|
||||
|
காலத்துக்கு காலம்
மாறும் துரோகம்
(மோகன்) துரோகி அல்லது துரோகிகள்
இதுவே ஈழவிடுதலைப்போராட்டத்தில்
அதிகமாக உச்சரிக்கபட்ட
சொல். இதன் அர்த்தம் தேவைக்கு ஏற்ப மாறியது
அல்லது மாற்றியமைக்கபட்டது. 'கொலைவெறி
மன உளைச்சல்'
வியாதியால்
பீடிக்கபட்ட
ஒரு தலைவனின்
வியாதியில்
விளைந்த எண்ணற்ற கொலைகளுக்கு
வியாக்கியானமாக
அழைக்கபட
தொடங்கிய
சொல் இந்த
'துரோகி'. தலைவனின் நேரடிப்
பரப்புதால்
வீரியமாய்
பரவிய இந்த நோயினால்
பாதிக்கபட்டவர்களால்
இலங்கை தீவு முழுவதும்
துரோகிகளாய்
மடிந்து விழுந்து கொண்டிருந்தனர்.
படிப்படியாக விபச்சார
ஊடகங்கள்
என்னும் நோய் காவிகள்
மூலம் புலம் பெயர்
நாடுகளில்
பரவத்தொடங்கியது.
இந்த நோய் கடல் கடந்து
பரவியதால்
என்னவோ தன் வீரியத்தை
இழந்து 'கொலையின்பம்
மன உளைச்சல்'
நோயாக மனிதர்களைப்போன்றவர்களிடம்
மண்டியிட்டது.
இந்த நோய்
பற்றிக்கொண்டவர்களை
அமைதியடையசெய்யும்
ஒரே மருந்து
இந்த நோயினால்
பாதிக்கபடாதவர்களின்
மரணங்களே!
இப்படிப்பட்ட மரணங்கள்
நிகழும் போதெல்லாம்
'துரோகி ஒழிந்தான்'
என வாய்
ஓயும் வரை உச்சரித்து
சாந்தியடையும்.
மேலும் சிதுறுண்ட
உடல்களின்
படங்களை பார்த்துவிட்டாலோ
பரம திருப்தியாய்
தூங்கி போய் விடுவார்கள்.
தனிமனிதனாய் கொல்லப்படும்
போது துரோகியாகவும்,
ஒட்டு மொத்தமாய்
கொல்லப்படும்
போது ஒட்டுக்குழுக்களாகவோ,
துரோகக்குழக்களாகவோ
பிரகனப்படுத்தப்பட்டது. அதிபர் ஆனந்தராஜா
ஆமியிடம்
கை குலுக்கியது….
அது துரோகத்தனம்.
மரணிப்பதை தவிர வேறு வழியில்லை.
ஆனால் அதே ஆமிக்காரர்களின்
ஆசீர்வாதத்துடன்
மாற்று இயக்கக்காரன்களை
அழிக்கும்
போது அது
போராட்டமாய்
புனிதப்படுத்தப்பட்டது.
இப்படித்தான் துரோகங்களுக்கு
அர்த்தங்கள்
மாற்றியமைக்கப்பட்டது.
வெலிக்கடை படுகொலைகள்
வெறியாட்டம்.
ஆனால் கிட்டுவின்
ஒற்றைக்காலுக்கு
கந்தன்கருணை
படுகொலைகள்
பரிகாரம்.
ஏனெனின் கொல்லப்பட்டவர்கள்
துரோகிகள்.
இதன் உச்சக்கட்டமாய்
அறிவாய் சிந்திப்பவர்கள்,
ஆக்கபூர்வமாய்
செயல்படுபவர்கள்,
ஏன் மனிதநேயம்
கொண்ட மனிதர்களெல்லாம்
இந்த நோய்
பிடித்தவர்களுக்கு
துரோகியாய்
தென்படத்தொடங்கினார்கள்.
புலம் பெயர்ந்த
நாடுகளிலும்
இந்த நோயினால்
பீடிக்கப்பட்டவர்களால்
தங்கள் வீரியத்திற்கு
ஏற்ற விளைவை
விதம்விதமாய்
விளைவிக்க
முடிந்தது.
மே 18 2009 இலங்கைத்தீவில்
இந்த நோயினால்
கடுமையாய்
பீடிக்கப்பட்டவர்கள்
அழிக்கப்பட்டும்,
வீரியம் குறைந்த கிருமிகள்
என அடையாளம்
காணப்பட்டவர்கள்
செயலிழக்கவும்பட்டார்கள்.
இதனால் துரோகிகளின்
சாவுகளும்
இல்லாது போகத்தொடங்கியது
என்று சொல்லலாம் . இதை தொடர்ந்து
புலம் பெயர்ந்த நாடுகளில்
இந்த நோயினால்
பாதிக்கப்பட்டவர்கள்
செய்வதறியாது
தவிக்கத்தொடங்கினர்.
தினம் தினம் துரோகிகளின்
சாவுகளை பார்த்து தங்களுக்குள்
அமைதியும்
உற்சாகமும்
அடைந்து சாந்திமயப்பட்டவர்களுக்கு
அந்த துரோகிகள்
நிம்மதியாக
உயிர் அச்சமின்றி
வாழ்ந்து
கொண்டிருப்பதை
பார்க்கும்
போது இவர்களை
பீடித்த நோயினால் இவர்களுக்கு
பல பக்க
விளைவுகள்
ஏற்படத் தொடங்கியது. 'துரோகி
அழிந்தான்'
என முணுமுணுத்த
வாய்களுக்கு
மென்று துலைக்க வேறு எந்த
வார்த்தைகளும்
அகப்படாமல்
போயிற்று.
இந்த நோயினால்
தொடர்ந்து
பாதிக்கப்பட்டிருப்பது
தங்கள் எதிர்கால வாழ்வு சூனியமயப்பட்டுவிடும்
என்று உணர்ந்தவர்கள்
நோயை குணப்படுத்த
தெரிந்த ஒரே மனிதர்
மகிந்தாவிடம்
சரணாகதி அடைந்து சாந்தமடைந்து
வருகிறார்கள்.
ஆனாலும் இன்னும் பலர் தாய்க்கிருமி
இன்னமும்
உயிரோடு இருக்கின்றது
என்ற அதிதீவிர
நம்பிக்கையினால்
துரோகிகளின்
சாவு மீண்டும்
நிகழும் வாய்ப்பு வரும் என
வழி மேல் விழி
வைத்து காத்திருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் முத்தியடைவு
நிகழ்வுக்கு
மாபேரும்
காரணம் இந்தியா என
நினைத்து
அதனை துரோகத்தின்
சிகரமாய்
வர்ணித்து
கத்தோ கத்தென்று
கத்தியதெல்லாம்
கொஞ்சநாளில்
சந்திரனை
பார்த்து
நாய் குலைத்த
கதையாய் அடங்கிபோனது.
தலைவர் இறந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள
முடிந்தாலும்
அவர் எப்படி
இறந்தார்
என்பதிலுள்ள
உண்மையை தெரிந்தால்,
அதை ஏற்றுக்கொள்ள
முடியாமல்
போய்விடுமோ
என்ற காரணத்தினால்
அந்த மனுசனை
இந்த ஜடங்கள்
இன்னமும்
உயிரோடு வைத்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
'நீ முன்னால
போ நான்
பின்னால வாறன்' என்று
குழந்தைகள்
முதல் கற்ப்பிணிகள்
வரை கழுத்தில
மாலை கட்டி
அனுப்பி விட்டு நம்ம தலைவன்
வெறும் கழுத்துடன்
மூளியாய்
ஆமிக்காரன்
பின்னால போயிருப்போனோ?
அப்படி நடந்திருந்தால்
அது துரோகமா?
அல்லது அரசியல்
சாணக்கியமா?
என்ற குழப்பம்
தீரும் வரை தலைவனை
உயிருடன்
காப்பாற்றி
வைப்பதை தவிர இவர்களுக்கு
வேறு வழியில்லை.
எதுவானாலும் இவர்களின்
தற்போதைய
நிலை பரிதாபகரமானது.
இப்போதெல்லாம் புலி எதிர்ப்பாளர்களை
'துரோகிகள்'
என்று வைவதன் மூலம் மட்டும்
இவர்களுக்கு
எந்த திருப்தியும்
கிடைப்பதில்லை.
இவர்களை பற்றியுள்ள
நோய்க்கருமிக்கு
இது பழகிப்போய்விட்டதால்
பெரிய தாக்கங்களை
இவர்களுக்கு
விளைவிப்பதில்லை.
மாறாக இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்குள்ளேயே
சில துரோகிகளை
அடையாளம்
கண்டு திட்டி தீர்ப்பதில்
கொஞ்சமாவது
சுகம் காணமுடிகிறது.
பல துரோகிகளின்
சாவில் உள்ளம் குளிர்ந்து
உவகை கொண்டு
அள்ளி அள்ளி கொடுத்ததெல்லாம்
எந்தவித இரத்தம் காணாமல் வெறும் நாடு கடந்த
அரசு, வட்டுக்கோட்டை
தீர்மானம்
போன்ற வேஸ்ட்டான
விடயங்களுக்கு
விரயமாவதில்
இவர்களுக்கு
கொஞ்சம் கூட சுதியில்லை.
அட்லீஸ் பொங்குதமிழ்
நிகழ்ச்சி
நடத்தி டக்ளசும், கருணாவும்,
வரதரும், சித்தரும்
விரைவில்
போட்டுத்தள்ளப்படுவார்கள்
என்று சூளுரைத்திருந்தாலாவது
இந்த வியாதி
கொண்டவர்கள்
கொஞ்சம் சாந்தம் பெற்றிருப்பார்கள்.
இப்படி எந்தவிதமான
இன்டஸ்ரிங்
இல்லாமல்
இந்த சீக்காளிகளால்
எப்படித்தான்
தாக்குபிடித்து
தொடர்ந்து
வாழமுடியும்.
உயிரோடு பிடித்த
தலைவனை கொஞ்ச நாளாவது
உள்ளே வைத்திருந்தாலாவது
இப்படி புலம் பெயர்ந்த
புலிகளிடம்
கே.பிக்கு
கிடைத்த துரோக பட்டம்
இரண்டாம்
பட்சாமாக
இருந்திருக்கும்.
(தலைவரும்
மறுவாழ்வு
அது இது
என்று கிளம்பி தனக்கொரு மறுவாழ்வை
ஏற்படுத்தியிப்பார்.
இப்படி தலைவனுக்கு
கிடைக்கவிருந்த
துரோகி பட்டத்தை இல்லாது செய்த மகிந்தாவை
பாராட்டத்தான்
வேண்டாம்.
வையாலாமது
இருக்கலாமே!)
புலிகளை கொன்று குவித்த போதெல்லாம்
தோளுக்கு
மேல் கை
போட்டு வாழ்த்து தெரிவிக்கபட்ட
பொன்சேகா(அன்றைய
கதாநாயகன்
இன்றைய துரோகி) சிறை கம்பிகளை
எண்ணிக்கொண்டிருக்கும்
போது சிங்கள
படைகளை கொன்று குவிக்க ஆயுதங்கள்
அனுப்பிய
கே.பி மகிந்தாவின்
தோளில் கை போடும்
அளவுக்கு
உறவு கொண்டாடி
வருகிறார்.
கே.பிக்கு
கிடைத்த இந்த பொன்னான
வாய்ப்பு
தனக்கும்
கிடைக்கலாம்
என்ற நம்பிக்கையுடன்
உருத்திரகுமாரும்
கே.பியின்
மேல் படிந்துள்ள
துரோகபட்டத்தை
ஏற்கனவே துடைக்க தொடங்கியிருக்கிறார்.
இதனால் தனக்கு கிடைக்கபோகும்
துரோகி பட்டத்தை முன் ஜாக்கிரதையாக
தவிர்க்கும்
எண்ணத்துடனால்தான்
(இதுதான் வரும் முன்
காப்பது) நாடு கடந்த
அரசன் வட்டுக்கோட்டைக்காரன்
துரோகி என்று சொல்வதன்
மூலம் சிங்களத்திடம்
நல்ல பெயர்
வாங்க முயர்சிக்கின்றார்.
(ஏற்கனவே கே.பியும் உருத்திரனும்
தொலைபேசியில்
உரையாடி ஒரு உடன்படிக்கை
ஏற்ப்பட்டிருக்கிறது
என்பது ஒரு கொசுறு
செய்தி) இப்படி தேசியத்தலைவரால்
எந்த சிங்கள
அரசுக்கு
சார்பாக, அல்லது அவர்களின்
ஒட்டுக்குழுக்களாக
செயல்பட்டதாக
குற்றம் சாட்டுப்பட்டு
துரோகிகளாக
வீழ்த்தப்பட்டவர்கள்
இன்று அதே சிங்கள
அரசுகளால்
வெறுக்கப்பட்டோ
அல்லது கண்டும் காணாமல் விடப்பட்ட
நிலையில்
தமிழினத்தின்
one
and only
பிரதிநிதிகள் இலங்கை
அரசின் செல்லப்பிள்ளைகளாக
தத்தெடுத்துப்பட்டு
வருகிறார்கள்.
ஏனெனின் இலங்கை
அரசிற்கு
தெரியும்
புலிகள் மனநிலை பாதிக்கபட்ட
நோயாளிகள்.
அவர்களால் உயிர்களை
கொல்லமட்டும்
தான் தெரியுமே
தவிர தமிழ்
பேசும் மக்களுக்கு
தேவையான உருப்படியான
எதையும் செய்யமாட்டர்கள்
என்று. அதனால்தான் இதுவரை
காலமும் அவர்கள் தேடி கடிக்க
வரும் போதெல்லாம்
அடிச்சு துரத்தினார்களே
தவிர மற்றைய
தமிழ் கட்சிகளை போல அடக்கி
வைக்க விரும்பவில்லை.
(என்ன ஒன்று
கடைசியில்
விசர் ரொம்ப முற்றிப்போனதால்
வேரோடு அழிக்க வேண்டியதாய்
போச்சு) இப்படி மேல்மட்ட புலிப்பினாமிகளெல்லாம்
இலங்கை அரசிடம் விலை போய்
கொண்டிருக்க
இடைமட்ட புலிப்பினாமிகள்
இனிமேல் அடிமட்ட புலி நோயாளிகிடம்
இருந்து எதுவும் கறக்க முடியாது
என்றறிந்து
வங்கியில்
கொள்ளையன்
கொள்ளையடிக்க
தவறியதை தாங்களே சுருட்டிக்கொண்டு
அந்த கணக்கையும்
கொள்ளையன்
கணக்கோடு
காட்டிவிட்டு
கம்பி நீட்ட தொடங்கிவிட்டார்கள்.
இப்படி கொள்ளையடித்த
புலிப்பினாமிகள்
ஓகோ என்று
கொடிகட்டி
பறக்க அடிமட்ட புலி நோயாளிகள்
இந்த சான்ஸை
மிஸ் பண்ணிட்டோமே
என்று வயிறெறிந்து
வழக்கம் போல இதுகளெல்லாம்
'துரோகிகள்'
என்று முணுமுணுக்க
தொடங்கியிருக்குதுகள்.
இப்போதைக்கு
தமிழ்செல்வன்
குடும்பத்திற்கு ரொறன்ரோவின்
எஸ்.பி இம்போட்டர்ஸ்
கடைக்காரன்கள்
துரோகிகள்
போல போகப்போக
ரொறன்ரோவின்
பாபு கேற்றரிங்,
ஏசியன் ரெக்டைல்ஸ்
போன்ற வகையறாக்களுக்கு
துரோகிகள்
பட்டம் சூட்டப்போகிற
அந்த பட்டதாரிகளும்
விரைவில்
முளைப்பார்கள்.
இப்படித்தான்
கொலைவெறி
மன உளைச்சல்
வியாதியால்
பீடிக்கபட்ட
தலைவனின்
சொந்த நலனுக்காக
ஏற்படுத்தபட்ட
'துரோகிகள்'
பட்டம் காலத்துக்கு
காலம் வளர்ந்து, பெருத்து, சிறுத்து வேறுபட்டு
இன்று கடைகளுக்கு
கடை, வானொலிகளுக்கு
வானொலி, பத்திரிகைகளுக்கு
பத்திரிகை
தொண்டர்களுக்கு
தொண்டர்களாக
மலிந்து கிடக்கிறது.
ஒரு ஒட்டு
மொத்த இனத்தின் அழிவுக்கு
தலைமை தாங்கிய துரோகத்தனம்
இன்று புலம் பெயர்ந்த
நாடுகளில்
குத்துவெட்டுகளுக்கு
தலைமை தாங்கத்தொடங்கியுள்ளது
நாரதர் கலகம் போல்
இதுவும் விரைவில் நன்மையில்
முடிந்தால்
சரி.
(மோகன்) (ஆவணி
28, 2010) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |