|
||||
|
புளொட்டிலிருந்து தீப்பொறி
வரையான எனது அனுபவப்
பகிர்வுகள்
(பாகம்
19)
(நேசன்)
ஈழ விடுதலைப்
போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்து,
தமிழ் மக்களுடன்
கைகோர்த்துப்
போராடப் புறப்பட்ட
உடுவரகே ஹென்றி பெரேரா வெலிக்கடைச்
சிறையில்
ஏனைய ஈழவிடுதலைப்
போராளிகளுடன்
சிறையிலிடப்பட்டார்.
சிறிலங்கா
பேரினவாத
அரசால் உடுவரகே ஹென்றி பெரேராவை மட்டும் தான் சிறையிட
முடிந்ததே
தவிர அதன்பின்
தொடர்ந்து
புளொட்டை
நோக்கி வந்த பல
முற்போக்கு
சக்திகளை
தடுத்து நிறுத்த முடியவில்லை.
1987 இந்திய-இலங்கை
ஒப்பந்தத்தின்
பின் சிறீலங்கா
அரசு அனைத்து
அரசியல் கைதிகளுக்கும்
பொதுமன்னிப்பு
அளித்து விடுதலை செய்தது. அதில் விடுதலையான
உடுவரகே ஹென்றி பெரேரா, தமிழ் மக்களின்
விடுதலைப்
போராட்டத்துடன்
தன்னை இணைத்துக்கொண்டதால்
தான் வாழ்வதற்கான
இடமாக வவுனியா செட்டிகுளத்தை
தெரிவு செய்திருந்தார்.
செட்டிகுளத்தில் தமிழ்பெண்
ஒருவரை மணந்து வாழ்ந்து வந்த உடுவரகே
ஹென்றி பெரேராவை இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிக்
கொண்டிருந்த
வேளை தமிழீழ
விடுதலைப்
புலிகள் சிங்களவர்
என்ற ஒரே
காரணத்துக்காக
சுட்டுக்கொன்றனர்.
சிறீலங்கா
அரசினதும்,
ஜே.வி.பியினதும்
இனவாதத்திற்கெதிராகவும்,
தமிழ்மக்களின்
நீதியான போராட்டத்துக்கு
ஆதரவாகவும்
தன்னை முழுமையாக
அர்ப்பணித்துப்
போராடிய, அதற்காகவே
சிறீலங்கா
அரசினால்
சிறையிலடைக்கப்பட்ட,
தமிழ்மக்களுடனேயே
வாழ்ந்துவந்த
ஒரு சிங்கள
இடதுசாரி,
ஒரு முற்போக்காளன்
அரசியலில்
அரிச்சுவடி
தெரியாதவர்களால்
தமிழ் மண்ணிலேயே
அழிக்கப்பட்ட
சம்பவம் ஈழ விடுதலைப்
போராட்டம்
அதன் இருண்ட
திசைவழியை
நோக்கிச்
சென்று கொண்டிருந்ததையே
எமக்கு காட்டி நின்றது.
யாழ்ப்பாணம் மக்கள்
வங்கிக்கிளையிலிருந்து
கைப்பற்றப்பட்ட
ஒருபகுதி
துப்பாக்கிகளுடன்
முல்லைத்தீவு
காட்டுப்பகுதியில்
சிறிய இராணுவப் பயிற்சி முகாம் ஒன்று தள
நிர்வாகத்தை
தற்காலிகமாக
கவனித்துவந்த
கண்ணாடிச்
சந்திரனால்
ஆரம்பிக்கப்பட்டது.
இந்த முகாம்
அமைக்கப்பட்டதன்
நோக்கம் புளொட் உறுப்பினர்களுக்கு
தளத்திலேயே
பயிற்சி அளிப்பதும்,
இந்த முகாமை
மையமாகக்
கொண்டு வன்னிப்பகுதியில்
இராணுவத்
தாக்குதல்
நிகழ்த்துவதுமாகும்.
இராணுவ பயிற்சி
முகாமுக்குப்
பொறுப்பாக
மல்லாவிச்
சந்திரன்
நியமிக்கப்பட்டார்.
மல்லாவிச் சந்திரனுடன்
சுகுணன், நேரு போன்றோர்
உட்பட பலர் அந்தப்
பயிற்சி முகாமில் இராணுவப் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்தியாவிலிருந்து தளம்
வந்திருந்த
மத்தியகுழு
உறுப்பினர்
ஈஸ்வரன் மட்டக்களப்பில்
தாக்குதல்
நடத்தப்போவதாகக்
கூறி மத்திய
வங்கியிலிருந்து
கைப்பற்றப்பட்ட
துப்பாக்கிகளில்
சிலவற்றுடன்
மட்டக்களப்பு
பத்தன் என்பவரோடு
அம்பாறை பகுதிக்கு
சென்றிருந்தார்.
வவுனியா இராணுவப்
பொறுப்பாளராகச்
செயற்பட்டுவந்த
வவுனியா தம்பி (தர்மகுலசிங்கம்)
வவுனியாவில்
சில இராணுவ
நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு
தயாராகிக்
கொண்டிருந்தார்.
தள இராணுவப்
பொறுப்பாளராக
இருந்த பார்த்தனின்
மரணத்துக்குப்
பின் சிறிய
அளவிலான இராணுவத் தாக்குதலுக்கான
திட்டங்களையும்,
அதற்கான முன்னெடுப்புகளையும்
காணக்கூடியதாக
இருந்தது.
முல்லைத்தீவில் இராணுவப்பயிற்சி
முகாமை ஆரம்பித்த
பின் முல்லைத்தீவுக்கான
பிரதான வீதிவழியாக
செல்லும்
இராணுவத்தினர்
மீது கண்ணிவெடித்
தாக்குதல்
நிகழ்த்தி
ஆயுதங்களைக்
கைப்பற்றுவதற்கு
திட்டமிடப்பட்டது.
மட்டக்களப்புக்கு
துப்பாக்கிகளை
எடுத்துச்
சென்றிருந்த
மத்தியகுழு
உறுப்பினர்
ஈஸ்வரனும்
மட்டக்களப்பு
பத்தனும்
அம்பாறை சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையத்தை
தாக்கி ஆயுதங்களைக்
கைப்பற்ற
திட்டமிட்டிருந்தனர்.
வவுனியா இராணுவப் பொறுப்பாளர்
தம்பி வவுனியாவை
தனது இரும்புப்பிடிக்குள்
வைத்திருந்த
மூத்த பொலிஸ் அத்தியட்சகர்
ஆர்தர் கேரத் மீது
தாக்குதல்
நடத்த திட்டத்தை
வகுத்திருந்தார்.
முல்லைத்தீவில்
இராணுவத்தின்
மீதான கண்ணிவெடித்தாக்குதல்
நடவடிக்கையில்
பங்கேற்பதற்கு
இந்தியாவிலிருந்து
இராணுவப்பயிற்சி
முடித்து
ஏற்கனவே வந்திருந்த
மது, துசியந்தன்,
உட்பட வேறு சிலரும்
முல்லைத்தீவுக்கு
அனுப்பி வைக்கப்பட்டனர். நெடுங்கேணி - முல்லைத்தீவு
வீதியில்
கண்ணிவெடியைப்
புதைத்து
வைத்துவிட்டு
சிறீலங்கா
இராணுவத்தின்
வருகைக்காக
இவர்கள் பல நாட்களாக
காத்திருந்தனர். தாக்குதலுக்குத் தயாராகிச்
சென்றபோது
அவர்கள் தம்முடன் எடுத்துச்
சென்ற உணவு, தண்ணீர்
என்பன முடியும் நிலையில் இருந்தது.
இந்த நேரம்
இராணுவத்தினர்
வருவதாக தாக்குதலுக்கு
தயாராய் நின்றவர்களுக்கு
சற்று தொலைவில் தகவல் அனுப்புவதற்காக
வீதியோரத்தில்
மறைந்திருந்தவரால்
தொலைத்தொடர்பு
கருவி மூலம் தகவல்
அனுப்பப்பட்டது.
இதையடுத்து ஜீப் வண்டி மீது
கண்ணிவெடித்தாக்குதல்
நிகழ்த்தினர்.
ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அந்த ஜீப்
வண்டியில்
வந்தது இராணுவத்தினரல்ல,
ஒட்டுசுட்டான்
பொலிஸ் நிலையத்தின்
பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கமும்
அவருடன் வந்த பொலிசாருமாகும். தாக்குதலுக்கு தயாராக
நின்றவர்களுக்கு
இராணுவத்தினர்
வருவதாக வருவதாக தொலைத்தொடர்பு
கருவி மூலம் தகவல்
அனுப்பப்பட்டிருந்தது.
ஜீப் அண்மித்தபோது
இது இராணுவத்தினரின்
ஜீப் அல்ல
என்று தெரியவந்தவுடன்
தகவல் கொடுத்தவர்
மீண்டும்
தாக்குதல்
நடத்த நின்றவர்களுடன்
தொடர்புகொள்ள
முயன்றார்.
ஆனால் தாக்குதலுக்குத்
தயாராக நின்றவர்கள்
அதற்குள்
தொலைத்தொடர்பு
கருவியை துண்டித்து
விட்டு தாக்குதலுக்கு
தயாராகி கொண்டிருந்தனர்.
இராணுவத்தின் மீதான தாக்குதல்
திட்டம் பொலிசார் மீதான தாக்குதலில்
முடிவடைந்திருந்தது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |