|
||||
|
புளொட்டிலிருந்து தீப்பொறி
வரையான எனது அனுபவப்
பகிர்வுகள்
(பாகம்
14)
(நேசன்)
யாழ்ப்பாண மாவட்டத்தில்
அமைப்பாளர்கள்
எதிர்நோக்கும்
பிரச்சனைகள்
பற்றிப் பேசும் பொருட்டும்,
அமைப்பு செயற்பாடுகளை
முன்னோக்கிக்
கொண்டு செல்லும் பொருட்டும்
யாழ்ப்பாண
மாவட்ட அமைப்பாளர்
கூட்டத்தை
கூட்டவேண்டியிருந்தது.
திருநெல்வேலியில் இதற்கான
இடத்தை விபுல் மூலம் ஒழுங்கு
செய்து அங்கு யாழ்மாவட்ட
குழு கூடியது.
இதுவே புளொட்டின்
யாழ் மாவட்டத்திலுள்ள
அனைத்து உதவி அரசாங்க
அதிபர் பிரிவு அமைப்பாளர்களையும்
ஒன்றுசேர்த்துக்
கூட்டப்பட்ட
முதலாவது
குழுக் கூட்டமாக அமைந்தது.
இதில் ஜீவன்
(தீவுப்பகுதி
அமைப்பாளர்),
பாலா(சுன்னாகம்
அமைப்பாளர்),
உரும்பிராய்
ராசா ( கோப்பாய்
அமைப்பாளர்),
குரு ( கரவெட்டி
அமைப்பாளர்),
கணேஸ் (பருத்தித்துறை
அமைப்பாளர்),
பவான் ( தெல்லிப்பளை
அமைப்பாளர்),
மைக்கல்( சாவகச்சேரி
அமைப்பாளர்),
வினோச்( யாழ்ப்பாணம்
அமைப்பாளர்),
சுகந்தன்-சிறி(
வட்டுக்கோட்டைஅமைப்பாளர்)
சின்னப்பத்தர்
(இளவாலை அமைப்பாளர்),
ரமணன் ( தகவல்துறைப்
பொறுப்பாளர்),
சிவானந்தி,
தர்மலிங்கம்,
விபுல் ஆகியோர் பங்குபற்றினர்.
இக்கூட்டத்தில் பங்குபற்றிய
அனைத்து அமைப்பாளர்களின்
கருத்துக்களும்
சுதந்திரமாகவும்
வெளிப்படையாகவும்
முன்வைக்கப்பட்டன.
தனிநபர் முடிபுகள்,
தனித்தனியே
பிரச்சனைகளைக்
கையாளுதல்
என்பதற்கு
மாறாக, குழு ரீதியான
செயற்பாடுகள்,
குழுரீதியான
முடிபுகள்
என்பதை நோக்கி யாழ்மாவட்ட
அமைப்பு செயற்படத்
தொடங்கியிருந்தது.
மக்களமைப்பைக் கட்டியெழுப்புதல்,
பயிற்சிக்கு
ஆட்களை அனுப்புதல்,
ஏனைய இயக்கங்களுடான
முரண்பாடுகளைக்
கையாளுதல்,
கருத்தரங்குகள்,
பாசறைகள்
நடத்துவதற்கான
ஆட்கள் பற்றாக்குறை
போன்ற கருத்துக்கள்
முன்வைக்கப்பட்டு
விவாதிக்கப்பட்டன.
இவற்றிற்கான தீர்வுகளையும்
கூடவே குழு முன்மொழிந்தது.
புளொட்டின் படகுக்குப்
பொறுப்பாக
இருந்த சதீஸ் படகை
கடத்தல் தொழிலுக்கும்
பாவித்து
வருவது குறித்தும்,
சுந்தரம்
படைப்பிரிவினரின்
தன்னிச்சையான
செயற்பாடுகள்
குறித்தும்,
குறிப்பாக
குரு, கணேஸ்,
பாலா, சுகந்தன்(சிறி),
உரும்பிராய்
ராசா, பவான்
போன்றோர்
கேள்விகளை
எழுப்பியிருந்தனர்.
முதலாவது யாழ்மாவட்டக்குழுக்
கூட்டத்திலேயே
தீர்வில்லாமல்
எரிந்து கொண்டிருக்கும்
ஒரு பிரச்சனையாக
சுந்தரம்
படைப்பிரிவினரின்
பிரச்சனை
இருந்தது.
இதனால் இதுபற்றி
மத்தியகுழு
உறுப்பினர்களுடன்
கலந்து பேசுவதென்றும்,
செயலதிபர்
உமாமகேஸ்வரனுக்கு
இதுபற்றி
அறிக்கை அனுப்பிவைப்பதென்றும்
முடிவானது.
ஆனால் இதற்குப்
பதில் அனுப்பிவைத்த
செயலதிபர்
உமாமகேஸ்வரனோ
சுந்தரம்
படைப்பிரிவினரின்
செயற்பாடுகள்
குறித்து
தான் கவனத்தில்
எடுப்பதாகவும்,
சதீஸ் விவகாரம் கழகத் தோழர்
ஒருவர் மேல் ஆதாரமில்லாமல்
அபாண்டமாக
குற்றம் சாட்டும் ஒரு செயல்
என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார்.
பின்நாட்களில்
படகுப் பொறுப்பாளர்
சதீஸ், புளொட் சித்திரவதை
முகாமான ஒரத்தநாட்டில்
இருந்த"B"
காம்புக்கு
விசாரணைக்கென
அழைத்து செல்லப்பட்டு,
புளொட்டினால்
கொலை செய்யப்பட்டார். உமாமகேஸ்வரனின் அழைப்பின்
பேரில் இந்தியா சென்றிருந்த
கண்ணாடிச்சந்திரனிடம்
பார்த்தனுக்கு
மடல் ஒன்றை
உமாமகேஸ்வரன்
கொடுத்தனுப்பியிருந்தார். பார்த்தனுக்கு
அனுப்பப்பட்ட
அந்த மடலில்
இந்தியாவில்
முதற்கட்டமாக
பயிற்சி முடித்தவர்கள்
இராணுவ நடவடிக்கையில்
ஈடுபட தயாராக உள்ளனர் என்றும், கிழக்கு மாகாணத்தில்
தாக்குதல்
நடவடிக்கைகளுக்கு
தயாராகும்படியும்,
அதற்காக இராணுவப்பயிற்சி
பெற்றவர்களில்
ஒரு பகுதியினரை
யாழ்ப்பாணம்
அனுப்பி வைக்கப் போவதாகவும்
குறிப்பிடப்பட்டிருந்தது. உமாமகேஸ்வரனின் மடலின் அடிப்படையில்
வேலைகள் தொடங்கப்பட்டது. கண்ணாடிச் சந்திரன்
மட்டக்களப்புக்கு
புறப்பட்டார்.
பார்த்தன்
மட்டக்களப்பு
சென்று பாதுகாப்பாக
தங்கி நிற்பதற்கு
பாதுகாப்பான
இடத்தை திருகோணமலை
செல்வனின்
(கிருபாகரன்)
உதவியுடன்
ஒழுங்கு செய்துவிட்டு
யாழ்ப்பாணம்
திரும்பினார்.
" புதிய பாதை"
பத்திரிகையை
இனிமேலும்
யாழ்ப்பாணத்தில்
அச்சிடுவது
முடியாததொன்று
என முடிவாகியது.
பார்த்தன் திருகோணமலையில்
காந்தீயம்
செயற்திட்டங்களிலும்,
புளொட்டின்
நடவடிக்கைகளிலும்
பெருமளவுக்கு
ஈடுபட்டதாலும்,
மட்டக்களப்பு
சிறையுடைப்பில்
அவரது தொடர்பாலும்
இலங்கை அரசால் தேடப்படும்
ஒரு நபராக
இருந்தார்.
இதனால் பார்த்தன்
தனது முகத்தின்
தோற்றத்தை
மாற்றியே
மட்டக்களப்பு
செல்லவேண்டியிருந்ததால்
முகத்தை மழுங்கச் சவரம் செய்து
போலியான அடையாள அட்டையை தயாரித்து
மட்டக்களப்புக்கு
கடல்மார்க்கமாக
செல்ல வேண்டியிருந்தது.
(தொடரும்.....) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |