|
||||
|
இலங்கைத் தமிழர்
பிரச்னை - ஓர் ஆய்வு
(பகுதி
4)
(அ.ஆனந்தன்)
இந்திய
அனுபவம் இலங்கையைப் போன்றே இந்தியாவும்
பல தேசிய
இனங்களை கொண்ட நாடு. ஏறக்குறைய மிகப் பெரும்பாலான
அம்சங்களில்
இரண்டு நாடுகளின்
சூழ்நிலையும்
ஒன்றே. அப்படியிருக்கையில் இங்கும்
இலங்கையைப்
போன்றே ஏகாதிபத்திய
ஆட்சியை நிலைநிறுத்த
பிரிட்டிஷ்
அரசு அதன்
மிகவும் மேலான இராணுவ
வலிமையைப்
பயன்படுத்தியது.
இருந்தாலும் பல சமஸ்தானங்களை
தன்னுடைய
நேரடி ஆட்சி அதிகாரத்திற்குள்
அது கொண்டுவரவில்லை.
எடுத்துக்காட்டாக திருவாங்கூர்
சமஸ்தானம்,
ஹைதராபாத்
நிஜாமின்
சமஸ்தானம்
போன்றவை பிரிட்டிஷ்
ஏகாதிபத்திய
ஆட்சியின்
நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்படவேயில்லை.
நிர்வாக வசதிக்காக
ஏகாதிபத்தியங்கள்
ஒரு பூகோள
பகுதிக்குள்
இருக்கும்
அனைத்து பிரிவினரையும்
கட்டாயப்படுத்தி
ஒன்று சேர்ப்பார்கள்
என்றால் இந்தியாவில்
பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியம்
அதை ஏன்
செய்யவில்லை?
சமஸ்தான மக்களின்
விடுதலை
வேட்கை
அத்துடன் விடுதலை
போராட்ட காலத்திலேயே
பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தை
எதிர்த்து
இந்திய தேசிய காங்கிரஸின்
தலைமையில்
நடைபெற்ற
விடுதலைப்
போராட்டத்தை
அந்த பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தின்
நேரடி ஆட்சியில்
இல்லாத சமஸ்தானங்களில்
இருந்த மக்களும் ஆதரித்தனர்.
அங்கும் காங்கிரஸ்
கட்சியின்
அமைப்புகள்
ஏற்படுத்தப்பட்டன.
ஏகாதிபத்தியத்தின்
வற்புறுத்தல்தான்
தேசிய இனங்களின்
இணைப்பிற்கு
காரணம் என்றால் சமஸ்தானங்களின்
சாதாரண மக்கள் பிரிட்டிஷ்
இந்தியாவில்
நடைபெற்ற
விடுதலைப்
போராட்டத்தை
ஆதரித்து
மானசீகமாக
அதில் ஈடுபட்டது
எவ்வாறு?
லாப - நஷ்டக்
கணக்கே தீர்மானித்தது உண்மையில் ஏகாதிபத்தியங்கள்
என்பது, வளர்ச்சியடைந்த
முதலாளித்துவங்களே. அந்த
அடிப்படையில்
ஒரு பகுதியை
ஒருங்கிணைத்தால்
நமக்கு லாபமா அல்லது
ஒருங்கிணைக்காவிட்டால்
லாபமா என்பது போன்ற கேள்விகளே
பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தின்
எப்பகுதிகளை
ஒருங்கிணைப்பது
எதனை ஒருங்கிணைக்காமல்
விடுவது என்பதைத் தீர்மானித்ததேயன்றி
வேறு கட்டாயங்கள்
அல்ல. எனவே
தான் பல
பகுதிகளை
இணைத்த அவர்கள் சில பகுதிகளை
வற்புறுத்தி
இணைக்கவுமில்லை.
இலங்கைத் தமிழர்
பிரச்னைக்கு
இனவாதமே காரணம் என்போர் தங்களின் சித்தாந்த
வலிமையை காட்டுவதற்காக
தேசம் குறித்த ஸ்டாலினின்
மிகச்சரியான
கண்ணோட்டமான
ஒரு தேசத்தின்
நான்கு முக்கிய கூறுகளான, பொதுவான மொழி, பொதுவான
பண்பாடு, ஒற்றைப் பொருளாதார
அமைப்பு, ஒரு வரலாற்று
ரீதியான எல்லைப்பரப்பு
ஆகியவற்றை
முன்வைக்கின்றன.
தேசிய வாதத்தின்
ஊற்றுக்கண்
தேசியச்
சந்தையே ஆனால் அவர்கள் இவை எல்லாவற்றிற்கும்
மேலாக இந்த தேசம்
என்ற கண்ணோட்டம்
தோன்றுவதற்கே
ஊற்றுக்கண்ணாக
இருக்கக்கூடிய
வேறொரு விசயத்தை முன்வைக்கவில்லை.
அதாவது ஆங்காங்கே
வட்டார அளவுகளில்
நிலவிய பகுதி அளவிலான
சந்தை, ஒரு மொழி
பேசும் பகுதி முழுவதுடனோ
அல்லது அதையும் தாண்டியோ பரவுவதும்
தேசிய இனக்கண்ணோட்டம்
உருவாவதற்கு
மிகமுக்கியக்
காரணம் என்பதை முன்வைக்கவில்லை
அல்லது மூடிமறைக்கிறார்கள்.
உண்மையில் தேசிய வாதம் என்ற
பாடத்தை முதலாளித்துவத்திற்கு
கற்றுக்கொடுத்த
பள்ளியே ஒன்றிணைந்த
தேசிய சந்தைதான்.
இதை இலாவகமாக
இவர்கள் கூறத் தவறுகிறார்கள்
அல்லது மூடிமறைக்கிறார்கள்.
இலங்கையிலும் சரி,
இந்தியாவிலும்
சரி இப்பகுதிகளைக்
கைப்பற்றி
ஆண்ட பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியம்
ஒரு முன்னேறிய
பொருள் உற்பத்தி முறையை அதாவது முதலாளித்துவப்
பொருளுற்பத்தி
முறையை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக
தமிழ்ப் பகுதியும்,
சிங்களப்
பகுதியும்
ஒரு ஒன்றுபட்ட
சந்தையாகப்
படிப்படியாக
மாறியது.
இதன் விளைவாக
சிங்களப்
பகுதிகளில்
தமிழ் வியாபாரிகளும்,
தமிழர் பகுதிகளில்
சிங்கள வியாபாரிகளும்
வியாபாரங்களில்
ஈடுபட முடிந்தது.
பிரிட்டிஷ் அரசின் நிர்வாகமும்
இதுபோல் தமிழர் பகுதி சிங்களர்
பகுதி என்ற பாரபட்சமில்லாது
ஒன்றிணைந்த
இலங்கை முழுவதிலும்
தமிழ், சிங்கள ஊழியர்களைப்
பணியமர்த்தியது. பெரிய
அளவில் இலங்கையைப்
பொருத்தவரை
பெரும் தொழிற்சாலைகள்
இந்தியாவைப்
போல் வளர
வாய்ப்பிருக்கவில்லை
என்றாலும்
தொழிற்சாலைகள்
வளர்ந்த அளவிற்கு அவற்றிலும்
சிங்கள மக்களும், தமிழ் மக்களும்
ஓரளவு ஒருங்கிணைந்து
வேலை செய்யும்
சூழல் உருவானது. இதன் விளைவாக
முதலீடுகள்,
வேலைத் திறன் இவற்றிற்கான
சந்தை இலங்கை முழுவதும்
ஒன்றாக மாறியது.
அச்சந்தை வாய்ப்பும்
மக்களுக்கிடையே
நாம் அனைவரும்
ஒரு நாட்டைச்
சேர்ந்தவர்கள்
என்ற எண்ணத்தை
உணர்வு பூர்வமாகவும்
ஏற்படுத்தியிருந்தது. எனவே
இலங்கைத்
தமிழர் பிரச்னை ஆரம்பம் முதற்கொண்டு
தேசிய இனப்பிரச்னையே
என்ற கருத்தை
இங்கு முன்வைப்பவர்கள்
கூற வருவது
போல் சிங்கள,
தமிழ் இனமக்கள் எப்போதுமே
எண்ணெய்யும்,
தண்ணீருமாகவே
இருந்தார்கள்
என்பது உண்மையல்ல.
(தொடரும்......)
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |