Contact us at: sooddram@gmail.com

 

Sooddram.com

(ஆக்கங்களின் கருத்துக்களுக்கு ஆக்கங்களை ஆக்கியவர்களே பொறுப்பு)

தமிழர்களின் போராட்ட வாழ்வின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்வுகளை வாய்மை வழி நின்று பதியவே இந்த இணையத்தளம்

உண்மையான வரலாற்றைத் தேடுவோர்களுக்கு இது ஒரு களம்

********************************************************

புரட்டாசி 07, 2015

கி.பி அரவிந்தன் நினைவுகள்


கி.பி அரவிந்தன் நினைவுகள் - யாழ் திருமறைக்கலாமன்றத்தில் 06.09.2015 அன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு கிழக்கு மகாண முன்னாள் முதல் அமைச்சர். வடமகாண எதிர் கட்சித் தவைர் தவராஜ பத்மநாபா ஈபிஆர்எல்எவ் செயலாளர் சிறீதரன் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

சிரிய குழந்தையின் மரணமும் இது தொடர்பான அதிர்வலைகளும்......

சிரிய குழந்தையின் மரணமும் இது தொடர்பான அதிர்வலைகளும் ஊடகம் எங்கும் வியாபித்திருக்கின்றது. எல்லா ஊடகங்களும் நாடுகளும் அகதிப் பிரச்னையை மட்டும் முன்னிலைப்படுத்தி அதிகளவு அகதிகளை உள்வாங்குதல் என்பதற்குள் மட்டும் தம்மை சுருக்கிக் கொள்கின்றன. இது அடிப்படையில் தவறு. அகதிப் பிரச்சனையை விட இந்த அகதிகள் உருவானதற்கு காரணியான யுத்தமே பிரதான பேசுபொருளாக இருக்க வேண்டும். அகதிப்பிரச்சனையைத் தீர்க்க அதிக அகதிகளை உள்வாங்குதல் என்பதற்கு அப்பால் யுத்தத்தை நிறுத்துதல் என்ற பொறிமுறையை நோக்கி நகருதல், இதற்கான முன்னெடுப்புகளில் ஊடகங்களும் நாடுகளும் ஈடுபடுதலே சரியானதாக இருக்க முடியும்

வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 02

கவிஞர் சேரன்

30 ஆண்டுகால தமிழ்ப்புலிப்பாசிச ஆட்சி தமிழ்ப்புலமைக்கலாச்சாரத்தை வேரோடு
அழித்துவிட்டது. S.சிவநாயகம், DBS ஜெயராஜ், AJ வில்சன், கவிஞர் சேரன் தராகி சிவராமிலிருந்து இன்று நிலாந்தன் வரை ஆய்வாளர்கள் காய்தல் உவத்தலின்றி உண்மையை
எழுதுவதற்கு பதிலாக லாபியிஸ்டாக அதிகார ஒத்தோடிகளாக பாதி மலினமான பத்திரிகையாளர்களாக(shock jock/tabloid journalism) வாசகர் எண்ணிக்கை Rating ல் மட்டும் கவனங்கொண்டவர்களாக மாறிவிட்டார்கள். புலிகள் பலமானவர்களாக இருந்த 2006 ம் ஆண்டு தேனி இணையத்தளத்தில் நான் கவிஞர் உருத்திரமூர்த்தி சேரனை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரை. இவ்வாறே கா. சிவத்தம்பி முருகையன் போன்றோரையும் அம்பலப்படுத்தியுள்ளேன். கடைகெட்ட மோசடிக்கார பத்திரிகையாளனான டி.பி.எஸ் ஜெயராஜை நான் அம்பலப்படுத்தி எழுதும் கட்டுரை விரைவில் வெளிவரும். - நட்சத்திரன் செவ்விந்தியன். (மேலும்......)

என் வாழ்க்கை நினைவுகளிலிருந்து.......

(சாகரன்)

தமிழரின் இசைக் கருவிகளின் ஒன்றான பறை பற்றியும் இதனை ஒட்டிய சாதியக் கருது கோள்ளகள் பற்றியும் அண்மைய நாட்களில் முகப்பு புத்தகத்தில் சில கருத்து விதையல்கள் நடைபெறுகின்றன. இந்த கருத்து விதையலில் அடிப்படையில் எனக்கு கிடைத்த என் வாழ்கை அனுபவங்களை இங்கே பகிர்கின்றேன். மேட்டுக் குடி சிந்தனையாளர்களுக்கு கோவில்களில், செத்த வீடுகளில் 'உரு' வரை பறை அடிப்பவர்கள் தேவை. ஆனால் பறை அடித்த களை தீர உண்பதற்கு கூட இவர்களை திண்ணையில் சம்மாடி கொட்டி அமர்வதற்குக் கூட அனுமதிப்பது இல்லை. கோவில்களில் ஒரு தடையைப் போட்டு இந்த தடையைத் தாண்டி உள்ளே வருவதை அனுமதிப்பதும் இல்லை. சாதி பேதமற்று தமிழர்களின் இசைக் கருவியாக தொடர்ந்தும் பறையை உபயோப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனந்த களியாட்டம் (கள்ளு, விஸ்கி இல்லாமலும்) போடுவதற்கு இந்த இசைக் கருவியின் இசை நல்ல தூண்டுதலாக இருக்கும் சிறுவயதில் பறை அடிக்கும் போது கரகம் தலையில் வைத்து களி நடனம் ஆடியது இன்றும் இனனமும் பசுமையாக இருக்கின்றது. தற்போதும் இந்த இசைக்கருவி எங்கு இசைக்கும் போது கால்கள் தாளம் போட்டு கூத்தாடத் தூண்டும் . கூடவே என் பல்கலைக் கழக வாழ்வில் மட்டக்களப்பு பாணியில் கூத்தாடியதும் நினைவுக்குவரும்
 

அனந்தி மற்றும் செல்வம் எம்.பியுடன் ஜெனீவா பயணம் - சிவாஜிலிங்கம்

தமிழா! உனது நிலைமையைப் பார்த்தாயா?
உனக்கு வேறு ஆட்களே கிடைக்கவில்லையா?
ஒரு கள்ளக்கடத்தல்காரன் நாடறிந்த போதைவஸ்து கடத்தல்காரன்.
ஒரு பைத்தியக்காரன்,
தனது கணவனுக்காக மட்டும் நீதி கேட்கும் பயங்கரவாதியின் மனைவி.
இவர்கள் தான் உனது பிரதிநிதிகள்!!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வற்காக தானும், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் செல்ல திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே அவசியம் என்பதை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு விளக்கப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

US & Israel created ISIS - Fidel Castro

Cuba’s former president Fidel Castro compared NATO’s recent statements to that of Nazi SS and accused US and its allies of igniting conflicts abroad. Castro slammed John McCain for backing Israel and accused both of being involved in the creation of ISIS. Apparently referring to the pressure the North Atlantic Treaty Organization (NATO) has been trying to exert on Moscow in connection with the Ukrainian crisis, which coincides with calls for the ramping up of military budgets of NATO member countries, Cuba’s iconic leader accused Western politicians of hypocrisy and aggression. (more....)

ஜனாதிபதி தேர்தலில்

பொது வேட்பாளர் தெரிவுக்கு வைபரே உதவியது

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வகித்த வகிபாகம் அளப்பரியதாகும். தன்னை பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட விதம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது மாநாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றும் போது சிலவிடயங்களை அம்பலப்படுத்தினார். இந்நிலையில், இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இதுதொடர்பில் மற்றுமொரு இரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளார். பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பிலான இரகசிய பேச்சுவார்த்தைக்கு அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய செய்மதி தொலைகாட்டி பயன்படுத்தப்பட்டதாக இந்தியாவிலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நிராகரித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தெளிவுப்படுத்துகையில், நாங்கள் பயன்படுத்திய வைபர். வைபரை ஒட்டுக்கேட்கும் முறைமை தொடர்பில் அன்றைய அரசாங்கம் தெரிந்திருக்கவில்லை. அதேபோல, அவற்றை ஒட்டுக்கேட்பது என்பது புலனாய்வு பிரிவினருக்கு பெரும் சிரமமான விடயமாகும். எனினும் சில நேரங்களில் யார், யாருடன் கதைக்கின்றார் என்பதை இனங்கண்டு கொள்ளமுடியும் எனினும், அவ்வாறான தொழில்நுட்பம் அன்று இலங்கையில் இருக்கவில்லை என்றார்.

சிறிலங்காவுக்கும், சிறிலங்காவின் மக்களுக்கும் விசுவாசமாக இருப்பேன் - சம்பந்தன் உறுதி!
 

சிறிலங்காவுக்கும், சிறிலங்காவின் அனைத்து மக்களுக்கும் விசுவாசமாக இருப்பதாக புதிய எதிர்கட்சித் தலைவராக தெரிவாகியுள்ள இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான அவரது முதலாவது உரையின் போது அவர் இந்த விடயத்தைக் கூறினார். தம்மைஎதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்தமைக்காக, நாடாளுமன்ற சபாநாயகருக்கும், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தம்மை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய வடக்கு கிழக்கு மக்களுக்கும், குறிப்பாக திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

மைத்திரியின் மனைவியுடன் பேச ஆசைப்பட்ட வைத்தியருக்கு மைத்திரி சொன்ன பதில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருக்கு நெருக்கமான பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் தெராலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அந்த மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். சிறிது நேரம் ஜனாதிபதியுடன் உரையாடிய பின்னர், ஜனாதிபதியின் மனைவியிடம் பேச மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மனைவியுடன் இந்த நேரத்தில் பேச முடியாது எனவும் அவர் சமையலறையில் மதிய உணவை தயார் செய்து கொண்டிருப்பார் எனவும் கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்த பதிலை கேட்டு பிரபல அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் மருத்துவர் கடும் ஆச்சரியமடைந்துள்ளதுடன் வீட்டில் வேலை செய்ய எவரும் இல்லையா என ஜனாதிபதியிடம் வினவியுள்ளார். எமது வீட்டு வேலைகளை நாங்களே செய்து கொள்வோம். எனக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கு மனைவிதான் சமைப்பார் எனவும் சமையலுக்கு தேவையானவற்றை வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Exposing Russia’s Secret Army in Syria

Some wear uniforms, some don’t, but from highway checkpoints to jet fighters, Russians are being spotted all over the Assad dictatorship’s heartland. Russian military officers are now in Damascus and meeting regularly with Iranian and Syrian counterparts, according to a source with close contacts in the Bashar al-Assad regime. “They’re out in restaurants and cafes with other high officials in the Syrian Army,” the source told The Daily Beast, “mainly concentrated in Yaafour and Sabboura, areas that are close to each other, and in west Mezze,” referring to a district in the capital where Assad’s praetorian Fourth Armored Division keeps an important airbase. “The Russians aren’t in uniform, but they’re constantly hanging out with officers from the Syrian Army’s central command.” (more...)

தமிழரசுக் கட்சியின் மற்றுமொரு துரோகம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் செலவினங்களுக்கென 'இராப்போசன விருந்தும் ஒன்றுகூடலும்' என்னும் நிகழ்சி ஒன்றை கனடாவில் ஒழுங்கு செய்து பெற்ற பெரும் பணம் இலங்கையில் உள்ள கூட்டமைப்பின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பட்ட பணம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதுடன் கனடாவில் இருந்து தாங்கள் பணம் பெற்றுக்கொண்ட விடயத்தை கூட அவர்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும் அறியக்கிடைக்கின்றது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு என பணத்தை சேகரித்துவிட்டு அதை தமிழரசுக் கட்சி மாத்திரம் தங்கள் தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்ட விடயமானது பங்காளிக் கட்சிகளுக்கு இவர்கள் செய்த பெரிய துரோகமாகும். தேர்தல் வெற்றி தோல்விகளில் பணம் கணிசமான பாத்திரத்தை வகிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நடந்து முடிந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி பெற்ற ஆசனங்கள் 8, பங்காளிக் கட்சிகள் பெற்ற ஆசனங்கள் 6, ஆகவே மொத்தமாக கூட்டமைப்பு பெற்ற ஆசனங்கள் 14. இவ்வாறு பெற்ற 14 ஆசனங்களால்தான் கூட்டமைப்பு 2 தேசியப்பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்டது. இந்த இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்றை தமிழரசுக் கட்சி வைத்துக் கொண்டு மற்றொன்றை எமக்கு கொடுங்கள் என பங்காளி கட்சிகளால் கேட்கப்பட்டது. இறுதியில் கவுண்டமணி செந்தில் வாழப்பழ கதைபோல், அந்த இரண்டு ஆசனங்களியுமே தமிழரசுக் கட்சி தங்கள் வாயில் போட்டுகொண்டு பங்காளிக் கட்சிகளுக்கு துரோகம் செய்தது. இவ்வாறு பதவிக்காகவும், பணத்திற்காகவும் குத்தி - வெட்டி ஓடும் தமிழரசுக் கட்சியினரால் தமிழ் மக்களின் நலனில் இருந்து முடிவுகளை எடுத்து செயற்பட முடியுமா என்பது பெரும் சந்தேகமே.

அகண்ட பாரதக் கோட்பாட்டை ஆதரித்து அறிக்கை - தீனதயாள் உபாத்யா

 

இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் ராம் மனோகர் லோகியா அவர்களும் கடும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கருத்தாளருமான தீனதயாள் உபாத்யாவும் அகண்ட பாரதக் கோட்பாட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறித்த செய்தி வெளிவந்துள்ளது.
மிருகத்தனமான காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற அடிப்படையில் பாசிச சக்திகளை அரசியல் மையத்திற்குக் கொண்டு வந்த தவறைச் சோசலிஸ்டுகள் செய்தது குறித்து 15 ஆண்டுகளாக நான் எழுதி வருகிறேன்.ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் எப்படி காங்கிரஸ் எதிர்ப்பு என பா.ஜ.கவுடன் இணைந்து அரசிலும் பங்கேற்று இந்துத்துவ முயற்சிகளுக்குத் துணையாய் இருந்தார் என்பதை என் 'ஆட்சியில் இந்துத்துவம்' நூலில் குறிப்பிட்டுள்ளேன். சமீபத்தில் ஜூ.வியில் நெருக்கடி நிலை காலம் குறித்து எழுதிய மூன்று கட்டுரைகளில் எப்படி ஜெயபிரகாஷ் நாராயணன் இந்தத் தவறைச் செய்தார் எனக் குறிப்பிட்சுள்ளேன். இப்போது பெரிதும் மதிக்கப்படும் லோகியா அவர்களையும் கூட கண்மூடித்தனமான காங்கிரஸ் மற்றும் நேரு எதிர்ப்பு எங்கு கொண்டு விட்டுள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல் பட்ட விடுதலைப புலி ஆதரவாளர்கள் இதைப் பெரியார் மண்ணில் செய்தனர். ஒரு பக்கம் காங்கிரஸ் எதிர்ப்பு அதன் இன்னொரு பக்கம் இந்துத்துவ பாசிச ஆதரவு என்பதாகத்தான் அவர்களின் செயல்பாடுகள் அமைந்தன. காங்கிரஸ் எதிர்க்கப்படக் கூடாத கட்சி என நான் சொல்லவில்லை. ஆனால் காங்கிரசை வீழ்த்த பாசிச சக்திகளை வளர்ப்பது எனும் மக்கள் விரோத அரசியலை மன்னிக்க இயலாது.

 

மொரோக்கோ தேர்தலில் இஸ்லாமியவாதிகள் ஆதிக்கம்

மொரோக்கோவில் இடம்பெற்ற உள்@ர் தேர்தலில் ஆளும் இஸ்லாமியவாத கட்சி நாட்டின் பிரதான நகரங்களில் வெற்றியீட்டியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அரபு வசந்தம் போராட்டத்தை அடுத்து மன்னர் முஹமது தனது அதிகாரங்கள் சிலதை பரவலாக்கம் செய்ததை அடுத்தே இஸ்லாமியவாத நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தேர்த லில் அந்த கட்சி தலைநகர் ரபாத் உட்பட நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் வெற்றியீட்டியுள்ளது. அதிக எண்ணிக் கையிலான வேட்;பாளர்களை நிறுத்திய எதிர்க்கட்சியான நவீனத்துவ கட்சி கிராமப் புறங்களில் அதிக ஆசனங் களை வென்றுள்ளது. மொரோக்கோவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சம்பிரதாயமான ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுவதாக நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி வலியுறுத்துகிறது. இந்நிலையில் அந்த கட்சியின் ஆட்சியில் நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்த நிலையிலேயே அதற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு அரபு உலகில் ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பதற்றத்தை தணிக்க மன்னர் சில அரசியல் சீர்திருத்தங்களை செய்தபோதும் அங்கு உச்ச அதிகாரம் தொடர்ந்தும் மன்னரிடமே உள்ளது.

 

புரட்டாசி 06, 2015

 

11 குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த தாயுள்ளம் (சுகந்தி டீச்சர்)

சிலர் பாடம் எடுக்கும் விதத்திற்காகவே அவர்களை நமக்கு பிடித்து போய் இருக்கும்.சிலரை அதற்காகவே பிடிக்காமலும் போய் இருக்க கூடும். நமது தமிழகத்தில் பெரும்பாலும் ஆசிரியருக்கு என்று ஒரு சிறப்பு மரியாதை இருந்து வருகிறது.தனியார் பள்ளிகளில் Vs அரசு பள்ளிகள்ஆசிரியர் ஊதியம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து இந்த ஆசிரியர் துறையில் மட்டும் தான் ஊதிய வேறுபாடு மிக அதிகம். அதற்கான காரணம் ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.என்னை கேட்டால் ஆசிரியர் என்றவுடன் கண்ணம்மா டீச்சர் ஞாபகம் வர பல காரணம் உண்டு(அவரை பற்றி பிறகு பார்போம் ) என்றாலும் சில மாதங்களுக்கு முன்பு சுகந்தி என்ற டீச்சர் என்னை மிகவும் பாதிப்படைய செய்து விட்டார். (மேலும்......)

 

உலகப் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி

                            புதிய போர்க்களம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எல்லாப் போர்களும் போர்க்களங்களில் நடப்பதில்லை. போர்க்களங்கள் அமைதியாக இருக்கையிலும் போர்கள் நடக்கின்றன. இன்றைய உலக அரசியலில் யுத்தமில்லாத சத்தமில்லாத போர்கள் நடக்கின்றன. அவை நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. கடந்த சில வாரங்களாக உலக நாடுகளின் பங்குச் சந்தைகளில் நிகழும் தொடர்ச்சியான வீழ்ச்சி, புதிதாக எதையும் கூறாவிடினும் கடந்த பல வருடங்களாகத் தெரிந்தும் தெரியாமலும் தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடி புதிய கட்டத்தை எட்டியுள்ளதைக் கோடிட்டுக் காட்டுகிறது. சீனா, அண்மையில் தனது நாணயத்தை மதிப்பிறக்கியதைத் தொடர்ந்து உலக பங்குச் சந்தைகள் பெரிய சரிவை எதிர்நோக்கியுள்ளன. கடந்த சில வாரங்களாகத் தொடர்கிற இச் சரிவிலிருந்து மீளுவது தனியே பொருளாதாரக் காரணிகளுடன் மட்டும் தொடர்புடையதல்ல. உலக ஆதிக்கத்துக்கான பூகோள அரசியலின் அதிகாரப் போட்டி அதனுடன் பின்னிப் பிணைந்துள்ளது. (மேலும்......)

 

தந்தை வந்தார்!

        தளபதி வந்தார்!!

                தேசியத்தலைவர் வந்தார்!!!

இவர்கள் வழியில் அய்யா வந்துள்ளார்......?


சிங்கத்தமிழர் நாமென்றால் சிங்கக்கொடியும் நமதன்றோ…” என்ற பாணியிranil-and-sampanthanல் யாழ்ப்பாணத்தில் பொது மேடையில் ரணில் விக்கிரமசிங்காவுடன் இணைந்து சிங்கக்கொடியை தூக்கி அசைத்த இராஜவரோதயம் சம்பந்தன் அய்யா அவர்கள் எட்டாவது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவராகியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகியிருக்கிறார். ஈழத்தமிழர்களுக்கு முன்னர் தந்தையும் (செல்வநாயகம்) பின்னர் தளபதியும் (அமிர்தலிங்கம்) அதன் பின்னர் தேசியத்தலைவரும் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) கிடைத்தது போன்று தற்பொழுது தமிழர்களுக்கு ஒரு அய்யா வந்துள்ளார். (மேலும்......)

நான் மரணித்துவிட்டேன்! என்னைக் கொன்றுவிட்டீர்கள்!

பம்பரம் விடும் வயதில் என்னைப் படகில் ஏற்றி பாதி வழியில் பட்டென்று இறக்கிவிட்டவர்கள் அவர்களல்ல.நீங்கள்தான்.

என் தாயின் விரல் கோதிய என் தலைமயிர்களை கடலின் அலை கோத நான் கண்ணயர்ந்திருக்கிறேன்.பாருங்கள்.

தூங்குவதற்கு தொட்டிலே இல்லாத எனக்கு கடற்பரப்பில் கட்டில் தந்த உங்கள் கருணையை என்னவென்று சொல்லுவேன்.எனது தந்தையின் விரல்களைப் பிடித்து நடந்த எனது கைகள் இன்று மணலை இறுகப் பிடித்து மரத்துக்கிடக்கின்றன பாருங்கள்.ஒரு வாளித் தண்ணீரை தலையில் ஊற்றும் போதே திடுக்கிடும் எனது மூச்சு இன்று தண்ணீரில் முழுதாய் மூழ்கி முடிந்திருக்கிறது பாருங்கள்.என் வீட்டின் முற்றத்தில் முள்குத்தாமல் நடந்த எனது பிஞ்சுக்கால்கள் இன்று நண்டுகளுக்கு நரமாமிசமாய்ப் போகிறது பாருங்கள்.ஒரு மெல்லிய குளிருக்கே என் தாயின் மடிச்சூட்டிற்கு சுருண்டுவிழும் எனது உடம்பு கடல் மண்னில் குளிரலையில் குளிர்ந்து கிடக்கிறது பாருங்கள். (மேலும்......)

சர்வதேச விசாரணை வேண்டும்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது ஒரு கவனஈர்ப்பும் அரசியல் பிரசாரமும் மட்டுமே

சர்வதேச விசாரணை வேண்டும் என இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது ஒரு கவனஈர்ப்பும் அரசியல் பிரசாரமும் மட்டுமே. இதனால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை விசாரிக்க முடியாது. ஏனெனில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விதியில் இலங்கை கையொப்பம் இடவில்லை. எனவே ஐ.நா.மனித உரிமை பேரவையால் இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு அனுப்பமுடியாது. ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு மட்டும் அனுப்ப முடியும். ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தை பாவித்து இதனை தடுத்து விடுவார்கள். இருக்கும் ஒரேவழி சர்வதேசத்தின் மேற்பார்வையில் உள்ளக பொறிமுறை ஒன்றை அமைத்து ஐ.நா.மனித உரிமை பேரவையின் சர்வதேச விசாரணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துவதே ஆகும். யார்தான் தலைகீழாக நின்றாலும் இதுதான் நடைபெறப்போகிறது. (மேலும்......)

கஜேந்திரகுமார், சுரேஸ் புதிய கூட்டணியா????

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்னற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் ன் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் ஆகியோர் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரசியல் வட்டராங்களில் தகவல் கசிந்துள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்த திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஓரம் கட்டப்பட்டு வருவதை நிதர்சனத்தில் அவதானிக்க முடிகின்றது.(மேலும்......)

10 வருடங்களின் பின் தொழிலை ஆரம்பித்துள்ள சம்பூர் மக்கள்

திருகோண மலை மாவட்டத்தில் இருந்து இறுதிப் போரின் போது இடம் பெயர்ந்த சம்பூர்  கரை வலை மீனவர்கள் நேற்று வெள்ளிக் கி ழமை 10 வருடங்களின் பின்னர் தமது தொழிலை சம்பூர் கடற் கரையில் ஆரம்பித் தனர். தாம் மீள் கு டியேற் றப்படுவதையே இந்த வருட ஆரம்பத்தில் நம்பியிருக்காத மீனவர்கள் இன்று இந்த நிலை ஏற்பட்டதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டனர். சம்பூர் பிரதேசம் பல வகை யிலும் கடற்கரைக் குடாப் பகுதியாக இருந்தமையினால் நூற்றுக்கும் அதிகமான மீனவர்கள் தமது ஜீவனோபாயமாக மீன்பிடியை கொண்டிருந் த போதும் கடந்த 10 வருட காலமாக பாரிய கஷ் டங் களுடன் வாழ்ந்ததாக தெரிவித் தனர். இந் நிலையில் சம்பூர் மக்களின் மீள் கு டியேற்றம் ஆரம்பிக்கபட்ட நிலையில் கடற்படையின் கட்டுப் பாட்டில் இருக்கும் 237 ஏக்கர் காணியும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின் றன. இதனையடுத்து மீனவர்களில் ஒருபிரிவினராக கரைவலைத் தொழிலாளிகளுக்கான தொழிலுக்கு நேற்று அனுமதியை படையினர் வழங்கியிருந்தனர்.

புரட்டாசி 05, 2015

மழலையின் மரணம் சொல்லும் செய்தி

இனி சிரியாவின் யுத்தம் மெல்லச் சாகும்?....... சாக வேண்டும்!!

(சாகரன்)

(அருகில் உள்ள புகைப் படமே என்னை இந்தக் கட்டுரையை வரையத் தூண்டியது)

சோவியத் யூனியன் காலத்திலிருந்து அமெரிக்காவைத் தவிர்த்து ரஷ்யாவுடன் நல்ல உறவில் இருந்து கொண்டு இருப்பதுதான் சிரியா செய்த ஒரே குற்றம். மேலும் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய விடுதலை அமைப்புக்களுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்கியதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டமைப்பு நாடுகளும் கொடுத்த தண்டனை இது. தற்போதைய சிரிய அதிபர் பசீர் இன் தந்தை அசாத் காலத்திலிருந்து மனிதாபிமான அடிப்படையில் போரினால் பாதிக்கப்படும் அகதிகளுக்கு சிரியாவில் முகாங்கள் அமைத்து தமது வாழ்வைத் தொடர அனுமதித்தது தான் இவர் செய்த குற்றம். சிறப்பாக பாலஸ்தீன மக்களுக்கு இவர் செய்த, செய்து வரும் அளப்பரிய மனித நேயச் செயற்பாட்டிற்கு இஸ்ரேலும், இஸ்ரேலை தமது செல்லப் பிள்ளையாக கொண்டிருக்கும் நாடுகளும் இணைந்து கொடுக்கும் பரிசுகள் இவை. (மேலும்......)

கடலில் பலியான பிஞ்சுக் குழந்தை விவகாரம்

அகதிகள் பிரச்சினையால் ஆட்டம் காணும் கனடா அரசு

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார். அது நிராகரிக்கப்பட்டது. இதனால் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார். (மேலும்......)

ஆறாய் ஓடிய குருதி கழுவவோ எதிர்க்கட்சித் தலைவர் பதவி!

இயேசு பிரானின் இராப்போசனம் நடக்கிறது. இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் கரியோத் இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான். முப்பது வெள்ளிக்காசுக்காக அந்தக் காட்டிக் கொடுப்பெனும் துரோகத்தனம் நடந்தேறுகிறது. கூடவே இயேசுவோடு உடனிருந்த இராயப்பர் திருச் சபையின் முதலாவது பாப்பரசர் என்ற பெருமைக் குரியவர். இயேசுவோடு உடனிருந்ததை மூன்று முறை மறுதலிக்கின்றார். இறைமகனின் வாழ்வில் நடந்த துரோகத்தனங்கள் இன்றுவரை நீடித்தாலும் இலங்கைத் தமிழினத்தில் அந்தத் துரோகத்தனம் வலிமையாக இருப்பதைக் காணமுடிகிறது. (மேலும்......)

இலங்கை போர்க்குற்றம்... பின்வாங்கிய அமெரிக்கா..!

ஈழத்தமிழ் மக்களின் கடைசி நம்பிக்கையும் கைவிட்டுச் சென்று கொண்டு இருக்கிறது. பலரிடம் ஏமாந்து பழக்கப்பட்ட ஈழத்தமிழர்களை, மீண்டும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது அமெரிக்கா. இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஐ.நா-வில் தீர்மானம் கொண்டு வந்த அதே அமெரிக்கா, இன்று உள்நாட்டு விசாரணையே போதும் என்று கூறி இலங்கை அரசுக்கு காவடி தூக்கத் தயாராகிவிட்டது. தமிழர் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அமெரிக்காவின் மாற்றம் குறித்து கூறும்போது, ‘‘போர்க்குற்றவாளியான இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.நா சபையில் மூன்று முறை அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், விசாரணைக்குழுவினர் இலங்கைக்குள் வர ராஜபக்ஷே அனுமதிக்கவில்லை. இதை ஐ.நா சபையும் அமெரிக்காவும் கண்டு்கொள்ளவே இல்லை. இதிலிருந்தே ஈழ மக்கள் பற்று காரணமாக அமெரிக்கா இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.(மேலும்......)

வட மாகாண அபிவிருத்திக்கும் பிரத்தியேக அமைச்சு

வட மாகாண அபிவிருத்திக்கென பிரத்தியேக அமைச்சு ஒன்று நிறுவப்படுகின்றது என்று ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கின்ற தகவல்கள் கூறுகின்றன. வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக எஸ். பி. நாவின்ன, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக சம்பிக்க ரணவக்க, தென் மாகாண அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க ஆகியோர் இன்று மதியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து உள்ளனர். இந்நிலையில் புதிய தேசிய அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களின் அபிவிருத்திக்கும் பிரத்தியேக அமைச்சு அமைக்க உத்தேசித்து உள்ளனர் என்று கூறப்படுகின்றது.இது தொடர்பாக தமிழர் தரப்புடன் ஜனாதிபதி பேச்சுக்களில் ஈடுபட்டு உள்ளார் என்றும் இச்செய்திகள் சொல்கின்றன.

New Sri Lankan Life Science Magazine released!

A Good News to Sri Lankan life science community. A new Sri Lankan Magazine on behalf of Sri Lankan life science community has been recently released to the market. The Sri Lankan Scientist Magazine is aimed to be the best sharing platform for advanced life science research information in Sri Lanka quarterly with a social cause. The life science community; researchers, scientists, graduate and undergraduate research students and industry partners, will benefit from this one stop local life science information source. This will cover the life science disciplines of Biosciences, Agriculture, healthcare, biotechnology, chemistry, environmental sciences, and etc. To know more about the magazine, you can visit Its website www.srilankanscientist.com and most updated information is available in their FB page as well. The first issue has discussed about some general information about Walla Patta, New Sri Lankan Frog discovery, Next generation Sequencing, Malaria & economic development, Genetically Modified Organisms, opinions on country’s research focus and etc. The second issue is to cover some health related theme. The Magazine is available through major bookshops of Sarasavi, MD Gunasena and VijithaYapa @ Rs 350. To get your copy post to your home, text your address to 0715454369 or email to info@srilankanscientist.com

Editor

The Srilankan Scientist

www.srilankanscientist.com

கண்ணீரை வரவழைக்கும் குருகுலராஜாவின் தாய்ப்பாசம் !

தற்போதைய வடக்கு மாகாண கல்வித்துறை அமைச்சர் த.குருகுலராஜா, 2009ம் வருடம் செட்டிகுளம் அகதிகள் முகாமுக்கு இடம்பெயர்ந்து வந்து 2013ம் வருடம் வடக்கு மாகாணசபை வேட்பாளராக போட்டியிட சிறீதரன் கொக்கி போடும் வரைக்கும் கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளராக அரச பணியில் இருந்தவர். செட்டிகுளம் அகதிகள் முகாமிலிருந்து 2010ம் வருடம் கிளிநொச்சிக்கு மீளக்குடியேற்றம் போகும்போது, குருகுலராஜா தனது தாயாரை கோவில்குளம் அருளகத்தில் 'யாரும் இல்லாத அநாதை' என்று கூறி பாரப்படுத்திவிட்டுச்சென்றார். குருகுலராஜா சென்ற பின்னர், அருளகத்தின் நிர்வாகி அந்த தாயாரிடம்... 'அம்மா நீங்கள் யார்? வன்னியில எங்க இருந்தனியள்? உங்கட பிள்ளைகள் எல்லாம் எங்க? யுத்தத்தில பிள்ளைகளை எப்பிடித் தவறவிட்டனியள்? சொன்னால் தேடிக்கண்டுபிடித்து பிள்ளைகளோட உங்கள சேர்த்து வைக்க முடியும்' என்று விசாரித்தபோது, 'என்ன இங்கு கொண்டு வந்து விட்டிட்டுப்போறானே, அவன் தான் என்ட மகன். கிளிநொச்சியில கல்வி பணிப்பாளரா வேலை பார்க்குறான்' என்று கூறியபோது, அருளக நிர்வாகத்தினர் அப்படியே திக்கித்திப் போய்விட்டனர். (இத்தனைக்கும் குருகுலராஜாவின் அன்றைய அரச சம்பளம் ஏறக்குறைய 60,000 க்கும் 70,000 க்கும் இடைப்பட்டது. அந்த சம்பளத்தில் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தனது தாயாரை வைத்து பராமரிக்க 'வக்கற்ற கருமி' தான் இன்றைய அமைச்சர் குருகுலராஜா) 2012ம் வருடம் கோவில்குளம் அருளகத்துக்கு வந்து, நிர்வாகத்தினரிடம் மன்னிப்புக்கேட்டு தனது தாயாரை குருகுலராஜா அழைத்துச்சென்றதாகவும் தகவல் உண்டு.
(Naangal Irukkiram)

புரட்டாசி 04, 2015

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பிரதம கொரடா அநுரகுமார

8 வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றம் நேற்று காலை 9.30 க்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது இதன் போது சபாநாயகர் இந்த அறிவிப்புக்களை விடுத்தார். எதிர்க்கட்சி தலைவராகத் தெரிவுசெய்யப்படுபவரின் கட்சியைச் சார்ந்த ஒருவரே எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவாக தெரிவுசெய்யப் படுவது பாராளுமன்ற சம்பிரதாயமாக உள்ளது. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவாக ஜே.வி.பியின் தலைவரான அநுர குமார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள் ளார். (மேலும்......)

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு எதிர்ப்பு எதிர்க்கட்சித் தலைவர்

அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை தாம் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, முதல் முறையாக ஆர். சம்பந்தன் சபையில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக அறிவித்தார். 1.2 பில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 65 அமைச்சர்களும் 38 இராஜாங்க அமைச்சர்களுமே உள்ளனர் என அவர் இதன்போது சுட்டிக் காட்டினார். தான் இந்த எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த அவர், ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுவேன் என உறுதியளித்தார்.

சம்பந்தனுக்கு சங்கரி வருந்தி வாழ்த்து

எதிர்க் கட்சித்தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தன்னுடைய அரசியல் பயணம் பூச்சியமானதுக்கு தாங்கள் தான் காரணமென்றும் குறிப்பிட்டுள்ளார். எனது நேர்மையான அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியல் பூச்சியத்துக்கு வந்ததற்கு நீங்களே காரணமாக இருந்துள்ளீர்கள். நான் ஒரு நேரடி மோதலில் தோற்றவன் அல்ல, ஓர் ஆயுதக் குழுவின் ஆதரவு உங்களுக்கு இல்லாதிருந்தால் எனது அரசியல் பயணம் வெற்றிகரமாகத் தொடர்ந்திருக்கும். (மேலும்......)

கூட்டமைப்புக்குள் பாகிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ - சித்தார்த்தன் எம்.பி.யின் பின்னணி அறிந்த சம்பந்தன் அதிர்ச்சி..!!

கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: தா்மலிங்கம் சித்தாத்தன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு)
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கையில் தங்களுடைய நலன்கள் பாதிக்கப்படுவதாக கருதும் பாகிஸ்தானிய வெளியக உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஊடுருவுவதில் வெற்றி பெற்றிருக்கிறது. நீண்டகாலமாக தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் தங்களுக்கான முகவர்களை உருவாக்குவதில் வெற்றிபெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஜ.எஸ்.ஜ நாடாளுமன்ற உறுப்பினர் தா்மலிங்கம் சித்தாத்தன் மூலம் தங்கள் இலக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.
இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள உல்லாச விடுதியொன்றில் வைத்து, தா்மலிங்கம் சித்தாத்தாத்தனுக்கும் ஜ.எஸ்.ஜயிற்கான இலங்கை அதிகாரி ஒருவருக்கும் இடையில் இரகசிய சந்தித்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது. (மேலும்......)

நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள் - சம்பந்தன்

லங்கைப் பாராளுமன்றில் இன்றையதினம் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமது கட்சி நாட்டைப் பிரிப்பதற்கு எதிரானது என்று இன்று பீ.பீ.சி சிங்கள சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார். வடக்கு, கிழக்கில் 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மீளவும் பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றின்ல் மூன்றாவது பெரிய கட்சியாக உருப்பெற்றிருக்கிறது. (மேலும்......)

புரட்டாசி 03, 2015

என் மனவலையிலிருந்து…..

என்னை அதிகம் கவர்ந்த மக்கள் புரட்சியாளன்

(சாகரன்)

மிகவும் வளம் குறைந்த ஆயுதத் தளபாடங்களைக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி வீரம் மிக்க புரட்சியை வென்ற நாடு என்றால் அது வியட்நாம் என்றால் மிகையாகாது. இந்த வெற்றிக்கு பின்னால் இந்த புரட்சியைத் தலமை தாங்கிய மக்கள் புரட்சியாளன் ஹோ சி மின் இருந்திருக்கின்றார் என்றால் அது மிகைப்படுத்திக் கூறப்படும் விடயமும் அல்ல. ஒருபுறம் பிரெஞ்சு ஆக்கிரமிப்பு படை மறுபுறம் அமெரிக்க ஏகாதிபத்திய படை என்று பல்முனைத் தாக்குதலை எவ்வாறு வியட்நாம் மக்கள் எதிர் கொண்டனர் என்பதை விபரிக்க சில பக்கங்கள் போதாது. ஆனால் தங்களிடம் இருக்கும் வளங்களை மட்டும் நம்பி தமது சொந்தக்காலில் நின்று கொண்டு மிகவும் நுணுக்கமான போர்த் தந்திரோபாயங்களைப் பின்பற்றி வெற்றியடைந்து புரட்சிகளில் வியட்நாம் புரட்சி முதன்மை பெறுகின்றது. (மேலும்......)

எதிர்க்கட்சித் தலைவராகிறார் இரா.சம்பந்தன்

இரு பிரதான கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இன்று அறிவிக்கப்படவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் வெளியிடுவார் என நம்பத்தகுந்த கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவது தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாவும் தெரியவருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்குவது என்ற உடன்பாட்டுக்கு அமையவே கூட்டமைப்பு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இருந்தபோதும், ஐ.ம.சு.முவின் பிரதிநிதிகள் தமக்குள் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் எனக் கோரி வருவதுடன், குமார வெல்கமவை நியமிக்குமாறு கையெழுத்துக்களையும் திரட்டியுள்ளனர். அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதை கடுமையாக எதிர்த்திருக்கும் உதய கம்மன்பில எம்.பி, நாட்டுக்கு எதிராக செயற்படும் கூட்டமைப்பினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக் கூடாது என்றும், கூட்டமைப்பினர் பிரிவினைவாத நிகழ்ச்சிநிரலைக் கொண்டு செயற்பட்டுவரும் அதேநேரம், சர்வதேச விசாரணை கோரிவருவதால் அவர்களுக்கு அப்பதவியை வழங்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். அது மாத்திரமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்தியக் கட்சி என்றும், எனவே அவர்களால் பொதுவான எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயிரக்கணக்கான குடியேறிகள் கிரீஸுக்கு படையெடுப்பு: ஹங்கேரியிலும் பலர் நிர்க்கதி

கிரீஸ் துறைமுகங்களுக்கு பாரிய எண்ணிக் கையிலான குடியேறிகள் வருவதை கட்டுப்ப டுத்த அந்நாட்டு அரசு தயாராகி வரும் நிலை யில் மேலும் ஆயிரக்கணக்கான குடியேறிகள் அங்கு சென்றடைந்துள்ளனர். லெஸ்போஸ் தீவில் இருந்து 4,200க்கும் அதிகமானவர்களை ஏற்றிய இரு கப்பல்கள் நேற்று முன்தினம் இரவு பிரவுஸ் துறைமுக த்தை அடைந்துள்ளன. முன்னெப்போது இல் லாதவகையில் தீவிரமடைந்திருக்கும் குடியேறி களின் படையெடுப்பை கையாள்வதில் முழு ஐரோப்பிய ஒன்றியமும் திணறி வருகிறது. ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிப்பதை ஹங்கேரி பொலிஸார் தடுத்த தால் அந்நாட்டு ரயில் நிலையத்திற்கு வெளி யில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் நிர்க்கதி யான நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும் பாலானவர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத் தைச் சேர்ந்தவர்களாவர். (மேலும்......)

சந்திரிகா வரவில்லை, மஹிந்தவுக்கு குட்டு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றிருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பங்கேற்கவில்லை. அவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இடது பக்கத்தில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதிக்கு வலது பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். இந்த மாநாட்டில் வரவேற்புரையாற்றிய கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பதால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மாநாட்டுக்கு சமூகமளிக்கவில்லை என்றார். இதேவேளை, இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜயசூரிய, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து மிகவும் முக்கியமான கடமைகளை செய்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும் எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய பதவிக்காலத்தை அதிகரித்து கொள்வதற்காக கட்சிக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார் என்றார். பேராசிரியர் அவ்வாறு கூறியபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பார்த்து புன்முறுவல் செய்துக்கொண்டிருந்தார்.

புரட்சியின் ஒளிவிளக்கு

தோழர் ஹோசிமின் நினைவுநாள் இன்று.....

வியட்நாம்... 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது. பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயரமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன். "தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த உள்ள வேற இடம் இல்லை" என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர். அந்த சிறுவன் அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை. கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன் தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான். அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோசிமின்! அமெரிக்க காட்டுபன்றியை அலறி ஓட வைத்த இந்த ஒல்லி மனிதர்  வியட்நாம் புரட்சியாளர் தோழர் ஹோசிமின் நினைவுநாள் இன்று.....

கி.பி. அரவிந்தனை (சுந்தர், பிரான்ஸிஸ்) நினைவு கொள்ளல்

ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரும் இலக்கியப் படைப்பாளியும் தமிழ் அறிவியக்கத்தை முன்னிறுத்துவதற்காக செயற்பட்டவரும் ஊடகவியலாளருமான கி.பி. அரவிந்தன் (சுந்தர், பிரான்ஸிஸ்) அவர்களை நினைவு கொள்ளும் நிகழ்வு
எதிர்வரும் 06.09.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு யாழ்ப்பாணம், 128, டேவிற் வீதியில் அமைந்திருக்கும் திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 

இந்த அமர்வில் பிரான்ஸிஸ் பற்றி

  • (இளைஞர் பேரவைக்காலம்)அ. வரதராஜப்பெருமாள், தவராஜா ஆகியோரும்
  • சுந்தர் பற்றி (ஈரோஸ் காலகட்டம்) கருணாகரன், சுகு ஸ்ரீதரனும்
  • கி.பி.அரவிந்தன் படைப்புகள் பற்றி (அவருடைய கவிதைகள் உள்ளடங்கலாக) கவிஞர் சோ. பத்மநாதனும்
  • கி.பி.அரவிந்தனின் ஊடகப்பணிகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் பற்றி ஜபாரும்
  • புலம்பெயர் சூழலில் கி.பி அரவிந்தன் என்பதைப்பற்றி அசுராவும்
    உரைக்கின்றனர்.

தவிர, கி.பி அரவிந்தன் என்ற ஆளுமை பற்றி வேறு நண்பர்களும் உரையாற்றவுள்ளனர்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
- கலை, இலக்கிய, ஊடக செயற்பாட்டு அரங்க நண்பர்கள்.

மாவட்ட அமைச்சர் பதவி தமிழருக்கு பொன் முட்டை போடும் வாத்து!

ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன காலத்தில் இருந்த மாவட்ட அமைச்சர்கள் முறைமையை செழுமைப்படுத்திய முறையில் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருகின்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. குறிப்பாக போர் பாதிப்புக்கு உள்ளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களின் மேம்பாடு, புனரமைப்பு, அபிவிருத்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டே இம்முறை மீள கொண்டு வரப்படுகின்றது. ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் முறைமை நாடு முழுவதிலும் உள்ள மாகாணங்களுக்கு எல்லாம் கொண்டு செல்லப்பட்டதைப் போன்று மாவட்ட அமைச்சர்கள் முறைமையும் அமுல்படுத்தப்பட உள்ளது. (மேலும்......)

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் இருமுனை போட்டி

எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இருமுனை போட்டி நிலவுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலேயே இந்தப்போட்டி நிலவுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து அறுவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எஸ்.பி. திஸாநாயக்க, சரத் அமுனுகம, துமிந்த திஸாநாயக்க, குமார் வெல்கம மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரின் பெயர்களே பிரேரிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கூட்டமைப்பு தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. இதேவேளை, கடந்த 2ஆம் திகதி ஆரமான கன்னியமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா மற்றும் எதிர்க்கட்சி முதற்கோலாசான் ஆகிய மூவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மத்தளை விமான நிலைய பகுதியில் பெரும் பதற்றம்

மத்தள விமான நிலைய களஞ்சிய சாலைகளை நெற் களஞ்சியமாக மாற்றும் நடவடிக்கைகளை எதிர்த்து நேற்று பிரதேச மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நெல் மூடைகளை ஏற்றிவந்த லொறிகளை விமான நிலையத்துக்குள் செல்லவிடாமல் தடுத்த பிரதேச வாசிகள் வீதிகளின் குறுக்கு, நெடுக்கா அமர்ந்தும் படுத்துக் கொண்டும் லொறிகளை உள்ளே விடாமல் தடுத்தனர். இருந்த போதும் ஒரு லொறி விமான நிலையத்திற்குள் நுழைந்ததையடுத்து அங்கு பதற்ற நிலை தோன்றியது. மத்தள விமான நிலையத்தின் சரக்குகள் களஞ்சியசாலையே நெற் களஞ்சியமாக மாற்றப்பட்டுள்ளதென்றும் விமான நிலையத்தை முற்றாக மூடும் நோக்கம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களை மக்கள் நம்பாததாலே நிலைமை விபரிதமானது. ஸிரே, ஸ்கேனர், நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட தீயணைப்பு உபகரணத் தொகுதி, குளிரூட்டல் வசதி களைக் கொண்ட களஞ்சியசாலையாக இது உள்ளது. சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையத்தின் தரத்தை மாசுப டுத்தும் வகையில் இச்செயற்பாடுகள் உள்ளதென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். (எப். எம்.)

புரட்டாசி 02, 2015

கருணாவின் புதிய அவதாரம்: பின்புலம் என்ன?

(ப.தெய்வீகன்)

விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் மஹிந்த ராஜபக்ஷ அரசின்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அவர்கள் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட விடயங்கள் பல தளங்களில் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் - குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. நேர்காணலை பார்த்த ஓவ்வொருவரும் - அதன் உள்ளடக்கங்களை ஒவ்வொன்றாக உருவி எடுத்து - தமக்கு தமக்கு தேவையான விடயங்களை பொதுவெளியில் செய்தியாக முன்வைக்கும்போது எது சுவாரஸ்யம்மிக்கது என்ற அடிப்படையிலும் எது ஜனரஞ்சகசுவை மிக்கது என்ற கோதாவிலும் எடைபோட்டு அவற்றை மட்டும் தனி அலைவரிசையில் தாங்கி சென்று அவற்றுக்கு வியாக்கியானம் கொடுப்பதில் குறியாக இருக்கின்றனர். (மேலும்......)

காப்பாற்றப் படவேண்டியது, சிறீலங்கா சுதந்திரக்கட்சி!

'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்றே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளையும் தேர்தல் தினத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் மற்றும் இவ்வருடம் ஜனவரியிலிருந்து நிகழ்ந்த நிகழ்வுகளையும் சேர்த்து வர்ணிக்கலாம். அதாவது இந்த தேர்தல் முடிவுகள், இந்த முடிவுகளை தீர்மானித்த பின்னணிக் காரணிகள் மணியோசைகளை எழுப்பி இலங்கை மக்களுக்கு ஆபத்து ஒன்று வரவுள்ளதை எச்சரித்துள்ளது. இனி இலங்கையில் நிறைய அனர்த்தங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகளுள்ளன. (மேலும்......)

8ஆவது நாடாளுமன்றின் கன்னி அமர்வு ஒரே பார்வையில்...

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னியமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது. அந்த நிகழ்வுகளை ஒரே பார்வையில் தருகின்றோம்.
• மு.ப 9.10: புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற கட்டடத்தொகுதிக்கு வருகை தந்தனர்.
• மு.ப 9.23: நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவைக்குள் வந்திருப்பதற்கான கோர மணி, சுமார் 5 நிமிடங்களுக்கு ஒலித்தது. உறுப்பினர்கள் அனைவரும் அவைக்குள் வந்து தங்களுக்கென ஒதுக்கப்படாத ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.(மேலும்......)

கி.பி. அரவிந்தன் (சுந்தர், பிரான்ஸிஸ்) பற்றிய அரங்கு

எதிர்வரும் 06.09.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமர்வில் பிரான்ஸிஸ் பற்றி (இளைஞர் பேரவைக்காலம்) அ. வரதராஜப்பெருமாள், தவராஜா ஆகியோரும் சுந்தர் பற்றி (ஈரோஸ் காலகட்டம்) கருணாகரன், சுகு ஸ்ரீதரனும் கி.பி.அரவிந்தன் படைப்புகள் பற்றி (அவருடைய கவிதைகள் உள்ளடங்கலாக) கவிஞர் சோ. பத்மநாதனும் கி.பி.அரவிந்தனின் ஊடகப்பணிகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் பற்றி ஜபாரும் புலம்பெயர் சூழலில் கி.பி அரவிந்தன் என்பதைப்பற்றி அசுராவும் உரைக்கின்றனர். தவிர, கி.பி அரவிந்தன் என்ற ஆளுமை பற்றி வேறு நண்பர்களும் உரையாற்றவுள்ளனர். அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களுடைய பதில்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்த விவரம் தெரிவிக்கப்படும். (கருணாகரன்)

சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு, புங்குடுதீவு ஒன்றியத்தின் ஓர் அறிவித்தல்..!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் - 2015” கலைமாலை தொடர்பான அறிவித்தல்..
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், 18ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக “வேரும்விழுதும் 2015” கலைமாலை..!
காலம் - 25.10.2015
நாள் - ஞாயிற்றுக்கிழமை
நேரம் - பிற்பகல் 2.00 மணி
விழா நடைபெறும் இடம் - பேர்ன், சுவிஸ்.
Saal Rest.BARéN
Bern Strasse- 25
3072 OSTERMUNDIGEN.
"இயல், இசை, நடனம், நாடகம்" - ஆர்வமுள்ள அனைத்துக் கலைஞர்கள், படைப்பாளிகள், வயது எல்லை அற்று, பிரதேச வேறுபாடின்றி தங்கள் ஆக்கங்களை (திறமைகளை) 25.09.2015ற்கு முன்னர் அறியத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி,
இவ்வண்ணம்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து
31.08.2015.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

“தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். ஆனால், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தமிழில் அனுப்பப்படும் கோரிக்கைகளுக்கும், புகார்களுக்கும் அதிகமான நேரங்களில் ஆங்கிலத்தில் பதில் வருகின்றது. பல்வேறு துறைகளும், மாவட்ட நிர்வாகமும் ஆங்கிலத்தை பயன்படுத்தியே பதில் தருகின்றனர். தேவைப்படும்போது ஆங்கிலத்தை பயன்படுத்துவதில் தவறில்லை. எப்போதும் என்றால் பாமர மக்கள் இதை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? ஆகவே, மான்புமிகு முதல்வர் அவர்கள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கை முழக்கத்திற்கேற்ப அனைத்து துறைகளிலும் இயன்றளவு தமிழை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்” என நான் தமிழக அரசுக்கு கோரிக்கை (கோரிக்கை எண்: 2015/834893QU, தேதி: 12/07/2015) விடுத்தேன். நான் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு “மனுதாரின் கோரிக்கை சம்மந்தமாக அனைத்து துறை அலுவலா்களுக்கும் வாராந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தல் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்க நடவடிக்கை எடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்கப்படும் எனவும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது (ந.க.எண்.ஐ2-1000-15 நாள்.16.7.2015)” என பதில் அளித்துள்ளது.

கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

கன்னியமர்வின் சில சுவாரசியங்கள்...

நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு நேற்று இடம்பெற்ற நிலையில் அதில் சில சுவாரசியமான மறக்கு முடியாத சம்பவங்களும் இடம்பெற்றன. அவற்றில் சில...(மேலும்......)

(கடந்த கால பதிவுகளுக்கு....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com