|
||||
|
சில்லரை
வர்த்தகத்தில்
அன்னிய நேரடி முதலீட்டிற்கான
அனுமதியின்
பின்னணியும்
எதிர்க்கட்சி
அரசியலுக்கு
அது பயன்படுத்தப்படும்
விதமும் -
பகுதி 1
(அ.
ஆனந்தன்)
சில்லரை வணிகத்தில்
அன்னிய நேரடி முதலீட்டை
51 சதவிகிதம்
முதல் 100 சதவிகிதம்
வரை அனுமதிக்கப்
போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதைத்
தொடர்ந்து
அனைத்துக்
கட்சிகளும்
ஒருங்குதிரண்டு
அம்முடிவுக்கு
எதிரான தங்களது எதிர்ப்புக்
குரலை விண்ணதிர முழக்கிக்
கொண்டுள்ளன.
நாடாளுமன்றம் இதை மையமாக வைத்து முடக்கப்பட்டுவிட்டது.
இதற்கான எதிர்ப்புக்
குரல் பல மாநில
அரசாங்கங்களிடமிருந்தும்
பெரிய அளவில் கிளம்பியது.
காங்கிரஸ் கூட்டணியில்
இப்போது வரை இடம்
பெற்றிருக்கும்
மம்தா பானர்ஜி கூட இதை
எதிர்த்தார்.
தமிழக முதல்வரும்
இதை அனுமதிக்கப்
போவதில்லை
என்று எவ்வகைத் தயக்கமுமின்றி
அறிவித்தார்.
பல இடங்களில்
சில்லரை வணிகர்கள்
இதற்கு எதிராகப் போராட்டம்
நடத்தினர். தமிழ்நாட்டில் ஒரு நாள் சில்லரை
வர்த்தகர்களின்
கடை அடைப்பும்
நடந்தது.
இத்தகைய எதிர்ப்புக்
கிளம்பியதைத்
தொடர்ந்து
தற்போதைக்குச்
சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீட்டை
அனுமதிப்பதென்ற
தனது முடிவை
இந்திய அரசு தற்காலிகமாக
நிறுத்தி
வைத்துள்ளது.
இவ்வாறு பல்வேறு
கட்சிகளும்
பல மாநில
அரசாங்கங்களும்
இதை எதிர்ப்பதற்குக்
காரணமாகக்
கூறுவது அன்னிய முதலீடு இந்த அளவிற்குச்
சில்லரை வர்த்தகத்தில்
வந்தால் உள்நாட்டு
வர்த்தகர்கள்
பெருமளவிற்குப்
பாதிக்கப்படுவர்;
அவர்களது
வியாபாரம்
படுத்துவிடும்
என்பதாகும்.
பலகாலமாகப் பேசப்பட்டு
வந்த இந்த
அனுமதி இப்போது மத்திய அரசால் திடீரென்று
அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சில்லரை
வர்த்தகம்
பாதிப்புக்கு
ஆளாகும் என்ற குரல்
ரிலெயன்ஸ்
போன்ற பெரு முதலாளித்துவ
நிறுவனங்கள்
அதில் இறங்கிய போதே எழுப்பப்பட்டது.
அந்த முழக்கத்தைக்
குறிப்பாக
இடதுசாரிக்
கட்சிகள்
பெருமளவு
எழுப்பின.
இருந்தாலும் இப்போது ரிலெயன்ஸ்
போன்ற நிறுவனங்கள்
சில்லரை வர்த்தகத்தில்
அடியெடுத்து
வைத்து ஆண்டுகள் பல உருண்டோடி
விட்டன. ரிலையன்ஸ் மட்டுமின்றி
ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் பாந்தலூன்
போன்ற நிறுவனங்களும்
தற்போது சில்லரை வர்த்தகத்தில்
நுழைந்துள்ளன.
இந்நிறுவனங்களின் 4000க்கும்
மேற்பட்ட
பெரிய கடைகள் நாடு முழுவதும்
தற்போது சில்லரை வர்த்தகத்தில்
ஈடுபட்டுக்
கொண்டுள்ளன. பெரிய
அளவிற்கு
அதனால் சில்லரை வர்த்தகம்
பாதிக்கப்பட்டதாக
அதற்குப்பின்
அதே இடதுசாரிக்
கட்சிகளிடமிருந்து
கூட அங்கலாய்ப்புகள்
எதுவும் வரவில்லை.
இந்நிலையில் இத்தருணத்தில்
சில்லரை வர்த்தகத்தில்
அன்னிய நேரடி முதலீடு
மத்திய அரசால் அனுமதிக்கப்படப்
போவதாக அறிவிப்பு
வந்துள்ளதன்
காரணம் என்ன? இத்தகைய எதிர்ப்பு
கட்சிகளால்
ஏன் ஏழுப்பப்படுகிறது?
இந்தக் கட்சிகள்
கூறுவது போல் அன்னிய
நேரடி முதலீடு வருவதால் உண்மையிலேயே
உள்நாட்டு
வர்த்தகம்
படுத்துவிடுமா?
என்பது போன்ற கேள்விகளுக்கு
விடைகாண வேண்டியது
நமது கடமையாகும்.
ரூபாய் மதிப்பின்
வீழ்ச்சி தற்போது இதற்கு முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருடனான
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. அதாவது ஒரு டாலர் 52 ரூபாய்க்குச்
சமம் என்ற
அளவிற்கு
அதன் மதிப்பு
குறைந்துள்ளது.
இவ்வாறு குறைந்துள்ளதற்குக்
காரணம் அமெரிக்காவில்
2008ல் தோன்றி
இன்று வரை குறையாது
நீடித்துக்
கொண்டிருக்கும்
முதலாளித்துவப்
பங்குச்சந்தை
நெருக்கடியாகும்.
இதனால் அமெரிக்க
நிறுவனங்களின்
பங்குகளின்
விலைகள் தொடர்ச்சியாகச்
சரிந்து கொண்டேயுள்ளன.இந்நிலையில்
அமெரிக்கப்
பங்குகளை
மிகக் குறைந்த விலைக்கு வாங்கும் வாய்ப்பு முதலீட்டாளர்களுக்குத்
தோன்றியுள்ளது.
அவ்வாறு முதலீடு
செய்வதற்காக
இந்தியப்
பங்குச் சந்தையில்
ஏற்கனவே முதலீட்டாளர்கள்
செய்து வைத்திருந்த
கோடிக்கணக்கான
டாலர் முதலீடுகளை
அவர்கள் இங்குள்ள பங்குகளை விற்று அமெரிக்காவிற்கு
எடுத்துச்
சென்று கொண்டுள்ளனர்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |