|
||||
|
புளொட்டிலிருந்து தீப்பொறி
வரையான எனது அனுபவப்
பகிர்வுகள்
(பாகம்
21)
(நேசன்)
கண்ணாடிச்சந்திரன் வெளியிட்ட
துண்டுப்பிரசுரமும்
அதனால் ஏற்பட்ட குழப்பங்களும்
இந்தத் தாக்குதல்கள்
அனைத்தையும்
தமிழீழ மக்கள் விடுதலைக்
கழகமே (புளொட்) மேற்கொண்டது
என உரிமை
கோரி துண்டுப்பிரசுரம்
தளநிர்வாகப்
பொறுப்பாளராகச்
செயற்பட்ட
கண்ணாடிச்சந்திரனால்
வெளியிடப்பட்டது. முல்லைத்தீவு கண்ணிவெடித்தாக்குதலில்
கொல்லப்பட்ட
ஒட்டுசுட்டான்
பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம்
யாழ்ப்பாணம்
வடமராட்சியைச்
சேர்ந்தவர். மக்கள் மத்தியில்
நன்மதிப்பைப்
பெற்றவராக
பொலீஸ் அதிகாரி சுந்தரலிங்கம்
இருந்தார்.
இதனால் வடமராட்சியில்
அமைப்பாளர்களாகச்
செயற்பட்டு
வந்த கல்லுவம்
குரு, கணேஸ்
போன்றோர்
சுந்தரலிங்கம்
மீதான தாக்குதல்
குறித்து
மக்கள் மத்தியிலிருந்து
கடுமையான
கேள்விகளையும்
விமர்சனங்களையும்
எதிர்நோக்க
வேண்டியிருந்தது.
ஒட்டுசுட்டான்
பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம்
மீதான தாக்குதல்
தவறுதலாக
நிகழ்த்தப்பட்ட
ஒன்று என்றபோதிலும்
கூட, அத்தகையதொரு
தவறால் புளொட் பிரச்சனைகளை
பல்வேறு திசைகளிலுமிருந்து
முகம் கொடுக்க வேண்டி நேர்ந்தது
– அமைப்புக்குள்ளேயும்
வெளியேயும். அடுத்ததாக அம்பாறை சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையத்தை
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகமே
(புளொட்) தாக்கியதாக
துண்டுப்பிரசுரத்தில்
உரிமை கோரியிருந்தோம். ஆனால்
தமிழ் மக்கள் பாதுகாப்புப்
பேரவை அமைப்பினரோ
தாமே அத்தாக்குதலை
நிகழ்த்தியதாகவும்,
தம்மிடம்
சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையத்திலிருந்து
கைப்பற்றிய
ஆயுதங்கள்
அனைத்தும்
இருப்பதாகவும்
தேவையேற்படின்
அவ்வாயுதங்களை
காட்சிப்படுத்த
முடியும்
எனவும் வடமராட்சியில்
செயற்பட்டு
வந்த புளொட்
அமைப்பாளர்களுடன்
வாதிட்டனர்.
நாமோ சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையத் தாக்குதலை
புளொட் தான் நடத்தியதென்று
வாதிட்டோம். இதனால் குறிப்பாக
வடமராட்சியில்
புளொட் அமைப்பில்
செயற்பட்டவர்களிடம்
ஒரு குழப்பநிலை
தோன்றியிருந்தது. பொலிஸ் அதிகாரி
சுந்தரலிங்கம்
மீதான தாக்குதல்
சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையத் தாக்குதல்
என்பனவே இந்தக் குழப்பநிலைக்குக்
காரணமாக இருந்தது.
உண்மையில் புளொட்
சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையத் தாக்குதலை
நடத்தியிருக்கவில்லை.
மத்தியகுழு உறுப்பினர்
ஈஸ்வரன் சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையம் மீது தாக்குதலை
நடத்த யாழ்ப்பாணத்திலிருந்து
ஆயுதங்களை
எடுத்துச்
சென்றிருந்தார்.
புளொட் உறுப்பினர்கள்
சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குத்
தயாராகிக்
கொண்டிருந்த
வேளையில்
தமிழ் மக்கள் பாதுகாப்புப்
பேரவையினர்
சென்றல்காம்ப்
பொலிஸ்நிலையத்தை
தாக்கி ஆயுதங்களை
கைப்பற்றிச்
சென்றுவிட்டிருந்தனர்.
புளொட்டால் திட்டமிடப்பட்ட
மூன்று தாக்குதல்களுமே
வெற்றிபெற்று
விட்டதென்று
தளநிர்வாகப்
பொறுப்பாளராகச்
செயற்பட்ட
கண்ணாடிச்சந்திரன்
அவசரமாக, தவறான தகவல்களைக்
கொண்ட துண்டுப்பிரசுரத்தை
வெளியிட்டதால்
வடமராட்சி
அமைப்பாளர்களிடமிருந்தும்,
வடமராட்சி
மக்கள் மத்தியிலிருந்தும்
கடுமையான
விமர்சனங்களை
நாம் முகம்
கொடுக்க வேண்டியிருந்தது.
கண்ணாடிச்சந்திரன்
இத் துண்டுப்பிரசுரத்தை
வெளியிடுவதில்
அவசரம் காட்டாமல்
பொறுமையாகவும்,
பொறுப்பாகவும்,
சரியான தகவல்களை அடிப்படையாகக்
கொண்டும்
செயற்பட்டிருக்க
வேண்டும்.
அப்படி அவசரப்பட்டு
தவறான தகவல்களுடன்
அத்துண்டுப்பிரசுரம்
வெளிவந்தபின்,
நாம் தவறு
விட்டுவிட்டோம்
என்று தெரிந்த பின்பும் கூட எமது
தவறான தகவல்கள் குறித்து மீண்டும் ஒரு துண்டுப்பிரசுரத்தை
வெளியிட்டிருக்க
வேண்டும்.
சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையத்தை
நாம் தாக்கவில்லை
என்பதை நாம் பகிரங்கமாக
ஒப்புக்கொண்டிருக்க
வேண்டும்,
முல்லைத்தீவில்
பொலிஸ் அதிகாரி சுந்தரலிங்கம்
மீதான தாக்குதல்
தவறுதலாக
நடந்ததென்பதை
மக்கள் மத்தியில்
கூறி அதற்காக
மன்னிப்புக்
கேட்டிருக்க
வேண்டும்.
அதை நாம் செய்யத் தவறியிருந்தோம்.
இதில் மோசமான,
வெட்கப்படவேண்டிய
விடயம் என்னவெனில்,
சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையம் புளொட்டால்
மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல்
அல்ல என்ற
உண்மை, எமக்குத் தெரிந்ந பின்பும் கூட, நாம்
அதை பகிரங்கமாக
மக்கள் மத்தியில்
சொல்வதற்குத்
தயாராக இருக்கவில்லை.
இந்த உண்மை
தெரிந்த பின்பும் இந்தியாவிலிருந்து
வெளிவந்த
" புதியபாதை"
பத்திரிகையில்
கூட சென்றல்காம்ப்
பொலிஸ் நிலையத் தாக்குதல்
புளொட்டால்
மேற்கொள்ளப்பட்டதென்றே
உரிமை கோரப்பட்டிருந்தது.
தவறுகளை தவறென்று
ஒத்துக்கொண்டு
அதிலிருந்து
மீண்டுவருவதற்கு
மாறாக தொடர்ந்து
நியாயப்படுத்தினோம்.
எமது தவறுகளை
தவறென்று
மக்கள் மத்தியில்
சொல்வதற்கு
தயங்கினோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |