|
||||
|
புளொட்டிலிருந்து தீப்பொறி
வரையான எனது அனுபவப்
பகிர்வுகள்
(பாகம்
15)
(நேசன்) இந்தியாவிலிருந்து இராணுவப்பயிற்சி
பெற்ற முதல் தொகுதி
புளொட் உறுப்பினர்கள்
மட்டக்களப்பு
செல்வதற்காக
படகுமூலம்
யாழ்ப்பாணம்
வந்திறங்கினர். இவர்களில் மது, சிலோன், கோன், நந்தன்,
வாகீசன் ஆகியோரும்
அடங்கி இருந்தனர். இவர்கள் வந்த படகை
செலுத்திவந்த
பாண்டி வெலிக்கடைச்
சிறையில்
நீண்டகாலமாக
குட்டிமணி,
தங்கத்துரை
போன்றோருடன்
இருந்தவர். 1983 வெலிக்கடைச்
சிறைப்படுகொலையின்
பின் மட்டக்களப்புச்
சிறைக்கு
மாற்றப்பட்ட
பாண்டி மட்டக்களப்புச்
சிறையுடைப்பின்
போது தப்பிவந்தவர்களில்
ஒருவர். மட்டக்களப்புச்
சிறையுடைப்பில்
இருந்து தப்பிவந்த
பின்பும்
கூட, புளொட்டினுடைய
படகை இந்தியாவுக்கும்
இலங்கைக்கும்
இடையில் செலுத்திவந்த
தன்னலமற்ற,
ஒரு துணிச்சல்மிக்க
போராளி. மட்டக்களப்பு
சிறையுடைப்பில்
இருந்து தப்பி வந்தவர்கள்
எல்லோரும்
சொந்த மக்களிடமிருந்து
அன்னியப்பட்டு
இந்தியா சென்று பாதுகாப்பாக
இருந்த வேளையில் ( இதில் பரந்தன்
ராஜன், அற்புதன் விதிவிலக்கானவர்கள்,
இருவரும்
நடக்கமுடியாத
அளவுக்கு
காயமடைந்தவர்களாக
இருந்தனர்)
பாண்டியோ
இலங்கை அரசபடைகளால்
தேடப்பட்ட
நிலையிலும்
கூட விடுதலைப்
போராட்டத்துக்காக
தனது உயிரைப்
பணயம் வைத்து செயற்பட்ட
ஒருவர். 1985ம் ஆண்டு
பிற்பகுதியில்
படகில் இந்தியாவிலிருந்து
இலங்கை நோக்கி வந்துகொண்டிருந்தபோது
கடற்படையினருடன்
ஏற்பட்ட சமரில் பாண்டி, சின்னமலை உட்பட பலர்
உயிரிழந்தனர்.
இந்தியாவிலிருந்து இராணுவப்பயிற்சி
பெற்று யாழ்ப்பாணம்
வந்த புளொட்
உறுப்பினர்களை
கடற்கரையிலிருந்தே
வாகனத்தில்
ஏற்றிச் சென்ற போத்தார்
இவர்களை கல்லுவம் குருவிடம்
ஒப்படைத்தார்.
கல்லுவம் குரு இவர்களை பருத்தித்துறை
வழியாக முல்லைத்தீவுக்கு
அனுப்பி வைத்தார்.
சித்திரை
24, 1984 அன்று முல்லைத்தீவில்
இருந்து இவர்கள் மட்டக்களப்பு
புறப்பட இருக்கும்போது
பார்த்தன்
மட்டக்களப்பில்
பொலிசாரால்
கைது செய்யப்பட்டுவிட்டார்
என்ற பேரதிர்ச்சியான
தகவல் கிடைத்தது. பார்த்தனை பொலிசார் உடனடியாக அடையாளம் கண்டிருக்கவில்லை. பொலிஸ் நிலையத்திற்கு
பார்த்தனைக்
கொண்டு சென்றபோது,
பொலிசாரின்
துப்பாக்கியைப்
பறித்து பார்த்தன்
தற்கொலை செய்து கொண்டார்.
சக கழகத்தோழியான
ரஜனி(ஜென்னி)
என்பவரை பங்குனி 20, 1984 அன்று யாழ்ப்பாணத்தில்
பதிவுத் திருமணம் செய்த பார்த்தனை
ஒரு மாதத்தில்
நாம் இழந்தது
அனைவருக்கும்
அதிர்ச்சியாக
இருந்தது.
பதிவுத் திருமணத்துக்கு
நாலு நாட்களுக்கு
முன்னர் திருகோணமையில்
இருந்து யாழ்ப்பாணம்
வந்து சேர்ந்த ரஜனியை, யாழ்ப்பாணத்தில்
சந்தித்த
கொக்குவில்
கிருபா, கழக மகளீர்
அமைப்பை சேர்ந்த அளவெட்டி நந்தா, உரும்பிராய்
வனிதா ஆகியோரிடம்
ஒப்படைத்து
விட்டு, பார்த்தனை
ரஜனியை சந்திக்க அழைத்து சென்றார். பதிவுத் திருமணமாகி
இரு வாரங்களில்
ரஜனி முதலாவதாக
பயிற்சிக்கென
புறப்பட்ட
யுவதிகளுடன்
இந்தியாவுக்கு
சென்று விட்டார். தள இராணுவப் பொறுப்பாளராகச்
செயலாற்றிய
பார்த்தனின்
மரணத்தால்
மட்டக்களப்பில்
தாக்குதலுக்கான
திட்டம் கைவிடப்பட்டது. தளநிர்வாகப்
பொறுப்பாளர்
சலீமும், யாழ்மாவட்டப்
பொறுப்பாளர்
சத்தியமூர்த்தியும்
இராணுவத்தால்
கைது செய்யப்பட்டு
ஒரு மாதத்திற்குள்ளாகவே
கேதீஸ்வரனின்
மரணமும் தள இராணுவப்
பொறுப்பாளர்
பார்த்தனின்
மரணமும் இடம்பெற்றது.
நாம் ஒவ்வொரு
அடியையும்
முன்நோக்கி
எடுத்து வைக்கும் போதெல்லாம்
பல அடிகள்
பினநோக்கி
போவதை உணர்ந்தோம்.
இராஜதுரை, சற்குணம்
தம்பதிகளின்
புதல்வரான
திருகோணமலையைப்
பிறப்பிடமாகக்
கொண்ட பார்த்தன்
என அழைக்கப்பட்ட
ஜெயச்சந்திரனின்
அரசியல் வாழ்க்கை மாணவனாக இருக்கும்போது
அவரது ஆசிரியரான
சுமதி என்று அழைக்கப்பட்ட
பயஸ் மாஸ்டரின்
இடதுசாரிக்
கருத்துக்களிலிருந்து
ஆரம்பமாகின்றது.
பின்பு தமிழீழ
விடுதலைப்
புலிகளின்
ஆரம்ப காலங்களில்
மனோமாஸ்டருடன்
சேர்ந்து
தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கத்தில்
செயற்பட்டபோதும்
கூட இடதுசாரிக்
கருத்துக்களை
இருவருமே
கொண்டவர்களாக
இருந்தனர்.
1979 இல் சந்ததியாரின்
தொடர்புக்கூடாக
தென்னமரவாடியில்
இருந்து வெருகலம்பதி
வரை காந்திய
செயற்பாடுகளில்
ஈடுபட்டு
வந்த பார்த்தன்,
தமிழீழ விடுதலைப்
புலிகளுக்குள்
ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து
புளொட் அமைப்புடன்
தன்னை இணைத்துக்
கொண்டார். திருமலையில் பார்த்தன்
செயற்பட்ட
காலங்களில்
அங்கு பயிற்சி முகாமை ஆரம்பித்து
ஆயுதப்பயிற்சி
அளித்துவந்தார். இந்த
பயிற்சி முகாம்களில்
ஒன்றான தம்பலகாமம்
முகாமில்தான்
மட்டக்களப்பு
சிறை உடைப்புக்கான
முஸ்தீபுகளையும்
அதில் பங்கு கொண்டு
கைதிகளை பத்திரமாக
மீட்பதற்கான
செயற்பாடுகளில்
பங்குபற்றுபவர்கட்கான
தகவல்கள்,
பயிற்சிகள்,
ஒத்திகைகள்
போன்றனவும்
பார்த்தனால்
மேற்கொள்ளப்பட்டன. இந்த பயிற்சிகளில்
திருகோணமலையை
சேர்ந்த ஜோர்ஜ் முக்கிய பங்கு வந்தார். இந்த முகாமின் அன்றாட தேவைகளை சுகுணன் கவனித்து வந்தார். மூஸா இந்த முகாமுக்கு
அடிக்கடி
விஜயம் செய்து செயற்பாடுகளை
மேற்பார்வை
செய்தார்.
பார்த்தன் சங்கப்பலகை
என்ற வாராந்த
அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு
கூட்டங்கள்
மூலம் திருகோணமலை
இளைஞர்கள்
மத்தியில்
சரியான அரசியல் தேடல்கள் ஏற்பட முன்னின்று
உழைத்தவர்.
தமிழீழ விடுதலைக்
கழகத்தின்
மே தின
விழாவை பல்வேறு கெடுபிடிகளின்
மத்தியிலும்
பொறுப்பாக
செய்தவரும்,
மட்டக்களப்பு
சிறையுடைப்பில்
தப்பிய போராளிகளை
பல்வேறு பிரச்சனைகளுக்கு
மத்தியில்
கவனமாக காப்பாற்றி
அனுப்பி வைத்தவருமான
பார்த்தனிடம்
எவருடனுமே
நட்புறவாக
பழகும் அதிசயிக்கத்தக்க
ஆற்றலும்
மனோதிடமும்
இருந்தது. அதனால் தான் நிராயுதபாணியாகவிருந்த பார்த்தனால் பொலிசாருடன் மோதி அவர்களிடமிருந்து பறித்த துப்பாக்கியால் தன்னுயிரை விடுதலைப் போராட்டத்துக்கு விதையாக்க முடிந்தது. அன்று புளொட்டில் செயற்பட்டவர்களில் இராணுவத்திற்கு தலைமை தாங்கக்கூடிய அனைத்துத் தகுதிகளையும் பார்த்தன் ஒருவரே தன்னகத்தே கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையான கூற்றல்ல. (தொடரும்....) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |