Contact us at: sooddram@gmail.com

 

டான் தொலைக்காட்சி நேருக்கு நேர் நிகழ்ச்சி- புளொட் தலைவர் பங்கேற்பு

டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேருக்குநேர் நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பங்குபற்றி ஊடகவியலாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

ஊடகவியலாளர்- வணக்கம் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களே!

திரு.சித்தார்த்தன் அவர்கள்- வணக்கம் சர்தார் அவர்களே!

கேள்வி: இப்போது நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இருக்கின்றீர்கள். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமெரிக்க விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். அதன்பிறகு அவர்கள் கனடா சென்றிருக்கின்றனர். லண்டன் செல்வதாகவும் செய்திகள் வருகின்றன. இந்த விஜயம் சம்பந்தமாக உங்களது கட்சியின் தனிப்பட்ட கருத்தென்ன?

பதில்: இந்த விடயத்தைப் பொறுத்தமட்டில் வெளிநாடுகளுக்குச் சென்று எங்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வை வலியுறுத்துவதற்கு அந்தந்த நாடுகளில் நாங்கள் கோருவது இது முதற்தடவையல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்ல, தந்தை செல்வநாயகம் காலம்தொடக்கமே இது நடைபெற்று வந்திருக்கின்றது. நானே பாராளுமன்றத்தில் இருந்தகாலத்தில் பல தடவைகள் அமெரிக்க ஸ்டே டிபார்ட்மெண்ட் சென்று அதிகாரிகளைச் சந்தித்து கதைத்திருக்கின்றேன். அப்போதெல்லாம் இது ஒரு பிரச்சினையாக எழுப்பப்பட்டதில்லை. இப்போது இதை ஒரு பிரச்சினையாக, நாட்டிற்கு துரோகம் விளைவிப்பதாக பிரச்சினைகள் கிளப்பப்படுகின்றது.

நான் நம்புகிறேன் அது ஒரு தவறான கண்ணோட்டத்திலே பார்க்கப்படுகின்றது என்று. இந்த நாட்டிலே இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்குமானால் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தப் பிரச்சினையை எடுத்துக்கூறி பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு தார்மீக ஆதரவைத் தாருங்கள் என்று கேட்பதற்கான ஒரு தேவை எங்களுக்கும் ஏற்பட்டிருக்காது. கடந்தகாலங்களில் தமிழ்க் கட்சிகள் மாத்திரமல்ல, பெரும்பான்மைக் கட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலென்ன, சிறீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலென்ன, இவர்கள்கூட கடந்தகாலங்களிலே இங்கு பிரச்சினைகள் எழுகின்றபோது வெளிநாடுகளிலே சென்று தார்மீக ஆதரவைக் கேட்டிருக்கின்றார்கள். இன்றைய ஜனாதிபதி அவர்கள்கூட ஜெனீவாவுக்கு சென்று மிக கடுமையான பிரசாரங்களிலே ஈடுபட்டிருந்தார். அப்போது மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அவர் மிகவும் தீவிரமான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாக மிகத் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். முக்கியமாக இந்த நாட்டிலே அந்த நேரத்திலே ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களின் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு எதிராக அல்லது ஜனநாயக மீறல்களுக்கு எதிராக வெளிநாடுகளில், ஐக்கிய நாடுகள் சபையில் அவர் பேசியிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இன்றுகூட பல நாடுகளுக்குச் சென்று பிரச்சினைகளைப்பற்றி பேசுகின்றார். இதிலே எந்தத் தவறும் இல்லை என்றுதான் நான் கருதுகின்றேன். எங்களைப் பொறுத்தமட்டில் இன்று தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கக் கூடாது, நிச்சயமாக தீர்க்கப்பட வேண்டுமென்ற ஒரு பேரார்வத்தால் நாங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கதைக்கின்றோம். இதிலே எந்தத் தவறும் இல்லையென்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.

கேள்வி: அந்தவகையில் நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானவை. நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் சில யதார்த்தங்களும் இருக்கின்றன. ஆனால் இப்போதிருக்கும் களநிலைமையில், அதாவது அரசாங்கத்தின்மீது போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், அதை மும்முரமாக கையாள்வதற்கு பிறநாடுகள் முனையும் இந்தத் தருணத்தில் இவர்களது விஜயமானது சிங்களத்தரப்பு மத்தியில் அதாவது, சிங்கள மக்கள் மத்தியிலாகட்டும் அல்லது சிங்கள இனவாதக் கட்சிகள் மத்தியிலாகட்டும் அவர்கள் முழுத் தமிழர்கள்மீதுமே ஒரு வெறுப்புணர்வைக் கக்கக்கூடிய ஒரு தருணமாக இது மாற்றமடைந்திருப்பதாக சிலர் கூறுகின்றார்கள். ஏனென்றால் கடந்தகாலங்களில் சில அரசியல்வாதிகளே கூறினார்கள், புலிகள் என்பது வேறு, தமிழர்கள் என்பது வேறு, பயங்கரவாதிகள் என்பவர்கள் வேறு சிலர், தமிழர்கள் என்பவர்கள் வேறுசிலர், நாங்கள் பயங்கரவாதிகளை அழித்தோம். ஆனால் தமிழர்களுக்கான தீர்வுகளைக் கொடுக்கவேண்டும் போன்ற விடயங்களைக் கூறிக்கொண்டிருந்தார்கள். புலிகள் அழிக்கப்பட்டதற்குப் பிறகு இப்போதிருப்பவர்கள் தமிழர்கள் என்ற ஒரு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற

இந்தவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த செயற்பாடானது மீண்டும் தமிழர்கள்மீது ஒரு சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நடவடிக்கையாக இனவாதக் கட்சிகளிடையே இருக்கிறது. ஏனென்றால் இனவாதக் கட்சிகள் குரோதமான விடயங்களைப் பேசி அவர்களது வாக்கு வங்கிகளை நிலைநிறுத்திக்கொள்வதற்கு இதுவொரு வாய்ப்பாகக் போகுமென்று நீங்கள் கருதவில்லையா?

பதில்: நிச்சயமாக அவர்களுக்கொரு வாய்ப்புதான். அதை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒரு வாய்ப்பாக அதைப் பாவிக்கின்றார்கள். இது ஒரு சரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும். யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. என்ன காரணத்திற்காக யுத்தமோ அல்லது சாத்வீகப் போராட்டங்களோ ஆரம்பிக்கப்பட்டதோ, அதற்கு ஒரு சரியான அரசியல்தீர்வு முன்வைக்கப்படவில்லை. சரியான ஒரு அரசியல்தீர்வு முன்வைக்கப்படக்கூடிய ஒரு நிலைமையையும் நாங்கள் இங்கு பார்க்கவில்லை. ஆகவே இனவாதம் பேசுகின்ற இந்தக் கட்சிகளால்தான் அன்றுதொட்டே இந்தப் பிரச்சினை இருந்து வந்திருக்கின்றது. இவர்களுடைய செயற்பாடுகள்தான் இந்தநாட்டிலே ஒரு சரியான அமைதியை கொண்டுவராமல் விட்டுக்கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு சாதகமாக பெரும்பான்மைக் கட்சிகள்கூட அதாவது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலென்ன, சிறீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலென்ன இவர்களுடைய பரப்புரைகளுக்குப் பயந்து, அவர்கள் மக்கள் மத்தியிலே மிகமிக செல்வாக்கு குறைந்;தவர்களாக, மிகச்சிறிய வாக்கு வங்கியைக் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களுக்குச் சாதகமாக நடவடிக்கைகளை எடுத்து வந்தபடியாலும், அவர்களுடைய சொல்லை இவர்கள் கேட்டு நடக்கின்ற அந்த நடைமுறைகளினால்தான் இந்தப் பிரச்சினைகளை இன்னும் சிக்கலாக்கிகி வந்திருக்கின்றது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டால் அன்று அதை ஜே.ஆர்.ஜயவர்த்தன எதிர்த்தார். அது மாத்திரமல்ல ஒருசிறு குழு பௌத்த பிக்குக்கள் இப்படியான சிலர் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அதனால் அதை அவர்கள் கிழித்தெறிந்தார்கள். அன்று அந்த எதிர்ப்பைக் காட்டாமல் அந்தப் பிரச்சினையைத் தீர்த்திருந்தால் இன்று இவ்வளவு பிரச்சினையும் வந்திராது, யுத்தமும் வந்திராது, யுத்தக் குற்றங்களும் வந்திராது, நிலைமைகள் இந்த நாட்டிலேயே மிகவும் சுமுகமாக நிலையில் இருந்திருக்கும். இந்த நாடு எவ்வளவோ ஒரு முன்னேற்றகரமான நிலைக்கு போயிருக்கும். இந்த இனவாதக் கட்சிகளும், இனவாதம் பேசுகின்ற பெரும்பான்மை இனத்தவர்களும்தான் ஒரு நியாயமான தீர்வை இந்த நாட்டிலே வராமல் கூடுதலாக தடுத்து வந்திருக்கிறார்கள்.

கேள்வி: எப்படி தமிழர்கள் தரப்பால் அல்லது இஸ்லாமியர்கள் தரப்பால் ஹெல உறுமய போன்ற கட்சிகளை ஒரு தீவிரவாதப் போக்குடைய கட்சிகளாக இந்த நாட்டில் இனப்பிரச்சினையை தீர்க்கவிடாத கட்சிகளாக பார்க்கின்றார்களோ, அதேபோன்றதொரு பார்வையைத்தான் சிங்களவர்கள் அல்லது சிங்கள கட்சிகள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமீது பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். சிங்களப் பத்திரிகைகளைப் எடுத்துக்கொண்டால் அவர்கள் பக்கம்பக்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த விஜயத்தினை எதிர்த்த கருத்துக்களையும், செய்திகளையும், கருத்துப் படங்களையும் தான் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இந்த விடயங்கள் சம்பந்தமாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. சம்பந்தன் போன்றவர்களுக்கு புலிக் கோடிட்ட படங்களும் போடப்படுகின்றன. இவ்வாறான கருத்துப்படங்கள் மீண்டும் பயங்கரவாதம் தோற்றுவிக்கப்படுகிறது, மீண்டும் இந்த நாட்டிற்கு ஆபத்து வந்துவிட்டது போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டுவது போலவும் உள்ளன.

அதுபோன்று இப்போது இந்த உலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடயங்களை அதாவது, கடாபியின் மரணம் போன்ற விடயங்களேடு, நாட்டை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் அல்லது அமெரிக்கப் படையைக் கொண்டுவந்து எங்களை அடிக்கவைக்கப் போகின்றார்கள் போன்ற இன்னோரன்ன பிரச்சாரங்களும் சிங்கள ஊடகங்கள் ஊடாக செய்யப்படுகின்றன. இப்போது நாட்டில் ஆகட்டும் அல்லது வெளிநாடுகளில் ஆகட்டும் இருக்கும் களநிலைவரங்கள் உண்மையில் இன்று ஒரு சாதகமான நிலையில் இல்லாதபோது, இவ்வளவு அரசியல் பின்புலம் உள்ள, அரசியல் சாணக்கியம் உள்ள, அனுபவமுள்ள, அதாவது புலிகள் அமைப்புடனேயே ஓரளவு சில சமரசங்களைச் செய்து, அவ்வளவுகாலம் ஆட்சிநடத்திய சம்பந்தன் அவர்கள், ஏன் இந்தத் தருணத்தில் இவ்வாறான ஒரு முடிவை எடுக்கின்றார் என்பது உண்மையிலேயே சில தரப்பினது கேள்வியாக இருக்கின்றது,

பதில்: இந்த அழுத்தங்கள் அதாவது நீங்கள் கூறிய யுத்தக் குற்றங்களாக இருக்கலாம் அல்லது பொறுப்புக்கூறும் தன்மையாக இருக்கலாம் இப்படியான அழுத்தங்களை

பொறுத்தமட்டில் உண்மையிலேயே ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாகவே நாங்கள் பார்க்கின்றோம். எங்களைப் பொறுத்தமட்டில், தமிழ்த் தரப்புக்களைப் பொறுத்தமட்டில் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு முன்வைக்கப்பட்டால் நான் நம்புகின்றேன் மற்றக் குற்றங்கள் எல்லாம் தணிந்து போவதற்கான வாய்ப்புக்கள் நிச்சயமாக கூடுதலாகத்தான் தெரிகிறது.

சர்வதேச ரீதியிலே தூதரகங்களுடன் நாங்கள் கதைக்கின்றபோது மிகத் தெளிவாகத் தெரிகிறது என்னவென்றால் யுத்தத்திற்குப் பிறகு கூட தமிழ்மக்களை நிம்மதியாக வாழ விடவில்லை, பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று. ஆகவே இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முடிவுகாணப்பட்டு ஒரு நியாயமான அரசியல்தீர்வு கொடுக்கப்பட்டு தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் தங்களுடைய பகுதிகளை தாங்களே நிர்வகிக்கக்கூடிய (நான் தனி ஈழத்தைப் பற்றி கதைக்கவில்லை) ஒரு சரியான அதிகாரப் பரவலாக்கலைக் கொடுப்பதன்மூலம் தமிழ்மக்கள் இங்கு சமமாக வாழுகிறார்கள் என்ற ஒரு நிலைப்பாட்டை காட்டுவதன்மூலம் ஓரளவுக்கு இந்த யுத்தக்குற்றங்கள் மற்றும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசம் கொடுக்கக்கூடிய அழுத்தங்களைக் குறைப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். இதை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும். அரசாங்கம் மாத்திரமல்ல இனவாதம் பேசுகின்ற இந்தக் கட்சிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு சாதாரண விஜயத்தை, அதாவது எத்தனையோ முறை ரொபேர்ட் ஓ பிளேக் இங்கு வந்திருக்கிறார் சந்தித்துத் கதைத்திருக்கிறார்கள், அதைவிடுத்து இதை ஒரு மிகப்பெரிய விசயமாக, தமிழ் மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக எடுத்துக் கொள்ளாமல், இதை ஒரு சாதகமாக தங்களுக்குப் பாவிக்க வேண்டும். அரசியல் பிரச்சினையை தீர்த்துவிட்டால் இந்த பிரச்சினைகள் எழமாட்டாது. தமிழ்கட்சிகள் கூட வெளிநாடுகளுக்குச் சென்று பிரச்சாரங்களில் ஈடுபடாது, இங்கிருந்தே தங்கள் மக்களுடைய நன்மைகளுக்காக, தேவைகளுக்காக அவர்கள் சேவையாற்றத் தொடங்குவார்கள் என்ற செய்தியை பெரும்பான்மைக் கட்சிகள் முக்கியமாக இனவாதம் பேசுகின்ற கட்சிகள் உணருமாக இருந்தால் இந்த நாட்டிலே இந்தப் பிரச்சினைகளே எழச் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும்.

கேள்வி: ஆம், ஆனால் அரசதரப்பில் ஒரு விடயத்தைக் கூறுகின்றார்கள். அல்லது ஒரு நியாயத்தைக் கூறுகின்றார்கள். தீர்வு என்பது ஒரு இன்ஸ்டன்ட் நூடில்ஸ் (iளெவயவெ ழௌனடநள) அல்ல, அதாவது புலிகள் இருந்தபோது இருந்த களநிலைவரங்கள் வேறு, இப்போதிருக்கும் களநிலைவரங்கள் வேறு, எனவே நாங்கள் முன்னர் பேசிய தீர்வுகளை உடனடியாக கொண்டுவந்துவிட முடியாது. இப்போது நாங்கள் மீண்டும் இந்தத் தீர்வு சம்பந்தமாகப் பேச வேண்டியிருக்கிறது. இப்போது நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற ரீதியிலான கருத்துக்களைத்தான் அரசாங்கம் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே இதை தனிப்பட்ட முறையில் நானும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. ஆனாலும் அவர்கள் கூறும் அந்த விடயம் ஒரு யதார்த்தமான விடயமாகவும்தான் படுகிறது. ஏனென்றால் இப்போதிருக்கும் களநிலைவரங்கள் உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். புலிகள் இருந்த காலகட்டத்தைப் போலில்லாமல் இப்போது பலதரப்பட்ட மாற்றங்கள் இருக்கிறது. இப்போது என்னிடமே ஒரு தனிப்பட்ட கேள்வி இருக்கிறது, வடக்கு கிழக்கிற்கு ஒரு தீர்வு அமையும்பட்சத்தில் வடக்குக் கிழக்கிற்கு வெளியே உள்ள தமிழ்மக்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள்? கொழும்பிலுள்ள பெரும்பான்மையான தமிழ்மக்கள் அதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள்? அதுபோன்று மலையகத்தில் உள்ள தமிழ்மக்களுக்குக் கிடைக்கப்போகும் தீர்வு என்ன? போன்ற விடயங்கள் இன்னும் கேள்விகளாகவே இருக்கின்றன. எனவே இந்த விடயங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: தமிழீழம் கேட்கின்றபோதுகூட வடகிழக்கிற்கு வெளியிலே பெருந்தொகையான தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அல்லது நீங்கள் பார்த்தீர்களென்றால் பாகிஸ்தான் நாடு உருவாக்கப்பட்டபோது பாகிஸ்தானுக்கு வெளியிலே இந்தியாவிலே வாழ்ந்த முஸ்லிம்கள் பாகிஸ்தானில் வாழ்ந்த முஸ்லிம்களைவிட கூடுதலாகத்தான் இருந்திருக்கிறார்கள். நான் ஈழம் கேட்கவில்லை. ஒரு நாட்டுக்குள்ளே தீர்வு வருகிறது. வடகிழக்கிற்கு ஒரு சரியான அதிகாரம் கொடுக்கப்படுகிறது. அதேபோல அதே அதிகாரங்கள் எல்லாருக்கும் சமனாகவே கொடுக்கப்படுகின்றது. வடகிழக்கிலேயும் சிங்களமக்கள் வாழுகிறார்கள். அங்கிருக்கின்ற சிங்களமக்கள் அனுபவிக்கின்ற அதே உரிமைகளை இங்கு வெளியில் இருக்கக்கூடிய தமிழர்கள் அனுபவிப்பார்கள். அதுமாத்திரமல்ல இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்கீழ் வந்த 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டபோதுகூட, அதை ஒரு முதற்படியாக அனைத்துக்

கட்சிகளும் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டபோதுகூட வெளியிலே தமிழ்மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இதுவொரு இன்ஸ்டன்ட் நூடில்ஸ் (iளெவயவெ ழௌனடநள) அல்ல 60வருடமாக பேசிக்கொண்டிருக்கிறோம். ஒருநாள் இரண்டுநாள் அல்ல. அரசாங்கங்கள் மாறலாம். கட்சிகள் மாறலாம். ஆனால் விசயம் ஒன்றுதான். யுத்தம் முடிவுக்கு வந்திருக்கலாம். தீர்வு ஒன்றுதான். யுத்தம் இருந்ததோ இல்லையோ தீர்வு ஒன்றுதான். ஆகவே அரசு கூறுவதை காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு வேலையாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். ஏனென்றால் 60வருசமாக பேசப்பட்டு, பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டு ஒப்பந்தங்கள் எழுதப்பட், கிழித்தெறியப்பட்டிருக்கின்றன. பண்டா-செல்வா ஒப்பந்தம் இருக்கின்றது. டட்லி-செல்வா ஒப்பந்தம் இருக்கின்றது. சந்திரிகா அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டம் இருக்கின்றது. தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அறிக்கை இருக்கின்றது. இப்படிப் பல விசயங்கள் இருக்கின்றது. ஆகவே இது ஒன்றுமே புது விசயமல்ல உடனடியாக நடக்கிறதுக்கு. யுத்தம் வேறு விசயம். யுத்தம் முடிந்துவிட்டது. யுத்தம் நடந்தபோது எங்களுக்குச் சொல்லப்பட்டது யுத்தம் முடிந்ததென்றால் உடனடியாக நாங்கள் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று. ஏனென்றால் புலிகள் எந்தவிதமான ஒரு தீர்வையும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள் இல்லை. அதனால் நாங்கள் ஒரு தீர்வை முன்வைத்தால்கூட இந்தநாட்டிலே அமைதி வராது. ஆகவே யுத்தம் முடிந்தபிறகு செய்வோமென்று கூறப்பட்டது. யுத்தம் முடிந்தபிறகு இரண்டு வருடங்கள் சென்றிருக்கின்றது. 60வருசமாக இந்தப் பிரச்சினை போய்க்கொண்டிருக்கின்றது. 60வருசமாக ஒரே விசயத்தைத்தான் நாங்கள் சொல்கின்றோம். அதிகாரப்பரவலாக்கலைப்பற்றி கதைக்கின்றோம். அதிகாரப்பரவலாக்கலில் எத்தனையோ விசயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது. அரசாங்கங்களுடன் பேசுகின்றபோது அது திம்புவாக இருக்கலாம் அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணி 84ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாடாக இருக்கலாம். இப்படிப் பல இடங்களிலே இந்த விசயங்கள் கதைக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கங்கள் மாறலாம், இவையெல்லாம் அங்கு பதிவுகள் இருக்கின்றன. நிச்சயமாக இவைபற்றிய அறிக்கைகள் அங்கு இருக்கின்றன. ஆகவே இது ஒன்றும் புதிய விசயமல்ல உடனடியாக தருவதற்கு என்று கூறுவதற்கு. உண்மையாக மனமிருந்தால் இடமிருக்கும். அந்த மனமில்லாததனால்தான், அந்த மனத்தைக் கொண்டுவருவதற்காகத்தான் கூடியளவிற்கு நாங்கள் சர்வதேசத்தை அல்லது மற்றைய நாடுகளை நாடவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்டீர்கள் அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்கும் ஒரு உபாயமாகத்தான் இந்தத் தீர்வுகளைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வருகின்றது, வேறுவேறு விடயங்களைக் கூறிவருகின்றது என்று. உண்மையில் இந்த நாட்டில் முப்பதுவருட காலமாக யுத்தம் இருந்தது. இப்போது அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டாயிற்று. இப்போது மக்களுக்கு ஒரு சரியான முழுமையான தீர்வு கொடுக்கப்பட வேண்டும். அந்தத் தீர்வு உண்மையிலேயே ஒரு சரியான தீர்வாக, நீண்டகாலத்திற்கு நிலைக்கும் தீர்வாக கொடுக்கப்பட வேண்டும். அந்தவகையிலே அரசாங்கம் சில காலங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காலத்தை இழுப்பதற்கு அரசாங்கத்திற்கு என்ன தேவை இருக்கிறது. தீர்வைத் தரப்போகிறோம் என்று அவர்களே கூறுகின்றார்கள். தீர்வை வழங்குங்கள் என்று வெளிநாடுகளும் கூறுகின்றன. ஆனால் காலத்தை இழுத்தடிப்பதால் சிங்கள அரசுகளுக்கு இருக்கும் நன்மை என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: இந்தப் பயம்தான் எங்களுக்கு கூடுதலாக இருக்கின்றது. ஏனென்றால் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே ஒரு விசயம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணம்போல, அதாவது கிழக்கு மாகாணத்தில் எப்படி அந்த குடிப்பரம்பல் மாற்றப்பட்டதோ, அதேபோல இன்று வடக்கு மாகாணத்திலும் குடிப்பரம்பலை மாற்றுவதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இது வெறும் முயற்சிகள் அல்ல. செயற்பாடுகளே நடந்துவருகின்றது. பல காணிகள் எடுக்கப்படுகின்றன. தற்காலிகமாக எடுத்து விவசாயம் செய்யப்படுகிறது. முல்லைத்தீவிலே நானே நேரில் பார்த்தவிடயம் ஒரு தமிழர் தன்னுடைய காணிக்குச் சென்றிருக்கிறார். அந்தக் காணியில் நெல் விதைக்கப்பட்டிருக்கின்றது. அவர் அங்கிருந்த இராணுவ அதிகாரியைக் கேட்டபோது, இனிமேல் இந்தப் பக்கம் வராதீர்கள், இதையெல்லாம் எல் வலையத்திற்குள் கொண்டுவரப்போகிறோம் என்று அவருடைய அந்த சொந்தக் காணியே பறிக்கப்பட்ட ஒரு நிலைமையை நான் பார்க்கக் கூடியதாகவிருந்தது. அதுபோல வெலிஒயாவுக்காக பிரதேச செயலகம் என்று எடுத்து அதிலே தமிழ்ப்பகுதிகளும் சேர்க்கப்பட்டு சிங்களமயமாக்கப்படுகின்றதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

கேள்வி: இல்லை, அதற்கு அவர்கள் ஒரு காரணத்தை கூறினார்கள். யுத்தம் நடந்த காலங்களில் அந்த வெலிஓயா பகுதியில் இருந்த சிங்களக் கிராமங்கள் அனுராதபுரம்

மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டிருந்ததற்கான காரணம் அவர்கள், புலிகளின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்தார்கள். எனவே அவர்களது அரச கருமங்களை செய்து கொள்வதற்காக அவர்களுக்கொரு பிரதேசம் வேண்டும். எனவே அது அனுராதபுரத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. இப்போது யுத்தம் முடிந்தபின்னர் நாங்கள் அதை தமிழ்ப் பிரதேசங்களோடுதான் சேர்க்கவிருக்கிறோமே தவிர மீண்டும் நாங்கள் இந்தப் பிரதேசத்தோடு சேர்க்கவில்லை. தமிழ்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியிருந்தார். அதுபோன்று காணிப்பதிவு விடயம் சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டபோதுகூட அவர் கூறினார், தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான விடயத்தைத்தான் நாங்கள் செய்யவந்தோம். ஆனால் அதைவைத்து அவர்கள் அரசியல் செய்கின்றார்கள் என்று கூறினார். இந்த வெலிஓயா பிரதேசசபைகள் இணைக்கும் திட்டம் இப்போது கைவிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பதில்: இல்லை, 83ற்கும் முன்பு அந்தப் பகுதிகளில் ஆறேழு கிராமங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் இருந்து யுத்தம் ஆரம்பித்தபின்பு அவர்கள் முல்லைத்தீவு கச்சேரிக்கு செல்லமுடியாதிருந்த காரணத்தினால் அந்தக் கிராமங்கள் அனுராதபுரம் மாவட்டத்திற்குள் சேர்க்கப்பட்டு அனுராதபுரம் மாவட்டம் அந்தப் பகுதிகளைப் பராமரித்து வந்தது. ஆனால் தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய வாக்கு அங்கு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு வன்னி மாவட்டத்திற்குத்தான் அது சேர்க்கப்பட்டது. இப்போது அது திரும்ப முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் அங்கு இப்போது சிங்களவர்கள், தமிழர்கள் என்று பிரச்சினைகள் கிடையாது. எவரும் போகலாம், வரலாம் என்ற ரீதியில். இதை நாங்கள் பிழையென்று கூறவில்லை. அங்கு எழுத்துமூலம் கொடுக்கப்படாமல் வாய்மூலம் சொல்லப்பட்டு இந்த ஆறேழு கிராமங்கள் மாத்திரமல்ல, எவ்வளவோ தூரத்தில் இருக்கக்கூடிய தமிழ்க் கிராமங்களும் அதாவது முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று என்கிற அந்த பிரதேசசெயலர் பிரிவிலிருந்து பல கிராமங்களை எல்லாம் எடுத்து ஒரு சிங்கள பிரதேசெயலர் பிரிவை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றது. இதை அவர்கள் உத்தியோகபூர்வமாக நாங்கள் கேட்டால் இல்லையென்றே கூறுவார்கள். ஆனால் அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு வாய்மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

கேள்வி: அதை எந்த ஆதாரத்தில் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? இவ்வாறான ஒரு முயற்சி நடக்கிறது என்று?

பதில்: வாய்மூலம் அந்த அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

கேள்வி: வாய்மூலம் எந்த அதிகாரிகளுக்கு? சிங்கள அதிகாரிகளுக்கா? தமிழ் அதிகாரிகளுக்கா?

பதில்: தமிழ் அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

கேள்வி: இப்போது நீங்கள் குறிப்பிடும் அந்த அதிகாரிகள் நாங்கள் எங்களது கமராக்களோடு சென்று கேட்டால்? இல்லை அவ்வாறான விடயம் நடக்கவில்லை என்பார்கள். நாங்கள் எந்த ஆதாரத்தை வைத்து இதனைப்பற்றி பேசுவது?

பதில்: ஆம், நிச்சயமாக அவர்கள் சொல்ல மாட்டார்கள். எங்களுக்கு தெரியாது எங்களை விட்டிருங்கள் என்று சொல்வார்கள். இதிலே எந்த சந்தேகமும் எனக்குக் கிடையாது. ஏனென்றால் அவர்களில் பிழையுமில்லை. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் குடும்பங்கள் இருக்கின்றது. அவர்களுடைய உழைப்பு இருக்கிறது.

கேள்வி: அப்படியானால் ஆதாரங்களை வைத்தல்லவா இந்தப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்?

பதில்: நாங்கள் இதற்கு ஆதாரம் தேடிக்கொண்டிருக்கின்றபோது, ஆதாரம் எல்லாம் தேடி முடியிறதுக்கிடையில் அந்த விசயம் முடிந்துவிடும். விசயம் முடிந்தபிறகுதான் அதைப்பற்றி கதைப்பதென்றால் முடிந்தவிசயத்தைப் பற்றி கதைப்பதில் ஒரு பிரயோசனமுமில்லை. இப்போ நாங்கள் கதைத்தபடியால் நிச்சயமாக அந்த விடயம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. தடைப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார அமைச்சருக்கும் நன்றாகத் தெரியும் வாய்மூலம் சொல்லப்பட்டிருக்கிறது என்று. ஆகவே அவர் இப்போது வாய்மூலம் சொல்லி அதைத் தடைப்படுத்தி வைத்திருக்கலாம். அதுவேறு விடயம். அப்படி நடந்தது நிச்சயமாக

எங்களுக்குத் தெரியும். அங்கு இப்போது சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மிகவும் உயர் பதவியில் இருக்கக்கூடிய அரசஅதிபர் போன்றவர்களை அங்கிருந்து எடுத்து சிங்கள அதிகாரிகளை நியமிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் அது ஒரு மிகவும் சிறந்த செயற்பாடு. ஏனென்றால் அவர்களுக்குத் தெரிகிறது இப்படியான விசயங்களை இந்தத் தமிழ் அதிகாரிகள் எப்படியோ தமிழ்க் கட்சிகளுக்கு சொல்லிவிடுவார்கள். ஆகவே சொல்லாமலேயே விசயத்தைக் கொண்டுபோறதுக்கு இது ஒரு நல்ல செயற்பாடு என்று.

கேள்வி: அப்படியானால் அதற்கும் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வது பற்றி?

பதில்: ஆம், சொல்லியிருக்கிறோம். ஏனென்றால் மன்னார் அரசஅதிபரை மாற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் அரசஅதிபரை மொனறாகலைக்கும் மொனறாகலை அரசஅதிபரை அங்கும் கொண்டு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேமாதிரி முல்லைத்தீவிலும் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மூன்று உதவி பிரதேச செயலர்கள் போடப்பட்டுள்ளனர். அந்த விடயத்தை கவனமாக கையாண்டுள்ளனர். இப்போது இருக்கின்ற பிரதேச செயலர்கள் ஓய்வுபெற்று செல்லும் நிலையில் இருக்கும்போது அந்த இடத்திற்கு நிரப்பக்கூடிய மாதிரியாக இவர்களைப் போட்டுள்ளனர்.

கேள்வி: அவர்கள் சகோதர இனத்தைச் சேர்ந்தவர்களா, தமிழ்பேசுபவர்களா?

பதில்: அவர்கள் சகோதர இனத்தைச் சேர்ந்தவர்கள். சிங்களவர்கள் என்றால்கூட எங்களுக்கு அது பிரச்சினையில்லை. அவர்கள் அரசாங்க அதிகாரிகள், இங்கு தமிழர்கள் அதிகாரிகளாக இருக்கலாமென்றால், அங்குமிருக்கலாம். ஆனால் அதிலுள்ள நோக்கம்தான் எங்களுடைய பிரச்சினை. அங்கு நடைபெறுகின்ற நடைமுறைகளைப் பார்க்கின்றபோது, அந்த நோக்கத்தைப் பார்க்கின்றபோதுதான் எங்களுக்கு பயமாக இருக்கின்றது. நீங்கள் கூறுகிறதுபோல வெலிஓயாவுக்கு ஒர பிரதேசசெயலர் பிரிவு வேண்டுமென்றால் ஏன் இதுக்குள் வரவேண்டும். ஏன் தமிழ் பிரதேசசெயலப்பிரிவை எடுக்கவேண்டும். அதற்குள் வேறொரு பிரதேசசெயலர் பிரிவைப் போடலாம்தானே. ஏன் தமிழ்க் கிராமங்களையும் எடுக்கவேண்டும் என யோசிக்கிறார்கள்? இதுதான் அங்கேயிருக்கின்ற பிரச்சினை. அதை அவர்கள் ஒழுங்காக செய்வார்களேயானால் ஒரு பிரச்சினையுமில்லை.

கேள்வி: எவ்வளவுதான் அவர்கள் ஒழித்துக்கொண்டு வேசம் கட்டினாலும் மேடையில் வந்துதான் அவர்கள் ஆட்டம்போட வேண்டும். அவர்கள் திரைக்குப் பின்னால் வேசம் கட்டலாம் ஆனால் மேடைக்கு வரவேண்டும். அவ்வாறு மேடைக்கு வரும்போது அதை சட்டரீதியாக அணுகலாம்.

பதில்: இல்லை, மேடைக்கு வரும்போதென்றால், அந்த பிரதேசசெயலர் பிரிவெல்லாம் ஒழுங்கமைக்கப்பட்டு வர்த்தமானியில் வந்தபிறகு சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இந்த நாட்டிலே ஒரு பிரதேசசெயலர் பிரிவை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு உரிமையில்லையா என்று கேட்பார்கள் நீதிமன்றைப் பொறுத்தமட்டில். ஆகவே அது ஒரு அர்த்தமில்லாத விசயமாகப் போய்விடும். ஆகவே அரசியல் ரீதியாக முதலில் அதைத் தடுப்பதற்காகத்தான் நாங்கள் இதுபற்றி கேள்விப்பட்ட உடனேயே இதுபற்றிய குரல்கொடுக்கத் தொடங்கிவிட்டோம்.

கேள்வி: அங்குள்ள சில அதிகாரிகள்மீதும் ஒருசில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது பரவலாகவே அங்கு இருக்கும் அரசஅதிகாரிகள் உண்மையிலேயே அவர்கள் அரசாங்க ஊழியர்களே. புலிகள் காலத்தில்கூட புலிகளது கட்டுப்பாட்டில் இருந்த சில அரசாங்க அதிகாரிகளுக்குக்கூட சம்பளம் போய்க்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் வேலை பார்த்தது புலிகளுக்காக. அதுபோன்றே இப்போது சில அரசாங்க அதிகாரிகள் உண்மையிலேயே வேண்டுமென்றே இவ்வாறான விடயங்களைக் கட்டவிழ்த்துவிட்டு இவ்வாறான பிரச்சாரங்களை செய்கின்றார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் உண்மையிலேயே முன்வைக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள் சிலர் உண்மையிலேயே வேறுவிதமாக செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டையும் சில சிங்கள அரசியல்வாதிகள் முன்வைப்பதையும் நாங்கள் பார்க்கக்கூடியதாகவுள்ளது.

பதில்: இது காலாகாலமாக நடந்துவருகின்ற விசயங்கள். அங்கு நடக்கக்கூடிய சில விசயங்களை அங்குள்ள அதிகாரிகள் தமிழ்க் கட்சிகளுக்கு சொல்லிவிட்டால் உடனடியாக இப்படியாக குற்றம் சாட்டுக்கின்ற விடயங்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம். புலிகளின்

கட்டுப்பாட்டுப் பகுதிகளிலே அந்த அரசஅதிகாரிகள் வேலைசெய்கின்றபோது, நான் அப்போது பாராளுமன்றத்தில் இருந்தபோது, நான் வன்னி மாவட்டகுழுத் தலைவராக இருந்திருக்கின்றேன். அப்போது வவுனியாப் பகுதி மற்றும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வேலைசெய்கின்ற அரசஅதிபர்கள், அரச உத்தியோகத்தர்களின் உண்மையான கஷ்ரமான நிலையை என்னால் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஏனென்றால் அவர்களுக்கு இரு பொஸ்கள். அரசாங்கம் ஒரு பொஸ், புலிகள் ஒரு பொஸ். அரசாங்கத்தின் சொல்லைத் தட்டினால் வேலை போய்விடும் அல்லது மாற்றம் கிடைக்கும். புலிகளின் சொல்லைத் தட்டினால் எல்லாருக்குமே தெரியும் என்ன போகுமென்று. ஆகவே அவர்கள் மிகவும் ஒரு இக்கட்டான கஷ்ரமான நிலைமையில் இருந்தார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம். அவர்கள் புலிகளுக்காக வேலை செய்யவில்லை. அந்தப் பகுதிகளிலே இருந்த மக்களுக்காக வேலைசெய்தார்கள். ஆனால் சில விசயங்களிலே புலிகள் சொல்லுகிறதைக் கேட்டு அவர்கள் வேலை செய்திருக்காவிட்டால் நிச்சயமாக இன்றைக்கு உயிரோடும் இருந்திருக்கமாட்டார்கள். அங்கிருக்கக்கூடிய மக்களுக்குக்கூட அந்த அரச உத்தியோகத்தர்களால் கிடைக்கக்கூடிய சேவைகள் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆம், சில விசயங்களில் அவர்கள் புலிகளுடைய சொற்படியே நடந்திருக்கிறார்கள் என்பதிலே எந்தவிதமான ஒரு கருத்துவேறுபாட்டுக்கும் இடமில்லை. எங்களைப் பொறுத்தமட்டிலும் அப்போது நன்றாகத் தெரியும். நான் நினைக்கிறேன் நான் மாவட்டசபையில் இருந்தகாலத்திலேதான் முதன்முதலாக கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு அதாவது புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகளுக்கு பணம் ஒதுக்கினோம். பணம் ஒதுக்கிவிட்டு நான் அவர்களிடம் அரைவாசி பகிடியாகவும், அரைவாசி சீரியஸாகவும் சொன்ன விடயம், எனக்குத் தெரியும், நாங்கள் வந்து பார்க்கேலாது. தயவுசெய்து இந்தக் காசை மக்களுக்கே செலவழித்து விடுங்கள் என்று. அப்படி நான் மாவட்டசபை கூட்டத்திலேயே வைத்து கூறியிருக்கின்றேன். ஏனென்றால் எங்களுக்கு அது நன்றாகத் தெரிந்திருந்தது அவர்கள் இருக்கின்ற நிலைமை. அவர்கள் திட்டங்களைக் கொண்டுவருவார்கள். அந்தத் திட்டங்கள் எங்களுக்கு நன்றாகத் தெரியும், நாங்கள் அந்த திட்டங்களை மாற்றினால்கூட அவர்களால் செய்யமுடியாது என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் அப்ரூவல் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் சரி இந்தத் திட்டங்களுக்கே காசைத் தருகின்றோம். இதை நீங்கள் சரியாகச் செய்யுங்கள் என்று கொடுத்த நிலைமைகள் இருந்தது. அதற்காக நான் அந்த அதிகாரிகள் எல்லாரும் நூறுவீதம் நேர்மையாக இருந்தார்கள் என்று கூறமுடியாது. சிலர் சிலவேளைகளில் முற்றுமுழுதாக புலிகளின் ஆதரவாளர்களாக வேலைசெய்திருக்கலாம். அதேநேரத்தில் நிச்சயமாக பல அதிகாரிகள் நேர்மையாக அந்த மக்களுக்கு தங்களால் இயன்றதை ஏதோ செய்வோமென்று இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் விரும்பியிருந்தால் மாற்றத்தை எடுத்துக்கொண்டு வெளியிலே வந்திருக்கலாம் அல்லது நாட்டைவிட்டே போயிருக்கமுடியும். இப்படியே செய்யக்கூடிய நிலைமைகள் இருந்தும்கூட கஷ்ரங்களுக்கு மத்தியில் அவர்கள் பணியாற்றினார்கள்.

சிலவேளைகளில் ஊழல் மோசடிகளும் அதிகரித்த நிலைமைகள் எல்லாம் இருந்ததும் உண்மை. பல அதிகாரிகள் ஊழல் நிறைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள், ஒரு பகுதியினர் நேர்மையாக மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவைபுரிந்தவர்களம் இருந்திருக்கிறாரக்ள். தற்போது பல இடங்களிலே அந்த அதிகாரிகள் எவ்வளவு கஷ்ரப்பட்டு 24மணித்தியாலமும் வேலைசெய்வதை நான் பார்க்கின்றேன். இந்த மீள்குடியேற்ற விசயத்திலே நின்று வேலைசெய்தவர்களை நான் நேரடியாகப் போய்ப் பார்த்து வந்திருக்கின்றேன். ஆகவே முற்றுமுழுதாக அதிகாரிகளை குற்றம் சொல்லவிட்டுச் செல்வது அவ்வளவு நியாயமாக எனக்குத் தெரியவில்லை.

கேள்வி: 13வது திருத்தச் சட்டமூலத்தை அமுலுக்கு கொண்டுவரும் விடயம் பற்றி இப்போது பேசுகின்றார்கள். அது ஏற்கனவே சட்டமாகத்தான் இருக்கிறது. அதில் காணி அதிகாரம், பொலீஸ் அதிகாரம் போன்றவையும் இருக்கின்றது. ஆனால் அவற்றை இப்போது தரமுடியாது என்று வெளிப்படையாகவே அரசாங்கம் கூறியதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். எனவே இந்த காணி அதிகாரம், பொலீஸ் அதிகாரம் போன்றவை இல்லாதவிடத்து, அது ஒரு செல்லாக்காசு தீர்வாகத்தான் இருக்கமுடியும், ஒரு அர்த்தமற்ற தீர்வு என்பதில் எனக்கும் எந்தவிதமான வேறுபாடுகளுமில்லை. நானும் உடன்படுகின்றேன். உண்மையிலேயே அதுஒரு அர்த்தமற்ற தீர்வாகத்தான் இருக்கும் என்று. பொலீஸ் அதிகாரத்தை விட்டுவிடுவோம். பொலீஸ் அதிகாரத்தில் உண்மையிலேயே சில விடயங்களில் நியாயங்கள் இருக்கின்றன. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இந்தக் காணி அதிகாரம் என்பது உண்மையிலேயே ஒரு அதிகாரப்பரவலாக்கல் மூலம் அந்த மாகாணங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஒரு விடயம்தான். ஆனால் இந்தக் காணி அதிகாரத்தின் மூலம்தான் இவ்வாறான பிரச்சினைகள் எதிர்காலத்திலும் வரப்போகிறது. இந்தக் காணிஅதிகார விடயத்தில் தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பு எந்தவிதமான முன்னெடுப்புக்களையோ அல்லது அழுத்தங்களையோ தெரிவிப்பதை நான் பார்க்கவில்லை. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாக இருப்பது அரசாங்கத்தைத் தண்டிக்கும் விடயம் சம்பந்தமான சில முன்னெடுப்புக்களை செய்வதாகத்தான் நான் பார்க்கின்றேன். ஆகவே இந்தக் காணி அதிகாரம் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: காணி அதிகாரமும், பொலீஸ் அதிகாரத்தையும் பொறுத்தமட்டில், முக்கியமாக காணி அதிகாரத்தைப் பொறுத்தமட்டில் வடக்கிலே கிழக்கிலே இன்று நடைபெறுகின்ற நிலைப்பாடுகளைப் பார்க்கின்றபொழுது நிச்சயமாக காணி அதிகாரம் இல்லாத ஒரு அதிகாரப் பரவலாக்கல் எந்த விதத்திலுமே எங்களுக்கு உதவப் போவதில்லை. எந்தவிதத்திலும் பிரயோசனமில்லை. காணி அதிகாரம் நான் நினைக்கின்றேன் நிச்சயமாக உலகத்தில் எல்லா நாடுகளிலும் இருக்கிறது என்று. அந்தந்த மாகாணத்திற்கு கொடுக்கப்படும்போதுதான் ஒரு சரியான நியாயமான தீர்வாக இருக்கமுடியும். காணி அதிகாரத்தைக் கொடுப்பதிலே அரசுக்கு ஒரு கபடத்தனமான எண்ணம் இல்லாவிட்டால் அதைக் கொடுப்பதிலே மத்திய அரசுக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது, ஏனென்றால் காணியைத் தூக்கிக்கொண்டு யாரும் போகப்போறதில்லை. காணி அங்குதான் இருக்கும். காணி பங்கிடுகின்ற முறைமையை பண்டா-செல்வா ஒப்பந்தத்திலே மிகவும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. முதலில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பிறகு அந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், பிறகு வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கிடப்படுவார்கள். இவையெல்லாம் பண்டா-செல்வா ஒப்பந்தத்திலிருந்து இதுவரை மிகத்தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. மிகப்பெரிய அபிவிருத்திக்காக அரசாங்கத்திற்குத் தேவையென்றால் அதாவது சம்பூர் பகுதியில் காணி வேண்டுமென்றால் அந்த மாகாணசபை பங்கிட்டுக் கொடுக்கும். அதற்காக அங்கிருக்கின்ற முழுப்பேரையும் எழுப்பத் தேவையில்லை. 1500 ஏக்கர்தான் வேண்டுமென்றால் 1500 ஏக்கரைக் கொடுப்பது. இப்படியான பிரச்சினைகளைத்தான் நாங்கள் பார்க்கின்றோம். சம்பூரிலிருந்து 4ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன, அதாவது 1500 ஏக்கர் தேவைக்கு 10ஆயிரம் ஏக்கர் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றியிருக்கின்றது. அங்கிருக்கக்கூடிய ஒரு நிர்வாகம் என்றால் நிச்சயமாக அதைச் செய்யமாட்டார்கள். ஏனென்றால் அந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களே அங்கே இருக்கின்றவர்கள். அவர்கள் அந்தப் பிரச்சினையை நேரடியாக முகங்கொடுப்பார்கள். ஆகவே அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்.

கேள்வி: அதைத்தான் நான் குறிப்பிட விரும்புகின்றேன். உண்மையிலேயே இவ்வாறான விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. அதாவது இப்போது எமது தீர்வைப் பற்றித்தான் நாங்கள் எமது கவனத்தைச் செலுத்தவேண்டிய ஒரு சூழ்நிலையில் இருப்பதாக நான் பார்க்கின்றேன். அந்தத் தீர்வை நாங்கள் அழுத்தங்கள்மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் இங்கிருக்கும் சிங்கள மக்களை தெளிவூட்டுவதாக இருக்க வேண்டும். தமிழ்மக்களுக்கே இந்தக் காணி அதிகாரங்கள் பற்றி அவ்வளவு தெளிவிருப்பதாக நான் பார்க்கவில்லை. எனவே அந்தப் பிரதேச மக்களாகட்டும், அல்லது தமிழ்பேசும் மக்களாகட்டும் அல்லது சகோதர இன மக்களாகட்டும் அவர்களைத் தெளிவுபடுத்தும் விடயங்களில் கவனம் செலுத்தாது இந்த விடயங்கள் சம்பந்தமாக வெறுமனே அரசாங்கத்தை ஒரு குற்றஞ்சாட்டும் போக்கில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் உண்மையிலேயே தீர்வு என்று வரும்போது காணி அதிகாரத்துடனான தீர்வுதான் என்பதே என்னைப் பொறுத்தவரையில் எனது தனிப்பட்ட கருத்தாகும். உண்மையிலேயே அது காணி அதிகாரத்துடனான தீர்வாகத்தான் அது இருக்க வேண்டும்.

பதில்: தீர்வு விடயத்தில் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பொலீஸ் அதிகாரம், காணி அதிகாரம் வேண்டுமென்பதை அரசாங்கத்துக்கு மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றது. அவர்கள் ஒரு பட்டியல்போட்டு இவைகள் சம்பந்தமாகக் கதைப்போமென்று கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அரசுதான் அதைப் பிற்போட்டு வருகின்றது. இதேநேரம் எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வு நிச்சயமாக இல்ஙகையில் வரமாட்டாது.

கேள்வி: ஏன் அப்படிக் கூறுகின்றீர்கள்?

பதில்: ஏனென்றால் ஹெல உறுமயவும் நாங்களும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வு இருக்கமுடியுமென்று நான் நினைக்கவில்லை. நிச்சயமாக இருக்கமுடியாது. அதுபோல் விமல் வீரவன்சாவும் நாங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வும் இருக்கமுடியாது. சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இருக்கின்றது. ஏனென்றால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக

வருவதற்கு முன்பு நடைபெற்ற மகாநாட்டில் ஒரு சமஷ்டி முறையை ஜனாதிபதி அவர்களே பிரேரித்தார். அனைவருக்குமே இது தெரிந்தவிடயம்.

கேள்வி: அந்த விடயத்திற்குத்தான் நான் வருகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகட்டும் அல்லது தமிழ் அரசியல் கட்சிகளாகட்டும் நீங்கள் வழங்காத ஆதரவைத்தான் இப்போது ஹெல உறுமயவும், விமல் வீரவன்ச போன்ற குழுக்களும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பதில்: இது ஒரு தவறான விடயம், நாங்கள் ஜனாதிபதி அவர்களுக்கு நிச்சயமாக ஆதரவினை வழங்கினோம்.

கேள்வி: நான் உங்களது கட்சியை மட்டும் குறிப்பிடவில்லை. எல்லாத் தமிழ்க் கட்சிகளையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகின்றேன். உண்மையிலேயே எப்போதுமே எதிர்ப்போக்கையே கடைப்பிடித்துக் கொண்டிருப்பதால் அந்தத் தீர்வைத் தரவேண்டியவர்கள், ஏனென்றால் இப்போது நாங்கள் யதார்த்தத்தைப் பார்த்தால் அவர்கள் 80வீதமாக இருக்கின்றார்கள், நாங்கள் 20வீதமாக இருக்கின்றோம். அது இஸ்லாமியர்களையும், தமிழர்களையும் சேர்த்துப் பார்த்தால்கூட கிட்டத்தட்ட நாங்கள் 20வீதமாகத்தான் இருக்கிறோம். அவர்கள் 80வீதமாக இருக்கிறார்கள். எனவே இந்த இடத்தில் நாங்கள் மிரட்டி அவர்களது கழுத்தில் கத்தியை வைத்து தீர்வைப் பெற்றுக்கொள்ளக்கூடிய விடயமென்பது மீண்டுமொரு யுத்தத்திற்குத்தான் கொண்டுசெல்லுமென்பது எனது தனிப்பட்ட கருத்து. அதுதான் யதார்த்தமும், உண்மையும்கூட. அதுபோன்று வெளிநாட்டு சக்திகளாக இருந்தாலும் எப்போதும் அவர்கள் தங்களது நலன்களை வைத்துத்தான் எமது பிரச்சினையைப் பார்ப்பார்கள். அவர்கள் எங்கள் முதுகைத் தட்டிக் கொடுத்துக்கொண்டு இருந்தாலும் எப்போதுமே அவர்களும் அந்த 80வீதமானவர்களது பக்கம்தான் இருப்பார்கள். எனவே இந்த யதார்த்தத்தை நாங்கள் புரிந்துகொண்டு அவர்கள் சாணக்கியமாக வருமிடத்து நாங்கள் ஏன் சாணக்கியமாக சென்று அதாவது இது அடிபணிதல் அல்ல உண்மையிலேயே ஒரு இணக்கப்போக்கைக் கடைப்பிடித்தாலென்ன?. அப்போது அவர்களுக்கு ஹெல உறுமயவின் ஆதரவோ, விமல் வீரவன்ச குழுக்களின் ஆதரவோ அவர்களுக்கு தேவையிருக்காது. இங்கே அவர்கள் கைவிட்டால் எம்மைக் காப்பாற்றுவதற்கு எமது ஆட்சி அதிகாரத்தைக் காப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது என்ற நம்பிக்கையை ஏன் உங்களைப் போன்ற அரசியல்கட்சிகள், தமிழ்க்கட்சிகள் அரசுக்குக் கொடுக்க மறுக்கின்றன?. இது மீண்டுமொரு யுத்தம் வரவேண்டுமென்ற எண்ணப்பாடா?

பதில்: டக்ளஸ் தேவானந்தா முழுமையாக ஆதரவு கொடுக்கின்றார். ரி.எம்.வி.பி முழுமையாக ஆதரவு கொடுக்கின்றது. நாங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே ஜனாதிபதி அவர்களை ஆதரித்துப் பேசியிருக்கின்றோம். நாங்கள் முழுமையாக ஆதரவு கொடுத்து வந்திருக்கின்றோம். சந்திரிகா அவர்கள் கொண்டுவந்த தீர்வுக்கு அனைவருமே முழுமையாக ஆதரவு கொடுத்து வந்திருக்கின்றோம். சந்திரிகா அவர்களுடைய அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவைக் கொடுத்து வந்திருக்கின்றோம். இந்த ஆதரவு கொடுப்பதனால் மாத்திரம் பிரச்சினைகள் தீரவில்லை. இணக்க அரசியல் பிழையென்று நான் கூற வரவில்லை. இந்த இணக்க அரசியல் என்றுமே பிரச்சினையைத் தீர்த்துவிடவில்லை. அதற்காக எதிர்ப்பு அரசியலும் தீர்த்து விடவில்லை.

கேள்வி: சந்திரிகா அவர்களின் காலகட்டத்தில் வந்த தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சில சரத்துக்களை எதிர்த்தது, உண்மையிலேயே அது ஐக்கிய தேசியக் கட்சியால் கிழித்தெறியப்பட்டபோது அல்லது பாராளுமன்றத்தில் எரியூட்டப்பட்டபோது அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், எதிர்க்கட்சியுடன்தான் இருந்தார்கள்.

பதில்: இல்லையில்லை. நான் அப்போது பாராளுமன்றத்தில் இருந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்போது இல்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிதான் பாராளுமன்றத்தில் இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தமட்டில் அன்று டொக்டர் நீலன் திருச்செல்வம் அவர்கள்தான் கூடுதலாக அந்த வரைபை ஜீ.எல்.பீரிஸ் அவர்களுடன் சேர்ந்து இயற்றியிருந்தார். அன்று ஐக்கிய தேசியக் கட்சி பல விடயங்களிலே மிக இறுக்கமாக இருந்தபடியால் சில விசயங்களை நாங்கள்கூட விட்டுக்கொடுத்தோம். அன்று நாங்கள் என்று கூறினால் தமிழ்த் தரப்பிலே அன்று சிலவிடயங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வந்தது. ஏனென்றால் அந்த ஒற்றையாட்சியை எடுத்து ஒரு அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு அது வாய்ப்பாக இருக்கின்றது. ஆகவே அதையாவது முதலாவது கட்டமாக செய்யலாம் என்பதற்காக ஆதரவு கொடுத்திருந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தமட்டில் அன்று இந்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றிலும் சாதகமாக பங்குபற்றினார்கள். அவர்கள் வாக்களித்திருப்பார்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அது வாக்களிப்புக்கே போகவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பத்தில் வாக்களிக்க

ஒத்துக்கொண்டாலும் அவர்கள் பின்பு பின்வாங்கியது இந்தப் பிரச்சினைக்காக மாத்திரமல்ல. முக்கியமாக ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டுமென்பது ஐ.தே.கட்சியின் கோரிக்கையாகவிருந்தது. அதை ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தாலும் கூட அவர் தன்னுடைய காலம் முடிந்தபின்புதான் அதை இல்லாமல் செய்வதென்றபடியால் அவர்கள் அதை எதிர்த்தார்கள்.

கேள்வி: எனது குற்றச்சாட்டு என்னவென்றால், அப்போது தமிழ்த் தரப்பு உறுதியாக அந்த விடயத்தில் அன்று அரசின் சார்பாக நின்றிருந்தால்?

பதில்: ஆம் பதினேழு பேரில் நாங்கள் பன்னிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக நின்றோம். நாங்களும், ஈ.பி.டி.பியும் உறுதியாக நின்றோம். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் உறுதியில்லாமல் இருந்தார்கள்.

கேள்வி: ஆகவே அப்போதே இந்தப் பிரச்சினைகள் இருந்திருக்கின்றது. பாதிப்பேர் இதற்கு ஆதரவாகவும், பாதிப்பேர் எதிராகவும் இருந்திருக்கிறார்கள். அதனால் அதன்பிறகு அந்த தீர்வுத்திட்டத்தை எழுதிய நீலன் திருச்செல்வம் கூட தமிழ்த் தரப்புக்களால் கொலை செய்யப்படுகின்றார்.

பதில்: அதுதான் நான் கூறினேன். அப்போது எல்.ரி.ரி.ஈ இருந்தபோது நாங்கள் எல்.ரி.ரி.ஈ எதுசொன்னாலும் அதைப்பற்றி பரவாயில்லையென்று அதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி புலிகளின் தொலைபேசி அழைப்பின் காரணமாக பின்வாங்கியிருக்கலாம். அது வேறு விடயம். இன்று இந்தப் பிரச்சினைகள் எதுவுமில்லைதானே. இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டால், இன்றிருக்கின்ற நிலையில் இந்தப் பிரச்சினையை மிக இலகுவாகத் தீர்த்துவிடலாம்.

கேள்வி: அதைத்தான் நானும் கூறுகின்றேன். இப்போது களநிலைவரங்கள் வேறாக இருக்கின்றன. இந்தக் களநிலைவரங்களை நாங்கள் ஏன் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது? தமிழ்க் கட்சிகள் ஏன் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது, வெறுமனே இணக்கஅரசியல் செய்துகொண்டு விமர்சிப்பதை விடுத்து,

பதில்: விமர்சிப்பதல்ல. இணக்க அரசியல் செய்கின்ற கட்சிகள் இருக்கின்றபோதே வடமாகாணத்தில் இப்படியான பிரச்சினைகள் இருக்கின்றது. நான் கூறிய பிரச்சினைகள் இருக்கின்றது. உண்மையாகவே அங்கு பல இடங்களிலே காணிகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. தனிப்பட்ட முறையில் சிங்களமக்கள் வந்து குடியேறுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் அங்கிருக்கின்ற குடிப்பரம்பலை மாற்றுகின்ற நோக்கத்திலே அரசினால் ஊக்குவிக்கப்பட்டும் அரசால் உதவிசெய்யப்பட்டும் வருகின்ற குடியேற்றத் திட்டங்களைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோம். அது தான் பிழையென்று சொல்கின்றோம். இப்போது அங்கு நடந்துகொண்டு இருக்கின்றது. அங்கு இணக்க அரசியல் நடக்கின்றபொழுது, வடக்கிலே இருந்து ஒரு அமைச்சர் இருக்கின்றபோது இவை நடந்துகொண்டிருக்கின்றது. அவராலேயே அதைத் தடுக்கமுடியாமலிருக்கின்றது.

கேள்வி: காணி அதிகாரங்களைப் பற்றி நாங்கள் ஆரம்பத்தில் பேசியிருந்தோம். காணிப்பதிவு விடயமாக நாங்கள் அன்று பத்திரிகையாளர் மாநாட்டில் ஏன் இந்தக் காணிப்பதிவுளை நீங்கள் செய்கின்றீர்கள் என்ற விடயத்தைச் கேட்டபோது, பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ச கூறினார், இந்தியாவிடமிருந்தும் அதுபோன்று உலக வங்கியிடமிருந்தும் அந்த மக்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான நிதி எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான விடயங்கள் நடைபெறும்போது அவர்கள் அதாவது இந்திய அரசாங்கமோ அல்லது உலக வங்கியோ அந்த மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதானால் அந்த இடம் அவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள். எனவே அதை நாங்கள் பூர்த்தி செய்வதற்காகத்தான் இந்த மக்களை காணிப்பதிவைச் செய்யச்சொல்லி கேட்கின்றோம் என்று கூறினார். அதை ஒரு நியாயமாகத்தான் அவர் கூறினார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகவே இருந்தது. அப்படி அந்த மக்களுக்குத் தேவையான காணிகளைத்தான் நாங்கள் பதிவுசெய்து கொண்டிருக்கின்றோம். எனவே இதில் பயப்படவோ அல்லது இதை ஒரு வேறு பிரச்சாரமாக்கவோ வேண்டிய தேவையில்லை. அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் விளங்கப்படுத்தினோம். அவர்கள் அதை ஒத்துக்கொண்டார்கள். ஆனால் எம்மிடம் சரியென்று சொல்லவிட்டு, அங்கேபோய் இதுபற்றி பிரச்சாரம் செய்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார். எனவே இவ்வாறான விடயங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அவர் என்ன சொன்னார், அவர்கள் ஒத்துக்கொண்டார்களா என்பது பற்றி எனக்கு உண்மையிலேயே தெரியாது. ஏனென்றால் எனக்கு அது சம்பந்தமாக அவருடன் கதைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறவில்லை. இந்தக் காணிப்பதிவுகள் சம்பந்தமாக நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். நாங்கள் அதற்கு எதிராக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைக்கூட வவுனியாவிலே நடத்தியிருக்கின்றோம். அங்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. உங்களுக்குத் தெரியும் வவுனியாவைப் பொறுத்தமட்டில் வவுனியாவிலேயே பல காணிப்பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வைத்திருக்கின்றோம். தீர்த்து வைத்திருக்கின்றோம் என்றால் அது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நியாயரீதியாக சில விசயங்களைத் தீர்த்து வைத்திருக்கின்றோம். பலருக்கு உறுதிகள் இல்லை. பேர்மிட் இல்லை. இப்படியான பிரச்சினைகள் இருக்கின்றது. இவையெல்லாம் உண்மை. இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் உறுதி கேட்கின்றது. வீடுகட்டிக் கொடுப்பதற்கு சொந்தக்காணியாக இருக்கவேண்டுமென்று கேட்கின்றது. வீடுகட்டிக் கொடுப்பதற்கு. இவையெல்லாம் இன்று ஒரு பிரச்சினையாக இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்கிறோம். அதற்காகத்தான் கௌரவ பசில் ராஜபக்ச அவர்கள் கூறினார் என்று சொன்னீர்கள். அவர் வேறு விசயத்தையும் சொல்லியிருக்கிறார். இது வடகிழக்கில் மாத்திரமல்ல இலங்கை முழுக்கத்தானே செய்யப்போகிறோம் என்று.

கேள்வி: இலங்கை முழுக்கவும் செய்யப்போகிறோம் என்பதை மட்டுமல்ல அவர் குறிப்பிட்டார் நாங்கள் இதை கம்பஹா மாவட்டத்தில் செய்து முடித்துவிட்டோம், கம்பஹா மாவட்டத்தில் இன்னுமொரு விடயத்தையும் நாங்கள் செய்யப்போகிறோம். கம்பஹா மாவட்டத்தில் முதன்முதலாக அனைத்தையுமே நாங்கள் கணனிமயப்படுத்தப் போகின்றோம் எனவே கணனிமயப்படுத்துவதுடன், அவர்களுக்கு நவீனமுறையில் இந்த உறுதிகளை வழங்குவது மற்றும் யாரும் உடனுக்குடன் பார்க்கக்கூடிய சில விடயங்களைச் செய்யப்போகிறோம் ஆகவே இதை நாங்கள் நாடு பூராகவும் விஸ்தரிக்கப்போகின்றோம். எனவே வடக்கில் இப்போது அந்தத் தேவையிருப்பதால் இப்போது நாங்கள் இதைச் செய்கின்றோம், இந்த மக்கள் பிரச்சினைப்படத் தேவையில்லை என்ற ரீதியில் அவர் கருத்துக்களை கூறியிருந்தார்.

பதில்: அப்படியென்றால் அவர் சொன்ன முதல் விசயமாக இந்தியா அந்தக் காணி உறுதி கேட்கிறது என்பதற்காகத் தான் இதைச் செய்கிறோம் என்று சொன்னது நியாயமாகத் தெரியவில்லை. ஏனென்றால் திரும்பச் சொல்கிறார் இலங்கை முழுக்க செய்யப்போகிறோம் என்று. அப்படி இலங்கை முழுக்கச் செய்யப்போகிறோம் என்றால் அந்த நியாயம் இதில வராது. இலங்கை முழுக்க இதுவொரு பொலிசியாகச் செய்கின்றார்கள் என்றால் முதலில் இங்காலே செய்யுங்கள் ஏனென்றால் இங்கே இருக்கின்ற மக்கள் இடம்பெயரவில்லை. ஆகவே இங்கு அவர்கள் அந்தந்த இடங்களிலே இருக்கின்றார்கள். ஒரு பிரச்சினையில்லாமல் அந்தக் காணிகளை அவர்கள் பதிந்தெடுத்துக்கொள்ள முடியும்.

வடகிழக்கைப் பொறுத்தமட்டில் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இடம்பெயர்ந்து வெளியிலே இருக்கின்றார்கள். உதாரணத்துக்கு இன்றைக்கு யாழ்ப்பாணத்தில்கூட பதிகிறதில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் நிச்சயமாக மாவிட்டபுரம், தெல்லிப்பளைப் பகுதியைப் பார்த்தீர்களென்றால் அந்தக் காணிகளை அடையாளம் காண்பதே கஸ்ரமாக இருக்கின்றது. ஏனென்றால் காடு, மாவிட்டபுரத்திலிருந்து கீரிமலைக்குப் போகின்றபோது ஒரு பற்றைக் காட்டுக்குள்ளாலே ஏதோ காட்டுப்பாதையால் போகின்றமாதிரி இருக்கின்றது. ஆகவே அந்த மக்கள் தங்களுடைய காணிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இன்னமும் சரியாக அடையாளம் கண்டு தங்கள் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யவில்லை. இப்படியான பிரச்சினைகள் இருக்கின்றது ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவிலே இருக்கின்றார்கள், வெளிநாடுகளிலோ இருக்கின்றார்கள். இன்னும் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய பலருக்கு தங்களுடைய காணியைப் பறிப்பதற்கான ஒரு திட்டமோ என்ற ஒரு பயமிருக்கின்றது. இந்தியாவிலே ஒருலட்சம் மக்கள் இப்போதும் இருக்கின்றார்கள். அவர்களில் வன்னியிலிருந்து சென்றவர்கள்தான் கூடுதலானவர்கள். அவர்கள் தங்களுடைய காணிகள் பறிபோய்விடுமென்ற ஒரு பயத்தில் இருக்கின்றார்கள். இப்படியான நிலைமையிலே இந்த மக்கள் மீள்குடியேறி அவர்கள் இருக்கும்வரையில் இதைச் செய்வது தவறு என்று கூறுகின்றோம்.

அடுத்ததாக நாங்கள் கூறியதுபோல இந்த காணிப்பறிப்பு விசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றபோது இதையும் அவர்கள் செய்ய முற்படுகின்றபோதுதான் எங்களுக்கு அந்த சந்தேகங்கள் வலுத்திருக்கின்றது. எங்களுக்கு சந்தேகங்கள் வலுத்திருக்கின்றது. மற்றைய நடவடிக்கைகளைப் பார்க்கின்றபோது இது ஒரு கபடத்தனமான நோக்கத்துடன்தான் செய்யப்படுகின்றது என்ற ஒரு எண்ணமிருக்கின்றது. ஏனென்றால் இந்தக் காணிப்

பதிவில்லாமலேயே அங்குவந்து சகோதர இனமக்கள் காணிகளைச் செய்கின்றார்கள். கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு அவர்களுக்கு மாத்திரம் தான் அனுமதிப்பத்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இப்படியான விசயங்களை பார்க்கின்றபோதுதான் சந்தேகங்கள் வலுத்திருக்கின்றது.

கேள்வி: இப்படியான விடயங்களை அதாவது கரையோரப் பிரதேசங்களில் சகோதர இன மக்களுக்கு மட்டும் மீன்பிடிக்க இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டுகின்றீர்கள். ஆனால் அதை எதிர்த்து ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பதில்: உண்ணாவிரதம் இருந்திருக்கிறோம். இது தொடர்பில் பேசியிருக்கின்றோம். பத்திரிகைகளுக்கு சொல்லியிருக்கிறோம். ஆக்கபூர்வமென்றால் இதைவிட என்ன செய்யலாமென்பது எங்களுக்கே தெரியவில்லை.

கேள்வி: நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார்களா?

பதில்: பாராளுமன்றத்தில் கதைத்திருக்கிறார்கள். அமைச்சர்களுடன் நேரடியாகக் கதை;திருக்கிறார்கள்.

கேள்வி: என்ன தீர்வு கிடைத்தது?

பதில்: தீர்வு கிடைக்கவில்லை. இதைத்தான் அவர்கள் முன்வைத்து கடைசியாக அரசுடன் இடம்பெற்ற பேச்சிலே அவர்கள் மூன்று நான்கு விடயங்களை முன்வைத்து இதற்கு ஒரு சரியான தீர்வு தாருங்கள், அப்போதுதான் மக்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை வைப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி: நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள், நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம். விடயங்களை முன்வைத்தோம். பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறோம் தீர்வு கிடைக்கவில்லை என்றால் என்னைப் பொறுத்தவரையில் நான் அந்தப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் நான் அந்த பதவியை இராஜினாமா செய்வேன்.

பதில்: பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு பாராளுமன்றத்தில் பேசக் கிடைக்கின்ற அந்த சந்தர்ப்பத்திலேயே செய்யவில்லையென்றால், பாராளுமன்றத்திலிருந்து இராஜினாமா செய்தால் ஒன்றுமே இல்லையே.

கேள்வி: அப்படியென்றால் இப்போது வெளிநாடுகளுக்கு சென்று இந்த விடயங்களைக்கூறி இங்கிருக்கும் சிங்களமக்களின் எதிர்ப்பைப் பெற்றுக்கொள்வதைவிட நாங்கள் இங்கிருந்தே எமது பதவிகளை இராஜினாமா செய்தால் உண்மையில் அங்கிருக்கும் மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும். அதுபோன்று சகோதர சிங்கள மக்களும் பார்ப்பார்கள். அதாவது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல இங்குள்ள தமிழ்மக்களுக்கே இங்கிருக்கும் பிரச்சினைகள் தெரியவில்லை, சாதாரண ஒரு மகனைக் கூப்பிட்டு உனக்கென்ன பிரச்சினை உனக்கென்ன தீர்வு வேண்டுமென்றால் அவனுக்குத் தெரியவில்லை. அதற்காக நான் தீர்வு தேவையில்லை என்று குறிப்பிடவில்லை. அவனுக்கு தனக்கென்ன பிரச்சினை இருக்கின்றதென்பது ஒரு சாதாரண தமிழ்மகனுக்கு தெரியாதுள்ளது. அதை ஒரு சாட்டாகக்கூறி இந்த நாட்டுக்கு தீர்வு வேண்டாமென்று நான் கூறவில்லை. கட்டாயமாக இந்த நாட்டில் ஒரு சரியான தீர்வு வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அந்தத் தீர்வு மிகமிக முக்கியமென்பது எனது கருத்து. அந்த வகையிலே இதை தமிழ்மக்களுக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ உணர்த்தும் வகையில் இல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைககள் சிங்கள மக்களை எரிச்சலூட்டுவதாகத்தான் இருக்கிறதே தவிர மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டி, இன்னுமின்னும் துவேசங்களை வளர்ப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர உண்மையிலேயே அவர்களுடைய ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான எந்தவிதமான நடவடிக்கைகளையும் நான் காணவில்லை.

பதில்: நீங்கள் கூறுவதுபோல அவர்களும் கூறப் பார்க்கலாம். அதேநேரத்தில் இப்படியான பிரச்சினைகளை எடுத்துக் கூறுவது அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கின்றது. இப்படி நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்று.

கேள்வி: உள்நாட்டில் இருந்துகொண்டு கூறுவதை சிங்கள மக்கள் எதிர்பார்க்கலென்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

பதில்: உள்நாட்டிற்குள் இருந்துகொண்டு கூறுகின்ற போதுதானே அரசியல்கட்சிகள் அதாவது அரசாங்கக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மிகப் பயங்கரமாக அதைத் தாக்குகின்றார்கள். உள்நாட்டிலிருந்து கூறுகின்றபோது, பாராளுமன்றத்தில் கூறுகின்றபோது அன்று யோகராஜன் இந்த விடயத்தைப் பாராளுமன்றத்தில் எடுத்தபோது உணரக்கூடியதாகவும், பார்க்கக்கூடியதாகவும் இருந்தது. அரச கட்சியில் இருந்தவர்கள் கெம்பி எழுந்து ஒரு ஆவேசமாகத் தன்னை ஆக்ரோசமாக எதிர்க்கின்ற தன்மையை பார்க்கக் கூடியதாக இருந்தது.

கேள்வி: இவ்வாறான விடயங்களில் எவ்வளவுதான் எதிர்ப்பு வந்தாலும் அந்த எதிர்ப்புக்களையும் மீறி அந்த இடத்தில் அந்தப் பிரச்சினைகள் எழுப்பப்படவேண்டும். இல்லையென்றால் அந்தப் பதவியில் அர்த்தமில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதிலோ எந்தவித அர்த்தமும் இல்லை. வெறுமனே தங்களது பதவிகளை பாதுகாக்கும் தங்களது பாராளுமன்ற இருக்கைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாகவேதான் இன்னமும் தமிழ் அரசியல் தரப்புக்கள் செய்து கொண்டிருக்கின்றனவா?

பதில்: 83ல் பாராளுமன்ற பதவிகளைத் துறந்தார்கள். நடந்தது உங்களுக்குத் தெரியும். நிச்சயமாக அப்படியான ஒரு நிலைமை வரவேண்டுமென்று நான் நம்பவில்லை. வரவும் கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு மக்களும் தயாரில்லை. நாங்களும் தயாரில்லை. அதை எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. ஆகவே 83ல் பாராளுமன்றப் பதவிகளை துறந்தவுடன் ஏற்பட்ட நிலைமைகள் மீண்டும் ஏற்படக்கூடாது. பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

கேள்வி: தமிழர் பிரச்சினைகள் என்றால் பத்திரிகைகளில் மட்டும்தான் பேசப்படுகின்றது. சிங்களப் பத்திரிகைகள் அதைப் பேசுவதில்லை. தமிழ் ஊடகங்களில் மட்டும்தான் பேசுகின்றோம். சிங்கள ஊடகங்களில் பேசுகின்றோம் இல்லை. ஏனென்றால் தீர்வு வரவேண்டியது சிங்கள மக்களிடமிருந்து. சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் நாங்கள் ஒரு சரியான தீர்வை பெற்றுக்கொள்ளவே முடியாது. எனவே அந்த மக்கள் ஆதரவைப் பெறும் நடவடிக்கைகளை தமிழ்க் கட்சிகள் எடுக்கவில்லை. முற்றுமுழுதாகவே எடுக்கவில்லை என்பதுதான் எனது ஒரு குற்றச்சாட்டாக இருக்கின்றது. அல்லது எனது மனவருத்தமாக, ஆதங்கமாக இருக்கின்றது.

பதில்: என்னைப் பொறுத்தமட்டில் நான் நேர்மையாகச் சொல்லவேண்டும். ஆங்கிலப் பத்திரிகைகளில் நீங்கள் கூறிய விசயங்கள் இருக்கின்றது. என்னால் சிங்களம் ஒரு அளவுக்குத்தான் தெரியுமொழிய முழுமையாக விளங்கக்கூடிய நிலையில் இல்லை. எனினும் சிங்களப் பத்திரிகைகளிலும் இவை வருகின்றன என்பதை அறிகிறேன். இந்நிலையில் சிங்கள மக்கள் விடயத்திலும் கவனம் செலுத்தி எங்கள் கோரிக்கைகளின் நியாயத்தை எடுத்துக் அவர்களுக்கு கூறுவதற்கு முயற்சிப்போம்.

அதேநேரத்தில் சிங்கள மக்களை ஒரு சாட்டாகத்தான் சிங்கள அரசியல் கட்சிகளும் பார்க்கின்றன. நீங்கள் இப்போது கூறினீர்கள், தமிழ்மக்கள் தனக்கென்ன தீர்வு வேண்டுமென்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று, அதிலே நான் முழுமையாக உடன்படவில்லை ஏனென்றால் பல மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது வாக்களிக்கின்றபோது ஓரளவுக்கு தங்களுக்கு ஒரு உரிமை வேண்டுமென்ற காரணத்திற்காகவுமேதான் வாக்களிக்கின்றார்கள். அது வேறு விசயம். அதேபோல சிங்கள மக்களைப் பொறுத்தமட்டிலும் இப்படியொரு பிரச்சினை இல்லையென்று அவர்கள் கருதவில்லை. பிரச்சினை இருக்கிறதுதான், ஏனென்றால் புலிகளின் போர்க்காலத்தில் மிகத்தெளிவாக அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். அது மாத்திரமல்ல சந்திரிகா அவர்களுக்கு வாக்களிக்கின்றபோது அதற்காகவே 62வீதமான மக்கள் வாக்களித்தார்கள். அல்லது 2001ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களைத் தெரிவு செய்கின்றபோது மிகத் தெளிவாக வாக்களித்து தெரிவுசெய்தார்கள். ஆகவே சிங்கள மக்களும் காலத்திற்குக்காலம் ஒரு தீர்வுக்காகவே வாக்களித்திருக்கின்றார்கள். பண்டா-செல்வா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு கிழித்தெறியப்பட்டவுடன் 60ம் ஆண்டு வந்த தேர்தலிலே ஐக்கிய தேசியக் கட்சியைத்தான் சிங்களமக்கள் தேர்ந்தெடுத்தார்கள். சிங்களமக்கள் முழுமையாக இனவாதிகள் என்று நாங்கள் கருதவில்லை. நான் ஏற்கனவே கூறினேன் அதிலே மிகமிக சிறிய குழுவினர்தான் இனவாதிகளாக உள்ளனர்.

ஊடகவியலாளர்: அவர்களைப் புறந்தள்ளிவிட்டால் அல்லது அவர்களை மக்கள் புறக்கணிக்கும்படி செய்துவிட்டால் உண்மையிலேயே பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com