Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர்களுக்கு இன்று அரசியற் தலைமை இல்லை (பகுதி – 2)

இவ்வாறு பரவலாக தமிழ் சமூகத்தவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்

இக்கருத்து பற்றி கலந்துரையாடலுக்காக ஓர் ஆய்வு   

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக நின்றவர்களுக்கு தமிழ் மக்களை வாக்களித்து தலைவர்களாக்கும்படி தமிழ்ச் சமூகத்தின் பிரமுகர்கள்தானே வேண்டிக் கொண்டார்கள். பெரும்பான்மையான தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழரசுக் கட்சியின் பேரில் நின்றே வெல்ல முடிந்ததற்கு தமிழ்ப் பிரமுகர் சமூகமே பிரதானமான பங்களித்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

தமிழ் நாளேடுகளின் பத்திரிகையாளர்கள் ஒருமித்த அபிப்பிராயமாக தமிழரசுக் கட்சி வேட்பாளர்களையே ஆதரித்து நின்றார்கள். அவர்களுக்கே அனைத்துத் தமிழர்களும் வாக்களிக்க வேண்டும் என்று இந்தத் தமிழப் பத்திரிகைகள் தமது நடுநிலை வர்த்தக நியாயங்களுக்கும் மேலாக தமழிரசுக் கட்சியின் தேர்தற் பிரச்சாரப் பத்திரிகைகளாகவே செயற்பட்டதை இந்தப்பத்திரிகைக்காரர்கள் இப்பொழுது மறுக்கமுடியாது.  

தமிழர்களின் மத்தியிலுள்ள சமயத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், அரசாங்க நிர்வாகிகள் என தமிழ் சமூகத்தின் பல்வேறு பிரமுகர் பகுதியினரும் வெளிப்படையாக தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அறிக்கைகள் விட்டார்கள், பிரசங்கங்கள் நடத்தினார்கள் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார்கள். வெளிநாடுகளிலுள்ள தமிழர்களிற் பெரும்பாலோர் இவர்களுக்கு வாக்களிக்கும்படிதானே தமது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் வலியுறுத்தினார்கள்.

ஒருவர் அவர் யாராயிருப்பினும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுவும் தம்மை நம்பும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுவும் அவரது அடிப்படை ஜனநாயக உரிமைகளாகும். ஆனால் அப்போது தாங்கள் செய்ததன் விளைவுகளுக்கான பொறுப்பை இப்போது மறுப்பது அல்லது மறைக்க முற்படுவதுதான் தவறாக உள்ளது. 

தமிழ் மக்களை வாக்களிக்கும்படி வலியுறுத்திக் கூறி இவர்களைத் தலைவர்களாக்கிவிட்டு இப்போது தமிழர்கள் மத்தியில் தலைவர்களில்லையெனக் கூறுவது அபத்தமானதாகத் தெரியவில்லையா? சாதாரண பாமர மக்கள் தாங்கள் சரியாகச் சிந்திக்காமல் வாக்களித்து விட்டதாக வேண்டுமென்றால் கூறலாம். ஜனநாயகத்தில் அப்படிக் கூறுவதுகூட அர்த்தமற்ற ஒன்றே. அப்படியிருக்கையில் சமூகத்தின் பெரிய மனிதர்கள் அறிவார்ந்தவர்கள் என்று நம்பப்படுகிற சமயத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் அவ்வாறு கூறுவது அபத்தமானதாகும். 

தாங்கள் தமிழ் மக்களிடம் தமிழ் மக்களுக்கான தலைவர்களைத் தெரிவு செய்வதற்காக பிரச்சாரம் செய்யவில்லை மாறாக வெறுமனே அரசியல் மன்றங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காகவே பிரச்சாரம் செய்தோம் என இந்தச் சமூகப் பிரமுகர்கள் கூறுவார்களானால் அது ஏற்புடையதொரு கருத்தாக மாட்டாது.

இன்றைய காலம் மகாராஜாக்கள் காலமல்ல. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்றது அந்தக் காலம். அன்று ராஜாக்கள் தான் மக்களின் அரசியற் தலைவர்கள். அன்று ராஜாவின் மகன் ராஜாவானார். அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு கண்காணாத இடத்துக்குப் போய் இருந்து விட்டு மீண்டும் வந்தாலும் அவர்தான் இளவரசர். அவர்தான் பட்டத்துக்கும் உரியவராவார். ஒரு ராஜா வாரிசு எவரும் இல்லாமற் செத்துவிட்டால் மந்திரி மற்றும் பிரதானிகள் பட்டத்து யானை மாலை போடுதல் மூலமாகவோ அல்லது தாம் முறையானதெனக் கருதும் வேறு வழியிலோ புதிய ராஜாவைக் கண்டு கொண்டார்கள்.

ராஜாக்களின் காலத்திலேயே ஆயுதங்களின் வல்லமை இராஜ்ஜியத்தின் தலைமையைத் தீர்மானித்தது. புலிகளின் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிற் பெரும்பாலோர் ஒரு விதமான சோழர்காலக் கற்பனைகளோடு இருந்து விட்டார்கள். அது இந்தக் காலத்துக்கும் எமது பிராந்திய சூழலுக்கும பொருத்தமானதல்ல. அந்தப் பொருத்தமற்ற கற்பனைகளே இலங்கைத் தமிழர்களை இன்று பட்டு நிற்கும் வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாக்கியது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். 

ராஜாக்கள் காலத்தில் ராஜாக்களின் விருப்பங்களே சட்டங்கள் ராஜாக்களின் வசதிப்படியே நிர்;வாகங்கள், ராஜாக்கள் சரியென என நினைத்தவைகளே அன்றைய நீதி.. ஆனால் நாம் வாழும் காலம் மக்களாட்சிக் காலம். இன்னமும் சில நாடுகளில்; மன்னராட்சிகளும் மன்னராட்சி போல ஆட்சிகளும் தொடர்ந்து இருந்தாலும் அவைகளும் தற்போது ஆட்டம் கண்டு வருகின்றன.

மக்களாட்;சி முறையில் தமது அரசியற் தலைவர்களை மக்கள் தமது ரகசிய வாக்குகள் மூலம் தெரிவு செய்வதுதான் இந்தக் காலம். அதுதான் வளர்ச்சியடைந்த நாகரீகம். ஒரு முறை தேர்தலில் வென்று அரசியற் தலைவர் ஆனவர் ஐந்து வருடங்களின் பின்னரோ அல்லது அடுத்த ஆறு வருடங்களுக்குள்ளோ மீண்டும் தேர்தலில் வேட்பாளராக நின்று பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்றால்த்தான் அவர் தொடர்ந்தும் அரசியற் தலைவாராக இருக்க முடியும் என்பதே இன்று வளர்ந்துள்ள அரசியல் நியதி.

1931ம் ஆண்டு தொடக்கம் 1977ம் ஆண்டு வரை இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமான தேர்தற் சூழல்களில் தமது அரசியற் தலைவர்களே தாங்களே தெரிவு செய்தார்கள். 1981ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட சபைத் தேர்தல், 1988ம் ஆண்டு நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல், 1988ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், 1989ம்; ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை என பலராலும் நம்பப்படுகிறது. அதே போல 1994ம் ஆண்டு, 2000ம் ஆண்டு, 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கான சுதந்திரமான சூழல் வழங்கப்படவில்லை என்ற கூற்றுக்களையம் ஏதோ ளரு வகையில் ஓரளவு ஏற்கலாம். 2004ம் ஆண்டு பாராளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலிற் புலிகளே பெரும்பாலும் வாக்குப்பெட்டிகளை நிரப்பினார்கள், 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகள் தமிழர்கள் யாரையுமே வாக்களிக்க விடவில்லை. கடந்தகாலத்து இந்த வரலாற்றில் பெரும்பாலோருக்கு அபிப்பிராய பேதவிவாதங்கள் பெரும்பாலும் இருக்க மாட்டாது.

ஆனால், அதுவல்ல 2009ம் ஆண்டுக்குப் பிந்திய நிலைமை. இலங்கையின் ஜனநாயகக் கலாச்;சாரம் செழிப்பாக இல்லை என்றும் இங்கு தேர்தல் ஆணையாளர் சுதந்திரமாகச் செயற்பட முடியவில்லை என்றும் இங்கு சட்டத்தின் ஆட்சியில் பல ஓட்டைகள் உள்ளன என்றும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் அரச வளங்களை தமது தேர்தல் வெற்றிகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், தமிழர் பிரதேசங்கள் எங்கும் இராணுவம் பரந்து வியாபித்து இருக்கிறது என்றும் குறைகள் கூறப்பட்டாலும் இலங்கையில் நிலவுகின்ற தேர்தல் ஜனநாயகமாமனது பல குறைபாடுகளின் மத்தியிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாராட்டும் வகையில் உலகின் ஏனைய பல நாடுகளோடு ஒப்பிடுகையில் சுதந்திரமானதாக நடைபெற்று வருகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இதில் விருப்பு காழ்ப்பு அற்ற அறிவு பூர்வமான உண்மையைக் காணும் பண்பு அவசியமாகும்.. வென்றால் ஒரு கதையும் தோற்றால் இன்னொரு கதையும் விடும் பச்சை சுயசார்பு அரசியல்வாதிகளின் போலியான கருத்துக் கூறும் அடித்தளத்தை அறிவார்ந்தோர் பின்பற்றக் கூடாது. 

புலிகளின் காலத்து நிலைமைகளுக்கும் புலிகளின் அழிவுக்குப் பிந்திய கால அரசியல் சூழ்நிலைமைகளுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு இருப்பதை ஒப்புக் கொள்வதே அறிவுப் பண்பாகும்.. நிறைகளையம் குறைகளையும் அறிவுநெறி தவறாது அரங்கத்திலும் கூறுவதே அறவோர் பண்பாடு.

மக்களாட்சியில் மக்களின் பிரதிநிதிகளே சட்டங்களை ஆக்குகிறார்கள். அந்தச் சட்டங்களின்படியே அரச நிர்;;வாகங்கள் நடைபெறுகின்றன. அந்தச் சட்டங்களுக்கு அமைவாகவே நீதி நிர்;வகிக்கப்படுகிறது.

காலத்தின் மாற்றங்களுக்கேற்பவும் மக்களின் தேவைகளுக்க ஏற்பவும் சட்டங்களை ஆக்குவதுவும், தாங்கள் ஆக்கிய சட்டங்களின்படி நாட்டு நிர்;வாகமும் நாட்டில் நீதியும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுகின்றனவா எனக் கண்காணித்து சட்டத்தின் ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவதுவும் மக்கள் பிரதிநிதிகளின் கடமையும் பொறுப்புமாகும். சட்டங்களில் குறைபாடுகள் இருந்தாலோ சட்டங்கள் பிழையாகப் பிரயோகிக்கப்பட்டாலோ அவசியமான சட்ட மாற்றங்களுக்காகக் குரலெழுப்புவதுவும் உரிய சட்ட மாற்றங்களை ஆக்குவதுவும் அரசியல், நீதி, மற்றும் அரச நிர்வாகக் கட்டமைப்புக்களில் உரிய மாற்றங்களை உருவாக்குவதுவும் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்துக்கு உட்பட்டதே. அந்தக் கடமைகள் அவர்களுக்கே உரியது.

இங்கு மக்களின் உரிமைகளுக்காகக் குரலெழுப்பும் முன்னுரிமையும் மக்களின் பிரதிநிதிகளுக்கே இருக்கிறது. ஆரச நிர்வாகமேடா அல்லது அரசாங்கத்தவர்களோ சட்டத்தின் ஆட்சியை மீறிச் செயற்படும் வேளைகளில் நீதிமன்றங்களில் மற்றும் உரிய மன்றங்களில் முறையாகப் போராடுவதுவும், தமது குரல்களுக்கம் கோரிக்கைகளக்கும  ஆதரவாக மக்களைத் அணி திரட்டிப்போராடுவதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களுக்கே முதற் கடமையாகும்.

சொந்த நாட்டின் அரசும் சரி ஏனைய நாடுகளும் சரி ஒரு நாட்டு மக்களின் பொது அபிலாஷகள் தொடர்பான கோரிக்கைகளை மக்களின் பிரதிநிதகள் கூறும் பொழுதே அவற்றின் நியாயங்களைக் காது கொடுத்துக் கேட்பார்கள். மக்களின் அபிலாஷைகளுக்கான கோரிக்கைகளை முன் வைக்கக் கூடிய மன்றங்களும் மக்களின் பிரதிநிதிகளுக்கே உரியவையாக உள்ளன. இவ்வாறிருக்கையில் மக்களின் பிரதிநிதிகள் வேறு, மக்களின் அரசியற் தலைமை வேறு என்று பிரிப்பதில் அர்த்தமே இல்லை..

மக்களின் பொது நலன்கள் மீது அக்கறை கொண்டு எந்தக் குழுவும் எந்தக் கட்சியும் குரலெழுப்பலாம். ஆனால் அது மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும் அது பரந்துபட்ட பொதுமக்களின் திரண்ட ஆதரவை வெளிப்படையாகப் பெற்றதாக இருக்க வேண்டும். அல்லாவிடில், அந்தக் குரல்கள் அரசியல் அரங்கங்களில் சமூகரீதியான நியாயாதிக்கம் பெற்றவையாக இருக்கமாட்டா.

புலிகளின் குழப்பும் வல்லமை மற்றும் கொல்லும் வல்லமைகளுக்கு அங்கீகாரம் வழங்கி இலங்கை அரசும், இந்திய அரசும் மற்றும் உலகின் பல நாடுகளும் புலிகளோடு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தினார்கள், தீர்வுகாண முற்பட்டார்கள். அப்படியொரு நிலைமை இன்னொருமுறை தமிழர்கள் மத்தியில் ஏற்படுனெ;றில்லை. திரும்பவும் அப்படியொரு நிலைமை வரும் என்று யாரும் நம்பினாலும் அப்படி நம்புபவர் கூட இன்னுமொரு இருபது அல்லது முப்பது வருடங்களுக்குள் அப்படியொரு நிலை ஏற்படும் என நம்பமாட்டார்.

தொழிற் சங்கங்களின் தலைவர்கள் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படாதவிடத்தும் அவர்கள் வன்முறைகளைக் கடைப்பிடிக்காதவிடத்தும் தொழிலாளர்களின்; கோரிக்கைகள் தொடர்பாக அத்தலைவர்களோடு அரசுகளும் முதலாளிகளும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறார்கள் என்றால் அத்தொழிற் சங்கத் தலைவர்களால் அரச நிர்வாகங்களையும், தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளையும் தொழிலாளர்களின் ஒற்றுமையான கூட்டுப்பலத்தினால் முடக்க முடியம் என்பதனாலேயே.

மகாத்மா காந்தி எந்த வேளையிலும் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்லவே எனச் சிலர் வாதிடக் கூடும். கோடிக் கணக்கான இந்திய மக்களின் மனங்களில் மாகாத்மா காந்தி கேள்விக்கிடமற்ற தலைவராகத் திகழ்ந்தார்;. அவர் காட்டிய வழியில் இலட்சக் கணக்கானவர்கள் சத்தியாக்கிரகிகளாகவும் அகிம்சாவாதிகளாகவும் செயற்பட்டார்கள். அவரின் வார்த்தைகளுக்;குக் கட்டுப்பட்டு இலட்சோப லட்சம் மக்கள் அவரது அரசியல் முடிவுகளுக்கும் செயல்களுக்கும் துணையாக நின்றார்கள். இந்திய தேசியக் காங்கிரஸ் என்பது இந்தியா முழவதுவும் பரந்து விரிந்து பெரும் விருட்சமாக வளர்ந்து நின்ற மக்கள் இயக்கம். ஆதன் அன்புத் தலைவர் மகாத்மா காந்தியே. அதில் பிரிட்டிஷ் காரர்கள் எந்தச் சந்தேகத்தையம் கிளப்ப முடியாதவாறு இந்திய மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டு நின்றார்கள். 

பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் 1920ம் ஆண்டும், பின்னர் 1936ம் 37ம் ஆண்டுகளிலும  இந்தியாவின் மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்களின் போது மகாத்மா காந்தியின் காங்கிரஸே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது 1946ம் ஆண்டுத் தேர்தல்களிலும் அவ்வாறே. 1947ல் இந்திய அரசியல் யாப்பு நிர்;;;ணய சபைக்காக நடைபெற்ற தேர்தலின் போதும் காங்கிரஸ் தலைவர்களே பெரும்பான்மையாக இடங்களைப் பெற்றனர். அந்தத் தேர்தல்களின் போது இந்திய மக்களுக்கு சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டு நடத்தப்பட்டிருந்தாலும் காங்கிரசுக்கே மிகப் பெரும்பான்மை இடங்கள்; கிடைத்திருக்கும் என்பது பொது அறிவு.

மகாத்மா காந்தி இந்திய மக்கள் மத்தியில் ஒரு பெரும் அரசியற் காந்தமாக இருந்த போதிலும் 1936 - 37ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் பின்னர் 1946இலும் இந்திய முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது முஸ்லிம் லீக் கட்சியே. ஆனபடியாற்தான், பாகிஸ்தானை ஒரு தனிநாடாக பிரிட்டிஷ்காரர்களால ஆக்க முடிந்தது. இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தானை உருவாக்குவதில் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எவ்வளவுதான் சதி நோக்கங்கள் இருந்திருந்தாலும் இந்திய முஸ்லிம் மக்கள் பெரும்பான்யோரின் ஆதரவைப் பெற்றிருந்த முஸ்லிம் லீக் பாகிஸ்தான் உருவாக்கப்படுவதற்கான கோரிக்கையை வலுவாக :முன்வைத்தபடியாலேயே பிரிட்டிஷாருக்கு அதனைச் செய்வது சாத்தியமாயிற்று.

1947ம் ஆண்டு ஆகஸ்ட்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற போது கூட இன்றிருக்கும் அளவுக்கு உள்ள பிரதேசங்களைக் கொண்டதாக இந்தியா உலக வரைபடத்தில் இருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கன்னியாகுமரி தொடக்கம் இமயம் வரை, பஞ்சாப் தொடக்கம் மேற்கு வங்கம் வரை இந்திய மக்கள் பெரும்பான்யோரின் ஆதரவை இந்திய தேசியக் காங்கிரஸ் பெற்றிருந்தபடியால்த்தான் இன்று நாம் காணும் ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கவும் காங்கிரஸால் முடிந்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு ஏன் இதையெல்லாம் குறிப்பிடுகிறேன் என்றால் மக்களின் வெளிப்படையான ஆதரவு இல்லாமல் இன்றைய காலச் சூழலில் ஒரு மக்கள் தலைமை ஏற்பட முடியாது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களால் தேர்தல்களில் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படுபவர்களெல்லாம் நேர்மையாக இருப்பார்கள் என்றோ அல்லது மக்களின் அபிலாஷைகளுக்கும் எதிர்பார்க்கைகளுக்கும் ஏற்றவாறு திறமையாகச் செயற்படுவார்கள் என்றோ கூற முடியாது. ஆனாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே மக்களின் தலைவர்கள் என்பதை நிராகரிக்க முடியாது. 

(பாகம் 3 தொடரும்....) (பாகம் 1 ஐ வாசிக்க...)

(கட்டுரையாளர் முன்னாள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதல் அமைச்சர், முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர், 1970 களிலிருந்து இலங்கை அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களினூடாக பயணிப்பவர், ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் மூத்த போராளியுமாவார் -ஆர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com