|
||||
|
போதையின் உச்சத்தில் …..
குளிர்நிறைந்த
மார்ச் மாதத்தின் நள்ளிரவுப் பொழுதில் போதை தலைக்கேறிய நிலையில் தமிழ்
இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுவதும், அதனை தடுக்க முனைந்த
தமிழ் யுவதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தரையில் வீழ்த்துவதுமான ஒளிப்பதிவு
ஒன்றை பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் அண்மையில் கிட்டியது. ஸ்காபுரோவில் மார்ச்
மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் அரங்கேறிய இந்தக்
கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய காட்சிகளின் ஒளிப்பதிவு அன்று காலை 9
மணியளவில் எனது பார்வைக்கு வந்தது. காவல்துறையினரின் இந்தக் கைதுகளை
எதிர்க்கும் வகையில் அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர் மற்றும் யுவதிகள்
காவல்துறையினருக்கு எதிராக குரல் எழுப்புவதையும் இந்த ஒளிநாடா பதிவு
செய்திருந்தது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான ரொறன்ரோ காவல்துறையினரின்
கண்மூடித்தனமான நடவடிக்கையா என்ற கேள்வியுடன் இந்த ஒளிப்பதிவு குறித்த
விபரங்களை திரட்ட முனைந்தேன். இந்தத் தேடலின் நடுவில் காத்திருந்தது
எனக்கான அதிர்ச்சியின் ஆரம்பம். பதில் இல்லாத கேள்விகள் தெற்காசிய மதியிறுக்க விழிப்புணர்வு மையத்தின் Radiant Night நிதிசேகரிப்பு நிகழ்வின் ஒளிப்பதிவை முழுமையாகப் பார்வையிட்ட பின்னர் மனதில் பல கேள்விகள் எழுந்தன. SAAAC முன்னைய வருடங்களில் நடத்திய நிதிசேகரிப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் தகவல்களைச் சேகரித்தபோது அதிர்ச்சிகரமான காட்சி கண்முன் விரிந்தது. மதுவின்
மயக்கத்திலும் போதைவஸ்தின் உச்சத்திலும் கடும் குளிரின் மத்தியிலும் நிலை
தடுமாறி நிற்கும் தமிழ் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை இந்த நிதிசேர்
நிகழ்வில் வருடங்கள் செல்லச் செல்ல அதிகரித்து வருகின்றதை புகைப்படங்கள்,
ஒளிப்பதிவுகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் வாக்குமூலங்கள்
உறுதிப்படுத்துகின்றன. இவை தவிர மண்டபத்தின் உள்ளேயும், மண்டப வாகனத்
தரிப்பிடத்தில் தரித்து நிற்கும் வாகனங்களிலும் அரங்கேறும் ‘காட்சிகள்’
அனைவருமே வெட்கித் தலைகுனியும் வகையில் அமைந்தவை. சமூக
அமைப்பொன்றின் நிதிசேகரிப்பு நிகழ்வொன்றில் வெளிப்படையான கேள்விக்குரிய பல
சமூக சீர்கேடுகள் அரங்கேறுவதை ஏன் அந்த அமைப்பு கண்டும் காணாத நிலையில்
கையாளுகின்றது என்பது இதில் பிரதான கேள்வியாகும். இதன் பின்னணி என்ன என்பதை
ஆராய்வதை தவிர்த்து இதுபோன்று இனியும் தொடராமல் இருப்பதற்கு SAAAC மீது
அக்கறை கொண்டவர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டியது அவசியமாகும். Radiant Night Gala 2015 நிதிசேகரிப்பு நிகழ்வில் கடந்த வருடமும் இந்த வருடமும் காவல்துறையினரால் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வருடம் நடைபெற்ற நிகழ்வில் 15 பாதுகாப்பு அதிகாரிகளும் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் கட்டணம் செலுத்தப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதை ஏற்பாட்டாளர்களே உறுதிப்படுத்தினார்கள். ஒரு சமூக அமைப்பின் நிதிசேகரிப்பு நிகழ்வுக்கு காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட மொத்தம் 17 பாதுகாவலர்களின் அவசியம் என்ன? 17 பாதுகாவலர்களின் தேவை இருந்ததை உணர்ந்த SAAAC நிர்வாகம் அதற்கான காரணம் என்ன என்பதை ஏன் உணரவில்லை? அந்தக் காரணத்தை கண்டறிந்து ஏன் அது தொடராமல் தடுக்கவில்லை? கடந்த வருடங்களில் இந்த நிதிசேகரிப்பு நிகழ்வுக்கான அனுசரணை வழங்கிய நிறுவனங்கள் சில இந்த வருடம் தமது ஆதரவை வழங்கவில்லை. நிதிசேகரிப்பு நிகழ்வில் மேற்கொள்ளப்படும் அதிகரித்த மதுபான விற்பனை மற்றும் அதனுடன் தொடர்புடைய சீர்கேடான நடவடிக்கைகள் குறித்து SAAAC தொடர்ந்தும் மௌனம் காத்துவருவதான குற்றச்சாட்டு இவர்களிடம் உள்ளது.. கடந்த வருட அனுசரணையாளர்களுடன் கலந்துரையாடும்போது இதனைத் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. இந்த அனுசரணையாளர்களில் பலரும் தமது அதிருப்தியை SAAAC நிர்வாகிகளிடம் ஏற்கனவே பகிர்ந்துகொண்டுள்ளதாக எமது உரையாடலின்போது உறுதிப்படுத்தினர். இவர்களின் அதிருப்தியின்மை ஏன் SAAAC நிர்வாகிகளினால் கருத்தில் கொள்ளப்படவில்லை? SAAAC தந்த பதில்கள் கேள்விகள்
பலவற்றுடன் தெற்காசிய மதியிறுக்க விழிப்புணர்வு மையத்தின் இயக்குனர் கீதா
மூர்த்தியை சந்தித்தோம். தமது நிதிசேகரிப்பு நிகழ்வில் அதிகளவில் மதுபானம்
விற்பனை செய்யப்படுவதற்கு மண்டப உரிமையாளர்களே பொறுப்பு என்ற பரந்துபட்ட
குற்றச்சாட்டுடன் அவருடனான கலந்துரையாடல் ஆரம்பமானது. SAAAC நிர்வாகம் இந்த
விடயத்தில் கவனம் செலுத்தவேண்டாமா என்ற கேள்விக்கு ‘எதிர்வரும் காலங்களில்
இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படும்’ என்ற உறுதிப்பாட்டை கீதா மூர்த்தி
வழங்கினார். எமது உரையாடலின்போது இந்த விடயம் ஏற்கனவே தனது கவனத்திற்கு
கொண்டுவரப்பட்டுள்ளதை அவர் ஏற்றுக்கொண்டாலும், இதற்கான பொறுப்பை SAAAC
முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற தனது பதிலில் உறுதியாக இருந்தார். மதுபோதையும்,
கொண்டாட்டமும். குதூகலமும் மாத்திரம் நிதிசேகரிப்பு நிகழ்வின்
தூண்டுகோள்களாக இருப்பது தவறு. தாம் கலந்துகொள்ளும் நிகழ்வின் பின்னணி என்ன?
வழங்கும் நிதி யாரைச் சென்றடைகின்றது? அதன் மூலம் உதவிபெறுபவர்கள் யார்?
போன்ற கேள்விகளுக்கான தெளிவு நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு
இருக்கவேண்டும். இந்தத் தெளிவு தமது நிதிசேகரிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும்
இளைஞர் யுவதிகளில் பலருக்கும் இல்லை என்பதை கீதா மூர்த்தி எம்முடனான
உரையாடலின்போது சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தில் தெளிவு
இல்லாதவர்களுக்கு சரியான வகையில் பதில்களும், விளக்கங்களும், தகவல்களும்
வழங்கப்படவேண்டும். இதில் ஊடகங்களின் பொறுப்பும் பங்கும் மிகப்பெரியது. 2008ஆம் ஆண்டு இரண்டு குடும்பங்களுடன் ஆரம்பமான SAAAC குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதை மறுக்கமுடியாது. தற்போது ஜந்து மொழிபேசும் 120க்கும் அதிகமான குடும்பங்களுக்கு SAAAC தனது சேவையை வழங்குகின்றது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் இலவச மற்றும் கட்டணம் செலுத்தப்படும் சேவைகள் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. எட்டு முழுநேர ஊழியர்கள் ஜந்து பகுதிநேர ஊழியர்கள் உட்பட நூறுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் SAAAC அமைப்பின் சேவைகளை வழங்க உறுதுணையாகவுள்ளனர். தெற்காசிய சமூகத்தில் இருந்து இதுபோன்றதொரு சேவை நிறுவனம் உருப்பெற்றுள்ளமை மகிழ்ச்சியானதும் வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். கீதா மூர்த்தி மற்றும் அவருடன் இணைந்துள்ள பலரும் மதியிறுக்க விழிப்புணர்வு என்பதை தமது வாழ்நாள் திட்டமாகக் கொண்டுள்ளார்கள் என்பதும் அதற்காகவே முழு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள் என்பதும் அவர்களுடன் உரையாடும்போது புலனாகின்றது. SAAAC போன்ற
அமைப்புக்களின் சேவை எந்தக் காலகட்டத்திலும் அவசியமானது. அவர்கள் தமது
சேவையை தடங்கலின்றி வழங்குவதற்கு நிதி அவசியமாகின்றது. இதுபோன்ற நிகழ்வுகள்
மூலமே தேவையான நிதியை ஒரே நேரத்தில் சேகரிப்பது சாத்தியமாகின்றது. ஆனாலும்
இந்த அவசியங்களையும் சாத்தியங்களையும் காரணமாக்கி ஒரு சமூதாயத்தையே தவறான
வழியில் இட்டுச் செல்வதை ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது. (இகுருவிக்காக இலங்கதாஸ் பத்மநாதன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |