Contact us at: sooddram@gmail.com

 

தேர்தலில் போட்டியிடுவோர் தகுதி என்ன ?

(மாதவன் சஞ்சயன்)

நல்லாட்சியின் தேவை உணரப்படும் சூழ்நிலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளை கொண்டதாக அமையவேண்டிய பாராளுமன்றத்தில் அண்மை காலத்தில் ஊழல் பேர்வழிகளும் அதிகார துஸ்பிரயோகம் செய்பவரும் அங்கத்துவம் வகித்ததால் நாட்டில் ஆள் கடத்தல், கப்பம் அறவிடல் போதைபொருள் கடத்தல் போன்றவை பல்கி பெருகியதாக தெரிவித்து அடுத்த தேர்தலில் அவ்வாறான நபர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்க கூடாது என நாடுமுழுவதும் 10 லட்சம் பொது மக்களின் கையொப்பம் பெற நடாத்தப்பட்ட மார்ச் 12 பிரகடத்தின் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

ஜனவரி 08 மக்களின் தீர்ப்பின்படி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும் அவரை ஆதரித்த அரசியல் கட்சிகள் மட்டுமல்ல நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இன்று தம்மை புடம் போடவேண்டிய நிலைமைக்கு இவர்களின் நடவடிக்கை உந்து சக்தியாக அமையும். ஏனென்றால் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களின் பின் 10 லட்சம் மக்கள் அணிதிரள்வது என்பது சாதாரண விடயமல்ல. கையெழுத்து வைத்த ஒவ்வொருவரும் தங்கள் உள்ளக்கிடக்கையை தான் பதிவு செய்துள்ளனர் என்பது நிதர்சனமானது.

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் வெல்லலாம்.ஆனால் அதிகார ஆசை, பதவி ஆசை,பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டவர்களின் கைகளில் அது சென்று சேரும்போது வரம்பு மீறல்கள் ஏற்பட்டு மக்கள் நலன் பின்தள்ளப்பட்டு அவரவர் நலன்கள் முன்னிலை பெறுகிறது. அபிவிருத்தி என்ற பெயரில் அத்துமீறல்கள் நடக்கும். அள்ளித்தெளித்த கோலத்தில் வேலைகள் நடக்கும். அதே வேளை பதுக்கல்களும் பங்கெடுக்கும்.

ஆசியாவின் அதிசயமாக நாட்டை கட்டியேளுப்பியவர்கள் எத்தனை தலைமுறைக்கு வாங்கிய கடனுக்கு மக்களை ஈடுவைத்துள்ளனர் என்ற உண்மை வெளிவரதொடங்கியுள்ளது. அதே வேளை அவர்கள் பதுக்கிய தொகைகளும் இடங்களும் பட்டியல் இடப்படுகின்றன. பல மணிநேர விசாரணைக்கு உட்படுபவர்களும், அதனால் சிறை இருப்பை தவிர்க்க நெஞ்சுவலிவந்து வைத்தியசாலையில் இருப்பவர்களும், விசாரணைக்கு செல்வதை தவிர்க்க பாராளுமன்றத்தில் படுத்துறங்குபவர்களும் என ஒரே அல்லோல கல்லோலம் தான்.
எதிர்வரும் தேர்தலில் நல்லாட்சியின் நாயகனாக பார்க்கப்படும் ஜனாதிபதி முன்னைய பாராளுமன்றத்தில் இருந்த 30 பேருக்கு இதே காரணங்களுக்காக தான் சார்ந்த கட்சிகளில் போட்டியிட அனுமதிக்கமாட்டார் என்ற செய்தி ஒரு நல்ல ஆரம்பபுள்ளியாக தென்படுகிறது. ஏனைய கட்சிகளும் இதனை பின்பற்றவேண்டிய நிலைமை காணப்படுவதால் அவ்வாறு செய்யாதவர்களை மக்கள் தண்டிக்கவேண்டும் என்பதே இந்த 10 லட்சம் கையெழுத்து சொல்லித்தரும் பாடமாக அமையவேண்டும்.

தேர்தல் காலங்களில் இதுபோன்ற மக்கள் விழிப்புணர்வு செயல்பாடுகள் நிச்சயம் மாற்றத்துக்கான அடித்தளமாக அமையும். அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் பணம் மக்கள் பணம் அவர்களின் அபிவிருத்திக்காக வாழ்வாரத்துக்காக சென்று சேரவேண்டிய பணம். தம் சொந்தப்பணத்தை திருடியவனை என்ன செய்வார்களோ அதையே பொதுப்பணத்தை திருடுபவர்களுக்கும் செய்யவேண்டும். இன்று அரசியல் ஒரு சேவை அல்ல அது வியாபாரம் என்ற நிலைக்கு மாறிவிட்டது. 10 லட்சம் மக்களின் பங்களிப்பில் அனைத்து மக்களும் கரம்கோர்க்க வேண்டும்.

அந்த கூட்டத்தில் உரையாற்றியவர் கடந்த பாராளுமன்றத்தில் 100 பேரளவில் கா பொ த உயர்தரம் கூட சித்தி அடையாதவர்கள் என குறைப்பட்டார். அதனால் தான் அதிகாரிகளை அமைச்சர் மரத்தில் கட்டுவது, தன் கட்சி உறுப்பினருக்கு தண்டனை கிடைத்து விடக்கூடாதென நீதிபதிகளை மாற்றுவது, என காட்டுத்தர்பார் நிகழ்வுகளும் நடந்தன.
படிப்பறிவு முக்கியம்தான் அதே வேளை பட்டறிவும் நல்ல பலாபலன்களை தரக்கூடியது என்பதை மறுக்க முடியாது. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் அவர்களின் தேவைகளை பட்டறிவால் செய்துமுடித் துள்ளனர். இந்தியாவின் கிங் மேக்கர் என பெருமையுடன் பேசப்பட்ட பள்ளிப்படிப்பை தொடராத காமராஜர் தான் கிராமங்கள் எல்லாம் பள்ளிக்கூடங்களை திறந்தார். பிள்ளைகளை பள்ளிக்கு வரச்செய்ய மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com