|
||||
|
புளொட்டிலிருந்து தீப்பொறி
வரையான எனது அனுபவப்
பகிர்வுகள்
(பாகம்
22)
(நேசன்)
ஈழ விடுதலைப்
போராட்டம்:
"துரோகிகளும்
இனவிரோதிகளும்"
இலங்கைத் தமிழ்
மக்களின்
அரசியலில்
முதன்முதலில்
"துரோகி"
என்ற சொல்லை
அறிமுகப்படுத்தி
வைத்தவர்கள்,
முதலாளித்துவ
நலன்களைப்
பிரதிபலித்த
"அகிம்சை"
தமிழ் பாராளுமன்றத்
தலைமைகளே
ஆவர். "சமூகவிரோதி"
என்ற சொல்லை
தமிழ் மக்களின் அரசியலில்
அறிமுகப்படுத்தி
வைத்தவர்கள்
ஈழவிடுதலைப்
போராட்ட ஆயுதக் குழுக்களைச்
சேர்ந்தவர்களாவர்.
இலங்கை அரசியலில்
முதலாளித்துவ
நலன்களைப்
பிரதிபலித்த
சிங்கள பாராளுமன்ற
தலைமைகள்
தமது குறுகிய
பாராளுமன்ற
நலன்களுக்காக
சிங்கள பேரினவாதத்தை
வளர்த்து
மக்களின்
வாக்குகளை
பெறுவதில்
வெற்றி கண்டிருந்தனர்.
ஆனால் பாராளுமன்ற
ஆசனங்களைக்
குறிவைத்து
அரசியலை மேற்கொண்ட
முதலாளித்துவ
நலன்களைப்
பிரதிபலித்த
தமிழ்த் தலைமைகளோ அவர்களின்
ஆரம்பகாலங்களில்
தமிழ் குறுந்தேசியவாதத்தை
வளர்ப்பதில்
வெற்றி பெற்றிருந்தபோதும்
கூட, பெரும்பான்மையான
தமிழ்மக்களின்
ஆதரவையோ பெரும்பான்மை
தமிழ் மக்களின் வாக்குகளையோ
அவ்வளவு இலகுவாகப்
பெற்று பாராளுமன்ற
ஆசனங்களை
கைப்பற்ற
முடிந்திருக்கவில்லை.
சிங்கள பெரும்பான்மை
இனக்கட்சிகளுடன்
இணைந்து போட்டியிட்ட
தமிழர்கள்
பலர் வடக்கு
கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில்
வெற்றியீட்டிக்
கொண்டிருந்தனர். இவர்கள் குறுந்தேசியவாத
தமிழ்த் தலைமைகளுக்கு
பெரும் சவாலாக விளங்கினர்.
இதனால் தம்மை "ஜனநாயக" வாதிகளாகவும்
"அகிம்சா"
வாதிகளாவும்
காட்டிக்
கொண்ட தமிழ்த் தலைமை தமக்கெதிரான
அரசியல் கருத்துக்கொண்டோரை
தமது கருத்துக்கள்
மூலம் ஒருபோதும்
வெற்றி கொள்ள முடியாது
எனக் கண்டதால்,
தமக்கெதிரான
கருத்துடையோரையும்,
தமக்கெதிரான
அரசியல் பார்வை கொண்டோரையும்
"துரோகிகள்"
என்றும் தமிழ்மக்களின்
இனவிரோதிகள்
என்றும் பிரச்சார மேடைகளில்
பேசி "துரோகி" அரசியலை தமிழ்மக்கள்
மத்தியில்
ஆரம்பித்து
வைத்தனர்.
இந்தத் "துரோகி"
அரசியல், நிலப்பிரபுத்துவ
எச்ச சொச்சங்களுடன்
கூடிய " பிற்பட்ட"
பொருளாதார,
சமூக, அரசியல்,
கலாச்சாரத்தைக்
கொண்ட தமிழ்மக்கள்
மத்தியில்
இலகுவாகப்
பற்றிக் கொண்டதில்
வியப்பேதும்
இல்லை. குறிப்பாக, தமிழர்
விடுதலைக்
கூட்டணியினரின்
தேர்தல் பிரச்சாரமேடைகள்
குறுந்தேசியவெறியை
வளர்ப்பதற்கான
பாசறைகளாக
மாறியிருந்தன.
தமிழ் இனம் பற்றிய
"ஆண்ட பரம்பரை" ப் பெருமைப்
பேச்சுக்களும்,
சிங்கள இனம் பற்றிய
("சிங்களவரின்
தோலில் செருப்புத்
தைத்துப்
போடும்",
"சிங்களவரின்
இரத்தத்தில்
நீந்தித்
தமிழீழம்
காணுவோம்")
கீழ்த்தரமான
வெறியூட்டும்
பேச்சுக்களும்
தமிழ் இளைஞர்களின்
இரத்தத்தை
சூடேற்றியது
மட்டுமல்லாமல்
அவர்களை கூட்டணியினர்
"துரோகி"
என்று சுட்டிக்காட்டியவர்களுக்கெதிராக
செயற்படவும்
வைத்தது. இதில் இளைஞர்கள்
தனிநபர்களாகவும்,
சிறுகுழுக்களாகவும்,
செயற்படலாயினர்.
தமிழ் மக்கள் குறுந்தேசிய
வெறியூட்டப்பட்டு
மாற்றுக்கருத்துள்ளோரையும்
மாற்று அரசியல் சிந்தனையுடையோரையும்
" துரோகி"
என முத்திரைகுத்தும்
"துரோகி"
அரசியலில்
வளர்க்கப்பட்டனர்.
தமிழர் விடுதலைக்கூட்டணியினரின்
கருத்துக்களல்லாத,
கொள்கைகளல்லாத
அனைத்துமே
தமிழ்மக்களின்
நலன்களுக்கு
எதிரானவை,
துரோகத்தனமானவை
என தமிழர்
விடுதலைக்
கூட்டணியினர்
கற்பித்தனர்.
தமிழர் விடுதலைக்
கூட்டணியினரின்
இந்தக் கற்பித்தல்
பெரும்பலனை
தமிழ்மக்களுக்கு
கொடுக்காமல்
விட்டிருந்த
போதும் தமிழர் விடுதலைக்
கூட்டணியினருக்கு
பெரும்பலனைக்
கொடுத்திருந்தது.
தமிழர் விடுதலைக்
கூட்டணியினரால்
"துரோகி"
களாக சித்தரிக்கப்பட்டவர்கள்,
காண்பிக்கப்பட்டவர்கள்,
தமிழ் இளைஞர்களால்
சுட்டுக்கொலை
செய்யப்பட்டனர்.
இந்தத் "துரோகிகள்"
கொலைக் கலாச்சாரம்
- "துரோகி"
அரசியல் கலாச்சாரம்
- யாழ்ப்பாண
மேயரும், யாழ்ப்பாணப்பிரதேசத்துக்கான
சுதந்திரக்கட்சி
அமைப்பாளருமான
அல்பிரட்
தம்பிராஜா
துரையப்பாவை
27-07-1975 இல், அன்று
"மீசை கூட முளைத்திராத"
சிறுவனாகிய
வேலுப்பிள்ளை
பிரபாகரன்
சுட்டுக்கொலை
செய்ததிலிருந்து
ஆரம்பமாகியது.
வேலுப்பிள்ளை பிரபாகரன்
போன்ற "மீசை கூட
முளைத்திராத"
ஆயிரக்கணக்கான
தமிழ் இளைஞர்களின்
இரத்தத்தை
சூடேற்றியதில்
தமிழர் விடுதலைக்
கூட்டணியினர்
வெற்றி பெற்றனர்.
தமிழர் விடுதலைக்
கூட்டணியினரால்
"துரோகி"
யாக சித்தரிக்கப்பட்ட
யாழ்ப்பாண
மேயர் அல்பிரட் துரையப்பா
கொலையால்
தமிழர் விடுதலைக்
கூட்டணியினர்
புளகாங்கிதம்
அடைந்தனர்.
தமது "ஜனநாயக"
வழியிலான
பாராளுமன்ற
ஆசன அரசியல்
பாதையை "துரோகி" அரசியல் அகலத்திறந்து
விடுவதைக்
கண்டனர்.
யாழ்ப்பாண
மேயர் அல்பிரட் துரையப்பாவிடம்
காணப்பட்ட
மாற்று அரசியல் கருத்து மட்டுமே அவர் "துரோகி"
எனச் சித்தரிக்கப்பட்டு
கொலை செய்யப்படுவதற்கு
ஒரே காரணமாய்
அமைந்திருந்தது.
அல்பிரட்
துரையப்பா
கொலையால்
விளைந்த பயன்களை அறுவடை செய்த தமிழர்
விடுதலைக்
கூட்டணியினர்
" துரோகி"
அரசியல் தமது எதிர்காலத்துக்கு
– தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு
அல்ல – அத்தியாவசியமானதும்
தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட
வேண்டியதொன்றும்
என உணர்ந்தனர்.
தமிழர் விடுதலைக்
கூட்டணியினரால்
தொடர்ச்சியாக
"துரோகிகள்"
சுட்டிக்காட்டப்பட்டு
அவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர்
அல்லது துப்பாக்கிக்
குண்டுகளுக்கு
அஞ்சி அரசியல் அரங்கிலிருந்து
வெளியேறினர்.
ஜக்கிய தேசியக் கட்சியைச்
சேர்ந்த பொத்துவில்
எம்.பி கனகரட்ணம்,
சுதந்திரக்
கட்சியைச்
சேர்ந்த வட்டுக்கோட்டை
எம்.பி தியாகராசா,
சுதந்திரக்
கட்சியைச்
சேர்ந்த நல்லூர் எம்.பி அருளம்பலத்தின்
காரியதரிசி
தங்கராசா(கோண்டாவில்),
ஜக்கிய தேசியக் கட்சியின்
வவுனியா அமைப்பாளர்
புலேந்திரன்,
ஜக்கிய தேசியக் கட்சியின்
யாழ்ப்பாண
அமைப்பாளர்
ராஜசூரியர்
ஆகியோர் தமிழர் விடுதலைக்
கூட்டணியினரின்
"துரோகி"
அரசியலில்
பலி கொள்ளப்பட்டனர்.
சுதந்திரக் கட்சியைச்
சேர்ந்த நல்லூர் எம்.பி அருளம்பலம்
கொலைமுயற்சியிலிருந்து
தப்பியபின்னர்
அரசியல் அரங்கிலிருந்து
வெளியேறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |