Contact us at: sooddram@gmail.com

 

இது நிஜம் கலந்த கற்பனை

(மோகன்)

ரொம்ப நாளா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என்று மனம் தவியா தவிச்சிட்டே இருக்கிது. கூட்டமைப்பும், மகிந்தரும் ஏதோ பேசிக்கிறாங்கண்ணு நியூஸ் வருது. அப்படி என்னதான் பேசிக்கிறாங்க என்று யாருக்கும் தெரியல. எனக்கும் புரியல. ஐம்பது வருஷத்துக்கு மேலா இழுத்தடிச்சிட்டிருக்கிற நம்ம பிரச்சனைக்கு என்னதான் வேணுமெண்டு ஒரு ஐஞ்சு வரியில சொல்லிப்போடலாமே. இதோ பார் மகிந்தா! எங்களுக்கு இன்னென்ன தான் வேணும். இன்னென்ன வேணுமெண்டா நீயே வச்சுக்க. அதற்கு மகிந்தரும் இதோ பார் தம்பிகளா! என்னால உங்களுக்கு இன்னென்ன தான் தரமுடியும் அதைவிட்டிட்டு இன்னென்ன எல்லாம் கேட்கபடாது என்று சொன்னா போச்சு.

இப்படி சிம்பிளா முடியவேண்டிய மெற்றர இத்தனை சுற்றுக்கு ஏன் இழுத்தடிக்கிறோங்கோணுதான் ஒரு சின்ன டவுட். அதற்கு ஒரு பலமான காரணம் இருக்கு. அது ஒவ்வொரு சுற்று பேச்சு முடிஞ்சிட்டு வெளியில வரும் போது நம்ம கூட்டமைப்புகாரங்க ஒரு சுற்று பெருத்திட்டு வருறாங்களே. ஒருவேளை பேச்சுவார்த்தைக்கென்று போயிட்டு இன்னைக்கு சாப்பிட இன்னென்ன வேண்டும், இன்னென்ன குடிக்கவேண்டும் என்று மகிந்தரை வற்புறத்த மகிந்தரும் அதற்க்கு இன்னைக்கு இன்னென்ன தான் தரமுடியும் முடிஞ்சா அடுத்த சுற்றில பார்த்துக்கலாம் என்று கைய விரிச்சு போடுறாரோ. அதனாலதான் கூட்டமைப்புகாரங்க பேச்சுவார்த்தை முடிஞ்சு வெளியல வந்தா ஒரு சமயம் இன்னைய பேச்சு திருப்தியா இருந்தது. இன்னொரு சமயம் இன்னைக்கு அவ்வளவா திருப்தியா இல்லையென்று சொல்லுறாங்க.

ஆமா இப்படியே தின்னுட்டு போன இதுகளுக்கு கொலஸ்ரோல் கிலஸ்ரோல் வந்திடாதோ? இருக்கட்டுமே தமிழ் மக்களுக்கு நல்லதுதானே. அதுக்கோஷமெல்லாம் விடமுடியுமா? தமிழ் மக்கள் இவங்க ஏதாவது வாங்கி தருவாங்கன்னு நம்பி தானே ஓட்டு போட்டிருக்கிறாங்க, அதனால அங்க பேச்சுவார்த்தையில அப்படி என்னதான் தின்னுறாங்க மன்னிக்கணும் பேசுறாங்க என்று இவங்ககிட்ட மக்கள் சார்பாக கேட்கலாமென்று தோணிச்சு.

அதற்க்கான முயற்சியை ஆரம்பிச்சதிலிருந்து பேட்டியை தொடங்கினாதான் ரொம்ப சூடா இருக்கும், எப்படியோ சம்பந்தர் ஐயாவின் போன் நம்பரை கண்டுபிடிச்சு அவரை அழைச்சேன்.

ஹலோ! இது நான்

ஹலோ! யார் பேசுறது? இது அங்கே

சம்பந்தர் ஐயா இருக்கிறாரா?

நான் சம்பந்தன் தான் பேசுறது தம்பி யார் பேசுறது?

என் பேரை சொன்னா தெரிஞ்சுக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆளு கிடையாதையா, உங்க கிட்ட ஒரு பேட்டி எடுக்கோணுமென்டு ஆசைப்படுறன்.

என்ன தம்பி இது, பேரு ஊரு தெரியாதவங்களெல்லாம் என்னை பேட்டி எடுக்க ஆசைப்பட்டா நான் எப்படி ஒத்துக்கேவேன்னு நம்பினீங்க?

எல்லாம் ஒரு அற்ப ஆசைதான்,

சரி பேட்டி பத்திரிகைக்கா? T.V க்கா?

இல்ல சும்மாதான்.

தம்பி நல்லாத்தான் நக்கல் பண்ணுற.

இல்லை ஐயா உங்ககிட்ட சில கேள்விகளை கேட்காட்டா தூக்கமே வரமாட்டேங்கிது, கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஒத்துக்கோங்களேன்.

சரி இவ்வளவு கெஞ்சி கேட்கிற, முதல்ல நீ ரெண்டு விசயத்தை தெரிஞ்சுக்கோ ஒண்ணு நான் ரொம்ப நேரம் பேசினா மூச்சிரைக்கும் அதனால எங்கூட யாரையாவது அழைச்சிட்டு வருவன், மற்றது பேட்டி நல்ல சுடச்சுட இருக்கணும்.

சரி பேட்டியை எப்ப வைச்சுக்கலாம்?

எப்ப வேணுமானாலும் வைச்சுக்க, ஆன மத்தியான நேரமா பார்த்துக்க.

அப்பசரி நாளை மத்தியானமே வந்திடுங்களேன்

(எனக்கு மனசுக்குள் சின்ன குழப்பம், ஏன் இந்த ஆளு மத்தியானமா வரணுமென்டு ஆசைப்படுறார் ஒரு வேளை அப்பத்தான் ப்பிரியா இருப்பாராக்கும்)

பேட்டிக்கான நேரம் வந்தது, சம்பந்தர் ஐயாகூட, செம பாடி சீச்சி சகபாடி சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளே நுளையிறார்.

வணக்கம் ஐயா! வாங்க, சுரேஸ் சார் நீங்களும் வரணும்.

சம்பந்தர்;;: ஓ அது நீ தானா? பரவாயில்ல தம்பி நான் பொதுவா பி.பி.சிக்கு தவிர வேறு ஒருவருக்கும் பேட்டி கொடுக்கிறதில்ல, நீ எப்படியோ என்னை ஒத்துக்க வைச்சிட்டா.

நான்: நன்றி ஐயா! எப்படி இருக்கிறீங்க? சுரேஸ் சார் நீங்களும் தான்.

சம்பந்தர்: ம்.ம்.. ஏதோ இருக்கிறோம், என்ன நீ மட்டும் தனியா இருக்கிற வேற எதுவும் எடுத்திட்டு வரல்லையா?

நான்: அதுதானய்யா அன்னைக்கே சொல்லிப்போட்டேன் நான் T. V க்காரனோ, பத்திரிகைக்காரனோ இல்லையென்டு.

சுரேஸ்: அதில்லை தம்பி, இப்படி மேசை புருஷனை பறிகொடுத்த மூளியாட்டமா இருக்கறது பார்த்து ப்பீல் பண்ணுறார்.

சம்பந்தர்;: பேட்டியை மத்தியானமா பார்த்து வைக்க சொன்னா புரிஞ்சுக்க மாட்டயா?

நான்: ஓ அதுவா! இப்போ இதோ ஒரு பத்து நிமிஷத்தில அரேன்ஷ் பண்ணிடுறன்.

சம்பந்தர்: அதுவும் நல்லது தான், அப்பத்தான் சுடச்சுட இருக்கும்

(அட பாவி மனுசா! பேட்டி சுடச்சுட இருக்கோணும் என்டு அன்னைக்கு சொன்னது இதுதானா)

நான்: நீங்களும் மகிந்தாவும் கனவாட்டி பேசிட்டேங்கே, ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா?

(இருவரும் தங்கள் வண்டியை அதாவது தொந்தியை தடவி பார்க்கிறார்கள்)

சம்பந்தர்: கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறாப்போலத்தான் தெரியுது.

நான்: அப்போ கூடிய சீக்கிரம் தமிழ் மக்களுக்கு ஏதாவது வாங்கி தருவீங்கள் எண்டு சொல்லுங்கோ.

சுரேஸ்: ஆமா அவங்க தாறது எங்களுக்கே சரியா பத்த மாட்டேங்கிது, இதில சனத்துக்கு என்னத்த குடுக்கிறது?

நான்: சுரேஸ் சார் என்ன சொல்ல வாறார்?

(சம்பந்தர் சுரேஸ்சை முறைத்து பார்க்கிறார்)

சம்பந்தர்: அது ஒண்ணுமில்ல தம்பி, எங்களுக்கே தாற பொலிஸ் பாதுகாப்பு போதாதே, இதில தமிழ் மக்ககிட்ட எப்படி பொலிஸ் பாதுகாப்பை பொறுப்பை தரப்போறார் என்று சுரேஸ் ஆதங்க படுறார்.

நான்: பொலிஸ் போனாப்போகுது, காணியாவது கேட்டுப்பார்கலாமே.

சுரேஸ்: எனக்கெதுக்கு காணி? அதுதான் இந்தியாவில வாங்கி போட்டிருக்கிறேனே.

சம்பந்தர்: தம்பி சுரேஸ்! எதை சொல்லிறாதா இருந்தாலும் தம்பிக்கு புரியிற மாதிரி சொல்லணும், இல்லையன்னா தம்பி தப்பா நினைச்சிடுவார், அவர் என்ன சொல்ல வாறார் என்டா காணி அதிகாரத்தையாவது வாங்கி தரச்சொல்லி இந்தியாவிட்ட கெல்ப் கேட்டிருக்கிறாராம்.

நான:;; சரி நீங்க மகிந்தாவிடம் என்னவெல்லாம் கேட்டீங்க? அதில அவர் என்னவெல்லாம் தாறதாக சொல்லயிருக்கிறார்.

சம்பந்தர்: நாங்களா...நாங்க வந்து தனிநாடு என்ற பெயரை மட்டும் விட்டிட்டு மிச்சம் சகலதையும் கேட்டிருக்கிறோம். அதில அவர் எவ்வளவு தரப்போகிறாhர் என்பதை அடுத்தடுத்த சுற்றுக்களிலதான் தெரிஞ்சுக்க முடியும்.

நான்: அவர் காணி, பொலிஸ் விடயத்திலேயே இப்படி இழுத்தடிக்கிறார், நீங்க அதற்கு மேலாக எந்த தைரியதில கேட்டு வைச்சீங்க?

சம்பந்தர்: அவர் தரமாட்டார் என்பதற்க்காக நாங்கள் கேட்க்கிற உரிமையை விட்டு தரமுடியுமா? அப்புறம் எங்களை தங்கள் பிரதிநிதிகளாக காலாகாலமாக தேர்ந்தெடுக்கிற நம்ம சனங்களுக்கு என்னவெண்டு போய் சொல்வது.

நான்: நீங்க தான் சனங்ககிட்ட விளங்கபடுத்தோணும், இங்க பாருங்க சனங்களே! நாங்க அதிகமா ஆசைப்பட்டு கேட்கபடாது, அவன் தரவும்மாட்டான் இப்போதைக்கு அவன் தாறதை வாங்கிகொள்ளுவோம், அப்புறம் வேணுமான பார்த்துக்கொள்ளுவோம் எண்டு.

சம்பந்தர்: என்ன தம்பி விளையாடுறியா? அப்புறம் அவங்க எங்களை கையாலாகாதவங்களா நினைக்க மாட்டாங்க? நாங்க பேசின வீரவசனங்களை வெறும் வார்த்தை ஜாலங்களோ? என எண்ணிடமாட்டாங்க? சரி இதையெல்லாத்தையும் விட்டிடலாம், இன்னொரு தமிழ் கட்சி எங்களால பெற்றுத்தரமுடியாததை தாங்க வாங்கி தாறமெண்டு என்று சொல்லி ஓட்டுக்கேட்டால், அப்புறம் நம்ம கதி என்னாவது, அதனால அவங்க தரமாட்டாங்கள் என்று தெரிஞ்சாலும் தொடர்ந்து கேட்டுக்கொண்டுதானிருப்போம், அப்பத்தான் தொடர்ந்து எலக்ஷனில நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கலாம்.

நான்: இந்த அப்பாவி சனங்களை இப்படி ஏமாத்துவதற்கு கொஞ்சமும் வருத்தமில்லையா? 

சுரேஸ்: நம்ம சனங்களா... அவங்க தங்களை யாரு நல்லா ஏமாத்துறாங்களோ அவங்களை தான் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது வருஷமா ஏமாந்து வாற அவங்களே அதற்காக வருத்தப்படுவதில்லை, நாங்க ஏன் வருத்தப்படணும்?

நான்: கொஞ்சம் விபரம் தெரியாதவங்க தான் உங்களுக்கு ஓட்டு போட்டிருப்பாங்க என்பது எனக்கும் புரியுது, ஆனா அதற்காக அவங்களை ஏமாத்த நினைப்பது மனசாட்சியுள்ளவங்க செய்யமாட்டாங்க, சரி அந்த விசயத்தை இத்துடன் விடடிடுவோம், மகிந்தாவுடனான உங்களுடைய முதல் சுற்று பேச்சுவார்த்தைக்கும், கடைசி சுற்று பேச்சுவார்த்தைக்கும் இடையில் ஏதாவது இம்புறூமென்ற் உண்டா? அதைப்பற்றி சொல்லமுடியுமா?

சுரேஸ்: அதை எப்படி உடனே சொல்ல முடியும்? எங்களை நிறுத்து பார்த்துதான் சொல்லமுடியும்.

நான்: என்ன ஐய்யா! சுரேஸ் சார் எல்லா கேள்விகளுக்கும் ஏதோ உளறிட்டிருக்கிறார்.

சம்பந்தர்: பாவம் அவரால பசி கிடக்கமாட்டார், அதனாலாக்கும், நீ வேற ஐஞ்சு நிமிஷத்தில வரும் பத்து நிமிஷத்தில வரும் என்று சொன்ன, ஆனா இங்க எதுவும் வந்த பாடாக்காணல, ஆனா இந்த விசயத்தில மகிந்தர் பக்கா ஜென்ரில்மென், டாண் என்டு அந்த ரைமுக்கு சாப்பாடு வந்திடும், அந்த விசயத்தில நாங்க என்ன கேட்டாலும் மறுக்கமாட்டார் (மனசுக்குள் பசி மயக்கத்தில் ரொம்ப உளறிட்டோனோ என்று ப்பீல் பண்ணுகிறார்) ஒருவாரு சுதாரிச்சுக்கொண்டு தம்பி நீ என்ன கேட்டா, ஆமாமா...சுரேஸ் தம்பி ஏதோ நிறுத்து, பார்த்து என்று உளறினார் என்று சொல்ல வந்த, இதோ பார் தம்பி நாம கையாண்டிருக்கிற பிரச்னை ரொம்ப சிக்கலானது, அதுக்கெலலாம் எடுத்தேன் கவுட்டேன் என்றெல்லாம் பதில் சொல்லமுடியாது, நாம இதுவரை பேசினதையெல்லாம் நின்று, நிறுத்தி... பார்த்து தான் சொல்லமுடியும் என்பதைத்தான் சுரேஸ் தம்பி மனசில வைச்சு சொல்லியிருப்பார் ( அப்பாட ஏதோ சமாளிசிசிட்டேன் என்று நினைக்கிறேன், இவன் வேற இதை நம்பினான என்டு தெரியலயே, தெரியாத்தனமா இந்த சுரேஸ்சை கூட்டிட்டு வந்தது தப்பா போச்சு) 

நான்: ஐயா! தேசியத்தலைவரோட பழகின முக்கிய ஆட்களில நீங்களும் ஒருவர். ஒரு சாரார் சொல்லுகிறார்கள் தலைவர் இல்லையென்டு, இன்னொரு சாரார் சொல்லுகிறார்கள் தலைவர் இருக்கிறாரெண்டு, இதைப்பற்றி நீங்க என்ன சொல்லவருறீங்க.

சம்பந்தர்: அவர் உயிரோட இருக்கிறாரா, இல்லையா என்டு எப்போ அவரா வந்து சொல்லுகிறாரா அது வரைக்கும் காத்திருக்க வேண்டியது தான், இதை தவிர இப்போ இந்த விசயத்தில வேறு எதுவும் சொல்லமுடியாது. (அவன் இருக்கான இல்லையாண்டு தெரியாம நானே நிம்மதியா அரசியல் பண்ண முடியாம அந்தரிச்சுக்கொண்டிருக்கிறன் இவன் வாற வந்திட்டான் கேள்வி கேட்க)

நான்: நீங்க எங்கட மக்களின்ர பிரச்சனை மனசில வைச்சாவது, ஏனைய தமிழ் கட்சிகளோட ஒற்றுமையா இணைஞ்சு செய்படலாமே

சம்பந்தர்: உனக்கு விசயமே தெரியாது போல, அரசாங்கத்தோட ஒட்டியிருக்கிற தமிழ் கடசிகள் தவிர்ந்து, ஏனைய தமிழ் கட்சிகளெல்லாம் எங்களோட இணைந்துவிட்டன.

நான்: மாகாணசபையில் நல்ல அனுபவமுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் உங்களோடு இணைந்து கொள்ளவில்லையே? 

சுரேஸ்: தமிழ் மக்களுக்குள்ள இரண்டு வகைதான் இருக்கமுடியும், ஒண்டு புலிகளுடைய கொள்கையோடு ஒத்துப்போவவர்கள், மற்றவர்கள் அரசாங்கத்தின் கொள்கையோடு ஒத்துப்போவவர்கள் இதை இரண்டையும் விட்டிட்டு எங்க வழி தனி வழி எண்டு அடம்பிடிப்பவர்களோட நாங்கள் எப்படி ஒற்றுமைப்படமுடியும்.

நான்: புலிகளின் கொள்கையால் மக்களுக்கு எந்த நன்மையும் விளையாது, கண்மூடித்தனமாக அரசாங்கத்தை ஆதரிப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் எந்த நன்மை விளையாது என்று அவர்கள் நினைப்பது நியாயம் தானே.

சம்பந்தர்: தம்பி என்ன பெரிய நியாத்தை கண்டிட்டீர்? நான் ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டது சரியா போச்சு, நீ அவங்க ஆளாத்தான் இருப்பாய் என்று, இஷ்டத்துக்கு பேசிட்டே போறியே. ஏதோ ஈ.பி.ஆர்.எப் கட்சி மட்டும்தான் சனங்க மேல உண்மையான அக்கறை உள்ளது மாதிரியும், நாங்க ஏதோ பம்மாத்துக்கு சனங்க மேல அக்கறை படுற மாதிரி நடிக்கிற மாதிரியும் அல்லவா உன் நினைப்பு. இத்தோட பேட்டியை நிறுத்திக்கிறது தான் நல்லது.

நான்: ஐயா கோவிச்சிடாதீங்கோ, கடைசியா ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிடுங்க. போர்க்குற்றம் பற்றிய யு.என் அறிக்கைக்கு ஆதரவு தெரிவிச்சு ஒரு அறிக்கை விட்டனீங்கள், அந்த அறிக்கையில புலிகள் பற்றியும் போர்க்குற்றம் சுமத்தியிருக்கே, அப்போ அதையும் சேர்த்து கண்டிச்சிருக்கிறீங்களோ?

சம்பந்தர்: யு.என் அறிக்கைக்கு நம்பகத்தன்மை வருவதற்காக புலிகளை பற்றி ஒன்றிரண்டு குற்றங்கள் சுமத்தியிருக்கலாம் ஆனால் அதற்கெல்லாம் சரியான ஆதாரம் கிடையாது.

நான்: அப்போ புலிகள் மக்களை கேடயங்களாக வைத்திருக்கிறார்கள் என்று பல நாடுகள் சொன்னதெல்லாம் ஆதாரம் அற்ற ஒன்றா? அதை நீங்கள் மறுக்கிறிர்களா?  அப்படி நீங்கள் மறுக்காத பட்சத்தில் பல நாடுகள் அந்த மக்களை விட்டுவிடும்படி புலிகளை கேட்டபோது, நீங்கள் ஒரு வார்த்தை கூட புலிகளிடம் கேட்க்கவில்லையே அது ஏன்?

சம்பந்தர்: புலிகள் இப்படி கூண்டோ அழிந்து போவாங்கள் என்று நாங்கள் அன்று எதிர் பார்த்திருக்கவில்லை, தெரியாத்தனமா அவங்களை கண்டிட்டுவிட்ட  கடைசியில் ஏதாவது நாடு வந்து அவங்களை காப்பாற்றி போட்டாங்கள் என்றால் அப்புறம் எங்களை காப்பாத்துவது யாரு? அது தான் கடைசி வரைக்கும் காத்திருந்தோம்.

நான்: அப்போ உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவும், பதவியில் தொங்கி பிடிக்கவும் எத்தனை அப்பாவி மக்கள் செத்துப்போனாலும் கவலை இல்லையென்று இருந்திருக்கிறீர்கள்.

சம்பந்தர்: (கோபத்துடன்) தம்பி வயது வந்தவர்களிடம் பேசும் போது ஜாக்கிரதையா பேசணும், தலைவர் கூட என்னோட இவ்வளவு மரியாதை இல்லாமல் நடந்ததில்லை, நீ பெரிய இதுவாட்டம் பேசுற, எனக்கு வேணும் ஒரு நேர சோற்றுக்கு ஆசைப்பட்டு இப்படி கேவலப்படவேண்டியிருக்கு, முடிந்தால் உன் சாப்பாடையெல்லாம் நீயே கொட்டிக்க, அது சரி அது எங்க இங்க இருக்கு? நீ ஆசை காட்டி மோசம் பண்ணுறவனாச்சே, தம்பி சுரேஸ் எழுந்திடு போகலாம், பாவம் உன்னை வேறு பட்டினி போட்டு காய வைச்சிட்டன்.

(இருவரும் புறப்பட்டு செல்கிறார்கள்) 

நானும் கொஞ்சம் ஓவர் தான், மன்னித்து விடுங்கள்

(மோகன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com