|
||||
|
மங்குனி சீமானும் அவரின் மொக்கை அரசியலும்? (பகுதி 2) இந்த லட்சணத்தில்
'இது மற்றுமோர்
அரசியல் கட்சி அன்று
- மாற்று அரசியல் புரட்சி' 'நாங்கள் அரசியல்வாதிகள்
அல்ல - புரட்சிவாதிகள்'
- என்கிற பிரகடனத்தை
செய்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின்
கொள்கை விளக்க ஆவணத்தைப்
படிக்கும்போது
தலை சுற்றுகிறது.
எம்ஜிஆரின் அண்ணாயிசம்.
ஜெயலலிதாவின்
அம்மாயிசம், தேமுதிகவின்
தலைவரும்
நடிகருமான
விஜயகாந்த்
கட்சியின்
கொள்கை இவற்றைக்கூட
நாம் புரிந்துகொள்ள
முடியும்.
அகில இந்திய
நாடாளும்
மக்கள் கட்சியின்
தலைவரும்
நடிகருமான
கார்த்திக்
பேசுவதைக்கூட
நாம் புரிந்துகொள்ள
முடியும்.
ஆனால் 'நாம் தமிழர் கட்சி'யின்
ஆவணத்தைத்தான்
நாம் புரிந்துகொள்ள
முடியவில்லை. முதலில், 'இது மற்றுமோர்
அரசியல் கட்சி அன்று'
என்று சொல்வதுதான்
புரியாத புதிராக இருக்கிறது. அதிமுக,
திமுக, தேமுதிக போன்ற கட்சிகளைப்
போலத்தான்
பேனர்கள்
வைக்கிறார்கள்,
சுவரொட்டி
ஒட்டுகிறார்கள்,
மாநாடு போடுகிறார்கள்,
கொடி பிடிக்கிறார்கள்,
'வாழ்க சீமான்' முழக்கமிடுகிறார்கள்.
ஆவணத்தின் நடத்தை
விதிகள்கூட
புதிதாகவோ
அல்லது முற்போக்கானதாகவோ
இல்லை. அப்புறம் எங்கிருந்து
வந்தது மாற்று அரசியல் புரட்சி?
'நாங்கள் அரசியல்வாதிகள்
அல்லர் - புரட்சிவாதிகள்'
என்ற சீமானின்
அறிவிப்பைப்
பார்த்தவுடன்
ஏதோ தமிழ்த்
தேச அரசை
அமைக்கப்
படை அமைத்து
ஆட்சியைக்
கைப்பற்றப்
போகிறார்களோ
என்று பார்த்தால்...
'கட்சி பதிவு செய்த
நாளிலிருந்து
5 ஆண்டுகளுக்குள்
தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில்
கட்சி போட்டியிடும்
என்று கட்சி உறுதிஅளிக்கிறது' இதுதான் புரட்சிவாதிகளுக்கான
இலக்கணமாம். சீமான் அவர்களே, இந்தியாவில்
ஏதாவது புரட்சி செய்ய வேண்டுமென்று
விரும்பினால்
முதலில் சாதிப்பாகுபாட்டுக்கு
எதிராகப்
போராடுங்கள். தீண்டாமை, காணாமை,
அண்டாமை என்கிற தொட்டால் தீட்டு என்கிற சமூகக் கொடுமை எப்படியெல்லாம்
வடிவம் மாறி இப்போதும்
தொடர்வதை
நாம் தமிழர்கள்
உணர்வார்களா?
எப்போதெல்லாம் தலித்துகள்
தலைநிமிர
முயல்கிறார்களோ
அப்போதெல்லாம்
பெரும் வன்முறை தலித்துகள்
மீது திணிக்கப்பட்டது. புரட்சியாளர் அம்பேத்கர்
மிக ஆழமாக
ஆய்வு செய்து சாதி ஒழிப்புக்கான
களத்தைத்
தேர்வு செய்து களமாடினார். தந்தை
பெரியார்
அதற்காகத்தான்
கடவுள் மறுப்புக்
கொள்கையையும்
இந்துத்துவ
எதிர்ப்புக்
கொள்கைகளையும்
முன்வைத்து
சாகும் வரை போராடினார்.
வடக்கே ஜோதிராவ்
பூலே முதல்
தெற்கே அய்யா வைகுண்டர்
வரை வாழ்நாள்
முழுக்க சாதி ஒழிப்புப்
போராட்டத்தை
நடத்தினார்கள். சாதிவெறியில் சேரிக் குடிசைகள்
தீக்கிரையாயின.
பொதுக் கிணற்றில்
தண்ணீர் எடுக்க முடியாது. பொதுப்பாதையில் நடக்க முடியாது.
கோவிலுக்குள் நுழைய முடியாது.
பொது நீரோட்டத்தில்
கலக்க முடியாது. சிவகங்கை மாவட்டத்தில்
இன்னமும்
சாதியக் கட்டமைப்பு
இருப்பதை
அம்மாவட்டத்தில்
பிறந்த அண்ணன் சீமான் அறிவாரா என்பது தெரியவில்லை. கரியமாணிக்கம்
அம்பலமும்
அவருக்குப்
பின் வந்த
அவரது மகன் ராமசாமி
அம்பலமும்
சிவகங்கை
மாவட்டத்தையே
தம் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கும்
கொடுமையை
'நாம் தமிழர்'கள்
அறிவார்களா?
அங்கு தலித்துகளின்
நிலை என்ன
என்பதற்கு
கண்டதேவி
கோவிலே சாட்சி. அங்கு இன்னமும்
வடம்பிடிக்கவே
முடியாத கொடுமையைச்
செய்வதும்
தமிழர்கள்தான். சீமான் தனது புரட்சியை
இங்கு ஆரம்பிப்பதே
நல்லது.
இந்தியக் கட்டமைப்பு
குறித்தும்
இந்துத்துவ
பாசிசம் குறித்தும்
இவற்றுக்கெல்லாம்
அடிப்படையான
சாதியம் குறித்தும்
ஆய்வு செய்யப்பட்ட
புரட்சியாளர்
அம்பேத்கர்
அவர்களின்
பல தொகுப்புகள்
உள்ளன. அவற்றை எல்லாம்
தயவுகூர்ந்து
'நாம் தமிழர்கள்'
படிப்பதுதான்
அறிவுடைமை.
குறைந்தபட்சம் பாவலர்
தணிகைச்செல்வன்
அவர்களின்
தேசியமும்
மார்க்சியமும்
என்கிற நூலையாவது
வாசிப்பது
நல்லது. இந்துத்துவத்தை உடைத்தால்தான்
சாதியத்தை
வேரறுக்க
முடியும்
என்பதை ஆய்வு செய்த
பின்புதான்
புரட்சியாளர்
அம்பேத்கர்
பௌத்தத்திற்கு
மாறினார். இந்துத்துவம் சக மனிதர்களை
இழிவுபடுத்துகிறது;
மனிதர்களாக
அங்கீகரிக்க
மறுக்கிறது
என்பதால்தான்
தமிழகத்திலும்
கிறித்தவர்களாக,
இசுலாமியர்களாக
மக்கள் மதம் மாறினார்கள்.
கிறித்தவம் வந்த பிறகுதான்
தலித்துகள்
படிக்கவே
ஆரம்பித்தார்கள்.
நல்ல உடை உடுத்த ஆரம்பித்தார்கள்.
நல்ல உணவு உண்ண ஆரம்பித்தார்கள்.
அதற்கு முன்பு
வரை தலித்துகள்
படிப்பதே
மனுதர்மத்திற்கு
எதிரானது
என்ற நிலை
இருந்தது.
(தொடரும்....) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |