Contact us at: sooddram@gmail.com

 

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

வெகுஜன ஊடகங்கள் ஒரு சமூகப் பிரஞ்ஞையுடன் செயற்பட வேண்டும். மக்கள் சரியான திசை வழியே பயணிப்பதற்கு ஊடகங்களின் செயற்பாடு முக்கியமானதோர் பாத்திரத்தை வகிக்க முடியும். ஒரு சமூக மாற்றத்திற்கு, சமூக முன்னேற்றத்திற்கு, சமூக விழிப்பிற்கு 'வித்திடலில் ஆரம்பித்து அது பூத்துக் குலுங்கி காய் கனியாகி' முழுமை பெறுவதற்கு ஊடகங்கள் பெரும் பங்களிப்பை ஆற்ற முடியும். எனவே ஊடகவாளர்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்;தவர்களாக, உண்மையானவர்களாக செயற்பட முயல வேண்டும். ஊடகத்துறை சமூகத்தின் அறிவு வளர்ச்சியின், சிந்தனை வளர்ச்சியின் முதுகெலும்பாக செயற்பட வேண்டும். ஒரு சமூகத்தின் ஊடகவாளர்களின் பிழையான செயற்பாடுகள் தனிநபர்களை மட்டுமல்ல அந்த சமூகத்தையே ஏன் அவர்களின் தேசத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிடும்;;. இதுவே அண்மையில் நாம் இலங்கையில் கண்ட வரலாற்று உண்மை.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கும், தமிழ் மக்களின் இன்றைய சீரழிவு நிலைமைகளுக்கும் இலங்கைத் தமிழர்களால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடாத்தப்படும் ஊடகங்களின் செயற்பாடுகளும் மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. இந்த ஊடகங்களில் பெரும்பான்மையானவை புலிகளால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது அவர்களின் செ(h)ல்வாக்கிற்கோ அல்லது முதலீட்டுக்கோ உட்பட்டவையாகவே இருந்தன என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தமிழ்ச்சமூகம் இன்று கொண்டிருக்கும் அவல நிலைக்கு இவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'லங்காபுவத்' செய்த கைங்கரியங்களை நாம் நிறையவே ஜேஆர், பிரேமதாச கால கட்டத்தில் இலங்கையில் கண்டோம். இவர்களும் அன்று வெளியிட்ட செய்திகள் இலங்கையில் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற இனக்கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும், 'இனச் சுத்திகரிப்புக்;கும்' பெரும் பங்காற்றின. இதற்கு எந்த வகையிலும் சளைக்காமலே புலிச் சார்பு ஊடகங்கள் கடந்த காலங்களில் இருந்து செயற்பட்டு வருகின்றன. அரசு சார்பு ஊடகங்களும், ஏன் ஏனைய இனவாத அரசியலை தமது வாழ்வாக கொள்ளும் கட்சிகளின் ஊடகங்கள்; இது போன்ற மக்கள் விரோத செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றன.

இவற்றிற்கு நடுவே சரியான நிலைப்பாட்டை எடுத்து முடிந்தளவிற்கு உண்மையான செய்திகளை, விடயங்களை வெளிக் கொணர்ந்த ஊடகங்கள் இலங்கையிலும், தமிழர் புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலும் இல்லாமல் இல்லை. இவை மிகச் சிறிய அளவிலேயே இருந்தன, இருக்கின்றன. புலிகளின் பணபலம், ஆயுத சண்டித்தனத்திற்கு மத்தியில் இவர்களால் பெரிய அளவில் செயற்பட்டு ஈழத்து உண்மை நிலமைகளை பரந்துபட்ட மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியவில்லை என்பதுவும் உண்மையே. கூடவே அதிகாரத்தில் இருக்கும் அரசுகள் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடும் இச் செயற்பாடுகளை மட்டுப்படுத்தியே வந்தது. இதன் விளைவாக இவர்களில் சிலர் புலிகள் மற்றும் அரச மிரட்டல்களுக்கு 'பயந்து' தமது குடும்பம், குழந்தை, குட்டிகளை நினைந்து தமது ஊடகச் செயற்பாடுகளை மௌனித்துக் கொண்டனர்.

ஈழநாடு பத்திரிகையானது திரு. சபாரத்தினம் ஆசிரியராக இருந்த கால கட்டத்திலும், தினகரன் பத்திரிகையானது பெரும்பான்மையான (சிறப்பாக சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலம் உட்பட) கால கட்டங்களிலும் பத்திரிகைத் தர்மத்தை நிலைநாட்டி சரியான செய்திகளை வெளியிட்டு வந்தன. அதுவும் ஈழநாடு பத்திரிகைக்கு பல நெருக்குவாரம் துப்பாக்கிகளினால் ஏற்பட்டபோதும் அவற்றை 'தந்திரோபாய நடைமுறை' ஊடாக முகம் கொடுத்து பத்திரிகையை வெளிக் கொணர்ந்தனர்; என்பது 1980 களில் அங்கிருந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

இலங்கையிலும், இந்தியாவிலும், புலம் பெயர் நாடுகளில் பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியிலும் மிகச் சில பத்திரிகைகளே சரியான நிலைப்பாட்டின் அடிப்படையில் உண்மைச் செய்திகளை வெளிக் கொணர்வதில் தங்கள் இயலுமைக்கு உட்பட்டு செயற்பட்டு வந்தன.. அவர்கள் யார் யார் என்பது வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன. என்றோ ஒருநாள் அவர்கள் மக்கள் மன்றங்களில்; கௌரவிக்கப்படுவார்கள், கௌரவிக்கப்பட வேண்டும். இவ்வாறு சமூக நலம் சார்ந்து செயற்பட்ட ஊடகவாளர்கள் பலர் மரணத்தை தழுவிக் கொண்டார்கள்;. அவர்களை நாம் இவ்விடத்தில் தலை வணங்கி நினைவு கூருகின்றோம்.

மற்றையபடி புலம் பெயர் நாடுகளில் வெளிவந்த பெரும்பான்மையான பத்திரிகைகள் யாருக்கோ சாமரம் வீசுவது என்று சொல்லிக் கொண்டு முழு மக்களையும் பிழையான திசை வழிச் சிந்தனையில் சாய்த்துச் சென்ற 'அருங்கரியத்தை' செய்ததுதான் உண்மை நிலை. இதற்கு எந்த வகையிலும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் செயற்பட்டவர்கள்  தமிழ் வானொலி, தொலைக் காட்சியாளர்கள். இவ் ஊடகங்களின் செய்திகளையே பெரும்பான்மையான மக்கள் சென்றடையக் கூடிய நிலமைகள் இருந்து வருகின்றன. இவ் ஒரு பக்க திரிபுச் செய்திகளினால் தமிழ் மக்கள் ஒரு பக்கத்திற்கு சாய்த்;து செல்லப்பட்டது ஈழவிடுலைப் போராட்டம் சம்மந்தமான கள, தள உண்மை நிலமைகளை அவர்கள் அறிந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் சாதாரண மக்கள் தாங்கள் நம்பிய தலைவர்கள் பிழையானவர்கள் என்பதைக் காண முடியாமற் கண் மறைக்கப்பட்டார்கள். அந்தப் பிழையான தலைமைகள் செய்த பிழையான செயற்பாடுகளையும் தெரிந்தோ தெரியாமலோ ஆதரிப்பவர்கள் ஆனார்கள்;.

கொலை என்பதுவும், யுத்தம் என்பதுவும், மரணம் என்பதுவும், அழிவுகள் என்பதுவும் சமூகத்துக்கே வேண்டப்பட்டவை என நம்பினார்கள். புலிகள் தோற்கப்பட முடியாத சகல பலமும் மிக்கவர்கள் என நம்ப வைக்கப்பட்டார்கள்.  இதன் 'தலைவர்' தனிமனிதனாக நின்று வெற்றியீட்டித்தரும் ஒரு 'மாயாவி', சகல வல்லமையும் பொருந்திய அசுரன். இதனால், பணத்தை ஓடும் குதிரையில் கட்டுவதைப் போல் புலிகளிடம் கட்டிவிட்டால் வெளியில் நின்று கைதட்டியபடியே நின்று எல்லாவற்றையும்; வென்று விடலாம் என்று கனவுலகத்தில் மக்களை திளைக்கவிட்டார்கள். இந்த 'அரும் பெரும்' சாதனைகளை நிகழ்த்தியவர்கள் இந்த தமிழ் ஊடகவாளர்களே. இதில் நகைப்புக்கிடமான விடயம்; என்னவென்றால் இந்த ஊடகத்துறையில் ஈடுபட்ட பலரின் 'தகைமைகள்' புலி ஆதரவாளர்கள் என்ற ஒன்று மட்டும்தான்.  உண்மையில் யாரும் தகைமைகளுடன் பிறந்து வருவதில்லை. ஆனால் அதனை அவர்கள் வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். ஊடகவாளன் என்பவன் சமூகத்துக்கு உண்மை சொல்;பவனாக இருக்க வேண்டும், சமூகப் பொறுப்புணர்ச்சி உடையவனாக இருக்க வேண்டும். இதற்கு புலி ஆதரவு ஊடகவாளர்கள் எப்போதும் தயாராக இருக்கவில்லை. விளம்பரங்களை பத்திரகையில் நிரப்பி தமது பாக்கெற்றுக்குள் பணத்தை திணிப்பதிலேயே இவர்கள் குறியாக இருந்தார்களே தவிர தம்மை அறிவியல் ரீதியாக வளர்தெடுப்பதிலோ தமது சொந்த சமூகம் பற்றி அக்கறை கொள்வதிலோ இவர்கள் எப்போதும் கவனம் செலுத்தியது கிடையாது.

தேசியம், சுயநிர்ணயக் கோட்பாடு, தாயகம் என்று கூறிக்கொண்டு போதைவஸ்து கடத்தல்காரர்களையும், கொலை செய்பவர்களையும், சண்டியர்களையும் சார்ந்து நிற்பது பண வருவாயைக் கூட்டும் என்ற சிந்தனையைத் தவிர இவர்களிடம் வேறு ஏதும் இருக்கவில்லை. எனவே துப்பாக்கிச் சண்டியர்களுக்கு காவடி எடுத்து தமது விசுவாசத்தை தெரிவித்து மக்களை பிழையான திசை வழியில் ஏய்த்து விட்ட காட்டேறிகளே இவர்கள். புலிகள் இருந்த போது தாம் பயத்தின் காரணமாக அவர்களை ஆதரித்து செயற்படுவதாக தமது நெருங்கிய 'நண்பர்கள்' இடம் சாக்கு போக்கு சொன்னாலும் இவர்கள் ஒருவகையில் பேராசை கொண்டவர்களாக இருந்தது மட்டுமல்ல இன்னொரு வகையில் இவர்கள் ஒரு மாதிரியான 'மன நோயாளிகளே'. சொந்த சமூக சகோதரர்களின் படுகொலைகளில், சொந்த சமூக மக்களின் அழிவுகளில் சுய இன்பம் கண்ட நோயாளிகளாகவே இருந்து வந்திருக்கிறார்கள்;.

சந்தேகம் இருப்பின், புலிகள் மாற்று இயக்கங்களை தமது துப்பாக்கி வல்லமைகளால் கொன்று குவித்து ஒடுக்கியபோதும், கருணா குழுவினர் புலிகளின் தலைமையுடனான முரண்பாட்டின் காரணமாக புலிகளை விட்டு விலத்திச் சென்றபோதும் இந்தப் புலி ஆதரவுப் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் வெளியிட்ட செய்திகளும், கலந்துரையாடல்களும், அந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டவர்கள்; 'தலைவர் எப்படியும் முடிச்சுப் போடுவார்' என வெளிப்படுத்திய கொலைவெறிக் கருத்துக்களை 'நெறிப்படுத்திய' விதங்களையும் மீண்டும் உங்கள் நினைவலைகளில் கொண்டு வந்து பாருங்கள் அப்போது புரியும் உண்மை நிலை என்னவென்று. ஏன் இப்பவும் கூட 'சிங்களவனைக் கொல்ல சிங்களக் கிராமங்களில் குண்டு வைக்க வேண்டும்' 'இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வேண்டும்' போன்ற புலி ஆதரவுக் கருத்துக்களுக்கு எண்ணை ஊற்றி ஊக்கிவிப்பது இவர்களின் வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் வெகு 'வீச்சாக' நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இன்று புலிகளின் ஆயுதச் செயற்பாடுகள் இல்லாது ஒழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 'பழைய குருடி கதவைத் திறவடி' என்ற பாணியில் (மே 18 இல் இருந்து சிறிது காலம் அடங்கிப் போய் இருந்துவிட்டு மீண்டும் தலையைத் தூக்கி ஆரம்பித்திருக்கும் பத்திரிகைகள் உட்பட) திரிபுச் செய்திகளையும், பொய்களையும் மீண்டும் அள்ளி வீச ஆரம்பித்திருக்கின்றன. இன்னும் ஒரு தலை முறை தமிழ் மக்களையாவது தலையெடுக்க விடாமல் நாசமாக்கி விடுவது எனக் கங்கணம் கட்டி செயற்படப் புறப்பட்டு விட்டார்கள் என்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

போதும் இவ்வளவு காலமும் நீங்கள் எங்கள் சமூகத்திற்கு செய்த 'சேவைகள்'. இனிமேலாவது எமது மக்களை அவர்களின் சுயசிந்தனையின் அடிப்படையில் சரியானவற்றை தேட அனுமதியுங்கள். நீங்கள் வெளி நாடுகளில் காப்புறுதி உட்பட சகல வசதிகளுடனும் குடும்ப சமேதர்களாக இருந்து கொண்டு எமது சமூகத்க்கு நயவஞ்சமான செயற்பாட்டைச் செய்யாதீர்கள். முள்ளுக் கம்பிகளுக்குப் பின்னால் நிற்கும் மக்களுக்கும், எம் ஊரில் தமது எதிர்காலத்தை கட்டியமைக்க முயன்று கொண்டிருக்கும் மக்களையும் அவர்கள் நிம்மதியாக வாழ வழி விடுங்கள்.

அது போல புலம் பெயர் நாடுகளில் பனியிலும், குளிரிலும்; இரவும், பகலும்; கட்டடங்களுக்;கு உள்ளேயும், வெளியேயும்; ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைக்கும் மக்களின் மக்களின் உழைப்பை உறுஞ்சும் அட்டைக் கோலங்களை விட்டு விடுங்கள் அவர்கள் பாவம் அப்பாவிகள் அவர்களுக்கு கிடைக்கும் சிறிய ஓய்வு நேரங்களைக் கூட விடாமல் அவர்களின் மீது பிழையான தகவல்களை திணித்து தொடர்ந்தும் மூளைச்சலவை செய்யாதீர்கள். உங்களது சுரண்டல் பிழைப்பிற்காக ஒரு இனத்தை, சமூகத்தை படு குழியில் தள்ளாதீர்கள். ஏற்கனவே ஒரு தலைமுறையின் வாழ்வை அழித்து விட்டீர்கள் அந்தப் பாவத்திற்கே உங்களால் பரிகாரம் செய்ய முடியவில்லை, பதில் சொல்ல முடியவில்லை. மீண்டும் அதே பாவச் செயல்களைத் தொடராதீர்கள்;.

1960 களில் அமெரிக்க - வியட்நாம் போரில் அமெரிக்காவின் நேபாம் (Nயியடஅ) எரிகுண்டுத் தாக்குதலை சர்வ தேசத்திற்கு அம்பலப்படுத்தி சர்வ தேச மக்களை மட்டுமல்லாது அமெரிக்க மக்களையே தனது அரசிற்கு எதிராக போராட வைத்த பெருமை ஊடகங்களையே சாரும். இதன் தொடர்சியாக வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியடைந்ததை நாம் யாவரும் அறிவோம். இதே போல் 1880 களில் எலிசபத் ஜேன் கோசரன் என்ற 'நியூயார்க் வெர்ல்ட்' பத்திரிகையின் பெண் நிருபர் மனநல காப்பகத்தில் நிகழும் கொடுமைகளை அம்பலப்படுத்த பைத்தியக்காரி வேடமிட்டு மனநலக் காப்பகத்திற்குள் 10 நாட்கள் அடைபட்டு சகல துன்பங்களையும் அனுபவித்து கிடந்தார். ஆம். உண்மைகளை கண்டறிய-அந்த பெண் நிருபர் தன்னையே பைத்தியக்காரியாக்கிக் கொண்டு காப்பகத்தில் அடைப்பட்டு உதைபட்டு ரத்தம் சிந்தி உண்மைகளை வெளிக்கொணர்ந்தாள். 'பைத்தியக்கார வீட்டில் பத்துநாட்கள்' என்ற தலைப்பில் அந்த கொடூர அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டார்.

சோவியத் யூனியனின் புரட்சியின் போதும், சீனப் பரட்சியின் போதும், வியட்நாம், கியூபா புரட்சியின் போதும் ஊடகங்கள் ஆற்றிய மகத்தான, சரியான பங்களிப்புகள் அப் புரட்சிகள் வெற்றிடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் ஏகாதிபத்தியங்களின் பிடியில் இருந்து விடுதலை வேண்டிப் போரிட்ட நாடுகளிலும் மக்களை ஐக்கியப்படுத்தி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பலமிக்க போராட்டங்களை நடத்த ஊடகங்கள் பெரும் பங்காற்றின. இங்கெல்லாம் ஊடகங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு பசளையாகவும் ஊட்டச்சத்தாகவும் அமைந்தன. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பாசிசத்தின் வளர்ச்சிச்கும், போராடுவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுத்ததையும் புகழ்பாடி எண்ணை ஊற்றி வளர்த்தவைதான் தமிழ் ஊடகங்கள். இதுவே போராட்டத்தில் பலவீன நிலமையை ஏற்படுத்தி இறுதியில் 'தானும் அழிந்து தன்னை நம்பிய மக்களையும் தடை முகாங்களுக்கள் அடைத்து விட்டது'. ஆனால் போரின் முடிவானது ஜனநாயகத்தின் ஒரு வாயில் கதவைத் திறந்து விட்டது என்பதே உண்மை..

இது போன்ற பல நல்ல உதாரணங்களை நாம் உள்வாங்கி செயற்பட வேண்டும்;. மாறாக மரணித்தவரை கையில் பத்திரிகை கொடுத்து நவீன புகைப்பட தொழில் வித்தை மூலம் ஏமாற்று வித்தை செய்து பின்பு அம்பலப்பட்டுப் போன நிகழ்வுகள் சில தமிழ் ஊடகங்களின் மீதான நம்பிக்கைகளைத் தவி;டு; பொடியாக்கிவிட்டன. இது போன்ற நிலைமை அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. தமிழீழ விடுலைப்புலிகளின்; ஆதரவு ஊடகங்கள் பல இன்னமும் பழைய அழிவுப் பாதையில் இருந்து விடுபடுபவையாக இல்லை. தொடர்ந்தும் அதே தவறுகளையே செய்துவருகின்றன. இதனாலேயே தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசபடைகளின் நடவடிக்கைகள் பற்றிய உண்மையான தகவல்களைக் கூட சர்வ தேசங்கள் பல சந்தர்பங்களில் நம்பும் நிலை ஏற்படவில்லை என்ற துர்ப்;பாக்கிய நிலமை ஏற்பட்டிருந்தது,  சனல் 4 இன் ஒளிப்பதிவு நாடாவின் காட்சிகள் கண்டு உலகமே திகைத்தது. ஆனால் அதே வேகத்தில் அதன் உண்மைத் தன்மை கேள்விக்குறியானது.

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளின்; உண்மைத் தன்மை பற்றி சர்வ தேச சமூகங்களின் மத்தியில் சந்தேகம் எழும் நிலைமையை தமிழ் ஊடகங்கள் உருவாக்கி விடக்கூடாது என்பதே எமது அக்கறையாகும். ஓநாய் ஓநாய் என்று பொய்யாகக் கத்தி அயலவர்களை ஒரு சிறு இடையன் பல தடவை ஏமாற்றி வந்ததால் கடைசியாக ஓநாய் உண்மையில் வந்தபோது அவன் கத்தியதை அயலவர்கள் பொய்யென நினைத்ததால் ஆடுகள் அநியாயமாக ஓநாய்க்குப் பலியானதை தமிழ் ஊடகவாளர்களும் தமிழ் புத்திஜீவிகளும்; மறந்து செயற்படக் கூடாது என்பதே எமது ஏக்கமாகும். உண்மையான செய்திகள், விபரங்கள் மக்களுக்குத் தேவையே. எழுத்தை விபச்சார வியாபாரமாக்குவதற்கே பொய்யும் புரட்டும் பொறுப்பற்ற புனையல்களும் பயன்படும். தமிழ் ஊடகவாளர்கள் இனிமேலாவது சமூக பிரக்;ஞையுடன் செயற்பட வேண்டும்.

(சாகரன்) (ஐப்பசி 01, 2009)(Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com