|
||||
|
மாற்றமடையும் யாழ்
தேர்தல் களம் !
(மாதவன்
சஞ்சயன்) மேலும் நாட்டின் ஜனாதிபதி, தான் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக தெரிவித்திருப்பது வெறுமனே தென்னிலங்கை தேர்தல் களத்துக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமாகவே பார்க்கப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்பு என்ற வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் காபந்து அரசில் உள்ளவர்கள் தான் நல்லாட்சிக்கான பங்காளிகளாக இருப்பதால் கடந்த கால தேர்தல் வன்முறைகளை அவர்கள் அனுமதித்தால் மக்கள் தீர்ப்பு வேறுவிதமாகிவிடும். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அறிவித்துள்ள பக்கச்சார்மின்மை அவ்வாறன செயல்களுக்கு இடமளிக்காது எனவும் எதிர்பார்க்கலாம். யாழ் தேர்தல் மாவட்டத்தில் 1977ல் (அப்போது 11 தேர்தல் தொகுதிகளாக இருந்தது) தமிழ் ஈழம் என்ற உத்வேகத்தில் மக்கள் வாக்களித்தனர். 1989ல் சமாதானப்படை தாக்கத்தில் வாக்களித்தனர், 1994ல் புலிகள் பகிஸ்கரிக்க கொத்தணி முறையில் தீவகத்தில் மட்டும் வாக்குகள் போடப்பட்டன, 2000, 2002 தேர்தல்களில் அரசபடைகளின் அனுசரணையுடனான கெடுபிடிகள் தலையீடுகள் , 2004ல் புலிகளின் ஆளுமை, 2010ல் மத்திய அரசின் அனுசரணையுடனான அதிகாரம் இராணுவத்தினரின் கெடுபிடிகள் போன்ற புறக்காரணிகள் வாக்களிக்கும் மக்களின் மனநிலையில் செல்வாக்கு செலுத்தின. கடந்த தேர்தல்களில் நடந்த சம்பவங்களில் முக்கியமானது வேட்பாளர்களின் மீதான படுமோசமான தாக்குதல். தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மண்டையுடைந்தும், கைகள் கால்கள் முறிந்தும் சக்கர நாற்காலியில் பாராளுமன்றம் சென்ற காட்சி ஒன்றே பின் நாளில் பலரின் தேர்தலில் போட்டியிடும், வாக்களிப்பில் பங்கு பெறும் ஆர்வத்தை குறைத்தது. முன்பு ஆதரவாளர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் வெறுப்பேற்றினாலும் வேட்பாளர்கள் மீதே தாக்குதல் நடத்தும் அராஜக கலாச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட பின் தான் மக்களின் மனநிலை மாற்றமடைந்தது. மக்களால் தரப்பட்ட அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ததே, அரசியலே வேண்டாம் என பலரை ஒதுக்கியது. யாழ் சமூகத்தை
பின்னோக்கி பார்த்தால் தன் சொந்தக்காலில் நிற்பவர்களே மிகமிக பெரும்பான்மை.
தேர்தலில் வாக்களித்த பின் அடுத்த தேர்தல் வரை தான் எந்த கட்சிக்கு,
வேட்பாளருக்கு வாக்களித்தனரோ அவரை தம் சொந்த தேவைக்கு தேடிச்செல்லும்
வழக்கம் அவர்களிடம் இருப்பதில்லை. தாம் வாக்களித்தவர் இனத்தின்
உரிமைகளுக்காக, முன்னேற்றத்துக்காக எதை செய்கிறார்கள் என அவதானிப்பதேடு சரி.
மற்றப்படி தனது தோட்டம், வயல், வியாபாரம், உத்தியோகம் என தமது அலுவல்களுக்கு
மீண்டு விடுவார்கள். நீண்ட நெடிய
யுத்தம் தான் நிலைமையை மாற்றிவிட்டது. ஏற்படுத்தப்பட்ட அழிவுகளில் இருந்து
மீண்டுவர அவர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காக அவர்கள் அடிபணிந்து
செல்லவும் தயாரில்லை. சலுகைகளுக்காக தன்மானத்தை விட்டுவிடவும் அவர்களால்
முடியாது. ஆனால் சொந்த மண்ணில் அகதியாய் வாழ்தையும் அவர்கள் விருப்பவில்லை.
அதனால் அதனைப்பயன்படுத்தி ஊடுருவம் அரசியலுக்குள் அவர்கள் அகப்படும் நிலை
அண்மைவரை தொடர்கிறது. அண்மையில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
(எதிர்கட்சியும் ஆளும்கட்சியும் இணைந்து செயல்ப்படும் அரசு ) இந்த தேர்தலின்
பின்பும் தொடரும் என்ற ஜனாதிபதியின் உறுதியான நம்பிக்கை, இன்று யாழ் தேர்தல்
மாவட்டத்தில் உறங்குநிலையில் இருக்கும் அதிகார துஸ்பிரயோக செயல்கள் போன்ற
சூழ்நிலை, தெளிவான முடிவெடுக்கும் மனநிலையை மக்கள் மனதில் நிச்சயம்
தோற்றுவிக்கும். அதனால் இம்முறை
தேர்தல் பலகட்சிகளின் உண்மை நிலையை அவர்கள் பெறும் வாக்குகள் மூலம்
வெளிப்படுத்தும். ஏனெனில் மற்றவர் புகமுடியாத அலிபாபா கோட்டைகளுக்கான
பாதைகள் இப்போது அனைவருக்கும் திறந்து விடப்பட்டுவிட்டன. இது நம்ம ஏரியா
உள்ளே வாராதே எனும் அராஜகத்தை இம்முறை அரங்கேற்ற முற்பட்டால் பிணைமறுப்பு
எனும் சிறைக்கதவை திறந்திடு சீசே என அலிபாபா கத்தினாலும் (அதிகாரம்
இல்லாததால் ஆணையிட முடியாது) ஆகஸ்ட் 17 தேர்தல் தினத்துக்கு பின் தான்
அராஜகம் புரிவோருக்கு சிறைக்கதவு திறக்கும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |