். பொருட்களைக் தேடுதல் என்ற போர்வையில் வெள்ளைவான் கடத்தல்களும். மிரட்டல்களும், ஆயுதக் கலாச்சாரமும் போரின் முடிவுக்குப் பின்னரும் இன்னமும் தொடர்வது ஏற்புடையது அல்ல. இதேபோல் போர்காலத்திலும் போர் தவிர்ப்புக் காலங்களிலும் புலிகளும் அவர்களின் அடிவருடிகளும் அதுதான் இன்ற இருக்கும் த.தே. கூட்டமைப்பினரும் இதே மனித உரிமை மீறல்களை ஆதரவுக் கரங்களால் தாராளமாகச் செய்தனர். தேர்தலில் நிற்கும் த.தே. கூட்டமைப்பு உறுப்பினர் சுரேஸ் இன் தம்பி வெளிநாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கி பொய் புரளிகள் கூட ஜனநாயக விரோத கருத்தியல் செயற்பாடுதான். இங்கு இன்று தேர்தல் களத்தில் நின்று கொண்டு மனித உரிமை மீறல், மிரட்டல்கள், ஜனநாயக மறுப்பு என்று கூச்சல் இடுபவர்களில் பலரின் கரங்கள் மனித உரிமை மீறல்களை கருவிகளால், கருத்தியலால் செய்தவைதான்.

தொடரும் அப்புக்காத்து அரசியல்

தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுத்தருமா....?

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

முப்பது வருடகாலத்து ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களை அரசியல் வியாபாரம் ஆக்கும் கூட்டமைப்பை இன்று நிறைத்து நிற்பவர்கள் எந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் நலன்களுக்காக ஒரு சிறு கல்லைக்கூட நகர்த்தாத அல்லது தம்மை எந்தவகையிலும் அந்தப் போராட்டக் களங்களில் அடையாளப்படுத்திக் கொள்ளாத அப்புக்காத்துக்களுக்கெல்லாம் அப்புக்காத்தான விக்னேஸ்வரனை தற்போது எமது புதிய 'தேசியத் தலைவராக' தமிழ் மக்கள் மத்தியில் நிறுத்தியுள்ளனர். இலங்கை அரச துறையில் உயர்பதவி வகித்த இவர் தனது பதவிக்காலத்தில் தமிழ் மக்களுக்கான நீதி எதனையும் வழங்க முயற்சிக்காது, ஏன் இலங்கை மக்களுக்கு பொதுவாக என்று கூட நீதித்துறையில் எதனையும் சாதிக்காத இவர் மற்றொரு அப்புக்காத்துக்கெல்லாம் அப்புக்காத்தாக இருந்த சிவா பசுபதி இளைப்பாறிய பின் தமிழீழம் பேசியது போலவே இன்று தமிழ் மக்களின் தலைவராக மாறியுள்ளார். அந்த சிவா பசுபதியானவர் இப்போது அவுஸ்திரேலியாவில் தமது கடைசிக் காலத்தைக் கழித்துக் கொண்டு தமிழீழத்துக்கான சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறார். சிலவேளை அவர் தற்போதும் கொழும்பில் வாழ்க்கையை தொடர்ந்திருப்பாரேயானால் அவருக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கும்.  (மேலும்.....)

வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள் !

புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, உடையார்கட்டு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக அங்கிருக்கும் இலங்கைச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகிய போது சற்று மந்தப்போக்கு காணப்பட்ட போதிலும் பின்னர் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டி வருவதாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றனர். மேலும் இதுவரை எவ்வித தேர்தல் வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையெனவும் இலங்கைச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

'
அனந்தி அரசுடன் இணைந்தார்'

பத்திரிகை செய்தியால் யாழில் பரபரப்பு

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்தார். தேர்தலை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி எனும் தலைப்பிலான செய்தியினால் யாழில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'உதயன்' என்ற பெயரிலேயே யாழ் வீதிகளில் இந்த பத்திரிகை வீசப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.00 தொடக்கம் இந்த பத்திரிகை வீதியில் வீசப்பட்டுள்ளதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நான்கு பக்கங்கள் கொண்ட இந்த பத்திரிகை மக்களை குழப்பும் நோக்கில் அரச அடிவருடிகளால் மேற்கொள்ளப்படுள்ளது என்று இது எமது பத்திரிகைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சதி இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணவபன் தெரிவித்தார். உரிமையா சலுகையா வரலாற்று முடிவு இன்று! எனும் தலைப்பியே இன்று சனிக்கிழமைக்குரிய உதயன் பத்திரிகை பதிப்பு வெளியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அனைவரும் வாக்களிப்பதன் மூலமே ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும்

வட மாகாண சபை வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். அனைவரும் வாக்களிப்பதன் மூலமே ஜனநாயகத்தை உறுதிபடுத்த முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். அமைதியான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக வட மாகாண சபைக்காக இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பில் வாக்குரிமையுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அனைவரும் வாக்களிப்பதன் மூலமே ஜனநாயகத்தை உறுதிபடுத்த முடியும். வடக்கில் ஜனநாயகத்தை தொடர்ந்தும் நிலைநாட்டும் செயற்பாடுகளையும் அபிவிருத்திகளையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும். எனவே மக்கள் தேர்தலில் வாக்களிக்கவேண்டும். இதேவேளை இன்று நடைபெறவுள்ள வடமாகாண சபைக்கான தேர்தலிலை இராணுவத்தினர் குழப்பாவிடின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றியீட்டும் எனவே சகல தமிழ் மக்களும் வாக்களிக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

த.தே.கூ வெற்றிபெற்றால் பொதுநலத்துடன் செயற்பட வேண்டும்

'வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால்  கட்சிகளுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளை தவிர்த்து பொது நலத்துடன் செயற்பட வேண்டும்' என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். 'அரசியல் என்பது ஒரு சமூக சேவை. அதனை வியாபாரத்திற்கோ சுயநலத்திற்கோ பயன்படுத்தாது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கேற்ப செயற்பட வேண்டும். தேர்தலுக்குப் பிந்திய காலத்தில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து செயற்திட்டம் ஒன்றைத் தயாரித்து அதனை முன்னேடுக்க வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை விட கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னெடுக்கக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இந்த நாட்டை வளமான ஒரு நாடாக மாற்ற முன்வரவேண்டும்' என்றார். 'எந்த திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதனை அரசாங்கதுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டிய திட்டம் எது? சர்வதேசத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் எவை? எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்? என்று கூட்டமைப்பு சிந்தித்து செயற்பட வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.அத்துடன், இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அது கிராம மட்டத்தில் இருந்து தனது அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டும்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழவேண்டும் என்று ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ. ஆர். அனந்த்மூர்த்தி தெரிவித்தார்.பெங்களூரில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ. ஆர். அனந்த்மூர்த்தி, நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். நரேந்திரமோடி பிரதமரானால், பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவார். மக்கள் அச்சத்துடன் வாழவேண்டும். முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, நரசிம்மராவ் ஆகியோர் ஆட்சி செய்தபோது, பிரதமர் பதவிக்கு கெளரவம் கிடைத்தது. ஆனால் நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கெளரவம் களங்கப்பட்டுவிடும். பாஜக ஒரு பாசிச கட்சி. இந்து மதத்தின் உண்மையான கோட்பாடுகளை அந்தக் கட்சியினர் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் விரோத ஆட்சி அல்ல. ஆனால் ஊழல் புரிந்துள்ளதால் அந்தக் கூட்டணி தண்டிக்கப்படவேண்டும். இதற்காக நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது மட்டுமே தீர்வல்ல என்றார் அவர்.

செப்ரம்பர் 20, 2013

வட மாகாண மக்களை வாழ விடுங்கள்!

(எஸ்.ஹமீத்)

பாவப்பட்டதும் பரிதாபத்திற்கும் உரிய ஒரு மாகாணம் இலங்கையில் இருக்குமென்றால், அது வட மாகாணத்தைத் தவிர வேறொரு மாகாணமாக இருக்க முடியாது. 30 வருடங்களுக்கு மேலாக யுத்தப் பேய் கடித்துக் குதறி சப்பித் துப்பிய மாகாணம் அது. இரத்த வாடை இன்னமும் வீசிக் கொண்டிருக்கும்-இழப்புகளின் ஓலம் இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கும்-மாகாணம் அது. அந்தகாரங்களுக்குச் சொந்தக்காரர்களாகிப் போன அபலைகளைக் கொண்டிருக்கும் மாகாணம் அது. அவயவங்களை இழந்து ஆறாத் துயரில் மூழ்கியிருக்கும் அப்பாவிகளைக் கொண்டிருக்கும் மாகாணம் அது. சொந்த ஊர்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் யுத்தத்தின் கோரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தாமாகவே வெளியேறிய தமிழ் மக்களையும் கொண்ட மாகாணம் அது! (மேலும்.....)

வடக்கு தேர்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம்

செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறும் வட மாகாண சபைத் தேர்தலானது இலங்கை மக்களுக்கு முக்கியமான ஒன்றாகும் என்பதுடன் அது இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து பான் கீ மூன் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில் 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர்  தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலானது அரசியல் நல்லிணக்கம் மற்றும் இலங்கையர்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் மிக முக்கிய வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை; காங்கிரஸ் பெண் பிரமுகரிடம் விசாரிக்கவில்லையென மனு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் சந்திரசாமி, அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பெண் பிரமுகர் குறித்து சி.பி.ஐ. (பன்னோக்கு விசாரணை பிரிவு) விசாரிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள முதலாவது தடா நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 26பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட மரண  தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பிரசார நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் வடக்கில் வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பம்

வடமாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் அரசாங்க கட்சிகளின் சார்பில் போட்டியிடாத வேட்பாளர்கள் மீதான தாக்குதல் வடக்கில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட வேட்பாளர்கள் மீதும் அரச சார்பற்ற சுயேட்சைக் குழுக்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செயற்பட்டுள்ளதாகவும் வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரசாயன ஆயுதங்களை அழிக்கும் திட்டத்திற்கு சிரியா உடன்பாடு

சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் திட்டத்திற்கு உடன்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உறுதியளித்துள்ளார். எனினும் அவைகளை அழிக்க ஓர் ஆண்டு காலமளவு எடுக்கும் என்றார். அமெரிக்காவின் ‘பொக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், டமஸ்கஸ¤க்கு அருகில் ஓகஸ்ட் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலை தமது படை மேற்கொள்ள வில்லை என அஸாத் குறிப்பிட்டார். சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அகற்றும் திட்டத்திற்கு கடந்த வாரம் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. (மேலும்.....)

சிஐஏவின் சதிவேலைகள்!

முன்னாள் ஏஜெண்டுகள் அம்பலப்படுத்துகின்றனர்!

சிஐஏ என்பது ஒரு வெறும் உளவு அறியும் ஸ்தாபனம் மட்டுமல்ல. அரசு களைக் கவிழ்க்கவும் அரசியல் தலை வர்களை கொலை செய்யவும் சதித்திட் டங்களை வரைந்து நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளது என்று லூயி உல்ப் என்ற அமெரிக்க இளைஞர் கூறியுள்ளார். அவர் உலகெங்கிலும் சிஐஏ கும் பல் நடத்திவரும் சதிவேலைகளையும் சித்துவேலைகளையும் அம்பலப் படுத்திவருகிற ஒரு சிறிய குழுவின் உறுப்பினர் ஆவார். அமெரிக்க அதி பரின் வெள்ளை மாளிகைக்கு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கட்டிடத்தின் பத்தாவது மாடியில் ஒரு சிறிய அரையில் இருந்து கொண்டு ஆணும் பெண்ணுமாக ஒரு சிறிய குழு, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. (மேலும்.....)

செப்ரம்பர் 19, 2013

அமெரிக்காவில் 46.5 மில்லியன் பேர் வறுமையில்

அமெரிக்காவில் வறுமையில் வாழ்வோரின் எண்ணிக்கை 46.5 மில்லியனாக அதிகரித்திருப்பது அந்நாட்டின் கணக்கெடுப்பு தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் அண்மைய பொருளாதார மீட்சி அந்நாட்டின் சாதாரண மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2011 கணக்கெடுப்பின்படி வறுமையில் உள்ளோரின் எண்ணிக்கை 46.2 மில்லியனாக இருந்தது. இதன்படி அந்நாட்டின் வறுமை வீதம் எந்த மாற்றமும் இன்றி 15% ஆக நீடிக்கிறது. கடந்த ஆறு வருடங்களாக இந்த வறுமை வீதத்தில் முன்னேற்றம் இன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்று 23,492 டொலருக்கு குறைவான வருமானத்தை பெறுவது வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோர் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 16.1 மில்லியன் சிறுவர்கள் மற்றும் 65 க்கு மேற்பட்ட 3.9 மில்லியன் முதியவர்கள் வறுமையில் வாழ்வதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

சுடலைக் குருவிகள் போன்றவர்கள் கூட்டமைப்பினர் - தவராசா

யுத்தத்தை நிறுத்தவும் முயற்சிக்காமல், அழிவுகளைத் தடுக்கவும் முன்வராமல் சுடலைக் குருவிகள் போல் உளறிக் கொண்டு திரிந்தவர்கள் தான் இந்த  தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அவ்வாறானவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தப்போவதாக அறிக்கை விடுக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் சி. தவராசா தெரிவித்துள்ளார். (மேலும்.....)

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பிரச்சனையானது

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானம், ஒஸ்லோ மாநாட்டில் புலி பிரதிநிதிகள் கொண்டுவந்த முன்மொழிவுகள் என்பவற்றின் கலவையாக உள்ளது என கூறியுள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலரின் விடுதலையை கூட்டமைப்பு தடுத்துவருகின்றது என்று இன்று குற்றஞ்சாட்டினார். விடுதலைப்புலிகளின்; சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாக அவர்களை விடுதலை செய்யவேண்டாமென அதிகாரிகளிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வற்புறுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார். எஞ்சியுள்ள புலி அங்கத்தவர்களை விடுதலை செய்வதற்கு நான் என்னாலானதை செய்வேன். ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தான் ஒரேயொரு பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி.வி விக்னேஸ்வரன் தலைமை நீதியரசராக இருந்தபோது புலிகளின் சந்தேநபர்களுக்கு உச்ச தண்டனையை வழங்கிவந்தவர். இது சிங்கள நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனையை விடவும் கூடுதலாகவே இருந்தது. ஆனால் இப்போது தேர்தலில் வெல்வதற்காக முன்னாள் போராளிகளின் உரிமைகள் பற்றி பேசுகின்றார். 2009 இல் புலிகளை சம்பந்தன் பாராட்டினார். ஆனால் பின்னர் தான் புலிகளின் கொலைப்பட்டியலில் இருப்பதாக கூறினார். ஏன் இந்த இரட்டை வேடங்கள் ?' என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

வட மாகாண தேர்தல் நடவடிக்கையில் இராணுவத் தலையீடுகள் எதுவும் இல்லை

மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று ஏற்பாடு செய்திருந்த இறுதி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே அமைச்சர் மேற்கண்டவற்றை கூறினார். மத்திய மற்றும் வடமேல் மாகாணங்க ளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமோக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை வடக்கில் கடும் போட்டிக்கு மத்தியிலும் வெற்றியை எதிர்பார்க்கின் றோம். இதுவரை எந்தவொரு மாகாண சபைத் தேர்தலிலும் இல்லாத வகையில் இம்முறை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மத்தியில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.(மேலும்.....)

வவுனியா நகர சபை

தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர் குமாரசுவாமி தலைமையிலான குழு அரசுடன் இணைவு

வவுனியா நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தேசமான்ய எம். எஸ். குமாரசுவாமி தலைமையிலான குழுவினர் அர சாங்கத்துடன் இணைந்து கொண் டுள்ளனர். வவுனியாவிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காரியாலயத்தில் வைத்து சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த முன்னிலையில் வவுனியா நகர சபை உறுப்பினர் எம். எஸ். குமாரசுவாமி தலைமையிலான ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை நேற்று முன்தினம் பெற்றுக் கொண்டுள்ளனர். புளொட் அமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குமாரசுவாமி 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை வவுனியா நகர சபை உறுப்பினராக இருந்த அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு 2009ம் ஆண்டு முதல் வவுனியா நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்துடன் இணைந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா நகர சபை உறுப்பினர் எம். எஸ். குமாரசுவாமி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் வவுனியா நகர சபை இயங்கி வருகின்ற போதிலும் 2009ம் ஆண்டு முதல் மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்க முடியாது போயுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து செயற்படும் கட்சியல்ல என்றும் வவுனியா நகர சபை உறுப்பினர் குமாரசுவாமி தெரிவித்தார்.

கிளாலி இறங்குதுறை பகுதியில் நேற்று முதல் மீன்பிடிக்க அனுமதி

யாழ். கிளாலி மீன்பிடி இறங்குதுறை உட்பட அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கடற்படை தளபதி மற்றும் கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருடனான சந்திப்பின்போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன நேற்று தெரிவித்தார். யுத்தம் நடைபெற்ற காலம் முதல் கிளாலி கடலேரி பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன யாழ். நகர் சென்றிருந்தபோது இது தொடர்பாக மீனவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். நேற்றுக் காலை கடற்றொழில் அமைச்சில் கடற்படை தளபதியுடனான சந்திப்பின்போது கிளாலி கடலேரிப் பகுதியில் எந்நேரமும் சுதந்திரமாக மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கு வதாக கடற்படைத் தளபதி உறுதிய ளித்தார். இது தொடர்பாக யாழ். கடற்படை அதிகாரிகளுக்கும் அவர் பணிப்புரை விடுத்தார்.  கிளாலி இறங்குதுறை உட்பட அதனை அண்டிய பகுதிகளில் நேற்று முதல் மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக யாழ். குடாநாட்டு மீனவர்களுக்கும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அறிவித்தல் விடுத்துள்ளார்.

செப்ரம்பர் 18, 2013

என் மனவலையிலிருந்து......

வடக்கு - கிழக்கு மாகாண சபை மக்கள் சேவையில் ஒரு கம்யூன் வாழ்வு

(சாகரன்)

இலங்கையில் மகாண சபை உறுப்பினர்களின் சம்பளம், ஏனைய சலுகைகள் ஒரு இலட்சத்திற்கு மேல். இலவச சொகுசு வாகனம், இலங்கை அரசின் பாதுகாப்பு, வாசஸ்தலம் இன்னும் இத்தியாதி இத்தியாதி. 27 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பெற்ற மகாண சபையிலும் இதே மாதிரியான சலுகைகள் இருந்தன. அன்று மகாண சபையை ஆண்ட பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அணியினரின் நான்கு அமைச்சர்கள் இருந்தார்கள் வரதராஜப்பெருமாள், கிருபாகரன், அபுயூசுப்( இவர் கம்யூனிஸ்ட் கட்சியன் முன்னாள் உறுப்பினரும் கூட), ஜோ செனிவரத்தன(மேர்ஜ் அமைப்பின் உறுப்பினர்), இராஜரத்தினம்(ஈ.என்.டி.எல்.எவ்.). கூடவே  ஆளும் கட்சியில் பல ஈபிஆர்எல்எவ் மகாண சபை உறுப்பினர்கள் இருந்தனர் இவர்கள் தமது மாதச் சம்பளம், வாகனங்களை மகாண அரசை ஆண்ட தமது கட்சியிடம் ஒப்படைத்துவிட்டு வாழ்வின்; அடிப்படைத் தேவைக்காக கட்சி ஒதுக்கிய நிதியுடனும், மக்களின் சேவைக்காக வானங்களை மட்டும் பயன்படுத்தியே வந்தனர். ஒரு வகை கம்யூன் வாழ்வில் தம்மை ஈடுபடுத்தியிருந்தனர். இன்று மாகாண சபையில் தேர்தலில் நிற்கும் பலரும் இலங்கை அரசினால் வழங்கப்படும் இந்த சலுகைகளை தமது மக்களின் நலன்களுக்காக தமது கட்சியிடம் ஒப்படைக்க தயாரா. இச்சலுகைகளை குறி வைத்தே பலரும் தேர்தலில் நிற்கின்றனர். ஒரு கம்யூன் வாழ்வின் ஆரம்ப படியாக இதனை ஈபிஆர்எல்எவ் இனர் அன்று செய்தனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அன்றைய காலகட்டத்தில் அவர்கள் அருகில் இருந்து பார்த்தவன் என்ற வகையில் இதனை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். திருகோணமலையின் நகரசபை மண்டபத்தில் தமது மாகாண அரசை கொண்டு நடத்தினர். தினமும் தென் இலங்கையின் மாகாண சபை உறுப்பினர்கள் வடக்கு –கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்து 'ஒரு சுய ஆட்சிக்குரிய வடிவத்தில் நீங்கள் உங்கள் ஆட்சியை உருவகப்படுத்தி செயற்பட்டுவருகின்றீர்கள், மாகாண சபை உரிமைகளுக்கான உங்கள் போராட்டங்கள் வெல்ல வேண்டும் அது தங்கள் மகாணங்களுக்கும் கிடைக்கும் உரிமையாகவும் அமையும்' என்றும் அவர்கள் கூறிச்செல்வர். கூடவே எங்கள் மாகாணசபை உரிமைகளுக்கான போராட்டங்களில் தாமும் இணைந்து குரல் கொடுக்கப்போவதாகவும் வாக்கு அளித்துச் செல்வர். ஜே.ஆர். எவ்வளவோ முயன்றும் திருகோணமலையைத் தலை நகரமாக கொண்ட மாகாண சபை அமைவதை நிறுத்த முடியவில்லை. திருமலையைத் தவிர்த்து வேறு எங்காது மகாண சபையை அமைத்தால் தன்னால் சலுகைகள் வழங்க முடியும் என்று கூட ஆசை காட்டிப்பார்த்தார் ஈபிஆர்எல்எவ் இனர் மசியவில்லை. இன்று இருக்கும், இனி வரப் போகும் மகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்கான ஒரு கம்யூன் வாழ்வையும், அரசுக்கெதிரான உறுதியான நிலைப்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. பதவிகளில் கிடைக்கும் பணமும், சலுகைகளும், வசதிகளுமே இவர்களின் குறி. இதில் தம்மை புடம் போட்ட தங்கங்களாக தீட்டப் போகின்றவர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும். இடிந்த கட்டத்தில் தனது வாசஸ்தலத்தைக் கொண்ட முதல் அமைச்சர் ஒருவரை இனிமேல் காணமுடியுமா என்பதுவும் கேள்விக்குறியே. எல்லாம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை இல்லாமல் போனதுடன் இல்லாமல் போய்விட்டது.

புலிகளின் முக்கியஸ்தர் பதுமன் விடுதலை

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் திருகோணமலை தலைவர்  பதுமன் என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ முகாம்களை தாக்கியமை, இராணுவத்தினரை தாக்கி கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.  இந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.அமல் ராஜ் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க பாலம்பட்டார் பகுதி தலைவராக இருந்த காலத்தில் தாக்குதல்களை நடத்தினார் எனவும் கொலைகள் செய்தார் எனவும் இவர் மீது சட்டமா அதிபர் குற்றம் சாட்டியிருந்தார். குற்றம் சுமத்தப்பட்டடிவரின் ஒப்புதல் வாக்குமூலம் மாத்திரமே அவருக்கு எதிராக வைக்கப்பட்ட சான்றாக இருந்தது. இதிலும் பல குறைகள் உள்ளதை கருத்திற்கு கொண்டு நீதிமன்றம் விடுதலை இவரை விடுதலை செய்துள்ளது.  பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு இவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தை ஐ.ம.சு.மு. கைப்பற்றும்!
(எஸ். ஹமீத்.)
 
இம்முறை மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க மன்னார் மாவட்டத்தில் 75, 737 பேர் தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களின் வாக்குகளை நம்பி 12 அரசியல் கட்சிகள், 08 சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றில் மொத்தமாக 160 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால், தெரிவு செய்யப்படப் போவதோ 05 உறுப்பினர்கள் மட்டுமே. மன்னார் மாவட்டத்தை இரு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று, மன்னார் தீவு, மற்றது மன்னார் பெருநிலப் பரப்பு. மன்னார் தீவில் பள்ளிமுனை, உப்புக்குளம்,சோனகர் தெரு, பனங்கட்டிக்கொட்டு,பெரிய கடை, சின்னக்கடை, தாழ்வுபாடு, தாராபுரம், எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு, கரிசல், பேசாலை, தலைமன்னார் என்ற ஊர்கள் காணப்படுகின்றன. பெருநிலப்பரப்பில் விடத்தல் தீவு, பெரியமடு, முசலி(பல சிற்றூர்கள்  உள்ளன), முருங்கன், நானாட்டான், வங்காலை,  மாந்தை (பல ஊர்களைக் கொண்டது) மற்றும் சில ஊர்கள் உள்ளன.
(மேலும்.....)

தொண்டமானாறு பாலம் திறப்பு

தொண்டமானாறு பாலம் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சினால் சுமார் 200 மில்லயின் ரூபா செலவில் தொண்டமானாறு பாலம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர். 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்த பாலம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்து இடம்பெற்று வந்தது. இந்த நிலையில் துரிதப்படுத்தப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யுனெப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் 129 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் சரின் விஷவாயு பயன்படுத்தியது போர் குற்றமே; ஐ. நா. பாதுகாப்பு சபையில் அறிக்கை

சிரியாவில் அகஸ்ட் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி ஆசாத் படையினர் விஷக் குண்டுகளை வீசி 1429 பேரை கொண்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனடிப்படையில் ஐ. நா. ஆய்வாளர்கள் சிரியாவில் சோதனை மேற்கொண்டனர். இதனறிக்கையை ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ முன் நேற்று முன்தினம் ஐ. நா. பாதுகாப்பு சபையில் சமர்ப்பித்தார். சிரியாவில் கடந்த மாதம் ஜனாதிபதி ஆசாத் படைக்கும், போராளிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அப்போது சரின் என்ற விஷவாயு பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான சுற்றுச்சூழல் இரசாயன மற்றும் மருத்துவ மாதிரிகளுடன் தெளிவான மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்களை ஐ. நா. ஆய்வாளர்கள் சேகரித்து இருக்கிறார்கள். சரின் என்ற இந்த விஷவாயு நரம்புகளை பாதித்ததால் குழந்தைகள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தலைநகர் டமஸ்கஸ் அருகே போராளிகள் வசமிருந்த கவுதா பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்று அந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை. இருந்தும் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு செய்தியாளர்களை பான் கீ மூன் சந்தித்தார். அப்போது, பொதுமக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த மொசமான இராசாயன தாக்குதலை 21ம் நூற்றாண்டின் மோசமான தாக்குதலாகவும், போர் குற்றமாகவும் அறிவிப்பதாகக் கூறினார்.

நயினாதீவு – குறிகட்டுவானுக்கான படகுப்பாதை போக்குவரத்து ஆரம்பம்

யாழ். நயினாதீவுக்கும்; குறிகட்டுவானுக்கும் இடையிலான முதலாவது படகுப் பாதை போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீதி  அபிவிருத்தி அதிகார சபையினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், 61.141 மில்லியன் ரூபா செலவில் இந்த படகுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகுப் பாதையில்  வாகனங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்ல முடியும். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பெருந்தெருக்கள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா,  வடமாகாண  ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செப்ரம்பர் 17, 2013

உட்கட்சி பூசல்களால் பலவீனமடைந்துள்ள கூட்டமைப்பு வடபகுதியை வளமாக்குமா?

தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்திற்காக இலங்கை அரசாங்கத்துடன் போராடுவதற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நாம் ஒற்றுமையாக போட்டியிடுகிறோம் என்று மார்பு தட்டிக் கொண்டு பொது மேடைகளில் உரை நிகழ்த்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தங்களு க்கிடையில் பெரும் அதிகாரப் பலப்பரீட்சையில் தற்போது ஈடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் விசனம் தெரிவிக்கிறார்கள். மாவை சேனாதிராஜா போன்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களும் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற அரசியலில் பல்லாண்டு காலம் இருந்துவரும் தலைவர்களும் தங்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் பிரதம வேட்பாளராக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதமை குறித்து பலத்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக வும் அதனால், அவர்கள் பகிரங்கமாக முதலமைச்சர் பதவிக்கு போட்டி யிடும் சி.வி. விக்னேஸ்வரனை ஆதரிப்பதைப் போல் இருந்தாலும் திரை மறைவில் அவரைவிட மற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதற்கு இப்போது பெருமுயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.(மேலும்.....)

வடக்கு மாகாண வாக்காளப் பெருமக்களுக்கு சில தாழ்மையான வேண்டுகோள்கள

(அபிமன்யு)

இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டிய வடக்கு மாகாணசபைத் தேர்தல் இன்னும் வெகு சில நாட்களில், எதிர்வரும் செப்ரம்பர் 21ம் திகதி, நடைபெறவிருக்கிறது.    இந்த இருபத்தாறு ஆண்டுகள் நடைபெற்ற போர் ஏற்படுத்திய அனாவசிய அளப்பரிய உயிர்ப் பலிகள், உடமை அழிவுகள், அவயவ இழப்புகள், வாழ்வாதார அனர்த்தங்கள், இன்னல்கள், அனாதைகள், விதவைகள், மற்றும் இடப்பெயர்வுகள், இராணுவப் பிரசன்னங்கள்,  ஆகியவற்றின் பின்னணியில் இந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் நீங்கள் வாக்குச் சாவடிக்குள் அடியெடுத்து, உங்களதும்,   உஙகளது பிள்ளைகளின் வருங்காலத்தை நிர்ணயிக்கப்போகும் வாக்குகளை அளிக்கும் முன்னர், பின்வரும் கேள்விகளுக்கான விடைகளைச் உணர்ச்சிகளுக்கு உட்படாமல், அறிவுக்கூர்மையுடன் சிந்தித்து, சீர்தூக்கி வரும் பதில்களுக்கேற்ப உங்களது வாக்குகளைப் போடுங்கள். (மேலும்.....)

கூட்டமைப்பின் வேட்பாளர் உட்பட 50 பேர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் வவுனியா நகர்ப்பகுதியில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஆரம்பமாகி மாலைவரை இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையிலேயே இந்த பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் பிரதேச இளைஞர்கள், ஆதரவாளர்கள் இணைந்து மேற்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்றுமாலை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் அங்கு வந்த வவுனியா பொலிசார் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து வவுனியா பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) உள்ளிட்ட அனைவரையும் அவர்களின் கையெழுத்தைப் பெற்று விடுதலை செய்துள்ளனர்.

பிழையான நேரத்தில் சரியான கருத்தை தெரிவித்த விக்னேஸ்வரன்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

வட மாகாணசபை தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன், சென்னையில் வெளியிடப்படும் இந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தமிழ் நாட்டுத் தலைவர்களைப் பற்றி கூறிய ஒரு கருத்து இப்போது சர்ச்சையாகிக் கொண்டு வருகிறது. எதிர்ப்பார்த்ததைப் போலவே அக்கருத்துக்கு தமிழ் நாட்டிலிருந்தும் இலங்கை தமிழர்களில் சிலரிடம் இருந்தும் எதிர்ப்பு வரத் தொடங்கியுள்ளது. தமிழ் நாட்டுத் தலைவர்கள் தமது அரசியல் நலனுக்காக இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை பாவிப்பதாகவும் அதனால் இலங்கை தமிழர்களே பாதிக்கப்படுகிறார்கள் என்றும் விக்னேஸ்வரன் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார். (மேலும்.....)

போதியளவு அதிகாரங்களும் சுயாட்சியும் எமக்கு வேண்டும் பெரும்பான்மையின மக்களை குழப்ப வேண்டாம் - சம்பந்தன்

நாம் ஒரு­மித்த நாட்­டிற்குள், பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுக்குள் அடி­மை­யாகிப் போகாமல் எமது நாட்டில், எமது பிர­தே­சத்தில் கௌர­வத்­து­டனும் சுய மரி­யா­தை­யுடன் பாது­காப்­பா­கவும் வாழ்­வ­தற்கு போதி­ய­ளவு அதி­கா­ரங்­களும் சுயாட்­சியும் எங்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்டும் என்றே கோரி நிற்­கின்றோம். இத­னையே தேர்தல்விஞ்­ஞா­ப­னத்­திலும் தெரி­வித்­துள்ளோம் எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தினை ஜனா­தி­ப­தியும் தென்­னி­லங்­கையின் பேரி­ன­வாத சக்­தி­களும் நன்கு விளங்கிப் படிக்க வேண்டும். தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை தென்­ப­குதி மக்கள் மத்­தியில் தவ­றாக விமர்­சிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். ஒன்­று­பட்ட நாட்­டிற்குள் உண்­மை­யான, உறு­தி­யான, விசு­வா­ச­மான, போது­மான அள­வுக்கு அதி­கா­ரங்­களைப் பகிர்­வதன் மூல­மாக இனப்­பி­ரச்­சினை தீர்­வு­கா­ணப்­பட வேண்டும் என்ற கருத்­தையே நாங்கள் வெளிக்­கொ­ணர்ந்­துள்ளோம். சர்வதேச பங்களிப்புடனே தீர்வு என்பதை கூறியுள்ளோம். இவ்விதமான தீர்வு ஒருமித்த நாட்டிற்குள் என்பதையும் தெளிவாக கூறியுள்ளோம். ஆகவே இவ்விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் விசேடமாக பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாமல் இருக்க வேண்டும் எனவும் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

களங்கமற்ற எமது செயற்பாடுகள் மீது கறைபூசும் நோக்கில் கூட்டமைப்பு

வடமராட்சி கிழக்கில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புகுந்து குழப்பம் விளைவித்ததாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் வழமைபோல் எம்மீது அவதூறு சுமத்தப்பட்டு பத்திரிகை ஒன்றில் வெளியாகிய செய்தியை நாம் முற்றாக மறுக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்ற வேளையிலும், நாம் சகிப்புத் தன்மையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் ஜனநாயக முறைப்படி எமது பிரசார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றோம். இதனால் பெருகிவரும் எமக்கான மக்களின் ஆதரவைக் கண்டு சகிக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் களங்கமற்ற எமது செயற்பாடுகள் மீது கறைபூசும் கபட நோக்கில் செயற்படத் தொடங்கியுள்ளனர். உடுத்துறைக் கிராம மக்களை விசனமடையச் செய்யும் வகையில், எமது வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீ ரங்கேஸ்வரனை (ரங்கன்) அநாகரிகமான வார்த்தைகளால் வசைபாடியும் உள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அவ்வூர் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் வாய்த்தகராறும், முறுகல் நிலையும் ஏற்பட்டதாக அறிய முடிகின்றது. அங்கு நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஈ. சரவணபவன் ஆகியோரைப் பார்த்து எமக்காக இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என உள்ளூர் பொதுமக்கள், கேள்வி கேட்ட நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கிருந்து அகன்று சென்றதாகவும் அறிவிக்கப்படுகிறது.

அல்பேனியாவின் புதிய அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றது

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் கடந்த ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட சோஷலிச தலைமையிலான இடதுசாரி கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. முன்னாள் பிரதமர் சாலி பெரிஷாவின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டமும், ஊழலும் நிறைந்திருந்தன. வெற்றிபெற்ற சோஷலிசக் கட்சி எடி ராமாவைப் பிரதமராக தேர்ந்தெடுத்து 20 பேர் கொண்ட அமைச்சர் குழுவையும் தேர்ந்தெடுத்தது. நேற்று முன்தினம் ஞாயிறன்று நடந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் இந்த அமைச்சரவை 82 – 55 என்ற அளவில் வாக்குகளைப் பெற்று அம்மன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது. பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடி ராமா (49) 3,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் ஏழ்மையை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளார்.

செப்ரம்பர் 16, 2013

என் மனவலையிலிருந்து.....

தவராசா இற்கு பதிலளித்த? விக்னேஸ்வரன் சீமானுக்கு பதிலளிப்பாரா...?

(சாகரன்)

ஒரே மேடையில் பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என அழைப்புவிடுத்த வடமாகாணசபைத் தேர்தல் ஈபிடிபி முதன்மை வேட்பாளரின் வேண்டுகோளுக்கு 'நாகரிகமாக?' நழுவலாக பதிலளித்து தப்பித்துக்கொண்ட விக்னேஸ்வரன் இன்று பிரபாகரனின் தம்பி சீமானின் 'சீறலுக்கு பதிலளிப்பாரா? என்பதே தற்போதைய கேள்வி. மேற்குலக நாடுகளில் தேர்தலில் பங்குபற்றும் பல்வேறு கட்சிகளும் பொது மேடையில் விவாதத்தில் ஈடுபடும் பண்புகளை கொண்டுள்ளன. இதன் ஒரு வடிவமாகவே தவராசா விக்னேஸ்வரனிடம் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விட்டிருப்பார் என நம்ப முடிகின்றது. அதுவும் இரண்டு மாதத்;திற்கு முன்பு தமிழ் மக்களுக்கு யார் என்று தெரிந்திராத விக்னேஸ்வரன் என்று விளித்து இலங்கை, டெல்லி இன் கைக் கூலி என்றும் விளித்துள்ளார் விக்னேஸவரனை சீமான். அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்த சம்மந்தன், சுமந்திரன் குழுவினரை பிரத்தியேகமாக சந்தித்தவர்களில் நாடு கடந்த தமிழீழக்காரர், கனடிய தமிழ் காங்கிரஸ், கனடியத் தமிழ் பேரவை உடன் முக்கியமாக கலந்து கொண்டவர்கள் நாம் தமிழர் கனடா கிளையினர். சம்மந்தர் ஐயா, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துவிட்டு புலம் பெயர் தேசத்திற்கு விஜயம் செய்து தாம் ஏன் வடமாகாணசபைத் தேர்தலில் பங்கு பற்றுகின்றோம்....? ஏன் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தோம் என்ற விளக்கத்தை ஐயா விளங்கப்படுத்திய போது எல்லோரும் தலையை ஆட்டிவிட்டு இப்போது நாம் தமிழர் சீமான் சீறுவதன் சூட்சமம் என்ன என்பதே தற்போதைய கேள்வி. இவரின் சீற்றம் ஒன்றும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் தரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தப்போவது இல்லை. என்றாலும் தமிழ் நாட்டிற்கு 2009 ல் சூட்கேஸ் காவிய சுரேஸ் இற்கும் சிவாஜிலிங்கத்திற்கும், வியாபாரங்களை சொத்துக்களைக் கொண்டுள்ள இவர்களுடன் கூடிய செல்வம் அடைக்கலநாதன், மாவையாருக்கு பிரச்சனைதான். அதுவும் சுரேஸ் ஐ மீட்ட விக்னேஸ்வரனுக்கு ஒன்று என்றால் சுரேஸ் துடிக்காமலா விடுவார். தமிழ்நாட்டு சொத்துக்களா? விக்னேஸ்வரனின் நட்பா? என்று இருதலைக்கொள்ளி எறும்பாக இருப்பது இவர்களே. அது சரி 1989 களில் பிரேமதாஸாவுடன் சேர்ந்து 'நாங்கள் சகோதரர்கள் நீங்கள் அந்நியர்கள்' (இந்தியாவை நோக்க) என்று உறுமிய பிரபாகரனின் தம்பி சீமானுக்கு வரலாறு தெரியுமோ தெரியாது. 2009 களில் நாம் தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழீழ ஆதரவாளராக பிந்திப் புறப்பட்ட சீமானுக்கு இது தெரியுமோ தெரியாது. கயல்விழியை மணக்கும் போது முன்னிலை வகித்த நெடுமாறன் ஐயாவிடம் அடிக் குறிப்பை கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். இவர் பலவேளைகளில் வரலாற்றைத் திரிப்பார். எனவே சோ. இராமசாமியிடம் அல்லது ஜெயலலிதாவிடம் தைரியம் இருந்தால் பிரேமதாஸ, பிரபாகரன் உறவு பற்றியும் 'நாங்கள் சகோதரர்கள் நீங்கள் அந்நியர்' என்ற பிரபாகரனின் வீரவசனங்கள் பற்றி சீமான் அறிந்து கொள்ளலாம்.

கூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்பது அரசியலுக்கே

தாழ்த்தப்பட்ட தமிழர் என்பதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயர்ப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் உபதலைவர் மாணிக்கம் லோகசிங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். வடக்கில் தாழ்த்தப்பட்ட தமிழர் என்பதால் நான் பெயர்ப்பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்படுவேன் என்பதை ஏற்கெனவே உணர்ந்தவனாக நான் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன். என்னை வேட்பாளர் பட்டியலில் சேருங்கள் என்று நான் யாரிடமும் கேட்கவில்லை. ஆனால் சுரேஷ் பிரேமசந்திரன் அண்ணன் என்னை சந்தித்து அவரே எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டார். ஆனால் இறுதி நேரத்தில் தாழ்த்தப்பட்ட தமிழருக்கு இரண்டு இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறி என்னை கழற்றி விட்டார்கள். அவர்கள் கூறும் சாதி வேறுபாடு தாழ்த்தப்பட்ட தமிழர், உயர் குல தமிழர் என்பதை தேர்தலில் கூறக் கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களெனக் கூறிக் கொள்வோரின் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்பதோடு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், தமிழ்க் கூட்டமைப்பினர் இங்கு வசிக்கும் அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலிக்கடாக்களாக்க முயல்கின்றனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களின் பிள்ளைகள் எவராவது யுத்தத்தில் இறந்திருக் கிறார்களா? யுத்தத்தில் அங்கவீனம் உற்றிருக் கிறார்களா? அல்லது காயமடைந்திருக்கிறார்களா? துப்பாக்கியொன்றை ஏந்தியிருக்கிறார்களா? ஆகக் குறைந்தது விளையாட்டுத் துப்பாக்கி யொன்றையாவது அவர்களது கையில் கொடுத்திருப்பார்களா? தலைவர்களின் பிள்ளைகள் எல்லோரும் படிப்பது இங்கிலாந்தில் அல்லது கனடாவில், இந்தியாவில், பிரான்ஸில். இந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலிக் கடாக்களாக்கி அவர்களது பிள்ளைகளுக்கு சொகுசு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கிறார்கள். இதனாலேயே இன்று எமது அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலியாக்க முயல்கிறார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முல்லைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.(மேலும்.....)

வட மாகாண தேர்தலிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும்!

(எஸ். ஹமீத்)

வட மாகாணத்தைப் பொறுத்தவரை தேர்தலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகி, வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது, 23 வருடங்களாக அகதி வாழ்விற்குள் நொந்து நூலாகி-வெந்து கரியாகிக் கிடக்கும் வட மாகாண முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இத் தருணத்தில் அமையும். வட மாகாண முஸ்லிம்களுக்கென்று இப்போது அத்தியாவசியமாகத் தேவைப்படுவது, அவர்களின் இருண்டு போன வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம். அந்த இருட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேறி ஓரளவாவது வெளிச்சத்தைக் கண்ட பின்புதான், தமது அரசியல் உரிமைகளைப் பற்றியோ, ஏனைய உரிமைகளைப் பற்றியோ அவர்களால் சிந்திக்கத் தொடங்க முடியும். இந்த வெளிச்சத்தை ஆளும் கட்சியினால்-அல்லது ஆளும் கட்சியுடன் இணைந்து தமது மக்களின் விடிவுக்காகப் போராடும் ரிசாத் பதியுதீனின் கட்சியினால் மட்டுமே வழங்க முடியும்.(மேலும்.....)

சமஷ்டி பிரிவினையல்ல - விக்னேஸ்வரன்

சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பது பற்றி அரசாங்கத்தினால் கூறப்படவில்iலை. எந்த தீர்வும் இதுவரையிலும் முன்வைக்கப்படவுமில்லை, நாங்கள், எங்களின் அபிலாஷைகளை முன்வைத்தால், அதற்கும் குறை கூறுவார்கள். மூன்று மாகாணங்களுக்கான தேர்தல்கள் ஒரே காலத்தில் நடைபெற இருப்பதால்,  சிங்கள மக்களுக்கு ஏதாவது கூறுவுதற்காக  இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் போல் இருக்கின்றது என்றும்  அவர் கூறினார்.(மேலும்.....)

திருமலையில் முஸ்லிம்களின் காணிகளை சுவீகரித்து படைமுகாம், விகாரை அமைக்க முயற்சி

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளைச் சுவீகரித்து விகாரை அமைக்கவும் தொல்பொருள் ஆய்வுகளை மேற் கொள்ளவும் படை முகாம்களை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக புல்மோட்டைப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதுடன் இதனை தடுத்து நிறுத்த முஸ்லிம் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள 13 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அரிசிமலை, பொன்மலைக்குடா, கொக்கிளாய், வீதிப் பகுதிகளிலுள்ள முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமான காணிகளை தொல் பொருள் ஆய்வு, விகாரை அமைத்தல், படைமுகாம் விஸ்தரித்தல், பூஜாபூமி வேலைத் திட்டம் ஆகியவற்றைக் காரணங்காட்டி சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்யப்படுகின்றது. அரிசிமலை, விகாரை, நாகவிகாரை என்ற சிறிய சிறிய விகாரைகள் இருந்த இடங்களில் பெரும் விகாரைகளை அமைப்பதற்காகவே இம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் இணையங்களில் புலிகளின் கொடி நீக்கம்

பிரிட்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் உள்ளூர் லிவிசாம் பரோ கவுன்சிலும் தமிழ் இணையத்தளங்களில் புலிகள் இயக்கக் கொடி காண்பிக் கப்படுவதை தடை செய்துள்ளது. மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் மக்களுக்கு செய்யும் பணிகளை விளக்கிக் கூறுவதற்கு இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன. உலகெங்கிலும் எல்.ரி.ரி.ஈ. இந்த புலிகள் கொடியை தனது சின்னமாக வைத்திருக் கின்றது. பொலிஸார் மக்களுக்கு செய்யும் சேவையை தெளிவாக விளக்கும் முக மாகவே புலிகள் கொடியுடனான இந்த இணையத்தளம் அமைக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயமும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்தே லண் டனின் மெட்ரோ பொலிட்டன் பொலி ஸாரும் லிவிசாம் பரோ கவுன்சிலும் புலிகள் கொடியை அகற்றுவது என்று முடிவெடுத்தன. இந்த தீர்மானத்தை அடுத்து இரு இணையத்தளங்களில் இருந்து புலிகள் கொடி உடனடியாக அகற்றப்பட்டது. உலகெங்கிலும் பரந்துவாழும் சுமார் 80 மில்லியன் தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனியான கொடியை விரும்புகிறார்கள் என்று லண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடையில் உடன்பாடு

சிரியா தொடர்பிலான திட்ட வரைபு குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதன்படி சிரியா தன்னிடம் இருக்கும் இரசாயன ஆயுதம் குறித்த விபரங்களை ஒரு வாரத்திற்குள் கட்டாயம் வெளியிட வேண்டும் என உடன்படிக்கையில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரசாயன ஆயுதத் தளங்கள் 2014 நடுப் பகுதியில் முற்றாக அகற்றப்படும். இந்த செயற்திட்டத்தை கடைபிடிக்க சிரியா தவறும் பட்சத்தில் அதன் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஐ. நா. தீர்மானத்திற்கு சாத்தியம் ஏற்படும். எனினும் இந்த விடயத்தில் ஐ. நாவின் இணக்கம் இன்றியே நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு என அமெரிக்க நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இடையிலான உடன்பாட்டுக்கு சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஐ. நா. மற்றும் நேட்டோ என அனைத்து தரப்பும் தனது ஆதரவை வெளியிட்டுள்ளன. ‘இந்த உடன்பாடு சிரிய பதற்றத்தை குறைக்கும்’ என சீன வெளியுறவு அமைச்சர் வங் யீ நேற்று பீஜிங்கில் வைத்து குறிப்பிட்டார். மறுபுறத்தில் அசாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களின் சிரிய சுயாதீனப் படை அமெரிக்க, ரஷ்யாவின் உடன்பாட்டை நிராகரித்துள்ளதோடு, தொடர்ந்தும் போராடுவதாக உறுதி அளித்துள்ளது.

இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது ஆயுதக் குழுவினரே - ஐ.நாவிடம் ஈரான் ஆதாரங்களை

சிரியாவில் பஷார் அல் அசாத் அரசிற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டு வரும் ஆயுதக்குழுவினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈரான் அரசு ஒப்படைத்துள்ளது. சிரியாவில் பாஷர் அல் அசாத் அரசிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் கடந்த இரண்டு வருடமாக உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 21 அன்று டமாகஸ் அருகே நடைபெற்ற சண்டையின் போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை சிரியா அரசு நடத்தியதாக கூறி அமெரிக்கா நேரடி ராணுவ தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்தபணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் வெளிநாடுகளை சிரியா அரசிற்கெதிரான நேரடியான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அமெரிக்கா ஆதரவு ஆயுதக்குழுவினரின் சதித்திட்டமே இந்த இரசாயன தாக்குதல் என சிரியா அரசு கூறி வருகிறது. அதற்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்துள்ளது. இதே போல் ரஷ்யாவும் தனக்கு கிடைத்த ஆதாரங்களை ஐ.நா சபையிடம் ஒப்படைத்து இரசாயன தாக்குதலை நடத்தியது ஆயுதக்குழுவினரே என எடுத்துரைத்து வருகிறது. இந்நிலையில் ஈரான் அரசு அந்நாட்டிற்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இரசாயன ஆயுதங்களை கையாண்டது ஆயுதக்குழுவினரே என ஐநா சபையிடம் ஆதாரங்களை ஒப்படைத்துள்ளது

செப்ரம்பர் 15, 2013

கூட்டமைப்பு எல்லோரையும் எப்போதும் ஏமாற்றுவது சாத்தியமா சாந்தன்

வடமாகாண சபை தேர்தல் தமிழ் மக்களை பொறுத்தவரையில்இந்த அரசாங்கம் என்ன செய்தது அல்லது என்ன செய்யும் என்பது பற்றியதல்ல.மாறாக TNA யினர் என்ன செய்கின்றனர்நடை முறையில் என்ன செய்யப்போகின்றனர் என்பது பற்றியதே! ஒளிவு மறைவு இன்றி இந்த அரசாங்கம் அதிகார பரவலாக்கம் தொடர்பாகதனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. சுருக்கமாக சொல்வதானால்; அதிகாரப்பரவலாக்கம் பிரிவினைக்கு இட்டு செல்லும் என்றும் நாட்டை பிளவு படுத்த விடமாட்டோம் என்பதுமேஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. அரசாங்கம்TNA இனருடன் பல சுற்றுக்கள் பேசியிருக்கின்றதுஎனவேசாதாரண பொதுஅறிவுள்ள அனைவருக்குமே தெரிந்த இந்த விடயம் TNA இனருக்கும் நன்றாகவேதெரியும். (மேலும்.....)

விக்னேஸ்வரனுக்கு சீமானின் பதில(லி)டி

ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தீர்மானித்தவர் செல்வா அவர்கள்தான் .தமிழ் நாடு இதனை முடிவுசெய்யவில்லை என்பது விக்னேஸ்வரனுக்கு தெரியாதோ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். (மேலும்.....)

ஜனாதிபதி – கே.பி சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது வடமாகாண தேர்தல், அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திலலேயே நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் வட மாகாண சபை தேர்தலுக்கான பிரசார பணிகளில் ஜனாதிபதி நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டார். இதன்பின்னர் இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு   கே.பியை சந்தித்து கலந்துரையாடியதுடன்  செஞ்சோலை சிறுவர் இலத்திலுள்ள சிறுவர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

முல்லைத்தீவில் 'கோட்டாபய' கடற்படைத்தளம்

முல்லைத்தீவில், இலங்கை கடற்படை அமைத்துள்ள புதிய தளத்துக்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடற்படையின் இந்த தளத்திற்கு 'எஸ்எல்என்எஸ் கோட்டாபய' தளம் என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் இந்த புதிய தளத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே திறந்து வைத்துள்ளார். முல்லைத்தீவில், இலங்கை கடற்படை 2011 ஜனவரி 13 ஆம் திகதி  முகாம் ஒன்றை நிறுவியது. தற்போது, செம்மலை, நாயாறு, சிலாவத்தை பகுதிகளில் உள்ள கடற்படை முகாம்களுக்குப் பொறுப்பான தளமாக, 'எஸ்எல்என்எஸ் கோட்டாபய' நிறுவப்பட்டுள்ளது என்று கடற்படை அறிவித்துள்ளது.

தேர்தல் காலத்தில் மட்டுமே சம்பந்தன் குழுவினரை வடக்கில் காணமுடிகிறது

அதன் பின்னர் வழமைபோன்று கொழும்பில்தான் - டக்ளஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வடக்கு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களின் டொலர்கள், ஸ்ரெலிங் பவுண்கள் மற்றும் யூரோக்களுக்காக வடக்கு தமிழ் மக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காட்டிக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களில் மட்டுமே சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களை வடக்கில் பார்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்பில் உள்ள தங்களது சொகுசு வீடுகளுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் திரும்பி விடுவார்கள் என தெரிவித்துள்ளார். தங்களது பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில் கல்வி புகட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சுயநலவாத அரசியல்வாதிகளின் பொறியில் மக்கள் சிக்கிவிடக் கூடாது எனவும், மக்களுக்காக குரல் கொடுக்கும் ஈ.பி.டி.பி. கட்சிக்கு வாக்களிக்க வேண்டு மெனவும் அவர் கோரியுள்ளார்.

தமிழ்த் தேசியத்திற்கு பாடுபடுபவர்கள் பாதைகளில் பகிரங்க சண்டை

சங்கரியைத் தோற்கடிக்க சிறீதரன் முயற்சி, விக்கியை வீழ்த்த மாவை சுரேஷுடன் கூட்டு

அடிதடிச் சண்டை இப் பொழுது வட மாகாண சபைத் தேர்தலிலும் களை கட்டி நிற்பதை காணக்கூடிய தாக இருக்கின்றது. தமிழ் இனத்தின் தேசிய விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்துள்ளதாக இலட்சியம் பேசினாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குள் பகிரங்கமாக அடிதடிச் சண்டை நடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த பொதுத் தேர்தலின் போதும் இந்த காலை வாரும் நடவடிக்கை யால்தான் தான் தோற்றுப் போனதாக அத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டி யிட்ட சி.வி.கே சிவஞானம் பின்னர் புலம்பியதை நாம் கேட்டோம். இம்முறை வட மாகாணசபைத் தேர்தலில் இந்த காலை வாரும் முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சற்றுத் தீவிரமடைந்திருப்பதைக் காண முடிகிறது. (மேலும்.....)

ஜனாதிபதி 23 ஆம் திகதி நியூயோர்க் பயணம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை நியூயோர்க் பயணமாகவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் உரையாற்றுவதற்கே அவர் நியூயோர்க் செல்லவுள்ளதாகவும் அங்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆறு நாட்கள் நியூயோர்க்கில் தங்கியிருப்பார் என்றும் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் டளஸ் அழகபெரும ஆகியோரும் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் உயிர்வாழும் வயதான நபராக எதியோப்பிய விவசாயி

எதி­யோப்­பி­யாவைச் சேர்ந்த விவ­சா­யி­யொ­ருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வய­தா­னவர் எனவும் உரிமை கோரி­யுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதி­யோப்­பி­யாவில் இத்­தாலி தலை­யீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாப­கத்தில் உள்­ள­தாக ஓய்வுபெற்ற விவ­சா­யி­யான எட­கபோ எப்பா தெரி­வித்தார். எனினும் அவ­ரிடம் தனது வயதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு எந்­த­வொரு ஆவ­ணமும் இருக்­க­வில்லை. அவர் ஒரோ­மியா தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டியின் போது, 19 ஆம் நூற்­றாண்டில் இடம்பெற்ற சம்­ப­வங்­களை விப­ரித்­துள்ளார். இத்­தா­லியால் எதி­யோப்­பியா ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­ட­போது, தான் இரு மனை­விகள் மற்றும் மக­னுடன் வாழ்ந்து கொண்­டி­ருந்­தாக அவர் கூறினார். அவர் கூறு­வது உண்­மை­யானால் உலக வர­லாற்றுப் பதிவில் நீண்ட காலம் வாழ்ந்த நப­ராக அவர் இடம்பிடிப்பார், இதவரை உலக வர­லாற்றில் அதி­க ­காலம் உயிர் வாழ்ந்த நப­ராக பிரெஞ்சு பெண்­ம­ணி­யான ஜீன் கல்மென்ட் உள்ளார். அவர் 1997 ஆம் ஆண்டு தனது 122 ஆவது வயதில் மர­ண­மானார். எழுதப் படிக்கத் தெரி­யாத சமூ­கத்தை சேர்ந்த எப்­பாவின் வயதை உறு­திப்­ப­டுத்தக் கூடிய எவ­ருமே உயி­ருடன் இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்கது. அவ­ரது வயது உறு­திப்­ப­டுத்­தப்­படும் பட்­சத்தில், அவர் உலகில் உயிர்­வாழும் அதி வய­தா­ன­வ­ராக கின்னஸ் உலக சாதனைப் புத்­த­கத்தில் இடம்பிடிப்பார். தற்போது உலகில் உயிர் வாழும் அதிக வயதானவராக 115 வயதான மிஸவோ ஒகவா விளங்குகிறார்.

இராணுவம் சிவில் நிருவாகத்தில் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும் - வாசுதேவ

வடக்கில் இராணுவத்தை முழுமையாக முகாம்களில் அடைக்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்தை நிராகரிக்கின்றோம். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அதேவேளை இராணுவம் சிவில் நிருவாகத்தில் தலையிடுவது தடுக்கப்பட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதையே தனது வேலையாக கொண்டுள்ளார். வடபகுதியில் உள்ள இராணுவத்தினர் அனைவரையும் முகாம்களுக்குள் அடைப்பது என்பது முடியாத காரியம். வடக்கின் பாதுகாப்பிற்கு இராணுவத்தினரின் பிரசன்னம் அத்தியாவசியமானதாகும். ஆனால் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து காணப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது இதனை இல்லாது செய்ய வேண்டும்.

தம்மால் உருவாக்கப்பட்ட புலிகளாலே தமது தலைவர்கள் அழிக்கப்பட்டதை மறந்து செயற்படும் தமிழ்க் கூட்டமைப்பு   

புலிகளின் நிகழ்ச்சி நிரலை மீண்டும் நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. இதனை புறக்கணிப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடபகுதி மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென சர்வ மதத்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஜனாதிபதியின் இணைப்பாளர்களான வணக்கத்துக்குரிய கலகம தம்மரன்சி தேரர், சர்வதேச இந்துமதபீட அமைப்பின் செயலாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் (பரபுசர்மா), வணக்கத்துக்குரிய அருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சி, ஹம்பாந்தோட்டை ஸ்ரீலங்கா மொஹம்மதியா சங்கத்தின் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் ஹசன் மெளலானா ஆகியோரே இதனைத் தெரிவித் துள்ளனர். (மேலும்.....)

TNA கூறுவதில் உண்மை எது? தமிழ் மகனின் கேள்வி இது!

தேர்தலில் தங்களை வெற்றிபெற வைத்தால் சர்வதேச சமூகம் உதவிக்கு வரும் என்கிறார்கள். கடந்த தேர்தல்களிலும் இதையே கூறினார்கள், யாரும் வரவில்லை. வாக்குப் பலத்தைத் தந்தால் இராணுவத்தை வெளி யேற்றுவோம் என்கிறார்கள். இராணுவத்தினர் குறித்து தீர்மானிப்பது மாகாண சபையல்ல, ஏமாற்றுகிறார்கள். மாகாண சபை மூலம் அரசியல் தீர்வை அடைய முடியாது. நமது பிரச்சினைக்குத் தீர்வு நவநீதம்பிள்ளை அவர்களின் மூலம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். மாகாண சபையை நடைமுறைப்படுத் துவதற்கூடாக அரசியல் தீர்வை அடைய முடியும் என்பதுதான் உண்மையில் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கும் கருத்து. இதனை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. (மேலும்.....)

TNA முக்கியஸ்தர் அறுவர் ஸ்ரீல.சு. கவில் இணைந்தனர்

அடுத்த புதுவருடத்துக்கு யாழ்தேவியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மீண்டும் உங்களைச் சந்திப்பேனென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ் நகரில்நேற்று மாலை தெரிவித்தார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஐ.ம.சு.மு. கூட்டத்தில் பங்கேற்று ஜனாதிபதி உரையாற்றினார். இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த 6பேர் ஜனாதிபதியின் முன்னிலையில் அரசுடன் இணைந்து கொண்டனர். வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் வசந்தநாதன் சிவானந்தன். வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வீரசிங்கம் சிவகுமாரன், வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை செல்வராஜா, முன்னாள் வலிமேற்கு பிர. சபை தலைவரும் சுயேச்சைக்குழு 3இன் முதன்மை வேட்பாளருமான நல்லநாதன் திரிலோகநாதன், சுயேச்சைக்குழு 3 வேட்பாளர் கணபதி கதிரவேலு, வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சூசைப்பிள்ளை சசிதரன் ஆகியோரை சு.கவில் இணைந்து கொண்டனர்.தென்னிலங்கையைச் சேர்ந்த எவரும் வடக்கை ஆளமுடியாதென்று கூறியவந்த ரி.என்.ஏ. இன்று தென்னிலங்கையில் இருந்து முதன்மை வேட்பாளரை இறக்குமதி செய்து களத்தில் இறக்கியுள்ளது. முன்னுக்குப் பின் முரணாகச் செயற்படும் இவர்களின் நடவடிக்கைகள் எனக்கே புதிராக விருக்கின்றன. இங்கு குழுமியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை பார்க்கும் போது நான் உண்மையில் மனமகிழ்கின்றேன்.

செப்ரம்பர் 14, 2013

யாழ்தேவி கிளிநொச்சியை சென்றடைந்தது

யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர்  கிளிநொச்சியை சற்று முன்னர் சென்றடைந்துள்ளது. இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார். யாழ்தேவி ரயில் தனது பயணத்தை ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்தே இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்தது. கிளிநொச்சி ரயில் நிலையத்தை காலை 10.15 மணியளவில் வந்தடைந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் பயணியாக ஏறி பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்தேவி ரயில் சேவைகள் நாளை 15 ஆம் திகதி முதல் கிளிநொச்சிவரை நடைபெறும் என்று அறிவித்துள்ள ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 8.15 க்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை தனது சேவையை வழங்கி வந்த யாழ்தேவி 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதியின் பின்னர் வவுனியா வரை மட்டும் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணத்திற்கு முதலாவது சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியையும் ஆஸ்பத்திரி வீதியினையும் இணைக்கும் முத்திரைச் சந்திப் பகுதியிலே இந்த முதலாவது வீதிச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ் நகரின் முக்கிய சந்திகளில் பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கைகள் கணக்கெடுக்கப்பட்டதினைத் தொடர்ந்து முத்திரைச் சந்தியில் வீதிச்சமிஞ்ஞை விளக்குகள் நேற்று மாலை  பொருத்தப்பட்டுள்ளன. யாழ்.நகரத்திற்குள் இருந்தும் ஏ – 9 வீதிக்கு செல்லும் வாகனங்கள், வெளியிடங்களிலிருந்து யாழ்.நகரத்திற்கு நுழையும் வாகனங்கள் முத்திரைச் சந்தியினூடகவே பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

தனிநாட்டுக் கோரிக்கை

மாகாணசபையை இல்லாதொழிக்கும் - திஸ்ஸ விதாரண

'தனிநாட்டினை பெறுவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளின் மூலம், வடமாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பது மட்டுமல்ல, மாகாண சபைகளை இல்லாது ஒழிப்பதற்காக நடவடிக்கைகளும் இருக்கின்றன' என்று சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 'தமிழ் தேசிய கூட்டமைப்பினால், இந்த தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் குறித்து தான் கவலையடைவதாகவும், வெளி நாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டினை எடுக்கின்றார்களே தவிர, இங்கு இருக்கும் தமிழர்களின் நிலைப்பாட்டினை எடுக்கின்றார்கள் இல்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 'அரசாங்கத்துடன், இணைந்து யுத்தத்திற்கு பின்னரான மீள் இணக்கத்தினை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை சமாதானத்திற்கான முயற்சியை தவிர்த்து, மக்களின் நலனுக்காக கதைப்பது குறைவு' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு வடபகுதியை மீட்டு, தனிநாட்டு கோரிக்கைக்கான அறிக்கை விடுவதும், சமாதானத்திற்காக ஈடுபடுவதை தவிர்த்து  முரண்பாடாக நடப்பது தவறாகும் என்றும் அவர் கூறினார். (மேலும்.....)

23 வருடங்களின் பின் கிளிநொச்சி செல்லும் யாழ்தேவியில் ஜனாதிபதி இன்று பயணிப்பார்

ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, கிளிநொச்சி ரயில் நிலையம், சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும் ஜனாதிபதி அவர்கள், ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றவுள்ளார். இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி, சுன்னாகத்தில் 1800 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கும் உப மின் உற்பத்தி நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார். எல்.ரி.ரி.ஈ யினரால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் சீர் குலைக்கப்பட்டதுடன், 1990 ஆம் ஆண்டுடன் வடபகுதிக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ரயில் தண்டவாளங்கள் கழற்றப்பட்டு எல்.ரி.ரி.ஈ யினரால் பயன்படுத்தப்பட்டிருந்தன.

புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பு

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற் பாடுகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பாக உயர்நிலைப் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்விகற்க அனுப்பிக்கொண்டிருக்கும் அதேவேளையில், இலங்கையிலுள்ள ஏழைத் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தூண்டுகிறார்கள் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் நல்ல வசதியாக வெளிநாடுகளில் நல்ல வருமானத்துடன் மகிழ்ச்சியாக வாழ் கின்ற போதிலும் அவர்கள் இலங்கை யிலுள்ள தமிழர்களுக்கு தீங்கிழைக்கும் கொள்கையையே கடைப்பிடிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இவ்விதம் சுயநலப்போக்கைக் கடைப் பிடிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்குள்ள தமிழர்கள் தமிழ்த் தாயகத்துக்காக ஆயுதப்போராட்டத்தில் இறங்கவேண்டு மெனத் தூண்டுவது மன்னிக்க முடியாத குற்றமென்றும் தெரிவித்தார்.

செப்ரம்பர் 13, 2013

வடக்கு மாகாணசபையை  யார் கைப்பற்றவேண்டும்?

(லியோ,  ெரன்ரோ, கனடா)  

வடமாகாண ஆட்சி யார் கையில் கிடைக்கப்போகின்றது என்பதே எல்லோர் முன் எழுந்துள்ள கேள்வியாகும்  யார் வெல்வார்கள் யார் தோற்பார்கள் என்று ஆரூடம் கூறுவதற்கு ஓரு கிறிக்கற் போட்டியோ அல்லது உதைபந்தாட்டப்போட்டியோ அல்ல இது. யார் கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்பதே முக்கியம். அபிவிருத்திக்கும், அரசியலுக்குமான இந்தத்தேர்தலில் சரியானவர்களும் அந்த மண்ணில் மக்களுடன் மக்களாக இருந்தவர்கள் மக்களின் பிரச்சினைகளை அனுபவரீதியாக அறிந்தவர்கள்தான் தெரிவு செய்யப்படவேண்டும்.  அபிவிருத்தியை எடுத்துக்கொண்டால் வடக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியாக ஓட்டும் (எக்கனமி எஞ்சின்) என்று கருதப்படும் கடற்தொழில், விவசாயம், பனம்பொருள் உற்பத்திகள் யுத்தம் முடிவுற்றபின்னர் வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதன்மூலம் வேலைவாய்ப்பையும் பெற்றதுமட்டுமல்ல வடக்கு மாகாணம் பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேற்றம் கண்டுவருகின்றது. அடித்தளமக்களின் பொருளாதாரம் கல்வி வேலைவாய்ப்பு முன்னேற்றம் கண்டுள்ளது.  (மேலும்.....)

டில்லி மாணவி பாலியல் வழக்கு

நால்வருக்கும் மரண தண்டனை

டில்லியில் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் மாணவி ஒருத்தி ஆறு பேரால் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி இவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என்று ஏற்கெனவே தீர்ப்பளித்திருந்தார். அவர்களுக்கான தண்டனை ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்று அரச தரப்பு வழக்குரைஞர்கள் கோரியிருந்தனர். இருந்தும் தாம் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று குற்றவாளிகள் வாதிட்டனர். இந்த சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதுடன், பாலியல் வல்லுறுவுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவும் வழிவகுத்தது. கடந்த வாரம், இதே குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட பதின்பருவ இளைஞர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சீர்திருத்த நிலையத்தில் கழிக்க தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆறாவது நபர் மார்ச்சில் சிறையில் இறந்து கிடந்தார். இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், உயர் நீதிமன்றம் அந்த தண்டனையை உறுதி செய்த பிறகே அதை நிறைவேற்க முடியும்.

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்

சட்டமா அதிபரிடம் ஆலோசனை

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இராவணா சக்தி தன்னிடம் கோரியதற்கிணங்கவே அந்த விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, தேர்தல்கள் ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியல்ல என்பதனை முதலில் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன். இலங்கை தமிழரசு கட்சியே ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாகும். எனினும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட அரசியல் கூட்டமைப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த கட்சி பதியப்படும் போதே அக்கட்சியின் கொள்கை அறிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் கோருவார். தேர்தல் காலத்தில் அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படாது. அதனால், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதி எனக்கு கிடைக்கவில்லை. அதனை அவர்கள் எனக்கு வழங்கவேண்டிய தேவையுமில்லை. எவ்வாறாயினும்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளேன் என்றார்.

புலிகளின் ஆயுத களஞ்சியங்களை அழிக்க அமெரிக்கா உதவியது

தமிழீழ விடுதலைப்புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களை ஆழ் கடல் பகுதியில் வைத்து 2006 க்கும் 2008 க்கும் இடையிலான காலக்கட்டத்தில் அழித்தொழிக்க அமெரிக்க அதன் பூரண ஆதரவை வழங்கியிருந்தது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடற்புலிகளின் ஆயுத விநியோக கப்பல்களை இலங்கை கடற்படையால் மூழ்கடிக்க முடிந்த போது இந்த யுத்தத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். '2006 க்கும் 2008 க்குமிடையில் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களில் நாம் 12 ஐ அழித்தோம்' இது எவ்வாறு சாத்தியமானது?
'அமெரிக்கர்கள் மிகமிக உதவியாக இருந்தனர். ஆயுத கப்பல்கள் இருந்த இடங்களை அவர்கள் எமக்கு தந்தனர்' என பாதுகாப்பு அமைச்சர் செயலாளர் அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 'தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களில் பெரும்பாலானவை திறந்த சந்தையில் வாங்கப்பட்டவை' என்றும் அவர் தெரிவித்துள்ளார். பீரங்கிகளில் அநேகமானவை வடகொரியா மூலத்தை கொண்டவை. அவர்களிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருந்தன. இவை இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள போதுமானவையாக இருந்தன அல்லது சில சமயம் இலங்கை இராணுவத்திட்டமிருந்ததைவிட கூடுதலானவையாகவும் இருந்தன. புலிகளிடமிருந்த பீரங்கிகள் எமக்கு ஏராளமான இழப்புகளை ஏற்படுத்தின'. புலிகளின் கப்பல்கள் இருக்கும் இடங்களை அமெரிக்க செய்மதி தொழில்நுட்பங்கள் கப்பல்களின் இடத்தை காட்டின. இதனால் இலங்கை படைகளால் அவற்றை அழிக்க முடிந்தது.

கொழும்பு, கிளிநொச்சிக்கு தினமும் மூன்று ரயில் சேவைகள்

கொழும்பு கோட்டை யிலிருந்து கிளிநொச்சிக்கு 15 ஆம் திகதி முதல் தினமும் மூன்று ரயில்கள் புறப்படவுள் ளன. அதற்கான ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி எல். ஏ. ஆர். ரத்னாயக்கா தெரிவித்தார். தினமும் காலை 5.45க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் யாழ். தேவி பகல் 12.35 மணிக்கு கிளிநொச்சியை சென்றடையும். அதேபோன்று காலை 6.00 மணிக்கு மற்றுமொரு யாழ். தேவி கிளிநொச்சியிலிருந்து புறப்படும். இந்த ரயில் பகல் 1.00 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். தினமும் காலை 6.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் இன்டர்சிட்டி கடுகதி ரயில் காலை 11.50 க்கு கிளிநொச்சியை சென்றடையும். காலை 5.45 க்கு புறப்பட்ட யாழ். தேவியை அனுராதபுரத்தில் இன்டர் சிட்டி ரயில் முந்திச் செல்லும். இதே இன்டர் சிட்டி கடுகதி ரயில் பிற்பகல் 2.10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து மீண்டும் புறப்படும். இது இரவு 7.15 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். இரவு 8.15 க்கு புறப்படும் தபால் ரயில் அதிகாலை 4.10 க்கு கிளிநொச்சியை சென்றடையும். இரவு 8.30 க்கு கிளிநொச்சியிலிருந்தும் தபால் ரயிலொன்று கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும். இந்த தபால் ரயில் அதிகாலை 4.35 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். கிளிநொச்சி, கொழும்பு கோட்டை, அனுராதபுரம் போன்ற பிரதான ரயில் நிலையங்களிலும், மொபிடெல் தொலைபேசி ஊடாகவும் ஆசன முன்பதிவுகளை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரபாகரனின் புகைப்படத்துடன் துண்டுப்பிரசுரம்; நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கொடிகாமம் நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த வேளையிலேயே குறித்த நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டதாகவும், 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள், வடமாகாண சபை தேர்தல் பிரசாரத்தினை மேற்கொள்வதற்காக வீடு மற்றும், வர்த்தக நிலையங்களில் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக அவர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் குடியிருக்கும் விக்னேஸ்வரனை முதன்மை வேட்பாளராக நிறுத்தியது ஏன் ?

தமிழ் அரசியல்வாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டதன் விளைவே இது

யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் இல்லையா? இளைப்பாறிய நீதியரசர்கள் இல்லையா? சட்டத்தரணிகள் இல்லையா? கல்விமான்கள் இல்லையா? அனுபவம் மிக்க அரசியல்வாதிகள் இல்லையா? அவ்விதம் இருக்கும் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கொழும்பில் குடியிருக்கும் விக்னேஸ்வரனை தங்களின் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்தது ஏன் என்று கேட்க விரும்புவதாக ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் வடபகுதியின் 82 அரசியல்வாதிகள், 52 சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், நீலன் திருச்செல்வம் போன்ற 24 கல்விமான்களை படுகொலை செய்தனர். எல்.ரி.ரி.ஈ. இந்தக் குற்றங்களை செய்திருக்காவிட்டால் வடபகுதியில் பிறந்து, வடக்கில் நிரந்தரமாக வாழும் ஒருவரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது பிரதம வேட்பாளராக தெரிவு செய்திருக்க முடியுமென்றும் ஜனாதிபதி சொன்னார். (மேலும்.....)

சிரியா விவகாரம் அமெரிக்காவுக்கு புடின் நேரடி எச்சரிக்கை

சிரியா பிரச்சினை குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அமெரிக்க மக்களுக்கு நேரடியாக கருத்துத் தெரிவித்துள்ளார். சிரிய விவகாரம் குறித்து தனது நிலைப்பாடு தொடர்பில் புடின், அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதியுள்ளார். அதில் அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த முற்படுவது புதிய தீவிரவாத அலையை ஏற்படுத்தும் என புடின் எச்சரித்துள்ளார். அமெரிக்கா ஜனநாயக வடிவம் கொண்ட நாடாக மில்லியன் கணக்கான மக்கள் பார்க்கவில்லை என்றும் மாறாக அது ஒரு கொடூர படையை முன்னெடுக்கும் நாடாகவே பார்ப்பதாகவும் அவர் விபரித்துள்ளார். (மேலும்.....)

செப்ரம்பர் 12, 2013

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் அபாயகரமானது - ஜனாதிபதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் மூன்று தசாப்த காலத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மக்களை மீண்டும் அதற்குள் தள்ளிவிடும் வகையிலேயே அமைந்துள்ளது. அது அபாயகரமானதாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் வேட்பாளரை மேடையில் வைத்துகொண்டு பிரிவினைவாதம் பேசுவது ஆரோக்கியமானதொன்றல்ல என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். "வட மாகாண தேர்தலில் போட்டியிடுவதற்கு சமூக ஆர்வலர்கள்,கல்வியாளர்கள், முன்னாள் அரச உத்தியோகஸ்தர்கள் என்று பலர் இருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர் அங்குள்ள பிரச்சினைகளை எவ்வாறு இனங்காண போகின்றார். முதலமைச்சர் வேட்பாளரை மேடையில் வைத்துகொண்டு பிரிவினைவாதம் பேசுவது அவ்வளவு ஆரோகியமானதல்ல. வடக்கில் பாதுகாப்பு படைகளை குறைக்குமாறு கூறிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பினர் படைகளின் பாதுகாப்பிலேயே தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜனநாயகத்தையும் சமூகத்தையும் குழிக்குள் தள்ளிவிடக்கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திர மற்றும் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக்கியிருக்கலாம். கூட்டமைப்பினர் அன்று புலிகளின் பேச்சை கேட்டே செயற்பட்டனர். இன்று அவ்வாறான நிலைமையில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

சனல்-4 தயாரிப்பாளர் இலங்கை வரவுள்ளார்

இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் யுத்த குற்றங்களை தொடர்ந்து அம்பலபடுத்திவரும் அதேவேளை சனல்-4 நியூஸ் ஆவணப்படம் தயாரிப்பாளர் கலும் மக்கிறேயும் பொதுநலவாய உச்சிமாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக  இலங்கை வரவுள்ளனர் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நவநீதம்பிள்ளையின் வரவை அடுத்து சனல் 4 இன் தயாரிப்பாளர் இலங்கை வரவுள்ளார். இது இலங்கை சம்மந்தமாக மேற்கின் மாற்றங்களையே காட்டுகின்றது. இது இன்று ஆரம்பித்தது அல்ல. அமெரிக்க வர்த்தக கழு ஒன்று 1 வருடத்திற்கு முன்பு இலங்கை சென்று திரும்பியதும், யார்பாணத்தில் அமெரிக்க நலன் பிரிவின் பிரசன்னம் எனபவற்றின் தொடர்ச்சிதான் இவை. தமிழ் மக்களே உண்மை நிலையை புரிந்து கொள்ளுங்கள்.

தீர்வு கண்டால் கூட்டமைப்பின் அரசியல் செத்துவிடும்

'தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும' என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.  'எதிர்கால சந்ததியினர் துப்பாக்கியும் சயனைட்டும் ஏந்தும் நிலைக்கு அவர்களை தள்ளாதீர்கள். அவர்களின கைகளில் புத்தகமும் கொப்பியும் கொடுத்து வளவான எதிர்கால சந்ததியினரை உருவாக்க முன்வாருங்கள்' என்றும் அவர் வேண்டுகோள் விடுததார்.  'கடந்த காலங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உள்ளுராட்சி சபைகள் சரியான முறையில் இயங்கவில்லை. இவ்வாறான உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிக்கக்கூடிய பலமோ திறமையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் இல்லை. ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல தங்களில் குறைபாடுகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை குறைகூறி வருகின்றார்கள். அரசாங்கம் தரவில்லை என்று கூறுகிறார்கள்.   பொய்யான வாக்குறுதிகளை வழங்கி கடந்தகால தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றி பெற்ற போதிலும் அவர்களால் மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ளாததை அனைவரும் உணர வேண்டும். 'கூட்டமைப்பினர் முதலமைச்சர் வேட்பாளரான விக்னேஸ்வரன் கொழும்பைச் சேர்ந்தவர். அவருக்கு வடமாகாணத்தைப் பற்றியோ மக்களின் வாழ்வுநிலை பற்றியோ எதுவுமே தெரிந்திருக்க வாய்பில்லை. இப்படிப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அதன் முதலமைச்சர் வேட்பாளரும் மக்களின் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுத்தரமாட்டார்கள்.

மன்னாரில் 25 முன்னாள் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவு

எல்.ரி.ரி.ஈயின் மன்னார் மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் ஏரம்பமூர்த்தி சிவானந்தராஜா (ரொபேர்ட்) தலைமையிலான 25 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் அரசாங்கத்தில் இணைந்துகொண்டனர். ஐ.ம.சு.மு தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் பொது மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வின்போதே இவர்கள் அரசில் இணைந்துகொண்டனர். இதன்போது மாந்தை பிரதேச சபை உறுப்பினர் ரைபீர், மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அரபாத் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டதோடு, இவர்களை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

செனட் சபையில் தோல்வி முகம்

சிரியாவை தாக்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஒபாமா அறிவிப்பு

சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர் களிடமிருந்து மட்டுமின்றி, தனது சொந்தக்கட்சி உறுப்பினர்களிடமிருந் தும் கடும் எதிர்ப்பை அமெரிக்க ஜனா திபதி பாரக் ஒபாமா சந்தித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில், சிரியாவைத் தாக்கும் தனது தீர்மானம் தோல்வியடைந்துவி டும் என்று தெளிவாக உணர்ந்து கொண்ட நிலையில், தீர்மானத்தை முன்மொழிவதையே ஒபாமா நிர்வா கம் தள்ளிவைத்தது. இது சமீப பத்து ஆண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட் டுள்ள ஒரு கடுமையான பின்னடைவா கும் என்று சர்வதேச நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகெங்கி லும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த தோடு, ரஷ்யாவும் சீனாவும் இதர நாடு களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்ன ணியில், அமெரிக்க மக்களும் பெரும் எண்ணிக்கையில் வீதிகளில் இறங்கி சிரியாவைத் தாக்கதே என போராட துவங்கியிருப்பதால் போர்த்திட்டத் தை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை மை எழுந்துள்ளது. (மேலும்.....)

கல்வியறிவில் திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்தது

இந்திய அறிவொளி வளர்ச்சி பட்டியலில் திரிபுரா, கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் முழு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக அது மாறவில்லை. இன்றைய தினத்தில் திரிபுராவில் 94.65 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நூறு விழுக்காடு கல்வியறிவு என்பது எங்கள் இலக்கு. அதை விரைவில் நாங்கள் எட்டுவோம் என்று மிக நம்பிக்கையுடன் கூறுகிறார் திரிபுரா மாநிலத்தை வழிநடத்திச் செல்லும் இடது முன்னணியைச் சார்ந்த முதல்வர் மாணிக் சர்க்கார். (மேலும்.....)

செப்ரம்பர் 11, 2013

TNA ன் தேர்தல் விஞ்ஞாபனம் –சொன்னதும், சொல்லாததும்

(அபிமன்யு)

TNA விஞ்ஞாபனத்‌தில் சொல்லப்பட்ட விடயங்களில் வெற்று சொல்லாடல்களும் வெறும் வீராப்பும் தான் உள்ளது ஆனால்   சொல்லப்படாத விடயங்களே TNA யின் உண்மையான அரசியலாக இருக்கின்றது. TNA சொல்லாமல் சொல்லும் நடைமுறை பற்றி குத்‌தலாக சில கேள்விகளை எழுப்புகிறார் அபிமன்யு,  தொடர்ந்து வாசியுங்கள் முடிவெடுக்க வேண்டியது வாக்காளர்களே! (மேலும்.....)

மன்மோகன் இலங்கை செல்கின்றார்

இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர் களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில்  ரோஜா இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (மேலும்.....)

வட்டுக்கோட்டையில் இருந்து ஒரு நல்ல தகவல் வந்துள்ளது

வடபகுதியின் பிரதான நகரங்களில் ஒன்றான வட்டுக்கோட்டைக் கும் நாட்டின் இனப்பிரச்சினைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. 1976ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதியன்று தமிழரசுக்கட்சி என்று தன்னை ஆரம்பம் முதல் அழைத்து வந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான அரசியல் கட்சி தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற புதுப் பெயரில் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மக்கள் ஆதரவை பெருக்கிக் கொள்ளும் எண்ணத்துடன் நாம் பதவிக்கு வந்தால் சுதந்திர தமிbழம் ஒன்றை உருவாக்குவோம் என்ற வட் டுக்கோட்டை பிரகடனத்தை விடுத்தது. (மேலும்.....)


செப்ரம்பர் 10, 2013

ஞானசக்தி – காலமும் சமூகப் பங்களிப்பும்தி. ஸ்ரீதரன்

1970 களின் நடுப்பகுதியில் தமிழ் மகளிர் பேரவையினுடாக அரசியலில் பிரவேசித்த தோழர் ஞானசக்தி -ராஜி 1980 களின் முற்பகுதியில் ஈழமாணவர் பொதுமன்றத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டவர். ஈழப் பெண்கள் விடுதலை முன்னணியின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர் கொழும்பில் இடதுசாரி ஜனநாயக பெண்கள் இயக்கங்கள் நடாத்திய சர்வதேச பெண்கள் தின நிகழ்விலும் கொழும்பு  நகர மன்ற முன்றலில் நடைபெற்ற ஜே.ஆர் அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கெதிராகவும் நிகழ்ந்த எதிர்ப்பு இயக்கத்திலும் பங்கு கொண்டவர். இக்காலப்பகுதியல் பெண்கள் இயக்கங்களில் இணைவதில் சமூகச் சவால்களை எதிர் நோக்க வேண்டியிருந்தது. (மேலும்.....)

யெமன் குடிமகன் மட்டும் அல்ல சீமானும்

கல்லால் அடித்து.....? தண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டும்.

(சாகரன்)

'யெமனில் 8 வயது சிறுமி திருமண இரவில் மரணம்' செய்தி ஒன்று கூறுகின்றது. எவ்வளவு கொடுமையான செயல், வக்கிரமான புத்தி, மதங்கள் இதனைப் போதிக்கவில்லை. மூட நம்பிக்கைகளும், வக்கிரப் புத்திகளும், நிலப் பிரவுத்துவ சிந்தனையும்  சேர்ந்த ஆணாதிக்க செயற்பாட்டின் வெளிப்பாடுகள் இவை. யார் அங்கே இவர்களை கல்லால் அடித்துக் கொல்லுங்கள் என்ற கட்டளை இடமாட்டார்கள் ஏன் எனில் அவர்களின் அந்தப்புரத்திலும் இதே சல்லாபங்கள் நடைபெறுகின்றன. மனித குலம் அறிவியல் ரீதியில் வளர்ச்சி அடைந்து இதன்பால் உள்ள வக்கிரங்களை நிறுத்தப்படும் வரைக்கும் ஏழைக் குழந்தைக்கு வாழ்வு அழித்தல், என்னிடம் வலு உள்ளது இதனால் நான் எத்தனை பேரையும் வாங்கலாம், வைத்திருக்கலாம், வக்கிரப் புத்திக்கு உள்ளாக்கலாம், ஏன் கொல்லலாம் என்று இவர்கள் வாதிப்பார்கள். இதனை ஒரு பெண் செய்திருந்தால்(இதுவும் தவறுதான்) அப் பெண்ணைத் தேவடியாள் என்றும், குலத்திற்கு விளங்கமாட்டாள் என்று கொக்கரிக்கும் நிலப்பிரவுத்துவ ஆண் மேலாதிக்கம் சாகடிக்கப்பட வேண்டும். மூன்றாம்தர இலக்கியங்களும், மதபோதனைகளும், மூன்றாம்தர சினிமாக்களும் மனிதனை நல் நெறிப்படுத்துவதற்கு பதிலாக வக்கிரப் புத்தியுள்ள ஒழுங்கீன மிருகங்களாக மனித குலத்தை உருவாக்கி வருகின்றது எல்லோரையும் விளிப்படையச் செய்திருக்கவேண்டிய விடயம். இதுவரை செய்யவில்லை என்பது மனித குலத்தின் சாபக்கேடு. இந்தியாவின் பல இடங்களிலும் சட்டத்தையும் மீறி தினம் தினம் நடைபெறும் பலாத்கார வன் புணர்ச்சியும், தினம் தினம் மாற்றி பெண்களை கல்யாணம் கட்டும் காட்சிகளும் 'பெரும்' தலைவர்கள் சீமான் வரை விரிந்து கிடக்கையில் சாதாண மக்கள் தம்மை ஒழுக்க சீலராக மாற்றி வாழ இவை ஊக்கிவிப்புக்களைக் கொடுக்குமா என்பது கேள்விக்குறிகளே. யெமனில் 8வயது சிறுமியை வன் புணர்வுக்குள்படுத்தி கொலை செய்தவன் மட்டும் அல்ல, இலங்கை தமிழ் அகதி வாழ்விலும் கல்யாண நம்பிக்கையை வளர்த்து ஏமாற்றிய சீமானும் கல்லால் அடித்து.......? சீமானின் தலைவர் காட்டி வழியை சீமான் இன்று பின்பற்றுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே.

முள்ளிவாய்கால் பேரவலம்

(ரிஷி)

நார்வேயின் Pawns of Peace அறிக்கையில் வெளியாகியுள்ள சில விஷயங்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள் ஓயவில்லை. மாறாக, முன்பைவிட அதிகமாகின்றன. சர்வதேச அரசியல் நகர்வுகள் பற்றிய அன்டர்ஸ்டான்டிங் இருந்தால், இந்த அறிக்கை இவ்வளவு நாட்களின் பின் இப்போது ஏன் வெளியிடப்படுகின்றது என்பது சுலபமாக புரியும். ஸ்ரீலங்காவில் உள்ள பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று திடீரென அமெரிக்காவரை அழைக்கப்பட்டபோது, அதைத் தொடர்ந்து வேறு சில விவகாரங்களும் கிளப்பி விடப்படும் என்பதை சுலபமாக ஊகிக்கலாம். ராஜதந்திர அரசியலில் அதுதான் வழமை. அப்படி இந்த நேரத்தில் வெளிவர வைக்கப்பட்டதுதான் நார்வே அறிக்கை. அந்த விதத்தில், அறிக்கை வெளியிடப்பட்ட நேரம், அறிக்கை வெளியிட்டவர்களுக்கு (அல்லது வெளியிட வைத்தவர்களுக்கு) வெற்றிதான்! காரணம், அவர்கள் நினைத்த திசையில்தான் விவகாரம் சுலபமாக செல்கிறது. (மேலும்.....)

கயல்விழியை மணந்தார் சீமான்

நாம் தமிழர் கட்சித் தலைவரும், திரைப்பட இயக்குநரும் நடிகருமான சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் இன்று திருமணம் இடம்பெற்றது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் இத்திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும், சீமானுக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இந்தப் பணிகளில் தமிழர் தலைவர்களான பழ. நெடுமாறன், மறைந்த இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் திருமணம் நடைபெற்றது. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் இடம்பெற்றது. பல்வேறு தமிழர் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் எனப் பலர் திருமணத்தில் பங்கேற்றனர். திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக் கன்றுகள் நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்காக சிறப்பு விருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருமண ஏற்பாடுகளை இயக்குநர் அமீர் சேரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

கருத்தரங்கு

'பல்தேசியக் கம்பனிகளும் பால்மாவும்'

தலைமை: இரா.தருமலிங்கம்

இடம்: பெண்கள் கல்வி நிறுவன ஆய்வு கூடம்

     58 தர்மராம வீதி

     கொழும்பு – 06 (இலங்கை)

காலம்: செப்ரெம்பர் 15, 2013 ஞாயிறு மாலை 4.30 மணி

உரையாற்றுவோர்:

வைத்தியக் கலாநிதி எம்.கே.முருகானந்தன்

'பால்மாவும் உடல் நலமும்'

லீனஸ் ஜயதிலக (தொழிற்சங்க செயற்பாட்டாளர்)

'பல்தேசியக் கம்பனிகளும் பால்மாவும்'

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு:

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

18-6/1 கொலிங்வூட் பிளேஸ் - கொழும்பு – 6

E-mail : kailashpath@yahoo.com

புலிக்கொடி விவகாரம்

சந்தேகநபரை கொண்டுவர பேச்சு

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு கொண்டுவருவது பற்றி பிரித்தானிய பொலிஸாருடன் பேசிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே சி.ஐ.டியினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் குறித்த சந்தேகநபரை மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் அண்மையில் தெரிவித்திருந்தனர். சந்தேகநபரான லோகேஸ்வர்ன மணிமாறன் இன்னும் கைது செய்யப்படாது மறைந்து வாழ்வதால் விசாரணையை முடிக்க முடியவில்லை என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அன்று கொண்டுவந்தனர்.(மேலும்.....)

மீண்டும் பேரிடியை ஏற்படுத்தியிருக்கும் சரத் பொன்சேகாவின் கருத்து

இறுதி யுத்தத்தில் காணாமல்போனவர்கள் என்று எவருமில்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே இந்தக் கருத்தினை கூறியிருக்கின்றார். இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தோ ஒப்படைக்கப்பட்டோ காணாமல்போனவர்கள் என்று எவருமில்லை. இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட 12 ஆயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்களும் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டனர். இந்த யுத்தத்தில் 23 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்னர். அவர்களுள் இந்த காணாமல்போனவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் உள்ளடங்கியிருக்கலாம். (மேலும்.....)

தேர்தல் அரசியலை

ஒடுக்கப்பட்ட மக்கள் பகிஸ்கரிக்க முடியாது

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்பது, பாட்டாளி வர்க்க நலனில் இருந்து நோக்கப்படுகின்றது. இந்த வகையில் தேர்தல் அரசியலை பகிஸ்கரிக்காது அதில் பங்குகொள்ளும் நாம், எதிர் நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். அதாவது தேர்தலில் பங்குகொள்வதையும் பங்கெடுப்பதையும் பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், தேர்தல் அரசியலில் பங்குகொள்ளுமாறு கோருகிறோம். இதன் மூலம் இனவாதத்தையும், ஏகாதிபத்திய நலனையும் முன்னிறுத்தி, மக்களை இனரீதியாக பிளந்து ஒடுக்கும் ஜனநாயக விரோத தேர்தலில் பங்குகொள்ளாது பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், இந்த தேர்தலில் விவகாரமாக்கப்படும் அரசியலை தேர்ந்தறிந்து முன்னெடுக்கக் கோருகின்றோம். (மேலும்.....)

தெரிவுக்குழுவிலிருந்து ஹெல உறுமய வெளிநடப்பு

நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து ஜாதிக ஹெல உறுமய இன்று திங்கட்கிழமை வெளிநடப்பு செய்துள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டம் குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றபோதே ஹெல உறுமய உறுப்பினர்கள் அந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். வடமாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பிலுள்ள பிரிவினைவாத ஏற்பாடுகளை இரத்து செய்ய இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு தவறிவிட்டதென கூறியே அவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு திருத்தம் ஒன்றை கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சிரிய இராணுவ தலையீட்டுக்கு அமெ. தொடர்ந்து தீவிர முயற்சி

சிரிய அரசு இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியதற்கு அமெரிக்காவிடம் எந்த ஆதாரமும் இல்லை என்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அமெரிக்க தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சி.பி. எஸ். தொலைக்காட்சிக்கு அஸாத் வழங்கிய பேட்டி நேற்று ஒளிபரப்பப்பட்டது. அதில் மேற்கின் தாக்குதலுக்கு தமது நட்பு நாடுகள் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார். சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனையொட்டி ஐரோப்பா சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் சந்தித்தார். சிரியா தாக்குதலுக்கு அனுமதி அளிப்பது குறித்து அமெரிக்க கொங்கிரஸ் அவையும் விவாதத்தை ஆரம்பித்துள்ளது. (மேலும்.....)

யெமனில் 8 வயது சிறுமி திருமண இரவில் மரணம்

யெமன் நாட்டில் 40 வயது நபருக்கு மணம் முடித்து வைக்கப்பட்ட 8 வயது சிறுமி ஒருவர் திருமண இரவில் பாலியல் அதிர்வால் ஏற்பட்ட உட்காயத்தால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். ரவன் என்று மாத்திரம் அடையாளப்ப டுத்தப்பட்டிருக்கும் இந்த சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து கடும் இரத்தப் போக்கு காரணமாக மரணமடைந்திருப்பதாக குவைட் நாளிதழான அல் வதான் செய்தி வெளியிட்டுள்ளது. வடமேற்கு யெமனின் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுமியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யுமாறு மனித உரிமை அமைப்புகள் அழுத்தம் கொடுத்துள்ளதோடு சிறுபராய திருமண சடங்கையும் முடி வுக்கு கொண்டு வருமாறு கோரியுள்ளன. யெமனில் கால்வாசிக்கும் அதிகமான பெண்கள் தனது 15 ஆவது வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுவதாக ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் வெறி தாண்டவம் ஆடும் வாரம்

திங்கட்கிழமை (நேற்று): கோடை இடைவேளையின் பின் அமெரிக்க கொங்கிரஸ் அவை கூடியது. சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவின் ஆறு தொலைக்காட்சி வலைய மைப்புகளுக்கு பேட்டி அளித்தார்.

செவ்வாய்க்கிழமை (இன்று): ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றுவார். செனட் அவையில் சிரிய விவகாரம் விவாதத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை: சிரிய இராணுவ நடவடிக்கை தொடர்பிலான ஒபாமாவின் பிரேரணை மீதான ஆரம்பக்கட்ட வாக்கெடுப்பு செனட் சபையில் முன் னெடுக்கப்படும்.

வியாழக்கிழமை: செனட் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம்: அமெரிக்க பிரதிநிதிகள் அவை சிரியா தீர்மானத்தின் மீது வாக்கைப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. சிரியா மீதான தாக்குதலுக்கு முன்னர் ஐ.நா. அறிக்கைக்கு காத்திருக்க வாய்ப்பு உள்ளது.

செப்ரம்பர் 09, 2013

பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம்

சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட புலித்தலைமையும் அவர்களின் தந்திரோபாய பின்வாங்கல் படலமும் 

மாவிலாறு, இலங்கையில் வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து விடுவதற்கான அணைக்கட்டு கதவுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தது. இந்தக் கதவுகள் திறந்து விடப்பட்டால், மாவிலாற்றின் நீர், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பாயும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு அணைக்கட்டு திறக்கப்பட்டால், தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதிகள்: கல்லாறு, தெஹிவத்த, தோப்பூர், செருவில, செருநுவர ஆகிய கிராமங்களில் உள்ள வேளாண்மை செய்யும் வயல்கள்.(மேலும்.....)

தென் பகுதியிலும் கூட்டமைப்புக்காக பிரசாரம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலுக்காக வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தென் பகுதி அரசியல்வாதிகளின் கடும் விமர்சனத்தை எதிர்நோக்கி வருகிறது. அவ் விமர்சனங்கள் எவ்வாறாறனனவை என்பதை அறியாமல் இருந்தாலும் தென் பகுதி அரசியல்வாதிகள் அதனை விமர்சிக்கிறார்கள் என்ற நிலைமையே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சாதகமானதாகும். தென் பகுதி அரசியல்வாதிகளனதும் ஊடகங்களினதும் விமர்சனத்தினால் பெருமளவில் நன்மையடைந்த ஒருவர் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான். அவரது காலத்தில் தோட்டப்புற மக்கள் மட்டுமல்லாது நாட்டில் சகல பகுதிகளிலும் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு தமது குறைகளைப் பற்றி முறையீடு செய்ய இருந்த ஒரே பலம் வாய்ந்த நிறுவனம் இ.தொ.கா.வே. எனவே பெரும்பான்மையின அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் விமர்சனங்களை கண்ட அம் மக்கள் மென் மேலும் அவரை ஆதரித்தனர்.
(மேலும்.....)

“புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது”

“இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்.” இவ்வாறு கூறியுள்ளார், சுப்ரமணியம் சுவாமி.‘சுவாமி கூறியிருப்பது உண்மையாக இருக்குமோ’ என்ற சந்தேகம் ஏற்படுகிறதா? அவர் எந்த இடத்தில், எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு கூறினார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். (மேலும்.....)

சிரியா மீதான இராணுவ நடவடிக்கை

உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அமெ. தீவிர இராஜதந்திர முயற்சி

சிரிய அரசுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை எட்டியிருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி அறிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உரையாற்றிய கெர்ரி, படுகொலைகளை உலகம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்காது என்றும் குறிப்பிட்டார். சிரியா தனது மக்கள் மீது இரசாயன தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டும் அமெரிக்கா, கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் 1,429 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த இரசாயன தாக்குதல் குறித்த ஐ.நா. அறிக்கை வரும் முன்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். (மேலும்.....)

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கவிருந்த பல சந்தர்ப்பங்களை கூட்டமைப்பு தவற விட்டது

பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் வட மாகாண சபைக்கு வேண்டும் என்று குரல் எழுப்பி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அரசாங்கம் அதனையும் விட கூடுதலான அதிகாரமுடைய தீர்வொன்றை முன்வைத்த போது, அதனை நிராகரித்தனர். இன்று அவர்கள் அதே அதிகாரங்களை கேட்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது என்று பாரம்பரிய கைத்தொழில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13வது சட்டத் திருத்தத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகாரங்களையும் கேட்கின்ற போதிலும், சமாதானத் தீர்வொன்றின் மூலம் அந்த அதிகாரங்களை முன்னைய அரசாங்கங்கள் கொடுக்க முன்வந்த போது எல்.ரி.ரி.ஈ இயக்கத்திற்குப் பயந்து அத்தகைய தீர்வுகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

செப்ரம்பர் 08, 2013

'பிரபாகரன் சரணடைந்திருந்தால் மஹிந்தவின் குடும்பத்துடன் இருந்திருப்பார்'

'இராணுவத்திடம் பிரபாகரன் சரணடைந்திருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் இருந்திருப்பார்' என்று முன்னாள் இராணுவத்தளபதியும் புதிய ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். 'யுத்தம் நடைபெற்ற காலத்தில் சிரேஷ்ட தலைவர்கள் எவரும் சரணைடையவில்லை. சரணடைந்தவர்கள் இப்போது ராஜபக்ஷ குடும்பத்துடன் இருக்கின்றார்கள். குறிப்பாக கே.பி மற்றும் தயாமாஸ்டர் போன்றவர்கள் இப்போது மஹிந்தவின் குடும்பத்துடன்தான் இருக்கின்றனர். பிரபாகரன் சரணடைந்தாலும் மகிந்தவின் குடும்பத்துடன் இருந்திருப்பார். அத்தோடு அவர் முதலமைச்சர் பதவியும் வகித்திருப்பார்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.'யாழ்.மாவட்டத்தில் உள்ள இராணுவ கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க ஊழலுக்கு துணைபோகின்றார்' என்றும் குற்றஞ்சாட்டினார். இதேவேளை, விடுதலைப்புலிகளின்முன்னாள் போராளிகளிடம் 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்கின்றார் என பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) என்னிடம் தெரிவித்துள்ளர். 

சீன கம்பியூனிஸ்ட் கட்சித் தலைவர் இலங்கை வருகிறார்

சீனாவின் சிரேஷ்ட கம்பியூனிஸ்ட் கட்சியின் தலைவர் லியூ யுன்ஷான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை  வருகிறார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர் தனது இலங்கைக்கான விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவையும் சந்திக்கவுள்ளார்.

காணி, பொலிஸ் அதிகாரம் வடக்கிற்கு மட்டும் வேண்டுமாம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தெரிவித்திருக்கும் கருத்துக்கள், தெரிந்தே செய்யப்படுகிறதும்,திறனாய்வுக்குட்படாததும் மற்றும் ஏமாற்றுகிற வேலையுமாகும்

(கலாநிதி. தயான் ஜயதிலகா)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக்கொண்டால்,13 வது திருத்தம் மூலம் 1987 - 88 ல் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை, 2013லும் பாதுகாத்து அதன்படி வடக்கு தேர்தலை தற்போதுள்ள திருத்தத்தின்படியே நடத்துவதற்காக தான் ஆற்றவேண்டிய தீவிர முயற்சியில் முற்றிலும் சிரத்தையற்றிருப்பதைப் போல் தெரிகிறது. சுருங்கச் சொன்னால், தற்போது சிரமத்தின் மத்தியில் திறக்கப்பட்டிருக்கும் நொருங்கத்தக்கதான நிலையிலுள்ள அரசியல் இடைவெளியினை பாதுகாக்கவும் மற்றும் எல்லா நேரத்திலும் கணிசமான பகுதி தெற்கின் நல்லெண்ணத்தை பெறவேண்டியதன் அவசியத்தை அல்லது சபைக்கு எதிரான தென்பகுதியினரின் எதிர்ப்புகளை நடுநிலைப்படுத்த வேண்டும் என்பதைப்பற்றியும் அது அக்கறைப் படாதது போலத் தோன்றுகிறது. (மேலும்.....)

எதிர்ப்பு அரசியல் என்றுமே தமிழினத்துக்கு விடிவு தராது

கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.தவராஜா 18ஆம் வயதில் அரசியலில் பிரவேசித்தவர். 1970 இல் இருந்து மக்களின் நலனுக் காக உழைத்துவரும் டக்ளஸ் தேவானந்தவுடன் இணைந்து E.N.D.L.Fஆரம்பித்த காலத்திலிரு ந்தும் பின்னர் EPDP வளர்ச்சியிலும் பங்களிப்புச் செய்தவர். EPDP கட்சி சார்பில் 1994 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2000, 2001ஆம் ஆண்டு வரை பாராளு மன்றப் பிரதிநிதியாக இருந்தார். கடந்த சில காலமாக டக்ளஸ் தேவானந்தவின் அமைச்சில் நிதி தொடர்பான மதியுரைஞராக பணிபுரிகி றார். தற்போது வட மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு முன்னணியின் தலைமை வேட்பாளராக போட்டியிடுகின்றார். மாகாண சபைத் தேர்தலில் அர சின் வெற்றி வாய்ப்புப் பற் றிய அவரது கருத்துக்கள் அவருடனான இந்த செவ்வி யில் இடம் பெறுகின்றன. (மேலும்.....)

தனக்கு சட்டம், நீதி தெரியாது என்பதை புலப்படுத்திய மேதை விக்னேஸ்வரன்!

காணி பொலிஸ் அதிகார ங்களை வடக்குக்கு மட்டும் கோரும் விக்னேஸ்வரன் தமக்கு சட்டமும் தெரியாது நீதியும் தெரியாது என்பதை புலப்படுத்துகின்றார் என பாராளுமன்ற கவுன்ஸில் உறுப்பினரும், ஊடக அமைச் சின் மேற்பார்வை எம்.பியுமான அஸ்வர் எம்.பி தெரிவித்துள்ளார். முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் கருத்துக்களை வடமாகாணத் தமிழ் மக்களே நகைக்கின் றனரெனவும் அரசியல் தெரியாத அவர் தமது கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள இந்த நேரத்திலாவது தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாணங்களில் அரசாங்கத்தின் கட்டுப் பாட்டில் மாகாணசபை நிர்வாகம் இருப்பதனால் அவற்றுக்கு அதிகாரம் தேவையில்லையெனவும் வடக்குக்கு அதிகாரம் தேவையெனவும் விக்னேஸ்வரன் கூறுவது கேலியானது எனவும் அஸ்வர் குறிப்பிட்டார். தமிழ்க் கூட்டமைப்பு இப்போது முஸ்லிம்களை அரவணைக்கின்றது. இது தேர்தல் கால தந்திரம். வடக்கு - கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஒருபோதுமே ஆதரவில்லை.  இணைந் திருந்த போது அவர்கள் பெற்ற கசப்பான அனுபவங்கள் அநேகம். மர்ஹும் அஷ்ரப் வடக்கு -கிழக்கு இணைப்பை ஆதரித்தவருமல்ல. ஆனால் தற்போதைய மு.கா தலைமை கூட்ட மைப்புக்கு பகிரங்கமாகவோ அந்தரங்கமாகவோ ஆதரவளிப்பது ஏன் என்று புரியவில்லை என அஸ்வர் தெரிவித்தார்.

உழைக்கும் கனவில் சென்று டலமாய் வீடு திரும்பிய சாந்தி

தனது தாய் நாட்டை விட்டு, உறவுகளை விட்டு தனது குடும்பத்தின் வறுமை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்று உழைத்து அதன் மூலம் தனது குடும்பத்தை வாழ வைக்கலாம் என்ற நம்பிக்கையில் வெளி நாடு செல்லுவோர் வரிசையில் சென்றவள்தான் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றக் கிராமமான ஓமடியாமடு கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சாந்தி. (மேலும்.....)

போரின் வலிகளை உணர்த்தும் எழுத்துக்கள் -  கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம்

(ரஸஞானி)

விவேகானந்தர் துறவி என்றாலும், அவர் மனிதன் தனது அடையாளத்தை விட்டுச்செல்வதற்கு மூன்று ஆலோசனைகளை சொல்லியிருக்கிறார். மனிதன் பிறக்கிறான், மறைகிறான். இடையில் அவனிடமிருப்பது நீண்ட அல்லது குறுகியகால வாழ்க்கை. அந்த இடைவெளியில் அவன் உருப்படியாக மூன்றுவிடயங்களில் ஏதாவது ஒன்றையாவதுசெய்துவிடவேண்டும். இல்லையேல் அவனுக்குப் பிறகு அவனதுபெயர் சொல்வதற்கு அடையாளமாக ஒன்றும் இருக்காது. இல்லறத்தில் ஈடுபட்டு ஒருபிள்ளைக்காவது பெற்றோராகிவிடவேண்டும். அல்லது தனதுபெயர் சொல்ல ஒருவீட்டையாவது விட்டுச்செல்லவேண்டும். அல்லது ஒருபுத்தகம் எழுதிவிடவேண்டும். நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் மறுவளம் நூலைகையிலெடுத்தபொழுது விவேகானந்தர் சொன்னதுதான் எனது நினைவுக்கு வந்தது. (மேலும்.....)

“சிரியா மீது கை வைக்காதே’’

(பிரகாஷ் காரத்)

2003ல், ஜார்ஜ் புஷ் இராக்கின் மீது படை யெடுத்தார். அப்போது, சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்ற தவறான முறையில் போலிக் காரணம் ஒன்றைக் கூறி இவ்வாறு படையெடுத்தார். அடுத்து, ஒபாமா 2011இல் லிபியாவிற்கு எதிராக வான்வழி வழியாக ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தார். அப்போது அவர் பெங்காசியில் ரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப் படுவதாகக் கூறினார். இப்போது சிரியா அமெரிக்காவின் குறியாகும். இதற்கு அவர்கள் கூறும் சால்ஜாப்பு. சிரியா ராணுவம், அங்கே கலகம் செய்திடும் படையினருக்கு எதிராக ‘சரின்’ எனப் படும் நரம்புகளைப் பாதிக்கும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்துகிறதாம். (மேலும்.....)

As opposition to war mounts, Pentagon plans massive attack on Syria

By Bill Van Auken
7 September 2013

Facing overwhelming opposition to its war plans among the American people, the prospect of losing a vote in Congress on a resolution authorizing military force, and unprecedented isolation on the world stage, the Obama administration has reportedly ordered the Pentagon to plan a far wider attack on Syria than had originally been indicated. Obama is “now determined to put more emphasis on the ‘degrade’ part of what the administration has said is the goal of a military strike against Syria—to ‘deter and degrade’ Mr. Assad’s ability to use chemical weapons,” the New York Times reported Friday, citing unnamed Pentagon officials. (more.....)

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை வெளிப்படையாகப் பாராட்டினார் நவிபிள்ளை

இரக்கமற்ற முறையில் கொலைகள் பல புரிந்த புலிகளுக்கு ஐ.நா.வில் ஒருபோதும் இடமில்லை

யுத்தத்தின் நிறைவானது இலங்கையில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சூழலை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன் எனக் குறிப்பிட்ட மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, யுத்தம் முடிந்துவிட்ட போதிலும் மக்களின் கஷ்டங்கள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பதையும் உணர முடிந்ததாகத் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த நவநீதம்பிள்ளை கடந்த சனிக்கிழமை 31.08.2013 அன்று கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்டார். (மேலும்......)

HANDS OFF SYRIA ACTIONS MOMENTUM GROWS

A collective fierce voice demanding, "Not another war" is resounding across the country and around the world.
Now is the moment to make our voices heard.
Join unified actions this Sat. Sept. 7, in

NEW YORK's TIMES SQUARE, *42ND STREET AND SEVENTH AVENUE AT 1 PM* & in Boston, Philadelphia, Washington D.C., Atlanta, Chicago, San Francisco, Los Angeles
and on

MONDAY, SEPTEMBER 9, IN FRONT OF THE WHITE HOUSE

with Syrian American Forum from 10 to 12. Marching to Congress - Upper Senate Park

Join in to stop the attack on Syria. The coming days provide the last chance to mobilize popular resistance to the military strike. The people fear both the political and economic consequences of another costly war. Millions believe the pretext for the war is another Big Lie like the lies used before the Vietnam, Iraq and Libya wars. We need to join together to loudly oppose this new war. 

Poised to launch weapons of mass death on the Syrian people, the administration has called time out to try to win over the population and Congress with a "full-court press" assault of war propaganda. We must meet this with a "full-court press" response. 

Along with the dozens of protests held last week in the U.S. and hundreds worldwide, the anti-attack forces have called major actions in the next week and a full week of lobbying and local actions. 

Under the slogans of “Hands off Syria! Not another war!” the International Action Center initiated a call for a united regional action of all antiwar forces for September 7 at Times Square at 42nd Street and Seventh Avenue, NYC at 1 p.m.  

Other actions on Saturday, September 7 include a protest called by the Answer Coalition in front of the White House at noon. There are also regional coalitions organizing demonstrations in Boston, Philadelphia, Atlanta, Chicago, San Francisco and Los Angeles, among other cities.

வெளிவந்துவிட்டது வானவில் 31

13ஆவது திருத்தத்தை ஏற்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதின் நோக்கம் என்ன?

13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள்; செய்யப்படவேண்டும் எனவும், செய்யப்படக்கூடாது எனவும் பலத்த விவாதங்க்ள் சமீபநாட்களில் நடந்து வருகின்றன. இதில் குறிப்பிடக்கூடிய விசேடம் என்னவெனில்; அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலேயே இந்த விவாதம் சூடு பிடித்திருப்பதுதான். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிங்கள இனவாத் கட்சிகளான அமைச்சர் விமல்; வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உருமய என்பன 13ஆவது திருத்தச்; சட்டத்தை முற்றாக அரசியல் சாசனத்திலிருந்து நீக்க வேண்டும் அல்லது அதன் சாரத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றன. அவர்களது இந்தக்; கோரிக்கையை சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும், ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸவும் ஆதரிக்கின்றனர். (மேலும்.....)

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய மத்தியர அரசு இல்லை - கருணாநிதி

'ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அனுசரணையாக இல்லாமல் இலங்கைக்கே இந்திய மத்திய அரசு அனுசரணையாக இருக்கிறது' என்று தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். 'கடல் எல்லையைப் பாதுகாக்க இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இலங்கை அரசுக்கு, இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் தி.மு.க அதை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்துசாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்ததும் இந்திய அரசுதான்.  இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் தமிழக மீனவர்கள் சிங்கள அரசினால் துன்புறத்தப்பட்ட நேரத்தில், தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு பல நேரங்களில் முயற்சிகளை மேற்கொண்டது.  எனினும் 2 கப்பல்களை இந்தியா வழங்குகிறது என்ற செய்தியின் மூலம் இலங்கை அரசுக்குத்தான் இந்தியா உதவி செய்கிறதே தவிர, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கோ மற்றும் இந்திய மீனவர்களுக்கோ அனுசரணையாக இல்லை என்று சிலர் தொடர்ந்து எடுத்து வைத்து வரும் குற்றச்சாட்டு உறுதியாகிறது.

செப்ரம்பர் 07, 2013

என் மனவலையிலிருந்து.......

விண்ணை மிஞ்சும் தமிழ் தலைவர்களின் இராஜதந்திரம்?

(சாகரன்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த பலருக்கும் இந்த முதல் அமைச்சர் நாற்காலிக் கனவுகள் இருந்தன. இதனை மையப்படுத்தியே இதற்குள் பெரும்பாலும் குத்துவெட்டுக்கள், அறிக்கை போர்கள் நடைபெற்றன. ஏன் தமது முன்னாள் தாய் அமைப்புகளுடன் 'திடீர்பாசம்' எற்பட்டு புலம் பெயர் தேசத்து தமது முன்னாள் சகாக்களுடுனான இணைதல் என்ற குறுக் கோட்டங்கள் எல்லாம் நடைபெற்றன. இதில் எந்த வெற்றியையும் அடைய முடியாத நிலையில் புத்தக வெளியீட்டாளர் விக்னேஸ்வரன் இவர்கள் கையில் அகப்பட்டார். சம்மந்தரும் மாவை முதல் அமைச்சரானால் கட்சியில் தனது முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதை 'சரியாக' கணிப்பிட்டார். எனவே கட்சிக்கு அப்பால் ஒருவரை அழைத்து வந்தால் கட்சியில் தனது முக்கியத்துவம் பாதுகாக்கப்படும் என்ற சுழி ஓடினார். அகப்பட்டது அரசியலில் கட்சி பதவியில் இல்லாத விக்னேஸ்வரன். தனக்கு கிடைக்காவிட்டாலும் தனது சாகா ஒருவருக்கு இந்த முதலமைச்சர் நாற்காலி கிடைக்கக் கூடாது என்பதில் புழகாங்கிதம் அடைந்த இவர்கள் யாபேருக்கும் இரா. சம்மந்தனின் விக்னேஸ்வரன் என்ற இராஜதந்திர திணிப்பு உண்மையிலேயே இராஜ தந்திரமானது தான். முப்பது வருடகால போராட்டதில் ஐந்திற்கு இற்கு மேற்பட்ட பிரதான இயங்களின் போராளிகளின் தியாகங்கள், கூடவே அதன் தலைவர்களின் இழப்புக்கள் கூடவே ஒரு இலட்சத்திற்கு மேலான பொது மக்களின் மரணங்கள், பலகோடி சொத்து இழப்புக்கள், பல இலட்சம் மக்களின் அகதி ஓட்டங்கள், யாழ்பாணத்தைவிட்டு முஸ்லீம் மக்களின் விரட்டியடிப்பு..... இவற்றின் பரிசாக சம்மந்தனுக்கு கிடைத்த பதவியல்லவா தமிழ் மக்களின் ஏக தலைவன் என்ற பதவி (அரசு வழங்கிய குண்டு துளைக்காத காரில் வலம் வருவது வேறு விடயம்) இவர் தற்போது தமிழ் மக்களின் தற்காலிக மின்சாரக் கனவான வடபகுதி முதலமைச்சர் பதவியை ஓய்வுபெற்ற நீதியரசரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுக்கின்றார் பேரன், பேத்திகளுடன் இந்தியாவில். எப்படி ஐயா தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும். இதுதானே கடந்த 80 வருடகால இனவாத தமிழ்த் தலைமைகளின் வரலாறு. இன்னும் நூறு ஆண்டுகள் சென்றாலும் இந்தப் பிரச்சனை இழுத்துக்கொண்டேதான் போகும். இதற்கான முற்போக்கு தலைமையை ஏற்படுத்த மாற்றுக் கருத்தாளர்கள் விடாது உழைத்து வெற்றி பெறும் வரை இது தொடரத்தான் போகின்றது.

போட்டியிடுவதிலிருந்து நான் விலகத்தயார் - உதயராசா

சுயமாக ஓர் சரியான தலைவனை சரியான உறுப்பினரை தெரிவு செய்ய வேண்டும். வட மாகாணசபைத்தேர்தல் அபிவிருத்திக்கான தேர்தல் என்பதனை அனைவரும் விளங்கி கொள்ள வேண்டும். இன்று அரசாங்கத்திற்கு எதிராக போட்டியிடுபவர்கள் நகரசபையிலும் சரி பிரதேச சபையிலும் சரி நடக்கபோகும் மாகாணசபையிலும் சரி சர்வதேசத்திற்கு ஓர் செய்தி என்று கூறிக்கொண்டும் தீர்வுக்கான வழி என்றும் பொய்யான பிரசாரத்தை செய்கின்றனர். நகரசபை ஆட்சியை கைப்பற்றுவதன் ஊடாக ஓர் தீர்வு வருமாக இருந்தால் இன்றேல் மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றுவதன் ஊடாகவோ தீர்வு கிடைக்குமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுவதிலிருந்து நான் விலகுவதற்கு தயாராக உள்ளேன். சர்வதேசத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. சர்வதேசத்தில் இருந்த எத்தனையோ நிறுவனங்கள் இங்கு வந்து சென்றுவிட்டன. அவர்கள் எல்லாம் உரிமையைப்பற்றியோ தீர்வைப்பற்றியோ எதனையும் குறிப்பிடவில்லை. (மேலும்.....)

வறுமையும் , நாகரிகமும்...............

 

கிழிஞ்சதை போட்டா வறுமை......
கிழிச்சு போட்டா நாகரிகம்..............

விக்னேஸ்வரன் மாகாணசபையைப் பிடித்து இராணுவத்தை வெளியேற்றுவது எப்படி என்ற வித்தையை மக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டாமா?

இராணுவத்தை வெளியேற்ற எமக்குப் பலத்தைத் தாருங்கள் என்று வழக்கம்பரையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன். இவர்தான் முன்பு நீதிபதியாக இருந்து தீர்ப்புகள் வழங்கியவர் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. மக்களை ஒன்றும் புரியாத முட்டாள்கள் என்று நினைத்துக் கொள்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா? இவர்கள் வென்றவுடன் இராணுவம் எப்படி வெளியேறும்? இராணுவத்தை வெளியேற்றுவதற்கு அப்படி என்ன வெளியே சொல்ல முடியாத இரகசியத் திட்டம் வைத்திருக்கிறார்கள்?(மேலும்.....)

23 மூன்று வருடங்களின் பின்னர் மயிலிட்டியில் வழிபாடு

இருபத்தி மூன்று வருடங்களுக்கு பின்னர் மயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை தங்கள் சொந்த இடத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த கிராமத்திற்கு சென்று வழபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மயிலிட்டி பகுதியிலுள்ள வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்மன், முனையன் வளவு முருகன் மருதடி விநாயகர் ஆகிய ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக மாவிட்டபுரத்திலிருந்து தனியார் பேரூந்துகளில் மக்கள் வருகை தந்தனர். இவர்களை 12.30 மணியளவில் மாவிட்டபுரத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மயிலிட்டிப் பகுதிக்குச் அழைத்துச் சென்றார். மேற்படி மூன்று ஆலயங்களிலும் பலநூற்றுக்கணக்கான மக்கள் பொங்கல் மற்றும் அன்னதான நிகழ்வுகளை முன்னெடுத்ததுடன் சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.  

சிறுவர் போராளி அணித்தலைவி தடுத்து வைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறுவர் போராளிகள் அணியை பயிற்றுவித்த ரஞ்சனி, அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு உளவுப் பிரிவினரால் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ரஞ்சனியால் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தின்படி பதினோராவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி தனது வயதையொத்த சிறுமிகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகவும் பின்னர் துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளின் பின் லெப்டினன் கேணலாக இயக்கத்தில் பதவி உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற யுத்தத்திலும் இவர் பங்குபற்றியுள்ளார். அக்பர் என்றழைக்கப்பட்ட அவருடைய கணவர், புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக இருந்தார். 2006இல் நடைபெற்ற யுத்தத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். மூன்று பிள்ளைகளின் தாயான 34 வயதுடைய ரஞ்சனி, 47பேரட அடங்கிய குழுவில் ஒருவராக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி அங்கே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின் வெளியேறி 2011இல் மெல்பர்ன் நகரில் மீண்டும் திருமணம் செய்து கர்ப்பமாக இருந்த வேளையில் மீண்டும் தடுப்புக் காவலுக்கு கொண்டுசெல்லப்பட்டார். விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக அந்த இயக்கத்தில் தீவிர பற்றுடையவராக இருந்ததால் அகதியாகவே தொடர்ந்தும் பார்க்கப்படுகிறார். உயர்நீதிமன்றில் தன்னை தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்குமாறு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை - ராஜித

தேசிய ஐக்கியத்திற்காக வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தேவையான முழுமையான அதிகாரம் கிடைக்கும் வரை தான் அந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என  அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் இனவாத தலைவர்களே இனவாதத்தையும் தேசிய வாதத்தையும் தூண்டி நாட்டை யுத்தம் ஒன்றை நோக்கி தள்ளி விட்டனர்.  30 வருட போரில் தமிழர்களும், சிங்களவர்களும் கடும் பாதிப்புகளை அனுபவித்தனர்.  சிங்கள இனவாத தலைவர்கள் தெற்கில் சிங்கள இனவாததத்தை போஷித்து வாக்குகளை பெறுவது போன்று,  வடக்கிலும் இடம்பெற்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வரை யாழ்தேவி பயணிக்கும்

சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் ஆறரை மணித்தியாலங்களில் யாழ் தேவி ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கும். கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 65 வீதம் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் பாதை எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளதாக கூறிய அவர், 25 வருடங்களுக்குப் பிறகு 15ஆம் திகதி முதல் கொழும்பிலிருந்து கிளிநொச்சிவரை மூன்று ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிவரையிலான 65 கிலோமீற்றர் தூர ரயில் பாதை நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அநுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிவரை விசேட ரயிலில் நேற்று பயணம் செய்த அமைச்சர் ஓமந்தை மற்றும் கிளிநொச்சி ரயில் நிலையங்களுக்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார். மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதைப் பணிகள் பூர்த்தி செய்யப்படும். ஜுலை மாதத்தில் யாழ் தேவி ரயில் காங்கேசன்துறைவரை பயணம் செய்யும். மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றன. வடபகுதிக்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு குறைந்த நேரத்தில் பயணம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் வடபகுதி மக்கள் ரயிலிலே அதிகம் விரும்பி பயணித்துள்ளனர்.

செப்ரம்பர் 06, 2013

என் மனவலையிருந்து......

அரசியல் பாடங்கள் கற்றுக்கொள்வோம்

(சாகரன்)

பொதுவாக தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல் கட்சிகள் தமது புதிய காரியாலயங்களை ஒவ்வொரு பிரதேசத்திலும் திறந்து மக்களை சந்தித்து வருவர். இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டும் அல்ல மேற்கத்திய நாடுகளிலும் வழமை. இதற்கு சில நியாயமான? காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இதில் முக்கிய நோக்கம் மக்களை சந்தித்து அவர்களிடம் தமக்கு வாக்கு அளிக்குமாறு கேட்பதே முதன்மை பெற்றிருக்கும். பின்பு தேர்தல் முடிந்தததும் வெற்றவர்கள், தோற்றவர்கள் உட்பட எல்லோரும் கொட்டில் கால்களைப் பிடிங்கிக் கொண்டு தலைமறைவாகிவிடுவர். வென்றவர்கள் மாத்திரம் எங்கேயோ ஒரு நகரத்தில் தமது வசதிக்கு ஏற்ப ஒரு அலுவலகத்தை அமைத்து தமது செயற்பாட்டை தொடருவர். கவனிக்க தமது செயற்பாட்டை, மக்களைச் சந்திப்பது என்பது அல்ல. இதற்கு விதிவிலக்காக சில அமைப்புக்கள், தலைவர்கள் இருப்பதுவும் உண்டு. நான் வாழும் கனடாவில் எனது பகுதி உள்ளுராட்சி பிரதேச உறுப்பினர் ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கிழமைக்கு கிழமை மக்களை அவர்களின் சின்ன சின்ன விடயங்களுக்காக சந்தித்து வருவார். அவர் தொடர்ந்தும் தனது பதவியில் மேலோங்கி பாராளுமன்றம் செல்லாமல் உள்ளுராட்சி சபையிலேயே மட்டும் வேலை செய்து வருகின்றார். இதே பொறுப்பில் இருக்கும் தமிழர் ஒருவர் தனது சொத்து, சுகம், பேர், புகழ் என்று எங்கேயோ? போய்விட்டார் அவரின் கனவு கூட ஒரு எம்பி ஆக வரவேண்டும் என்பதே. சரி இலங்கை விடயத்திறகு வருவோம். தேர்தலின் போது கிராமம் கிராமமாக சென்று வாக்கு கேட்பதும் பின்பு வென்றால் என்ன வெல்லாவிட்டால் என்ன காணாமல் போவதையும் அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். தொடர்சியாக பிரதேசங்கள் தோறும் கட்சிக் கிளைகளை அமைத்து மக்களை முடிந்தவரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்க்க முற்படுவதே ஒரு கட்சியை வளர்த்தெடுக்க உதவும். இலகுவான முறையுமாகும். பதவியில் இல்லாவிட்டாலும் பதவியில் உள்ளவர்களிடம் உரிய முறையில் கதைத்து மக்களின் குறைகளை, தேவைகளை பூர்த்தி செய்ய முயலலாம். இதன் மூலம் தொடர்ந்தும் மக்கள் மனங்களில் இடம் பிடிக்க முடியும். இதில் இன்னொரு விடயமும் உண்டு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போல் தேர்தல் பிரசாரத்துடன் நிற்காமல் கட்சிகளை, அமைப்புக்களை கட்டியெழுப்புதல் என்ற மிகப்பெரிய ஒரு வேலைத் திட்டத்தையும் முடித்து விடலாம். இதில் தமிழ் நாட்டின் திராவிடக் கட்சிகள் எவ்வளவுதான் பிற்போக்கானவையாக இருந்தாலும் தொண்டர்களை(குண்டர்களையும்தான்), கட்சிகிளைகளை உருவாக்குவதில் வென்றால் என்ன தோற்றால் என்ன விண்ணர்கள் தான். நாமும் தொடர்ந்தும் மக்களை சந்திக்கும் பொறிமுறைக்கான ஸ்தாபனத்தைக் கட்டி அமைக்கும் வேலைகளையும் தேர்தல் பிரச்சாரத்துடன் சமாந்தரமாக செய்வோம். மக்கள் தீர்மானிக்கட்டும் யாரை நாம் தேர்வு செய்து எமக்கு சேவை செய்ய அனுப்புவது என்பதை. கடமைகளை செய்வோம் பலனை எதிர்பாராமல். இதனைத் தவறவிடுவோம் ஆகின் மீண்டும் ஒரு தேர்தலில் வெற்றிக்காக யார் பின்னாவது ஓடவேண்டியதுதான். புரியவேண்டிய புரடசியாளர்கள், முற்போக்காளர்கள், ஜனநாயகவாதிகள் புரிந்தால் சரி. உலக சரித்திரத்தில் மக்கள் அணிகளை மாபெரும் அணியாக்கியவர்கள் இதனைத்தான் செய்தார்கள். நாமும் அப்பாடங்களை கற்றுக் கொள்வோம்.

போர் தீர்வல்ல - இந்தியா

சிரியாவிலிருந்து வெளியேறும் மக்கள் எல்லையோரத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை 20 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர். சிரியாவில் ஏற்பட்டுள்ள மோத லுக்கு ராணுவத் தாக்குதல் தீர்வல்ல என்று இந்தியா கூறியுள்ளது. சிரியாவில் அரசுத்தரப்பில் ரசா யன ஆயுதங்கள் பிரயோகிக்கப் பட்டது தொடர்பாக ஐக்கிய நாடு கள் சபை குழுவின்சோதனை முடி வுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் இந்தியா கூறி யுள்ளது. சிரியாவில் மோதலில் ஈடுபட் டுள்ள அனைத்துத்தரப்பும் வன் முறையைக் கைவிட்டு, அரசியல் பேச்சுவார்த்தை உள்ளிட்ட தீர்வை நோக்கி நகர வேண்டும் எனவும் இந்தியா கூறியுள்ளது. (மேலும்.....)

ஆப்கானிஸ்தானில் இந்திய பெண் எழுத்தாளர் சுட்டுக்கொலை

புகழ்பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவை சேர்ந்தவர் சுஷ்மிதா பானர்ஜி(வயது 49),இவர் கடந்த 1989 ம் ஆண்டு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான ஜான்பஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே கணவருடன் வசித்து வந்தார். நேற்று(5.9.13) சுஷ்மிதா பானர்ஜியின் வீட்டுக்கு வந்த தீவிரவாதிகள் சிலர், அவரது கணவர் மற்றும் குடும்பத்திரை கட்டிப்போட்டு விட்டு சுஷ்மிதா பானர்ஜியை மட்டும் வெளியே இழுத்துக் கொண்டு சென்றனர். பின்னர் அவரை சுட்டுக்கொன்று விட்டு அவரது உடலை அருகே உள்ள ஒரு பள்ளிக்கு அருகில் போட்டுவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றும், இது குறித்து விசாரனை நடைபெற்று வருவருதாகவும் பொலிசார் தெரிவித்தனர். (மேலும்.....)

புலிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கு புதிதாக மேல் நீதிமன்றம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்திலேயே இந்த நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸே இந்த நீதிமன்றத்தை திறந்துவைத்தார். மனித உரிமைகளை பாதுகாத்தல் எனும் கொள்கை மற்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச அழுத்தங்களினால் ஏற்படுத்தப்பட்டதொன்றல்ல. கருணை,இரக்கம் மற்றும் பரிவு போன்றவற்றை கவனத்தில் கொண்டே இந்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டதாக மொஹான் பீரிஸ் மேலும் தெரிவித்தார். சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மொஹான் பீரிஸ் அவ்வாறான குற்றங்களை குறைப்பதற்கு பாடசாலைகள்,வீடுகள் மற்றும் சமூகம் பாரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டலுக்கு அமைவாக மக்களுக்கான அரசியலை உரிமையை வென்றெடுக்க முடியும் - ஈ.பி.ஆர்.எல்.எப் (நாபா அணி) செயலாளர்

எமது மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் இழப்புக்களின் நிமித்தம் தான் இன்றுள்ள அமைதிச் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டலுக்கு அமைவாக எமது மக்களுக்கான உரிமை அரசியலை வென்றெடுக்க முடியுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (பத்மநாபா அணி) செயலாளர் சிறீதரன் (சுகு) தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் எள்ளளவு கூட விருப்பமில்லாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். அதன்காரணமாகத்தான் எமது மக்கள் முள்ளிவாய்க்கால் வரையான துன்ப துயரங்களை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது என்பதை எமது மக்கள் நன்கறிந்து கொள்ள வேண்டும்.  நாம் அரசிடம் சலுகை அரசியலை கேட்கவில்லை. எமது மக்களுக்கான உரிமை அரசியலையே கேட்டு நிற்கின்றோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ பசப்பு வார்த்தைகளையும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களையும் கூறி மக்களிடம் வாக்குகளை பெறும் அவர்கள் அபிவிருத்தி, மற்றும் மேம்பாட்டு செயற்திட்டங்களையோ மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களையோ கிடைக்கப் பெறச் செய்வதற்கு ஒருபோதும் விரும்பாதவர்கள். அவ்வாறு செய்வார்களாயின் அவர்களது அரசியல் இல்லாமாற்போய்விடும் என்ற பயம் அவர்களிடம் இருந்து கொண்டேயிருக்கின்றது. ஆனால்,  மக்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும், அபிவிருத்திக்காகவும் நாளாந்தம் உழைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாது அதற்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருப்பவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டினார்.  

செப்ரம்பர் 05, 2013

தோழர் ஞானசக்தி – TBC வானொலியின் அரசியல் கல்ந்துரையாடல்

எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில்  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து  பொதுஜன முன்னணியின் வேட்பாளராக  போட்‌டி இடும் தோழர் ஞானசக்தி ஸ்ரீதரன் நாளை  வியாழக்கிழமை (5 -09–2013)  மாலை எட் டு மணிக்கு TBC வானொலியின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றார். நீங்கள் இந்த நிகழ்ச்சியை www.tbcuk.com இணைய வானொலியில் ஜரோப்பிய  நேரம் 9 மணிக்கும் ஜக்கிய  இராச்சிய நேரம் 8 மணிக்கும் கேட்கலாம். கனடிய நேரப்படி பிற்பகல் 4 மணிதொடக்கம் கேட்கலாம்.

நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்த விரும்பியது ஏன்?  

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று ஐ.நா மனித உரிமைகள் பணியகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா மனிதஉரமை ஆணையத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் கருத்து வெளியிடுகையில், “நவநீதம்பிள்ளை விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து என்ன என்பதை, அவர் தனது அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளார்.  (மேலும்.....)

தமிழினத்தை விற்றுப்பிழைக்கும் மாவைக்கு

அடுத்தவர் மீது குற்றம் சுமத்த தகுதி உண்டா?....

தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இலங்கைத் தமிரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் செயலாளர் நாயகமான மாவை சேனாதிராசா எம்.பி. ‘தமிழ்  இனத்தை விற்றுப் பிழைக்கின்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா’ என்று கூறியிருக்கின்றார். தம் முதுகில் இருக்கும் புண்ணைப் பார்க்காமல் பிறர் மீது குற்றம் சுமத்தும் மாவையை நோக்கும் போது பெரும் பரிதாபமாக இருக்கின்றது. கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழினத்தின் அரசியலையே வியாபாராமாக்கி அதில் மட்டுமே - வாழ்க்கைப் பிழைப்பை நடத்திவரும் மாவை சேனாதிராசா தலைவர் டக்ளஸ் தேவானந்தாவைக் குற்றம் சுமத்துவது மிகவும் வேடிக்கையான விடயமாகும். (மேலும்.....)

பொதுநலவாய மாநாட்டில் கெமரூன் பங்கேற்பார்

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பினை பிரித்தானிய வெளிவகார அமைச்சர் மேற்கொண்டார். அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக்கும்  கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வினவப்பட்ட கேள்வி பதிலளிக்கையிலேயே வெளிவிவகார செயலாளர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிரியா மீதான அமெ. நிலைப்பாட்டுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் அதனது நட்பு நாடுகளின் சிரியா மீதான நடவடிக்கை ஒரு பக்கச்சார்பானதாகவே எடுத்துக் கொள்ள முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விபரித்துள்ளார். அத்துடன் ஐ.நா.வின் அனுமதியின்றி இராணுவ தாக்குதலை ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருத முடியும் என்றும் அவர் எச்சரித்தார். சிரியாவில் இடம்பெற்ற இராசாயன தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த இரசாயன தாக்குதலை சிரிய அரசு தான் நடத்தியது என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்பட்டால் அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானத்தை ரஷ்யா ஆதரவளிப்பதை நிராகரிக்காது என புடின் வலியுறுத்தினார். (மேலும்.....)

நன்மை தருமா நவி பிள்ளை வருகை?

(டி.அருள் எழிலன்)

ழ இனப் படுகொலைப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு வந்திருக்கிறார் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை. நவி பிள்ளையின் வருகை முடிவானதுமே, இறுதிப் போர் நடந்த பகுதிகளைக் கழுவித் துடைத்து எஞ்சிய தடயங்களையும் அழித்து அலங்கரித்தது இலங்கை ராணுவம். மக்கள் வாழ்விடங்களை ஆக்ரமித்து நின்ற ராணுவத்தினர், மிகத் தற்காலிகமாக முகாம்களுக்குள் போனார்கள். ஏராளமான ராணுவத்தினர் மஃப்டி உடைகளில் நவி பிள்ளை வருவதற்கு முன்பும், வந்து சென்ற பின்னரும் மக்களை மிரட்டினார்கள். நவி பிள்ளையை, 'புலிப் பிள்ளை’ என்றும், 'பிரபாகரனின் சகோதரி’ என்றும் சிங்கள ஊடகங்கள் சில எழுதின. இன்னொரு பக்கம், இலங்கையின் 'ரவுடி’ அமைச்சர் மேர்வின் சில்வா, 'சிங்கள விஜயன், வேட்டுவப்பெண்ணான குவேனியைத் திருமணம் செய்துகொண்டது போல, நான் நவநீதம் பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்று சொன்னது வக்கிரத்தின் உச்சம். இதெல்லாம் நவி பிள்ளையை மனரீதியாகச் சோர்வுறச் செய்யும் சிங்களவர்களின் அரசியல். (மேலும்.....)

செப்ரம்பர் 04, 2013

என் மனவலையிலிருந்து…….

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஆயுதங்களை கையளியுங்கள்.....?

(சாகரன்)

ஒருவர் சிவி. விக்னேஸ்வரன் கூறுகின்றார், 'மூன்றாம் கட்டப்போர் ஆரம்பம் ' என்று. இன்னொருவர் அதுதான் விக்னேஸ்வரனால் வாழ்வு கிடைக்கப்பெற்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார். 'எம்மிடம் ஆயுதம் இருந்திருந்தால் சமஷ்டிக்கு அப்பால் சென்றிருக்கலாம் ' என்று. வடக்கு வாக்காளர் பெருமக்களே இரண்டு போர் வீரர்களிடமும் எங்கையாவது இன்றுவரை மறைத்து புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் இருந்தால் அந்த புதைகுழிகளை தயவு செய்து இவர்களிடம் காட்டுங்கள். நாளை நிச்சயம் தமிழ் ஈழம் கிடைக்கச் செய்வார்கள். அதன் பின்பு சீமானுக்கு மட்டும் தெரிந்த இடத்தில் ஒளித்திருக்கும் பிரபாகரனை கொண்டு வந்து இவர்கள் முடிசூட்ட வசதியாக இருக்கும். பிறகென்ன பிரபாகரன் 'என்னைக் கொலை செய்ய இருந்தார்' என்று அறிக்கை விட்ட சம்மந்தர் குளோஸ். பிறகு முடி சூடப்போவது சுரேஸ் பிரேமச்சந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ தானே. விக்னேஸ்வரன் தனது வாரிசுகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க அவர்களின் வாழ்கைத் துணைகள் அனுமதிக்க போவதில்லை. அப்ப அடிக்கப் போகுது குருசந்திரயோகம் சுரேஷ் பிரேமசந்திரனிற்குத்தான். ஏற்கனவே இதற்காக தனது தம்பியையும், நண்பனையும் களத்தில் இறக்கி சிவசக்தி ஆனந்தனிடம் வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டிய சுரேஸ் இற்கு எல்லாம் சுபம்தான். என்ன அப்புலிமாமாவில் வரும் விக்கிராமித்தன் கதைபோல் இருக்கின்றதா. பின்ன என்ன சொல்ல வட மாகாண சபைத் தேர்தல் வெடிகளில் இந்த இரண்டு வெடிகளுமே தற்போது பெரிய மத்தாப்பு வெடிகள். 1ம் கட்டப்போர், 2ம் கட்டப்போர் என் நான் அறிய 4ம் கட்டப்போர் என பிரபாகரன் அறிவித்தல்கள் விட்டு தன்னால் பிடிக்கப்பட்ட சிறார்களை யுத்தத்தின் முன்னணியல் அனுப்பி பலியிட்ட போதெல்லாம் கொழும்பு 7 இல்; கூதல் காய்ந்த விக்னேஸ்வரன் இன்று 3ம் கட்டப் போர்ப் பிரகடனம் செய்கின்றார். இதே வேளை இதே கொழும்பு 7 இலும், இந்தியாவிலும் இடைக்கிடை தமிழ் செல்வன் முன்னிலையில் கைகட்டியும் நின்ற சுரேஸ் ஆயுதம் இருந்திருந்தால் என்றும் சவால் விட்டால் வேறு என்னத்தை நாம் சொல்ல முடியும். சுரேஷ் ஆயுத அறிக்கையை வாசிக்கும் போது எனக்கு ஞாபகம் வருவது 'கூரை ஏறி கோழி பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்' என்ற பழமொழிதான் ஞாபகம் வருகின்றது. இவரின் கைகளில் ஆயுதம் இருந்தபோது பிரபாகரனை குறிபார்த்த ஆயுதம் பின்பு இவரின் தலவரை பலிகொடுத்தவிட்டு தான் அந்தப் பதவியை எடுத்ததும் தனது தோழர்களை மட்டுமே குறிபார்த்தது. அப்போ எப்படி ஐயா சமஷ்டி கிடைத்திருக்கும். சரேஷ் இன் குறி பொது எதிரியை விடுத்து சகோதர யுத்தத்தை அல்லவா ஏற்படுத்தியிருந்தது. இதற்கு சாட்சிகள் பல இருந்தாலும் சுபத்திரனின் மரணம் சாட்சியங்களுடன் இன்றும் பறைசாற்றி நிற்கும் விடயம் அல்லவா. மனச்சாட்சி என்று இருந்தால் செய்த பாவங்களுக்காக உன் சகபாடி குணசேகரனையும் கூட்டிக்கொண்டு அவர்பாணியில் (கள்ளச்)சாமியாராக மாறி மக்களைவிட்டு ஒதுங்கி நிற்பதே நலம். அன்றேல் கிட்லருக்கான தண்டனையை மக்கள் மன்றங்கள் இன்று வழங்கி நிற்பதுபோல் வரலாறு என்றோ ஒரு நாள் உங்களைத் தண்டித்தே நிற்கும். வரலாறு எப்போதும் பின்னோக்கி நகருவதில்லை எப்பவோ எங்கேயோ ஒரு புத்தகத்தில் வாசித்த ஞாபகம் இருக்குமே.....?

கூட்டமைப்பு விஞ்ஞாபனத்தில் சதி

தமிழத் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெட்கத்திற்குரியதும், கண்டனத்திற்குரியதுமாகும். பொறுப்பற்ற விதத்தில் மக்களிடம் அதிகாரத்தை மட்டும் கோருகிற உப்புச்சப்பற்ற தேர்தல் விஞ்ஞாபனமாகும். ஒவ்வொரு கடமைகளையும், பணிகளையும் வேறு யாரிடமோ பொறுப்பு வைக்கும் சுயநலப்போக்குடையதாக காணப்படுகிறது' என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

பிள்ளையை தம் பக்கம் வளைத்தெடுக்க அரசாங்கமும் தமிழ் தரப்பினரும் கடும் போட்டி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இலங்கை அரசாங்கம் இறுதிப் போரில் கொல்லப்பட்டோர் விடயத்தில் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. எனவே தான் இவ் வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கை விடயத்தில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருந்தார். இறுதிப் போரின் போது கொல்லப்பட்டோர் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அவ் அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்தப் பின்னணியில் தான் ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவரது இந்த விஜயத்தின் போது அவர் திரட்டிக்கொண்ட தகவல்கள் சர்வதேச விசாரணை தொடர்பான அவரது நிலைப்பாட்டை பலப்படுத்தியிருக்குமா அல்லது தளர்த்தியிருக்குமா என்பதே இப்போது எழும் கேள்வியாகும். அவரது நிலைப்பாட்டை பலப்படுத்த தமிழ் தரப்பினர் செயற்பட்டதையும் அதனை தளர்த்தும் வகையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்ததையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. (மேலும்.....)

அரசியலுக்காக வீர வசனங்கள் உணர்ச்சி வார்த்தைகள்

தமிழர்களை இன்னுமொரு பேரழிவுக்குள் தள்ளிவிட கூட்டமைப்பு முயல்கிறது

அரசியலுக்காக வீர வசனங்களை, யதார்த்தமற்ற விடயங்களை பேசுவதன் மூலம் தமிழ் மக்களை இன்னுமொரு பேரழிவுக்குள் தள்ளிவிடவா தமிழ் அரசியல் வாதிகள் முயற்சிக்கின்றனர் என கேள்வி எழுப்ப வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதி இணைப்பாளர் ஆர். சிவராஜா. மூன்று தசாப்த போரால் பாதிக்கப் பட்ட இரு சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ முயன்று கொண்டிருக்கும் போது சந்தேகப்பார்வை தமிழர்கள் மீது விழும் வகையில் தமிழ் அரசியல் வாதிகள் பேசுவது நாகரீகமானதல்ல. அது எமது மக்களுக்கு மேலும் துன்பங்களையே தரப்போகி ன்றது. தமிழர்களிடம் ஆயுதம் இருந்தால் சமஷ்டிக்கும் அப்பால் செல்லலாம் என தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கின்றார். மறுபுறம் அமிர்தலிங்கம், யோகேஸ் வரன், நீலன் திருச்செல்வம் போன்றோரை பரலோகம் போக்கியதன் பாதிப்பை இப்போதுதான் உணருகின்றோம் என கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். இப்படியாக தமிழ் மக்களைக் குழப்பி அவர்களின் வாக்குகளை பெறுவதற்கு முயலாமல் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து இவர்கள் செயற்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உளவு பார்த்த அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கிறது பிரேஸில், மெக்சிகோ

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (என். எஸ். ஏ.) தமது நாட்டு ஜனாதிபதியை உளவு பார்த்தது தொடர்பில் பிரேஸில் மற்றும் மெக்சிகோ விளக்கம் கேட்டுள்ளது. பிரேஸில் ஜனாதிபதி டில்மா ருசொப் மற்றும் மெக்சிகோ ஜனாதிபதி பெனா நிடோவினின் இணைய தரவுகளை இடைமறித்து என். எஸ். ஏ. உளவு பார்த்ததாக ஊடகவியலாளரான கிளென் கிரீன்வெல்ட், பிரேஸிலின் கிளோபோ தொலைக்காட்சிக்கு கூறியிருந்தார். அமெ ரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோடனிடம் இருக்கும் ரகசிய ஆவணம் மூலம் இந்த தகவல் பெறப்பட்டதாக கிரீன்வெல்ட் குறிப்பிட்டார். அமெரிக்காவின் இந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாத இறையாண்மையை மீறுவதாக உள்ளதென பிரேஸில் குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு பிரேஸில் மற்றும் மெக்சிகோ அரசுகள் அந்நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

நொக்கியாவை வாங்குகிறது மைக்ரோசொப்ட்

கையடக்க தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான நொக்கியாவை மைக்ரோசொப்ட் நிறுவனம் 7.2 பில்லியன் டொலருக்கு விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசி விற்பனையில் முதலிடத்தில் இருந்த நொக்கியாவை, ஆப்பிள் மற்றும் சம்சுங் போன்ற ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர் நிறுவனங்கள் பின்தள்ளிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ரொய்ட் கையடக்க தொலைபேசிகளை சமாளிக்க 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வின்டோ போன் மென்பொருளை நொக்கியா கையடக்க தொலைபேசிகள் இயக்கியது. ஆனால் இது பெரியளவில் விற்பனையை அதிகரிக்க இன்னமும் சாத்தியப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பரிமாற்றம் 2014 முதல் காலாண்டில் நிறைவடையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 32,000 நொக்கியா பணியாளர்களும் அடுத்த ஆண்டில் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.

பூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நடைபெற்றது என்ன?

திருமதி தேவராசா புனிதாரணியின் வயது 47. இவர் மூன்று பெண் பிள் ளைகளின் தயாராவார். பூநகரி பிரதேசத் தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமமான நோதார்முனி என்ற இடத்தைச் சேர்ந்த வர். இந்தப் பெண்ணின் முதல் கணவன், மனைவியையும் பிள்ளைகளையும் கைவிட்டு இரண்டாம் தடவை இன்னு மொரு பெண்ணை மணம் முடித்தான். இந்தப் பெண்ணின் இரண்டாவது கணவன் ஏதோ ஒரு குற்றம் செய்ததனால் சிறைவாசம் பெற்றுள்ளான். இப்போது இந்தக் குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு இந்தப் பெண் மீது விழுந்துள்ளது. இத்தகைய பின் னணியில் இவர் பனைமர இலைகளில் இருந்து கம்பளங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு ஒவ்வொரு கம்பளத்திற்கும் 250ரூபாவை வருமானமாக சம்பாதிக்கிறார். தற்போது இந்தப் பெண் வாழ்க்கையில் எதிர்நோக்கும் சவால்களை மிகவும் கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டிருக் கிறார். இந்தப் பெண்ணைப் பார்க்கும் எவரும் உண்மையிலேயே வேதனைப்படு வார்கள். (மேலும்.....)

இலங்கையை கண்டிக்கிறோம்

மார்க்சிஸ்ட் கம்யூ. தீர்மானம்!

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக நடந்து கொள்ளும் இலங்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசு 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இனப்பிரச்னைக்கு தீர்வு காண எவ்வித முயற்சியையும் மேற்கொள்ள மறுத்து வருகிறது. அரசியல் தீர்வை முன்வைப்பதற்குப் பதிலாக அதை மறுக்கும் வகையில் 13வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தின் கமிஷனர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாண்டு மார்ச்சில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக இலங்கை அரசாங்கம் நடந்து கொள்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்தப்போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானத்தை அமலாக்கிட இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

செப்ரம்பர் 03, 2013

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு சி.வி. விக்னேஸ்வரன்

வடக்கை இராணுவ பிரசன்னமற்றதாக மாற்றுவோம், விஞ்ஞாபனத்தை வெளியிட்டு சி.வி.விக்னேஸ்வரன் உரை

வடமாகாண சபைத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்ததும் வடக்கை இராணுவ பிரசன்னமற்றதாக மாற்றுவோம் அதாவது, 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு கொண்டுசெல்வோம் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் வைத்து இன்று செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி 2013 முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது.(மேலும்.....)

Rebels Admit Responsibility for Chemical Weapons Attack

Militants tell AP reporter they mishandled Saudi-supplied chemical weapons, causing accident

Paul Joseph Watson
Infowars.com
August 30, 2013

Syrian rebels in the Damascus suburb of Ghouta have admitted to Associated Press correspondent Dale Gavlak that they were responsible for last week’s chemical weapons incident which western powers have blamed on Bashar Al-Assad’s forces, revealing that the casualties were the result of an accident caused by rebels mishandling chemical weapons provided to them by Saudi Arabia. (more.....)

ஆவரங்கால் இல்

திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்களின் தேர்தல் பிரச்சாரம்

கடந்த காலங்களில் மக்களை உணர்ச்சியூட்டி நடைமுறைக்கு சாத்தியமில்லாததைக் கூறி அடிப்படைப்பிரச்சனைகளை உணர, அறிவு ரீதியாக சிந்திக்க முடியாதவர்கள் ஆக்கி, மன அழுத்தநிலைக்கு தள்ளப்பட்டு தமது சொந்த நலன்களுக்காக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று வருபவர்கள் யாராவது உள்ளுரில் உங்கள் இன்பதுன்பங்களில் நின்றிருக்கிறார்களா? அவர்கள் வெற்றுக் கோசங்களை முழங்கி வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருபவர்கள். இழப்பதற்கு எதுவுமில்லாத உங்களிடம் தமது சாதுரியமான பேச்சுக்களாலும், தந்திரமான செயற்பாடுகளாலும் தங்களை நிலை நிறுத்த உங்கள் உழைப்புக்கள் அனைத்தையும் மூலதனம் ஆக்குகிறார்கள் . கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புக்கள் போராளிகள் மக்களின் இழப்புக்கள்  அகதிவாழ்க்கைக்கும் உடந்தையாகச் செயற்பட்டவர்கள். நீங்கள் அறிவு சார்ந்து உங்கள் வாழ்நிலையை மேம்படுத்த சிந்தித்துரு செயற்பட வேண்டும்.  (மேலும்.....)

Bishop of Batticaloa Rt Rev Dr Ponnaiah Joseph

தீவுப் பகுதியில்

திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்களின் தேர்தல் பிரச்சாரம்

29-08-2013  வேலணை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பத்மநாபா ஈபிஆர்எல்எப் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானசக்தி ஸ்ரீதரன் 1970 களிலிருந்து தொடங்கிய தனது அரசியல் வாழ்க்கையில் அகிம்சைவழியில் போராடியதை குறிப்பிட்டார். 25வருட போராட்டக் காலத்தில் பெண்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அது உயிர் உடைமைகள் இழப்பு என வார்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு இருந்திருக்கின்றன. (மேலும்.....)

சுன்னாகம் மைலணியில்

திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்களின் தேர்தல் பிரச்சாரம்

சுன்னாகம் மைலணி ஆலய முன்றலில் 27-08-2013 மு.ப 11.00 மணியளவில் இடம் பெற்ற பெண்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வேட்பாளர் சுந்தரம் டிவகலாலா அரசியல் உரிமைகளை பெற வேண்டுமாக இருந்தால் நாம் அறிவுபூர்வமாக செயற்பட வேண்டும்  தமிழ் அரசியல் தலைமைகளால் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணத்தை தமிழ் மக்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். எமக்கு கிடைத்தவைகள் என்னவென்று பார்த்தால் விதவைகள் 40,000 பெற்றோரை இழந்த பிள்ளைகள் 10,000 இற்கு அதிகமானோர். விடுதலைப் போராளிகளில் இறந்தவர்கள் மாத்திரம் 10,000 இற்கு மேற்பட்டோர். இதுதவிர ஏனைய இயக்க போராளிகள் 10,000 இற்கு அதிகமானோர். இவைகளே எமது சமூகத்தினருக்கு கிடைத்தவை. மாற்று வழிமுறைகளை தெரிவு செய்ய வேண்டும் தொடர்ச்சியாக உணர்ச்சியூட்டும் அரசியலை நம்பி கடந்த 30 வருடங்களுக்கு மேல் எமக்கான அபிவிருத்திகளை, தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்காமல் இணக்கப்பாட்டுடன் கலந்து பேசி பெறக்கூடிய சின்ன சின்ன விடயங்களையாவது பெற்றுக்கொள்ள முயல வேண்டும் என்றார்.(மேலும்.....)

வரும் ஆனால் வராது…..

என்கின்ற நிலமையில் இருந்த கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வருகிறதாம்!

கடந்த ஆகஸ்ட் 4ம் திகதி சண்டே  டைம்ஸ் க்கு இன்னும் இரண்டு வாராங்களில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளி வரும் என தலைவர் சம்பந்தன் கூறியிருந்தார். இங்கு கவனிக்க பட வேண்டிய விடயம் சம்பந்தன் போன்ற பொறுப்புள்ள தலைவர்கள் ஊடகங்களில் விடயங்களை  எழுந்தமானமாக கூறிவிட்டு அது நடக்காவிட்டாலும் எதுவுமே பேசாமல் இருந்துவிடுவார்கள். எல்லா விடயங்களிலும் இப்டித்தான் நடந்து கொள்கிறார்கள். உயர் நீதிபதி போன்றவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதன் பின்பு பலரும் விஞ்ஞாபனம் வரும் ஆனால் வராது என்றமாதிரிச் சொல்லி காலத்தை கடத்தினர். தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் நாளை விஞ்ஞாபனம் வெளிவரும் என்ற பின்வரும் செய்தியை அவர்கள் சார்பு இணையம் ஒன்று வெளியிட்‌டுள்ளது. (மேலும்.....)

திருமதி ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்களின் தேர்தல் கலந்துரையாடல்கள்

22-08-13இணுவில் மாதர்சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் சிலருடன் ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்கள் சந்திப்பொன்றை நிகழ்த்தினார். அவர்கள் பல்வேறு போராட்ட அனுபவங்களையும் துன்பங்களையும் அடைந்தவர்கள் தாம் எப்போதும் முற்போக்கு சத்திகளையே ஆதரித்து வந்ததாகவும்  ஆனால் தங்களுக்கு பெரிதாக உதவிகள் எதுவும் கிட்டவிலலை என்றும் தெரிவித்தனர் அரசியல் வாதிகள் எப்போதும் தேர்தல் காலத்திலேயே தங்களை அனுகுவதாகவும் மற்றும் படி காணக்கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர். தமக்கு என பொதுவான ஒரு கட்டிடம் இல்லை என்றும் பெருமளவிற்கு வறிய விவசாயிகளாக இருப்பதால் தங்களுக்கு வாழ்வாதார- தொழில் செய்வதற்கு உதவி தேவை என்றும் தொடர்ந்து தங்களுடன் உறவைப்பேணவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். (மேலும்.....)

நரி வாலினால் கடலை வற்றச்செய்யும் முயற்சி

அரசாங்கத்தையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்தையும் சீர்குலைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மாத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசின் பங்காளி என்றவகையில் அந்த பொறுப்பிலிருந்து தான் விலகபோவதில்லை என்றும் அவ்வாறான முயற்சியை யாராவது எடுப்பார்களாயின் உரிய நேரத்தில் பாடம் கற்பிப்பதற்கு தன்னுடைய கட்சிக்கு முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசிற்கும் எங்களுடைய கட்சிக்கும் இடையிலான உறவை புரிந்துகொள்ளாத சில அமைச்சர்கள் தன்னுடைய கட்சியை அரசாங்கத்திலிருந்து தூக்கிவீசுவதற்கு முயற்சித்தாலும் அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது சரியாக 'நரி வாலினால் கடலை வற்றச்செய்யும் முயற்சியாகும்' எங்களுடைய அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பாதுகாப்பது எங்களுடைய பொறுப்பாகும் என்றார்.

10 விதவைகள் வடக்கு தேர்தலில் போட்டி

இம்மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 'விதவைகள் முன்னணி' என்ற சுயேட்சைக் குழுவில் 19 வேட்பாளர்கள் அடங்குவதுடன் அவர்களில் 10பேர் விதவைகளாவர். தம்பிப்பிள்ளை இருதயராணி என்பவரே இந்த சுயேட்சைக் குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். தனது கட்சி தொடர்பில் அவர் கூறியதாவது, "பெண்கள் என்ற ரீதியில், வட மாகாணசபை அதிகாரத்தைக் கோருவதற்கு தீர்மானித்தோம். விசேடமாக, விதவைகள், அவர்களின் குழந்தைகளுக்காக பாடுபடுவோம். இன்று அரசியல் செய்யும் கட்சிகள் பெண்களுக்காக குரல் எழுப்புவதில்லை. இப்போதைக்கே எமது குழுவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாங்கள் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அரசியலுக்கு வந்துள்ளோமாம். எதிர்க்கட்சியிடமிருந்தும் பணம் பெற்றதாக பொய்ப் பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது எவ்வாறாயினும், பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த சவாலை வெற்றிகொள்வோம்' என்றார். இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கென முன்வந்துள்ள கட்சிகள் எவையும் பெண்களுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்பது தொடர்பில் இதுவரையில் வேலைத்திட்டமொன்றை முன்வைக்கவில்லை' என்று விதவைகள் முன்னணியின் தலைவி தம்பிப்பிள்ளை இருதயராணி மேலும் தெரிவித்தார்.

ஐ.ம.சு.மு.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் அவருடன் பகிரங்க விவாதத்திற்கு நான் தயார் - விக்கினேஸ்வரன்

வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட் பாளர் யார் என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்தால் அவருடன் பகிரங்க விவாதம் நடத்த நான் தயாராகவுள்ளேன். ஆனால், அவ்வாறான ஒரு அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் உங்களுடன் விவாதம் நடத்தும் கோரிக்கையை நான் நிராகரிக்கின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் யாழ். மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சி.தவராசாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே விக்கினேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். பகிரங்க பொது விவாதத்திற்கு வருமாறு தவராசா விக்கினேஸ்வரனுக்கு சில தினங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நேற்று விக்கினேஸ்வரன் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். (மேலும்.....)

இராணுவ நடவடிக்கையை தடுக்குமாறு சிரிய அரசு ஐ.நாவிடம் வலியுறுத்து

சிரியா மீதான யுத்த செயற்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சிரிய அரசு ஐ. நா. சபையை கேட்டுள்ளது. ஆனால் சிரிய அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரபு லீக், சர்வதேச சமூகத்தையும் ஐ. நா. சபையையும் வலியுறுத்தியுள்ளது. சிரியாவில் நூற்றுக்கணக்கானோரை பலிகொண்ட இரசாயன ஆயுத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றன. சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு, இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ. நா. சபையை கேட்டுள்ளது. “சிரியாவுக்கு எதிரான எந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் தடுக்கும் பொறுப்பு ஐ. நா. செயலாளர் நாயகத்திற்கு இருக்கிறது என்ற பொறுப்பை சிரிய அரசு வலியுறுத்துகிறது” என சிரிய அரச ஊடகம் கூறியுள்ளது. (மேலும்.....)


செப்ரம்பர் 02, 2013

சிரியாவில் போர் வேண்டாம்! உண்ணாவிரதம் இருக்க போப்பாண்டவர் அழைப்பு

சிரியாவில் போரினை தடுப்பதற்காக வருகிற 7ம் திகதி உண்ணாவிரதம் இருக்க போப்பாண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று நடந்த பிரார்த்தனைக்குப் பின்னர் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், செப்டம்பர் 7ம் திகதி புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு வரை உண்ணாவிரதம் நடைபெறும். அனைவரும் ஒருங்கிணைவோம், கடவுள் கொடுத்த அமைதி என்ற மாபெரும் பொக்கிஷம் சிதைந்து போகாமலும், சிரிய மக்கள் அன்புடனும், அமைதியுடனும் வாழ வேண்டும் என்று வேண்டியும், உலகம் முழுவதும் மீண்டும் போர் வெடிக்காமலும், வன்முறை ஒழியவும் வேண்டி இந்த உண்ணாவிரதம் மற்றும் அமைதிப் பிரார்த்தனை நடைபெறும். இந்த அமைதி வழி உண்ணாவிரதத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்கள் அலலாதவர்களும் பங்கு பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களுக்குப் பொருத்தமான முறையில் வழியில் அதை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மீண்டும் போர் நமக்கு வேண்டாம், நமக்குத் தேவை அமைதியான உலகம்தான் என்று தெரிவித்துள்ளார்.
‘Never again war!’ Pope Francis calls for day of fasting Sept. 7
Pope Francis called for a day of fasting and prayer for peace in Syria, the Middle East and throughout the world before his Angelus prayer at St. Peter’s Square today.
On Sept. 7 “here [in St Peter’s Square], from 7 p.m. until midnight, we will gather together in prayer, in a spirit of penitence, to ask from God this great gift [of peace] for the beloved Syrian nation and for all the situations of conflict and violence in the world,” the Holy Father said. Pope Francis invited non-Catholic Christians and non-Christian believers to participate in ways they feel are appropriate. “Never again war!” said Pope Francis. “We want a peaceful world,” he said, “we want to be men and women of peace.”

என் மனவலையிலிருந்து.......

வந்தார்! சென்றார்!! நவநீதம்பிள்ளை

(சாகரன்)

வந்தார், சென்றார் நவநீதம்பிள்ளை. வர முன்பே அமெரிக்காவின் கைப்பிள்ளை ஐ.நாவிற்கும், இலங்கை அரசுக்கும் இடையில் அமெரிக்க ஊடான மறைமுக புரிந்துணர்வுகள் ஏற்படுதப்பட்டன. இல்லாவிட்டால் நவநீதம்பிள்ளை இவ்வளவு சௌகரியமாக இலங்கையிற்கு வந்து சென்றிருக்கமாட்டார். தோராயமாக ஒரு வருடத்திற்கு முன்பு இலங்கையிற்கு வந்து சென்ற அமெரிக்க வியாபாரக் குழுவிற்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வும், யாழ்பாணத்தில் அமெரிக்க உத்தியோகஸ்தர்களின் நிரந்தர பிரசன்னமும் அமெரிக்கா தனது இலங்கை அரசுக்கு எதிரான போர்குற்ற மனித உரிமை மீறல்கள் என்பதை சுருதி குறைத்து பேசிவருவது நன்கு ஆழ்ந்து கவனிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இலங்கை அரசுக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுதான் அமெரிக்காவின் இலங்கை அரசு மீதான பெரிய விருப்பம் இன்மைக்கு காரணம் ஆகும். மாறாக இலங்கை அரசின் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வோ அல்ல. இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற போர்க்குற்ற மீறல்களோ அல்ல. இதற்கு காரணம் புலிகளை வளர்பதிலும், இலங்கை அரசுக்கு ஆயுதம், ஆலோசனை வழங்குவதிலும் அமெரிக்காவும் அதன் கூட்டமைப்பு நாடுகளும் சமகாலத்தில் கூடக்குறைய ஈடுபட்டது உண்மைதான். எனவே போர்க்குற்ற விசாரணை என்று வந்தால் தன் தலையிலேயே தானே மண்ணை வாரிப் அமெரிக்கா போடவேண்டியும் ஏற்படலாம். இங்கு அமெரிக்காவின் பங்கு நிரூபிக்கப்பட்டால் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது என்பது அமெரிக்க ஏதேச்சேகாரத்தின் உலக நியதி என்றாகிவிட்டது என்பது வேறு விடயம். இலங்கையின் வளங்களை அல்லது பிராந்தியத்தை பங்கு போடுவதில் உள்ள இழுபறிதான் போர்க்குற்ற விசாரணை அல்லது சிறுபான்மை மக்களுக்கான உரிமை வழங்கவேண்டும் போன்ற கூக்குரல்கள். இதில் இவர்கள் இலங்கை மக்களின் சமாதான, சம, சக வாழ்விற்காக குரல் கொடுப்பதாக காட்டிக்கொள்வதெல்லாம் தமக்குத்தாமே போட்டுக்கொண்ட வசதியான முகமூடிகள். இதில் ஐ. நாவின் நவநீதம்பிள்ளையும் ஒரு பகடைக்காய். இவரும் இதனைப் புரிந்து ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே செயற்பட முடியும். அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்காக சேவை செய்வதே ஐநாவின் செயற்பாடுகள் என்பது ஈராக் போரின் போது மற்றய எப்போதையும் விட நிரூபணம் ஆகியுள்ள நிலமையில் இன்று அதற்கு புதிய ஆதாரங்கள், வியாக்கியானங்கள் தேடுவது தேவையற்ற விடயம். இதில் நாற்காலிக் கதிரைக் கனவில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நவநீதம்பிள்ளையுடனான மூக்கால் அழும் செயற்பாடுகளும், இலங்கை அரசின் இரணுவ காவல் அரண் அகற்றலும், ஓமந்தைச்சாவடி சோதனை நிறுத்தமும், கிளிநொச்சி வரையிலான புகையிரத சேவையும் வெறும் கண்துடைப்புக்களே. இவ்வாறான கண்துடைப்பிறகுள் தவிர்க்க முடியாமல் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மேலும் சுதந்திரமாக ஓமந்தை கடவையைக் கடத்தலும், கிளிநொச்சி புகையிரதப் பயணமும் மகிழ்ச்சிகளுக்குரியவையே. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்போகும் தேர்தல் பெரும்பான்மை? மக்களுக்கான அவர்களின் செயற்பாடுடைய சேவைகள் இருக்கும் மட்டத்திலேனும் வழங்க உதவுமா? என்பது கேள்விக் குறியே. தமிழ் பேசும் மக்கள் நம்பும் மாற்றுத் தலைமை ஏற்படாதவிடத்து விடிய எழும்பி வீட்டுக்கு நேரே புள்ளடி போடுவதை தவிர சாமான்ய பொது மக்கள் என்னசெய்துவிடப் போகின்றார்கள். தெற்கில் எவ்வாறு பலமா மாற்றுக்கட்சி மகிந்த கூட்டமைப்பிற்கு இல்லையோ அதேபோல் வடக்கு கிழக்கிலும் சம்மந்தன் கூட்டமைப்பிற்கும் இல்லை என்பது இலங்கை ஜனநாயகத்திற்கு கிடைத்திருக்கும் சாவுமணி. இதனை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அம்பலம்! அம்பலம்!!

சுரேஷ் பிரேமச்சந்திரனின் கோழிப்பண்ணை பிறாடு அம்பலம்!!!

அம்பலப்படுத்துகிறார் ஜேர்மனி இ. ஸ்ரீகுமரன்....!

யாழ்ப்பாணம் வேலணையில் வசிக்கும் திரு பாலசந்திரன் என்ற இடுப்புக்குகீழ் இயங்கமுடியாத உறவுக்கு வாழ்வாதாரமாக கோழிப்பண்ணை அமைத்துகொடுப்பதாக கூறி பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் வானொலி புலம்பெயர் மக்களிடம் சேகரித்த ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த விடயம் அண்மையில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட வானொலி நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர்கள் வழக்கம் போல் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறிய கருத்துக்களை உங்களுக்கு அறியதர வேண்டும் என்பதற்காக நான் இலங்கைக்கு நேரடியாக சென்று தகவல்களை சேகரித்துள்ளேன். இங்கு நான் கண்ட காட்சிகள் என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த 2012/12/08 ஆம் திகதி ரி.ஆர்.ரி வானெலியின் நிகழ்ச்சியில் தெரிவித்த விடயம் யாதெனில், வேலனை பாலச்சந்திரன் என்ற உறவுக்கு வாழ்வாதாரமாக கோழிப்பண்ணை ஒன்றை அமைத்து கொடுத்துள்ளதாகவும் அக்காரியத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப் அணி) சுரேஸ் பிரேமச்சந்திரனின் மேற்பார்வையில் அவரது உதவியாளர் செய்து முடித்துவிட்டதாகவும் அதனால் பாலச்சந்திரன் என்ற உறவும், அவரது குடும்பத்தினரும் வாழ்க்கையை வளமாக கொண்டு செல்வதாகவும் கூறினார்கள். ஆனால் அங்கு நிலைமை தலை கீழாகவுள்ளது. (மேலும்.....)

நேபாள மாவோயிஸ்ட்-புலிகளிடையே தொடர்பு

நேபாளிலுள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாக அத்தீவிரவாத இயக்கத்தின் தலைவரர் புஷ்ப கமல் அறிவித்துள்ளார். நேபாளில் கடந்த ஒரு தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஒத்துழைப்பை வழங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காத்மண்டுவில் நடைபெற்ற பயிற்சி வேலைத்திட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இயக்கத்தின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியதாக, மேற்படி தீவிரவாத இயக்கம் ஒத்துக்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இவ்வியக்கத்தின் தலைவர், கடந்த 2008ஆம் ஆண்டில் நேபாளின் பிரதமர் பதவியை வகித்தவராவார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது ஒரு சுதந்திரமான இயக்கம் என்று அவ்வியக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் நேபாளின் மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத் தலைவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று 'ஹிமாலயன் ரைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் அரசியலை ஒடுக்கப்பட்ட மக்கள் பகிஸ்கரிக்க முடியாது

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்பது, பாட்டாளி வர்க்க நலனில் இருந்து நோக்கப்படுகின்றது. இந்த வகையில் தேர்தல் அரசியலை பகிஸ்கரிக்காது அதில் பங்குகொள்ளும் நாம், எதிர் நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். அதாவது தேர்தலில் பங்குகொள்வதையும் பங்கெடுப்பதையும் பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், தேர்தல் அரசியலில் பங்குகொள்ளுமாறு கோருகிறோம். இதன் மூலம் இனவாதத்தையும், ஏகாதிபத்திய நலனையும் முன்னிறுத்தி, மக்களை இனரீதியாக பிளந்து ஒடுக்கும் ஜனநாயக விரோத தேர்தலில் பங்குகொள்ளாது பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், இந்த தேர்தலில் விவகாரமாக்கப்படும் அரசியலை தேர்ந்தறிந்து முன்னெடுக்கக் கோருகின்றோம். (மேலும்.....)

5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி

வட மாகாணத்தில் 10,000 தமிழ் பொலிஸாரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான கோரிக்கையை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் முதற்கட்டமாக பொலிஸ் சேவைக்கு 5,000 தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத் துக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளார். விரைவில் வட மாகாணத்தில் முதற்கட்டமாக 5,000 தமிழ் பொலிஸாரு க்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. ஆர்வமுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள முடியும். எனவே அதனை வேலைவாய்ப்பாக மட்டும் கருதாமல் தமிழ் மொழி மூலமாக எமது மக்கள் தமது முறைப்பாடுகளை செய்வதற்கும், உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்கின்ற அசெளகரியங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்த வாய்ப்பை எமது இளைஞர், யுவதிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடு மீன்கள் பொழுதுகள்

(Singing Fish 2013 - Ajantha Gnanamuttu)

செப்ரம்பர் 01, 2013

ஒலுவில் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது

'பழைய காயங்களை நினைவில் வைத்துக்கொள்வதால் தேசிய ஒற்றுமையை பேண முடியாது. பழைய குப்பைகளைக் கிளறுபவன் நானில்லை. எந்தவொரு விடயத்தினையும் புத்திசாதுர்யத்துடனும் தெளிவாகவும் தேடியறிதல் வேண்டும்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஒலுவில் துறைமுகத்தை சற்றுமுன்னர் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீனவ மற்றும் வர்த்தக துறைமுகமான இந்த ஒலுவில் துறைமுகமானது முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் ஏ.எச்.எம்.அஷ்ரபின் யோசனைக்கிணங்க நிர்மாணிக்கப்பட்டதொன்றாகும். இத்துறைமுகம், கொழும்பிலிருந்து 370 கிலோமீற்றர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது. மூவாயிரம் தொன் நிறையுடைய பாரிய கப்பல்கள் இந்த துறைமுகத்தில் நங்கூரமிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய

TNA யினரால் முன்வைக்கப்படும் பொய்மைகளும், அவைபற்றிய மெய்மைகளும்.

இப்பொழுது கூட இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளில் அதிக எண்ணிக்கையானோர் TNAயினரே. அந்தப் பலத்துடன் தமிழர்களின் பிரச்னைகள் எதனையாவது அவர்கள் தீர்த்து வைத்திருக்கிறார்களா? மாறாக, அரசியல் அபிலாஷைகள் மட்டுமல்ல, தமிழர்களின் வாழ்வாதாரம் முழுவதுமல்லவா சீர்கெட்டுச் சிதைந்து போய்விட்டது. தமிழ்ப் பிராந்தியங்களின் நகர சபைகளிலும் அதிக எண்ணிக்கையான பிரதிநிதிகள் TNAயினரே. அந்தப் பலத்தினால் அவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ் வாக்காளர்களுக்கு எதுவித நன்மையும் கிட்டியிருக்கிறதா?. அவற்றின் நிர்வாகங்கள் எதுவித ஆக்கபூர்வமான செயல்களையும் மேற்கொள்ளாது  நைந்து நாறிக் கிடக்கின்றனவே!.  அதெப்படி வடமாகாண சபைத் தேர்தலில் மட்டும் அதிக எண்ணிக்கையைப் பெறும் பலம், நலன் தரும்?. கேட்கிறவன் கேணையனாக இருந்தால், எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓடும் என்று சொல்வார்களே—அப்படியானால் தமிழர்கள் கேணையர்கள் என்பது தானே TNA யினரின் அனுமானம். எதிர் வரும் 21ம் திகதி கூட்டமைப்பிற்க்கு வாக்களித்து எருமை மாடு என்றோ ஒருநாள் எரோப்பிளேன் ஓட்டும் என்ற தமது நம்பிக்கையை தமிழர்கள் மீண்டும் காட்டுவார்களா? என்பதே பொதுஅறிவு உள்ளவர்களின் கேள்வியாகும். (மேலும்.....)

பிரபாகரனின் பிடிவாதமே தனிஈழம் பிரிவதற்கு தடையானது

'பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழீழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தைப் பிரித்தால் நான்தான் அங்கு ஜனாதிபதியாக இருப்பேன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடம்பிடித்ததால் தமிழீழத்தை தனியாக பிரிக்க முடியாமல் போய்விட்டது' என்று இந்திய மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், 'இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது. தற்போது கூட இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க 48 ஆயிரம் கோடி ரூபாவினை ஒதுக்கி 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

'வடக்கின் நிலைமைகளை இந்திய புலனாய்வாளர்கள் கண்காணிக்கின்றனர்'


வர்த்தகர்கள் என்ற பெயரில் வடக்கில் வர்த்தகத்தில் ஈடுபடுபதற்காக இந்தியாவிலிருந்து வருகை தரும் இந்திய புலனாய்வு அதிகாரிகள், வடக்கின் நிலவரங்களை புலனாய்வு செய்து வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது' என்று வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார். 'வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைக் கொண்டுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் அன்றாடம் ஓமந்தை சோதனைச் சாவடியைக் கடந்து வடக்கு நோக்கிப் பயணிக்கின்றனர். இவ்வாறு நாட்டுக்குள் உட்பிரவேசிக்கும் வெளிநாட்டுக் குழுவினர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் எதிராக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரம் கணித்துக்கொண்டிருக்கின்றனர்' என்றும் கட்டளைத் தளபதி குறிப்பிட்டார்.  'இவ்வாறு வடக்குக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது தொடர்பில் விரிவாக தேடியறிய வேண்டும். வர்த்தக நோக்கத்துக்கென வடக்குக்கு வருகை தரும் இந்தியர்கள், சுற்றுலா விசாவிலேயே வருகின்றனர். அவ்வாறான விசாவில் வருபவர்களால் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இதனால், இவர்கள் தொடர்பில் பாரியதொரு சந்தேகம் எழுந்துள்ளது. இவர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகள். வடக்கில் நிலவரத்தைக் கண்டறிவதற்காக வர்த்தகர்கள் என்ற போர்வையில் இங்கு வந்துள்ளனர்.

புலிகளை போற்றுகின்ற புலம்பெயர்ந்தோர் இதுபோன்ற இறக்கமற்ற இயக்கத்தின் புகழ்பாடலுக்கு இடமில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் - நவீபிள்ளை

'எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை தமிழீழ விடுதலைப்புலிகளின் கையாள் என கூறினர். நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள் கூறினார். ஐ.நாவிலுள்ள பெண் புலி என்றனர். இது தவறானது மட்டுமன்றி மனதை நோக்கடிப்பதாகும்.'என அவர் கூறினார். மூன்று அமைச்சர்களின் கூற்றுக்காக ஜனாதிபதி தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதாக கேள்விநேரத்தின் போது ஆணையாளர் கூறினார். மூன்று அமைச்சர்களும் சேர்ந்து விட்ட நிலைமையில் கடந்த வாரத்தில் இவ்வகையான கேவலப்படுத்தல்கள் உச்சத்திற்கு போயிற்று என்றும் அவர் கூறினார். புலிகள் பற்றி தனது நிலைப்பாட்டை நான் தெளிவுப்படுத்தி உள்ளதாகவும் அதை ஈவிறக்கமற்ற கொலைகார இயக்கமென கூறியதாகவும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இந்த இயக்கத்திற்கு புகழ்மாலை சூட்டுவதை தவிர்க்குமாறு கூறியதாகவும் அவர் கூறினார். புலிகள் இயக்கம் பல உயிர்களை கொன்றொழித்துள்ளது. அது பல குற்றச்செயல்களை புரிந்த இயக்கம். புலிகளை போற்றுகின்ற புலம்பெயர்ந்தோர் இதுபோன்ற இறக்கமற்ற இயக்கத்தின் புகழ்பாடலுக்கு இடமில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்' எனக்கூறினார்.

தமிழருக்குத் தேசிய தீர்வொன்று அவசியம் அதற்கான முதற்படிமுறைதான் மாகாண சபை நிர்வாகம்

எவர் எதைச் சொன்னாலும், வடமாகாணத்தில் 22 ஆசனங்களைக் கைப்பற்றி ஆளுங்கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும் என்கிறார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன். வடக்கில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவது ஆளுங்கட்சிதான் என்பதில் மாற்றமில்லை. இந்தத் தேர்தலில் எதிரணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுள் பலர் குமார சூரியர் காலத்தில் அரசாங்கத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி சுகபோகமாக வாழ்ந்தவர்கள், தமிழ் இளம் யுவதிகளை பனமட்டையால் அடித்து புலிகள் இயக்கத்திற்குக் கொண்டுசென்றவர்கள் ஆகியோர்தான் தமிழ் மக்களின் வாசலுக்கு வர இருக்கிறார்கள். (மேலும்.....)

அன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பலரே இன்றைய TNA தலைவர்கள்!

மனித உரிமை மீறல் குறித்து இன்று கூக்குரல் போடும் தமிழ்க் கட்சிகளில் இருக்கும் முக்கியஸ் தர்கள் பலர் தமிழ்ச் சிறார்களைப் பலவந்தமாக பிடித்து ஆயுதப் பயிற்சி கொடுத்து அவர்களை வதை செய்தவர்களே என சு. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் சுட்டிக்காட்டினார். திருகோணமலை பிரஜைகள் குழுவினர் திருமலையில் நவநீதம்பிள்ளையைச் சந்தித்த போது இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் அவர் தெளிவாக எடுத்துரைத்தார். மட்டக்களப்பு மாவட்டம் போரினால் உக்கிரமமாக பாதிக்கப்பட்ட ஒன்று. எனினும் நவநீதம்பிள்ளை அங்கு விஜயம் செய்யாமல் விட்டது வருந்தத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என்றெல்லாம் கூறும் தமிழ்க் கூட்டமைப்பு போரில் பங்களித்த முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவுக்கு பின்னால் சென்று தேர்தலில் அவருக்கு ஆதரவளித்தனர். இவர்களுக்கு மனித நேயம் பற்றிக் கதைக்க அருகதையில்லை என்றும் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். கடந்த 30 வருட காலமாக சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் புலிகளின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டனர். குண்டு வெடிப்புக்களாலும், துப்பாக்கிச் சூட்டினாலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அநியாயங்கள் நடந்த போது ஐ. நா. என்ன செய்தது? எங்கே போனது என அவர் கேள்வி எழுப்பினார்.

காதோடு காதாக...

இனிஸலை (சி.வி) சரியாகப் பார்க்கட்டாம்

முதலாம், இரண்டாம் கட்டப் போர் என்ன என்பதை அறி யாது மூன்றாம் கட்டப் போரை நடத்தி மக்களை ஏமாற்றி வரும் முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஐயா விக்னேஸ்வரனை பகிரங்கமான பொது மேடை விவாதத்திற்கு அழைத்திருக்கிறார் நிஜத்தில் முதலமைச்சராக வரவிருக்கும் தவராசா ஐயா. மக்களை ஏமாற்ற வீரவசனங்களை அள்ளி இறைத்து வரும் விக்னேஸ்வரன், சற்றும் எதிர்பாராத இந்தத் திடீர் அழைப்பால் வெகுண்டு போயுள்ளாராம். இது பற்றி பதில் மூச்சு விடவில்லையாம். அது எனக்கு இல்லை. வேறு யாரோ விக்னேஸ்வரனாக இருக்க வேண்டும். எதற்கும் தன்னுடைய இனிஸலோ (சி.வி) என்று சரியாகப் பார்க்கும் படி ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளாராம். (தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com