|
||||
|
தென்னாசியாவில்
பெரும் பிரச்சினையாகியுள்ள
வாகனநெரிசல்
தென்னாசியாவில் இன்று பெரும்
தலையிடியாகவும்,
பெரும் அலுப்பையும்
எரிச்சலினையும்
ஏற்படுத்தும்
விடயமாக போக்குவரத்து
நெரிசல்களும்,
பாதை ஒழுங்கீனங்களும்,
பிரயாணி களுக்கும்,
வாகன ஓட்டுநர்களுக்கும்
பெரும் சிக்கல்களை
ஏற்படுத்தியுள்ளன.
அதாவது உலகின் சனத்தொகை யில் 5 இல்
1 பங்கினர்
உள்ள தென்னாசியா
போன்ற பிரதேசங்களில்
உள்ள மக்கள்
போக்குவரத்
திற்காக இன்னும் ஓரிரு பதைகளே
பிரதான பாதைகளாக இருந்து வருகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க
விடயம் என்னவென்றால்
இந்த நாடுகள்
ஆங்கில காலனித்துவ
ஆட்சியில்
போடப்பட்ட
பாதைகளையே
இன்றும் பெரும்பாலும்
பயன்படுத்தி
வருகின்றமையினை
கூறலாம். குறிப்பாக பக்கத்தில்
உள்ள ஊர்களுக்குக்கூட
சுற்றிவரத்தக்க
வகையிலேயே
பெரும்பாலான
பாதைகள் அமைந்துள்ளதை
நோக்கலாம்.
மேற்படி நாடுகள் பிரித்தானியாவிடம்
இருந்து சுதந்திரம்
பெற்று இன்று 60 ஆண்டுகளுக்கும்
மேலாகிவிட்ட
போதிலும்கூட
இன்றுவரை
முறையான வீதி அபிவிருத்தி,
போக்குவரத்து
ஒழுங்குகளை
அமுல்படுத்தும்
நிலைமைகள்
அரிதாகவே
காணப் படுகின்றன.
மேலை நாடுகளில்
60, 70 களில் இப்படியான
போக்குவரத்து
சிக்கல்கள்
எழுந்தபோதிலும்
அவை குறிப்பாக
ஐரோப்பிய,
வட அமெரிக்க
நாடுகளில்
1985ஆம் ஆண்டுகளின்
பின்னர் ஒரு முழுமையான
கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
எனினும் இந்த நடைமுறைகளை
தென்னாசியா
போன்ற நாடுகளில்
செயற்படுத்த
இன்னும் முடியாமல்
இருப்பது
பெரும் கேள்விக்குறியி
னையே ஏற்படுத்துகின்றது.
இதற்கு, சனத்தொகை
பெருக்கமும்
வாகனப் பாவனையாளர்களின்
பெருக் கங்களும் காரணமாகக்
கூறப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை
உலகில் இரண்டாவது
பாரிய ரயில்வே போக்குவரத்து
உள்ள நாடு
என்று கூறப்படுகின்றது. நட்டத்தில் ஓடிய அத்துறை இன்று இலாபமீட்டும்
துறையாக மாற்றப்பட்டிருக்கிறது.
அது ஓரளவுக்கு
வரவேற்கத்தக்க
விடயமும்
ஆகும். ஆனால் இன்றும்
கூட மேற்படி
ரயில்களின்
வேகம், குறிப்பிட்ட
பிரதேசங்களை
அடையும் காலம் என்பன
பெரும் சந்தேகத்துடனே
நோக்க வேண்டி உள்ளது. ஏனெனில் இன்றும் முன்னேற்றம்
அடைந்த நாடுகளின்
வேகங்களுக்கு
இணையாக கடுகதியில்
செல்லக்கூடிய
மின்சார ரயில் திட்டங்கள்,
மின்சார ரயில்கள் என்பன தெற்காசிய
நாடுகளில்
குறை வாகவே
சேவைகளில்
ஈடுபடுத்தப்படு
கின்றன. ஓரிரு இடங்களில்
இடம்பெற்றாலும்
அவை 90-95 களில்
அறிமுகப்
படுத்தப்பட்ட
திட்டங்களை
அடிப்படை
யாகக் கொண்டதாகவே
உள்ளன.
வாகன நெரிசலை
எடுத்துக்
கொண்டால்
அது ஒரு
பெரும் பிரச்சினையாகவே
உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக
இரண்டு ஊர்களுக்கு
இடையில் செல்வதென்றாலும்
கூட பல
மணித்தியாலங்களை
வாகன நெரிசல்
காரணமாக வீதிகளிலேயே
செலவ ழிக்க
வேண்டி ஏற்படுகின்றது.
இந்த நெரிசல்
காரணமாக பல்வேறு தேவைகள், அவசரத் தேவைகள் என செல்பவர்களின்
பாடு பெரும்
திண்டாட்டமாக
உள்ளது. பல மேம்பாலங்களும்
அமைக்கப்பட்டு
வருகின்றமை
வரவேற்கத்தக்கது.
மக்கள் செறிவு
அதிகமான இடங்களில்
நாளாந்தம்
வாகன நெரிசல்களிலேயே
பெரும் பாலானவர்களின்
நேரம் விரயமா கின்றது.
குறிப்பாக நடைபாதைக்
கடைகள், சட்டவிரோத
கட்டடங்கள்,
முச்சக் கரவண்டி ஓட்டுனர்களின்
அசண்டை யீனமான போக்குவரத்து
வீதி மீறல்கள்,
வாகன ஒழுங்குகளை
பின்பற்றாமை
போன்ற காரணங்களை
நாம் வெளிப்படை
உண்மை யாக தெரிவித்துவிட்டுப்
போகலாம்.
அது தவிர, வீதிகள் அகலப் படுத்தப்படாமை,
குறிப்பிட்ட
சில வீதிகளை
மட்டுமே தொடு பாதைகளாக
கொண்டிருப்பது
சிறிய வீதிகள் கூட இரு
வழிப் பாதைகளுக்கு
அனுமதிக்கப்பட்டது. வீதிகள் பராமரிப்பின்றி
குண்டும்
குழியுமாக
இருப்பது
என்பனவும்
காரணமாக இருக்கின்றன.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,
பங்களாதேஷ்
போன்ற நாடுகளில்
இன்றும் கூட மின்சார
சமிக்ஞை விளக்குகள்
முக்கிய இடங்களில்
பொருத்தப்பட்டாலும்
கூட அங்கு
போக்குவரத்துப்
பொலிஸாரின்
விசில்களும்,
கை சமிக்ஞைகளும்
நின்றதாக
காணமுடியவில்லை.
காரணம் மின் சமிக்ஞை
ஒழுங்கு களைக் கடைப்பிடிப்பதற்கு
வாகனச் சாரதிகள் தயாரில்லை
என்பதே மேலை நாடுகளில்
உடனுக்குடன்
ஒழுங்கு படுத்தப்படும்
போக்கு வரத்து நடைமுறைகளை
இங்கும் ஒழுங்குபடுத்தப்பட
வேண்டும்.
மாறாக இங்கு படிப்படியான
திட்டங்களே
மேற்கொள்ளப்படு
கின்றன.
இவற்றின் மூலம் போக்குவரத்துப்
பிரச்சினைகள்
நிரந்தரமாக
தீர்ந்துவிடும்
என்று கூறிவிட முடியாது. குறிப்பிட்ட காலத்தினுள்
பாரிய தொகை நிதியினை
ஒதுக்கிப்
புதிய பாதைகள் அமைக்கப்பட
வேண்டும்.
நகரத் தின் மத்திகளில்
உள்ள வாகன
நெரிசலை கட்டுப்படுத்த
நகர்ப் புறங்களிலேயே
தனியார் வகனங் களை
தரிக்கவைத்து
சகலரும் மைய நகருக்குள்
குறிப்பிட்ட
பேருந்துகளிலேயே
பயணிக்க வேண்டும் என்ற ஒழுங்குகளை
அறிமுகப்படுத்தலாம்.
விரைவான ஒரு வழிப்பாதைகளை
வாகன சாரதிகளுக்கு
இலகுவான முறையில் ஒழுங்குபடுத்தலாம். பாதசாரிகளு க்கு என பாதசாரிகள்
கடவைகள் மிகப் பாதுகாப்பாக
நிறுவப்பட்டு
குறிப்பிட்ட
இடங்களில்
மட்டுமே கடவைகள் அமைக்கலாம்.
இவை போன்றவற்றுடன்
வருடத்திற்கு
ஒருமுறையாவது
வீதிகளின்
தரப் படுத்தலை
செயற்படுத்துவதுடன்
வீதி ஒழுங்குகளை
மீறுபவர்கள்
மீது கடுமையான
நடவடிக்கைகளை
எடுப்பதன்
மூலமுமே இந்தப் போக்குவரத்து
நெரிசலை இல்லாது செய்ய முடியும்.
இன்று அமைக் கப்பட்டு வரும் புதிய
பெருந் தெருக்களும்
வீதி அபிவிருத்தி
நடவடிக்கைகளும்
பாராட்டப்பட
வேண்டியவையே.
குறிப்பாக இன்று நம்மில்
பலருக்கு,
தான் மட்டும்
என்ற சிந்தனைகள்
மாறி மற்ற
வாகனங்களும்
வீதியில்
பயணிக்கின்றன,
மற்றவர்களும்
எங்களைப்போல
பல்வேறு தேவைகளுக்காக
வீதியில்
பயணிப்பவர்கள்
என்ற எண்ணம்
வந்துவிட்டாலே
வீதி ஒழுங்குகள்
கண்டிப்பாக
கடைப்பிடிக்கப்படும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |