லிபியாவில் நேட்டோவின் போர்க்குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள்

பொய்யான தகவலகளையும், பிழையான எண்ணங்களையும் முன்னிலைப்படுத்தும் மேற்குலக ஊடகங்களிற்கு சவால் விடுவதற்காகவே, குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் படப்பிடிப்புக் கலைஞர்களை கொண்ட குழுவொன்றினால் திரிப்போலி பகுதியில் தயாரித்து நெறிப்படுத்தப்பட்ட வீடியோ காட்சியே இது. நேட்டோவின் கட்டளைகளிற்கிணங்க, லிபிய மக்களின்மீது நடாத்தப்பட்டுவரும் மனிதக் கொலைகளையும், அங்கு அவர்கள் துன்புறுத்தப்படுவதையும், இக் குற்றச்செயல்களில் நேட்டோவின் ஈடுபாட்டினையும், அதே நேரம் அவற்றில் மேற்குலக ஊடகங்களின் ஈடுபாட்டையும் இவ் வீடியோ வெளிக்கொணர்கின்றது. சர்வதேச யுத்த குற்றங்களிற்கான சட்டத்தில் இந்த யுத்த ஏற்பாட்டாளர்கள் அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.

பெருந்தொகையான மனிதர்கள் கொல்லப்பட்டோ அல்லது காயப்படுத்தப்பட்டோ இருக்கிறார்கள் சிலிட்ட்ன நகரத்தில். இந் நகரத்தில் மக்களின் வசிப்பிடங்கள் மற்றும் உட்கட்டுமானப்பகுதிகளில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் 33 குழந்தைகள் மற்றும் 32 பெண்கள் உட்பட 85 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் காயப்பட்ட பெருந்தொகையானோரில், பலர் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளனர்.

சிலிட்டன் நோட்டோவின் தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்களை பல நாட்களாக சந்தித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த 8ம் திகதி பிற்பகல் 11.30க்கு ஆரம்பிக்கப்பட்ட நோட்டோவின் தாக்குதல் ஒன்றில், குறைந்தது 7 உள்ளுர் கிராமவாசிகளின் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன், முழு குடும்பம் ஒன்றும் கொலைசெய்யப்பட்டுள்ளது. நேட்டோவின் இவ் இலக்கில் அங்குள்ள 20 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோ, உண்மைகளை வெளிக்கொணர்வதற்கான ஊடாக பங்கினை எடுத்துக்காட்டுகின்றது. ஊடகங்கள் இவற்றை சரியாகவும் துல்லியமாகவும் சொல்வதில்லை. மாறாக அவை லிபிய மக்கள் மீதான போர் குற்றங்களை மறைக்கவே செய்கின்றன.