|
||||
|
சகோதரப் படுகொலையும்
காமவேட்டையும் அரங்கேறி 11 வருடங்களாகப் போகின்றன அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத” சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார். இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை.ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள நேர்ந்த “கிழக்கு பிளவு”அவர்களுக்கு மாபெரும் சவாலொன்றை விடுத்தது. புலிகளின் தலைமை தளபதியும் கிழக்கு மாகாண பொறுப்பாளருமான கேர்ணல் கருணா அறிவித்த கிழக்கு பிளவே மேற்படி நெருக்கடிக்கு காரணமாயிற்று. புலிகளின் வரலாற்றை புரட்டிபோடும் வல்லமை அந்த கிழக்கு பிளவிற்குள் ஒழிந்திருந்ததை இருந்ததை புலிகளால் அனுமானிக்க முடியவில்லை. கிழக்கு மாகாணத்திலிருந்து உருவாகிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதில் புலிகள் தவறுக்குமேல் தவறிழைத்தனர். கிழக்கு பிளவை தாண்டிச்செல்லுதல் என்பதே கடைசிவரை புலிகளால் முடியாது போன ஒரே காரியம் என வரலாறு தன்பக்கங்களில் குறித்துக்கொண்டது. அதன் காரணமாக 2004ம் ஆண்டை தொடர்ந்துவந்த ஆண்டுகள் புலிகளின் வீழ்ச்சிகாலங்களாக அமைந்தன. வடக்கு, கிழக்கு மாகாணங்களிடையே நீண்ட காலமாக தொடர்ந்துவந்த பிரதேசரீதியான ஏற்றத்தாழ்வுகளே இந்த கிழக்கு பிளவின் அடிப்படையாக இருந்தது. எனினும் 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் புலிகள் உருவாக்கிய நிழல் நிர்வாக கட்டமைப்பில் நியமிக்கப்பட்ட 32 துறைசார் பொறுப்பாளர்களும் வடக்கு மாகாணத்தையே சேர்ந்தவர்கள். கிழக்கு மாகாண மக்களும் போராளிகளும் வடக்கு தலைமையால் வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள் என்கின்ற குற்றச்சாட்டே இந்த கிழக்குபிளவிற்கு உடனடி காரணமாயிற்று புலிகளது இராணுவ வெற்றிகளுக்கு முதுகெலும்பாக இருந்த ஜெயந்தன் படைபிரிவும், அதன் தளபதி கருணாம்மானும் சுமார் ஆறாயிரம் போராளிகளுடன் பிரிந்து நின்று கிழக்கு பிளவை அறிவித்தனர். கிழக்கு மாகாணத்தின் சார்பில் அவர்கள் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளை பல தளபதிகளும் புத்திஜீவிகளும் பொதுமக்களும் ஆதரித்து ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் கிழக்கு மாகாணமெங்கும் நடாத்தினர். ஆனால் அந்த மக்களின் குரல்களுக்கு புலித்தலைமை கிஞ்சித்தேனும் மதிப்பு வழங்கவில்லை. “கருணாம்மான் தமிழ் தேசிய துரோகி “என்றும் அவர் ஒரு “தனிநபர்”என்றும் முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் எத்தனிப்பில் புலிகள் இறங்கினர்.அதுமட்டுமன்றி புலிகளின் முதுகெலும்பாக இருந்த கிழக்கு போராளிகள் மீது படையெடுத்து அவர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டனர். 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி அறிவிக்கப்பட்ட கிழக்கு பிளவானது யாழ்-மேலாதிக்கத்தின் இராணுவ வடிவமான தமிழீழ விடுதலை புலிகளால் மூர்க்கத்தனமாக கையாளப்பட்டமை மாபெரும் படுகொலைக்கு வழிவகுத்தது. கிழக்கு பிளவின் மீதான புலிகளது இந்த மிலேச்சத்தனமான அணுகுமுறைக்கு ஊக்கமளிப்பவர்களாகவும் ஆலோசனை வழங்குவர்களாகவும் தமிழ் புத்திஜீவிகளும், பத்திரிகையாளர்களும்,தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் செயற்பட்டனர். இது அன்று தமிழ் இனத்துக்கு கிடைத்த பெரும் சாபமாகும். எதிரி என்று சொல்லப்பட்ட இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தவர்களுக்கு தமது சொந்த போராளிகளுடன்,நேற்றுவரை ஒன்றாகவிருந்து உணவுண்டவர்களுடன் பேச தெரியாதுபோனது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் ஆற்றங்கரையில் மிகப்பெரிய படுகொலையொன்றை வன்னியிலிருந்து வந்த பிரபாகரனின் படையினர் நிகழ்த்தினர். பிரிந்து செல்கிறோம், ஜனநாயக பாதைக்கு திரும்புகிறோம், சரணடைகிறோம் என்று என்று சொன்ன கிழக்கு போராளிகள் சுமார் 210 பேர் கோரத்தனமாக படுகொலை செய்யப்பட்டனர். பெண் போராளிகள் மானபங்க படுத்தப்பட்டு அவர்களது உடலங்கள் சின்னபின்ன படுத்தப்பட்டன. அந்த பிரதேசத்து கிராமவாசிகள் எல்லோரும் துரத்தியடிக்கப்பட்டு எவரது உடல்களும் புதைக்கப்படாமலும் அடையாளம் காணப்படாமலும் சுமார் ஒரு வாரத்துக்கு வெருகல் பிரதேசம் நாற்றமெடுத்து கிடந்தது. இத்தனைக்கும் ஏப்ரல் 10ல் இந்த வெருகல் படுகொலை நடாத்தப்பட்டபோது இலங்கையில் நோர்வே தலைமையிலான சர்வதேச கண்காணிப்பாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். யுத்த நிறுத்தம்
அமுலில் இருந்தது. இந்த படுகொலையை தொடர்ந்து கிழக்கு மாகாணம் எங்கும்
புகுந்த புலிகள் கிழக்கு பிளவை ஆதரித்த புத்திஜீவிகளை கொன்று வீசினர் ராஜன்
சத்திய மூர்த்தி, கிங்ஸ்லி இராசநாயகம்,தில்லைநாதன் என பலரும் கொல்லப்பட்டனர். (உண்மை) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |