|
||||
|
இலங்கைத் தமிழர்
பிரச்னை - ஓர் ஆய்வு
(பகுதி
15)
(அ.ஆனந்தன்) சிங்களர்-தமிழர் இருவராலும்
ஆக்கிரமிப்பு
படை என்று
பார்க்கப்பட்ட
இந்திய அமைதிப்படை
இதே சமயத்தில்
இப்படிப்பட்ட
ஒரு நிர்ப்பந்த
நிலையை உருவாக்கி
தனது மேலாதிக்கப்
போக்கை நிலைநாட்டும்
ஒரு ஒப்பந்தத்தை
இலங்கையை
தன்னுடன்
செய்து கொள்ள செய்ததற்கு
சிங்கள மக்களிடையே
மட்டுமல்ல
சிங்கள ஆட்சியாளரான
பிரேமதாசாவிடமும்
கடும் வெறுப்பும்
எதிர்ப்பும்
ஏற்பட்டன.
அச்சமயத்தில் பிரமதாசா
இந்திய அமைதிப்படையை
எதிர்த்து
போரிட விடுதலைப்புலிகளுக்கு
உதவி செய்தார்.
இந்திய அமைதிப்படை
தமிழர்-சிங்களர்
என்ற பாகுபாடு
இன்றி ஒட்டுமொத்த
இலங்கை மக்கள் அனைவராலும்
ஒரு ஆக்கிரமிப்பு
படை என்றே
பார்க்கப்பட்டது. வழக்கமாக அனைத்து
முதலாளித்துவ
அரசுகளும்
பராமரிக்கும்
இராணுவங்கள்
எத்தகைய மனநிலையோடு
செயல்படுமோ
அத்தகைய மனநிலையுடனேயே
இந்திய இராணுவமும்
இலங்கையில்
செயல்பட்டது.
ஒருபுறம் அதன் செயல்பாடு
குறித்து
பல புகார்கள்
எழுந்தன.
மறுபுறம் அதற்கு
தலைமை ஏற்ற இந்திய
இராணுவ தளபதிகள் ஒரு கையையும்
காலையும்
கட்டிக்கொண்டு
சண்டையிடுவது
போன்ற ஒரு சண்டையில்
தாங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளோம்
என்று கூறினர். அதாவது பொது மக்களுக்கு
தீங்கெதுவும்
இழைக்க கூடாது என்று பொதுவாக
இந்திய அமைதிப்படையினருக்கு
கொடுக்கப்பட்டிருந்த
அறிவுரை குறித்தே அவர் அவ்வாறு
கூறினார்.
இந்த நிலையில்
இந்திய அமைதிப் படை அங்கு
எதற்காக அனுப்பப்பட்டதோ
அந்த நோக்கத்தை
அதனால் நிறைவேற்ற
முடியவில்லை.
இங்கு தமிழ்நாட்டில்
விடுதலைப்
புலிகளுக்கு
ஆதரவாக உண்மையிலேயே
செயல்பட்ட
அமைப்புகளும்
அதனை தங்களது
தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக
ஆதரித்தவர்களும்
பல்வேறு பக்குவமற்ற
கோரிக்கைகளை
இந்த விசயத்தில்
முன் வைத்து
வந்தனர். அவர்கள் பலரின் கோரிக்கை இந்தியா-இலங்கைப்
பிரச்னையில்
தலையிட்டு
தீர்வுகாண
வேண்டும்
என்பதில்
தொடங்கி தமிழீழத்தை
அமைத்துக்
கொடுப்பதற்காக
இந்தியா தனது இராணுவத்தையே
அனுப்ப வேண்டும் என்பது வரை சென்றது.
ஆனால் இந்தியா
மட்டுமல்ல
எந்தவொரு
முதலாளித்துவ
நாடும் அது பிறநாடுகளுடன்
கொண்டுள்ள
உறவுகளை ஒரு குறிப்பிட்ட
எண்ணத்தை
மனதிற்கொண்டே
பேணவும் பராமரிக்கவும்
செய்யும்.
அது தன்னாட்டு
முதலாளிகளின்
பொருட்கள்
விற்பனையாவது
மற்றும் அதன் மூலதனம்
அங்கு முதலீடு செய்யப்படுவது
என்ற நோக்கினைக்
கொண்டதாகவே
அடிப்படையில்
இருக்கும்.
இந்த அடிப்படை
புரியாததாலோ
அல்லது புரிந்திருந்தும்
அரசியல் ஆதாயம் கருதி வெளிப்படுத்தாமலோ
தமிழகத்தில்
செயல்பட்ட
அனைத்து தமிழ் ஈழ
ஆதரவு அமைப்புகளும்
இந்தியாவில்
முகாம்கள்
அமைத்து செயல்பட தமிழ் ஈழ
அமைப்புகளுக்கு
இந்திய அரசு அனுமதி
கொடுத்தபோது
அகமகிழ்ந்தன.
அடுத்து இந்திய
இராணுவத்தை
இலங்கைக்கு
அனுப்ப வேண்டும் என்று கோரின.
இந்திய
- இலங்கை ஒப்பந்தத்தின்படி
இந்திய இராணுவம் இலங்கைக்கு
அனுப்பப்பட்டது. ஆனால்
அது சிங்கள
இராணுவத்துடன்
போரிட்டு
தமிழ் ஈழத்தை அமைத்துக்
கொடுப்பதற்காக
அனுப்பப்படவில்லை.
மாறாக அது அங்கு செயல்பட்ட
தமிழீழ ஆயுதம் தாங்கிய குழுக்களிடம்
இருந்து ஆயுதங்களை
பறிக்கவே
அனுப்பப்பட்டது.
இந்த நிலையில்
முதலில் சிலகாலம் வாயடைத்துப்போயிருந்த
தமிழக மக்களிடம்
சிறிது காலம் கழித்து
ஐ.பி.கே.எப்‡ற்கு
எதிரான ஒருவகை எதிர்ப்பும்
தலைதூக்கத்
தொடங்கியது.
இந்நிலையில்
அப்போது ஆட்சியில்
இருந்த தமிழக முதல்வரின்
வேண்டுகோளுக்கு
இணங்க இந்திய அமைதிப்படை
தனது நோக்கத்தை
நிறைவேற்றாமல்
நாடு திரும்ப
வேண்டிய நிலை அதற்கு
ஏற்பட்டது.
இந்திய-இலங்கை ஒப்பந்தமும்
நிறைவேற்றப்படவில்லை.
சூழ்நிலை இத்தனை
நெருக்கடி
சூழ்ந்ததாக
ஆன நிலையில்
விடுதலைப்புலிகளைத்
தவிர தமிழ்
ஈழத்திற்கான
போராட்டக்களத்தில்
யாரும் இல்லை என்றநிலை
படிப்படியாக
விடுதலைப்புலிகளால்
ஏற்படுத்தப்பட்டது.
தமிழ் விடுதலை முன்னணியும்
இலங்கை ஆட்சியாளர்களை
சார்ந்து
நின்று அவர்களில்
ஒரு பிரிவினர்
மாற்றி மற்றொரு பிரிவினரை
மாறிமாறி
ஆதரித்து
சில சலுகைகளை
கூடுதலாகப்
பெறுவதில்
ஆர்வமுள்ளதாக
இருந்ததேயன்றி
அதனால் சரியான தருணங்களைக்கூட
பயன்படுத்த
முடியவில்லை.
தருணங்களைத் தவறவிட்ட
விடுதலை
முன்னணி
இலங்கையின் ஆளும்கட்சி
தவிர பிற
அனைத்து எதிர்க்கட்சிகளும்
ஒரு தேர்தலை
பகிஷ்கரித்த
சமயத்தில்
தமிழர் விடுதலை முன்னணி மட்டும் அத் தேர்தலில்
பங்கேற்றது. அத்தேர்தலில் கிழக்குப்
பகுதியில்
வாழ்ந்த சிங்கள மக்கள் அங்கு போட்டியிட்ட
தமிழ் வேட்பாளர்களுக்கு
ஏகோபித்து
வாக்களித்தனர்.
அது மட்டுமின்றி
மாகாண சுயாட்சி பெறும் விதத்தில்
சிரிமாவோ
பண்டாரநாயகா
கொண்டுவந்த
வடக்குப்
பகுதியையும்
கிழக்குப்
பகுதியையும்
ஒருங்கிணைக்கும்
திட்டத்திற்கு
ஆதரவாக அது அணிதிரண்டிருக்கலாம்.
அதன் மூலம் சாதாரண சிங்கள மக்கள் மற்றும் அதன் ஒரு
பெரும் அரசியல் கட்சி ஆகியவற்றுடன்
இணைந்து தங்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுத்திருக்கலாம்.
அப்போது அதை செய்ய டி.யு.எல்.எப்.
தலைவர்கள் தவறிவிட்டார்கள்.
விடுதலைப்
புலிகளின்
தலைமை நிலைநாட்டப்பட்டதற்கு
பின்பு அதன் பிரமிக்கத்தகுந்த
வெற்றிகளால்
பரவசம் அடைந்த தமிழ் மக்களும்
இந்த தமிழர்
விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளைக்
கண்டுகொள்ளவில்லை.
(தொடரும்......)
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |