Contact us at: sooddram@gmail.com

 

ஒரே குடைநிழலில் இருசிறுபான்மை இனங்கள் ஒன்று திரள வேண்டும்

- கலாநிதி அமீர் அலி

தமிழ் மொழி முதலும் அதன் பின்னர் முஸ்லிம்களும் இலங்கையிற் காலடி எடுத்துவைத்த காலந்தொட்டு இற்றைவரை அம்மொழியை முழு இலங்கையிலும் பேசியும் எழுதியும் வருபவர்கள் முஸ்லிம்களே. நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் தமிழர்கள் தமிழை வளர்க்க தெற்கிலும், மேற்கிலும், மத்தியிலும் அதனை முன்நின்று வளர்ப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே. ஒரு தனிச் சிங்களக் கிராமத்தில் தமிழ்ப் பத்திரிகையொன்றை ஒருவர் குரல் ஒலிக்க வாசிப்பாரானால் அவர் பெரும்பாலும் ஒரு முஸ்லிமாகத்தானிருக்கும் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

இலங்கையின் ஆதிவாசிகளைத்தவிர மற்றைய இனங்களெல்லாமே அந்நாட்டின் வந்தேறுகுடிகளே. இவர்களுள் யார் யார் முந்தி வந்தனர் யார் யார் பிந்தி வந்தனர் என்பதையும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களைக்கொண்டு வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் நிர்ணயித்துவிட்டனர். சிங்களச் சமூகம் முதலிலும் தமிழர் பின்னரும் அவர்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மூன்றாவதாகவும் இலங்கையிற் காலடி வைத்தனர் என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வர். எனினும் இறுதியாகக் குடியேறிய முஸ்லிம்கள் உண்மையிலேயே எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைப்பற்றி இன்னும் தீர்க்கமான ஒரு முடிவில்லை. இவர்கள் ஒரு கலப்பினம் என்பதைத்தான் இதுவரை நமக்குக் கிடைத்த வரலாற்றுச் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன. அரபு இரத்தமும், பாரசீக இரத்தமும், தமிழிரத்தமும், சிங்கள இரத்தமும், மலாய் இரத்தமும் கலந்த ஒரு கூட்டே இலங்கை முஸ்லிம்கள். இவர்களைப்பற்றி இன்னும் சிறிது ஆழமாக நோக்குவது இக்கட்டுரைக்கு அவசியமாகின்றது.

முஸ்லிம் என்பது மத அடிப்படையில் அமைந்த ஒரு பெயர். இஸ்லாமிய மதத்தைத் தழுவிய யாவருமே முஸ்லிம்கள்தான். இந்த மதப் பெயரை அகற்றிவிட்டால் இவ்வினம் சோனகர், மலாயர் என்ற இரு பிரிவுக்குள் அடங்குகின்றது. இந்தப் பிரிவுகளுள் இரண்டாவது பிரிவினரைப் பற்றி எந்தச் சர்ச்சையும் இல்லை. ஆனால் சோனகர் என்பவர் யார்? இந்தப் பெயரைக் கொண்டு முஸ்லிம்கள் ஆரம்பத்திலிருந்தே தம்மை அழைத்தனரா? எந்தச் சந்தர்ப்பத்தில் இப்பெயர் அவ்வினத்துக்குரிய தனித்துவப் பெயராக மாறிற்று? இக்கேள்விகளுக்குரிய விடையைத் தீர்க்கமாக ஆராயின் இக்கட்டுரை மிகவும் நீண்டுவிடும். இக்கேள்விகளுக்குரிய எனது ஆய்வுக் கட்டுரையொன்று ஆங்கிலத்தில் 1981இல் ; Asian Studies என்ற இதழில் வெளிவந்துள்ளது. அதன் சுருக்கத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

முதலாவதாக, சோனகர் என்னும் பெயர் யவனர் என்ற சமஸ்கிருதப் பெயரின் தமிழ்த் திரிபு. யவனர் என்ற பெயர் ஆரம்பத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த ஐயோனியக் கிரேக்கர்களைச் சுட்டியிருந்தாலும் காலவோட்டத்தில் இப்பெயர் மேற்கிலிருந்து வந்த எல்லா வெளிநாட்டினரையும் குறிப்பிடலாயிற்று. இவர்களுள் அரேபியரும் அடங்கினர். இரண்டாவதாக, இப்பெயர் இலங்கை முஸ்லிம்களின் இனப்பொயராக மாறியது பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே. தமிழிலே தம்மைச் சோனகரென்றும் ஆங்கிலத்தில் மூஅர் (Moors) என்றும் அழைக்கலாயினர். இதற்கு ஓர் அரசியற் பின்னணி உண்டு. இலங்கையின் இரண்டு பிரதான சிறுபான்மை இனங்களுக்குமிடையே இதுவரை உள்ள உறவை விளங்குவதற்கு இந்த அரசியற் பின்னணியை அறிந்துகொள்ளுதல் அவசியம். அதற்கு முன்னர் மூஅர் என்ற பெயர் போத்துக்கீசரால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஓர் இழிவுப் பெயர் என்பதையும் இங்கே குறிப்படவேண்டும். இதைப்பற்றியும் மேலே குறிப்பிட்ட எனது ஆங்கிலக் கட்டுரை தெளிவுபடுத்தும்.  1885ஆம் ஆண்டு அன்றைய இலங்கைச் சட்டசபையில் முகம்மதியரின் விவாகப்பதிவுச் சட்டம்பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றிய தமிழ் அங்கத்தவர், பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் மூஅர்களெல்லாம் தமிழினத்திலிருந்து தோன்றியவர்களே என்று வாதாடினார். இந்தக் கருத்தை ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரையாக அவர் 1888இல் ; Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain and Ireland என்ற கழகத்திற் சமர்ப்பித்தார். இதே காலப்பகுதியில் இலங்கையின் பிரித்தானியக் குடியேற்ற அரசு இனவாரியாகச் சட்டசபைக்கு அங்கத்தவர்களை நியமித்து அதில் முஸ்லிம்களுக்கும் ஓர் அங்கத்துவம் வழங்கத் திட்டமிட்டிருந்தது. இந்தச் சூழலில் இராமநாதனின் கருத்து முஸ்லிம்களையும் தமிழரென இனங்கண்டதால் அவர்களுக்குத் தனிப்பட்ட அங்கத்துவம் தேவையில்லை என்ற ஒரு நிலைப்பாட்டை ஆட்சியாளர் மனதிற் பதியவைக்கும் அபாயத்தை அன்றைய முஸ்லிம் தலைவர்கள் உணர்ந்தனர். ஆகவே ஐ. எல். எம். அப்துல் அசீஸ், எம். சி. சித்திலெப்பை போன்றவர்கள் இராமநாதனின் கருத்தை எதிர்த்து முஸ்லிம்கள் தமிழரல்லர் அவர்கள் மூஅர்கள் என்ற ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர். இது இராமநாதன்-எதிர்ப்புப் பிரச்சாரமாக மாறியது. இதன்விளைவாக எம். சி. அப்துல் ரகுமான் முதலாவது முஸ்லிம் சட்டசபை அங்கத்தவராக நியமனமானார். ஆனால் முஸ்லிம்களுக்கும் தமிழருக்குமிடையே ஒரு கசப்பான உறவை இச்சம்பவம் தோற்றிவிட்டது. இந்தக் கசப்புணர்வு அரசியல் ரீதியாகத் தொடர்ந்து வளரலாயிற்று.  

1915இல் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஏற்பட்டு அதில் முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளும் சிங்களக் காடையர்களின் அட்டகாசத்துக்கு இரையானபோது அதே இராமநாதனே சிங்களவர்களுக்குச் சார்பாhக வழக்குரையாடி லண்டனுக்குத் தூதும் சென்றார். தன்னை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேண்டுமென்று இவர் துணிந்தாரா என்பது தெரியாது. எனினும் இவர் நடந்துகொண்ட விதம் இரு இனங்களுக்குமிடையே ஏற்பட்ட கசப்புணர்வை மேலும் வளர்க்கலாயிற்று. இவையெல்லாம் குடியேற்ற ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள்.

சுதந்திரம் கிடைத்த பின்பும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய இரு சிறுபான்மை இனங்களும் ஒன்று சேர்ந்து ஜனநாயக அடிப்படையில் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப் போராடியதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. ஓர் இனத்தை மற்றோர் இனம் காட்டிக் கொடுத்தும் பணயம் வைத்துமே பெரும்பான்மையினரிடமிருந்து சில சலுகைகளை உரிமைகள் என்ற போர்வையில் தத்தமது இனங்களுக்காகப் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த உண்மையை விரிவாக விளக்க வேண்டுமெனின் மேலும் சில கசப்பான சம்பவங்களை மீட்டல் செய்யவேண்டிவரும். அதனால் எந்த இலாபமும் ஏற்படப்போவதில்லை.

தமிழரென்றால் அவர்கள் வேற்றினத்தவர் என்று முஸ்லிம்களும் முஸ்லிம் என்றால் அவர்கள் வேற்று மதத்தினரென்று தமிழரும் கருதியதால் இவ்விரு இனங்களையும் இணைக்கின்ற அமிசங்களை உதட்டளவில் மட்டும் கூறிப் பிரிக்கின்ற அமிசங்களையே இதயத்தில் பதியவைத்து அரசியல் தலைவர்கள் இதுவரையும் தமது அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதன் விளைவாக பெரும்பான்மையினத்தின் பார்வையில் இந்த இரண்டு இனங்களும் வலுவற்ற இரு அரசியற் பகடைகளாக இலங்கையின் பேரினவாதச்; சதுரங்க ஆட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளன.

இலங்கையின் தமிழினத் தலைவர்கள் அவர்களின்; இனத்துக்குப் பெரும்பான்மையினரால் அழிவு ஏற்பட்டால் தமிழ்நாட்டுச் சோதரர்கள் கைகொடுப்பார்கள் என்றும் அதேபோன்று இலங்கை முஸ்லிம்களின் தலைவர்கள் அவர்களின் இனத்துக்கு அவ்வாறான ஓர் ஆபத்து ஏற்படின் முழு இஸ்லாமிய உலகமுமே உதவிக்கு வருமென்றும் ஒரு பிரேமையில் இதுவரை வாழ்ந்துள்ளனர். 1983க்குப் பின்னர் ஏற்பட்ட உள்நாட்டுப்போர் இது வெறுங் கற்பனைதான் என்பதை உறுதிப்படுத்திற்று. இன்று நிலவும் பூகோளமயவாதச் சூழலில் பிறநாட்டில் வாழும் சகோதர இனங்கள் உள் நாட்டவர்களின் உதவிக்கு வருமென்று எதிர்பார்ப்பது வெறும் பகற்கனவு.

தமிழினம் முஸ்லிம்களின் உதவியில்லாமலேயே தங்களின் உரிமைகளைப் பெறமுடியும் என்றெண்ணி ஆயுதப் போரிலும் குதித்துத் தோல்விகண்டது. ஆயுதம் தாங்கிப் போராடுவோம் என்ற அச்சத்தைப் பயன்படுத்திச் சாதிக்கக்கூடிய சாதனைகளைவிட அவ்வாறு போராடித் தோற்றபின் சாதிக்கக்கூடியவை மிகக் குறைவாகத்தான் இருக்குமென்பதற்கு வரலாற்றில் எத்தனையோ உதாரணங்களுண்டு. இன்று அந்த நிலைதான் தமிழினத்துக்கு ஏற்பட்டுள்ளது. இருந்ததையும் இழந்துவிட்ட ஒரு துர்ப்பாக்கிய நிலமைக்கு இவ்வினம் இன்று தள்ளப்பட்டடுள்ளது.

அது மட்டுமல்ல, தம்மத்தியில் முஸ்லிம்கள் இருக்கவேகூடாது என்று கருதி வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை இரவோடிரவாகத் துரத்தியடித்தமையை வரலாறு மறக்காது. அதேபோன்று முஸ்லிம்களும் பெரும்பான்மையுடன் சேர்ந்துகொண்டால் தமது பிரச்சினைகளெல்லாம் தீர்ந்து விடும் என்று நினைத்துத் தமிழரும் வேண்டாம் தமிழும் வேண்டாம் என்ற ஒரு நிலைக்குச் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளின் ஆலோசனையில் மயங்கிச் செயற்பட்டனர். இன்று முஸ்லிம்களின் நிலையும் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது.

வரலாறு ஒரு தலைசிறந்த ஆசிரியன். அது கற்பிக்கும் பாடங்களைக் கற்க மறந்தால் அது வழங்கும் தண்டனைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது. இந்த உண்மையை தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு இனங்களும் இனியாவது உணர வேண்டும்.  அரசியல் மட்டத்தில் தமிழரும் முஸ்லிம்களும் தனித்து நின்று ஒருவருக்கொருவர் போட்டியாகச் செயற்பட்ட போதிலும் அன்றாட வாழ்வில் சாதாரண மக்கள் நெருங்கியே உறவாடுகின்றனர். இந்த உறவை அரசியல் மட்டத்துக்குக் கொண்டுவருவதே இன்று இவ்விரு இனங்களையும் எதிர்நோக்கும் சவாலாகும்.

ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு. இதைத் தாரக மந்திரமாக தினந்தினம் உச்சரிக்க வேண்டிய அவசியம் இவ்விரு இனங்களுக்கும் இன்று எழுந்துள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரண்டு பேரைத்தவிர ஏனைய தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த மந்திரத்தைத் தமது பதவிகளையும் வருவாயையும் பாதுகாப்பதற்காக உச்சரிக்கலாம். ஆனால் பொதுமக்களுக்கு நிச்சயமாக இதன் பலத்தையும் உணர்த்தி அதனை உதாசீனம் செய்யும்பட்சத்தில் ஏற்படப்போகும் ஆபத்துக்களையும் விளக்கவேண்டும்.

இந்தக் கைங்கரியத்தைச் செய்யும் பாரிய பொறுப்பை இவ்விரு இனங்களின் புத்திஜீவிகளே தம் சிரமேற் கொள்ளவேண்டும். பிளவுபடாத ஒரே நாட்டில் ஒற்றை ஆட்சி யாப்பின்கீழ் தமிழரும் முஸ்லிம்களும் சிங்களவரைப்போல் சமமான பிரஜைகள் என்ற அடிப்படையிலும், ஒவ்வொரு இனத்தினதும் மொழியும், கலாசாரத் தனித்துவமும் பாதுகாக்கப்பட்டு ஏனைய அமிசங்களில் திறமையின் அடிப்படையிலும், தடையற்ற சந்தைப் பரிவர்த்தனையின் அடிப்படையிலும் ஒவ்வொரு குடிமகனும் இனமத வேறுபாடின்றி வாழக்கூடிய உரிமைகள் சட்டமூலம் வழங்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கையுடன் ஒரே குடைநிழலில் இரு இனங்களையும் திரட்டுவது புத்திஜீவிகளின் இன்றைய தலையாய கடமை.

இந்த வருட ஆரம்பத்தில் கொழும்பில் நடைபெற்ற எழுத்தாளர் மகாநாடு இவ்விரு இனங்களின் புத்திஜீவிகளின் ஓர் ஒன்று கூடலாகவும் அமைந்ததெனலாம். அங்கே காணப்பட்ட நேசமும் பாசமும் ஏன் நாடளாவிய ரீதியில் பரவக்கூடாது? இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களையும் தமிழையும் பற்றிய ஓரிரு உண்மைகளை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்.

தமிழ் மொழி முதலும் அதன் பின்னர் முஸ்லிம்களும் இலங்கையிற் காலடி எடுத்துவைத்த காலந்தொட்டு இற்றைவரை அம்மொழியை முழு இலங்கையிலும் பேசியும் எழுதியும் வருபவர்கள் முஸ்லிம்களே. நாட்டின் கிழக்கிலும், வடக்கிலும் தமிழர்கள் தமிழை வளர்க்க தெற்கிலும், மேற்கிலும், மத்தியிலும் அதனை முன்நின்று வளர்ப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே. ஒரு தனிச் சிங்களக் கிராமத்தில் தமிழ்ப் பத்திரிகையொன்றை ஒருவர் குரல் ஒலிக்க வாசிப்பாரானால் அவர் பெரும்பாலும் ஒரு முஸ்லிமாகத்தானிருக்கும் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது மட்டுமல்ல, பல சிங்கள மக்களுக்குத் தமிழைக் கொச்சையாகவேனும் பேசும் தகைமை இன்று உண்டென்றால் அதுவும் பெரும்பாலும் முஸ்லிம்களுடன் அவர்களுக்குள்ள நெருங்கிய தொடர்பினால் என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரம்புகிறேன். மேலும் 1960களில் முஸ்லிம் தமிழ்ப் பாடசாலைகளைப் பின்நேரத்தில் முஸ்லிம் சிங்களப் பாடசாலைகளாக்க அரசாங்கம் எடுத்த முயற்சிகளையும் நேரடியாகவே முறியடித்தவர்கள் முஸ்லிம்களே. இவ்வாறு தமிழ்ப்பற்றாலும் தமிழ்ப் பண்பாட்டாலும் தமிழருடன் இணைந்து நிற்கும் முஸ்லிம்கள் ஏன் அரசியல் ரீதியில் இணையக்கூடாது?

இலங்கையின் இன்றைய அரசியற் சூழல் மிகவும் பயங்கரமானதொன்று. ஒரு குடும்ப ஆட்சியின்கீழ் நிர்வாகத்துறை இராணுவமயப்படுத்தப்பட்டு, நீதித்துறை அதன் சுயாதீனத்தை இழந்து, ஊடகத்துறையும் ஒடுக்கப்பட்டு இனவாதம் புரையோடிய ஒரு புண்ணாக மாறியிருக்கும் நிலையில் “பேயரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்று பாரதி கூறியது என் நினைவுக்கு வருகின்றது. இதனிடையில் நடந்து முடிந்த போரின்விளைவாக இலங்கை அரசும், நாடும் இந்துசமுத்திரப் புவி-அரசியலுக்குட் சிக்குண்டு சாகச விளையாட்டுக்காரன் கயிற்றிலே நடப்பதுபோன்று வல்லரசுகளின் கெடுபிடிக்குள் நின்று சமநிலை ஆட்டம் ஆடத் தவிக்கின்றது அரசு. இத்தனைக்கும் மத்தியில் தேசிய சமூகத்தின் தார்மீக உணர்வும் ஜனநாயக வேட்கையும் பலாத்காரத்தினால் அடக்கப்பட்டுத் தூங்குகின்றன. இதையெல்லாம் நோக்கும்போது “அவசியமான கருமங்களைப்பற்றி என்று நாம் நிசப்தமாகி நின்றோமோ அன்றே நமது வாழ்வின் அஸ்தமனம் ஆரம்பமாகிறது” Our lives begin to end the day we become silent about things that matter) என்ற இளைய மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் கூற்றும், “உலகம் பயங்கரமானதாக ஆவது தீயவர்களால் அல்ல, அவற்றைப்பார்த்துக்கொண்டு வாழாவிருக்கும் நல்லவர்களால்” ;” (The world is a dangerous place not because of people who do evil but because of good people who look on and do nothing about it) என்று பேராசிரியர் அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் கூறியதையும் இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.     

இன்றைய இலங்கையில் சிறுபான்மை இனங்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன. வயற்காணிப் பிரச்சினை, வீட்டுநிலப் பிரச்சினை, பாரபட்ச நிர்வாகம், தொழில்வாய்ப்பின்மை, கல்வி வழங்களில் நிலவும் பாகுபாடு, திட்டமிட்ட கலாசாரப் பேரினவாதம் ஆகியவையெல்லாம் தமிழரையும் முஸ்லிம்களையும் ஒருங்கே எதிர்கொள்கின்றன. இந்த நிலையில் இனியும் இவர்கள் தனித்தனியே பிரிந்துநின்று இப்பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி காணமுடியுமா? எனவேதான் இவ்விரு இனங்களும் ஓரணியில்; ஒன்றுதிரள வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. அந்த அணியைத் திரட்டவேண்டிய பொறுப்பு நம்போன்ற புதிஜீவிகளின் தலையாய கடமை.

அந்த அடிப்படையில் திரளும் அணிக்கு ஒரு பொதுப் பெயர் வேண்டும். அப்பெயரில் தமிழ் முஸ்லிம் என்ற நாமங்களே இருக்கக்கூடாது. ஏனெனில் அந்தப் பெயர்கள் இதுவரை இவ்விரு இனங்களையும் பிரித்தனவேயன்றி இணைக்கவில்லை. இவ்வருட ஆரம்பத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற “போராட்டச் சிந்தனைகள்” என்ற நூல் வெளியீட்டு வைபவத்தில் அங்கு குழுமியிருந்த தமிழறிஞர்களின் முன்நிலையில்; அவர்களுக்கு ஒரு சவாலாக இப்பிரச்சினையை நான் அறிமுகப்படுத்தினேன். இன்றும் இங்கே குழுமியிருக்கும் தமிழ்ப் புத்திஜீவிகளுக்கு மீண்டும் அதை அறிமுகப்படுத்துகிறேன். புலம்பெயர்ந்து வாழுகின்ற நாம் நமது இனங்களுக்குச் செய்யக்கூடிய மகத்தான ஒரு பணி இது. சமூகத்தையே மையமாகவைத்துச் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் படைக்கின்ற ஒரு படைப்பாளியின் இந்த மணிவிழாவிலே இந்தத் தேவையை வலியுறுத்துவது பொருத்தமானதென நினைக்கிறேன்.

புத்திஜீவிகள் முன்நின்று அமைக்கும் இந்த அமைப்பு பொது மக்களின் ஆதரவுடன் பலம் வாய்ந்த ஒன்றாக வளரும்போது அது கொடுக்கும் அழுத்தத்துக்குத் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலை குனிந்தே ஆகவேண்டும். அது மட்டுமல்ல, இவ்வாறான இலட்சியத்துக்கு ஆதரவு வழங்கும் புத்திஜீவிகள் சிங்களவர் இனத்திலும் உண்டு என்பதையும் மறத்தலாகாது. இவ்வாறான ஒர் இலட்சியத்துடன் 1950, 1960களில் அவர்களிடையே இயங்கிய அமைப்புகளுக்குத் தமிழரோ முஸ்லிம்களோ பெருமளவில் அப்போது ஆதரவு வழங்க முன்வராதது துரதிஷ்டமே. அந்தப் பிழையை இனியும் விடக்கூடாது. இப்பொழுதும்கூட நண்பர் லயனல் போபகே போன்ற பன்னூறாயிரம் சிங்கள-பொளத்த-கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளும் நாட்டின் எல்லா இனங்களும் சரிநிகர் சமானமாக சௌஜன்யத்துடன் வாழவேண்டுமெனவே விரும்புகின்றனர். அவர்களையும் இணைத்து ஓரு தேசியப் பேரியக்கமாக மாறுவதற்கு முன்னர் இரண்டு சிறுபான்மை இனங்களும் ஒரே இயக்கத்தில் முதலில் இணையவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

(நன்றி: தேனி இணையம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com