Contact us at: sooddram@gmail.com

 

வேரில் விழுந்த விசம்

பிரிவினைவாதம், துவேசம், இனமுரண்பாடுகள், கலவரங்கள், போர் போன்றன இன்று நேற்று இலங்கையில் உருவானதல்ல. இவை ஆதியில் இருந்தே ஆணிவேரில் ஊற்ற ப்பட்ட நஞ்சுகள். இவற்றைச் சரியாக இனங்கண்டு செயற்பப்படாவிட்டால் இருவினமும் அழியும் என்பது திண்ணம். அன்று நடந்தவைதான் மீண்டும் மீண்டும் இன்றுவரை நடக்கிறது என்பதே இதற்கு ஆதாரம். பொதுவெதிரியான வெள்ளையர்களை வெளிறே ற்றுவதற்காக தமிழ் சிங்களம் இணைந்ததே தவிர உதிரத்தில் ஊறிய நஞ்சு இருந்து கொண்டேதான் இருந்தது. வடக்கு தெற்குப்பகுதிகளை இருசாராரும் மாறிமாறி ஆண்டு வந்தாலும் மதரீதியாக நம்பிக்கைகளும் முரண்பாடுகளும் ஆரம்பித்தில் இருந்தே வளர்ந்து வந்திருக்கிறது. இந்தியாவின் ஏற்பட்ட மதஇ அரசியல் மாற்றங்கள் இலங்கை யில் அன்றில் இருந்து இன்றுவரை பிரதிபலிப்பதை அவதானித்திருப்பீர்கள். தேவநம்பி தீசனின் மதமாற்றத்துக்குப்பின்னரே வடக்குத் தெற்கு என்ற பிரவும்இ பெருமுரண்பாடு களும் மிகவேகமாகவும் ஆளமாகவும் வேரூன்றியதை அவதானிக்க முடிகிறது.

எழு என்று இன்று மருவிய ஈழு என்ற முற்றுப்பெறா மொழியைப் பேசிவந்த ஒரேயின மக்களான இயக்கர் நாகரின் நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தன. ஈழுமொழி பேசியவர் கள் வாழ்ந்தநாடு என்பதாலே இலங்கை ஈழம் என்று அழைக்கப்பட்டது என்கிறர் கலாநிதியும் பேராசிரயருமான செங்கiயாளியான். தமிழர்களாகிய நாகர்கள் நாகங்களை வளிபட்டுவந்தமை சான்றுக்குரியது. புத்தர்பெருமான் ஐந்துதலை நாகங்க த்தின் கீழ் சயனத்திலும்இ நிஸ்டையிலும் இருப்பது நாகர்கள் பௌத்தமத்தைத் தழுவி யிருந்தார்கள் என்பதற்குச் நற்சான்றாகக் கூட அமையலாம். கடவுளை ஒரு மனிதனா கவோ தத்துவமாகவோ கருதாதஇ விஞ்ஞானமே எட்டிப்பார்க்காத காலத்தில் மனிதர்கள் இயற்கையுடன் ஒன்றியும்இ தமது சக்திக்கு மீறிய இயற்கையின் சக்திகளை கடவுளா கவும்இ தேவதைகளாகவும் கொண்டு வணங்கினர் என்பது ஆய்வு.

காதாநாயகத்துவம்

காமினி எனும் துட்டகைமுனுவை கதானாயனாக்க எழுத்தப்பட்ட மித்துக்கதையே மகாவம்சம் என்று தெரிந்தும் அதை சரித்திர மதவாதாரமாக காட்ட முயலும்போது அதையே வைத்து அவை தவறானவை என்று நிரூபிக்க வேண்டிய தேவையும் எமக்கு ஏற்படுகிறது. பாழிமொழியில் மகாநாம எனும் பல்லவதேரரால் எழுதப்பட்டு கிடக்கை யில் கிடந்த மகாவம்சத்தை ஆங்கிலேயரின் காலணித்துவ காலத்தில் தூசு தட்டி 1837ல் கியோர் துநோர் என்பவரால் ஆங்கிலத்தில் புத்துயிர் கொடுத்த பொல்லாமை நிகழ்ந்தது. துட்டகைமுனு கதாநாகனாகிறான் என்றால் அவன் மோதியவனும் அவனைவிட அதிபலசாலி என்பதே மறைமுகமான அர்த்தமாகிறது. வெல்லப்பட முடியாததை வெல்வதுதானே கதாநாயகத்துவம்.

மகாவம்சத்தில் பாரபட்சம்

44ஆண்டுகள் நல்லாட்சி புரிந்த எல்லாளனை 21செய்யுள்களுக்குள் அடக்கும் மகாநாம என்ற பல்லவப்பிக்குவால் எழுதப்பட்ட மகாவம்சம் 24வருடங்கள் மட்டம் அரசாண்டு துட்டகாமினியை 843 செய்யுள்களில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. இங்கேயே தெரிகிறது மாகாவம்சத்தின் நம்பத்தன்மையும் நடுநிலையும். ஆனால் துட்டகைமுனு வின் காலத்திலோ அன்றி மகாவம்சத்தின் காலத்திலோ சிங்களவர் என்றொரு இனம் இருந்ததாக எங்குமே அடையாளம் காணப்படவில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. துட்டகாமினி இயக்கன் என்தற்கான ஆராரங்களை எந்த ஆய்வாளர் களும் இன்னும் முன்வைக்கவில்லை. இவனுடைய அடி முத்துசிவன் (மூத்தசிவன்-ஊத்தைசிவன்)எனும் நாககுலத்திலிருந்தே ஆரம்பமாகிறது ஆதாரம் மகாவம்சம் இதன்படி பார்த்தால் இலங்கையில் நடந்த போர்களும், படுகொலைகளும் சகோதரப்படு கொலைகளே. இந்தமகாவம்சம் செய்த ஒரு கைங்கரியம் ஒரினமாக இருந்த ஈழமக்களை துண்டாடி, முரண்பாடுகளுக்கு உள்ளாக்கி, போர்களுக்குக் காரணமாகி கொடுங்கோண்மைக்கு வித்திட்டது. மகாநாம என்ற பல்லவ வந்தேறியின் புனைவு இலக்கியமாக உருப்பெற்றிருக்கிறது.

பௌத்தத்தினதும் சிங்ளப்பேரினவாத்தினதும் கைநூலான மகாவம்சம் பல அசிங்க மான வரலாற்றுப்பின்னணியைக் கொண்டது. சிங்கத்துக்கும் வங்கநாட்டு அரசிக்கும் பிறந்த பிள்ளைகளான சிங்கபாகு சிங்கவல்லி என்ற சகோதரங்கள் கலந்த 16பிள்ளைகளில் மூத்தவன் விஜயன் என்கிறது மகாவம்சம். அவன் குவேனியுடன் பிறந்தபிள்ளைகள் சிங்களவர்கள் என்றால் சிங்களப்பிறப்பு எப்படிப்பட்டது என்பதை எண்ணித்துணிக. சகோதரியில் இச்சைகொண்டு பிறந்த இந்தவம்சத்தினர் முள்ளிவாய்க் கால் இறுதிப்போரில் தமிழ்பெண் பிணங்களில் இச்சைகொண்டார்கள் என்பது பரம்பரை க்குணம் வம்சக்குணம் உதிரத்தில் ஊறியவிசம் என்றே கருதவேண்டியுள்ளது.

இந்தவேர்கள் எங்கிருந்து உருவாயின என்பதை பார்ப்போம். சரித்திரம்இ வரலாறு என்பது மிக மிக நீட்டது என்பதனால் தேவநம்பியதீசனில் தொடங்கி எல்லாளனுடன் நிறுத்துகிறேன்

இடப்பெயர்கள்:

உருகுணை- கதிர்காமத்தை அண்டிய தென்மாகாணப்பகுதி

கல்யாணி ஆறு -களனி ஆறு

உத்தரதேசம்- பூநகரியை அண்டிய வன்னிப்பகுதி

மேற்குறிப்பிட்ட பெயர்கள் அடிக்கடி கட்டுiரையில் இடம்பெறுகிறது என்பதால் முன்கூட்டியே அவற்றை இங்கே தருகிறேன்.

வடக்குத் தெற்கு பிரிவினை, தேவநம்பியதீசனின் பரம்பரை

மானைத்துரத்திக் கொண்டிருந்த மூத்துசிவனின் (சைவப்பெயர்) மகன் தேவநம்பியதீசன் (தீசன் என்பது ஈசன் என்றும் பொருள் கொள்ளும்) மகிந்த (காலபதியான அரசின் ஜனாதிபதியும் மகிந்தவே- இனமத அழிப்பின் ஆணிவேர்கள்) எனும் பௌத்தபிக்குவின் குரலால் "மானைத் தொடரும் மன்னரே மதியைத் தொடர்வீராக" தடுத்து நிறுத்தப்பட் டான். கொல்லாமையை முதன்மைப்படுத்தும் பௌத்தம் போதிக்கப்பட்டு அவன் பௌத்தனாக மாறினான். மன்னனைத் தொடர்ந்து மக்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டனர். பௌத்தர்கள் அனைவரும் சிங்ளவர்கள் அல்ல என்பதை சிங்களவர் களும் தமிழர்களும் அறிவது அவசியம். பெரிய பௌத்த மடாலங்களுக்கு தமிழர்கள் தலைமை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுண்ணாகத்திலுள்ள கந்ததேராடை என்ற பகுதியில் இருந்தே பௌத்தசங்கங்கள் மதம்பரப்பு வேலையைச் செய்தன. அன்றும் அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் சிங்களவர்கள் அல்ல. உலகின் கிழக்குநோக்கி பௌத்தப்பரம்பலான திராவிடப்பௌத்தத்தின் ஆணிவேராக இருந்தவர்கள் தமிழர்களும் பல்லவர்களும் என்பதை மறந்துவிடலாகாது. பௌத்தமத காலத்திலேதான் தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது என்பதை ஐம்பெரும்காப்பியங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. ஈழத்தின் வடக்குக் கிழக்கில் வளர்ந்த பௌத்தம் அதிககால் அங்கே நிலைகொள்ளவில்லை. காரணம் இந்தியால் ஏற்பட்ட இந்துமதத்தின் மீள்வளர்ச்சியும் வாத விவாதங்களின் தோல்வியும் பௌத்தத்தை இந்தியாவை விட்டு ஓட ஓட விரட்டின. இதற்கு சமயகுரவர்களின் பங்கும் அதிகம். இந்தமாற்றம் வடகிழக்குப் பகுதிகளில் பரவியிருந்தமையால் இந்து பௌத்த முரண்பாடு ஈழத்துக்கு இறக்கு மதியானது. இதுவே அடிப்படையில் வேரில் ஊற்றப்பட்ட நஞ்சாகும்.

தேவநம்பிய தீசனுக்குப்பின் நடந்த போர்கள் அனைத்தும் வடக்கு தெற்கு என்ற நிலையிலேயே இருந்தது. தேவநம்பிய தீசனின் தம்பியான மகாநாகன் தேவநம்பிய தீசனுக்குப்பின் பட்டத்துக்குரிய இளவரசனாவான். இதை விரும்பாத தேவநம்பியதீச னின் மனைவி தன்மகனே முடிக்குரியவனாக வேண்டும் எனவிரும்பினாள். அதனால் மகாநாகனுக்கு (மச்சான்-கணவனின் தம்பி) மாம்பழத்தினுள் நஞ்சுவைத்துக் கொல்ல நஞ்சூட்டிய மாங்கனியைக் கொடுத்தனுப்பினாள். அதை மகாநாகனின் மகன் உண்டு உயிரைவிட்ட தந்தையும் (மகாநாகன்) மனைவி, மக்களும் உருகுணைக்கு சென்று மகாகமம் (தோட்டத்தை நாம் கமம் என்ற சொல்லைக்கொண்டு இன்றும் பாவிக்கிறோம்) என்ற நகரத்தை நிறுவி உருகுணைக்கு அரசனானான். அவனின் மகன் ஜத்தலாயதீசனும் அவனின் மகன் கோதபாயனும் (மகிந்த அரசின் பாதுகாப்புச் செயலாளரின் பெயரும் இதுவே) உருகுணை மன்னர்கள் ஆயினர். இவன் கதிர்காமப்பகுதியில் அரசனார்களாக இருந்து 10சத்திரியமன்னர்களை பலத்தபோரின் பின் அழித்தே அரசனானான் என்கிறது தட்டுவம்சம்( கிஸ்ரி ஆவ் சிலோன் தலைப்பு 111 பக்கம் 146). கோத்தபாயனின் பேரனான மகாநாகன் அநுராதபுத்தில் இருந்து ஆதரவற்றுத் ஓடிவந்தபோது அபயமளித்து காத்த கதிர்காமப்பகுதியின் குறுநிலமன்னன் கமணியை பிள்ளைகளே இந்தப் 10சத்திரிய மன்னர்கள் என அறியமுடிகிறது. இதனுடைய படிமத்தை எமது அரசியலிலும் காணமுடிகிறதா? நம்பிக்கைத் துரோகம்இ நன்றியின்மை உண்டவீட்டுக்கு இரண்டகம் என்பனவற்றை தமிழ் அரசியல் உணர்ந்திருக்கிறது. சேர் பொன் இராமநாதன் சிங்களவர்களைத் மாசல்சட்டத்தில் இருந்தும், ஆங்கிலேய இராணுவத்திடமிருந்து காத்து விட்டார். அவரை தேரிலும் தோழிலும் தூக்கிவந்த சிங்களம் எம்மக்களுக்கு என்ன செய்தது. நாட்டை எடுத்தபின் பிரிப்போம் என்று வாக்குறுதியளித்த ஐ.தே.கட்சியில் தந்தை தன்வாக்குக்கு எதிராகவே செய்யற்பட்டார். பிரிவினைக்கு எதிராக நடேசன் மகாதேவ போன்றவர்களை வாங்கி சோல்பரித்திட்டத்தில் பிரினைக்கு மண்ணள்ளிப்போட்டனர். பின் என்ன நடந்தது என்பதை அறிவீர்கள். இதேபோன்று புலிகளின் ஆதரவுடன் வந்த மகிந்தவும் இன்றைய கோத்தபாயனும்; புலிகளை என்ன செய்தார்கள் என்பதையும் அறிவீர்கள். நம்பிக்கைத் துரோகம், செய்நன்றி மறத்தல் என்பன இது வேரில் விழுந்த விசங்களே.

இருப்பினும் தமிழ்சத்திரியர்களை அவர்களால் அடியோடு அழிக்க முடியவில்லை. இம்மன்னர்களின் மூத்தவனான தர்மராஜனின் மகன் மாகாதீசன் சத்திரிய மன்னன் ஒருவனின் மகளை அபி அனுரதியை மணந்ததாக பிராமிக்கல்வேட்டில் கண்டெடுக் கூறுகிறது. (மகாவம்சம் தலைப்பு111 பக்கம் 147) இந்த அடியோடு அழித்தல் என்பது முள்ளிவாய்க்காலை நினைவு படுத்துகிறது அதையும் இதையும் செய்தவர்கள் கோத்தபாயர்களே. வேரில் விழுந்த விசங்கள் இவர்கள்.

கோத்தபாயனின் மகன் காக்கவண்ணதீசன் ஈழராஜனான எல்லாளனின் ஆட்சியை ஏற்று திறைசெலுத்தி வாழ்ந்தான். இலங்கை முழுவதும் எல்லாளனின் ஆட்சி இருந்தற்கான சாட்சி இதுவே. இவன் திருமணம் குறுநிலமன்னனான கல்யாணி அதாவது இன்றைய களனியை ஆண்ட களனித்தீசனின் மகள் மகாதேவியையே.

களனித்தீசனின் மனைவிக்கும் அவன் தம்பி அய்யவுத்திகனுக்கும் உள்ள கள்ளதொடர்பு தெரியவர அவன் தலைமறைவாகி காதல் கடிதம் ஒன்றை பிக்குகள் மூலம் அனுப்பியபோது அது பிடிபடவே கடிதத்தைக் காவிவந்து பிக்குக்கள் இருவரின் தலைவெட்டுப்பட்டு கடலில் எறியப்பட்டது. செகுவேரா கலவரத்தில் தம்மினம் என்றும் பாராமல் சிங்கள இளைஞர்களை வெட்டி களனிகங்கையில் எறிந்தது நினைவுக்கு வருகிறது. புத்தபிச்சுக்களின் தலையை வெட்டி கடலில் எறிந்ததால் தான்; கடல்கொந்தளிப்பு கல்யாணிமேல் (களனிகங்கை) ஏற்படுகிறது என்ற மூடநம்பிக்கையில் தனது மகளான மகாதேவியை ஒரு வள்ளத்தில் ஏற்றி கடலில் விட்டான் களனிதீசன். அந்தவள்ளம் மகாகமத்தின் விகாரைகள் உள்ள கரையை அடைந்தது. அதனால் மகாதேவியாக இருந்தவள் விகாரமகாதேவி என்று அழைக்கப்பட்டாள். இவளை திருமணம் செய்தவன்தான் கோத்தபாணனின் மகன் காக்கவண்ணதீசன். இவளின் மசக்கை ஆசைதான் துட்டகைமுனுவை எல்லாளனுக்கெதிராக வளர்த்தது. அவளின் 3 மசக்கை ஆசையில் ஒன்றுதான் எல்லாளனின் முதன்மைத்தளபதியின் தலையை வெட்டிய வாளைக்கழுவிய தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்பது. இந்தக் கொலைவெறிகள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன என்பதை இனியாவது உங்களால் உணரமுடிகிறதா? இவளுக்குப்பிறந்த மூத்தவன்தான் கைமுனு எனும் காமினி. துர்நடத்தையின் காரணமாகவே துட்டகைமுனு என்று அழைக்கப்பட்டான். அவனுடைய தம்பி சதாதீசன். பிள்ளைகள் இருவரும் தாயினால் எல்லாளனுக்கெதிராக மனதில் நஞ்சூற்றியே வளர்க்கப்பட்டார்கள். குழந்தைகளான இவர்களின் ஆணிவேரில், மரபணுவில் தாயாரால் ஊற்றப்படுகிறது. (தொடரும் 2)

அடுத்த இதழில் முடிவடையும்

(நோர்வே திலீபன்)
18.4.2015​

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com