Contact us at: sooddram@gmail.com

 

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பிரதம கொரடா அநுரகுமார

8 வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றம் நேற்று காலை 9.30 க்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது இதன் போது சபாநாயகர் இந்த அறிவிப்புக்களை விடுத்தார். எதிர்க்கட்சி தலைவராகத் தெரிவுசெய்யப்படுபவரின் கட்சியைச் சார்ந்த ஒருவரே எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவாக தெரிவுசெய்யப் படுவது பாராளுமன்ற சம்பிரதாயமாக உள்ளது. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவாக ஜே.வி.பியின் தலைவரான அநுர குமார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள் ளார்.

இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருக்கும் நிலையில் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது. அதற்கு அடுத்ததாக ஜே.வி.பி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐ.ம.சு.மு சார்பில் எவருடைய பெயரும் முன்மொழியப்பட்டிராத நிலையில் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் மஹிந்த ஆதரவு கட்சிகளின் பிரதிநிதிகள் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் மேசையில் தட்டி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஐ.ம.சு.முவும் இணைந்து அரசாங்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் பாராளுமன்றத்தில் மூன்றாவதாக கூடுதல் ஆசனங்களைக் கொண்டிருக்கும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அறிவிக்கப்பட்டு சில நிமிடங்கள் கழிந்த பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி, ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் 56 பேர் கையொப்பமிட்டு குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐ.ம.சு.மு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்ததாகக் கூறினார். ஐ.ம.சு.மு சார்பில் எவருடைய பெயரும் பிரேரிக்கப் படவில்லையெனக் கூறுவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை யொன்றை எழுப்பிப் பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல, பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை அறிவித்துள்ளார். சபாநாயகரின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றும் கூறினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச, சபாநாயகரின் தீர்ப்பை தாம் சவாலுக்கு உட்படுத்தவில்லையென்றும், ஐ.ம.சு.மு சார்பில் ஒருவருடைய பெயரும் பரிந்துரைக்கப்படவில்லையென்ற கருத்துக்கே பதிலளிப்பதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகருடைய தீர்ப்பை எவரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது. எதிர்க் கட்சித் தலைவருக்கு ஒருவருடைய பெயரை பிரேரிப்பதாயின் அதனை ஜனாதிபதியிடம் கையளிப்பது முறையாகாது. சபாநாயகரிடமே அதனை வழங்க வேண்டும். அதேநேரம் சபா நாயகரின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்து வதாயின் சபாநாயகருடைய பதவியும் இல்லாமல் போய்விடும் என்றார். இதனையடுத்து சபையில் ஏற்பட்டிருந்த சர்ச்சை முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது.

இதேவேளை, அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக சபையில் எழுந்த சர்ச்சை குறித்து ஆராய்வதற்காக சபை 11.09 மணிக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட இரா.சம்பந்தனுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருடைய ஆசனத்துக்குத் தேடிச்சென்று வாழ்த்துக்களைத் தெரி வித்தனர். எனினும், ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்சவோ, வாசுதேவ நாணயக்காரவோ அல்லது தினேஷ் குணர்வத்தனவோ சம்பந்தனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கவில்லை. நிமல் சிறிபால.டி.சில்வா, ஜோன் செனவிரட்ன, மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட ஐ.ம.சு.முவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் சம்பந்தனுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் ஐ.ம.சு.முவின் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த விமல் வீரவன்ச மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சபாநாயகர் கரு ஜெயசூரிய தனியாக அழைத்து விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும். விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E. was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.s beck and call.

From: Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம் - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

(fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம், துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

(சாகரன்)

ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

(சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

(சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?

(சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com