|
||||
|
புளொட்டிலிருந்து தீப்பொறி
வரையான எனது அனுபவப்
பகிர்வுகள்
(பாகம்
5)
(நேசன்)
புளொட்டின் வளர்ச்சியில்
தோழர் தங்கராசாவின்
பாத்திரம்
புளொட்டினது மக்கள்
அமைப்பினை
கட்டியெழுப்பும்
முகமாக உறுப்பினர்களை
அரசியல் ரீதியில் வளர்த்தல்,
பயிற்சியளித்தல்
என்பன ஆரம்பமாயின.
இதற்காக தோழர் தங்கராசா
வவுனியாவிலிருந்து
யாழ்ப்பாணம்
அனுப்பி வைக்கப்பட்டார்.
தோழர் தங்கராசா
மலையகத்தை
பிறப்பிடமாகக்
கொண்டவர்.
இடதுசாரித் தத்துவத்தில்
நன்கு பரிச்சயமான
ஒருவர். மலையகத்தில் தொழிற்சங்க
நடவடிக்கைகளில்
ஈடுபட்டு
வந்த தோழர்
தங்கராசா
ஜே.வி.பியின்
ஆரம்ப காலகட்டங்களில்
அவர்களுடன்
தொடர்புகளைக்
கொண்டிருந்தவர். மலையகத்தில் தொடர்ச்சியாக
ஏற்பட்ட இனக்கலவரங்களால்
பாதிக்கப்பட்ட
இவர் பின்பு
வவுனியாவில்
குடியேறினார். தோழர்
தங்கராசாவின்
யாழ்ப்பாண
வருகையை தொடர்ந்து
அரசியல் பாசறைகளை நடத்துதல்,
கிராமங்கள்
தோறும் கருத்தரங்குகளை
நடத்துதல்
என்பன ஆரம்பமாயின.
தொடர்ச்சியாக
நடைபெற்ற
அரசியல் பாசறைகளுக்கூடாக
அதில் பயிற்சி பெற்றவர்கள்
தத்தமது பிரதேசங்களுக்குச்
சென்று மக்கள் மத்தியில்
பிரச்சாரம்
செய்தல், அவர்களை அரசியல் மயப்படுத்தல்,
அமைப்புகளாக்குதல்,
புதிய அங்கத்தவர்களை
இணைத்தல்
போன்ற செயற்பாடுகளில்
தீவிரமாக
ஈடுபட்டனர்.
மக்கள் மத்தியில்
சென்று எவ்வாறு பிரச்சாரம்
செய்வது, மக்களை எப்படி அவர்கள் முகம் கொடுக்கும்
பிரச்சனைகளுக்கூடாக
அணுகுவது,
அவர்களை எப்படி வென்றெடுத்து
எமது பக்கம்
அணிதிரட்டுவது,
என்றெல்லாம்
தோழர் தங்கராசா தனது பாசறைகளில்
தெளிவுபடுத்துவார்.
அத்துடன்
மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க
அமைப்பு (கடற் தொழிலாளர்
அமைப்பு, நகர சுத்தித்
தொழிலாளர்
அமைப்பு, கூலித் தொழிலாளர்
அமைப்பு, சுருட்டுத்
தொழிலாளர்
அமைப்பு, ஆட்டோ நடத்துனர்
அமைப்பு), விவசாயிகள்
அமைப்பு போன்றவற்றை
உருவாக்கவேண்டியதன்
அவசியத்தை
வலியுறுத்தியதோடு
மட்டுமல்லாமல்
அவற்றை நடைமுறைப்படுத்தும்
செயற்பாட்டிலும்
தோழர் தங்கராசா ஈடுபட்டார்.
மகளிருக்கு அரசியல்
பயிற்சியளித்து
அவர்களை தனித்துவமாக
செயற்படுமாறு
உற்சாகமளித்தார்.
ஆரம்பகாலங்களில்
மகளிர் அமைப்புக்குப்
பொறுப்பாக
செல்வி நியமிக்கப்பட்டு
அதன் வளர்ச்சிக்காக
கடுமையாக
உழைத்து வந்தார்.(செல்வி
-சேமமடு செல்வநிதி
தியாகராசா
– புலிகளால்
ஆகஸ்ட் 30, 1991 கடத்தப்பட்டு
படுகொலை செய்யப்பட்டவர்).
செல்வியுடன்
இணைந்து நந்தா, வனிதா
,யசோ
(தேவிகா தயாபரன்) கலா, செல்வம்
போன்றோர்
செயற்பட்டு
வந்தனர். மாணவர் அமைப்புக்குப்
பொறுப்பாக
அசோக் செயற்பட்ட
அதேவேளை அவருடன் இணைந்து தீபநேசன், ஹப்பி, விமலேஸ்வரன்,
அர்ச்சுனா
என்போர் செயற்பட்டு
வந்தனர்.
தொழிற்சங்க அமைப்புக்கு
பொறுப்பாக
நீர்வேலி
ராஜன் செயற்பட்டு
வந்தார்.
சுரேன், கண்ணாடி
நாதன், சிறி (கோவிந்தன்)
என்போர் தொழிற்சங்க
நடவடிக்கைகளில்
பின்னர் ராஜனுடன் இணைந்து செயற்பட்டு
வந்தனர்.
புளொட், தளத்தில் பல்வேறுபட்ட
அமைப்பு வடிவங்களில்
பலம்பெற்று
விளங்கியதற்கு
தோழர் தங்கராசாவின்
அரசியற்பயிற்சியும்
வேலைத்திட்டங்களும்
தான் பிரதான
பங்கை வகித்தது எனலாம். வெறுமனே ஆயுதங்களையும்
இராணுவ நடவடிக்கைகளையும்
வைத்துக்
கொண்டு ஈழவிடுதலைப்
போராட்டம்
நடத்தலாம்
என்று புளொட்டுக்குள்
இருந்த நிலையை மாற்றி இத்தகைய அமைப்புக்களையெல்லாம்
உருவாக்குவதற்கு
மூலகர்த்தாவாக
இருந்தது
மட்டுமல்லாது
அவற்றை வளர்ப்பதற்கு
நடைமுறையில்
சரியாக வழிகாட்டிய
ஒரே நபரும்
தோழர் தங்கராசாவே. நான் புளொட்டில்
இணையும் போது புளொட்டின்
கொள்கை என்னவென்றெல்லாம்
கேட்டது கிடையாது. அப்படி அறிந்து
கொண்டுதான்
செயற்பட வேண்டும் என்று நான்
நினைக்கவும்
இல்லை. தோழர் தங்கராசாவின்
அரசியல் பாசறைகள், கருத்தரங்குகளில்
பங்குபற்றியதன்
மூலமே குறைந்தபட்சம்
புளொட்டினது
கொள்கை என்ன என்பதை
அறிய முடிந்தது.
(இது நடைமுறையில்
எந்தளவிற்கு
பின்பற்றப்பட்டது
என்பது வேறு விடயம்.
இது பற்றிப்
பின்னால்
பார்ப்போம்).
இன ஒடுக்குமுறைக்கெதிரான
போராட்டத்தில்
சிங்கள-தமிழ்
முற்போக்கு
சக்திகளின்,
உழைக்கும்
மக்களின்
ஒற்றுமை, சிங்கள முற்போக்கு
சக்திகளுடனும்
உழைக்கும்
மக்களுடனும்
இணைந்து பேரினவாத அரசுக்கெதிராக
போராடுதல்,
சர்வதேச ரீதியில் ஒடுக்கப்பட்ட,
உழைக்கும்
மக்களின்
போராட்டத்துடன்
கைகோர்த்தல்,
சிங்கள – தமிழ் உழைக்கும்
மக்களுக்கிடையேயான
ஜக்கியப்பட்ட
போராட்டமில்லையேல்
தமிழ்மக்களின்
விடுதலைப்
போராட்டம்
வெற்றியடையப்
போவதில்லை
என்ற நிலைப்பாடு
அனைத்துமே
முற்போக்கானதும்
சரியானதுமாகும்.
இதையே தோழர் தங்கராசா
தனது அரசியல்
பாசறைகள்,
கருத்தரங்குகளில்
மிகவும் எளிமையாகவும்,
தெளிவாகவும்
எடுத்துச்
சொல்வதோடு
மட்டுமல்லாமல்,
இன்று இருக்கின்ற
பழைய (தோழரின்
சொல்லில்
சொல்வதானால்
"உழுத்துப்
போன" பெருமளவுக்கு
நிலப்பிரபுத்துவ
எச்சசொச்சங்களுடன்
கூடிய) சமூக அமைப்பைப்
பற்றிய ஆழமான, விஞ்ஞானரீதியான
விளக்கங்களுடன்
எடுத்துச்
சொல்வதுடன்,
அமையப்போகும்
புதிய சமுதாய அமைப்பைப்பற்றியும்
தெளிவாகக்
குறிப்பிடுவார்.
இவரது பேச்சுத்திறன்,
அதன் மூலம்
எவரையும்
தன்பக்கம்
கவர்ந்திழுக்கும்
பண்பு, சமூக அமைப்பைப்பற்றியும்,
சமுதாயப்
பிரச்சனைகளைப்பற்றியும்
எளிமையாக
எடுத்துரைக்கும்
இயல்பு என்பன எவரையும்
கவர்ந்தது
போலவே என்னையும்
கவர்ந்தது.
தோழர் தங்கராசா
ஒரு சிறந்த
அரசியல்வாதி,
ஒரு சிறந்த
பேச்சாளன்,
ஒரு சிறந்த
கிளர்ச்சியாளன்
என்று கூடச் சொல்லலாம்.
(புளொட்டின்
சிதைவுக்குப்
பின்னர் தோழர் தங்கராசா
இந்தியாவில்
இருந்து இலங்கை திரும்பி மலையகத்தில்
தொழிற்சங்க
நடவடிக்கைகளில்
ஈடுபட்டுவந்தார்.
2010 ம் ஆண்டு
மாரடைப்பால்
காலமானார்). |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |