புலிகள் எமக்கு
செய்த கொடுமைகளுக்
கு எதிராக
பழிவாங்கும்
போக்கு கூடாது. - ஜெர்மன்
ஸ்ருட்கார்ட்
நகரில் வரதராஜப்பெருமாள்
ஒக்ரோபர் 30, 31
ஆகிய இருதினங்களில்
ஜெர்மன் ஸ்ருட்காட்
நகரில் தமிழீழ மக்கள் விடுதலைக்
கழகத்தின்
சர்வதேச கிளைகளின்
மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
நேற்றையதினம்
இந்நிகழ்வுகளில்
ஐரோப்பிய பத்மநாபா ஈ.பி ஆர்.எல்
அமைப்பின்
மாநாட்டில்
கலந்து கொள்வதற்காக
பிரான்ஸ்
நாட்டிற்கு
சென்றிருந்த
வட மாகாண
முன்னாள்
முதலமைச்சரும்
பத்மநாபா
ஈ.பி.ஆர்.எல்
அமைப்பின்
மூத்த தலைவர்களில்
ஒருவருமான
வரதராஜப்பெருமாள்
அவர்களும்
பத்மநாபா
ஈ.பி.ஆர்.எல்.எப்
உறுப்பினர்களும்
கலந்து கொண்டிருந்தனர்.
வரதராஜப்பெருமாள்
அவர்கள் இலங்கை அரசியலும்,
தமிழர்களின்
போராட்ட வழிமுறைகளும்,
இனி தமிழ்மக்கள்
செய்யவேண்டிய
விடயங்கள்
என்ன என்பது
பற்றி தனது உரையில்
பல விடயங்களை
தொகுத்து
உரையாற்றியிருந்தார்.
தமிழ்
மக்களின்
அரசியல் பிரச்சினை
எப்படி ஆரம்பமானது
பற்றியும்,
இனமுரண்பாடுகளின்
தோற்றங்கள்
பற்றியும்
வரலாற்று
சம்பவங்களுடன்
எடுத்துரைத்தார். மன்னர் காலத்தில்
அரசர்களுக்கிடையே
முரண்பாடுகள்
இருந்தனவே
தவிர தமிழ்,
சிங்கள மக்களிடையே
இன முரண்பாடுகள்
இருந்திருக்கவில்லை.
தமிழ், சிங்கள
இனமுரண்பாடுகள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன் தோற்றம்
பெற்றதாக
கூறப்படுவது
தவறு என்றார்.
வாக்குரிமை எப்போது
இலங்கையில்
கொண்டு வரப்பட்டதோ
அப்பொழுதிருந்தே
இன முரண்பாடுகளுக்கான
கூறுகள் ஆரம்பமாகிவிட்டன.
பின்னர் கொண்டுவரப்பட்ட
தனிச் சிங்கள சட்டம், விவாசாய குடியேற்றம்
என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட
குடியேற்றங்கள்
தமிழ், சிங்கள் மக்களிடையே
இனமுரண்பாட்டை
தோற்றுவித்தது
என்றார்.
பண்டா - செல்வா, டட்லி - செல்வா
ஒப்பந்தங்கள்,
50க்கு 50, சமஷ்டிக்கோரிக்கை
போன்ற அரசியல் விடயங்கள்
பற்றி தெளிவாக எடுத்துரைத்த
அவர் தமிழரசுக்கட்சியின்
தவறும் அவர்கள் தமது வாக்குவாக்கியை
தமது நலன்களுக்காக
உபயோகித்தததையும்
தனது பேச்சில்
சுட்டிக்காட்டியிருந்தார்.
தமிழர் தரப்பு இலங்கை அரசுகளினால்
கிடைக்கப்பெற
சாத்தியமாக
இருந்த அரசியல் உரிமைகளை உரியநேரத்தில்
பெற்றுக்கொள்ளாமல்
இழுத்தடித்து,
மறுதலித்தது
ஜீ.ஜீ காலத்தில்
இருந்து பிரபாகரன்
காலம் வரைக்கும்
நடைபெற்ற
ஒன்றாகும்.
தனி அரசு கோரிக்கைக்கான
ஊற்று தமிழரசுக்
கட்சி தோற்றம் பெற்ற காலத்திலிருந்து
ஏற்பட்ட ஒன்றாகும்.
70க்கு பிற்பாடு
தமிழரசு கட்சியினர்
ஊட்டி வளர்த்த சிங்கள
பேரினவாதத்திற்கு
எதிரான அரசியல் இளைஞர்களை
ஆயுதப்போராட்டத்திற்கு
வழிவகுத்தது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற
தமிழராய்ச்சி
மாநாட்டின்
போது ஏற்பட்ட
வன்முறைச்
சம்பவங்கள்
தமிழத் குறும் தேசிய அரசியல்வாதிகளுக்கு
வாய்ப்பாக
அமைந்தது.
‘பெடியங்கள்
விடமாட்டாங்கள்!,
ஆயுதம் எடுப்பாங்கள்!!,
துரோகிகளுக்கு
இயற்கை மரணம் கிடையாது!!!’
என வன்முறையை
தூண்டும்
வகையிலான
பேச்சுக்கள்
இளைஞர்களை
ஆயுதம் எடுத்துப்போராடத்
தூண்டியது.
1974ம் ஆண்டு
வரை தமிழீழம்
என்கிற சொல் இருக்கவில்லை,
1977ல் அது அறிமுகப்படுத்தப்பட்டது
என்றார்
தமிழ் இளைஞர்கள்
அனுபவித்த
சிறை வாழ்க்கைகள்,
அதனால் ஏற்பட்ட போராட்டஎழுச்சிகள், 83ல் ஏற்பட்ட இனக்கலவரம்
என்பன பற்றி எடுத்துரைத்த
வரதராஜப்பெருமாள்
அவர்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தம்
வடக்கு கிழக்கு மாகாண சபை
ஆகியவை தொடர்பான விடயங்கள்
பற்றிய கருத்துக்களை
தெளிவாக குறிப்பிட்டார்.
இந்திய அரசு எமக்கு
வழங்கிய ஆதரவை தமிழ்மக்களின்
அரசியல் நலன்களுக்கு
சாதகமாக பயன்படுத்த
முடியாத நிலையையும்
புலிகள் சகலதையும்
மறுதலித்து
குழப்பியடித்ததையும்
சுட்டிக்காட்டினார்.
புலிகள்
ஒவ்வொரு தடவையும் காப்பாற்றப்பட்டு
வந்ததை குறிப்பிட்ட
அவர் புலிகளின்
தோல்விக்ககான
காரணங்களை
சம்பவங்களுடன்
எடுத்துரைத்தார். வடமராட்சி
தாக்குதலின்போது
இந்திய அரசாலும், இந்திய ராணுவத்துடனான
மோதலின்போது
பிரேமதாசாவாலும்,
சந்திரிகா
காலத்தில்
நோர்வே அரசினாலும்
புலிகள் காப்பாற்றப்பட்டு
வந்துள்ளனர்.
ஆனால் கடந்தவருடம்
புலிகள் சந்தித்த தோல்வியில்
அவர்களை காப்பாற்ற
யாரும் வரவில்லை.
முள்ளிவாய்க்காலில்
அமெரிக்க
அரசு கப்பல்
அனுப்பி தம்மை காப்பாற்றும்
என்கிற முயற்சியை
நம்பியிருந்த
பிரபாகரனின்
மரணத்துடன்
தமிழர்களின்
ஆயுதப்போராட்டம்
முடிவுக்கு
வந்ததை குறிப்பிட்டார்.
இனி என்ன செய்யவேண்டும்?. தமிழர்கள் ஏன் தோற்றார்கள்?
புலிகள் ஏன் தோற்றார்கள்?
தாம் சொல்வதைத்
தவிர வேறு
எதையும் கேட்கக்கூடாத
என்கிற புலிகளின்
ஏகப்பிரதிநிதித்துவப்
போக்குகளின்
விளைவுகள்
தமிழர்களை
எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது?.
இனியாவது தமிழர்களின்
சிந்தனைகளில்
மாற்றம் வரவேண்டும்
என்ற கருத்துக்களை
விளக்கமாக,
ஆணித்தரமாக
தனது பேச்சில்
குறிப்பிட்டார்.
பல்வேறு தரப்பு
கருத்துக்களை
கேட்க வேண்டும்.
அவற்றை கேட்கின்ற
பொறுமையும்
நாகரீகமும்
வேண்டும்.
சமூகம் தோற்பதில்லை சமூகத்தின் மீள் எழுச்சி
தேவையான ஒன்றாகும்.
தமிழ் மக்கள்
ஒருமித்த
குரலில் ஒலிக்கின்ற
ஒற்றுமை வேண்டும்.
தற்போது உருவாகியிருக்கும்
தமிழ்க்கட்சிகளின்
அரங்கம் ஒற்றுமையாக
குரல் கொடுப்பதற்கான
வெளிப்பாடு
ஆகும். நியாயமான கோரிக்கைகள்
உருவாக்கப்பட
வேண்டும்.
இலங்கை - இந்திய
முற்போக்கு
சக்திகளுடன்
ஒன்று பட வேண்டும்.
ஆயுதம் ஏந்தி போராடுவதற்கான
அவசியம் இனி இல்லை.
தமிழ் கட்சிகளுக்கிடையே
தேர்தலுக்கு
அப்பாற்பட்ட
ஒற்றுமை வேண்டும் என்றார்.
புலிகள்
எமக்கு செய்த கொடுமைகளுக்கெதிராக
பழிவாங்கும்
போக்கு கூடாது. மக்கள் புலிகளை
ஆதரித்த போக்கு தெரிந்தோ தெரியாமலோ,
விரும்பியோ
விரும்பாமலோ,
பயத்தினாலோ
ஏற்பட்டதொன்றாகும்.
அந்த மக்களை
நாம் வென்றெடுக்க
வேண்டும்.
இதற்கு தமிழ் கட்சிகளிடையே
ஒற்றுமை வேண்டும்.
கட்சி மாநாடுகள்
அவசியம்.
மக்கள் மத்தியில்
இருந்து தலைவர்கள்
வரவேண்டும்.
ஐரோப்பாவில் அரசியல்
கட்சிகளிடையே
தேர்தலுக்கு
முன் நடைபெறும்
மாநாடுகள்,
உட்கட்சித்
தேர்தல்கள்
போன்றவை மக்கள் மத்தியில்
தெரியப்படுத்தப்படுகின்றன.
அதுபோல் எமது நாட்டிலும்
இத்தகைய பண்பாடுகள்
கொண்டு வரப்பட வேண்டும்.
13வது
திருத்தச்சட்டம்
ஓட்டைகள் அடைக்கப்பட்ட
ஒரு வாளி
போன்றது. அது ஒரு தற்காலிக தீர்வு. அதனை நிரந்தரமாக
வைத்திருக்க
முடியாது.
பார்ப்பதற்கு இந்திய
யாப்பு போல இருக்கும்.
நிரந்தரமான ஒரு மாற்றம் அதில் கொண்டு
வரப்படவேண்டும்.
ஒவ்வொரு சரத்திற்கும்
அதிகாரப்
பகிர்வு சார்பாக அர்த்தங்கள்
கொடுக்கப்பட
வேண்டும்
என குறிப்பிட்ட
அவர் 13வது,
18வது சட்டங்கள்
தொடர்பாக
அரசியல் விளக்கங்களை
முன்வைத்த
அவர் கூட்டத்தில்
கூடியிருந்தவர்களால்
இது சம்மந்தமான
கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு
தொடர்ந்து
பதிலளித்தார்.
குறுகிய
நேரம் என்றாலும்
முக்கியமான
விடயங்கள்
அவரால் பேசப்பட்டன. புலிகளின் வீழ்ச்சிக்குப்
பின் மரண
அச்சுறுத்தல்கள்
இன்றி மிரட்டல்கள்
இன்றி சுதந்திரமாக
உரையாற்றுவதற்கான
வாய்ப்பு
உருவாகியிருக்கிறது.
புலம்பெயர் மக்கள்
மத்தியில்
இதுபோன்று
சுதந்திரமான
கருத்துப்
பரிமாறல்கள்
உருவாக வேண்டும்.
இதுவரை காலமும்
புலிகளின்
கருத்துக்கள்
தவிர மாற்றுக்
கருத்துகள்
பகிரங்கமாக
முன்வைக்கப்படுவதற்கான
சூழல் மிகக்குறைவாகவே
இருந்தது.
புலிகள் தவிர்ந்த
மாற்றுக்
கட்சித் தலைவர்கள்,
முக்கியஸ்தர்கள்
மக்களைச்
சந்தித்து
உரையாடுவதற்கான
வாய்ப்புக்கள்
அரிதாகவே
இருந்தன.
தற்போது அத்தகைய
நிலை இல்லை.
தற்போது உருவாகியிருக்கும்
இத்தகைய சுதந்திரமான
சூழல் தமிழர்களுக்கான
நியாயமான
போராட்டத்தை
முன்னெடுப்பதற்கான
வாய்ப்பாகும்.