|
||||
|
புளொட்டிலிருந்து தீப்பொறி
வரையான எனது அனுபவப்
பகிர்வுகள்
(பாகம்
18)
(நேசன்)
புளொட்டுடன்
ஒன்றிணைந்த
சிங்கள முற்போக்குச்
சக்திகள்
தோழர் தங்கராஜா
தனது அரசியல்
பாசறைகளிலும்
அரசியல் கருத்தரங்குகளிலும்
ஆணித்தரமாக
எடுத்துக்
கூறியது போல் புளொட்
ஈழவிடுதலைப்
போராட்டத்தில்
சிங்கள முற்போக்கு
சக்திகளுடனான
ஜக்கியம்,
சிங்கள உழைக்கும்
மக்களுடனான
ஜக்கியம்
என்பனவற்றை
தொடர்ச்சியாக
வலியுறுத்தி
வந்தது. "புதிய
பாதை" பத்திரிகையில்
இது குறித்து
தொடர்ச்சியாக
கட்டுரைகள்
வெளிவந்து
கொண்டிருந்தன.
புளொட்டினால்
நடாத்தப்பட்ட
"தமிழீழத்தின்
குரல்" வானொலிச் சேவை (இதுவே
விடுதலைப்
போராட்ட வரலாற்றில்
முதன்முதலில்
ஆரம்பிக்கப்பட்ட
வானொலிச்சேவை)
யில் இதற்கென
" சிங்கள மொழிச் சேவை" பிரிவொன்று
ஆரம்பிக்கப்பட்டு
அதற்கூடாக
தொடர்ச்சியாக
புளொட்டினுடைய
கொள்கைகள்
பற்றி சிங்கள மக்களுக்கு
தெளிவுபடுத்தப்பட்டது. இத்தகையதொரு காலத்தின்
தேவையால்
அமைந்த முற்போக்கான
செயற்பாட்டை
புளொட் மட்டுமே பெருமளவுக்கு
நடைமுறையில்
செயற்படுத்தி
வந்தது. ஈழ
விடுதலைப்
போராட்டம்
சிங்கள மக்களுக்கு
எதிரானதல்ல
என்பதையும்,
சிறீலங்கா
இனவாத அரசுக்கு மட்டுமே எதிரானது என்பதையும்
புளொட் சிங்கள மக்களுக்கு
தெளிவுபடுத்தி
அவர்களுக்கு
விழிப்புணர்வை
ஏற்படுத்தி
வந்தது. இனவாதத்திற்கெதிரான தமிழ்மக்களின்
போராட்டத்தில்
சிங்கள முற்போக்கு
சக்திகளினதும்,
சிங்கள உழைக்கும்
மக்களின்
ஜக்கியத்தை
வலியுறுத்தி
வந்தது. இத்தகைய பிரசாரம் பெருமளவுக்கு
வெற்றியைத்
தந்ததோடு
மட்டுமல்லாமல்
தமிழ்மக்கள்
பேரினவாதத்தால்
எதிர்நோக்கும்
பிரச்சனைகளை
சிங்கள மக்களும் தெளிவாக புரிந்து கொள்ள வழிவகுத்தது. பல்வேறு சிங்கள முற்போக்கு
அமைப்புகள்
புளொட்டுடன்
தொடர்புகளை
ஏற்படுத்தி
தொடர்ச்சியான
கருத்துப்
பரிமாற்றங்களைச்
செய்து வந்தன. ஜனதா
விப்லவீய
பெரமுனையைச்
சேர்ந்த உடுவரகே ஹென்றி பெரேரா, ரோகன விஜேவீரவின்
மைத்துனரும்
ஜே.வி.பியின்
ஆரம்ப கால உறுப்பினருமான
இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் எச்.என்.பெர்னாண்டோ,
நவஜேவிபியைச்
சேர்ந்த சுனிமெல், அஜித், சுதா
போன்றவர்கள்
குறிப்பிட்டுச்
சொல்லக்கூடியவர்கள்.
இதில் ஜனதா விப்லவீய பெரமுனையைச்
சேர்ந்த உடுவரகே ஹென்றி பெரேரா 1983 மார்கழி மாதம் இந்தியா
சென்று உமாமகேஸ்வரனை
சந்தித்துவிட்டு
இலங்கை திரும்பியிருந்தார்.
அதன்பின் தொடர்ச்சியாக
யாழ்ப்பாணம்
வந்து கருத்துப்பரிமாற்றங்களில்
ஈடுபட்ட உடுவரகே ஹென்றி புளொடடுடன்
மிகவும் நெருக்கமான
உறவை வைத்து
செயற்பட்டு
வந்தார்.
இராணுவப்
பொறுப்பாளர்
பார்த்தனின்
மறைவுக்குப்
பின் உமாமகேஸ்வரனின்
வேண்டுகோளின்
பேரில் உடுவரகே ஹென்றி பெரேராவுக்கு
ஆயுதங்களும்,
கைக்குண்டுகளும்,
பணமும் கொடுக்கப்பட்டது. அவற்றுடன் உடுவரகே ஹென்றி பெரேரா யாழ்ப்பாணத்திலிருந்து
மலையகம் புறப்பட்டுச்
சென்றார். சிங்கள இளைஞர்களுக்கு
பயிற்சி வழங்குவதும்
மலையகத்தில்
தாக்குதல்களை
நிகழ்த்துவதுமே
இதன் நோக்கமாக
இருந்தது.
கண்டி பஸ் நிலையத்தை
சென்றடைந்த
உடுவரகே ஹென்றி பெரேராவை சந்தேகித்த
பொலிசார்
அவரிடம் இருந்த பார்சலை சோதனையிட்டனர்.
அதற்குள் ஆயுதங்களும்
பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடுவரகே ஹென்றி
பெரேரா கண்டிப் பொலிசாரால்
பொலிசாரால்
கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட
உடுவரகே ஹென்றி பெரேராவை யாழ்ப்பாணத்திற்கு
கொண்டுவந்திருந்த
இராணுவத்தினர்
அவர் யாழ்ப்பாணம்
வரும்போது
தங்கியிருக்கும்
வீட்டுக்கு
கொண்டு வந்து சோதனையிட்டனர்.
அதன் பின்னர்
தான் உடுவரகே
ஹென்றி பெரேரா கைது செய்யப்பட்ட
விடயம் எமக்குத் தெரியவந்தது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |