Contact us at: sooddram@gmail.com

 

ஒரு அனாதை இல்லத்தில் இரண்டு வாரங்கள்: “நீங்கள் ஸ்ரீலங்கனா அல்லது பிரித்தானியரா?”

(ஜூலியன் ரணதுங்க)

சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்திலுள்ள எனது பாடசாலையில், கோடை விடுமுறையின்போது தொண்டு நிகழ்ச்சித் திட்டத்துக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவரொருவருக்கு உபகாரச் சம்பளம் பரிசாக வழங்கப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அந்தப் பரிசின் பெயர் “ஜோனி சட்டன் நினைவுப்பரிசு” என்பதாகும். பாடசாலையிலிருந்து சமீபத்தில் பட்டம் பெற்று வெளியேறிய ஜோனி சிரமமான மலையேற்றம் ஒன்றின்போது கடினமான உயிர்கொல்லி நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு இறந்து போனார். மற்றும் இந்த நினைவுப் பரிசு அவரது பெற்றோர்களின் நிதியுதவியினால் வழங்கப்படுகிறது. எனது நினைவுகளில் முன்னணியிடத்தைப்; பிடித்திருக்கும் வார்த்தைகளுடன் ஸ்ரீலங்காவிலுள்ள ஒரு அனாதை இல்லத்துக்கு பயணம் செய்வது பற்றி விளக்கி நான் அதிகாரிகளுக்கு ஒரு திட்டத்தை அனுப்பியிருந்தேன்.

அதன்பின் சட்டனினால் செலவு செய்யப்படும் பணத்துக்கு எனது திட்டம் தகுதியுள்ளதா என்பதை தீர்மானிக்கும் சர்வ வல்லமையுள்ள மூவரைக் கொண்ட ஆசிரியர் குழுவினரிடம் எனது பிரேரணையை சமர்ப்பித்தேன். சில அசாதாரணமான அதிர்ஷ்டம் அடித்ததினால் ஆசிரியர்கள் அப்போது எனது சுற்றுலா பயனுள்ளதாகவிருக்கும் என்று தீர்மானித்தார்கள். ஒரு மாலைப் பொழுதில் நான் திருமதி சட்டன் அவர்களைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் எனது தொண்டர் சேவைக்கு தேவையான உதவியளிக்கும் காசோலை ஒன்றை என்னிடம் கையளித்தார்.

நான், உலகெங்கிலுமுள்ள நாடுகளுக்கு  சமூக சேவைத் திட்டங்களுக்கு பயணிகளை அனுப்புவதில் விசேடத்துவம் பெற்ற ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஒரு பயண நிறுவனம் ஊடாக – நாங்கள் அதை ட்ராவல்கோ என அழைப்போம் - எனது தொண்டர் சேவை முயற்சிகளுக்கான பயணத்தைப் பதிவு செய்தேன். இது பயணிகள் உள்ளுர் வாசிகளுடன் கலந்து பழகி  அவர்கள் செல்லுமிடங்களின் உண்மையான தன்மையை அறிந்து கொள்ள உதவுவதுடன், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் முன்பாக ஆடம்பரமாக அவிழ்த்து விடப்படும்  கற்பனையான போலி ஆதாரங்களை தவிர்க்கிறது. நான் ஸ்ரீலங்காவில் கொழும்புக்கு சமீபமாகவுள்ள ஒரு அனாதையில்லத்தில் தொண்டராகப் பணியாற்றுவதை தெரிவு செய்தேன்.

தொண்டனாக எனது பணி ஆரம்பிக்க வேண்டிய நேரம் திங்கட்கிழமையாகவிருந்தது. எனவே அதற்கு முந்திய தினம் மாலையில்  அன்றைய இராப்போசனத்தின்போது ஏனைய தொண்டர்களை சந்திக்கலாம் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. ட்ரவல்கோ நிறுவனத்தின் உள்நாட்டுப் பிரதிநிதிகளில் ஒருவரான கிஸ்திரி அன்றைய தினம் எங்களுடன் உணவருந்தினார். அவர் கடந்த பலவருடங்களாக ட்ரவல்கோ நிறுவனத்தில் பணியாற்றுவதுடன் வெகு நன்றாக ஆங்கிலம் பேசினார்.

எங்கள் உரையாடலின்போது யு ரியுப் இணையத்தளத்தில் எல்ரீ.ரீ.ஈ படிப்படியாக மறைவதற்கு முன்னர் கடைசிச் சில மாதங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிக்காட்டும் ‘ஸ்ரீலங்காவின் கொலைக்களம்’ என்கிற சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அது தடைசெய்யப்படுவதற்கு முன்பு அதைப் பார்ப்பதற்கு வசதி கிட்டிய பலருள் தானும் ஒருவர் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.

இயற்கையாகவே நான் ஒருவித ஆவலால் தூண்டப்பட்டேன். ஏனெனில் அந்த ஆவணப்படத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படுத்திய கடுமையான எதிர்ப்புகளைப் பற்றி நான் வாசித்தறிந்துள்ளேன். அத்தோடு அந்த காணொளிக் காட்சிகளைப்பற்றி அரசாங்கம் வெளியிட்ட கடுமையான மறுதலிப்புகளையும் நான் கேள்விப்பட்டிருந்தேன் மற்றும் நானும் அந்த ஆவணப்படத்தை பார்த்திருக்கிறேன். ஆனால்  ஒரு உண்மையான ஸ்ரீலங்கா வாசியினுடைய கருத்தை அறிந்துகொள்ள இங்கே எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

அதைப்பற்றிய பேச்சை ஆரம்பித்த கிஸ்திரி பிறகு நிறுத்திவிட்டு “நீங்கள் ஸ்ரீலங்கனா அல்லது பிரித்தானியரா?” என்கிற கேள்வியை என்னிடம் கேட்கும் முன்பு என்னை சந்தேகத்துடன் பார்;த்தார். ஸ்ரீலங்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரண்டு நாட்டுக்குமான எனது இரட்டைக் குடியுரிமையைப்பற்றி அவரிடம் விளக்குவதற்குப் பதிலாக நான் ஒரு ஸ்ரீலங்கன்தான் என அவருக்குப் பதிலளித்தேன். இறுக்கமடைந்திருந்த அவரது தசைநார்கள் சற்றே இளகியது போலத் தோன்றியது. அவர் மேலும் பேச்சைத் தொடர்ந்தார். ”நான் நினைக்கிறேன் அவைகள் எல்லாம் போலியாக உருவாக்கப்பட்டவை” என்று அவர் கூறியதும் எனது அறிவுக்கு எட்டியவரை அந்தக் காட்சிகள் உண்மையானவை என ஐநா ஆராய்ந்து அறிவித்துள்ளதே என நான் கிஸ்திரிக்கு அறிவித்தேன்.

கிஸ்திரி தான் ஏன் ஐநாவின் எண்ணத்துக்கு மதிப்பளிக்கவில்லை என்பதை எனக்கு விளங்க வைப்பதற்காக தனது பேச்சைத் தொடர்ந்தார். ஒசாமா பின்லாடனை சுட்டுக்கொன்று  முறைப்படி அவரது உடலைக் கடலில் அடக்கம் செய்தபோது, அமெரிக்கர்களிடம் ஐநா அந்த நடவடிக்கைகளின் சட்ட முறைகள் பற்றிய எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. பின்லாடனின் மரணத்துக்கான விசாரணைகளில் குறைவு இருப்பது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இந்தத் தெளிவின்மை அவர்கள் நிச்சயமாக அதைச் செய்தார்கள் என்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை வழங்குவதில்லை. எனவே நாங்களும் அதையே ஸ்ரீலங்காவின் உள்நாட்டு யுத்தத்தை அணுகும்போது செய்ய முடியும்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் உத்திகளை பாதுகாக்கும் விதமாக மேலும் சிலவற்றைக்கூறி முடிக்கும்போது கடைசி வரியாக ஆனால் பரவாயில்லை - இப்போது எல்லாம் பாதுகாப்பாக உள்ளது.  போர் முடிவடைந்து விட்டது. மற்றும் கோட்டபாயா இப்போது வீதிகளைச் செய்து வருகிறார் என்று கூறினார். கிஸ்திரி ஒரு தவறைச் செய்துவிட்டார் என அப்போது நான் நினைத்தேன். அரசாங்கத்தின் அதிர்ச்சியுண்டாக்கும் செயற்பாடுகளை உண்மையில் பயணம் செய்வதற்கு இப்போது நல்ல சீரான பாதை கிடைத்துவிட்டது என்பதன் மூலம் நியாயப்படுத்தி விட முடியும் என்று அவர் நிச்சயமாக சொல்லியிருக்கக் கூடாது?

இராப்போசனத்தில் கலந்து கொண்டிருந்த மற்றும் சில விருந்தாளிகள் அரசாங்கம் இரகசியமான தன்மையில் நடந்துகொண்ட அதன் நடத்தையையிட்டு தங்கள் கவலையை வெளிப்படுத்தினார்கள். மூன்று ஆசிரியர்களும் மற்றும் பாடசாலைக் கல்வியினை முடித்தபின்பு பல்கலைக் கழகத்துக்கு செல்லுமுன்பு சிறிய வருட இடைவெளியை எடுத்துக்கொள்ளும் மூன்று மாணவர்களுமாகச் சேர்ந்து மற்றைய ஆறு தொண்டர்கள் தீவினைச்சுற்றியுள்ள மூன்று வௌ;வேறு திட்டங்களுக்காக அனுப்பி வைக்கப்பட இருந்தனர். நான் அவர்கள் ஒவ்வொருவரிடமும் எல்லாவற்றிலும் மேலாக வேறுபல தொண்டர் சேவைப் பிரதேசங்களை தெரிவு செய்யக் கூடியதாகவிருந்தும் முக்கியமாக எந்த விடயம் உங்களை இந்தச் சேவைக்காக ஸ்ரீலங்காவைத் தெரிவு செய்யத் தூண்டியது என வினவினேன்.

இரண்டு தொண்டர்கள் நீரில் மூழ்கியோடுவதில் வல்லவாகள். அவர்கள் ஸ்ரீலங்காவில் சிறப்பான அத்தகைய நீர்மூழ்கி நீச்சலடிக்கக்கூடிய இடங்கள் இருப்பதாக கேள்விப்பட்டு வந்ததாக சொன்னார்கள். மற்ற இரண்டு தொண்டர்கள் தாங்கள் இந்தத் தீவை தேர்வு செய்ததற்கான காரணம் இதன் இயற்கைத் தன்மைக்கும் இங்குள்ள மக்களின் இதமான பழகும் தன்மைக்கும் வேண்டியே என்று. அடுத்த இரண்டு பயணிகளும் தாங்கள் ஒருபோதும் ஆசியாவுக்கு வருகை தந்ததில்லை என்றும் அதனால் இத்தகைய ஒரு சிறிய இடத்துக்குள் அதிகமானவற்றைக் காண்பதற்கு ஸ்ரீலங்காதான் பொருத்தமான இடம் என்று நினைத்ததாகவும் தெரிவித்தார்கள்.

அடுத்தநாள் காலை நாட்டைப்பற்றிய ஒரு விளக்கம் வழங்கப்பட்டதும் நாங்கள் எங்கள் திட்ட இணைப்பாளர்களைச் சந்தித்தோம். நான் அந்த அனாதை இல்லத்தில் இருந்தபோது திரு திசாநாயக்கா என்பவர்தான் தினமும் என்னைப் பரிசோதித்துக் கொண்டிருந்த இணைப்பாளர் ஆவார். அவர் தியானத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தபடியால், தியானத்தின் அடிப்படைக் கருவைப்பற்றி கலந்துரையாடி எங்கள் நேரத்தைக் கழித்தோம். தியானத்தின் தனித்தன்மையான ஒரு முக்கிய அம்சமாக இருப்பது கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நம்மைக் கடந்து செல்ல விடுவதே என்று அவர் தெரிவித்தார். தியானம் செய்யும்போது அவர் தனது பொறுப்புக்களிலிருந்தும் கவலைகளிலிருந்தும் தன்னை தூர விலக்கிவைக்க முயற்சிக்கிறார். உணர்வுபூர்வமான பற்றுதல்களைக் குறைப்பதற்கு இந்த உத்தியின் மூலம் நான் கற்றுக்கொண்டேன். நீங்கள் குறைவான துன்பங்களையே எதிர்கொள்வதுடன் மற்றும் முடிவில் அதன் விளைவாக மகிழ்ச்சியை அடைகிறீர்கள்.

நாங்கள் அனாதை இல்லத்தை விரைவிலேயே அடைந்தோம். நிலுமினி என்பவரை தலைமையாசிரியராகக் கொண்ட அந்த இல்லத்திலேயே அடுத்துவரும் இரண்டு வாரங்களையும் நான் கழிக்கவேண்டியிருந்தது. எனக்கு சொந்தமாக ஒரு அறையும் சுவையான உள்ளுர்; உணவுகளும் வழங்கப்பட்டன. நான் அனாதையில்லத்தில் இருந்தபோது, ட்ரவல்கோ மூலமான பயண ஏற்பாட்டில் இங்கு வந்துள்ள வேறு இரண்டு தொண்டர்களுடன் சேர்;ந்தே போதித்து வந்தேன். அதில் ஜஸ்ரின் என்பவர் கம்பிரியாவைச் சேர்ந்த இரண்டாவது வருட பல்கலைக்கழக மாணவர். கடந்த ஐந்து வாரங்களாக அவர் இந்த இல்லத்தில் தங்கியிருக்கிறார்.

அடுத்தவரான ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த றச்சல் என்பவர் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ள, ஓர் வருட இடைவெளி மாணவராவார். அவர் இந்த அனாதை இல்லத்தில் கடந்த மூன்று மாதங்களாகத் தங்கியுள்ளார். எங்களது முதற் சந்திப்பின்போது அவர்கள் உற்சாகம் குறைந்து காணப்படுவது போலத் தோன்றியது. விரைவிலேயே அவாகளின் குறைபாட்டுக்கான காரணத்தை நான் அறிந்துகொண்டேன். கோடை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததால் ஒரு நாளைக்கு மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே தொண்டர்களின் சேவை தேவையாகவிருந்தது.

இதன் கருத்து யாதெனில் இந்த நேரம் போக ஒரு நாளில் மீதமாகவுள்ள மற்ற நேரங்களை அவர்கள் ஏறக்குறைய குறிக்கோள் எதுவுமற்றவர்களாகவே கழிக்க வேண்டியிருந்தது. இந்த தவிர்க்க முடியாத சங்கடமான நிலையிலும் அடுத்து வந்த இரண்டு வார காலத்திலும் சுமார் 15 இலிருந்து 30 வரையான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை நான் ஆங்கிலம் போதித்தேன். பிள்ளைகள் வகுப்புகளுக்கு வரவேண்டுமென்பது கட்டாயமாக இருக்கவில்லை. ஆனாலும் வகுப்புகளுக்கு வந்தவர்கள் எப்பொழுதும் படிப்பதற்கு விருப்பம் கொண்ட ஆர்வமுள்ள மாணவர்களாக இருந்தார்கள்.

ஒரு குறிப்பிட்ட பாடம் நடக்கும்போது ஒரு எட்டு வயது மாணவியான மாயா தனது பென்சிலை எங்கோ தவற விட்டுவிட்டாள். ஒவ்வொரு மாணவரும் ஒரு பென்சிலை மட்டுமே வைத்திருந்தார்கள் ஆனால் ஒரு மாணவனான சினேயிடம் மட்டும் எப்படியோ மூன்று பென்சில்கள் இருந்தன. எழுது கருவிகளைச் சேகரிக்கும் சினேயின் பெரிய சேகரிப்பை பற்றி அறிய நேர்ந்தபோது, மாயா சினேயிடம் அவனிடமுள்ள பென்சில்களில் ஒன்றைத் தன்னுடன் பகிர்ந்து கொண்டால் மிகவும் உபகாரமாக இருக்கும் என்று முறையிட்டாள்.

சினே பென்சிலைப் பகிர்ந்து கொள்வதை தீவிரமாக எதிர்த்தான். மாயா கண்ணீர் விடலானாள். மேலும் அந்த நேரத்தில் அதேபோல வெளியே தெருவில் நடந்த வாகன விபத்து ஒன்றிற்காக தன்னிச்சையாக ஒன்றுகூடிய கூட்டம் ஒன்று தீர்வு ஒன்றுக்காக நடுநிலை வகிக்க முயன்று கொண்டிருந்தது. மாயாவின் நண்பர்கள் எல்லோரும் தங்கள் மேசையை விட்டு எழுந்து சென்று அவளை சமாதானப்படுத்த முயன்றார்கள். சினேயின் நண்பர்கள் அவனோடு சேர்ந்து ஒரு உறுதியான நிலைப்பாட்டில் நின்றார்கள்.

ஆசிரியரான நான் ஒரு நடுவராக மாறவேண்டி ஏற்பட்டது. எனது இடது பக்கத்தில் சகல சக்திகளுடனும் சினே தனது கைகளைக் கட்டிக்கொண்டு சம்மதமில்லாமல் விறைத்துக்கொண்டு தலையை ஆட்டியபடி நின்றான். வலது பக்கத்தில் பாதுகாப்பில்லாமல் விசும்பிக் கொண்டிருக்கும் மாயா, நம்பிக்யைற்று மனந்தளர்ந்து போயுள்ள அவளுடைய கண்களிலிருந்து பெருகும் கண்ணீர்; முகத்திலிருந்து நீர் வீழ்ச்சிபோலப் பாய்ந்து கொணடிருந்தது. எனக்கு ஒரு எண்ணணம் உதயமாயிற்று.

நான் சினேயிடம் நீ சகல சக்திகளையும் கொண்ட ஒரு மனிதன் என்று கூறி, மாயாவைச் சுட்டிக்காட்டி ,அவனது கடமையில்லாவிட்டாலும்கூட மாயாவுடன் அவனது உபகரணங்களைப் பகிர்ந்து கொள்வது நியாயமானது, இல்லாவிடில் அவளால் எழுத முடியாது என்று விளக்கினேன். அவனது இறுக்கம் மெதுவாகத் தளர்ந்தது. தான் எதிர்கொள்ளும் தார்மீகக் குழப்பத்தை அவன் புரிந்து கொண்டதுபோலத் தோன்றியது. அவன் தனது பென்சிலைப் பகிர்ந்து கொள்வதனால் தனது அதிகாரத்தை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கிறான. ,ஆதலால் அவற்றை வைத்திருக்க விரும்புகிறான- ,அவனது சுயநலம் அவனது சமூக நிலைப்பாட்டை மழுங்கடித்து விடுகிறது. அதனால் அவன் இப்போதும் பென்சிலைப் பகிர்ந்து கொள்ள மறுத்து விட்டான்.

மாயா இன்னும் பெரிதாக அழலானாள். சினேயால் புரிந்து கொள்ளக்கூடிய தொடர்புடைய ஒன்றைப்பற்றி சிந்தித்த பொழுது அவனைப் புத்தருடன் தொடர்புபடுத்தலாம் என முடிவு செய்தேன். புத்தர் ஞானம் பெற்றபோது  அவர் தனது வழிகளையும், தனது அறிவினையும் தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளவில்லை, ஆனால் அவர் அதை ஞானத்தின் பாதையை அறியாத மக்களிடையேயும் மற்றும் தனது சீடர்களுடனும் பகிர்ந்து கொண்டார். எனவே புத்தரைப்போல நடந்து அவனிடம் உள்ளவற்றை மாயாவுடன் பகிர்ந்து கொள்ளும்படி சினேயிடம் நான் வேண்டினேன்.

சினே சரியானதை உணர்ந்து கொண்டான் என்பதும், பென்சிலை மாயாவிடம் கொடுக்க விருப்பமாக இருக்கிறான் என்பதும் மிகத் தெளிவாகவே தெரிந்தது. ஆனாலும் சில காரணங்களுக்காக சிலவேளை அவனது நண்பர்களின் எதிர்ப்பு நிலை காரணமாகவிருக்கலாம் அவன் ஒரு பென்சிலை மாயாவுக்கு கொடுப்பதை மறுக்கவேண்டிய கட்டாயத்திலிருப்பதை அவன் உணர்ந்தான். மாயாவின் காத்திருப்பு இப்போது ஏமாற்றத்துக்குள்ளாகியது. அவளைச் சமாதானப் படுத்துவதற்காக அவளது நண்பர்கள் தீவிர முயற்சியில் இறங்கியிருந்தார்கள். இந்தக் கட்டத்தில் எனது உவமையை இன்னும் ஒருபடி மேல்நோக்கிச் செலுத்தவேண்டியது அவசியம் என் நான் உணர்ந்தேன்.

எனது அடுத்த உவமானத்தில் மகிந்த ராஜபக்ஸ தோன்றலானார். , உதார குணமுள்ள ஒரு மனிதராக, முக்கியமாக நாட்டின் பணத்தை கட்டுப்படுத்தும் ஒருவராக அவர் இருக்கிறார், ஆனால் சலுகைகள் மற்றும் மானியங்கள் வடிவத்தில் அவர் அதை நாட்டு மக்களுக்கு உதவியாக வழங்குகிறார் என விளக்கினேன். சினேயின் மூளை வேகமாகச் சுழலத்தொடங்கியது. இருந்தாலும் இப்போது அவன் மகிந்த ராஜபக்ஸவுடன் அவரது ஜனாதிபதிக் கடமைகளுடன்  அவனது தற்போதைய  நிலமையையை இணைத்து தொடர்பு படுத்தப் பட்டிருக்கிறான். கூர்மதி படைத் சினேயின் நண்பர்களில் ஒருவனும் இதே ஒற்றுமையை கொண்டிருந்தான். சினே ஆழ்ந்த சிந்தனையிவ் ஈடுபட்டிருந்தபோது, அவனது நன்பன் கூறினான், அவன் இப்போது மாயாவிடம் பென்சிலைக் கொடுத்தால் அவன் மகிந்தவைப் போல ஆகமுடியும் என்று. மாயாவின் அழுகுரல் காதை அடைக்கும் ஊளைச் சத்தத்தின் உச்சக் கட்டத்தை எட்டுவதற்கு முன்பே சினே பென்சிலை அவளிடம் கையளித்துவிட்டான். அவன் இப்போது சிரித்தபடி அவனது உதாரகுணமுள்ள செயலுக்காக பாராட்டுகளை ஏற்று வாங்கிக் கொண்டிருந்தான். நான் செல்லமாக அவனது முதுகில் தட்டிக் கொடுத்தேன். மாயா திடீரென தனது அழுகையை நிறுத்திக் கொண்டாள்.

திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் உள்நாட்டிலிலுள்ள சர்வதேசப்பாடசாலையில் இரண்டு மணித்தியாலங்கள்; படிப்பித்தேன். சர்வதேசப்பாடசாலையில் உள்ளவர்கள் மற்றும் அனாதைகள் ஆகிய இருபகுதியிலுள்ள மாணவர்கள் அனைவருமே ஒன்றுபோல கற்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள் ஆனால் இரண்டு பாடசாலைகளிலுமுள்ள வசதிகள் முற்றாக சீர்கெட்டிருந்ததை அவதானிப்பதற்கு வருத்தமாக இருந்தது. சர்வதேசப்பாடசாலையில் உள்ளதைப் போலில்லாமல் அனாதை இல்லப் பாடசாலையில் வகுப்பறைகளில் மின்விசிறிகள் மற்றும் மின்வெளிச்சம் என்பன இல்லாமலிருப்பது பிள்ளைகளுக்கு எழுத்துப் பலகையை வாசிப்பதற்கு கடினமாக உள்ளதுடன் கோடையின் வெப்பமான நாட்களில் அவதானமாக விழித்திருப்பதற்கு  கடினமாக உள்ளது.

உதாரணத்துக்கு கல்வியில் சமத்துவம் இல்லாமலிருப்பது, சில பத்து வயதுள்ள அனாதைப் பிள்ளைகளால் ஆங்கிலத்தில் இருபதுவரை எண்ணுவதற்கே கடினமாகவுள்ளது. அதே வேளை சர்வதேசப்பாடசாலையில் உள்ள ஏழு வயதுப் பிள்ளைக்கே நூற்றுக்கு மேல்வரை எண்ணுவது சுலபமாகவுள்ளது. சர்வதேசப்பாடசாலை மாணவர்களைப் போலவே அனாதை மாணவர்களும் திறமைசாலிகளாக உள்ளனர். ஆனால் சில பொறுப்பற்ற பகுதிநேர ஆசிரியர்களாலும் மற்றும் வகுப்பறைகளில் போதிய வெளிச்சமின்மையாலும் அவர்களது எதிர்காலம் ஒருபோதும் பிரகாசமாக இருக்கப் போவதில்லை என்பதை உணரும்போது மிகவும் பரிதாபகரமாகவுள்ளது. நான் அரசாங்க நிதியுதவிகளைப் பற்றி விசாரித்தபோது இந்த அனாதை இல்லத்துக்கு ஊட்டப்படும் அரசாங்க நிதியுதவி வெறும் துளியளவே என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

இந்த அனாதை இல்லத்துக்கு பொறுப்பான தலைமை மதகுரு நிதிச்சுமைகளை சமாளித்து வருகிறார். இந்த அனாதை இல்லத்துக்கு அருகில் வீட்டுத் திட்டத்தைப்போல ஒரு சிறிய பௌத்த ஆலயம் அமைந்துள்ளது. அங்கு நான்கு மதகுருக்கள் வசிக்கின்றனர். எனக்கு வெளிப்படையாக நினைவுக்கு வருவது, பல்கலைக்கழகத்தில் உலக நம்பிக்கைகளைப் பற்றி கல்வி பயின்றுள்ள ஒரு இருபத்திநான்கு வயதான அங்குள்ள துறவி ஒருவருடன் நான் நடத்திய ஒரு உரையாடல்தான். வாழ்க்கையின் சகல அணுகுமுறைகளைப்பற்றியும் படித்திருப்பதால் அவர் பரந்த மனப்பான்மை கொண்டவராக இருப்பார் என் நான் அனுமானித்தேன். அவர் தனது பயணங்களில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கு வாழ்பவர்களைப் பற்றிய அவரது கருத்துக்களை உருவாக்கியுள்ளார்.

சிங்கப்பூரில் வசிப்பவர்கள் நல்லவர்கள் அல்ல, நீங்கள் அவர்களுடன் சிரித்துப் பேச முடியாது, அவர்களின் உணவு எளிமையானது, மற்றும் அவர்கள் தங்களை அமெரிக்கர்களைப் போல நினைக்கிறார்கள். மலேசியர்கள் எப்படியாயினும் ஸ்ரீலங்கா மக்களைப் போன்றவர்கள், அவர்களுடன் சிரித்துப் பேச முடியும், அவர்களின் உணவு மிகவும் சுவையானது. என்று அவர் தெரிவித்தார். எனது தாய் தந்தை இருவருமே ஸ்ரீலங்காவாசிகள் என்பதை மதகுரு அறிந்து கொண்டதும் நான் சரளமாக சிங்களம் பேசாததையிட்டு அவர் ஆச்சரியப்பட்டார். அவர் வியந்துரைத்தது எனது பெற்றோர்களின் கடமை எனக்கு சிங்களம் மற்றும் புத்தரின் வழிகளைப் போதிக்க வேண்டியது எனவேதான் என்னால் அவர்களின் பாதையை பின்பற்றி நடக்க முடியும் என்று.

அவர் இன்னும் வெகுதூரம் மேலே சென்று  எனக்கு ஏன் சிங்களம் கற்பிக்கவில்லை என்று எனது பெற்றோரிடம் கேட்கும்படி எனக்கு அறிவுறுத்தினார். நான் அவரிடம் கூறினேன், அவர்களுக்கு பொறுப்பு என்ற ஒன்றிருந்தால் எனக்கு சகல மதங்களைப்பற்றியும் போதித்து எனது விருப்பப்படியே ஒரு முடிவினை மேற்கொள்ள என்னை அனுமதித்திருப்பார்கள். மதத்தின் பின்னணியைப்பற்றி படிக்கவோ விளங்கவோ நான் முயற்சிக்கவில்லை, எனவே எப்படி அதை நான் தழுவ முடியும் என்று.

நான் அநேகமாக நிலுமினியின் மகன் ராஜாவுடன் பேசுவேன். அவர் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் மற்றும் வியாபாரம் பற்றிய கற்கைநெறியைப் பயில்கிறார். அவர் தனது ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். மற்றும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் றோஹோட்ஸ் புலமைப் பரிசிற்கு விண்ணப்பிதை கருத்தில் கொண்டிருந்தார். எங்களது சம்பாஷணைகளின் சாட்சியாக நான் அறிந்துகொண்டது, ராஜா நன்கு படித்தவர் என்பதையும் மற்றும் நாங்கள் ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப்போரின் ஆழங்களைப்பற்றியும் பேசிக்கொண்டோம். ஜேவிபியினரது கிளாச்சி பற்றியும் எல்.ரீ.ரீ.ஈ உடனான பயனற்ற சமாதானப்பேச்சுக்கள் பற்றியும் அவர் பேசினார். அவருக்கு ஸ்ரீலங்காவின் கொலைக்களம் என்கிற ஆவணப்படத்தை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அரசாங்கத்தின் பதிலை அவர் கேள்விப்பட்டிருக்கிறார். மற்றும் தனது நண்பர்களடன் இது பற்றி விவாதித்தும் இருக்கிறார்.

அரசாங்க வீரர்கள், வாய்கள் பேசமுடியாதபடி கட்டப்பட்டு, கைகள் பிணைக்கபட்ட நிலையில் முழங்காலில் நிற்கவைக்கப்பட்ட மூன்று எல்.ரீ.ரீ.ஈ போராளிகளை கொலை செய்வதற்கு முயற்சிப்பதாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த காட்சியை நான் அவருக்கு விளக்கினேன். அவர்களை இரக்கமற்ற முறையில் தலையின் பின்புறத்திலிருந்து சுடப்படுவதையும் அந்த காணொளி காட்டுகிறது என்று கூறி, அப்படியான நிகழ்வினைப்பற்றிய ராஜாவின் கருத்து என்ன என்று கேட்டேன். பதில் சொல்வதற்கு முன் அவர் நான் பிரித்தானியனா அல்லது ஸ்ரீலங்கனா என என்னிடம் கேட்டார்.

அதற்குரிய பதிலை நான் தெரிவித்த பிறகு,’எங்களது பையன்கள் ஒருபோதும் இவ்வாறான அறிவற்ற வன்முறைக்கு உடந்தையாக இருந்திருப்பார்கள் என என்னால் நினைக்க முடியவில்லை’ என அவர் என்னிடம் கூறினார். அந்தப் படம் போலியாக புனையப்பட்டது என அரசாங்கம் கண்டித்திருப்பதை அவரும் விரும்புகிறார். ஆனால் ஒரு யுத்தத்தின்போது தவிர்க்க முடியாதபடி அதனுடன் இணைந்த சில சேதங்கள் ஏற்படும் என்பதையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். சனல் - 4 ன் காணொளி பற்றிய அவரது கண்டனத்தை முடிக்கும் முன்னர், அவர் என்னிடம் கிசுகிசுத்தது ‘ஆனால் வெளிநாட்டவர்களிடம் இந்தப் பிரச்சினைகளைப்பற்றி சொல்லி விடாதீர்கள்’ என்று.

இப்போது நான் உணருவது, ஏன் என்னால் ஒரு குறைந்த காலத்துக்காவது ஸ்ரீலங்காவில் வாழமுடியாமற் போனது என்று. எங்கள் நாடு அடர்ந்த காடுகளையும், உயர்ந்த மலைகளையும் குறுகிய தூரத்தில் அழகான கடற்கரைகளையும், கொண்ட ஒரு அழகான தீவு. உலகமெங்கும் ஸ்ரீலங்கா மக்கள் இரக்க குணமுள்ள எளிமையானவர்கள் என மதிக்கப்படுகிறார்கள். நான்; இங்கே வாழ்ந்திருந்தால் நான் ஒரளவிற்கேனும் இந்தத் தீவின்மீது காதல் கொள்ள நேர்ந்திருக்கும். அதனால் மேற்கினால் எங்கள்மீது சுமத்தப்படும் தவறான செயல்களுக்கான குற்றச்சாட்டுகளை என்னால் புறக்கணித்திருக்க முடியும்.

எனது நாட்டின் தோற்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சர்வதேச சர்ச்சைகளை உருவாக்கும் உணர்ச்சிகரமான விடயங்களை தொட விரும்பாமல் ஒரு அறியாத மகிழ்ச்சியில் திளைத்திருப்பது அத்தனை கடினமானதல்ல. ஆனால் என்னால் இங்கே வாழ்ந்திருக்க முடியாது. ஏனென்றால் எனது சுதந்திரம் இங்கே மட்டுப்படுத்தப் பட்டுவிடும். மற்றும் எனது கருத்துக்கள் நசுக்கப்பட்டுவிடும். என்னால் இங்கே வாழ்ந்திருக்க முடியாது. ஏனென்றால் எனக்கு கல்வியறிவின் பரந்த தன்மையையோ அல்லது வெளிப்பாடுகளின் ஆழமோ இருந்தபோதிலும் கடைசியில் என்னால் ஒரு ஸ்ரீலங்கனைப் போலத்தான் சிந்திக்க முடியும்.

(ஜூலியன், வின்செஸ்டரில் உள்ள வின்செஸ்டர் கல்லூரி மாணவர்)

தமிழில்:எஸ்.குமார்

(நன்றி: தேனி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com