|
||||
|
மே
பதினெட்டாம் திகதியும்
மேதகு இலங்கை பிரஜைகளும்
- எஸ்.எஸ்.எம்.பஷீர்
“நமது
தாய் நாடானதும்
நமது மூதாதயர்கள்
2600 ஆன்டுகள் வாழ்ந்ததுமான
இலங்கை குடியரசின்
குடிமக்களாய்
இருப்பதிலும்
நாம் பெருமை அடைகிறோம் . இலங்கையின்
தேசிய தனித்துவத்தின்
பிரிக்கமுடியாத
ஒற்றுமையின் ஒரு
அங்கம் நாம்.
ஒவ்வொரு முஸ்லிமின்
கடமை என்னவென்றால்
இலங்கை குடியரசின்
ஒற்றுமைக்கும் , வலிமைக்கும்,
இறைமைக்கும், அச்சமின்றி
சுயநலமின்றி உழைத்தலாகும்”
- கலாநிதி பதியுதின்
மஹ்முத்
இலங்கை
அரசு சென்ற வருட
மே மாத யுத்த வெற்றியினை
ஓராண்டின் பின்னர்
இம்மாதம் 11 ம் திகதி
தொடக்கம் 18ம் திகதி வரை யுத்த
வீரர்கள் ஞாபகார்த்த
தினமாக பிரகடனப்படுத்தி
நாடு முழுவதும்
நினைவு கூரும்
நிகழ்ச்சிகளை
நடாத்தியுள்ளனர்.
இந்த யுத்த வெற்றி
பல பெறுமதிமிக்க
பொது மக்களினது
உயிர்களையும்
காவுகொண்டுள்ளது
என்பதற்கு அப்பால் , இந்த உள்நாட்டு
யுத்தம் மூன்று
தசாப்தஙகளாக
பலரை அங்கவீனர்களாக
மனநோயாளிகளாக
உடமைகளும் இடமும்
இழந்த மக்களாகவும்
மாற்றியுள்ளது
என்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்த ஈடு செய்யமுடியாத
இழப்புக்களின்
மத்தியில் இவ்
யுத்த வெற்றிக்காக
பல சிங்கள தமிழ்
முஸ்லிம் இளைஞர்களும்
இவ்யுத்தத்தில்
பங்காளிகளாகி ஆயிரக்கணக்கில்
உயிரை அவயங்களை
இழந்திருக்கிறார்கள்.
சாதாரண பொதுமக்களும்
ஆயிரக்கனக்கில்
இவ்யுத்தத்தில்
சிக்குன்டு பலியாகி
இருக்கிறார்கள.
இரண்டு இனங்களுக்கிடையிலான
சிவில் யுத்தமாக
முகிழ்த்த ஆயுதம்
தாங்கிய போராட்டம்
சக இனத்தின் மீதான
அடக்குமுறை போராட்டமாக
சகோதரப்படுகொலை
"போராட்டமாக"
கட்டம் கட்டமாக
நகர்ந்து இறுதியில்
பயங்கரவாத யுத்தமாகி
முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
எனவே இந்த யுத்தம்
வெறுமனே தமிழருக்கு
எதிரான யுத்த வெற்றி
அல்ல.
இந்த
யுத்த வெற்றியினை
அரசு ஒரு வார வெற்றி
தினமாக கொண்டாடி
முடியும் வாரத்தின்
இறுதிக்கு முந்திய
நாளான 17ம் திகதியினை
பொதுமக்களையும்
போராளிகளையும்
நினைவுகூரும்
துக்க தினமாக அனுஷ்டிக்கும்
நாளாக நினைவு கூருமாறு
சம்பந்தனின் தமிழரசுக்கட்சி
வேண்டுகோள் விடுத்தது.
ஆக அரச வெற்றியின்
இறுதி நாளை துக்க
நாளாக கொள்ளும்
ஜனநாயக உரிமை ஒருபுறமிருக்க
தமிழரசுக்கட்சி
"போராளிகளை" நினைவுகூருமாறு
கூறுவது எனபதுதான்
அரசினை பொறுத்தவரை
முரண்பாடானதாகும்
ஏனெனில் இராணுவத்தினரின்
அழிவுக்கும் அங்கயீனத்துக்கும்
காரனமானவர்களாவிருந்த
அரச படைகளின் எதிரிகளின்
இழப்பினை நினைவு
கூறுவது எதிரிடையான
ஒரு நிகழ்வாகவே
யுத்த வெற்றிக்
கொண்டாட்டம் முடிவுக்கு
வருகிறது.
புலிகள்
முதலில் சிங்கள
விரோதிகளாக, முஸ்லிம்
விரோதிகளாக , தமது
சக போராட்ட இயக்கங்களின்
எதிரிகளாக இருந்தது
போக தமக்குள்ளே
மஹத்த்யா எனும்
மகேந்திரராஜா
பிரிவினருக்கேதிரான
தாக்குதல்களையும்
கருணாவுக்கேதிரான
தாக்குதல்களையும்
சாதி அடிப்படை
கொலைகளையும் மேற்கொண்டு
தம்மை தமது சொந்த
சமூக , பிரதேச பிரிவினர்களுக்கு
எதிரானவர்களாக
செயற்பட்டபோது
தமிழர்களில் பலர்
புலிகளுக்கு எதிரானவர்களாக
இலங்கை இராணுவத்துடன்
சேர்ந்து புலிகளை
(தமிழரசுக்கட்சியினர்
நினைவுகூரும்
"போராளிகளை") அழிக்க
செயற்பட்டதனை
நன்கு ஆராய்ந்து
பார்க்கும் போது
துல்லியமாக புலனாவது
என்னவென்றால்
இந்த யுத்தவெற்றி
என்பது சிங்களவர்
தமிழர் முஸ்லிம்களது
பொது எதிரியாக
மாறிய புலிப்பாசிசத்துக்கெதிரான
வெற்றியே ஒழிய
வேறில்லை.
பிரித்தானிய
தமிழ் அவை 18ம் திகதியை
முள்ளிவாய்க்கால்
அவலமென பூடகமாக
பிரபாகரனின் முடிவை
நினைவு கூற பிரபாகரனை
காப்பாற்ற தாம் சென்ற
வருடம் தொடங்கிய
ஆர்ப்பாட்டதளமான
பிரித்தானிய நாடாளுமன்ற
சதுக்கத்தில்
இன்று "மீண்டும்
தொடங்கும் மிடுக்கென"
கூடவுள்ளனர். சென்ற
வருடம் இவர்களுக்காக
கித் வாஸ் எனும்
தொழில் கட்சி அமைச்சரும்
தொழில் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களும்
ஆதரவளித்து மறைமுகமாக
பிரபாகரனை காப்பாற்றும்
முயற்சியில் முனைந்திருந்தனர்.
அதே நேரத்தில்
அந்த நாடாளுமன்றத்தின்
உள்ளேயே விரெந்திர
சர்மா எனும் பிரித்தானிய
தமிழ் அவையின்
ஆதரவு எம்பியிடம்
மூஸ்லிம்கள் தனித்துவம்
குறித்து கருத்து
முரண்பட வேன்டியேற்பட்ட
நினைவுகளும் என்னை
இந்த யுத்தவெற்றியை
ஒருபுறம் ஆராதிக்க
மருபுறம் அங்கே
துயருற்ற மக்களை
நினைத்து அவர்க்ளை
திட்டமிட்டு மனிதக்கேடயமாய்
இடம் நகர்த்தி
அழித்த அவலமுற
வைத்த புலிகளுக்கு
குரல் கொடுத்த
புலன் பெயர் தமிழர்
மீது ஆத்திரம்
வருகிறது.
எனினும் , இந்த யுத்த
யுத்த நிகழ்வுகளில்
முஸ்லிம்களின்
பங்கு குறித்தும்
ஆராய்வதே எனது
நோக்கமாகும். இலங்கையின்
முப்படைகளிலும்
தொழில் ரீதியில்
ஆர்வம் காட்டியவர்கள்
மலாயி சமுகத்தை
சேர்ந்த முஸ்லிம்களாகும்.
ஆனால் வட கிழக்கில்
1985 பின்னர் இன முறுகல்கள்
காரனமாக அதிகளவில்
முஸ்லிம்கள் பாதுகாப்பு
கருதி பொலிசில்
சேருவதில் ஆர்வம்
காட்டினர், இதனால்தான்
ஹொம் கார்ட் (Home
Guard) எனும் பிரிவும்
உருவாக்கம் பெற்றதுடன்
அரச படைகளின் அத்துமீறல்
இன எதிர்ப்பு நடவடிக்கைகளிலும்
சிலவேலைகளில்
இவர்கள் ஆயுதபானி
தமிழ் இயக்கங்களின்
அடாவடித்தனத்துக்கு
எதிராக பழிவாங்கும்
மனனிலையுடன் தமிழர்கள்
மீது செயற்பட்டுள்ளனர்.
ஆனால்
பொதுவாக நாட்டின்
இறமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும்
அமைவாக இலங்கையின்
முறையான தேசிய
பதுகாப்புபடைகளில்
காவல் துறை ஆகியவற்றில்
தாம் இலங்கையர்
என்ற அடிப்படியில் சேர்ந்து
ஆற்றிய பங்கு காத்திரமனது.
கண்டியை
பிறப்பிடமாகக்கொண்ட சுராஜ் பன்சா
ஜாயா (Suraj Bansa Jayah) ஐம்பத்தெட்டாவது
படைப்பிரிவின்
முக்கிய உறுப்பினராக
பிரிகேடியர் சுரேந்திர
சில்வாவின் கீழ்
பதவி வகித்தவர்
இவருக்கு மே மாத
யுத்த முடிவின்பின்னர்
இவரது பணியை கௌரவித்து
பிரிகேடியர் தரத்துக்கு
பதவி உயர்த்தப்பட்டார்
நாட்டின் ஒருமைபாட்டிற்றிகாக
உயிரிழந்த படைவீரர்களுள்
நூற்றுக்கணக்கான
முஸ்லிம்கள் இருப்பினும்
அவர்கள் பற்றிய
தகவல்கள் துரதிஷ்டவசமாக
இன்னமும் தொகுக்கப்படவில்லை.
எனினும் யுத்தத்தில்
அல்லது தமது இரானுப்பனியில்
உயிரிழந்த படை
வீரர்கள் என்ற
வகையில் கேர்னல்
பாஷ்லி லாபீர்
(Colonel Fasley Lafir ) இலங்கை
இராணுவத்தின்
முதலாம் விஷேட
இராணுவ படைப்பிரிவின்
(Special Forces Regiment) ஆணையிடும்
உத்தியோகத்தராகவும்
(Commanding Officer) மிகவும் அரிதான
உயர்ந்த பட்ச இராணுவ
சாதனையான “பரம
வீர விபுஷனைய”
எனும் விருதினை
பெற்ற எழுவரில்
இவரும் ஒருவராகவிருந்தார்.
1996 ம ஆண்டு முல்லைத்தீவு
இராணுவமுகாம்
புலிகளால் தாக்கப்பட்ட
போது அங்கு உயிரிழந்த
1200 இராணுவ வீரர்களில்
இவரும் ஒருவர்.
முல்லைத்தீவு
இராணுவ முகாமை
புலிகள் முற்றுகையிட்டபோது
தனது சக இராணுவ
வீரர்களை காப்பாற்றும்
யுத்தத் மூலோபாய
எத்தனத்தில் அசாத்திய
வீரனாக தன்னுயிரை
துச்செமென மதித்து
செயற்பட்டு உயிரிழந்தவர்.
கடுகஸ்தொட்ட சென்ட் அன்தொனிஸ்
(St. Anthony’s) கல்லூரியின்
பழையமாணவரான இவர்
கண்டியிலுள்ள
மடவள எனும் முஸ்லிம்
பட்டினத்தை சேர்ந்தவர்.
இவரது மரணத்தின்
பின்னர் இவர் இரானுவத்தில்
ஆற்றிய அசாதாரண
சாதனைக்காக அவ்விருது
வழங்கப்பட்டது.
அவ்வாறு
உயிரிழந்த இன்னுமொரு
முக்கியமான இராணுவ
உளவுப்பிரிவின்
சிரேஷ்ட உத்தியோகத்தர்
துவான் நிஜாம்
முத்தலிப் இவர்
கொழும்பை சேந்தவர்.
சுமார் இரண்டு
தசாப்தங்களாக இராணுவத்தில்
பணியாற்றியவர்.
இவர் மே மாதம்
சமாதான ஒப்பந்த
காலம் என்று அழைக்கப்பட்ட
காலகட்டமான 2005ல்
கொழும்பில் பாதுகாப்பு
கல்லூரிக்கு செல்லும்
வழியில் புலி பிஸ்டல்
கொலையாளியால்
சுட்டுக்கொல்லப்பட்டவர் . மேலும் யுத்தத்தில்
மரணித்த இராணுவ
உத்தியோகததர்களான
ரிஸ்வி மீடின்,
மேஜர் யூனுஸ் , கப்டன் ஷேரிப்டீன்
கப்டன் சுரேஷ்
காசிம் சிறந்த
சேவை ஆற்றியவர்கள்.
அதேவேளை மேஜர்
ஜெனரல் சவீர்,
பிரிகேடியர் டி.எஸ்.சாலி ,பிரிகேடியர்
பொஹ்ரான், மேஜர்
டி.பி.இப்ரஹிம்,
முஹமது ரிஷர்ட்
ஆகியோர் இப்போதும்
இலங்கை இராணுவத்தில்
பனியாற்றி வரும்
குறிப்பிடதக்கவர்களாகும்
. இப்போதும்
இராணுவத்தில்
முஸ்லிம்கள் பலர்
சேவையாற்றி வருகிறார்கள்.
இங்கு நிரல்
படுத்தமுடியாத
பல முஸ்லிம்கள்
இன்று இராணுவத்தில்
சேவையாற்றி வருகிறமையும்
குறிப்பிடத்தக்கது.
அதில் ஒருவர் எனக்கு
தெரிந்தவரை தனது
தகப்பனை புலிகள்
கடத்திக்கொன்றதால்
ஆத்திரமுற்று
பழிவாங்கும் நோக்குடன்
இராணுவத்தில்
சேர்ந்து இன்று
பெரும் பதவி நிலை
உத்தியோகத்தில்
இருப்பவர். (அவரின்
பெயரை நான் இங்கு
தவிர்த்துள்ளேன் )
இராணுவத்தில் , காவல் துறையில்
பனியாற்றிய முஸ்லிம்
இளைஞர்கள் சிலரையும்
இந்த சந்தர்ப்பத்தில்
நினைவு கூர்வது
அவசியமாகிறது.
1990 ம் ஆண்டு ஜூலையில்
யாழ்ப்பாண நகரை
புலிகள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தபோது
யாழ்ப்பாண கோட்டைக்குள்
முற்றுகையிடப்பட்ட
நிலையிலிருந்த
அரச பாதுகாப்பு
காவல் துறை உறுப்பினர்கள்
வெளியேற முடியாமல்
சுமார் 107 தினங்கள்
முடங்கி கிடந்தபோது
அதில் ஏறாவூரை
சேர்ந்த சுபைர்
எனும் போலீஸ் உத்தியோகத்தர்
முற்றுகை முறியடிக்கப்பட்டு
தப்பி வந்தவர்
எனபதும் பின்னர்
பின்னர் அதே ஊரைச்சேர்ந்த
ஒரு சகோதர முஸ்லிம்
இராணுவ உத்தியோகத்தரின்
தனிப்பட்ட கோபத்தினால்
சுட்டுக் கொல்லப்பட்டார்
என்பதும் இங்கு
முரண்நகையாக
குறிபிடத்தக்கது.
அதேவேளை முஸ்லிம்கள்
இந்த உள்நாட்டு
யுத்தத்தில் பல
உயிர் உடமை நிலம்
என பல இழப்புக்களை
சந்தித்தபோதும்
ஓரிரு விரல்விட்டு
எண்ணக்கூடிய முஸ்லிம்கள்
தமது சுயநலத்திற்காக
புலிகளின் மூலம்
பெரும் பணத்துக்காக
தமது இனத்தை அழித்த
அடிமைப்படுத்திய
ஆதிக்கம் செலுத்திய
புலிகளின் முகவர்களாக
செயற்பட்டதும்
மிகுந்த வேதனை
அளிக்கும் சமூக
விரோத செயலாகும்.
மறுபுறம் அப்பாவி
முஸ்லிம்களில்
சிலர் அறியாமல்
புலிகளின் சூழ்ச்சிக்கு
பலியானவர்கள்
அவர்கள் எமது அனுதாபத்துக்குரியவர்கள்
என்றாலும் அவர்களின்
அறியாமை வியாபாரம்
சார்ந்த நடவடிக்கைகள்
என்பன மறுபுறத்தில்
ஏற்படுத்திய அழிவுகளும்
எமது நெஞ்சை நெருடுகின்றன.
இனி வரும் காலங்களில்
முஸ்லிம் சமூகம்
அத்தகைய வரலாறுகளிலிருந்து
படித்துக்கொள்ள
நிரம்பவே இருக்கின்றது.
உள்நாட்டு
யுத்தம் இலங்கையில்
இரண்டு வருடங்களுக்கு
முன்பு வட புலத்தில்
உக்கிரமடைந்தபோது
கொழும்பில் ஒரு
முஸ்லிம் போலீஸ்
உயர் அதிகாரி புலிகளிடம்
பணம் பெற்றுக்கொண்டு
தமது சகோதர காவல்
துறை உத்தியோகத்தர்கள்
புலிகளால் கொலை
செய்யப்படுவதற்கும்
மற்றும் பல புலிகளின்
நாசகாரச் செயல்களுக்கு
தகவல் வழங்குவது
உதவி புரிவது உட்பட
பல சமூக (தேச) விரோத
செயல்களுக்கு உடந்தையாகவிருந்தார்.
அவர் கிழக்கை
சேர்ந்தவர் என்று
அறியப்பட்டது.
புலிகளின் இன சுத்திகரிப்பிற்கும் ஆட்கொலைகளுக்கும்
உள்ளான ஒரு சமூகத்திலிருந்து
வந்தும் அரசில்
பொறுப்பான பதவி
வகித்தும் அவவதிகாரி
புலிகளிடம் இலஞ்சம்
பெற்று கேவலமாக
நடந்துகொண்டார்.
பெரும்பான்மை
சிங்கள இனத்திலும் பலர் அவாறான
சமூக விரோத செயற்பாட்டில்
ஈடுபட்டுக்கைதானதால்
இவர் மீதான இழிவுச்சாட்டல்
பழிப்பு பெரிதளவில்
இடம்பெறவில்லை.
காத்தான்குடியைச்சேர்ந்த
ஏறாவூரில் வர்த்தகத்தில்
ஈடுபட்டிருந்த ரஹீம் தனது
காரை புலிகள் என்று
தெரியாமால் (தெரிவதற்கு
சாத்தியமுமில்லை
) விற்று அக்காரை
புலிகள் மருதானையில்
சாஹிரா கல்லூரிக்கு
முன்பாக குண்டு
வெடிப்பில் பயன்படுத்தியதால்
(நொவம்பர் 1987) பாரிய
அழிவுக்கும் உயிர்
இழப்பிற்கும்
காரணமான நபர்களை
கண்டு பிடிக்கும்
விசாரனைகளின்
மூலம் ரஹீம் இறுதியில்
கைதாகி பல ஆண்டுகள்
சிறையில் வாடவேண்டி
நேரிட்டது. அவ்வாறே
ஏறாவூரிலும் முஹம்மது
எனும் முஸ்லிம்
வாகன உரிமையாளரிடமிருந்து
வாங்கப்பட்ட வாகனம்
மீண்டும் மருதானையில்
அதே மருதானை பகுதியில்
புலிகளால் வாகன
குண்டு வெடிப்பிற்கு
மே மாதம் 5ம் திகதி
2008ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.
அவ்வாகனத்தை கைமாறிய
(விற்ற) முஸ்லிம்
பெண்மணியும் இது
தொடர்பில் கைது
செய்யப்பட்டனர்
மொத்தத்தில் முஸ்லிகளின்
வியாபார ஈடுபாடுகளை
தமக்கு சாதகமாக
பயன்படுத்திக்கொண்டு
முஸ்லிம்களையும்
நெருக்கடிக்குள்ளாகியது
மட்டுமல்ல இலங்கை
அரசை சிங்கள மக்களை
முஸ்லிம்களுக்கு
எதிராக திருப்பும்
பணியிலும் ஒரு
கல்லில் இரு மாங்காய்
விளையாட்டை செய்தவர்கள்
புலிகள். இப்போது
அந்த தந்திரோபாய
விளையாட்டை வேறு
வடிவத்தில் அரசியலில்
புலி செத்தபின்னர்
முஸ்லிம் காங்கிரசின்
தலைவரை வைத்துக்கொன்டு
சம்பந்தன் பிருகிருதிகள்
செய்கிறார்கள்
என்பதயும் அரசியல்,
அதிலும் குறிப்பாக
தமிழ் அரசியல்
சூட்சுமங்கள்
புரிபவர்களுக்கு
தெரியாமலிருக்க
முடியாது.
சுமார்
பத்து வருடங்களுக்கு
முன்னர் காத்தான்குடி
ஊர்வீதியில் ஆற்றங்கரையை
அண்மித்ததாக அமைந்திருந்த
வீட்டிலிருந்து
புலிகளுக்கு இரகசிய
செய்தியை வாக்கி
டாக்கி (Walkie-Talki) எனும்
தொலை தொடர்பு
கருவியூடாக செய்தியனுப்பிய
முஸ்லிம் ஒருவர்
அவ்வழியால் ரோந்து
சென்ற இராணுவபடையினரின்
தொலைக்கருவி
சமிக்ஞை ஊடாக அகப்பட்டு
கைதானதும் அதனால்
அக்குடும்பம்
தொல்லைகளுக்கு
உள்ளானதும் இங்கு
குறிப்பிட வேண்டிய
சம்பவமாகும் பணத்துக்காக
புலிகள் ஊருக்குள்
படகு மூலம் உள்ளே
வருவதற்கு செய்திகள்
வழங்குவதே இவரது
செயற்பாடாகவிருந்தது.
ஆனால்
அண்மையில் காத்தான்குடியை
சேர்ந்த ஒரு சுங்க
அதிகாரியான முபீன்
என்பவர் புலிகளின்
பொருட்களை நாட்டுக்குள்
கொண்டுவருவதில்
(இறக்குமதி செய்வதில்) சுங்கப்பகுதியில்
துணை புரிந்தார்
என்பதற்காக
கைதாகி தீவிரமாக
விசாரிக்கப்பட்டு
வருகிறார் என்ற
செய்தி இலங்கை
அரசை பொறுத்தவரை
மிக பாரதூரமான
குற்றமாகும்.
இந்த விசாரணை
அவர் புலிகளிடம்
கொன்டிருந்த தொடர்புகளை
உறுதி செய்வதாக
தெரியவருகின்றது.
ஒருபுறம் இப்போது
கொண்டாடப்படும்
இலங்கை முஸ்லிம்களை
எல்லா தமிழ் இயக்கங்களும்
தங்களது ஆயுதபலத்தால்
மிரட்டி வந்ததுடன்
அடக்கு முறைகளையும்
பல சந்தர்ப்பங்களில்
கட்டவிழ்த்து
விற்றிருந்தனர்.
இந்த இயக்கங்கள்
எல்லாமே தமது சொந்த
இனத்தையும் தொல்லைக்குட்படுத்தியதுடன் இப்போது ஜனநாயகம்
பற்றி வாய்கிழிய
பேசுபவர்களாகவும்
உள்ளனர். அவர்களது
மாற்றங்களை வரவேற்கலாம்
ஆனால் இவ்வியக்கத்தவர்கள்
எல்லாமே இப்போது
திடீரென்று முஸ்லிம்
மக்கள் எங்கள்
சகோதரர்கள் அவர்களையும்
இணைத்துக்கொண்டு
தாங்கள் "அரசியல்
தீர்வு" காணவேண்டும்
என்று முஸ்லிம்களுக்கு
தாங்கள் இழைத்த
அநீதிகளை சுயவிமர்சனம்
பண்ணும் திராணியற்று
உரத்து குரல் கொடுப்பதுதான்
எமது புருவங்களை
நிமிர்த்தும்
கேள்வி.
13
ஏப்ரல் 1985 ல் தமிழ்
முஸ்லிம் இன வன்முறைக்கு
தூபமிடும் நிகழ்வுகளில்
ஒன்று தோற்றுவிக்கப்பட்டது.
புளட் (PLOTE) இயக்கத்தினர்
காரைதீவில் முஸ்லிம்
ஒருவரின் காரையும்
அரிசி மூட்டைகளையும்
துப்பாக்கிமுனையில்
களவாடி சென்றதனை
தொடர்ந்து விஷேட
அதிரடிப்படையினரின்
ஆதிக்கம் நிலவிய
அன்றைய காலகட்டத்தில்
முஸ்லிம்களின்
ஆத்திரத்தை பயன்படுத்தி
தமிழர்கள் மீது
பழிவாங்கல் நடவடிக்கையாக
இச்சம்பவம் விஷேட
அதிரடிபடையினரால்
அரங்கேற்றப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில்
ஐக்கிய தேசிய அரசு
தமிழ் முஸ்லிம்
உறவு விரிசலுக்கு
தமது படையணிகளை
பயன்படுத்திக்கொண்டதுடன் , ஜே ஆர் ஜெயவர்த்தனாவின்
புதல்வரின் (ரவி
ஜயவர்த்தனா) கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்த
விஷேட அதிரடிப்படையினரின்
(Special task force) தமிழ் மக்கள்
மீதான படுகொலைகள்
தமிழ் பெண்கள்
மீதான கற்பழிப்புக்கள்
என பல விதத்தில்
தமிழர்கள் மீதான
சகல அடக்குமுறைகளையும்
கட்டவிழ்த்து
விட்டிருந்தனர்.
இச்சம்பவம்
அம்பாறை மாவட்டத்திலிருந்து
மட்டக்களப்பு
மாவட்டம் வரை பட்ட
நிலையை தோற்றுவித்தது
அதன் உச்சமாக உன்னிச்சை
வயல் பிரதேசத்தில்
விவசாயம் செய்த
ஏறாவூர் முஸ்லிம்
விவசாயிகளின்
படுகொலையுடன்
இன முறுகல் நிலை
தீவிரமடைந்தது.
1985 நடைபெற்ற வன்செயல்களினால்
உன்னிச்சை முஸ்லிம்
விவசாயிகளின்
கொலைகள் நடந்து
சில நாட்களின்
பின்னர் அன்று
கிழக்கில் குறிப்பாக
மட்டக்களபபு
மாவட்டத்தில்
செல்வாக்குள்ள
இயக்கங்களீல்
ஒன்றாக விளங்கிய
ஈ பி.ஆர்.எல் எஃப்
இயக்கத்தினரில்
(EPRLF) எனக்கு அறிமுகமான சிலரை மிகவும்
ஆபத்தான சூழலில்
சந்தித்து ஏன்
அவர்களால் அவ்வாறன
வன்முறையை தடுக்க
முடியவில்லை என்று
கேட்டதற்கு அவ்ர்கள்
தமது கட்டுப்பாட்டுக்கப்பால்
அவ்வன்முறைகள்
நடந்து விட்டன
என்பதை மட்டுமே
கூறினார்கள். மக்கள் இயக்கம்
என்று முரசறைந்து
முழங்கியவர்கள்
வெறும் கையாலாகாதவர்கள்
என்பதையே அது உணர்த்தியது.
ஐ பீ கே
எப் (IFKF) எனும் இந்திய
அமைதிகாக்கும்
படையினரின் வெளியேற்றம்
கிழக்கில் ஆரம்பமானவுடன்
அவர்களால் உருவாக்கப்பட்ட
தமிழ் தேசிய இராணுவம்
தனது அத்துமீறல்களை
மேற்கொண்டு முஸ்லிம்
காங்கிரசின் அணுசரணையுடன் சிவில் தொண்டர்
படையில் சேர்ந்திருந்த
முஸ்லிம் இளைஞர்களை
காவு கொண்டனர்.
இந்த தமிழ் தேசிய
இராணுவத்தின்
மிலேச்சத்தனமான
படுகொலைகளுக்கு ஈ பீ ஆர் எல்
எப் எனும் ஈழ மக்கள்
புரட்சிகர விடுதலை
முன்னணி மற்றும்
ஈழ தேசிய ஜனநாயக
முன்னணி (ENDLF) என்பன
பின்னனியிலிருந்தன.
ஈ என் தே எல்
எப் (ENDLF) எனும் இயக்கம்
புலிகளின் பிரதியீடு
தவிர கொள்கையில்
வேறுபடவில்லை.
இவர்களே முதன்
முதலில் முஸ்லிம்
காங்கிரசின் முன்னாள்
தலைவரை அவரது பிறந்த
இடத்தில் வைத்து
கொல்ல எத்தனித்தவர்கள்
என்ற குற்றச்சாட்டு
உண்டு. அக்கொலை
முயற்சிகளிலிருந்து
முன்னால் முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
அஸ்ரஃப் ஓடி தப்பவேண்டி
நேரிட்டது. அதேவேளை
அலி உதுமான் எனும்
அன்றைய வட- கிழக்கு மாகான சபை
உறுப்பினரை கொன்றவர்களும்
இவர்களே (ENDLF) என்று
பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனகரட்னம்
எனும் பரந்தன்
ராஜன் ஈழ தேசிய
ஜனனாயக விடுதலை
முன்னனி தலைவராக
இருக்கிறார்.
இவர் இக்கட்சியின்
கொடியில் உள்ளமூன்று
நட்சத்திரங்களும்
தமிழ் சிங்கள முஸ்லிம்
மக்களை குறிக்கும்
என்றும் மேலும்
அவை ஜனனாயகம்,
சமஉடமை, சமத்துவம்
என்பவற்றையும்
குறித்து நிற்பதாக
1988களிள் கூறி இவை
எவற்றுக்குமே
தொடர்பற்ற செயற்பாடுகளை
இவரது கட்சியினர்
முஸ்லிம்கள் சிஙகள்வர்கள்
மீதும் மேற்கொன்டவர்கள்
என்ற பாரிய குற்றச்சாட்டு
இவர்கள் மீது சுமத்தப்பட்டது . தமிழர்களே
இவர்களை அன்றே
நிராகரித்துவிட்டார்கள்.
10ம் திகதி ஜுனெ
மாதம் 1990ல் பிரேமதாசாவினுடனான
யுத்த நிறுத்தத்தை
முடிவுக்கு கொன்டுவந்த
புலிகள் கிழக்கின்
பொலிஸ் நிலயங்களை
முற்றுகையிட்டு
நூற்றுக்கனக்கான
பொலிஸாரைக் கொன்றனர்.
இதிலும் சுமார்
நூறு புலிகளிடம்
சரனடைந்த முஸ்லிம்
பொலிஸ்காரர்களும்
அடங்குவர். பொலிஸாரை முடங்கச்செய்த
பிரேமதாசாவும்
இவ்வாறான படுகொலைகளுக்கு
காரனமாக்கப்படுவதில்
நியாயமுன்டு.
புலிகள்
கிழக்கில் தோல்வியுற்ற
போதும் 2009ம்
ஆன்டு சித்திரை
மாதத்தில் கல்லடி
பொலிஸ் பயிற்சிக்
கல்லுரியின் பொலிஸ்
அத்தியாட்சகர்
ஜமால்டீனை மருதமுனயில்
நீராயுதபானியாக
நின்ற வேளை ஒழித்திருந்து
சுட்டுக் கொன்றார்கள்
, அவ்வாறன புலிகளின்
கொலை இறுதியாக
இரன்டு பெண் நான்கு
ஆன் புலிகளை பயன்படுத்தி
ஏறாவூரில் இப்ராகிம்
எனும் பொலிஸ் உத்தியோகத்தரை
அவரது மோட்டார்
சைக்கிளை மறித்து
கொன்றதுடன் புலிகளின்
இறுதி முஸ்லிம்
அரச படையினர் அல்லது
காவல் துறையினரின்
கொலைகளும் முடிவுக்கு
வந்தன. இளைஞர்கள்
அப்துல் கரிம்
எனும் ஏறாவூர்
முஸ்லிம் ரிசெர்வ்
பொலிஸ் கொலையுடன்
தொடங்கிய புலிகளின்
அரச படையினருக்கெதிரான
கொலை இப்ராகிமின்
கொலையுடன் முடிவுக்கு
வந்தது. அதுவே
இனிமேல் முடிவாகவும்
இருக்க வேன்டும்.
எனவே
இந்த வெற்றி வாரம்
ஒருபுறம் சென்ற
வருட மேமாத இறுதி
யுத்தத்தில் புலிகளின்
வக்கிர குனத்தால்
வலுவிழந்து அநியாயமாக
உயிரிழந்த அங்கயீனமான
அகதியாய் போன மக்களின்
துயரம் குறித்து
துவண்டு போனாலும்,
அப்பாவி மூளைச்சலவை
செய்யப்பட்டு
இறந்து போன சிறார்களை
பொறுத்தவரை கவலையளித்தாலும்
அவ்வாறான பல இளம்
சிறார்களின் எதிர்கால
இழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன
என்ற வகையிலும்
கைதாக்கப்பட்ட
பல இளைஞர்களின்
வாழ்வில் புதிய
ஆக்கபூர்வமான
எதிர்காலத்தை
நிர்ணயிக்கும்
வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது
என்ற வகையிலும்
இலங்கையில் இனப்பிரச்சினையை
பயங்கரவாத செயற்பாடுகள்
மூலம் அனுகிய புலி
பாசிஷம் முடிவுக்கு
வந்த வகையிலும்
இலங்கையின் ஜனனாயக
கட்டமைப்புக்கள்
நாடெங்கும் உயிர்ப்புபெற
பொருளாதார நடவடிக்கைகள்
சீரமைக்கப்பட
வழி பிறந்துள்ளது
என்ற வகையிலும்
இந்த யுத்த வெற்றி
வாரம் அணுகப்பட
வேண்டும் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |