|
||||
|
புளொட்டிலிருந்து தீப்பொறி
வரையான எனது அனுபவப்
பகிர்வுகள்
(பாகம்
2)
(நேசன்)
இரண்டாவது வகையினரோ
புலிகளின்
அழிவின் பின் அரங்குக்கு
வந்து, தாம் "இருண்ட
காலத்திலிருந்து
வெளியே" வருவதாகக்
கூறிக்கொண்டு
மாற்றுக்
கருத்துக்கள்,
புதிய தலைமை பற்றிப்
பேசுவோராவர்.
இவர்களில்
ஒரு சாரார்
– ஒரு சாரார்
மட்டுமே- புலிகள் பலமாக இருக்கும்
பொழுது புலிகளின்
தவறான அரசியல் போக்குகள்
குறித்து
விமர்சிக்காதது
மட்டுமல்ல,
அதற்கெதிராக
போராடாதது
மட்டுமல்ல,
அவர்களுக்கு
"தேசிய சக்திகள்"
என்ற மகுடமும்
இட்டு அவர்கள் இல்லாவிட்டால்
தமிழ்மக்கள்
நட்டாற்றில்
விட்டுவிடப்படுவார்கள்
என்றும் வாதாடியவர்கள்.
இன்று இவர்கள்
கடந்தகாலம்
பற்றிய எந்தவித சுயவிமர்சனமுமின்றி
மாற்றுக்
கருத்துக்கள்,
புதிய தலைமை பற்றிப்
பேசுவது கவலையளிக்கும்
விடயமாக உள்ளது. கடந்தகால தவறுகள் குறித்த இவர்களது சுயவிமர்சனமற்ற
எந்தவிதமான
செயற்பாடும்,
அவை எவ்வளவு
தான் உயர்ந்த
நோக்கங்களைக்
கொண்டிருந்தாலும்
ஒரு ஆரோக்கியமான
எதிர்காலத்துக்கு
வழிகோலாது
என்பதுதான்
உண்மை. முள்ளிவாய்க்கால் நிகழ்வு, ஆயிரக்கணக்கான
அப்பாவிப்
பொது மக்களின்
அழிவு, கொடூரமானதும்
துன்பகரமானதும்
ஆகும். ஆனால்
அது இன்று
தவிர்க்க
முடியாத வரலாறாகி விட்டது. தீமையில் விளைந்த சிறு நன்மை
போல, இந்த
முள்ளிவாய்க்காலின்
பின்னணியில்
தான் இன்றைய
"ஜனநாயக"
அல்லது "கருத்துச்
சுதந்திர"
(அதன் உண்மையான
அர்த்தத்தில்
இல்லை என்ற போதிலும்)
சூழல் தமிழ், முஸ்லீம்
மக்கள் மத்தியில்
தோன்றியுள்ளது.
ஆனால் இங்கு எழும்
கேள்வி என்னவென்றால்
நீண்ட நெடுநாட்களுக்குப்
பின்பு தோன்றியுள்ள
இத்தகையதொரு
சாதகமான சூழலை தமிழ்
மக்களின்
நலனில் அக்கறை கொண்டதாகக்
கூறும் மாற்றுக் கருத்தை முன்னெடுப்போர்
அல்லது அவர்களுக்குத்
தலைமை தாங்க முன்வருவோர்
எப்படி சரியாக பயன்படுத்துகிறார்கள்
என்பதாகும்.
இவர்களில் பெரும்பான்மையானோர்
கடந்தகால
அரசியல் மற்றும் போராட்ட இயக்கங்களின்
பின்னணியை
உடையவர்களாவர்.
இவர்கள் தங்களது, தான் சார்ந்த
அமைப்பினது
கடந்தகால
தவறுகளை சுயவிமர்சனம்
செய்து அதிலிருந்து
மீண்டுவராமல்
தம்மை "முன்னேறிய
பிரிவினர்"
என்று அழைத்துக்
கொண்டு அரசியல் அரங்கினுள்
மீண்டும்
காலடி எடுத்து வைத்துள்ளனர். கடந்தகால – குறிப்பாக
கடந்த 30 வருடகால – ஆயுதப்போராட்டமும்
அதற்கு முன்னதான அகிம்சைப்
போராட்டமும்
நமக்கு கற்றுத்தந்த
பாடங்கள்
என்ன? கடந்தகால அகிம்சைப்
போராட்டம்
மட்டுமல்லாது,
ஆயுதப் போராட்டமும்
கூட தோல்வியைத்
தழுவியது
ஏன்? என்ற
இந்தக் கேள்விகளுக்கான
பதிலை உளச்சுத்தியுடனும்
பக்கச்சார்பற்றும்
தேடினால்
மட்டுமே, அவற்றுக்கான
விடை கண்டால்
மட்டுமே எம்மால் அடுத்த கட்டத்துக்கு
சரியான பாதையில் நகர முடியும்.
இவற்றைப் புறந்தள்ளி
எடுக்கப்படும்
எந்தச் செயற்பாடும்
வெற்றியளிக்கப்
போவதில்லை
என்பது மட்டுமல்ல
தமிழ் மக்களை மீண்டும் ஒரு பேரழிவுக்கு
கொண்டு செல்லவே வழிவகுக்கும்.
கடந்தகால போராட்டத்தின்
தோல்விக்கு
தமிழீழ விடுதலைப்
புலிகள் மட்டுமல்லாது
ஒவ்வொரு போராட்ட அமைப்புக்களும்
அரசியல் கட்சிகளும்
பொறுப்பாளிகள்
என்பதோடு-
இதில் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும்
கூட நேரடியாகவோ
மறைமுகமாகவோ
பொறுப்புள்ளது
என்பது சுட்டிக்காட்டப்பட
வேண்டும்.
எனவே, இன்று
எம்முன் உள்ள பணி
நடந்து வந்த பாதையில்
இழைத்த தவறுகளை இனங்காணுதல்,
அவற்றைச்
சுட்டிக்காட்டுதல்,
அதிலிருந்து
சரியான பாதையை தெரிவு செய்தல் என்பதாகவே
இருக்க வேண்டும். எனவே கடந்தகால
தனது தவறுகள்
குறித்தும்,
தான் சார்ந்த
அமைப்பினது
தவறுகள் குறித்தும்
சுயவிமர்சனக்
கண்ணோட்டத்தில்
அணுகுவது
அவசியமானது.
மாறாக, தவறுகள் குறித்து மவுனம் சாதித்தல்,
தவறுகளை மூடிமறைத்தல்,
அதற்கும்
மேலே சென்று
வரலாற்றை
திரிவுபடுத்திக்
கூறுதல் எந்தவகையிலும்
ஆரோக்கியமான
செயற்பாடாக
அமையாது. இவற்றைக் கருத்திற்கொண்டு
கடந்தகால
போராட்டத்தில்
எனதும், நான் சார்ந்திருந்த
அமைப்பினதும்
- அமைப்புக்களினது
என்று சொல்வது இன்னும் பொருத்தமாக
இருக்கும். - பங்களிப்பை,
பெருமளவுக்கு
நேரடியாக
நான் சம்பந்தப்பட்ட
விடயங்களை
சுயவிமர்சன,
விமர்சனக்
கண்ணோட்டத்தில்
முன்வைக்கின்றேன்.
எனது இந்தச்
சுயவிமர்சனமானது
நான் சார்ந்திருந்த
அமைப்புக்களின்
மீதான விமர்சனமாகவும்,
போராட்டம்
மீதான விமர்சனமாகவும்
இருப்பது
தவிர்க்க
முடியாததாகும்.
இன ஒடுக்குமுறைக்கெதிரான
போராட்டம் :
ஆயுதப் போராட்டத்தை
நோக்கி
70
களில் தமிழரசுக்
கட்சியினதும்
அதன் தொடர்ச்சியாக
தமிழர் விடுதலைக்
கூட்டணியினதும்
" உணர்ச்சி
பொங்கும்
" மேடைப் பேச்சுக்களிலும்
"தமிழீழம்"
என்ற கனவிலும்
மூழ்கியிருந்த
ஆயிரக்கணக்கான
இளைஞர்களில்
நானுமொருவன்
என்ற போதிலும்,
பின்னாட்களில்
- 80 களில்- பாஸ்கரன், திலக் ஆகியோருடைய
தொடர்புகளுக்கூடாக
GUES (ஈழ மாணவர்
பொது மன்றம்)
இல் இணைந்து
செயற்பட்டு
வந்தேன். (தொடரும்....) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |