Contact us at: sooddram@gmail.com

 

கைகொடுக்கும் மே தினம்

பல்லாண்டு காலமாக மே முதலாந் திகதி செவ்வாய்க்கிழமை சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ஏலவே உலகளாவிய ரீதியில் மே முதல் நாளை மேதினமாகக் கொண்டாட சர்வதேச தொழிலாளர் சமூகம் ஏகமனதாக முடிவு செய்தது. இத்தினத்தில் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகள், அணிவகுப்பு ஒற்றுகூடல் என்பன பிரதான பங்கினை வகிக்கின்றன என்றும் கூறலாம்.

மே தினத்தை தேசிய விடுமுறை தினமாக (National Holiday) இலங்கை அடங்கலாக அனேக நாடுகள் அறிவித்துள்ளன. நம் நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை ஆட்சிபுரியும் அரசாங்கங்கள் மே தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனம் செய்துள்ளன. இதனால் வர்த்தக வங்கி சேவையாளர் உட்பட அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு (Employees)  ொது விடுமுறை தினமாக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் என்பன கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் ஊர்வலங்களையும், ஒன்றுகூடல்களையும் ஒழுங்குபடுத்தியுள்ளன. அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC), மலையக மக்கள் முன்னணி என்பனவும் தொழிலாளர் தினமான மே தினத்தைக் கொண்டாடவுள்ளன. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய எதிர்க் கட்சிகளுடன் இணைந்து இம்முறை தனது மே தின நிகழ்வுகளை வட மாகாணத்தின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளமை ஒரு விசேட அம்சமெனக் கொள்ளலாம்.

இனி உலகெங்கிலுமுள்ள பிரதான நாடுகளில் மே தினம் எவ்வாறு கொண்டாடப்படுகின்றன என்பதை விரிவாக ஆராய்வோம். அல்பேனியாவில் மே முதலாம் திகதி தேசிய விடுமுறை தினமாக தொழிலாளர்களை நினைவுகூரும் விதமாகக் கொண்டாடப்படுகின்றது. பதாகைகளில் எழுதி அவற்றைத் தாங்கிய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு செல்வார்கள்.

சல்வேனியா, செர்பியா மற்றும் உக்ரேன் போன்ற நாடுகளில் மே இரண்டாம் திகதியும் தேசிய விடுமுறை தினமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கரீபிய நாடுகளில் தொழிலாளர் விடுமுறை தினம் மே மாதம் முதல் திங்கட்கிழமை என்று வழங்கப்படுகிறது. டொமினிக்கா, டொமினிக் குடியரசு குயின்ஸ்லாந்து என்பவற்றிலும் இந்தக் கொள்கையே தொடருகின்றது. இச் செயற்பாடுகள் அனைத்துக்குமே அந்நாடுகளின் தொழிற் சங்கங்களே (Trade Unions) உறுதுணை புரிகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கத்தை கொண்டாடுகையில், அத்தினம் பொது விடுமுறையாக பல்வேறு மாநில பிரதேச அரசாங்கங்களிலும் உறுதி செய்யப்படுகின்றது. தலைநகர் பிரதேசம், நியூசவுத் வேல்ஸ் (New South Wales) மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா, விக்டோரியா, தாஸ்மானியா ஆகியவற்றிலும் மே தினம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தாறாம் ஆண்டுதான் முதன் முதல் மே தின விடுமுறை வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

தொழிற்சாலைகள் எங்கு ஸ்தாபிக்கப்படுகின்றனவோ அங்கு வேலை நிறுத்தங்கள் (Strikes) உருவாகுவது வழமையான விடயம். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர்கள் மூன்று நாள் பொது வேலை நிறுத்தம் மேற்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பிற்பகலில் பேரணி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பேரணி நடைபெறவுள்ளதை தெரிந்துகொண்ட காவல்துறையினர் அங்குள்ளோரை அமைதியாகக் கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தும் துரதிர்ஷ்டவசமாகத் தொழிலாளர் கலைந்து செல்ல மறுத்ததால், இதனை அடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஏக காலத்தில் நான்கு தொழிலாளர் பலியானார்கள். நகரெங்கும் வன்செயலும் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதேவேளை கூட்டத்தை நோக்கி விஷமியொருவரினால் கைக்குண்டொன்று வீசப்பட்டது. இதனால் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட பன்னிரெண்டு தொழிலாளர் பலியாகினார்கள். பின்னர் வேலை நேரத்தையொட்டி தொழிற்சங்கப் போராட்டம் கடுமையான முறையில் முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளரது நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் பணிபுரிய உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்டது. அதிகமாக மேலும் ஒவ்வொரு மணித்தியாலங்களுக்கும் மேலதிக நேரக் கொடுப்பனவு (Over Time)  கணிக்கப்பட்டு ஊதியக் கொடுப்பனவோடு அவ்வப்போது வழங்கவும் இணக்கம் காணப்பட்டது.

பிரான்ஸில் தொழிலாளர், பள்ளி மாணவர்கள் மே தின லில்லிப் பூக்களை வீதிகளில் சென்று விற்கும் அதேவேளை, தொழிலாளரின் நலனுக்காக வீடு வீடாக நிதி சேகரிப்பிலும் ஈடுபடுகின்றனர்.

ஜெர்மனியில் நாசிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகே தொழிலாளர் தினமான மே தினம் அதிகாரபூர்வமாக விடுமுறை தினமாக்கப்பட்டது.

எமது அண்டை நாடான இந்தியாவில் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தேழாம் ஆண்டு முதல் மே தினம் மே முதலாம் திகதியே கொண்டாடப்பட்டு வருகின்றதாம். அங்கு மே தின வார நிகழ்வுகளும் நடைபெறுவது வழக்கம். மகராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் தொழிலாளர் வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

அயர்லாந்தில் தொழிலாளர் தினம் மே தினத்தில் அதாவது, மே மாதத்தில் முதல் திங்கட்கிழமையில் வருகின்றது. இது பொது விடுமுறை தினமாகும்.

இஸ்ரேலில் மே ஒன்று அதிகாரபூர்வமாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சோஸலிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் இளைஞர் இயக்கங்கள் டெல்அவிவில் (TelAviv) அணிவகுப்பை ஏற்பாடு செய்து திருப்திகொள்கின்றனர்.

இத்தாலியில் மே ஒன்று தேசிய விடுமுறை தினம் ஆகும். தொழிலாளர் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகப் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறாம் ஆண்டிற்குப் பிறகு றோமில் (Rome) கணிசமான அளவு தொழிலாளர் ஒன்றுகூடி மே தின நிகழ்வுகளைக் கண்டுகளிக்கின்றனர். இங்கும் தொழிலாளருக்கான எட்டு மணி நேர வேலை நேரம் அங்கீகரிக்கப்பட்டு அதுவே நடைமுறையிலும் உள்ளது.

வெளிநாட்டு ஆட்சிக் காலத்தில்தப்பரபேன்என்று அழைக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழுபவர்கள் தோட்டத் தொழிலாளர்கள்தான் என்பதை நாமறிவோம். ஆகவே நம் நாட்டில் மே தின நிகழ்வுகள் தலைநகரில் இடம்பெறுவது போன்று மலைநாட்டிலும் வருடா வருடம் கொண்டாடப்படுவதையும் காண முடிகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் மே தினத்தை தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளை வென்றெடுத்த பொன்னாளாகக் கொண்டாடி வருகின்றது.

ஆகவே மே தினத்தை மதித்து அதற்கு உகந்த கெளரவத்தை அளித்திடல் வேண்டும். இதுவே தொழிற்சங்கவாதிகளின் தலையாய வேண்டுகோளாகும் என்பது வெள்ளிடை மலை.

(அருணா தருமலிங்கம், வந்தாறுமூலை)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com