Contact us at: sooddram@gmail.com

 

உலகில் அரசாங்க அலுவல்களுக்கு அங்கீகாரம் பெறாத மொழிஎஸ்பெரண்டோ'

புதிதாக உருவாக்கப்பட்ட பத்து துணை மொழிகளில் இதுவும் ஒன்று

செம்மொழியாக ஒரு மொழியை தெரிவு செய்ய அதன் இலக்கிய படைப்புக்கள் வளம் மிகுந்ததாகவும் பழைமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும் என்பது மொழி வல்லுநர்கள் கோட்பாடு. உலகில் இன்று பேசப்படும் 6,900 மொழிகளில் 8 மொழிகளே உலகின் பண்டைய கால செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழும் ஒன்று என்பது பெருமைக்குரியது தான். இக் கட்டுரை தமிழ் மொழியில் அதிகம் அலசப்பட்டிராத ஓர் புதிய மொழியைப் பற்றி விவரிக்கிறது.

Esperanto (எஸ்பெரண்டோ) இன்று உலகில் அதிகம் பேசப்படும்உருவாக்கப்பட்ட மொழிஎன்ற பெருமையை, தோற்றம் பெற்ற நூறாண்டுகளுக்குள் பெற்றுக்கொண்ட மொழி. உலகின் அனைத்து இன மக்களாலும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில், தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு பொதுவான மொழியொன்றை உருவாக்கினால் எனும் யோசனையில், எல். எல். சாமன்ஹோஃப் என்பவரால் 1877 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அதே ஆண்டில் அவர் எழுதியஉனுவா லிப்ரோஎனும் நூலில் எஸ்பெரண்டோ மொழி பற்றிய தகவல்களை முதன் முறையாக உலகுக்கு வெளியிட்டார். கற்றலுக்கு எளிதாகவும் நாடுகளுக்கு இடையே மொழித் தடைகளை போக்கி உலக பொது மொழியாக எஸ்பெரண்டோ இருக்கும் என அப்போது அவர் ஊகம் வெளியிட்டார்.

அவரது கணிப்பு வெற்றி பெற்றதா?

இல்லை, எனினும் முன்னேற்றகரமாக தனது பயணத்தை தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகில் இன்று சுமார் 10,000 பேர் இம்மொழியை சரளமாக பேசுவதுடன் 100,000 பேர் தமது அன்றாட வாழ்நாளில் பயன்படுத்துகிறார்கள். 1 மில்லியன் பேரால் இம்மொழியை புரிந்துகொள்ள முடிகிறது. 10 மில்லியன் பேர் இம்மொழியை கற்க ஆர்வமாக உள்ளார்கள்.

2000 ற்கு மேற்பட்ட மக்கள்  Esperantoதாய்மொழியாக கொண்டுள்ளனர். அவர்களது அடுத்தடுத்த தலைமுறையினரும் எஸ்பெரண்டோ மொழி பேசுபவர்களாக உள்ளார்கள். கடந்த 2011 நவம்பர் மாதம் எஸ்பெரண்டோ வலைப் பதிவொன்று இரண்டாம் தலைமுறை எஸ்பெரண்டோ இளைஞர் ஒருவரை செவ்வி கண்டது.

நீங்கள் இரண்டாம் தலைமுறை எஸ்பெரண்டோ மொழிக்காரரா?

ஆம், எனது தாயாரின் பெற்றோர் எஸ்பெரண்டோ மொழி மூலம் தான் அறிமுகமாகிக் கொண்டார்கள். அவர்கள் தமக்குள் இம்மொழியை சரளமாக பேசத் தொடங்கிய போது எனது தாயார் பிறந்தார். நான் பிறந்த போதும், எனது பெற்றோர் எஸ்பெரண்டோ மொழியிலேயே என்னுடன் உரையாட தொடங்கிவிட்டனர்.

பாடசாலையில் சவாலாக இருந்தது. மற்றைய மொழிகளை விட எஸ்பெரண்டோவை இலகுவாக கற்றுவிடலாம். ஆனால் இம் மொழி பேசத் தெரிந்தவர் அருகில் இருந்தால் மட்டுமே எம்மால் உரையாட முடியும் என்கிறார் அந்த இளைஞர்.

இம்மொழியின் உருவாக்கத்திற்கான பின்னணி :-

இம்மொழியை உருவாக்கிய சாமென்ஹாஃப் ஒரு யூத கண் வைத்தியர். அவருடைய புனைபெயர்  Doktoro  Esperanto (Dector Esperanto)  எஸ்பெரண்டோ மொழியை உருவாக்கிய போது அவர் அதைLa Internacia Lingvo (The International Language) என அழைத்தார். எனினும் அம்மொழி பிரபலமடைந்த போது  Esperanto ஆக மாற்றம் பெற்றது  Esperanto என்பதன் அர்த்தம் ஒன்று என்பதே எதிர்பார்ப்பு.

பைல்ஸ்டோக் எனும் போலந்து நகரில் பிறந்து வளர்ந்த சாமென்ஹோஃப், போல்ஸ், ரஷ்சியன், யூத மொழி, லிதுவானியென்ஸ், ஜேர்மனிய மொழி பேசும் மக்கள் இடையே வாழ்ந்தார்.

இம்மக்களிடையே புரிந்துணர்வு, அவநம்பிக்கை ஏற்படுவதற்கு காரணம் இவர்களுடைய மொழிகள் வித்தியாசமாக இருப்பதே என்பது அவரது வாதம். இதற்கு தீர்வாக பொதுவான சர்வதேச மொழியொன்றை உருவாக்கினால் என்ன என சிந்தித்தார். அதனடிப்படையில் 16 அடிப்படை இலக்கண விதிகளை வகுத்து இப்புதிய மொழியை உலகுக்கு அறிவித்தார்.

இம்மொழியை வளர்த்தெடுப்பதற்கு ஆரோக்கியமான கருத்துக்களை தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் கூறிவந்தார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. பலர் இம்மொழியினால் ஈர்க்கப்பட்டு இதனை கற்கத் தொடங்கினர். அதன் பயனாக 1905 ஆம் ஆண்டு முதலாவது எஸ்பெரண்டோ சர்வதேச காங்கிரஸ் மாநாடு கூடியதன் மூலம் இம்மொழிப் பரம்பல் மேலும் துரிதமானது.

இம்மொழியின் தன்ம :

இலத்தீன் மொழிகள், ஆங்கிலம், ஜேர்மன், போலந்து, ரஷ்ய மொழிகளின் ஆதிக்கம் 1ஸ்பெரண்டோவில் நிறைந்துள்ளது. ஆனால் கற்பதற்கு மிக இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக

கற்றல்என்பதற்கு எஸ்பெரண்டோவில் சொல :

Lerni,

பாடசாலை என்பதற்க :

Lernejo,

மாணவருக்க :  Lernato

ஆசிரியருக்க : Lernejestro

ejo  : என்றால்இடம்

 jestro: என்றால்

வழிநடத்துபவர்என

பொருள்படுகிறது.

Lerni எனும் சொல்லுடன் இறுதி எழுத்துக்களை மாத்திரம் இவ்வாறு தேவைக்கேற்றாற் போல் மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்.

இம்மொழியின் குறைபாட :

இம்மொழிக்கே உரிய சில சிறப்பு எழுத்துக்களுக்கு படிவ முறை இல்லாதது இம்மொழியின் குறைபாடுகளில் ஒன்று. அதாவது c g h j s u   எனும் எழுத்துக்கள் இம்மொழியில் மாத்திரமே உள்ளன. இவற்றிற்கான எழுத்து படிவம் கைத்தொலைபேசிகளில் கிடையாது. எனினும் எஸ்பெரண்டோ மொழியில் x எனும் எழுத்து இல்லாததால் cx gx hx jx sx ux  என இந்த சிறப்பு எழுத்துக்களை எழுதுகிறார்கள்.

மேலும் எந்தவொரு நாட்டினாலும் அரச கருமங்களுக்காக எஸ்பெரண்டோ மொழி அங்கீகரிக்கப்படவில்லை. ஐ. நா. வும் இம்மொழியை எந்தவொரு தேவைக்கும் பயன்படுத்தியதில்லை. அரச கல்வி பொது பரீட்சைகளிலும் இம்மொழியில் விடையெழுத அனுமதியில்லை.

ஆரோக்கியமான வளர்ச்சி!!

இன்று சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பிரபலமடைந்து வரும் இம்மொழி, சமூக வலைத்தளங்களில் செட்டிங், கைத்தொலைபேசிகளில் எஸ். எம். எஸ். என்பவற்றிற்கு இளைஞர்களால் புது யுக்தியாக பயன்படுத்தப்படுகிறது.

எஸ்பெரண்டோ மொழியில் எழுதப்பட்ட இலக்கிய கவிதை புத்தகங்கள் பல அவற்றின் தனித்துவம் கருதி பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. சில நாட்டு வானொலி அலைவரிசைகளில் எஸ்பெரண்டோ மொழியில் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. எஸ்பெரண்டோ மொழியிலான இசைப் பாடல்களும் பெரும்பாலானோரால் கேட்கப்படுகிறது.

அடிப்படை:

இம்மொழியின் அடிப்படை சொற்கள் சில :  mi - நான், vi - நீ, li - அவன், si - அவள், gi - அது, la - thலீ, ஹீலீs - ஆம், nலீ - இல்லை,  Bona - வணக்கம்.

உங்களது தாய்மொழிக்கான மாற்று மொழியல்ல இது. நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய இரண்டாம் மொழியாக இதை கொண்டு வருவதே எமது நோக்கம் எனக் கூறும் எஸ்பெரண்டோ மொழி பேசுபவர்களின் பேராவல், வேக மாக நிறைவேறத் தொடங்கு மாயின் பண்டைய செம்மொழி களுக்கு கூட ஆபத்து நேரலாம்.

ஆனால் எஸ்பெரண்டோ மொழிக்காரர்கள் பலர் தங்களது சமூக வாழ்க்கைக்கு இன்னுமொரு மொழியை தெரிந்திருக்க வேண்டிய அவசியம் என்பது தான் தற்போதைய நிலைமை.

உலகில் புதிதாய் உருவாக்கப்பட்ட மொழிகள் வேறு உள்ளனவா?

எஸ்பெரண்டோ மட்டும்ல, தனித்துவமான எழுத்து படிவங்களுடன், உலகில் புதிதாய் உருவாக்கப்பட்ட துணை மொழிகள் பத்திற்கு மேல் உள்ளன. எனினும் எஸ்பெரண்டோ மொழியே அவற்றில் முதன்மை பெறுகிறது. சிறந்த உதாரணமாக விக்கிபீடியா மற்றும் Google Translater களில்  Esperanto மொழிப் பிரிவு உள்ளடக்கப்பட்டி ருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

 Cu vi scias pri esperanto? என்றால் எஸ்பெரண்டோ மொழி பற்றி தெரிந்துள்Zர்களா? என பொருள்படுகிறது.

இதுவரை இல்லையெனில் இப்போது உறுதியாக கூறலாம். ஹீலீs’.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com