Contact us at: sooddram@gmail.com

 

சீரோக்களாகும் ஹீரோக்கள்

1970 களில்

 'ஆம்புளப்புள்ள பொறந்திக்கே...என்ன பேர் வெய்க்கப்போறிங்க'

'வேறென்ன........கடாபி தான்'

1980களில்

பொம்புளப் புள்ளயெண்டா என்ன பேர் வெச்சாலுஞ் சரிதான். ஆம்புளப் புள்ள பொறந்தா.....யாசிர் அரபாத் தான்'

1990 களில்

ஆம்புளப் புள்ளயோளு பொறக்குமென்டா.....சதாம் ஹூஸைன் தான்'

கொடுப்புக்குள் சிரிப்பை வரவழைத்தாலும் அவ்வக்காலத்தில் இவை சீரியசானவை. மதிப்புக்குரியவை. அபிமானப் பெறுமானம் கொண்டவை. காரணம்...

கடாபி , யாசிர் அரபாத், சதாம் ஹூஸைன். இவர்கள் வேறு வேறு நாடுகளைச்சேர்ந்த வேறு வேறு கலாசாரங்களைக் கொண்ட வேறு வேறு காலகட்ட ஆட்சியாளர்கள். எனினும் குறிப்பாக உலக முஸ்லிம் களின் மனங்களைக் கவர்ந்த கதாநாயகர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்த அபிமானமானது மக்கள் தங்களில் ஒருவராக இத்தலைவர்களை எண்ணச் செய்திருக்கிறது.

மேற்குறித்த காலப்பகுதியில் பிறந்  ஆண்குழந்தைகளுக்கு பெற்றோர் மேற்படி பெயர்களை சூட்டி மகிழ்ந்தனர். இன்றும் இப்பெயர்களோடு பலர் இருப்பதை காணலாம்.

மேற்கு நாடுகளின் இஸ்லாத்திற் கெதிரான நிலைப்பாட்டை எதிர்த்தல். அமெரிக்கக் கூட்டாளிகளின் பெற்றோலியக் கொள்ளையை எதிர்த்தல். பல்தேசியக்கம்பனிகளின் அரபு- முஸ்லிம் நாட்டு வளச்சுரண்டலை தடுத்தல். போன்ற தடாலடி நடவடிக்கைகளால் ஒரு இரவுக்குள் இவர்களால் உலகின் கவனத்தை ஈர்க்கமுடிந்தது.

உலகில் ஜனநாயகம்இ சர்வாதிகாரம் என எந்தவிதமான ஆட்சியும் இருக்கலாம. இதில் எது நல்லது எது கெட்டது என்பதெல்லாம் அவ்வாட்சிக்குட்பட்ட மக்களது தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக இருக்கும். ஆனால் இன்றைய உலகில் தேர்தலில் தேர்வான ஆட்சியாகவோஇ கவிழ்ப்பு மூலம் உருவான ஆட்சியாகவோ இருக்கலாம்.ஆனால் இதில் எந்த நாடு தன்நாட்டு மக்களது செல்வத்தைஇ சொத்துக்களை அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் கொள்ளையடிக்க அனுமதிக்கிறதோஇ மேற்கு நாடுகளின் நிர்வாண கலாசாரத்தை ஏற்றுறக் கொள்கின்றதோ அதுவே பாருக்குள் உண்ணத நாடு. மாறாக எந்த நாடு தனது செல்வங்களை மேற்கு நாடுகள் கொள்ளையடிக்கும் போது எதிர்க்கிறதோ அது கெட்டநாடு.

 இந்த அயோக்கியத்தனத்தை உலகம் எப்படி ஏற்று;க்; கொள்ளும்? எப்படி நம்பும்? என்றெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. அத்தனை விசக்கருத்துக்களையும் தேன் தடவிஇ உண்மை முலாமிட்டு நம்பவைக்க யூதர்களின் டிடிஉஇ உnnஇ கழஒ போன்ற ஊடகங்கள் நூற்றாண்டு அனுபவத்தோடு இருக்கின்றன. அதே நேரம் அந்த அரக்கத்தனங்களை நம்ப அப்பாவி மக்களும் தயார். கண்விற்று காட்சிவாங்கத்தடிக்கும் அந்தந்த நாட்டு எதிர்க்கட்சிகளும் தயார்.

ஆடசியில் இருக்கும் கட்சியோ  நபர  அமெரிக்கா உட்பட மேற்குநாடுகளின் ரௌடித்தனங்களையும்இ பகல் கொள்ளையையும் அனுமதிக்கும் பட்சத்தில் அதனை எத்தனை வருடங்களுக்கேனும் நீடிக்கத்தயார். .அல்லவெனில்இஅது எவ்வளவு பெரிய ஜனநாயக மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக இருப்பினும் அதனைக் கவிழ்த்து விடவும் அவ்வாட்சியாளனை தெருவில் போட்டு சுட்டுக் கொல்லவும் உயைஇயெவழ என்பன தயார்.

இத்தாலியின் காலணித்தவ நாடாக விளங்கிய லிபியாவை மீட்பதில் உமர்முக்தாரின் சுதந்திரப்; போராட்டம் லிபியாவை லிபியரின் கையில் கொடுத்தது. எனினும் 1960ல் அங்கு பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டதும் மறுகணம் அது அமெரிக்காவின் மூக்கில் மணத்தது. பின் என்ன அவசர அவசரமாக லிபியாவில் ஒரு ராணுவத்தளத்தை உருவாக்கியது. ஏவகணைஇ எரிகுண்டுகள் போண்ற புதியரக ஆயதங்களை பரீட்சித்துப்பார்க்கும் இடமாக லிபியப் பாலைவனம் மாறியது..

1969 வரை மன்னர் இத்ரியாசி லிபியாவின் பெற்றோலியத்தை மேற்கு நாடுகளின் கொள்ளையடிப்புக்கு திறந்துவிட்டபடியால் எல்லாம் சுகமே! சுபமே.! உலகின் உயர்தரமான லிபியப் பெற்றோலை மேற்கு நாடுகள் நீ நான் என கண்மூடி சுகமா உறிஞ்சியிழுத்துக் கொண்டிருந்த வேளையில் கேணல் முஅம்மர் கடாபி ஆட்சியைப்பிடித்ததும் மேற்கு நாடுகள் திடுக்கிட்டு விழித்தன. ஊற்று நின்று போனது. லிபியாவின் பெற்றோல் உயர்தரமானது. சுத்திகரிப்பு செலவு குறைந்தது. உலகப் பெற்றோலியத்தில் 2மூ லிபியப்பாலைவனத்தரையின் கீழ  உள்ளது. அவ்வரிய செல்வம் கடாபியால் நாட்டுடமையாக்கப்பட்டது. பேற்றோலிவருமானம் நாட்டு நலனைநோக்கித்திருப்பப்பட்டது. இது மேற்கு நாடுகளின் வயிற்றில் புளியைக்கரைத்தது. அவற்றுக்கு இது அநியாயமாகப்பட்டது. அக்கிரமமாகப்பட்டது.

உடனே உத்தரவுகள் பறந்தன. உலகவங்கிஇ சர்வதேச நாணய நிதியம் என்பன லிபியாவுக்கான கடனை நிறுத்தல் அல்லது நிபந்தனையுடன கடன் வழங்கல். ஜ.நா.வின் பாதுகாப்புச்சபை நேட்டோ தாக்குதலுக்கு அனுமதியளிக்க காரணம் கண்டுபிடித்து சோடித்தல். என்.ஜி.ஓ.க்கள் உள்நுழைந்து மனித உரிமைஇ ஜனநாயகம் என்ற பேரில் மக்களது மனநிலையை கடாபிக்கு எதிராகத் தருப்பிவிடுவத  ோன்ற கைங்கரியங்கள் தயார் செய்யப்பட்டது.

இவ்வாறு லிபியாவை கபளீகரம் செய்வதற்கான சதித்திட்டங்கள் ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்க லிபியாவின் இயற்கை வளம் லிபியாவை சகலதுறையிலு;ம  முன்னேற்றப் போதுமானது என்ற உண்மையை லிபிய மக்களுக்கு புரிய வைக்கும் வேலையை கடாபி செய்து கொண்டிருந்தார். மட்டுமல்லாது ஆபிரிக்க நாடுகளுக்கும் அரேபிய மக்களுக்கும் பல்வேறு செய்திகளை அவர  ிடுத்தார்.

சூ. எண்ணை உற்பத்தி நாடுகள் பெற்றோலியத்தை ஒரு ஆயதமாகப் பாவிக்கவேண்டும் என்றார்.

சூ. ஜ.நா.சபை போல ஆபிரிக்க நாடுகளுக்கெண்று ஒரு சபை வேண்டும்.

சூ. ஜ.எம்.எப்.க்கு இணையாக ஆபிரிக்க நாணய நிதியம் உருவாக வேண்டும்.

போன்ற அறைகூவல்கள் உலகைத் திரும்பிப்பார்க்க வைத்தன. குறிப்பாக ஆபிரிக்க நாடுகளைக் கவர்ந்தன.கடாபியை உமர் முக்தாரின் மறு அவதாரமாகப்பார்த்தனர். நாளாவட்டத்தில் ஆபிரிக்காவின் கதாநாயகனாகிக் கொண்டு வந்தார். தொடர்ந்தும் மேற்கை நோக்கி பல சவால்களை வெளியிட்டார்.

'அப்துல் நாஸர் என் வழிகாட்டி. .ஸ்டாலினுமஇ ஹிட்லரும் என் நண்பர்கள்'எனெ;றார். சீனாஇ ரஸ்யாஇ பிறேசில் போன்ற நாடுகளுடன் எண்ணை வர்த்தகத்தைப் பேணினார். இது போதாதா மேற்கு நாடுகள் கடாபியை பயங்கரவாதியாக சித்திரிக்க?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரீகன் 'கடாபி ஒரு பைத்தியம் பிடித்த நாய்' என்றபோது. 'அமெரிக்கர்கள் என்னைப்பாராட்டினால் தான் நான் வெட்கப்பட வேண்டும்' என்று பதிலளித்தார்.

தென்னாபிரிக்க சுதந்திர தின வைபவம் ஒன்றில் பில் கிளின்டன் 'ஆபிரிக்காவில் இருந்து கடாபியின் அதிகாரம் ஒழிய வேண்டும்' என்று பேசிய போது நெல்சன் மண்டேலா உடனே எழுந்து 'எமது இருண்டகாலத்தில் உறுதுணையாக இருந்த கடாபி குறித்து பில் கூறிய கருத்துடன் என்னால் உடன்பட முடியாது' என்றார்.

உலக வங்கியின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கவிருந்த கென்யாஇ சாட்;இ மாலிஇ எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்கினார். பலஸ்தீன விடுதலை முதல் ஜ.ஆர். ஏ வரையிலான சுதந்திரப்போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கினார். இதனால் 'ஆபிரிக்காவின் சேகுவேரா' என கடாபி அழைக்கப்பட்டார்.

ஓரு கட்டத்தில

நான் அரபு ஆட்சியாளர்களின் முதல்வன்! ஆபிரிக்காவின் அரசன்! முஸ்லிம்களின் அரசன்! என்றெல்லாம் அறிவிப்புச் செய்ததோடல்லாமல் நவீன காலத்திற்கேற்ப அல்குர்ஆனில் திருத்தம ;செய்ய வேண்டும் என்றார்.

நாற்பத்து நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்த கடாபி லிபியாவை ஒரு மதச்சார்பு நாடாகவோ மதச்சார்பற்ற நாடாகவோ ஒரு போதும் பிரகடணம் செய்திருக்க வில்லை. மாறாக அவர் இறைவனது கண்டுபிடிப்பபையும்இ மனிதக்கண்டுபிடிப்பையும் இணைத்துப்பார்க்க முற்பட்டார். அதாவது மாணவராக இருந்த காலத்தில் கொம்யூனிசத்தால் கவரப்பட்ட கடாபி வாய்ப்புக் கிடைத்ததும் இஸ்லாத்தையும் கொம்யூனிசத்தையும் ஒரு கோட்டில் இணைக்க முற்பட்டார். அந்த வகையில் பசுமை நூல் என்று ஒரு நூலை எழுதினார். அதுவே நாட்டின் யாப்பும்இ லிபிய மக்களது வாழ்க்கைப் போக்கும் எனப் பிரகடணம் செய்தார். ஏறக்குறைய மாற்றுக் கருத்தடைய எந்த வொரு ஊடகமும் அங்கில்லாமல் பார்த்துக் கொண்டார். கட்சியரசியலோ எதிர்க்கட்சி அரசியலோ எதுவுமே அங்கில்லாமல் பார்த்துக் கொண்டார்.ஆட்சியையோ கடாபியையோ விமர்சிப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். இஸ்லாமிய ஆட்சிகோரியவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். பலர் சிறையில் வைத்தே கொல்லப்பட்டனர். இகுது இவ்வாறிருக்  மக்களது நலனோம்பு விடயங்களில் கரிசனை காட்டத் தவறவில்லை.

-லிபியர்கள் அனைவர்க்கும் வசிக்க விடும்இ மானியமும்.

-லிபிய மக்கள் யாரும் மின்கட்டணம் செலுத்துவதில்லை.

-சிறியரக தொழில் துறைகளை பொதுமக்கள் மேற் கொள்ள பாரிய தொழில் துறைகளை அரசு மேற் கொண்டது.

-லிபியா கல்வி சுகாதாரம் போன்ற துறைகளில் ஆபிரிக்காவில் முன்னணிக்கு வந்தது.

-கடாபி ஆட்சிக்கு வந்து 15 ஆண்டுகளில் 1000பேருக்கு 01 வைத்தியர் என்ற அளவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.

-மது தவறனைகள் கிடையாது.

-பெண்கள் மஹ்றம் இல்லாமல் வெளியில் செல்லத்தடை.

-களியாட்ட நிலையங்கள்இ தியேட்டர்கள் கிடையாது.

-இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 42 ஆண்டுகளில் லிபியா சர்வதச நாணய நிதியத்திடம் கடன் பெறாத நாடாக திகழ்ந்தது. அந்நாட்டு மக்களது வாழ்க்கைத்தரம் சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத்தரத்துக்கு இணையானது. என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடன் கொடுத்து அடிமையாக்குதல்இ உள்நாட்டுக்குள் ஆயதக்குழக்களை உருவாக்கிவிடுதல்இ அணுவாயுதம் இருப்பதாக கதைகட்டிவிடுதல்இ போன்ற மிரட்டல்கள் எதற்கும் மசியாது கடாபி தன்வழி தனிவழி எனப்போய்க் கொண்டிருக்கும் போது தான் இரட்டைக் கோபுரத்தாக்குதல் என்றும்இ காரணம் அல்கைதா எனறும் புதியதோர் கண்டபிடிப்பை அமெரிக்கா வெளியிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் தான் உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்றை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டபிள்யு.புஸ் வெளியிட்டார். அதாவது யாரெல்லாம் அமெரிக்காவை பொறுத்துக் கொண்டு ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே ஜனநாயகவாதிகள்.மாறாக அமெரிக்காவின் பக்கத்தில் இல்லாதோர் அனைவரும் பயங்கரவாதிகள்' என்ற மனிதகுலம் வெட்கித்தலைகுனியும் செய்தியே அது.

புதையல் கிடைத்தது போல இரட்டைக் கோபுரத் தாக்குதல் அமெரிக்காவுக்குக் கிடைத்தது. உடனே ஈராக்கி;ல் பேரழிவு ஆயதம் இருப்பதாக ஒரு உலகப் பொய்யை டொனிப்பிளேயர் எடுத்;துவிட சொல்லி வைத்தது போல் ஜ.நா.சபை தாக்குதலுக்கு அனுமதி கொடுக்க அமெரிக்கா பேரழிவு ஆயதங்களைக் கொண்டு ஈராக்கை சல்லடைபோட்டு சதாம்ஹூஸைனைப்பிடித்து உலகம் பாத்திருக்க தூக்கில் இட்டுக் கொன்றது. இப்பயங்கரவாதச் செயற்பாட்டின் மூலம் 'மேற்கு நாடுகளின் பெற்றோலியக் கொள்ளைக்கு இடம் கொடாவிடில் இது தான் கதி' என அமெரிக்கா வெளியிட்ட மிரட்டலுக்கு கடாபி சற்று ஆடித்தான் போனார். எனினும் எளிதில் மசிய வில்லை.

உடனேயூத லொபிகள் காரியத்தில் இறங்கின. லிபியாவில அணுஆயுத தயாரிப்புக்கான முஸ்தீபு இடம்பெறுகிறது .கடாபி 200 பிலிலியன் டொலருக்கும் அதிகமா பணத்தை தன்னுடமையாக்கியுள்ளார். போன்ற கதையாடல்களை யூத ஊடகங்கள் திரும்பத்திரும்ப கூறி உண்மையாக்கிக் கொண்டிருந்தன. நாளுக்க நாள் கடாபிக்கெதிரான நெருக்குதல்கள் உள்நாட்டிலும் தலை காட்டத் தொடங்கியது. இதனால் மெல்லக் கமடாபி நசியத்தெடங்கினார். அரசாங்கத்தின் கைகளில் இருந்த பெருந் தொழில்துறைகள் கடாபி குடும்பம் ராணுவத்தளபதிகள் குடும்பம் உட்பட தனியார் மயப் படுத்தப் பட்டது. லிபியாவின் சூழு;நிலையின்; பிரகாரம் சொல்லப்போனால் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிய பலர் பராரைகளாக மாறுவதற்கான அடி எடுத்து வைக்கப்படடது. மறுவார்த்தையில் சொல்வதானால் லிபியாவிற்குள் உலகமயமாதல் என்ற மாபெரும் பகற்கொள்ளைஇ சீர்திருத்தம் என்ற முலாம்பூசப்பட்டு அனுமதிக்கப்பட்டது. ஒரு வரியில் சொல்வதானால் 'மேற்கு நாடுகளை வினியோகஸ்தர்களாகவும் ஏனையோரை நுகர்வோர்களாகவும் கட்டமைப்பதே உலகமயமாக்கம்' ஆகும். அதாவது பகிர்ந்துண்டு மகிழ்ந்து வாழ்ந்த லிபிய மக்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ள அத்திவாரமிடப்பட்டது. மேலும் மிரட்டல கலந்த அலுத்தங்களின் காரணமாக சர்வதேச என்.ஜி.ஓ க்கள் செயற்பட அனுமதிக்கப்பட்டன.

அவை மனிதஉரிமையை வளர்த்தல்இ கருத்துச் சுதந்திரத்தை வலுப்படுத்தலஇ; ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் போன்ற கோதாவில் கடாபிக் கெதிரான மனநிலையை மக்கள் மனதில் ஊண்றியதும் அது மெல்ல வேலை செய்ய ஆரம்பித்தது. உளவறிதல்இ கலாசார மாற்றத்தை ஏற்படுத்தல்இ அமெரிக்க சார்புநிலையை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் திரைமறைவில் அரங்கேறத்தைதொடங்கியது. ஆமெரிக்கன் எய்ட்ஸ்இ கிறிஸ்டியன் எய்ட்இபோன்ற என்.ஜி.ஓ க்கள் இதில் முன்னணியில் நின்று செயற்படடன.

 ஓப்பீட்டு ரீதியில் கடாபியின் அரசு ஏற்படுத்தித் தந்திரு;கும் பொருளாதார ஏற்பாடுகளை நிச்சயமாக எண்ணை உறிஞ்ச வரும் மேற்கு நாடுகள் ஏற்படுதட்;தித் தரப் போவதில்லை என்பதை அறியாத மக்கள் மெல்ல வீதிக்கிறங்கத்தெடங்கினர். விசயம் கை மீறிப்போகு முன் விளித்துக்கொண்ட கடாபிஇ உள்துறைஇ வெளியுறவுஇ உட்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு தேர்தல்களை நடாத்த முன்வந்தார். மேலும் எண்ணை வருமானத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் யோசனையையும் வெளியிட்டார். கடாபியின் இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வருமெனில் முயற்சிகள் யாவும் வீணாகி விடும் என்பதை உணர்ந்த மேற்கு நாடுகள் சுறுசுறுப்பாகின. தயார்படுத்தி வைத்திருந்த திடடங்களை ஒன்றன் பின் ஒன்றாக விரவாக எடுத்து விட்டன.

ஏற்கனவே மக்கள் மத்தியில் கடாபிக்கெதிரான மனநிலையை என்.ஜி.ஓ மூலம் கொழுந்து விட்டு எரிய விட்டாயிற்று அது அணைவதற்கு முன் அடுத்தடுத்து காரியங்கள் அரங்கேறின. ஏற்கனவே கடாபியினால் வெளியேற்றப்பட்டு கடுப்பில் இருந்த இங்கிலாந்தின் எநநனழட எண்ணை நிறுவனம் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட புரட்சிப்படைக்கு5000கோடி  ெறுமதியான ஆயதங்களை வழங்கியது. மெல்ல மெல்ல கட்டமைக்கப்பட்ட கடாபிக் கெதிரான புரட்சி பரவிக்கெண்டிருந்தது.  இவ்வேளையில  இது தான் சமயம் என கடாபியிடம் இருந்து மக்களை மீட்டல் என்றபோர்வையில் (முன்பு சதாம் ஹூஸைனிடம் இருந்து ஈராக் மக்களை காப்பாற்றியது போல!!!!!!!!!???)உலகில் சமாதானத்தை உருவாக்க உருவாக்கப்பட்ட ஜ.நா.  பாதுகாப்பு சபை லிபியாவை த்தாக்குமாறு நேட்டோவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

2011 மார்ச் 31ல் மாலைப் பொழுதொன்றில் லிபியாவின் வான் பரப்பை நேட்டொ போர்விமானங்கள் ஆக்கிரமித்தன. மீட்;பர்கள் வந்துவிட்ட மகிழ்ச்சியில் புரட்சிப்பபடை ஆரவாரி;த்துக் கொண்டிருக்கும் போது முதலாவது குண்டு குடியிருப்புப் பிரதேச்ததுக்குள் வந்து விழுந்து குடியிருந்ததற்கான அடையாளமே தெரியாதளவு;க்கு அப்பிரதேசத்தைத் தூக்கித்தூர எறிந்தது. இடைவிடாது வான்தாக்குதல் தொடர்ந்தது. 14.10.2011 போதும் கேம்ஓவர் நிறுத்திக் கொள்க! என ஜ.நா.சபை அறிவிக்கும் வரை 9600 தாக்குதல்கள் மேற் கொள்ளப்படடன.

மேற்கின் எண்ணைக் கொள்ளைக்கு இடம் கொடாத லிபியா என்ஜி.ஓ. க்கள்மூலமும் உலகமயமாதல் சித்தாந்தம் மூலமும்இ மனித உரிமைஇ கருத்து;சுதந்திரம்இ ஜனநாயகம் போன்ற பளபளப்புக்கள் மூலமும் பதப்படுகத்தப்பட்ட லிபியா வான் தாக்குதலின் ஒரேயடியில சல்லடைத்தேசமானது. அதன் தலைவன் அந்நாட்டின் குடிமக்களாலேயே தெருவில் போட்டு சுட்டுக் கொல்லப்படச் செய்யுமளவுக்கு யூத ஊடகங்;களும்இ என்.ஜி.ஓ.க்களும் சக்தி வாய்ந்தவை. நேட்டோ படைகளின் பொதுச்செயலாளர் அண்டர்சன் பாக் ரஸ்மூசென் 'வரலாற்றின் வெற்றிகரமான தாக்குதல்' என இதனை வர்ணிக்கிறார்.

ஈராக்இ ஆப்கானிஸ்தான் போன்று புதிய ஜனநாயகத்தலைமை என்ற பெயரில் லிபியாவுக்கும் அமெரிக்க பொம்மை ஒன்றை அரியணையில் தூக்கி வைக்கப்பட்டாயிற்று.

லிபியாவில் கடாபி கொலை செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. புதிய ஊடுருவல் படை திரிபோலியின் கரைகளில் இறங்க திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. ஈராக்இ ஆப்கன் பிரதேசங்களில் வேலை முடிந்த பன்னாட்டு கட்டுமான நிறுவனங்கள் லிபியா பக்கம் பார்வையை திருப்பி உள்ளன. லிபியாவின் புனரமைப்பு வேலைத் தேவைகளையும்இ அதற்கு மாற்றாக அமெரிக்க-நேட்டோ படைகளின் செயல்நன்றியோடு பெறப்போகும் எண்ணெய் வளத்தையும் கணக்கிட்டு சர்வதேச கம்பெனித் தரகர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். கடாபியின் படுகொலைக்கு முன்பாக 20.10.2011 அன்று 80 பிரெஞ்சு கம்பெனிகள் லிபியாவின் தேசிய இடைநிலை அரசின் தலைவர்களை திரிபோலியில் சந்தித்துள்ளன. சென்ற வாரம் பிரிட்டனின் ராணுவ அமைச்சர்பிலிப்ஹம்மண்ட்இ பிரிட்டன் கம்பெனிகளை சூட்கேசுகளுடன் திரிபோ லிக்குச்செல்லதயார் செய் யும்படி சொல்லிவிட்டாராம். கடாபியின் உடல் அடக்கம் செய்வதற்கு முன்பே பிரிட்டிஷ் கம்பெனியான ட்ராங்கோ புnராnஜக்ட்ஸ் தனது இணையதளத்தில் லிபியாவில் தொழில் துவங்குவதற்கு விளம்பரம் செய்யத் துவங்கிவிட்டது.

பிரான்ஸ; மற்றும் பிரிட்டனைப் போலவே லிபிய போரில் நேட்டோவின் வான்தாக்குதலுக்காக அமெரிக்காவும் பலனடையப்போகிறது. அமெரிக்க-அரபு வணிக தேசிய குழுவின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலகர் டேவிட் ஹமோட  'ஆயுதங்களையும் வேலையற்ற இளைஞர்களையும் கொண்ட நகரங்கள் இன்னமும் உள்ளதாகவும் கூறுகிறார். இதனால் பாதுகாப்பு கூலிப் பணிகளை செய்யக்கூடிய சர்வதேச நிறுவனங்களான எஸ்என்இ ஸ்பெல் க்ரூப்ஸ் லிட் மற்றும் எஸ்.இ.என். ரிNசர்ஸ் க்ரூப் தங்கள் அலுவலகங்களை திரிபோலியில் திறந்துவிட்டன.

 லிபியாவில் குண்டுவீச்சில் நொறுங்கிய கட்டுமானங்களை புதுப்பிக்கவும்இ வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள்இ மருத்துவமனைகள்இ பாலங்கள்இ வீதிகள்இ எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் புனரமைப்புக்கு வேலைகள் தேவைப்படுகின்றன. மேலும் பலமாத போருக்கு பின்னர் இன்னமும் லிபியாவில் பாதுகாப்பு அச்சமூட்டுவதாகவே உள்ளதாகவும்இ எனவே புதியதாக ராணுவ பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும்இ லிபியாவில் தங்க வேட்டைக்கான ஓட்டம் இப்போதே துவங்கிவிட்டன என்றும் அமெரிக்க-அரபு வணிக தேசிய குழுத் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலகர் டேவிட் ஹமோட் தெரிவிக்கன்றார். நியூ யோக் டைம்ஸ் (29.10.2011) கடாபி மீதான குற்றச்சாட்டுகளுக்கப்பால் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் பொம்மையரசு கடாபி ஏற்பத்தியிருந்த பொருளாதார வளமுள்ள வாழ்வை இனி எப்போதும் லிபியர்களக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படமாட்டாது என்பது நிச்சயம்.

மொத்தத்தில் லிபியா சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்திருக்கிறது. அது மீண்டெழக் காத்திருக்க வேண்டும். இன்னுமொரு உமர்முக்தாரை அது வலிசுமந்து பிரசவிக்கும் வரை.

--மூதூர் முகம்மதலி ஜின்னா.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com