|
||||
|
புளொட்டிலிருந்து தீப்பொறி
வரையான எனது அனுபவப்
பகிர்வுகள்
(பாகம் 1)
(நேசன்) குறுந் தமிழ் தேசியப்
போராட்டம்
தோல்வி பெற்றுள்ள
நிலையில்,
அதற்கான காரணம் என்ன என்பதை
வரலாற்றிலிருந்து
தெரிந்து
கொள்வது அவசியம். நேசனின் கடந்தகால
அனுபவம், எதிர்மறையான
புதைந்துபோன
உண்மைகளையும்,
படிப்பினைகளையும்
கொண்டதாக
இன்றைய வரலாற்றுச்
சூழலுடன்
வெளிவருவது
வரலாற்றுக்கு
அவசியமானதாக
உள்ளது. இந்தப் போராட்டம்
தன்னைத்தானே
தோல்விக்கு
இழுத்துச்
சென்று தனக்குத்தானே
புதைகுழி
தோண்டி தானே தன்னைப்
புதைகுழியில்
புதைக்க முன், தான்
தவிர்ந்த
மற்றைய எதனையும் முதலில் அழித்துப்
புதைத்தது. இதில் தப்பிப் பிழைத்தவர்களில்
நேசனும் ஒருவர். முதலில் ஈழ மாணவர்
பொது மன்றம்
என்ற (GUESS) அமைப்பிலும்,
பின்னர் புளொட் அமைப்பிலும்
இணைந்து செயல்பட்டவர்.
இறுதியில் புளொட்டிலிருந்து
பிரிந்து
சென்ற தீப்பொறியிலும்
அதன் மத்திய
குழுவிலும்
செயல்பட்டவர்.
இந்த வகையில்
அவர் தமிழ்
தேசியப் போராட்டத்தில்
இணைந்து போராடிய போது, வர்க்க
ரீதியாக இரண்டு வலது, இடது
முகாம்களாக
பிளவுற்ற
எதிரெதிரான
வழிப்பாதையில்,
மக்களை முன்னிலைப்படுத்திய
பாதையின்
அரசியலை உயர்த்திப்
பிடித்தார். இன்று தன் சொந்த
அனுபவத்தை
தொகுக்கும்
போதும், அதை வெளியிடும்
போதும் கூட, அரசியல்
ரீதியாக மக்களைச் சார்ந்து நிற்கின்ற
வழியை முன்னிறுத்துகின்றார்.
1.
கடந்தகாலத்தில்
மக்களுக்கு
எதிராக நிலைநின்ற
பிற்போக்கு
சக்திகள்,
மறுபடியும்
தங்கள் வரலாறே சரியானது என்று மீளவும்
நிலைநாட்ட
முற்படுகின்ற
காலத்தில்
அதை அம்பலப்படுத்தி
போராட முற்படுகின்றார்.
2.
இதை முன்வைத்து
போராடும்
போது, கடந்தகால
அரசியல் வழியை விமர்சனங்களுடன்
உயர்த்தி
நிற்கும்
பாதைகளை இனம் கண்டு,
அதன் மூலம்
தன் அனுபவத்தை
சொல்வதன்
மூலம் பிற்போக்குக்
கூறுகளையும்
தவறுகளையும்
அம்பலம் செய்ய முற்படுகின்றார். இந்த வகையில் குறுந்தேசியத்துக்கு
எதிரான போராட்டத்தையும்,
அதன் அனுபவத்தையும்
கற்றுக் கொள்ள, இந்த
தொடர் உதவும். வரலாறு பல அத்தியாயங்களையும்
பக்கங்களையும்
கொண்டது. எனது
பக்கங்களையும்
பதிவு செய்யும் கால நிபந்தனையினதும்
சமூகப் பிரக்ஞையினதும்
நிமித்தம்
புளொட், தீப்பொறி பற்றி நான்
அறிந்த வரலாற்றை தொகுப்பதென்று
முடிவு செய்தேன். நான் நேரடியாகச்
சம்பந்தப்பட்ட
தகவல்களை
அடிப்படையாகக்
கொண்டு அவற்றுடன்
சம்பந்தப்பட்ட
நண்பர்களுடன்
உறுதிப்படுத்தியபின்,
பல்வேறு தயக்கங்களுக்கும்
மத்தியில்,
உருப்பெற்றெழுந்தது
தான் இந்தத்
தொகுப்பு.
இதில் தவறுகள்
இருப்பின்
சரியாகச்
சுட்டிக்காட்டப்படுமிடத்து
திருத்திக்
கொள்ளப்படும். நான் புளொட்டில்
மிகவும் குறுகியகாலமே
செயற்பட்டவன். ஆனால்,
அந்தக் குறுகிய காலமே இலங்கையின்
இனப்பிரச்சினை
கூர்மையடைந்துவிட்டிருந்த
காலமாகவும்,
இந்திய அரசு, இலங்கை
இனப்பிரச்சனைக்குள்
நேரடியாகச்
செல்வாக்குச்
செலுத்திய
காலமாகவும்,
புளொட்டினுடைய
அதீத வளர்ச்சிக்
காலமாகவும்,
புளொட்டினுள்
முரண்பாடுகள்
கூர்மையடைந்து
அதன் சிதைவுக்கான
காலமாகவும்
இருந்தது.
எனவே, எனது இந்தத் தொகுப்பானது
புளொட்டினுடைய
வரலாற்றின்
முழுமை அல்ல, அதன்
ஒரு சிறிய
பகுதி மட்டுமே.
1985 இல் தீப்பொறிக்குழு
உருவானதிலிருந்து
1992 வரையான அதன் வரலாறு
தொகுக்கப்பட்டுள்ளது.
மே 18, 2009 இற்குப் பின்னரான இலங்கைத் தீவின் அரசியல்-குறிப்பாக
வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லீம்
மக்களின்
அரசியல்- ஒரு புதிய
பரிமாணத்தை
எட்டியுள்ளது
என்பதில்
எவருக்கும்
கருத்து முரண்பாடு
இருக்க முடியாது. தமிழீழ விடுதலைப்
புலிகளின்
தலைமை முள்ளிவாய்க்காலில்
தோல்வியைத்
தழுவிய பின் - இதை
ஒட்டுமொத்த
தமிழ்மக்களின்
தோல்வி எனக் கூறுவது
தவறாகும்.
- இலங்கையிலும்
புலம்பெயர்ந்து
வாழும் தமிழர்கள்
மத்தியிலும்,
அதிலும் குறிப்பாக
கடந்தகாலத்தில்
அரசியலில்
ஈடுபட்டோர்
மத்தியில்
புதிய, மாற்றுக் கருத்துக்களுக்கான
முன்னெடுப்புகள்
அல்லது புதிய அரசியல்
தலைமைத்துவத்திற்கான
முன்னெடுப்புகளை
பெருமளவில்
காணக்கூடியதாக
உள்ளது. இதில் இரண்டு
வகையானோர்
அடங்குவர்.
முதலாவது வகையினர்
தமிழீழ விடுதலைப்
புலிகள் இருக்கும்
போதே, அவர்களுடைய
கொடூர அடக்குமுறை
இருக்கும்போதே
- இலங்கையிலும்,
ஏன் புலம்பெயர்
நாடுகளிலும்
கூட – அவர்களது
தவறான அரசியல் போக்குகள்
குறித்து
அவர்களது
போராட்டத்தினுள்
பொதித்திருந்த
பாசிச தன்மை குறித்து
விமர்சித்து
வந்தது மட்டுமல்லாது
அதற்கெதிராக
தமது சக்திக்குட்பட்டு
பல்வேறு வடிவங்களில்
போராடி வந்தோர், தற்போதும்
கூட போராடி
வருவோர்.
(தொடரும்....) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |