|
||||
|
“மக்களை நடுக்கடலில்
விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்”(பகுதி
- 8) (எம். ஏ. நுஃமான்) எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார். போர்க்கால இலக்கியம் பற்றி . . . போர்க்கால இலக்கியம் 1970களுக்குப் பிந்தைய அரசின் அடக்குமுறைகள், போர் அவலங்கள், விடுதலை இயக்கங்களின் வன்முறைகள் முதலியவற்றைப் பிரதிபலிப்பவை. மிகப் பெரும்பான்மையான சமகால இலங்கைப் படைப்புகள் போர்க்கால வாழ்வைச் சொல்பவையாகவே இருக்கின்றன. இது கவிதைகளில் தீவிரமாக வெளிப்பட்டது. நாவல், சிறுகதைகளிலும் இதன் தாக்கம் ஆழமானது. இவை வெளிப்படையாக அரசியல் பேசும் இலக்கியம்தான். தமிழ்நாட்டு இலக்கியத்தில் வெளிப்படையான அரசியல் மிகக் குறைவு. அரசியல் இலக்கியத்துக்கு உரியதல்ல என்ற கருத்தும் இங்கே வலுப்பெற்றுள்ளது. ஆனால் இலங்கை இலக்கியத்தின் அடிப்படையே அதுதான். தமிழ்நாட்டிலுள்ள அதிநவீன எழுத்தாளர்கள் சிலர் இத்தகைய எழுத்தை இலக்கியமாக ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இது வெறும் அரசியல், இலக்கியமே அல்ல. இக்கண்ணோட்டத்தில் பார்த்தால் மூன்றாம் உலக நாடுகளின் மிகப் பெரும்பாலான எழுத்தை வெறும் பிரசாரக் குப்பை என ஒதுக்க வேண்டியிருக்கும். தமிழ்நாட்டுக் கவிதைகள் பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகள் தாண்டிய, தனி உணர்வு சார்ந்தவையாகவே உள்ளன. இது எனக்கு உவப்பானதாக இல்லை. எழுத்தாளனுக்குச் சமூகப் பார்வை வேண்டும் என்பதே இங்கே சிலரால் கேலியாகப் பார்க்கப்படுகிறது. எனினும் சமகாலத்தில் இங்கே உருவான தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்பன படைப்பாளியின் சமூக அரசியல் கடப் பாட்டின் வெளிப்பாடுகளாக அமைந்தன என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்த யுத்தம் ஒரு வணிக யுத்தமா? இந்த யுத்தத்துக்குப் பிறகு சீனா இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பிருக்கிறதா? எல்லாப்
பிரச்சினைகளுக்கும் அக, புறக் காரணிகள் இருக்கின்றன. இந்தப் போர் மூன்று
தசாப்தங்கள் நீண்டதற்கும் இறுதியில் அது பெரும்பான்மையினரின் வெற்றியாக
அமைந்ததற்கும் அடிப்படையாக அமைந்த அகக் காரணிகளை நாம் முதலில் பார்க்க
வேண்டும். அதை நான் ஏற்கனவே ஓரளவு விளக்கினேன். அகக் காரணிகள் இடமளிக்காதவரை
புறக் காரணிகள் ஆதிக்கம் செலுத்த முடியாது. இது பற்றி இலங்கையில் உள்ள அறிவுஜீவிகளிடம் விழிப்புணர்வு இருக்கிறதா? இது பற்றிச் சிலர் சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் அவற்றின் செயல்பாட்டு முக்கியத்துவம் கேள்விக்குறிதான். இலங்கையின் இடதுசாரிச் செயல்பாடு என்ன? இடதுசாரி இயக்கம்
இலங்கையில் தோல்வி என்றுதான் சொல்வேன். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும்
பலமான இடதுசாரி இயக்கங்கள் இலங்கையில் இருந்தன. இன்றும் நடைமுறையில்
இருக்கும் சமூகநலத் திட்டங்கள் சில உருவாவதற்கு அவர்கள் காரணமாக
இருந்திருக்கின்றனர். ஆனால் சுதந்திரத்துக்குப் பிந்தைய நாடாளுமன்றச்
சந்தர்ப்பவாத அரசியலும் அதன் ஊடாக முன்னணிக்கு வந்த இன முரண்பாடும் மோதலும்
இடதுசாரி இயக்கங்களைப் பலிகொடுத்து விட்டன. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி,
லங்கா சமசமாஜக் கட்சி என்பன சிங்களப் பேரினவாதத்துடன் சமரசம் செய்துகொண்டன.
இடதுசாரிப் படிமத்துடன் தீவிர அரசியல் இயக்கமாக முன்னணிக்கு வந்த மக்கள்
விடுதலை முன்னணி (ஜேவிபி) இனவாதக் கட்சியாகத் தன்னை இனங்காட்டிக்கொண்டது.
இன்று இலங்கையில் வலிமையான இடதுசாரிக் கட்சி என எதுவும் இல்லை. எனினும்
சிறிய கட்சிகள் சில இன்னும் இயங்குகின்றன. எனினும் அவர்களின் குரல் ஓங்கி
ஒலிப்பதில்லை. இந்தத் தோல்விக்கு சாதியமைப்பு ஒரு காரணமா? அப்படிச் சொல்ல முடியாது. இன முரண்பாடுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகின்றது. இன முரண்பாடு வர்க்க, சாதி வேறுபாடுகளை மூடிமறைத்துவிடுகிறது. வர்க்க அடிப்படையில் மூவின மக்களும் ஒன்றிணைந்து போராடுவதற்கான பாதையை அது மூடிவிட்டது. சாதியமைப்பு இலங்கையில் உறுதியாக இருக்கிறது. இது சிங்கள, தமிழ்ச் சமூகங்கள் இரண்டுக்கும் பொதுவானது. 1960களில் யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்புக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் தான் தீவிரமாகப் போராடின. 80களில் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி சாதி உணர்வை ஓரளவு மட்டுப்படுத்தியது. ஆனாலும் தமிழர் மத்தியில் சாதிக் கண்ணோட்டம் குறைந்ததாகத் தெரியவில்லை. திராவிட இயக்கங்களின் பாதிப்பு என்னவாக இருந்தது? 1950, 60களில் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கு இருந்தது. இப்போது அப்படி எதுவும் இல்லை. 1960, 70களில் மார்க்சியச் சிந்தனை மேலோங்கி இருந்தது. 80களில் மேலேழுந்த இன முரண்பாட்டில் இந்தச் சிந்தனைகள் எல்லாம் அள்ளுண்டுபோயின. (சந்திப்பு: தேவிபாரதி) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |