Contact us at: sooddram@gmail.com

 

என்று முடியும் இந்த ஏமாற்று வேலை? (பகுதி 2)

இந்திய தமிழக அரசியல்வாதிகள் தமது அரசியல் நலனிற்காக அடிக்கடி புலி புலி என பூச்சாண்டி காட்ட நீங்களோ மகிழ்வின் உச்சத்திற்கு செல்கின்றீர்கள். உண்மையில் இந்தியாவில் புலிகளின் பயிற்சிமுகாமோ அல்லது செயற்பாடுகளோ இல்லை. இது இந்திய அரசிற்கு நன்கு தெரியும். தப்பிச்சென்ற ஒரு சில உறுப்பினர்களும் தருணம் பார்த்து வெளிநாடுகளிற்கு செல்லவே முயற்சிக்கிறார்கள். தவிர நீங்கள் நினைப்பதுபோல் எதுவும் இந்தியாவில் இல்லை. இந்நிலையில் தமிழகத்தலைவர்களின் அரசியல் பிழைப்புவாதம் மீண்டும் தமிழரை சீண்டத்தொடங்குகிறது. 

'பிரபாகரனின் இருப்பை மறுதலித்து வரலாற்றுத் தவறு செய்யாதீர்கள் என்று...பலர் கூறுகிறார்கள்.

தாமும் தமிழ்நாட்டிலுள்ள தமிழின உணர்வாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் பிரபாகரன் இருக்கின்றார் என்று நம்பவைக்க படாத பாடுபடுவதாகவும் இப்போது தான் எல்லோரும் நம்ப ஆரம்பித்துள்ளார்கள்' என்றும் கூறுகின்றார்கள். சரி நீங்கள் சொல்வது உண்மை என்றால் ஏன் இன்று புலிகளின் சர்வதேச கட்டமைப்பு சிதைந்து தறிகெட்டுப்போய் ஒவ்வொருவரும் மேய்ப்பவன் இல்லாத ஆட்டு மந்தைக்கூட்டம் போல் உள்ளனர். இன்றய தமிழரின் இழிவான நிலைக்கு சுயநலத்துடன் செயற்படும் சர்வதேசப்புலிகள் தாமே எனச் சொல்லும் சில சுயநலவாதிகளே காரணம். இதில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களிற்கு சாதாரண துப்பாக்கியின் பாரம் கூட தெரியாது. இன்று வீரவசனம் பேசி மக்களை ஏமாற்றி பிழையான வழியில் கொண்டு செல்கின்றார்கள். இவர்களுக்கு ஜால்ரா போடுவதற்கென்று ஒரு கூட்டம் உள்ளது. இவர்கள் எல்லோரும் தேசியச் செயற்பாட்டாளர்கள், உணர்வாளர்கள் என்னும் புதிய புதிய பெயர்களில் புதிதாக முளைக்கிறார்கள். தமிழ் நாட்டில் சாதிக்கு ஒரு கட்சி தெருவுக்குத் தெரு ஒரு கட்சி என்று இருப்பது போல புலம்பெயர் தமிழ் சமூகத்திலும் புதிய புதிய பெயர்களில் துதிபாடும் கூட்டங்கள் முளைவிடத் தொடங்கி விட்டன.
 
பிரபாகரன் இருக்கிறார் என்று கூறுவதன் மூலம் எதை நீங்கள் சாதிக்கப்போகிறீர்கள்?
தமிழ்இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய புலச் சிந்தனையாளரகளே. அவர்களின் சிந்தனைஎல்லாம் தமது சுயநல வாழ்கைக்கானதாகவே அமைந்திருக்கும் அவர்களால் எதையும் செய்யமுடியாது. பணம் பண்ணுவதிலேயே குறியாக இருப்பார்கள்.
பிரபாகரனின் நிலைமை என்ன என்று தேடுவதை முதலில் நிறுத்தி. புலி என்ற மாயையில் இருந்து வெளியே வாருங்கள். சில நேரங்களில் எல்லாமே எமக்கு எதிராக நடக்கிறது. இதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் உண்மை அதுதான் என்றால் அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

முள்ளிவாய்காலில் என்ன நடந்தது என்பது புலித் தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று நடந்து முடிந்து விட்டது. அடுத்த கணமே. ஒரு கற்பனையில் இப்படி நடந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் விடுதலை வியாபரிகளுக்கு ஏற்படுகின்றது. அதனால் தான் அவர்களின் கற்பனைக் கதைகள் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களை சயனற் தற்கொலைக்கு தயார்படுத்தியவர். போட்டோக்களுக்கு இரண்டு சயனற் குப்பிகளுடன் போஸ் கொடுத்த பிரபாகரன் கையைத் தூக்கிக்கொண்டு இராணுவத்திடம் போகும் போது சயனற் குப்பி இல்லாமல்தான் போனாராம். அங்கு அவருக்கு சயனற் குப்பி அணிந்துவிடப்பட்டது. எக்கட்டத்திலும் அதை உட்கொள்ள அவர் முயற்சிக்கவில்லையாம். உலகின் மாபியா கும்பல்களிடம் இருந்து எடுத்துக்கொண்ட தற்கொலை உத்தியை தனது இயக்கத்தின் முக்கிய கொள்கையாகத் திணித்துக்கொண்ட பிரபாகரன் இங்கேயும் தனது சீடர்களுக்குத் துரோகமிழைத்தார்.
 
கற்பனைக் கதைகளின் அடிப்படையில் பிரபாகரன் வருவார், வருவார் என்ற நம்பிக்கையினை மக்களின் மனதினில் இன்று ஆழமாக பதியவைக்க படாத பாடுபடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த அரசிற்கெதிராக தமிழர் போராடினார்களோ அந்த அரசிற்கு நடந்தது என்ன, நடந்துகொண்டிருப்பது என்ன, என்ற உண்மை தெரிய..... தமிழரோ
இன்னும் புலி என்ற மாயையில் இருந்து விடுபடவில்லை.

 
உண்மையில் மகிந்த ராஜபக்ஷவிற்கோ அல்லது கோட்டபாய ராஜபக்ஷவிற்கோ அல்லது சரத்பொன்சேகாவிற்கோ இறுதியுத்தத்தில் என்ன நடந்தது என்று தெரியாது என்று யாராவது சொல்லமுடியுமா? உண்மையிலேயே பிரபாகரன் சாவடையவில்லையென்றால் எதற்காக ஒரு அரசிற்கெதிராக போராடியவர்களை அந்த அரசே மன்னித்து விடுதலை செய்யவேண்டும். இவர்கள் மீண்டும் சென்று தலைவனுடன் சேர்ந்து விடுவார்கள் என்று ஏன் நினைக்கவில்லை? அரசியற்
காரணங்களிற்காக மன்னித்தது என்றால், புலிகளின் முக்கிய உறுப்பினர்களை ஏன் விடுதலைசெய்யவில்லை?

(தொடரும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com