|
||||
|
புளொட்டிலிருந்து தீப்பொறி
வரையான எனது அனுபவப்
பகிர்வுகள்
(பாகம்
7)
(நேசன்)
புளொட்டில் முரண்பாடுகளின்
தோற்றுவாய்கள் புளொட் தனது கடந்தகால
"இரகசிய"
அல்லது "தலைமறைவு"
என்ற நிலையிலிருந்து
வெளியே வரத்தொடங்கியிருந்தது. இந்தியாவுக்குப் பயிற்சிக்கு
ஆட்களை அனுப்புதல்,
அரசியல் பாசறைகள், மக்கள் அமைப்புக்களை
உருவாக்குதல்,
என்பனவெல்லாம்
ஒருவகை "அசுர" வேகத்தில்
நடைபெற்றுக்
கொண்டிருந்தது.
இவற்றுக்கெல்லாம் மக்களது
ஆதரவும், ஒத்துழைப்பும்,
பங்களிப்பும்
கூட கேள்விக்கப்பாற்பட்டதாக
இருந்தது.
பேரினவாத அரசுக்கெதிராக
சாத்தியமான
அனைத்துவழிகளிலும்
போராடுதல்
என்பதே எமது நிகழ்ச்சிநிரலாக
இருந்தது. இந்தக் காலப்பகுதியில்
புளொட்டின்
தலைமை பற்றியும்,
செயலதிபர்
உமாமகேஸ்வரன்
பற்றியும்
உயர்ந்த மதிப்பும்
தலைமை விசுவாசமும்
என்னிடமும்
இருந்தது
என்று சொல்லவேண்டும். இதற்கு இரண்டு
காரணங்கள்
இருந்தன.
1) புளொட்
பற்றியும்,
உமாமகேஸ்வரன்
மற்றும் சந்ததியார்
பற்றியும்
ஏற்கனவே மக்கள் மத்தியில்
இருந்த நல்ல அபிப்பிராயமும்
பிரபல்யமும்.
கூடவே "தமிழீழத்தின்
குரல்" வானொலிச் சேவையை (ஈழப்போராட்ட
வரலாற்றில்
முதன்முதலில்)
உருவாக்கி
அதனுடாக வெளிக்கொணர்ந்த
கருத்துக்கள்.
2) புளொட்டில்
தளத்தில்
செயற்பட்ட
பெரும்பான்மையான
மத்தியகுழு
உறுப்பினர்களிடையே
காணப்பட்ட
கடின உழைப்பும
எளிமையான
வாழ்க்கையும். புளொட்டின் இராணுவப்பிரிவு
தளத்தில்
பார்த்தன்
தலைமையில்
செயற்பட்டு
வந்தது. பார்த்தனுடன் இணைந்து
மல்லாவிச்சந்திரன்,
கொக்குவில்
சிவா, திருகோணமலை
கிறிஸ்டி
போன்றோர்
செயற்பட்டு
வந்தனர்.
இராணுவ தகவல் சேகரிப்பு
பிரிவுக்கு
பொறுப்பாக
ரமணன் செயற்பட்டு
வந்தார்.
சுழிபுரம் பகுதியைச்
சேர்ந்தவர்கள்
ஆரம்பத்தில்
பாலமோட்டை
சிவத்தின்
தலைமையிலும்
பின்னர் அவர் இந்தியாவுக்கு
பயிற்சிக்கு
சென்றதன்
பின் மீரான்
மாஸ்டரின்
கீழ் "சுந்தரம் படைப்பிரிவு"
என்று செயற்பட்டுக்
கொண்டிருந்தனர்.
வவுனியாவில்
யக்கடையா
இராமசாமி
(பின்னர் புளொட்டினால்
கொலை செய்யப்பட்டார்),
வவுனியா தம்பி (பின்னர்
புலிகளால்
கொலை செய்யப்பட்டார்)
போன்றோர்
"காத்தான்
படைப்பிரிவு"
என்றும் செயற்பட்டுக்
கொண்டிருந்தனர்.
யக்கடையா
ராமசாமி, தம்பி போன்றோர்
பார்த்தனின்
தலைமையின்
கீழ், பார்த்தனின்
வழிகாட்டலில்
செயற்பட்டுவந்த
அதே நேரம்
சுந்தரம்
படைப்பிரிவினரோ
தன்னிச்சையான
போக்கில்
செயற்படலாயினர்.
இந்தக் காலப்பகுதியில்
புளொட்டின்
அரசியல் பிரிவுக்கும்
இராணுவப்
பிரிவுக்கும்
இடையே (குறிப்பாக
சுந்தரம்
படைப்பிரிவுக்குமிடையே)
சில முரண்பட்ட
போக்குகள்
காணப்பட்டது
மட்டுமல்லாமல்
இராணுவப்
பிரிவுக்குள்ளேயேயும்
கூட முரண்பட்ட
போக்குகளை
அவதானிக்கக்
கூடியதாக
இருந்தது.
ஒரு அமைப்பினது
ஒருங்கிணைக்கப்பட்ட,
மத்தியப்படுத்தப்பட்ட
செயற்பாடு
என்பதற்கு
மாறாக, சில தன்னிச்சையான
போக்குகள்
அங்கும் இங்குமாகத்
தென்பட்டன.
சுழிபுரத்தை மையமாகக்
கொண்டியங்கிய
"சுந்தரம்
படைப்பிரிவினர்"
இராணுவப்
பொறுப்பாளர்
பார்த்தனின்
கட்டுப்பாட்டுக்குள்
இல்லாதது
மட்டுமல்லாமல்,
தளத்தில்
அன்று இயங்கிய நிர்வாகத்துக்கும்
கட்டுப்படாதவர்களுமாக
இருந்தனர்.
பார்த்தனிடம் காணப்பட்ட
மகத்தான ஆற்றல், மனோதிடம், ஆளுமை அனைத்துமே
சுந்தரம்
படைப்பிரிவினரை
கையாளும்
விடயத்தில்
பெருமளவு
வெற்றியளிக்கவில்லை.
அன்று தளத்தில்
செயற்பட்ட
நிர்வாகம்
கூட (காந்தன்
- ரகுமான் ஜான் தள
நிர்வாகப்
பொறுப்பாளராக
இருந்தார்).
சுந்தரம் படைப்பிரிவினரை
கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வருவதில் வெற்றிபெறவில்லை.
இத்தகைய முரண்பாடுகளை
நான் புளொட்டில்
இணைந்த ஆரம்ப காலங்களில்
அவதானித்திருந்த
போதும் இந்த முரண்பாடுகள்
எதிர்காலத்தில்
அமைப்பின்
வளர்ச்சிக்கு
பாதகமாக அமையும் என்று அன்று
நான் கருதியிருக்கவில்லை.
காரணம், இந்த முரண்பாடுகளை
அன்றைய யாழ் மாவட்டப்
பொறுப்பாளர்
சத்தியமூர்த்தியும்
தள இராணுவப்
பொறுப்பாளர்
பார்த்தனுமே
நேரடியாக
முகம் கொடுத்து அவற்றை கையாண்டதால்,
இந்த முரண்பாடுகளில்
இருந்த ஆழத்தன்மையையோ
அல்லது இந்த முரண்பாடுகளால்
அமைப்புக்கு
ஏற்படும்,
ஏற்படப்போகும்
பாதிப்புக்களையோ
என்னால் உணரமுடியாமல்
இருந்தது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |