|
||||
|
இலங்கைத் தமிழர்
பிரச்னை - ஓர் ஆய்வு
(பகுதி
7)
(அ.ஆனந்தன்)
தனிநாடல்ல - தனிமாநிலம்
கூட
கோரப்படவில்லை தமிழர்கள் சிங்களப் பகுதிகள் பலவற்றில்
வேலைகளிலும்,
தொழில்களிலும்
இருந்ததால்
விடுதலை பெற்ற வேளையில்
தமிழர்களின்
தலைவர்கள்
தனி நாடல்ல,
தனி மாநிலம்
கூட கோரவில்லை.
மத்தியத்துவப் படுத்தப்பட்டதாக
இருந்த இலங்கையின்
ஆட்சியமைப்பில்
குடிமக்கள்
அனைவருக்குமான
வாக்குரிமை
இருக்கக்கூடாது;
ஏனெனில் அது காடையர்கள்
ஆட்சி அமைவதிலேயே
சென்று முடியும்; படித்தவர்களுக்கு
மட்டும் வாக்குரிமை
இருக்கவேண்டும்
என்பதே தமிழர்களின்
தலைவர் பொன்னம்பலம்
ராமநாதன்
போன்றவர்கள்
விடுதலை பெற்ற காலத்தில்
முன் வைத்த
வாதமாக இருந்தது.
படித்தவர்களுக்கு மட்டும்
வாக்குரிமை
என்றால் தமிழர்களில்
மிகப் பெரும்பாலோர்
வாக்குரிமை
பெற்றவர்களாக
ஆகி சிங்கள
மக்களுடன்
வாக்குரிமை
விகிதத்திலும்
ஏறக்குறைய
சம நிலைக்கு
வந்துவிடுவர்
என்பதே அவரது எண்ணம்.
எனவே அனைவருக்கும்
வாக்குரிமை
என்பதை எதிர்த்த அவர் மத்தியத்துவப்
படுத்தப்பட்டதாக
இருந்த இலங்கை அரசமைப்பை
எதிர்க்கவில்லை.
தமிழர் வாழும்
பகுதிகளை
ஒன்றிணைத்து
ஒரேமாகாணமாக
ஆக்கவோ கூட்டாட்சி
முறை வேண்டுமென்றோ
அவர்கள் அக்காலத்தில்
கோரவில்லை.
அடுத்து இலங்கைக்குக்
கிட்டிய அரசியல் விடுதலை பல எதிர்பார்ப்புகளை
அந்நாட்டின்
தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே
விடுதலைப்
பெற்ற வேளையில் உருவாக்கியிருந்தது.
ஆனால் விடுதலைக்குப்பின்
கட்டியமைக்கப்பட்ட
முதலாளித்துவ
பொருள் உற்பத்தி முறை வெகு
விரைவிலேயே
சந்தை நெருக்கடியையும்,
அதன் விளைவான
வேலையின்மைப்
பிரச்னையையும்
எதிர்நோக்க
நேர்ந்தது.
அதிலிருந்து
தப்பிக்க
இருந்த ஒரே வழியான
புது வேலைவாய்ப்புகளை
உருவாக்க
திராணியற்றதாக
நெருக்கடி
சூழ்ந்த நிலையில் இருந்த இலங்கை முதலாளி வர்க்கம் இருந்தது.
அதன் அரசு
இயந்திரத்தை
இயக்கிய ஆட்சியாளர்கள்
பிரச்னையைத்
திசை திருப்புவதற்காக
ஏற்கனவே இருபெரும்
தேசிய இனங்களைக்
கொண்டதாக
இருந்த அந்நாட்டில்
அவ்வப்போது
தோன்றும்
இன வேறுபாட்டுப்
போக்குகளைப்
பயன்படுத்தி
இந்த இனப்பிரச்னையை
முன்நிறுத்தி
அதனை வளர்த்து
விட்டனர்.
அதற்கு எது எதை எல்லாம்
பயன்படுத்த
முடியுமோ
அதை எல்லாம்
பயன்படுத்தினர்.
கல்வி வாய்ப்புப்
பெற்ற தமிழ்
மக்கள்
கல்வியிலும், அரசு
அலுவல்களிலும்
பொருளாதாரா
ரீதியாகவும்
தமிழர்கள்
ஓரளவு சிங்களர்களைக்
காட்டிலும்
மேம்பட்டு
இருந்தது
இவ்விசயத்தில்
ஆட்சியாளர்களால்
திறமையாகப்
பயன்படுத்தப்பட்டது.
இலங்கையில்
தமிழர்கள்
வாழும் பகுதி, சிங்களர்கள்
வாழும் பகுதியைப்
போல அத்தனை
இயற்கை வளம்மிக்கதல்ல.
அதனாலேயே
அவர்கள் தங்கள் வாழ்க்கையை
நடத்தப் பல வகைகளில்
போராட வேண்டியிருந்தது.
கல்வி பெற்று
எப்படியாவது
அரசு அலுவல்களைப்
பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம்
அவர்களுக்கு
இருந்தது.
அமெரிக்க மெத்தாடிஸ்ட்
சர்ச் சார்ந்த நிறுவனங்கள்
தமிழ் தெரிந்த அமெரிக்கர்களைக்
கொண்டு தரமான ஆங்கிலக்
கல்வியை தமிழர்கள்
வாழும் யாழ்ப்பாணப்பகுதியில்
வழங்கியதால்
அதனை கற்று
பிரிட்டிஷ்
நிர்வாகத்தில்
பல அலுவல்களில்
19ம் நூற்றாண்டில்
கடைசிப் பகுதி முதற்கொண்டே
தமிழர்கள்
பணியமர்ந்துவிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்ற தமிழர்களுக்கு
இந்தியாவிலும்
மலேசியாவிலும்
கூட தரமான
வேலைகள் கிட்டின.
ஆனால் சிங்களர் வாழ்ந்த பகுதிகள் நீர்ப்பாசன
வசதி மிக்கவையாய்
இருந்ததால்
விவசாயத்தைச்
சார்ந்தே
அவர்களால்
வாழமுடியும்
என்ற நிலை
இருந்தது. 1929-1931களில்
உலகையும்
இலங்கையையும்
குலுக்கிய
பொருளாதார
நெருக்கடி
நேர்ந்த சமயத்தில்தான்
அதுவரை தங்களது வளமான பகுதியில்
விவசாய வேலைகளில்
மட்டும் ஆர்வம் காட்டிவந்த
சிங்களர்கள்
அரசு வேலைகளை
ஏறெடுத்துப்
பார்க்கத்
தொடங்கினர்.
ஆனால் அப்போதே
அரசுப் பணிகளில் பெரும்பாலும்
தமிழர்கள்
பணியமர்ந்துவிட்டனர்.
ஏகாதிபத்திய முதலாளித்துவ
அரசுகள் பொதுவாகவே
தொழில் துறை முதலாளிகளின்
நலனையே பெரிதும் பேணுபவை. ஏனெனில் தொழிற்சாலைகளுக்கு
இடுபொருட்களாக
விவசாய விளைபொருட்கள்
இருப்பதால்
அவற்றின்
விலை ஏற்றத்தை
பெரும்பாலும்
முதலாளி வர்க்கம் அனுமதிப்பதில்லை.
இதனால் தொழிற்சாலை
யுகத்தில்
விவசாயப்
பொருளாதாரம்
கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்தே
வந்தது. மேலும் அடுத்தடுத்த
தலைமுறைகள்
வருகையில்
நிலப்பகிர்வும்
ஏற்படுவதால்
விவசாயத்தை
நம்பியே இருக்கமுடியாது
என்ற சூழ்நிலை
நடுத்தர, மேல்மட்ட சிங்கள விவசாய உடைமை வர்க்கங்களுக்கு
ஏற்பட்டது.
(தொடரும்......)
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |