|
||||
|
நீ எதுவாக
மாற விரும்புகிறாயோ,
அதுவாக மாறுவாய்
முதன் முதலாகத்
தேர்தலைச்
சந்தித்து,
தோல்வியடைந்த
நேரத்தில்,
பிராத்தனை
கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்
அபிரஹாம்
லிங்கன்.
கூட்டம் முடிந்ததும்,
“உங்களில்
சொர்க்கத்துக்குச்
செல்ல விரும்புவர்கள்
மட்டும் கையை உயர்த்துங்கள்”
என்றார் பாதிரியார்.
எல்லோரும்
கையைத் தூக்க, அபிரஹாம்
லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “அபிரஹாம்!
நீ எங்கே
போவதாக உத்தேசம்?” என பாதிரியார்
கேட்க, தோல்வி அடைந்திருந்த
அந்த மன
நிலையிலும்,
“நான் செனட்
உறுப்பினராகப்
போகிறேன்”
என்று உறுதியான குரலில் சொன்னார்
அபிரஹாம்.
“நீ எதுவாக
மாற விரும்புகிறாயோ,
அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன்
ஆசி வழங்கினார்
பாதிரியார்.
1809ம்
வருடம் அமெரிக்காவின்
சின்னஞ்சிறு
கிராமத்தில்
பிறந்த லிங்கனை, “தோல்விகளின்
செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள்
அவரைத் துரத்திக்
கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே
தாயை இழந்தார்.
ஒரு கடையில்
எடுபிடி வேலை பார்த்துக்
கொண்டே இரவு நேரங்களில்
மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன்
படித்தார்.
இளைஞனாகி, பக்கத்து
நகருக்குப்
போனபோது,
அங்கே அடிமைகளை வியாபாரம்
செய்யும்
மனிதச் சந்தையைக்
கண்டு அதிர்ச்சி
அடைந்தார்.
கறுப்பர்களின்
அடிமை வாழ்க்கையைப்
பற்றி அவர் கேள்விப்பட்டு
இருந்தாலும்
காய்கறி போல மனிதர்கள்
விற்கப்படுவதை
நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு
ஒரு புது
லட்சியம்
பிறந்தது.
ஆட்சிப் பொறுப்புக்கு
வந்தால்தான்
இந்த அவலத்தை
அகற்ற முடியும் என்று தெரிந்தும்,
அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி
தேர்தல் வேட்பாளராக
களம் இறங்கி,
படுதோல்வி
அடைந்தார்.
இந்த நேரத்தில்,
சொந்தமாகத்
தொழில் தொடங்கி, அதில் பெரும்
கடனாளியாக
மாறியிருந்தார்.
சோர்ந்து போயிருந்த
லிங்களை ஒரு போராளியாக
மாற்றியது,
அவரது வளர்ப்புத்
தாய் சாரா
புஷ். ‘ஆட்சிப
பொறுப்புக்கு
வரவேண்டும்
என்றால், ஆசைப்படுவதைப்
பெறுவதற்கான
தகுதிகளை
முதலில் வளர்த்துக்கொள்’.
“நீ எதுவாக
விரும்புகிறாயோ,
அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ்.
பாதிரியார்
சொன்ன அதே வார்த்தைகள்!
இப்போது லிங்கனுக்கு
தன் இலக்கு
புரிந்தது.
மனதில் தெளிவு
பிறந்தது.
அடிமை வியபாரத்தை
சட்டம் போட்டுத்தானே
ஒழிக்க முடியும்?
எனவே, முழுமூச்சுடன்
சட்டம் படிக்கத் தொடங்கினார்
லிங்கன்.
மக்கள் மனதை மாற்றினால்
மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த
முடியும்
என்பதால்,
சட்டப்படிப்புடன்
பேச்சுத்
திறமையையும்
வளர்த்துக்
கொண்டார்.
அடிமை ஒழிப்பைப்
பற்றி ஊர் ஊராகக்
கூட்டம் போட்டுப்
பேசினார்.
ஒரு தலைவருக்கான
தகுதிகளை
வளர்த்துக்
கொண்டு,
1834ல் நடந்த
நகராட்சி
உறுப்பினர்
தேர்தலில்
போட்டியிட்டு
வெற்றியும்
பெற்றார்.
அதன்பின்
நகராட்சித்
தலைவர், மாமன்ற உறுப்பினர்,
செனட் உறுப்பினர்,
உபஜனாதிபதி,
எனப் பல்வேறு
பதவிகளுக்குப்
போட்டியிட்டு
சில வெற்றிகளையும்,
பல தோல்விகளையும்
சந்தித்து
1860ம் வருடம்
அமெரிக்க
ஜனாதிபதி
தேர்தலில்
நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக
மாற நினைத்தாரோ,
அதுவாகவே
ஆனார் லிங்கன்!.
இல்வாழ்விலும் அவருக்குத்
தோல்விகள்தான்!
1835ல் அவரின்
காதலி ‘ஆனி’ விஷக்
காய்ச்சலால்
மரணம் அடைந்தார்.
33வது வயதில்
மேரியுடன்
திருமணம்
முடிந்து
நான்கு குழந்தைகள்
பிறந்தன.
மூன்று குழந்தைகள்
சிறுவயதிலேயே
மரணமடைந்தார்கள்.
மனைவிக்கு மனநோய்
இருந்தது.
இத்தனைத் தோல்விகளையும்
மன உறுதியோடு
எதிர்கொண்டதால்தான்,
லிங்கன் வெற்றி பெற முடிந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை
எடுத்து அடிமை அவலத்தை
ஒழித்து, மாகாணங்களை
ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத்
தலை நிமிரவைத்தார்
லிங்கன். அந்தச் சாதனையால்தான்,
அடுத்த முறையும் அவரே மீண்டும்
ஜனாதிபதியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1865ல் நாடகம்
பார்த்துக்
கொண்டு இருந்தபோது
ஒரு நிறவெறியினரால்
சுடப்பட்டு
மரணம் அடைந்தார்
லிங்கன்.
மணவாழ்க்கை பற்றி லிங்கன்
கூறியது - மணவாழ்க்கை
லிங்கனுக்கு
அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை
பற்றி குறிப்பிடும்
போது “மண வாழ்க்கை
மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்”
என்று குறிப்பிட்டார்.
“நீ எதுவாக
மாற விரும்புகிறாயோ
அதுவாக மாறுவாய்” என்பது அபிரஹாம் லிங்கனுக்கு
மட்டுமல்ல…
நம்பிக்கையைத்
தளரவிடாமல்,
லட்சியத்துக்காக
விடாப்பிடியாக
போராடும்
நம்மைப்போன்ற
ஒவ்வொருவருக்கும்
அது வெற்றி
திருமந்திரம்.
அனுதினமும் ஆனந்தமாய்
வாழ்ந்திட
வாழ்த்துக்களோடு,
கொல்லிமலைச் சாரல் பொ.
ஆனந்த் பிரசாத் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |