Contact us at: sooddram@gmail.com

 

அன்று ஞானப்பால் குடித்த சம்மந்தர் இன்று தேசியப் பட்டியலை விழுங்கினார்

(மாதவன் சஞ்சயன்)

நடந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் மனதை படிக்க முடிந்த அளவுக்கு கூட்டமைப்பு தலைவர்களின் தேசிய பட்டியல் பகிர்வை ஊகிக்க முடியவில்லை. பலவிதமான பகிர்வுகளை கூறி இறுதியில் பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டி பாலை சம்மந்தர் குடித்து விட்டார். அனந்தியை என்ன நோக்கத்துக்காக கொண்டு வந்தனரோ அதே நோக்கில் தான் இப்போது சாந்தியை கொண்டு வருகின்றனர். தாம் விரும்பாதவருக்கு கொடுப்பதை தவிர்க்கவே அவரை தெரிவு செய்தனர். சில நூறு வாக்குகளால் தான் முதலில் சாந்தி தெரிவு செய்யப்பட வில்லை. சாந்தியின் ஆதரவு வாக்குகளை பெற அவரை களமிறக்கி விட்டு தங்களுக்கு வாக்கு கேட்ட சக வேட்பாளர் செயலால் நடந்த நிகழ்வு அது. ஆனால் மக்கள் தீர்ப்பை மாற்ற முடியாது என்பது அவர் தெரிவில் இருந்து தெரிகிறது.

அந்த பிரதேசத்தின் தேவை கருதி அவர் வரவு நல்வரவாகட்டும். ஒரு அனுபவம் மிக்க நிர்வாக அதிகாரி யுத்த வடுக்களை தாங்கியவர் மக்கள் சேவைக்கு நிச்சயம் தேவை. அதே வேளை அவருக்கு ஒரு ஆலோசனை. தயவு செய்து அரசியல் பேசாதீர்கள். புலம் பெயர்ந்த அரசியல் வியாபாரிகள் அழைப்பை ஏற்று ஐநா சபை வரை போகாதீர்கள். உடுக்கு அடித்து மஞ்சள் சிவப்பு கரை சேலை தந்து சன்னதமாட வைப்பார்கள்.

திரும்பி வந்தபின் அனந்தியை போல் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு அரசியல் அம்மண ரங்காவின் மின்னலில் முனக மட்டும் தான் முடியும். அதை விடுத்து வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தை கொண்டு சென்றது போல் மற்ற பிரதேசங்களில் இருந்து பிரபாகரனை நம்பி வந்த மக்களோடு உங்கள் மக்களும் புதைந்து மயான பூமியான முல்லைத்தீவை மீண்டும் கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்துங்கள்.

வளம் கொழிக்கும் வயல்களும், மழை தருவிக்கும் அடர்ந்த காடுகளும், மீன் துள்ளி தோணியில் விழும் கடல் வளமும் கொண்ட பிரதேச மக்கள் இன்று அகதிகளாய் பஞ்சப் பராரிகளாய் நிவாரணம் வேண்டி அலையும் நிலை. ஆ நிரையும் கோழி வளர்ப்பும் வேளாண்மையும் சிறு தானிய பயிரும் செய்து வாழ்ந்த வன்னிமையின் பெரும் பகுதி கொண்ட மண்ணில் இன்று கைம்பெண்கள் கதியற்ற நிலையில் மகவிற்கு பாலின்றி மடிப் பிச்சை ஏந்தும் நிலை.

கற்சிலை மடுவில் பண்டார வன்னியன் தன் மக்களை, மண்ணை காக்க லெப்டினன் வொன் றிபேக் உடன் வாள் கொண்டு போரிட்டே மாண்டான். சுடுகலன்கள் வைத்திருந்த பிரபாகரன் போல் தன் மக்களை பலிகொடுத்து தப்பித்து ஓடும் போதல்ல. வீரம் விளைந்த மண்ணில் கொலைகாரன் வரலாறு தேவையில்லை. எனவே அழிக்கப்பட்ட மண்ணில் உங்கள் வரவு புதிதாய் துளிர்க்கும் விதையாய் விருச்சமாய் வான் நோக்கி வளரட்டும்.

முஸ்லிம்கள் ஆதரவு தந்தால் மூன்று ஆசனம் பெறலாம். அப்போது ஒரு முஸ்லிம் ஒருவரை தெரிவு செய்வது பற்றி முடிவெடுப்போம் என மூதூரில் பேசிய சம்மந்தர் 1 ஆசனம் மட்டுமே திருமலையில் கிடைத்ததால் 2வது தேசிய பட்டியலை மூதூர் தமிழ் மகனுக்கே கொடுக்க முடிவெடுத்தார். நீங்கள் போடவில்லை அதனால் உங்களுக்கு தர முடியவில்லை என தௌபிக்கிடம் சொல்வார்.

துரைரட்ணசிங்கம் தலையில் பாரிய சுமை ஏறி உள்ளது. மூதூர் தொகுதியின் சம்பூர் தோப்பூர் மல்லிகைத்தீவு கங்குவேலி உட்பட பல கிராமங்கள் மீள் குடியேற்றம் வேண்டி நிற்கின்றன. பெரும் தொகை மக்கள் இடம் பெயர்ந்து வெருகலுக்கு அப்பால் அகதி நிலையில். அவர்களை மீளமர்த்தி அழிந்த பாடசாலைகளை இயங்க செய்யுங்கள். இணக்க அரசியலில் அபிவிருத்தியும் உள்ளடக்கம் என்பதால் முன்னாள் கல்வி அதிகாரியான உங்களால் அது முடியும்.

13 - 12 பெற்ற தேசிய கட்சிகளே 2 தினங்களுள் தம் தெரிவை தெரிவித்து விட்டன. 2 ஆசனம் பெற்ற இவர்களின் இழுபறி மீண்டும் வட மாகாண சபை பதவி ஏற்பை ஞாபகப்படுத்தியது. ஒருவர் சமாதியில் மற்றவர் சந்தியில் என திக்குக்கு ஒருவராக சத்திய பிரமாணம் எடுத்தனர். ஆனால் அனைவரும் 6வது திருத்த சட்டத்தை ஏற்றே பதவி பிரமாணம் செய்தனர். வாய்ப்பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை என்பது இது தான்.

அன்று தம்பிக்கு மந்திரி பதவி கேட்டவர் இன்று தனக்கு எம் பி பதவி கேட்டு பிச்சைக்காரர் சங்கம் தவிர ஏனைய இல்லாத சங்கங்களின் பெயரில் கோரிக்கை வைத்தார். சிவமோகன் விலகி சாந்தி தெரிவாக அந்த தேசிய பட்டியலை தான் பெற முயல, அவரோ நான் ஈபி இல்லை வென்றது என் செல்வாக்கில் என மறுக்க சிவசக்தி ஆனந்தனுக்கும் வலை வீசியதாக செய்தி. 2001ல் அகப்படாத ஆனந்தனுக்கு இம் முறை கோடிகள் ????????

ஊகங்களுக்கும் பேரம் பேசலுக்கும் ஆரம்பத்தில் வித்திட்டவர்கள் வெறும் பதவி தான் தம் நோக்கம் என வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர். என்னதான் முக்கினாலும் முடிவு எப்போதும் சம்மந்தர் கையில்தான். கூடவே சுமந்திரனின் மந்திர ஆலோசனையும். மாவையின் தலையாட்டலும். முதல்வர் தெரிவு முதல் தேசிய பட்டியல் வரை. பேராசிரியர் சிற்றம்பலம் இம்முறையும் இலவு காத்த கிளி. அவரது வயதுக்கு இன்னம் 5 வருடம் தாக்குப் பிடித்தால் அடுத்த பட்டியலிலும் அவர் பெயர் இடம் பெறும்.

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com