Contact us at: sooddram@gmail.com

 

சம்பந்தனுக்கு சங்கரி வருந்தி வாழ்த்து

எதிர்க் கட்சித்தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தன்னுடைய அரசியல் பயணம் பூச்சியமானதுக்கு தாங்கள் தான் காரணமென்றும் குறிப்பிட்டுள்ளார். எனது நேர்மையான அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியல் பூச்சியத்துக்கு வந்ததற்கு நீங்களே காரணமாக இருந்துள்ளீர்கள். நான் ஒரு நேரடி மோதலில் தோற்றவன் அல்ல, ஓர் ஆயுதக் குழுவின் ஆதரவு உங்களுக்கு இல்லாதிருந்தால் எனது அரசியல் பயணம் வெற்றிகரமாகத் தொடர்ந்திருக்கும்.

எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, நேற்று வியாழக்கிழமை எமுதிய கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக தெரிவானதற்கு எனது வாழ்த்துக்கள். இச்சந்தர்ப்பத்தில் எமது இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை பெறுவதற்கும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்பை கொடுப்பீர்கள் என நம்புகின்றேன்.

மிக்க நட்புடனும் முற்று முழுதாக மாறுபட்ட சூழ்நிலையிலும் இப்பதவியை ஏற்றுள்ளீர்கள். பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக்க உற்சாகத்துடன் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கொடுக்கும் வரவேற்புகளைப் பார்த்து எனது மனதை மாற்றி உங்களை வாழ்த்தவும் உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கவும் தீர்மானித்தேன்.

பிரதம மந்திரி, சத்தியப்பிரமாணம் செய்த வேளையில் முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய ஜனாதிபதியும் சமூகம் கொடுத்திருந்த நிகழ்வும், ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் 64ஆம் ஆண்டு விழாவின் போது இன்றைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் அருகருகேஅமர்ந்திருந்த காட்சியையும் கண்டு நாம் இருவரும் வெட்கப்பட்டிருக்க வேண்டும்.

நாம் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை, பேசுவதுமில்லை. எமது மக்களை பாதிக்கும் எந்த முக்கிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடுவதுமில்லை. எம் இருவருக்கும் இடையில் வேற எதுவித குரோதமும் இருக்கவில்லை என்றே எண்ணுகின்றேன்.

எனது நேர்மையான அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியல் பூச்சியத்துக்கு வந்ததற்கு நீங்களே காரணமாக இருந்துள்ளீர்கள். உங்கள் மீது நீண்டகாலமாக இருந்து வந்த கசப்புணர்வைப் பற்றி இச்சந்தர்ப்பத்தில் கூறுவது தப்பில்லை என எண்ணுகின்றேன்.

எனது இந்த கசப்புணர்வை நீக்குவதன் மூலம், உங்கள் பாதையில் குறுக்கிடக் கூடிய தடைகள் விலக வாய்ப்புண்டு.

நான் ஒரு நேரடி மோதலில் தோற்றவன் அல்ல, ஓர் ஆயுதக் குழுவின் ஆதரவு உங்களுக்கு இல்லாதிருந்தால் எனது அரசியல் பயணம் வெற்றிகரமாகத் தொடர்ந்திருக்கும்;. மக்களும் பயன் அடைந்திருப்பார்கள்.

கௌரவமான ஓர் அரசியற் கட்சிக்கு பெரும் தீங்கும் ஏற்பட்டிருக்காது. சட்ட விரோதமான ஓர் அமைப்பின், சட்டவிரோதமாகப் பெற்ற உதவிகளாலேயே இன்றும் நீங்களும், உங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்கி இருக்கின்றன.

அரச சார்பான இன்றைய தலைமுறையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சரித்திரத்தின் இப்பகுதியைப் பற்றி அறிந்திருக்கமாட்டார்கள். அதேபோலவே, உங்கள் நாடாளுமன்ற, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் தெரிந்திருக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் இவற்றை எல்லாம் மறந்திருக்கமாட்டீர்கள் என எண்ணுகின்றேன் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும். விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E. was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.s beck and call.

From: Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம் - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

(fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம், துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

(சாகரன்)

ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

(சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

(சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?

(சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com