சேதுவை அகழ்ந்து
கப்பல் விடுவோம்!
(செ.
முத்துக்கண்ணன்)
தமிழகத்தின்
160 ஆண்டுகால கனவு
திட்டமாக உள்ள
சேது கால்வாய்திட்
டத்தை உடன் அமலாக்கிட
வேண்டும் என இந்திய
ஜனநாயக வாலிபர்
சங்கத் தின் சார்பில்
கால் நுாற்றாண்டுகளாய்
பல கட்ட போராட்டங்களை
நடத்தி வந்துள்
ளோம். தென் மாவட்டங்களில்
போதிய தொழிற்சாலைகள்
இல்லை, இயற்கை
ஏமாற்றுவதால்
விவசாயம் பொய்த்துக்
கொண்டே இருக்கிறது,
வேலைவாய்ப்பு
கள் அருகிக் கொண்டே
வருகிறது, வாழ
வழியில்லாமல்
வேலை தேடி வெளி
மாவட்டங்களுக்கும்,
மாநிலங்களுக்கும்,
தேசங்களுக்கும்
சென்று கொண்டிருப்
போர் அரை நுாற்றாண்டுகளாய்
அதிகரித்த வண்ணம்
உள்ளது.
சேது கால்வாய்
திட்டம் நிறைவேற்றப்
பட்டால் தென்மாவட்டங்களில்
உள்ள கனிம மற்றும்
நில வளங்களை முழுமை
யாக பயன்படுத்தி
புதிய தொழிற்சாலை
களும், அதன் சார்பு
தொழில்களும், ஏற்
கனவே உள்ள பாரம்பரிய
தொழில்களான பஞ்சாலை,
பவர்லுாம், தீப்பெட்டி,
பட்டாசு உள்ளிட்டு
வர்த்தகத்திற்கு
முழுமையாக பயன்படும்.
சேது கால்வாய்த்திட்டத்தை
உடன் அமலாக்கிடுவது
தென் தமிழகத் தின்
தொழில்வளர்ச்சி,
பாரம்பரிய தொழில்
களின் வளர்ச்சிக்கும்,
புதிய வேலைவாய்ப்
புகளை உருவாக்கிடவும்
உதவிடும். இதன்
மூலம் ஏறத்தாழ
780 கிலோமீட்டர்
( 424 கடல் மைல்)
துாரமும், 30 மணி
நேரமும் மிச்சமாகும்.
துாத்துக்குடியில்
இருந்து சென்னைக்கு
434 கி.மீ, விசாகப்பட்
டினத்திற்கு
304 கி.மீ, கொல்கத்தாவிற்கு
265 கி.மீ, சிட்டகாங்
220 கி.மீ, இரங்கூன்
119 கி.மீ, சிங்கப்பூர்
42 கி.மீ என பயணத்
துாரங்கள் மிச்சமாகும்.
7517 கிலோமீட்டர்
நீளமும், 12 பெரிய
மற் றும் 185 சிறிய
துறைமுகங்களை
கிழக்கு மற்றும்
மேற்கு பகுதிகளில்
அற்புதமான கடற்கரை
வளத்தை கொண்ட நாடாக
இந்தியா உள்ளது.
இந்தியாவின்
மேற்கு கடற்கரையை
போல் கிழக்கு கடற்கரை
யையொட்டிய பகுதி
ஆழம் அதிகமில்லை.
பாம்பனுக்கும்,
தலைமன்னாருக்கும்
இடையே ஆழம் குறைவாக
உள்ளதால் மும்பை,
கொச்சி, திருவனந்தபுரம்
போன்ற இடங்களில்
இருந்து கடல் வழியில்
சென்னை, விசாகப்பட்டினம்,
கொல்கத்தா போன்ற
துறைமுகங்களுக்கு
பெரிய அள விலான
கப்பல்கள் வர வேண்டுமென்றால்
கூட இலங்கையின்
கொழும்பு துறை
முகத்தை சுற்றியே
வரவேண்டிய நிலை
உள்ளது. இதனால்
இந்திய நாட்டின்
கடல் வழி வர்த்தகத்தில்
நடைபெறும் மொத்த
மதிப்பில் 70 சதவீதம்
கொழும்பு துறை
முகம் வாயிலாக
நடக்கிறது. இந்தியாவின்
ஒட்டுமொத்த ஏற்றுமதி,
இறக்குமதி துறையில்
துாத்துக்குடி
துறைமுகம் மூன்
றாவது இடத்தை வகிக்கிறது.
ஆனால் இங்கு அதிகமான
எடையுள்ள (
50000, 70000 டன்) கப்பல்கள்
வந்தால் தரைதட்
டிடும் நிலை உள்ளதால்
பெரிய கப்பல்கள்
கூட குறைவான எடையளவோடே
வரக் கூடிய சூழல்
உள்ளது. துறைமுகத்தை
விரிவு படுத்தும்
பணி மட்டுமே முடிந்துள்ளது.
துாத்துக்குடி
துறைமுகம் உருவாக்கப்
பட்ட பிறகே துாத்துக்குடியை
சுற்றி பல புதிய
தொழிற்சாலைகள்
அமைக்கப்பட் டன.
குறிப்பாக ஸ்பிக்,
அனல் மின் நிலை
யம், கனநீர் தொழிற்சாலை,
டாக் உள் ளிட்டு
நுாற்றுக்கணக்கான
கடல்வழி ஏற்றுமதி
நிறுவனங்கள் உருவாயின.
இந் தியாவிற்குள்ளேயே
உள்நாட்டு வர்த்தகத்
திற்கு குறிப்பாக
நிலக்கரி, சிமெண்ட்,
உரங் கள், கடல்
உணவு வகைகள், துணிகள்,
எந்திரங்கள் ஆகியவற்றை
கொண்டு செல்ல சாலைப்போக்குவரத்து
நீர்வழி போக்குவரத்தைவிட
கூடுதலாக உள்ளது.
சிறு துறைமுகங்களாக
உள்ள முட்டம்,
இராமேஸ்வரம், நாகப்பட்டினம்,
காரைக் கால், கடலுார்,
பாண்டிசேரி ஆகியவை
வளர்ச்சியும்.
குறிப்பாக கன்னியாகுமரி
மாவட்ட இரப்பர்
தொழில், இராமேஸ்வரத்
தின் மீன்பிடி
தொழில், சிவகங்கை
மாவட் டத்தின்
கிராபைட் தொழில்,
திருநெல் வேலி,
விருதுநகர் மாவட்டத்தின்
வர்த் தகங்கள்
கூடுதலான வளர்ச்சியும்,
வேலை வாய்ப்பும்
பெறும். கடல்
ஆழப்படுத்தப்
படுவதால் மீன்வளமும்
அதிகரிக்கும்.
இதனால் மீன்
ஏற்றுமதியும்
அதிகரிக்கும்.
இந்த பகுதியில்
தான் இயற்கையி
லேயே அமைந்துள்ள
மணல்திட்டுகள்
ஏராளமாக உள்ளன.
இதனைதான் ஆதம்
பாலம் என்கின்றனர்.
சில நேரங்களில்
கடல் மட்டத்தின்
உயர்வு தாழ்வை
பொறுத்து இது தரைப்பகுதியாக
உயர் வதும், கடலில்
அமிழ்ந்து போவதும்
என தொடர்ந்து நடைபெற்று
வருகிறது. இது போன்ற மணல்
திட்டுக்கள் உலகம்
முழு வதும் ஏராளமான
இடங்களில் உள்ளன.
இந்த மணல் திட்டுக்களை
அகற்றி விட்டு
பாம்பனுக்கும்,
தலைமன்னாருக்
கும் இடையே கால்வாய்
தோண்டினால் அதில்
கப்பல் போக்குவரத்தை
நடத்திட முடியும்
என 1860ம் ஆண்டு இந்திய
கடற்படையின் கமாண்டராக
இருந்த ஏ.டி. டெய்லர் திட்டத்திற்கான
பரிந்து ரையை வழங்கினார்.
அதற்கு பின் 1922ம்
ஆண்டு வரை 7 குழுக்களும்,
சுதந்திர இந்தியாவில்
7க்கும் மேற்பட்ட
குழுக் களும் பரிந்துரைகளை
வழங்கி இந்த திட்
டம் நிறைவேற்றுவதற்கான
சாத்தியக் கூறுகளை
உறுதிப்படுத்தின.
1955ம் ஆண்டு ஜவகர்லால்
நேரு, இராமசாமி
முதலியார் தலைமையில்
ஒரு குழு அமைத்து
அன்று 998 லட்சம்
ரூபாய்க் கான ( சுமார் 10 கோடி
ரூபாய்) திட்ட
மதிப் பீட்டை சமர்ப்பித்தது.
அதன் பின்பு
1983ம் ஆண்டு இந்திராகாந்தி,
லெட்சுமி நாரா
யணன் தலைமையில்
ஒரு குழு நியமித்து
அக்குழு ரூ.282 கோடி
மதிப்பீட்டில்
திட் டத்திற்கான
பரிந்துரையை வழங்கியது.
தமிழகத்தில் இருந்து
இந்திய ஜன நாயக
வாலிபர் சங்கம்
போன்ற இளைஞர் அமைப்புகள்
தொடர்ச்சியாக
நடத்திய போராட்டத்தின்
விளைவாக 2000ம் ஆண்டு
நவம்பர் 28 அன்று
தலைநகர் தில்லியில்
நாடாளுமன்றத்தின்
முன்பு தமிழக இளைஞர்கள்
ஆயிரக்கணக்கா
னோரை திரட்டி பெரும்
திரள் ஆர்ப்பாட்
டம் நடத்தி அன்றைய
தினம் பிரதமராக
இருந்த வாஜ்பாயிடம்
மனு கொடுத்து இத்திட்டம்
நிறைவேற்றப்படவேண்டிய
தன் அவசியம் குறித்து
வற்புறுத்தப்பட்
டது. தொடர்ந்து
இந்திய நாடாளுமன்றத்
தில் இடதுசாரிகட்சி
நாடாளுமன்ற உறுப்
பினர்களின் வற்புறுத்தலுக்குபின்
2002 ம் ஆண்டு வாஜ்பாய்
அரசு இத்திட்டத்திற்
கான ஒப்புதலை அளித்தது.
அப்போது தமிழகத்தில்
ஆட்சியில் இருந்த
ஜெய லலிதா தலைமையிலான
அரசு இதற் கான
எந்த ஆட்சேபணையும்
தெரிவிக் கவோ,
எதிர்க்கவோ இல்லை.
இந்து மத அமைப்புகளும்
எதிர்ப்பை தெரிவிக்க
வில்லை.
இதன் பின்னணியில்
2004ம் ஆண்டு ஆட்சி
மாற்றம் ஏற்பட்டு
ஐக்கிய முற் போக்கு
கூட்டணி அரசு-1,
இடதுசாரி களின்
ஆதரவோடு ஆட்சியில்
அமர்ந்த போது இந்த
திட்டத்தை அமலாக்க
நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டதன்
தொடர்ச்சியாக
திட்டத்திற்கான
அனைத்து வரைவுகளும்
இறுதிப்படுத்
தப்பட்டு 07.09.2004 முதல்
02.02.2005 வரை தமிழக கடற்கரையோர
மாவட்டங் களான
கடலுார், நாகப்பட்டினம்,
திரு வாரூர், இராமநாதபுரம்,
துாத்துக்குடி,
கன் னியாகுமரி
ஆகியவற்றில் பொதுமக்
களை நேரில் சந்தித்து
கருத்துக்கேட்பு
கூட்டங்கள் நடத்தப்பட்டு
அவர்களது சந்தேகங்களுக்கு
உரிய தெளிவான விளக்கங்களை
அளித்த பின்னணியில்
எந்தவித எதிர்ப்பில்லாமல்
அனைவ ராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இறுதியாக தேசிய
சுற்றுச்சூழல்
ஆய்வு மையம் சுற்றுப்புறச்
சூழல் பாதிப்பு,
மீன்வள பாதிப்பு,
பவளப்பாறை பாதிப்பு
குறித்து முன்னுக்கு
வந்த அனைத்து கேள்விகளுக்கும்
உரிய ஆய்வை நடத்தி
அது குறித்த அறிக்கையை
அரசுக்கும், உச்ச
நீதிமன்றத்திற்கும்
அளித்தது. மேலும்
இந்த திட்டத்தில்
பொருளாதார பலன்,
50000 டன் எடையுள்ள
கப்பல்கள் செல்ல
ஏற்பாடு என்ன என்பது
குறித் தெல்லாம்
கேள்விகள் எழுப்பப்பட்டு
அதற்கும் சேதுகால்வாய்த்திட்ட
நிறு வனம் உரிய
பதிலை அளித்தது
2005ம் ஆண்டு ஜூலை
5ம் தேதி மன்மோகன்
சிங்கால் ரூ.2427 கோடி
செலவில் இத்திட்டத்திற்கு
நிதி ஒதுக்கி மதுரையில்
துவக்கி வைக்கப்பட்டது.
60 சதவீதத்திற்கும்
மேலாக மணல் துார்
வாரும் பணிகள்
முடிந்தும், மொத்த
திட் டத்தில்
80 சதவீதமான பணிகள்
நிறைவு பெற்று
முடிந்தது.
இதன் பின்னணில்
சேது கால்வாய்த்
திட்ட பணிகளை துரிதப்படுத்த
வலி யுறுத்தி இந்திய
ஜனநாயக வாலிபர்
சங் கத்தின் சார்பில்
2007ம் ஆண்டு நவம்பர்
மாதம் விருதுநகர்,
மதுரை, துாத்துக்குடி
ஆகிய மையங்களில்
இருந்து நுாற்றுக்
கணக்கான டிஒய்எப்ஐ
தொண்டர்கள் சைக்கிளில்
ஆயிரக்கணக்கான
கிராம மக்களை,
நேரில் சந்தித்து
பிரச்சாரம் செய்து,
இராமேஸ்வரத்தில்
பொதுக்கூட் டமும்,
ஆர்ப்பாட்டமும்
நடத்தப்பட்டது.
மீன்வளம் பாதிக்கப்படும்
என மீனவர்கள் அச்சப்பட்டதாக
சொல்லப்பட்ட நேரத்
தில் பல்வேறு மீனவர்
அமைப்புகளும்
இந்த இயக்கத்தை
ஆதரித்தன. அன்
றைய தினம் மதத்தின்
பெயரால் வளர்ச்சி
திட்டத்தை தடுத்து
நிறுத்தும் மத
அமைப்புகளை இராமேஸ்வரத்திற்குள்
அனுமதிக்க மாட்டோம்
என டிஒய்எப்ஐ நடத்திய
இயக்கத்தோடு ஒன்றுபட்டு
இராமேஸ்வரம் மக்கள்
உடன் நின்றது வர
லாறாகும்.
2008ம் ஆண்டு டிசம்பர்
மாதம் 13 தேதி முதல்
29ம் தேதிவரை கோவை,
கன்னியாகுமரி,
இராமேஸ்வரம் ஆகிய
மூன்று முனைகளில்
இருந்து சைக்கி
ளில் நுாற்றுக்கும்
மேற்பட்டடோர்
3300 கிலோ மீட்டர்
தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களையும்
கடந்து சென்னை
யில் பல்லாயிரக்கணக்கான
இளைஞர் களை திரட்டி
சேது திட்டத்தை
நிறை வேற்றக்கோரி
பிரம்மாண்ட பொதுக்கூட்
டமும் நடத்தி அன்றைய
ஆட்சியாளர் களிடம்
மனு அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக
2009 பிப்ரவரியில்
தலைநகர் தில்லியில்
தமிழக இளைஞர் கள்
500க்கும் மேற்பட்டோர்
24 மணி நேரம் கொட்டும்
மழையில் பங்கேற்ற
உண்ணாவிரதப் போராட்டமும்.
அதைத் தொடர்ந்து
மத்திய நிதி அமைச்சர்
பிரணாப் முகர்ஜியிடம்
டிஒய்எப்ஐ சார்பில்
மகஜர் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக
இந்த திட்டத்திற்கான
நிதியை முழுமை
யாக ஒதுக்கி அமலாக்க
உரிய நடவ டிக்கை
எடுப்பதாக உறுதி
அளித்தார்.
இந்த சூழலில் அமெரிக்காவின்
நாசா விண்வெளி
மையம் ஆதம் பாலம்
குறித்து புகைப்படங்களை
2002ல் வெளி யிட்டதை
2008ல் அமெரிக்காவில்
உள்ள இந்து மத
அமைப்புகள் இணையதள
மான இந்தோலிங்
கடலுக்கடியில்
உள்ள மணல் திட்டு
இராமர் கட்டிய
பாலம் என பொய்
செய்தியை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து
பல்வேறு ஊடகங்
கள் இந்த செய்திகளை
வெளியிட்டு புதிய
சர்ச்சைகளை கிளப்பிவிட்டன.
2002ல் அமெரிக்க நாசா
நிறுவன அதிகாரிகள்
இதனை மறுத்து இராமேஸ்வரப்
பகுதி யில் எடுக்கப்பட்ட
புகைப்படம் உலகின்
இதர பகுதியில்
உள்ள மணல்திட்டை
போன்றதே என தெளிவுபடுத்திவிட்டது.
இதன்பின்னணியில்
தமிழகத்தில் உள்ள
சுப்பிரமணியன்
சுவாமி, ஜெயலலிதா
போன்றோர் உச்சநீதிமன்றத்தில்
இது ராமர் கட்டிய
பாலம் என கால்வாய்திட்டப்
பணிகளை நிறுத்த
வேண்டும் என வழக்கு
தொடுத்து, தமிழகத்தின்
தொழில் வளர்ச்
சியிலும், இளைஞர்களின்
வேலைவாய்ப் பிலும்
மண்ணை அள்ளிப்போட்டனர்.
1996,2001,2006 தேர்தல்களில்
எல் லாம் சேது
கால்வாய்த்திட்டத்தை
அம லாக்க நடவடிக்கை
எடுப்பது குறித்து
பேசிய அதிமுக,
பகுத்தறிவு தந்தை
பெரி யார் பிறந்த
மண்ணில் அவர் உருவாக்கிய
திராவிட இயக்கத்தின்
வழித்தோன்றல்
என்று சொல்லிக்கொள்ளும்
ஜெயலலிதா போன்றோர்
இன்று ’நம்பிக்கை’
என்ற பெய ரால்
உண்மைக்கு புறம்பாக,
இயற்கை யில் உருவான
மணல் திட்டை இராமர்
கட்டிய பாலம்,
அதை நினைவுசின்னமாக
மாற்ற வேண்டும்
என கோரிக்கை வைப்
பது தமிழக மக்களின்
நலனுக்கு எதிரான
நடவடிக்கையாகும்.
மேற்படி திட்டத்தை
நிறைவேற்றுவது
குறித்தும், தென்
தமிழகத்தின் பல்வேறு
தருணங்களில் நடைபெற்ற
சாதிக் கல வரங்களில்
இளைஞர்கள் பங்கேற்றது
குறித்தும் கவலையோடு
சுட்டிக்காட்டி
இளைஞர்களுக்கான
வேலைவாய்ப்பை
யும், தொழில் வளர்ச்சியையும்
உறுதிப் படுத்தினால்
சாதிக் கலவரங்களை
கட் டுக்குள் கொண்டு
வர முடியும் என
நீதிபதி மோகன்
தலைமையில் அமைக்
கப்பட்ட கமிஷன்
வற்புறுத்தியது
நடை முறைப்படுத்தப்பட
வேண்டுமானால்
சேது கால்வாய்த்திட்டத்தை
உறுதியாக அமலாக்கிட
மத்திய அரசு நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
சேது கால்வாய்திட்டத்தை
நிறை வேற்ற இந்திய
ஜனநாயக வாலிபர்
சங்கம் சார்பில்
கொட்டும் மழையில்
தில்லியில் நடைபெற்ற
24 மணி நேர உண்ணாவிரதப்
போராட்டத்தை வாழ்த்தி
பேசிய சீத்தா ராம்
யெச்சூரி, “மூடநம்பிக்கைகள்,
மத வெறி போன்றவற்றை
எதிர்த்துப் போராடு
வதற்கான ஒரு ஊடகமாக
கலாச்சார மாக திகழ
வேண்டும். இலக்கிய
நயத்தை ரசித்துப்
போற்றுகிற அதே
நேரத்தில் புரா
ணக் கற்பனையையும்
வரலாற்று உண் மையையும்
பாகுபடுத்தி பார்க்க
வேண் டும். இன்றைய இலங்கை,
இந்தியா உட்பட
ஒரேநிலப்பகுதியாக
இருந்த கால கட்டம்
உண்டு. கடல்
மட்டம் உயர்ந்த
தைத் தொடர்ந்துதான்
இலங்கை தனித் தீவானது.
அதற்கு இடையே
ஒரு பாலம் இருந்ததாகச்
சொல்வது இனிய புராணக்
கற்பனையே. அதை வரலாற்று
உண்மை யாக கூறி
சேது கால்வாய்திட்டம்
போன் றவற்றை முடக்க
முயல்வார்களானால்
அதை எதிர்த்துப்
போராட வேண்டும்’’
என்றார். டிஒய்எப்ஐ
வரும் ஏப்ரல்
16ம் தேதி துாத்துக்குடியில்
தமிழகத்தின் கனவுத்திட்டமான
சேது கால்வாய்த்
திட்டத்தை விரைந்து
முடிக்க நடவ டிக்கை
எடுக்க வலியுறுத்தி
தென்மண் டல இளைஞர்களின்
பேரணி, பொதுக்
கூட்டத்தை நடத்துகிறது.
அணி திரண்டு வாருங்கள்...
தேசம் காக்க...
கட்டுரையாளர்,
மாநிலத்தலைவர்,
இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கம்